தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label ஆடு புலி ஆட்டம். Show all posts
Showing posts with label ஆடு புலி ஆட்டம். Show all posts

Wednesday, October 08, 2008

ஆடு புலி ஆட்டம் - சில தகவல்கள்

தொடர் கதை எழுதறங்கறது ரொம்ப கஷ்டமான விஷயம்னு ஒரு வருஷமா எழுதாம இருந்தேன். மறுபடியும் எழுதலாம்னு பனி விழும் மலர்வனம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சி ஆறுமாசத்துல வெற்றிகரமா நான்கு பகுதிகள் எழுதி முடிச்சிருந்தேன். அப்ப அப்ப நிறைய பேர் ஞாபகப்படுத்தும் போது எழுதாம இருக்கமேனு எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.


முதல்ல பனி விழும் மலர்வனம்னு எழுத ஆரம்பிக்கும் போது ஒரு அழகான காதல் கதையா இருக்கனும்னு நினைச்சி தான் ஆரம்பிச்சேன். அதுவும் கதாநாயகன் வேலை தேடறனு பொய் சொல்லி அப்பாவியா நடிக்கறதும், அரை குறையா தெரிஞ்சிக்கிட்டே தனக்கு நிறையா தெரியும்னு கதாநாயகி அலப்பற விடற மாதிரியும் இருக்கனும். அப்பறம் கதாநாயகி நாயகனுக்கு சொல்லி கொடுக்கறனு தப்பு தப்பா சொல்லி கொடுக்கறதும் அதை கதாநாயகன் அவள் உணராத வண்ணம் அவளுக்கு சொல்லி கொடுத்து அவள் வேலை வாங்கறதுதான் கதை. கடைசியா நாயகன் கூகுள் வேலையை விட்டுட்டு அவள் சேரும் இந்தியன் கம்பெனில அவளுக்கு லீடா வந்து சேர மாதிரி முடிக்கலாம்னு ப்ளான்.


நாலு மாச கேப் விட்டதுல இந்த கதை எழுதற மூடே போயிடுச்சு. அப்ப தான் பெங்களூர்ல நான் இருக்கும் போது தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு வந்த மடல் ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்த மாதிரி நான் ஆரக்கிள்ல வேலை செய்யறேன். நீங்க என் கூட ஃபிரெண்ட்லியா பழகனா நான் வேலை வாங்கி தறேன்னு ஒரு நாதாரி மெயில் அனுப்பியிருந்தான். அது மட்டுமில்லாம நான் சென்னைல இருக்கும் போது இதே மாதிரி எனக்கு நிறைய பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவுங்க எல்லாம் என் கூட என் கார்ல மஹாபலிபுரமெல்லாம் வருவாங்க. I badly miss them. இங்க பெங்களூர்ல பொண்ணுங்க எல்லாம் அதை விட நல்லா பழுகுவாங்கனு சந்தோஷமா வந்திருக்கேன். நீங்க என் கூட நல்ல ஃபிரெண்டா இருந்தா நான் உங்களுக்கு நிறைய உதவி செய்வேன். அதுவுமில்லாம என் கார்லயே எங்க வேணும்னாலும் போகலாம். Eagerly waiting for your reply.

அந்த மெயில் ஐடி அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்னு ஆராய்ச்சி பண்ணும் போது தான் அவன் ஏதோ Freshers Groupக்கு புத்திசாலித்தனமா மெயில் அனுப்பி பொண்ணுங்க மெயில் ஐடி பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிது. அது எப்படினா நான் இந்த மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்பினேன். எனக்கு இந்த கம்பெனில இருந்து கால் லெட்டர் வந்துச்சு. நீங்களும் அனுப்புங்க அப்படினு குருப்க்கு ஒரு மெயில் வரும்.  அதை பார்த்தவுடனே எல்லாரும் அவுங்க ரெஸ்யும் அனுப்புவாங்க. That's it.

அந்த கான்செப்ட்ல யோசிக்கும் போது, அப்படியே ஃபேக் பிரச்சனையையும் சேர்த்து உருவான கதை தான் “ஆடு புலி ஆட்டம்”.


இந்த கதை யோசிக்கும் போது ரெண்டு ஐடியா வந்துச்சு. ஒண்ணு பிரச்சனையை கேள்விப்பட்டவுடனே போலிஸ்கிட்ட போயி போலிஸுக்கும் வில்லனுக்கும் நடக்குற ஆட்டம் தான் ஆடு புலி ஆட்டம்னு வைக்கலாம். ரெண்டாவது கதாநாயகனே டீல் பண்ற மாதிரி. இப்படி இருக்கும் போது தான் கப்பிக்கு ஃபோன் பண்ணி ரெண்டு ப்ளாட்டையும் சொல்லி எப்படி கொண்டு போகலாம்னு கேட்டேன். எனக்கு எப்பவுமே இந்த மாதிரி சந்தேகம் வந்தா ஒண்ணு கப்பிக்கு ஃபோன் பண்ணுவேன் இல்லைனா KRS அண்ணாக்கு ஃபோன் பண்ணுவேன்.


கப்பி செலக்ட் பண்ணது தான் இப்ப எழுதியிருக்க ப்ளாட். முதல் ப்ளாட்ல எழுதியிருந்தா வேட்டையாடு விளையாடு மாதிரி ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அதுல நிஜமாலுமே போலிஸ் எப்படி டீல் பண்ணிருப்பாங்கனு ஆராய்ச்சி பண்ணிட்டு தான் எழுதியிருப்பேன்.


அப்பறம் ஒவ்வொரு பாகமும் நான் எழுதி முடிச்சிட்டு அவுங்க ரெண்டு பேருக்கும் ப்ரூஃப் பாக்க அனுப்பிடுவேன். கப்பி எப்படியும் படிச்சிட்டு எனக்கு சொல்லிடுவான். கதைல ஏதாவது டயலாக் புரியாத மாதிரி இருந்தா இல்லைனா எழுத்துப்பிழை எல்லாம் சரி பண்ணி கொடுப்பான்.


அதே மாதிரி கதை 12 பாகம் முடிச்சதுக்கப்பறம் தேவ் அண்ணாக்கு அனுப்பி வெச்சேன். அதுல எப்படி இருக்கும்னா எழாவது பாகத்துல வில்லன் வந்துடுவான். அப்ப இருந்து அவன் பேச ஆரம்பிச்சிடுவான். அப்பறம் மாத்தி மாத்தி பேசற மாதிரி வரும். ஆனா சஸ்பென்ஸ் சுத்தமா இருக்காது. அதை அவர் மாத்த சொன்னாரு. அப்ப தான் படிக்கறவங்க இன்வால்வ் ஆவாங்கனு சொன்னாரு. அவர் ஐடியா படி மாத்தி மறுபடியும் அஞ்சு பாகம் எழுதினேன். தேவ் அண்ணா ஜட்ஜ் பண்ணது சரி தான். ஓரளவு சஸ்பென்ஸ் இருந்தது நல்லதுக்கு தான்.


ப்ளாகர் இல்லாம என் ரூமேட் தனா எனக்கு ரொம்ப உதவி செஞ்சான். ஒவ்வொரு பாகத்தையும் படிச்சிட்டு விறுவிறுப்பா போகுதானு தவறாம சொன்னான். சில இடங்களில் வரும் ஆபாசமான வார்த்தைகளை மாஸ்க் பண்ண சொல்லி கண்டிப்பாக சொல்லிவிட்டான். KRS அண்ணாவும் அதை சொன்னார்.


இத்தனை பேர் உதவியால தான் என்னால சுமாராவாது கதை எழுத முடியுது. அது போக ஒவ்வொரு பகுதிக்கும் வந்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.


இத்தனை நாள் கழிச்சி ஏன் இதை சொல்றான்னு பாக்கறீங்களா? இப்ப தான் அந்த கதையை PDFல அழகா ஃபார்மெட் பண்ணி, படமெல்லாம் போட்டு போட்டிருக்கேன். PDFஆக மாற்ற உதவிய இளா அண்ணாவிற்கும் நன்றிகள் பல. இது வரை படிக்க தவறியவர்கள் இங்க டவுன்லோட் பண்ணி படிக்கலாம். அதே மாதிரி ஃபார்வேர்டும் பண்ணலாம்.

Friday, September 05, 2008

ஆடு புலி ஆட்டம் - 21

"ரவி எழுந்திரிடா. எழுந்திரிச்சி இந்த பேப்பர் பாரு"

"என்னடா? இது சாயந்திரமா காலைலயா? மணி என்ன?"

"இது காலைல ஏழு மணி. முதல்ல கண்ணை திற. இந்த பேப்பரை பாரு"

"என்ன போட்டிருக்கு?"

"தினேஷ் ஒருத்தனை கொன்னுட்டாரு. அவரையும் யாரோ கொன்னுட்டாங்க. தினேஷை கொன்னவனை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். உடனே அவுங்க ஃபோன் பண்ணி வெற்றியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. பெரிய கவர் ஸ்டோரியா Times of Indiaல முதல் பக்கத்துல வந்திருக்கு?"

"எப்ப?"

"இரு நான் இன்னும் முழுசா படிக்கலை"

"சீக்கிரம் படி"

இதாங்க விஷயம் அதுல போட்டிருந்தாங்க. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த பெண்களை ஒரு கும்பல் பயமுறுத்தி காசு பறித்தது. மேலும் பல தவறான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் இருவர் மரணமடைந்தனர். ஒருவரை அருகிலிருந்த மக்கள் பிடித்து கொடுத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்த அவர்களுடைய கூட்டாளி வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டார். வெற்றியும், கொலை செய்யப்பட்ட தினேஷும் அந்த பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இன்ஸ்டிடியூட் மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. அங்கே படித்த மாணவர்களிடமும் போலிஸ் விசாரணை செய்தது.

அங்கே படித்து வேலைக்கு சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பற்றிய தகவலை போலிஸ் வெளியிட மறுத்து விட்டது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடமும் போலிஸ் அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அதே பக்கத்துல சாப்ட்வேர் கம்பனி HR நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்காங்க. இந்த Fake பிரச்சனையை எப்படி எதிர் கொள்றதுனு எல்லாரும் இன்னைக்கு பேச போறதா சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும்னு யாரும் நினைச்சி பார்க்கலனு சொன்னாங்க.

"ரவி. இதெல்லாம் இருக்கட்டும், நேத்து சாயந்திரம் வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. ராத்திரி எழுப்பி பார்த்தோம், அப்பவும் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. என்ன ஆச்சு?"

"ஓ. எனக்கு இப்ப தான் ஞாபகமே வருது. நேத்து மதியமே நான் இன்ஸ்டிடியூட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். தினேஷ் என்கிட்ட CD கொடுக்காம ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு என்ன பண்றதுனு தெரியல. மொதல்ல அவன் அந்த குமார்கிட்ட தான் போய் மீதி CD எல்லாம் வாங்குவானு யோசிச்சி வேகமா வீட்டுக்கு வந்து அந்த Caller ID spoofing சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண ஃபோன்ல இருந்து குமாருக்கு ஃபோன் பண்ணேன். அப்ப கரெக்டா தினேஷ் அங்க தான் இருந்தான். அவன்கிட்ட CD கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அவன் சரினு சொன்னான். எனக்கு அதுக்கு அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன்"

"அப்படியே தூங்கிட்டியா?"

"இல்லை. திடீர்னு நித்யா ஃபோன் பண்ணி, அவளை யாரோ பொண்ணு பார்க்க வராங்க, உடனே கிளம்பி வானு வீட்ல சொன்னாங்கனு சொன்னா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளுக்கும் என்னனு புரியல. உடனே கிளம்பிட்டா. எனக்கு எதுவுமே யோசிக்க முடியல. ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். பத்து பதினைஞ்சி நாளா சரியா தூக்கமில்லை. அதான் அப்படியே தூங்கிட்டேன்"

"ஹிம்ம்ம்... அப்ப நீ ஃபோன் பண்ணும் போது அந்த குமாரும், தினேஷும் உயிரோட இருந்துருக்காங்க."

"ஆமாம். ஒரு வேளை நான் ஃபோன் பண்ணதால தான் அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு செத்துட்டாங்களோ?"

"டேய், நீ ஏன் டென்ஷனாகற. வீ ஆர் ஜஸ்ட் ய டூல். அவனுங்க என்ன என்ன தப்பு பண்ணாங்களோ. அந்த CDக்காக ரெண்டு உயிர் போயிருக்குனா அதுல என்னவெல்லாம் இருக்குதோ. அவனுங்க இதுக்கு முன்னாடி யாரையாவது கொன்னு கூட இருக்கலாம். நீ டென்ஷனாகாத. நம்ம எதுவும் தப்பு பண்ணல"

"இருந்தாலும்.. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை நாம முன்னாடியே போலிஸ்ல போயிருந்தா, இப்படியெல்லாம் ஆகாம இருந்திருக்குமோ?"

"இங்க பாரு. எதுவும் நம்ம கைல இல்லை. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை. அவ்வளவு தான். நீ முதல்ல எழுந்து குளிச்சிட்டு வா. நம்ம ஆபிஸ் போவோம். இன்னைல இருந்து ஒழுங்கா வேலை பார்க்கலாம். எந்த டென்ஷனும் வேண்டாம். முன்ன மாதிரியே சந்தோஷமா இருக்கலாம். சரியா?"

"ஹும்ம்ம்"

ஒரு வேளை நான் பண்ண தப்பால தான் நித்யா என் வாழ்க்கைல இருந்து இவ்வளவு சீக்கிரம் போறாளோ???

அடுத்த நாள் முழுக்க எல்லா பேப்பர்லையும் இதை பத்தி தான் பேசிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையை தீர்க்க சாப்ட்வேர் கம்பெனி எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க. இனிமே எந்த இயர் பாஸ் அவுட்டா இருந்தாலும் ஃபிரெஷ்ஷரா எடுத்துக்குவோம். அதே மாதிரி ஜாவா, டாட் நெட், மெயின் ஃபிரேம்னு கோர்ஸ் போறவங்களை அந்த குறிப்பிட்ட ஃபீல்ட்ல இண்டர்வியூ பண்ணி எடுத்துக்குவோம். ஆனா அவுங்களை ஃபிரெஷ்ஷரா தான் சேர்த்துக்குவோம். அவுங்களை அந்த ட்ரெயினிங்கு ஏத்த மாதிரி ப்ராஜக்ட்ல போட்டுடுவோம்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சொல்லிட்டாங்க.

அப்பறம் TCS, Infosys, Wipro, Satyam எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அதுல எல்லா சாப்ட்வேர் கம்பெனிங்களும் அவுங்க எம்ப்ளாயூ இன்ஃபர்மேஷனை ரெஜிஸ்டர் பண்ணனும். ஒவ்வொரு சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் ஒரு நம்பர் தரப்படும்னும் இனிமே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணும் போது ரெஸ்யூமேல அந்த நம்பரும் கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இருக்கற எல்லாருக்கும் ஒரு நம்பர் தருவாங்க. அது கடைசி வரைக்கும் மாறவே மாறாது. அமெரிக்கால சோஷுயல் செக்கியூரிட்டினு ஒரு நம்பர் இருக்குமாம். அதே மாதிரியே சாப்ட்வேர் இஞ்சினியர் நம்பர்னு ஒண்ணு கொடுத்துடுவாங்க.

அதனால எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத யாரும் அவ்வளவு சீக்கிரம் ஃபேக் போட்டு வர முடியாது. அதே சமயம், quantitative aptitude, Shakuntula Devi இதெல்லாம் படிக்க விருப்பமில்லாதவங்க ஏதாவது கோர்ஸ் போயிட்டு அது மட்டும் அட்டெண்ட் பண்ணி போகலாம்.

முடிஞ்ச வரைக்கும் கம்பெனி எல்லாம் இறங்கி வந்திருக்காங்க. பார்க்கலாம், இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு.

......

என்னடா காலங்காத்தால ஆபிஸ் போகாம வேற பக்கம் போயிட்டு இருக்கனு பாக்கறீங்களா? நித்யா ஊர்ல இருந்து வந்துட்டேனு ஃபோன் பண்ணா. நான் தான் உடனே கிளம்பி வரேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ரெண்டு நாளா சரியா வேலையே செய்ய முடியலைங்க. சும்மா அவளை பார்த்துட்டாக்கூட போதும். போய் நல்லா வேலை செய்யலாம்னு தோனுது. அதான் கிளம்பிட்டேன்.

வழியிலயே வினோதினி அக்காவும், வினிதாவும் போயிட்டு இருந்தாங்க. வினிதா ஏதோ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறா போல. அனேகமா வினோதினி அக்கா யார் மூலமாவது ரெஃபரன்ஸ் பிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.

நித்யா குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா இருக்குறா. தூக்க கலக்கத்துல இருப்பானு நினைச்சேன்.

"என்னாச்சு?"

"எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

"ஏன் இவ்வளவு அவசரம்?"

"ஜெர்மனில இருக்காராம். விப்ரோல வேலை பார்க்கறாராம். ரெண்டு வாரம் வெக்கேஷன்ல வந்திருக்கார். அதான் உடனே கிளம்பி வர சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்... எப்ப கல்யாணம்?"

"தெரியல"

"ஜெர்மனி போறயா?"

"அப்படி தான் நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா முடியனுமில்லை"

"ஹிம்ம்ம்"

"அது சரி. நான் தான் ரோமிங்ல இருக்கனு தெரியுது இல்லை. அப்பறம் எதுக்கு நான் சாப்பிட்டுட்டேன், நீ ஒழுங்கா சாப்பிடுனு ரெண்டு நாளா மெசேஜ் பண்ணிட்டே இருந்த? உன்னால இருபது ரூபாய் தண்டம்"

"நீ தானே மெசேஜாவது அனுப்புனு கெஞ்சின"

"நான் கெஞ்சினனா? சும்மா சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண?"

"சரி. நான் கிளம்பறேன்"

என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.

"இரு. இப்ப போய் என்ன பண்ண போற? உனக்கு என்ன வேலையா இருக்கு? என் கூட கொஞ்ச நேரமிறேன்"

எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.

"உன் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்ப என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ப்ளீஸ் நான் கிளம்பறேன்"

"என்ன சொன்ன? திரும்ப சொல்லு"

"நான் எதுவும் சொல்லல. நான் கிளம்பனும்"

"ரவி. என்ன சொன்ன? என் முகத்தை பார்த்து சொல்லு"

"நான் எதுவும் சொல்லலைனு சொன்னேன் இல்லை"

"நிஜமா நீ எதுவும் சொல்லல. என் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு ஆசைப்பட்டேனு சொல்லல? பொய் சொல்லாத"

"ஆமாம் சொன்னேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இல்லாம இருக்க முடியுமானு தெரியலை. இந்த ரெண்டு நாள்ல மத்த எந்த விஷயத்தையும் யோசிக்க விடாம என் மனசு முழுக்க நீ தான் ஆக்ரமிச்சிட்டு இருந்த. இப்ப என்னனா என்னை விட்டுட்டு போறனு சொல்ற. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நித்யா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"

நித்யா கண்ணும் கலங்கிருக்கு...

"எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. உனக்கே எதுவும் வேலையில்லை. உன்னை எப்படி எங்க அப்பா, அம்மா நம்புவாங்க? அதை யோசிச்சியா ரவி?"

"எனக்கு வேலையில்லைங்கறது தான் பிரச்சனையா? அப்படினா நான் இப்ப உன்கிட்ட உண்மையை சொல்றேன். நான் கூகுள்ல வேலை செய்யறேன். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நான் இப்ப எந்த நாட்டு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாலும் எடுத்துக்குவாங்க. உங்க வீட்ல பயப்பட வேண்டாம்னு சொல்லு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவனு சொல்லு"

"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"

"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"

"அப்ப என்கிட்ட இத்தனை நாள் பொய் சொல்லிருக்க? அப்படி தானே?"

"நீ என்கிட்ட நாலு வேலை கிடைச்சிதுனு ஏமாத்தின, நான் பதிலுக்கு பண்ணேன். உன்கிட்ட உண்மையை சொல்லனும்னு நிறைய தடவை முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல. அந்த பிரச்சனைல நான் இதை மறந்திட்டேன். ஐ அம் ரியலி சாரி"

"சரி இப்ப நீ என்னை நிஜமா காதலிக்கறனு நான் நம்பனும்னா நான் என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவியா?"

"மாட்டேன். இது வரைக்கும் நான் உன்கிட்ட பழகின விதத்துல உனக்கு ஏன் மேல நம்பிக்கை வரலனா, இனிமேலும் வர வேண்டாம்"

"போடா" சொல்லிவிட்டு கன்னத்தில் அறைந்தாள்.

"இப்படி பேசி பேசியே என்னை மயக்கிட்டியேடா"

"என்ன? நான் உன்னை மயக்கினனா?"

"ஆமாம். உன் கூட ஒரு நாள் கூட பேசலைனா என்னால நார்மலா இருக்க முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நீ சாப்பிட்டயா சாப்பிடலயானு தெரியாம என்னால சாப்பிட கூட முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நான் அன்னைக்கு சொன்னப்ப அதை கூட புரிஞ்சிக்காம உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொல்ற. உனக்கு மனசாட்சியே இல்லைனு நினைச்சிக்கிட்டேன்"

"லூசு. நான் உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொன்னேன். என்ன கொடுப்பானு சொன்னனா? எப்படியும் நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேங்கற தைரியத்துல சொன்னேன்"

"சரி அப்படி என்ன கொடுப்ப?"

"வேணும்னா இப்ப கொடுக்கவா"

"ஏய். பக்கத்துல வராத. யாரும் இல்லாத வீட்ல வந்து இப்படி ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பா பண்றியே. போ. தள்ளி போ"

"ஐய்யோ... அடிப்பாவி. நான் உன்னை தொட்டனா? பக்கத்துல வரதுக்கே இந்த மொத்து மொத்தற. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு. ஆ. இதை மறந்துட்டனே. என்னை பிடிச்சிருந்தும் எனக்கு வேலை இல்லைனு நீ வேற ஒருத்தனை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டு வந்திருக்க இல்ல"

"உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்? நீ வினோதினி அக்காகிட்ட சொன்னா எனக்கு விஷயம் வராம போயிடுமா?"

"அடிப்பாவி. உனக்கு தெரியுமா? இதுக்கு தான் பொண்ணுங்ககிட்ட ரகசியம் சொல்ல கூடாதுனு சொல்லியிருக்காங்க போல"

"நீ சொன்ன அடுத்த நாளே அந்த அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க"

"அப்ப இப்ப பொண்ணு பாக்கறது எல்லாம் ட்ராமாவா?"

"இல்லை. அது உண்மை. ஆனா போய் எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். நம்ம விஷயத்தை என் அண்ணிகிட்டயும் லைட்டா சொல்லிட்டு வந்திருக்கேன். ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க"

"எப்படி அவ்வளவு தைரியமா சொல்லிட்டு வந்த? நான் உன்னை ப்ரபோஸ் பண்ணலைனா?"

"நீ பண்ணுவனு எனக்கு தெரியும்"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சினு வினோதினி அக்கா சொன்னாங்க"

"ஆமாம். ஆனா என்னால தான் ரெண்டு உயிர் போச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு"

"இல்லை ரவி. உன்னால நிறையா நல்லது நடந்திருக்கு. இந்த பூமிக்கு எந்த உயிர் வரணும், எந்த உயிர் போகனும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அது நம்ம கைல இல்லை"

"ஹிம்ம்ம்... இருந்தாலும் எனக்கு மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கு"

"கவலைப்படாத. நான் உன் கூட இருக்கேன்"

"நித்யா, உன் கையை நான் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறதா? எனக்கு ஏதோ ரொம்ப பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கும்"

என்னங்க இதுக்கு போய் முறைக்கிறா?

"சரி முறைக்காத. நான் கேக்கல"

"கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறனு சொல்ற? இந்த வாழ்க்கை முழுக்க பிடிச்சிக்கறனு சொல்லு" கையை நீட்டினாள்...

"வாழ்க்கை முழுக்க பிடிச்சிருந்தா வலிக்காது?"

""

"ஐய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன்... அடிக்காத அடிக்காத"

(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)

Thursday, September 04, 2008

ஆடு புலி ஆட்டம் - 20

"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"

தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...

"அப்படியா? ஆரக்கிள் எந்த வெர்ஷன் கேட்டிருந்தீங்க?"

"ஆரக்கிள் 9ஐ தான் கேட்டிருந்தோம். இப்ப தான் உங்ககிட்ட யாரோ ஃபிரெண்டை விட்டு கொடுத்தனு சொன்னாரு"

"ஓ அதுவா? இப்ப தான் நம்ம சாஃப்ட்வேர் எல்லாம் வைக்கிற சர்வர் ரூம்ல வெச்சேன். இங்கயே இருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்"

அந்த CD வாங்கிட்டு அவர் சர்வர் ரூமுக்கே போகல. நேரா இங்க வந்ததை பார்த்தேன். இப்ப இப்படி சொல்லிட்டு போறார். அவ்வளவு தான் தப்பாயிடுச்சினு நினைக்கிறேன்.

என்னங்க திடீர்னு சுகுமாரன் இந்த ரூமுக்கு வரார். தினேஷ் ஏதோ கேம் ப்ளே பண்ற மாதிரி இருக்குது.

"என்ன ரெண்டு பேரும் இந்த நேரத்துல வந்திருக்கீங்க? உங்க க்ளாஸ் ஈவனிங் தானே?"

"ஆமாம் சார். ஒரு சாப்ட்வேர் வாங்கலாம்னு வந்தோம்"

"ஓ அதுவா? அதை தினேஷ் தேடிட்டு இருக்கார். நீங்க லாஸ்ட் வீக்கே ஒழுங்கா வரலை இல்ல"

"ஆமாம் சார். கொஞ்சம் பர்சனல் ஒர்க்"

"சரி. நான் போன வாரம் உங்க க்ளாஸுக்கு எடுத்ததை அடுத்த பேட்ச்க்கு எடுக்க போறேன். நீங்க ரெண்டு பேரும் இப்ப என் கூட வாங்க"

ஆஹா... இப்ப என்ன பண்றதுனு தெரியலையே. சரி வரோம்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்.

"சரி சார். வரோம்"

"சரி நான் க்ளாஸ் போறேன்பா. வந்து சேருங்க"

நல்ல வேளைங்க சொல்லிட்டு போயிட்டாரு.

"இப்ப என்ன பண்ண போற ரவி"

"நித்யா, நீ அவர் க்ளாஸுக்கு போ. நான் போய் தினேஷை பார்த்துட்டு வரேன்"

"சரி"

ஆஹா... எங்க தேடியும் தினேஷை காணோம். எங்க போனார்னு தெரியலையே. இப்ப என்ன பண்ணலாம்?

..............................

உங்க எல்லார்கூடயும் நிதானமா பேசனும்னு நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப பாருங்க. இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலைல பேறச மாதிரி ஆகிடுச்சி. நான் தான் தினேஷ். என் மேல உங்க எல்லாருக்கும் கோபம் இருக்கும். அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. இந்த உலகம் எப்பவுமே Unfair தான். இப்ப பாருங்க. எதுவுமே தெரியாதுனு நான் நினைச்சிட்டு இருந்த வெற்றியே என் முதுகுல குத்தியிருக்கான்.

இப்ப தான் என் ரூம்ல அதை CDல நான் பார்த்தேன். எனக்கு தெரியாம நான் ஒரு பொண்ண பண்ணதை CDல பிடிச்சிருக்கான். அதை ஏன் அவன் இப்படி என் கைல கொடுத்து அந்த பையன் கைல கொடுக்க சொல்லனும்னு தான் எனக்கு புரியலை. ஒரு வேளை அந்த பையன் ஏதாவது டபுல் கேம் ஆடறானானும் புரியலை. இப்ப எனக்கு இருக்கற ஒரே கவலை, இதே மாதிரி மத்த பொண்ணுங்களை பண்ணதையும் CDல பிடிச்சிருக்காங்களானு கண்டுபிடிக்கறது தான்.

அதுக்கு தான் இப்ப லாட்ஜுக்கு போயிட்டு இருக்கேன். அதை தெரிஞ்சதுக்கப்பறம் முதல்ல அந்த பையனை பிடிக்கனும். அப்பறம் வெற்றி, குமார், துரைக்கு இருக்குது ஆப்பு. இருங்க லாட்ஜ் வந்துடுச்சி.

வெற்றி அவன் ரூம்ல தான் இருக்கான் போல. கதவு திறந்து தான் இருக்கு. இருங்க உள்ள போய் காரியத்தை முடிச்சிட்டு வரேன்.

"என்ன தினேஷ். அந்த CD தானே?"

"இல்லை குமார். நீ தப்பா எடுத்துட்டு வந்திருக்க. வெற்றி ஃபோன் பண்ணி உன்கிட்ட மீதி எல்லாமும் இருக்கு. எதுனு சரியா பார்த்து எடுத்துக்கோனு சொன்னான். அதான் வந்தேன்"

"ஓ. அப்படியா? இரு எடுத்து தரேன்"

என்னங்க திடீர்னு ஃபோன் அடிக்குது.

"இங்கயே இரு தினேஷ் வரேன். உள்ள சரியா சிக்னல் கிடைக்காது"

என்னங்க சொல்லிட்டு வெளிய போறான். இருங்க என்ன பேசறானு இங்க இருந்தே கேக்குது.

"சொல்லு வெற்றி"

" "

"ஆமாம். தினேஷ் இங்க தான் வந்திருக்கான்"

" "

"ஆமாம். அந்த CD இல்லை. வேற CDனு சொன்னான்."

" "

"இல்ல. நான் இன்னும் கொடுக்கல"

" "

"சரி நான் அது இங்க இல்லனு சொல்லி அனுப்பிடறேன். நீ பயப்படாத"

இருங்க உள்ள வரான். வெற்றிக்கு ஊர்ல இருந்து சிக்னலே கிடைக்காதே. எப்படி சரியா இந்த நேரத்துல நான் இங்க இருப்பனு பண்றான்.

எனக்கு எதுவுமே புரியலை. எப்படியும் இவனை மிரட்டி வாங்கிட்டு போயே ஆகனும்.

"தினேஷ். நீ சொல்ற CD வெற்றிக்கிட்ட இருக்கு. அவன் வந்தவுடனே வாங்கிக்கோ"

பாருங்க எவ்வளவு திமிரா பேசறான்.

"சரி. அப்ப உன் கிட்ட இருக்கற CDயையாவது கொடு"

"என்கிட்ட எதுவுமில்ல"

வேற வழியே இல்லைங்க. இவனை மிரட்டியாவது வாங்கிட்டு போகனும். இந்த கத்தியை எதுக்கும் கொண்டு வந்தது நல்லதா போச்சு.

"தினேஷ். எதுக்கு இப்ப கத்தியெல்லாம் எடுக்கற? நமக்குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம்"

"நானும் அதை தான் சொல்றேன். என் முதுகுலயே குத்த பாக்கறீங்களாடா? முதல்ல அந்த CDயெல்லாம் கொடு. உன்னை எதுவும் செய்ய மாட்டேன்"

என் கைல கத்தி இவ்வளவு அழகா, பளபளப்பா இருக்கும்னு நானே நினைச்சி பார்த்ததில்லைங்க. யாரோ கதவை திறக்கற சத்தம் கேக்குது. துரை வந்துட்டான் போல.

"ஆஆஆஆஆ...." என்னங்க என் கைல ஒரே ரத்தமா இருக்கு. கத்தி கைப்பிடி மட்டும் தெரியுது.

நான் துரையை திரும்பி பார்த்த நேரத்துல இந்த குமார் என் மேல பாய்ஞ்சிட்டான். என்ன பண்றதுனு தெரியாம நான் கத்தியால வேகமா தடுக்க, அவன் கீழ் தாடைல குத்திட்டு உள்ள போயிடுச்சி. வெறும் கைப்பிடி மட்டும் அவன் தாடைக்கு கீழ தெரியுது. கத்தி முழுசா அவன் தலைக்குள்ள போயிடுச்சி போல.

"துரை நான் வேணும்னே பண்ணல. என்னை அப்படி பார்க்காத"

துரை நான் சொன்னதை கேக்காம என் மேல பாய்ச்சிட்டான். என் கழுத்தை பிடிச்சிட்டாங்க. மூச்சு விட முடியலையே. டேய் என்னை விடுடா. விடுடா. நான் சொல்றது அவனுக்கு கேக்கல போல. ஆ... தலையை பின்னாடி செவுத்துல இடிக்கறான். வலி உயிர் போகுது. யாராவது வாங்களேன். யாராவது வந்து என்னை காப்பாத்துங்களேன். பின்னாடி தலைக்குள்ள என்னுமோ கூரான ஒண்ணு இறங்கிடுச்சி போல. நிறைய பேர் கதவை திறந்துட்டு வராங்க. என்னை காப்பத்திடுவாங்....

(ஆட்டம் தொடரும்...)

Wednesday, September 03, 2008

ஆடு புலி ஆட்டம் - 19

என்னடா இவ்வளவு சீக்கிரமா எழுந்து வெளிய போயிட்டு இருக்கோம்னு பாக்கறீங்களா? நான் நேத்து ராத்திரி அந்த போன் பேச்சை கேட்டதுக்கு அப்பறம் தூங்கவேயில்லை. படுத்தும் ஏதேதோ சிந்தனை ஓடிட்டே இருக்குது. அதான் ஆறு மணிக்கெல்லாம் அசோக்கை எழுப்பிட்டேன். ஒரு டீ குடிச்சிட்டு வந்தா நல்லா யோசிக்கலாம்னு அவன் தான் சொன்னான். அதான் போயிட்டு இருக்கோம். அதுவும் இந்த பெங்களூர் குளூருக்கு இதமா இருக்கும்.

ஒரு வழியா டீ குடிச்சிட்டு வந்தாச்சுங்க. அசோக் அதை மறுபடியும் கேட்டுட்டு இருக்கான். கேட்டு முடிச்சிட்டான் போல. கொஞ்சம் இருங்க அசோக் ஏதோ பேச வரான்.

"என்ன வெற்றியும் தினேஷும் தானா?"

"ஆமாம் அசோக். அப்படி தான் தெரியுது."

"சரி இப்ப என்ன பண்ணலாம்? இந்த ஆடியோ ஃபைலோட போலிஸ்கிட்ட போயிடலாமா? வெற்றி அவன் ஊருக்கு போறதுக்குள்ள பிடிச்சிடுவாங்க"

"இல்லை. எனக்கு அது சரியாப்படல. எனக்கு ஒரு ஐடியா இருக்கு"

"சொல்லு"

"அவன் பேசும் போது ஏதோ ஒரு CDயை பத்தி பேசினான். அதை பத்தி தினேஷுக்கும் தெரியாதுனு சொன்னான். அதே மாதிரி அது யார் கைலயாவது மாட்டினா கூண்டோட எல்லாரும் மாட்டிக்குவோம்னு சொன்னான்"

"கரெக்ட். அதுல என்ன இருக்கும்னு ஏதாவது கெஸ் பண்ணியா?"

"அதுல என்ன இருக்கும்னு என்னால தெளிவா சொல்ல முடியல. ஆனா அது ஒரு CD இல்லை. நிறைய CD. அதுவும் அந்த CDல தினேஷ்க்கு தான் பிரச்சனைனும் சொன்னான். அதை வெச்சி பொண்ணுங்களை இன்னும் மிரட்டி லம்பா காசு வாங்கலாம்னு சொன்னான்"

"அப்ப அந்த CDயை நாம வாங்கிட்டா அதை வெச்சி சுலபமா அவனுங்களை மாட்டி விட்டுடலாம்"

"கரெக்ட். அதுவுமில்லாம நாம எல்லாம் இதுல சம்பந்தப்பட்டிருக்கோம்னு போலிஸுக்கு சொல்லாமலே அவனுங்களை மாட்டிவிடலாம்"

"ஏன். நாம போலிஸுக்கு போனா என்ன?"

"நாம போனா நமக்கும் பெரிய பிரச்சனை. அப்பறம் வினோதினி அக்காக்கும் பிரச்சனை வரும். வேற வழியில்லைனா நாம அதை பண்ணி தான் ஆகனும். ஆனா இந்த மாதிரி CD கிடைச்சா அதை நாம போலிஸுக்கு நம்ம பேர் சொல்லாமலே அனுப்பினாக்கூட போதும்"

"குட். நானும் பயந்துக்கிட்டே இருந்தேன். சரி அந்த CDயை எப்படி வாங்கறது?"

"வேற வழியில்லை Caller ID spoofing யூஸ் பண்ணி தான் ஆகனும்"

"டேய் R&D ப்ராஜக்ட் எல்லாத்தையும் யூஸ் பண்ண சொல்றீயேடா"

"என்னுமோ நீங்களே கண்டுபிடிச்ச மாதிரி பேசறீங்களேடா. இதுக்கு எல்லாம் எவ்வளவு சர்வீஸ் ப்ரவைடர்ஸ் இருக்காங்கனு தெரியுமில்ல. ஏதோ VOIP யூஸ் பண்ணாம செல்ஃபோன்லயே சாப்ட்வேர் மூலமா பண்ற மாதிரி நீங்க கஸ்டமைஸ் பண்ணிருக்கீங்க. ஞாபகம் வெச்சிக்கோ"

"சரி. இப்ப நமக்கு எதுக்கு அது?"

"வெற்றி செல் ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி பண்ணா தான் இதை சுலபமா சாதிக்க முடியும். இப்ப அந்த சாப்ட்வேர் யூஸ் பண்ணா நான் வெற்றி ஃபோன்ல இருந்து பண்ற மாதிரி போகும். அந்த குமார் வெற்றி தான் பண்றானு நினைச்சிக்குவான். வெற்றி மாதிரியே நான் பேசிடறேன். "

"சரி. அவன்கிட்ட என்ன பேச போற?"

"அதை நாளைக்கு பார்த்துக்கோ. அதுக்குள்ள உன் செல்ஃபோன்ல அந்த சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணி இன்னைக்கு முழுசா டெஸ்ட் பண்ணிடலாம். நான் வெற்றி மாதிரி பேச இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் எடுத்துக்கறேன்"

"சரி ஓகே"

........


என்னடா கொஞ்சம் டென்ஷனா இருக்கேனு பாக்கறீங்களா? செல்ஃபோன்ல Caller ID Spoofing நல்லா வேளை செய்யுது. நிறைய டெஸ்டிங் செஞ்சி பார்த்தாச்சு. நானும் வெற்றி மாதிரி நல்லா பேசி பழகிட்டேன். ஆனா இப்ப எதிர்ல இருக்கறவன் என்ன பேசினாலும் பேசி சமாளிக்கனும். ராத்திரி முழுசா வெற்றி செல்ஃபோனுக்கும் பண்ணி பார்த்துட்டேன். அது Not Reachable Areaல தான் இருக்கு. நான் பேசி அவனுக்கு சந்தேகம் வந்தாலும் அவன் உடனே பண்ண முடியாது. இருங்க அசோக் அந்த குமாருக்கு டயல் பண்ணி கொடுக்கறான். ரிங் போக ஆரம்பிச்சிடுச்சி.

"சொல்லு வெற்றி. என்ன ஊருக்கு பத்திரமா போயிட்டயா?"

"பத்திரமா போயிட்டேன் குமார். ஒரு முக்கியமான விஷயம். அது தான் ஃபோன் பண்ணேன்"

"சொல்லு"

"நேத்து உன்னை எல்லா CDயும் காப்பி போட சொன்னனே. அதை போட்டு வெச்சிட்டயா?"

"இல்லையே"

"சரி. அதுல ரெண்டாவது CDயை மட்டும் உடனே காப்பி போடனும்"

"ரெண்டாவதுனா யாரு? அந்த திருச்சி பொண்ணா? பேருக்கூட சசிரேகாவோ என்னுமோ"

"ஆமாம். அதே தான். அந்த பொண்ணுக்கு இப்ப பேசினா சுளையா லட்சக்கணக்குல கறந்துடலாம். அந்த CDயை எடுத்து ஒரு காப்பி போட்டுட்டு போய் தினேஷ்கிட்ட கொடு. அவன் பேசிக்குவான்"

"தினேஷ்கிட்டயா? அவனுக்கு இதை பார்த்தா நம்மல ஒழிச்சி கட்டிட மாட்டானா?"

"பயப்படாத. மீதி எல்லாம் நம்மக்கிட்ட தான் இருக்கு. நான் சொல்றதை கேளு. மீதி எல்லாம் நான் நேர்ல வந்து சொல்றேன். மத்த CDயை எல்லாம் பத்திரமா ஒளிச்சி வெச்சிடு. சரியா?"

"சரி"

"அப்பறம். சொல்ல மறந்துட்டேன். அந்த CDல இங்கிலீஷ்ல நான் சொல்றதை எழுதி கொண்டு போய் கொடு. அப்ப தான் இன்ஸ்டிடியூட்ல யாருக்கும் சந்தேகம் வராது"

"இன்ஸ்டிடியூட்லயா கொண்டு போய் கொடுக்கறது?"

"ஆமாம். நேரமில்லை. அந்த பொண்ணு சீக்கிரம் பெங்களூரைவிட்டு போயிடும். அதான். சரி நான் சொல்றதை ஒரு பேப்பர்ல எழுதிக்கோ. அப்பறம் அந்த பையனை அதை CDல எழுத சொல்லி கொண்டு போய் கொடு"

"சரி"

"ஓ ஆர் ஏ சி எல் இ. திரும்ப சொல்லு"

"ஓ ஆர் ஏ சி எல் இ"

"சரி. நான் நாளைக்கு உனக்கு ஃபோன் பண்றேன். அது வரைக்கும் நீ பண்ணாத. நான் வெளிய போறேன். அங்க என்னால இதை பத்தி பேச

முடியாது. தினேஷ் இதை எல்லாம் பாத்துக்குவான்."

"சரி வெற்றி"

"நான் வெச்சிடறேன்.அப்பறம் பார்க்கலாம்"

"சரி"

ஆண்டவா. ஒரு வழியா பேசி முடிச்சிட்டேங்க. நாங்க திட்டம் போட்ட மாதிரி எல்லாம் நல்ல படியா நடக்கனும். இது வரைக்கும் எல்லாம் சரியா நடக்குது. இது மட்டும் நடக்கலனா இவ்வளவு பண்ணது வேஸ்ட். சரி இப்ப உடனே இன்ஸ்டிடியூட் கிளம்பனும்.

ஒரு வழியா இன்ஸ்டிடியூட் வந்து சேர்ந்தாச்சிங்க. நித்யா நான் ஃபோன் பேசறதுக்கு முன்னாடியே இன்ஸ்டிடியூட் வந்துட்டா. யாராவது தினேஷ்கிட்ட CD கொடுத்தா அவளை போய் வாங்கி வைக்க சொன்னேன். இன்னும் வரலைனு சொல்லிட்டா. இனிமே தான் வருவாங்க போல.

இருங்க யாரோ ஒருத்தன் வரான். அவனை தினேஷ் பார்த்ததும் டென்ஷனா வெளிய போறாரு. அவனை முறைச்சிக்கிட்டே போறாரு. அவன் அந்த CD கவரை ஏதோ சொல்லி கொடுத்துட்டு வேகமா போயிட்டான். அனேகமா "வெற்றி கொடுக்க சொன்னா"னு சொல்லியிருப்பான்.

இருங்க ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சி வாங்கிட்டு வரேன்.

தினேஷ் அந்த CDயை பார்த்துட்டு குழப்பமாவே இருக்கான். இருங்க போய் பேசறேன். அதுக்கெதுக்கு கூட நித்யாவும்னு யோசிக்கறீங்களா? பொண்ணுங்க முன்னாடி எல்லாரும் நல்லவனா தான் இருப்பாங்க. இருங்க அவன் பக்கத்துல போயாச்சு

"சார்"

"என்னப்பா?"

"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"

தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...

(ஆட்டம் தொடரும்...)

Thursday, August 28, 2008

ஆடு புலி ஆட்டம் - 18

தினேஷ் கிளம்பி போனதுக்கப்பறம் துரை அந்த பொண்ணு இருந்த ரூமுக்கு போனான். ஒரு மணி நேரம் கழிச்சி அவன் வந்தவுடனே குமார் போனான். அந்த பொண்ணு அரை மயக்கத்துலயே இருந்துச்சு. மறுபடியும் மயக்க மருந்து கொடுத்துட்டு கதவை பூட்டிட்டு வந்துட்டாங்க. அப்பறம் ராத்திரி அவளை ஹூசைன் லாட்ஜ்ல வேற ஒரு ரூமுக்கு எடுத்துட்டு போயிட்டாங்க.

அவ எப்ப வேணா எழுந்திரிக்கலாம்னு இருந்துச்சு. காலைல அஞ்சு மணிக்கு அலாரம் வெச்சிட்டு வந்தானுங்க. அப்படியே கதவு பக்கத்துல ஒரு லெட்டரும் வெச்சிட்டு வந்தாங்க. அந்த லெட்டர் எழுதறதுக்கு தினேஷ் உதவி பண்ணான். உதவி பண்ணானு சொல்றதைவிட அவன் தான் அதை தயார் பண்ணானே சொல்லலாம். நீங்களும் அதை படிச்சி பாருங்களேன்.

விஜயலஷ்மி,
உன்னை மாசம் மாசம் மிரட்டி காசு வாங்கறது எங்களுக்கு வெறுத்து போச்சு. இனிமே நாங்களே காசு கேக்காம நீயே கொடுக்கனும்னு இப்படி நடந்துக்க வேண்டியதா போச்சு. நீ போலிஸ்ல போகலாம்னு நினைச்சா, அது உனக்கு எதிரா தான் நடக்கும். போய் அந்த பெட்ல தலையணைக்கு அடில இருக்கற ஃபோட்டோவை பாரு.

என்ன அந்த ஃபோட்டோ எல்லாம் பார்த்தியா? அது நீ ரெண்டு மாசம் காசு கொடுத்தப்ப எடுத்தது. இப்ப நீ பார்த்த வரிசைல பார்த்தா நீ காசு வாங்கின மாதிரி தெரியுதா? வரிசையை மாத்தி பார்த்தா அப்படி தான் தெரியும். நீ காசு வாங்கிட்டு ஒண்ணா எழுந்திரிக்கறது. அவன் கூடவே வெளிய வரைக்கும் போறதை வெச்சி நீ இந்த ஊர்ல ப்ராத்தல் தொழில் பண்ணிட்டு இருந்தனு தாராளமா சொல்ல முடியும். கூடவே நீ பொய் சொல்லி வேலை வாங்கின, அதுக்கு தான் அந்த தொழில் பண்ணனு சொல்ல முடியும்.

நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். நீ தற்கொலை பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தா உன் அப்பா, அம்மா உன்னை கடைசியா நீ பொறந்தப்ப இருக்கற மாதிரி பார்க்க வேண்டியதா இருக்கும். அதுக்கு மேல அவுங்களும் உயிரோட இருக்க மாட்டாங்கனு உனக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதுக்கு அப்பறம் இண்டர்நெட்லயும், எல்லார் செல்ஃபோன்லயும் உன் படம் தான் பார்ப்பாங்க.

இதுல இருந்து நீ தப்பிக்கனும்னா ஒரே வழி தான் இருக்கு. மாசா மாசம் எங்களுக்கு தர வேண்டிய காசை கொடுத்துடு. அவ்வளவு தான். இனிமே நீ நேர்ல கூட வர வேண்டாம். நாங்க சொல்ற அக்கவுண்ட்ல மூணு தேதிக்குள்ள காசை போட்டுடு. அப்படி இல்லைனா உனக்கு தான் விபரீதம். எங்களுக்கு பணம் தான் வேணும். நீ தேவையில்லை.

அந்த ஃபோட்டோவையெல்லாம் அதே இடத்துல வெச்சிட்டு எங்கயும் நிக்காம நேரா பஸ் ஸ்டாண்ட் போய் பஸ் பிடிச்சி வீட்டுக்கு போ. யார்கிட்டயும் பேசாம போ. இன்னும் விடியல. அதனால யாரும் உன்னை இங்க பார்க்க மாட்டாங்க. அதனால உடனே கிளம்பு. இந்த கடிதத்தையும் ஃபோட்டோக்கூடவே வெச்சிட்டு போ. தப்பான முடிவ எடுத்தா நஷ்டம் உனக்கு தான். எங்களுக்கு இருபதாயிரத்தோட போச்சு.

......

லெட்டரை பார்த்தீங்களா. எவ்வளவு அட்டகாசமா எழுதியிருக்கான் பார்த்தீங்களா. அதான் தினேஷ். இருந்தாலும் அவனை நான் நம்பல. படிச்சவங்களை எப்பவும் நம்ப கூடாதுங்கறது என்னோட எண்ணம். அப்படி நான் என்ன பண்ணேனு பாக்கறீங்களா.

தினேஷ் எழுதன லெட்டர்ல இருந்த இந்த ஒரு வரியை மட்டும் நான் மாத்தி எழுதினேன்...

"இந்த போட்டோ மட்டும் இல்லாம நீ எந்த துணியும் இல்லாம இருக்கற ஃபோட்டோவும் எங்ககிட்ட இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த போட்டோவை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும். "

இதைத்தான் நான் இப்படி மாத்தியிருக்கேன்

"நீ அரை மயக்கத்துல எங்க ஆளுக்கூட பண்ணதும் வீடீயோவா ரெக்கார்ட் ஆகி இப்ப CDல இருக்கு. நீ போலிஸுக்கு போனா அந்த CDயை நீயும், உன் அப்பா, அம்மாவும் ஒண்ணா சேர்ந்து பாக்க வேண்டியது இருக்கும்."

இப்ப புரிஞ்சிருக்குமே, நான் அவனுக்கு தெரியாம என்ன பண்ணனு. ஆமா, நீங்க நினைக்கிறது சரி தான். அவன் அந்த பொண்ணை பண்ணதை தான் நான் அவனுக்கு தெரியாம வீடியோ எடுத்து வெச்சிருக்கேன். அது அந்த லாட்ஜ்லயே பத்திரமா இருக்கு. நாளைக்கு எனக்கு எதுவும் தெரியாதுனு அவன் விலக சான்ஸ் இருக்கு. அவன் அறிவை வெச்சி எங்களை மாட்டிவிட்டுட்டு அவன் தப்பிச்சி போகவும் வாய்ப்பிருக்கு. அதுக்காக நாங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த முன்னெச்சிரிக்கை நடவடிக்கை தான் இது. தினேஷுக்கு இது தெரியாது. இது
கடைசியா பயன்படுத்த வேண்டிய அஸ்திரம்.

ஏதோ தப்பா நடக்க போகுதுனு என் மனசுல சொல்லிட்டே இருக்கு. இருங்க நான் குமாருக்கு ஒரு ஃபோன் பண்ணிடறேன்.

"ஹலோ வெற்றி"

"குமார். நான் நாளைக்கு ஊருக்கு போகலாம்னு இருக்கேன். கைல இருக்கற காசுக்கு ஏதாவது இடம் வாங்க முடியுமானு பாக்க போறேன். இந்த முறை மச்சான் பேர்ல வாங்கலாம்னு இருக்கேன்"

"சரி. அப்படியே எங்க வீட்டுக்கு போயி ஏதாவது காசு கொடுத்துட்டு வாயேன்"

"நீ கவலைப்படாத. உன் ஆத்தாவை பார்த்து காசு கொடுத்துட்டு வரேன்"

"சரி. இப்படி நீ திடீர்னு ஊருக்கு போனா தினேஷ் எதுவும் சொல்ல மாட்டானா?"

"எனக்கு அவன்கூட ஏதாவது பிரச்சனை வந்துடுமானு பயத்துல தான் இருக்கற காசையெல்லாம் பதுக்கறேன்"

"ஏன்? ஏதாவது மிரட்டினானா?"

"இல்லை. முன்னெச்சரிக்கை தான். ஏதாவது மிரட்டினா அவனுக்கு தான் பிரச்சனை"

"ஆமாம்"

"அப்பறம் அந்த CDயை எல்லாம் எதுக்கும் இன்னொரு காப்பி போட்டு வை. நான் வந்ததும் வாங்கி அதை பத்திரமான ஒரு இடத்துல வெச்சிக்கறேன். ஏதாவது பிரச்சனையாகி ஒரு செட் போனாக்கூட இன்னொன்னு இருக்கும்"

"சரி"

"அந்த சின்ன பையன் இருக்கும் போது போய் காப்பி போடு. வேற யாராவது இருந்தா CDல என்னனு கேட்டா பிரச்சனையாகிடும். எல்லாரும் மாட்டிக்குவோம்"

"அதான் தெரியுமே. நீ பயப்படாத"

"சரி. ஜாக்கிரதை"

"இது வெச்சி அவனை மட்டும் தானே மிரட்ட போற?"

"இல்லை. அதுக்கு மட்டுமில்லை. அந்த பொண்ணுங்களையும் மிரட்டி லம்பா வாங்கலாம்னு இப்ப ஒரு திட்டமிருக்கு"

"ஏன் திடீர்னு"

"மொத்தமா வாங்கிட்டு ஊர் பக்கம் போயிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஊர்ல போய் ரியல் எஸ்டேட் பண்ணிக்கலாம்னு ஒரு திட்டம் இருக்கு. நம்ம மூணு பேரும் சேர்ந்தே பண்ணலாம். இதை பத்தி எல்லாம் என் மச்சான்கிட்ட பேச தான் உடனே போறேன்"

"சரி. நான் இன்னொரு காப்பி போட்டு வைக்கறேன்"

"சரி. நான் ஊருக்கு போய் கூப்பிடறேன்"

"சரி. வேற எதுவும் விஷயமில்லையே"

"இல்லை. அப்பறம் பார்க்கலாம்"

சரி. நான் தூங்க போறேன். நாளைக்கு காலைல எழுந்து ஊருக்கு கிளம்பனும்.

...........................................

என்ன மணி ரெண்டாச்சு இன்னும் இவன் தூங்கலயேனு பாக்கறீங்களா? இவ்வளவு நேரம் நித்யாக்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன். ரூம்ல எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க. அசோக் சீக்கிரமே தூங்கிட்டான். நாலு நாளா கோட் பண்ணதுல அவன் பயங்கர டயர்ட் ஆகிட்டான். நானும் தான் கோடிங் பண்ணேன். ஆனா அதெல்லாம் நித்யாகிட்ட சொல்ல முடியாது. அதுவுமில்லாம அவக்கூட பேசும் போது எனக்கு தூக்கமும் வர மாட்டீங்குது.

என்ன வந்தவுடனே லாப்-டாப்பை ஓப்பன் பண்றேனு பாக்கறீங்களா? வெற்றி யாருக்காவது ஏதாவது பேசினானு பார்த்துட்டு தூங்கலாம்.

ஏதோ ரெண்டு ஃபைல் இருக்கு. இருங்க கேட்டுட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

ஆடு புலி ஆட்டம் - 17

நல்ல படியா ட்ரீட் முடிச்சி வீட்டுக்கு வந்தாச்சுங்க. பயப்படற அளவுக்கு பெருசா எதுவுமாகல. இருங்க தினேஷ்கிட்ட இருந்து ஃபோன் வருது.

"சொல்லு தினேஷ். இப்ப தான் வீட்டுக்கு வந்தேன்"

"எதுவும் பிரச்சனையில்லையே?"

"எதுவுமில்ல. எல்லாரும் ஜாலியா பேசிட்டு இருந்தாங்க"

" மறுபடியும் பசங்க எல்லார்கிட்டயும் நீ நல்லா பேசினது நல்லதுக்கு தான். பின்னாடி இந்த பசங்க எல்லாம் தேவைப்படுவாங்க"

"ஆமாம். நானும் அதனால தான் எல்லார்கிட்டயும் பழைய படியே ஜாலியா பேசிட்டு இருந்தேன்."

"எதுவும் சந்தேகப்படற மாதிரி நடக்கல இல்ல"

"இல்ல. ஐயோ ஒண்ணு மறந்துட்டேன். கிஷோர் ஒரு பொண்ணுக்கிட்ட பேசிட்டு இருந்தான். திடீர்னு அவன் ஃபோன் சார்ஜ் தீர்ந்துடுச்சினு என் ஃபோனை வாங்கிட்டு கீழ போயிட்டான். ஒரு பத்து நிமிஷம் கழிச்சி தான் வந்தான்"

"பொண்ணுகிட்ட தான் பேசினான்னு நல்லா தெரியுமா?"

"ஆமா. நான் கூட பேசினேன்"

"சரி அந்த பொண்ணு நம்பர் எனக்கு சொல்லு"

"ஏன்?"

"எதுக்கும் அந்த நம்பருக்கு பூத்ல இருந்து பண்ணி கன்ஃபர்ம் பண்ணிக்கலாம். நம்ம ஜாக்கிரதையா இருக்கறது நல்லது"

"இரு பார்த்து சொல்றேன்"

"ஹ்ம்ம்ம்"

"தினேஷ் அதுல எந்த நம்பரும் இல்லை. கால் ஹிஸ்டரி எல்லாம் டெலிட் பண்ணிட்டான் போல"

"அதக்கூட நீ நோட் பண்ணலயா?"

"அவன் ஃபோன் பேசிட்டு வந்தவுடனே எல்லாரும் அவனை ஓட்டினாங்க. நான் அதுல மறந்து போயிட்டேன்"

"ஹிம்ம்ம்... அவன் மத்தபடி எப்படி பேசினான்?"

"அவன் நல்லா தான் பேசினான். அவன் மேல எதுவும் சந்தேகப்படற மாதிரி இல்லை"

"சரி. எப்படியும் அவன் வேற ஏதாவது நம்பர் தேடிருந்தாலும் கிடைச்சிருக்காது. ஒரு வேளை அந்த பொண்ணு நம்பர் தேவையில்லாம உன் செல்ஃபோன்ல இருக்க வேண்டாம்னு டெலிட் பண்ணிருக்கலாம்"

"வேற எதுவும் பிரச்சனையிருக்காதில்ல"

"வேற எதாவது பிரச்சனை பண்ணா அந்த கிஷோரை கவனிச்சிக்கலாம்"

"என்ன சொல்ற தினேஷ்?"

"அவன் என்னைக்கு ஆன் சைட் போறேனு சொல்லியிருக்கான்?"

"இன்னும் நாலு நாள்ல கிளம்பறேனு சொல்லியிருக்கான்"

"ஒரு வாரம் கழிச்சி ஃபோன் பண்ணுவோம். அப்படி அவன் போகலைனு தெரிஞ்சா அப்பறம் அவனை கவனிச்சிக்கலாம்"

"தினேஷ், அப்படி ஏதாவதுனா நாம பேசாம எஸ்கேப்பாகி ஊருக்கு போயிடலாம்டா. எப்படியும் மாசம் ரெண்டு லட்சம் வருதில்லை. உனக்கு தேவையானதை நம்ம ஏரியாவுலயே மாசம் மாசம் ஏற்பாடு பண்றேன். கிஷோர் கொஞ்சம் பெரிய இடம்டா"

"ஒருத்தனுக்கு பயந்து ஊருக்கு ஓடறதா? பூர்ணிமா ஏற்படுத்துன காயத்துக்கு எனக்கு மருந்து வேணும் வெற்றி. அது இல்லாம என்னால இருக்க முடியாது"

"எனக்கு புரியுது தினேஷ். இருந்தாலும்..."

"எதுவும் பேசாத. பிரச்சனை வந்தா நான் பாத்துக்கறேன். உனக்கு பணம் கிடைக்குதில்லை. எனக்கு மருந்து கிடைக்கணும். அவ்வளவு தான். நம்ம ஊர்ல இருக்கறது எல்லாம் எனக்கு மருந்து இல்லை. இந்த ஊர்ல, இந்த வேலை செய்யறதுங்க தான் எனக்கு மருந்து. புரிஞ்சிதா?"

"சரி. ஏதாவது பிரச்சனைனா உனக்கு சொல்றேன். இனிமே எதுக்கும் ஜாக்கிரதையா இருக்கேன். நீ தூங்கு"

"சரி. நாளைக்கு பார்க்கலாம்"

"சரி"

எப்படி இருந்தவன் இப்ப எப்படி ஆயிட்டான் பார்த்தீங்களா? அவனை என கூடவே வெச்சிக்கனும்னு சொல்லி நான் அவனுக்கு கொடுத்த மருந்தே இப்ப எவ்வளவு பிரச்சனையாகிடுச்சி பாருங்க. இன்னும் அவனுக்கு முதல் தடவை கொடுத்தது ஞாபகமிருக்கு. அந்த பொண்ணு பேரு விஜயலக்ஷ்மி. குமாருக்கு பேச சொல்லி அன்னைக்கு எழுதி கொடுத்ததே நான் தான். தினேஷ்க்கு கூட தெரியாது. அவன் பேசனது இன்னும் என் கண்ணு முன்னாடியே இருக்கு.

"ஹலோ"

"ஹலோ. யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாங்க எல்லாரும் நாளைக்கு ஊரைவிட்டு போறோம்"

"தயவு செஞ்சி என்னை விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"அதான் நானும் சொல்றேன். இது தான் உனக்கு கடைசி ஃபோன். நாளைக்கு விடிய காலைல நாங்க இந்த ஊரைவிட்டு போறோம். எங்களுக்கு அவசரமா காசு தேவைப்படுது. இதுக்கு மேல உனக்கு எப்பவுமே ஃபோன் பண்ண மாட்டோம். நீ பயப்பட வேண்டாம். நீ காசு கொடுக்கும் போது எடுத்த ஃபோட்டோ எல்லாம் கூட உனக்கு கொடுத்திடறோம். எங்களுக்கு பத்தாயிரம் இப்ப அவசரமா தேவைப்படுது"

"இந்த நேரத்துல நான் எங்க போவேன்"

"இப்ப வேணாம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா நாங்க சொல்ற இடத்துல வந்து கொடுத்துடு. எங்களுக்கு ஏழு மணிக்கு ட்ரெயின். நீ காசு கொடுக்கறதை வெச்சி தான் நாங்க ஊருக்கு போக முடியும். நீ வரலைனா அப்பறம் ரெண்டு பேருக்குமே கஷ்டம். எவ்வளவோ கொடுத்துட்ட. கடைசி பத்தாயிரம் தான். இதுக்கு மேல உன்னை தொந்தரவு பண்ண மாட்டோம்"

"நிஜமா சொல்றீங்களா?"

"ஆமா. சத்தியமா சொல்றோம். நாளைக்கு காலைல ஒரு அஞ்சரை மணிக்கா கலாசிப்பாளையத்துல இருக்கற ராஜூ கௌடா தெருவுல மூணாவது ஸ்ட்ரீட்ல இருக்கற ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல வா. நானே வந்து உன்கிட்ட எல்லா சாட்சியையும் கொடுத்துட்டு காசு வாங்கிக்கறேன்"

"அந்த இடத்துக்கு எல்லாம் நான் வர முடியாது. நீங்க வேணா மடிவாலா வந்துடுங்களேன். நான் உங்களுக்கு பணம் எடுத்து தரேன்"

"நீ என்ன பண்ணனும்னு நான் சொல்றேன். நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லக்கூடாதுனு சொன்னது மறந்து போச்சா? நாங்க இறங்கி வந்துருக்கோம்னு மேல ஏறலாம்னு நினைச்ச உனக்கு தான் விபரீதம். ஒழுங்கா பஸ் பிடிச்சி வா. மார்க்கெட் போற எல்லா பஸ்ஸும் அங்க தான் வரும். வேற யாரையும் கூட்டிட்டு வந்தா நான் வெளியவே வர மாட்டேன். நீ காசோட வரலைனா அப்பறம் உன் வாழ்க்கைலயே பண்ற பெரிய தப்பு இது தான். மறந்துடாத. சரியா காலைல அஞ்சரை மணி"

ஹூசைன் லாட்ஜ் பக்கத்துல தான் முத்து லாட்ஜ். அதுல தான் நம்ம பசங்க குமாரும், துரையும் வேலை செய்யறானுங்க. ரெண்டுத்துக்கும் நடுவுல ஒரு ரெண்டு அடி சந்து இருக்கும். அது சாக்கடை தண்ணி வரதுக்காக ரெண்டு லாட்ஜ் காரங்களும் விட்ட இடம். அந்த சந்தை மறைக்கறதுக்கு ஒரு கதவும் இருக்கும். அது எப்பவும் பூட்டி தான் இருக்கும். அந்த சந்து வழியா போனா முத்து லாட்ஜ் பின் பக்க காம்பௌண்ட் போக முடியும். காம்பௌண்டுக்கும் பில்டிங்கும் நடுவுல நாலு அடி இடம் இருக்கும். அதுல இருந்து சுலபமா வராண்டாவுக்கு போகலாம். அங்க முதல் ரூம் காலியா தான் இருந்துச்சு.

அந்த விஜி பொண்ணு எதிர்பார்த்த மாதிரியே பயந்துக்கிட்டே அந்த லாட்ஜ் பக்கத்துல வந்துட்டு இருந்தா. அங்க இருந்த நாயிங்க கூட தூங்கிட்டு தான் இருந்துச்சு. சரியா அந்த சந்து பக்கத்துல குமார் நின்னுட்டு இருந்தான். அந்த சந்து கதவு திருந்துருந்துச்சு.

அவ பயந்துக்கிட்டே காசை ஹேண்ட் பேக்ல இருந்து எடுக்கற நேரம் பார்த்து பின்னாடி இருந்து வந்த துரை அவ முகத்துல க்ளோரோஃபார்ம் கலந்த துண்டை வெச்சி அழுத்தினான். அப்படியே குமார் அவ காலை பிடிச்சி தூக்கிட்டு சந்துக்குள்ள போயிட்டானுங்க. உள்ள போனவுடனே துரை அந்த கதவை அடைச்சிட்டான். மொத்தமா இதெல்லாம் பத்து நொடிக்குள்ள நடந்துடுச்சு


ஏழு மணிக்கு தினேஷை நான் தான் லாட்ஜிக்கு கூப்பிட்டு வந்தேன். அவனுக்கு என்னனு புரியவே இல்லை. அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் கதவை மூடினேன். உள்ள கட்டில்ல விஜி அரை மயக்கத்துல இருந்துச்சு. அவனுக்கு ஒரே அதிர்ச்சி.

"எனக்கு நீ எவ்வளவோ உதவி பண்ணற. அதான் உனக்கு என் கிப்ட்"

"இல்லை வெற்றி. எனக்கு இதுல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை. அந்த பொண்ணை விட்டுடு"

"தினேஷ். பூர்ணிமா உன்னை எப்படி அசிங்கப்படுத்தினா. இந்த பொண்ணுங்க எல்லாரும் இப்படி தான். உன் வலிக்கு இது தான் மருந்து. நான் சொல்றேன். கேளு. நீ ஆடா இருந்தா உன்னை அடிப்பாங்க. நீ புலியா இரு" சொல்லிட்டு அவனை உள்ள விட்டுட்டு வெளிய வந்து கதவை மூடினேன்.

ஒரு மணி நேரம் கழிச்சி தினேஷ் வந்தான்.

"நீ சொன்னது சரிதான். என் வலிக்கு இது தான் பெஸ்ட் மருந்துனு நானும் நினைக்கிறேன். இப்ப நான் உலகத்தையே ஜெயிச்ச மாதிரி சந்தோஷமா இருக்கேன்... I am the God"

அவன் முகத்துல ஒரு வெறி தெரிஞ்சிது. அது தான் எனக்கும் வேணும்.

"வெற்றி, அடுத்த ஆடு எப்ப கிடைக்கும்?"

(ஆட்டம் தொடரும்...)

Tuesday, August 26, 2008

ஆடு புலி ஆட்டம் - 16

அசோக் அன்னைக்கு சாதாரணமா சொல்லிட்டு வந்துட்டாங்க. ஆனா அதை எங்க தேவைக்கேத்த மாதிரி கஸ்டமைஸ் பண்றதுக்கு ரெண்டு பேர் சேர்ந்து வேலை செஞ்சும் மூணு நாள் ஆகிடுச்சு. மூணு நாள்ல நான் ரெண்டு நாள் க்ளாஸ் வேற போகலை. நான் வரலைனு நித்யாவும் போகலை. அவள்ட சரியா பேசவும் முடியல. ரொம்ப கோபமா இருக்கா. அதுக்கு தான் இன்னைக்கு க்ளாஸ் போயிட்டு ரெண்டு பேரும் வெளிய சாப்பிட்டு போகலாம்னு ப்ளான்.

க்ளாஸ்ல ஒரு வார்த்தைக்கூட பேசாம அமைதியா இருக்கா. என்ன ஆகுமோ தெரியல. நான் வேற வெற்றி, ப்ரேம், தினேஷ் எல்லாம் மத்தவங்க கூட எப்படி பேசறாங்கனு பார்க்கறதுலயே இண்ட்ரஸ்டா இருந்ததால அவளுக்கு இன்னும் கோபம் போல.

ஒரு வழியா கிருஷ்ணா கபே வந்து முதல் தடவை உட்கார்ந்த இடத்துலே உட்கார்ந்துட்டோம். நான் எனக்கு முதல்ல இட்லி சொல்லிருக்கேன். அடுத்து இடியாப்பம் சொல்லலாம்னு ப்ளான். அவ மசால் தோசை சொல்லிருக்கா. பேசவே மாட்றா. அமைதியா இருக்கா.

"நித்யா, ஏன் இப்படி அமைதியா இருக்க? என்னாச்சு?"

"ஒண்ணுமில்லை"

அவளோட குரல்ல ஜீவனே இல்லாம இருக்கு.

"சொல்லு. ஏன் இப்படி அமைதியா இருக்க? மறுபடியும் வினோதினி அக்கா ஏதாவது தப்பா முடிவெடுத்தாங்களா?"

நான் கேட்டதும் என்னை முறைக்க ஆரம்பிக்கிறா. இந்த பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனே புரிய மாட்டீங்குதே.

"உனக்கு எப்ப பார்த்தாலும் அதே யோசனை தானா?"

"ஏன்? அதுக்கு இப்ப என்ன?"

"உனக்கு இப்பவெல்லாம் என் ஞாபகமே இருக்கறதில்லை. ரெண்டு நாளா எனக்கு ஃபோன் கூட பண்ணல. அதெல்லாம் அக்கறை இருக்கறவங்களுக்கு தானே ஞாபகம் இருக்கும்"

"இப்ப அது தான் பிரச்சனையா? உன் ஞாபகம் எப்பவும் இருக்கு. ஆனா இப்ப முதல் ப்ரையாரிட்டி வினோதினி அக்கா பிரச்சனை. அதுக்கு அசோக் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கான். நான் உதவலனா எப்படி?"

"எப்பவும் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணுவ. ரெண்டு நாளா அது கூட பண்ணல"

ரெண்டு நாளா ஆபிஸுக்கு கூட போகலனு இவக்கிட்ட எப்படி சொல்றது? நேரம் காலம் பாக்காம வேலை செஞ்சி அதை முடிச்சோம். டெஸ்டிங் பண்றதுக்கே ஒரு நாள் முழுசா ஆயிடுச்சு. அதுலயும் எத்தனை விதமா பண்ணோம்னு எங்களுக்கு தான் தெரியும். சரி சமாளிப்போம்.

"அது இல்ல. நான் உன் கூட போன் பண்ணி பேசிட்டு இருந்தா, வைக்கவே மனசு வராது. அசோக் பாவம். அதான்"

"நீ முந்தா நேத்து ஃபோன் பண்ணுவனு மதியம் அஞ்சு மணி வரைக்கும் வெயிட் பண்ணேன். அப்பறம் வினிதா என்னனு விசாரிச்சவுடனே சாப்பிட்டேன்"

"லூசா நீ? நாளைக்கு கல்யாணமாகி போனா என்ன பண்ணுவ?"

"அப்பவும் வெயிட் பண்ணுவேன்"

"உன் புருஷன் கன்னத்துலயே ரெண்டு கொடுப்பான்"

"கொடுத்தா நான் வாங்கிக்கறேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இனிமே நீ ஒழுங்கா சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணு"

"என்ன பிரச்சனையா? இந்த மாதிரி நான் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு கால் பண்றேனு தெரிஞ்சா என் பொண்டாட்டி என் கன்னத்துல ரெண்டு கொடுப்பா"

"பொண்டாட்டி தானே. கொடுத்தா வாங்கிக்கோ"

"அடிப்பாவி. சரி. இனிமே நான் உனக்கு கால் பண்றேன். அப்படி இல்லைனாலும் ஒரு மணிக்குள்ள நான் ஃபோன் பண்ணலைனா சாப்ட்ரு. நான் ஏதாவது முக்கியமான வேலைல இருந்தா எனக்கு அப்பறம் உன் யோசனைலயே வேலை செய்ய முடியாம போயிடும். என்ன சரியா?"

"ஒரு SMSஆவது பண்ணிடேன். ப்ளீஸ்"

"சரி. இப்ப ஒழுங்கா சாப்பிடறயா?"

"கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு"

இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல...

---------------

ரொம்ப நாளைக்கு அப்பறம் கிஷோர்கிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. ஆன் சைட் போறேன் கூட படிச்ச பசங்க கொஞ்ச பேருக்கும் எனக்கும் சேர்த்து ட்ரீட் கொடுக்கறேனு சொல்றான். நாளைக்கு சாயந்திரம் மடிவாலால இருக்கற மயூராக்கு ஏழு மணிக்கா வர சொல்றான். எதுக்கும் தினேஷ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாம்.

"தினேஷ், நம்ம இன்ஸ்டிடியூட்ல ஒரு பத்து மாசத்துக்கு முன்னாடி கிஷோர்னு ஒருத்தன் ஜாவா படிச்சானே. ஞாபகமிருக்கா?"

"ஏன்?"

"அவன் ஏதோ ஆன்சைட் போறேன். அதனால ட்ரீட் கொடுக்கறேனு நாளைக்கு வர சொல்றான். அதான் போலாமானு உன்கிட்ட கேக்கலாம்னு பார்த்தேன்"

"அவன்கூட இதுக்கு முன்னாடி போயிருக்கயா?"

"அவன் கூடனு தனியா போனதில்லை. அவனுங்க நாலஞ்சி பசங்க சேர்ந்து வேலை கிடைச்சப்ப எனக்கு தண்ணி ட்ரீட் வெச்சானுங்க. நான் தான் அப்ப கேட்டேன்"

"அப்படினா ஏற்கனவே அந்த பசங்களோட வெளிய போயிருக்க?"

"ஆமாம்"

"உன் ஃபோன்ல நம்ம பசங்க குமார், துரை நம்பர் எல்லாம் எதுவுமில்லை தானே?"

"நீ தான் அந்த நம்பர் எல்லாம் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கயே. அதனால அவுங்க நம்பர் எல்லாம் மனப்பாடம் தான் பண்ணி வெச்சிருக்கேன். எங்கயும் எழுதிக்கூட வைக்கல"

"நல்லது. அப்ப போ"

பசங்க அப்ப மாதிரியே தான் இப்பவும் அரட்டை அடிச்சிட்டு இருக்கானுங்க. என்கிட்டயும் அதே மாதிரி தான் பேசறானுங்க. கிஷோர் ஃபிரான்ஸ் போறானாம். அங்க இருக்கற பொண்ணுங்க எல்லாம் பயங்கர மாடலா இருப்பாங்களாம். கொடுத்து வெச்ச பையன். நம்ம தினேஷ் மட்டும் அங்க இருந்தான்னா அவ்வளவு தான்.

ஆர்டர் பண்ண ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல இருந்து கிஷோர் ஃபோன்லயே பேசிட்டு இருக்கான். யாரா இருக்கும்? இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கான்.

"வெற்றி அண்ணா, என் ஃபோன் சார்ஜ் தீர மாதிரி இருக்கு. உங்க ஃபோனுக்கு பண்ண சொல்லட்டுமா?"

"சரி பண்ண சொல்லு. இதான் நம்பர் 98********" அவன் என் நம்பரை கேட்டு அவன் ஃபோன்ல சொல்லிட்டு இருக்கான்.

இருங்க கால் வருது.

"ஹலோ" ஒரு பொண்ணு குரல் தான் கேக்குது. அவன்கிட்ட கொடுத்துடலாம்.

"வெற்றி அண்ணா பொண்ணு தான?" ரமேஷ் தான் கேட்டான்

"ஆமாம்டா. ஏதோ பொண்ணுக்கிட்ட தான் இவ்வளவு நேரம் கடலை போட்டுட்டு இருக்கான்." நான் சொல்லி முடிச்சதும் எல்லாரும் "ஓ"னு சத்தம் போட்றானுங்க. எல்லாரும் திரும்பி பாக்கறாங்க

"அண்ணா நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். எல்லாம் சாப்பிட்டு இருங்க" சொல்லிட்டு என் பதிலை எதிர்பார்க்காம ஃபோன் பேசிட்டே கீழ இறங்கி போயிட்டான். சரி சின்ன பையன். எப்படியும் வந்து பில் கட்டினா போதும்.

------

ஒரு வழியா அசோக் சொன்ன மாதிரி வெற்றியை கூப்பிட்டு வந்து அவன் செல்ஃபோனை எடுத்துட்டு கீழ வந்துட்டேன். பக்கத்துல இருக்கற ஒரு கடைல அசோக்கும், ரவியும் லேப் டாப்போட காத்துட்டு இருக்காங்க.

"கிஷோர். குட். அந்த ஃபோனை குடு" அசோக் டென்ஷனா இருக்கான். அவனை விட நான் டென்ஷனா இருக்கேன்.

அசோக் அந்த ஃபோனை USBல கணெக்ட் பண்ணி லேப்டாப்ல இருந்து ஏதோ சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணான். ஒரு தடவை அவன் செல்ஃபோன்ல இருந்து கால் பண்ணான். சும்மா டெஸ்ட் டெஸ்ட்னு சொன்னான். கட் பண்ணிட்டு. அவன் லேப்டாப்ல ஒரு ஃபோல்டரை திறந்தான். அதுல ஒரு வேவ் ஃபைல் இருந்தது. அதை ஓப்பன் பண்ணான். அது "டெஸ்ட் டெஸ்ட்" என்றது.

Now we have made this as a Covert Listening Device...

(ஆட்டம் தொடரும்...)

Monday, August 25, 2008

ஆடு புலி ஆட்டம் - 15

ஒரு வழியா அந்த பொண்ணுக்கிட்ட இருந்து இருபதாயிரம் வாங்கியாச்சு. இன்னைக்கு காலைல என்ன பேசினோம்னு நீங்க கேக்கல இல்லை. இதுதான் அவளுக்கு கொடுத்த இண்ஸ்ட்ரக்ஷன்.

"சரியா பத்து மணிக்கு MG ரோட்ல இருக்குற பரிஸ்டா காப்பி ஷாப்புக்கு வர. அங்க மஞ்ச சட்டை கருப்பு பாண்ட் போட்ட ஒரு ஆள் தனியா உக்கார்ந்து காபி குடிச்சிட்டு இருப்பான். நீயும் ஒரு காபி வாங்கிட்டு போய் அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து காபி குடிக்கற. நீ பாதி குடிச்ச உடனே உன் ஹேண்ட் பேக்ல இருந்து பணம் எடுத்து அவனுக்கு கொடுக்கனும். பணத்தை எந்த கவர்லயும் போட்டு கொடுக்க கூடாது. அதுக்கு அப்பறம் காபி குடிச்சிட்டு அவன் கூடவே எழுந்து வெளிய வர. அவன் போற திசைக்கு எதிர்ல போயிடு. அவ்வளவு தான். எந்த இடத்துலயும் அழக்கூடாது. நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா நாங்க ஒழுங்கா நடந்துக்குவோம்." அவ்வளவு தான்

பணம் வாங்க குமார் எதுக்கு போனானு பாக்கறீங்களா? என்னையும் தினேஷையும் தான் அந்த பொண்ணுக்கு தெரியுமே. குமாருக்கு அஞ்சாயிரம் ரூபாய். மீதி எல்லாம் எனக்கு தான். குமாரும் அவன் கூட்டாளி துரையும் இங்க ஒரு லாட்ஜ்ல வேலை செய்யறானுங்க.

என்னடா தினேஷுக்கு எதுவும் இல்லைனு யோசிக்கறீங்களா? இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் அந்த பணம் கொடுத்த பொண்ணே அவனுக்கு தானே. அதுக்கு மேல அவனுக்கு என்ன வேணும்?

நீங்க பாக்கறதை பார்த்தா தினேஷ் ரொம்ப கெட்டவன்னு நினைக்கிற மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் அவன் ரொம்ப கெட்டவனில்லை. அவன் எந்த பொண்ணையும் ஒரு தடவைக்கு மேல தொட மாட்டான். அதுவும் முதல் தடவை பண்ணனும். அவ்வளவு தான்.

அவனுக்கு பணத்துல ஆசையில்லை. எனக்கு பணம் வேணும். அதனால அவனுக்கு பொண்ணுங்க ஆசையை நான் தான் ஏற்படுத்தினேன். இப்ப என்னை விட பெரிய தப்பை அவன் பண்றான். ஏதாவது மாட்டினா அவனுக்கு தண்டனை அதிகம். அதனால அவன் அதிகமா சிந்திக்கறான். பாதுகாப்பா திட்டம் போடறான். பணத்தோட நான் சந்தோஷமா இருக்கேன்.

தினேஷ் மாதிரி ஒரு புத்திசாலியை நீங்க பார்க்க முடியாது. எங்க கிராமத்துலயே படிச்சி இஞ்சினியரானவன் அவன் தான். அப்பறம் இதே பெங்களூர்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்தான். நாலு வருஷம் நல்லா வேலை செஞ்சான்.

அப்ப தான் பூர்ணிமா அங்க சேர்ந்தா. ஆறு மாசத்துக்குள்ள அவனும் பூர்ணிமாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. பூர்ணிமா ரொம்ப அழகு. நல்ல பொண்ணு. ஆனா நல்லா ஊர் சுத்துவா. ஒரு தடவை அவ டீம் பசங்களும் பொண்ணுங்களும் இந்த நாசா பப்புக்கு போய் தண்ணி அடிச்சிருக்குங்க.

அந்த நேரம் பார்த்து அவ டீம்ல இருக்குற ஒரு பொண்ணு தினேஷுக்கு போன் பண்ணி சொல்லிடுச்சு. கோபமா அங்க போன தினேஷுக்கு, பூர்ணிமாக்கும் பப்லயே சண்டை. கோபத்துல அவன் அவளை அடிச்சிட்டான். அதை பார்த்து கோபமான அவ டீமேட் ஒருத்தன் தினேஷை அடிக்க அப்பறம் பப்ல இருந்த எல்லாரும் இவனை போட்டு அடிச்சிட்டாங்க. அன்னைக்கு வேலைக்கு போறதை நிறுத்தினவன் தான். அதுக்கு அப்பறம் பூர்ணிமாவும் இவனுக்கு ஃபோன் பண்ணல.

ஆறு மாசம் ஊர்ல பைத்தியக்காரனாட்டம் சுத்திட்டு இருந்தான். நான் தான் பேசி அவனை நான் வேலை செய்யற ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர சொல்லி மறுபடியும் பெங்களூர் கூப்பிட்டு வந்தேன். இவன் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து பதிமூனு மாசமாச்சு.

நாங்க இந்த வேட்டையை ஆரம்பிச்சி ஒன்பது மாசமாச்சு. இது வரைக்கும் பதினாறு ஆடுங்க மாட்டிருக்குங்க. அதுல பன்னெண்டு ஆடு அவனுக்கு பலி கொடுத்திருக்கேன். இன்னும் நிறைய கொடுப்பேன். அவனுக்கு தெரியாம நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அது மட்டும் சக்ஸஸாச்சினா இன்னும் ஒரு வருஷத்துல நான் கோடீஸ்வரன் தான்.

எல்லா பொண்ணுங்களுக்கும் நல்லா வேலை கிடைச்சி, கை நிறைய சம்பாதிக்கனும்னு வேண்டிக்கோங்க. என்னடா அவுங்களுக்கு வேலை கிடைக்கனும்னு வேண்டிக்க சொல்றேனு பாக்கறீங்களா. ஆடு கொழுத்தா புலிக்கு சந்தோஷம் தானே.

இருங்க குமார் வந்திருக்கான். பேசிட்டு வரேன்.

"என்ன குமாரு? என்ன பிரச்சனை?"

"அந்த திண்டுக்கல் பொண்ணு போன் நம்பர் மாத்திடுச்சி போல"

"தே@*&%$ மகளுங்க. இவளுகளுக்கு இதே வேலையா போச்சு. மொத மாசம் காசு கொடுத்தவுடனே நம்பர் மாத்திடறாளுங்க. இரு. நம்பர் பிடிச்சி தரேன்"

"சரிண்ணே"

பாருங்க. இதையே தான் எல்லாம் பண்ணுதுங்க. நம்பர் மாத்தினா புது நம்பர் கண்டுபிடிக்க முடியாதா? எப்படியும் நம்பர் மாத்தி ஒரு மாசத்துல கம்பெனி சைட்ல அப்டேட் பண்ணியிருப்பாளுங்க. எங்க இண்ஸ்டிடியூட்ல படிச்சி அங்க வேலைல சேர்ந்திருக்க பசங்களுக்கு சும்மா ஃபோன் பண்ணி வாங்க முடியாதா என்ன?

வேற ஒரு பெரிய கம்பெனில இருந்து ஆஃபர் வந்திருக்கு. அந்த பொண்ணு நம்பர் மாறிடுச்சு போல கொஞ்சம் பார்த்து சொல்லுனு சொன்னா பார்த்து சொல்லிட போறானுங்க. இதெல்லாம் எனக்கு தினேஷ் சொல்லி கொடுத்தது தான். இப்ப புரியுதா நான் ஏன் அவனை இவ்வளவு புகழறனு. கொஞ்சம் இருங்க அந்த திண்டுக்கல் பொண்ணு நம்பர் வாங்கி குமாருக்கு கொடுத்துட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

Sunday, August 24, 2008

ஆடு புலி ஆட்டம் - 14

என்னடா இவன் சாதாரண ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல அசிஸ்டெண்டா இருந்துட்டு இப்படி ஊர்ல நெலமெல்லாம் வாங்கி போடறானு பாக்கறீங்களா? ஒன்றையனா படிப்ப படிச்சிட்டு இவனுங்களே இவ்வளவு சம்பாதிக்கும் போது இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கோம். இதுக்கூட இல்லைனா எப்படி?

என்னோட இந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் தினேஷ் தான். எல்லாம் அவனோட ஐடியால தான் ஓடிட்டு இருக்கு. அவனுக்கு ஆரம்பத்துல இருந்தே பணத்துல இஷ்டமில்லை. அறிவிருக்கவன் பணம் சம்பாதிக்கனும் இல்லைனா அவன் அறிவை வெச்சி வேற ஒருத்தவன் பணம் சம்பாதிப்பான். நான் ரெண்டாவத பண்ணிட்டு இருக்கேன். அதுக்காக அவனுக்கு எதுலயுமே இஷ்டமில்லைனு சொல்லிட முடியாது. எனக்கு தேவையான பணத்தை அவன் கொடுக்கறான். அவனை நான் சந்தோஷமா வெச்சிருக்கேன்.

என்னடா இவன் ஏதோ ரொம்ப மர்மமா பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. உங்ககிட்ட சொல்லாமலா? ஆனா நான் சொல்றதை மனசோட வெச்சிக்கோங்க. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. நான் யாரையும் கொலை பண்ணல. மொத்தமா ஏமாத்தவுமில்லை. எங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல படிக்கிறவங்க நிறைய பேர் பொய் சொல்லி வேலைக்கு சேராங்க. அவுங்களுக்கு எங்க இன்ஸ்டிடியூட்லயே சர்டிஃபிகேட்டும் அடிச்சி தராங்க.

நான் தான் அந்த சர்டிஃபிகேட்டே பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கறேன். அப்படி ஏமாத்தி பொய் சொல்லி சேரவங்க சம்பளம் மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு இருக்கு. அப்படி ஏமாத்தறவன் இவ்வளவு சம்பாதிக்கும் போது, நான் மட்டும் இங்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்? இந்த ஊர்ல ஏமாத்தறவன் தான் நல்லா இருக்கான். அதனால நான் அவுங்களை ஏமாத்தி பணம் பறிக்கலாம்னு யோசிச்சேன்.

அதுக்கு தினேஷ் தான் அருமையான யோசனை சொன்னான். பசங்களை மிரட்டலாம்னு என்னோட யோசனை. ஏன்னா இங்க பசங்க தான் அதிகம். பத்துல நாலு பேர் ஏமாந்தாங்கனா கூட மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம்னு நான் யோசிச்சேன். தினேஷ் தான் அது வேண்டாம்னு சொன்னான். பசங்க பத்து பேருக்கு ஃபோன் பண்ணா அதுல ஒருத்தன் கண்டுபிடிச்சாக்கூட பிரச்சனை அதிகமாகிடும்.

பசங்க தப்பு செஞ்சாலும் பயப்பட மாட்டாங்க. பொண்ணுங்களை பிடிக்கலாம். அவுங்க தான் தப்பு செஞ்சா அது வெளிய தெரியக்கூடாது பயப்படுவாங்க. நாலு பசங்களைவிட ஒரு மாசத்துக்கு ஒரு பொண்ணு மாட்டினா போதும். பிரச்சனையில்லாம சம்பாதிக்கலாம்னு அவன் ஐடியா கொடுத்தான். அந்த ஒரு ஐடியா தான் இப்ப நான் மாசம் ரெண்டு லட்சத்துக்கு மேல சம்பாதிக்க வழி பண்ணியிருக்கு.

அப்படி என்னடா மிரட்டுவாங்கனு யோசிக்கறீங்களா? அதெல்லாம் ரொம்ப மிரட்ட மாட்டோம். மணி பத்தரை ஆச்சு. எப்படியும் அந்த பொண்ணு PGக்கு வந்திருக்கும். இதான் சரியான நேரம். இப்ப குமார் ஃபோன் பண்றான் நீங்களே கேளுங்களேன்.

"ஹலோ அகிலாவா?"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"அது இருக்கட்டும். புது வேலையெல்லாம் நல்லா போகுதா?"

"சூப்பரா போகுது. நீங்க யாருனு சொல்லுங்களேன்"

"ஃபேக் போட்டு கம்பெனியை ஏமாத்திட்டு வேலைக்கு போனா எப்படிடீ சூப்பரா போகாம இருக்கும்?"

"நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"மாசம் நாப்பத்தி மூவாயிரம் சம்பளம் தானே? பொண்ணுங்களுக்கு டேக்ஸ் வேற கம்மியாச்சே. எப்படியும் முப்பத்தி அஞ்சாயிரம் கைக்கு வராது?"

"யார் நீ? உனக்கு என்ன வேண்டும். இந்த பயமுறுத்துற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். போய் எங்க வேணா சொல்லிக்கோ. மிஞ்சி போனா வேலை போகுமா"

"நீ விருத்தாச்சலம் தானே? உங்க அப்பா ஹிஸ்டரி டீச்சர். அம்மா ஹவுஸ் ஃவைப் தான. நாளைக்கு சாயந்திரம் உன் ஃபோட்டோவோட நீ இப்படி கம்பெனியை ஏமாத்தி வேலைக்கு சேர்ந்திருக்கனு விழுப்புரம் மாலை மலர்ல வரும். உங்க அப்பா, அம்மா பெருமைப்படுவாங்க"

"ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு என்ன வேணும்? நான் நாளைக்கே வேலையை விட்டுடறேன். அப்படி எதுவும் பண்ணிடாதீங்க"

"முதல் மாசம் சம்பளம் வாங்கிருப்பியே. அந்த ஏமாத்து பணத்தை உன் அப்பனுக்கு கொண்டு போய் கொடுத்துட்டியா?"

"இல்லை. நான் இன்னும் ஊருக்கு போகல. உங்களுக்கு என்ன வேணும்? ப்ளீஸ் சொல்லுங்க"

"சரி உன் சம்பளத்துல இருந்து இருபது ஆயிரம் ரூபாய் எடுத்து ரெடியா வை. எங்க வந்து கொடுக்கனும்னு நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நான் ஃபோன் பண்ணி சொல்றேன். அதுக்குள்ள ஏதாவது ஏமாத்தலாம்னு யோசிச்சா நஷ்டம் உனக்கு தான்"

"கண்டிப்பா நான் ஏமாத்த மாட்டேன். உங்க அக்கவுண்ட் நம்பர் வேணா சொல்லுங்க. நாளைக்கு காலைலயே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்"

"நான் சொல்றதை மட்டும் நீ செய். இந்த இருபதாயிரத்தோட உன்னை விட்டுடறேன். ஏதாவது தப்பா பண்ணலாம்னு யோசிச்சா உன் வாழ்க்கையே அழிஞ்சிடும். உங்க அப்பா, அம்மாவும் சந்தோஷமா ஊர்ல வாழ முடியாது. அப்பறம் எந்த ஃபிரெண்ட்ஸ்கும் இதை பத்தி ஃபோன் பண்ணி பேசாத. ஏன்னா உன்னை பத்தி சொன்னதே அதுல ஒருத்தன் தான். நீ யாருக்காவது ஃபோன் பண்ணனு தெரிஞ்சா நீ உன் வாழ்க்கையை மறந்துட வேண்டியது தான். உன் ஒரு மாச சம்பளத்துல பாதி பணத்துக்காக நீ உன் வாழ்க்கையையே அழிச்சிக்க மாட்டேனு நினைக்கிறேன்"

"கண்டிப்பா நான் எதுவும் செய்யமாட்டேன்"

"சரி. நாளைக்கு காலைல எட்டு மணிக்கு காசு எடுத்துட்டு ரெடியா இரு. நாங்க உனக்கு எட்டு மணிக்கு ஃபோன் பண்ணுவோம்"

(ஆட்டம் தொடரும்...)

Thursday, August 21, 2008

ஆடு புலி ஆட்டம் - 13

அட என்னடா திங்கள் கிழமை ராத்திரி இந்த நேரத்துல நித்யா வீட்ல நாங்க எல்லாம் இருக்கோம்னு பாக்கறீங்களா? எப்படியும் இனிமே ஒரு நாள் கூட க்ளாஸ் தவறவிடக்கூடாதுனு தான் போயிட்டு இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா பக்கத்துல யாரோ புதுசா ஒரு பையன் உக்கார்ந்திருக்கானு பாக்கறீங்களா?

அண்ணாத்த பேரு கிஷோர். அவர் தான் வினோதினி அக்காவை அங்க இன்ஸ்டிடியூட்ல சேர சொன்ன நல்ல நண்பர். அவரும் அதே இன்ஸ்டிடியூட்ல ஒரு எட்டு ஒன்பது மாசத்துக்கு முன்னாடி படிச்சிருக்காரு. அதான் அவர்கிட்ட இதை பத்தி பேசி பார்க்கலாம்னு நானும் அசோக்கும் இங்க வந்திருக்கோம். வினோதினி அக்கா திரு திருனு முழிச்சிட்டு இருக்காங்க. அவரே பேச ஆரம்பிக்கறாரு. இருங்க

"வினு யாரோ உன்னை மிரட்டினாங்கனு சொல்ற. காசு கொடுத்தேனும் சொல்ற. இவ்வளவு பெரிய பிரச்சனையிருக்கும் போது ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை"

"கிஷோர். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. நேரமும் அதிகமா கொடுக்கல. காசு கொடுத்துட்டு வந்தவுடனே தப்பு பண்ணிட்டமோனு பயத்துல யார்கிட்டயும் சொல்லலை. அதுவுமில்லாம அவன் உன் ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தர் சொல்லி தான் நாங்க வந்திருக்கோம்னு வேற மிரட்டினான்"

"சரி. இப்ப பிரச்சனை எங்கனு தெரிஞ்சிடுச்சி இல்லை. நம்ம பசங்க ஒரு நாலஞ்சி பேர் போய் அங்க இருக்கவனுங்க எல்லாத்தையும் நாலு தட்டு தட்டினா ஒத்துக்க போறானுங்க"

ஆஹா. இவரு இன்னும் பெருசாக்கிடுவார் போல. இருங்க அவரை கண்ட்ரோல் பண்றேன்.

"அண்ணா. ஒரு நிமிஷம். இந்த மாதிரி அடிதடில இறங்கினா பிரச்சனை திசை மாறிடும். இது பண்றவங்க கொஞ்சம் டேஞ்சர் பார்ட்டிங்களா தான் தெரியறாங்க"

"அவனுங்களா? அந்த ப்ரேம், தினேஷ், வெற்றி எல்லாம் டேஞ்சர் பார்ட்டிங்களா? நாலு சாத்து சாத்தனா ஒத்துக்க போறானுங்க"

"எப்படி இவுங்க மூணு பேர் தானு சொல்றீங்க?"

"ஆமாம். இது பெரிய ரகசியம். தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்காரனுங்க. தினேஷையே அந்த வெற்றி தான் சேர்த்துவிட்டான். அந்த ப்ரேம் அப்பல இருந்து பொண்ணுங்க பின்னாடியே சுத்திட்டு இருப்பான். இவனுங்க தான் அப்ப இருந்து இருக்கானுங்க. இப்ப எவனாவது புதுசா இவனுங்க கூட சேர்ந்திருந்தாலும் இவனுங்க மூணு பேர் இல்லாம அவனுங்களால எதுவும் பண்ண முடியாது"

"தினேஷும் வெற்றியும் ஒரே ஊர்க்காரவங்களா? அதிகம் பேசி நாங்க பார்த்ததே இல்லை"

"தினேஷ் யார்கிட்டயுமே அதிகம் பேச மாட்டான். வெற்றி எல்லார்கிட்டயும் அதிகமா பேசுவான். நாங்க சேர்ந்த புதுசுல எல்லாம் நூறு இருநூறுனு எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு இருப்பான். நான் அங்க மூணு மாசமா போயிட்டிருந்தேன். சும்மா லேப் யூஸ் பண்றதுக்காவது போவேன். கடைசியா பார்க்கும் போது வெற்றி செயின், புது நோக்கியா N- Series போன் எல்லாம் வெச்சிருந்தான்"

"ஹிம்ம்ம்... ஆனா இப்ப அப்படியெல்லாம் இல்லை. ரொம்ப சாதாரணமா தான் இருக்காரு. ஃபோன் கூட Motorazr தான் வெச்சிருக்காரு. அது கூட பழசு மாதிரி தான் தெரியுது. கைல காசு வந்தவுடனே ஆட்டம் போட்டிருப்பார்னு நினைக்கிறேன். அப்பறம் அவனை அடக்கி வெச்சிருப்பாங்க"

"இருக்கலாம். அவனுக்கு அவ்வளவா விவரம் பத்தாதுனு தான். எப்படியும் தனியா மடக்கி நாலு சாத்து சாத்தினா கண்டுபிடிச்சிடலாம்"

"அதெல்லாம் வேண்டாம். எல்லாரும் இவனை மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடப்போறாங்க. அதனால மொத்தமா பிடிக்கலாம். அதுக்கு முன்னாடி நீங்க இன்னொரு ஹெல்ப் பண்ணனும்"

"சொல்லுப்பா பண்றேன்."

" இந்த லிஸ்ட்ல காசு கொடுத்த பொண்ணுங்க எல்லார் பேரும் இருக்கு. உங்க பேட்ச்ல படிச்ச ராஜேஸ்வரிங்கற பொண்ணும் காசு கொடுத்திருக்காங்க. அவுங்ககிட்ட நாம பேச ஏற்பாடு பண்ண முடியுமா?"

"ராஜேஸ்வரியா? நல்லா பார்த்து தான் மிரட்டறானுங்க. அந்த பொண்ணு அதிகமா பசங்ககிட்டயே பேச மாட்டா. எனக்கும் பழக்கமெல்லாம் எதுவுமில்லை. நான் கூப்பிட்டா பேச வருவாளானு தெரியல"

"ட்ரை பண்ணி பார்க்கலாமே. அசோக் நீ என்ன நினைக்கிற?"

"மச்சி. எப்படியும் வெற்றியும் இதுல இன்வால்வ் ஆகிருக்கானு தெரியுது. பேசாம அவனை யூஸ் பண்ணியே பிடிக்கலாம்னு நான் நினைக்கிறேன்"

"எப்படிடா?"

"கிஷோர்! நீங்க ஏதாவது பார்ட்டினு கூப்பிட்டா வெற்றி வருவானா?"

"தெரியலை. ட்ரை பண்ணி பார்க்கலாம். ஏன்?"

"அவனை அப்படி வர வெச்சா அவனை வெச்சி மொத்தமா பிடிக்கறதுக்கு நான் வழி பண்றேன்"

"டேய் அடி தடி எல்லாம் வேண்டாம்னு நினைக்கிறேன்"

"ஏன்டா என்னை பார்த்தா அடிதடி பண்றவன் மாதிரியா இருக்கு. அவனை டெக்னாலாஜியை வெச்சியே நாம பிடிக்கலாம். நான் அதுக்கு வழி பண்றேன்"

அசோக் சொல்ல சொல்ல எல்லாரும் அவனை அதிசயமாக பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. எப்படியும் அவன் இதுல தான் வந்து நிப்பானு நினைச்சேன். அவனை சொல்லி குத்தமில்லை. அவன் பிராஜக்ட் அப்படி.

என்னங்க, கடைசியா வெற்றி மாட்றதுக்கு முன்னாடி நித்யாக்கிட்ட நான் மாட்டிக்குவேன் போல. அந்த அளவுக்கு ஐடியா சொல்லிட்டு இருக்கான்.

"அசோக் நீ சொல்றது எனக்கு ஓகேனு படுது. அவனை எப்படியும் பார்ட்டினு சொல்லி எங்கயாவது தள்ளிட்டு வரது என் பொறுப்பு. அதுக்கப்பறம் ஒரு வாரத்துல அவன் மாட்டலனா அடுத்த வாரம் எங்க பசங்ககிட்ட சொல்லி அவனை அடிச்சி நாங்க உண்மையை வாங்கறோம். உங்களுக்கு ஓகேவா"

"சரி. என்னடா ரவி. ஓகே தானே?"

இது ஒர்க் அவுட் ஆகுமா? சரி எதுக்கும் நாமளும் சரினு சொல்லுவோம். எப்படியும் அவர் பார்ட்டினு கூப்பிட்டு வந்துதுக்கப்பறம் ஒரு வாரம் இருக்குல்ல. அப்ப பார்த்துக்குவோம்.

"எனக்கும் ஓகே"

(ஆட்டம் தொடரும்...)

Monday, August 18, 2008

ஆடு புலி ஆட்டம் - 12

"நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் வினோதினி அக்கா மாதிரி நம்பர் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

"ஆமாம்டா மச்சான். அதை எப்படி மிஸ் பண்ணோம்? இது தான் முக்கியமான விஷயமே. சரி இப்ப அவுங்க நம்பர் எங்க இருந்து கண்டுபிடிக்கறது?"

"எப்படியும் அந்த டேட்டா பேஸ்ல யார் யாரு எந்த கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு லிஸ்ட் இருக்கும். இன்ஸ்டிடியூட்ல எப்படியும் அதை மெயிண்டெயின் பண்ணுவாங்க. அந்த லிஸ்ட்ல இருந்து அவுங்க கம்பெனியை பிடிப்போம். அந்த கம்பெனில நம்ம ஃபிரெண்ட்ஸ் யாராவது இருக்காங்களானு பார்த்து நம்பர் பிடிப்போம்"

"சூப்பர்டா மச்சான். ஆனா நாளைக்கு லீவாச்சே. எப்படி நம்பர் பிடிக்க? நாளான்னிக்கு திங்க கிழமை தானே. அப்ப பிடிப்போம். ஓகே?"

"இல்லை. இதுல இருக்கற லிஸ்ட்ல எப்படியும் TCS, Infy, Wiproல யாராவது சேர்ந்திருப்பாங்க. அங்க இருக்குற நம்ம ஆளுங்க எவனையாவது நாளைக்கு ஆபிஸ் போய் நம்பர் பார்த்து சொல்லுவோம். அதுல எப்படியும் ஓரளவுக்கு நிறைய பேர் கிடைப்பாங்க. சுலபமா கண்டுபிடிச்சிடலாம்"

"ஓகே. டன்"


ஒரு வழியா பத்து பேரோட ஃபோன் நம்பர் பிடிச்சிச்சாசிங்க. இது மட்டும் வொர்க் அவுட் ஆகிடுச்சினா அடுத்து என்ன பண்ணனும் யோசிக்கனும். இப்ப ஃபோன் பண்ண தான் போயிட்டுருக்கேன். கொஞ்சம் கரகரப்பான குரல்ல பேசணும். அவ்வளவு தான். நேத்து நான் பேசும் போது நீங்க கேக்கல இல்லை. இப்ப கேளுங்க.

இருங்க ரிங் போகுது...

"ஹலோ. கவிதாவா?"

"யா ஸ்பீக்கிங்"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"வாட். ஹூ ஆர் யூ? ஹூம் டூ யூ வாண்ட்?"

என்னடா உடனே கட் பண்ணிட்டனேனு பாக்கறீங்களா? இதுக்கு மேல பேசினா ஆப்பு தான். இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன். இன்னைக்கு எப்படியும் இந்த பத்து பேருக்கு பண்ணிட்டா ஃபிரி ஆகிடலாம்.

"ஹலோ லஷ்மி"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நாங்க தான் பேசறோம். நாளைக்கு காலைல இருபதாயிரம் எடுத்து தயாரா வெச்சிரு"

"நான் கொடுத்து ரெண்டு வாரம் கூட ஆகலயே. ஏன் இப்படி என் உயிரை எடுக்கறீங்க? என்னை தயவு செஞ்சி விட்டுடுங்களேன். ப்ளீஸ்"

"சரி. மறுபடியும் ஒண்ணாம் தேதி பண்றோம்"

ஓ. காட். அப்ப இதை பண்றது கண்டிப்பா ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல இருக்கற ஒரு ஆள் தான் பண்ணியிருக்கனும். இல்லை இது ஒரு குருப்பா கூட இருக்கலாம்.

இருங்க அடுத்த நம்பருக்கு பண்றேன்.

இன்னைக்கு பண்ண பத்து பேர்ல ஆறு பேர் ஏற்கனவே காசு கொடுத்திருக்காங்க. அப்ப பிரச்சனை இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் தான். இருங்க உடனே நித்யாக்கு ஃபோன் பண்ணணும்.

"ஹலோ நாந்தான் பேசறேன்"

"நாந்தானு எனக்கு தெரிஞ்சவங்க யாருக்கும் பேர் இல்லையே"

"லூஸு விளையாடறதுக்கு இது நேரமில்லை. ஒரு முக்கியமான விஷயம்"

"சொல்லுங்க சார். நாங்க உங்க கூட எதுவும் விளையாட மாட்டோம்"

"மொதல்ல இந்த விஷயத்தை கேளு. பிரச்சனை எங்கனு நாம கெஸ் பண்ணது கரெக்டா ஒர்க் அவுட் ஆகிடுச்சி. பிரச்சனை அந்த டிரெயினிங் இன்ஸ்டிடியூட்ல தான். ஆனா யார் காரணம்னு போக போக தான் கண்டுபிடிக்கனும்"

"அப்ப நேத்து ராத்திரி நீ சொன்ன ஐடியா ஒர்க் அவுட் ஆகிடுச்சா?"

"ஆமாம். மொத்தம் பத்து நம்பர் கிடைச்சிது. அதுல ஆறு பேர் காசு கொடுத்துட்டு இருக்காங்க. இன்னும் மொத்த லிஸ்டையும் பிடிச்சா எத்தனை பேர்னு தெரிஞ்சிடும்"

"அடப்பாவிகளா. அப்ப இத்தனை பேரோட லிஸ்டையும் எடுத்துட்டு போலிஸூக்கு போயிடலாமா?"

"இல்லை. யார்னு தெளிவா தெரியாம, சரியான விட்னஸ் இல்லாம போனா நமக்கே பேக் ஃபையர் ஆகிடும்னு நினைக்கிறேன். இன்னும் ரெண்டு வாரம் வெயிட் பண்ணுவோம். அதுக்குள்ள இன்னும் பலமான விட்னஸ் கிடைக்கும். அப்ப மொத்த பேரையும் பிடிக்கலாம்"

"உனக்கு யார் மேலயாவது டவுட் இருக்கா?"

"ஆமாம்"

" "

நான் சொன்னதும் நித்யா அதிர்ச்சியாகிட்டா

( ஆட்டம் தொடரும்)

Thursday, August 14, 2008

ஆடு புலி ஆட்டம் - 11

என்னங்க மணி பனிரெண்டு ஆச்சு இன்னும் அசோக்கை காணோம். எனக்கு வேற கொஞ்சம் பயமா இருக்கு. ஏதாவது பிரச்சனைல மாட்டியிருப்பானா? இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் அப்பறமும் அவன் வரலனா நானே இன்ஸ்டிடியூட் கிளம்பி போக வேண்டியது தான். இருங்க வண்டி சத்தம் கேக்குது. அசோக்னு நினைக்கிறேன்.

"டேய் மச்சான். Finally, I got it"

அசோக் கைல அந்த சிடி தெரியுது. ஒரு வழியா சாதிச்சிட்டானு நினைக்கிறேன்.

"எப்படிடா மச்சான்?"

"எல்லாம் நம்ம வெற்றி அண்ணனை வெச்சி தான். கரெக்டா வெற்றி அண்ணனையும் ப்ரேமையும் வெச்சிக்கிட்டு ஒரு கேம் ப்ளே பண்ணேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு"

"எக்ஸலண்ட். நீ இந்த சீடி எடுத்தது அவங்களுக்கு தெரியாது தானே"

"ஆமாம். ரொம்ப நேரம் லேப்ல இருக்கேனு ப்ரேம் என்ன விஷயம்னு கேட்டாரு. நானே சொந்தமா ஒரு ப்ராஜக்ட் ட்ரை பண்றேன். வீட்ல ஆரக்கிள் இல்லாததால லேப்லயே பண்றேனு சொன்னேன். ப்ரேம் ஃபீல் ஆகி வெற்றியை கூப்பிட்டு யாருக்கும் தெரியாம ஆரக்கிள் சீடி எடுத்து தர சொன்னாரு."

"அப்பறம்?"

" வெற்றி அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் இருந்த சீடி எல்லாம் எடுத்து தேடிட்டு இருந்தாரு. நானும் உள்ள போய் ஒவ்வொரு சீடியா பார்த்துட்டு இருந்தேன். நானும் ஆரக்கிள் சீடி தேடறேனு நினைச்சிட்டு விட்டாரு. இன்ஸ்டிடியூட்டோட மண்த்லி பேக் அப் சீடியை ஒரு வழியா கண்டுபிடிச்சி வெற்றிக்கு தெரியாம சுட்டுட்டேன். ஆனா இது நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது போல. புதுசு கண்ணுல படல"

"பரவால. எக்ஸலண்ட் வொர்க். சரி நம்ம டேட்டா பேஸ்ல இம்போர்ட் பண்ணுவோம். அப்பறம் உன் போன் என்னாச்சு? நான் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்"

"அது சார்ஜ் போட மறந்துட்டேன். இப்ப போடனும்"

ஒரு வழியா முதல் படியை தாண்டியாச்சுங்க. இதை வெச்சி தான் பிரச்சனை இந்த இன்ஸ்டிடியூட்லயா இல்லை வெளியவானு கண்டு பிடிக்க முடியும். இந்த இன்ஸ்டிடியூட்ல இல்லைனா அடுத்து HR தான். நாளைக்குள்ள இந்த இன்ஸ்டிடியூட்டானு தெரிஞ்சிடும். அப்படி அந்த சீடில என்ன இருக்குனு யோசிக்கறீங்களா?

அதுதான் அந்த இன்ஸ்டிடியூடோட அஃபிஷியல் இன்ஃபர்மேஷன் இருக்கற டேட்டாபேஸோட, பேக் அப் பைல் இருக்கற CD. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் இன்க்ரிமெண்டல் பேக் அப் தான் எடுப்பாங்க. இந்த மாதிரி சின்ன இன்ஸ்டிடியூட் எல்லாம் டோட்டல் பேக் அப் எடுப்பாங்க. பெரிய கம்பெனி எல்லாம் டெய்லி, வீக்லி, மண்த்லி எடுப்பாங்க. இங்க மாசம் மாசம் எடுக்கறாங்க. இப்ப நம்ம கைல இருக்கற சீடில நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சவங்களோட இன்ஃபர்மேஷன் இருக்கும். அதை வெச்சி நாளைக்கு நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாம்.

இன்னைக்கு காலைல இருந்து நானும் அசோக்கும் நித்யா வீட்ல தான் இருந்தோம். என்ன பேசனும் எப்படி பேசனும்னு வினோதினி அக்காகிட்ட விசாரிச்சிட்டேன். ரொம்ப நேரம் ப்ராக்டிஸ் பண்ணோம். எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பூத்ல இருந்து பண்ணா தான் சேஃப்டி. நாளைக்கு யாராவது விசாரிச்சாக்கூட அந்த அண்ணன் நம்மல காட்டி கொடுக்க மாட்டாரு. அதான் ரிட்டர்ன் வந்துட்டு இருக்கோம்.

என்னங்க அந்த டேட்டா பேஸ்ல இருந்து எடுத்த போன் நம்பர்ல இருபது பேருக்கு பண்ணிட்டேன் ரியாக்ஷ்னே சரியில்லை. பசங்க ஒரு சிலர் நம்ம மிரட்டினா பதிலுக்கு நம்மல மிரட்டறானுங்க. ஒரு சிலர் மெரள்றானுங்க. எவனுமே இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கால் வந்த மாதிரியே ரியாக்ட் பண்ண மாட்றானுங்களே. அப்படினா ஒரு வேளை இவங்க டார்கெட் பொண்ணுங்க மட்டும் தானா? அப்ப சுலபமா கண்டுபிடிச்சிடலாமே.

என்னங்க பொண்ணுங்க பாதி பேர் நம்பர் Does Not Existனு வருது மீதி பேர் பயப்படறாங்களே தவிர இதுக்கு முன்னாடி கால் வந்த மாதிரி ரியாக்ட் பண்ணவே மாட்றாங்க. ஒரு வேளை இந்த இன்ஸ்டிடியூட்ல பிரச்சனையில்லையோ? தேவையில்லாம சந்தேகப்பட்டுடமோ? சரி நேரமாச்சு. நாப்பது போன் காலுமாச்சு. இப்ப அடுத்த ஆப்ஷன் HR தான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் எல்லாம் சேர்ந்து CDயை சுட்டு கடைசியா அங்க எதுவும் பிரச்சனையில்லைங்கற மாதிரி தெரியுது. அதுவும் ஒரு வகைல நல்லது தான் இனிமே கோர்ஸ் போக தேவையில்லை. நித்யா படிக்கனும்னு ஆசைப்பட்டா போகலாம்னு நினைக்கிறேன். ரெண்டு வாரமா தினமும் அவக்கூட பேசி பழக்கமாயிடுச்சு. அதனால அவக்கூட பேசறதுக்காக போகலாம். என்ன சொல்றீங்க?

அசோக் இதுக்கு மேல போக வேண்டாம். இப்ப அடுத்து என்ன பண்றதுனு தெரியல. வினோதினி அக்காவும் அதுக்கப்பறம் புது நம்பர் மாத்திட்டாங்க. வேற எதுவும் ஃபோன் காலும் வரலை. இதோட இந்த கண்டுபிடிக்கறதை நிறுத்திக்கலாமா? HRக்கு போன் பண்ணா பிரச்சனை. அதுக்கு வேற வேலை தேடிட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.

"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா"

"என்னடா சொல்ற?"

"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை"

"ஆமாம்"

"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

(தொடரும்...)

Tuesday, August 12, 2008

ஆடு புலி ஆட்டம் - 10

Java is an object oriented programming language. I beleive you people will have some knowledge on programming languages like C, C++

என்னடா இவன் இங்க உக்கார்ந்திருக்கறானு பாக்கறீங்களா? சரி என்ன பிரச்சனைனு இறங்கி பார்த்துடலாம்னு இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்துட்டோம். அது என்ன "டோம்"னு சொல்றானு பாக்கறீங்களா? நானும் நித்யாவும் தான் சேர்ந்திருக்கோம். அவளை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவ தான் பொண்ணுங்களுக்கு எங்கயுமே சில அட்வாண்டேஜ் இருக்கும். அதனால ரெண்டு பேருமே சேர்ந்து கண்டு பிடிக்கலாம்னு ப்ளான்.

அப்பறம் வினோதினி அக்கா அன்னைக்கு ஆபிஸ் போகல. அவனுக்கு காசும் கொடுக்கல. அதே மாதிரி அவுங்க ஊர்ல எந்த பத்திரிக்கைலயும் எதுவும் தப்பா வரல. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிட்டு மூணு நாளா எங்கயும் போகாம உக்கார்ந்திருக்காங்க. இன்னும் பயம் இருக்கு.

நான் தினமும் காலைல ஏழு மணிக்கு ஆபிஸ் போயிட்டு மதியம் மூணு மணிக்கு வரேன். அப்பறம் நாலு மணிக்கு இந்த ட்ரெயிங் இண்ஸ்டிடியூட். நாலு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் க்ளாஸ். அப்பறம் லேப் அவர்ஸ்.வேற ஸ்லாட் கிடைக்கல. ரொம்ப கொடுமையா இருக்கு. எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ஏதாவது க்ளூ கிடைக்காமலா போகும்? அப்படி ஏதாவது கிடைச்சா இந்த கொடுமைல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

எனக்கு சேரும் போதே கொஞ்சம் சந்தேகம் வர மாதிரி தான் இருக்குது. அப்ளிகேஷன்ல நிறைய ஃபில் பண்ண சொல்றாங்க. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்களை பத்தின விவரம் எல்லாம் கேட்டிருக்கு. ரெண்டு பேரும் எல்லாத்தையும் மாத்தி தான் கொடுத்திருக்கோம்.

இந்த ரெண்டு நாள்ல இங்க இருக்கறவங்களை நோட் பண்ணது இதுதான்.

ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க.

அஸிஸ்டெண்ட் வெற்றி அண்ணா ரொம்ப நல்லவரா தெரியறாரு. பசங்களுக்கு எல்லாம் நல்லா ஹெல்ப் பண்றாரு. நிறைய ஸ்டெடி மெட்டிரியல்ஸ் எல்லாம் பசங்களுக்கு சைக்லோஸ்டைல் பண்ணி கொடுக்கறாரு. நேத்து கூட ஜாவா படிக்கிற பசங்களுக்கு ஆரக்கிள் மெட்டிரியல் எல்லாம் சைக்லோஸ்டைல் பண்ணி கொடுத்தாரு. அதுக்கு காசும் வாங்கறதில்லை போல. இவரை வெச்சி ஏதாவது கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம். பார்க்கலாம்.

ட்ரெயினர்ஸ் பத்தி எதுவும் அதிகமா தெரியல. எல்லாரும் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடற கூட்டம் மாதிரி தெரியுது. ஒரு சிலர் வேலையும் பார்த்துட்டு இங்க பார்ட் டைமாவும் வேலை செய்வாங்க போல தெரியுது. எங்களுக்கு ஜாவா எடுக்கறது சுகுமாரன். இங்க நிறைய தமிழ் ஆளுங்க தான். இதுக்கு முந்தின பேட்ச்க்கு ஜாவா எடுக்கறவர் கூட தமிழ் தான். ஆரக்கிள் எடுக்கறது, C, யுனிக்ஸ், டாட் நெட் எல்லாத்துக்கும் பாடம் எடுக்கறதுலயும் தமிழ் ஆளுங்க இருக்காங்க.

இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான். அது ஏன் ஆராக்கிள் க்ளாஸ்னு யோசிக்கறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு. உங்களுக்கே போக போக புரியும்.

அவனுக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரியும். அவனும் எனக்கு கண்டிப்பா உதவறனு சொல்லியிருக்கான். அடுத்த திங்க கிழமைல இருந்து அவனுக்கு க்ளாஸ். ஏழு மணி பேட்ச்.

---------


இந்த ஒரு வாரத்துல எதுவும் பெருசா எதுவும் நடக்கல. அந்த சுகுமாரனுக்கு ஜாவா ஓரளவுக்கு தான் தெரிஞ்சிருக்குது. நான் கொஞ்சம் கஷ்டமா கேள்வி கேட்டா, நான் அடுத்த க்ளாஸ்ல சொல்றனு சொல்றாரு. அப்பறம் நாங்க லேப்ல இருக்கும் போது தினேஷ் சாரை கூப்பிட்டு வராரு. தினேஷ் அந்த கேள்விக்கு எல்லாம் சாதாரணமா சொல்றாரு. இந்த அளவு கூட ஜாவா தெரியாம சுகுமாரன் எப்படி இங்க காலத்தை ஓட்றாரு. சுகுமாரனும் அந்த ஆரக்கிள் எடுக்கற ப்ரேமும் ரொம்ப க்ளோஸ் போல. ப்ரேம் ரொம்ப கடலை போடறாரு.

நான் கேள்வி கேக்கறதை பார்த்து நித்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதே மாதிரி லேப்ல ரெண்டு பேரும் ஒரே சிஸ்டம் தான். அவளும் இப்ப தான் ஜாவா கத்துட்டு இருக்கா. அவக்கிட்ட சுகுமாரன் ரொம்பவே வழியறாரு. அவருக்கு எப்படியும் ஆப்பு இருக்கும்னு நினைக்கிறேன். வெற்றி அண்ணனையும் இவரு ஓவரா விரட்டிட்டு இருக்காரு. அதனால அந்த அண்ணனை கைல போட்டா வேலை சீக்கிரம் நடக்கும். ஆனா அவர் இப்படி ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு இருக்காரே. எப்படி இவரை நம்ம மடக்கலாம்னு யோசிக்கனும்.

எப்படியும் அசோக் ஒரு ரெண்டு மூணு நாள்ல அந்த அண்ணனை மடக்கி போட்டுடுவான். அப்ப தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும். இன்னைக்கு தான் அவன் சேர்ந்துட்டானே. அடுத்த வாரத்துல எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.

---------

அசோக் சேர்ந்து இன்னையோட ஒரு வாரமாச்சு. எதுவும் பெருசா பண்ணாம இருக்கான். அவனுக்கு ஒரு வேலை கொடுத்துருக்கேன். அதை மட்டும் அவன் பண்ணிட்டானா, நாங்க அடுத்த வாரம் கோர்ஸ் போகனுமா இல்லை வேண்டாமானு முடிவு எடுத்துடலாம். மணி பன்னெண்டு ஆச்சு. இன்னும் அவன் ஆளை வேற காணோம். போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கு. ஒன்னுமே புரியலையே. ஏதாவது பிரச்சனையாகிருக்குமா?

(ஆட்டம் தொடரும்...)

Sunday, August 10, 2008

ஆடு புலி ஆட்டம் - 9

"ரவி, உன்னால கண்டிப்பா இது ட்ரெயினிங் இன்ஸ்டிடியுட்ல இருக்கவங்க ஒருத்தவங்க வேலைதானு சொல்ல முடியுமா?"

"நிச்சயமா அவுங்க தானு இப்ப இருக்கற நிலைமைல சொல்ல முடியாது. எனக்கு இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட முதல் தடவை காசு கேக்கும் போது நீங்க காசை அவுங்க அக்கவுண்ட்ல போடறேனு சொன்னீங்களா?"

"நான் சொன்னேன். அவுங்க ஒத்துக்கல"

"அப்பறம்?"

"என்னை நேரா பரிஸ்டா காபி சென்டருக்கு வர சொன்னாங்க. அங்க ஒருத்தர் நீல சட்டையும், கருப்பு பேண்டும் போட்டு தனியா காபி குடிச்சிட்டு இருப்பாரு. நானும் காபி வாங்கிட்டு அவர் எதிர்ல போய் உக்காரணும்னு சொன்னாங்க"

"அப்பறம்?"

"பாதி குடிச்சி முடிச்சவுடனே என் ஹேண்ட் பேக்ல இருந்து பணத்தை எடுத்து கொடுக்கணும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் காபி குடிச்சி முடிச்சவுடனே அவர் கூடவே வெளிய வந்து அவர் போற டைரக்ஷனுக்கு ஆப்போசிட்டா போகனும்னு சொன்னாங்க"

"ஹிம்ம்ம்ம். லெட் மீ திங்"

பணத்தை அக்கவுண்ட்ல வேண்டாம்னு சொன்னது சரி. ஆனா மக்கள் வர இடத்துல வந்து அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து ஏன் காபி குடிக்க சொன்னானுங்க? அப்பறம் ஏன் அவன் எழுந்திரிக்கும் போது கூடவே எழுந்து வெளிய வர சொன்னானுங்க?
சம் திங் ஃபிஷ்ஷி. இல்லைங்களா? பொதுவா இந்த மாதிரி பிரச்சனை பண்றவனுங்க முகத்தையே காட்ட மாட்டாங்களே.

"பணத்தை ஏதாவது கவர்ல வெச்சி கொடுத்தீங்களா?"

"இல்லைப்பா. பணத்தை எந்த கவர்லயும் வைக்காம கொடுக்கனும்னு சொன்னாங்க. எல்லாமே முன்னாடியே தெளிவா சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்"

இது கொஞ்சம் கஷ்டமான விஷயமா தான் இருக்கும் போல. நம்ம தமிழ் படத்துல எல்லாம் ஒரு பாலிதின் பைல சுத்தி துணி பைல வெச்சி கொடுக்க சொல்லுவாங்க. இவனுங்க ஏன் பணத்தை எதுலயும் போடாம அவன் கைல தர சொல்லியிருக்காங்க. பணத்தை கைல கொடுத்துட்டு சேர்ந்து வெளிய வரணும். இதுல ஏதோ சீரியஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல?

"சரி நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. இது தான் என்னோட ஆர்டர். முதல்ல உங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட், அடுத்து உங்க HR, அடுத்து உங்க ஃபிரெண்ட்ஸ் கூட்டத்துல ஒருத்தன். எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்"

"நாளைக்கு என்னை காசு எடுத்துட்டு ரெடியா இருக்க சொல்லியிருக்கானுங்க"

"அதெல்லாம் போக தேவையில்லை. பார்த்துக்கலாம். வாங்க இப்ப முதல்ல சாப்பிடலாம்"

"இல்லை எனக்கு வேண்டாம்பா"

"வாங்கக்கா. பசியா இருந்தா எனக்கு மூளை வேலை செய்யாது"

"ரவி. எனக்கு ஒரு சந்தேகம்"

"சொல்லுங்கக்கா"

"இவ்வளவு விஷயம் உனக்கு தெரியுது. ஆனா நித்யா உனக்கு எதுவுமே தெரியாது. நீ லூசுனு சொல்லிட்டு இருக்கா. எனக்கு உன் மேலயே சந்தேகமா இருக்கு"

"கிழிஞ்சிது. உங்ககிட்ட மட்டும் உண்மையை சொல்றேன். நித்யாகிட்ட சொல்லாதீங்க"

நான் உண்மையை சொல்லி முடிச்சவுடனே வினோதினி அக்கா முகத்துல பெரிய ஆச்சரியம். என்னால இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்னு அவுங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சிங்க. அவுங்களே சாப்பிட ஓ.கே சொல்லிட்டாங்கனா பாருங்களேன். இருங்க சாப்பிட்டு வந்துடறேன்.

இந்த வீட்ல எனக்கு தெரிஞ்சி யாருமே பேசாம சாப்பிடறது இது தான் முதல் தடவை. நித்யா லூசுக்கூட பேசலை. நானும் எவ்வளவோ டாபிக் ஆரம்பிச்சேன் எதுவும் வொர்க் அவுட் ஆகலைங்க. சரி விடுங்க. நம்ம இப்ப பிரச்சனையை பத்தி யோசிப்போம். வேற எதையும் யோசிக்காம இந்த சினாரியோல மட்டும் கான்சன்ட்ரேஷன் செய்வோம். ஒவ்வொரு ஃபிரேமா பார்க்கலாம்.

பரிஸ்டா காபி ஷாப் அவுட் டோர்ல சேர் போட்டிருப்பாங்க. குடை குடையா இருக்கும். ஒரு குடைக்கு கீழ ஒரு அஞ்சு ஆறு பேர் சேர்ல உக்கார்ந்து காபி குடிக்கலாம். இப்படி இருக்கும் போது அங்க ஒருத்தவன் மட்டும் ஒரு குடைக்கு கீழ காபி குடிக்கறான். அங்க நம்ம வினோதினி அக்கா காபி வாங்கிட்டு போறாங்க. இப்ப அவனுக்கு எதிர்ல நம்ம அக்கா உக்காராங்க. பாதி காபியை குடிச்சதுக்கு அப்பறம் காசு எடுத்து கொடுக்கறாங்க. அந்த பணம் இப்ப நம்ம கண்ணுக்கு தெரியுது. அது எந்த கவர்லயும் இல்லை. இப்ப காபி குடிச்சி முடிக்கறாங்க. ரெண்டு பேரும் ஒட்டுகா எழுந்து வெளிய MG ரோட்டுக்கு வராங்க. ரெண்டு பேரும் வெவ்வேற திசைல போறாங்க.

இது தான் எனக்கு கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. இந்த மாதிரி பொது இடத்துக்கு வர சொல்றவன் ஒண்ணு புத்தியில்லாம சொல்லலாம். இல்லை ரொம்ப புத்திசாலியா இருந்தா சொல்லலாம். நம்ம மாட்டிட்டு இருக்கறது ரெண்டாவது வகையா தான் எனக்கு படுது. முதல் வகைல இருக்கறவன் நம்பர் மாத்தனதுக்கு அப்பறமும் கண்டுபிடிச்சிருக்க மாட்டான். அப்ப அதி புத்திசாலியா இருக்கவன் இந்த மாதிரி செஞ்சா என்ன காரணம் இருக்கலாம்? பணம் மட்டுமே நோக்கமா இருக்காதுனு என் மனசுக்கு படுது.

HR இதை பண்ணலாம். இவுங்களை கண்டுபிடிக்கறது சுலபம். இவுங்க ஃபேக்னு சொல்லி அந்த இண்ஸ்டிடியூட்ல இருந்து பண்ற மாதிரி HRக்கு போன் பண்ணாலாம். அவன் இந்த அக்காவை கூப்பிட்டு விசாரிச்சா நல்லவன். இல்லைனா தப்பு அங்க இருக்கலாம். ஆனா அப்படி பண்ணா இந்த அக்கா வேலை போயிடும். அதனால அந்த ஐடியா கடைசியா வைக்கலாம்.

அடுத்து ட்ரெயினிங் இண்ஸ்டிடியூட். இவனுங்களும் இதே மாதிரி பொண்ணுங்களை தப்பா பயன்படுத்தலாம். இதை கண்டுபிடிக்கவும் வழி இருக்கனும்.

(தொடரும்...)

Thursday, August 07, 2008

ஆடு புலி ஆட்டம் - 8

என்னங்க ஏதாவது லவ் மேட்டரா இருக்கும் சுலபமா சமாளிச்சி சமாதானம் பண்ணி வெச்சா பின்னாடி நமக்கு இந்த அக்கா ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்தேன். பிரச்சனை கொஞ்சம் பெருசா இருக்கும் போல இருக்கு.

மேட்டர் என்னனு ஓரளவுக்கு புரிஞ்சி போச்சி. அக்கா ஃபேக் போட்டு சேர்ந்துருப்பாங்க போல. அது எப்படியும் கம்பெனில தெரிஞ்சிருக்கும். வேலையை விட்டு தூக்கறனு சொல்லியிருப்பானுங்க. ஆனா அதுக்கு தற்கொலை பண்ணிக்கனுமா என்ன? இல்லை இவுங்க ஃபேக்னு தெரிஞ்சி கம்பெனி HRஓ, மேனஜரோ இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ? இதுக்கான வாய்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. இல்லைனா எவனாவது ஃபிரெண்ட்ஸ் டபுல் கேம் ஆடிருப்பானுங்க. பேசுவோம். பொண்ணுங்க எதுக்கு வேணா எப்படி வேணா முடிவு எடுப்பாங்க.

"வினிதா, நித்யா. வீட்ல சாப்பிட ஏதாவது இருக்கா?"

" "

"என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? சாப்பிட ஏதாவது தயார் பண்ணுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் சரியாகிடும்"

" "

"போங்க. நான் தான் சொல்றேன் இல்லை"

ரெண்டு பேரும் கிச்சனுக்கு போயிட்டாங்க. அப்பாடா.

"சொல்லுங்கக்கா, வேலை விட்டு தூக்கிடுவோம்னு ஏதாவது சொன்னாங்களா?"

"இல்லை"

அப்ப முதல் விஷயம் இல்லை. இன்னும் கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயமாத்தான் படுது.

"சரி என்ன கேட்டானுங்க? ஏதாவது தப்பா நடந்துக்கிட்டாங்களா?"

வினோதினி அக்கா முகம் விரிஞ்சதை பார்க்கும் போது அவுங்களுக்கு ஆச்சர்யமும், பயமும் சேர்ந்தே வந்துருக்கும் போல இருக்கு.

"நீங்க சொல்லும் போதே எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. கம்பெனி HRஆ, மேனஜரா இல்லை ஃபிரெண்ட்ஸ்னு கூட சுத்தறது யாராவதா?"

"தெரியல?"

"ஏதாவது டிமேண்ட் பண்ணாங்களா?"

"பணம் தான்"

"நீங்க இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னா, நாளைக்கு காலைல பிரச்சனை தீர்ந்துடும். பயப்படாம என்கிட்ட சொல்லுங்க"

"நான் MCA முடிக்கும் போது கடைசி செமஸ்டர்ல ஒரு பேப்பர்ல ஊத்திக்கிச்சு. நல்லா தான் எழுதியிருந்தேன். அப்படி இருந்தும் ஃபெயிலாயிட்டேன். ஒரு ஆறு மாசம் வீட்ல இருந்துட்டு பரிட்சை எழுதிட்டு ரிசல்ட் வரும் போது கிட்டதட்ட ஒன்பது மாசமாயிடுச்சி. பெங்களூர் தான் பக்கம்னு இங்க வேலை தேட வந்தேன். எதுவும் கிடைக்கல. அப்பறம் ஒரு கால் சென்டர்ல சேர்ந்து ஒரு பத்து மாசம் வேலை செஞ்சேன். அப்பறம் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கால் சென்டர்ல இருக்கறது பின்னாடி பிரச்சனையாகும்னு சொல்லி ஒரு ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல ஜாவா படிக்க சொன்னாங்க. நானும் படிச்சேன். அந்த இன்ஸ்டிடியூட்லயே ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தந்தாங்க. அதை வெச்சி இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன்"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். அப்பறம் நான் என் ஃபோன் நம்பரை மாத்திட்டேன். இன்னைக்கு கரெக்டா மறுபடியும் என் புது நம்பருக்கு போன் பண்ணாங்க. நம்பர் மாத்தினா கண்டு பிடிக்க முடியாதானு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. நாளைக்கு பணம் எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க. இல்லைனா நான் ஃபேக் போட்டதையும் அதை மறைக்க காசு கொடுத்ததையும் எங்க ஊர் பத்திரிக்கைல போட்டுடுவேனு மிரட்டறாங்க. எனக்கு பயமா இருக்கு. இவனுங்க என்னை விட்டு வைக்க மாட்டானுங்க போல"

"அழாதீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. யாரா இருக்கும்னு ஏதாவது யோசிச்சீங்களா?"

"யாருனே எனக்கு சரியா தெரியல"

"முதல்ல நீங்க பயப்படறதை நிறுத்துங்க. இந்த மாதிரி பெரிய கம்பெனில ஃபேக்ல மக்கள் சேராங்கனு எந்த பத்திரிக்கைலயும் அவ்வளவு சீக்கிரம் போடமாட்டாங்க. ஏன்னா அது அந்த கம்பெனியோட வளர்ச்சியையும் ரெப்புட்டேஷனையும் பாதிக்கும். அதுவும் நீங்க வேலைக்கு சேர்ந்திருக்கற கம்பெனி, இந்தியாவுல தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனில ஒண்ணு. அதனால எந்த பத்திரிக்கைலயும் அவுங்க கம்பெனி ஆளுங்களை பத்தி தப்பா போட விட மாட்டாங்க. ஏன்னா அவுங்க இண்டர்வியூ ப்ராசஸ் சரி இல்லைனு மத்தவங்க பேச அது வாய்ப்பளிச்சிடும். அதனால பத்திரிக்கைல போடுவோம்னு அவன் சொன்னதை வெச்சி நீங்க பயப்பட வேண்டாம்"

"நிஜமாவா சொல்ற?"

"ஆமாம். சத்தியமா நீங்க என்னை நம்பலாம். அதுவும் இந்த மாதிரி நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்ககிட்ட இருந்து வரது எல்லாத்தையும் வெச்சிட்டு இந்த மாதிரி போட மாட்டாங்க. அதனால நீங்க அவனுக்கு பயப்படறதை நிறுத்துங்க. இப்ப நாம இது யாரா இருக்க முடியும்னு யோசிப்போம். அதுக்கு ஏத்த மாதிரி நாம அவுங்களை டீல் பண்ணிக்கலாம்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட பேசினவங்க தமிழ்ல பேசினாங்களா?"

"ஆமாம்"

"உங்களை இண்டர்வியூ பண்ண HR, உங்க மேனஜர் யாராவது தமிழ் ஆளுங்களா?"

"இல்லை. HR வட இந்தியாக்காரர், மேனஜர் ஆந்திரா"

"ஹும்ம்ம். உங்க டீம்ல எத்தனை பொண்ணுங்க?"

"மொத்தம் நாலு பொண்ணுங்க"

"சரி அதுல எத்தனை பேர் அங்க லேட்ரலா சேர்ந்தாங்க?"

"நான் மட்டும் தான். மீதி எல்லாரும் அந்த கம்பெனிலயே ஃபெரஷரா சேர்ந்தவங்க"

"அப்ப இது உங்க மேனஜர் வேலையா இருக்க வாய்ப்பு குறைவு. ஏன்னா அவுங்க பண்றது ஒரு ப்ராஸஸ் மாதிரி இருக்கு. ஒருத்தருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. என்னோட கணிப்பு HR இல்லைனா உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது ஒருத்தவங்க தான்"

"என் ஃபிரெண்ட்ஸா இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நான் நம்பர் மாத்தி எந்த பிரெண்டுக்கும் கொடுக்கல. எல்லாரும் வினிதா நம்பர்ல தான் காண்டாக்ட் பண்றாங்க"

"ஹிம்ம்ம்.... உங்க ஆபிஸ்ல இண்ட்ரா நெட் இருக்குமே. அதுல அப்டேட் பண்ணீங்களா?"

"ஆமாம். என் டீம் லீட் அப்டேட் பண்ண சொன்னாரு. அதனால போன வாரம் தான் பண்ணேன்"

"அப்படினா HRக்கு சான்ஸ் அதிகம். அவுங்க கொஞ்ச பேர் சேர்ந்து இந்த மாதிரி சுலபமா பண்ணலாம். வேலைக்கு சேரும் போதே ஃபேக்னு தெரிஞ்சி ஆள் எடுத்து அப்பறமா அவுங்களை பத்தி மத்த விஷயங்களை தெரிஞ்சிட்டு சுலபமா மிரட்டலாம்"

"இருக்கலாம்"

"அதே மாதிரி உங்க டீம்ல யாருக்காவது உங்க மேல க்ரஷ் இருக்கலாம்னு நீங்க ஃபீல் பண்றீங்களா?"

"அப்படி இருக்கற மாதிரி தெரியல. எல்லாரும் நல்லா தான் பேசறாங்க. அதுவுமில்லாம நான் சேர்ந்தே ரெண்டு மாசம் தான் ஆகியிருக்கு"

"ஹிம்ம்ம்"

"உங்க டீம்ல தமிழ் பசங்களோ இல்லை பொண்ணுங்களோ யாராவது இருக்காங்களா?"

"ஆமாம். ஒரு பையன், ஒரு பொண்ணு"

"அதுல யார் மேலயாவது சந்தேகம் படற மாதிரி?"

"இல்லை. அவுங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்ல இருந்து ஒண்ணா இருக்கறவங்க அண்ட் தே ஆர் இன் லவ் வித் ஈச் அதர்ஸ்"

"அப்ப அவுங்களா இருக்க முடியாதுங்கறீங்க?"

"ஆமாம்"

"ஆஹா... ஒரு முக்கியமானதை விட்டுட்டனே. நீங்க ட்ரெயினிங் போனீங்களே. அவுங்க தானே உங்களுக்கு ஃபேக் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்தாங்க?"

"ஆமா"

"ஹவ் டிட் ஐ மிஸ்ட்டு இட்? ஷிட்... கம் ஆன். தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ். ஏன்னா திருடனை உருவாக்கறவனுக்கு திருடன்கிட்ட இருந்து திருடறது சுலபம்"

வினோதினி அக்கா முகத்துல ஒரு அதிர்ச்சி தெரிஞ்சிது...

(தொடரும்...)

Tuesday, August 05, 2008

ஆடு புலி ஆட்டம் - 7

பாத்து மூணு வாரம் ஆகிடுச்சினு இப்படியா மறந்து போயிடுவீங்க. நான் தாங்க ரவி. மூணு வாரமும் வீக் எண்ட் நித்யா வீட்டுக்கு போனேன். ஊருக்கு கூட போகலை. போன வாரம் என் ரூமேட் அஷோக்கையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவனும் என்னோட கூகுள்ல தான் வேலை செய்யறான். ஆனா வேலை தேடறானு பொய் சொல்லி தான் கூப்பிட்டு போயிருந்தேன். அவன் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கற டைப்பு.

இப்பவெல்லம் ஒரு நாளைக்கு அஞ்சு ஆறு மணி நேரம் ஃபோன்ல பேசிக்கறோம். ஆனா என்ன பேசனோம்னு அடுத்த நாள் ஞாபகமிருக்க மாட்டீங்குது. ஆனா ஜாலியா இருக்குது. இந்த மாதிரி நான் எப்பவுமே சந்தோஷமா இருந்தது இல்லைனு நினைக்கிறேன்.

நமக்கு பிடிச்சி பொண்ணுக்கிட்ட பேசினாவே இவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு நான் நினைக்கல. அதுவும் மத்த பொண்ணுங்க யார்கிட்ட பேசும் போதும் நான் இவ்வளவு சந்தோஷமாவும் இருந்தது இல்லை. இந்த வாரம் ஊருக்கு போகலாம்னு ப்ளான். அவளும் வரதா சொல்லியிருக்கா. திருவண்ணாமலை போய் அங்க இருந்து அவ கள்ளக்குறிச்சி போகலாம்னு ப்ளான்.

நாளைக்கு தானே வெள்ளிக்கிழமை. அதான் நாளைக்கு இராத்திரி கிளம்பலாம்னு ப்ளான். அவ காலைல கிளம்பலாமானு கேட்டா. நான் தான் ஒரு நாள் முழுசா வீணாகிடும். அதனால ஒரு எட்டு ஒன்பது மணிக்கா கிளம்பலாம். அப்ப தான் விடிய காலைல திருவண்ணாமலைல இருந்து பஸ் கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். பாக்கலாம்.

இருங்க நித்யா போன் பண்றா பேசிட்டு வரேன்.

இந்த நேரத்துல எங்க கிளம்பி போயிட்டு இருக்கேனு பாக்கறீங்களா? ஏதோ முக்கியமான விஷயம் உடனே கிளம்பி வானு சொல்லி ஃபோன் பண்ணா. அவ குரல்லயும் ஏதோ பதட்டம் தெரிஞ்சிது. அதான் உடனே கிளம்பிட்டேன். அவ வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் மணி பத்தாகிடும்னு நினைக்கிறேன்.

"என்னாச்சு?"

"ஒன்னும் இல்ல. நீ இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ண முடியுமா?"

"புரியல"

"கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சி. இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு காலைல சீக்கிரமா வினோதினி அக்காவையும், வினிதாவையும் கூப்பிட்டு போய் அவுங்க வீட்ல விட்டுட்டு நாம அப்படியே நம்ம ஊருக்கு போகலாம்."


உள்ள வினோதினி அக்காவும், வினிதாவும் அழற சத்தம் கேட்குது. கண்டிப்பா ஏதோ சிரியசா நடந்திருக்கு. என்னனு தெரியாம எப்படி உதவறதுனு தெரியல.

"சரி. விஷயம் என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா? தெரியக்கூடாதுனு நினைச்சா வேண்டாம்"

"இல்லை ரவி. கொஞ்சம் நேரமாகட்டும் சொல்றேன்"

"ஹிம்ம்ம்... சுரேஷ், செந்தில், அருண் எல்லாம் என்ன ஆனாங்க?"

"இந்த நேரம் பார்த்து பசங்க எல்லாம் எங்க காலேஜ் ஈசிஈ பையன் ஒருத்தனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்னு நேத்து மெட்ராஸ் கிளம்பி போய்டானுங்க. அதான் உனக்கு போன் பண்ண வேண்டியதா போச்சு"

"நீ என்ன விஷயம்னு சொன்னா என்னால எப்படி உதவ முடியும்னு பார்ப்பேன். இந்த இடத்தை பார்த்தா ஏதோ பெருசா நடந்த மாதிரி இருக்கு"

"ஹிம்ம்ம்ம்.... வினோதினி அக்கா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாங்க"

"வாட்?"

"ஆமா. ஏதோ ஒரு ஃபோன் கால் வந்துச்சு. அழுதுகிட்டே கிச்சனுக்கு போனாங்க. நான் பின்னாலயே போனேன். கத்தி எடுத்து கைல கட் பண்ண போனாங்க. நல்ல வேளை நான் தடுத்துட்டேன். வினிதாவும் சரியா வந்துட்டா. அப்ப இருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே இருக்காங்க. எனக்கு பயமா இருந்துச்சு. நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்னு நினைச்சேன். அதான் வர சொன்னேன்"

"ஹும்ம்ம்... உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"

"இல்லை. வினிதாக்கு கூட என்னனு புரியல. அப்ப இருந்து ஏன்க்கா ஏன்க்கானு கேட்டு அழுதுட்டு இருக்கா"

"ஏதாவது லவ் மேட்டரா?"

"தெரியல. ஆனா எனக்கு தெரிஞ்சி அப்படி இருக்காதுனு தான் நினைக்கிறேன்"

"சரி. அக்காகிட்ட நான் பேசி பாக்கறேன்"

"இப்ப வேண்டாமே"

"இருக்கட்டும். அவுங்க எனக்கும் அக்கா தான். வா போய் பேசலாம்"

உள்ள வினோதினி அக்காவும், வினிதாவும் அழுது கண்ணு வீங்கியிருந்தது. எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல. இருந்தாலும் நம்மலால உதவ முடிஞ்சா கண்டிப்பா உதவி ஆகனும்.

"அக்கா. ஏன்க்கா இப்படி பண்ணீங்க? ஏதாவது பிரச்சனைனா, நாங்க எல்லாம் இல்லை?"

"இல்லப்பா. உனக்கு எல்லாம் இது சொன்னா புரியாது"

"அக்கா. என்னை நீங்க வேற ஆளா தான பாக்கறீங்க? உங்கள நான் என் அக்கா மாதிரி தான் பாக்கறேன். என்கிட்ட சொன்னா உங்க பாரம் குறையும்னு நீங்க நினைச்சா சொல்லலாம். இல்லைனா வேணாம். ஆனா எந்த காரணத்துக்காகவும் தப்பா முடிவு எடுக்காதீங்க. வீ ஆர் தேர் ஃபார் யூ"

"ஹிம்ம்ம்"

அரை மணி நேரமா யாரும் பேசாம, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தோம். வினோதினி அக்கா பேச ஆரம்பிக்கறாங்க. இருங்க.

"எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சினா யாரும் கவலைப்படாதீங்க. எனக்கு உங்ககிட்ட சொல்லறதுக்கு ஒண்ணு தான் இருக்கு. எந்த காரணத்துக்காகவும் ஃபேக் போட்டு வேலைக்கு சேர்ந்துடாதிங்க. அவ்வளவு தான். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் பேசாதீங்க"

ஏதாவது லவ் மேட்டர்னு நினைச்சேன். பிரச்சனை பெருசா இருக்கும் போல இருக்கு...

(தொடரும்...)

Monday, August 04, 2008

ஆடு புலி ஆட்டம் - 6

என்னடா இப்பவெல்லாம் இவன் ஃபோன்லயே அதிக நேரம் பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? என்னங்க பண்ண? தினமும் அவளுக்கு சும்மா என்ன பண்றனு கேக்கலாம்னு ஃபோன் பண்றேன். அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. இதுல வேற இந்த கம்பெனிகாரனுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கட் பண்ணிடறானுங்க. யார் எவ்வளவு நேரம் பேசினா இவுங்களுக்கு என்னங்க வந்துச்சு? பாதி பேசிட்டு இருக்கும் போதே கட் ஆகிடும். அப்பறம் மறுபடியும் பேச வேண்டியதா போயிடுது.

என் மேல சந்தேகமா இருந்தா நீங்களும் கேட்டுப்பாருங்க.

"என்ன பண்ணிட்டு இருக்க?"

"நாங்க இன்னைக்கு நல்லா ஊர் சுத்திட்டு வந்தோம். உனக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு ஊர் சுத்தறதுனா ரொம்ப பிடிக்கும்"

"எனக்கும் வண்டில ஊர் சுத்தறதுனா பிடிக்கும். ஐன்ஸ்டீன் கூட சொல்லிருக்காரு 'I love to travel, but hate to arrive'னு "

"ஹே ஹே... இப்படி ஐன்ஸ்டீன் பேர் சொல்லி ஃபிகரை பிக் அப் பண்றதெல்லாம் பழைய காலம். இப்பவெல்லாம் பொண்ணுங்களுக்கு பசங்க போக்கிரியா இருந்தா தான் பிடிக்கும்"

"பராவாயில்லை பொண்ணுங்க எல்லாம் கொஞ்சம் முன்னேறிட்டீங்க போல. முன்னாடியெல்லாம் போக்கிரி ராஜாங்கள தான் பிடிக்கும்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்பவெல்லாம் ஒரு படி கீழ இறங்கி போக்கிரிகளையும் பிடிக்கும்னு ஆரம்பிச்சிட்டீங்க"

"ஆமாம். அப்படியே பசங்க மட்டும் ஒழுங்கு. நார்மலா பேசற பொண்ணுங்களை விட்டுட்டு மாடர்ன் டைப் பொண்ணுங்க பின்னாடி தானே சுத்துவீங்க"

"மாடர்ன் பொண்ணுங்களை சைட் வேணா அடிப்பாங்க. ஆனா மனசை கொடுக்கறது ஹோம்லி பொண்ணுங்கள்ட தான். பத்ரிலக்கூட பாரு மோனல் பின்னாடி சுத்தனாலும் கடைசியா பூமிகாவைத்தான் கல்யாணம் பண்ணிக்குவார். பசங்களுக்கு எப்பவுமே நல்லா பழகற பொண்ணுங்களை கைப்பிடிக்க தான் பிடிக்கும்"

"பிடிக்கும் பிடிக்கும் கைய உடைச்சா எல்லாம் சரியாகிடும்"

சரி இதுக்கு மேலயும் எங்க மொக்கையை கேட்டா நீங்க டென்ஷனாகிடுவீங்க. இந்த வீக் எண்ட் அவ வீட்டுக்கு என்னை வர சொல்லியிருக்கா. சனிக்கிழமை போகலாம்னு இருக்கேன். அங்க அவ க்ளாஸ் மேட்ஸ் எல்லாம் இண்ட்ரடியூஸ் பண்ணிவிடறேனு சொல்லியிருக்கா...

என்னங்க சனிக்கிழமை காலைல எங்க கிளம்பிட்டு இருக்கேனு பாக்கறீங்களா? அதான் அன்னைக்கே சொன்னேனே. நித்யா வீட்டுக்கு தான்.

இன்னைக்கு அங்கு வந்து சேர்ந்து படிக்கலாம்னு சொல்லியிருக்கா. வீக் டேஸ்ல நிறைய நாள் வர சொன்னா. நான் வேற ஃபிரெண்ட் வீட்டுக்கு போறேன், அது இதுனு பொய் சொல்லி வெச்சிருக்கேன். இன்னைக்கு எப்படியும் உண்மையை சொல்லிடலாம்னு ப்ளான்.

அவ ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு டீலிங் இருக்காம். ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில வேலை செய்யறவங்க ஒருத்தராவது தெரிஞ்சிருக்கனும்னு. அப்ப தான் ரெஃபர் பண்றதுக்கும், ஓப்பனிங் இருந்தா சொல்றதுக்கும் வசதியா இருக்கும்னு அப்படி ஒரு திட்டமாம். எனக்கு யாரையும் தெரியாதுனு சொன்னேன். சும்மா அடிச்சி விடு அப்பறமா பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கா. ஒரு வழியா BTMலே அவுட்க்கு வந்தாச்சுங்க. இப்ப அவ ரூமை கண்டுபிடிச்சு போகனும். இன்னைக்கே சொல்லலாமா இல்லை அடுத்த முறை பார்க்கும் போது சொல்லலாமானு இப்ப ஒரே யோசனையா இருக்கு. இருங்க செல்ஃபோன் அடிக்குது நித்யாவா தான் இருப்பா.

"ஏ எங்க இருக்க?"

"நான் BTM வந்துட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்"

"சாருக்கு காலைல எழுந்திரிச்சி வரதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சா?"

"இல்லை. நான் ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பினேன். இங்க வந்து சேரதுக்கு ரெண்டு மணி நேரமாகிடுச்சு"

"சரி. எங்கயும் வேடிக்கை பார்க்காம வந்து சேரு"

"அதெல்லாம் பத்திரமா வந்துடுவோம். நீ எதுவும் பயப்பட வேண்டாம்"

"ஐயோ. இவர் அப்படியே குழந்தை. இவருக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படறோம். பொண்ணுங்களை பார்த்துட்டு அங்க இங்க நின்னுடாதனு சொன்னேன். இங்க என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"

"இதோ வந்துட்டேன். நீ கொஞ்சம் வெளிய வந்தா வீடு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்"

என்ன புறப்படறதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சினு பாக்கறீங்களா? என்ன பண்ண? எல்லாரும் இப்ப தான் கிளம்பறாங்க. மதியம் போனவுடனே அவ ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வெச்சா. மூணு பசங்க நாலு பொண்ணுங்க. எல்லாரும் நல்லா பேசனாங்க. அப்பறம் சாப்பிட ஆரம்பிச்சோம். அட்டகாசமா சமைச்சிருந்தாங்க. வெல்லம் போடாத சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், சக்கரை போடாம தயிரை சாப்பாட்ல போட்டு சாப்பிட்டது. எல்லாமே சூப்பரா இருந்தது. நித்யா இவ்வளவு சூப்பரா சமைப்பானு நீங்களும்
எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. நானும் உங்களை மாதிரியே எதிர்பார்க்கலை.

அப்பறம் சாப்பிட்டு எல்லாருக்கும் தூக்க கலக்கம். அப்படியே பேசிக்கிட்டே பொழுது ஓடிடுச்சி. ஒரு அஞ்சு மணிக்கா சுரேஷ் தான் எல்லாருக்கும் C சொல்லி தர ஆரம்பிச்சான். பையனுக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிருந்தது. ஆனா நிறைய விஷயம் மிஸ் பண்ணான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்படியே நான் கொஞ்ச கொஞ்சமா கேள்வி கேக்கற மாதிரி கேட்டு, அவன் வாய்லயே சொல்லி கொடுக்க வெச்சேன்.

ரொம்ப கஷ்டமா போயிடுச்சிங்க. ஒரு சில இடத்துல நான் கேள்வி கேட்டும் அவனுக்கு புரியல. அப்பறம் எங்க காலேஜ்ல இப்படி சொல்லி கொடுத்தாங்கனு நான் சொல்லி கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். நித்யாக்கு என் மேல சந்தேகம் வந்திருக்குமானு தெரியல.

கொஞ்ச நேரத்துல அங்க வந்த வினோதினி அக்கா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சி என்னை காப்பாத்தினாங்க. வினோதினி அக்கா பெங்களூர்ல தான் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறாங்க. அவுங்க தங்கச்சி வினிதா தான் நித்யாவோட காலேஜ் மேட். மூணு பேரும் சேர்ந்து தான் ரூம் எடுத்து தங்கியிருக்காங்க. அவுங்க ஓரளவுக்கு நல்லா சொல்லி தந்தாங்க. அவுங்க பண்ண சின்ன சின்ன தப்பை மட்டும் நான் திருத்தினேன். ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டே பார்த்தாங்க. இதை தான் அப்பவே "ரவி"யை கை மறைப்பார் இல் னு சொன்னாங்க போல.

அப்பறம் எட்டு மணிக்கா சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க. முடிக்க ஒன்பதரைக்கு மணிக்கு மேல ஆச்சு. அதான் சாப்பிட்டு பஸ் ஏறதுக்குள்ள மணி பத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கும் அவக்கிட்ட சொல்ல வாய்ப்பு கிடைக்கல. இதுக்கு மேல சொன்னா ஒரு கும்பல்கிட்டயே தர்ம அடி வாங்க வேண்டியது இருக்கும் போல.

இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் ரவி சங்கர்...

(ஆட்டம் தொடரும்...)

Friday, August 01, 2008

ஆடு புலி ஆட்டம் - 5

என்னங்க ஃபோரம்ல சுத்த போறேன், படத்துக்கு போக போறேன், சீட்டு விளையாடப்போறேனு சொல்லிட்டு இப்படி காலங்காத்தால கைல ரெஸ்யூமோட இங்க வந்திருக்கேனு பார்த்தீங்களா? சும்மா விளையாட்டுக்கு தான். அவள் என்னை எப்படி நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு ஏமாத்தனாலோ, அதை விட நான் அவளுக்கு பல்ப் கொடுக்கனும்னு தான் இந்த ஐடியா. நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும்.

இந்த ரெஸ்யூம்ல என்னோட பேரை தவிர எல்லாமே பொய் தான். இந்த பெங்களூர்ல, இந்த சின்ன கம்பெனில எவனுக்கு என்னை தெரிய போகுது. இருங்க மொபைல் அடிக்குது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பேசிட்டு வந்துடறேன்.

"ஹேய் நித்யா. சொல்லுங்க. எங்க இருக்கீங்க?"

"நான் இண்டர்வியூ அண்டெண்ட் பண்ண போறேன். நீங்க வரீங்களா? இல்லையா?"

"நான் இன்னும் சரியா ப்ரிப்பேர் பண்ணல. அடுத்து ஏதாவது பெரிய கம்பெனியா இருந்தா சொல்லுங்க. சின்ன கம்பெனி எல்லாம் வேண்டாம்"

"பில் கேட்ஸ் ரிட்டயர்ட் ஆகறாராம். நீங்க வேணா அந்த வேலைல சேர்ந்துக்கறீங்களா?"

"இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? இந்த சின்ன கம்பெனி விட்டா அது ஒண்ணுல தான் வேலை இருக்கா?"

"சரி டென்ஷனாகாதீங்க. நீங்க எங்க தங்கியிருக்கீங்க?"

"நான் பக்கத்துல விவேக் நகர்ல தான் தங்கியிருக்கேன்."

"அப்ப அப்படியே வந்தீங்கன்னா, இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணிட்டு, ரெண்டு பேரும் பக்கத்துல ஏதாவது ஒரு நல்ல ஓட்டல்ல சாப்பிடலாம் இல்லை?"

"நீங்க இண்டர்வியூ முடிச்சிட்டு கூப்பிடுங்க. நான் வரேன்"

"சரிங்க"

ஏன் இப்ப எல்லாரும் என்னை அப்படி முறைக்கறீங்க? எத்தனை பொய் தான் சொல்வேனு எண்ணிட்டு இருக்கீங்களா? நான் சொன்னது ஒரு தாய் பொய் தான். மீதியெல்லாம் அதோட குட்டி பொய்.

எப்படியும் இன்னைக்கு இவனுங்க இண்டர்வியூல தப்பி தவறிக்கூட செலக்ட் ஆகிடக்கூடாதுங்கறது தாங்க என்னோட வேண்டுதலே. இதோ அந்த வாயாடி படிக்கெட்ல வந்துட்டு இருக்கா பாருங்க. அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் கொஞ்சம் அழகா தெரியறா பாருங்க. அழகா சுடிதார் போட்டு, துப்பாட்டாவை எதுக்கு போடணுமோ அதுக்காக போட்டு, மேட்சிங் மேட்சிங்கா பொட்டு தோடுனு இல்லாம, காண்ட்ராஸ்டிங்கா போட்டுட்டு அழகா வந்திருக்கா. ஸ்டூல் போடாமா செருப்பு போட்டுறக்கறது இன்னும் அழகா இருக்கு. இவ இண்டர்வியூக்கு வந்தாளா இல்லை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கனு நினைச்சிட்டு வந்தாளானே தெரியல. ரவி! ரொம்ப அலையாதனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. அதனால இதோட நிப்பாட்டிக்குவோம்.

"அடப்பாவமே. நீங்க இங்க எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களா? சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னவுடனே அதுக்குள்ள வந்துட்டீங்க. நான் இண்டர்வியூ முடிச்சிட்டு தான் வருவேன்"

"ஆமாங்க நீங்க சொல்லி பத்து நிமிஷத்துல நான் ரெஸ்யூம் டை ப் பண்ணி, ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு, பறந்து வந்துட்டேன்"

"அப்ப, நான் ஃபோன் பண்ணும் போது நீங்க இங்க தான் இருந்துருக்கீங்க"

"ஆமா. சும்மா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான் நான் சொல்லல"

"இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸா. நீங்க இந்த இண்டர்வியூ க்ளியர் பண்ணா அது சர்ப்ரைஸ்"

"நீங்க நாலு கம்பெனில ஆஃபர் லெட்டர் வாங்கனவங்களாச்சே. நீங்க தாராளமா பேசலாம்"

"கிண்டல் பண்றீங்க பார்த்தீங்களா?"

"இல்லை சும்மா சொன்னேன். ஆமா நீங்க தனியா வந்திருக்கீங்களே. உங்க கூட வேலை தேடற ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?"

"இல்லைங்க.
நான் என் க்ளாஸ் மேட் வினிதாகாவும், அவ அக்காவும் சேர்ந்து தங்கியிருக்கோம். வினிதா ஊருக்கு போயிருக்கா. அவ அக்கா இங்க ஒரு கம்பெனில வேலை பார்க்கறாங்க."

"ஹிம்ம்ம்"

"சரி, உங்க ஃபிரெண்ட்ஸ் யாரும் வரலையா?"

"இல்லைங்க. அவனுங்க எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க. முன்னாடியே சொல்லியிருந்தா ப்ரிப்பேர் பண்ணியிருப்பாங்க"

"ஆமா. இதுக்கு இவுங்களுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே சொல்வாங்களாக்கும். சும்மா ட்ரை பண்ணி பார்க்கலாம்னு வரதில்ல"

"அவுங்க அப்படி தான். நீங்க விடுங்க"

இப்பல்லாம் கேள்வியாங்க கேக்கறானுங்க. இதுக்கு கோடிஸ்வரன்ல சித்தில சிவக்குமார்க்கு ராதிகா என்ன வேண்டும்னு சரத்குமார் கேட்டாரே, அதையே கேட்டிருக்கலாம். நானும் தப்பா எழுதனும்னு கஷ்டப்பட்டு எழுதிட்டு வந்திருக்கேன். இவனுங்க எல்லாம் எதுக்கு கம்பெனி நடத்தறாங்கனு தெரியலை. அதோ நித்யா வெளிய வந்துட்டா. மெயிண்டைன் பண்ணனும்.

"எப்படி எழுதனீங்க?"

"என்னங்க இவ்வளவு கஷ்டமா கேட்டிருக்காங்க. எனக்கு ஒண்ணுக்கூட தெரியல"

"அப்பா.. எனக்கு பரவால. பாதிக்கு மேல கரெக்டுனு நினைக்கிறேன். ரொம்ப கஷ்டமில்லை. ஆனா கொஞ்சம் கஷ்டம் தான்"

"உங்க அளவுக்கு படிப்ஸா இருந்தா பரவாயில்லை"

"என்னங்க. நீங்க இஞ்சினியரிங் படிச்சி தானே வந்தீங்க. உங்களுக்கு வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டம் போல"

"என்னங்க இப்படி சொல்றீங்க"

"சரி கவலைப்படாதீங்க. எங்க ரூம்ல நிறைய பேர் சேர்ந்து தான் படிப்போம்.நீங்க வாங்க உங்களுக்கு நாங்க சொல்லி தரோம்"

"ரொம்ப தேங்க்ஸுங்க. ஆனா பொண்ணுங்க தங்கியிருக்கற வீட்டுக்கு நான் வரது நல்லா இருக்காது."

"அய்யோ.. ரொம்ப தான்.. அங்க எங்க க்ளாஸ் பசங்களும் வருவாங்க. நிறைய பேர் சேர்ந்து தான் படிப்போம். பயப்படாம வாங்க"

"சரி.."

"மணி பனிரெண்டே காலாச்சு.. பக்கத்துல எங்கயாவது நல்ல ஓட்டல் இருக்கா?"

"பக்கத்துல தான் கிருஷ்ணா காபே இருக்கு.. மதியம் சாப்பாடு சூப்பரா இருக்கும்"

"இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிக்கோங்க. ஆனா இண்டர்வியூல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் தெரிஞ்சிக்காதீங்க"

"என்னங்க பண்றது... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதிக மூளையை எடுத்து ஊத்திட்டு எங்களுக்கு குறைச்சிட்டான் போல"

"என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க. சரி வாங்க சாப்பிட போகலாம்"

கிருஷ்ணா கபேல சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. எப்பவும் போல வெளுத்து கட்டியாச்சு. எங்க நித்யாவை காணோம்னு பார்க்கறீங்களா? அவளை பஸ் ஏத்தி அனுப்பிட்டேன். ஃபோரம் போகலாமானு கேக்கலாம்னு யோசிச்சேன். அப்பறம் அது சரியில்லைனு தோணுச்சு. அதான் பஸ்ல ஏத்திவிட்டாச்சு. அது எப்படிங்க பொண்ணுங்க வாய திறந்து பேச ஆரம்பிச்சா நிறுத்தாம பேசறாங்க?

சீக்கிரம் உண்மையை சொல்லிடனும்னு தோனுதுங்க. இல்லைனா ஏதாவது பிரச்சனையாக வாய்ப்பிருக்குனு தோனுது. சான்ஸ் கிடைக்கும் போது சொல்லிடுடா ரவினு என் மனசும் அடிக்கடி சொல்லுது. பார்க்கலாம்...

(ஆட்டம் தொடரும்)