தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, April 27, 2008

பனி விழும் மலர் வனம் - 4

கதை எழுத ரொம்ப நாளானதுக்கு மன்னிச்சிடுங்க மக்கா...

..........

பாருங்க. நம்ம தான் டகால்ட்டினு பார்த்தா இந்த பொண்ணு நமக்கு மேல இருக்குங்க. எப்படி தான் இப்படி கூச்சப்படாம பொய் சொல்றாங்களோனு தெரியலைங்க. இப்ப எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க? நான் சும்மா ஒரு பொய் சொன்னேன். அந்த பொண்ணு எப்படி தொடர்ந்து கண்டினியுஸா அடிச்சுது பார்த்தீங்க இல்லை. இதுல எனக்கு அட்வைஸ் வேற. கூகுல்ல வேலை செய்யற எனக்கு ஆறு மாசமா வேலை தேடற பொண்ணு அட்வைஸ் பண்ணுது பாருங்க. அது தான் கொடுமை.

.....

என்னடா இன்னைக்கு வெள்ளிக்கிழமை இவன் ஊருக்கு போகலைனு பார்க்கறீங்களா? நான் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் தான் ஊருக்கு போகறது வழக்கம். போன வாரம் போனதால இந்த வாரம் போகலை. இப்ப என் ரூமுக்கு போயிட்டு இருக்கேன். என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.

இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கயுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.

இருங்க ஏதோ போன் வருது யாருனு பார்க்கறேன். எதோ புது நம்பர்ல இருந்து வருது.

"ஹலோ, ரவி ஹியர்"

"நாங்க விப்ரோல இருந்து கூப்பிடறோம். நீங்க எங்க வாட்ச்மேன்கிட்ட கொடுத்த ரெஸ்யும் கிடைச்சுது. உங்களுக்கு நாளைக்கு இண்டர்வியூ. காலைல அஞ்சு மணிக்கு எலக்ட்ரானிக் சிட்டி ப்ராஞ்ச்க்கு வந்துடுங்க. அங்க நீங்க ரெஸ்யும் கொடுத்த வாட்ச்மேன் இருப்பாரு. அவர்கிட்ட இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு"

இது அந்த பொண்ணு வேலை தாங்க. ஊருல இருந்து வந்துட்டா போல

"காலைல அஞ்சு மணிக்கா?"

"ஆமாங்க"

"நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன். திங்க கிழமை காலைல மூனு மணிக்கா அந்த பக்கம் வருவேன். அப்ப வேணா அட்டெண்ட் பண்ணலாமா? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"

"இப்படியெல்லாம் பண்றதால தான் உங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டீங்குது. போன வாரம் தானே ஊருக்கு போனீங்க. அதுக்குள்ள என்ன திரும்ப ஊருக்கு"

"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"

"ஹலோ நான் நித்யா பேசறேன்"

"எந்த நித்யா?"

"ஹிம்... நினைவெல்லாம் நித்யா. உங்க கூட அன்னைக்கு பஸ்ல வந்தனே அந்த நித்யா"

"ஓ... நம்ம டூபாக்குர் பார்ட்டி. நாலு ஆஃபர் லெட்டர் வாங்கன நித்யாவா?"

"ஆமாம். நீங்க சொல்றதை பார்த்தா நிறைய நித்யாவை தெரியும் போல?"

"அதெல்லாம் இல்லைங்க... எனக்கு உங்க பேர் கூட மறந்து போச்சு"

"ஆமா. இவர் கஜினி சூர்யா. எல்லாத்தையும் மறந்து போயிட்டாரு. சும்மா கதைவிடாதப்பா"

செம வாயாடியா இருக்கா பாருங்க.

"சரி சொல்லுங்க. எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?"

"நான் இன்னைக்கு காலைல தான் வந்தேன். வியாழக்கிழமை கிளம்பினா கூட்டம் அதிகம் இருக்காதுனு யோசிச்சி வந்தேன்"

"பயங்கரமான புத்திசாலிங்க நீங்க. உங்களுக்கே வேலை கிடைக்கலனா அதுல ஏதோ சதி இருக்குனு நினைக்கிறேன்"

"சதி இல்லைங்க. என் விதி. நான் வேலை தேடி பெங்களூர் வந்தே ஒரு மாசம் தான் ஆச்சு"

"ஓ அதானே பார்த்தேன்... இல்லைனா உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு பத்து பதினைஞ்சி ஆஃபர் லெட்டர் வாங்கியிருப்பீங்களே."

"அப்பறம் அன்னைக்கு நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. இல்லைனா அன்னைக்கு பஸ் பிடிச்சி போக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கனும். இந்த தடவை மறக்காம காலண்டர் எடுத்துட்டு வந்துட்டேன். பௌர்ணமி அன்னைக்கு கண்டிப்பா புறப்பட மாட்டேன்"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் இந்த வாரம் ஏதாவது இண்டர்வியூ அட்டெண்ட் பண்றீங்களா?"

"இல்லைங்களே. ஏன் நீங்க ஏதாவது அட்டெண்ட் பண்றீங்களா?"

"ஆமாம். நாளைக்கு கோரமங்களால XYZ கம்பெனில காலைல 10 மணிக்கு வாக் இன். 70% க்கு மேல இருந்தா அட்டெண்ட் பண்ணலாம். வெறும் C தெரிஞ்சா போதும்னு சொல்றான். சும்மா வந்து அட்டெண்ட் பண்ணி பார்க்கறீங்களா?"

ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவளை கலாய்ப்போம்.

"சரிங்க. வர ட்ரை பண்றேன்"

"என்னது ட்ரையா? உங்களுக்கே ஓவரா தெரியல. ஒழுங்கா நாளைக்கு வந்து சேருங்க"

என்னங்க இப்படி பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டா? ரொம்ப ராங்கி பிடிச்ச பொண்ணா இருக்கா. நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க? நாளைக்கு போகாம எஸ்கேப் ஆகிடலாம். அவ கேட்டா பொய் சொல்றதுக்கு நமக்கு தெரியாதா என்ன?

(தொடரும்...)

Friday, April 18, 2008

"அகில இந்திய"(?) சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் முதல்வரானால்

நேத்து Gaptain முதலமைச்சரானா என்ன பண்ணுவாருனு எழுதனதை பார்த்துட்டு 2011ல நாங்க தான் ஆட்சியை பிடிப்போம்னு சொல்லிட்டு திரியற கூட்டத்துல முக்கியமான ஆளான "அகில இந்திய"(?) சமத்துவ கட்சி தலைவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் போன் பண்ணி வருத்தப்பட்டார்... சரி அவருக்கும் ஒண்ணு எழுதிடுவோம். நம்ம ஊரு மக்களை நம்ப முடியாது. நாளைக்கு அவரே முதலமைச்சரானாலும் ஆகலாம்.

"My child and your child are playing with Our Child"னு வெள்ளைக்காரன பத்தி அடிச்ச ஜோக்க நம்ம ஊருக்கே கொண்டு வந்து சேர்த்த பெருமை உங்களை தானுங்க சேரும். அதனால தமிழ்நாட்டை இனிமே இங்கிலீஷ் நாடுனு பேர் மாத்திடலாம்.

இனிமே எந்த ஊர்லயும் நீதிமன்றம் கிடையாது. ஒன்லி பாஞ்சாயத்து.

நோ ஜட்ஜஸ்... ஒன்லி நாட்டாமைஸ்.

நாட்டாமை தப்பா தீர்ப்பு சொன்னா அப்படியே ஹார்ட் அட்டாக்ல செத்துடனும். இல்லைனா சாக வெச்சிடுவாரு.

நாட்டாமையை யாராவது கொன்னா அவுங்களை அந்த ஊரை விட்டு தள்ளிவெச்சிடுவாங்க. அது பக்கத்து ஊரு காரனா இருந்தாலும் அதே தண்டனை தான். (ஏன்டா தமிழ்நாட்ல வேற ஊரே இல்லையானு கேள்வி கேக்க கூடாது)

கர்நாடகால யாராவது பிரச்சனை பண்ணா தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் மதியானம் ரெண்டு மணில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கனும். குறிப்பா கர்நாட்ல இருந்து இங்க வந்திருக்கவங்க அதுல கலந்துக்கனும்.

ராத்திரி ஒன்பது மணிக்கு எல்லாரும் ராதிகா நடிக்கிற நாடகத்தை பார்க்கனும் ;)

இதுக்கு மேல நீங்க உங்களுக்கு தோன்றதை சொல்லுங்க...

சங்கம் ரெண்டு போட்டில கலந்துக்கிட்டீங்களா??? சீக்கரம் யோசிச்சி கலந்துக்கோங்க மக்கா...

Wednesday, April 16, 2008

Gabtain விஜயகாந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரானால்

* இனிமே தமிழ்நாடு Dhamilநாடுனு மாத்திடலாம்.

*தமிழ்நாட்ல கோர்ட் எல்லாம் கிடையாது. எல்லா குற்றவாளிகளையும் லிஸ்ட் போட்டு முதல்ல வரவருக்கு தூக்கு தண்டனை. ஏன்னா Gaptainக்கு Dhamilla பிடிக்காத ஒரே வார்த்தை "மன்னிப்பு".

*எல்லா போலிஸ்காரருக்கும் ஒரு கோவில் பிரசாத தட்டை ஒரு அரைஞான் கயிறுல கட்டி கொடுத்துடுவாங்க. அதை கட்டிட்டு போய் தான் தீவிரவாதிகளை பிடிக்கனும். அப்ப அவுங்க சுட்டா குண்டு அப்படியே ரிவர்ஸ்ல போய் அவுங்களை சுட்டுடும்.

பிரியாதவங்க.. இந்த விடியோவை பார்க்கவும்...*தமிழ்நாட்ல எந்த வீட்லயும், ஹோட்டலயும் கூட்டு சமைக்க கூடாது. ஏன்னா Gaptainக்கு அரசியல்ல மட்டுமில்லை சாப்பாட்டுலயும் பிடிக்காத ஒண்ணு கூட்டு தான்.

*சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ் எல்லாம் Windows Media Playerல தான் டைப் பண்ணனும். நோட் பேட் எல்லாம் பயன்படுத்தக்கூடாது.

பிரியாதவங்க இந்த விடியோவை பாருங்க...*ஓக்கேனக்கல் பிரச்சனைக்கு காரணமான Bakisthaan தீவிரவாதிகளை Gaptain ஒரே நாள்ல பிடிச்சி, பிரச்சனையை தீர்த்துடுவாரு.

*Dhamilநாட்டோட நேஷனல் கேம் பம்பரம். (அதை எங்க விடணும்னு எல்லாம் கேக்க கூடாது)


*Dhamilnaatu மக்களை எல்லாம் மலேசியா, சிங்கப்பூர்னு கூப்பிட்டு போய் கலை நிகழ்ச்சி நடத்தி Dhamilnaatoada கடனை எல்லாத்தையும் அடைச்சிடுவாரு. அப்படி கலை நிகழ்ச்சில கலந்துக்கலனா அவுங்களை Dhamilnaatla இருந்து தள்ளி வெச்சிடுவாரு.. ஆங்ங்ங்ங்

...

இதுக்கு மேல உங்களுக்கு தோனுறத சொல்லுங்க...

We will meet... Will meet.. meet

ஆங்ங்ங்ங்...

சங்கம் ரெண்டு போட்டில கலந்துக்கிட்டீங்களா??? சீக்கரம் யோசிச்சி கலந்துக்கோங்க மக்கா...

Tuesday, April 08, 2008

அண்ணே அண்ணே... சத்யராஜ் அண்ணே!!!

அண்ணே! புரட்சி தமிழன் சத்யராஜ் அண்ணே! அன்னைக்கு உண்ணாவிரத கூட்டத்துல பட்டையை கிளப்பி பேசனீங்கண்ணே.

அதுவும் ஆரம்பமே அசத்தல் தான். நான் யார் பேரையும் சொல்லி கைத்தட்டல் வாங்க தேவையில்லை. அதுக்கு நாக்கை புடுங்கிட்டு செத்து போயிடுவேனு. அதிலயும் அதிகமா சம்பளம் வாங்கறவங்க பேரை சொன்னா அதிகமா கைத்தட்டல் கிடைக்கும் அதை விட கொஞ்சம் கம்மியா வாங்கறவங்க பேர் சொன்னா அதைவிட கொஞ்சம் கம்மியா கைத்தட்டல் கிடைக்கும்னு. இது தாண்ணே அதுல ஹை லைட்டே.

உங்களுக்கு எல்லாத்துக்கும் ஒரு தமிழன் இருக்கான்யா. நீங்க மத்தவங்களை தலைக்கு மேல தூக்கி வெச்சிட்டு ஆடறத நிறுத்துங்க இப்படினு சொல்றதுக்கு முன்னாடிதான் உங்க தலைவர் ம.கோ.ராமச்சந்திரன் எப்படி சிக்கன், மட்டன் எல்லாம் சாப்பிட்டு புத்திசாலித்தனமா காவேரி தண்ணிய கொண்டு வந்தாருனு பேசனீங்க. அவர் மட்டும் மலையாளி இல்லையா? அவரும் ஒரு காலத்துல எல்லாத்தையும் விட அதிக சம்பளம் வாங்கிட்டு இருந்த நடிகர் தானே?

தமிழ்நாட்டுக்கு ராமர் வேண்டாம், "ராகவேந்திரா" வேண்டாம், ஐய்யப்பன் வேண்டாம்னு சொன்னீங்களே அதே மாதிரி வீட்ல தெலுங்கு பேசிட்டு இருந்த பகுத்தறிவு பகலவன் ஈ.வே."ராமசாமி"யும் வேண்டாம்னு சொல்லிடலாமா?

இவ்வளவு பேசற நீங்க தயாரிச்ச லீ படத்துல மட்டும் எதுக்குண்ணே வடநாட்டு கதாநாயகி "நிலா"வை போட்டீங்க? ஒரு தமிழ் கதாநாயகியை தேர்ந்தெடுக்க வேண்டியது தானே? அது டைரக்டர் சாய்ஸ்னா, நீங்க டைரக்ட் பண்ண வில்லாதி வில்லன்ல கதாநாயகி நக்மா.

இந்த உண்ணாவிரதத்துக்கு முன்னாடி "தமிழில் சோறு திண்ணும்" கலைஞர்கள் எல்லாம் பங்கேற்கனும்னு சொன்னீங்களே. இப்ப இயக்குனர் இமயம் பாரதிராஜாவை தமிழன் இல்லைனு தள்ளி வெச்சிடுவீங்களா? (அவரே தமிழன் இல்லைனா உங்க கூட்டத்துல ஒருத்தன் கூட தமிழன் இல்லை)

உங்களுக்கு ரஜினியை திட்டனும்னு தோனுச்சுனா தனியா கூட்டம் போட்டு திட்டுங்க. (அதுக்கும் கூட்டம் நல்லா கூடும்). உங்க காழ்ப்புணர்ச்சியை காட்ட அந்த கூட்டம் தான் தேவைப்பட்டுச்சா?

(இவரை சின்ன பெரியார்னு சொல்லி ஏதோ ஒரு வலைப்பதிவுல பார்த்தேன். ஏதோ சின்ன கலைவாணர்னு விவேக்கை சொல்ற மாதிரி நினைச்சிக்கிட்டாங்கனு நினைக்கிறேன். "ஒரு பவுன் 10 ரூபாய் பெறாத அந்த காலத்தில் வருடத்திற்கு 20,000 ஈட்டும் குடும்ப தொழிலை விட்டு நாட்டு விடுதலையில் பங்கு கொண்டவர் பெரியார்". பெரியாரெல்லாம் சூரியன் மாதிரி (ஒண்ணே ஒண்ணு தான்). இதுங்க எல்லாம் மின்மினி கூட கிடையாது.)

Monday, April 07, 2008

புரட்சி தமிழன்(?) தீர்க்கதரிசியா?பார்க்க போர் அடிச்சா 4 நிமிடம் 6 நோடியிலிருந்து 7 நிமிடம் 27 நோடி வரை பார்க்கலாம் ;)