தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 31, 2007

கேப்டனின் வேட்டையாடு விளையாடு

நம்ம Gaptain க்கு இந்த பாட்டு எப்படி அருமையா ஒத்து வருது பாருங்க...

கோழியின் அட்டகாசங்கள் - 7

மக்கா, கோழி பதிவு போட்டு ரொம்ப நாளாச்சி!!! சரி வழக்கம் போல என்ஜாய்!!!

பெங்களூர் வந்து சேர்ந்த கோழி முதன் முதலாக ஒரு MNC கம்பெனியில் இண்டர்வியூவிற்கு சென்றான். அந்த கம்பெனியிலே எங்கள் கல்லூரியிலிருந்து ஒரு நண்பன் வேலை செய்து கொண்டிருந்தான்.

இண்டர்வியூ முடிந்து வந்த கோழி மிகவும் சந்தோஷமாக இருந்தான்.

"என்னடா கோழி இண்டர்வியூ என்னாச்சி??"

"மூணு ரவுண்ட் முடிஞ்சிதுடா... பொறுமையா ரிசல்ட் சொல்றோம்னு சொல்லிருக்காங்க" சந்தோஷமாக சொன்னான்.

"என்ன என்ன ரவுண்டா இருந்துது கோழி?" ஆர்மாக கேட்டான் OP.

"சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்ட், மேனேஜர் ரவுண்ட், HR Manager ரவுண்ட்"

மேனஜர் ரவுண்ட், HR Manager ரவுண்ட் தெரியும். அது என்ன சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்டுனு எனக்கு எதுவும் புரியல.

சரி இது தெரியலைனு சொன்னா நம்மல ஓட்டுவானுங்கனு நான் அந்த கம்பெனில வேலை செய்யற அந்த ஃபிரெண்டுக்கு போனை போட்டேன்...

"டேய் பாலாஜி பேசறேன்... இன்னைக்கு கோழிக்கு இண்டர்வியூல என்ன நடந்துச்சு?"

"ஏன்டா இண்டர்வியூக்கு வரும் போது ரெஸ்யுமே கொண்டு வரணும்னு தெரியாதா?"

"என்ன அவன் ரெசுமே கொண்டு வரலையா? அப்பறம் என்னட மூணு ரவுண்டுனு உளறிக்கிட்டு இருக்கான்"

"ஆமாம்.. சொன்னா ஃபீல் பண்ணுவான்னு தெரிஞ்சி நான் தான் விசிட்டர் பாஸ் வாங்கிட்டு போயி என் க்யூபிகல், என் PM கியூபிக்கல். அப்பறம் HR கியுபிகல் மூணுத்தையும் ஒரு ஒரு சுத்து கூப்பிட்டு போயி மூணு ரவுண்ட் முடிஞ்சிடுச்சினு சொல்லி அனுப்பிட்டேன்"

"அடப்பாவி உன் வேலை தானா அது? சாப்ட்வேர் இஞ்சினியர் ரவுண்டுனு அவன் சொல்லும் போதே எனக்கு கொஞ்சம் டவுட் வந்துச்சி"

"சரிடா அவன்கிட்ட எதுவும் சொல்லாத... அடுத்த முறை வேற எங்கயாவது இண்டர்வியூக்கு போன காலேஜிக்கு போற மாதிரி கை வீசிட்டு போகாம ரெசுமே எடுத்துட்டு போக சொல்லு" சொல்லிவிட்டு போன் இணைப்பை துண்டித்தான்...

அங்கே கோழி எல்லாரிடமும் விளக்கி கொண்டு இருந்தான்...

"இவ்வளவு ஈஸியா மூணு ரவுண்ட் முடியும்னு நான் நினைக்கவேயில்லை... HR Manager ரவுண்ட்க்கு தான் ஒரு 5 நிமிஷம் அதிகமா ஆச்சி"

HR Manager க்யூபிக்கல் கொஞ்ச தூரத்துல இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...

Thursday, January 25, 2007

புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!!

புதிய ப்ளாகருக்கு மாற ஆசையிருந்தும் அதிக பதிவுகள் இருப்பதால் மாற முடியாமல் வருத்தப்படுபவர்களுக்கு...

இது எங்க சங்க தளபதி எனக்கு சொல்லி கொடுத்த விஷயம். சரினு உங்க கூட பகிர்ந்துக்கலாம்னு தான் இந்த பதிவு.

சரி, முதல்ல விஷயத்துக்கு வரேன். இப்ப நீங்க லாகின் செய்வது உங்களுடைய ப்ளாகர் அக்கவுண்ட் பயன்படுத்தி
உதாரணம்
User ID : userid_1

ஆனால் புதிய ப்ளாகருக்கு Google Account பயன்படுத்த வேண்டும். அதாவது உங்கள் Gmail ID
உதாரணம்
EMail ID : emailid_1@gmail.com

தற்போது தாங்கள் செய்ய வேண்டியது இதுதான். உங்களுக்கு மற்றொரு gmail id உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
EMail ID : emailid_2@gmail.com

உங்களுடைய userid_1ல் உள்ளே சென்று emailid_2@gmail.com விற்கு அழைப்பு விடுக்கவும். உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் அழைப்பு விடுத்து கொள்ளலாம். பிறகு emailid_2வில் சென்று அழைப்பை ஏற்று கொள்ளவும். தற்போது அதில் ஒரு புது லாகின் ஐடி உருவாக்கி கொள்ளவும்.
உதாரணம்
User ID : userid_2

இன்னும் நீங்கள் பழைய ப்ளாகரிலே இருக்கிறீர்கள். தற்போது தங்கள் பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே செல்லவும் (userid_1)
தங்களுடைய புது ஐடிக்கு அட்மின் உரிமையை கொடுக்கவும். (Admin Permissions)

தற்போது உங்கள் புது ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று பழைய ஐடிக்கு இருக்கும் உரிமையை நீக்கவும். (Go to Permissions and remove the old blogger)

மீண்டும் உங்களுடைய பழைய ஐடியை பயன்படுத்தி உள்ளே சென்று புதிதாக ஒரு வலைப்பூ தொடங்கவும். தற்போது உங்கள் புதிய ஐடியில் இந்த ஒரு புதிய வலைப்பூ மட்டுமே இருக்கும். அதை புதிய ப்ளாகருக்கு மாற்றவும். அது எளிதாக மாறிவிடும். அதற்கு தங்களுடைய emailid_1@gmail.com பயன்படுத்தி கொள்ளவும்.

பின்பு மீண்டும் userid_2 பயன்படுத்தி உள்ளே செல்லவும். அது உங்களுடைய பழைய ப்ளாகரை புதிய ப்ளாகருக்கு மாற சொல்லி கேட்கும். அதை மாற்ற சம்மதித்து அதில் மீண்டும் உங்கள் emailid_1@gmail.com கொடுக்கவும். உங்களுடைய ப்ளாக் தற்போது புது ப்ளாகருக்கு மாறியிருக்கும். தற்போது புதிய ப்ளாகரில் emailid_1@gmail.com கொடுத்து உள்ளே செல்லவும். அங்கே தங்களுடைய வலைப்பூ புதிய ப்ளாகருக்கு மாறியிருப்பதை பார்க்கலாம்...

சீக்கிரம் மாறிடுங்க...

பகுத்தறிவு என்றால் என்ன???

சர்வேசன் அவர்களின் சர்வே தலைப்பை பார்த்து கொஞ்சம் குழம்பிய நிலையிலே இந்த பதிவை இடுகிறேன்...

பகுத்தறிவு என்றால் என்ன???
எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு. ஒருவனுக்கு இறை நம்பிக்கையே நல்ல வழியில் அவன் வாழ்க்கையை நடத்த உதவுமெனில் அது அறிவின்மையா???

எவ்வளவு துன்பம் வாழ்வில் ஏற்பட்டாலும் நல்ல வழியில் வாழ்ந்தால் இறைவன் எப்படியும் உதவுவான் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் போராடும் ஒருவன் அந்த நம்பிக்கையின் காரணமாகவே வெற்றியடைகிறான் என்றால் அவனுக்கு பகுத்தறியும் ஞானமில்லை என்று அர்த்தமா???

இறை நம்பிக்கையின்மையா பகுத்தறிவு??? அது நாத்திகம் தானே?

கொஞ்சம் யாராவது உதவுங்களேன்!!!

கண் கோடி வேண்டும்

பெங்களூர் ISKON - வைகுண்ட ஏகாதசிநின் திருவடி காண கண் கோடி வேண்டும்...

Monday, January 22, 2007

செந்தழல் ரவி என்னத்த பெருசா செய்யறார்???

செந்தழல் ரவி என்ன பெருசா செய்யறார்? அவர் போடற இன்ஃபர்மேஷன் புதன் கிழமை Times of India எடுத்து பார்த்தா தெரியப்போகுது. இதுல அவர் பெருசா என்ன செய்யறார்னு எல்லாம் தலைல தூக்கி வெச்சி ஆடறீங்கனு தெரியல. இப்படி ஒரு சிலர் நினைக்கக்கூடும். அதுக்காகத்தான் இந்த பதிவு...

பெங்களூர்ல வேலை தேடி நாங்க 4 - 5 பேர் வந்தோம். ஓரளவுக்கு நல்ல பர்சண்டேஜ் தான் வெச்சிருந்தோம். ஏதாவது ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணா வேலை வாங்கிடலாம்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி. எனக்கு எப்பவுமே கொஞ்சம் நம்பிக்கை அதிகம் (அதை தலைகணம்னு கூட ஒரு சிலர் சொல்லுவாங்க).

சொன்னா நம்ப மாட்டீங்க நான் முதல் இண்டர்வியு அட்டண்ட் பண்ணவே 5 மாசமாச்சி. ஏன் இவ்வளவு காலமாச்சினு பாக்கறீங்களா? பாதி கம்பெனிக்கு Reference கேப்பாங்க. அங்க இருக்கற ஆளுங்க மூலமா அனுப்பினாதான் Interview (Written Test)க்கு அழைப்பே வரும்... மீதி கம்பெனிக்கு ஒரு மெயில் ஐடி இருக்கும் அங்க அனுப்பினா 4 - 5 மாசமாகும். நான் அப்படி 5 மாசத்துக்கு அப்பறம் கலந்துக்கிட்ட கம்பெனில கூட என் க்ளாஸ் மேட் அக்காதான் Forward பண்ணாங்க. (அது கடைசி ரவுண்ட்ல ஊத்திக்கிச்சு. அதுக்கு அப்பறம் கலந்துக்கிட்ட 2 கம்பெனிலையும் வேலை வாங்கிட்டேன் :-))

ஒரு கம்பெனிக்கு பெங்களூர்ல ITPLல வாக் இன். காலைல ஒரு ஒன்பது மணிக்கு போயிருப்போம். சாயந்திரம் 5 மணி வரைக்கும் க்யூல நின்னுருப்போம். அப்பவும் அட்டெண்ட் பண்ண முடியல. காலைல இருந்து எதுவும் சாப்பிடல. பசில அவ்வளவு நேரம் வெயில நிக்கும் போது தான் அந்த வலி தெரியும். அதுவும் நம்மல மாதிரியே இத்தனை பேருனு பார்க்கும் போது ஒரு மலைப்பாவும் இருக்கும்.

அந்த ஆறு மாசத்துல நான் அதிகமா சாப்பிட்டது உப்புமா தான். அதனால எனக்கு உப்புமானாவே என்னுடைய வாழ்க்கையின் கஷ்ட காலம்னு தான் நியாபகம் வரும். (வேலைக்கு சேர்ந்து இந்த மூணு வருஷத்துல 2-3 தடவை தான் சாப்பிட்டிருப்பேன்).

வீட்ல காசு வாங்கறதுக்கும் ரொம்ப கூச்சமா இருக்கும். காலேஜ் படிக்கும் போது கேண்டீன்ல அக்கவுண்ட்டுக்கே மாசம் 1000க்கு மேல ஆகும். (வெறும் முட்டை பப்ஸ், காபி etc etc சாப்பிட்டே). ஆனா வேலை இல்லாதப்ப ஒரு நாளைக்கு ஒரு காபி குடிக்கவே அவ்வளவு யோசிப்போம்.

இருக்குற எல்லா ஜாப் சைட், yahoo groups (chetana, bangalore-freshers, fresher-bangalore.....)லயும் இருப்போம். யாராவது ஒரு reference தர மாட்டாங்களானு அவ்வளவு கஷ்டப்படுவோம். நம்ம எவ்வளவு தயாரா இருந்தாலும் நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டாங்களானு இருக்கும். Seniors, நண்பர்களோட அண்ணன், சொந்தக்காரர்கள் இப்படி நிறைய பேர்கிட்ட கேட்டு பார்த்தாலும் பெருசா எதுவும் பலனில்லை.

அப்ப இந்த மாதிரி ஒரு செந்தழல் ரவி எங்களுக்கு கிடைச்சிருந்தா, எங்களுக்கு அவர் தெய்வம் தான். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம, வெறும் வேலை வாய்ப்ப பத்தி மட்டும் இல்லாம reference வாங்கி தரார் பாருங்க. அதுதான் உண்மையாலுமே பெரிய விஷயம். கெம்பஸ்ல ப்ளேஸ் ஆனவங்களுக்கு இது ரொம்ப சாதாரண விஷயம்... ஆனா எங்கள மாதிரி ஆளுங்களுக்கு இது வாழ்க்கையையே அமைச்சி கொடுக்கும். வேலை கிடைச்சிதுனு வீட்ல அப்பா, அம்மாக்கிட்ட சொல்லும் போது அவுங்க சந்தோஷத்த பார்க்கனும். அப்ப தெரியும் அதோட அருமை!!!

Hats off ரவி அண்ணா!!!

மக்களே: அப்பறம் உங்க கம்பெனில இந்த மாதிரி ஏதாவது வேலை வாய்ப்பு இருந்து உங்களுக்கு உதவனும்னு தோனுச்சினா ரவி அண்ணாவிற்கு மெயில் பண்ணலாம்... (zyravi@yahoo.com)

அவர் வலைப்பூ பார்க்க இங்கே சொடுக்கவும்

Friday, January 19, 2007

அம்மா!!!

அம்மா
நீ என்ன அன்னப்பறவையா???
நான் செய்த தொந்தரவுகளை
மறந்துவிட்டு குறும்புகளை மட்டுமே
உன் மனதில் சேமித்து வைத்திருக்கிறாய்!!!

இருபது ஐட்டங்கள் இருக்கும் பஃபே
இருநூறில் சாப்பிட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லை
நீ செய்யும் ரசத்தின் சுவையை கூட!!!

நீ என் மீது வைத்திருக்கும்
அன்பின் அடியையும் முடியையும்
காண நான்முகன் நாராயணனோடு
ஈசனும் சேர்ந்துவிட்டானாம்...
தோல்வி உறுதி என்று தெரிந்தும்கூட!!!

நாத்திகம் பேசுபவர்கள்
கடவுளை பார்த்திருக்கிறாயா
என்று கேட்கும் போது
நான் சொல்வது
என் தாயை வந்து பார் என்று!!!

நான் சர்வாதிகாரியானால்
அன்பு என்ற வார்த்தையை
அகராதியிலிருந்து நீக்கிவிட்டு
அம்மா என்று மட்டுமே பயன்படுத்த
ஆணையிட்டிருப்பேன்...

ராமனுக்கு பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் எவ்வளவு கொடியது
என்று உன்னை பார்க்காத இந்த
ஒரு ஆண்டிலே புரிந்து கொண்டேன்!!!

Thursday, January 18, 2007

ஏன்???

அப்பாடா இன்னைக்கு ஞாயித்திக்கிழமை. அம்மா, அப்பா, அக்கா எல்லாரோடையும் சேர்ந்து வெளிய போகலாம்.

இன்னைக்கு எப்படியும் பீச்க்கு கூப்பிட்டு போகனும்னு சின்ன அக்கா போன வாரமே அழுது அப்பாவை ஒத்துக்க வெச்சிட்டா. அதனால கண்டிப்பா இன்னைக்கு அப்பா பீச்சுக்கு கூப்பிட்டு போவாரு. அங்க போயி ஜாலியா விளையாடிட்டு வரலாம்.

சரியாக 4 மணிக்கு காரில் கிளம்பினோம். சின்ன அக்கா அப்பாவோட முன்னாடி உக்கார்ந்துக்கிட்டா. பெரிய அக்காவும் அம்மாவும் பின்னாடி ஜன்னல் பக்கத்துல உக்கார்ந்துக்கிட்டாங்க. நான் ரெண்டு பேருக்கும் நடுவுல அம்மா மடில தலை வெச்சி படுத்துட்டு வந்தேன். எப்பவுமே எனக்கு மட்டும் ஜன்னல் சீட் தர மாட்றாங்க. எல்லாம் இந்த பெரிய அக்கா பண்ற வேலை.

பீச் போய் சேரும் போது மணி 5:30. இப்பவே நல்லா குளிர் காத்து வீசிட்டு இருக்கு. அக்காங்க ரெண்டு பேரும் ஐஸ் கிரிம் கேட்டாங்க. இந்த குளிர்ல எனக்கு ஐஸ் கிரிம் வேணாம்னு நான் சொல்லிட்டேன். அவுங்க ரெண்டு பேருக்கு மட்டும் அப்பா கோன் ஐஸ் கிரிம் வாங்கி கொடுத்தாரு.

அதுக்கு அப்பறம் பீச்ல விளையாட ஆரம்பிச்சோம். நாங்க மூணு பேரும் சேர்ந்து வீடு கட்டி விளையாடினோம். பெரிய அக்கா தான் நிறைய மண்ணு போட்டு கோபுரம் அழகாக்குச்சு. அப்பறம் தண்ணில போய் காலை வெச்சி விளையாடிட்டு இருந்தோம். சின்ன அக்கா கொஞ்சம் நல்லா தண்ணிக்குள்ள போக ஆரம்பிச்சா. அப்பறம் நான் போட்ட சத்தத்துல அப்பா வந்து அவள தண்ணில இருந்து இழுத்துட்டு வந்து நல்லா அடிச்சாரு. அக்கா அழுதுச்சி. நாந்தான் அவ கண்ணை துடைச்சேன். இருந்தாலும் அவளுக்கு என் மேல கோபம் போகல. எங்கிட்ட எதுவுமே பேசல. போய் அம்மா மடில படுத்துக்குச்சு.

அப்பறம் எல்லாரும் கோவிலுக்கு போனோம். அங்க எல்லாம் நல்லா சாமி கும்பிட்டோம். அந்த கோவில் ஐயர் எனக்கு மட்டும் கைல குங்குமம் கொடுக்காம அம்மாக்கிட்டே சேர்த்து கொடுத்துட்டாரு. அவர் எப்பவுமே அப்படித்தான். எந்த குழந்தைக்கும் அவர் கொடுக்க மாட்டாரு. கேட்டா நாங்க எல்லாம் கீழ போட்டுடுவோமாம். எல்லாரும் தூண்ல மட்டும் போடறாங்க.அது மட்டும் தப்பில்லை.

அப்பறம் ஹோட்டலுக்கு போய் எல்லாரும் சாப்பிட்டு வீட்டுக்கு வந்து சேரும் போது மணி 11:00. நல்ல வேளை எனக்கு இன்னும் ஸ்கூல் ஆரம்பிக்கல. அக்காங்கதான் நாளைக்கு சீக்கிரம் எழுந்திரிச்சி அழுதுட்டே கிளம்புவாங்க. அம்மா தான் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் கிளப்பிவிடுவாங்க.

மணி 11:30. எல்லோரும் படுக்க போனோம். அக்காங்க ரெண்டு பேரும் அப்பா, அம்மாவுக்கு நடுவுல படுத்துக்கிட்டாங்க. பெரிய அக்கா அப்பா பக்கத்துல படுத்துக்கிட்டா. சின்ன அக்காக்கு அம்மா மேல காலை போட்டுட்டு தூங்கினா தான் தூக்கம் வரும்னு சொல்லுவா. நான் இப்ப எங்க படுக்கறது. நான் கேட்டாலும் அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. நான் அவுங்களுக்கு இந்த பக்கம் படுத்துக்கறேன்.

எல்லாரும் தூங்கிட்டாங்க. வீடே அமைதியா இருட்டா இருக்கு. எனக்கு பயமா இருக்கு. இந்த மாதிரி இருட்டான இடத்துல நான் இருக்கும் போது தான் எனக்கு அந்த வலி வந்துச்சு. அத நினைச்சா இப்பவும் பயமா இருக்கு. என் கை, கால், தலை எல்லாம் பிச்சாங்க...அப்பறம் தான் நான் வெளியவே வந்தேன்....

அம்மா... இப்பவாவது என் குரல் உனக்கு கேக்குதாம்மா. மூணாவது பெண் குழந்தையா உருவானது என் தப்பாமா? சொத்த பார்த்துக்க பையன் தான் வேணுமா? நாங்க உங்களை பார்த்துக்க மாட்டோமா? ஏன் இப்படி பண்ணீங்க... இந்த மூணு வருஷமா நான் தினமும் உங்கக்கிட்ட பேசறனே உங்களுக்கு கேக்கவே இல்லையா? என் அழுகைக் கூட உங்களுக்கு கேக்கலையா? நான் உங்களை எல்லாம் பாசமா பார்த்துக்குவேணே!!! ஏன் இப்படி பண்ணீங்க? ஏன்???

Sunday, January 14, 2007

Desamuduru - From the Director of Pokiri

தேசமுதுரு - மாபெரும் வெற்றிப்படம் போக்கிரியை இயக்கிய பூரி ஜகந்நாத்தின் மற்றோரு படம்.அல்லு அர்ஜுனின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய படம். படத்திற்காக கடினமாக உழைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். அவரை அத்தனை விதத்திலும் சரியாக உபயோகப்படுத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் துவக்க காட்சியிலேயே அவரின் உழைப்பு தெரியும் விதத்தில் அமைத்திருப்பது இயக்குனரின் சிறப்பு.

கதை என்று பார்த்தால் பெரிதும் கவரும் விதத்தில் எதுவுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகன். தூள் பேட் ஏரியாவில் நடக்கும் தவறுகளை யாருக்கும் தெரியாமல் படம் பிடிக்க செல்கிறார். அங்கே நடக்கவிருக்கும் ஒரு கொலையை தடுக்க வில்லன்களுடன் சண்டை. அங்கே வில்லனின் மகனை அவர் அடிக்க அவர் கோமாவிற்கு செல்கிறார் (போக்கிரியில் மகேஷ் பாபுவிடம் முதல் சண்டையில் அடி வாங்கும் அதே நபர்)

வில்லன்களிடமிருந்து அவரை காப்பாற்ற அவரை குலுமானியில் நடக்கவிருக்கும் ஒரு படப்பிடிப்பு குழுவுடன் அனுப்புகிறார்கள். அங்கே ஒரு சந்நியாசிகளின் கூட்டத்தை சந்திக்கிறார். அங்கே கதாநாயகி சந்நியாசியாக இருக்கிறார். பார்த்தவுடனே நாயகியின் மேல் காதல் வயப்படுகிறார் அல்லு அர்ஜுன். பிறகு அவர்களுக்குள் எப்படி காதல் மலர்கிறது,சந்நியாசினி எப்படி சம்சாரியாகிறார், கதாநாயகியின் பின்புலம் என்ன மற்றும் வில்லன்களை நாயகன் எப்படி சமாளிக்கிறார் என்பதே கதை.


சராசரியான இந்த கதையில் மிளிர்கிறார் அல்லு அர்ஜுன். அவருடைய எதார்த்தமான நடிப்பும் வசனமும் எப்போழுதும் போல் அருமை. சந்நியாசினியாக இருக்கும் நாயகியிடம் அவர் பேசுமிடங்களும் நன்றாக அமைந்திருக்கிறது.கதாநாயகி ஹன்சிகா - மெழுகு பொம்மை போல் இருக்கிறார். இதுவே சந்நியாசினி வேடத்திற்கு பொருந்துகிறது. ஒரு ஜாடையில் பூமிகாவை நினைவுப்படுத்துகிறார். பின்பாதியிலும், பாடல் காட்சிகளிலும் அவருடைய பணியை(?) செவ்வனே செய்துள்ளார்.

வில்லன் (கஜினி, தொட்டி ஜெயாவில் வருபவர்) தமிழ் நாட்டுக்காராக காண்பித்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் பேசம் தமிழ் கொடுரம். வேண்டுமென்றால் அதை தமிலுகு (தமிழ் + தெலுகு) என்று சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ளலாம். அவருடைய சத்தத்தையே தாங்க முடியாதென்றால் அதற்கு போட்டியாக சகுந்தலா (சொர்ணா அக்கா) வேறு சத்தம் போடுகிறார்.ஆனால் தெலுகு படத்திற்கு இது சாதாரணம்.பாடல்கள் போக்கிரி அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நன்றாகவே அமைந்திருக்கிறது. சண்டை காட்சிகள் போக்கிரியை விட அருமையாக அமைந்திருக்கிறது. அல்லு அர்ஜுனினை பிழிந்து எடுத்திருக்கிறார்கள். அவரும் சந்தோஷமாக உழைத்திருக்கிறார். நடனத்திலும் படம் கிளப்புகிறார்.

கண்டிப்பாக இது மற்றொரு போக்கிரி கிடையாது. ஆனால் ஆக்ஷன் பிரியர்கள் சந்தோஷமாக பார்க்கலாம். தமிழில் ஆர்யாவை வைத்து ரீ-மேக் செய்யலாம்.

Thursday, January 11, 2007

தாயாக நீயும் தலை கோத வந்தால்...

டேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு,

"ஆச்சர்யம் தான்!
நட்பு கடலில்
முத்து குளித்து
வைரத்தை அல்லவா
எடுத்திருக்கிறேன்!!"

பெருமை பொங்க கேட்டாள் சுஜா...

"லூசா நீ? கடல்ல போய் வைரம் கிடைக்குமா? சும்மா எதையாவது அடிச்சு விட்டு கவிதைனு சொன்னா நாங்க நம்பிடுவோமா?" பாலா சொல்லி கொண்டிருக்கும் போதே சுஜாவின் முகம் துவண்டு போனது.

"உங்கிட்ட போயி இதை காட்னேன் பாரு. என் புத்திய செருப்பாலத்தான் அடிச்சுக்கனும்" அவள் சொல்லி முடிக்கவும் பாலா அவள் காலை பார்த்தான்.

"கட் ஷு போட்டிருக்கங்கற தைரியத்துல சொல்லிட்ட. சரி வீட்டுக்கு போன உடனே உனக்கு போன் பண்ணி ஞாபகப்படுத்தறேன்"

"சரிங்க சார். முதல்ல நீங்க இங்க இருந்து கிளம்புங்க. இது எங்க ப்ராஜக்ட் ஏரியா. நீங்க இங்க வரதே தப்பு" கொஞ்சம் சூடாக சொன்னாள்.

"ஐயோ உன்னைய பார்க்க யார் வந்தா? நான் இங்க என் பிரெண்ட் அனிதாவை பார்க்க வந்தேன். என்ன அனிதா நான் உன்னை பார்க்க வரக்கூடாதா?"

"நீ தாராளமா வரலாம் கிருஷ்ணா. உன்னை யார் வர வேணாம்னு சொல்றது?" பாலாவிற்கு சப்போர்டாக பேசினாள் அனிதா.

"அது" சுஜாவை வென்ற சந்தோஷத்தில் சொன்னான் பாலா.

பாலா (எ) பாலகிருஷ்ணா, அனிதா, சுஜா மூவரும் ஒரே கல்லூரியில் படித்து கேம்பஸ் இண்டர்வியுவில் அந்த மென்பொருள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தனர். பாலாவும் சுஜாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது கல்லூரியிலிருக்கும் போதே அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே போல அவர்களுக்குள் தினமும் நடக்கும் சண்டையும் பிரபலமானதே.

சுஜாவிற்கு எப்போழுதுமே பாலா அவள் மேல் எந்த அளவிற்கு நட்பாயிருக்கிறான் என்பதே கேள்வியாக இருக்கும். நண்பர்களுக்கு மத்தியிலிருக்கும் பொஸ்ஸசிவ்னஸ் அவளுக்கு எப்போழுதுமே அதிகமாக இருந்தது. ஆனால் பாலாவிற்கு அது இல்லாததால் அவன் அவளளவுக்கு நட்பாயில்லையோ என்ற சந்தேகம் எப்போழுதுமிருந்து கொண்டிருந்தது. இதை அவனிடமும் அடிக்கடி கேட்டு கொண்டிருப்பாள்.அதற்கு பெரும்பாலும் அவன் பதில் நக்கல் தோனியிலே இருக்கும்.

சரியாக 10 மணிக்கு சுஜாவின் செல்போன் சிணுங்கியது. Bala calling...

"சொல்லு... என்ன விஷயம்"

"வீட்டுக்கு போனவுடனே ஞாபகப்படுத்துறேனு சொன்னேனே... அதுக்கு தான் கூப்பிட்டேன்"

"என்னது?"

"இல்லை உன் புத்திய எதாலயோ அடிச்சிக்கனும்னு சொன்னியே அதை சொன்னேன்"

"இப்ப இதுக்கு தான் கூப்பிட்டியா?"

"இல்லை. தூக்கம் வரலை அதுக்கு தான் நீ என்ன பண்றனு கேக்கலாம்னு கூப்பிட்டேன்"

இருவரும் வழக்கம் போல் பல மணி நேரம் பேசிக்கொண்டு தூங்க சென்றனர்...
அடுத்த நாள் காலை...

பாலாவின் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

"பாலா ஹியர்"

"ஏய் நான் தான்"

"நான் தான்னா? எனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்க. அதுல நீங்க யாரு?"

"ஹிம்.. கெய்தான் ஃபேன். அடிச்சேன்னு வெச்சிக்கோ அவ்வளவுதான். ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்னு போன் பண்ணேன்"

"என்ன சீக்கிரம் சொல்லு... இந்த பக்கம் அந்த கல்கத்தா ஃபிகர் என்னையே லுக் விட்டுட்டு இருக்குது"

"நீ தேறவே மாட்ட. அப்பறம் நான் எழுதின கவிதையெல்லாம் எனக்கே ஃபார்வேர்டா வந்திருக்கு. இந்த கவிதை ஞாபகமிருக்கா?

பார்த்து கொண்ட நட்பு
பார்க்காத நட்பு
கைகோர்த்து திரிந்த நட்பு
துயரங்களில் தோள் தந்த நட்பு
வெற்றிகளை கொண்டாடும் நட்பு
இமை போல் காத்த நட்பு
இப்படியாய் பலவித நட்புகளை
பாடிய தமிழ் காவியங்கள்
வெட்கி ஓடி ஒளிந்து கொண்டனவாம்!!!
ஒரு தாயை போன்ற
உனது தூய்மையான அன்பில்
மழலையாய் தவழும்
எனது நட்பை பற்றி
இதுவரை பாடாததால்!!!!!!

இது போன வாரம் வந்துச்சு. இப்பக்கூட ஒண்ணு வந்திருக்கு"

"இதுக்கு தான் இப்ப அவசரமா போன் பண்ணியா? நீயே எழுதி உனக்கு அனுப்பிட்டு இப்ப ஃபார்வேர்ட்ல வந்துச்சினு கதை விடறயா? வேணும்னா நீ யாருக்காவது அனுப்பிருப்ப.. அவன் படிச்சிட்டு இதெல்லாம் கவிதையானு சொல்லி உனக்கு ரிவர்ஸ்ல அனுப்பியிருப்பான். இதுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா?"

எதுவும் பேசாமல் அவள் ரிஸிவரை வைத்ததில் அவளுடைய கோபம் அவனுக்கு புரிந்தது.

ஐந்து நிமிடத்தில் சுஜாவின் கணினியில் புதிய மின்னணு கடிதம் எட்டி பார்த்தது. அதை அவள் சொடுக்கவும் அது பாலாவிடமிருந்து என்று புரிந்தது.

அன்புள்ள தோழிக்கு,
நீ எனக்காக எழுதிய கவிதைகளை எனக்கு காட்டாமலே வைத்திருந்ததை அன்று எதேச்சயாய் பார்த்தேன். அதில் இந்த கவிதை என்னை மிகவும் பாதித்தது

என் பாசத்தை
நீ புரியாமலிருக்கலாம்
என் அன்பை
நீ அவமதிக்கலாம்
என் கவிதைகளை
நீ நிராகரிக்கலாம்
என்றாலும்
எனது அகராதியில்
நட்பென்ற வார்த்தைக்கு
அர்த்தமாய் இருப்பது
நீதான்.............
நீ மட்டும்தான்...........

எனக்கு உன்னை போல் கவிதைகளை எழுதவோ ரசிக்கவோ தெரியாது... நான் முயற்சிக்கவும் இல்லை...

என் தோழி எனக்காக எழுதிய கவிதைகள் இது என்று பெருமையாக என் நண்பர்களுக்கு (நமக்கு பொதுவான நண்பர்கள் அல்ல) அனுப்பினேன். அதை அவர்கள் வழக்கம் போல் ஃபார்வேர்ட் செய்து அது உனக்கே வந்து சேர்ந்துவிட்டது. நீ எழுதிய கவிதைகளை எத்தனை பேர் ரசித்திருக்கிறார்கள் பார். நான் உனக்கு கொடுக்க தவறிய உற்சாகத்தை இதன் மூலம் நீ பெறுவாய் என்றே நம்புகிறேன்.

எனக்கு கவிதை தெரியாதென்றாலும் இந்த வரிகளை முதல்முறையிலிருந்து இன்று வரை கேட்கும் போது உன் முகம் மட்டுமே நினைவுக்கு வருகிறது.சுஜா பல நாட்களுக்காக வருந்தியதற்காக இன்று வருந்தினாள்... சந்தோஷத்துடன்.

Thursday, January 04, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய் பகுதி 2

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை.

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா?

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க?

வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!!

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம்.

வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்?

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!!

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா.

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்?

வி: !@#$%

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க?

(விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: சொல்லு மேன்!

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா.

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க.

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா.

வி: ஏன்ணா அவன் மட்டும் கோட்டு போட்டா அடையாளம் தெரியாதுனு நடிக்கல?

க: அவன் எவன்டா?

வி: பேரெல்லாம் நான் சொல்ல மாட்டேன். அந்த படத்த பேரோட க்ளூ தரேன். 'ஜ'ல ஆரம்பிச்சி 'னா'ல முடியும்.

க: ஏன்டா உங்க அக்கப்போர்ல எங்கள கொடுமைப்படுத்தறீங்க? உங்களுக்குனு இருக்கானுங்க பாரு ரசிகர்னு சொல்லிட்டு அவனுங்கள சொல்லனும்.
அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?

வி: சரிங்கண்ணா.

க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா?

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க.
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். ஆதி ஃப்ளாப் ஆயிடுச்சினு போக்கிரிய மிஸ் பண்ணிடாதீங்க...

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...

(கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்)

Tuesday, January 02, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்

முன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே!!!

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் புத்தாண்டு சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா...

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி?

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க.

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா?

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?

வி: என்னங்கணா?

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)

க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே...

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான்.

வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது?

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்)

இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே?
ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது?

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?

வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா.

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...

(தொடரும்...)

(இன்னும் பல படங்கள் இருப்பதால் ஒரே பகுதியில் முடிக்க இயலவில்லை... அடுத்து பல சூப்பர் ஹிட் படங்கள் காத்திருக்கின்றன)