தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, December 31, 2014

UPSC அறிமுகம் - Prelims

சிவில் சர்விஸ் தேர்வுகள் மூன்று நிலையாக நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிலையிலும் உங்களுடைய திறமைகள் பரிசோதிக்கப்படுகின்றன.

முதல் நிலை (Prelims):

இதில் இரண்டு பரிட்சைகள் நடத்தப்படும் (ஒரே நாளில்). Paper I (General Studies) and Paper II (CSAT - Aptitude Test).

General Studies 1 : 

100 கேள்விகள் - 200 மதிப்பெண்கள்
தவறான பதில்களுக்கு 0.66 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (மூன்று கேள்விகளுக்குத் தவறாக பதில் அளித்தால் ஒரு சரியான பதிலின் மதிப்பு போய் விடும். 3 * 0.666 = 2 Marks).

Paper I - (200 marks) Duration : Two hours

􀀠 Current events of national and international importance.
􀀠 History of India and Indian National Movement.
􀀠 Indian and World Geography - Physical, Social, Economic Geography of India and the World.
􀀠 Indian Polity and Governance - Constitution, Political System, Panchayati Raj, Public Policy, Rights Issues, etc.
􀀠 Economic and Social Development - Sustainable Development, Poverty, Inclusion, Demographics, Social Sector initiatives, etc.
􀀠 General issues on Environmental Ecology, Bio-diversity and Climate Change - that do not require subject specialisation
􀀠 General Science.

Model Question Paper (2014 Prelims) : www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20studies-I.pdf

Paper II (CSAT)

􀀠 Comprehension
􀀠 Interpersonal skills including communication skills;
􀀠 Logical reasoning and analytical ability
􀀠 Decision-making and problemsolving
􀀠 General mental ability
􀀠 Basic numeracy (numbers and their relations, orders of magnitude, etc.) (Class X level), Data interpretation (charts, graphs, tables, data sufficiency etc. - Class X level)

Model Question Paper (2014 Prelims) : www.upsc.gov.in/questionpaper/2014/csp/General%20Studies-II.pdf

இந்த இரு கேள்வித் தாள்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் இருக்கும். அடுத்த ஆண்டிலிருந்து தமிழ் போன்ற பிற பிராந்திய மொழிகளிலும் வரலாம். அவ்வாறு வந்தால் நிச்சயம் நமக்கு நன்மையே. குறிப்பாக இரண்டாம் தாள் Comprehensionல் நம்மால் வேகமாக படிக்க முடியும். ஆனால் அதிலும் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் சொதப்ப வாய்ப்பிருக்கிறது.

நாங்கள் இதற்கு படித்த புத்தகங்களின் பட்டியலையும், படித்த முறைகளையும் பின்னால் விவரிக்கிறேன். மாதிரி கேள்வித் தாள்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.

Tuesday, December 30, 2014

UPSC தேர்வுகள் அறிமுகம் - 1

இந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித்தும் எழுதப் போவதில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது நிச்சயம் உங்களைப் பல விதங்களில் சோதனைக்கு உட்படுத்தும். மூன்று நிலைத் தேர்வுகள் உங்களுக்குப் பல விதங்களில் சவாலாக இருக்கும். ஆனால் எந்தப்
போட்டித் தேர்வுக்கும் தேவையான Discipline, Commitment, Focus, Open Mindedness and a real Motive இருந்தால் வெற்றி பெறலாம் என்பது நான் கண்ட வரை உண்மை.

UPSC சிவில் சர்விஸ் தேர்வுகளிலின் மூலம் இருவகையான பணிகளுக்கு தேர்வு செய்கிறார்கள்
1. All India Services
2. Central Services

சென்ற வருட அப்ளிகேஷனில் இருந்து,

(i) Indian Administrative Service.
(ii) Indian Foreign Service.
(iii) Indian Police Service.
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager,Administration).
(x) Indian Postal Service, Group ‘A’.
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.
(xviii) Indian Trade Service, Group 'A' (Gr. III).
(xix) Indian Corporate Law Service, Group "A".
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'.
(xxiii) Pondicherry Civil Service, Group 'B'.

இவற்றில் IAS மற்றும் IPS - All India Services மற்றவை Central Services

இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு பரிட்சை தான் (which includes Prelims, Mains and Interview), தனித்தனிப் பரிட்சைகள் இல்லை. Indian Forest Servicesக்கான
Prelims மட்டும் இவற்றுடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. அதற்கான Mains and Interview தனி.

எனக்கு IPS ஆவது தான் விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், நீங்கள் Prelimsல் தேர்வானவுடன், மீண்டும் உங்களிடம் பல விவரங்களை UPSC கேட்கும். அதில் உங்களுக்காக Service Preference, Cadre Preference (State Preference - Only for IAS and IPS)ல் குறிப்பிட வேண்டும். அதில் நீங்கள் IPS க்கு முதல் Preference கொடுக்கலாம்.

உங்களுடைய Rank and Preferenceக்கு ஏற்றாற் போல உங்களுக்கு சர்வீஸ் கொடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக,
நீங்கள் IRS IT க்கு முதல் Preference கொடுத்திருந்தால், நீங்கள் All India Rank 1 வந்திருந்தாலும், உங்களுக்கு IRS IT தான் கொடுக்கப்படும். அதுவே All India Rank 250 (OBC) வாங்கியவருக்கு IAS  கிடைக்கலாம். அது அவருடைய Preference மற்றும் Rank கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த தேர்வுகள் எப்பொழுது நடத்தப்படும்?

இன்றைய நிலவரப்படி, முதல் நிலைத் தேர்வு (Prelims) - ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் நிலை (Mains) - டிசம்பர் மாதமும், மூன்றாம் நிலை (Interview) - ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாம் வரும் தெரிவிக்கப்படும். இதில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.


Prelims, Mains, Interview ஆகிய மூன்று நிலைத் தேர்வுகள் குறித்து நாளைப் பார்க்கலாம்....

Monday, December 29, 2014

துவக்கம்

வலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன்.

இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன்.

UPSC தேர்வுகள் குறித்த அறிமுகம், மூன்று நிலைகளுக்கும் தயார் செய்யும் முறைகள் (என்னுடைய அனுபவங்களையும், என்னுடைய நண்பர்களுடைய
அனுபங்களையும் முன் வைத்து), எங்கே படிப்பது, எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது, ஆப்ஷன்ஸ் என்ன எடுப்பது போன்ற கேள்விகளுக்கும் முடிந்த வரை
எங்களுடைய அனுபவங்களை முன் வைத்து பதிவு எழுத போகிறேன்.

இதை எழுத என்னுடைய தகுதி என்னனு கேட்டா, இரண்டு மெயின்ஸ் (2014யையும் சேர்த்து), ஒரு இண்டர்வியூ (இந்த ஆண்டும் இண்டர்வியூ போய் சர்வீஸ் வாங்கிவிடுவேன் என நம்புகிறேன்). நான் சர்வீஸ் வாங்கிய பிறகு எழுதலாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கான நேரம் அப்பொழுது கிடைக்குமா என்று சந்தேகமாக இருப்பதால், மெயின்ஸ் மற்றும் இண்டர்வியூவிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதுவது உசிதமானது என ஆரம்பிக்கிறேன்.

அவ்வப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து சர்வீஸ் வாங்கிய நண்பர்களின் அனுபங்களையும் அவர்களிடமிருந்து வாங்கி பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய எழுத்து நடையைப் பேச்சு மொழியில் தொடரவே நினைக்கிறேன். அதுதான் அருகிலிருந்து பேசும் பாவனையைக் கொடுக்கும் என்பதும், வேகமாக சொல்ல வந்த கருத்தைக் கொண்டு சேர்க்கும் என்பதும் என் எண்ணம். மேலும், இத்தொடரை இங்கே பதியலாம் என்றும் எண்ணம். https://upsctamil.wordpress.com/