தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, November 30, 2006

நன்றி! நன்றி!! நன்றி!!!

நண்பர்களே!!! இது நமக்கு இந்த வலைப்பூவில் 100வது பதிவு. அது என்னுமோ தெரியல, 100 எப்பவுமே ஒரு க்ரேஸ் தான். பப்ளிக் எக்சாம் எதுலயும் நான் 100 எடுத்ததில்லைனு எங்க வீட்ல ரொம்ப வருத்தப்பட்டிருக்காங்க. எனக்கும் அப்ப கொஞ்சம் இருந்துச்சு. அதுவே இந்த நம்பர் மேல ஒரு க்ரேஸ உருவாக்கிடுச்சுனு நினைக்கிறேன். ஆரம்பிச்சி 5 மாசத்துல (தமிழ்மணத்தில் இணைந்தது ஜீன் 29) 100 பதிவு அதிகம் தான்... இனிமே குறைச்சிக்கிறேன் :-)

சரி இந்த பதிவ கொஞ்சம் வித்யாசமா செய்யலாம்னு யோசிக்கும் போது, யாராவது கொஞ்சம் பெரிய ஆளுங்களை கூப்பிட்டு நம்ம ப்ளாக் பத்தி எழுத சொல்லலாம்னு பார்த்தா, அது எதுக்கு நம்ம ஆசையா எழுதனும்னு ஆரம்பிச்ச ப்ளாக்ல வேற ஒருத்தர எழுத வைக்கனும்னு தொனுச்சு.

சரி அதுவே கொஞ்சம் ஆழமா யோசிச்சவுடனே ஏன் வெட்டியோட இந்த ப்ளாக்ல இந்த பதிவ பாலாஜிக்கு கொடுக்க கூடாதுனு தோனுச்சு. வெட்டி கேள்விகள் கேட்டு அதுக்கு பாலாஜி பதில் சொன்னா எப்படி இருக்கும்?

வேண்டாம் என்ன இருந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளதால் அது ஒரு தலை பட்சமாகவே இருக்கும். அதனால் பாலாஜியின் நெருங்கிய நண்பர் (அவனுடைய alter ego என்று நண்பர்கள் மத்தியில் கருதப்படும்) தீபனை கேள்விகள் கேட்க சொல்லலாம் என்று தோன்றியது. கேள்வி கேக்கறது ஈஸி பதில் சொல்றது கஷ்டம்னு பாலாஜிய ஃபீல் பண்ண வெச்சிட்டார் அவர்.

தீபன் இதுவரையில் என் ப்ளாக் தவிர வேறு எதுவும் அதிகம் படித்ததில்லை. என்னுடையதிலும் அனைத்தையும் படித்ததில்லை என்றே நினைக்கிறேன். இதுவரை ஒரு கமெண்ட் கூட போட்டதில்லை. தமிழ்மணம், தேன்கூடு எதுவும் தெரியாது. சரி... கேள்வி-பதில் ஆரம்பிக்கிறது. பாலாஜியுடன் நானும் (வெட்டி) பதில் சொல்ல போகிறேன்... ஸ்டார்ட் த மீசிக்

தீ: ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உனக்கு எதற்கு தோன்றியது?

பா: இந்தியாவிலிருக்கும் போது எனக்கு தமிழில் வலைப்பூக்கள் இருப்பதே தெரியாது. அங்கே பார்த்திருந்தால் நிச்சயமாக துவக்கியிருக்க மாட்டேன். யூ.எஸ் வந்த பிறகு ஏற்பட்ட ஒரு வித தனிமையே எனக்கு வலைப்பூ ஆரம்பிக்க முக்கிய காரணம். வந்த புதிதில் சனி ஞாயிறு நைட் முழுக்க விழித்திருந்து இந்தியாவிலிருக்கும் நண்பர்களுடன் பேசினேன்றாலும் இதுவரை யாருக்கும் தொந்தரவாக இல்லாமல் இப்போது அப்படி மாறியிருப்பதாக தோன்றவே, புது நண்பர்களையும், புது உலகையும் சேர ப்ளாக் ஆரம்பித்தேன்.

வெ: எல்லாரும் எழுதும் போது நாமலும் எழுதிதான் பாக்கலாமே...எப்படி எழுதனாலும் 4 பேர் திட்ட போறாங்க 2 பேர் நல்லா இருக்குனு சொல்ல போறாங்க. அந்த தைரியம் தான் :-)

தீ: நீ எழுதறது எல்லாமே உண்மையா? இல்லை கற்பனையா?

பா: நகைச்சுவை பதிவுகள் முக்கால்வாசி கற்பனைதான்... கதை முழுக்க முழுக்க கற்பனை.நிகழ்வுகள் பெரும்பாலும் உண்மையே

வெ: எல்லாமே படிச்சா சிரிப்புதான் வருது... இதுல கேட்டகிரி வேற பிரிக்கிறான். எல்லாம் தமிழ்மணம் படிக்கிற எஃபக்ட்.

தீ: ஏன் அதிகமா லவ் ஸ்டோரி எழுதற? எதாவது அனுபவம் இருக்கா?

பா: இந்த கேள்விக்கு விடை உனக்கே தெரியுமென்பதால் விட்டுவிடுகிறேன்.

வெ: மக்களே அந்த கண்றாவியெல்லாம் இருந்தா ஏன் இராத்திரி, பகலா வெட்டியா ப்ளாக் எழுதறேன்?

தீ: இந்த ப்ளாக் மூலமா ஏதாவது நல்ல செய்தி மக்களுக்கு சொல்ற எண்ணமிருக்கா?

பா: கண்டிப்பா! முதலில் என்னை சரி செய்து கொள்கிறேன். கொஞ்சம் பக்குவம் வந்தவுடன் கண்டிப்பாக ஏதாவது நல்ல விஷயங்களை செய்வேன்.

வெ: என்னது நல்ல செய்தியா? பாலைய்யா படத்தையும், கேப்டன் படத்தையும் தனியா பார்க்க வேணாம்னு சொல்லியுருக்கேனே. இதுவே நல்ல விஷயமில்லையா? அதுவுமில்லாம நம்ம சொல்லி எவன் கேப்பான்?

தீ: அடுத்து சுவாரசியமா எழுத ஏதாவது திட்டமிருக்கா?

பா: இஞ்சினயரிங் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொடர் எழுதலாம்னு இருக்கேன். அது போல கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் சாப்ட்வேர் துறைக்குள் நுழைய சில டிப்ஸ்கள் அடங்கிய தொடரை எழுதலாம்னு இருக்கேன். மற்றும் எனது அமெரிக்க பயணம் குறித்து ஒரு தொடர் எழுதலான் என்று எண்ணம்.

வெ: இன்னும் லொள்ளு நிறைய எழுதனும். தர்மபுரி பார்த்து ரிவியு எழுதனும். அப்பறம் கோழி தொடர் கொஞ்சம் பாக்கி இருக்கு

தீ: அடிக்கடி தெலுகு படம் பத்தி எழுதறியே காரணமென்ன? கொல்ட்டி கதைக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?

பா: பல தடவை சொல்லியாச்சு... பழைய ரூமெட் தெலுகு அதனால் வந்த ஆர்வம். தமிழ் படமும் நிறைய பார்க்கிறேன். ஆனால் முன்ன மாதிரி முதல் நாள் பார்க்க வாய்ப்பில்லாததால் போடுவதில்லை. கொல்ட்டி கதைக்கு வரலாறு எதுவுமில்லை.

வெ: பாலைய்யா, ஜீனியர் என்.டி.ஆர், ரவி தேஜாவோட ட்ரெஸ்ஸிங் சென்சும் டென்சும்தான் முக்கிய காரணம்.

தீ: வெட்டிப்பயல்னு பேர் வெச்சதன் காரணம் என்ன?

பா:எடுத்தவுடனே மக்களை கவரும் என்பதுதான். டுபுக்கு பேற பார்த்து நான் எப்படி உடனே அந்த ப்ளாகிற்கு போனேனோ அந்த மாதிரி யாராவது வர மாட்டாங்களானு ஒரு நப்பாசைதான்.

வெ: ஏன் என் பேருக்கு என்ன குறைச்சல்? பதிவுக்கு தகுந்த மாதிரி பேர் இருக்க வேணாமா?

தீ: எல்லா கதையும் சாப்ட்வேர் கம்பனியே மையமா வெச்சி எழுதறயே? ஏன்? நீ அதுல இருக்கனா?

பா: ஆமாம். அதுதான் ஒரு முக்கிய காரணம். எனக்கு அதுல டயலாக் மட்டும் யோசிச்சா போதும். கதைக்கான களம் அமைப்பது எனக்கு ஈஸியா இருக்கு. இப்ப நிறைய பேர் எழுதறதால நான் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நிலையிலிருக்கிறேன்.

வெ: பின்ன க்ரைம் எழுதனா கூலா வந்து வெட்டி காமெடில உன்னய அடிச்சக்க முடியாதுனு கூசாம சொல்லிட்டு போறாங்க... நான் என்ன பண்ண?

தீ: எதுக்கு ப்ரொபைலில் பாப்பாய் போட்டோ?

பா: செல்வனுடைய ப்ரோபைல் போட்டோவினால் வந்த தாக்கம்.பாப்பாய் எனக்கு பிடித்த கார்ட்டூன் கேரக்டர்.

வெ: பேருக்கு ஏத்த மாதிரி இருக்குனு ஒரு ஃபீலிங் ;)

தீ: உன் போஸ்ட்ல முக்கால்வாசி காமெடியா இருக்கு. உன் கேரக்டர் உண்மையில் காமெடியா இல்லை சீரியஸா?

பா: எனக்கு தெரிஞ்சி நான் கொஞ்சம் சீரியஸ் டைப் தான்... ஆனா அப்பப்ப காமெடியும் வரும்...

வெ: சீரியஸா??? அட்ரஸ் மாத்தி வந்துட்டயா?

தீ: இந்த ப்ளாக் மூலமா நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளனர் என்று நினைக்கிறேன். இந்த அனுபவம் எப்படியுள்ளது?

பா: ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எப்படி இருப்பனுகூட தெரியாம, என் குணம் தெரியாம, என் எழுத்துக்காகவே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னைக்கு நான் இவ்வளவு சந்தோஷமா இருக்கேனா அதுக்கு இவுங்க தான் ஒரு முக்கிய காரணம். உன்னையும் அதிகம் தொந்தரவு செய்யாததற்கு அதுவே காரணம்!!!

வெ: ரொம்ப ஃபீலிங்க இருக்குப்பா... ஃபிரெண்ட்ஸ்... உங்க யார் பேரையும் நான் தனியா சொல்ல விரும்பல... நீங்க இல்லைனா நான் சத்தியமா 100 பதிவு வந்திருக்கவே மாட்டேன்...

தீ: உன் போஸ்ட்லயே உனக்கு மிகவும் பிடித்தது?

பா: சாப்ட்வேர் இஞ்சினயராகலாம் வாங்க, லிப்ட் ப்ளீஸ், கொல்ட்டி

வெ: கவுண்டரும் கடையேழு வள்ளல்களும்!

சரி இதோட கேள்வி பதில நிறுத்திக்கலாம்... அப்பறம் மிச்சத்த இன்னொரு பதிவுல பார்க்கலாம்...

நான் பெரிய எழுத்தாளன் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதுகிறேன். என் எழுத்து மூலமாக உங்களை ஏதாவது வகையில் வருத்தப்பட வைத்திருந்தால் மன்னிக்கவும்...

என்னுடைய ஒவ்வொரு பதிவும் உங்களின் ஊக்கத்தினால்தான் வருகிறது... உங்கள் அனைவருக்கும் என் நன்றி! நன்றி!! நன்றி!!!

Monday, November 27, 2006

ஏன் இந்த கொலை வெறி???

மக்கள்ஸ் கதை எழுதி போர் அடிச்சிடுச்சு... சரினு என்னோட முதல் தெலுகு பட அனுபவத்தை உங்களோட பகிர்ந்துக்கலாமனுதான் இந்த பதிவு... (எல்லா பதிவுக்கும் ஒரு விளக்கம் குடுக்க வேண்டியதா இருக்கே)

பெங்களூர்ல எலக்ட்ரானிக் சிட்டில தங்கி இருந்த சமயம். பக்கத்து ரூம்ல ஒரு பத்து ஆந்திர மக்கள்ஸ் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க. ரொம்ப நல்ல பசங்க. நம்மகிட்டயும் ரொம்ப பாசமாவும் மரியாதையாவும் பேசுவாங்க.

ஒரு முக்கிய காரணம் நான் தினமும் எல்லாருக்கும் ஏதாவது சொல்லி கொடுத்துட்டு இருப்பேன். சொல்லி கொடுக்கறதுக்கு உனக்கு என்ன தெரியும்னு இங்க கேள்வி கேக்கப்படாது. அதே மாதிரி அவுங்களுக்கு தமிழ் படத்துல ஏதாவது டவுட்னாலும் நம்ம கிட்டதான் கேட்பாங்க. பாதி டிஸ்கஷன் ரீ-மேக் பத்திதான் இருக்கும்.

ஒரு நாள் ஞாயிற்று கிழமை மதியம், பாலாஜி இன்னைக்கு சிக்கன் செய்யறோம் நீயும் எங்க கூட வந்து சாப்பிடனும்னு ரொம்ப பாசமா கூப்பிட்டாங்க. சரி ஆந்திரா சாப்பாடும் காரமா நல்லாதான் இருக்கும்னு போனேன்.

அங்க போனவுடனே அவனுங்க என்னை கூப்பிட்டதுக்கான இன்னொரு காரணத்தை சொன்னாங்க. அவுங்க தலைவர் பாலக்கிருஷ்ணா நடிச்ச படத்தை நான் பார்க்கணும்தான் என்னைய கூப்பிட்டானுங்களாம். அந்த படம் ஆந்திரால பயங்கர ஹிட்டாம். படத்து பேரு "சமரசிம்மா ரெட்டி".

சரி சிக்கனுக்காக அந்த கொடுமைய தாங்கிக்கலாம்னு நானும் உக்கார்ந்திட்டேன். படத்துல பார்த்தா நம்ம சிம்ரனும் அஞ்சலா ஜவேரியும் இருந்தாங்க. சரினு ரொம்ப சந்தோஷமா அட நம்ம பசங்கனு கூட்டத்துக்கு நடுவுல போய் உக்கார்ந்துட்டேன். அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.

வழக்கம் போல ஒரு மணி நேரம் வரைக்கும் ஒரு பெரிய மேட்டரும் இல்லாம சாதரணமா போயிட்டு இருந்தது. திடீர்னு ஒரு ஃப்ளாஷ் பேக் . பொதுவா தெலுகு மசாலா படத்துல எல்லாம் ஒரு பயங்கரமான ஃப்ளாஷ் பேக் இருக்கும். அது எனக்கு அப்ப தெரியலை.

பாலைய்யா ஒரு பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்... ரெட்டிதான். வழக்கம் போல ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி கொன்னுக்கறானுங்க. அப்பறம் ஹை-பிட்ச்ல டயலாக் வேற அப்பப்ப...

பாலாஜி இப்ப வரப்போறதுதான் படத்துலயே சூப்பரானு சீனு. தொன தொனனு பேசாம படம் பாருனு ஒருத்தவன் சொன்னான். அவன் கண்ணில கொஞ்சம் லேசா கொலை வெறி தெரிஞ்சிது.

நானும் அப்படி என்னடா முக்கியமா சீன்னு பார்த்தா... வில்லனோட கைய பாலைய்யா தொரத்தி தொரத்தி வெட்டறார். அந்த வெட்டு பட்ட கையோட ரத்தம் ஒழுக ஒழுக அந்த வில்லன் தெரிச்சி ஓடறார். தெரு தெருவா ஓடறான். இவனுங்களா அங்க போறான் பிடி இங்க போறான் பிடினு சவுண்ட் விட்டுட்டு இருக்கானுங்க.

எனக்கா பீதி கிளம்புது. ஆஹா. இதுக்கு மேல இங்க உக்கார்ந்தா நம்மல போட்டு தள்ளிடுவானுங்களோனு பயந்து எழுந்திரிக்க முயற்சி செஞ்சேன். அப்ப பார்த்து பின்னாடி இருந்து ஒரு சவுண்ட்... டேய் எந்துக்குடா லேசாவு??? கூச்சோடானு.

ஆஹா!!! நடவுல உக்கார்ந்து இப்படி மாட்டிக்கிட்டேனே? அபிமன்யூ சக்கர வியூகத்துல மாட்ன மாதிரி சிம்ரன பார்த்து நடுவுல உக்கார்ந்து மாட்டிக்கிட்டேனே!!! ஓரமா உக்கார்ந்தாவாது அப்படியே எஸ்ஸாகிருக்கலாம். இப்ப அதுக்கும் வழியில்லாம போச்சே!!!

அதுக்கு அப்பறம் சும்மா ஒரு நூறு பேத்த மட்டும் வெட்டி கொன்னாருங்க... எங்க நடுவுல எழுந்திரிச்சா நம்மல போட்டு தள்ளுடுவானுங்களோனு ஒரு பயம். அப்படியே எதுவும் பேசாமல் அமைதியா உக்கார்ந்திருந்தேன். கடைசியா அந்த ஒத்த கைய வெட்னவற தலைய வெட்டி கொன்னுடறாரு... எல்லாரும் ஜோரா கை தட்னானுங்க...

அடப்பாவிகளா!!! இத்தன நாளா நல்லவங்கலாத்தானடா பழகனீங்க. உங்களுக்குள்ள இவ்வளவு கொல வெறியா??? நான் இத்தன நாளா கொல கார கும்பலோடவா சவகாசம் வெச்சிருந்தேன்???

சரி இதுக்கு மேலையும் எப்படி தெலுகு படம் பார்த்தனு கேக்கறீங்களா? அதுக்கு பேருதான் விதி :-)

தோழர்களே அடுத்த பதிவு ஒரு ஸ்பெஷல் பதிவு... என்னனு கெஸ் பண்ணி வைங்க பார்க்கலாம் ;-)

நெல்லிக்காய் - 5

காய் 4

கார்த்திக் புது மேனஜரை பார்க்க அவர் இடத்திற்கு சென்றான். அவர் திடீரென்று ஒரு மீட்டிங் வந்துவிட்டதால் அவனை மதியம் 3 மணிக்கு மேல் வர சொல்லி அனுப்பினார். அவனும் சரி என்று சொல்லிவிட்டு நண்பர்கள் ஜோதியில் ஐக்கியமாக கேன்டினை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

கேன்டினிலிருந்து ராஜி வந்து கொண்டிருந்தது அவனுக்கு நன்றாக தெரிந்தது. அவள் கீழே குனிந்து கொண்டே வந்தது அவனுக்கு விநோதமாக இருந்தது. அவள் அவனை கவனிக்கவே இல்லை. அவள் அருகில் வந்ததும்...

"ஏய் ராஜி! நீ மட்டும் என்ன தனியா வர?"

அவள் நிமிர்ந்து கார்த்திக்கை பார்த்தாள். அவள் அழுது முகம் சிவந்திருந்ததும் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"ஏய் ஏன் அழுவுற? என்னாச்சு? அவுங்க ரெண்டு பேரும் எங்க?"

அவள் எதுவும் பேசாமல் அவனை மௌனமாக பார்த்தாள். இருந்தும் அவள் கண்ணிலிருந்து நீர் வந்து கொண்டே இருந்தது.

"என்னாச்சு? சொல்லு... ஏன் இப்படி அழுவற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு"

"எல்லாம் உன்னால தான். நேத்து என்ன நடந்துச்சு?" அழுகையும் கோபமுமாக கேட்டாள் ராஜி.

கார்த்திக்கிற்கு திக்கென்று இருந்தது. அருண் ராஜியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்று கோபமும் வந்தது.

"ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காத. நான் அந்த மாதிரி தப்பான எண்ணத்துல பழகல"

"அப்படினா ஒரு வார்த்தைல முடிச்சிருக்கலாம் இல்லை. நைட் முழுசா பேசிருக்க"

"நேத்து நைட் கரெண்ட் இல்லைனு பேச வேண்டியாத போச்சி. இல்லைனா நான் கம்ப்யூட்டர் முன்னாடிதான் உக்கார்ந்திருப்பேன். ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத" வார்த்தைக்கு வார்த்தை அதையே சொல்லி கொண்டிருந்தான்.

"என்னது கரெண்ட் இல்லைனு அவ்வளவு நேரம் பேசினய? என்ன லூசுனு நினைச்சிட்டியா?
உனக்கு பிடிச்சிருக்குனு சொன்னியா?" முன்பைவிட கோபம் அதிகமாக கேட்டாள்.

"ஆமாம்... ஸாரி. ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சிக்காத"

அவள் மீண்டும் முன்பை விட அதிகமாக அழ ஆரம்பித்தாள்.

"உனக்கும் அவளை பிடிச்சியிருக்கா? இத்தனை நாள் ஏன்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை. இல்ல?"

"எவளை பிடிச்சிருக்கா?" கார்த்திக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.

"ஒன்னுமே தெரியாத மாதிரி நடிக்காத. அருண் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்"

கார்த்திக்கிற்கு டென்ஷன் அதிகமாகியது. அருண் என்ன சொன்னானென்றும் தெரியவில்லை. இவள் ஏன் இப்படி கோபம், அழுகை என வேறு வேறு விதமாக நடந்து கொள்கிறாள் எனவும் புரியவில்லை.

"நீ கவிதாவை லவ் பண்றியா இல்லையா? உண்மைய சொல்லு"

கார்த்திக்கிற்கு தலையில் இடி விழுந்தது போலிருந்தது.

"நான் கவிதாவ லவ் பண்றனா? என்ன உளற? அவள்ட நான் ஒரு வார்த்தை கூட இது வரைக்கும் பேசனதில்லை"

"பொய் சொல்லாத கார்த்திக். அப்பறம் சத்தியமா உன்கூட நான் சாகற வரைக்கும் பேச மாட்டேன். கடைசியா கேக்கறேன் நீ கவிதாவ லவ் பண்ணல?"

கார்த்திக் கோபம் தலைக்கேறியது. அருண் மட்டும் அங்கிருந்தான் என்றால் கண்டிப்பாக கார்த்திக் நரசிம்ம அவதாரம் எடுத்திருப்பான். அவள் "சாகும் வரை" என்று சொல்லிய வார்த்தையும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது

"நீ என்ன லூசா? நான் உன்னை லவ் பண்ணும் போது அவளை எப்படி நினைக்க முடியும்"

அவனையறியாமலே வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன. சொல்லி முடித்தவுடன் தான் அவன் தான் செய்த தவறை உணர்ந்தான்.

அவளுக்கும் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒரு சேர வந்தது.

"என்ன சொன்ன கார்த்திக்?" மீண்டும் ஒருமுறை அதை தெளிவுப்படுத்தி கொள்ள கேட்டாள்.

"ராஜி ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு. எனக்கு மத்தவங்க மாதிரி கவிதையா காதல சொல்ல தெரியாது. கோர்வையா பேச வராது. ஆனா இதுதான் உண்மை. எனக்கு தெரியாமலே நீ என் மனசுக்குள்ள வந்துட்ட. நீ என்கூட இருந்தா வாழ்க்கை முழுசும் சந்தோஷமா இருக்கும்னு நான் நம்பறேன். உன்னை கடைசி வரைக்கும் நானும், என்னை கடைசி வரைக்கும் நீயும் நல்லா பார்த்துக்குவோம்னு நான் தீர்க்கமா நம்பறேன். நான் ஏதாவது தப்பா பேசிருந்தா என்னை மன்னிச்சிடு. ஆனா என்கூட பேசறத மட்டும் நிறுத்திடாத" அவன் சொல்லிமுடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஆனால் முன்னால் அழுததற்கும் இதற்கும் வித்யாசம் தெரிந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது. வாழ்க்கையில் முதன்முதலாக ஆனந்த கண்ணீரை அவன் பார்த்தான். மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும் என்பதை இருவரும் அன்றுதான் உணர்ந்து கொண்டனர்.

கார்த்திக்கிற்கு உலகையே வெற்றி கொண்ட சந்தோஷமிருந்தது. அவன் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான தருணம் எது என்றால் அடுத்து நொடிக்குள் சொல்ல கூடிய தருணமாக அது அமைந்தது. சரியாக அந்த நேரம் அவனுடைய செல்போன் சிணுங்கியது.

அருணிடமிருந்து போன்.

"டேய் ராஜிய பார்த்தியா? அவளை ஆளையே காணோம். 10 நிமிஷமா தேடிக்கிட்டு இருக்கோம்"

"சரி நீ இங்க வா!!!"

"இங்கனா? எங்க?"

"கேன்டினுக்கு"

"இப்பதான் அங்க இருந்து வறோம்"

"நீ நம்ம காபி குடிக்கற பக்கமாவா திரும்பி போன?"

"இல்லை. காபி வாங்கும் போது அவர்ட சில்லைரையில்லைனு அப்பறம் தரேனு சொல்லிட்டாரு. அதனால அத வாங்கிட்டு அந்த கேட் பக்கமா வந்தோம்"

"சரி... இப்ப நீ முடிகிட்டு இங்க வர. ஓகேவா?"

"ராஜி அங்க இருக்காளா?"

"இருக்கா. நீ இங்க வந்து சேரு முதல்ல"

"அப்பாடியா... இரு நான் அங்க வரேன்"

அருண் திரும்பி தீபாவிடம்...

"ஹலோ... ராஜி கார்த்திக்கோடத்தான் பேசிக்கிட்டு இருக்கலாம். நான் போயிட்டு வந்துடறேன்"

"ஆஹா... இந்நேரம் என்ன ஆயிருக்கும்னு தெரியலை. எப்படியும் அவன் சொல்லலனாலும் ராஜியே அவன்ட சொல்லியிருப்பா. இரு, நானும் உங்கூட வரேன்"

"நீ இங்க இரு. மேனஜர் வந்து பார்த்தாருனா யாரையும் காணோம்னு டென்ஷனாயிடுவாரு. நான் போயி அவளை கூப்பிட்டு வரேன். நம்ம லஞ்ச்ல பேசிக்கலாம்"

"இல்லை... நானும் வருவேன்"

"சரி... நீ போ! நான் இங்கயே இருக்கேன்"

"சரி.. நீயே போயிட்டு வா. ஆனா நீ திட்டு வாங்கறத பார்க்கலாம்னு ஆசை பட்டேன் அது முடியாம போச்சு"

"திட்டுதானே... அவுங்களை நீ இருக்கும்போது வேணும்னா ஒரு தடவை திட்ட சொல்றேன். நீ அப்ப பார்த்து சந்தோஷப்பட்டுக்கோ... இப்ப நான் போயிட்டு வரேன்" சொல்லிவிட்டு அருண், கார்த்திக் ராஜி இருக்குமிடத்திற்கு சென்றான்.

அவர்கள் அங்கு இல்லாததால் கேன்டினுக்குள் சென்று பார்க்க இருவரும் அங்கே காபி வாங்கி வைத்து கொண்டு குடிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர். ராஜி முகத்தில் ஒருவித சந்தோஷத்தை அவனால் உணரமுடிந்தது...

(தொடரும்...)

அடுத்த பகுதி

Sunday, November 26, 2006

நெல்லிக்காய் - 4

காய் 3
காய் 2
காய் 1

ஒரு வழியாக ட்ரெயினிங் முடித்து அனைவரையும் அவரவர் கற்றதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ப்ராஜக்டில் போட்டனர். ஒரு வழியாக அருண், தீபா, ராஜி மூவரும் ஒரே ப்ராஜக்டில் வர கார்த்திக் மட்டும் ப்ராஜக்ட் எதுவும் இல்லாமல் பெஞ்சில் இருந்தான்.

பெரும்பாலும் அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கும், ஆர்வக் கோளாறுகளுக்கும் அவ்வளவு சீக்கிரம் ப்ராஜக்ட் கிடைக்காது.பெஞ்சில் இருந்த காரணத்தால் அவனும் பெரும்பாலும் இவர்கள் க்யூபிக்களிலே இருந்தான்.

ட்ரெயினிங்கில் அருணும் கார்த்திக்கும் நன்றாக பழகி நல்ல நண்பர்களாகி இருந்தனர். ட்ரெயினிங் முடியும் சமயத்தில் இருவரும் ஒன்றாக வீடெடுத்து தங்கினர்.வீட்டில் பெரும்பாலும் டீவியும் கம்ப்யூட்டரிலுமே இருவரும் நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தனர்.

அன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டில் கரெண்டும் இல்லாததால் இருவரும் பழைய காலேஜ் விஷயங்களை பேசி கொண்டிருந்தனர்.தீடிரென்று பேச்சு ராஜீயைப் பற்றி வந்தது.

"கார்த்திக், நீயும் ராஜியும் காலேஜ்லயே நல்ல ஃபிரெண்ட்ஸா"

"நல்ல ஃபிரெண்ட்ஸ்னு சொல்ல முடியாது. ஆனா ஓரளவுக்கு பேசுவோம் அவ்வளவுதான். பொதுவா ராஜீ காலேஜ் பசங்கக்கிட்ட பேச மாட்டா"

"டேய் அடிச்சி விடாதே! அப்பறம் எப்படி ட்ரெயினிங்ல உன் பக்கத்துல வந்து உக்கார்ந்துக்கிட்டா. அதுவும் முதல் நாளே"

"டேய் நாயே! ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சிஸ்டம்ல உக்கார்ந்திருந்தோம். அந்த முட்டை கண்ணன் (ராஜிவ்) பக்கத்துல இருக்கவங்க் கூட ஷேர் பண்ணிக்கோங்கனு சொன்னவுடனே வேற வழியில்லாம அவ என் கூட சிஸ்டம் ஷேர் பண்ணிக்கிட்டா"

"மச்சி நான் பொறந்து பத்து மாசத்திலே எனக்கு காது குத்தியாச்சு... திரும்பவும் நீ முயற்சி பண்ணாத. அவளோட அந்த பக்கத்துல ஒரு பொண்ணு உக்கார்ந்திருந்தா. அவ கூட உக்காராம எதுக்கு உன் கூட உக்கார்ந்தா?"

"என்னய கேட்டா நான் என்ன சொல்லுவேன். அவளைத்தான் கேக்கனும். ஒரு வேளை நான் எங்க க்ளாஸ் டாப்பர்னு டவுட் கேட்டு படிக்க வசதியா இருக்கும்னு உக்கார்ந்திருக்கலாம்"

"என்ன டவுட் கேட்டு படிக்க பக்கத்துல உக்கார்ந்தாளா? டேய் காதுல வாழைபூவ வைக்க முயற்சி பண்ணாதடா.
நாளைக்கு மதியம் நான் அவளையே கேக்கறன். நீயும் என் பக்கத்தில இருக்க... ஓ.கேவா?"

"தெய்வமே... நான் இருக்கும் போது அவளை கேட்டு தொலைச்சிடாத. அப்பறமா நான் இல்லாதப்ப கேளு"

"ஏன்?"

"வேணாம். எனக்கு ஒரு மாதிரி இருக்கும்"

"என்னட ஓவரா பொண்ணு மாதிரி வெக்கப்படற? நீ இருக்கும் போது கேட்டாத்தான் சரியா இருக்கும். சரி அவளை உனக்கு பிடிச்சிருக்கா?"

"அது எதுக்கு உனக்கு?"

"புரிஞ்சிடுச்சு.. எனக்கு புரிஞ்சிடுச்சு"

"டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லைடா..."

"இதையே தான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் சூர்யாவும் சொல்லிட்டு இருந்தாரு. நீ சும்மா இரு... நான் பாத்துக்கறேன்"

"டேய் எதாவது பண்ணி கெடுத்துடாதடா ப்ளீஸ்"

"நீ சும்மா இரு... அவளை நான் பார்த்துக்கறேன்"

"டேய்... என்னடா சொல்ற?"

"டேய் சந்தேகப்படாதடா நாயே... அவள் என்ன நினைக்கிறானு நான் கண்டுபிடிச்சி சொல்றேன்"

"டேய் அவள்ட எனக்கு அவளை பிடிச்சிருக்குனு சொல்லிடாதட. அப்பறம் அவளுக்கு பிடிக்கலைனு கடைசி வரைக்கும் பேசாமலே போயிடுவா"

"மச்சி... யாமிருக்க பயமென். நீ ஜாலியா ராஜிய நினைச்சிக்கிட்டே தூங்கு. உங்களை எப்படி சேத்து வைக்கிறதுனு நான் யோசிக்கிறேன்"

"சரி அதெல்லாம் இருக்கட்டும். உனக்கும் தீபாவுக்கும் என்ன பிரச்சனை. ஏன் எப்பவும் எலியும் பூனையுமாவே இருக்கீங்க?"

"அது பெரிய கதை. பெங்களூர்ல இருந்தே சண்டைதான்" ஒருவழியாக பழைய கதையை சொல்லி முடித்தான் அருண்.

"டேய் மோதல்ல ஆரம்பிச்சா... காதல்ல தான் முடியும்னு ஒரு லாஜிக் இருக்கு. பாரு கடைசியா நீ அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போற" கார்த்திக் சொல்லி முடிக்கவும் கரெண்ட் வரவும் சரியாக இருந்தது.

"பாத்தியா. கரெண்ட் வந்துடுச்சு... அப்படினா என் வாக்கு பலிக்க போகுது" கார்த்திக் உற்சாகத்தோடு கூறினான்.

"டேய் இப்படித்தான் இந்தியா வேர்ல்ட் கப்ல ஜெயிக்கும்னு ஆயிரம் லாஜிக் சொன்னீங்க. கடைசியா படு கேவலமா தோத்தோம். இப்படி லாஜிக் சொல்றத முதல்ல நிறுத்துங்க. அப்பறம் அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது" சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து டி.வி பார்க்க சென்றுவிட்டான் அருண்.

அடுத்த நாள் காலையில் வழக்கமாக காபி குடிக்குமிடத்தில் கார்த்திகைத் தவிர மீதி மூவரும் இருந்தனர். கார்த்திக்கிற்கு புது ப்ராஜக்ட் வந்திருப்பதாக மெயில் வந்ததால் அருணுக்கு போனில் சொல்லிவிட்டு மேனஜரை பார்க்க சென்றிருந்தான்.

"ஏய் எங்க கார்த்திக்க காணோம்" அக்கரையாக விசாரித்தாள் ராஜி.

"அவனா... ஒரு சின்ன பிரச்சனை. மதியம் லஞ்சுக்கு வந்துடுவான்"

"என்ன பிரச்சனை?" இன்னும் கொஞ்சம் அதிக அக்கரையுடனும் ஆர்வமுடனும் விசாரித்தாள் ராஜி

"நம்ம கவிதா இல்லை. நேத்து நைட் அவனுக்கு போன் பண்ணி ஓனு அழுகை"

"ஏன்? எதுக்கு? என்ன பிரச்சனை" கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினாள் ராஜி

"அவ கார்த்திக்க லவ் பண்றாளாம். அவளை தான் அவன் கல்யாணம் பண்ணிக்கனுமாம்"

"அதுக்கு அவன் என்ன சொன்னான்?"

"தெரியல.. நைட் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தான். நான் தூங்கிட்டேன். சரி இன்னைக்கு நைட் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்." அப்பாவியாக சொல்லிவிட்டு ராஜியின் முகத்தை பார்த்தான் அருண்.

ராஜியால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. அமைதியாக சிலை போல் நின்றாள். அவளை அறியாமலே அவள் கண்ணிலிருந்து த(க)ண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவளால் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. யாருடனும் எதுவும் சொல்லாமல் உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

அங்கு நடப்பதை அமைதியாக பார்த்து கொண்டிருந்த தீபா, பொறுமையாக அருணிடம் பேசினாள்.

"ஏன் பொய் சொன்ன?"

"என்ன நான் பொய் சொல்றனா?"

"ஆமாம். உன் முகத்துல இருந்தே தெரியுது. அதுவும் இல்லாம இது உண்மையா இருந்தா நீ அவள்ட இப்ப சொல்லியிருக்க மாட்ட"

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தீபா எப்படி அவனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள் என்று. இருந்தாலும் பாம்பின் கால் பாம்பறியும் என்பதை போல அருணை அவள் அறிந்து வைத்திருந்தாள் என்று சமாதனப்படுத்தி கொண்டான்.

"அதுவா? ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அதுக்குத்தான்..."

"என்ன உண்மை?"

"அதெல்லாம் உனக்கு வேணாம். நீ சின்ன பொண்ணு"

"என்ன ராஜி கார்த்திக்க லவ் பண்றாளானு தானே?"

அருணுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"உனக்கு எப்படி தெரிஞ்சிது?"

"பசங்களைவிட பொண்ணுங்க என்னைக்கும் ஸ்மார்ட்... ஆனா நீ அத ஒத்துக்கமாட்ட"

"இங்க பாரு. பொண்ணுங்க ஸ்மார்ட்னா அவ இந்நேரம் கண்டு பிடிச்சிருக்கணுமே. நான் சொன்னத அவ நம்பிட்டுதானே போறா. அப்பவே தெரியல பசங்க என்னைக்குமே ஸ்மார்ட்னு"

"இங்க பாரு. காதல்னு வந்துட்டா அறிவுக்கு இடமே இல்லை. அது பசங்களா இருந்தாலும் சரி பொண்ணுங்களா இருந்தாலும் சரி. அது போகட்டும். அவுங்களுக்குள்ள இருக்க வேண்டியதுல நீ ஏன் தலையிடற?"

"ஆமாம். அவன் கஷ்டம் எனக்கு தானே தெரியும். பாவம் அவ லவ் பண்றாளா இல்லையானே அவனுக்கு தெரியல"

"அதுக்கூட தெரியல. அவன் எதுக்கு லவ் பண்ணனும்"

"பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சிட்டா உலகத்துல பாதி பிரச்சனை தீர்ந்திருக்கும். சரி... முதல்ல நான் போய் கார்த்திக்கை விட்டு அவளை சமாதனப்படுத்தறேன்"

"அவன் எங்க? சரி, இது அவன் ப்ளானா இல்லை உன்னுதா? உன்னுதாதான் இருக்கும். அவனுக்கு இந்த மாதிரி க்ரிமினல் யோசனை எல்லாம் வராது"

"என்ன ஓவரா பேசிட்டே போற... அந்த பிரச்சனைய முடிச்சிட்டு உன்னைய கவனிச்சிக்கிறேன்"

இருவரும் சண்டை போட்டு கொண்டே கேபினுக்கு சென்றனர். அங்கே ராஜியை காணவில்லை...

(தொடரும்...)

அடுத்த பகுதி

Thursday, November 23, 2006

நெல்லிக்காய் - 3

காய் 1
காய் 2

முதல் இரண்டு நாள் அந்த நிறுவனத்தின் சட்ட திட்டங்கள், எந்த பிரச்சனைக்கு யாரை அணுக வேண்டும் என்ற தகவல்கள், சம்பளத்திற்கான வங்கி கணக்கு துவங்குதல், பி.எஃப் கணக்கு துவங்குதல், மதிப்பெண் பட்டியல் சரி பார்த்தல் போன்றவைகள் நடைபெற்றன.

மூன்றாவது நாள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட லேபில் அனைவரும் ஆளுக்கொரு கணினி முன்பு அமர்ந்திருந்தனர். அவர்களுக்கென்று ஒரு மேய்ப்பாளர் (இன்ஸ்ட்ரெக்டர்) இருந்தார்.

"நண்பர்களே, இங்கு ஆளுக்கு ஒரு கணினி கொடுக்க முடியாத நிலையால் ஒரு கணினியை இருவர் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அருகிலிருப்பவரோடோ அல்லது உங்கள் நண்பர்களுடனோ நீங்கள் சேர்ந்து அமர்ந்து கொள்ளலாம். நான் இதற்கு 10 நிமிடம் அவகாசம் தருகிறேன்" என்று சொல்லிவிட்டு இன்ஸ்ட்ரெக்டர் சென்று விட்டார்.

அனைவரும் அவரவர் நண்பர்களுடன் அமர அருணுக்கு யாரும் கிடைக்காமல் தனியே அமர்ந்தான். அனைவருக்கும் PC பார்ட்னர் கிடைத்துவிட அருணுக்கு மட்டும் யாரும் கிடைக்காதது அவனுக்கு வருத்தத்தை தந்தது.

அன்று ஒரு வழியாக வகுப்புகள் முடிய அவன் மட்டும் தனியாக கணினியில் சொல்லி கொடுத்ததை கற்று கொண்டிருந்தான். அவனுக்கு அந்த தனிமையும் ஒரு விதத்தில் நல்லதாகவே பட்டது. யாருடனும் நேரத்தை பங்கு போடாமல் நன்றாக படிக்கலாம் என்று தோன்றியது.

அடுத்த நாள் வழக்கம் போல் அவன் அவனது கணினியில் படித்து கொண்டிருக்க, தீபா இண்ஸ்ட்ரெக்டருடன் ஏதோ பேசி கொண்டிருந்தாள். அது அவனுக்கு நன்றாகவே கேட்டது.

"சார், நேத்து நான் வரலை. இன்னைக்கு வந்து பார்த்தால் எல்லா கம்ப்யூட்டர்ஸும் ஃபுல்லா இருக்கு. நான் எங்க உட்காறதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்"

"இங்க பாரும்மா, இது காலேஜ் இல்லை. இங்க சார்னு கூப்பிடக்கூடாது. என்ன ராஜிவ்னு கூப்பிடு"

"சரிங்க. எனக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுங்களேன் ராஜிவ்"

"எல்லா கம்ப்யூட்டர்லயும் ரெண்டு ரெண்டு பேர் இருக்கணும்... ஏதுலயாவது ஒரு ஆள் உக்கார்ந்திருந்தால் நீ அவரோட ஷேர் பண்ணிக்கோ. ஓகேவா? எதாவது பிரச்சனைனா எங்கிட்ட சொல்லு"

"ஓகே"

சொல்லி விட்டு ஒரு ஒரு வரிசையாக பார்த்து கொண்டே வந்தாள்.

அருண் மட்டும் தனியே இருப்பதை பார்த்துவிட்டு மீண்டும் ஒரு முறை லேப்பை சுற்றி வந்தாள். வேறு வழியில்லாததால் மீண்டும் அருணிடம் வந்தாள்.

"உங்ககூட யாராவது கம்ப்யூட்டர் ஷேர் பண்றாங்களா?"

"இல்லையே"

"உங்களுக்கு ஆட்சேபனை இல்லைனா நான் உங்க கூட ஷேர் பண்ணிக்கலாமா?"

"இது என்ன என் சொந்த கம்ப்யூட்டரா நான் ஆட்சேபம் தெரிவிக்க. நீங்க தாராளமா ஷேர் பண்ணிக்கலாம்"

சொந்த கம்ப்யூட்டராக இருந்தால் நிச்சயமாக ஆட்சேபம் தெரிவித்திருப்பான் என்றே அவளுக்கு தோன்றியது.

"நேத்து க்ளாஸ்ல சொல்லி கொடுத்த ஸ்லைட்ஸ் இங்க இருக்கு. நீங்க வேணும்னா படிச்சிட்டு இருங்க. நான் வரேன்"

சொல்லிவிட்டு பக்கத்து கம்ப்யூட்டரிலிருந்த கார்த்திக்கிடம் ஏதோ பேசி அவனை வெளியே கூப்பிட்டு சென்றான்.

காபி குடிக்குமிடத்திற்கு கார்த்திக்கை அழைத்து சென்றான் அருண்.

"கார்த்திக், நீ தப்பா எடுத்துக்கலனா நீயும் நானும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கலாம். ராஜியும், தீபாவும் ஒரு கம்ப்யூட்டர்ல உக்கார்ந்துக்கட்டுமே. ப்ளீஸ்"

"டேய், லூசாடா நீ? அவனவன் பொண்ணுங்க பக்கத்துல உக்காரத்துக்கு அலையறானுங்க. நல்ல வேளை அவள் என் க்ளாஸ் மேட்டுங்கறதால எனக்கு எப்படியோ சான்ஸ் கிடைச்சது.நீ என்னடானா அதை கெடுத்துக்க சொல்றீயே"

"எப்படியும் பக்கத்து கம்ப்யூட்டர்லதான அவ உக்கார்ந்திருப்பா. நீ ஈஸியா பேசலாம். எனக்கு அந்த பொண்ணு பக்கத்துல உக்கார்ந்து வேலை செய்ய முடியாது.. ப்ளீஸ்"

"ஏன்டா ஏதோ கவர்ன்மெண்ட் பஸ்ல சீட் மாத்தர மாதிரி மாத்த சொல்ற. போனா போகுது, நான் ராஜிக்கிட்ட பேசி பாக்கறேன்."

கார்த்திக் உள்ளே சென்று ராஜியிடம் ஏதோ சொல்ல ராஜி தீபாவின் கம்ப்யூட்டருக்கு சென்றாள். இதை பார்த்தவுடன் சந்தோஷமாக உள்ளே வந்து கார்த்திக் பக்கத்தில் அமர்ந்தான் அருண்.

நடந்ததை யாரும் சொல்லாமலே புரிந்து கொண்டாள் தீபா.

சில நாட்களிலே கார்த்திக்கும், அருணும் நல்ல நண்பர்களாகினர். ராஜியும் தீபாவும்தான். ஒருவருக்கொருவர் தெரியாததை சொல்லி கொடுத்து உதவி கொண்டனர். அனைத்து தேர்விலும் கார்த்திக்தான் முதல் மதிப்பெண் எடுத்தான். அருணும் ஓரளவு நல்ல மதிப்பெண்ணே பெற்றான்.

நால்வரும் ஒன்றாகவே சுற்ற ஆரம்பித்தனர். சாப்பிட சென்றாலும், காபி, டீ இடைவேளைகளிலும் ஒன்றாகவே இருந்தனர். அருணும் தீபாவும் மட்டும் அவ்வளவாக பேசிக்கொள்ளாததை கார்த்திக்கும் ராஜியும் நன்கு அறிந்திருந்தனர்.

பெரும்பாலான நாட்களில் அருணும் கார்த்திக்கும் அசைவ உணவையே சாப்பிட தீபா ஒரு நாள் கேட்டே விட்டாள்.

"எப்படி நீங்க ஆடு, கோழி எல்லாம் சாப்பிடறீங்க? உங்களுக்கு அத பார்த்தா பாவமா தெரியலையா?"

கார்த்திக் அமைதி காத்தான். அருண் பேச ஆரம்பித்தான்.

"நீங்க மட்டும் கீரையெல்லாம் சாப்பிடல. அதுக்கும் தான் உயிர் இருக்கு. வேரோட பிடிங்கி தானே சாப்பிடறீங்க? இதுவாவது பரவாயில்லை. இலை, காய், பழம் எல்லாம் சாப்பிடறது எப்படி தெரியுமா? கைய கால பிக்கிற மாதிரி. அதுக்கு எப்படி வலிக்கும். அதையே தான் இந்த ஆடும் செய்யுது. செடிய கடிச்சி சாப்பிடுது. அந்த செடியெல்லாம் எப்படி அழுதுச்சினு உங்களுக்கு தெரியுமா? செடி கொடிகளை காப்பாத்த வேற வழியே இல்லாம நாங்க ஆடு, கோழினு சாப்பிட வேண்டியதா போச்சு"

"பழமெல்லாம் மத்தவங்க சாப்பிடத்தான் செடியே தருது. அதுல இருக்கற விதைதான் அதோட குழந்தை. பழத்தை சாப்பிடறது தப்பில்லை" என்று மீண்டும் வாதாடினாள் தீபா.

"சரி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்ட பழத்துல இருந்து ஒரு சதவிகிதமாவது விதைய எடுத்து நட்டிருக்கீங்களா?
சாப்பிட்டு குப்பைல போட வேண்டிய்து. இல்லைனா பாலித்தீன் பேப்பர்ல பத்திரமா போட்டு குப்பை தொட்டில போட வேண்டியது. இதுல விதைக்காத்தான் பழத்தை சாப்பிட்டோம்னு கதை விட வேண்டியது. அதுக்கு எங்களை மாதிரி கொன்றால் பாவம் தின்றால் தீரும்னு சொல்லிட்டு போகலாம்" மீண்டும் விதாண்டாவாதம் பேசினான் அருண்.

ஒருவழியாக பேச்சை திசைத்திருப்பினான் கார்த்திக்.

"தீபா அந்த ராஜிவ்க்கு உன் மேல ஒரு கண்ணுனு நினைக்கிறேன். எப்பவுமே உன்னய சைட் அடிச்சிக்கிட்டே இருக்கறான்"

"அப்படியெல்லாம் இல்லை. நீ எதாவது கதை கட்டிவிடாதப்பா சாமி" சமாளித்தாள் தீபா...

"அருண், நான் சொல்றது உண்மைதான?" அருணையும் துணைக்கு அழைத்தான் கார்த்திக்.

"ஆமாம்.. அப்படித்தான்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு தீபாவை பார்த்தான் அருண்.

அவள் அவனை முறைத்து கொண்டிருந்தாள். அந்த முறைப்பிலும் ஏதோ அர்த்தம் இருக்கிறது என்று அவன் உள்ளுணர்வு அவனுக்கு சொல்லியது...

(தொடரும்...)

அடுத்த பகுதி

Tuesday, November 21, 2006

உதவி தேவை

Hi,
One of my friend's dad got diagnised with Pancreatic cancer and undergone a surgery called Whipple's surgery in one of the hospitals at Coimbatore. I beleive the doctors said its a critical one and he is still in danger. They also said that the survival of the person affected by Pancreatic tumor is very less. When I checked in Internet it says for the same disease the survival is 75% - 95% in US. I am not sure whether its not the case in India. If you are a doctor or If you know anyone who survived after the surgery(in India), please let me know.

If someone from any other cities have any information about Whipple's surgery and Pancreatic cancer (I beleive he is in critical stage) and if you believe you can help me please shoot out a mail to balaji.manoharan@gmail.com or deepan.thirumalaisamy@gmail.com.
Also you can call me @ (US: 201-233-6832) and if you are in India, please call my other friend Deepan @ 9940063037. (Since my friend is in hospital with his dad and he cannot attend calls)

Also if you want, you can forward this one and today's date is 21st Nov 2006 (so that people can beleive its not a hoax)

With great regards,
Balaji

நண்பர்களே,
என்னுடைய ஒரு சில பதிவுகளை நீங்க ஃபார்வேர்ட் பண்ணிருக்கீங்க... இதையும் நீங்க அந்த மாதிரி செய்தால் நான் மிகவும் மகிழ்வேன்.

உதவ முடியாதவர்கள் அவர் குணமடைய இறைவனை பிரார்த்திக்குமாறு பணிவன்புடன் வேண்டி கொள்கிறேன்.

மிக்க நன்றி

பாலாஜி

Thursday, November 16, 2006

நெல்லிக்காய் - 2

காய் 1

அந்த குளிருட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்த பனிரெண்டு பேருக்குமே அவர்களின் முகத்திலிருந்த வழிந்த வேர்வை அவர்களின் பயத்தைக்
காட்டி கொடுத்து கொண்டிருந்தது. எப்படியும் வேலை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் இருந்தது.

அந்த அறையின் மேற்பார்வையாளர் க்ரூப் டிஸ்கஷனை ஆரம்பிக்குமுன் அனைவரையும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்ள சொன்னார். அனைவரின் பெயரையும் நன்கு உன்னிப்பாக கவனித்தான் அருண். அவன் கவனிக்க வேண்டாமென்று நினைத்தும் அவன் மனதில் அந்த பெயர் பதிந்தது. தீபா
என்ற இரண்டு எழுத்து மனதில் பதிய ஒரு நொடிக்கூட தேவைப்படவில்லை.

குருப் டிஸ்கஷனை துவங்கலாம் என்று மேற்பார்வையாளர் சொன்னவுடன் தீபாதான் ஆரம்பித்தாள். தெளிவாக ஆங்கிலத்தில் பேசினாள். நண்பர்களே
நாம் அனைவரும் பங்குபெறும் வகையில் ஒரு நல்ல தலைப்பை தேர்ந்தெடுப்போம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த தலைப்பில் விவாதிக்கலாம். காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணமா? இரண்டில் எது சிறந்தது? அனைவரும் மகிழ்ச்சியாக ஒத்துக்கொண்டனர்.

அருணுக்கு இந்த தலைப்பு சுத்தமாக பிடிக்கவில்லை. தீபாவளியன்று சன் டீவியில் வரும் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற தலைப்பை
போலிருந்தது தீபா கொடுத்த தலைப்பு. அனைவரும் ஒத்துக்கொண்ட நிலையில் அருண் பேச ஆரம்பித்தான்.

நண்பர்களே! நாட்டில் பல பிரச்சனைகளிருக்கும் போது இந்த மாதிரி தலைப்புகளில் விவாதிப்பது நேர விரயமே! நான் இன்று வரும் வழியில் பல பேர் பிச்சையெடுத்து கொண்டிருந்தார்கள். அதற்கு தங்கள் இரக்ககுணத்தை காட்டுகிறோமென்று ஒரு சிலர் அவர்களை ஊக்கப்படுத்தி கொண்டிருந்தனர்.
அதை பார்த்து யார் மேல் தவறு அதிகமென்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் விரும்பும்பட்சத்தில் இதை பற்றியும் விவாதிக்கலாமே!வழக்கம் போல் அனைவரும் இதற்கும் ஒத்துக்கொண்டனர்.

தீபாவிற்கு கோபமாக வந்தது. இது தன்னை தாக்கி நடக்கும் விவாதமென்று நன்றாக புரிந்து கொண்டாள். அவளால் பேச முடியவேயில்லை.
அனைவரும் அரசையும், அரசியல்வாதிகளையும் தாக்கி பேசிக்கொண்டிருந்தனர். அனைவரையும் பெயர் சொல்லி கூப்பிட்டதால் அருணையே தலைவனாக ஏற்று கொண்டனர். அந்த விவாதத்தில் பங்கு பெற முடியாமலிருந்த 4 பேரையும் வரிசையாக கூப்பிட்டு அவர்களின்
கருத்துக்களையும் கேட்டான் அருண் (தீபாவை தவிர). இறுதியாக தீபாவை கூப்பிட்டு அவளை முடிவுரை கொடுக்குமாறு சொன்னான் அருண்.

அவளுக்கு அவன் கட்டளையிட்டது பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு மூக்கு உடைய வேண்டுமென்று பேச ஆரம்பித்தாள்."நண்பர்களே நம் நாட்டில் மக்கள் பிச்சையெடுப்பது கவலையான விஷயம்தான். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிச்சை ஒழிய வேண்டுமே ஒழிய பிச்சைக்காரர்கள் அல்ல. ஒருவன் பசியால் இருக்கும் போது அவனுக்கு மீனை கொடுத்து பிறகுதான் மீன் பிடிக்க கற்று கொடுக்க
வேண்டுமேழொழிய பசியால் வாடுகிறவனுக்கு மீன் பிடிக்க சொல்லி கொடுத்தால் அது அவன் மனதிலும் பதியாது. சொல்லி கொடுப்பவனுக்கு பசியின் வலி தெரியாது. பசியோடு இருப்பவனால் மீன் கிடைக்கும் வரை காக்கவும் முடியாது. அதனால் மனிதாபிமானத்தால் ஒருவனுக்கு உதவுவது
தவறல்ல. அவனை தனக்கு அடிமையாகவே வைத்திருக்க வேண்டுமென்று நினைப்பதுதான் தவறு." என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் பேசி
முடித்தாள்.

முடிவுரையென்பதால் யாரும் எதுவும் பேச முடியவில்லை. அருணையும் சேர்த்து.

ஒரு மணி நேரத்தில் தேர்வானவர்களின் பெயரை அறிவித்தார்கள். அதில் அருணின் பெயர் இருந்தது. அதன் பிறகு அன்றே நேர்முகத்தேர்வை
முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, யாருடனும் பேசாமல் அடுத்த தேர்வுக்கு தயாரானான்.

இரண்டாவது நாள் அவனுக்கு அந்த xxxxx கம்பெனியிலிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. ஒரு வாரத்தில் அந்த கம்பெனியின் சென்னை கிளையில் வந்து சேருமாறு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தது. அன்றே பெங்களூரிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்பினான் அருண்.

நண்பர்களிடம் சொல்லி கிளம்பலாம் என்று தோன்றியும் அவர்கள் செய்தது அவனால் மன்னிக்கவே முடியாததாக இருந்ததால் அவர்களுக்கு
மின்னஞ்சலில் தகவல் சொல்லிவிட்டு ஊருக்கு பயணமானான்...

ஒரு வாரம் முடிந்த நிலையில் சென்னையில் திருமண மண்டபம் போல் விசாலமான அந்த கான்ஃபரன்ஸ் அறையில் கழுத்தில் டையுடன்
அமர்ந்திருந்தான் அருண். அந்த அறையில் 100க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியுடனும் ஒரு விதமான எதிர்பார்ப்புடனும் அமர்ந்திருந்தனர். அந்த அறையில் அருணால் தீபாவை எளிதாக கண்டிபிடிக்க முடிந்தது. தீபாவாலும் தான்...

(தொடரும்...)

அடுத்த பாகம்

Wednesday, November 15, 2006

அந்த இரண்டு படங்கள்!!!

நான் முதன்முதலில் எழுதிய தெலுகு பட விமர்சனத்தில் இரண்டு படங்களை குறிப்பிட்டிருந்தேன் "ஆ நலுகுரு", "அனுகோகுண்ட ஒக ரோஜு". இந்த படங்களுக்கு விமர்சனம் எழுத சொல்லி ஒரு அனானி நண்பர் கேட்டிருந்தார். கொஞ்சம் நாளானதற்கு அவர் மன்னிப்பாராக.

ஆ-நலுகுரு
இதன் அர்த்தம் அந்த நால்வர். எந்த நான்கு பேர்? என்பதே படத்தின் கதை.
படத்தின் கதாநாயகன் ராஜேந்திர பிரசாத். பொதுவாக நகைச்சுவை படத்தில் நடிப்பவர். ஆனால் இதில் குணச்சித்திர பாத்திரம். (நம்ம சிவக்குமார் மாதிரினு வெச்சிக்கோங்க)

படத்தின் நாயகன் தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு தன்னால் இயன்றவரை உதவுகிறான். யாருக்கு பண பிரச்சனையென்றாலும் இவரிடம் போனால் எப்படியாவது உதவுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கமளவுக்கு உயர்ந்த குணத்தை உடையவர்.

இவர் வசிக்கும் அதே தெருவில் வசிக்கிறார் கோட்டா சீனிவாசராவ். இவர் உலகை ஆள்வது பணமே என்ற கொள்கை உடையவர். பணமில்லையென்றால் பிணமும் மதிக்காது என்று தீவிரமாக நம்புபவர். யாராக இருந்தாலும் பத்திரம் எதுவுமின்றி பணம் தரமாட்டார்.

கதாநாயகனுக்கு அவன் பிள்ளைகள், மற்றும் மருமகனால் பிரச்சனைகள் வர ஆரம்பிக்கிறது. இவருக்கு இருக்கும் நல்ல பேரை பயன்படுத்தி ஃபைனன்ஸ் கம்பெனி ஆரம்பித்து மக்களை ஏமாற்றலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதை தடுக்க வேறு வழியில்லாமல் கோட்டாவிடம் கடன் வாங்குகிறார் நாயகன்.

ஏற்கனவே ஒரு ஏழைக்கு உதவ தன் வீட்டு பத்திரத்தை அடகு வைத்ததால், வேறு எதுவுமின்றி கடன் கேட்கிறார் நாயகன். ஏற்கனவே இருவருக்கும் இருந்த போட்டியில் தோற்பதாக ஒத்துக்கொள்கிறார் நாயகன் (உலகில் முக்கியம் மனித நேயமா அல்லது பணமா?). பணமே வெள்கிறது.

அன்று இரவே இறந்துவிடுகிறார் நாயகன். கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவாகிறார்கள் நாயகனின் பிள்ளைகளும், மருமகனும். நடக்கும் காட்சிகளை நாயகனின் ஆவியும் எமதூதர்களும் பார்க்கிறார்கள். தன் பிள்ளைகளின் செயலையும், மருமகனின் செயலையும் கண்டு துடிக்கிறார் நாயகன். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாதே!!!

இறுதியில் அவர் மரணம் தற்கொலை என்று அவர் குடும்பத்தாருக்கு மட்டும் தெரியவருகிறது. பிள்ளைகளின் இழிசெயலால் தற்கொலை செய்து கொள்கிறார். இவரின் மரணத்திற்காக ஊரே மரியாதை செய்கிறது. ஊரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு அரசியல்வாதிகளும் வந்து மரியாதை செலுத்துகிறார்கள்.

கொள்ளி வைக்க பிள்ளைகள் வராததால் ஊர் மக்களே அவரை சுமந்து செல்கிறார்கள் (அந்த நால்வர்). அந்த நேரம் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு போக பார்க்கிறார்கள் பிள்ளைகள். (அதுவரை அதே ஊரில் ஒரு ஹோட்டலில் மறைந்திருக்கிறார்கள்). அவர்கள் சவம் வரும் வழியில் தெரியாமல் சென்று ஊர் மக்களிடம் சிக்குகிறார்கள்.

மக்களும் இவர்கள் இதற்காகத்தான் வெளியூரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று இவர்களை அழைத்து கொண்டு சுடுகாடு செல்கிறார்கள். அங்கே தன்னிடமிருந்து வாங்கிய பணத்தை கொடுத்தால்தான் எரிக்க விடுவேன் என்று கோட்டா சொல்ல, அவர் பிள்ளைகள் எங்களிடம் பணமில்லை, வேண்டுமென்றால் சவத்தை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊர் மொத்தமும் சேர்ந்து கோட்டாவிற்கு பணம் தருகிறார்கள்.

தான் பணம் கேட்டது நாயகனின் பெருமையை அவர் பிள்ளைகளுக்கு உணர்த்தவே என்று சொல்லி அவர்களை திருத்துகிறார். இறுதியில் அனைவரும் திருந்த மகிழ்கிறார் நாயகன். உடனே எமதூதர்கள் மறைந்து தேதூதர்கள் தோன்றுகிறார்காள்.

மக்களே நல்ல படத்தை கேவலமா சொல்லிட்டன்னு நினைக்கிறேன்... உண்மையாலுமே இது அருமையான படம்...

அனுகோகுண்ட ஒக ரோஜு த்ரில்லர் படம். காட்சிக்கு காட்சி நன்றாக இருக்கும். நான் கதை சொல்லி கெடுக்க விரும்பவில்லை... முடிந்தால் பார்க்கவும்... அனானி நண்பரே, நீங்கள் சொல்லி ஒரு மாதத்திற்கு மேலாகிறது என தெரியும். தாங்கள் இதை படித்து எனக்கு தெரியப்படுத்தினால் மகிழ்வேன்...


Saturday, November 11, 2006

நெல்லிக்காய் - 1

அருண், கம்ப்யூட்டர் படித்துவிட்டு பெங்களூர் வந்தால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெங்களுர் வந்த ஆயிரக்கணக்கான இஞ்சினியரிங் படித்த மாணவர்களுள் ஒருவன்.

வந்து மூன்று மாதங்களாகியும் எந்த கம்பெனியிலுமிருந்தும் அழைப்பு வராத காரணத்தால் விரக்தியின் உச்சத்திலிருந்தான் அருண்.

அன்று ஞாயிற்று கிழமை. எந்நேரமும் அறையில் தங்கி புளித்து போயிருந்ததால் ஊர் சுற்ற நண்பர்கள் அனைவரும் முடிவெடுத்திருந்தனர்.

"டேய் வாரத்துக்கு ஒரு தடவைதான் வெளிய போறோம், அதனால வாரம் ஃபுல்லா மறக்காத மாதிரி கலர் ஃபுல் இடமா போகனும்" இது அருணின் நண்பன் சதீஷ்.

"அப்படினா வழக்கம் போல M.G Road தான்... பெயிண்டிங் பண்ண வசதியா இருக்கும்" இது வசந்த்.

"டேய் நானும் இந்த முறை வரேன்... இந்த சக்கரை போட்ட சாம்பாரை சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போச்சு... அப்படியே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கிற மாதிரி கடை ஏதாவதிருந்தா போயி சாப்பிட்டு வருவோம்" அருண்

"டேய் அது சக்கரையில்லை... வெல்லம். அப்பறம் கமெர்ஷியல் ஸ்ட்ரீட்ல மதுரை மெஸ் ஒண்ணு இருக்காம் நம்ம EEE குமார் சொன்னான்.பென்ஸ் கார்ல வரவனே அந்த தட்டு கடைல வாங்கி சாப்பிட்டு போவானாம். நம்ம அப்படியே அதுக்கும் போவோம். ஒகேவா?" இது குமார்

"சரி... அப்படியே MG Road, Brigade Road எல்லாம் சுத்திட்டு சிவாஜி நகர்ல போயி இறங்கினா கமர்ஷியல் ஸ்ட்ரீட் போயிடலாம்"

"சரிடா... எல்லாரும் பஸ் பாஸ் எடுத்துக்கோங்க"

அனைவரும் 201 பஸ் பிடித்து மேயோ ஹால் சென்று இறங்கினார்கள்.
ரெஸிடெண்ஸி ரோடிலிருந்து பிரிகேட் ரோட் சென்று கூட்டத்தோடு கலந்தனர்.

"டேய் அருண், நம்ம வசந்த மட்டும் பாத்துட்டே வா. இந்த ரோடு முடியறதுக்குள்ள 10 பாயிண்டாவது எடுத்துடுவான்" என்றான் சதீஷ்

"அது என்னடா பாயிண்ட்?"

"ஒரு ஒரு பொண்ணையும் இடிச்சா ஒரு பாயிண்ட்"

"டேய் அதெல்லாம் கேவலமான விஷயம். இந்த மாதிரி சீப்பா நடந்துக்கற மாதிரி இருந்தா அவன நாம கூப்பிட்டு வந்திருக்க வேண்டாம்"

அருண் கோபமாக பேசிய வார்த்தைகள் வசந்த் காதில் விழுந்தது.

"இங்க பாருடா நம்ம சாமியார... டேய் என்னை நீங்க கூப்பிட்டு வந்திருக்கீங்களா? நாங்க தான் வழக்கமா வரவங்க. நீ தாண்டி இங்க புது ஆளு. உனக்கு பிடிக்கலைனா நீ போ. நாங்க எல்லாம் இப்படித்தான்"

"டேய் அவன் பண்றது தப்புனு உங்க யாருக்கும் படலையா?"

சதீஷ், "டேய் ஏன் இப்படி டென்ஷன் ஆகற? நம்ம ஊர்லதான் அதெல்லாம் தப்பு. இந்த ஊர்ல இதெல்லாம் சகஜம். பொண்ணுங்களும் ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க"

"சரி. இதுக்கு மேல உங்க கூட ஆர்கியூ பண்ண நான் விரும்பல. நான் உங்க கூட வரல. பாக்கலாம்"

அருண் கோபமாக திரும்பி ரெஸிடெண்சி ரோட் மேயோ ஹால் போய் சேர்ந்தான்.அவனுக்கு இவர்கள் செய்யும் விஷயம் அருவருப்பாக பட்டது. திரும்பவும் ரூம் போகவும் மனமில்லை.
சரி, நாம வந்தது நம்ம ஊர் சாப்பாடு சாப்பிடத்தானே, அதை செய்வோம் என்று சிவாஜி நகர் பஸ் பிடித்தான்.

ஒரு வழியாக கமர்ஷியல் ஸ்ட்ரீடில் இருக்கும் அந்த மதுரை கடையை கண்டுபிடித்தான். சித்திரை மாதத்தில் மாம்பழத்தை சுற்றி நிற்கும் ஈ போல அந்த கடையை சுற்றி கூட்டமிருந்தது.

அந்த கடை அருகில் 4-5 சிறுவர்கள் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு பனிரெண்டு பதிமூன்று வயதிருக்கும் போல் தோன்றியது.

இந்த வயதில் வேலை செய்து பிழைக்காமல் பிச்சை எடுப்பவர்களை பார்த்ததும் அவனுக்கு கோபம் வந்தது.

ஒரு வழியாக இட்லி வாங்கி சாப்பிட்டான். பத்து ரூபாய்க்கு 4 இட்லி. பரவாயில்லை, சுவையாக இருந்தது. தோசை ஒன்று வாங்கி சாப்பிடலாம் என்று யோசித்தான். ஆனால் அந்த கூட்டத்தில தோசை கிடைப்பது கடினம் என்று அவனுக்கு புரிந்தது.

அங்கே 4-5 பெண்கள் வந்து இட்லி வாங்கி கொண்டிருந்தனர்.
அந்த பிச்சை எடுக்கும் சிறுவர்கள் அந்த பெண்களை குறி வைத்து தங்கள் கடமையை செய்ய, அதில் ஒரு பெண் மட்டும் இரக்கப்பட்டு அந்த நால்வருக்கும் ஆளுக்கு ஒரு இட்லி பாக்கெட் வாங்கி கொடுத்தாள்.

இதை பார்த்ததும் அருணுக்கு மேலும் கோபம் வந்தது. நேராக அந்த பெண்ணை நோக்கி நடந்தான்.

"ஹலோ மேடம். இந்த மாதிரி பசங்களை என்கரேஜ் செய்யாதீங்க. இந்த மாதிரி செஞ்சா இவங்களுக்கு உழைக்கணும்னு எண்ணமே வராது"

"ஹலோ சார். நீங்க அடுத்தவங்களுக்கு உதவலனாலும் உதவறவங்களை தடுக்காதீங்க" கோபமாக சொன்னாள் அந்த பெண்.

அவளுடனிருந்த மத்த பெண்களும் அவனை ஒரு மாதிரி பார்த்தார்கள்.

அதற்கு மேல் அங்கு நிற்க அவனுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் மேல் வெறுப்பு வந்தாலும் அவளின் இறக்க குணம் அவனை அறியாமலே அவனுக்கு பிடித்திருந்தது.

ரூமிற்கு செல்லுமுன் இண்டர்நெட் சென்டர் சென்று மின்னஞ்சல் ஏதாவது வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

"Congratulations from xxxxx company" என்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அவசரமாக திறந்து பார்த்தான். xxxxx கம்பெனியிலிருந்து அவனுக்கு தேர்வுக்கு அழைப்பு வந்திருந்தது. முதல் சுற்று ஆப்டிடுயுட் தேர்வு, இராண்டாம் சுற்றுக்கு GD, மூன்றாவது சுற்று பர்ஸனல் இண்டர்வியூ.

சந்தோஷமாக ரூமிற்கு வந்தான். ரூமில் 2 நாட்களாக யாருடனும் பேசாமல் தேர்வுக்கு தயாரானான்.

ஒரு வழியாக முதல் சுற்றில் தேர்வானான். இரண்டாம் சுற்று GDக்கு தயாரானான்.

GDக்கு குளிரூட்டப்பட்ட ஒரு கான்ஃபரன்ஸ் அறை தேர்ந்தெடுத்திருந்தார்கள். உள்ளே சென்றான் அருண். அங்கே அன்று சண்டை போட்ட பெண் உட்கார்ந்திருந்ததை அவன் கவனிக்கத்தவறவில்லை...

உள்ளே ஒரு போர் நடக்கவிருந்ததை யாரும் அறியாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்...
(தொடரும்...)

அடுத்த பகுதி

Wednesday, November 08, 2006

கோழியின் அட்டகாசங்கள் - 6!!!

மக்களே மீண்டும் உங்களுக்காக கோழியின் அட்டகாசங்கள்...

"டேய் மச்சானுக்கு ஆன்சைட் வந்துடுச்சுடா அடுத்த மாசம் கெளம்பறான்" இது OP

"வாவ்!!! கங்கராட்ஸ்டா மச்சான்..."

"பாலாஜி, அதனால கோழி இப்பல இருந்து டயட்ல இருக்கான்..."

"ஏன்டா அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?"

"அது ஒண்ணுமில்லை... அமெரிக்கா போகும் போது 64 கிலோ வெயிட்ட எடுத்துட்ட்டு போகலாம்னு மச்சான் சொன்னான். அதனால இன்னும் 6 கிலோ குறைச்சிட்டா மச்சான் கூட அமெரிக்கால போயி வேலை தேடலாம்னுதான்..."

"டேய் கோழி உண்மையாடா???"

"ஆமான்டா பாலாஜி... எனக்கும் இங்க போர் அடிக்குது... பேசாம அமெரிக்கா போயிடலாம்னு இருக்கேன்... "

"டேய் கோழி, அது பெட்டி படுக்கைக்கு தான்டா... ஆளுங்களை எல்லாம் கூப்பிட்டு போக முடியாது. அப்படியே இருந்தாலும் மச்சான் எதாவது ஃபிகரை பிக்கப் பண்ணிட்டு கூப்பிட்டு போகமா உன்னைய கூப்பிட்டு போவானா?"

"டேய் நெஜமாவாடா??? இது தெரியாம ஊர்ல இருந்து வண்டிக்கூட அனுப்ப சொல்லிட்டேன்", இது கோழி

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா ஊர்ல நம்ம ஸ்பெலண்டர் சும்மாதான் இருக்கு... அங்க போனா யூஸ் ஆகுமில்ல... அங்க பஸ் எல்லாம் காஸ்ட்லியா இருந்தா என்ன பண்றதுனு?"

"சரிடா இந்த வண்டிய எப்படிடா அங்க எடுத்துட்டு போய் ஓட்டுவ?"

"ஏன்டா நான் என்ன லூசா?
நம்பர் பேட்ல இருக்கற "TN" க்கு பதிலா வண்டில "US"னு எழுதிட்டா போச்சு... போலிஸ் எப்படி கண்டுபிடிப்பாங்க?"

ஆஹா ஆரம்பிச்சிட்டான்யா...

Monday, November 06, 2006

அன்பு!!!

Hi Friends,
This is just a forward.. thought of sharing with you...

An 80 year old man was sitting on the sofa in his house along with his 45-year old highly educated son.

Suddenly a crow perched on their window.

The Father asked his Son, "What is this?"
The Son replied "It is a crow".

After a few minutes, the Father asked his Son the 2nd time, "What is this?"
The Son said "Father, I have just now told you "It's a crow".

After a little while, the old Father again asked his Son the 3rd time, "What is this?"
At this time some _expression of irritation was felt in the Son's tone when he said to his Father with a rebuff.

"It's a crow, a crow".

A little after, the Father again asked his Son t he 4th time, "What is this?"
This time the Son shouted at his Father, "Why do you keep asking me the same question again and again,

although I have told you so many times 'IT IS A CROW'. Are you not able to understand this?"

A little later the Father went to his room and came back with an old tattered diary, which he had maintained

since his Son was born. On opening a page, he asked his Son to read that page. When the son read it, the

following words were written in the diary: -

"Today my little son aged three was sitting with me on the sofa, when a crow was sitting on the window.

My Son asked me 23 times what it was, and I replied to him all 23 times that it was a Crow.

I hugged him lovingly each time h e asked me the same question again and again for 23 times.

I did not at all feel irritated. I rather felt affection for my innocent child".

While the little child asked him 23 times "What is this", the Father had felt no irritation

in replying to the same question all 23 times and when today the Father asked his Son the same question

just 4 times, the Son felt irritated and annoyed.

So...

If your parents attain old age, do not repulse them or look at them as a burden, but speak to them

a gracious word, be cool, obedient, humble and kind to them. Be considerate to your parents.

From today say this aloud, "I want to see my parents happy forever. They have cared for me ever since I was

a little child. They have always showered their selfless love on me. They crossed all mountains and valleys
without seeing the storm and heat to make me a person presentable in the society today".

Say a prayer to God, "I will serve my old parents in the BEST way. I will say all good and kind words

to my dear parents, no matter how they behave. When I am old, I do not want my child to repeat the words

when the crow perches on my window".

One kind word can warm three winter months (Japanese proverb)