தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, May 30, 2007

பிட் அடிச்சா தப்பா?

அப்பாலஜி லெட்டரை பத்தி ஏற்கனவே ஒரு பதிவ போட்டிருக்கேன். இது அதோட அடுத்த பாகம்

காலேஜ்ல இண்டர்னல் டெஸ்ட்னு ஒண்ணு இருந்ததுங்க. 50 மார்க்குக்கு வைப்பாங்க. அதுல பாத்தீங்கனா பத்து ஒரு மார்க் கேள்வி, ஒரு நாலு, அஞ்சி பெரிய கேள்வி இருக்கும். அந்த கேள்வி என்னனு முதல்லயே வாத்தியாருங்க சொல்லிடுவாங்க. அதை படிச்சிட்டு வந்து எழுதனும். அப்படியாவது எங்களை படிக்க வைக்கலாம்னு முயற்சி எடுத்தாங்க. நம்மக்கிட்ட இந்த வேலையெல்லாம் பலிக்குமா?

கரெக்டா பரிட்சைக்கு முன்னாடி எல்லாரும் கூட்டமா சேர்ந்து பிட் எழுதுவாங்க. பொதுவா எல்லாரும் எப்படி எழுதுவாங்கனா ஆளுக்கு ஒரு கேள்வி இல்லை ரெண்டு கேள்வினு பிரிச்சி எழுதுவாங்க. இதுக்கு பேரு டிவைட் அண்ட் காப்பி பாலிஸி. நமக்கு அந்த ஒரு கேள்வி எழுதறதுக்கும் சோம்பேறித்தனம். அப்படி அஞ்சி கேள்விக்கும் பதில் எழுதி நம்ம என்னத்த சாதிக்க போறோம். பேசாம நாம ஒரு கேள்வியை ஃபிரியா விட்டுட்டு மீதிக்கு மட்டும் பசங்ககிட்ட வாங்கி எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டு ஜாலியா ப்ரைன் லாரா கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்.

பரிட்சை ஹாலுக்கு கணக்கு டிப்பார்ட்மெண்ட்ல இருந்து ஒரு மேடம் வந்திருந்தாங்க. பாதி நேரத்துல அவுங்க பர்சனல் வேலை இருக்குனு அதே டிப்பார்ட்மெண்ட்ல இருக்கற இன்னொரு மேடமை விட்டுட்டு போயிட்டாங்க. இப்ப வந்தவங்க பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லவங்க மாதிரி இருந்தாங்க.

நானும் ஒரு வழியா 4 கேள்விக்கு பசங்ககிட்ட இருந்து வாங்கி எழுதிட்டேன். பார்த்தா நான் எழுதாத கேள்விக்கு பிட் என் பின்னாடி இருந்த பையன்கிட்ட இருந்துச்சு. சரியா இன்னும் 5 நிமிஷம்தான் இருந்துச்சி. அவன்கிட்ட இருந்து ஒரு வழியா அந்த பிட்டை வாங்கிட்டேன். வாங்கிட்டு எழுந்து நின்றேன்.

"என்னப்பா?"

"மேடம்.. பரிட்சை 15 நிமிஷம் லேட்டாதான் ஆரம்பிச்சிங்க. அதனால எக்ஸ்ட்ரா டைம் கொடுக்கனும்"

"அந்த மேடம் அப்படி சொல்லலையே"

"மேடம் நான் என்ன பொய்யா சொல்ல போறேன். நீங்க வேணா அவுங்களையே கேட்டு பாருங்க மேடம்"

"சரி 15 நிமிஷம் தான். அதுக்கு மேல கிடையாது"

"ஒகே மேடம் தேங்ஸ்"

ஒரு வழியா 5 கேள்வியும் எழுத சான்ஸ் கிடைச்சுதுனு உக்கார்ந்து எழுத ஆரம்பிச்சிட்டேன். ஆனா அதுக்குள்ள எல்லாரும் முடிச்சிட்டு பேப்பர் கொடுத்துட்டு வெளிய போயிட்டானுங்க. நான் மட்டும் தனியா உக்கார்ந்து எழுதிட்டு இருந்தேன். மேடம் பாக்கறதுக்கு கொஞ்சம் நல்லவங்க மாதிரி இருந்தாங்க. சரி எவ்வளவு நேரம் தான் கீழ வெச்சி மறைச்சி எழுதறது. மேல வெச்சி எழுதினா சீக்கிரம் எழுதிடலாம். அவுங்களும் நமக்காக வெயிட் பண்ண வேணாம்னு நல்ல எண்ணத்துல, மேலையே பிட்டை வெச்சி எழுத ஆரம்பிச்சிட்டேன்.

அவுங்க பக்கத்துல வந்து பார்த்தாங்க. அப்பவும் இவுங்க ரொம்ப நல்லவங்களாவே இருக்காங்கனு மேலையே வெச்சி எழுதிட்டு இருந்தேன். திடீர்னு அந்த பிட் பேப்பரை பிடுங்கிட்டாங்க.

"என்ன இது? இதுக்கு தான் எக்ஸ்ட்ரா டைம் கேட்டியா?"

எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவுங்களுக்கு என்னுமோ பெருசா சாதிச்ச மாதிரி ஒரு திருப்தி.

"தனியா உக்கார்ந்து எழுதும் போதே இப்படி பண்ற நீ. உனக்கு என்னை பார்த்தா கேணச்சி மாதிரி தெரியுதா?"

ஆமாம்னு உண்மையை சொல்லிடலாமானு கூட பார்த்தேன். பின்ன க்ளாஸே காப்பி அடிச்சிது. அப்ப பிடிக்கல. நானும் மீதி 4 கேள்விக்கு அடிக்கும் போது பிடிக்கல. தனியா எழுதும் போதும் மறைச்சி வெச்சி எழுதும் போது பிடிக்கல. போனா போவுது மேடமை ரொம்ப நேரம் வெயிட் பண்ண வைக்க வேணாம்னு நல்ல எண்ணத்துல மேல வெச்சி எழுதும் போது பிடிச்சிட்டு வீர வசனம் பேசனா என்ன பண்றது?

பேப்பரை குடுத்துட்டு வந்துட்டேன். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். அப்பாடா மாட்டினான்டானு. ஒரு பரிட்சைக்கும் பிட் எழுதாம ஓசி பிட்டுல பாஸானா எல்லாருக்கும் வயித்தெரிச்சல் இருக்கும் தானே.

சரினு டிப்பார்ட்மெண்டுக்கு போய் அந்த வாத்தியார்கிட்ட நடந்ததை சொன்னேன்.
அவர் சிரிச்சிக்கிட்டே "ஏன்டா போன தடவை உனக்கு 50 போட்டு பாசாக்கினேனே. ஒரு கேள்விக்காவது பதில் சரியா எழுதியிருந்தயா? ஏதாவது எழுதி தொலைக்க வேண்டியது தானே?"

"போன தடவை விட்டத இந்த தடவை பிடிக்கலாம்னு தான் முயற்சி செஞ்சேன்" அப்படினு அப்பாவியா சொன்னேன்

"சரி ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்துட்டு போ. நான் பாத்துக்கறேன்" அப்படினு பெருந்தன்மையா சொல்லிட்டாரு.

நானும் வழக்கம் போல "I was writing the test, even after the given time and I will not do this" னு பெருந்தன்மையா செஞ்ச தப்ப ஒரு லெட்டர்ல எழுதி கொடுத்துட்டேன்.

அதுக்கு அடுத்து வீக் எண்ட் முடிஞ்சி திங்க கிழமை வழக்கம் போல 8:45 க்ளாஸிக்கு 9:15க்கு போனேன். பார்த்தா உள்ள HOD நின்னு ஏதோ பேசிட்டு இருந்தாரு. அது அவர் பீரியட் இல்லை. ஏதோ டிப்பார்ட்மெண்ட் விஷயமா எப்பவும் போல பேச வந்திருக்காருனு நினைச்சேன். ஆஹா லேட்டா வந்து மாட்டிக்கிட்டமேனு அவர் பாக்கறதுக்குள்ள அப்படியே எஸ்ஸாயிடலாம்னு பார்த்தேன். அவர் சரியா பாத்துட்டாரு.

என்னை பார்த்துட்டு வந்தாரு, "என்னப்பா பாலாஜி? என்னப்பா இது?" ரொம்ப டென்ஷனா கேட்டாரு

8.45 க்ளாஸிக்கு 8:50க்கு வந்தாலே டென்ஷனாவாரு. இவ்வளவு லேட்டா வந்துட்டமே. எப்படி தப்பிக்கலாம்னு பயங்கரமா யோசிச்சேன். சரி வழக்கம் போல எல்லாரும் சொல்ற பொய்ய சொல்லுவோம்னு முடிவு பண்ணிட்டு

"சார்! ஹாஸ்டல்ல தண்ணி வரலை. அதான்... " அப்படினு இழுத்தேன்

"ஏம்பா ஹாஸ்ட்டல்ல தண்ணி வராததுக்கும் நீ காப்பி அடிச்சதுக்கும் என்னப்பா சம்பந்தம்?" அப்படினு டென்ஷனா கேட்டாரு

ஓ அப்ப லேட்டா வந்ததுக்கு திட்டலயா? இது பழைய மேட்டருக்கா? (பிட் அடிச்சி மாட்டினதையே வீக் எண்ட்ல ஓர் சுத்தனதுல மறந்துட்டேன்.)

"சார்..." அப்படினு இழுத்தேன்.

உடனே அவர் "ஏம்பா பிட் அடிச்சி மாட்னதுக்கூட தப்பில்லை. ஆனா அதை எக்ஸ்ட்ரா டைம் கேட்டு அடிச்சதெல்லாம் ஓவரா தெரியலையா?" அப்படினு ஃபீல் பண்ணாரு

"சார் அந்த மேடம் பாக்க நல்லவங்க மாதிரி இருந்தாங்க... அதான்" அப்படினு நான் இழுக்க.

"மத்த டிப்பார்ட்மெண்ட் ஸ்டாஃகிட்ட மாட்டி இப்படி மானத்தை வாங்கிட்டயேப்பா
சரி டிப்பார்ட்மெண்ட்க்கு வந்து ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதி கொடு. இனிமே இப்படி பண்ணாத" அப்படினு சொல்லிட்டு போயிட்டாரு.

நானும் அதே லெட்டரை இன்னோரு காப்பி போட்டு கொடுத்துட்டேன். பிட் அடிக்கறதெல்லாம் ஒரு தப்புனு ஆளாளுக்கு அப்பாலஜி லெட்டர் எழுத சொல்றாங்கப்பா. யாரோ ஏற்கனவே எழுதி வெச்சதை பார்த்து எழுதனா என்ன? பார்க்காம எழுதனா என்ன? எல்லாமே காப்பி தானே?

Monday, May 28, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - S.J Surya

க: இந்த டெவில் ஷோ நடத்தி ரொம்ப நாளாச்சிப்பா. இவனை பார்த்ததுக்குப்பறம் கண்டிப்பா இவனுக்கு ஒண்ணு நடத்தியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டேன். சரி இன்னைக்கு நம்மகிட்ட மிதி வாங்க வாந்திருக்கும் சிறப்பு விருந்தினர் திரு.சூர்யா. மன்னிக்கனும் திரு.எஸ்.ஜே.சூர்யா. (இவன் இனிஷியல் சொல்லலைனா அப்பாவி ஒருத்தனை திட்டற மாதிரி ஆகிடும்)

இவனை பத்தி எல்லாம் அதிகமா சொல்ல தேவையில்லை.தமிழ்நாட்டு சினிமாக்கு வந்த சாபத்துல ஒண்ணுதான் இது. சரி நிகழ்ச்சிக்கு போகலாம். வாடா கலர் சட்டி மண்டையா. அது என்னடா தலைக்கு மேல கலர் கலரா இருக்கு.

சூ: முடி எப்படி இருக்குனு முக்கியமில்லை அதுக்கு கீழ இருக்கறது எப்படி பயன்படுத்தறன்றது தான் முக்கியம்...

க: டெய் ட்ரிப்பில் மீனிங் மண்டையா... என்ன கொழுப்பு இருந்தா என்கிட்டயே இப்படி பேசுவ

சூ: நான் மூளையை சொன்னேன். இப்படித்தான் நான் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கறாங்க ஆங்...

க: டேய் இந்த டகால்ட்டி எல்லாம் எனகிட்ட வேணாம்... மிதி வாங்கியே செத்துடுவ. நீ எல்லாம் எதுக்குடா நடிக்க வந்த. மக்கள் பாவம் இல்லையா?

சூ: எனக்கு நடிக்கறதுல பெருசா இண்ட்ரஸ்டே இல்லை. நான் நியூ படம் கதையை அஜித் சார்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அந்த கதையை கேட்டு இதுக்கு நீ தான் சரியான ஆள்னு சொல்லிட்டாரு. அதனால தான் நான் நடிக்க வந்தேன்.

க: எங்க அந்த கதையை எப்படி சொன்னனு சொல்லு

சூ: சொல்றேன். அஜித் நான் எப்படி நடிக்கறனு பாருங்க. அதே மாதிரியே நடிக்கனும். நான் பண்ற மாதிரியே இருக்கனும். உங்க ஸ்டைல் வேணாம். நான் இப்படி கையை ஆட்றேன் பாருங்க. அதே மாதிரியே பண்ணனும். சிம்ரன் விசில் மாட்டியிருப்பாங்க. அதையே பாக்கனும். நான் பாக்கறேன் பாருங்க அதே மாதிரி. அத பாத்துக்கிட்டே அவுங்க கிட்ட போகனும். அப்படியே கிரண்கிட்ட நான் பேசற மாதிரியே பேசனும். அவுங்க வீட்டுக்காரர் இல்லாத நேரத்துல அவுங்க வீட்டுக்கு போய் ஆணி அடிக்க உதவி பண்ணனும். நான் சொல்றதை நல்ல கவனிச்சிட்டீங்க இல்லை. என்ன மாதிரியே பண்ணா போதும். சரியானு சொன்னேன்

க: அதுக்கு அவர் என்ன சொன்னாரு

சூ: இந்த கண்றாவிய நீங்களே பண்ணலாம். நான் எதுக்குனு சொன்னாரு.

க: அப்பறம்

சூ: அவர் என் குருநாதர் மாதிரி. எனக்கு வாழ்க்கை தந்தவர். என் ரூம்ல அவர் போட்டோவை வெச்சி தான் கும்பிடறேன். அதனால அவர் சொன்ன மாதிரி நானே நடிக்க வந்துட்டேன். அவர் பேச்சை நான் எப்படி மீற முடியும் ஆங்...

க: டேய் ஓவர் ஆக்டிங் மண்டையா. அவர் நீ சொன்ன கதை கேவலமா இருக்குனு சொன்னதை அப்படியே உல்டாவாக்கிட்டு நீ எங்கள கொடுமை பண்ண வந்துட்ட. ஆமாம்... நீ நம்ம பாண்டு மாதிரியே நடிக்கறனு அவர் நடிகர் சங்கத்துல கம்ப்ளைண்ட் கொடுத்துருக்காறாராமே. என்ன கண்ணா அது?

சூ: நான் யாரை மாதிரியும் நடிக்கல. எப்பவும் வாங்கற காசுக்கு மட்டும் நடிச்சா போதாதுனு நினைக்கிற ஆள் நான். அதனால தான் கொஞ்சம் ஓவரா நடிக்க வேண்டியிருக்கு. அதை தான் நான் ஜோக்கும் சொல்லி கொடுத்தேன். பிக் அப் பண்ணிக்கிட்டாங்க

க: ஏன்டா டபுல் மீனிங் ட்ரிபில் மீனிங்ல பேசிட்டு அலையற?

சூ: என் படத்துல எங்கயாவது அசிங்கமா டயலாக் இருந்த சொல்லுங்க? நான் சினி இண்டஸ்ட்ரிய விட்டே போயிடறேன். நான் டயலாக் அசிங்கமா இருக்கக்கூடாதுனு யோசிச்சி யோசிச்சி எழுதறேன்...

க: ஆமா. டபுல் மீனிங்ல எப்படி எழுதறதுனு யோசிச்சி யோசிச்சி எழுதுடா. அந்த நேரத்துல ஒழுக்கமா ஒரு கதை எழுதனா என்ன உன் சொத்தா குறைஞ்சிடும். உன்னையெல்லாம் முதல்ல பொது நல வழக்கு போட்டு உள்ள தள்ளனும். அது ஏன்டா எல்லா படத்துலயும் பொம்பளை பொறுக்கியாவே அலையற?

சூ: நான் பொண்ணுங்க பின்னாடி போக மாட்டேன். பொண்ணுங்க தான் எல்லா படத்துலயும் என் பின்னாடி வருவாங்க.

க: டேய் நீ நடிச்ச படம் எதுவும் நான் பாத்ததில்லைனு தைரியத்துல பேசிட்டு இருக்க. நான் உன் படம் பாத்ததுக்கு அப்பறம் உனக்கு சங்கு தான். அப்பறம் ஏண்டா சென்சார் போர்ட்ல இருக்கற ஒரு லேடியை செல் போனால அடிச்ச?

சூ: நான் ஒண்ணும் அடிக்கல. செல்போனை தூக்கி போட்டா கேட்ச் பிடிக்கறாங்களானு பார்த்தேன்...

க: ஆமா இவர் க்ரெக் சேப்பல். அவுங்க யுவ்ராஜ் சிங். இவர் கேட்ச் ப்ராக்டீஸ் கொடுக்கறாரு. இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம். அந்த சீன் பாட்டை வைக்கவிடலனு அடம்பிடிச்சி அந்த பொண்ணை செல்போன்ல அடிச்சதுமில்லாம இந்த மாதிரி டக்கால்டி வேலை எல்லாம் பண்ணிட்டு திரியற நீ. அந்த படத்துல கிரண் ரோலை எதுக்குடா கொண்டு வந்த?

சூ: கிரண் அந்த படத்துல ஒரு வார்த்தையாவது ஆபாசமா பேசுனாங்களா? நீங்களே சொல்லுங்க. செவுத்துல ஆணி அடிக்க கூப்பிட்டாங்க. அதுதான் அவுங்க ரோல். அதுக்கு போய் எல்லாம் ஆபாசம்னு சொன்னா நான் என்ன பண்ணுவேன்.

க: இந்த முடிச்சவிக்கித்தனமெல்லாம் என்கிட்ட வேணாம். நானே கேப்மாரிதான்டா. இதுக்கு மேலயும் நீ நல்லவன் மாதிரி எஃபக்ட் கொடுத்தனு வை. அவ்வளவு தான். அப்பறம் ஏதோ படத்துக்கு 36-24-36னு பேர் வைக்கனும்னு சுத்திட்டு இருந்தியே. அது என்ன ராசா?

சூ: அது படத்துல ஹீரோயின் போன் நம்பர். அதை கண்டுபிடிக்க ஹீரோ என்ன என்ன ஆராய்ச்சி பண்றார்னு சொல்றது தான் கதை

க: ஓ... 36-24-36ஐ கண்டுபிடிக்க ஹீரோ பண்ற ஆராய்ச்சி தான் கதையா? அப்பறம் எல்லா ஊர்லயும் போன் நம்பர்க்கு முன்னாடி 2 போட சொல்லிட்டாங்களே.. அப்ப என்ன 236-24-36னு படத்துக்கு பேர் வைப்பயா?

சூ: அதனாலதானே படத்துக்கு BFனு வைக்கலாம்னு முடிவெடுத்தேன்...

க: ஓ! முன்ன சொன்னதவிட இது ரொம்ப நல்ல பேர் இல்லை???

சூ: ஆமாம். அது Best Friendsனு அர்த்தம். ஆனா அதை எல்லாம் அரசியல் பண்ணிட்டாங்க

க: ஆமாம்டா அதுக்கு BFனு தான் வைக்கனும். அதுக்கு மட்டும் இல்லை உன் படத்துக்கு எல்லாம் அப்படி தான் வைக்கனும். இனிமே நீ மட்டும் டைரக்ட் பண்ண, உன்னை பொது நல வழக்குல கேஸ் போட்டு நானே உள்ள தள்ளிடுவேன்.

சூ: அப்ப நடிக்கலாமா?

க: நடிச்சா உன்னை கொல பண்ணிட்டு நான் ஜெயிலுக்கு போயிடுவேன். இதுக்கு மேல இந்த பக்கம் எட்டி பார்க்காத நாயே. ஒழுங்க ஊர பார்த்து ஓடி போயிடு... சொல்லிவிட்டு கவுண்டர் ஒரு கோப லுக் விட எஸ்.ஜே.சூர்யா தலை தெரிக்க ஓடுகிறார்.

Tuesday, May 22, 2007

இதயத்திற்கு...

ஈ-மெயில் ஃபார்வேர்டில் வந்தது... அனைவருக்கும் பயனளிக்கும் என்று பதிவிடுகிறேன்

A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya (Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees.

The transcript of the chat is given below. Useful for everyone.Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet - Less of carbohydrate, more of protein, less oil

2. Exercise - Half an hour's walk, at least five days a week; avoid lifts and avoid sitting for a longtime
3. Quit smoking
4. Control weight
5. Control blood pressure and sugar


Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No


Qn: It's still a grave shock to hear that some apparently healthy person

gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past the age of 30 to undergo routine health checkups.


Qn: Are heart diseases hereditary?

Ans: Yes


Qn: What are the ways in which the heart is stressed? What practices do you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in everything in life.

Qn: Is walking better than jogging or is more intensive exercise required to keep a healthy heart?

Ans: Walking is better than jogging since jogging leads to early fatigue and injury to joints.


Qn: You have done so much for the poor and needy. What has inspired you to do so?

Ans: Mother Theresa, who was my patient.


Qn: Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare


Qn: Does cholesterol accumulates right from an early age

(I'm currently only 22) or do you have to worry about it only after you are above 30 years of age?
Ans: Cholesterol accumulates from childhood.


Qn: How do irregular eating habits affect the heart?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your body's enzyme release for digestion gets confused.


Qn: How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and eat walnut.


Qn: Can yoga prevent heart ailments?

Ans: Yoga helps.


Qn: Which is the best and worst food for the heart?

Ans:
Fruits and vegetables are the best and the worst is oil.

Qn: Which oil is better - groundnut, sunflower, olive?

Ans: All oils are bad.


Qn: What is the routine checkup one should go through? Is there any specific test?

Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok. Check BP, Treadmill test after an echo.


Qn: What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position,
place an aspirin tablet under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a coronary care unit since the maximum casualty takes place within the first hour.

Qn: How do you differentiate between pain caused by a heart attack and that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.


Qn: What is the main cause of a steep increase in heart problems amongst youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, sedentary lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people are genetically three times more vulnerable for heart attacks than Europeans and Americans.


Qn: Is it possible for a person to have BP outside the normal range of 120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.


Qn: Marriages within close relatives can lead to heart problems for the child. Is it true?

Ans: Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may not have a software engineer as a child


Qn: Many of us have an irregular daily routine and many a times we have to stay late nights in office. Does this affect our heart? What precautions would you recommend?

Ans: When you are young, nature protects you against all these irregularities. However, as you grow older, respect the biological clock.


Qn: Will taking anti-hypertensive drugs cause some other complications (short / long term)?

Ans: Yes, most drugs have some side effects. However, modern anti-hypertensive drugs are extremely safe.


Qn: Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans: No.


Qn: Are asthma patients more prone to heart disease?

Ans: No.


Qn: How would you define junk food?

Ans: Fried food like Kentucky, McDonalds, samosas, and even masala dosas.


Qn: You mentioned that Indians are three times more vulnerable. What is the reason for this, as Europeans and Americans also eat a lot of junk food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians are vulnerable for the most expensive disease.


Qn: Does consuming bananas help reduce hypertension?

Ans: No.


Qn: Can a person help himself during a heart attack (Because we see a lot of forwarded emails on this)?

Ans: Yes. Lie down comfortably and put an aspirin tablet of any description under the tongue and ask someone to take you to the nearest coronary care unit without any delay and do not wait for the ambulance since most of the time, the ambulance does not turn up.


Qn: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to heart problems?

Ans: No. But it is ideal to have normal hemoglobin level to increase your exercise capacity.


Qn: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So, does walking while doing daily chores at home or climbing the stairs in the house, work as a substitute for exercise?

Ans: Certainly. Avoid sitting continuously for more than half an hour and even the act of getting out of the chair and going to another chair and sitting helps a lot.


Qn: Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship, since diabetics are more vulnerable to heart attacks than non-diabetics.


Qn: What are the things one needs to take care of after a heart operation?

Ans: Diet, exercise, drugs on time
, Control cholesterol, BP, weight.

Qn: Are people working on night shifts more vulnerable to heart disease when compared to day shift workers?

Ans: No.


Qn: What are the modern anti-hypertensive drugs?

Ans: There are hundreds of drugs and your doctor will chose the right combination for your problem, but my suggestion is to avoid the drugs and go for natural ways of controlling blood pressure by walk, diet to reduce weight and changing attitudes towards lifestyles.


Qn: Does dispirin or similar headache pills increase the risk of heart attacks?

Ans: No.


Qn: Why is the rate of heart attacks more in men than in women?

Ans: Nature protects women till the age of 45.


Qn: How can one keep the heart in a good condition?

Ans: Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke and, go for health checkup
s if you are past the age of 30 ( once in six months recommended)...

Send it to all your nearest and dearest....

ர...ரா

ட்ரிங் ட்ரிங்... ட்ரிங் ட்ரிங்

"சனிக்கிழமை அதுவுமா காலைல எவன்டா போன் பண்றது???" முதல் நாள் இரவு அடித்த சரக்கு இன்னும் வேலை செய்து கொண்டிருந்தது.

"என்ன இன்னும் தூக்கமா?" எதிர் முறையில் ஒரு பெண் குரல்

"ஐயய்யோ.. அதெல்லாம் இல்லை டியர்... நான் எப்பவோ எழுந்து பேப்பர் படிச்சிட்டு இருக்கேன். நீ சொல்லு டியர்"

"பேப்பர் படிக்கிறேனு சொல்லாத. Bangalore Timesல சீன் பாத்துட்டு இருக்கேனு சொல்லு"

"ஹி ஹி ஹி"

"சரி... நான் என் ஃபிரெண்ட் பர்த்டேக்கு கிரிட்டிங்ஸ் வாங்கனும். இன்னும் அரை மணி நேரத்துல ஃபோரம்ல இருக்கனும்"

"சரி டியர்... இன்னும் 20 நிமிஷத்துல உன் PG முன்னால இருப்பேன்"

"சரியா இருபது நிமிஷம்... ஒரு நிமிஷம் லேட்டானாலும் அப்பறம் நான் ஆட்டோல போயிடுவேன்"

"நோ டியர்... நான் இருபது நிமிஷத்துல இருப்பேன்"

இணைப்பு துண்டிக்கப்பட்டது...

வழக்கம் போல நம் நாயகன் வேகமாக கிளம்புகிறார்... நண்பனுடைய புது டி-சர்ட்டும் ஜீன் பேண்டும் போட்டு வண்டியை எடுத்து கிளம்புகிறார்...

5 நிமிடம் தாமதமாகிவிடுகிறது...

நாயகிக்கு போன் போடுகிறார் நாயகன்

நாயகன் வராத கடுப்பில் "சொன்ன நேரத்துக்கு வராம இப்ப எதுக்கு போன் கால்"

"இல்லைடா செல்லம்... ட்ராபிக்ல கொஞ்சம் லேட் ஆகிடுச்சி"

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்ப Forum பக்கம் வந்துட்டேன். சீக்கிரம் கிரிட்டிங் கார்ட் வாங்கிட்டு அப்படியே என் பிரெண்ட் வீட்டுக்கு போயிடுவேன். நீங்க உங்க ரூம் போய் தூங்கலாம்" சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தால் நாயகி

நாயகன் டென்ஷனாகி வேகமாக ஃபோரம் சென்று லேண்ட் மார்க்கிற்குள் நுழைகிறார்...

அங்கே இரண்டு பெண்கள் தமிழ் புத்தகங்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள்...

நாயகனுக்குள் இருந்த எலக்கியவாதி மற்றும் கவுஞர் விழித்து கொண்டார்... வேகமாக அந்த தமிழ் புத்தகங்கள் பகுதிக்கு சென்று ஒவ்வொரு புத்தகமாக எடுத்து புரட்ட ஆரம்பித்தார்...

அந்த பெண்களில் ஒருவர் இவரை பார்த்து

"ஹே உங்களை நான் எங்கயோ பார்த்திருக்கேனே... நீங்க ப்ளாகர் தானே?" அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது

நாயகன் பெருமிதத்தோடு... "ஆமாம்... நான் வெறும் வலைப்பதிபவன் மட்டும் அல்ல... பேசிக்கலி நான் ஒரு இலக்கியவாதி, கவிதைகளின் காதலன். அதுக்கு ப்ளாக் ஒரு கருவி... அவ்வளவு தான்" என்று பில்ட் அப் கொடுத்து கொண்டிருந்தார்

"ஐயய்யோ இந்த நேரம் பார்த்து நான் நோட் புக் வேற எதுவும் கொண்டு வரலையே... எப்படி ஆட்டோகிராஃப் வாங்குவேன்" பரிதாபமாக கேட்டு கொண்டிருந்தார் அந்த பெண்...

"நான் வேணா உங்க கைல போடறேன்... நீங்க உங்க வீட்டுக்கு போய் அதை பார்த்து உங்க நோட்ல போட்டுக்கோங்க"

"வாவ்... இவ்ளோ புத்திசாலியா இருக்கறதால தான் நீங்க ப்ளாக் எல்லாம் வெச்சி பெரிய எழுத்தாளரா இருக்கீங்க"

அந்த பெண் கையை நீட்ட. அதை பிடிக்க போகும் முன் ஒரு கை நாயகனின் கையை தடுக்கிறது... ஆம் அது நாயகியே தான்

"இதுக்கு தான் நீ போட்டோ போட்டு ப்ளாக் எழுதனியா?" சொல்லி நாயகனை ஃபோரம் முழுதும் துரத்தி துரத்தி அடி பின்னி எடுக்கிறார் நாயகி...

"ஒழுங்கு மரியாதையா நாளைக்கு போட்டோவை தூக்கர... இல்லை நடக்கறதே வேற" சொல்லிவிட்டு நாயகி நாயகனை St.John's Hospitalலில் அட்மிட் செய்கிறார்...

அடுத்த நாள் நாயகன் போட்ட பதிவு தான் இது ;)

Sunday, May 20, 2007

கோவில்கள் கடவுளுக்காகவா?

கோவில்கள் கடவுளுக்காக கட்டப்பட்டனவா அல்லது மனிதனுக்காக கட்டப்பட்டனவா?

கேள்வி புரியலைனா தெளிவா கேக்கறேன்.
1 கோவில், கடவுள் தன்னை மனிதன் தொழ வேண்டும் என்று கடவுள் சொல்லி கட்டப்பட்டதா? அல்லது
2 மனிதன், இறைவனை வணங்க தனக்கு ஒரு இடம் வேண்டும் என்று கட்டப்பட்டதா?

எனக்கு தெரிஞ்சி எந்த சாமியும் என்னை நீ கும்பிடனும் அதுவும் இந்த மாதிரி மந்திரம் சொல்லி தான் கும்பிடனும்னு எங்கயும் சொன்ன மாதிரி தெரியல. அப்படி இருக்கும் போது நாங்க சாமி கும்பிடனும்னு எங்களுக்காக எங்க மண்ல கட்டப்பட்டிருக்கும் கோவில்ல எங்க மொழில சாமி கும்பிடனும்னு சொல்றது எந்த விதத்துல தப்பு?

நான் என்ன சொல்ல வரனு இந்நேரம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். தில்லை நடராஜர் கோவில்ல ஆறுமுகப்பாவலர் தேவாரம் திருவாசகம் ஓதறது என்ன தப்பு? கேட்டா அவர் நாத்திகர், விஷமி இப்படியெல்லாம் சொல்றது உண்மையாலுமே ஆத்திகர்களுக்குத்தான் கேவலம். அவர் என்ன இழவு பாட்டை பாடினாரா? அல்லது வேற ஏதாவது பாடினாரா? திருவாசகத்திற்குருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்னு சொல்ற திருவாசகத்தை தானே பாடினார்.

மரா மரம்னு அர்த்தம் தெரியாம சொன்ன ஒரு திருடனே உலகம் போற்றும் ராமாயணம் எழுதும் போது. தேவாரம் திருவாசகத்தை நம்பிக்கையில்லாத ஒருவர் பாடினால் அதில் மனமுருகியே அவர் ஆத்திகராகவும் வாய்ப்புக்கள் இருக்காதா? அதுவுமில்லாம உங்களுக்கு எனக்கும் தான் நாத்திகர் ஆத்திகர் என்கிற பாகுபாடெல்லாம். ஈசனுக்கு அப்படியல்ல. அவனை துதிக்கும் பாடலை நம்பிக்கையில்லாதவர் பாடினாலும் அது அவனையே சேரும்.

அப்படி இருக்கும் போது அங்கே தமிழ் வேதங்கள் ஒலிப்பதில் என்ன தவறு? அதை சொல்பவர் நாத்திகராயிருந்தாலென்ன, ஆத்திகரா இருந்தால் என்ன? பாடும் பாடல்தானே முக்கியம்.

இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு, கோவில்கள்ல அர்ச்சகராவதற்கும் பாடங்கள் வைக்க வேண்டும். அதில் படித்து தேர்வானவர்கள் அவர்கள் மதிப்பெண்ணிற்கேற்றவாறு, படிப்பிற்கேற்றவாறு அந்தந்த கோவில்களில் அர்ச்சகராக வேண்டும். இதில் நிச்சயம் இட ஒதுக்கீடு வேண்டும்.

அப்பன் சொத்து வேணா பையனுக்கு இருக்கலாம். ஆனா கோவில் எவன் சொத்தும் இல்லை. அது ஊர் பொது சொத்து. சும்மா அப்பா அர்ச்சகரா இருந்தாரு. அவர்ட படிச்சி நானும் கோவில்ல மந்திரம் சொல்றேனு சொல்ற பசங்களை எல்லாம் நம்ப முடியாது. இவன் சொல்றது சரியா தப்பானு கூட நம்ம யாருக்கும் புரியாது. அப்படி இருக்கும் போது இவனுங்க பேச்சை எல்லாம் ஒரு பொருட்டாவே எடுத்துக்கூடாது.

ஏன்யா படிச்சி ராக்கெட் விடறோம், இந்த கோவில்களை பாத்துக்க மாட்டோமா?

எல்லாரும் சமம்னு இட ஒதுக்கீடுக்கெதிரா சொல்றவங்க இங்க வந்து கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்.

டிஸ்கி - இது இந்து மதத்தை பத்தி மட்டும் தான் எழுதியிருக்கேன். மத்த மதத்தை பத்தி இங்க பேச தேவையில்லை. ஏன்னா அது அவுங்க கவலை. எனக்கு அதை பத்தி கவலையில்லை.

மன்னிக்க வேண்டுகிறேன்...
இந்த பதிவில் குறிப்பிட்டதை போல் தில்லையில் அந்த குறிப்பிட்ட இடத்தில் தமிழில் பாடுவது மட்டும் தடையல்ல... அந்த மேடையில் தீட்சகர்களை தவிர மற்றவர்கள் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கே நாம் சென்று சமஸ்கிரதத்திலும் பாட அனுமதியில்லையாம். அதனால் அது மொழி சம்பந்தப்பட்டது அல்லவென்று அறிகிறேன்...

விரைவில் நேரில் சென்று தெளிவாக பார்த்துவிட்டு வந்து பதிவிடுகிறேன். தவறுதலான செய்திக்கு மன்னிக்கவும்.

ஆனால் இதன் மூலம் நான் சொல்ல வந்த "இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வு, கோவில்கள்ல அர்ச்சகராவதற்கும் பாடங்கள் வைக்க வேண்டும். அதில் படித்து தேர்வானவர்கள் அவர்கள் மதிப்பெண்ணிற்கேற்றவாறு, படிப்பிற்கேற்றவாறு அந்தந்த கோவில்களில் அர்ச்சகராக வேண்டும். இதில் நிச்சயம் இட ஒதுக்கீடு வேண்டும். கோவில் பொது சொத்து . வெறும் பரம்பரை தொழிலாக இது பாவிக்கலாகாது" இந்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை...

Wednesday, May 16, 2007

ஆச்சுங்க ஒரு வருஷம்

ஒரு செவ்வாய் கிழமை...

என்விரான்மெண்ட் 12 மணியிலிருந்து டவுனாயிடும்... நீங்க வேணும்னா 12 மணிக்கே கிளம்பிடுங்கனு சொல்லிட்டாங்க... அமெரிக்கா வந்து 3 மாதங்களாகியிருந்தது. தமிழ் வலைப்பூக்கள் அறிமுகம் சில நாட்களாக இருந்தது.

வீட்ல போய் என்ன செய்யறதுனே தெரியாம, சரி நாமலும் ஏன் ப்ளாக் ஆரம்பிக்கக்கூடாதுனு யோசிச்சேன். ஆனா என்ன பேர் வைக்கறதுனு தெரியல. சரி வெட்டியாதானே ஆரம்பிக்கறோம், அதனால வெட்டிப்பயல்னு பேர் வைப்போம்னு வெச்சிட்டேன். எப்படியும் என்னை பத்தி யாருக்கும் தெரியக்கூடாதுனு ஒரு எண்ணம் இருந்துச்சு.

முக்கியமான காரணம் உனக்கெல்லாம் எதுக்குடா இந்த ஆசைனு எல்லாம் ஓட்டுவாங்கனு தான். நானே எல்லாத்தையும் பயங்கரமா ஓட்டுவேன். (ஆனா வலைப்பதிவுல மட்டும் அமைதியா யாரையும் ஓட்டாம ஒரு வருஷம் ஓட்டிட்டேன்). சரி பேர் சூப்பரா புடிச்சாச்சி. ஆனா என்ன எழுதறதுனு தெரியல. வணக்கம்னு ஒரு பதிவு போட்டேன். அப்பறம் என்ன எழுதறதுனு யோசிச்சா ஒண்ணுமே எழுத வரல... என்னடா இது நிறைய எழுதலாம்னு ஆசையா இருக்கு ஆனா எதுவுமே எழுத வர மாட்டீங்குதேனு ரொம்ப ஃபீலாங்காகி ஒரு பதிவு போட்டேன்... அதுக்கு அடுத்த நாளே எனக்கு பிடிச்ச சினிமா பத்தி ஒரு பதிவு.

அவ்வளவுதான்... அதுக்கு அப்பறம் ஒரு 40 நாள் எதுவும் எழுதல. அப்பறம் தமிழ்மணத்துல சேர்ந்தா மத்தவங்க கொடுக்கற ஊக்கத்துலயாவது எழுதலாம்னு சேர்ந்தேன். அந்த முதல் நாள் மாதிரி தான் இப்பவும் எழுதனும்னு அருவியா கொட்டுது ஆனா உக்கார்ந்தா மட்டும் அந்த வார்த்தைங்க தான் வர மாட்டீங்குது...

இப்ப வரைக்கும் ஏதோ எழுதிட்டு இருக்கேன்...

இந்த ஒரு வருஷமா நான் எழுத பெரிதும் உதவியாக இருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி...

Tuesday, May 15, 2007

பார்த்த ஞாபகம் இல்லையோ - 2

முதல் பகுதி படிக்க இங்கே சொடுக்கவும்

அந்த அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெரிய அளவில் கூட்டமில்லையென்றாலும், ஓரளவு கூட்டமிருந்தது.

எந்த க்ரூப் எடுப்பது என்று அங்கே நின்றிருந்த பெண்களின் பெற்றோர்கள் ஓரளவு தீர்மானித்திருந்தனர். காவேரியின் பத்தாம் வகுப்பு வகுப்பாசிரியர் அவளுக்கு "ஏ" க்ரூப் எடுக்குமாறு சொல்லி அனுப்பியிருந்தார். அவளுக்கு அது என்னவென்று பெரிதாக தெரியாத நிலையிலும், அது படித்தால் மேற்கொண்டு என்னவேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று அவர் சொல்லியிருந்த காரணத்தால் அவள் அந்த க்ரூப்பையே தெர்ந்தெடுத்திருந்தாள்.

ஒவ்வொருவராக பள்ளி முதல்வர் அறையில் சென்று அவர்களுக்குரிய க்ரூப்பை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தனர். காவேரி சென்ற பொழுது உள்ளே முதல்வருடன் மூன்று ஆசிரியைகள் நின்றிருந்தனர்.

சிகப்பு புடவை கட்டியிருந்த ஆசிரியை, காவேரியிடம் பேச ஆரம்பித்தார்.

"இங்க பாரும்மா. நீ கேட்ட க்ரூப்ல சீட்டு தீர்ந்துடுச்சி. மொத்தம் 60 பேரு தான் ஒரு வகுப்புல. எல்லா சீட்டும் முடிஞ்சிடுச்சி. அதனால நீ வேற எதாவது க்ரூப் எடுத்துக்கோ"

இதை கேட்டதும் காவேரிக்கு எதுவும் புரியவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு க்ரூப் மட்டும் தான்.

பக்கத்திலிருந்த கண்ணாடி அணிந்திருந்த டீச்சர் அவள் திருதிருவென்று முழிப்பதை பார்த்து புரிந்து கொண்டார்

"இங்க பாரும்மா, முதல் குருப் கிடைக்காதவங்க ப்யூர் சயின்ஸ் எடுப்பாங்க, இல்லைனா தையல் பாடம் எடுக்கலாம். உனக்கு எது விருப்பம்னு சொல்லு"

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. தையல் படிக்கறதுன்னா அப்பா வீட்லயே படிக்கலாம்னு சொல்லுவாரு. பக்கத்து வீட்டு சரசு அக்காவைவிட வேற யார் நல்லா தைச்சிட போறாங்க. அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே அந்த சிகப்பு புடவை டீச்சர் பேச துவங்கினார்.

"புதுசா வந்திருக்க க்ரூப்பை விட்டுட்டீங்களே டீச்சர். கம்ப்யூட்டருக்குனு புது க்ரூப் வந்திருக்குமா. ஆனா இங்க யாருக்கும் பெருசா சொல்லி தர தெரியாது. ஆனா அதுல கணிதம், இயற்பியல், வேதியல் எல்லாம் இருக்கு. இந்த உயிரியல் பாடம் மட்டுமில்ல. "

அவர் சொல்லியதை கேட்டதும் அதையே படிக்கலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டாள். அவர்களிடம் அதற்கான சம்மதமும் சொல்லிவிட்டு வந்தாள். அப்பாவுடன் கிராமத்திற்கு புறப்படும் போது அவளுக்கு ஒருவித வருத்தம் கலந்த பயமே மனதில் படர்ந்திருந்தது.

தினமும் கிராமத்திலிருந்து பேருந்து மூலமாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள் காவேரி. அவள் பக்கத்து தெருவிலிருந்த செண்பகமும் அதே வகுப்பில் அவளுடன் படித்து கொண்டிருந்தது அவளுக்கு ஒருவிதத்தில் தைரியத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்தது. ஒரு வழியாக பள்ளியில் சேர்ந்து ஒன்றரை மாதங்களாகியிருந்தது.

முதல் மாதம் நடந்த மாத தேர்வில் வேதியியலில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். அதில் காவேரியும் அடக்கம். அவளுக்கு நினைத்து பார்க்கவே வெட்கமாக இருந்தது. இது வரை கிராமத்து பள்ளியில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து வந்தவளுக்கு இந்த தோல்வி ஒரு வகையில் அதிர்ச்சியே.

பின்னர் செண்பகம் சொல்லி தான் அவளுக்கு விஷயம் புரிந்தது. அந்த டீச்சரிடம் டியூஷன் படிக்கும் மாணவிகள் மட்டுமே தெர்ச்சி பெற்றிருப்பதாகவும், மற்றவர்கள் எல்லாம் வேண்டுமென்றே ஃபெயிலாக்கினார் என்றும் புரிந்தது. அவரிடம் கண்டிப்பாக டியூஷன் சேர வேண்டும் என்ற உண்மை அவளுக்கு புரிய ஆரம்பித்தது. வகுப்பில் இருக்கும் அனைவரும் அவரிடம் டியுஷன் சேர்ந்தனர். காவிரிக்கு அப்பாவிடமிருந்து டியூனுக்கு முப்பது ரூபாய் வாங்குவதே அவளுக்கு பெரிய விஷயமாக பட்டது.

அவள் டியூஷன் போன போது அந்த வீட்டிலிருந்து மாணவர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வேதியியல் டீச்சரின் வீட்டுக்காரர், ஆண்கள் பள்ளியில் கணக்கு வாத்தியாராம். நன்றாக கணக்கு பாடம் சொல்லி தரக்கூடியவர். அவர் வீட்டில் மாணவர்கள் கூட்டம் குவிந்திருக்கும். ஆனால் அதன் இன்னொரு முக்கிய காரணம் வேதியியல் டீச்சரிடம் படிக்கும் பெண் பிள்ளைகள் தான் என்பது அவருக்கும் தெரியாமலில்லை.

அப்படி ஒரு நாள் அவள் டியூஷனிலிருந்து வரும் போது தான் வினோத்தை பார்த்தாள்...

(தொடரும்...)

....................................................................................................................................

நண்பர்களே

இந்த தொடர்கதை மூலம் ஒரு புதிய முயற்சி.
இந்தக் கதை தொடர்கதையாக வலைப்பதிவு சங்கிலி வழியாக எடுத்துச் செல்லப் படும்.

இந்த தொடரின் அத்தியாயங்களை வெவ்வேறு பதிவர்கள் தொடர வேண்டும்.

இதே தலைப்பில் தொடர் எண் இட்டு எழுதப் பட வேண்டும்.

ஒவ்வொருவரும் கதையை எழுதி இந்த குறிப்பை இறுதியில் இட்டு அடுத்து தொடர இன்னொருவரை அழைக்க வேண்டும்.

இந்த வித்தியாசமான முயற்சிக்கு தோள் கொடுக்க வாருங்கள்.

மூன்றாவது அத்தியாயத்தை எழுத காதல் ஆராய்ச்சியாளர், தன்னடக்கத்தின் மொத்த உருவம் அண்ணன் CVR அவர்களை அழைக்கிறேன்.

Monday, May 14, 2007

தியாகிகள் தேவை

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.

நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும். எப்படி? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா, ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.

ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட், கார், 29 இன்ச் கலர் டீவி, வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம். பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Litrecy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா, வாக்காளர் அடையாள அட்டை இல்லை, ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம். கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம்.

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம்.

எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம். வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம். இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி, ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.

ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?

அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம். எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது.

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான்... மக்கள்னா வேற யாரும் இல்லை. நாமதான்...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான்)

பின்குறிப்பு:
இந்த கட்டுரை சற்றுமுன் போட்டிக்காக, சமூகம் பிரிவுக்காக எழுதியது. நீங்களும் ஆளுக்கு ஒரு பிரிவா எழுதுங்க. நிறைய பரிசு கொடுக்கறாங்க. அதனால அடிச்சி ஆடுங்க மக்கா...

Friday, May 04, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 2

உள்ள போனவுடனே அறிமுகப்படலம் முடிஞ்சிது...

அப்பறம் அங்கே பேசியதை தென்றலும், KRSம் எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிட்டாங்க. அப்பறம் இன்னாத்துக்கு நீ எழுதறனு கேக்காதீங்க. அதுல அவங்க சொன்ன ஒரு சில விஷயத்தை இன்னும் விளக்கமா சொல்லிடலாம்னு பாக்கறேன்.

விக்கிப்பீடியா தமிழ்ல 10,000 இடுகைகள் இருக்குனு பார்த்த கொத்ஸ் ஆச்சரியப்பட்டு போயிட்டாரு. அவர்களோட சேர்ந்து நம்ம எல்லாரும் தோள் கொடுக்கனும். தமிழ்ல தேடினா கிடைக்காததே இல்லைனு ஒரு நிலையை உருவாக்கனும்னு சொல்லி ஃபீல் பண்ணாரு. அதுக்கு என்னவெல்லாம் செய்யலாம்னு யோசிக்கும் போது வந்த கருத்துக்கள்

- விக்கிப்பீடியாக்குனு ஒரு ஃபார்மெட் இருக்கு. அதே ஃபார்மேட்ல எழுதினா தான் அதுல போட முடியும். அதனால அதுக்குனு ஒரு குழு மாதிரி ஆரம்பிச்சி, நம்ம பதிவர்கள் எழுதுற கட்டுரைகளை அந்த பாணிக்கு மாத்தி வீக்கிப்பீடியால ஏத்திட்டு, அந்த பதிவருக்கும் ஒரு லிங் கொடுத்தா அடுத்து அவரே அதே போல் எழுத ஒரு தூண்டுகோளாக இருக்கும். அதே மாதிரி நல்ல கட்டுரைகளை பாக்கறவங்க அந்த குழுவிற்கு தெரிவிக்கலாம்.
அவர்கள் உதவுவார்கள்.

- ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகளை மொழி பெயர்க்கலாம். ஒரு சிலருக்கு கதை, கவிதை எழுத வராமலிருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதை போல் ஆங்கிலத்திலிருக்கும் கட்டுரையை மொழி பெயர்ப்பது எளிதாக இருக்கலாம். தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பிலிருப்பவர்களுக்கு இதை போல் எழுதுவது சுலபமாக இருக்கலாம்.

- முடிந்த அளவு அனைத்து வலைப்பதிவர்களும் விக்கி தமிழிற்கு ஒரு லிங் கொடுக்கலாம்.

- வாரத்திற்கு ஒரு 4-5 தலைப்பு கொடுத்து அதை எழுத சொல்லலாம். இல்லையென்றால் ஆறு விளையாட்டு மாதிரி ஒரு விளையாட்டு ஆரம்பிச்சி ஒரு பதிவை எழுதி விக்கியில் போட சொல்லலாம்.

- எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இதை செய்யனும்னு யோசிக்கறீங்களா? நமக்கு தேவையான தகவல்கள் தமிழில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்குமென்றால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு என்ன?

- இது இப்ப ரொம்ப பெரிய விஷயமா தெரியலாம். ஆனா எழுத பழகிவிட்டதென்றால் அப்பறம் அடிச்சி ஆடலாம். சிறுதுளி பெருவெள்ளம்...

என்ன எல்லாம் ரெடிதானே???

கொத்ஸ் வந்து நீங்க ஆரம்பிங்க...

பதிவுலகில் ஆக்டிவிசம் எந்த அளவு சாத்தியம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது...

திருநேல்வேலியிலிருக்கும் ஒருவருக்கு மருத்துவ ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ ஒரு உதவி தேவைப்பட்டால் அது வலைப்பதிபவர்களால் எந்த அளவுக்கு உதவமுடியும் என்று ஆரம்பித்தார்கள்.

என்றென்றும் அன்புடன் பாலா, செந்தழல் ரவி போல் ஓரிருவர் செய்யும் உதவி போல் பெருமளவு செய்யக்கூடிய சாத்தியம் என்ன? என்று விவாதிக்கப்பட்டது. பாபா, இதை நீங்க தொடருங்க.


அடுத்து தமிழ்மண முக்கோண பட்டன் குறித்து பேசினாங்க...

தமிழ்சசி சிரிச்ச முகத்தோட பதில் சொன்னாரு. ஒரு நாளைக்கு 100 கணக்குல வருதுங்கனு. அவர் சொல்லும் போதுதான் ப்ராக்டிக்கலா ஒரு திரட்டில எவ்வளவு கஷ்டம்னு புரியுது. ஒரு குருப் பதிவு போட்டா அதுக்கு எதிர் குருப்ல இருந்து வரும்னு சொன்னாரு. தமிழ்மணத்துல இருக்கற எல்லாரும் இதை சுலபமா புரிஞ்சிக்கலாம்.

அதே மாதிரி எந்த ஒரு முடிவும் தனியா எடுக்கறதில்லை. எல்லாத்தையும் குழுவா சேர்ந்து தான் பண்றோம்னு சொன்னாரு.

அடுத்து user customization செய்யலாம்னு இருக்கோம். அதை செஞ்சிட்டா பாதி பிரச்சனை குறைஞ்சிடும்னு சொன்னார். அதுக்காகத்தான் ஆவலோட இருக்கேன்.

அப்பறம் புதுசா பதிவெழுத போவதாக சொல்லி சம்பத் என்பவர் வந்திருந்தார். எங்களின் உரையாடல்களுக்கு பிறகு கண்டிப்பாக மனதை மாத்தியிருப்பார்னு நினைக்கிறேன்... (இவனுங்க மொக்கை தாங்க முடியலைடானு)

பத்மா அரவிந்த மேடம் வயதான இந்தியர்களுக்கு எவ்வாறு இன்சூரன்ஸில் உதவுவது அப்பறம் இயற்கை சீற்றங்களில் உயிரிழக்கும் இந்தியர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு ஒரு பொதுவான வழி கொண்டு வருவது குறித்து பேசினார்.

அடத்ததாக ஜெயஸ்ரீ குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையில் தமிழ் சொல்லி தருவதற்காக அவர் எடுத்து கொண்ட முயற்சிகளை வலையெற்றுவது குறித்து பேசினார்.

VSK ஐயா மைசூர்பா கொடுத்து அசத்தினார். அதைவிட பல மடங்கு சுவையான திருவாசகத்தையும் பரிசளித்தார். சில நாட்களாக எனக்கு இருந்த ஒரு சந்தேகத்தையும் அவரிடம் தெளிவுபடுத்தி கொண்டேன். அது என்ன விஜய டீ ராஜேந்தர் மாதிரி விஜய SKவா என்று கேட்டேன். அதற்கு SK என்ற பெயரில் அவரைவிட வயதில் பெரிய ஒருவர் இருப்பதால் மாற்றிவிட்டேன் என்று கூறினார். (மனதிற்குள் உனக்கு எதுவும் பிரச்சனையில்லை உன்னைவிட பெரிய வெட்டி யாரும் இல்லை என்று நினைத்திருப்பாரோ??). SK ஐயா பழக இனிமையானவர்.

அப்பறம் எங்க மாவட்டத்துக்காரர் நெய்வேலி விச்சு இருந்தாரு. நான் புனித வளனார்னு சொன்னவுடனே ரட்சகர்னு பிரின்சிபால் பெயரை சொல்லி மனதில் மகிழ்ச்சியை வர வைத்தார். (I love my school like anything...) அப்பறம் அவர் ரொம்ப நாளைக்கு முன்னாடி எழுதிய கதையை பற்றி சொன்னார். நான் கண்டிப்பா படிக்கிறேனு வழக்கம் போல சொல்லிட்டு எப்பவும் போல மறந்துட்டேன்.

அப்பறம் எடிசன் ரங்கா மைசூர்பா சாப்பிட்டதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்று சொன்னார். நாங்களும் யாரிடமும் சொல்லவில்லை :-)

புலி, ஷைலஜா அக்கா, சந்தோஷ் தொலைபேசியில் அழைத்து பேசினர்.

அப்பறம் பாபாவோட பத்து கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்னு ஏற்கனவே தயாராகாதது ரொம்ப நல்லதா போயிடுச்சி. (நேரமில்லை)

கொத்ஸ்ம், KRSம் எவ்வளவோ சொல்லியும் எங்களால் சாப்பிட போக இயலவில்லை. மதியம் சாப்பிட்டதே வயிறு முழுக்க இருந்துச்சி. அப்பறம் மைசூர்பா, நெய் முறுக்கு, கிரிம் பீஸ்கட், Diet Pepsi Lime (இதை யாருங்க செலக்ட் செஞ்சது???), பாப் கார்ன், சிப்ஸ், சல்சா அவ்வளவு தான்பா... எல்லாத்தையும் சாப்பிட்டு அதுக்கு மேல என்ன சாப்பிட முடியும்?

ஒரு வழியா புறப்பட்டு வந்து சேர்ந்தோம். தென்றல்தான் பாவம், என் மொக்கைய பாபா பல தடவை கேட்டிருக்கிறார். வழி முழுக்க நான் போட்ட மொக்கைய தாங்கிட்டு மனுசன் ரொம்ப தெளிவா வீட்டுக்கு வழி சொன்னாரு... அப்பறம் பாபா என்னை வீட்ல இறக்கிவிடும் போது 12:30.

அதுக்கு மேல வந்து கமெண்ட் மாடரேஷன் எல்லாம் பண்ணிட்டு, காலைல இருந்து வந்த பதிவெல்லாம் படிச்சி முடிச்சிட்டு படுக்கும் போது 3. அடுத்த நாள் காலை 7:30க்கு எல்லாம் போனை போட்டு ஆன்லைன் வர சொல்லி ஆணி புடுங்க சொல்லிட்டானுங்க :-(

இப்படி ஒரு வழியாக வெற்றிகரமாக முடிந்தது நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு...

கொத்ஸ், KRS மிக்க நன்றி... பட்டையை கிளப்பிட்டீங்க...

Thursday, May 03, 2007

வலைப்பதிவர் சந்திப்பு - நியு ஜெர்சி - 1

வலைப்பதிவர் சந்திப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னே என் டீம் லீடரிடம் சொல்லி வைத்தேன். எந்த காரணத்திற்காகவும் இந்த வார சனிக்கிழமை என்னால் வேலை செய்ய முடியாது. ஒரு முக்கியமான சொந்த வேலை இருக்கிறது என்று. இதை தான் சொந்த செலவுல சூனியம்னு நம்ம வலைப்பதிவுலகில் சொல்றாங்க. சரி சனிக்கிழமை தானே சொந்த வேலை, அப்ப ஞாயித்தி கிழமை பையன் சும்மா தான் இருக்கானு ஆணி புடுங்க சொல்லிட்டாங்க.

தமிழ்சசிக்கிட்ட எப்படியும் பேசி 40சட்டத்தை தூக்க வைக்கனும்றதுதான் என்னோட முக்கியமான திட்டம். ஆனா அதுக்கு தேவையே இல்லைனு சரியா வெள்ளிக்கிழமை ராத்திரியே அதை மாத்திட்டாங்க. சரி இதுக்கு மேல நம்ம கண்டிப்பா இந்த சந்திப்புக்கு போகனுமானு யோசிச்சிட்டு இருந்தேன். சரவண பவன்ல சாப்பிடறதுக்காவது போகலாம்னு முடிவு செஞ்சி புறப்பட்டுவிட்டேன். அதுவுமில்லாம பாபாட்ட பேசினா ஒரு நாள் முழுக்க கூட பேசலாம். அவ்வளவு விஷயம் பேசுவாரு. அதுவும் கூட புதுசா தென்றல் வேற வராரு. அவர்ட கொஞ்சம் மொக்கை போடலாம்னு முடிவு பண்ணிருந்தேன்.

ஒரு வழியா 7 மணிக்கு எழுந்து Comment moderation பண்ணிட்டு இருந்தேன். பாபா ஆன்லைனில் வந்து 8:30க்கு வீட்டுக்கு வந்துடுவேனு சொன்னாரு. சரி இதுக்கு மேல ஆன்லைன்ல இருந்தா ஆபத்துனு கிளம்பி ரெடியாகி 8:15க்கு எல்லாம் வெளியே வந்து போட்டோ எடுத்துட்டு இருந்தேன். Spring ஆரம்பமானதால் பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருந்துச்சு.

பாபா சொன்ன நேரத்துக்கு சரியா வந்தாரு. அப்படியே நம்ம தென்றல் வீட்டை நோக்கி போனோம். அவர் வீட்ல இருந்து ஒரு பத்து வீடு தள்ளி போய் காரை நிறுத்தி அவருக்காக காத்து கொண்டிருந்தோம் (தவறுதலாக). தூரத்தில் ஒரு இளைஞர் வந்து கொண்டிருந்தார். அவர் எங்களை நோக்கி வர, சின்ன பையன் மாதிரி இருக்காரேனு பார்த்தோம். சரி எதுக்கும் ஜன்னலை திறந்து வைப்போம்னு வெச்சோம். பக்கத்துல சிரிச்சிக்கிட்டே வந்து "நிலால நெருப்பு வெச்சா நெப்ட்யூன்ல வெடி வெடிக்கும்"னு கோட் வேர்டை சொன்னவுடனேதான் அது தென்றல்னு உறுதியாச்சி. உடனே பாபாவும் "வெட்டுக்கிளி தங்கச்சரம் செவ்வாய் கிரகத்துல ஃப்ளாப்"னு எங்க கோட் வேர்டை சொல்லி நாங்கதான் தமிழ் வலைப்பதிவர்கள்னு உறுதி செஞ்சோம். உடனே தென்றல் காரில் ஏறினார்.

அப்படியே தென்றல் எத்தனை நாளா ப்ளாக் படிக்கிறாரு, எந்த எந்த ப்ளாக் எல்லாம் படிப்பாருனு பாபா கேட்டுட்டு வந்தாரு. அவர் 6 மாசமா படிக்கிறார்னு சொன்னாரு. அவள் விகடன் மூலமாகத்தான் வலைப்பதிவுலகம் பழக்கமானதுனு சொன்னாரு. ஆனா 6 மாசமா ரொம்ப அதிகமா படிச்சி இருக்காரு. அவர் சொன்னதுல பாதி ப்ளாக் எனக்கு தெரியல. ஆனா பாபாக்கு எல்லாம் தெரிஞ்சிருந்துச்சி.

அப்பறம் KRS வேற ரெண்டு மூணு தடவை போனுக்கு கூப்பிட்டிருக்காரு. ஆனா பாட்டு சத்தத்துல நான் கவனிக்கவே இல்லை. என்னடா இவ்வளவு நேரமாச்சி பொறுப்பா போன் பண்ணலையே KRSம், கொத்ஸ்ம் என்ன பண்ணிட்டு இருக்காங்கனு தெரிஞ்சிக்கலாம்னு போன எடுத்து பார்த்தா 4, 5 மிஸ்டு கால்ஸ். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பண்ணியிருக்காங்க. அப்பறம் KRSக்கு போன் பண்ணா, வேற ஒரு குரல். எப்படி இருக்கீங்கனு கேக்கறாரு. நல்லா இருக்கேனு சொல்லிட்டு, ஆமா நீங்க யாருனு கேட்டா VSKனு சொல்லி சிரிச்சாரு. அவர்ட நேர்ல பார்த்தா ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்த கேள்வியை எப்படியும் இன்னைக்கு கேக்கனும்னு மனசுல ஒரு எண்ணம் வந்துச்சி.

அப்படியே மதியம் சாப்பாட்டை KRS வீட்ல சாப்பிடலாம்னு அவருக்கு வலை விரிக்க ஆரம்பிச்சோம். மதியம் ஜெர்ஸி வந்து சேர எப்படியும் ஒரு 1:30 ஆயிடும் அந்த நேரத்துக்கு ஏதாவது ஹோட்டல் திறந்திருக்குமானு கேட்டேன். அவரா அப்பாவியா 4 - 5 மணி வரைக்கும் லஞ்ச் கிடைக்கும் அதெல்லாம் பயப்படத்தேவையில்லைனு சொல்லி ஏமாத்திட்டாரு. சரி நம்ம லேசுப்பட்ட ஆளானு அப்படியே இங்க தமிழ்நாடு சாப்பாடு கிடைக்குமானு ஒரு பிட்ட போட்டேன். உடனே 4 - 5 கடை சொல்றாரு. அதுல வேற செட்டிநாடு ஸ்டைல், கொங்கு ஸ்டைல் இப்படி பல ஸ்டைல் சொல்றாரு. இதுக்கு மேல எப்படி கேக்கறதுனு யோசிக்கும் போது தான் ஒரு முக்கியமான மேட்டரு தெரிஞ்சிது. அவர் வீட்ல வெளியூர் போயிருக்காங்க அவர்தான் சமையல்னு. நல்ல வேளை மாட்லனு ஒரு அட்டகாசமான ஹோட்டல் போய் சாப்பிட்டோம்.

அந்த ஹோட்டல் பன்னீர் புர்ஜி அட்டகாசமா இருக்குனு பாபா எவ்வளவு சொல்லியும் நான் சாப்பிடல. முக்கிய காரணம் குலாப் ஜாமுனை உள்ளே நுழைந்தவுடனே பார்த்தது தான் :-). வயிறு முழுக்க சாப்பிட்டு மீட்டிங் சென்றோம். அப்படியே விட்டுருந்தா அங்கயே ஒரு நல்ல தூக்கம் போட்டிருப்பேன்...

மீட்டிங் நடக்கற இடத்துக்கு போனவுடனே கீழ வந்து கதவு திறந்து பாசமா கூப்பிட்டு போனாரு நம்ம KRS...

அங்க போனா எல்லாரும் Cricket Match பார்த்துட்டு இருந்தாங்க. இது தான் பதிவர்கள் ஆடும் கிரிக்கெட் மேட்ச்னு பதிவு போட்டாரா? தென்றல் வேற நம்ம எந்த டீமுக்கு ஆடனும்னு அப்பாவியா கேட்டாரு. பாஸ்டன் Red Soxனு சொல்லி ஏமாத்தளாமானு பார்த்தேன்.ஆனா பாபா அதுக்கு சான்ஸ் கொடுக்கல.

உள்ளே போய் எல்லாரிடமும் நான் தான் வெட்டினு பெருமையா சொல்லிக்கிட்டேன்.எல்லாரும் உன்னைய பார்த்தாலே தெரியுதுங்கற மாதிரி ஒரு லுக் கொடுத்தாங்க. கொத்ஸ் அட்டகாசமா ஆபிஸ் ரூம் பிடிச்சிருந்தாரு. அவருக்கு தான் முதல்ல நன்றிய சொல்லனும். அட்டகாசமா அரெஞ்ச் பண்ணியிருந்தாரு. அடிக்கடி ப்ளாக் எல்லாம் refer பண்ண, ப்ரொஜக்டர் எல்லாம் வெச்சியிருந்தாரு. அப்பறம் Power point எல்லாம் போட்டு டைவர்ட் ஆகாம இருக்கற மாதிரி பாத்துக்கிட்டாரு. அப்பறம் சாப்பிட வேற பல ஐட்டங்கள் இருந்துச்சி. அதெயல்லாம் நான் சரியா நோட் பண்ணல. KRS கரெக்டா போட்டிருக்காரு ;)

அங்கே என்ன பேசினோம்... இது அடுத்த பதிவில்...

Tuesday, May 01, 2007

நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு - KRS பார்வையில்


மாதவி பந்தல் நாயகன் KRS பார்வையில் நியு ஜெர்ஸி வலைப்பதிவர் சந்திப்பு...

புதுஜெர்சி பதிவர்கள் சந்திப்பு பற்றி பிபிசி தொலைக்காட்சியின் நேரடிப் பார்வை.
வழங்குபவர்: தமிழ் சசி.
இப்படி ஒரு நிகழ்ச்சி, ஒரு நாள் இல்லை ஒரு நாள் வரத் தான் போகிறது பாருங்களேன்!

புதுஜெர்சியில், Apr 28 அன்று நடைபெற்ற பதிவர்கள் சந்திப்புக்குக் கட்டியம் கூறும் வண்ணமாக, பார்படாசில் மழை கொட்டோ கொட்டோ என்று கொட்டியது.
பதிவர்கள் ஆடும் ஆட்டத்தை முதலில் பார்த்து விட்டு வாங்க...
அப்புறம் நாங்களும் இலங்கையும் ஆடுகிறோம் என்று ஆட்டத்தைச் சற்று நேரம் ஒத்திப் போட்டனர் கிரிக்கெட் வீரர்கள்.

வெட்டிப்பயல் தில்லாலங்கடி தாங்கு என்று விசில் அடித்துக் கொண்டே, பாஸ்டனில் இருந்து பாபாவின் ரதத்தில் வர, அவர்களுடன் தென்றலும் புதுஜெர்சி வந்து சேர்ந்தனர்.

அண்ணன் SK, விமானத்தில் வந்து இறங்கி, அனைவருக்கும் நல்லாசி கூறினார்!

யார் எல்லாம் வந்தார்கள்?

பத்மா அர்விந்த்
தமிழ் சசி
பாஸ்டன் பாலா
சங்கர் குமார் (VSK)
Vishytheking
வெட்டிப்பயல்
தென்றல்
CSRK என்னும் சம்பத்
எடிசன் ரங்கா
ஜெயஸ்ரீ
இலவசக் கொத்தனார்
கண்ணபிரான் ரவி

நண்பர்கள் ஷைலஜா, நாகை சிவா, சந்தோஷ் மற்றும் பலர் சந்திப்பின் போது தொலைபேசி வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்தினர்.


ரொம்ப நாளாய் வீட்டில் அடம் பிடித்து, ராவடி செய்து, பஜாஜ் பல்சர் வண்டி வாங்கித் தரச் சொல்லி ஒரே புலம்பல், அலம்பல்!
ஆனா கரெக்டா பிறந்த நாள் அதுவுமா, முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், வீட்டு வாசலில் வண்டியைக் கொண்டாந்து நிறுத்தினா எப்படி இருக்கும்!
இப்படித் தான் தமிழ்மண முகப்பில் சூப்பரா மாற்றங்களைச் செய்து விட்டு
சத்தமில்லாமல், புன்சிரிப்புடன், பால் வடியும் பால முகமாய் வந்து சேர்ந்தார் நம்ம தமிழ் சசி!
சந்திப்பு களை கட்டியது!

பல பதிவர் மாநாடுகளுக்குத் தொடர் திக்விஜயம் செய்த பாபா, சென்னை சந்திப்பு பற்றி எடுத்துச் சொன்னார்.
சென்னைப்பபட்டினம் நண்பர்கள் வெளியிட்ட சாகரன் நினைவு மலரை, மறக்காமல் எடுத்து வந்து, அனைவருக்கும் அளித்த பாபாவுக்கு நன்றி.


சரி, சந்திப்பு ஆக்-ஷன் ரீப்ளே இதோ:

வலைப்பதிவுகளில் ஆசைகளும் ஆதங்கங்களும்:
1. தமிழ் வலைப்பூக்களில் அறிவியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் குறைவாக உள்ளது ஏன்?
இது பற்றிக் கொத்தனார், தன் தேடுதல் முயற்சிகளை எடுத்துக் கூறினார்.
விக்கிப்பசங்க வலைப்பூவில், கேள்விகளைத் திரட்டும் முறை பற்றித் தென்றல் கேள்வி எழுப்பினார்.
கேள்விகளை எல்லாம் ஓரிடத்தில் திரட்டி, அவற்றுக்குப் பதில் சொல்லப்பட்டதா இல்லையா என்று அறிய Google Spreadsheetஐப் பயன்படுத்தலாம் என்று பாபாவும் கண்ணபிரான் ரவியும் சொன்னார்கள்.

ehow, wikipedia போன்று, அறிவியல் தமிழுக்கென்று தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது இருப்பதை விட, மிகப் பெரும் தகவற் களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
விக்கிப்பசங்க பதிவுகளை அப்படியே தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அனுப்பலாமா, இல்லை விக்கிக்கு என்று இருக்கும் formatஇல் அனுப்ப வேண்டுமா என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.
மேலும் ஆங்கில விக்கியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியைக் கூட்டாகத் தொடங்கலாமா என்றும் பேசப்பட்டது.
இது குறித்து மேலும் தகவல்கள் அறிய ரவிசங்கர் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

2. தமிழ் வலைப்பூக்களில் Activism
இது பற்றி என்ன பேசினோம்னு சத்தியமா ஞாபகம் இல்லீங்கோ!

3. மாணவர்களுக்கு உபயோகப்படும் விதமான தலைப்புகள்
தினமலர் மற்றும் பல நாளிதழ்கள் மாணவர்கள் முன்னேற்றம், பற்றி அவ்வப்போது கட்டுரைகள் பல வெளியிட்டாலும், பதிவுலகம் சார்பாக, இதில் பங்கு என்ன? என்றும் பேசினோம்.

வெட்டிப்பயலின் "சாப்ட்வேர் இன்ஜினீயர் ஆகலாம் வாங்க", மற்றும் செல்வனின் "அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வேண்டுமா?" போன்ற பதிவுகள் நினைவு கூரப்பட்டன.
மாணவர்கள் எத்தனை பேருக்குத் தமிழ்ப்பதிவுகள் அறிமுகம் ஆகியுள்ளது என்று அலசப்பட்டது.
பயனுள்ள Career கட்டுரைகளைக் கல்லூரி அறிவிப்புப் பலகைகளில் இடலாம். இதனால் பதிவும் சென்று அடையும், மாணவர்களையும் தமிழ்ப் பதிவுலகம் பக்கம் அறிமுகப்படுத்தலாம் என்று கண்ணபிரான் சொன்னார்.

4. அதிகம் சினிமா தொடர்பான அல்லது சொந்த அனுபவங்கள் பற்றிய தலைப்புக்களே இருப்பதேன்?


நடுவே, (வீ)எஸ்.கே. வயிற்றுக்கு மைசூர்பாகும், செவிக்கு ராஜாவின் திருவாசகம் டிவிடியும் கொடுத்தார்.
சூடான பாப்-கார்ன், சல்சாவுடன் சிப்ஸ், குளிர்ந்த பெப்சி, தாகத்துக்கு தண்ணீர் - நொறுக்ஸ் ஏராளம்.

பதிவுகளைப் பரவலாகப் படிக்கும் CSRK என்னும் சம்பத் அனைவரிடமும் கலந்து பேசினார்.
அவரும் பதிவு எழுதத் துவங்கப் போவதாகச் சொல்ல, அனைவரும் வாழ்த்து கூறினர்!

நெய்வேலி விச்சு, பதிவுகளின் வளர்ச்சிப் பரிமாணம் பற்றிப் பேசினார்.
எடிசன் ரங்கா மற்றும் அவர் துணைவியார் ஜெயஸ்ரீ, குழந்தைகள் நலம் பற்றியும், அவர்களுக்கான கதைகள், படங்கள் பற்றியும், அதில் பதிவுலகின் பங்கு பற்றியும் பேசினர்!

பத்மா அரவிந்த், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பற்றியும், அவர்களுக்கு அவரவர் தாய்மொழி சார்ந்த மருத்துவ அறிவுரைகள் பற்றியும் பேசினார். இது ஒரு அரசு-தன்னார்வ இயக்கமாக உருவாகுவதாகவும், இது குறித்த கருத்துக் கணிப்புகளைப் பதிவுலகம் நடத்தித் தர வேண்டுகோள் விடுத்தார்.
அதே போல், அவசர நிலைக் காலங்களில், புலம் பெயர்ந்தவர்கள் இறுதிச் சடங்குகளை அரசு நடத்தும் முறை பற்றியும் பேசினார்.

இவ்வளவு உரையாடலின் போதும், "என் கடன் பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்து கொண்டு இருப்பதே" என்றிருந்த வெட்டிப்பயலின் பணி ஈடுபாட்டை அனைவரும் பாராட்டினர். :-)


தமிழ்மணத்தில் நமது எதிர்பார்ப்புகள்:

1. மிக அதிகமானோர் குறிப்பிட்டுள்ளது சாதி/மதப் பதிவுகளைத் தனிப் பக்கத்தில் திரட்டுவது
இது பற்றிப் பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
இதோடு கூடவே, துறை சார்ந்த திரட்டி பற்றும் பேசப்பட்டது.

  • Category/பிரிவுகள் வாரியாகத் தனித் தனி Tabகளில் திரட்டுவது
  • குறிச்சொற்கள் கொண்டு தேடுவது
  • ஒரு பதிவைப் படிக்கும் போது, அப்பதிவினோடு தொடர்புடைய, அல்லது அதே குறிச்சொல் கொண்ட தொடர்புடைய பதிவை, தமிழ்மணப் பட்டையில் தட்டிக் கண்டறிவது
  • வகைப்படுத்துதலை பயனுள்ளதாக மாற்ற வழிமுறை Bloggerஇன் Labels கொண்டு தேடுதல் முறை
2. பின்னூட்ட உயரெல்லை தேவையா?
இது பற்றிப் பேச எண்ணிய பலருக்கு...பேச முடியவில்லையே ஏன்? :-)))
வெட்டி - உங்களுக்கு மகிழ்ச்சி தானே? :-)

3. பதிவு பற்றி ஆட்சேபங்கள் தெரிவித்தால் என்ன நடக்கிறது?
4. செய்யவிருக்கும் மாற்றங்களைப் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொண்டு நம் கருத்துக்களை கேட்பார்களா?

இது பற்றி தமிழ் சசி கலந்துரையாடினார்.
எந்தவொரு சர்ச்சையிலும் தமிழ்மணம், தனி ஒருவராக முடிவெடுப்பதில்லை என்றும், அது அதற்கு என்று குழுக்கள் அமைக்கப்பெற்று, நன்கு ஆய்ந்தே முடிவெடுக்கப்படுவதாகவும் சொன்னார்.
இன்னும் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எல்லாம், திட்டத்தில் உள்ளதாகவும் கூறினார்.

தமிழ்ச் சங்கங்களும், பதிவுலகமும்
பல தமிழ்ச் சங்கங்களில் வலைப் பதிவுகள் பற்றிய விழிப்புணர்வு காணப்படவில்லை!
நாம் அவர்களிடத்தே சென்று வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தர வேண்டுமா?
அவர்களிடத்தே இன்று இருக்கும் உறுப்பினர்களை எப்படி வலைப்பதிய கொண்டுவருவது?

பாபாவின் பத்து கேள்விகள்
நேரமின்மையால், இது சற்றே பேசப்பட்டது!
திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா??
-இது பற்றி SK தனது கருத்துகளை முன் வைத்தார்
பூங்கா இதழைப் பதிவர்கள் மட்டுமன்றி வேறு யாரெல்லாம் படிக்கிறார்கள் என்றும் வினவினார்!

வெற்றி! வெற்றி! வெற்றி! ......
ஆஸ்திரேலியா வென்றது!
திரையில் இலங்கையின் தோல்வியை "வெளிச்சம் போட்டுக் காட்டிய" கொத்தனாருக்கு நன்றிகள் உரித்தாகுக!

பதிவர் சந்திப்பு இனிதே நிறைந்தது!

அனைவரும் மாலை உணவு உண்ண,
எடிசன் ஓக் மரச் சாலையில் உள்ள, சரவண பவனில்
அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்தார்....

ஆனால் பதிவர்கள் சிலர் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், உடனே கிளம்ப வேண்டினர்.
கொத்தனாரும், கண்ணபிரானும் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்ட பின்னரும், பட்சிகள் பறக்கத் தயாராயின.
அவர்கள் அனைவருக்கும் பிரியா"வடை" கொடுக்கப்பட்டது!
பின்னர், சரவணபவனில், அடை அவியல், நெய் இட்லி, மெட்ராஸ் காபி என்று அமர்க்களப்பட்டது!

கேட்க மறந்த கேள்வி: அடுத்த சந்திப்பு எங்கே?

பாபாவின் பார்வையில்...

இது கண்ணன் பாடல் இல்லையா???

இந்த பாட்டு கண்ணன் பாட்டு இல்லைனு ஒரு ஆன்மீக பதிவர் சொல்றாரு. மக்களே! நீங்களே சொல்லுங்க. இது கண்ணன் பாட்டா இல்லையானு...

இந்த பாடலை பாடியவர் பரவை நாச்சியார் . அவர் கண்ணனை தன் பேரனாக நினைத்து பாடுகிறார்.

மதுர வீரன் தானே...
அவன உசுப்பிவிட்ட வீணே
இனி விசுலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானே

(இங்கே அவர் சொல்ல வருவது என் பேரன் மதுராவில் அவதரித்த வீரன் (கண்ணன் மதுரா வீரன் தானே). கம்சா அவனை வீணாக உசுப்பி விட்டாய்.
இனி சங்கு (விசில்) முழங்குவது உறுதி. என் பேரன் மதுரா வீரன் தானே...)

ஏ சிங்கம் போல
ஏ சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான் உதையில தாண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

(காட்டின் அரசனான சிங்கம் போல கம்பீரமாக நடந்து வருகிறான் என் செல்ல பேரன். அவன் சாதாரணமாக யாரிடமும் வம்புக்கு போக மாட்டான். அவனை உன் அசுரர்களை அனுப்பி சீண்டினால், அவர்கள் உதை பட்டு சாவார்கள். வேண்டாம் கம்சா...)

ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு
ஏ சீயான் சீயான் சினுக்கு இவனை புத்துருக்கு அனுப்பு

(கண்ணனை நோக்கி, சீமானே, இவர்கள் செய்வது தெரியாமல் பாவ காரியங்களை செய்கிறார்கள். இவர்களை நீ கொல்லாமல், வில்லிப்புத்தூருக்கு அனுப்பு. அங்கே ஆண்டாளின் அழகிய தமிழ் பாசுரங்களை கேட்டாள் தானாக மனமுருகி மாறிவிடுவார்கள்)


ஏ புலிய போல
ஏ புலிய போல துணிஞ்சவன்டா எங்க பேராண்டி
உங்களை பஞ்சு மிட்டாய் போல பிச்சு வீச போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ இந்தா ஏ இந்தா ஏ இந்தா இந்தா இந்தா இந்தாஆஆஆ
ஆ ஆ ஆ இந்தா

(போராடும் குணம் கொண்ட புலியை போல் எதற்கும் அஞ்சாதவன் என் பேரன். அசுரர்களாகிய உங்கள் அனைவரையும் பஞ்சு மிட்டாய் போல் பிய்த்தெரிய போகிறான்.அந்த காலத்தில் பெரும்பாலும் மல்யுத்தமே நடைபெறும். அதில் அனைவரையும் பஞ்சை பிய்ப்பது போல் எளிதாக கொன்றனர் பலராமனும், கண்ணனும்)

ஏ சூறாவளி
ஏ சூறாவளி காத்து போல சுழண்டு வராண்டி
அவனை சுத்தி நிக்கும் பசங்க எல்லாம் மிரண்டு போராண்டி
ஏ தில்லா தாங்கு தாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வெச்சி நொறுக்குடாடே


(கண்ணனை அழிக்க சடகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ சூறாவளி கற்றாக மாறி ஊரையே அழித்து கொண்டு வருகிறான். அந்த சூறாவளி காற்றை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். ஆனால் கண்ணனோ சடகாசுரனை அழித்து மக்களை காப்பாற்றுகிறான். அதனால் மகிழ்ந்து அனைவரும் முறுக்கு செய்து தீபாவளி அன்று சாப்பிடுகிறார்கள்.


ஏ ஜல்லிக்கட்டு
ஏ ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி வராண்டி
உங்கள பனைமரமா புடுங்கி இப்ப வீச போராண்டி
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மா
ஏ கும்தலக்கடி கும்மா அடி விட்டான் பாரு யம்மாமீண்டும் கண்ணனை அழிக்க விருத்திகாசுரனை அனுப்புகிறான் கம்சன். அவனோ காளையை போல் உருமெடுத்து வருகிறான். அதை உணர்ந்த கண்ணன் அருகிலிருக்கும் பனைமரத்தை பிடுங்கி அடித்து விருத்திகாசுரனை கும்மென்று அடித்து கொன்று விடுகிறான்

இவ்வளவு பலம் வாய்ந்த என் கண்ணனோடு மோதாதே கம்சா என்று எச்சரிக்கிறார் பரவை நாச்சியார்...


இப்பவாது சொல்லுங்க, இது கண்ணன் பாட்டு தானே ;)