தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, December 22, 2006

கண்ணன் - கர்ணன்

நான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது.

அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெச்சி ஒரு சில தவறான முடிவு எடுத்தடறாங்க. அதுல என்னை ரொம்ப பாதிச்சது கர்ணன் படம்தான். கர்ணனை கண்ணன் ஏமாற்றி கொன்னுட்டார்னு நம்ம ஆளுங்களுக்கு கண்ணனை பிடிக்காம போயிடுது. இதுல கொடுமை என்னன்ன அவரை பிராடு, ஏமாற்றுக்காரர்னு நிறைய பேர் சொல்றத கேட்டுருக்கேன்.

நம்ம சினிமால சிவாஜி நடிச்சதால கர்ணனை அநியாயத்திற்கு நல்லவனா காண்பிச்சிருப்பாங்க. அதப்பத்தி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் பேச போவது கர்ணன் மரண தருவாயில் இருக்கும் போது கண்ணன் அவனுடைய தானத்தை எல்லாம் யாசகமாக ஏமாற்றி வாங்கி அவனை கொன்றுவிட்டான் என்ற குற்றச்சாட்டை பற்றியே பேச போகிறேன்.

கர்ணனின் மரணத்தை பற்றி வியாச பாரதத்தில் எவ்வாறு உள்ளது? அங்கே கண்ணன் வந்து கர்ணனுடைய தானத்தை யாசகமாக வாங்கினானா என்றால் இல்லை. போரில் கர்ணனின் தலையை கொய்தே அர்ச்சுணன் அவனை கொல்கிறான். அதுவும் கர்ணன் நிராயுதபாணியாக அந்த நேரத்தில் இல்லை. அவன் பிரம்மாஸ்திர பிரயோகத்தை யோசிக்க அந்த நேரத்தில் அவன் வாங்கிய சாபத்தால் அது அவனுக்கு மறக்கிறது. அந்த சமயத்திலே அவன் பார்த்தனால் கொல்லப்படுகிறான்.

சரி, இதையும் விட்டுவிடுவோம்... நாம் தமிழில் பார்த்த கர்ணன் படத்திற்கே வருவோம். கர்ணன் அம்புகளால் துளைக்கப்பட்டு விழுந்து கிடக்கிறான். அங்கே அவன் செய்த புண்ணியம் அவனைக் காக்கிறது. இப்போழுது உங்களை பொறுத்தவரை கண்ணன் கர்ணனை ஏமாற்றி கொள்கிறான் இல்லையா???

அங்கே நடப்பதை நன்றாக பார்த்தால் உங்களுக்கே கண்ணனின் உயர்ந்த குணம் புரியும். கர்ணன் மரணம் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகிறது. அங்கே கண்ணன் நினைத்திருந்தால் ஒரு அந்தணனையோ, அல்லது தேவேந்திரனை மீண்டும் வேடமிட்டு வர சொல்லியிருக்கலாம். யார் கேட்டாலும் கர்ணன் தானமளிக்கப்போகிறான். ஆனால் கர்ணனுக்கு புகழ் சேர்கக கண்ணனே வந்து யாசகம் வாங்குகிறான்.



மானிடருக்கும், தேவேந்திரனுக்கும் தானமளித்து பெரும் புகழ் பெற்ற கர்ணன் பரமாத்மாவிற்கே தானமளிக்க வழி செய்கிறான். அதுவும் கண்ணனாக சென்றிருந்தால் தாராளமாக கர்ணன் கொடுத்துவிடுவான். கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.

பரமாத்மா என்று அறிந்ததாலே அவ்வளவு எளிதாக அவன் தான் செய்த புண்ணியமனைத்தும் தானமளித்தான் என்று சுலபமாக அந்த வள்ளலை அனைவரும் குறைத்து மதிப்பிடக்கூடும். அதனாலே கண்ணன் ஏழை அந்தனனாக உருவெடுத்து போர்களத்தில் கர்ணன் முன் செல்கிறான். அதற்கு பிறகு அவனுக்கு பரமாத்வாவின் தரிசனம் கிடைக்கிறது. கிருஷ்ணனாக இருந்து அவதாரத்தை விட்டு வந்து நாராயணனாக மாறி தரிசனம் தந்து மீண்டும் கிருஷ்ணனாக மாறுகிறான். ரிஷிகளும், யோகிகளும், இந்திராதி தேவர்களும் எந்த தரிசனத்திற்காக அன்றாடம் ஏங்குகிறார்களோ அதை கர்ணனுக்கு அருளுகிறான்.

அர்ச்சுணனிற்கோ, தர்மனிற்கோக்கூட இந்த புகழ் கிடைக்கவில்லை. அவர்கள் மரணத்தின் போது நாராயணன் அவர்களுக்கு காட்சியளித்து மோட்சமளிக்கவில்லை. அதனால் கர்ணனுக்கு கண்ணன் அநியாயத்தை இழைத்தான் என்று சொல்வது நம் அறியாமையே!!!

பாண்டவர்கள் தவறே செய்யாதவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் செய்த தவறிற்கு தான் அவர்கள் 12 ஆண்டுகள் வன வாசமும் ஒரு வருடம் அஞ்ஞானவாசமும் மேற்கொண்டனர். முதலில் மனதிலிருக்கும் இரும்பு திரையை விலக்கி பாருங்கள்.



மேலும் கண்ணன் நினைத்திருந்தால் போரில் ஆயுதமேந்தியிருக்கலாம். சுதர்சன சக்கரத்தை எதிர்க்க உலகில் எதுவும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அவன் போரில் ஆயுதமேந்தாமல் வேறும் சாரதியாகவே இருந்தான். ஒரு சமயத்தில் ஆயுதமுமெந்தினான். அதுவும் பக்தருக்காகவே.

போரின் இரண்டாம் நாள் அர்ச்சுணனின் சினத்தை கட்டுப்படுத்த முடியாமல் கௌரவர்கள் அஞ்சினர். பீஷ்மர், துரோனர் இருவருடைய ரதங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. போரின் முடிவில் கௌரவர்களுக்கு பெருத்த நஷ்டம். அன்று இரவு துரியோதனன் பிதாமகரை சந்தித்து தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து, பாட்டனார் மேல் சந்தேகத்துடனும் பேசினான்.

அதை கண்டு கொதித்த பிதாமகர், போரில் கண்ணன் ஆயுதமேந்தாதவரை நம்மை கண்டிப்பாக அவர்களால் வெல்ல முடியாது என்று சொல்லவே அமைதியாகிறான் துரியோதனன். பிதாமகரின் வாக்கை காக்க தன் வாக்கை மீறி போரின் மூன்றாம் நாள் ஆயுதமேந்துகிறான் கண்ணன். அதையும் மற்றவர் உணராவண்ணம் பார்த்தன் மேல் கோபப்பட்டு பிதாமகரை தாக்குவது போல் நடிக்கிறான்.

மேலும் போரில் பழியை அவனே ஏற்கிறான். காந்தாரியின் சாபத்தையும் ஏற்று அவன் குலமே அழியும் பாவத்தையும் ஏற்கிறான். இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர...

94 comments:

JTP said...

அட வெட்டிப்பயலே, வெட்டி கட்டுரை

Anonymous said...

//இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர...//

சிறிது நாட்களுக்கும் முன் குருசேத்திரம் சென்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த இடம் பார்த்தபோது இப்படி தான் தோன்றியது.தர்மம் வெல்லவேண்டும் என்பதற்காக அர்ச்சுனனுக்கு உபதேசித்து இப்போது கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு இருக்கிறார் கண்ணன் என்று.

கதிர் said...

பிரிலப்பா

ஏன்னா நான் அந்த படத்தையே பாக்கல.
அதுவுமில்லாம ஞாயித்த்துகிழமை மகாஆஆபாரதம்னு டீவில போடும்போது மைதானத்தில மட்டைய புடிச்சிட்டு நிப்பேன்.

G.Ragavan said...

ம்ம்ம்...யோசித்துத்தான் எழுதியிருக்கிறாய். சிவாஜி நடித்ததற்காக கர்ணனை நல்லவனாகக் காட்டி விட்டார்கள் சரி. டி.வி மகாபாரதத்தில் என்ன சிவாஜியா நடித்தார்? ;-)

கர்ணன் குற்றமற்றவன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் செய்தது சரியே. ஒரு விதத்தில் திரவுபதியும் கர்ணனும் ஒன்று. சபைக்கு நடுவில் இருவருமே அவமானப் படுத்தப்பட்டார்கள். இவளுக்கு பெண் என்பதால் அந்த அவமானம். அவனுக்கு பிறப்பால் அவமானம். இரண்டு அவமானங்களுமே மிகத் தவறு. திரவுபதையால் எப்படி கௌரவர்களை மன்னிக்க முடியாதோ..முடியவில்லையோ...அதே போல கர்ணனாலும் பாண்டவர்களை மன்னிக்க முடியாது...ஆனாலும் மன்னிக்கிறான் அன்னைக்காக. அந்த மன்னிப்புக்குத் தண்டனையாக நண்பனுக்காக தன்னுடைய உயிரையே கொடுக்கிறான். திரவுபதிக்கு அவமானம் ஒருமுறைதான். கர்ணனுக்குப் பலமுறை. குறிப்பாகப் பாண்டவர்களால் ஒருமுறை. திரவுபதையால் ஒருமுறை. சுயம்வரத்தில் அழைப்பும் விடுத்து விட்டு தேரோட்டி மகன் என்று அவமானப்படுத்துகிறாள். அவையில் பாஞ்சாலியைக் கர்ணன் அவமானப்படுத்தியது தவறென்றால் கர்ணனைப் பாஞ்சாலி அவமானப் படுத்தியதும் தவறுதான். ஆக கர்ணன் கெட்டவனென்றால் பாஞ்சாலியும் கெட்டவள்தான். தருமனும் அயோக்கியந்தான்.

கர்ணன் ஒரு மனிதன். வீரன். தானன். அதை மீறி அவனை யாரும் புகழ்வதில்லை. ஆகையால்தான் அவன் பாஞ்சாலியைப் பேசியதைப் பலர் கண்டுகொள்வதேயில்லை. ஆனால் தவறுகள் பல செய்தும் யுதிர்ஷ்டனை தருமன் எனச் சொல்வதைப் போல பிழை ஏதுமில்லை. ஆகையால்தான் இன்னமும் தருமன் பலர் வாயில் விழுந்து எழுந்து கொண்டிருக்கிறான். ஆகையால் கர்ணனை நல்லவன் அல்ல என்று கூடச் சொல்வது அபத்தமாகிறது.

அடுத்த பட்டம் யாருக்கு என்று ஒரு வாதம் வருகிறது. ஒரு கொலைக் குற்றத்திற்கு தண்டனை வழங்க வேண்டும். நால்வரைப் பிடித்து வந்திருக்கிறார்கள். வெவ்வேறு வருணங்களிலிருந்து. துரியோதனன் அனைவருக்கும் ஒரே தண்டனை வழங்குகிறான். ஆனால் தருமன் சாதியைப் பொருத்து தண்டனை வழங்குகிறான். மேல் வருணக்காரனுக்குத் தண்டனையை தான் வழங்காமல் அந்தப் பொருப்பைக் கிருபாச்சாரியாரிடம் ஒப்படைக்கிறான். அதைக் கண்டு குலகுரு கிருபாச்சாரியார் மகிழ்கிறார். இதுதான் தருமதருமனின் சட்டம்.

சரி. போர் மூளாமல் இருக்க வழி கேட்கிறானே கண்ணன்...அப்பொழுது சகதேவன் என்ன சொல்கிறான்? கர்ணனை அரசனாக்கி விட்டால் பிரச்சனை தீர்ந்து விடும் என்கிறான். அதை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை கண்ணன்? கர்ணனுக்கு என்றால் துரியன் மறுப்பானா? எடுக்கவோ கோர்க்கவோ என்றவனா கர்ணனுக்குப் பட்டமென்றால் மறுப்பான்? பிரச்சனை என்ன தெரியுமா? கர்ணனுக்குப் பட்டத்தைக் கொடுத்தால் அதை அவன் வைத்துக் கொள்ள மாட்டான். ஊர் நடுவே பிறப்பைச் சொல்லி அசிங்கப் படுத்திய அயோக்கியர்களுக்கு முன்னே தனக்கு ஒரு நட்பும், நாடும், செல்வமும் கொடுத்து வாழ்வித்தானே...அவனுக்குக் கொடுத்திருப்பான். நன்றி மறவாமை. குந்தி பெற்ற ஒரே ஒரு உத்தமன் அவன். அவனைப் பிழை சொல்லல் பொறாது.

கண்ணன் நல்லவனோ கெட்டவனோ....கர்ணன் கெட்டவனில்லை. முழு நாடும் தனக்குத்தான் உரிமையுள்ளது என்று தெரிந்த பின்னும் உயிரை விட்ட உத்தமன். மாண்டது அண்ணன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் தருமன். விட்டதா பதவி ஆசை? தொடர்ந்தது போர். கிடைத்தது நாற்காலி. ரத்தப் பளபளப்பில்.

கர்ணனைக் காந்தாரி சபித்ததும் தகும். பெற்ற வயிறு. இந்த நிலை குந்திக்கு நேர்ந்திருந்தாலும் சபித்திருப்பாள். ஐயமில்லை.

வெங்கட்ராமன் said...

நல்லா இருக்கு. . . .

என்னங்க இந்த வாரம் முடியப்போவுது. . . .

நாமக்கல் சிபி said...

ஜி.ரா,
உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதியுள்ளீர்.

கண்ணன் கர்ணனை பார்த்து அவன் அரசனாக ஒப்புக்கொண்டாள் அவனையே அரனாக்கிவிடுவதாகவே சொன்னான். ஆனால் கர்ணனே இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை...

அவன் கடனாளி.... கடனாளி என்றுமே நண்பனாகிவிட முடியாது.

நீங்க ஒருவரிடம் கடன் வாங்கியதால் அவரின் எதிரியை கொல்வது நியாயமாகிவிடாது ஜி.ரா...

மிச்சத்தை நாளை வந்து சொல்கிறேன்...

Anonymous said...

இதில் எனக்கு வந்த ஐயம் என்ன என்றால்,

1. கர்ணன் கண்ணனுக்கு தனது புண்ணியம் அனைத்தையும் தானம் அளிக்கிறான்.

2. அவ்வாறு புண்ணியம் அனைத்தையும் தானம் அளிப்பதால் மேலும் புண்ணியம் கர்ணனுக்கு கிடைக்கிறது.

3.திரும்பவும் அப்புண்ணியங்கள் கண்ணனுக்கு போகிறது.

4.திரும்பவும் ( 2. ) நடக்கிறது.

5. திரும்பவும் ( 3. ) நடக்கிறது.

....
....

இது ஒரு iterative function of புண்ணியமாக இருக்கிறது.

இப்படிப்பார்த்தால் கண்ணன் இப்போதும் தானம் கொடுத்துக்கொண்டேயிருக்கிறான்? :).

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
ஜி.ரா,
உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதியுள்ளீர்.//

உணர்ச்சி கொந்தளித்ததா என்று தெரியவில்லை. ஆனால் உணர்ந்து சொல்லியதுதான்.

// கண்ணன் கர்ணனை பார்த்து அவன் அரசனாக ஒப்புக்கொண்டாள் அவனையே அரனாக்கிவிடுவதாகவே சொன்னான். ஆனால் கர்ணனே இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை...//

கண்ணன் யாரய்யா அரசு தருவதற்கு? அரசு தரும் உரிமை கண்ணனுக்கு இருந்தால் அதை தருமனுக்குத் தந்திருக்கலாமே? பிறகு ஏன் போர்? அரசு பதவிக்குப் போட்டி தருமனுக்கும் துரியனுக்கும். இவர்கள் இருவரிடமும் சொல்லி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அது நேர்மை எனலாம். அதை விடுத்து அவனிடம் ரகசியம் பேசினால்....தன்னுடைய பிறப்பு குறித்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் ஒருவன் என்ன முடிவெடுக்க முடியும்!

// அவன் கடனாளி.... கடனாளி என்றுமே நண்பனாகிவிட முடியாது. //

துரியனுக்கும் கர்ணனுக்கும் உள்ள உறவு கடனாளி உறவு என்றால் பாஞ்சாலிக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவும் கடனாளி உறவுதான். மானம் போன பொழுது உதவியது கடன் கொடுப்பது போல என்றால் அந்த வகையில் (எந்தக் காரணமானால் என்ன) கண்ணனும் துரியனும் கூட ஒரு நிறையாகி விடுவார்கள்.

// நீங்க ஒருவரிடம் கடன் வாங்கியதால் அவரின் எதிரியை கொல்வது நியாயமாகிவிடாது ஜி.ரா...//

போர்க்களத்தில் எதிரியைக் கொல்வது நியாயம் என்று அர்ஜுனனுக்கு உரைத்தது சரியென்றால் அது கர்ணனுக்கும் சரியே. அவன் பாண்டவர்களில் யாரையும் கொல்லவில்லை. கொல்ல விடாமல் வரமும் வாங்கியாகி விட்டதே. ஐந்து பிள்ளைகள் பிழைக்க வரம் வாங்கிய குந்தி ஆறாவது..அல்ல...மூத்த பிள்ளை பிழைக்க வரம் வாங்காமல் போனாளே....அல்லது தன் மகந்தான் கர்ணன் என்று தெரிந்தும்...தருமனிடம் போய்...மகனே அவன் உன் அண்ணன் என்று சொல்லாமல்...முதலில் கர்ணனிடம் போய் வரம் வாங்கத்தானே அவளுக்கும் தெரிந்திருக்கிறது.

// மிச்சத்தை நாளை வந்து சொல்கிறேன்... //
சொச்சத்தை நீ மிச்சத்தைச் சொன்ன பிறகு சொல்கிறேன்.

dubukudisciple said...

ஆஹா வெட்டியா இப்படி ஒரு போஸ்ட் போட்டது!!!
சூப்பர்!!
இந்த மாதிரி நல்ல நல்ல போஸ்ட் எல்லாம் போட்டு எல்லாரையும் சிந்திக்க வையுங்கள்!!!

குமரன் (Kumaran) said...

நல்ல கட்டுரை பாலாஜி. நீங்களும் இராகவனும் பேசிக்கொள்வதை ஒதுங்கி நின்று பார்க்கலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் பாழும் மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறதே. அதனால் சில வார்த்தைகளே சொல்லி விலகிக் கொள்கிறேன். பின்னர் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்.

பாஞ்சாலியின் சுயம்வரத்திற்கு கர்ணனை அழைத்தார்கள் என்பது நான் அறியாதது. அவன் கௌரவர்களின் துணையாகத் தான் அங்கே வந்தான் என்பதும் சுயம்வர மண்டபத்தில் அவன் வரனாக நிற்காமல் ஒதுங்கி நின்றான் என்பதும் நான் அறிந்தது. அங்கே மாறுவேடத்தில் வந்த பாண்டவன் திரௌபதியை வென்றுவிட்டான் என்பதைப் பார்த்து அரசர்கள் போருக்கு எழ அப்போது கர்ணனும் துரியனுடன் நின்று போரிட்டு பாண்டவர்களால் துரத்தப் படுகிறான் என்பதும் நான் அறிந்தது. ஆனால் இவை தான் நடந்தது என்று யார் சொல்ல முடியும்? இராமாயணம் பலவகையில் இருப்பது போல் மகாபாரதமும் பல வகையில் இருக்குமே. அவரவருக்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக் கொள்வர்.

கொலை குற்றத்திற்காக வந்த நால் வருணத்தாருக்கு தருமன் தந்த தண்டனை எப்படி இருந்தது? நான்காம் வருணத்தாருக்கு ஒரு பங்கு தண்டனையும், மூன்றாம் வருணத்தாருக்கு இரண்டு பங்கு தண்டனையும், இரண்டாம் வருணத்தாருக்கு மூன்று பங்கு தண்டனையும், முதல் வருணத்தாருக்கும் நான்கு பங்கு தண்டனையும் தரவேண்டும்; அதுவே சாத்திரம். இப்படி கூறிவிட்டு, முதல் வருணத்தாருக்கு அது மரண தண்டனையாக அமையும். அந்த தண்டனையை அரசனான தான் தர வேண்டாம்; குருவான கிருபர் கொடுக்கட்டும் என்று விலகுகிறான். அப்படியே தண்டனை தரப்படுகிறது. தருமதருமனின் சட்டம் இப்படி தான் இருந்தது. நால்வருணத்தாருக்கும் ஒரே அளவில் தண்டனை தந்திருக்க வேண்டும்; ஆனால் அப்போதைய சாத்திரப்படி ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தண்டனை என வழங்குகிறான். அவனை ஏசுபவர்கள் இத்தோடு நிறுத்திவிடுகிறார்கள். அப்படி வெவ்வேறு தண்டனைகள் தந்தவன் தலைகீழ் விகிதத்தில் தண்டனை வழங்கினான் என்று சொல்வதில்லை. அது அவர்கள் தருமனை ஏசுவதற்கு வாய்ப்பளிக்காதே?!

குந்திதேவியைக் கர்ணனிடம் அனுப்பும் போது கண்ணன் சொன்னது என்ன? அவனை அரசனாக்குகிறோம் என்று சொல்; அவன் கேட்கமாட்டான். ஏனெனில் அதனை நான் ஏற்கனவே அவனிடம் சொல்லிவிட்டேன். அவன் நன்றிக்கடனுக்காக நண்பனை விட்டு உடன்பிறந்தோர் பக்கம் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீ சொல்லிக் கேட்கிறானா என்று பார்ப்போம். இல்லை என்றால் அடுத்த வரம் கேள். இதுவே அவன் சொன்னது. இருமுறை கர்ணனிடம் சகாதேவன் சொன்னதை முயன்றவன் கண்ணன்.

ஆனால் கர்ணன் அரசனாகியிருந்தால் அவன் அதனை துரியனுக்குக் கொடுத்திருப்பான். அதனை மறுக்க முடியாது. அப்படியிருக்க இரு முறை வந்த வாய்ப்பை ஏன் கர்ணன் மறுக்கிறான்? கேட்டுப் பாருங்கள். விடை கிடைக்கும். சில இடங்களில் கர்ணனே அதனைச் சொல்லியிருக்கிறான். கும்பகர்ணனைப் போல் இவனும் செஞ்சோற்றுக் கடனுக்காக தீமையின் பக்கம் நிற்கிறோம் என்பதனை நன்கு உணர்ந்தவன்.

நன்றி மறத்தல் நன்றன்று. அதனால் அதற்காகத் தன் உயிரையே கொடுத்த கர்ணன் நல்லவனே. அதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் மகாபாரதத்தில் கண்ணன் முதற்கொண்டு எல்லாருமே குறைகளுடனேயே காட்டப்பட்டிருக்கிறார்கள். மகாபாரதம் எழுதியவரின் நேர்மையை அது காட்டுகிறது. உள்ளதை உள்ளபடி, நடந்ததை நடந்தபடி சொல்வதால் தானே அவை இதிஹாசம் - இப்படி நடந்தது என்று அழைக்கப்படுகின்றன.

எல்லோரிடமும் குறை காண வாய்ப்பிருப்பதால் விவாதம் என்று இறங்கி பேசுவது எவ்வகையில் நன்மை பயக்கும் என்று தெரியவில்லை. சூடேறாமல் விவாதம் நடந்தால் நிறைய மற்றவர் தெரிந்து கொள்ளலாம். சூடேறினால் அது ஏச்சுப்பேச்சாகத் தான் முடியும். அதனால் விவாதம் செய்யுங்கள். சூடு வேண்டாம் என்று சொல்லி விலகி நின்று பார்க்கிறேன்.

Udhayakumar said...

//கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.//

அதுதான் கடவுள்ன்னு தெரியுமே, அப்புறம் எதுக்கு முட்டி மோதிட்டு?

Syam said...

வெட்டி, எங்கயோயோயோயோயோ போய்ட்டீங்க.... :-)

Syam said...

அது எப்படிங்க கவுண்ட மணில இருந்து கர்ணண் கண்ணன் வரைக்கும் பிச்சு உதற்றீங்க... :-)

ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு பாலாஜி.

தொடர்ந்த விவாதங்களும் நன்று.

பேர் மட்டும் எதுக்கு வெட்டிபயல் னு வெச்சிருக்கீங்க ? ))))

நாமக்கல் சிபி said...

//கண்ணன் யாரய்யா அரசு தருவதற்கு? அரசு தரும் உரிமை கண்ணனுக்கு இருந்தால் அதை தருமனுக்குத் தந்திருக்கலாமே? பிறகு ஏன் போர்? அரசு பதவிக்குப் போட்டி தருமனுக்கும் துரியனுக்கும். இவர்கள் இருவரிடமும் சொல்லி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அது நேர்மை எனலாம். அதை விடுத்து அவனிடம் ரகசியம் பேசினால்....தன்னுடைய பிறப்பு குறித்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் ஒருவன் என்ன முடிவெடுக்க முடியும்!//

கண்ணன் அரசை தர இயலாது. தருமனின் குணம் அவனுக்கு தெரியும். உண்மையை தருமனிடம் சொல்லியிருந்தால் அவன் கர்ணனையே அரசனாக்கியிருப்பான். அதற்காகவே அவர் அவ்வாறு சொன்னார்.

கர்ணன் தெளிவாகவே சொல்கிறான். நான் துரியோதனின் கடனாளி அதனால் ஆட்சியை எனக்களித்தால் நான் அதை அவனுக்கு தந்துவிடுவேன். அது தர்மமல்ல. ஆகவே நீங்கள் இதை பாண்டவர்களிடம் சொல்லவேண்டாம் என்றே சொல்கிறான்.

அவனுக்கு கண்ணன் நாராணின் அவதாரம் என்றும் தெரியும். போரில் அவன் மரணம் உறுதியாகியே போருக்கு செல்கிறான்...

//// அவன் கடனாளி.... கடனாளி என்றுமே நண்பனாகிவிட முடியாது. //

துரியனுக்கும் கர்ணனுக்கும் உள்ள உறவு கடனாளி உறவு என்றால் பாஞ்சாலிக்கும் கண்ணனுக்கும் உள்ள உறவும் கடனாளி உறவுதான். மானம் போன பொழுது உதவியது கடன் கொடுப்பது போல என்றால் அந்த வகையில் (எந்தக் காரணமானால் என்ன) கண்ணனும் துரியனும் கூட ஒரு நிறையாகி விடுவார்கள்.//

பாஞ்சாலி கண்ணனுக்கு தங்கை முறை ஆகிறாள் என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் அவள் கண்ணனை தெய்வமாக எண்ணியே அங்கு விளிக்கிறாள். அது பக்தைக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பு. பாஞ்சாலி ஆடை களையும் போதும் அவள் கையினால் ஆடையை பற்றி கண்ணா, கண்ணா என்று அழைக்கும் போது அவன் வரவில்லை. கண்ணனை நினைத்துறுகி அவள் கையை மேலே தூக்கி அவனை சரணாகதி அடையும் போதே அங்கு அவன் வருகிறான்.

சரி... நீங்க சொல்ற மாதிரி பார்த்தால் நீங்க எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தருகிறீர்கள் (என்று வைத்துக்கொள்வோம்). ஒரு பெரிய தாதா அவனுக்கு தெரிந்தவனுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறானென்றால் நீங்களும், அந்த தாதாவும் ஒன்று என்று சொல்லலாமா?

வாதம் செய்யலாம் ஜி.ரா, விதாண்டாவாதம் கூடாது...

நாமக்கல் சிபி said...

//// நீங்க ஒருவரிடம் கடன் வாங்கியதால் அவரின் எதிரியை கொல்வது நியாயமாகிவிடாது ஜி.ரா...//

போர்க்களத்தில் எதிரியைக் கொல்வது நியாயம் என்று அர்ஜுனனுக்கு உரைத்தது சரியென்றால் அது கர்ணனுக்கும் சரியே. அவன் பாண்டவர்களில் யாரையும் கொல்லவில்லை. கொல்ல விடாமல் வரமும் வாங்கியாகி விட்டதே. ஐந்து பிள்ளைகள் பிழைக்க வரம் வாங்கிய குந்தி ஆறாவது..அல்ல...மூத்த பிள்ளை பிழைக்க வரம் வாங்காமல் போனாளே....அல்லது தன் மகந்தான் கர்ணன் என்று தெரிந்தும்...தருமனிடம் போய்...மகனே அவன் உன் அண்ணன் என்று சொல்லாமல்...முதலில் கர்ணனிடம் போய் வரம் வாங்கத்தானே அவளுக்கும் தெரிந்திருக்கிறது.//
அவள் சொல்லக்கூடாது என்று கர்ணனே வரம் வாங்குகிறான்... தாயிக்கு தலைமகனென்று படித்ததில்லையா? ஒரு தாய் என்றுமே தன் தலை மகனையே அதிகம் நேசிப்பாள்...

மேலும் கர்ணன் வீரன் தான் என்றாலும் அவன் போரில் எங்கேயும் அர்ச்சுணனையோ, பீமனையோ வெல்லவில்லை என்பதே உண்மை. துரோண பர்வத்திலும் பீமனே கர்ணனை வெல்கிறான்.

என்னுடைய வாதம் கர்ணன் கெட்டவனென்றில்லை. கண்ணனே பேசும் பொருள்.

நாமக்கல் சிபி said...

சரி ஜி.ரா,
இவ்வளவு விதண்டாவாதம் செய்யும் நீங்கள் இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் வாதங்களை தொடருங்கள்...

1. உலகை (பூமி) ஆளும் உரிமையை உங்களுக்கு தருகிறோம் அல்லது முருகனின் பாதத்தில் செருப்பில் கோடியில் ஒரு துகலாக இருக்கும் நிலையை அளிக்கிறோம். இரண்டில் எது வேண்டுமென்று கேட்டால் உங்களுக்கு எது வேண்டுமென்று சொல்வீர்கள். (மூன்றாவது சாய்ஸ் இல்லை)

நாமக்கல் சிபி said...

//JTP said...

அட வெட்டிப்பயலே, வெட்டி கட்டுரை//

ஆமாங்க...
வெட்டிப்பயல்னு பேர் வெச்சிருக்கவர்ட உங்க அளவுக்கு பயனுள்ள கட்டுரை எதிர்பார்த்தா அது யார் தப்புங்க??? ;)

ஜெயஸ்ரீ said...

//இதில் எனக்கு வந்த ஐயம் என்ன என்றால்,

1. கர்ணன் கண்ணனுக்கு தனது புண்ணியம் அனைத்தையும் தானம் அளிக்கிறான்.

2. அவ்வாறு புண்ணியம் அனைத்தையும் தானம் அளிப்பதால் மேலும் புண்ணியம் கர்ணனுக்கு கிடைக்கிறது.

3.திரும்பவும் அப்புண்ணியங்கள் கண்ணனுக்கு போகிறது.

4.திரும்பவும் ( 2. ) நடக்கிறது.

5. திரும்பவும் ( 3. ) நடக்கிறது.

....
....

இது ஒரு iterative function of புண்ணியமாக இருக்கிறது. //

அனானி அவர்களே,

தமிழில் பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அதையும் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

தன் புண்ணியமனைத்தையும் தானமாகக் கேட்கும் கண்ணனுக்குத் தன் குருதியால் தன் புண்ணியங்களை தாரை வார்த்துக் கொடுக்கையில் கர்ணன் சொல்வது "யான் செய்புண்ணிய மனைத்தும் " உனக்குத் தந்தேன் . இதில் செய்புண்ணியம் என்ற பதத்தைக் கவனியுங்கள். அது வினைத்தொகை ,முக்காலங்களையும் குறிக்கும். யான் கடந்த காலத்தில் செய்த புண்ணியம், தற்போது (நிகழ் காலத்தில்) செய்யும் புண்ணியம், இப்படி உனக்குக் கொடுத்தபின் அதனால் எனக்கு ஏற்படப்போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்குத் தானமாகத் தந்தேன்.
அப்படித் தந்தபின் தான் அவன் உயிர் பிரிகிறது.

நாமக்கல் சிபி said...

//லட்சுமி said...

//இப்படி பக்தருக்காகவே வாழ்ந்து பழியையும் சாபத்தையும் ஏற்கும் கண்ணனுக்கு போரினால் குண்டுமணி அளவு பலனுமில்லை. நியாயத்தை நிலைநாட்டுவதை தவிர...//

சிறிது நாட்களுக்கும் முன் குருசேத்திரம் சென்று அர்ச்சுனனுக்கு உபதேசித்த இடம் பார்த்தபோது இப்படி தான் தோன்றியது.தர்மம் வெல்லவேண்டும் என்பதற்காக அர்ச்சுனனுக்கு உபதேசித்து இப்போது கெட்ட பெயர் வாங்கிக் கொண்டு இருக்கிறார் கண்ணன் என்று.//

லட்சுமி,
நீங்க சொல்றது ரொம்ப சரி...
இன்னைக்கு கெட்டது பண்றவனுங்க தான் படத்துல ஹீரோனு பார்த்து பார்த்து பழகிய நமக்கு கண்ணன் கெட்டவனாகத்தான் தெரிவான்...

ஓகை said...

ஜிரா சொலவ்து சரியாகப் படுகிறது. கண்ணன் விஸ்வரூப தரிசனமும் முக்தியும் கர்னனுக்கு அளித்தது கண்ணன் செய்த பிராயச்சித்தம்.

கர்னன் - உலகில் நல்லவர்கள் படும் துன்பங்களுக்கு ஒரு பிரதிநிதி.

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

பிரிலப்பா

ஏன்னா நான் அந்த படத்தையே பாக்கல.
அதுவுமில்லாம ஞாயித்த்துகிழமை மகாஆஆபாரதம்னு டீவில போடும்போது மைதானத்தில மட்டைய புடிச்சிட்டு நிப்பேன்.//

தம்பி,
இதெல்லாம் புரியாம இருக்கறதே ஒரு வரம் தான்...

நீ எதுவும் புரிஞ்சிக்க முயற்சிக்காதே!!!

இலவசக்கொத்தனார் said...

என்னென்னவோ பேசுறீங்க. என் கடன் படித்துப் பின்னூட்டம் போட்டு உள்ளேன் ஐயா சொல்வது.

சொல்லிட்டேன்!

நாமக்கல் சிபி said...

//கண்ணன் நல்லவனோ கெட்டவனோ....கர்ணன் கெட்டவனில்லை. முழு நாடும் தனக்குத்தான் உரிமையுள்ளது என்று தெரிந்த பின்னும் உயிரை விட்ட உத்தமன். மாண்டது அண்ணன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் தருமன். விட்டதா பதவி ஆசை? தொடர்ந்தது போர். கிடைத்தது நாற்காலி. ரத்தப் பளபளப்பில்.
//
கர்ணன் ரொம்ப நல்லவந்தான் ஜி.ரா. நான் எங்கயும் அவனை தவறு சொல்லவில்லை. நாரயணனே அவனுக்கு காட்சியளித்து முக்தியளித்தான் என்றால் கர்ணன் பாண்டவர்களை விட நல்லவன், புண்ணியம் செய்தவன் என்று நான் சொல்லவேண்டுமா?

என் பேசு பொருள் கண்ணனே!!!

//கண்ணனைக் காந்தாரி சபித்ததும் தகும். பெற்ற வயிறு. இந்த நிலை குந்திக்கு நேர்ந்திருந்தாலும் சபித்திருப்பாள். ஐயமில்லை.//
அதை அவனும் தெரிந்தே ஏற்கிறான். இதற்கும் காரணமில்லாமலில்லை. போரில் அனைத்து வீரர்களும் இறக்க யாதவர்கள் மட்டுமே மிஞ்சுகிறார்கள். உலகில் தாங்களே சக்தி மிகுந்தவர்கள் என்று தலைகனத்தால் ஆடுகிறார்கள். அதனாலே அழிகிறார்கள்.

கண்ணன் பரமாத்மா. அவனன்றி எதுவும் அசையாது...

நாமக்கல் சிபி said...

புலிக்குட்டி,
கண்ணனை கடவுளாக உணர்ந்த தங்களக்கானதல்ல என் கட்டுரை.

கண்ணன் யாருய்யா நாட்ட கொடுக்க?னு கேட்கும் ஒரு சிலருக்கே இந்த கட்டுரை...

//கர்ணன் அர்ச்சுனனை நினைவிழக்க செய்து தேரை தூக்கும் போது, அர்ச்சுனனுக்கு நினைவு வந்து, கர்ணன் தலையை கொய்கிறான். இங்கு கூட, கையில் ஆயுதம் இல்லாத அர்ச்சுனனை கர்ணன் தாக்க முயலவில்லை. (கண்ணன் எப்படியும் காப்பாற்றி இருப்பான் என்றாலும்).//
அர்ச்சுணன் மயங்கிவிழவில்லை. கர்ணனுடைய அம்பினால் அவன் தேரிலே விழுகிறான். அதுவும் அவன் தேரிலிருந்து இறங்கிய பிறகு நடந்த விவாதத்திற்கு பிறகே இது நடக்கிறது. அதனால் அவனுக்கு பார்த்தன் எழுந்தால் தாக்கப்போவாது உறுதி என்றும் தெரியும்.

கர்ணன் தேரில் விழுந்த பார்த்தனை கொல்லாதது அவன் உயர்ந்த உள்ளத்தையே காட்டுகிறது... (அவனுக்கு அந்த நிலையிலிருக்கும் பார்த்தனை கொல்ல வேண்டும் என்று யோசிக்கக்கூட முடியவில்லை)

மேலும் கர்ணன் சாகும் போதும் நிராயுதபாணியாகயில்லை. பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முயலும் தருவாயிலே அவன் மறந்து போகவே அதிலே அவன் மனம் செல்லவே அந்த நேரத்தில் பார்த்தன் எய்யும் பாணத்தால் அவன் மரணமடைகிறான்

சாத்வீகன் said...

நல்ல கட்டுரை. வெட்டி இன்னும் ஆழமாக நீங்கள் எழுதியிருக்கலாம்.


" சல்லியா, இகழ்ச்சி எனக்கு புதிதல்ல. உன்னை போல் இந்த உலகம் நான் பிறந்ததிலிருந்து இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்று நிச்சயம். நான் இவ்வுலகை விட்டு செல்லும் போது இந்த உலகம் எனக்கு கடன் பட்டதாக இருக்கும்."

அருமையான வரிகள் புலிக்குட்டி...


கண்ணனோ கர்ணனோ, தத்தம் பார்வை வழி நின்று இகழ்வது என்பதை உலகம் தொடர்ந்து செய்யும்.

பச்சை கண்ணாடி போட்டவனுக்கு உலகம் பச்சையாகவும், சிவப்பு கண்ணாடி போட்டவனுக்கு உலகம் சிவப்பாகவும் தெரிவது ஆச்சரியமில்லை.

ஆனால் உலகம் உண்மையில் இவ்விரண்டு நிறங்களுமே இல்லை என்பதுதான் உண்மை.


கண்ணன் சொல்லிய கீதையின் படி, புகழ்ச்சியோ இகழ்ச்சியோ அதில் கவனம் செலுத்தாமல் காரியம் ஆற்றபவனே கர்ம வீரன்.

ஓகை said...

" சல்லியா, இகழ்ச்சி எனக்கு புதிதல்ல. உன்னை போல் இந்த உலகம் நான் பிறந்ததிலிருந்து இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்று நிச்சயம். நான் இவ்வுலகை விட்டு செல்லும் போது இந்த உலகம் எனக்கு கடன் பட்டதாக இருக்கும்."

உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்த வரிகள்.

G.Ragavan said...

// குமரன் (Kumaran) said...
நல்ல கட்டுரை பாலாஜி. நீங்களும் இராகவனும் பேசிக்கொள்வதை ஒதுங்கி நின்று பார்க்கலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் பாழும் மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறதே. அதனால் சில வார்த்தைகளே சொல்லி விலகிக் கொள்கிறேன். பின்னர் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். //

குமரன்...என்ன இது? என்னை நீர் அறிவீர். உம்மை நான் அறிவேன். நம்மை வெட்டி அறிவான். அப்படியிருக்க...நாம் ஆயிரம் கருத்துச் சண்டையிட்டாலும்....அது கருத்தோடு மட்டுந்தான் என்பதும் அறிந்தும் ஒதுங்கலாமா?

இங்கு பல கருத்துகள் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. பாரதத்திலும் பல இடைச் செருகல்கள் உண்டு என்றும்...பலவிதங்கள் உண்டு என்றும் தெரிகிறது. மூலத்தை நான் படித்ததில்லை. ஆகையால் நான் தெரிந்து கொண்டதில் கூட்டல் குறைத்தல் இருக்கலாம். நான் அறிந்தவைகளைக் கொண்டேதானே நாம் பேச முடியும்.

பாரதத்தையோ கந்தபுராணத்தையோ அப்படியே ஏற்றுக் கொண்டால் அதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமேயில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திலும் நம்மை நிறுத்தி...அந்த நிலையில் என்ன செய்திருப்போம் என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பது என் வழக்கம். முன்பு திரவுபதையாளும் கண்ணகியாளும் சந்தித்துப் பேசிக் கொள்வது..மன்னிக்க சீதையாளும் கண்ணகியாளும்...ஒரு கற்பனை எழுதினேன். ஆனால் அதை நான் எங்கும் பதிக்கவில்லை. அது முழுக்க முழுக்க கற்பனை. ஒரு பெண்..இப்படிப் பட்ட சூழ்நிலையில் என்ன நினைத்திருப்பாள் என்று கற்பித்து எழுதியது. அந்த வகையில்தான் நான் இங்கு எடுத்து வைக்கும் வாதங்களும்.

கண்ணன் செய்தது சரியா தவறா என்பதை விட கர்ணன் செய்தது சரியா தவறா என்பதைத்தான் நான் ஆராய்ந்தேன்.

நீங்கள் சொன்னது போல நானறிந்த பாரதத்திலும் கண்ணன் உட்பட அனைவருமே பழுப்புப் பாத்திரங்கள்தான். ஆகையால்தான் போரில் வென்றாலும் தருமனுக்குத் தோல்விதான். கண்ணன் குலமே அழியக் கண்டான். அதை முழுதும் ஒத்துக் கொள்கிறேன்.

என்னுடைய வாதங்களைப் பார்த்தீர்களானால் ஒரு வாழ்க்கை முறையில் கர்ணனைச் சுற்றியுள்ளவர்கள் செய்த தவறுகளை மட்டுமே நான் காட்டியிருக்கிறேன். ஒரு தாயாகக் குந்தி தோற்றதும்...அண்ணன் இறந்தான் என்று தெரிந்தும் போரைக் கொண்டு சென்ற யுதிர்ஷ்டனைத் தருமன் என்பதும் தகாது என்பது என் வாதம். கண்ணன் கடவுள் என்று சொல்லி விட்டால் எதையும் கேள்வி கேட்க முடியாது.

நால்வகை மக்களுக்கு நால்வகைத் தண்டனை என்று தெரியும். ஆனால் நீங்கள் சொல்லியபடித்தான் தண்டனையா என்று தெரியாது. அப்படியே இருந்தாலும்....நான்கு மடங்கு தண்டனை என்று முடிவு செய்து விட்டு அதை வழங்குவதை மட்டும் ஏன் கிருபரிடம் தர வேண்டும்? அரசன் பொது என்றால் அவனே அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும். இந்தத் திரியில் இது பிரச்சனையல்ல என்பதால் இதை இப்பொழுது விட்டு விடலாம்.

கர்ணனை சுயம்வரத்திற்கு அழைக்காதது உண்மையென்றால்..அப்படி அழைக்காததும் குற்றமே. தேரோட்டி மகன் அரசுக்கு வந்தும் அவனை அரசனாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் இருந்திருக்கிறார்கள் தருமத்தின் பக்கம் நின்றவர்கள்.

இந்தக் கருத்துகளைச் சொன்னது கர்ணன் எவ்வளவு வஞ்சிக்கப் பட்டவன் என்றும்...அத்தனை வஞ்சனையிலும் அவன் எவ்வளவு நியாயமாக நடந்து கொண்டான் என்பதைச் சொல்லிக் காட்டவுமே. அதுதான் என் கருத்து.

குமரன் (Kumaran) said...

புலிக்குட்டி நன்றாகச் சொல்லியிருக்கிறார். கர்ணனின் பெருமையை நன்கு உணர்ந்தவர்கள் தான் அப்படி பேச முடியும். கர்ணனின் பெருமை கண்ணனைத் திட்டுவதாலோ தருமனைத் திட்டுவதாலோ உணரப்படுவதில்லை. அது அவனது தனிப்பட்டச் செயல்களாலே உணரக்கூடியது. சில குறைகளும் பற்பல நிறைகளும் உடையவன் கர்ணன். நடுநிலையாளர்கள் குறை கூறும்படி ஆனால் பக்தர்கள் எண்ணி எண்ணி உருகும்படியான செயல்களைச் செய்தவன் கண்ணன்.

அனானி கேட்ட கேள்விக்கு வில்லிபாரதத்திலிருந்து ஒரு அருமையான பதிலைச் சொல்லியிருக்கிறார் . இன்னொரு விதமாகவும் பெரியவர்கள் இதனை விளக்குவார்கள் - தானம், தருமம் என்ற இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினைச் சொல்லி.

விஸ்வரூப தரிசனம் கண்ணன் கர்ணனுக்குச் செய்த பிழைக்குப் பிராயசித்தம் என்று ஓகை ஐயா சொல்லியிருக்கிறார். அப்படி எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பிராயசித்தமாக பற்பல பிறவிகளில் தவம் செய்து பெரியோர்கள் எதனைக் காண விழைகிறார்களொ அதனைத் தருவானா இறைவன் என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படியே பிராயசித்தமாக தரிசனம் கொடுத்திருந்தாலும் அதற்கும் மேலாக முக்தியும் கொடுக்க வேண்டுமா? இது என்ன வேடிக்கையாக இருக்கிறதே?! கர்ணன் நல்லவனே. அவனுக்கு இந்த உலகத்தில் அநீதி இழைக்கப்பட்டதே. ஆனால் அதற்காக கண்ணனின் கருணைச் செயலைக் குறைத்துக் கூற வேண்டுமா?

நல்லவர்கள் உலகில் படும் துயரங்களுக்கு தருமராஜனை எடுத்துக் காட்டாகச் சொல்லித் தான் கேட்டிருக்கிறேன். இது தான் முதன்முறை கர்ணனை அப்படிச் சொல்லிக் கேட்பது.

G.Ragavan said...

// ஜெயஸ்ரீ said...
பேர் மட்டும் எதுக்கு வெட்டிபயல் னு வெச்சிருக்கீங்க ? )))) //

நல்லாக் கேளுங்க ஜெயஸ்ரீ. இதத்தான் நானும் கேக்குறேன். :-)

// கண்ணன் அரசை தர இயலாது. தருமனின் குணம் அவனுக்கு தெரியும். உண்மையை தருமனிடம் சொல்லியிருந்தால் அவன் கர்ணனையே அரசனாக்கியிருப்பான். அதற்காகவே அவர் அவ்வாறு சொன்னார். //

வெட்டி, இங்குதான் நான் ஒன்றை நினைக்கிறேன். துரியனுக்குக் கர்ணனே பட்டத்திற்குரியவன் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்! ஊகங்கள்தான் நம்மால் கொள்ள முடியும். :-( ஆனால் துரியனும் கர்ணனுக்கே விட்டுக் கொடுத்திருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.

// பாஞ்சாலி கண்ணனுக்கு தங்கை முறை ஆகிறாள் என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் அவள் கண்ணனை தெய்வமாக எண்ணியே அங்கு விளிக்கிறாள். அது பக்தைக்கும் தெய்வத்திற்கும் உள்ள தொடர்பு. பாஞ்சாலி ஆடை களையும் போதும் அவள் கையினால் ஆடையை பற்றி கண்ணா, கண்ணா என்று அழைக்கும் போது அவன் வரவில்லை. கண்ணனை நினைத்துறுகி அவள் கையை மேலே தூக்கி அவனை சரணாகதி அடையும் போதே அங்கு அவன் வருகிறான். //

அதை ஒத்துக் கொள்கிறேன் வெட்டி. ஆனால் விளித்தால்தான் தெய்வமே வந்தது. விளிக்காமல் வந்தவன் துரியன். ஆகையால் அவனுக்காக கர்ணன் செய்தவைகள் அந்தப் பாத்திரத்தின் பார்வையில் சரியே.

// சரி... நீங்க சொல்ற மாதிரி பார்த்தால் நீங்க எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தருகிறீர்கள் (என்று வைத்துக்கொள்வோம்). ஒரு பெரிய தாதா அவனுக்கு தெரிந்தவனுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறானென்றால் நீங்களும், அந்த தாதாவும் ஒன்று என்று சொல்லலாமா? //

நானும் தாதாவும் ஒன்று அல்ல. ஆனால் ஒரே நிறை. அதாவது எனக்கும் உனக்கும் உள்ள உறவுமுறையும், தாதாவிற்கும் அன்னாருக்கும் உள்ள உறவுமுறையும் ஒன்றாகும். நீ என்னை நினைப்பது போல...தாதாவை அன்னார் நினைப்பார். இதுதான் நான் சொல்ல வந்தது.

// வாதம் செய்யலாம் ஜி.ரா, விதாண்டாவாதம் கூடாது... //

ஜிராவும் மனிதந்தானே :-) வெட்டி என்று பெயர் வைத்துக் கொண்டு சுட்டித்தனமாகப் பேசும் திறமை எனக்கில்லையே!

G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
சரி ஜி.ரா,
இவ்வளவு விதண்டாவாதம் செய்யும் நீங்கள் இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் வாதங்களை தொடருங்கள்...

1. உலகை (பூமி) ஆளும் உரிமையை உங்களுக்கு தருகிறோம் அல்லது முருகனின் பாதத்தில் செருப்பில் கோடியில் ஒரு துகலாக இருக்கும் நிலையை அளிக்கிறோம். இரண்டில் எது வேண்டுமென்று கேட்டால் உங்களுக்கு எது வேண்டுமென்று சொல்வீர்கள். (மூன்றாவது சாய்ஸ் இல்லை) //

நான் என்ன சொல்வேன் என்பதை அறிந்தே கேள்வியைத் தொடுக்கிறாய். :-) விடையை நான் சொல்லவும் வேண்டுமா! "காலெந்தன் தலை சூடி மீட்சி என்றான்" என்று நான் எழுத்திலாவது இன்பம் கொள்வது தெரியாததா!

கண்ணனை நான் வணங்கேன் என நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு. திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் "பாம்பால் உததி தனைக் கடந்து படரும் கொடுங்கார் சொரி மழைக்குப் பரிய வரையைக் குடை கவித்துக் காம்பால் இசையின் றொணியழைத்துத் தமறும் காளிந்திக் கரையின் நிரை பின்னே நடந்த கண்ணன் மருகா!!!!!!!!!!!!!!!!!!!!!!" என்று உருகுகின்றவனும் நானே. "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" என்று இளங்கோ சொல்லிக் கொடுத்து பாடம் கேட்டவனும் நானே. "ஞான மலர்க் கண்ணா...ஆயர் குல மணிவிளக்கே...வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே..." என்றும் "கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே" என்றும் கண்ணதாசன் வரிகளில் களிப்பவனும் நானே. கந்தபுராணத்தில் முருகனை மனிதனாக்கி அவன் செயல்கள் சரியென்று உணர்ந்துதானப்பா நான் அமைதியடைந்தேன். அந்த வகையில்தான் என்னுடைய வாதங்கள் இங்கும் அமைகின்றன. தெய்வம் என்று நினைத்து விட்டால்..அதற்கு மேல் வாதமேயில்லை. அதற்காகத்தான் என் வாதங்கள். நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...

ஆஹா வெட்டியா இப்படி ஒரு போஸ்ட் போட்டது!!!//
ஆமாங்க மண்டபத்துல யாரும் எழுதி கொடுத்ததை நான் வாங்கிட்டு வந்து போடலைங்க...

// சூப்பர்!!
இந்த மாதிரி நல்ல நல்ல போஸ்ட் எல்லாம் போட்டு எல்லாரையும் சிந்திக்க வையுங்கள்!!!//
மிக்க நன்றிங்க...
அப்பப்ப முயற்சி செய்கிறேன்...

G.Ragavan said...

ஜெயஸ்ரீ, உங்கள் விளக்கம் மிக அருமை. மிகமிக ரசித்தேன்.

நாமக்கல் சிபி said...

குமரன்,
அழகான விளக்கங்கள்...

எனக்கு தெரிந்த வகையில் சுயம்வரத்திற்கு கர்ணன் துரியோதனனுடன் சென்றான். அங்கு யாராலும் தனுசை தூக்கமுடியாத நிலையில் கர்ணனே அதை தூக்கி நானேற்ற முயல்கிறான். ஆனால் திரௌபதி அவனை மணக்க முடியாது என்று சொல்லி அவமானப்படுத்துகிறாள். ஆனால் சுயம்வரத்தில் ஒரு பெண் யாரை மணப்பது என்பது அவள் விருப்பம்.

இருந்தாலும் அவள் கர்ணனை இழிவுப்படுத்தியாதேலே சபையில் பலர் முன் அவமானப்பட நேரிடுகிறது.

நாமக்கல் சிபி said...

//Udhayakumar said...

//கண்ணனே நாராயணனின் அவதாரம் என்பது கர்ணனுக்கும் தெரியும்.//

அதுதான் கடவுள்ன்னு தெரியுமே, அப்புறம் எதுக்கு முட்டி மோதிட்டு?//

செஞ்சோற்றுக்கடன்...
கும்பகர்ணனுக்கும் போரில் இறப்பது திண்ணம் என்று தெரியும்.

ஒரு சிலருக்கு நியாயமே முக்கியம். ஒரு சிலருக்கு செஞ்சோற்று கடனே முக்கியம். ஆனால் இருவருமே இறைவனையே அடைகிறார்கள்...

நாமக்கல் சிபி said...

//Syam said...

வெட்டி, எங்கயோயோயோயோயோ போய்ட்டீங்க.... :-)//

இல்லைங்க நாட்டாமை...
இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப இறங்கி வந்துடுவோம் ;)

நாமக்கல் சிபி said...

//Syam said...

அது எப்படிங்க கவுண்ட மணில இருந்து கர்ணண் கண்ணன் வரைக்கும் பிச்சு உதற்றீங்க... :-)//

எல்லாம் ஒரு முயற்சி தான் நாட்டாமை...

நம்ம Area of Interest இதுதான்...
ஆனா அது நல்லா வருதுனு கண்டினியு பண்றேன்...

நாமக்கல் சிபி said...

//ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு பாலாஜி.

தொடர்ந்த விவாதங்களும் நன்று.

பேர் மட்டும் எதுக்கு வெட்டிபயல் னு வெச்சிருக்கீங்க ? ))))//

மிக்க நன்றி ஜெயஸ்ரீ...

பின்னால யாரும் சொல்லக்கூடாதேனு வெச்சிக்கிட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

//வெங்கட்ராமன் said...

நல்லா இருக்கு. . . .
//
மிக்க நன்றி வெங்கட்ராமன்...

// என்னங்க இந்த வாரம் முடியப்போவுது. . . .//
அடுத்த வாரம் பின்னி பெடலெடுக்க எப்படியும் ஒருத்தர் வருவாருங்க...

ஜெயஸ்ரீ said...

//இன்னொரு விதமாகவும் பெரியவர்கள் இதனை விளக்குவார்கள் - தானம், தருமம் என்ற இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினைச் சொல்லி //

குமரன், நீங்கள் சொன்னதும் நினைவு வந்து விட்டது. தருமம், தானம் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. கர்ணன் கேட்டவர்களுக்கெல்லாம் பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்தது தர்மம். தர்மம் செய்யும்போது அதனால் ஏற்படும் நல்வினைப்பயன்கள் (புண்ணியம்) அளிப்பவனைச் சேர்கின்றன. அதனாலதான் தர்மம் தலை காக்கும் என்கிறார்கள்.

ஒரு பொருளை தானம் செய்யும்போது ,நீரை வார்த்து தத்தம் செய்து கொடுக்கும்போது அதனோடு தொடர்புடைய அனைத்தையும் (அதை அளிப்பதால் ஏற்படும் நல்வினைப்பயன் உட்பட) கொடுத்துவிடுகிறோம்.

நினைவூட்டியதற்கு மிக்க நன்றி குமரன். என் புரிதல் சரியா ?

நாமக்கல் சிபி said...

அனானி நண்பரே,
நீங்க கேட்ட கேள்விக்கு ஜெயஸ்ரீ அருமையா பதில் சொல்லியிருக்காங்க...

நாமக்கல் சிபி said...

//ஓகை said...

ஜிரா சொலவ்து சரியாகப் படுகிறது. கண்ணன் விஸ்வரூப தரிசனமும் முக்தியும் கர்னனுக்கு அளித்தது கண்ணன் செய்த பிராயச்சித்தம்.

கர்னன் - உலகில் நல்லவர்கள் படும் துன்பங்களுக்கு ஒரு பிரதிநிதி.//

பிராயச்சித்தமா???
ஓகை,
தவறு செய்தவர்களே பிராயச்சித்தம் செய்வார்கள். கண்ணன் பரமாத்மா. அவனுக்கு பாவ புண்ணியம் என்று எதுவுமில்லை.

கர்ணனுக்கு அவன் காட்சியளித்தது அவனருளே அன்றி வேறேதுமில்லை...

நாமக்கல் சிபி said...

சாத்வீகன்,
இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம். ஆனால் எனக்கு சொல்ல தெரியவில்லை. கண்ணனை பற்றி நினைக்கும் போதே வார்த்தைகள் வர மறுக்கின்றன...

மேலும் அதிகமாக சொல்ல சொல்ல பேசும் பொருளிலிருந்து விலக வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

வேறு என்ன சொல்வது???

நாமக்கல் சிபி said...

//இங்கு பல கருத்துகள் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. பாரதத்திலும் பல இடைச் செருகல்கள் உண்டு என்றும்...பலவிதங்கள் உண்டு என்றும் தெரிகிறது. மூலத்தை நான் படித்ததில்லை. ஆகையால் நான் தெரிந்து கொண்டதில் கூட்டல் குறைத்தல் இருக்கலாம். நான் அறிந்தவைகளைக் கொண்டேதானே நாம் பேச முடியும்.//

மிகவும் சரி...
பல இடை சொருகல்கள் இருக்கின்றன. நாம் பார்த்த டீ.வி மகாபாரதத்திற்கும், கர்ணன் படத்திற்குமே பல வித்யாசங்கள் உள்ளது...

//பாரதத்தையோ கந்தபுராணத்தையோ அப்படியே ஏற்றுக் கொண்டால் அதில் மாற்றுக் கருத்து சொல்வதற்கு இடமேயில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரத்திலும் நம்மை நிறுத்தி...அந்த நிலையில் என்ன செய்திருப்போம் என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பது என் வழக்கம//
அது சரியாக வராது ஜி.ரா...
என்னதான் நாம் படித்திருந்தாலும் அவர்களுடைய உண்மையான சிந்தனையோட்டத்தை நம் மனதில் கொண்டு வர இயலாது.

நாம் எப்போது எப்படி சிந்திப்போம் என்பதையே நம்மால் தெளிவாக சிந்திக்க இயலாத போது அது எப்படி சாத்தியமாகும்.

ஒரு கதையை நம்பினால் முழுதும் நம்பிவிட வேண்டும், இல்லையேல் எதையுமே நம்பாமல் இருத்தல் நலம். கண்ணன் கடவுள் என்று நம்பாமல் பாரதம் படித்தால் அதை முழுதும் நம்மால் உணர முடியாது...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன்-கர்ணனைப் பற்றி நாம் அடிக்கடி தொலைபேசிக் கொள்வோமே! அது நிழல் ஆடுகிறது பாலாஜி!

பணி மிகுதி!
மீண்டும் வருகிறேன்!

கண்ணனும்
மீண்டும் வருவான்!
மீண்டு ம் வருவான்!

நாமக்கல் சிபி said...

//கர்ணன் நல்லவனே. அவனுக்கு இந்த உலகத்தில் அநீதி இழைக்கப்பட்டதே. ஆனால் அதற்காக கண்ணனின் கருணைச் செயலைக் குறைத்துக் கூற வேண்டுமா? //

குமரன்,
இதுதான் நான் சொல்லவருவதும்...

நாமக்கல் சிபி said...

//வெட்டி, இங்குதான் நான் ஒன்றை நினைக்கிறேன். துரியனுக்குக் கர்ணனே பட்டத்திற்குரியவன் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பான்! ஊகங்கள்தான் நம்மால் கொள்ள முடியும். :-( ஆனால் துரியனும் கர்ணனுக்கே விட்டுக் கொடுத்திருப்பான் என்று நினைக்கத் தோன்றுகிறது.//

ஜி.ரா,
இந்த சந்தேகம் எனக்குமுண்டு. ஆனால் கர்ணன் துரியோதனனுக்கு அளிக்கும் பொருளை திரும்பி வாங்குவானா? என்பதே கேள்வி

//அதை ஒத்துக் கொள்கிறேன் வெட்டி. ஆனால் விளித்தால்தான் தெய்வமே வந்தது. விளிக்காமல் வந்தவன் துரியன். ஆகையால் அவனுக்காக கர்ணன் செய்தவைகள் அந்தப் பாத்திரத்தின் பார்வையில் சரியே.//
அதனாலே அவன் தீயவர்கள் என்று தெரிந்தும் அவர்களுக்காக தம்பிகளோடு போராடி உயிரை விடுகிறான்.

//நானும் தாதாவும் ஒன்று அல்ல. ஆனால் ஒரே நிறை. அதாவது எனக்கும் உனக்கும் உள்ள உறவுமுறையும், தாதாவிற்கும் அன்னாருக்கும் உள்ள உறவுமுறையும் ஒன்றாகும். நீ என்னை நினைப்பது போல...தாதாவை அன்னார் நினைப்பார். இதுதான் நான் சொல்ல வந்தது.
//
நீங்கள் தெளிவாக சொல்லவில்லை ஜி.ரா. கண்ணனும் துரியோதனனும் சமமென்று சொன்னதாக பொருள் தந்தது. அதனாலே தவறாக பொருள் கொண்டேன்.

//
// வாதம் செய்யலாம் ஜி.ரா, விதாண்டாவாதம் கூடாது... //

ஜிராவும் மனிதந்தானே :-) வெட்டி என்று பெயர் வைத்துக் கொண்டு சுட்டித்தனமாகப் பேசும் திறமை எனக்கில்லையே!//

அப்படியில்லை ஜி.ரா.
பேசு பொருள் கண்ணன் என்றிருக்கையில் பதிவை கர்ணன் புகழ் பாட நீங்கள் திசை திருப்பியதில் ஒரு வருத்தம். அவ்வளவே...

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

// வெட்டிப்பயல் said...
சரி ஜி.ரா,
இவ்வளவு விதண்டாவாதம் செய்யும் நீங்கள் இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் வாதங்களை தொடருங்கள்...

1. உலகை (பூமி) ஆளும் உரிமையை உங்களுக்கு தருகிறோம் அல்லது முருகனின் பாதத்தில் செருப்பில் கோடியில் ஒரு துகலாக இருக்கும் நிலையை அளிக்கிறோம். இரண்டில் எது வேண்டுமென்று கேட்டால் உங்களுக்கு எது வேண்டுமென்று சொல்வீர்கள். (மூன்றாவது சாய்ஸ் இல்லை) //

நான் என்ன சொல்வேன் என்பதை அறிந்தே கேள்வியைத் தொடுக்கிறாய். :-) விடையை நான் சொல்லவும் வேண்டுமா! "காலெந்தன் தலை சூடி மீட்சி என்றான்" என்று நான் எழுத்திலாவது இன்பம் கொள்வது தெரியாததா!
//
இப்போழுது எது பெரிது என்று நீங்களே உரைத்துவிட்டீர்கள். அந்த பெரியதையே கண்ணன் கர்ணனுக்கருளினான்.

மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்பது தாங்களறியாததா? இன்றும் கர்ணனின் புகழே பெருகியுள்ளது. ஆதலால் கண்ணன் கர்ணனுக்கு அநீதி இழைத்தான் என்று சொல்வது தவறு.
இதுவே இங்கு நான் சோல்ல விழைவது.

//
கண்ணனை நான் வணங்கேன் என நீ நினைத்துக் கொண்டிருப்பது தவறு. திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் "பாம்பால் உததி தனைக் கடந்து படரும் கொடுங்கார் சொரி மழைக்குப் பரிய வரையைக் குடை கவித்துக் காம்பால் இசையின் றொணியழைத்துத் தமறும் காளிந்திக் கரையின் நிரை பின்னே நடந்த கண்ணன் மருகா!!!!!!!!!!!!!!!!!!!!!!" என்று உருகுகின்றவனும் நானே. "கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே" என்று இளங்கோ சொல்லிக் கொடுத்து பாடம் கேட்டவனும் நானே. "ஞான மலர்க் கண்ணா...ஆயர் குல மணிவிளக்கே...வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே..." என்றும் "கோபியரே கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே" என்றும் கண்ணதாசன் வரிகளில் களிப்பவனும் நானே. கந்தபுராணத்தில் முருகனை மனிதனாக்கி அவன் செயல்கள் சரியென்று உணர்ந்துதானப்பா நான் அமைதியடைந்தேன். அந்த வகையில்தான் என்னுடைய வாதங்கள் இங்கும் அமைகின்றன. தெய்வம் என்று நினைத்து விட்டால்..அதற்கு மேல் வாதமேயில்லை. அதற்காகத்தான் என் வாதங்கள். நான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்வாய் என நினைக்கிறேன்.//
கர்ணனை பரமாத்வாக நினைத்தால் உங்கள் மனதில் இவ்வளவு கேள்விகள் எழாது ஜி.ரா.

நம்பிக்கையின்மையே இந்த கேள்விகளின் காரணங்கள்!!!

கப்பி | Kappi said...

50! :)

ஓகை said...

//நல்லவர்கள் உலகில் படும் துயரங்களுக்கு தருமராஜனை எடுத்துக் காட்டாகச் சொல்லித் தான் கேட்டிருக்கிறேன். இது தான் முதன்முறை கர்ணனை அப்படிச் சொல்லிக் கேட்பது.//

உலக வாழ்வில் தருமனுக்கு என்ன குறை வந்தது? அவன் ஆடிய சூதுக்கு அந்த பதினாலு வருடமெல்லாம் ஒரு தண்டனையா? அரச நீதிக்காக சூதாடியது, அரசை சூதில் இழக்கும் வரை தானே! தருமனின் தவறுக்கு மஹாபாரதம் நீதி செய்யவில்லை.

அப்படி ஒன்றும் தருமன் பெரிய தர்மனல்ல. தர்மனென்று எடுத்த பெயராலேயே தன் ஆசானை பொய்யுரைத்துத் தகர்த்த மாபாவி.

தருமனின் தவறுகளுக்கு மஹாபாரதம் நீதி செய்யவில்லை.

தரணிக்கெல்லாம் ஒளி அளிக்கும் கதிரவனின் பிள்ளையாயினும், தாயின் தவற்றை தன் தலைச் சுமையாய் தரையில் வீழும் வரை தாங்கியனல்லவோ கர்னன்.
அவனுக்கு என்ன கிடைத்தது வாழ்ந்தவரை?

வீழ்ந்தபின்னர் நீதி செய்தான் கண்ணன்.
கருணைக்கடல் தான் கண்ணன். ஆனால் அவன் கர்னனுக்குச் செய்தது நீதியே அன்றி கருணை அல்ல.

அந்தக் கண்ணணில் துலாக்கோலில்
அதல பாதாளத்தில் தாழ்ந்திருந்தது
அதர்மத்தின் தட்டு! அதை முதலில் நேர் செய்தான் கண்ணன். அது கருணையின் பாற்பட்டதில்லை.

பற்றியெரியும் நெருப்பனைக்க விடும் நீரும்
பசுஞ்சோலை தழைத்தோங்க விடும் நீரும்
ஒன்றாமா?

பதறிப் பதைத்து கதறிக் கண்ணா என்றழைத்த காரிகை பெற்றது கருணை!

நிந்தனைகளாலேயே வாழ்நாள் நிரப்பட்டவன் இறுதியில் பெற்றது நீதி!

கண்ணன் நீதிமான்!

Siva said...

வெட்டி,

உங்க பண்முக தோற்றம் என்ன அப்பிடியே பிரம்மிக்க வைக்குது...

தமிழ் மணத்தில் இருந்து கோழியின் அட்டகாசம் படிக்க போய்...அப்பிடியே கொல்டி காதல் படித்து... நீ ஒரு ஜாலியோ ஜிம்கானா ஆள் என நினைத்தேன்....

திடீரென்று இந்தியா ஒளிர்கிறதானு சமூக அக்கறை...

இப்போ கடவுள்...

கண் கட்டுதே...

நான் வெட்டி ரசிகர் மண்றத்தை தொடந்து இருக்கலாம்...எழுத நேரம் இல்லாமல்(உடாண்சு..)விட்டாச்சு...

ஆனால் படிக்கிறேன்...

வாழ்த்துக்கள்...

tamizhppiriyan said...

என்ன சொல்றதுன்னு தெரியல..என்ன பொறுத்த வரைக்கும் இரண்டு பக்கமும் நியாம் இருக்கு...இரண்டு பேரும் நல்லது செஞ்சு இருக்காங்க..அதை மட்டுமே எடுத்து கொள்வோம்..
ஓரேடியா கர்ணன் கெட்டவன் என சொல்வதை என்னாலும் ஒத்துகொள்ள முடியவில்லை..கண்ணன் கடவுள், கர்ணன் மனிதன் மற்றவை இதனுள் அடக்கம். கண்ணனை தப்பாக நினைத்தால் அது அவர்கள் பிழை..சினிமா,டி வி பாரதம் இருக்கட்டும்...கடவுளாக நினைத்து வழிபடும் ஏராளமானவர்கள் கண்ணனை தவறாக் புரிந்து கொள்ள மாட்டார்க்ள்.. மாறாக, அவனை வழிபடாதவர்க்ள்,தப்பாக நினைப்பவர்கள் உன் வாதத்தினால் நம்பிக்கைகள் மாறும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..நீயும் அதை எதிர்பார்த்து இதை போடவில்லை என்பதை அறிவேன்..உன் எண்ணத்தை வெளிபடுத்தி இருக்கிறாய்...

என் எண்ணம் இந்த விஷய்த்தில்:

கர்ணன் ஒரு சிறந்த வள்ளல்,நட்புக்கு மரியாதை தந்தவன், தர்மத்தில் அவனுக்கு ஈடு இல்லை..கர்ண்னன பார்த்துட்டு மத்தவங்களுக்கு உதவுனும்ன்னு எண்ணம் ரொம்ப உருவாச்சு..

கண்ணன் கடவுள், கடவுள் கண்டிப்பாக நல்லதே செய்வார் நம்மை போல் இல்லாமல் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்!
பாரதத்தில் கண்ணனுக்கு ரொம்ப கூல் கேரக்டர்..எதுக்குமே டென்ஷன் ஆகாம எல்லாத்தையும் சிரிச்சிட்டே செய்பவர்.. அவரை பார்த்துட்டு வாழ்க்கையில் இப்படி இருக்கனும் அப்படின்னு தோனுச்சு ..
sometimes, characters impact a lot..these 2 characters definitely influenced me a lot

இந்த எண்ணம் எனக்கு டிவி பாரதம் மற்றும் சினிமா பார்த்தே உருவானது..கீதை படித்தது இல்லை..அதனால் எனக்கு இந்த ஏரியால கீதைய ரெபரென்ஸா வச்சு பேசத் தெரியாது...

நல்ல பதிவு..கான்ட்ரோவர்ஸி மிகுந்த டாபிக்..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நல்ல கட்டுரை பாலாஜி. நீங்களும் இராகவனும் பேசிக்கொள்வதை ஒதுங்கி நின்று பார்க்கலாம் என்று தான் எண்ணுகிறேன். ஆனால் பாழும் மனம் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறதே. அதனால் சில வார்த்தைகளே சொல்லி விலகிக் கொள்கிறேன். பின்னர் நீங்கள் பேசிக் கொள்ளுங்கள்//

அடியேனும் குமரன் சொன்ன வழியில் செல்லவே விழைகிறேன்!
இங்கே பாலாஜி சொல்ல வந்தது கண்ணனின் ஒப்புயர்வு இல்லாத தியாக மனப்பான்மையை! அவ்வளவு தான்!

அதற்காக, கர்ணனையோ மற்ற பாத்திரங்களையோ அவர் சிறுமைப்படுத்தவில்லை! இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் உலகில் நடக்கும் நல்லது கெட்டது சண்டைகளில், இறைவன் எப்படி ஆட்டத்தில் தீர்ப்பு எழுதுகிறான் என்று புலப்படும்!

ஆனால் அப்படிப் பார்க்க நம்மால் அவ்வளவு சீக்கிரம் முடியாது! ஏன் என்றால் பொதுவாக, நாம் நம் அந்தந்த நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு கதாபாத்திரத்துடன் ஒட்டிக் கொள்வோம்!

காந்தியடிகளின் கொலையை எடுத்துக் கொள்ளுங்கள்! ஒரு நூற்றாண்டுக்குள் நடந்த விடயம்; ஆனால் அதற்கு எத்தனை கட்சிகள்? எத்தனை விவாதங்கள்? எத்தனை திரைப்படங்கள்? கொலையை நியாயப் படுத்தாது, கொலைக்கான காரணங்களை நியாயப்படுத்துதல் என்று எல்லாம் ஆயிரம் பேச இடம் உண்டு.

இதற்கே இப்படி என்றால், பல்லாயிரம் ஆண்டுகள் முன்னர் நடந்த தொடர்ச்சியான சம்பவங்களை இன்றும் பேசுகிறோம் என்பதே கதைக்கும், கதாசிரியருக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

வென்றவன் எழுதிய கதையில் தோற்றவன் குற்றவாளி என்று பொதுவாகச் சிலர் உரைக்கலாம்; ஆனால் இங்கு வியாசர் ஒளிவு மறைவு இல்லாது, நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஒரு கண்ணாடி போல் காட்டிக் கொண்டு இருக்கிறார்!

கர்ணன் அந்தக் கண்ணாடியில் சில சமயம் சுடர் விட்டு ஜொலிக்கிறான்! சில சமயம் இருள் அடைந்து காணப்படுகிறான்! கர்ணன் மட்டும் அல்ல! எல்லாக் கதை மாந்தர்களும் அப்படித் தான்!

இது கண்ணாடியின் குற்றம் அன்று!

கண்ணன் மட்டும் தான் அந்தக் கண்ணாடியில் என்றும் தெளிவாகத் தெரிகிறான்! அலங்காரத்தோடு அவன் வந்தாலும், அலங்கோலமாய் அவன் வந்தாலும், ஒளியோடு வருவதால் கண்ணாடியும் அவனைத் தெளிவாகக் காட்டுகிறது!

மற்ற எவர்க்கும் இந்தத் தெளிவு இல்லை! ஏன்? அனைவருக்கும் தன்னலம் பெரிதாக உள்ளது! அதனால் செயல்களில் தடுமாறுகிறார்கள்! தடுமாற்றத்தைத் தடுமாற்றமாகவே கண்ணாடி காட்டுகிறது!

இந்தக் கட்டுரை சொல்ல வருவது என்ன என்றால்
கண்ணன் தன்னலம் அற்றுப் கடமைகள் செய்தான் என்பதே!

அப்படிக் கடமைகள் செய்த போது, அவனுடன் இருந்த மற்றவர்கள், நண்பர்கள், எதிர் அணியினர் என்று எல்லாரும் தடுமாறுவதால், படம் பார்ப்பதற்குத் தடுமாற்றமாகத் தெரிந்தாலும், ஓட்டுபவன் தடுமாறவில்லை, தடம் மாறவில்லை!

நல்ல கட்டுரை பாலாஜி!
மீண்டும் வருகிறேன்! கர்ணனை, கண்ணன் தன் மனத்துக்குள் எப்படி வைத்துப் போற்றினான் என்ற செய்தியோடு!

G.Ragavan said...

// கர்ணனை பரமாத்வாக நினைத்தால் உங்கள் மனதில் இவ்வளவு கேள்விகள் எழாது ஜி.ரா.

நம்பிக்கையின்மையே இந்த கேள்விகளின் காரணங்கள்!!! //

வெட்டி, அதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தப் பாத்திரத்தையும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை. அந்தக் கருத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். அவ்வளவுதான்.

ஓகை, சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். ரசித்தேன்.

SP.VR. SUBBIAH said...

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்
கர்ணண் பொருள் தர்மம் செய்தவன்யன்றி, செயல் தர்மம் செய்யவில்லை.

செயல் தர்மம் என்றால் சென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? தன் நண்பன் துரியோதனனிடம் வலியுறுத்தியிரூக்க வேண்டும் - பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கும்படி - அவன் மறுத்திருந்தால் - நீ தர்மப்படி நடக்கவில்லை - உன்னுடன் சேர்ந்து பாண்டவர்களுடன் நான் பொர்புரிய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்

ஏன் செய்யவில்லை?

அதர்மம் எப்படியும் தோற்கும் - அதற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கும் முடிவு தோல்விதான.்
அதற்கு நல்ல உதாரணம் கர்ணனை விட வேறு யார் இருக்க முடியும்

SP.VR.சுப்பையா

SP.VR. SUBBIAH said...

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்
கர்ணண் பொருள் தர்மம் செய்தவன்யன்றி, செயல் தர்மம் செய்யவில்லை.

செயல் தர்மம் என்றால் சென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? தன் நண்பன் துரியோதனனிடம் வலியுறுத்தியிரூக்க வேண்டும் - பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கும்படி - அவன் மறுத்திருந்தால் - நீ தர்மப்படி நடக்கவில்லை - உன்னுடன் சேர்ந்து பாண்டவர்களுடன் நான் பொர்புரிய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்

ஏன் செய்யவில்லை?

அதர்மம் எப்படியும் தோற்கும் - அதற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கும் முடிவு தோல்விதான.்
அதற்கு நல்ல உதாரணம் கர்ணனை விட வேறு யார் இருக்க முடியும்

SP.VR.சுப்பையா

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. நன்றாக இருக்கிறது தாங்கள் எழுதியுள்ளது. :-)

வாத்தியார் ஐயா. நீங்கள் சொன்னதும் உண்மை. செய்நன்றி மறவாத கர்ணன் நட்பின் இலக்கணமான நகுதற் பொருட்டன்று நட்பு; மிகுதிக் கண் மேற்சென்றிடித்தற் பொருட்டு என்பதனை செய்யவில்லை. சூதாட்டத்தில் தருமனுக்கு இருந்த ஆசையை, அடிக்சனை, திட்டம் போட்டு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நால்வர் அணியில் இருந்து கொண்டு இடித்துக் காட்டாமல் மட்டுமன்று; எடுத்தும் கொடுத்தான் கர்ணன். அதனை தானே ஐயா பாரதி சொன்னான் - தருமத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்று.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இது ஒரு iterative function of புண்ணியமாக இருக்கிறது.//

//யான் கடந்த காலத்தில் செய்த புண்ணியம், தற்போது (நிகழ் காலத்தில்) செய்யும் புண்ணியம், இப்படி உனக்குக் கொடுத்தபின் அதனால் எனக்கு ஏற்படப்போகும் புண்ணியம் அனைத்தையும் உனக்குத் தானமாகத் தந்தேன்.//

அனானி அவர்களே! ஜெயஸ்ரீ!
அருமையான விளக்கம்!

"சர்வம் கிருஷ்ணார்ப்பணம்" (எல்லாம் கண்ணனுக்கே அர்ப்பணம்) என்ற தொடர் இதில் இருந்தே விளங்கும்!

கிருஷ்ணார்ப்பணம் செய்யும் அனைத்தும் செய்பவனுக்கே பன்மடங்காகத் திரும்பி வரும் என்பது தத்துவம்!

ஆனால் அப்படிச் செய்யும் போது தன்னலமில்லாமல் தருவது அர்ப்பணம்;
இல்லையென்றால் தானம் என்று சொல்லி விடலாமே! பின்னர் என்ன நடக்குமோ என்ற பயம், லாப நட்டக் கணக்குகள் இன்றிச் செய்வது அர்ப்பணம்!

கர்ணன் இது நாள் வரை செய்தது தானம், சிறிது தர்மமும் கூட!
இதுவும் எப்படி ஆரம்பித்தது என்றால் ஒரு சூளூரை மூலமாகத் தான்!

அருச்சுனன் அழியும் வரை இடையறாது, கேட்பவர் எவர்க்கும் இல்லை என்று சொல்லாது தானங்கள் செய்து கொண்டே இருப்பேன் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறான்!
வாக்குச் சொல் வீரன் அவன்!
வாய்ச் சொல் வீரன் அல்ல!

அதனால் தானங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளது! தானம் செய்யச் செய்ய அவன் உள்ளம் சிறிது சிறிதாகப் பக்குவப்படுகிறது!

தானத்தில் இருந்து தர்மம் என்ற நிலைக்குச் செல்ல எத்தனிக்கிறான்.
கர்ணனின் ஆரம்ப காலக் கோபம் எல்லாம் இறுதிக் காலத்தில் அவ்வளவாக தலை தூக்காது வற்றி விடுவதற்கு இதுவும் ஒரு காரணம்!

அவன் கேட்டும் செய்யாத ஒரே தானம் குந்தி தேவிக்கு!
ஊருக்கு எல்லாம் கொடுத்தவன், அன்னைக்குத் தர முடியாத நிலை!
ஆனால் அதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு கொடுக்கிறான்!

இப்படி தானங்கள் புரிந்தவன் ஒரே ஒரு முறை தான் அர்ப்பணம் செய்கிறான்! எப்போது? போர்க்களத்தில் கண்ணனுக்கு!

கர்ணன் தடுமாறும் சாதாரண மனிதன்! நல்லவற்றுக்கும் தீயவற்றுக்கும் இடையே அலைகழிக்கப்படும் இன்றைய கால மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஆனால் உள்ளத்தில் நல்ல உள்ளம்!
"தர்ம சங்கடம்" என்று சொல்லுவார்கள்! அப்படி வரும் சங்கடத்தில் சரியான முடிவு எடுக்கத் தெரியாத மனித மனம்!

அவனை ஆட்கொள்ளத் தான் கண்ணன் வந்தான்!
கர்ணனின் நெஞ்சுக்கு நீதி செய்ய வந்தான்
கண்ணன் செய்ய வந்தது பிராயச்சித்தம் எல்லாம் கிடையாது!
தானம் செய்தவனை அர்ப்பணம் செய்ய வழி வகுத்தான்!

யாரிடமாவது போய் என் படிப்புக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுப் பாருங்கள்! சிலர் தருவார்கள்!
ஆனால் உன் படிப்பையே எனக்குக் கொடுத்து விடு என்று நல்லவர்களிடம் கூடச் சொல்லிப் பாருங்கள்! என்ன கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும்! :-)

அந்தப் பற்றற்ற நிலைக்குத் தான் கர்ணனை உயர்த்தினான் பரமாத்மா!
அந்த அர்ப்பணம் செய்யும் போது ஒரு முதியவருக்குச் செய்வதாகவே அவனுக்குத் தோன்றவில்லை! பரம்பொருளை நினைத்தே செய்கிறான் என்கிறார் வியாசர்!

அதனால் தான் இறைவனுக்குச்
அர்ப்பணம் செய்தவுடன், இறைவனின் கருணை பல மடங்காக அவனுக்கே திரும்பி வருகிறது! நெஞ்சுக்கு நீதி கிடைக்கிறது!

பீஷ்மர், துரோணர் போன்ற குருமார்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒன்று, அவர்களால் மறுக்கப்பட்ட கர்ணனுக்கு கிடைக்கிறது!

நீதியின் உறைவிடமான இறைவன் எங்கு எப்போது நீதியை நிலை நாட்டினால் சுடர்விட்டுப் பிரகாசிக்குமோ அங்கு நிலை நாட்டினான்!

Santhosh said...

நானும் கர்ணன் பக்கம் தான். கண்ணன் பரமாத்மா என்று சொல்லிக்கொண்டு பல இடங்களில் நேர்மையை கடைபிடிக்காமல் இருந்தது ஒரு தவறான முன்னுதாரணமே. எவ்வுளவு தான் நாம் நியாயப்படுத்தினாலும் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. சாதாரண மக்கள் கடவுளே இப்படி செய்து விட்டார் என்று எளிதாக கூறி விடுவர். கர்ணணுக்கு கிடைத்து இருக்க வேண்டிய புகழ் சரியாக கிடைக்கவில்லை என்பது எனது எண்ணம். //வெட்டி, அதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தப் பாத்திரத்தையும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை. அந்தக் கருத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். அவ்வளவுதான்.//

ஜி.ராவின் இந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்
கர்ணண் பொருள் தர்மம் செய்தவன்யன்றி, செயல் தர்மம் செய்யவில்லை.//

ஒரு அபலைப் பெண்ணும் குழந்தையும் ஓடி வருகிறார்கள்; வந்து உங்கள் தோட்டத்தில் ஒளிந்து கொள்கிறார்கள்! பின்னாலேயே கத்தி, கம்பு அரிவாளோடு ஒரு முரட்டுக் கூட்டம்!

நீங்கள் பொய்யே பேசுவது இல்லை என்று விரதம் இருப்பவர்!
வந்த கூட்டம் அவர்களைப் பற்றி விசாரிக்க்கிறது! உங்களுக்கு அந்தப் பெண் நல்லவள்/கெட்டவள் என்று தெரியாது.

எப்படி இருந்தாலும் உயிரைக் காக்க வேண்டும் என்பது தருமமா?
இல்லை,
பொய்யே சொல்லக் கூடாது என்பது தருமமா?

இரண்டுமே தர்மம் தான்!
எதைச் செய்வது?
கர்ணன், பீஷ்மர், துரோணர் செய்தது எது?

//தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை//

தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவே வேண்டாம்!

தர்மம் தவறி நடக்கக் கூடாதே என்று சிறிய தர்மத்தைப் பிடித்துக் கொண்டு பெரிய தர்மத்த்தைக் கோட்டை விட்டார்கள் இவர்கள்!
தான் உண்ட இடம்; அதற்கு மாறி நடக்கக் கூடாது என்ற இவர்கள் தர்மத்தில் தன்னலம் இருந்தது!

உலகம் நாளை பழிக்கும்! இதற்கென்றே கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு காணுவார்கள்! சமாதானம் எல்லாம் பொறுமையாகச் சொல்ல முடியாது! இதெல்லாம் தெரிந்தே பெரிய தர்மத்தைக் காக்க, சிறிய தர்மத்தைத் துணிந்தே கைவிட்டான் கண்ணன்!

அதுவும் அவனுக்காகவோ, அவன் நாடு, நகரத்துக்கோ, அவன் குடும்பத்துக்காகவோ இல்லை!
இந்தத் தர்மத்தில் தன்னலம் உண்டா?

தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவே வேண்டாம்!
இரண்டுமே தர்மம் தான்!
எந்தத் தர்மத்தில் தன்னலம் இருந்தது என்று நாமே சீர் தூக்கிப் பார்க்கலாம்!

பாலாஜி சொன்னது போல், முதலில் மனதிலிருக்கும் இரும்புத் திரையை விலக்கினால் வெளிச்சம் வரும்!

ஓகை said...

// நீ தர்மப்படி நடக்கவில்லை - உன்னுடன் சேர்ந்து பாண்டவர்களுடன் நான் பொர்புரிய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்
அதர்மம் எப்படியும் தோற்கும் - அதற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கும் முடிவு தோல்விதான. //

அதர்மம் செய்த தர்மன் தோற்கவில்லையே!
துரியன் தூர்ந்ததும் அரியனை அல்லவா ஏறினான்.
அபிமன்யு உயிர்க்கவில்லையே!
அரவான் உயிர்க்கவில்லையே!
அசுவன் செய்த அக்கிரமத்துக்கு
ஆக்கினைகள் வரவில்லையே!
ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயன்
அந்தக் கதிரவனின் அருமைப் புதல்வன்
அநாதையாய் அல்லவா அலைந்தான்
அவன் ஆயுள் முழுமைக்கும்
அக்கதிக்கு அவனை ஆளாகிய குந்திக்கு
இக்கட்டாய் என்னதான் வந்தது?
கட்டை விரலிழந்த ஏகலைவனின்
மொட்டைக் கைக்கு எங்கே நீதி வந்தது?

துர்ச்செயல் புரியும் துரியனுக்கு
துணை நின்றதால் செயலில் தர்மமில்லை
பொற்குவை கொடுத்தாலும் அது
பொருள் தர்மம்தானே என்றால்
இது தர்மமா? ஐயா, சுப்பையா!
துரியனுக்கே நண்பன் கர்ணன்
கர்ணனுக்குத் தலைவன் துரியன்.
நண்பனென்றால் இடித்துரைக்கலாம்.
நாயகன் என்றால்?
நாடிச் சென்று சுந்தரர்க்கு நட்பளித்தான் சிவன்.
பெற்றோரின் பேரறியாமல் பிறந்த குலமறியாமல்
நாணி நடுச்சபையில் நின்றானுக்கு நட்பளித்தான் துரியன்.
விடையிலா கேள்விகளால் விடமளித்த உலகில்
இக்கட்டில் இருந்தவனுக்கு இடமளித்தான் துரியன்.
வில்லன், நல்லன், அல்லன செய்யான், தாயின்
சொல்லினைத் தட்டினான் தன் தலைவனுக்காய்.
வீடனனோ? அன்றி கும்பகர்ணனோ?
உடன்பிறந்த தமையனுக்கு தவறைச் சொல்ல!
நாடற்றவன், நாடுபவர்களற்றவன் இவனின் விற்பனத்தை
நாடியே நட்பளிக்கப்பட்டவன்
என்ன சொல்வான்? எப்படி சொல்வான்?

(வெட்டி, கொஞ்சம் பெரீஇ.....தாய் போய்விட்டது. மன்னிக்கவும்)

நாமக்கல் சிபி said...

//(வெட்டி, கொஞ்சம் பெரீஇ.....தாய் போய்விட்டது. மன்னிக்கவும்)//

தப்பேயில்லைங்க... எவ்வளவு பெருசா வேணாலும் எழுதுங்க...
நான் அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன்... முடிச்சிட்டு வந்து உங்க கேள்விக்கு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்!!!

KRS,
பதில்களையும் படித்து பாருங்கள்....

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

நானும் கர்ணன் பக்கம் தான். கண்ணன் பரமாத்மா என்று சொல்லிக்கொண்டு பல இடங்களில் நேர்மையை கடைபிடிக்காமல் இருந்தது ஒரு தவறான முன்னுதாரணமே. எவ்வுளவு தான் நாம் நியாயப்படுத்தினாலும் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. சாதாரண மக்கள் கடவுளே இப்படி செய்து விட்டார் என்று எளிதாக கூறி விடுவர். கர்ணணுக்கு கிடைத்து இருக்க வேண்டிய புகழ் சரியாக கிடைக்கவில்லை என்பது எனது எண்ணம். //வெட்டி, அதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தப் பாத்திரத்தையும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை. அந்தக் கருத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். அவ்வளவுதான்.//

ஜி.ராவின் இந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.//

கண்ணன் எங்கெங்க தவறினான் என்று சொன்னால் பதில் சொல்ல வசதியாக இருக்கும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பீஷ்மர் உயிரோடு இருக்கும் வரை போர்க்களம் புக மாட்டேன் என்று கர்ணனால் சொல்ல முடிந்தது? ஏன்?
அவன் தன்மானத்துக்கு வந்த சோதனை! புலிக்குட்டி அவர்கள் சொன்னது போல "உலகம் பிறந்ததிலிருந்து பாவம் அவனை இகழ்ந்து கொண்டுதான் இருந்தது". அதனால் தன்மானம் பீறிக் கொண்டு வெளிப்பட்டது! மானமுள்ள சுத்த வீரனாயிற்றே!

அவன் இப்படிச் சொன்னவுடன் நண்பன் துரியோதனன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? அதுவும் அவன் பீஷ்மரை முழுமையாக நம்பும் வழக்கம் இல்லை! ஒரே நம்பிக்கையான கர்ணன் இப்படித் தன்னைக் கேட்காமலேயே அவசரப்பட்டு சபதம் செய்து விட்டானே!

மானமா/நட்பா என்ற கேள்வியில் கர்ணனால் மானமே என்று துணிய முடிந்தது!

தர்மமா/நட்பா என்ற கேள்வியில் கர்ணனால் தர்மமே என்று துணிய முடியவில்லை!


இதுவே அவனுக்கு வந்த தர்ம சங்கடம்!

இது போல் எல்லாப் பாத்திரத்துக்கும் தர்ம சங்கடம் வந்தது! அதில் அவரவர் எடுத்த முடிவுகளின் படி அவரவர் ஆனார்கள்!

தர்மமா/நட்பா என்ற கேள்வி கண்ணனுக்கும் வந்தது!
தர்மமா/குடும்பமா என்ற கேள்வி கண்ணனுக்கும் வந்தது!
தர்மமா/சாபமா என்ற கேள்வி கண்ணனுக்கும் வந்தது!
தர்மமா/தன் சொந்த நாடா என்ற கேள்வி கண்ணனுக்கும் வந்தது!
தர்மமா/வரலாற்றில் கெட்ட பெயரா என்ற கேள்வி கண்ணனுக்கும் வந்தது!


ஆனால்
மனிதனாகிய கண்ணனால் தர்மமே என்று துணிய முடிந்தது!
துணிய முடிந்த கண்ணனால் பின்னர் தெய்வம் ஆக முடிந்தது!


"பலனை எதிர்பார்த்துக் கொண்டே கடமையைச் செய்யாதே!"
இப்படிக் கீதையை ஊருக்கு உபதேசம் செய்யும் முன், தானே வாழ்ந்து காட்டி விட்டு, பின்னர் உபதேசம் செய்ய முடிந்தது அந்த மனிதத் தலைவனால்!

இதுவே சாரம்!!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஓகை ஐயா; அருமையான வாதங்கள் எடுத்து வைக்கிறீர்கள்! ஒவ்வொருவர் மனத்திலும் வெகு நாளாய் விடை இன்றி ஒடூம் கேள்விகள்! அதை அழ்காய் முன்னிறுத்துகிறீர்கள்!

//துரியனுக்கே நண்பன் கர்ணன்
கர்ணனுக்குத் தலைவன் துரியன்.
நண்பனென்றால் இடித்துரைக்கலாம்.
நாயகன் என்றால்?//

தலைவன் ஆணைக்குக் காத்து இராமல், தானே தன்னிச்சையாய் முடிவெடுத்து, அதுவும் இக்கட்டான சூழ்நிலையில் போர்க்களம் புகேன் என்று சொல்லத் தொண்டனால் முடியுமா? நண்பனால் மட்டுமே முடியும்! :-)

ஜெயஸ்ரீ said...

ஓகை ஐயா,

//அதர்மம் செய்த தர்மன் தோற்கவில்லையே! //

"அஸ்வத்தாமா ஹத: குஞ்சர:" என்று சொல்லி துரோணர் இறக்கக் காரணமாக இருந்தது தருமன் செய்த தவறு. அதிலும் குஞ்சர: என்னும்போது தன் சங்கைப் பெரிதாக முழங்கி அது கேட்கவிடாமல் செய்து அந்தப் பழியையும் தன்மேல் எற்றது கண்ணனே.

இதைத் தவிர தருமன் செய்த அதர்மம் என்ன? சூதாட அழைக்கும்போது மறுப்பது அரசர்க்கு அழகன்று. சகுனியின் சூதினாலேயே தோல்வியடைகிறான்.

நாட்டை வைத்து இழந்ததால் 13 வருடம் வனவாசம் செய்ய நேர்ந்தது . அதற்குப் பிறகு நாட்டைத் திருப்பித் தர மறுத்ததால்தானே போர் மூள்கிறது?

வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,என்ன ஒரு அருமையான பதிவு. அதற்கான பின்னூட்டம்.எல்லாருமே இன்னும் ஒரு பாரதத்தைக் கொண்டு வந்துவிட்டீர்கள். வாக்குவாதங்கள் நிறைவு.கண்ணனுக்கு வேண்டியது யோக க்ஷேமம். நல்லன அல்லாததைத் தள்ள வேண்டும்
புண்ணியமும் நிறைய செய்ய முடியாது.
பாலன்ஸ் சரி வராது.
பூமி பாரமும் குறைய வேண்டும்.
கண்ணனுக்கு வேலைக்கா பஞ்சம்.
கடைசியில் அவனும் தனியே ஒரு மரத்தடியில் முழந்தாளில் அம்பு பட்டல்லவா வைகுண்டம் ஏகினான். ;-(
சமதர்மத்தைத் தான் அவன் கடைப் பிடித்தான்.

சாத்வீகன் said...

போர் முடிகிறது. ஈமைக்கிரியைகள் நடக்கின்றன.
பாண்டவர்கள் துரியோதன் முதல் அனைவருக்கும் இறுதிக்கடன் செய்கிறார்கள்.
கர்ணனை கவனிப்பார் இல்லை.
அந்தத்தாய் வந்து கர்ணனை அள்ளி எடுக்கிறாள். அழுகிறாள். அவள் குந்தி.
கர்ணனை தன் மகனென உலகறிய சொல்கிறாள்.
பதறுகிறார்கள் ஐவர். என்ன செய்தோம். இத்துணை நாளும் இவன் இன்னான் என்று தெரியாமல் இழித்துரைத்தோமா..

இது முதலில் தெரிந்திருந்தால் போர் மூண்டிருக்காதே. வீரத்திலும் நற்பண்புகளிலும் மிக்கானாய் மிளிர்ந்த கர்ணன் அண்ணன் என்பது தெரிந்திருந்தால் பாண்டவர் ஏது செய்திருப்பர். போர் நிறுத்தி அவன் தாள் அல்லவா பணிந்திருப்பர்.

அண்ணனையா கொன்றேன், கதறுகிறான் காண்டீபன்.

எது இவனை இவ்வண்ணம் கொண்டு சென்றது.

பாண்டுவின் மக்கள் தம் மூத்தோனுக்கும் இறுதிக்கடனை முறையாய் செய்கின்றனர்.

*****

//மாண்டது அண்ணன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் தருமன். விட்டதா பதவி ஆசை? தொடர்ந்தது போர். கிடைத்தது நாற்காலி. ரத்தப் பளபளப்பில்.
//

ஜிரா தாங்கள முன்னம் சொன்னது போல், தருமன் பதினேழாம் நாள் யுத்தத்தில் கர்ணன் மாண்ட உடனேயே அவன் அண்ணன் என்று அறியவில்லை.

அடுத்த நாள் சல்லியனை வென்று துரியோதனனையும் வீழ்த்தி போர் மொத்தமாய் நின்ற பின்னரே அறிய வருகின்றனர்.

அண்ணன் இறந்தனன் என்று தெரிந்து தருமன் போர் தொடரவில்லை....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அண்ணனையா கொன்றேன், கதறுகிறான் காண்டீபன்//

சாத்வீகன்; நன்று சொன்னீர்கள்! கதறி அழுவதோடு நிற்கவில்லை! இவ்வளவு காலம் உறுதுணையாய் நின்ற, நண்பனாய் நின்ற கண்ணனைப் பழிக்கிறார்கள்! அதிலும் காண்டீபன் ஒரு படி மேலெயே போய் சாடுகிறான்!

தேவையா கண்ணனுக்கு இது?
தன் குடும்பத்தைக் கருதாது தர்மம் கருதி வந்தவனை, இன்று தன் குடும்பம் என்று தெரிந்தததும் சேர்ந்து கொண்டு சாடும் மக்களை எண்ணிப் பாருங்கள்!

அதனால் தான் தன்னலம் கருதாத தலைவனாக கண்ணன் மிளிர்கிறான்!

//மாண்டது அண்ணன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் தருமன். விட்டதா பதவி ஆசை? தொடர்ந்தது போர். கிடைத்தது நாற்காலி. ரத்தப் பளபளப்பில்//

ஜிரா; இதைச் சற்றே மாற்றி அடியேனும் கேட்கிறேன்!
மாண்டது ஆருயிர் நண்பன் என்று தெரிந்த பிறகாவது போரை நிறுத்தி ஒதுங்கியிருக்கலாம் துரியன்.
விட்டதா பதவி ஆசை?
தொடர்ந்தது போர்.

சாத்வீகன் சொன்னது போல் பார்த்தால், தருமனக்காவது கர்ணன் அண்ணன் என்று அப்புறம் தான் தெரிந்தது! தெரியாமல் போரைத் தொடர்ந்தான்!

துரியன் அப்படி அல்லவே! மாண்டது நண்பன் என்று தெரியுமே! அப்புறம் என்ன? விதுரனை விட்டு தற்காலிகப் போர் நிறுத்தம், கர்ணன் மற்றும் இன்ன வீரர்களின் சடங்குகள் என்று சொல்லி இருந்தால் தர்மன் நிச்சயம் மறுத்திருக்கப் போவதில்லை! பீமனும், காண்டீவனும் குதித்து இருந்தாலும், தலை இருக்க வால் ஆடியிருக்கப் போவதில்லை!

நண்பனுக்காக இதைக் கூடவா செய்ய முடியவில்லை துரியனால்?
துரியனின் நட்பில் ஒரு விதப் பேராசை/சுயநலம் உள்ளுக்குள் என்றுமே இருந்தது!
ஆனால் நல்லவன் கர்ணனின் நட்பிலோ, நட்பும் நன்றிக்கடனுமே இருந்தது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா,
//பிறகு ஏன் போர்? அரசு பதவிக்குப் போட்டி தருமனுக்கும் துரியனுக்கும். இவர்கள் இருவரிடமும் சொல்லி ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அது நேர்மை எனலாம்//

ஒன்றா இரண்டா! எத்தனை கலந்துரையாடல் ஏற்பாடு செய்தான்!
கேட்டானா உன்மத்தன்? ஆளுக்கு ஒன்றாய் ஐந்து வீடாவது கொடு என்றானே! இது பதவி ஆசையா?

முடிவில் தாமே தன் திருக்கழுத்தில் ஒரு சேவகன் போல் தூது ஓலையைக் கட்டிக் கொண்டு சபைக்குச் சென்றானே, கவுரவம் பாராமல்! இதை என்ன என்று சொல்கிறீர்கள் ஜிரா!

எந்தத் தலைவனும் (கவனிக்கவும்: நான் கடவுள் என்று குறிப்பிட வில்லை) தன் அடியவரைக் காக்கத் தானே தூது செல்லவில்லை!
வேண்டுமானால் தனக்கு நெருங்கிய வீரனை அனுப்பி இருப்பார்கள்!

ஆனால் அடியவருக்காக தன் சுய கவுரவத்தையே விட்டொழித்த தலைவனை என்ன சொல்லி அழைக்கப் போகிறீர்கள்? எத்தனைத் தமிழ்ப் பாக்களால் பாடப் போகிறீர்கள்?

நாளும் நற்றமிழால் நாவாரப் பாட, எமை
ஆளும் தமிழன்னையே வந்தாலும் இயலுமோ?

அவள் அல்லவா தன் மொழியை, தேன் மொழியைத் தலைவனுக்கு அளித்து அகமகிழ்வாள்!

ஊசி முனை இடம் கூட கிடையாது; எழுந்து வெளியில் நட என்றானே துரியன்! சபையில் அவமானம் செய்தவனைக் கறுவிக் கொண்டு அழித்திருக்கலாமே! ஆனாலும் ஆயுதம் தாங்கேன் என்ற கண்ணனின் மாண்பையும் பண்பையும் என் சொல்லிப் போற்றுவது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜிரா,

//ஆனால் விளித்தால்தான் தெய்வமே வந்தது. விளிக்காமல் வந்தவன் துரியன்//
விளிக்காமல் வந்தவன் துரியன்! எதற்கு? நட்பு பாராட்டவா? இல்லை பாவம் பிறப்புக் குழப்பத்தில் இருக்கும் ஒரு சுத்த வீரனைக் காப்பாற்றவா? இல்லை!
அருச்சுனைப் பழித்து எதிர்க்கிறானே இவன்! இவனை நமதாக்கிக் கொள்வோம் என்ற சுயநலத்தால் வந்தது அது! சகுனியும் எடுத்துக் கொடுக்கிறான் உடன் இருந்து!

//விளித்த பின் தான் வந்தவன் கண்ணன்!//
விளிப்பதற்கு முன்பே வந்து மெளன சாட்சியாய் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான்! திரெளபதியின் சிறு சிறு பிழைகளைக் கண்ணீரால் கரைக்க வேண்டாமா? கரைத்தான், பின் உயிர்த்தான்! அவள் விளிக்கவும் மறந்தாள்! உலகத்தை மறந்தாள்! ஒருமையுற்றாள்! அவன் அருள் மழை பொழிந்து அதனால் புகழும் உற்றாள்!


முன்பெல்லாம் சரியாகப் படிக்காது, படித்தும் புரியாது கண்ணனிடம் இருந்து ஒதுங்கியவன் அடியேன்! (ஃப்ராடு மாஸ்டர் என்ற பட்டம் எல்லாம் தந்தது உண்டு, கல்லூரியில்! :-)

//கந்தபுராணத்தில் முருகனை மனிதனாக்கி அவன் செயல்கள் சரியென்று உணர்ந்துதானப்பா நான் அமைதியடைந்தேன்//

அவ்வண்ணமே கண்ணனையும் மனிதனாக்கி அவன் தன்னலமில்லாச் செயல்களையும், கருணை உள்ளமும், அதே சமயத்தில் கடமை ஆற்றலும்,
இவை எல்லாம் - சீர் தூக்கிய பின்னரே சரியென்று தெளிந்தே அடியேனும் அமைதி அடைந்தேன் ஜிரா!

கர்ணனை வாயாரப் பாராட்டுவோம்! அவன் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டுவோம்!
அதற்காக....
தன்னலம் கருதாத் தூய உள்ளத் தலைவன் ஒருவனைக் கூப்பிட்ட பின் தானே வந்தான் என்றெல்லாம் கீழிறக்கித் தான் அதைச் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை!

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா, கிருஷ்ணா, வரும் வசவையும் எதிர் கொள்ளடா!

இன்றைய கண்ணன் பாட்டை வலைப்பூவில் பதிக்க வேண்டும்; நேரமாகிறது! அமைகிறேன்! நன்றி!

Santhosh said...

போரில் கண்ணனால், அவனது சூழ்ச்சியால் கொல்லப்பட்ட முறைகள் அனைத்தும் தர்ம்மா? என்ன தான் எதிரிகள் பலம் பொருந்திய வரங்களை பெற்று இருந்தாலும் கண்ணன் இறைவன் இல்லையா? அவர்களை நேர்மையாக போரிட்டு தோல்வியுறச்செய்து இருக்கலாம் இல்லையா ஏன் அப்படி செய்ய வில்லை? தர்மத்தை நிலை நிறுத்துகிறேன் என்று அதர்ம்மான முறையில் செல்லலாமா அவன்? கர்ணனின் பல சாபங்களுக்கு நேராகவோ மறைமுகைமாகவோ கண்ணனே காரணமாக இருந்து இருக்கிறான்.

Arunkumar said...

உங்க பேர மாத்திக்குங்க வெட்டி..

இலவசக்கொத்தனார் said...

//// ஜெயஸ்ரீ said...
பேர் மட்டும் எதுக்கு வெட்டிபயல் னு வெச்சிருக்கீங்க ? )))) //

நல்லாக் கேளுங்க ஜெயஸ்ரீ. இதத்தான் நானும் கேக்குறேன். :-)//

நானும் கேட்கிறேன். வெட்டிப்பயல் என்றல்லவோ இருக்கவேண்டும்!! :-D

ஓகை said...

(ஃப்ராடு மாஸ்டர் என்ற பட்டம் எல்லாம் தந்தது உண்டு, கல்லூரியில்! :-)

நான் இன்றும் அதைச் செய்வதுண்டு. கண்ணன் பிரியர்களைச் சீண்டுவதற்கு மிக எளிய வழி அது. இந்தப் பதிவிலும் கூட அது வேலை செய்கிறது. என் வாதங்களில் கண்ணனை இறக்கி சொன்னதேயில்லை. துரியனை உயர்த்தியும் கூட சொன்னதேயில்லை. கர்ணனைப் போற்றுவதால் இப்படி நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள்.

கண்ணன் கருணையை முழுதாய் விண்டவனும் ஊண்டோ? கண்ணனின் கருணைக்கு அந்த கடலும் ஒப்பாமோ?

பூச்சியைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லியிடமிருந்து பூச்சியைக் காப்பதா தர்மம்? கண்ணன் என்ன செய்வான்? பல்லிக்கு உணவும் பூச்சிக்கு மொட்சமும் தருவான். கண்ணன் என்ன செய்வான் என்று எண்ணவும் துணிதற்கு கற்றுத் தருவனதானே இவ்வளவு புராணங்களும் இதிஹாசங்களும். தவறுகள் உலக் இயல்பு. அதில் தர்மத்தை எப்படி செழிக்கச் செய்யவேண்டியது என்பது கண்ணன் தரும் பாடம்.

ஜெயஸ்ரீ, வரிசையாய் ஒவ்வொன்றாய் இழந்தபின்னும், அர்சை இழந்து அரசனாய் இல்லத பின்னும் தன்னை இழந்த பின்னும் தன் மனையாளை வைத்து சூதைத் தொடர்வது எவ்வகை அரச நீதி?

Anonymous said...

//ஜெயஸ்ரீ, உங்கள் விளக்கம் மிக அருமை. மிகமிக ரசித்தேன்//


நன்றி வெட்டி,ஜெயஸ்ரீ,ஜி.ரா மற்றும் ரவிசங்கர்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// ஓகை said...
கண்ணன் பிரியர்களைச் சீண்டுவதற்கு மிக எளிய வழி அது...கர்ணனைப் போற்றுவதால் இப்படி நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள்.//

ஓகை ஐயா, உண்மை!
தாங்கள் அப்படிச் செய்யவில்லை! கருத்துகளை மட்டுமே வைத்து உரையாடினீர்கள்! அதுவே அடியேனுக்கு மகிழ்ச்சி!

ஆனால்
"கண்ணன் யாரய்யா அரசு தருவதற்கு, கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தால் அது நேர்மை எனலாம்", என்று கண்ணனின் நேர்மை குறித்துச் சொல்லிய போது தான் இத்தனை விளக்கங்களும் எழுந்தன!

//கர்ணனைப் போற்றுவதால் இப்படி நினைப்பவர்கள் தவறு செய்கிறார்கள்//

பாலாஜி கர்ணனைப் போற்றுவதை தவறாகவே கொள்ளவில்லை! அவர் சொல்ல வந்தது கண்ணனின் குணநலனை மட்டுமே!

கண்ணனால் ஆட்கொள்ளப்பட்டதால் கர்ணனும் அடியவனே! அடியாரைத் தூற்றுதல் தர்மத்துக்கு அழகன்று என்பதை அடியோங்கள் உணர்ந்தே இருக்கிறோம்!

நன்றி ஓகை ஐயா!

குமரன் (Kumaran) said...

சரி. இனிமேல் என் பதிவிற்கு விளம்பரம் செய்து கொள்ளலாம். இந்தப் பதிவைப் படித்தவர்கள் எல்லோரும் என்னுடைய பதிவையும் படித்து கருத்து கூறுங்கள் - தயைசெய்து.

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_10.html

பாலாஜி. நீங்கள் ஏற்கனவே படித்த பதிவு தான்.

சீனு said...

/////" சல்லியா, இகழ்ச்சி எனக்கு புதிதல்ல. உன்னை போல் இந்த உலகம் நான் பிறந்ததிலிருந்து இகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒன்று நிச்சயம். நான் இவ்வுலகை விட்டு செல்லும் போது இந்த உலகம் எனக்கு கடன் பட்டதாக இருக்கும்."

உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்த வரிகள்.

/////
Repeat-eee

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

50! :) //

கப்பி,
50க்கு நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//ஓகை said...

// நீ தர்மப்படி நடக்கவில்லை - உன்னுடன் சேர்ந்து பாண்டவர்களுடன் நான் பொர்புரிய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்
அதர்மம் எப்படியும் தோற்கும் - அதற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கும் முடிவு தோல்விதான. //

அதர்மம் செய்த தர்மன் தோற்கவில்லையே!
துரியன் தூர்ந்ததும் அரியனை அல்லவா ஏறினான்.
அபிமன்யு உயிர்க்கவில்லையே!
அரவான் உயிர்க்கவில்லையே!
அசுவன் செய்த அக்கிரமத்துக்கு
ஆக்கினைகள் வரவில்லையே!
ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயன்
அந்தக் கதிரவனின் அருமைப் புதல்வன்
அநாதையாய் அல்லவா அலைந்தான்
அவன் ஆயுள் முழுமைக்கும்
அக்கதிக்கு அவனை ஆளாகிய குந்திக்கு
இக்கட்டாய் என்னதான் வந்தது?
கட்டை விரலிழந்த ஏகலைவனின்
மொட்டைக் கைக்கு எங்கே நீதி வந்தது?

துர்ச்செயல் புரியும் துரியனுக்கு
துணை நின்றதால் செயலில் தர்மமில்லை
பொற்குவை கொடுத்தாலும் அது
பொருள் தர்மம்தானே என்றால்
இது தர்மமா? ஐயா, சுப்பையா!
துரியனுக்கே நண்பன் கர்ணன்
கர்ணனுக்குத் தலைவன் துரியன்.
நண்பனென்றால் இடித்துரைக்கலாம்.
நாயகன் என்றால்?
நாடிச் சென்று சுந்தரர்க்கு நட்பளித்தான் சிவன்.
பெற்றோரின் பேரறியாமல் பிறந்த குலமறியாமல்
நாணி நடுச்சபையில் நின்றானுக்கு நட்பளித்தான் துரியன்.
விடையிலா கேள்விகளால் விடமளித்த உலகில்
இக்கட்டில் இருந்தவனுக்கு இடமளித்தான் துரியன்.
வில்லன், நல்லன், அல்லன செய்யான், தாயின்
சொல்லினைத் தட்டினான் தன் தலைவனுக்காய்.
வீடனனோ? அன்றி கும்பகர்ணனோ?
உடன்பிறந்த தமையனுக்கு தவறைச் சொல்ல!
நாடற்றவன், நாடுபவர்களற்றவன் இவனின் விற்பனத்தை
நாடியே நட்பளிக்கப்பட்டவன்
என்ன சொல்வான்? எப்படி சொல்வான்?

(வெட்டி, கொஞ்சம் பெரீஇ.....தாய் போய்விட்டது. மன்னிக்கவும்) //

ஓகை,
யுதிஷ்டிரன் தர்மங்களில் சிறந்தவன் என்பதனாலயே அப்பெயரால் அழைக்கப்பட்டான். அவனும் சிறு சிறு தவறுகள் செய்தான். அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தான்...

பீமனுக்கு விஷம் வைத்து கங்கையில் தள்ளியவன், அரக்கு மாளிகையில் வைத்து உயிரோடு எரிக்கப்பார்த்தவன், வீரனாக இருந்தும் கோழையைப்போல சூதாட்டத்தில் நாட்டை கைப்பற்றியவன், ஒப்பந்தத்தின் படி நாட்டை திருப்பித்தர மறுத்தவன், அர்ச்சுனனை எதிர்ப்பதற்காக மட்டுமே கர்ணனுடன் நட்பு பாராட்டியவன், பிதாமகரையும், விதுணரையும், கண்ணனையும் பலவாறு ஏசியவன், சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவளை நடுசபையில் நிர்வாணமாக்கி தன் மடியில் அமர சொன்னவனுடன் சேர்ந்து போரிட்டால் என்ன நேர வேண்டுமோ அதுவே அவர்கள் அனைவருக்கும் நேர்ந்தது.

நாமக்கல் சிபி said...

//ஓகை said...

//நல்லவர்கள் உலகில் படும் துயரங்களுக்கு தருமராஜனை எடுத்துக் காட்டாகச் சொல்லித் தான் கேட்டிருக்கிறேன். இது தான் முதன்முறை கர்ணனை அப்படிச் சொல்லிக் கேட்பது.//

உலக வாழ்வில் தருமனுக்கு என்ன குறை வந்தது? அவன் ஆடிய சூதுக்கு அந்த பதினாலு வருடமெல்லாம் ஒரு தண்டனையா? அரச நீதிக்காக சூதாடியது, அரசை சூதில் இழக்கும் வரை தானே! தருமனின் தவறுக்கு மஹாபாரதம் நீதி செய்யவில்லை.
//
தருமனுக்கு என்ன குறை வந்ததா???
இளவரச பட்டம் கட்டிய பின் அரக்கு மாளிகையில் வைத்து கொல்ல பார்த்தான் துரியன். அதன் பிறகு பல நாட்கள் காட்டில் நாடோடி போல் அலைந்தனர் பாண்டு புத்திரர்கள்.
பிறகு அவனுடைய நாட்டை பிரித்து காட்டை அவனுக்களித்தனர். அதை தன் தம்பியரின் துணை கொண்டு கண்ணனின் அருளால் நாடாக்கினான்.
அவன் செய்த தவறுக்கு தான் பனிரெண்டு ஆண்டுகள் வனவாசமும் ஒரு வருட அஞ்ஞானவாசமும் மேற்கொண்டான்...

// அப்படி ஒன்றும் தருமன் பெரிய தர்மனல்ல. தர்மனென்று எடுத்த பெயராலேயே தன் ஆசானை பொய்யுரைத்துத் தகர்த்த மாபாவி.
//
தர்மனை பற்றி தாங்கள் அதிகம் அறிவீரா அல்லது அவனுடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் அதிகம் அறிவார்களா?

அவன் செய்த தர்மத்திற்காகவே அவன் தர்மன் என்று அழைக்கப்பட்டான்.

கண்ணனை கடவுளாக எண்ணி அவன் சொன்னதை துணிந்து செய்தான். போருக்கு விரும்பாமலிருந்த முதல் ஆள் தருமனே!!!

//
தருமனின் தவறுகளுக்கு மஹாபாரதம் நீதி செய்யவில்லை.
//
அனைவருக்கும் நீதி செய்ய இறைவன் என்றுமே தவறுவதில்லை ஓகை ஐயா.

குருடர்கள் யானையை பார்ப்பதை போலவே நாம் இறைவனை பார்க்கிறோம்...

//
தரணிக்கெல்லாம் ஒளி அளிக்கும் கதிரவனின் பிள்ளையாயினும், தாயின் தவற்றை தன் தலைச் சுமையாய் தரையில் வீழும் வரை தாங்கியனல்லவோ கர்னன்.
அவனுக்கு என்ன கிடைத்தது வாழ்ந்தவரை?
//
ஓகை ஐயா,
முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நாராயணனின் தரிசனத்தை விட உலகில் உயந்ததெதுவுமில்லை...

நாராயணனுக்கு பதில் நீங்கள் விரும்பும் கடவுளை போட்டு கொள்ளுங்கள்...

// வீழ்ந்தபின்னர் நீதி செய்தான் கண்ணன்.
கருணைக்கடல் தான் கண்ணன். ஆனால் அவன் கர்னனுக்குச் செய்தது நீதியே அன்றி கருணை அல்ல.

அந்தக் கண்ணணில் துலாக்கோலில்
அதல பாதாளத்தில் தாழ்ந்திருந்தது
அதர்மத்தின் தட்டு! அதை முதலில் நேர் செய்தான் கண்ணன். அது கருணையின் பாற்பட்டதில்லை.

பற்றியெரியும் நெருப்பனைக்க விடும் நீரும்
பசுஞ்சோலை தழைத்தோங்க விடும் நீரும்
ஒன்றாமா?

பதறிப் பதைத்து கதறிக் கண்ணா என்றழைத்த காரிகை பெற்றது கருணை!

நிந்தனைகளாலேயே வாழ்நாள் நிரப்பட்டவன் இறுதியில் பெற்றது நீதி!

கண்ணன் நீதிமான்! //

கண்ணன் நீதிமான்.. மிகச்சரி...

நாமக்கல் சிபி said...

//கிராமவாசி said...

வெட்டி,

உங்க பண்முக தோற்றம் என்ன அப்பிடியே பிரம்மிக்க வைக்குது...

தமிழ் மணத்தில் இருந்து கோழியின் அட்டகாசம் படிக்க போய்...அப்பிடியே கொல்டி காதல் படித்து... நீ ஒரு ஜாலியோ ஜிம்கானா ஆள் என நினைத்தேன்....

திடீரென்று இந்தியா ஒளிர்கிறதானு சமூக அக்கறை...

இப்போ கடவுள்...

கண் கட்டுதே...

நான் வெட்டி ரசிகர் மண்றத்தை தொடந்து இருக்கலாம்...எழுத நேரம் இல்லாமல்(உடாண்சு..)விட்டாச்சு...

ஆனால் படிக்கிறேன்...

வாழ்த்துக்கள்... //

கிராமவாசி,
ஏதோ நமக்கு தெரிந்ததை எழுதுகிறோம்... இந்த பதிவை சிறப்பாக்கியவர்கள் இங்கே நல்லதொரு விவாதத்தை அமைத்து கொடுத்தவர்களே!!!

நாமக்கல் சிபி said...

//தமிழ்ப்பிரியன் said...

என்ன சொல்றதுன்னு தெரியல..என்ன பொறுத்த வரைக்கும் இரண்டு பக்கமும் நியாம் இருக்கு...இரண்டு பேரும் நல்லது செஞ்சு இருக்காங்க..அதை மட்டுமே எடுத்து கொள்வோம்..
ஓரேடியா கர்ணன் கெட்டவன் என சொல்வதை என்னாலும் ஒத்துகொள்ள முடியவில்லை..கண்ணன் கடவுள், கர்ணன் மனிதன் மற்றவை இதனுள் அடக்கம். கண்ணனை தப்பாக நினைத்தால் அது அவர்கள் பிழை..சினிமா,டி வி பாரதம் இருக்கட்டும்...கடவுளாக நினைத்து வழிபடும் ஏராளமானவர்கள் கண்ணனை தவறாக் புரிந்து கொள்ள மாட்டார்க்ள்.. மாறாக, அவனை வழிபடாதவர்க்ள்,தப்பாக நினைப்பவர்கள் உன் வாதத்தினால் நம்பிக்கைகள் மாறும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை..நீயும் அதை எதிர்பார்த்து இதை போடவில்லை என்பதை அறிவேன்..உன் எண்ணத்தை வெளிபடுத்தி இருக்கிறாய்...
//
இல்லை சங்கர்... கண்ணனை தவறாக புரிந்து கொண்டவர்களும் ஒரு நிமிடம் மாற்றி சிந்தித்தால் அவனது கருணையை புரிந்து கொள்வர்...

பீஷ்மரை சிகண்டியை முன் நிறுத்தி கொன்னதற்கும் காரணமிருக்கிறது. இதை பற்றி சீக்கிரமே ஒரு பதிவிடுகிறேன்...

//
என் எண்ணம் இந்த விஷய்த்தில்:

கர்ணன் ஒரு சிறந்த வள்ளல்,நட்புக்கு மரியாதை தந்தவன், தர்மத்தில் அவனுக்கு ஈடு இல்லை..கர்ண்னன பார்த்துட்டு மத்தவங்களுக்கு உதவுனும்ன்னு எண்ணம் ரொம்ப உருவாச்சு..

கண்ணன் கடவுள், கடவுள் கண்டிப்பாக நல்லதே செய்வார் நம்மை போல் இல்லாமல் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்!
பாரதத்தில் கண்ணனுக்கு ரொம்ப கூல் கேரக்டர்..எதுக்குமே டென்ஷன் ஆகாம எல்லாத்தையும் சிரிச்சிட்டே செய்பவர்.. அவரை பார்த்துட்டு வாழ்க்கையில் இப்படி இருக்கனும் அப்படின்னு தோனுச்சு ..
sometimes, characters impact a lot..these 2 characters definitely influenced me a lot

இந்த எண்ணம் எனக்கு டிவி பாரதம் மற்றும் சினிமா பார்த்தே உருவானது..கீதை படித்தது இல்லை..அதனால் எனக்கு இந்த ஏரியால கீதைய ரெபரென்ஸா வச்சு பேசத் தெரியாது...

நல்ல பதிவு..கான்ட்ரோவர்ஸி மிகுந்த டாபிக்.. //
மிக்க நன்றி... இவ்வாறு நல்லதை மட்டுமே எடுத்து கொண்டாலும் போதும்...

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

// கர்ணனை பரமாத்வாக நினைத்தால் உங்கள் மனதில் இவ்வளவு கேள்விகள் எழாது ஜி.ரா.

நம்பிக்கையின்மையே இந்த கேள்விகளின் காரணங்கள்!!! //

வெட்டி, அதைத்தான் நானும் சொல்கிறேன். எந்தப் பாத்திரத்தையும் தெய்வம் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் கேள்விகளுக்கே இடமில்லை. அந்தக் கருத்தில்தான் நாம் மாறுபடுகிறோம். அவ்வளவுதான்.

ஓகை, சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கின்றீர்கள். ரசித்தேன். //

ஜி.ரா,
கண்ணனை மனிதனாக வைத்து KRS சொல்லியுள்ளதையும் நீங்கள் ஏற்க மாட்டீர்கள்...

நீங்க புடிச்ச முயலுக்கு மட்டும் முப்பது கால் :-)

நாமக்கல் சிபி said...

//SP.VR.சுப்பையா said...

இன்னொரு கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள்
கர்ணண் பொருள் தர்மம் செய்தவன்யன்றி, செயல் தர்மம் செய்யவில்லை.

செயல் தர்மம் என்றால் சென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? தன் நண்பன் துரியோதனனிடம் வலியுறுத்தியிரூக்க வேண்டும் - பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்கும்படி - அவன் மறுத்திருந்தால் - நீ தர்மப்படி நடக்கவில்லை - உன்னுடன் சேர்ந்து பாண்டவர்களுடன் நான் பொர்புரிய மாட்டேன் என்று சொல்லியிருக்க வேண்டும்

ஏன் செய்யவில்லை?

அதர்மம் எப்படியும் தோற்கும் - அதற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கும் முடிவு தோல்விதான.்
அதற்கு நல்ல உதாரணம் கர்ணனை விட வேறு யார் இருக்க முடியும்//

அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஐயா...

கர்ணனுக்கு துரியனுக்கு நாட்டையளிக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்திருந்தால் அவன் கண்ணனின் சொல்லை கேட்டு எளிதாக தான் தான் குந்தியின் முத்த புதல்வன் என்று சொல்லி நாட்டை துரியனுக்கு அளித்திருக்கலாம்.

நாம் அனைவரும் நினைப்பதைவிட அவனுக்கு நல்ல குணங்களும் இருக்கிறது. அதுவே அவனை அநீதியின் பக்கம் போராடினாலும் தர்மம் வெல்ல வேண்டும் என்று நினைக்க வைத்து...

நாமக்கல் சிபி said...

//வல்லிசிம்ஹன் said...

பாலாஜி,என்ன ஒரு அருமையான பதிவு. அதற்கான பின்னூட்டம்.எல்லாருமே இன்னும் ஒரு பாரதத்தைக் கொண்டு வந்துவிட்டீர்கள். வாக்குவாதங்கள் நிறைவு.கண்ணனுக்கு வேண்டியது யோக க்ஷேமம். நல்லன அல்லாததைத் தள்ள வேண்டும்
புண்ணியமும் நிறைய செய்ய முடியாது.
பாலன்ஸ் சரி வராது.
பூமி பாரமும் குறைய வேண்டும்.
கண்ணனுக்கு வேலைக்கா பஞ்சம்.
கடைசியில் அவனும் தனியே ஒரு மரத்தடியில் முழந்தாளில் அம்பு பட்டல்லவா வைகுண்டம் ஏகினான். ;-(
சமதர்மத்தைத் தான் அவன் கடைப் பிடித்தான். //

சரியாக சொல்லியுள்ளீர்கள்...

தன் மகன் என்று தெரிந்தும் நரகாசுரனை வதைத்தவனல்லவா அவன்... அவனுக்கு லோக ஷேமமே முக்கியம்...

நாமக்கல் சிபி said...

//சந்தோஷ் said...

போரில் கண்ணனால், அவனது சூழ்ச்சியால் கொல்லப்பட்ட முறைகள் அனைத்தும் தர்ம்மா? என்ன தான் எதிரிகள் பலம் பொருந்திய வரங்களை பெற்று இருந்தாலும் கண்ணன் இறைவன் இல்லையா? அவர்களை நேர்மையாக போரிட்டு தோல்வியுறச்செய்து இருக்கலாம் இல்லையா ஏன் அப்படி செய்ய வில்லை? தர்மத்தை நிலை நிறுத்துகிறேன் என்று அதர்ம்மான முறையில் செல்லலாமா அவன்? கர்ணனின் பல சாபங்களுக்கு நேராகவோ மறைமுகைமாகவோ கண்ணனே காரணமாக இருந்து இருக்கிறான். //

சந்தோஷ்,
இதற்கு தனிப்பதிவே தேவை...
சீக்கிரமிடுகிறேன்.
கர்ணனின் சாபங்களுக்கு அவன் எப்படி ஐயா காரணமாவான்?

வண்டாக வந்தது இந்திரெனென்றாலும் பொய்யுரைத்தது கர்ணனல்லவா? பொய்யுரைத்தவன் நல்லவன் அதை காட்டி கொடுத்தவன் கெட்டவன். அப்படித்தானே??? :-)

Anonymous said...

//
வண்டாக வந்தது இந்திரெனென்றாலும் பொய்யுரைத்தது கர்ணனல்லவா? பொய்யுரைத்தவன் நல்லவன் அதை காட்டி கொடுத்தவன் கெட்டவன். அப்படித்தானே??? //

கர்ணணுக்கு அவன் சத்திரியன் என்ற உண்மை குந்தி கூறும் வரை தெரியாது. ஆகவே அவன் பொய்யுரைத்தான் என்று கூற முடியாது. என்னுடைய முந்தைய பின்னூட்டம் காணவில்லையே ? ஏன் ?

நாமக்கல் சிபி said...

// சுப்பு said...

//
வண்டாக வந்தது இந்திரெனென்றாலும் பொய்யுரைத்தது கர்ணனல்லவா? பொய்யுரைத்தவன் நல்லவன் அதை காட்டி கொடுத்தவன் கெட்டவன். அப்படித்தானே??? //

கர்ணணுக்கு அவன் சத்திரியன் என்ற உண்மை குந்தி கூறும் வரை தெரியாது. ஆகவே அவன் பொய்யுரைத்தான் என்று கூற முடியாது.//
சுப்பு,
அவன் பிராமணன் என்று பொய்யுரைத்து சென்றான்... அது பொய் என்று அவனுக்கும் தெரியும் :-)

//
என்னுடைய முந்தைய பின்னூட்டம் காணவில்லையே ? ஏன் ? //
தெய்வமே,
பின்னூட்டம் நிஜமாக வரவில்லை... வந்து ரிஜக்ட் பண்ணுவேனா???

ஓகை said...

//யுதிஷ்டிரன் தர்மங்களில் சிறந்தவன் என்பதனாலயே அப்பெயரால் அழைக்கப்பட்டான். அவனும் சிறு சிறு தவறுகள் செய்தான். அதற்குரிய தண்டனைகளை அனுபவித்தான்...

பீமனுக்கு விஷம் வைத்து கங்கையில் தள்ளியவன், அரக்கு மாளிகையில் வைத்து உயிரோடு எரிக்கப்பார்த்தவன், வீரனாக இருந்தும் கோழையைப்போல சூதாட்டத்தில் நாட்டை கைப்பற்றியவன், ஒப்பந்தத்தின் படி நாட்டை திருப்பித்தர மறுத்தவன், அர்ச்சுனனை எதிர்ப்பதற்காக மட்டுமே கர்ணனுடன் நட்பு பாராட்டியவன், பிதாமகரையும், விதுணரையும், கண்ணனையும் பலவாறு ஏசியவன், சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவளை நடுசபையில் நிர்வாணமாக்கி தன் மடியில் அமர சொன்னவனுடன் சேர்ந்து போரிட்டால் என்ன நேர வேண்டுமோ அதுவே அவர்கள் அனைவருக்கும் நேர்ந்தது.//

உங்கள் இரண்டாவது கருத்தில் யாருக்கும் மாறுபாடு இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. ஆனால் தருமனை சிறு சிறு தவறுகள் மட்டும் செய்தவன் என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. பாஞ்சாலி சபதத்தில் அவன் தன் செல்வங்களையெல்லம் இழந்தபின் நாட்டை வைத்து சூதாடி அதையும் இழக்கிறான். அப்போது பாரதியார் என்ன சொல்கிறார் பாருங்கள்.

கோயில் பூசை செய்வோர் -சிலையைக்
- - கொண்டு விற்றல் போலும்
வாயில் காத்து நிற்பான் -வீட்டை
- - வைத்து இழத்தல் போலும்
ஆயிரங்கள் ஆன -நீதி
- - அவை உணர்ந்த தருமன்
தேயம் வைத்து இழந்தான் -சீச்சீ
- - சிறியர் செய்கை செய்தான்.

(தேயம்=தேசம்)

சீச்சீ என்று பாரதியாரால் இகழப்பட்டவன் மேலும் தன் தம்பிகளை வைத்து இழக்கிறான். பின் தன்னை வைத்து இழக்கிறான். பின்னும் தம் மனைவியை வைத்து இழக்கிறான்.

14 வருடம் இக்குற்றங்களுக்கு சரியானதாகத் தெரியவில்லை.

தவறிழைக்காத தம்பிகள் நால்வருக்கும் வனவாச துன்பத்தை அளித்தவன் தருமன்.

இவற்றைச் செய்தவன் தற்குறி அல்ல.. ஆயிரங்களான நீதி அவையுணர்ந்த தருமன்.

நாமக்கல் சிபி said...

ஓகை,
சூது மனிதனின் அறிவை இழக்க வைக்கும்... தோல்வி மேல் தோல்வி வரும் சமயங்களில் மனிதன் மதி இழக்கிறான். இதையே கண்ணனும் சொல்கிறான். ஆகையால் அவன் செய்த தவறிற்கு தான் அந்த வனவாசமும் போரும்.

அவனுடைய மைந்தனும் அஸ்வத்தாமனால் கொல்லப்படுகிறான். (தர்மன் நாடாசை பிடித்தவனல்ல).

அவன் செய்த தவறிற்காகவே மகனை இழந்து, அண்ணனை இழந்து, பாசமுள்ள தாத்தவையும் இழக்கிறான்... அவன் இவர்கள் இழப்பை கொண்டாடவில்லை... கதறி அழுகிறான்.

அவரவர் செய்கின்ற பாவத்திற்கு பலனை அனுபவிப்பர்... இயற்கை (தெய்வம்) அனைவரையும் சமமாகவே பாவிக்கிறது...

Unknown said...

வர்ணம் தர்மத்திற்கு உட்பட்டது என்று கூறுவதை நான் மறுக்கிறேன்
மற்றும் கர்ணன் விஷயம்
கர்ணன் தர்மத்தை என்றும் மீறாதவன் என்று நான் என் கருத்தை பதிக்கிறேன்

மற்றும் அவன் வீரம் பற்றி

1 கர்ணன் மிகச்சிறந்த வீரன்
2 அவன் அனைத்துப் போர்களிலும் தன் விஜயத்தை பயன்படுத்தவில்லை
3 அவன் தன்னுடைய வீரத்தின் மீது நம்பிக்கை கொண்டவன்
4 திவ்யத்துவத்தின் மீது அல்ல
5 மற்றும் அவன் அர்ச்சுனனுடன் ஒப்பிடப்படுகிறான்
6 சந்தேகத்திற்கு இடமின்றி அவன் அர்ச்சுனனை விட சிறந்த வீரன்
7. 2,3,4ஆம் கருத்துக்களை மனதில் நிறுத்துங்கள்

Unknown said...

Karnan oru ayogiyan krishna kudaiyo ila dharman kudayo ila arjunan kudaiyo avana compare panna mudiyathu ....
Compare pannave kudathu...!!!