தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, December 29, 2006

நெல்லிக்காய் ஒரு பார்வை - சாத்வீகன்

நமது நண்பர் சாத்வீகன், நான் எழுதிய நெல்லிக்காய் தொடர்கதையை பற்றிய ஒரு விமர்சனம் எழுதி எனக்கு அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (நட்சத்திர வாரத்தில் இதை வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். கதையை முடிக்கவியலாத காரணத்தால் அப்போது வெளியிட முடியவில்லை)

நெல்லிக்காய் ஒரு பார்வை சாத்வீகன்

தமிழ் வலையுலகில் தொடர்கதைகள் அதிகமில்லை. வெட்டிப்பயல் அவர்களின் நெல்லிக்காய் தொடர்ந்து வந்து பதினோரு வாரங்களை தாண்டியுள்ளது.

வெட்டி இக்கதை மூலம் பெருவாரியான வாசகர்களை ஈர்த்துள்ளார். அடுத்து என்ன என்று வாசகரை காக்க வைப்பது நல்ல எழுத்தாளர்களுக்கு மட்டுமே சாத்தியம். வெட்டி அதை சாதித்துள்ளார்.

நெல்லிக்காய் ஒரு வித்தியாசமான சராசரி வாசகர் அறியாத கதைக்களம்.
இந்த கதை கணிப்பொறி துறையில் பணியாற்றுபவர்களை கதை மாந்தர்களாக கொண்டுள்ளது. ஒரு நாயகன், ஒரு நாயகி அவர்களின் காதல். பொதுவான காதல் கதையின் இலக்கணத்தை மீறாத கதை. ஆவலை தூண்டுவது கதையின் பிண்ணனி.

கதைநாயகன் துவக்கத்தில் வேலை தேடுபவனாக தொடங்கி மேற்செல்லும் கதை, இத்துறையில் நுழையும் ஒருவனின் அனுபவத்தை சொல்வதாகவும் உள்ளது. வெட்டி ஏற்கனவே சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க எழுதியவர்.

கதையில் அந்த தொடரின் கூறுகள் அங்கங்கே எட்டி பார்க்க காணலாம். குழு விவாதம் பற்றிய ஒரு பகுதி அதிலொன்று. அதனை கதையின் போக்கோடு இணைத்து சென்றமை நன்று.

சமூக அக்கறையை அங்கங்கே தூவி செல்கிறார். பிச்சைக்காரர்களை பற்றி கவலைப்படுவதாகட்டும், ஹெல்மட் அணிவதைப்பற்றியாகட்டும், சாதியினால் தடைபடும் காதலை பற்றியதாகட்டும். சில இடங்களில் இது நன்றாக பொருந்துகிறது. சில இடங்களில் இடறுகிறது.

தொடரில் வர்ணனைகள் அதிகம் இல்லை. வாய்ப்புகள் பல இருந்தும் வெட்டி அவற்றை நழுவ விடுகிறார். வர்ணனைகளை அவர் கொள்ளாமைக்கு காரணங்கள் இருக்கின்றன. அது அவரது வாசகர்களை பற்றிய புரிதலாகவும் இருக்கலாம்.
வெட்டியின் வாசகர்களில் பெரும்பாலோர் கணித்துறை சார்ந்தவர்கள். வலையில் பதிபவர்கள், பதியாதவர்கள் அனைவரும் இதில் அடங்குவர். அவர்களை பெருமளவில் அடைய விரிவாக விளக்கி எழுதுவது தடையாக அவர் கருதியிருக்கலாம்.

வர்ணனைகளை விட்டாலும் அதனை உரையாடல்களில் ஈடு செய்திருக்கிறார். இயல்பான உரையாடல்கள். அதுவே அவரது வாசகர்களை அவரின் கதைப்போக்கோடு ஒன்றச்செய்கிறது. மெல்லிய காதல் உணர்வு கதை முழுதும் ஓடி கவனத்தை ஈர்த்து இறுதியில் முழுமை பெறுகிறது.

கதையென்பது துவக்கத்தில் எழுத்தாளனால் துவங்கப்பட்டு கடைசியில் அவனால் தானாகவே எழுதப்பெற்றுக் கொள்ளும் போது மேலும் அழகுபெறும். வெட்டி கதையை அவ்வாறு அனுமதிக்கவில்லை, கதை துவக்கத்திலிருந்து இறுதி வரை ஒரே நோக்கில் நகர்ந்து கடைசியில் அதை நிறைவும் செய்கிறது. வெட்டியின் வாசகர்கள் எதிர்பார்த்தது போல் முடித்தீர்கள் என்று இறுதியில் சொல்ல அதுவும் காரணமாகிறது. வெட்டி குஷியாக சென்று காதலுக்கு மரியாதை செய்திருக்கிறார்.

பெரிய தொடர் என்ற அளவில் இது வெட்டி அவர்களின் முதல் முயற்சி. வெற்றி பெற்றிருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஆனால் வெட்டி கதை எழுதலில் மேலும் சில பரிமாணங்களை தாண்டி வர வேண்டும். சில பரீட்சார்த்த முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். அவரால் மேலும் சிறந்த முறையில் கதை சொல்ல முடியும். அது வலைப்பதியாதவர்களான அவரது வாசகர்களை மேலும் ஈர்த்து வலைப்பதிவுலகை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும்.

(வெட்டி தமது கதை முடிந்த நிலையிலும் மேலும் ஓர் பகுதி இட இருக்கிறார். திரையில் கதை முடிந்த நிலையில் மேலும் ஐந்து நிமிட காட்சிகளை காட்டுவார்களே அது போல.. சராசரி சினிமா ரசிகனை போல தமது வாசகர்கள் வெளியேற மாட்டார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு.)

கடைசி பகுதியை வெளியிட்ட பிறகு அவரிடமிருந்து வந்த விமர்சனம்...

தமிழுக்காக அவ்வைக்கு அதியமான் தந்தது ஒரு நெல்லி...

இன்று தமிழ் இணைய வாசகர்களுக்காக வெட்டிப்பயலார் அவர்கள் தந்தது ஒரு நெல்லி..

கதை சற்றே அங்கங்கே கசந்தாலும் முடிந்த பின் அடிநாக்கில் முற்றிலும் இனிக்கிறது.

நன்றி. வாழ்த்துக்கள்.

11 comments:

Anonymous said...

Kathaiyai nangu thiranaivu seythu irukirar sathveegan.
Kathayai patriya enathu karuthu: uyirottamulla kathai..aanal enakku kathayin mudivu pidikavillai..aanal athuve vetti payalin vetriye..pathu paguthigalukku kathayai viruvirupaga kondu sentral, kathayin mudivu kurithu makkallukku ethirparthu etpadavuthau ikarkaye ( Shankar padam release agum pothu makkalukku etpadum ethirparpu pola). Melum ithagaya nalla kathaigal ezhutha vazhthukkal.

Dhana

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சாத்வீகன்
சிறப்பான விமர்சனம்!
அதானே பாலாஜி, தெலுங்குப் பட விமர்சனம் எத்தனை எழுதித் தள்ளினார்!
இப்போது அவர் படத்துக்கு ஒரு விமர்சனம் வேண்டாமா?

ஓ, நெல்லிக்காய் தொடர் கதையா! நான் திரைக்கதை என்று நினைத்தே சொல்லி விட்டேன்! அதுவும் சரி தானே? :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நெல்லிக்காய் ஒரு வித்தியாசமான சராசரி வாசகர் அறியாத கதைக்களம்//

உண்மை; ஆனால் பெரும்பாலான பதிவர்கள் அறிந்த கதைக்களம்!
வாசகர்கள் பல பேர் பதிவர்களா என்பது நம் பாஸ்டன் மாநாட்டில் பேசியது! நியூஜெர்சி மாநாட்டில் தொடரலாம்! :-))

//சமூக அக்கறையை அங்கங்கே தூவி செல்கிறார்.//

முற்றிலும் உண்மை!
இதை நான் அந்தந்த தொடரின் பின்னூட்டங்களில் கோடிட்டுவும் காட்டுவேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் வெட்டி கதை எழுதலில் மேலும் சில பரிமாணங்களை தாண்டி வர வேண்டும். சில பரீட்சார்த்த முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும்//

பாலாஜி! இதை நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்! நம் தனி அரட்டையிலும் இதையே சொன்னேன்!
சபாநாயகரிடமும் (யார் என்று உங்களுக்குத் தெரியும்) ஒரு விமர்சனம் வாங்குங்கள்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திரையில் கதை முடிந்த நிலையில் மேலும் ஐந்து நிமிட காட்சிகளை காட்டுவார்களே அது போல..//

சாத்வீகன் என்ன சாத்வீகமா சொல்லி இருக்காரு!

பாலாஜி, கடைசியிலே பிட்டு போட்டிங்க போல இருக்கே! :-))

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

Kathaiyai nangu thiranaivu seythu irukirar sathveegan.
Kathayai patriya enathu karuthu: uyirottamulla kathai..aanal enakku kathayin mudivu pidikavillai..aanal athuve vetti payalin vetriye..pathu paguthigalukku kathayai viruvirupaga kondu sentral, kathayin mudivu kurithu makkallukku ethirparthu etpadavuthau ikarkaye ( Shankar padam release agum pothu makkalukku etpadum ethirparpu pola). Melum ithagaya nalla kathaigal ezhutha vazhthukkal.

Dhana //

மிக்க நன்றி தனா...
முடிவு இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணிருக்கலாம்.. சீக்கிரம் முடிக்கனும்னு கொஞ்சம் சொதப்பிடுச்சினு நினைக்கிறேன்...
அடுத்த கதைல சரி பண்ணிடலாம் :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

சாத்வீகன்
சிறப்பான விமர்சனம்!
அதானே பாலாஜி, தெலுங்குப் பட விமர்சனம் எத்தனை எழுதித் தள்ளினார்!
இப்போது அவர் படத்துக்கு ஒரு விமர்சனம் வேண்டாமா?

ஓ, நெல்லிக்காய் தொடர் கதையா! நான் திரைக்கதை என்று நினைத்தே சொல்லி விட்டேன்! அதுவும் சரி தானே? :-)) //

இப்படி சொல்லி சொல்லியே உடம்ப ரணகலப்படுத்தறீங்களே :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நெல்லிக்காய் ஒரு வித்தியாசமான சராசரி வாசகர் அறியாத கதைக்களம்//

உண்மை; ஆனால் பெரும்பாலான பதிவர்கள் அறிந்த கதைக்களம்!
வாசகர்கள் பல பேர் பதிவர்களா என்பது நம் பாஸ்டன் மாநாட்டில் பேசியது! நியூஜெர்சி மாநாட்டில் தொடரலாம்! :-))
//
அடுத்த மாநாடு ரெடியா???

// //சமூக அக்கறையை அங்கங்கே தூவி செல்கிறார்.//

முற்றிலும் உண்மை!
இதை நான் அந்தந்த தொடரின் பின்னூட்டங்களில் கோடிட்டுவும் காட்டுவேன்! //

ஆமாம் KRS.. சரியான இடத்தில் அதை எடுத்து சொல்லியிருந்தீர்கள்.. தங்களுக்கு என் நன்றிகள் பல...

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனால் வெட்டி கதை எழுதலில் மேலும் சில பரிமாணங்களை தாண்டி வர வேண்டும். சில பரீட்சார்த்த முயற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும்//

பாலாஜி! இதை நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்! நம் தனி அரட்டையிலும் இதையே சொன்னேன்!
சபாநாயகரிடமும் (யார் என்று உங்களுக்குத் தெரியும்) ஒரு விமர்சனம் வாங்குங்கள்! :-) //
ஆமாம் KRS...
நான் அவர்ரிடம் இதை குறித்து பேசுகிறேன்... அதுக்கு முன்னாடி இன்னோரு ரிவியு வரும்னு நினைக்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//திரையில் கதை முடிந்த நிலையில் மேலும் ஐந்து நிமிட காட்சிகளை காட்டுவார்களே அது போல..//

சாத்வீகன் என்ன சாத்வீகமா சொல்லி இருக்காரு!

பாலாஜி, கடைசியிலே பிட்டு போட்டிங்க போல இருக்கே! :-)) //

தலைவா... இதுக்கு என்ன அர்த்தம்???

Anonymous said...

உங்க நெல்லிக்காயை நான் இனிமேல்தான் சாப்பிடப்போகிறேன். சாப்பிட்டுவிட்டு ஒரு கமெண்ட்ஸ் போட்கிறேன். :-)