தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, December 15, 2006

நெல்லிக்காய் 10

கார்த்திக் அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் அருணிற்கு எதுவும் புரியவில்லை. கார்த்திக்கிடம் நேராக சென்றான்.

"கார்த்திக் என்னாச்சு? ஏன் அழுவற?" அருண் குரலை கேட்டதும் கார்த்திக் தலையை நிமிர்ந்து பார்த்தான்.

"சொல்லுடா ஏன் அழுவற என்னாச்சு? வீட்ல எதாவது ப்ராபளமா?"

"ப்ளீஸ் என்கிட்ட எதுவும் கேக்காத. என்னை கொஞ்ச நேரம் தனியா இருக்கு விடு. ப்ளீஸ்"

கார்த்திக் சொன்னதை கேட்டதும் அருண் வெளியே ஹாலிற்கு சென்று பழைய புத்தகம் ஒன்றை எடுத்து புரட்டி கொண்டே சன் மியூசிக் பார்க்க ஆரம்பித்தான்.

சுமார் ஒரு அரை மணி நேரத்திற்கு பிறகு கார்த்திக் வெளியே வந்து அருண் அருகில் அமர்ந்தான்.

"ராஜி ஏதாவது சொன்னாளா?" அருண் சொல்லியதை கேட்டதும் கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.

"ஆமாம்டா. அவ வீட்ல அவளுக்கு போன வாரமே மாப்பிளை பாத்திருக்காங்க"

"ஹும்"

"சும்மா வந்துதானே பாத்திருக்காங்கனு அவ லேசா விட்டுட்டா. அவங்க வீட்ல மூணு நாள் கழிச்சி ஓ.கேனு சொல்லிட்டாங்களாம்"

"ஹோ"

"உடனே அவ அவுங்க அம்மாக்கிட்ட எங்க விஷயத்தை சொல்லிருக்கா. அவுங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாங்க"

"ஹும்"

"அவுங்க அப்பாக்கு தெரிஞ்சி அவளை அடிச்சிருக்காரு.வீட்லயே ரெண்டு நாள் பூட்டி வெச்சிருக்காரு"

"என்னடா இந்த காலத்துலையும் இப்படியெல்லாம் நடக்குதா?"

"நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"

"அவுங்களுக்கு என்ன பிரச்சனையாம்? உனக்கு என்ன குறைச்சல்?"

"காதலிக்கறது தப்பாம். அது ஒழுக்கமில்லாதவங்கதான் செய்வாங்கனு அவுங்க அம்மா சொல்றாங்களாம்"

"என்னது? ஒழுக்கமில்லாதவங்கதான் காதலிப்பாங்களா? அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்?
சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா? இல்லை நீங்க தான் ஏதாவது தப்பு தண்டா பண்ணீங்களா? அவுங்க அப்பா என்ன சொன்னாரு?"

"நான் அவுங்க கேஸ்ட் இல்லையாம். அவருக்கு அதே கேஸ்ட்ல லவ் பண்ணியிருந்தாலும் போனா போகுதுனு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாராம்"

"என்னடா இது லூசுத்தனமா இருக்கு? யார்டா ஜாதிய பாத்து காதலிப்பா? நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது. அப்படி இருக்கும் போது என்னடா பேச்சி இது?"

"அவர் அவுங்க ஜாதி சங்கத்துல முக்கியமான ஆளாம். அவர் பொண்ணை வேற ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாதாம். ரொம்ப கண்டிப்பா சொல்றார்"

"அவருக்கு அவர் பொண்ணு சந்தோஷத்தைவிட ஜாதி தான் முக்கியமா போச்சா?"

"அப்படித்தான் சொல்றார். இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை"

"நீ அவங்க வீட்டுக்கு போறேனு ஏன் எங்கிட்ட சொல்லல. இல்லைனா நானும் வந்து பேசிருப்பேன் இல்லை"

"அவ போன் பண்ணி யாரும் வேணாம் நீ மட்டும் வானு சொன்னா. சரி என்ன பண்ணிட போறாங்கனு நானும் போனேன்"

"வேற யாராவது இருந்தாங்களா?"

"அவுங்க பெரியப்பாவாம். ஏதோ போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருக்காராம். ரொம்ப திமிரா உக்கார்ந்திருந்தார். என்னைய எதுவும் பேசவேவிடலை. இதுக்கு மேல நான் ஏதாவது பிரச்சனை பண்ணா என்னை ஏதாவது கேஸ்ல உள்ள தூக்கி போட்டுடுவாங்களாம்"

"என்ன அவுங்களுக்கு தான் ஆள் தெரியுமா? என் க்ளாஸ் மேட் விநோத் அவுங்க மாமா ஆளுங்ககட்சில MLAவா இருக்காரு. நீ சொல்லு நான் இப்பவே விநோத்ட பேசறேன்"

"டேய் அதெல்லாம் வேண்டாம். ராஜியே என்கிட்ட கடைசியா பேசினா, அவுங்க அப்பா, அம்மாதான் அவளுக்கு முக்கியமாம் என்னை மன்னிச்சிடு ப்ளீஸ்னு சொன்னா"

"அப்பறம் என்ன....... உன்னைய லவ் பண்றேன்னு சொல்லனும்"

"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"

"என்னடா சாமியார் மாதிரி பேசற?"

"இல்லைடா நான் உண்மைய தான் பேசறேன். அவளுக்கு அந்த மாப்பிளைனு கண்டிப்பா ஃபிக்ஸ் ஆயிடுச்சி. நம்ம எதுவும் பண்ண முடியாது" சொல்லிவிட்டு ரூமிற்குள் சென்று மீண்டும் படுக்கையில் விழுந்தான்.

அருணுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சரியாக அந்த நேரம் பார்த்து அருணின் செல்போன் சிணுங்கியது... எடுத்து பார்த்தான்

Deepa Calling...

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே எடுக்காமல் விட்டுவிட்டான்.
தொடர்ந்து அவள் கூப்பிடவே நான்காவது முறையாக அடிக்கும் பொழுது எடுத்தான்.

"ஏய் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கலை?"

"ஒண்ணுமில்லை... விஷயத்தை சொல்லு"

"நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு இப்ப உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு இங்க டாக்டர் சொல்லிட்டாரு"

"சரி"

"நான் இன்னைக்கு நைட்டே புறப்பட்டு ஊருக்கு வரேன். நீ காலைல பஸ் ஸ்டாப் வரீயா"

"நான் என்ன உன் டிரைவரா? ஆட்டோ பிடிச்சி ஹாஸ்டலுக்கு போயி சேரு"

"இல்லை உன் கூட வந்தா தானே அடிப்படும்" சொல்லிவிட்டு சிரித்தாள் தீபா.

"நீ என்ன சொல்றனு எனக்கு புரியலை. நான் நாளைக்கு வர மாட்டேன். இப்ப போனை வைக்கிறேன்" சொல்லிவிட்டு போனை அணைத்தான்.

ஒரு நிமிடத்திற்குள் அவள் திரும்ப அழைக்க, என்ன செய்வதென்று தெரியாமல் போனை ஆஃப் செய்து வைத்தான்...

என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...

(தொடரும்...)

அடுத்த பகுதி

54 comments:

Anonymous said...

nice..nan first..?!

Divya said...

அனானி முந்தி கொண்டாரே!!!!!! சரி இரண்டாவது பின்னூட்டம் என்னோடது.......

Divya said...

\"நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"\"

நூறு சதவீதம் உண்மை!!

சாதிகள் இல்லயடி பாப்பா ன்னு பாரதியார் பாட்டில் மட்டும் தான் இன்னும் இருக்கிறது!

வெட்டி, வழக்கமான யதார்த்தமான உரையாடல்கள்.
கதை ஸ்வாரஸ்யமாக போகிறது, பாராட்டுக்கள் வெட்டி!

அடுத்த நெல்லிக்காய்காக வெயிட்டீங்..

அனுசுயா said...

//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

ஆகா வெட்டி கலக்கறீங்க போங்க. :))))

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
nice..nan first..?!
//
ஆமாங்க...
ஆனா உங்க பேரோட போட்டிருக்கலாம் :-)

நாமக்கல் சிபி said...

// Divya said...
அனானி முந்தி கொண்டாரே!!!!!! சரி இரண்டாவது பின்னூட்டம் என்னோடது.......
//
பரவாலைங்க...அடுத்த தடவை முந்திடலாம் :-)

நாமக்கல் சிபி said...

//நூறு சதவீதம் உண்மை!!

சாதிகள் இல்லயடி பாப்பா ன்னு பாரதியார் பாட்டில் மட்டும் தான் இன்னும் இருக்கிறது!

வெட்டி, வழக்கமான யதார்த்தமான உரையாடல்கள்.
கதை ஸ்வாரஸ்யமாக போகிறது, பாராட்டுக்கள் வெட்டி!

அடுத்த நெல்லிக்காய்காக வெயிட்டீங்//

ஆமாம் திவ்யா...
எனக்கு தெரிஞ்சி பலர் காதலுக்கு நம்பர் ஒன் எதிரி இந்த ஜாதிதான் :-(

கருத்துக்கு மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//அனுசுயா said...
//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

ஆகா வெட்டி கலக்கறீங்க போங்க. :))))
//
மிக்க நன்றி அனுசயா...
அருண் சொன்னது ஏதாவது தப்பா?

Anonymous said...

hi vets

kathai nalla poittu iruku, keep it up. mudivu sandhoshama thane irukum?.

Yogen

கார்த்திக் பிரபு said...

தலீவா சவுக்கியமா?

கைப்புள்ள said...

//நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க//

ரொம்ப ரசிச்சது. சூப்பர் பாலாஜி. மேலே சொல்லுங்க சீக்கிரம்...

ராம்குமார் அமுதன் said...

விறுவிறுப்பாதான் போகுது தல..... ஆனா இந்த தடவ ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.. அது என்னனுதான் தெரியல.... தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

dubukudisciple said...

என்ன அண்ணே !!!
இப்படி சொல்லிட்டீங்க !! காதலுக்கு தடையா?? அப்பா ஒத்துக்கலையா?? அதனால என்ன என்ன கான்டாக்ட் பண்ண சொல்லுங்க நான் சேர்த்து வைக்கறேன் அவங்களை!!!
அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் ஒரு பின்னூட்டம் போடுங்க..

Anonymous said...

ஆஹா..again a turning point!!

//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

அது பெத்தவங்க arrange பண்ணிண சுயம்வரத்துக்கு வந்த போது வந்த காதல்...அப்பவே சீதா அப்பா caste,creed,eligibility பார்துதான் invitation அனுப்பி இருப்பார் ...இல்லயா ??
இப்படி ராஜி அப்பா நினைச்சாரோ என்னமோ ;-)

Anonymous said...

"காதல் வந்திருச்சி! ஆசையில் ஓடிவந்தேன்!"ன்னு தீபா ஆசையா லிஃப்ட் கேட்டா. அதுக்கு தடை போட்டுட்டுயே வெட்டி. ஒழுங்கா அடுத்த பகுதில அருண் லிஃப்ட் கொடுக்குற மாதிரி போட்டுரு. ஓகேவா?

[ஒரு காதலத்தான் பிரிச்சுப் புட்டீறும். இன்னொரு காதலையாவது சேத்து வைய்யும்யா?]

Arunkumar said...

//
சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?
//

//
"நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"
//

சூப்பர் வரிகள்.. ஆனா

//
நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது.
//

இதுதான் டாப் !!!

நட்புக்கு ஜாதி இல்ல...ஆனா காதலுக்கு தேவைப்படுதே !!

கப்பி | Kappi said...

அருணுக்கு சிட்சுவேஷன் சாங்க் -

ஒரு பக்கம் காதல் அம்மா...
மறுபக்கம் சோகம் அம்மா...
இரண்டுக்கும் நடுவுல நானே மிருதங்கம் போல் ஆனேன் :))

கலக்கல் வெட்டி...டாப் கியர்ல போங்க ;)

Syam said...

//நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க//

ரொம்ப சரியா சொன்னீங்க...

Syam said...

கதைல ஒரே டுவிஸ்டு மேல டுவிஸ்டா இருக்கு... :-)

கதிர் said...

காதலிச்சா மட்டும் நாலா பக்கமும் ஏன்யா திரிய கொளுத்தறானுங்க?

Anonymous said...

பாலாஜி, ஏதோ படம் பார்க்கிற மாதிரி இருக்கு...சூப்பர்!! சீக்கிரம் அடுத்த பகுதி??

-விநய்

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

hi vets

kathai nalla poittu iruku, keep it up. mudivu sandhoshama thane irukum?.

Yogen //

மிக்க நன்றி!!!
அப்படி தான் நினைக்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//கார்த்திக் பிரபு said...

தலீவா சவுக்கியமா? //

வாய்யா புது மாப்பிளை...

சாரிப்பா.. உன் கல்யாணத்துக்கு ஒரு பதிவு போடலாம்னு பார்த்தேன். எங்க ப்ராஜக்ட்ல இருக்கவங்க மூணு பேருக்கு டிசம்பர் 10 அன்னைக்கு கல்யாணம். அதோட குழம்பி போயி 8 ஆம் தேதி பத்திரிக்கைய திறந்து பார்த்து ஏமாந்துட்டேன்பா...

வாழ்த்துக்கள் கார்த்திக்!!!

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

//நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க//

ரொம்ப ரசிச்சது. சூப்பர் பாலாஜி. மேலே சொல்லுங்க சீக்கிரம்... //

மிக்க நன்றி தல!!!
சீக்கிரமே அடுத்த பாகம் வரும் :-)

நாமக்கல் சிபி said...

//அமுதன் said...

விறுவிறுப்பாதான் போகுது தல..... ஆனா இந்த தடவ ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்.. அது என்னனுதான் தெரியல.... தொடரட்டும்... வாழ்த்துக்கள்... //

ஏதோ ஒண்ணுனா அருணும் தீபாவும் வழக்கமா ஜாலியா போடற சண்டையா???

அதுக்கு இங்க இடமில்லையேப்பா...

நாமக்கல் சிபி said...

//dubukudisciple said...

என்ன அண்ணே !!!
இப்படி சொல்லிட்டீங்க !! காதலுக்கு தடையா?? அப்பா ஒத்துக்கலையா?? அதனால என்ன என்ன கான்டாக்ட் பண்ண சொல்லுங்க நான் சேர்த்து வைக்கறேன் அவங்களை!!!//
என்னங்க பண்றது? அப்பா அம்மாவும் முக்கியம் தானே! இந்த ஒரு விஷயத்துக்காக வாழ்க்கை முழுக்க அவுங்களை பிரிய வேண்டிய சூழ்நிலை வந்தால் என்ன செய்வது???

//
அப்படியே நம்ம ப்ளாக் பக்கம் ஒரு பின்னூட்டம் போடுங்க.. //
இதோ வந்துட்டேன் :-)

Anonymous said...

//இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை"//

ரொம்ப ரொம்ப யதார்த்தமான வரிகள் வெட்டி.

உண்மையாவே எத்தனையோ பேர் கார்த்திக் மாதிரி இந்த மாதிரி விஷயங்களால காதலை தனக்குள்ளயே புதைச்சுக்கிட்டு வெளில சிரிச்சுக்கிட்டு இருக்கறாங்க........

ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.......... :-(

நாமக்கல் சிபி said...

//aparnaa said...

ஆஹா..again a turning point!!
//
என்னங்க பண்றது. நம்ம நினைக்கறதெல்லாம நடக்குது :-(

//
//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

அது பெத்தவங்க arrange பண்ணிண சுயம்வரத்துக்கு வந்த போது வந்த காதல்...அப்பவே சீதா அப்பா caste,creed,eligibility பார்துதான் invitation அனுப்பி இருப்பார் ...இல்லயா ??
இப்படி ராஜி அப்பா நினைச்சாரோ என்னமோ ;-) //
அப்படியில்லைங்க...
ராமர் அங்க விஸ்வாமித்திரருடன் வருகிறார். ஒரு இளவரசன் போல அலங்காரத்துடன் வரவில்லை. சுயம்வரத்திற்கு அவர் வந்திருக்கக்கூடுமென்பதும் நிச்சயமில்லை. அங்கே வைத்திருக்கும் பினாகத்தை உடைத்து அவர் ஜானகியின் கை பிடிக்க கூடுமென்பெதும் நிச்சயமில்லை. இப்படி எதையும் யோசிக்காமல் வந்ததுதான் காதல் :-)

ஓரளவு சரியா சொல்லிட்டேனு நினைக்கிறேன்... கண்ணபிரான் தான் வந்து சொல்லனுன்.. சரியானு :-)

நாமக்கல் சிபி said...

//ஜி said...

"காதல் வந்திருச்சி! ஆசையில் ஓடிவந்தேன்!"ன்னு தீபா ஆசையா லிஃப்ட் கேட்டா. அதுக்கு தடை போட்டுட்டுயே வெட்டி. ஒழுங்கா அடுத்த பகுதில அருண் லிஃப்ட் கொடுக்குற மாதிரி போட்டுரு. ஓகேவா?
//

இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது... பிரியுதா??? ;)

//
[ஒரு காதலத்தான் பிரிச்சுப் புட்டீறும். இன்னொரு காதலையாவது சேத்து வைய்யும்யா?] //
நானா பிரிச்சேன்???
இது நல்லா இருக்கே!!!

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

//
சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?
//

//
"நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க"
//

சூப்பர் வரிகள்.. ஆனா
மிக்க நன்றி! அருண்!!!

//

//
நம்ம யாருக்கும் யார் என்ன கேஸ்ட்னே தெரியாது.
//

இதுதான் டாப் !!!
//
இது தான் உண்மை... யாருக்கும் பொதுவாக அடத்தவரின் ஜாதி தெரிவதில்லை

//
நட்புக்கு ஜாதி இல்ல...ஆனா காதலுக்கு தேவைப்படுதே !! //
காதலுக்கில்லை... கல்யாணத்திற்கு :-)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

அருணுக்கு சிட்சுவேஷன் சாங்க் -

ஒரு பக்கம் காதல் அம்மா...
மறுபக்கம் சோகம் அம்மா...
இரண்டுக்கும் நடுவுல நானே மிருதங்கம் போல் ஆனேன் :))
//
கலக்கல் பாட்டு கப்பி ;)

// கலக்கல் வெட்டி...டாப் கியர்ல போங்க ;) //
மிக்க நன்றி!!!

நாமக்கல் சிபி said...

//Syam said...

//நம்ம தான் கம்ப்யூட்டர் படிச்சவுடனே உலகமே மாறிடுச்சினு நினைக்கிறோம். மத்தவங்க எல்லாம் அப்படியேதான் இருக்காங்க//

ரொம்ப சரியா சொன்னீங்க... //
இது நிஜமாலுமே நான் உணர்ந்தது. என் ஃபிரெண்ட்ஸ் வீட்ல இந்த மாதிரிதான் நடந்திருக்கு. ஆனா யாரும் வீட்ல பூட்டி வைக்கல :-)

நாமக்கல் சிபி said...

//Syam said...

கதைல ஒரே டுவிஸ்டு மேல டுவிஸ்டா இருக்கு... :-) //
என்னங்க பண்றது??? அப்ப தான் மக்கள் படிக்கறாங்க :-)

நாமக்கல் சிபி said...

//தம்பி said...

காதலிச்சா மட்டும் நாலா பக்கமும் ஏன்யா திரிய கொளுத்தறானுங்க? //

இது உனக்கு வயசான தெரியும் ;)

பொண்ணு வயசுக்கோளாறுல தப்பான பையன கல்யாணம் பண்ணிக்கிட்டா அவ வாழ்க்கையே வீணாயிடும்னு பயம்தான்...

நாமக்கல் சிபி said...

// Anonymous said...

பாலாஜி, ஏதோ படம் பார்க்கிற மாதிரி இருக்கு...சூப்பர்!! சீக்கிரம் அடுத்த பகுதி??

-விநய் //

நன்றி விநய்!!!
அடுத்த பகுதி விரைவில்...

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...

//இந்த காதல் கத்திரிக்காயெல்லம் சின்ன வயசுல எல்லாருக்கும் வரது தான். எல்லாம் கல்யாணமான சரியா போயிடும்னு சொல்றார். என்னை பேசவேவிடலை"//

ரொம்ப ரொம்ப யதார்த்தமான வரிகள் வெட்டி.

உண்மையாவே எத்தனையோ பேர் கார்த்திக் மாதிரி இந்த மாதிரி விஷயங்களால காதலை தனக்குள்ளயே புதைச்சுக்கிட்டு வெளில சிரிச்சுக்கிட்டு இருக்கறாங்க........

ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.......... :-( //

இம்சை அரசி,
சரியா சொன்னீங்க...
நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)

Priya said...

அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே இப்ப தான் பாத்தேன்.
சூப்பரா போகுது. ரொம்ப யதார்த்தம்.
parents லாம் நல்லா freedom குடுத்து வளப்பாங்க, பசங்களும் சரி நம்ப parents forward thinking னு நினைப்பாங்க. ஆனா, ஜாதி மாதிரி சில விஷயங்கள் இன்னும் மாறாம தான் இருக்குங்கறது ரொம்ப உண்மை.
ராஜி கார்த்திக்கு அல்வா குடுத்துட்டு போய்ட்டா, அடுத்து தீபா ஆரம்பிக்கராளா?

நாமக்கல் சிபி said...

//Priya said...

அச்சச்சோ! நீங்க part 9 போட்டதயே இப்ப தான் பாத்தேன்.
//
பரவாயில்லை. கரெக்டா வந்து இப்பவாவது அட்டெண்டன்ஸ் போட்டீங்களே :-)

//
சூப்பரா போகுது. ரொம்ப யதார்த்தம்.
//
மிக்க நன்றி ப்ரியா!!!

//
parents லாம் நல்லா freedom குடுத்து வளப்பாங்க, பசங்களும் சரி நம்ப parents forward thinking னு நினைப்பாங்க. ஆனா, ஜாதி மாதிரி சில விஷயங்கள் இன்னும் மாறாம தான் இருக்குங்கறது ரொம்ப உண்மை.
//
ரொம்ப கரெக்ட்...
ஜாலியா சிரிச்சி பேசறாங்க அதனால லவ் பண்ணா பிரச்சனையில்லைனு நினைச்சா முடிஞ்சிது... மொதல் விஷயம் ஜாதி, அப்பறம் இந்த ஜாதகம் :-(

//
ராஜி கார்த்திக்கு அல்வா குடுத்துட்டு போய்ட்டா, அடுத்து தீபா ஆரம்பிக்கராளா? //
சரியா புரிஞ்சிக்கிட்டீங்க :-))

Siva said...

Nalla Kadai eludiringa.
Vazhthukkal ...

Take care

நாமக்கல் சிபி said...

//Upright Videos said...

Nalla Kadai eludiringa.
Vazhthukkal ...

Take care//
ரொம்ப நன்றிங்க...
தொடர்ந்து படிக்கவும்...

Anonymous said...

//"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"//
சொல்வது சுலபம்.. ஆனால், ரொம்ப கஷ்டமுன்னு சொல்றாங்கோ..[வெட்டி! உங்களை மாதிரி எனக்கும் முன் அனுபவமெல்லாம் கிடையாதுங்கோ! :-)) எல்லாம் கண்ணால் கண்டது.. காதால் கேட்டது..]

//என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...//
புயலுக்குப் பின்னே அமைதி.. மோதலுக்குப் பின்.. வேறென்ன காதல் தான்!! ஏனுங்கோ! நான் சொல்வது சரிதானுங்களே? தொடர் மோதல்களுக்கிடையே சரியான புரிதல்கள் இருப்பின், காதல் மலர்வது சாத்தியமே!!!

மிக எளிமையான வசனங்கள்.. கதை மிக அருமையாக போகிறது.. தொடருங்கள் வெட்டி!! வாழ்த்துக்கள்!!!

இராம்/Raam said...

பாலாஜி,

இந்த பாகம் நல்லாயிருக்குப்பா... ஹீம் முடிவேதான் கணிக்கமுடியலே??

:)

மு.கார்த்திகேயன் said...

அருமையான தொடர் வெட்டி.. நான் எப்போ தான் எல்லா பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.. எவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்..

மு.கார்த்திகேயன் said...

ஒரு சுவாரயமான சினிமா பாக்குற மாதிரி ஒரு பரபரப்பும் நெஞ்சு திக் திக்குன்னும் அடிச்சுகிட்டது பாலாஜி..

Anonymous said...

// இம்சை அரசி,
சரியா சொன்னீங்க...
நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)

//

ஏதோ உங்களை மாதிரி நாலு பேர் எழுதற நல்ல கதைங்களால வந்த ஞானங்க அதெல்லாம் :)

நாமக்கல் சிபி said...

//கத்துக்குட்டி said...
//"சரி விடுடா. எனக்கு கொடுத்து வெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கறேன். என்ன எப்பவும் அவ நினைப்பாவே கொஞ்ச நாள் இருக்கும். அப்பறம் மறந்துடும்"//
சொல்வது சுலபம்.. ஆனால், ரொம்ப கஷ்டமுன்னு சொல்றாங்கோ..[வெட்டி! உங்களை மாதிரி எனக்கும் முன் அனுபவமெல்லாம் கிடையாதுங்கோ! :-)) எல்லாம் கண்ணால் கண்டது.. காதால் கேட்டது..]
//
நீங்க சொல்ற மாதிரி அது கஷ்டம் தாங்க. ஆனா அவன் நண்பனை சமாதனப்படுத்த சொன்ன வசனங்கள் அவை.

//
//என்ன திடீர்னு புதுசா நம்மல பஸ் ஸ்டாண்டிற்கு வர சொல்றா? புரியாமல் தவித்தான் அருண்...//
புயலுக்குப் பின்னே அமைதி.. மோதலுக்குப் பின்.. வேறென்ன காதல் தான்!! ஏனுங்கோ! நான் சொல்வது சரிதானுங்களே? தொடர் மோதல்களுக்கிடையே சரியான புரிதல்கள் இருப்பின், காதல் மலர்வது சாத்தியமே!!!
//
சரிதான் :-))

//

மிக எளிமையான வசனங்கள்.. கதை மிக அருமையாக போகிறது.. தொடருங்கள் வெட்டி!! வாழ்த்துக்கள்!!! //
மிக்க நன்றி கத்துக்குட்டி!!!

நாமக்கல் சிபி said...

//ராம்

ராம் said...
பாலாஜி,

இந்த பாகம் நல்லாயிருக்குப்பா... ஹீம் முடிவேதான் கணிக்கமுடியலே??

:)
//
மிக்க நன்றி ராயல் ;)

முடிவெல்லாம் கணிக்க தேவையில்லை... தொடர்ந்து படிங்க ;)

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன் said...
அருமையான தொடர் வெட்டி.. நான் எப்போ தான் எல்லா பாகத்தையும் படிச்சு முடிச்சேன்.. எவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டேன்.. //
மிக்க நன்றி தலைவா...
இப்பவாது படிச்சீங்களே :-)

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன்

மு.கார்த்திகேயன் said...
ஒரு சுவாரயமான சினிமா பாக்குற மாதிரி ஒரு பரபரப்பும் நெஞ்சு திக் திக்குன்னும் அடிச்சுகிட்டது பாலாஜி.. //
மிக்க நன்றி தலைவா...
சீக்கீரம் முடிஞ்சிடும்னு நினைக்கிறேன் :-)

நாமக்கல் சிபி said...

//இம்சை அரசி said...
// இம்சை அரசி,
சரியா சொன்னீங்க...
நீங்க வேற காதலை பத்தி பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்கீங்க ;)

//

ஏதோ உங்களை மாதிரி நாலு பேர் எழுதற நல்ல கதைங்களால வந்த ஞானங்க அதெல்லாம் :)//

இதெல்லாம் ஓவருங்கோ...
நம்ம கதைய படிச்சி ஞானம் வளந்துடுச்சினு சொல்றதெல்லாம் ரொம்ப டூ மச்...
எங்களுக்கே அதெல்லாம் இல்லாமத்தாங்க எழுதறோம் ;)

G.Ragavan said...

மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீட்டுல சொன்னப்புறம்...கார்த்திக் அவங்க வீட்டுல சொல்லி...பேசிச் சம்மதிக்க வெச்சு..கூட்டீட்டுப் போயிருக்கனும். அதையும் செய்யலை. இவரே பெரிய இவர் மாதிரிப் போய் மெரட்டல் வாங்கீட்டு வந்திருக்கான். குறைந்த பட்சம்...ஒரு டேப்பு ரிக்கார்டர சட்டைக்குள்ள வெச்சுக் கொண்டு போயி...அவங்க பேசுனத ரெக்கார்டு செஞ்சிட்டு வரக் கூடாதா? ம்ம்ம்...காதலிக்க மட்டுந் தெரியுது. அத எப்படி வெற்றியாக்குறதுன்னு தெரியலை. சமைக்கத் தெரியும். ஆனா திங்கத் தெரியாதுங்குற கதையா இருக்குது!

சரி..அடுத்தென்ன...வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணந்தான். வேறென்ன நடக்க முடியும். சினிமாவுலதான் இவ வீட்டுக்கு அவனும்..அவன் வீட்டுக்கு இவளும் போய் சமாதானப் படுத்த முடியும்.

ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.

Anonymous said...

//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

ஒ அப்படியா matteru சொல்லவெ
இல்ல நான் என்னமோ ராமரு "sight 2" அடிச்சா ராஇன்காடிஉம்innu நினைசைன்

நாமக்கல் சிபி said...

//G.Ragavan said...

மொதல்ல கார்த்திக் செஞ்சதே தப்பு. ராஜியும் அவங்க வீட்டுல சொன்னப்புறம்...கார்த்திக் அவங்க வீட்டுல சொல்லி...பேசிச் சம்மதிக்க வெச்சு..கூட்டீட்டுப் போயிருக்கனும். அதையும் செய்யலை. இவரே பெரிய இவர் மாதிரிப் போய் மெரட்டல் வாங்கீட்டு வந்திருக்கான். குறைந்த பட்சம்...ஒரு டேப்பு ரிக்கார்டர சட்டைக்குள்ள வெச்சுக் கொண்டு போயி...அவங்க பேசுனத ரெக்கார்டு செஞ்சிட்டு வரக் கூடாதா? ம்ம்ம்...காதலிக்க மட்டுந் தெரியுது. அத எப்படி வெற்றியாக்குறதுன்னு தெரியலை. சமைக்கத் தெரியும். ஆனா திங்கத் தெரியாதுங்குற கதையா இருக்குது!
//
சரியா சொன்னீங்க ஜி.ரா.
நம்ம பசங்களுக்கும் வீட்ல சொல்றது எப்பவும் பயம்தான். டேப் ரிக்கார்டர் எடுத்துட்டு போறதெல்லாம் கொஞ்சம் பெரிய விஷயம். நான் பார்த்த வரைக்கும் வீட்ல சொல்றதுக்கு அத்தனை பேருமே பயப்படறானுங்க. (இவனுங்களை எல்லாம் எதுவும் திட்ட முடியாது. உனக்கு அந்த தகுதியே இல்லைனு என்னைய திட்டுவானுங்க :-))

//
சரி..அடுத்தென்ன...வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணந்தான். வேறென்ன நடக்க முடியும். சினிமாவுலதான் இவ வீட்டுக்கு அவனும்..அவன் வீட்டுக்கு இவளும் போய் சமாதானப் படுத்த முடியும்.

ம்ம்ம்...என்ன நடக்குதுன்னு பாக்கலாம். //
என்ன நடக்குதுனு பாருங்க :-)

நாமக்கல் சிபி said...

// said...

//சீதை இராமன பார்த்தவுடனே காதலிக்கல? அது ஒழுக்கங்கெட்ட செயலா?//

ஒ அப்படியா matteru சொல்லவெ
இல்ல நான் என்னமோ ராமரு "sight 2" அடிச்சா ராஇன்காடிஉம்innu நினைசைன் //

புரியலையே :-(

கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!