தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 04, 2006

சைனிக்குடு

சைனிக்குடு - போக்கிரியின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு நடித்து வெளியாகியிருக்கும் படம்.


சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள். மக்களுக்காக போராடும் கல்லூரி மாணவர்களை(?) பற்றியும் அதற்காக அவர்கள் படும் கஷ்டங்களையும் சொல்ல முயன்றிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் (அறைகுறை தெலுகை வைத்து சொல்லவில்லை). படம் நன்றாக புரிந்தது ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றுதான் புரியவில்லை.



ஆரம்ப காட்சியில் வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், கேமரா கொண்டு சென்ற விதமும் அசத்தலாக வந்திருக்கிறது. அதன் பிறகு பல காட்சிகள் ஆயுத எழுத்தை நினைவு படுத்தியது. வழக்கம் போல 'குண்டா' அரசியல்வாதியாக இர்ஃபான் கான் நடித்திருக்கிறார். அவருக்கு வலது கை போல பிரகாஷ்ராஜ்.

படத்தில் ஏதாவது வித்யாசம் காட்ட வேண்டுமென்று த்ரிஷாவை இர்ஃபான் கானை காதலிக்க வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைக்கு அதையே பயன்படுத்தியிருக்கிறார்கள். த்ரிஷா பார்க்க நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.


மகேஷ்பாபு அவருக்கு கொடுத்ததை அருமையாக செய்திருக்கிறார். ஆனால் ப்ரிவியூ பார்த்தாரா? என்றுதான் தெரியவில்லை. ஹாரிஸ் ஜெயராஜிற்கு அந்நியனும், தொட்டி ஜெயாவும் தெலுகில் டப்பிங்காகி விட்டது என்று யாராவது சொல்லியிருக்கலாம். ரீ-ரெக்கார்டிங்கிற்கு மனிதனுக்கு நேரமில்லை போலும் அப்படியே cntr-c, cntrl-v செய்துவிட்டார். இதில் முக்கியமான சண்டை காட்சிக்கு அந்நியனை அப்படியே போட்டுவிட்டார். அப்பரச்சித்துடு (அந்நியன்) தெலுகில் பயங்கர ஹிட்டென்று அவருக்கு யாரும் சொல்லாதது வருத்தமே...




ஒக்கடு (கில்லி) இயக்கிய குணசேகரிடமிருந்து இந்த படம் வந்தது பலத்த ஏமாற்றமே! படத்தில் திரைக்கதையும், எடிட்டிங்கும் பயங்கர மோசம்.

சரி யாரையாவது பாராட்டியே ஆகனுமே... கேமரா மேனையும், கிராபிக்ஸ்க்கான காட்சிகளுக்காக உழைத்த டீமையும் நிச்சயம் பாராட்டலாம். முதலமைச்சரிடம் மகேஷ் பாபு பேசும் இந்த குறிப்பிட்ட வசனங்கள் பிடித்திருந்தது.
"வானத்திலிருந்து பார்க்கும் போது எல்லாமே பச்சையாத்தான் தெரியும். கீழ இறங்கி பார்த்தாதான் உண்மை புரியும்"
"ஒரு கோடி எண்ண ஆரம்பிக்க வேண்டுமென்றாலும் ஒன்றிலிருந்துதான் எண்ண ஆரம்பிக்க வேண்டும்" (இது ஒரு மாணவர் MLA ஆனதற்கு க்ளைமாக்ஸில் பேசும் வசனம். ஆயுத எழுத்து வசனம் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல.)

சரி கடைசியா நீ என்ன சொல்ல வரனு கேக்கறீங்களா? உங்களுக்கு மகேஷ் சுத்தமா பிடிக்காதா?. அவர் மேல பயங்கர வெறுப்பு அப்படினா நீங்க இந்த படம் பார்க்கலாம். அவர் கஷ்டப்பட்டு நடிச்சத எப்படி மோசமான திரைக்கதையால வீணாக்கியிருக்காங்கனு. யாம் பெற்ற துன்பம் யாரும் பட வேண்டாம் என்றே இந்த பதிவு!!!

32 comments:

கப்பி | Kappi said...

//சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள்.//

அப்ப போர்(bore) வீரன்னு சொல்றீங்க ;)

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

//சைனிக்குடு என்றால் போர்வீரன் என்று பொருள்.//

அப்ப போர்(bore) வீரன்னு சொல்றீங்க ;) //

நச்சுனு புரிஞ்சிக்கிட்ட கப்பி :-)

Arunkumar said...

unga "goltu" padam aarvathukku oru alave illayapa? but 3sha super :)
idhe range-la post pottingana innum rendu masathula adutha century thaan :)

kalakkunga vetti.. seekiram nellikayoda adutha post podunga :)

நாமக்கல் சிபி said...

//Arunkumar said...

unga "goltu" padam aarvathukku oru alave illayapa? but 3sha super :)//
என்னங்க பண்ண? ஆபிஸ்ல இருந்து 30 அடில இருக்கற தியேட்டர்ல போடறாங்க... அதனால போயி பார்த்தாச்சி :-)

// idhe range-la post pottingana innum rendu masathula adutha century thaan :)
//
அதெல்லாம் ரொம்ப கஷ்ட்முங்கோ :-)


// kalakkunga vetti.. seekiram nellikayoda adutha post podunga :) //
சீக்கிரம் போடறேங்கோ :-)

Boston Bala said...

த்ரிசாவைக் கூட அழகாகக் காட்ட தெலுங்கு ஒளிப்பதிவாளர்களால்தான் முடியும்!

நாமக்கல் சிபி said...

//Boston Bala said...

த்ரிசாவைக் கூட அழகாகக் காட்ட தெலுங்கு ஒளிப்பதிவாளர்களால்தான் முடியும்! //

நோ கமெண்ட்ஸ் :-)

ஆனா எல்லா ஹீரோயினையும் அழக காட்ட அப்படி என்ன டெக்னிக் வெச்சிருக்காங்கனு தெரியல :-)

tamizhppiriyan said...

படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்..! சூப்பர் flop..! இருந்தாலும் பதிவு போட்டு வார்னிங் கொடுத்தமைக்கு டாங்க்ஸ்!

நாமக்கல் சிபி said...

//தமிழ்ப்பிரியன் said...

படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன்..! சூப்பர் flop..! இருந்தாலும் பதிவு போட்டு வார்னிங் கொடுத்தமைக்கு டாங்க்ஸ்! //

இந்த படம் பார்த்த வெளிய சொல்ல வேணாம்னு தான் பார்த்தேன்... இருந்தாலும் இத படிச்சாவது நம்ம மக்கள் தப்பிக்கட்டுமேனு தான் இந்த பதிவு :-)

Anonymous said...

எனக்கென்னமோ, அந்த 'கொல்டி' கதை உம்மோடதான்னு ஒரு டவுட்டு வருது.

நாமக்கல் சிபி said...

//ஜி said...

எனக்கென்னமோ, அந்த 'கொல்டி' கதை உம்மோடதான்னு ஒரு டவுட்டு வருது.//

என்னங்க நீங்களுமா???
லோவல்லயே படம் வந்துச்சுங்க... அதனாலத்தான் :-)

Anonymous said...

நேத்து இங்க மகேஷ்பாபு, குணசேகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாரும் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்தாங்க.

மகேஷ்கூட போட்டோ எடுத்து ரூம்மேட் ஜென்மசாபல்யம் அடைஞ்சாரு.

நமக்கு வரலட்சுமி வரலேன்னு வருத்தம்தான்.

ஒரு சராசரி மசாலா படத்த்துக்கு சைனிக்குடு ஓக்கேதான்.

ஆனா எல்லோரும் இன்னொரு போக்கிரியை எதிர்பாத்ததனால ஏமாற்றம் அடைஞ்சிருக்காங்க.

காப்பி 1:

அந்த பேஃக்டரி கண்ணிவெடி காட்சி 'Behind enemy lines'லருந்து சுட்டிருக்காங்க.

காப்பி 2:

ஹாரிஸ் ஒரு பாட்ட 'உயிரே' தைய-தையாவிலுருந்து உருவியிருக்காரு போல.

காப்பி 3:

இர்பாஃன் கான் படுக்கையறையில் மாணவர்கள் சூழ்ந்து நிற்கும் காட்சி போக்கிரியில் பிரம்மானந்தத்தை அலி-வேணு கோஷ்டியினர் மடக்கும் காட்சி போலவே இருந்தது.

மொத்ததில குணசேகர் 'சீன் புடிக்க' ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் போல.

Anonymous said...

Dear வெட்டிபயலே... !

விமர்சனம் கண்டேன்...

நல்ல முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். நகைச்சுவை கலந்து தந்துள்ளது சிறப்பு.

படம் பார்க்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் விமர்சனம் நிச்சயம் படிக்கலாம்.

வாழ்த்துக்கள்...

இராம்/Raam said...

படம் சுத்தவேஸ்ட்'ன்னு நம்ம மணவாடும் சொன்னீச்சு வெட்டி...

பாவம் நீ அதே வேறே பார்த்திட்டு Review'யெல்லாம் எழுதிருக்கே.... :)

நாங்க Dhoom2 போனோம்... அந்த கொடுமையே எங்கே போய்சொல்ல........??? :-((((

Anonymous said...

Lol... nalla vimarsanam... padathoda highlight enakku unga blog paathu therinjiduchu! (vera enna namma 3sha)

unga warninga naan paarataren!

நாமக்கல் சிபி said...

//பெத்த ராயுடு said...

நேத்து இங்க மகேஷ்பாபு, குணசேகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாரும் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்தாங்க.

மகேஷ்கூட போட்டோ எடுத்து ரூம்மேட் ஜென்மசாபல்யம் அடைஞ்சாரு.
//
ஆஹா... நல்ல சான்சாச்சே!!!

//
நமக்கு வரலட்சுமி வரலேன்னு வருத்தம்தான்.
//
அப்ப வேஸ்ட் :-)

//
ஒரு சராசரி மசாலா படத்த்துக்கு சைனிக்குடு ஓக்கேதான்.

ஆனா எல்லோரும் இன்னொரு போக்கிரியை எதிர்பாத்ததனால ஏமாற்றம் அடைஞ்சிருக்காங்க.
//
ரொம்ப சரி...
போக்கிரி, அத்தடு ரேஞ்ச்க்கு எதிர்பார்த்துட்டு போனதாலதான் இந்த ஏமாற்றம். திரைக்கதையும் மோசம்தாங்க :-(

// காப்பி 1:

அந்த பேஃக்டரி கண்ணிவெடி காட்சி 'Behind enemy lines'லருந்து சுட்டிருக்காங்க.

காப்பி 2:

ஹாரிஸ் ஒரு பாட்ட 'உயிரே' தைய-தையாவிலுருந்து உருவியிருக்காரு போல.
//
முழு பாட்டும் உருவல்தான்...

// காப்பி 3:

இர்பாஃன் கான் படுக்கையறையில் மாணவர்கள் சூழ்ந்து நிற்கும் காட்சி போக்கிரியில் பிரம்மானந்தத்தை அலி-வேணு கோஷ்டியினர் மடக்கும் காட்சி போலவே இருந்தது.
//
அந்த சீன் அப்படியே ஆயுத எழுத்து காப்பி. அதுவும் வில்லன் பயத்துல எல்லார் பேரையும் சொல்லி கூப்புடறது. அப்பறம் நடு ஹால்ல உக்காரது. அப்படியே காப்பி :-(

// மொத்ததில குணசேகர் 'சீன் புடிக்க' ரொம்ப கஷ்டப்பட்டிருக்கார் போல. //
அதே! அதே!!!

நாமக்கல் சிபி said...

//Ranganathan. R said...

Dear வெட்டிபயலே... !

விமர்சனம் கண்டேன்...

நல்ல முறையைக் கையாண்டிருக்கிறீர்கள். நகைச்சுவை கலந்து தந்துள்ளது சிறப்பு.

படம் பார்க்கும் எண்ணம் இல்லாவிட்டாலும் விமர்சனம் நிச்சயம் படிக்கலாம்.

வாழ்த்துக்கள்... //

மிக்க நன்றி ரங்கநாதன்!!!
படத்த பார்க்க வேண்டாம்னு சொல்ற பதிவே படம் ரேஞ்சுக்கு மொக்கைய போட்டுச்சுனா அவ்வளவுதான் :-)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

படம் சுத்தவேஸ்ட்'ன்னு நம்ம மணவாடும் சொன்னீச்சு வெட்டி...

பாவம் நீ அதே வேறே பார்த்திட்டு Review'யெல்லாம் எழுதிருக்கே.... :)
//

நான் பட்ட கஷ்டம் நம்ம நண்பர்களும் பட வேண்டாம்னு தான் :-)

//
நாங்க Dhoom2 போனோம்... அந்த கொடுமையே எங்கே போய்சொல்ல........??? :-(((( //
ஏங்க? ஒரு ஐஸ்வர்யா ராய், ரெண்டு பிபாஷா பாசு நடிச்சிருக்காங்க. அதுக்கு என்ன குறை???

நாமக்கல் சிபி said...

//Dreamzz said...

Lol... nalla vimarsanam... padathoda highlight enakku unga blog paathu therinjiduchu! (vera enna namma 3sha)
//
சரியா புடிச்சிக்கிட்டீங்க ட்ரீம்ஸ் ;)

//
unga warninga naan paarataren! //
பாராட்டுக்கு நன்றி!!!

இராம்/Raam said...

//ஏங்க? ஒரு ஐஸ்வர்யா ராய், ரெண்டு பிபாஷா பாசு நடிச்சிருக்காங்க. அதுக்கு என்ன குறை??? //


அது ஒன்னுதாப்பா படத்திலே ஆறுதலான விஷயமே..... ஹீம் நம்ம போர்வாளோட விமர்சனத்தே படிச்சு பாரு.....

நாமக்கல் சிபி said...

//அது ஒன்னுதாப்பா படத்திலே ஆறுதலான விஷயமே.....
//
அதை நினைச்சு நீங்க பெருமை படணும் ;)

//
ஹீம் நம்ம போர்வாளோட விமர்சனத்தே படிச்சு பாரு.....//
படம் பார்த்துட்டு படிச்சு சொல்றேன் ;)

Sivabalan said...

பாலாஜி

விமர்சனத்திற்கு நன்றி!!

எச்சரிக்கை வேற செய்திட்டீங்க.. நன்றி!

நாமக்கல் சிபி said...

//Sivabalan said...

பாலாஜி

விமர்சனத்திற்கு நன்றி!!

எச்சரிக்கை வேற செய்திட்டீங்க.. நன்றி! //

மிக்க நன்றி சிபா...
எச்சரிக்கை செய்யத்தான் இந்த பதிவே ;)

G.Ragavan said...

இதென்ன படங்களைத் திட்டி எழுதுற வாரமா? இப்பத்தான் நானும் பிரதீப்பும் சிவப்பதிகாரத்தை ஒரு பிடி பிடிச்சோம். நீ ஸ்டேட் விட்டு ஸ்டேட் தெலுங்கு படத்தக் கிண்டலடிக்கிற. என்ன நடக்குதோ! ஏடு கொண்டலவாடா பாலாஜி!

அதிலோக சுந்தரி ஜெகதேக வீருடு பாத்தாச்சா? பம்பலக்கடி ஜம்ப்பா?

நாமக்கல் சிபி said...

//jvenga said...
Hai Balaji,

Dont waste your time with these type of silly film comment. We want the Nellikaai-7. We are very eager to read it. Pls We expect your Nellikaai-7 very soon.
//

jvenga,
This is just a precaution post to our Friends :-)

Sorry for the delay. Actually I was writing the story yesterday but just bcos of Pongal effect I slept in the couch with laptop on my lap :-)

Got up somewhere in the midnight and went to Bed. Will certainly post it tonight :-)

Thx for ur comments :-)

Anonymous said...

வாழ்த்துக்கள் வெட்டி,

உங்க பதிவுக்குத்தான் ஆசிப், முதல் மதிப்பெண் கொடுத்தாராம்.

அடுத்தப் போட்டில, பட்டையக் கெளப்பிருவீங்கப் போலிருக்கு.

நாமக்கல் சிபி said...

// G.Ragavan said...
இதென்ன படங்களைத் திட்டி எழுதுற வாரமா? இப்பத்தான் நானும் பிரதீப்பும் சிவப்பதிகாரத்தை ஒரு பிடி பிடிச்சோம். நீ ஸ்டேட் விட்டு ஸ்டேட் தெலுங்கு படத்தக் கிண்டலடிக்கிற. என்ன நடக்குதோ! ஏடு கொண்டலவாடா பாலாஜி!
//
என்ன செய்ய ஜி.ரா.
இந்த ஏரியால தெலுகு மக்கள் அதிகம். அதனால தியேட்டர்ல தெலுகு படம்தான் வருது. அதுவும் இல்லாம நம்ம இப்ப மகேஷ் பாபு ஃபேனாயாச்சு ;)

படம் சான்சேயில்லை ;)

//
அதிலோக சுந்தரி ஜெகதேக வீருடு பாத்தாச்சா? பம்பலக்கடி ஜம்ப்பா?
//
பம்பலக்கடி ஜம்ப்பா தானே. அதுதான் எப்பவோ பார்த்தாச்சே!

சிவப்பதிகாரம் சூப்பராமே ;)
பார்க்கனும். விஷால் படம் காமிக்கிராம்பா ;)

நாமக்கல் சிபி said...

//ஜி said...
வாழ்த்துக்கள் வெட்டி,

உங்க பதிவுக்குத்தான் ஆசிப், முதல் மதிப்பெண் கொடுத்தாராம்.

அடுத்தப் போட்டில, பட்டையக் கெளப்பிருவீங்கப் போலிருக்கு.
//
மிக்க நன்றி ஜி...
அது போன மாசம் முடிஞ்சி போன போட்டி. நமக்கும் தேன்கூடு போட்டிக்கும் அப்படி ஒரு ராசி. 5வது இடம் இரண்டு தடவை :-))

இந்த தடவை ரொம்ப கஷ்டமான தலைப்பா இருக்கு :-( (சீரியஸாத்தான் சொல்றேன். எப்படி குறும்பா எழுதறதுனு இன்னும் எனக்கு தெரியல :-( )

மு.கார்த்திகேயன் said...

வெட்டி, நீங்க சொல்றதை பாத்த இந்த படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணமாட்டாங்க போலத் தெரியுது..

சரி..ஒவ்வொரு தடவையும் வெட்டிபயலே, வெட்டின்னு அடிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு :-))

பா ல ஆரம்பிச்சு ஜி ல முடியுற உங்க பேரையே பயன்படுத்திக்கலாமா :-)

நாமக்கல் சிபி said...

//மு.கார்த்திகேயன் said...
வெட்டி, நீங்க சொல்றதை பாத்த இந்த படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணமாட்டாங்க போலத் தெரியுது..
//
ஆமாங்க எல்லாம் தெரிச்சி ஓடிட்டாங்கனு கேள்விப்பட்டேன் ;)

//
சரி..ஒவ்வொரு தடவையும் வெட்டிபயலே, வெட்டின்னு அடிக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு :-))

பா ல ஆரம்பிச்சு ஜி ல முடியுற உங்க பேரையே பயன்படுத்திக்கலாமா :-)
//
உங்களுக்கு எப்படி சௌரியப்படுதோ அப்படி கூப்பிடுங்க...

பூவ பூனு சொல்லலாம், புய்பம்னு சொல்லலாம் நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்ன்ற மாதிரிதான் இதுவும் ;)

Anonymous said...

நானும் சில தெலுங்கு படங்களை பார்த்துள்ளேன். நுவ்வேஸ்தானெந்தே நேனொடந்தனா, சுக்கலோ சன்ருடு, மிஸ்ஸம்மா படங்களை விரும்பிப்பார்த்தேன். சப்டைட்டிலோடத்தன். பொம்மரிலு படம் பார்க்க காத்திருக்கிறேன்.அதுக்கும் ஒரு விமர்சனம் எழுதுங்கள்.

நாமக்கல் சிபி said...

//.:: MyFriend :: said...
நானும் சில தெலுங்கு படங்களை பார்த்துள்ளேன். நுவ்வேஸ்தானெந்தே நேனொடந்தனா, சுக்கலோ சன்ருடு, மிஸ்ஸம்மா படங்களை விரும்பிப்பார்த்தேன். சப்டைட்டிலோடத்தன். பொம்மரிலு படம் பார்க்க காத்திருக்கிறேன்.அதுக்கும் ஒரு விமர்சனம் எழுதுங்கள்.
//

My Friend,
நீங்க சொன்ன படமெல்லாம் நானும் பார்த்திருக்கிறேன்...

பொம்மரில்லுவிற்கு விமர்சனம் எழுதியாகிவிட்டது. சுக்கல்லோ சந்திருடுவிற்கும் எழுதிவிட்டேன்.

போக்கிரி பல தடவை பார்த்தாகிவிட்டது :-)

மறக்காம பொம்மரில்லு பாருங்க. 2006 Best Movie :-)

Anonymous said...

நல்ல மனம் வாழ்க! திரைவிமர்சனம் செய்ய நல்லாவே வாழ்க!