தத்துவம்
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Friday, December 08, 2006
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!!!
இன்னைக்கு தாங்க வாழ்க்கைல முதல் தடவையா பனி பெய்யறத பாக்கறேன். நானும் வந்த நால்ல இருந்து இது எப்படி இருக்கும்னு பார்க்கனும் ரொம்ப ஆர்வமாயிருந்தேன். சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.
பனி பெய்யறதை பார்த்தவுடனே ஆபிஸ் போற அவசரத்துலயும் வெளிய வந்து பனில போட்டோவெல்லாம் எடுத்தாச்சு :-). நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு வெள்ளைக்கார ஃபிகரு ஒரு மாதிரி பார்த்துட்டு போச்சு.
ஏன்னா குளிராத மாதிரி ஒரு எஃபக்ட் கொடுத்துட்டு (ஜாக்கெட் கழுட்டிட்டு டி-சர்டோடு) போட்டோ எடுத்துட்டு இருந்தோம். ஆனா இந்த காத்து அடிச்சாதாங்க உசுரே போற மாதிரி குளிருது.
எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை. இந்த விஷயத்துல நம்ம Gaptain ரொம்ப மோசம். அவர் பாகிஸ்தானி தீவிரவாதிகளை பிடிக்க காஷ்மீர் போவாரு. கூடவே நம்ம ஹீரோயின்ஸையும் கூப்பிட்டு போயிடறாரு. தீவிரவாதிய பிடிக்கறதுக்கு க்ளைமாக்ஸ்ல இவுங்க ஒரு டேன்ஸ் தீவிரவாதிங்க முன்னாடி கண்டிப்பா ஆடுவாங்க.
இந்த கொடுமைல ஒரு டூயட் (Gaptain உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?) வேற இருக்கும். அதுல அவர் மட்டும் விவரமா சட்டை, ஸ்வட்டர், ஜாக்கேட், அதுக்கு மேல இன்னும் ஏதாவது ரோஸ் கலர்ல கண்ணு கூசற மாதிரி போட்டுட்டு பனில நிப்பாரு.நம்ம ஹீரோயின்ஸ் அவரை சுத்தி சுத்தி ஆடனும். அதுவும் குட்டை பாவடை போட்டு அந்த குளிர்ல ஆடனும். படத்துல பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அவுங்களை நினைச்சா இப்ப பாவமா இருக்கு...
இப்ப இந்த பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது...
வெயிலின் அருமை பனியில் தெரியும் :-)
Subscribe to:
Post Comments (Atom)
76 comments:
Good title!!
Nice photo!!
Have nice Snowy Day :)
மிக்க நன்றி சிபா...
சிக்காகோவில் போன வாரமே பின்னி பெடலெடுத்துவிட்டதாக கேள்வி ;)
ஏன்யா? பனி பெஞ்சா 'பனி பொழிந்தது'ன்னு மட்டும் எழுதுங்க. அது என்ன எங்க தலீவர சீண்டுறீங்க. உமக்கு போடுறதுக்கு போஸ்டு கெடக்கலீனா, எங்கத் தலீவரத்தான் வாருவீரா?
பனி அடிச்சுப் பொழச்சவன் இருக்கான்.
ஆனா,
எங்க கேப்டன் நடிச்சுப்... ஸாரி! அடிச்சுப் பொழச்சவன் எவனுமே இல்ல.
இப்படிக்கு,
ஜி,
கேப்டன் ரசிகர் மன்றத் தலைவர்,
பாஸ்டன் பகுதி,
அமெரிக்கா.
சிகாகோவில அடி பின்னிடுச்சு.
படங்கள் பாருங்க.
//நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு வெள்ளைக்கார ஃபிகரு ஒரு மாதிரி பார்த்துட்டு போச்சு.
//
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!!! ;)
---நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு---
ரெண்டு தூறல் போட்டதுக்கே இப்படி விழுந்து வாருகிறீர்களேன்னு செல்லமா வாரியிருப்பாங்க ; )
I wanted to post like this. any way :) thalai ikku thaan first place. :)
Guptan avaru oru load test enggg athu dhaan.. :)
இதுக்குத்தான் ஆஸ்திரேலியா வரனும் எங்கிறது.... அதுவும் குறிப்பா மெல்பொர்ன் வரனும் எங்கிறது.... என்னா இங்க பனியே பெய்யாது..... ஆனால் குளிரும். அது மட்டும்தான் பிரச்சனை அவசரமா வேலைக்கு போய்க்கிட்டு இருக்கிறன்... வந்து பேசிக்கிறேன்.... வர்டா
//ஜி said...
ஏன்யா? பனி பெஞ்சா 'பனி பொழிந்தது'ன்னு மட்டும் எழுதுங்க. அது என்ன எங்க தலீவர சீண்டுறீங்க. உமக்கு போடுறதுக்கு போஸ்டு கெடக்கலீனா, எங்கத் தலீவரத்தான் வாருவீரா?
பனி அடிச்சுப் பொழச்சவன் இருக்கான்.
ஆனா,
எங்க கேப்டன் நடிச்சுப்... ஸாரி! அடிச்சுப் பொழச்சவன் எவனுமே இல்ல.
இப்படிக்கு,
ஜி,
கேப்டன் ரசிகர் மன்றத் தலைவர்,
பாஸ்டன் பகுதி,
அமெரிக்கா. //
என்னங்க பண்ண பனிய பார்த்தா காஷ்மீரும் கேப்டனும்தான் ஞாபகத்துக்கு வராரு ;)
நாங்களும் உறுப்பினர் அட்டை வெச்சிருக்கோமில்லை ;)
//சிறில் அலெக்ஸ் said...
சிகாகோவில அடி பின்னிடுச்சு.
படங்கள் பாருங்க. //
ஆஹா..
இந்த அளவுக்கு இங்க இல்லைங்கோ...
//கப்பி பய said...
//நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு வெள்ளைக்கார ஃபிகரு ஒரு மாதிரி பார்த்துட்டு போச்சு.
//
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது!!! ;) //
கப்பி,
அந்த ஃபிகர போட்டோ பிடிக்காம பனிய போட்டோ பிடிச்சதால முறைச்சிருக்குமோ??? :-/
//Boston Bala said...
---நாங்க போட்டோ எடுக்கறதை பார்த்துட்டு அந்த வழியா போன ஒரு---
ரெண்டு தூறல் போட்டதுக்கே இப்படி விழுந்து வாருகிறீர்களேன்னு செல்லமா வாரியிருப்பாங்க ; ) //
இதுவே ரொம்ப குளிரா இருக்கே... அப்ப இன்னும் பயங்கரமா போகுமா???
//Adiya said...
I wanted to post like this. any way :) thalai ikku thaan first place. :)
Guptan avaru oru load test enggg athu dhaan.. :) //
ஆதித்யா,
நீங்களும் போடுங்க...
கேப்டன் பெருமையை உலகுக்கு பரப்புவோம் :-)
//ஆதவன் said...
இதுக்குத்தான் ஆஸ்திரேலியா வரனும் எங்கிறது.... அதுவும் குறிப்பா மெல்பொர்ன் வரனும் எங்கிறது.... என்னா இங்க பனியே பெய்யாது..... ஆனால் குளிரும். அது மட்டும்தான் பிரச்சனை அவசரமா வேலைக்கு போய்க்கிட்டு இருக்கிறன்... வந்து பேசிக்கிறேன்.... வர்டா //
அமெரிக்காலயும் பனி பெய்யாத இடம் நிறைய இருக்குங்க... இருந்தாலும் இந்த மாதிரி குளிர்ல இருக்கறதும் நல்லாதான் இருக்கு...
இந்த மாதிரி போட்டோ எடுத்தாதான் வெளி நாட்ல இருக்கோம்னு நமக்கே நம்பிக்கை வருது :-)
//இன்னைக்கு தாங்க வாழ்க்கைல முதல் தடவையா பனி பெய்யறத பாக்கறேன். நானும் வந்த நால்ல இருந்து இது எப்படி இருக்கும்னு பார்க்கனும் ரொம்ப ஆர்வமாயிருந்தேன். சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.
//
ada...nammala madhiriyae..nambaama mulichirupeenga enru sollunga!
neenga solra madhiri, paniya vida, kaathu thaan uyirai eduthidum!
\"எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை.\"
குட்டி பாவடை போட்ட நடிகைகள் மேல தான் என்ன ஒரு கரிசனை வெட்டி உங்களுக்கு!!
Enjoy ur first snowy day experience!!
கொடுத்து வெச்ச ஆளுய்யா...
என்சாய்ய்ய்ய்
//Dreamzz said...
ada...nammala madhiriyae..nambaama mulichirupeenga enru sollunga!
neenga solra madhiri, paniya vida, kaathu thaan uyirai eduthidum! //
நீங்களும் நம்ம கேஸா?
பனி மட்டும்னா பிரச்சனையே இல்லை. ஜாக்கேட்டா இல்லாம போகலாம். ஆனா இந்த காத்து அடிச்சி ரொம்ப கஷ்டப்படுத்துது...
ஆனா அதுவும் ஜாலியாத்தான் இருக்கு :-)
//Divya said...
\"எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை.\"
குட்டி பாவடை போட்ட நடிகைகள் மேல தான் என்ன ஒரு கரிசனை வெட்டி உங்களுக்கு!!
//
படத்துல பாக்கும் போது நல்லாத்தான் இருக்கு. ஆனா அவுங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு நினைக்கும் போது பாவமாத்தாங்க இருக்கு. லெதர் ஜாக்கெட் போட்டு, கைல க்ளவுஸ் எல்லாம் போட்டே நமக்கு இங்க தாங்கல. நம்மல மாதிரி மனுஷங்கதானே அவுங்களும் :-(
//
Enjoy ur first snowy day experience!! //
மிக்க நன்றி திவ்யா...
//தம்பி said...
கொடுத்து வெச்ச ஆளுய்யா...
என்சாய்ய்ய்ய் //
குளுரு கொன்னு எடுத்துட்டு இருக்குனு சொல்றேன்.. இதுல என்ன என்ஜாய் வேண்டி கிடக்கு...
பாலாஜி, இங்க கூட பனி பட்டய கிளப்புச்சு...பனி பெய்யும் போது,பனி பெஞ்சு முடிச்ச மறுநாள் அருமையா இருக்கும்..
அப்புறம் 2-3 நாள் கழிச்சு ரோடு எல்லாம் கருப்பா,சகதிய விட கேவலமா ஆயிடும்..
பனிகாலத்தில மேற்கொள்ள வேண்டிய precautions பத்தி நான் எழுதி இருக்கேன் டா..டைம் இருக்கும் போது read
இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பர கொய்யா..
வெட்டிச்சாமி... ஐஸ் வெள்ளியங்கிரி மலையிலருந்து வர்றிங்களா?
இப்பதான பனி அரம்பித்திருக்கு அதுக்கே இப்டியா ?
போக போக தெரியும், குளிர் பின்னி பெடலெடுதிரும்.
- உண்மை
//தமிழ்ப்பிரியன் said...
பாலாஜி, இங்க கூட பனி பட்டய கிளப்புச்சு...பனி பெய்யும் போது,பனி பெஞ்சு முடிச்ச மறுநாள் அருமையா இருக்கும்..
அப்புறம் 2-3 நாள் கழிச்சு ரோடு எல்லாம் கருப்பா,சகதிய விட கேவலமா ஆயிடும்..
//
ஓ!!! அப்ப உடனே எல்லா போட்டோவும் எடுத்து வெச்சிக்கணும்னு சொல்ற :-)
//
பனிகாலத்தில மேற்கொள்ள வேண்டிய precautions பத்தி நான் எழுதி இருக்கேன் டா..டைம் இருக்கும் போது read //
கண்டிப்பா.. இதோ வரேன்
// சடாமுடி வேணு said...
இஸ்தலக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பர கொய்யா..
வெட்டிச்சாமி... ஐஸ் வெள்ளியங்கிரி மலையிலருந்து வர்றிங்களா? //
நான் சாமியெல்லாம் இல்லைங்கொ!!!
பக்கா ஆசாமி :-)
// Anonymous said...
இப்பதான பனி அரம்பித்திருக்கு அதுக்கே இப்டியா ?
//
நம்ம என்ன பார்ன் அண்ட் ப்ராடப் இன் பாஸ்டனா?
முதல் முறையா பார்க்கும் போது ஒரு ஆர்வத்துல எழுதிட்டேன்...
இன்னைக்கு காலைல டெம்ப்ரேச்சர் 20'F :-(
//
போக போக தெரியும், குளிர் பின்னி பெடலெடுதிரும்.
- உண்மை //
ஆஹா இப்பவே பயமுறுத்தறீங்களே...
அடுத்ததா ஒரு அறிமுகத்துக்குதான் வாய்ப்பு தரலாம்னு இருக்கேன். ஆர்குட்ல உங்க போட்டோவ பார்த்தேன். உங்க முகத்தில ஆக்ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சமும் இருக்கு. டபுள் ஹீரோ சப்ஜெக்ட், நீங்களும் நானும் பின்னி பெடலெடுக்க போறோம் படம் முழுக்க. பாஸ்டல ஒரு பாட்டு, பைட்டு வெச்சிக்கலாம் என்ன சொல்றிங்க?

ஹி ஹி ஹி ஒரு சின்ன மிஷ்டேக்கு ஆயிப்போச்சி! பேரைப் போட மறந்திட்டேன். சினிமாலன்னா என் பேரு போடும்போது கிராபிக்ஸ் பட்டய கெளப்பும் இது நமக்கு தெரியாத விசயா இருக்கு.
// Anonymous said...
அடுத்ததா ஒரு அறிமுகத்துக்குதான் வாய்ப்பு தரலாம்னு இருக்கேன். ஆர்குட்ல உங்க போட்டோவ பார்த்தேன். உங்க முகத்தில ஆக்ஷன் ஹீரோவுக்கான எல்லா அம்சமும் இருக்கு. டபுள் ஹீரோ சப்ஜெக்ட், நீங்களும் நானும் பின்னி பெடலெடுக்க போறோம் படம் முழுக்க. பாஸ்டல ஒரு பாட்டு, பைட்டு வெச்சிக்கலாம் என்ன சொல்றிங்க? //
ஆமாஆஆஆம்... ஆர்குட்ல நான் போட்டுருக்க போட்டோல அப்படியா தெரியுது??? சரி... ஃபோட்டோவை தூக்கலாம்னு பார்த்தா... கூட படிச்ச பசங்க யாருக்காவது ஃபிரெண்ட் ரிக்கவுஸ்ட் அனுப்பினா போட்டோ போட்டாத்தான் ஒத்துக்கவன்னு சொல்றானுங்க...
ஹீரோவா?
நான் டைரக்டராகலாம்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன்...
ப்ரொடியுசர் யாரையாவது பிடிங்க... உங்களை ஹீரோவா வெச்சி நான் டைரக்ட் பண்றேன்... படத்துக்கு ஹீரோயினா ஜெனி இல்லை அசின புக் பண்ணிடலாம்... ஒ.கேவா???
// பேரரசு said...
அடுத்ததா ஒரு அறிமுகத்துக்குதான் வாய்ப்பு தரலாம்னு இருக்கேன்.//
அண்ணே நீங்களா???
நான் பாவம்னே...
நான் ஏதோ மக்கள உங்க ரேஞ்சுக்கு கொடுமை பண்ணாம இருக்கேன். என்னய விட்டுடுங்க...
போன கமெண்ட்ல தப்பி, தவறி ஜெனி பேரையும், அஸின் பேரையும் சொல்லிட்டேன்.. இப்ப வாபஸ் வாங்கிக்கறேன்...
//
இன்னைக்கு காலைல டெம்ப்ரேச்சர் 20'F :-(
//
போக போக தெரியும், குளிர் பின்னி பெடலெடுதிரும்.
- உண்மை //
ஆஹா இப்பவே பயமுறுத்தறீங்களே...
//
பயமுறுத்தல, தலைவா, அன்போட சொல்றேன்.
- உண்மை
வாரயிறுதியில் விளையாட்டு என்பதை பழக்கப்படுத்திக்கொள் வெட்டி.
கம்போடு வா...
சிலம்போடு வா...
விளையாடலாம்.
//பயமுறுத்தல, தலைவா, அன்போட சொல்றேன்.
- உண்மை//
உங்கள் அன்புக்கு நான் அடிமை :-)
பாலாஜி
நான் கூட வந்த புதுசில் பனியில் ஒரே ஆட்டம் கட்டினேன். ஆனா அதுக்கப்புறம் போரடிச்சிடுச்சு. ஸ்னோமேன் செஞ்சு (இந்த வயசிலும்) விளையாடினேன்:-))
அப்புறம் காதில் குளிர் காத்து போகாம பாத்துக்குங்க. அது ரொம்ப முக்கியம். ப்ளூ ஷாட் போட்டுக்க மறந்துடாதீங்க
// பயில்வான் பாரதி said...
வாரயிறுதியில் விளையாட்டு என்பதை பழக்கப்படுத்திக்கொள் வெட்டி.
கம்போடு வா...
சிலம்போடு வா...
விளையாடலாம். //
பயில்வான்,
ஏன் இந்த கொலை வெறி???
அந்தப் போட்டோவில் நீங்க மட்டும் ஏனுங்க கஷ்டப்பட்டு பனியைத் தள்ளுறீங்க? :-(
கூட் ஒத்தாசைக்கு "யாரங்கே?" அப்பிடின்னு கூப்பிட யாரும் இல்லீயா? :-)
//ப்ரொடியுசர் யாரையாவது பிடிங்க... உங்களை ஹீரோவா வெச்சி நான் டைரக்ட் பண்றேன்... படத்துக்கு ஹீரோயினா ஜெனி இல்லை அசின புக் பண்ணிடலாம்... ஒ.கேவா???//
வாய்யா வெட்டி!
உன்னமாதிரி ஆளத்தான்யா தேடிகிட்டுர்ந்தேன். என்னையும் வச்சி படமெடுக்கறீயா உனக்கு என்ன விட பெரிய மனசு. ஆனா படத்துக்கு பாட்டெல்லாம் நாந்தான் எழுதுவேன்.
உதாரணத்துக்கு...
வில்லன பாத்து நான் பாடுற பாட்டு.
பாஸ்டன்லாதாண்டா உனக்கு பாடை
என் முன்னாடி நிக்காதடா பீடை
முனியாண்டில கிடைக்கும் காடை
இப்படின்னு வில்லன வறுத்தெடுக்கறோம்
என்ன சொல்றிங்க டைரக்டர் வெடி வெட்டி.
எங்க ஊர்ல பனி இல்ல. ஆனா பனி பாக்கறதுக்காகவே எங்க அண்ணன் ஊருக்கு போனேன்.. அதுல photo எடுக்கறது நம்ம ஆளுங்க எல்லாரும் பண்றது இல்ல?
//எப்படித்தான் சினிமால எல்லாம் ஹீரோயின்ஸ் இந்த மாதிரி பனில குட்டி பாவடை போட்டுட்டு ஆடறாங்கனே தெரியலை. //
ஆமா, எனக்கும் அது ஆச்சர்யமா தான் இருக்கும்.
//வெயிலின் அருமை பனியில் தெரியும் //
சரியா சொன்னிங்க. சென்னை மாதிரி வருமா?
//ஏன் இந்த கொலை வெறி???
//
அது ஏன்யா எப்ப பார்தாலும் இந்த வாக்கியத்த விடமாட்டிர் போல இருக்கு.
இங்க ஒரு தலைவர் "Way Forward"டை புடிசிக்கிடு விடமாடிங்கிறர். அதை பார்த்து வெள்ளகார துரையும் அதையே சொல்லுகிறர் (www.cnn.com).
-உண்மை
//செல்வன் said...
பாலாஜி
நான் கூட வந்த புதுசில் பனியில் ஒரே ஆட்டம் கட்டினேன். ஆனா அதுக்கப்புறம் போரடிச்சிடுச்சு. ஸ்னோமேன் செஞ்சு (இந்த வயசிலும்) விளையாடினேன்:-))
//
தலைவா......
வந்துட்டீங்களா... கலக்கல்
நான் இன்னும் ஆரம்பிக்கலை. இன்னும் அதிகமா ஸ்னோ ஃபால் ஆரம்பிக்கல...
// அப்புறம் காதில் குளிர் காத்து போகாம பாத்துக்குங்க. அது ரொம்ப முக்கியம். ப்ளூ ஷாட் போட்டுக்க மறந்துடாதீங்க //
மிக்க நன்றி...
ஃப்ளூ ஷாட்டை பத்தி விசாரிச்சேன். ஜனவரில பொட்டுக்கலாம்னு சொல்றாங்க... சரி நமக்கு எந்த குளிரும் தாங்கும்னு விட்டுடுவோம் ;)
haha superaa sonneenga :)
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அந்தப் போட்டோவில் நீங்க மட்டும் ஏனுங்க கஷ்டப்பட்டு பனியைத் தள்ளுறீங்க? :-(
கூட் ஒத்தாசைக்கு "யாரங்கே?" அப்பிடின்னு கூப்பிட யாரும் இல்லீயா? :-) //
அது நான் இல்லைங்கோ...
என் ஃபோட்டோ இன்னும் கேமிராலே தூங்கிட்டு இருக்கு :-)
////ப்ரொடியுசர் யாரையாவது பிடிங்க... உங்களை ஹீரோவா வெச்சி நான் டைரக்ட் பண்றேன்... படத்துக்கு ஹீரோயினா ஜெனி இல்லை அசின புக் பண்ணிடலாம்... ஒ.கேவா???//
வாய்யா வெட்டி!
//
கன்பார்முடு... ஏம்பா துபாய்ல உனக்கு வேற வேலை இல்லையா? ஏம் இந்த ஆனானி ஆட்டம்???
//உன்னமாதிரி ஆளத்தான்யா தேடிகிட்டுர்ந்தேன். என்னையும் வச்சி படமெடுக்கறீயா உனக்கு என்ன விட பெரிய மனசு. ஆனா படத்துக்கு பாட்டெல்லாம் நாந்தான் எழுதுவேன்.
//
ப்ரோடியசர் கிடைச்சா யாரு வெச்சி வேணா படம் எடுக்க நான் ரெடி ;)
//உதாரணத்துக்கு...
வில்லன பாத்து நான் பாடுற பாட்டு.
பாஸ்டன்லாதாண்டா உனக்கு பாடை
என் முன்னாடி நிக்காதடா பீடை
முனியாண்டில கிடைக்கும் காடை
இப்படின்னு வில்லன வறுத்தெடுக்கறோம்
என்ன சொல்றிங்க டைரக்டர் வெடி வெட்டி.//
படத்துல பாட்டே இல்லை :-)
நீ ஏற்கனவே புலவர்னு நாந்தான் ஒத்துக்கிட்டேன் இல்லை :-)
/Priya said...
எங்க ஊர்ல பனி இல்ல. ஆனா பனி பாக்கறதுக்காகவே எங்க அண்ணன் ஊருக்கு போனேன்.. அதுல photo எடுக்கறது நம்ம ஆளுங்க எல்லாரும் பண்றது இல்ல?
//
அதுதாங்க நல்லது. நம்ம ஊர்ல பனி பெய்யறதைவிட அந்த மாதிரி ஒரு ஓருக்கு போயி ரெண்டு நாள் தங்கி ஒரு 200- 300 ஸ்னாப் அடிச்சிட்டு வந்துடனும் :-)
ஆமாங்க. எங்க போனாலும் கழுத்துல கேமராவ மாட்டிக்கிட்டு போட்டோ எடுக்கறதுலெ நம்ம ஆளுங்களை அடிச்சிக்கவே முடியாது.
//
//வெயிலின் அருமை பனியில் தெரியும் //
சரியா சொன்னிங்க. சென்னை மாதிரி வருமா? //
//
நமக்கு கோவைங்கோ :-)
//அது ஏன்யா எப்ப பார்தாலும் இந்த வாக்கியத்த விடமாட்டிர் போல இருக்கு.
இங்க ஒரு தலைவர் "Way Forward"டை புடிசிக்கிடு விடமாடிங்கிறர். அதை பார்த்து வெள்ளகார துரையும் அதையே சொல்லுகிறர் (www.cnn.com).
-உண்மை//
இது நம்ம அனானி நண்பர்கள் பின்னூட்டத்த படிச்ச எஃபக்ட்தாங்க...
பொறுமையா வீட்ல போயி படிச்சி பாக்கறேன் ;)
//வெயிலின் அருமை பனியில் தெரியும் //
உண்மையான வார்த்தைகள் வெட்டிபயலே
I too felt the same thing
//Kittu said...
haha superaa sonneenga :) //
ரொம்ப டாங்ஸ்ங்கோ ;)
/* ஏன்யா? பனி பெஞ்சா 'பனி பொழிந்தது'ன்னு மட்டும் எழுதுங்க. அது என்ன எங்க தலீவர சீண்டுறீங்க. உமக்கு போடுறதுக்கு போஸ்டு கெடக்கலீனா, எங்கத் தலீவரத்தான் வாருவீரா?
பனி அடிச்சுப் பொழச்சவன் இருக்கான்.
ஆனா,
எங்க கேப்டன் நடிச்சுப்... ஸாரி! அடிச்சுப் பொழச்சவன் எவனுமே இல்ல. */
Repeattuu :)
-- Vicky
(பி.கு)பாலாஜி, எங்க இருந்தாவது codeஆ சுட்டுட்டு கீழே ஒரு வார்த்தையிலே comment சேர்க்கிற developers ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல ;)
பாலாஜி, இங்க (Chicago) இப்பெல்லாம் Temperature தினமும் சிங்கிள் டிஜிட்ல தான்.
நான் கார்ல போயிட்டு இருக்கும் போது தான் முதல் தறம் பனி மழை பார்த்தேன். சூப்பரா இருந்துச்சு. ஆனா கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை!!
-விநய்
விக்கி,
அப்ப உங்களுக்கும் ரிப்பீட்டே!!!
என்னங்க பண்ண பனிய பார்த்தா காஷ்மீரும் கேப்டனும்தான் ஞாபகத்துக்கு வராங்க ;)
நாங்களும் உறுப்பினர் அட்டை வெச்சிருக்கோமில்லை ;)
// Anonymous said...
பாலாஜி, இங்க (Chicago) இப்பெல்லாம் Temperature தினமும் சிங்கிள் டிஜிட்ல தான்.
நான் கார்ல போயிட்டு இருக்கும் போது தான் முதல் தறம் பனி மழை பார்த்தேன். சூப்பரா இருந்துச்சு. ஆனா கொஞ்ச நேரம் ஒன்னும் புரியலை!!
-விநய் //
ஆஹா...
நல்ல வேளை சிக்காகோ வரலை...
சம்மர்ல வரலாம்னு ஒரு ப்ளான் :-)
இங்கயும் பட்டைய கிளப்பும்னு சொன்னாங்க :-(
என்னத்த பனி பெஞ்சு. இதேது போன வருசம் ஹாலோவீனுக்கே வந்து பட்டயக் கெளப்பிச்சு. நேத்து நைட்டு/இன்னிக்குக் காலைல இங்கிட்டுப் பெஞ்சதெல்லாம் பூனை மூத்திரம் மாதிரி! காலைல ஆபிஸ்க்கு வரும்போதே சூரியன் ஈன்னு இளிக்கிறாரு. இந்நேரம் எல்லாம் தண்ணியாயிருக்கும்.
பாக்கலாம். வாரக் கடைசில மறுபடியும் இருக்குன்றாங்க. பூஜ்யத்துக்குக் கீழயும் போவும் (பாரன்ஹீட்லயே)ங்கறாங்க.
இயற்கையன்னையே. என்னமோ பாத்து செய்ங்க.
சரி சரி, வரதுன்னா ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிடு..
அ.இ.வெ.ப.ச.சி.கி. சார்புல தமிழ்ல போஸ்டர் அடிச்சு, கட்டவுட் எல்லாம் வச்சு ஏர்போர்டையே கலக்கிடுவோம்ல :-p
-விநய்
பி.கு.- கொஞ்ச நாள் முன்னாடி Flightல ஒருத்தர் தமிழ்ல பேசுனதுக்கே, செக்யூரிட்டீஸ் தனியா கூட்டிட்டு போய் அவருக்கு ராஜ மரியாதை கொடுத்தாங்களாம். உன் படம் போட்ட போஸ்டருக்கு என்ன பண்ணுவாங்கனு தெரியலை... ;)
அட... இன்னைக்கு நம்ம கடைலயும் இதப்பத்தி தான் பதிவு. "புது வெள்ளை மழை"யா... பனியப் பாத்தா எல்லாருக்கும் இந்த பாட்டுத்தானா?
கேப்டன் எல்லாம் இழுத்து கலக்கிருக்கீங்க... நான்கூட heroine's பத்தி தான் நினச்சேன். அவங்களுக்குத் தான் என்ன ஒரு கலை தாகம் :)
//வெயிலின் அருமை பனியில் தெரியும் //
ஒரு வாசகம் சொன்னாலும்... :)
// அதுவும் குட்டை பாவடை போட்டு அந்த குளிர்ல ஆடனும். படத்துல பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அவுங்களை நினைச்சா இப்ப பாவமா இருக்கு... //
ச்சு... ச்சு... என்ன கரிசனமய்யா உமக்கு???
photo எடுத்து போட்டுட்டா மட்டும் நம்பிருவமாக்கும்??? இதெல்லாம் ரொம்ப ஒவரா தெரியல்லையா??
"வெயிலின் அருமை பனியில் தெரியும்" sonna odana enaku oru nyabagam varudhu...
'Veyil' padam review eludhuveeraa?
//சுந்தர் said...
என்னத்த பனி பெஞ்சு. இதேது போன வருசம் ஹாலோவீனுக்கே வந்து பட்டயக் கெளப்பிச்சு. நேத்து நைட்டு/இன்னிக்குக் காலைல இங்கிட்டுப் பெஞ்சதெல்லாம் பூனை மூத்திரம் மாதிரி! காலைல ஆபிஸ்க்கு வரும்போதே சூரியன் ஈன்னு இளிக்கிறாரு. இந்நேரம் எல்லாம் தண்ணியாயிருக்கும்.
//
நான் இப்ப தானே முதல் முறை பாக்கறேன்.. அந்த எஃபக்ட் தான்...
இங்க இருக்கவங்களும் அதே தான் சொன்னாங்க. இந்த வருஷம் கொஞ்சம் லேட்.
//
பாக்கலாம். வாரக் கடைசில மறுபடியும் இருக்குன்றாங்க. பூஜ்யத்துக்குக் கீழயும் போவும் (பாரன்ஹீட்லயே)ங்கறாங்க.
இயற்கையன்னையே. என்னமோ பாத்து செய்ங்க.
//
இந்த வாரக்கடைசில 60F இருக்கும்னு கேள்விப்பட்டேனே... பாக்கலாம்...
//Anonymous said...
சரி சரி, வரதுன்னா ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லிடு..
அ.இ.வெ.ப.ச.சி.கி. சார்புல தமிழ்ல போஸ்டர் அடிச்சு, கட்டவுட் எல்லாம் வச்சு ஏர்போர்டையே கலக்கிடுவோம்ல :-p
-விநய்
//
கட்டவுட் எல்லாம் வேணாம்... நல்ல சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் ;)
//
பி.கு.- கொஞ்ச நாள் முன்னாடி Flightல ஒருத்தர் தமிழ்ல பேசுனதுக்கே, செக்யூரிட்டீஸ் தனியா கூட்டிட்டு போய் அவருக்கு ராஜ மரியாதை கொடுத்தாங்களாம். உன் படம் போட்ட போஸ்டருக்கு என்ன பண்ணுவாங்கனு தெரியலை... ;)
//
அடப்பாவி... அடப்பாவி...
//Arunkumar said...
அட... இன்னைக்கு நம்ம கடைலயும் இதப்பத்தி தான் பதிவு. "புது வெள்ளை மழை"யா... பனியப் பாத்தா எல்லாருக்கும் இந்த பாட்டுத்தானா?
//
பனிய பார்த்தா அந்த பாட்டுத்தானே :-)
//
கேப்டன் எல்லாம் இழுத்து கலக்கிருக்கீங்க... நான்கூட heroine's பத்தி தான் நினச்சேன். அவங்களுக்குத் தான் என்ன ஒரு கலை தாகம் :)
//
காஷ்மீர் போயி தனியா தீவிரவாதிகளை பிடிக்கறது அவர்தானே... அதனால் தான் :-)
//
//வெயிலின் அருமை பனியில் தெரியும் //
ஒரு வாசகம் சொன்னாலும்... :)
//
:-))
//ச்சு... ச்சு... என்ன கரிசனமய்யா உமக்கு??? //
எல்லாம் அனுபவிச்சதுக்கப்பறம் வர கரிசனம்... ஐ மீன் குளிரை சொன்னேன் ;)
//ஆதவன் said...
photo எடுத்து போட்டுட்டா மட்டும் நம்பிருவமாக்கும்??? இதெல்லாம் ரொம்ப ஒவரா தெரியல்லையா??
//
இதுக்கு மேலையும் நம்பலைனா...
வீடியோ எடுத்து போடுவோம் ;)
//bomMAI said...
"வெயிலின் அருமை பனியில் தெரியும்" sonna odana enaku oru nyabagam varudhu...
'Veyil' padam review eludhuveeraa?
//
இன்னும் பாக்கலைங்களே!!!
இந்த ஊர்ல போட்டா கண்டிப்பா போய் பார்க்கனும்...
டிவிடி வர நாள் ஆகுங்க :-(
படத்தில் உழைப்பவருக்கு வெட்டி வெட்டிப் பனி எடுப்பவர் வெட்டிப்பயல் இல்லையா.
எங்க ஊரில அப்போ வந்த பனியே இன்னும் போல.
அக்கம்பக்கம் வீட்டில இப்போதானே.... பாட்டு.
டிசம்பர்22ண்ட் சூப்பரா இருக்குமாம்.
ஆஹா என் அருமை மெட்ராஸே.:-((
என்கிட்ட ஒரு 30 தெலுகுப்பட லிஸ்ட் இருக்கு. என்னால உக்காந்து பாக்க முடியல. நீங்க பாத்து விமர்சனம் எழுதினிங்கன்னா படிச்சிட்டு போவேன். புண்ணியமா போவும் உங்களுக்கு. என்னா சொல்றிங்க வெட்டிப்பயலே?
யோவ் வெட்டி அவனவன் இங்கே ஸ்னோவை எடுக்க படாதபாடு (காலங்கார்த்தால ட்ரைவ்வேல இருந்து ) பட்டுக் கொண்டு இருக்கிறேன் நீங்க என்னடான்னா கடுப்பேத்திரிங்களே...
//வல்லிசிம்ஹன் said...
படத்தில் உழைப்பவருக்கு வெட்டி வெட்டிப் பனி எடுப்பவர் வெட்டிப்பயல் இல்லையா.
//
வெட்டி உழைப்பவரெல்லாம் வெட்டிப்பயலாக முடியாது ;)
// எங்க ஊரில அப்போ வந்த பனியே இன்னும் போல.
அக்கம்பக்கம் வீட்டில இப்போதானே.... பாட்டு.
//
இங்க பனி வந்து மறைஞ்சிப்போச்சு :-)
இனிமே எப்ப வரும்னு தெரியல :-(
//
டிசம்பர்22ண்ட் சூப்பரா இருக்குமாம்.
//
25 தானே???
// ஆஹா என் அருமை மெட்ராஸே.:-((//
சேம் ப்ளட் :-(
//தெலுகு தெரியாதவன் said...
என்கிட்ட ஒரு 30 தெலுகுப்பட லிஸ்ட் இருக்கு. என்னால உக்காந்து பாக்க முடியல. நீங்க பாத்து விமர்சனம் எழுதினிங்கன்னா படிச்சிட்டு போவேன். புண்ணியமா போவும் உங்களுக்கு. என்னா சொல்றிங்க வெட்டிப்பயலே?//
ஒண்ணும் பிரச்சனையில்லை.... DVD அனுப்பி வைங்க. பார்த்துட்டு எதுவெல்லாம் விமர்சனம் எழுதற அளவுக்கு இருக்கோ அதுக்கெல்லாம் எழுதறேன்...
ஆனா படத்துல ஹீரோயினை பொருத்துத்தான் பார்க்கலாமா வேண்டாமானு டிசைட் பண்ணுவேன் :-)
//சுப்பு said...
யோவ் வெட்டி அவனவன் இங்கே ஸ்னோவை எடுக்க படாதபாடு (காலங்கார்த்தால ட்ரைவ்வேல இருந்து ) பட்டுக் கொண்டு இருக்கிறேன் நீங்க என்னடான்னா கடுப்பேத்திரிங்களே...//
அண்ணே,
நான் ஊருக்கு புதுசு... இன்னும் கஷ்டம் தெரியல.. போக போக தெரியும்னு நினைக்கிறேன் :-)
எப்படியோ பனி பொழிஞ்சதை பார்த்திட்டீங்க. வாங்க வந்து எங்க ஜோதியில கலந்திடுங்க. எங்க டிரைவ்வேய (டிரைவ்வே மட்டுமல்ல வாக்வேயும் சேர்த்து) க்ளீன் பண்ண வருசா வருசம் நாங்க படுறபாடு எங்களுக்குத்தான் தெரியும்!
போனதடவை போட்டுத் தாக்கிச்சுன்னு சொன்னேன். அதப் பத்தி போன வருஷம் போட்ருந்த பதிவு இது.
http://raajapaarvai.blogspot.com/2006/02/blog-post_16.html
இடம் : Natick! :)
//சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.//
ஆகா, நெனப்ஸ் தான். இருங்க.. உங்களுக்கு ஜனவரி பிப்ரவரியில் இருக்கு கச்சேரி :-D நான் அமெரிக்கா வந்த புதிசில் அந்த ஜனவரி blizzard. நான் இருந்த ஊரில் 30" ஸ்னோ. 2 நாளைக்கு ஊரையே இழுத்து மூடிட்டாங்க. பாஸ்டன் பக்கம் தானே இருக்கீங்க.. அங்கேயெல்லாம் வாய்ப்பேயில்லை, ஒன்றரை அடி ஸ்னோலயும் ஆபீசை மூடமாட்டாங்க.
//ஆதிபகவன் said...
எப்படியோ பனி பொழிஞ்சதை பார்த்திட்டீங்க. வாங்க வந்து எங்க ஜோதியில கலந்திடுங்க. எங்க டிரைவ்வேய (டிரைவ்வே மட்டுமல்ல வாக்வேயும் சேர்த்து) க்ளீன் பண்ண வருசா வருசம் நாங்க படுறபாடு எங்களுக்குத்தான் தெரியும்! //
நான் பதிவ போட்ட நேரம் இங்க பனியே இல்லாம போயிடுச்சி.. பார்க்கலாம் என்ன நடக்க போகுதுனு :-)
//சுந்தர் said...
போனதடவை போட்டுத் தாக்கிச்சுன்னு சொன்னேன். அதப் பத்தி போன வருஷம் போட்ருந்த பதிவு இது.
http://raajapaarvai.blogspot.com/2006/02/blog-post_16.html
இடம் : Natick! :) //
இப்ப புரியுது நீங்க எல்லாம் இந்த பதிவ பார்த்து ஏன் இப்படி ஃபீல் பண்ணீங்கனு :-)
//சேதுக்கரசி said...
//சும்மா லைட்டா நம்ம தெர்மாகோல் மாதிரி இருக்குங்க.//
ஆகா, நெனப்ஸ் தான். இருங்க.. உங்களுக்கு ஜனவரி பிப்ரவரியில் இருக்கு கச்சேரி :-D நான் அமெரிக்கா வந்த புதிசில் அந்த ஜனவரி blizzard. நான் இருந்த ஊரில் 30" ஸ்னோ. 2 நாளைக்கு ஊரையே இழுத்து மூடிட்டாங்க. பாஸ்டன் பக்கம் தானே இருக்கீங்க.. அங்கேயெல்லாம் வாய்ப்பேயில்லை, ஒன்றரை அடி ஸ்னோலயும் ஆபீசை மூடமாட்டாங்க. //
ஆஹா... இப்படி பீதிய கிளப்பறீங்களே!!!
இன்னும் இங்க பனியையே காணோம் :-)
என்ன பாலாஜி.. நேத்து பட்டையைக் கிளப்பிடுச்சுன்னு நினைச்சீங்களா? அதுதான் இல்லை... a lot of times it's even worse :-)
Post a Comment