தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, February 26, 2009

எதிர்பார்ப்பு!

பெங்களூர்வாசிகளை இன்னும் என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை. காலையில் எப்படி கேசரியையும், உப்புமாவையும் ஒரே சமயத்தில் சாப்பிடுகிறார்கள் என இன்று வரை புரியவில்லை. பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று ஏமாந்து நானும் ஒரு முறை சவ் சவ் பாத் வாங்கியிருக்கிறேன். அதிலிருந்து இந்த மாதிரி பெயருக்காக வாங்குவதை நிறுத்திவிட்டேன். இன்றும் எனக்கு முன்னால் டோக்கன் வாங்கியவன் ஏமாந்து வாங்கினானா என்று தெரியவில்லை. சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். ஆனால் வழக்கம் போல வாய் வரை வந்த வார்த்தை நின்றுவிட்டது.

இந்த ரெசஷன் சமயத்தில் அவசரப்பட்டு மேனஜரிடம் சண்டை போட்டு கம்பெனி மாறியது தவறு என்று மனதிற்குள் உறுத்தி கொண்டிருக்கிறது. பெரும்பாலும் கம்பெனி மாறுபவர்கள் காசுக்காகவோ, பதவி உயர்விற்காகவோ மட்டும் மாறுவதில்லை. அவர்கள் மேனஜரிடம் அவர்களுக்கு ஏற்படும் மனக்கசப்பு தான் முக்கியமான காரணமாக இருக்கும். நான் இந்த கம்பெனிக்கு வந்து சரியாக இன்றோடு பத்து நாள் ஆகிறது. இன்னும் பிராஜெக்டில் போடவில்லை. பிராஜெக்டில் இருந்தால் யாராவது நண்பர்களாவது கிடைத்திருப்பார்கள். இப்பொழுது தனியாகவே சாப்பிட வருகிறேன். புது நிறுவனத்தில் சேருவதற்கும் புது பள்ளியில் சேர்வதற்கும் பெரிதாக வித்தியாசமில்லை. உடனே நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள். 

தோசை வாங்கிவிட்டு சட்னி சாம்பார் வைத்திருக்கும் இடத்திற்கு சென்றேன். அங்கு தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்தது. விபத்து என்ற பிறகு எதிர்பாராததாகத்தானே இருக்க முடியும். அருகிலிருக்கும் தோழியுடன் பேசிக்கொண்டே அந்த பெண் வேகமாக திரும்ப அவள் கையில் வைத்திருந்த தட்டு என் மேல் பட்டு அதிலிருந்த சாம்பார் எல்லாம் என் மேல் கொட்டியது. 

சரியாக இன்று பார்த்து கருப்பு கலர் பேண்ட் போட்டு வந்திருந்தேன். அதில் மஞ்சள் நிற சாம்பார் அழகாக நிறத்தை பிரித்து காட்டியது. அந்த பெண் முகம் பயத்திலும், குற்றவுணர்ச்சியிலும் சிவந்தது. அங்கே இருந்த அனைவரது கண்களும் எங்கள் மேல் விழுந்தது.

நான் உடனடியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து நேராக கை அலம்பும் இடத்திற்கு சென்று முடிந்த வரை சாம்பாரை பேண்டிலிருந்து துடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பெண் குரல் கேட்டது.

“I am terribly sorry. Can you please wait here for 2-3 mins? I will be back soon” சொல்லிவிட்டு வேகமாக சென்றாள். அவளுடன் அவள் தோழியும் வேகமாக சென்றாள். கடைசியாக ஒரு முறை என்னை திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.

பொறுமையாக சட்டை, பேண்டை கைக்குட்டையை வைத்து தண்ணியால் துடைத்து முடித்திருந்தேன். சாம்பார் கறை ஒட்டி கொண்டிருந்தது. தண்ணிர் பட்டு கருப்பு நிறம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தது. ஐந்து நிமிடத்தில் வேகமாக நடையும், ஓட்டமுமாக வந்து கொண்டிருந்தாள். கையில் ஒரு ப்ளாஸ்டிக் பை. அதிலிருந்த வட்டத்தை துளைத்திருந்த கோடு அது Indigo Nation பை என்று காட்டி கொடுத்தது. 

"I am very very sorry. Please take this" சொல்லிவிட்டு அந்த பையை நீட்டினாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் அந்த பையை அவள் கையிலிருந்து வாங்கினேன். உடனே வேகமாக சென்றுவிட்டாள். சரியாக அவளுடையை ஐடி கார்டில் அவள் பெயரை பார்த்துவிட்டேன். மீனாட்சி கோவிந்தராஜன். தமிழ் பெண் தான் என்பது தெளிவாக அவள் முகத்திலும் அவள் பேசிய ஆங்கிலத்திலும் தெரிந்தாலும், அவள் பெயரை வைத்து உறுதிபடுத்தி கொண்டேன்.

முதல் வேலையாக பாத் ரூம் சென்று அவள் வாங்கி வந்த துணியை எடுத்து பார்த்தேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது. பேண்ட் சர்ட் நிறமும் நன்றாக இருந்தது. அடர் பச்சை நிறத்தில் சட்டையும், க்ரீம் கலர் பேண்டும் இருந்தது. க்ரீம் கலரீல் இது மூணாவது பேண்ட். நல்ல வேளை அந்த நிறத்தில் சட்டையில்லை. முதல் வேலையாக அவளுடைய எக்ஸ்டென்ஷன் நம்பரை கம்பெனி சைட்டில் தேடினேன். எங்கள் நிறுவனத்தில் ஒரே மீனாட்சி கோவிந்தராஜன் அவள் தான். அதனால் எளிதாக அவள் எண் கிடைத்தது. ஆனால் அவளை அழைக்கலாமா வேண்டாமா என்ற ஒரு தயக்கம் இருந்தது. 

மதியம் சாப்பிடுமிடத்தில் அவளை என் கண்கள் தேடியது. இவ்வளவு கூட்டத்தில் அவளை சந்திப்பது சாத்தியமில்லை என்று தோன்றியது. ஒரு வேளை தமிழ் சினிமாவாக இருந்தால் இது சாத்தியப்படலாம். அடுத்த நாள் காலையிலும் அதே நேரத்திற்கு வந்து தேடி பார்த்தேன். ஒரு ஐந்து நிமிடம் சாம்பார் வைக்குமிடத்தில் காத்திருந்தும் அவளை காண முடியவில்லை. மதியமும் அப்படியே ஓடியது.

சாயந்திரம் 4 மணி வாக்கில் அவளுக்கு நானே அழைத்தேன்.

“ஹலோ மீனாட்சி ஹியர்”

“ஹலோ. நான் கிருஷ்ணா பேசறேன். நேத்து காலைல சாம்பார் கொட்டினீங்களே. அவர் தான்”

ஒரு சில நோடிகள் தயக்கத்திற்கு பின் பேச்சு வந்தது.

“ஐ அம் சாரி. தெரியாம பண்ணிட்டேன். அங்க நிக்கறதுக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. அதான் வேகமா பையை கொடுத்துட்டு வந்துட்டேன்”

“நீங்க கொஞ்சம் ஃபிரியா இருந்தா ஃபுட் கோர்ட்டுக்கு வர முடியுமா?”

எதுவும் பதில் வரவில்லை.

“கவலைப்படாதீங்க. ஆள் எல்லாம் வெச்சி தூக்க சொல்ல மாட்டேன்”

“ஐயோ அதெல்லாம் இல்லை. இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. ஒரு அரை மணி நேரமாகும்”

“பரவாயில்லை. அரை மணி நேரத்துல வாங்க போதும்” சொல்லிவிட்டு வைத்து விட்டேன். சரியாக இருபத்தி ஐந்தாவது நிமிடத்தில் அங்கு இருந்தேன். அவள் எனக்கு முன்பே வந்துவிட்டாள் போலிருக்கிறது. அவளுடன் அவள் தோழியும் இருந்தாள். டீ வாங்கி கொண்டு அவர்கள் இருக்குமிடத்திற்கு சென்றேன். 

மெலிதாக புன்னகைத்தவாரே பேச ஆரம்பித்தாள்.

“தெரியாம பண்ணிட்டேன். சாரிங்க”

“சாமி. எத்தனை தடவை தான் இதையே சொல்வீங்க. நீங்க இத்தனை தடவை சொல்றதை பார்த்தா உங்க ஃபிரெண்ட்கிட்ட பெட் கட்டிட்டு கொட்டின மாதிரி இருக்கு”

“ஐயய்யோ. அப்படியெல்லாம் எதுவுமில்லை” இருவரும் ஒரே நேரத்தில் சொன்னார்கள்.

“சும்மா சொன்னேங்க. நீங்க கொட்டினது தெரியாம நடந்ததுனாலும், உடனே அதுக்கு பொறுப்பேத்து எனக்கு புது துணியை வாங்கிட்டு வந்து கொடுத்த பண்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு நன்றி சொல்லிட்டு, அந்த துணிக்கு காசு கொடுத்துட்டு போகலாம்னு தான் கூப்பிட்டேன்” பையிலிருந்து ஆயிரத்தி அறுநூறு ரூபாயை எடுத்தேன்.

“வேண்டாங்க. அதெல்லாம் எதுக்கு. நான் செஞ்ச தப்புக்கு தான் அதை வாங்கி கொடுத்தேன்”

“சாம்பார் தானங்க கொட்டினீங்க. என்னுமோ ஆசிடா கொட்டினீங்க. அந்த பேண்டை துவைச்சா அந்த கறை போயிட போகுது. துணியே வீணா போகுற மாதிரி ஏதாவது பண்ணிருந்தா நீங்க சொல்றது சரி. நான் அதை மறுபடியும் பயன்படுத்த தானே போறேன். அதனால உங்களுக்கு குற்றவுணர்ச்சி வேண்டாம். வாங்கிக்கோங்க”

தயங்கியவாரே என் கையிலிருந்த காசை வாங்கி கொண்டாள். 

”சரிங்க நான் வரேன்” சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன்.

இரண்டு நாட்கள் சென்ற நிலையில் திடீரென்று ஒரு பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள சொல்லி மேனஜரிடமிருந்து மின்மடல் வந்திருந்தது. அதை முடித்துவிட்டு 7:15 பேருந்தில் கிளம்பினேன். ஜன்னலருகில் அமர்ந்திருந்தேன். திடீரென்று என்னை கடந்து சென்ற ஒரு உருவம், மீண்டும் முன்னால் வந்து என் அருகில் அமர்ந்தது. அது நீங்கள் எதிர்பார்த்தது போல் மீனாட்சி தான். தேடிய பொழுது எல்லாம் கண்ணில் படாமல், நினைக்காத பொழுது வந்து என் அருகில் அமர்கிறாள். இதை தான் விதி என்பார்கள்.

விதி பேச ஆரம்பித்தது.

“எப்படி இருக்கீங்க?”

“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள். குழந்தைகளும், பெண்களும் சிரிக்கும் போது நம் பார்வையை அதிலிருந்து விலக்குவது அரிது என்று தோன்றியது.

பிறகு ஒரு மணி நேரம் எங்களுடைய வரலாற்றை பேசிக்கொண்டு சென்றோம். முதன் முதலாக பெங்களூர் டிராஃபிக் ஜாமிற்கு நன்றி சென்னேன். எனக்கு அடுத்த நிறுத்தத்தில்தான் அவள் தன் தோழியுடன் PGயில் தங்கியிருக்கிறாள். அவள் தினமும் காலை அவள் 7:55 பேருந்தில் வருவதாக சொன்னாள். நான் வேலை இல்லாததால் 9 மணிக்கு வந்து கொண்டிருந்தேன். என்னால் 7:55க்கு வர முடியுமா என்று கேட்டாள். பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். 

சரியாக அலாரம் 7 மணிக்கு அடிக்க, 7:45க்கு பேருந்து நிலையத்திலிருந்தேன். 8 மணி பேருந்தில் ஏறினேன். இரண்டு பேர் இருக்கையில் மீனாவும் அவள் தோழியும் அமர்ந்திருந்தனர். நேத்து பேசியதில் மீனாட்சி ”மீனா”வாகியிருந்தாள். என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பின்னாலிருந்த இரண்டு பேர் இருக்கையில் ஜன்னலோரத்தில் அமர்ந்தேன். தோழியின் காதில் ஏதோ பேசி கொண்டிருந்தவள் எழுந்து மூன்று பேர் இருக்கையை நோக்கி சென்றாள். ஜன்னலருகில் அவள் தோழியை அமர செய்து, அவளருகில் மீனா உட்கார்ந்தாள். பக்கத்து இருக்கையை காட்டி அங்கே என்னை அமர சொன்னாள். சில நொடிகள் தயங்கிவிட்டு நான் அங்கே சென்று அமர்ந்தேன்.

“நேத்து ஏதோ பாக்கலாம்னு சொன்னீங்க. இன்னைக்கு சரியா 8 மணிக்கு வந்துட்டீங்க?” அவள் கேள்வியில் நக்கல் இருந்தது.

“8 மணிக்கு பாக்கலாம்னு சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல” சொல்லிவிட்டு அதே சிரிப்பை பதிலுக்கு நானும் கொடுத்தேன்.

”இப்படியே பேசிட்டு இருந்தீங்கனா இன்னைக்கு காப்பி அபிஷேகம் தான்”

“அது பிரச்சனையில்லை. இந்த தடவை ஆயிரத்தி அறுநூறு ரூபாய் காந்தி கணக்கு தான்”

“ஹான்ன்ன்... போன தடவை மாதிரி ஓடி போய் வாங்கிட்டு வருவேனு நினைச்சீங்களா? இந்த தடவை ஒரு கர்ச்சிப் கொடுத்துட்டு தொடைச்சிக்கோங்கனு சொல்லிட்டு போயிட்டே இருந்துடுவேன்”

“இதை ஒரு ஹாபியாவே வெச்சிருக்க போல. குட் கேர்ள்”

மறுபடியும் சத்தம் போட்டு சிரித்தாள்.

மூன்று பேரும் சேர்ந்து சாப்பிட்டோம். சாம்பார் எடுக்கும் போது நான் கொஞ்சம் நகர்வதை போல பாவனை பண்ண, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டது வேறு யாருக்கும் புரிந்திருக்காது. அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சுத்தி கொண்டிருந்தோம். சில நேரங்களில் மதியம் மூன்று, நான்கு மணிக்கு ஜூஸ் குடிக்க எனக்கு ஃபோன் செய்வாள். அது தவிர, டேக்ஸ் ரிட்டர்ன் பண்ண, ஏதாவது கொரியர் அனுப்ப\வாங்க செல்லும் போழுது ஃபோன் செய்து வர சொல்வாள். சில சமயம் நான் ஏதாவது வேலை பார்த்து கொண்டிக்கும் போது கூப்பிடுவாள். 

வேலை இருக்கு என்று சொன்னால், “ஐயோ இருக்கறது பெஞ்ச். இதுல இவர் வேலை பார்த்து கிழிக்கறாராம். இந்த பெஞ்சை தொடைக்கற வேலையை அரை மணி நேரம் கழிச்சி செஞ்சா தப்பில்லை. இப்ப ஒழுங்கு மரியாதையா வா” என்று மரியாதையோடு சொல்வாள். வேறு வழியில்லாமல் நானும் அவளுடன் செல்வேன்.

இரண்டு மாதம் பெஞ்சில் இருந்ததில் எனக்கு எந்த வருத்தமுமில்லாமல் பார்த்து கொண்டாள். ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் நேரில் பேசி கொண்டது போக, மூன்று நான்கு மணி நேரம் அலைபேசியில் பேசி கொண்டோம். 

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தது. வழக்கம் ஒரு நாள் ஃபோன் செய்து என்னை காபி டேக்கு வர சொன்னாள். என்னவென்று புரியாமல் நானும் சென்றேன். பார்த்தால் அங்கே ஒரு பெரிய பட்டாளமே நின்று கொண்டிருந்தது. அன்று அவள் பிறந்த நாள். அது எனக்கு தெரியாமல் போய்விட்டது. எவ்வளவோ பேசினேன். பிறந்த நாளை கேட்டு ஞாபகப்படுத்தி கொள்ள தவற விட்டுவிட்டேன். 

”நீ இல்லாம செலிபிரேட் பண்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. அதான் ஃபோன் பண்ணேன். நாளைக்கு சொல்லலாம்னு தான் பார்த்தேன். ஆனா நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ. பாவம்னு தான் கூப்பிட்டுட்டேன்”

என்ன சொல்வதென்று புரியாமல் மெலிதாக சிரித்தேன். “பிறந்த நாள் வாழ்த்துகள்”

“கிப்ட் எல்லாம் எதுவுமில்லையா? அதுக்கு தான் முக்கியமா கூப்பிட்டதே. பசங்க வாங்கி வெச்சிருக்குற கேக்கை கொடுத்துட்டு ஒரு கிப்ட் வாங்கிக்கலாம்னு பார்த்தா இப்படி வாயாலயே வாழ்த்து சொல்லிட்டு எஸ் ஆகிடலாம்னு பாக்கறியா?”

இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வதென்று எனக்கு தெரியவில்லை. அதுவும் இத்தனை பேர் இருக்கும் கூட்டத்தில். இரவு அலைபேசியில் பேசும் போது தான் என்னால் நானாக பேச முடிந்தது.

“மீனா, ஒரு வார்த்தை நேத்தே சொல்லியிருக்கலாம் இல்லை”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப?”

“என்ன பண்றன்னு முக்கியமில்லை. இப்படி கூட்டத்துல தனி ஆளா வந்து அசிங்கமா நின்னுருக்க மாட்டேனில்லை”

“இப்ப அது தான் வருத்தமா?”

“இல்லை இல்லை. நேத்து அவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தோம். அப்படியே பன்னெண்டு மணிக்கு உனக்கு வாழ்த்து சொல்லிருப்பேன் இல்லை. அதான்”

“அதுக்கெதுக்கு கவலைப்படற. ஃபிரியா விடு”

“ஹ்ம்ம்ம்”

அப்படியே ஒரு மாதம் ஓடியது. காலையில் எட்டு மணி பேருந்தில் இருவரும் காணவில்லை. அவளுடைய அலைப்பேசிக்கு அழைத்தேன். ஒன்பது மணி வண்டியில் வருவதாக சொன்னாள். அவளுக்காக சாப்பிடாமல் காத்திருந்தேன். அவள் சாப்பிட வரவில்லை. பத்தரைக்கு எக்ஸ்டென்ஷனிற்கு அழைத்தாள். காபி டேக்கு வர சொன்னாள். சென்றேன்.

“என்னாச்சு. ஏன் லேட்? சாப்பிட கூட வரலை”

“ஒரு சின்ன பிரச்சனை. அதான்.”

“சொல்லு”

“லதா இருக்கா இல்லை”

“ஆமா. அவளுக்கு என்ன?”

“அவளுக்கு வீட்ல மாப்பிள்ளை பாக்கறாங்க. இந்த வாரம் பொண்ணு பாக்க வராங்களாம்”

“அதுக்கு என்ன? உன்னையும் மணப்பெண் தோழியா வர சொல்றாளா?”

“இல்லை”

“சரி அப்பறம் என்ன?”

“உன்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியல. ரொம்ப நாளா சொல்லனும்னு முயற்சி செய்யறேன். என்னால சொல்ல முடியலை. இன்னைக்கு சொல்லியே ஆகனும். லதா உன்னை லவ் பண்றா. உன்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறா”

“வாட்?”

“நிஜமாத்தான் சொல்றேன்”

“என்ன இப்படி லூசு மாதிரி பேசற? என்னை பொறுத்த வரைக்கும் லதாங்கற கேரக்டரையே இது வரைக்கும் நான் உன்னோட ஃபிரண்டாதான் ரிலேட் பண்ணிட்டு இருக்கேன். அவள்ட நான் பேசன வார்த்தைகளை விரல் விட்டு எண்ணிடலாம்”

“உன்கிட்ட அதிகமா பேசினா தான் உனக்கு பிடிக்குமா? நீ தான் லூசு மாதிரி பேசற”

“ப்ளீஸ் டோண்ட் இரிடேட் மீ மீனா. ஐ நெவர் ஹேட் எனி ஃபீலிங்ஸ் ஃபார் ஹெர். ஷீ இஸ் நாட் மை டைப். புரிஞ்சிக்கோ. நீயே இப்படி என்கிட்ட இந்த மாதிரி கேக்கலாமா?”

“நான் அவ ஃபிரெண்ட். நான் கேக்கறதுல என்ன தப்பு?”

“பிகாஸ் ஐ அம் இன் லவ் வித் யூ”

அவள் முகத்தில் பெரும் குழப்பத்திற்கான ரேகைகள் தெரிந்தன. இரண்டு நிமிடம் அந்த இடத்தில் மௌனம் அதன் ஆட்சியை செலுத்தியது. 

நான் பேச ஆரம்பித்தேன். ”இங்க பாரு மீனா. நான் ரொம்ப ஃபிராங்காவே சொல்றனே. எனக்கு அந்த பொண்ணு மேல அப்படி ஒரு ஐடியாவே இல்லை. என் மனசுல இத்தனை நாள் லதாங்கற கேரக்டரே மீனாவின் தோழி அப்படி தான் பதிவாகியிருந்தது. இப்ப திடீர்னு நீ வந்து இப்படி சொன்னா? ஐ காண்ட் இமேஜின் இட்”

“இங்க பாரு கிருஷ்ணா. எனக்கும் இத்தனை நாள் நீ லதாவோட ஆளாதான் தெரிஞ்ச. முதல் நாள் நான் உன் மேல சாம்பார் கொட்டின உடனே என்னை வேகமா கடைக்கு கூப்பிட்டு போனது லதா தான். அப்பறம் அன்னைக்கு நீ பஸ்ல வந்தப்ப, மூணு பேர் சீட்டுக்கு மாறனது அவ சொல்லி தான். உன்னை என் பர்த் டே பார்ட்டிக்கு கூட அவ தான் கூப்பிட சொன்னா. சோ தட் ஷீ கேன் ஷோ யூ டூ ஆல் அவர் ஃபிரெண்ட்ஸ்”

“அப்ப நீ தினமும் என் கூட பேசினது பழகினது எல்லாம் அவளுக்காக தானா?”

“அவளுக்காகவும் தான். உன்கிட்ட அவ காதலை சொல்றதுக்கு பயம். என்னை சொல்ல சொன்னா. நானும் தினமும் உன்கிட்ட பேசி எப்படியாவது சொல்லனும்னு பார்த்தேன். சொல்ல முடியலை”

“மீனா, என்னால லதாவை உன் தோழியா தான் பார்க்க முடியும். வேற எப்படியும் பார்க்க முடியாது. ஐ அம் லீவிங்”

“கிருஷ்ணா. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ”

சரியாக இரண்டாவது மாதம் கம்பெனி மாறி இருந்தேன். கம்பெனி மாறுவது மேனஜர்களால் மட்டுமில்லை. இதை போல வேறு சில காரணங்களும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

என்றாவது மீனாவிடமிருந்து “லதாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்துவிட்டது. நான் உன் காதலை ஏற்று கொள்கிறேன்” என்று மின்மடலோ, அலைபேசியில் அழைப்போ வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். இப்ப கூட மின்மடல் வந்திருக்கிறதா என்று பார்க்க தான் வேகமாக கடவு சொல்லை அடித்து கொண்டிருக்கிறேன்.

109 comments:

வெட்டிப்பயல் said...

கதை பிடிச்சிருந்தா பின்னூட்டத்துல சொல்லவும்... பிடிக்கலைனாலும் சொல்லுங்க :)

BTW, இந்த கதைக்கு ஒரு வரலாறு இருக்கு. இந்த கதை நான் பெங்களூர் ஆஃப் சோஷோருக்கு போன முதல் நாள் சாப்பிட போகும் போது, எப்படி ப்ளாக்ல கதை எல்லாம் எழுதறீங்கனு ஒரு நண்பர் கேட்டாரு. எல்லாம் பாக்கறதை வெச்சி கொஞ்சம் கற்பனை பண்றது தானு சொன்னேன்.

சாப்பாடு வாங்கிட்டு இருக்கும் போது, இந்த சிச்சுவேஷனுக்கு நூறு கதை சொல்லலாம்னு சொன்ன கதை தான் இது. க்ளைமாக்ஸ்ல அந்த பொண்ணு பாம் ப்ளாஸ்ட்ல சாகற மாதிரி அப்ப சொல்லியிருந்தேன்.

அதுக்கு முன்னாடி ஒரு சீன்ல ஊசிக்கு பயந்து ரெண்டு நாள் டாக்டர்கிட்ட போகாம இருக்கற மாதிரி இருக்கும். கடைசியா நாயகன் நினைச்சி பார்க்கும் போது ஒரு ஊசியோட வலியையே தாங்க முடியாத மென்மையானவ அந்த குண்டு வெடிக்கும் போது எப்படி ஃபீல் பண்ணிருப்பானு நினைக்கற மாதிரி முடியும்...

அதுக்கு அப்பறம் வாரணம் ஆயிரம் + மும்பை ப்ளாஸ்ட் என் மனதை மாத்திடுச்சி.

கிஷோர் said...

செல்லம்... எப்புடி?

கலக்கலா இருக்கு பா கதை.

கிஷோர் said...

//அதுக்கு அப்பறம் வாரணம் ஆயிரம் + மும்பை ப்ளாஸ்ட் என் மனதை மாத்திடுச்சி.//

சூப்பர்

வெட்டிப்பயல் said...

//கிஷோர் said...
செல்லம்... எப்புடி?

கலக்கலா இருக்கு பா கதை.//

கிஷோர்,
மிக்க நன்றி...

கருத்திற்கும், முதல் பின்னூட்டத்திற்கும் :)

வெட்டிப்பயல் said...

// கிஷோர் said...
//அதுக்கு அப்பறம் வாரணம் ஆயிரம் + மும்பை ப்ளாஸ்ட் என் மனதை மாத்திடுச்சி.//

சூப்பர்//

அந்த முடிவை விட இது எனக்கு பிடித்திருக்கு... நீங்க என்ன சொல்றீங்க? :)

கிஷோர் said...

//அந்த முடிவை விட இது எனக்கு பிடித்திருக்கு... நீங்க என்ன சொல்றீங்க? :)//

கரெக்ட். காதலில் முடிவு தெரியாம இருக்கறது, இழந்த காதலை விட 1000000 மடங்கு தேவலாம்.

வெட்டிப்பயல் said...

//கிஷோர் said...
//அந்த முடிவை விட இது எனக்கு பிடித்திருக்கு... நீங்க என்ன சொல்றீங்க? :)//

கரெக்ட். காதலில் முடிவு தெரியாம இருக்கறது, இழந்த காதலை விட 1000000 மடங்கு தேவலாம்.//

நிங்க அப்படி சொல்றீங்களா? ஓகே :)

நான் சொல்ல நினைச்சது... அது ரொம்ப நார்மலா இருக்கும். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கேனு :)

கிஷோர் said...

//நான் சொல்ல நினைச்சது... அது
ரொம்ப நார்மலா இருக்கும். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கேனு :)//

கதை எழுதுற நீங்க வேணும்னா அப்படியெல்லாம் யோசிக்கலாம். ஆனால் கதையை படிக்கும்போது உணர்வுப்பூர்வமாக அணுகவைக்கின்றன உங்கள் கதைகள். அதனால விமர்சகன் எழுந்திருக்கவே மாட்றான்.

உண்மையாக நன்றிகள் இப்படி ஒரு நல்ல கதைக்கு.

இந்த பின்னூட்டம் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி ஆகிருந்தா கூட, இந்த கதை அதுக்கு வொர்த்.

வெட்டிப்பயல் said...

//கிஷோர் said...
//நான் சொல்ல நினைச்சது... அது
ரொம்ப நார்மலா இருக்கும். இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கேனு :)//

கதை எழுதுற நீங்க வேணும்னா அப்படியெல்லாம் யோசிக்கலாம். ஆனால் கதையை படிக்கும்போது உணர்வுப்பூர்வமாக அணுகவைக்கின்றன உங்கள் கதைகள். அதனால விமர்சகன் எழுந்திருக்கவே மாட்றான்.

உண்மையாக நன்றிகள் இப்படி ஒரு நல்ல கதைக்கு.

இந்த பின்னூட்டம் உங்களுக்கு ஜால்ரா அடிக்கிற மாதிரி ஆகிருந்தா கூட, இந்த கதை அதுக்கு வொர்த்.//

ரொம்ப ஃபீல் பண்ண வெச்சிட்டீங்க கிஷோர்... மிக்க நன்றி...

மக்கள்ஸ் என்ன சொல்றாங்கனு பார்க்கலாம் :)

ஆ! இதழ்கள் said...

வாவ். கலக்கல்ங்க. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. Beutiful.

அங்கங்க சும்மா கேலி பண்ணலாம்னு பாத்தேன். ஆனால் கதையின் முழுமையைப் பார்த்தால் சுஜாதா கதைகளை படித்துவிட்டு எதுவும் சொல்லாமல் அடுத்த பக்கம் திருப்பும் ஃபீலிங் தான் வருது.

keep rocking... :)

முரளிகண்ணன் said...

லேபிள் பார்க்காம நான் படிக்க ஆரம்பிச்சேன். சொந்த அனுபவமோன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்து, அடடா நம்ம வெட்டி அடிக்கடி கதை எழுதுவாரேன்னு வேகமா ஸ்கிரோல் பண்ணினால் கதை.

அருமை.

மெளலி (மதுரையம்பதி) said...

எனக்கு இந்த கதை பிடிச்சுருக்குங்க...பின்னூட்டத்தில் இருக்கும் முடிவை விட, பதிவில் இருக்கும் முடிவு பெட்டர்.

//கம்பெனி மாறுவது மேனஜர்களால் மட்டுமில்லை. இதை போல வேறு சில காரணங்களும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்//

அப்பாடி!!! :-)

FunScribbler said...

கதை ஓட்டம் ரொம்ப நல்லாருக்கு. கதை பாதியில் படிக்கும்போதே தோன்றியது அந்த தோழிதான் திருப்புமுனையை(ஆப்பு என்றும் சொல்லலாம்...ஹாஹா..) கொண்டு வர போகிறாள் என்று.

ரசித்து படித்தேன். கதை முடிவு ரொம்ப யதார்த்தம். அருமை!

மீனா, கிருஷ் உரையாடல்கள் வெரி சுவீட்ட்ட்ட்ட்ட்!

மேலும் நிறைய கதைகளை எழுதுங்க.. படிக்க ஒரு ஜீவன் காத்திருக்கு(நான் தான்ப்பா அது!)

பல்லவன்::வல்லவன் said...

அருமையாக இருக்கு கதை

மணிகண்டன் said...

பயங்கர வேகமான நடை பாலாஜி. ரொம்ப interestingaa இருக்கு படிக்க. இந்த triangle லவ் சகிக்கல ! அதே மாதிரி ரெண்டாவது பாரா ஒட்டல கதையோட. (கடைசில சேர்த்து இருந்தாலும்)

ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கற உரைநடைல உங்கள அடிச்சிக்க ஆள் கிடையாது போல. ஜாலியா இருந்தது படிக்க. இன்னும் அடிக்கடி எழுதுங்க.

ஷாஜி said...

//“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள்.//

--நானும் தான்......

நிலாக்காலம் said...

கிஷோர் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. :-)

மனுநீதி said...

வழக்கம் போல இந்த கதையும் அருமை.
சமீப காலங்களாக உங்க எல்லா கதையும் சந்தோஷமா முடிஞ்சதால அந்த மாதிரி எதிர்பார்ப்போட இந்த எதிர்பார்ப்ப படிக்க ஆரம்பிச்சேன். தூறலுக்கு அப்புறம் உங்க எல்லா கதையுமே பாசிடிவ் கிளைமாக்ஸ் தான் என்று நினைகிறேன்.

உங்க கதைல வர சிறு சிறு குறும்புகளும்/நகைச்சுவையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என்னோட அடுத்த கதைல இத ட்ரை பண்ணனும்.

Anonymous said...

The story is very nice Balaji..
Unexpected twist and a new ending... Kalakareenga....

சத்திர'சிறுவயல்' சத்தியசீலன்.மு.பா.ப.,த/பெ,'தோழர்' அ.பாலாமணி. said...

நண்பர் கிஷோர் சொன்னமாதிரி...
வாசகனை கதைக்குள் உலவ விடும் எந்த ஒரு கதை நடையும் வெற்றி பெறும்...
அதுவே இக்கதையிலும் நடந்து இருக்கிறது....
இயல்பான வார்த்தைகள்...
முடிவு வித்தியாசமாக இருக்கிறது..
சோகமாகவும் இல்லாமல்... சந்தோசமாகவும் இல்லாமல்...
நல்லது நடக்கும் என்று காத்து இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது...

நட்புடன்,
சத்தியன்.

Anonymous said...

Hi,
I have been reading (almost) all your stories (or kind of 'diaries'!). I must admit that every time, I could see more maturity ness, standards improving... Good luck and keep it up. BTW, may I know which org are you working (as a test lead)?

Regards,
Essex Siva

சின்னப் பையன் said...

உண்மையாக நன்றிகள் இப்படி ஒரு நல்ல கதைக்கு.

super.

Poornima Saravana kumar said...

அண்ணா நிஜமாவே கதை அருமையா இருக்கு:)

கிளைமேக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

வித்தியாசமா டிரை பண்ணி இருக்கிங்க:)

Nimal said...

//எல்லாம் பாக்கறதை வெச்சி கொஞ்சம் கற்பனை பண்றது தானு சொன்னேன்.//

கதை சூப்பர்...!!!

Anonymous said...

always love failure or love twist in ur story? don u have happy endings with lot of thrills...expecting in next story :) - meena

Anonymous said...

Good Start and different end...nice...

Regards,
Veera

Pradeep said...

Chance illanga...super..

பொதுவா நான் கதையே படிக்க மாட்டேன். ஆனால் நீங்க படிக்க வச்சிடிங்க .

வெட்டிப்பயல் said...

//always love failure or love twist in ur story? don u have happy endings with lot of thrills...expecting in next story :) - meena//

ha ha ha...

Meena,
you can read H-4. I just posted it last week. Even Poi Sonnal Nesipaya is a feel good story (atleast for me).

I want my readers to enjoy the story with a thrill. I am not sure whether I am successfull in it. moreover I am an amateur writer (blogger) trying to improve my writing skills:)

குமரன் (Kumaran) said...

Good Story as usual.

//என்றாவது மீனாவிடமிருந்து “லதாவிற்கு நல்லபடியாக திருமணம் முடிந்துவிட்டது. நான் உன் காதலை ஏற்று கொள்கிறேன்” என்று மின்மடலோ, அலைபேசியில் அழைப்போ வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன். இப்ப கூட மின்மடல் வந்திருக்கிறதா என்று பார்க்க தான் வேகமாக கடவு சொல்லை அடித்து கொண்டிருக்கிறேன்.//

This para feels redundant. The story ended in the previous paragraph itself. This para feels like added for the title of the story. :)

வெட்டிப்பயல் said...

// குமரன் (Kumaran) said...

//

No Kumaran...

First I finished the story and then I decided the title :)

Krishna ethir paarkara maathiriye antha pakkam Lathavum ethir paarthutu irukalamnu oru feel ithai padicha varumnu ninaichen... ovvoruvarukum oru ethirpaarpu irukirathu. that's the theme of the story. Not sure whether I conveyed it properly :)

நாகராஜன் said...

பாலாஜி,

நல்ல எதார்த்தமான நடையில் அருமையா கதையை கொண்டு போயிருக்கீங்க. வாழ்த்துக்கள்...

படிக்கறவர்கள் அனைவரையும் ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு போய் விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அது தங்களது எழுத்தின் வெற்றி - என்னை பொறுத்தவரை.

ஸ்ரீதர்கண்ணன் said...

“நேத்து ஏதோ பாக்கலாம்னு சொன்னீங்க. இன்னைக்கு சரியா 8 மணிக்கு வந்துட்டீங்க?” அவள் கேள்வியில் நக்கல் இருந்தது.

“8 மணிக்கு பாக்கலாம்னு சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல” சொல்லிவிட்டு அதே சிரிப்பை பதிலுக்கு நானும் கொடுத்தேன்.

:)))))))))

கார்த்தி said...

Kathai nalla irunthuchu sir... Enjoyed it...

Anonymous said...

நல்ல உரைநடையிலேயே எழுதியிருப்பதால சட்டுனு கதைக்குள்ள இழுத்துட்டுது.

நல்லா இருக்கு பாலாஜி.

Divyapriya said...

//எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது.//

அதெப்படி? சாம்பார் கொட்டும் போது மீனாட்சி அளவும் எடுத்துட்டாங்களா? ;)

என்னண்ணா கடைசியில இப்படி அநியாயமா ஒரு ட்விஸ்ட்ட வச்சு, பிரிச்சு உட்டுட்டீங்க :( இப்படி out of focus character அ வச்சு கதையையே திருப்பிட்டீங்களே :(

ஆனா, நீங்க பின்னூட்டத்துல சொன்ன முடிவ விட இந்த கதையில இருக்கற முடிவு நல்லா இருக்கு...

Anonymous said...

//நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள். குழந்தைகளும், பெண்களும் சிரிக்கும் போது நம் பார்வையை அதிலிருந்து விலக்குவது அரிது என்று தோன்றியது.//

நல்லாயிருக்கு.. இதெல்லாம் எப்ப்டி?

எல்லாம் அப்ப்டி அப்படியே வர்ற்துதானுங்களே..

கேட்ட்ச் மை பாயிண்ட்..

(மைக்கேல் மதன காமராஜன் குறுந்தாடி கமல் (ராஜு) ஸ்டைலில் படிக்கவும்)

சீமாச்சு

ILA (a) இளா said...

ட்விஸ்ட் எதிர்பார்த்தேன். வேலை மாறினது மட்டும்தான் புதுசு.

ஜியா said...

செம கலக்கல் வெட்டி... நீண்ட நாட்களுக்கு அப்புறம் முழுவதும் ஒன்றிப் போக வைத்த கதை.. கடைசிக் காட்சி எதிர்பார்ப்புகளை உடைத்தெறியும் பயங்கரமான டிவிஸ்ட்டா தோனலைனாலும், இடையிடையே வரும் வசனமும், சின்ன சின்ன கம்பேரிஷனும் அசத்தல்...

//பையிலிருந்து ஆயிரத்தி அறுநூறு ரூபாயை எடுத்தேன்.//

அம்மாடியோவ்! இவ்வளவு காஸ்ட்லியா??

Kavinaya said...

இயல்பான நிகழ்வுகளுடன் சொல்லப்பட்ட யதார்த்தம். நல்லாயிருக்கு. குமரன் சொன்ன மாதிரி முந்தின பத்தியோட முடிச்சிருந்தா இன்னும் க்ரிஸ்பா இருந்திருக்கும்னு தோணுச்சு.

நாமக்கல் சிபி said...

நல்ல கதை பாலாஜி!

(மீண்டும் மீள் பதிவு(!?)

சாம்பார் எல்லாம் வருது அப்போ மீல்ஸ் பதிவு)

வெட்டிப்பயல் said...

// ஆ! இதழ்கள் said...
வாவ். கலக்கல்ங்க. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு. Beutiful.

அங்கங்க சும்மா கேலி பண்ணலாம்னு பாத்தேன். ஆனால் கதையின் முழுமையைப் பார்த்தால் சுஜாதா கதைகளை படித்துவிட்டு எதுவும் சொல்லாமல் அடுத்த பக்கம் திருப்பும் ஃபீலிங் தான் வருது.

keep rocking... :)//

மிக்க நன்றி ஆ! இதழ்கள்...

தலைவர் அளவுக்கு எல்லாம் நம்ம எழுத முடியாது :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
லேபிள் பார்க்காம நான் படிக்க ஆரம்பிச்சேன். சொந்த அனுபவமோன்னு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்து, அடடா நம்ம வெட்டி அடிக்கடி கதை எழுதுவாரேன்னு வேகமா ஸ்கிரோல் பண்ணினால் கதை.

அருமை.//

First Personல கதை சொல்லும் போது அப்படி அமைந்து விடுகிறது முக...

வாழ்த்திற்கு மின்ன நன்றி...

வெட்டிப்பயல் said...

// மதுரையம்பதி said...
எனக்கு இந்த கதை பிடிச்சுருக்குங்க...பின்னூட்டத்தில் இருக்கும் முடிவை விட, பதிவில் இருக்கும் முடிவு பெட்டர்.
//

பின்னூட்டத்துல இருக்கற முடிவு கதையா எழுதும் போது கொஞ்சம் நல்லா தான் வந்திருக்கும். ரொம்ப மோசமா இருந்திருக்காது. ஆனா இது கொஞ்சம் பெட்டர் தான் :)

//

//கம்பெனி மாறுவது மேனஜர்களால் மட்டுமில்லை. இதை போல வேறு சில காரணங்களும் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்//

அப்பாடி!!! :-//

:)

வெட்டிப்பயல் said...

//Thamizhmaangani said...
கதை ஓட்டம் ரொம்ப நல்லாருக்கு. கதை பாதியில் படிக்கும்போதே தோன்றியது அந்த தோழிதான் திருப்புமுனையை(ஆப்பு என்றும் சொல்லலாம்...ஹாஹா..) கொண்டு வர போகிறாள் என்று.
//
தீர்க்கதரிசியா இருந்திருக்கீங்க :)

ஆப்புனு சொல்ல முடியாது. அந்த பெண்ணோட சைட்ல இருந்து கதை சொன்னா வேற மாதிரி இருக்கும் இல்லையா?

//ரசித்து படித்தேன். கதை முடிவு ரொம்ப யதார்த்தம். அருமை!

மீனா, கிருஷ் உரையாடல்கள் வெரி சுவீட்ட்ட்ட்ட்ட்!

மேலும் நிறைய கதைகளை எழுதுங்க.. படிக்க ஒரு ஜீவன் காத்திருக்கு(நான் தான்ப்பா அது!)//

மிக்க நன்றி தமிழ்மாங்கனி... கருத்திற்கும், தொடர் ஆதரவிற்கும் :)

வெட்டிப்பயல் said...

//பல்லவன்::வல்லவன் said...
அருமையாக இருக்கு கதை//

மிக்க நன்றி பல்லவன்::வல்லவன்...

வெட்டிப்பயல் said...

//மணிகண்டன் said...
பயங்கர வேகமான நடை பாலாஜி. ரொம்ப interestingaa இருக்கு படிக்க. இந்த triangle லவ் சகிக்கல ! அதே மாதிரி ரெண்டாவது பாரா ஒட்டல கதையோட. (கடைசில சேர்த்து இருந்தாலும்)
//
கருத்திற்கு நன்றி மணிகண்டன். இதுல சகிக்கல சொல்றதுக்கு எதுவுமில்லை. இதெல்லாம் லைஃப்ல ரொம்ப சகஜமா நடக்கற விஷயம். ரெண்டாவது பாரா கதைக்கு முக்கியமா தான் எனக்கு பட்டுச்சு. அது அவனோட தனிமையை குறிக்கவும், மீனாவோட அவன் சுத்தவும் காரணமான விஷயத்தை தொட்டு செல்கிறது... Opinion differs :)

//ஒரு பொண்ணும் பையனும் பேசிக்கற உரைநடைல உங்கள அடிச்சிக்க ஆள் கிடையாது போல. ஜாலியா இருந்தது படிக்க. இன்னும் அடிக்கடி எழுதுங்க.//

கண்டிப்பா... ஆனா என்னைவிட இன்னும் லைவ்லியா கப்பி, ஜி எல்லாம் எழுதுவாங்க. அவுங்க ரெண்டு பேரும் கதை எழுதறதை குறைச்சிக்கிட்டாங்க :)

வெட்டிப்பயல் said...

//ஷாஜி said...
//“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள்.//

--நானும் தான்......

4:35 AM//

மிக்க நன்றி ஷாஜி :)

வெட்டிப்பயல் said...

//நிலாக்காலம் said...
கிஷோர் அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. :-)

5:01 AM//

மிக்க நன்றி நிலாக்காலம் :)

வெட்டிப்பயல் said...

//உள்ளத்தில் இருந்து.. said...
வழக்கம் போல இந்த கதையும் அருமை.
சமீப காலங்களாக உங்க எல்லா கதையும் சந்தோஷமா முடிஞ்சதால அந்த மாதிரி எதிர்பார்ப்போட இந்த எதிர்பார்ப்ப படிக்க ஆரம்பிச்சேன். தூறலுக்கு அப்புறம் உங்க எல்லா கதையுமே பாசிடிவ் கிளைமாக்ஸ் தான் என்று நினைகிறேன்.
//
நல்லா நோட் பண்றீங்க :)
ஆனா முட்டாப்பயனு போன வருஷம் எழுதன கதை கொஞ்சம் சோகம், அதே மாதிரி தாய்ப்பால் கதையும் கொஞ்சம் சோகமா முடியும். மத்தது எல்லாம் பாசிடிவ் தான் :)

//உங்க கதைல வர சிறு சிறு குறும்புகளும்/நகைச்சுவையும் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என்னோட அடுத்த கதைல இத ட்ரை பண்ணனும்.

5:30 AM//

சூப்பர்... நிச்சயம் முயற்சி செஞ்சிட்டு எனக்கும் அப்படியே லிங் கொடுங்க :)

வெட்டிப்பயல் said...

// Rajeswari said...
The story is very nice Balaji..
Unexpected twist and a new ending... Kalakareenga....

5:39 AM//

மிக்க நன்றி ராஜேஸ்வரி... தொடர் வருகைக்கும் நன்றி :)

வெட்டிப்பயல் said...

// சத்திர'சிறுவயல்' சத்தியசீலன்.மு.பா.ப.,த/பெ,'தோழர்' அ.பாலாமணி. said...
நண்பர் கிஷோர் சொன்னமாதிரி...
வாசகனை கதைக்குள் உலவ விடும் எந்த ஒரு கதை நடையும் வெற்றி பெறும்...
அதுவே இக்கதையிலும் நடந்து இருக்கிறது....
இயல்பான வார்த்தைகள்...
முடிவு வித்தியாசமாக இருக்கிறது..
சோகமாகவும் இல்லாமல்... சந்தோசமாகவும் இல்லாமல்...
நல்லது நடக்கும் என்று காத்து இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது...

நட்புடன்,
சத்தியன்.//

மிக்க நன்றி சத்தியன்... முடிவு வாசகர்களின் ஊகத்திற்கு விடப்பட்டுவிட்டது. ஒரு வேளை மீனாவிற்கு திருமணமாகி இவன் லதாவை கூட மணம் செய்து கொள்ளலாம். எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
Hi,
I have been reading (almost) all your stories (or kind of 'diaries'!). I must admit that every time, I could see more maturity ness, standards improving... Good luck and keep it up. BTW, may I know which org are you working (as a test lead)?

Regards,
Essex Siva//

Essex Siva,
Thx a lot for your comments...

Good guess :) (I work in Infosys, Blore)

வெட்டிப்பயல் said...

// ச்சின்னப் பையன் said...
உண்மையாக நன்றிகள் இப்படி ஒரு நல்ல கதைக்கு.

super.//

உண்மையான நன்றிகள். இப்படி ஒரு பின்னூட்டத்திற்கு :)

வெட்டிப்பயல் said...

//Poornima Saravana kumar said...
அண்ணா நிஜமாவே கதை அருமையா இருக்கு:)

கிளைமேக்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

வித்தியாசமா டிரை பண்ணி இருக்கிங்க:)

//

ரொம்ப நன்றிமா.

எல்லாம் ஒரு முயற்சி தான் :)

வெட்டிப்பயல் said...

//நிமல்-NiMaL said...
//எல்லாம் பாக்கறதை வெச்சி கொஞ்சம் கற்பனை பண்றது தானு சொன்னேன்.//

கதை சூப்பர்...!!!

//

மிக்க நன்றி நிமல் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
Good Start and different end...nice...

Regards,
Veera//

மிக்க நன்றி வீரா :)

வெட்டிப்பயல் said...

//Pradeep said...
Chance illanga...super..

பொதுவா நான் கதையே படிக்க மாட்டேன். ஆனால் நீங்க படிக்க வச்சிடிங்க .//

ரொம்ப சந்தோஷம் பிரதீப்... இந்த மாதிரி வலைப்பதிவுல நிறைய கதைகள் இருக்கு. வாசிக்க ஆரம்பிக்கவும் :)

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...
பாலாஜி,

நல்ல எதார்த்தமான நடையில் அருமையா கதையை கொண்டு போயிருக்கீங்க. வாழ்த்துக்கள்...

படிக்கறவர்கள் அனைவரையும் ஒரு எதிர்பார்ப்பில் கொண்டு போய் விட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். அது தங்களது எழுத்தின் வெற்றி - என்னை பொறுத்தவரை.

11:34 AM//

மிக்க நன்றி ராசுக்குட்டி :)

எல்லாம் முயற்சி தான். சில சமயம் அப்படி கொடுக்க முடியாம போயிடுது. இன்னும் ஒரு கொல்ட்டியோ, தூறலோ கொடுக்க முடியல :(

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர்கண்ணன் said...
“நேத்து ஏதோ பாக்கலாம்னு சொன்னீங்க. இன்னைக்கு சரியா 8 மணிக்கு வந்துட்டீங்க?” அவள் கேள்வியில் நக்கல் இருந்தது.

“8 மணிக்கு பாக்கலாம்னு சொன்னேன். நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட போல” சொல்லிவிட்டு அதே சிரிப்பை பதிலுக்கு நானும் கொடுத்தேன்.

:)))))))))//

மிக்க நன்றி ஸ்ரீதர் :)

வெட்டிப்பயல் said...

// கார்த்தி said...
Kathai nalla irunthuchu sir... Enjoyed it...

11:57 AM//

கார்த்தி,
சார் மோர் எல்லாம் வேண்டாம்பா...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//வடகரை வேலன் said...
நல்ல உரைநடையிலேயே எழுதியிருப்பதால சட்டுனு கதைக்குள்ள இழுத்துட்டுது.

நல்லா இருக்கு பாலாஜி.//

மிக்க நன்றி அண்ணா...

தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவுக்கும் :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...
//எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது.//

அதெப்படி? சாம்பார் கொட்டும் போது மீனாட்சி அளவும் எடுத்துட்டாங்களா? ;)//

ஹா ஹா ஹா...
அதெல்லாம் சும்மா ஒரு பில்ட் அப்மா. நமக்கு பிடிச்சிருக்கவங்க எது பண்ணாலும் நமக்கு பிடிக்கும் :)

//
என்னண்ணா கடைசியில இப்படி அநியாயமா ஒரு ட்விஸ்ட்ட வச்சு, பிரிச்சு உட்டுட்டீங்க :( இப்படி out of focus character அ வச்சு கதையையே திருப்பிட்டீங்களே :(
//
out of focusனு நினைக்க கூடாதுமா. அந்த பொண்ணுக்கும் மனசுல நிறைய ஆசைகள் இருந்திருக்கும். அதையும் நாம ஏத்துக்கனும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு :)

//ஆனா, நீங்க பின்னூட்டத்துல சொன்ன முடிவ விட இந்த கதையில இருக்கற முடிவு நல்லா இருக்கு...
//

என்ன பண்ண.. நம்ம கதைகள்ல யார் சேர்வாங்க, யார் எப்படி பிரிவாங்கனு நம்ம கைல இல்லையே :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
//நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”

சத்தம் போட்டு சிரித்தாள். குழந்தைகளும், பெண்களும் சிரிக்கும் போது நம் பார்வையை அதிலிருந்து விலக்குவது அரிது என்று தோன்றியது.//

நல்லாயிருக்கு.. இதெல்லாம் எப்ப்டி?

எல்லாம் அப்ப்டி அப்படியே வர்ற்துதானுங்களே..

கேட்ட்ச் மை பாயிண்ட்..

(மைக்கேல் மதன காமராஜன் குறுந்தாடி கமல் (ராஜு) ஸ்டைலில் படிக்கவும்)

சீமாச்சு//

மிக்க நன்றி சீமாச்சு... என்னுடைய முதல் கதைக்கு முதல் பின்னூட்டம் நீங்க போட்டது தான் :)

வெட்டிப்பயல் said...

// ILA said...
ட்விஸ்ட் எதிர்பார்த்தேன். வேலை மாறினது மட்டும்தான் புதுசு//

அண்ணே,
எப்படி இப்படி எல்லாம் :)

வெட்டிப்பயல் said...

// ஜி said...
செம கலக்கல் வெட்டி... நீண்ட நாட்களுக்கு அப்புறம் முழுவதும் ஒன்றிப் போக வைத்த கதை.. கடைசிக் காட்சி எதிர்பார்ப்புகளை உடைத்தெறியும் பயங்கரமான டிவிஸ்ட்டா தோனலைனாலும், இடையிடையே வரும் வசனமும், சின்ன சின்ன கம்பேரிஷனும் அசத்தல்...//

மிக்க நன்றி ஜியா...

பிரிக்கனும்னு முடிவு எடுத்ததுக்கு அப்பறம் கிடைக்கிற ஆப்ஷன்ஸ் குறைவு தான். சாகடிக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டதால இப்படி கொஞ்சம் சுமாரான முடிவா போயிடுச்சி. இருந்தாலும் இது எனக்கு பிடிச்சிருக்கு :)

////பையிலிருந்து ஆயிரத்தி அறுநூறு ரூபாயை எடுத்தேன்.//

அம்மாடியோவ்! இவ்வளவு காஸ்ட்லியா??//

Building 18 கடைக்குள்ள நுழைஞ்சதில்லையா? பேண்ட் சட்டை சாதரணமா வாங்கினாலே அந்த விலை வந்துடுது :)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...
இயல்பான நிகழ்வுகளுடன் சொல்லப்பட்ட யதார்த்தம். நல்லாயிருக்கு. குமரன் சொன்ன மாதிரி முந்தின பத்தியோட முடிச்சிருந்தா இன்னும் க்ரிஸ்பா இருந்திருக்கும்னு தோணுச்சு.

5:17 PM//

மிக்க நன்றி கவிநயா :)

நான் குமரனுக்கு சொன்ன மாதிரி, எனக்கு அது தேவைனு பட்டுச்சு :)

வெட்டிப்பயல் said...

// Namakkal Shibi said...
நல்ல கதை பாலாஜி!

(மீண்டும் மீள் பதிவு(!?)
//
அதெல்லாம் இல்லை தள.. புது பதிவு தான் :)

//
சாம்பார் எல்லாம் வருது அப்போ மீல்ஸ் பதிவு)//

:))

ILA (a) இளா said...

//அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சுத்தி கொண்டிருந்தோம். //\
இந்த வரிதான் க்ளூவா இருந்துச்சு. அப்பவே முடிவு தெரிஞ்சிருச்சு.

கார்க்கிபவா said...

excellent sagaa.. i like it :)

Anonymous said...

வெட்டி.. வெட்டி.. வெட்டீடீடீ

வாழவந்தான் said...

இன்னாபா, சொந்த அனுபவம்னு படிக்க ஆரம்பிச்சா கதை வுட்டுகிற..
எல்லா தபாமாரி இந்த கதையும் சொக்கா இருக்குபா :-)
//விதி பேச ஆரம்பித்தது.//
விளையாடவும் ஆரம்பிச்சிடிச்சி :-)

மணிகண்டன் said...

***
இதுல சகிக்கல சொல்றதுக்கு எதுவுமில்லை
***

நீங்க சொல்றது நிச்சயமா கரெக்ட். எனக்கு தான் சில சமயம் என்ன எழுதறேன்னு புரியமாட்டேங்குது !!!

Anonymous said...

Thala ,

As usual Kalakkal, suuuppper, Xcellent

இசைச்சாரல் said...

Hi .... This is Jaffer(Spidy)

Unga kadhai romba nalla irundhathu.. really its touched my heart! avvalavu yetharthama yeluthi irundhenga.. keep doing more!!! I want to see more of your story here

Jaffer.

நாதஸ் said...

//ஒரு நாளைக்கு மூன்று, நான்கு மணி நேரம் நேரில் பேசி கொண்டது போக, மூன்று நான்கு மணி நேரம் அலைபேசியில் பேசி கொண்டோம்.//

இந்த இடம் கொஞ்சம் உதைக்குது தல ! ;) IMHO :D
பிரெண்டோட ஆளு கூட போன்ல இவ்ளோ நேரம் பேசுவாங்களா ?
அப்படியே பேசினாலும் அந்த பிரெண்டு மனசு கொஞ்சமாச்சும் கஷ்டப்படுமே ?

வெட்டிப்பயல் said...

// nathas said...

No samalification... its a mistake :)

phonela one hour poaturukalam :(

குசும்பன் said...

முதல் வேலையாக பாத் ரூம் சென்று அவள் வாங்கி வந்த துணியை எடுத்து பார்த்தேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது. //

ஹி ஹி ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் அல்ல கண்களால் அளவு எடுப்பதில்:))))))))

parameswary namebley said...

நாங்களும் தான் திங்க் பண்ணுரோம். எதுவுமே வர மாட்டிங்குதே...
கதை அருமை..

Anonymous said...

Balaji Super ! Thamizh pinniirukke.. Selva

வெட்டிப்பயல் said...

// ILA said...
//அதன் பிறகு மூன்று பேரும் சேர்ந்தே சுத்தி கொண்டிருந்தோம். //\
இந்த வரிதான் க்ளூவா இருந்துச்சு. அப்பவே முடிவு தெரிஞ்சிருச்சு.//

உங்களோட அனுபவத்துக்கு தெரியலைனாதான் ஆச்சர்யப்படனும் ;)

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
excellent sagaa.. i like it :)

12:05 AM//

நன்றி சகா :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
வெட்டி.. வெட்டி.. வெட்டீடீடீ

4:41 AM//

நண்பரே!
பிடிச்சிருக்க பிடிக்கலையா?

வெட்டிப்பயல் said...

// வாழவந்தான் said...
இன்னாபா, சொந்த அனுபவம்னு படிக்க ஆரம்பிச்சா கதை வுட்டுகிற..
எல்லா தபாமாரி இந்த கதையும் சொக்கா இருக்குபா :-)
//விதி பேச ஆரம்பித்தது.//
விளையாடவும் ஆரம்பிச்சிடிச்சி :-)

6:49 AM//

ரொம்ப டாங்க்ஸ்ப்பா...

இப்படியெல்லாம் நமக்கு அனுபவம் இல்லாதவரைக்கும் சந்தோஷம் :)

வெட்டிப்பயல் said...

// மணிகண்டன் said...
***
இதுல சகிக்கல சொல்றதுக்கு எதுவுமில்லை
***

நீங்க சொல்றது நிச்சயமா கரெக்ட். எனக்கு தான் சில சமயம் என்ன எழுதறேன்னு புரியமாட்டேங்குது !!!

8:40 AM//

பரவாயில்லை மணிகண்டன்... ஏதோ டென்ஷன்ல இருந்துருக்கீங்க போல :)

வெட்டிப்பயல் said...

// Anbu said...
Thala ,

As usual Kalakkal, suuuppper, Xcellent//

மிக்க நன்றி அன்பு... இவ்வளவு நேரமா காணோமேனு பார்த்துட்டு இருந்தேன் :)

வெட்டிப்பயல் said...

//இசைச்சாரல் said...
Hi .... This is Jaffer(Spidy)

Unga kadhai romba nalla irundhathu.. really its touched my heart! avvalavu yetharthama yeluthi irundhenga.. keep doing more!!! I want to see more of your story here

Jaffer.//

மிக்க நன்றி ஸ்பைடி...

முடிந்த வரை எழுதுகிறேன் :)

வெட்டிப்பயல் said...

// குசும்பன் said...
முதல் வேலையாக பாத் ரூம் சென்று அவள் வாங்கி வந்த துணியை எடுத்து பார்த்தேன். எனக்காகவே அளவெடுத்து தைத்தது போலிருந்தது. //

ஹி ஹி ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் அல்ல கண்களால் அளவு எடுப்பதில்:))))))))

//

தல,
இது அவனோட கற்பனை ஒரு ரெண்டு இஞ்ச் கூட குறைய இருந்தாலும் அவருக்கு சரியாத்தான் தெரியும். வயசு அப்படி ;)

வெட்டிப்பயல் said...

//parameswary namebley said...
நாங்களும் தான் திங்க் பண்ணுரோம். எதுவுமே வர மாட்டிங்குதே...
கதை அருமை..//

மிக்க நன்றி பரமேஸ்வரி... சுத்தி நடக்கறதை பார்த்தா நிறைய எழுதலாம் :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
Balaji Super ! Thamizh pinniirukke.. Selva

2:21 PM
//

தாங்ஸ்டா மச்சான் :)
ப்ளாக் எல்லாம் படிக்கிற :)

cheena (சீனா) said...

ஹாய் வெட்டி - நல்லாருக்கு உரையாடல்கள் - இளம் நண்பர்கள்(காதலர்கள் ?) பேசுவது நல்லாவே இருக்கு - ஆமா எப்ப 3 பேரா கத பூரா வ்ராங்களோ - அப்பவே எனக்கு சந்தேகம் - இப்படித்தான் இருக்குமுன்னு - பரவா இல்ல - நல்லாவே முடிச்சிட்டீங்க - நன்று நன்று

நல்வாழ்த்துகள் வெட்டி

வாழவந்தான் said...

வெட்டிப்பயல் said...
// வாழவந்தான் said...
இன்னாபா, சொந்த அனுபவம்னு படிக்க ஆரம்பிச்சா கதை வுட்டுகிற..
எல்லா தபாமாரி இந்த கதையும் சொக்கா இருக்குபா :-)
//விதி பேச ஆரம்பித்தது.//
விளையாடவும் ஆரம்பிச்சிடிச்சி :-)

6:49 AM//

ரொம்ப டாங்க்ஸ்ப்பா...

இப்படியெல்லாம் நமக்கு அனுபவம் இல்லாதவரைக்கும் சந்தோஷம் :)

இத தான் 'இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு பல வீடு'னு சொல்லுவாங்களோ? ஆனா பாலாஜி சார், அனுபவம் இருந்தா ஒரே ஒரு காவிய கதையிலேயே டார்டைசு சுத்த வேண்டிதான். அப்பறம் நாங்க இந்த மாதிரி வாராவாரம் நீங்க எழுதற சிறுகதைய படிச்சுட்டு 'கை நனைக்க' முடியாது.

வெட்டிப்பயல் said...

//cheena (சீனா) said...
ஹாய் வெட்டி - நல்லாருக்கு உரையாடல்கள் - இளம் நண்பர்கள்(காதலர்கள் ?) பேசுவது நல்லாவே இருக்கு - ஆமா எப்ப 3 பேரா கத பூரா வ்ராங்களோ - அப்பவே எனக்கு சந்தேகம் - இப்படித்தான் இருக்குமுன்னு - பரவா இல்ல - நல்லாவே முடிச்சிட்டீங்க - நன்று நன்று

நல்வாழ்த்துகள் வெட்டி
//

Thx a lot Cheena Sir...

Periya suspense ellam kodukara idea illai.. chinna twist thaan plan pannirunthen.

Moreover intha story on the spotla sonna story. athu thaan highlight :)

வெட்டிப்பயல் said...

//வாழவந்தான் said...
வெட்டிப்பயல் said...
// வாழவந்தான் said...
இன்னாபா, சொந்த அனுபவம்னு படிக்க ஆரம்பிச்சா கதை வுட்டுகிற..
எல்லா தபாமாரி இந்த கதையும் சொக்கா இருக்குபா :-)
//விதி பேச ஆரம்பித்தது.//
விளையாடவும் ஆரம்பிச்சிடிச்சி :-)

6:49 AM//

ரொம்ப டாங்க்ஸ்ப்பா...

இப்படியெல்லாம் நமக்கு அனுபவம் இல்லாதவரைக்கும் சந்தோஷம் :)

இத தான் 'இருக்குறவனுக்கு ஒரு வீடு, இல்லாதவனுக்கு பல வீடு'னு சொல்லுவாங்களோ? ஆனா பாலாஜி சார், அனுபவம் இருந்தா ஒரே ஒரு காவிய கதையிலேயே டார்டைசு சுத்த வேண்டிதான். அப்பறம் நாங்க இந்த மாதிரி வாராவாரம் நீங்க எழுதற சிறுகதைய படிச்சுட்டு 'கை நனைக்க' முடியாது.
//

Mikka nandri Vazhavanthaan...

Thodarnthu kai ninaikavum :)

மங்களூர் சிவா said...

/
“எப்படி இருக்கீங்க?”

“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”
/

:))))))))
ROTFL

Nice story

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

BTW, இந்த கதைக்கு ஒரு வரலாறு இருக்கு.
/

வரலாறுன்னா எஸ்டிடிதானே????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)))))))

Anonymous said...

உங்க கன்றாவி காதலுக்கு நாந்தான் கிடைச்சேனா

Anonymous said...

என்னைய வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!?!?!?

Anonymous said...

வெட்டி ஐ லவ் யூஊஊஊஊஊஊ

Anonymous said...

வெட்டி மச்சான் எனக்கும் உங்க மேல ஒரு இதுதான் இருந்தாலும்.........

Anonymous said...

/
விதி பேச ஆரம்பித்தது.
/

கொய்ய்ய்யால நான் எப்பய்யா பேசினேன்

Anonymous said...

/
”இப்படியே பேசிட்டு இருந்தீங்கனா இன்னைக்கு காப்பி அபிஷேகம் தான்”
/

டாஆஆஆஆஆஆஆஆஆய் என்னைய கொலகாரன் ஆக்காதீங்க

Anonymous said...

யாருடி அவ என் சக்காளத்தி???

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
/
“எப்படி இருக்கீங்க?”

“நீங்க சாம்பார் கொட்டினதுக்கப்பறம் கொஞ்சம் வாசனையா இருக்கேனு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சொல்றாங்க”
/

:))))))))
ROTFL

Nice story//

மிக்க நன்றி சிவா...

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
/
வெட்டிப்பயல் said...

BTW, இந்த கதைக்கு ஒரு வரலாறு இருக்கு.
/

வரலாறுன்னா எஸ்டிடிதானே????
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)))))))//

நல்ல வேளை... வரலாறுனா God Father தானேனு கேட்காம விட்டீங்களே :)

வெட்டிப்பயல் said...

கும்மி கோஷ்டிஸ்... தயவு செய்து கதைகளில் இந்த வேலை வேண்டாமே.

SUFFIX said...

Oh my Goodness, Story(?) Super!! நீ சதாரன வெட்டி இல்லைய்யா!! வைர வெட்டி, தங்க வெட்டி..இன்னும் என்ன என்ன 'ட்டி' யோ!!

SUFFIX said...

//parameswary namebley said...
நாங்களும் தான் திங்க் பண்ணுரோம். எதுவுமே வர மாட்டிங்குதே...
கதை அருமை..//

ஒரு வேளை ஓசியில் ரூம் போட்டு யோசிப்பாரோ?

balutanjore said...

fantastic ayyo i want to write
in tamil but i am not able to

i have read all stories but this one is top

Unknown said...

Wonderful....v nice one