தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 24, 2008

ஆடு புலி ஆட்டம் - 14

என்னடா இவன் சாதாரண ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல அசிஸ்டெண்டா இருந்துட்டு இப்படி ஊர்ல நெலமெல்லாம் வாங்கி போடறானு பாக்கறீங்களா? ஒன்றையனா படிப்ப படிச்சிட்டு இவனுங்களே இவ்வளவு சம்பாதிக்கும் போது இவ்வளவு ரிஸ்க் எடுத்துட்டு இருக்கோம். இதுக்கூட இல்லைனா எப்படி?

என்னோட இந்த சந்தோஷமான வாழ்க்கைக்கு முக்கிய காரணம் தினேஷ் தான். எல்லாம் அவனோட ஐடியால தான் ஓடிட்டு இருக்கு. அவனுக்கு ஆரம்பத்துல இருந்தே பணத்துல இஷ்டமில்லை. அறிவிருக்கவன் பணம் சம்பாதிக்கனும் இல்லைனா அவன் அறிவை வெச்சி வேற ஒருத்தவன் பணம் சம்பாதிப்பான். நான் ரெண்டாவத பண்ணிட்டு இருக்கேன். அதுக்காக அவனுக்கு எதுலயுமே இஷ்டமில்லைனு சொல்லிட முடியாது. எனக்கு தேவையான பணத்தை அவன் கொடுக்கறான். அவனை நான் சந்தோஷமா வெச்சிருக்கேன்.

என்னடா இவன் ஏதோ ரொம்ப மர்மமா பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை. உங்ககிட்ட சொல்லாமலா? ஆனா நான் சொல்றதை மனசோட வெச்சிக்கோங்க. யார்கிட்டயும் சொல்லிடாதிங்க. நான் யாரையும் கொலை பண்ணல. மொத்தமா ஏமாத்தவுமில்லை. எங்க ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல படிக்கிறவங்க நிறைய பேர் பொய் சொல்லி வேலைக்கு சேராங்க. அவுங்களுக்கு எங்க இன்ஸ்டிடியூட்லயே சர்டிஃபிகேட்டும் அடிச்சி தராங்க.

நான் தான் அந்த சர்டிஃபிகேட்டே பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்கறேன். அப்படி ஏமாத்தி பொய் சொல்லி சேரவங்க சம்பளம் மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு இருக்கு. அப்படி ஏமாத்தறவன் இவ்வளவு சம்பாதிக்கும் போது, நான் மட்டும் இங்க எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்? இந்த ஊர்ல ஏமாத்தறவன் தான் நல்லா இருக்கான். அதனால நான் அவுங்களை ஏமாத்தி பணம் பறிக்கலாம்னு யோசிச்சேன்.

அதுக்கு தினேஷ் தான் அருமையான யோசனை சொன்னான். பசங்களை மிரட்டலாம்னு என்னோட யோசனை. ஏன்னா இங்க பசங்க தான் அதிகம். பத்துல நாலு பேர் ஏமாந்தாங்கனா கூட மாசம் நாப்பதாயிரம், ஐம்பதாயிரம்னு சம்பாதிக்கலாம்னு நான் யோசிச்சேன். தினேஷ் தான் அது வேண்டாம்னு சொன்னான். பசங்க பத்து பேருக்கு ஃபோன் பண்ணா அதுல ஒருத்தன் கண்டுபிடிச்சாக்கூட பிரச்சனை அதிகமாகிடும்.

பசங்க தப்பு செஞ்சாலும் பயப்பட மாட்டாங்க. பொண்ணுங்களை பிடிக்கலாம். அவுங்க தான் தப்பு செஞ்சா அது வெளிய தெரியக்கூடாது பயப்படுவாங்க. நாலு பசங்களைவிட ஒரு மாசத்துக்கு ஒரு பொண்ணு மாட்டினா போதும். பிரச்சனையில்லாம சம்பாதிக்கலாம்னு அவன் ஐடியா கொடுத்தான். அந்த ஒரு ஐடியா தான் இப்ப நான் மாசம் ரெண்டு லட்சத்துக்கு மேல சம்பாதிக்க வழி பண்ணியிருக்கு.

அப்படி என்னடா மிரட்டுவாங்கனு யோசிக்கறீங்களா? அதெல்லாம் ரொம்ப மிரட்ட மாட்டோம். மணி பத்தரை ஆச்சு. எப்படியும் அந்த பொண்ணு PGக்கு வந்திருக்கும். இதான் சரியான நேரம். இப்ப குமார் ஃபோன் பண்றான் நீங்களே கேளுங்களேன்.

"ஹலோ அகிலாவா?"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"அது இருக்கட்டும். புது வேலையெல்லாம் நல்லா போகுதா?"

"சூப்பரா போகுது. நீங்க யாருனு சொல்லுங்களேன்"

"ஃபேக் போட்டு கம்பெனியை ஏமாத்திட்டு வேலைக்கு போனா எப்படிடீ சூப்பரா போகாம இருக்கும்?"

"நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"மாசம் நாப்பத்தி மூவாயிரம் சம்பளம் தானே? பொண்ணுங்களுக்கு டேக்ஸ் வேற கம்மியாச்சே. எப்படியும் முப்பத்தி அஞ்சாயிரம் கைக்கு வராது?"

"யார் நீ? உனக்கு என்ன வேண்டும். இந்த பயமுறுத்துற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம். போய் எங்க வேணா சொல்லிக்கோ. மிஞ்சி போனா வேலை போகுமா"

"நீ விருத்தாச்சலம் தானே? உங்க அப்பா ஹிஸ்டரி டீச்சர். அம்மா ஹவுஸ் ஃவைப் தான. நாளைக்கு சாயந்திரம் உன் ஃபோட்டோவோட நீ இப்படி கம்பெனியை ஏமாத்தி வேலைக்கு சேர்ந்திருக்கனு விழுப்புரம் மாலை மலர்ல வரும். உங்க அப்பா, அம்மா பெருமைப்படுவாங்க"

"ஐயோ அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. உங்களுக்கு என்ன வேணும்? நான் நாளைக்கே வேலையை விட்டுடறேன். அப்படி எதுவும் பண்ணிடாதீங்க"

"முதல் மாசம் சம்பளம் வாங்கிருப்பியே. அந்த ஏமாத்து பணத்தை உன் அப்பனுக்கு கொண்டு போய் கொடுத்துட்டியா?"

"இல்லை. நான் இன்னும் ஊருக்கு போகல. உங்களுக்கு என்ன வேணும்? ப்ளீஸ் சொல்லுங்க"

"சரி உன் சம்பளத்துல இருந்து இருபது ஆயிரம் ரூபாய் எடுத்து ரெடியா வை. எங்க வந்து கொடுக்கனும்னு நாளைக்கு காலைல எட்டு மணிக்கு நான் ஃபோன் பண்ணி சொல்றேன். அதுக்குள்ள ஏதாவது ஏமாத்தலாம்னு யோசிச்சா நஷ்டம் உனக்கு தான்"

"கண்டிப்பா நான் ஏமாத்த மாட்டேன். உங்க அக்கவுண்ட் நம்பர் வேணா சொல்லுங்க. நாளைக்கு காலைலயே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்"

"நான் சொல்றதை மட்டும் நீ செய். இந்த இருபதாயிரத்தோட உன்னை விட்டுடறேன். ஏதாவது தப்பா பண்ணலாம்னு யோசிச்சா உன் வாழ்க்கையே அழிஞ்சிடும். உங்க அப்பா, அம்மாவும் சந்தோஷமா ஊர்ல வாழ முடியாது. அப்பறம் எந்த ஃபிரெண்ட்ஸ்கும் இதை பத்தி ஃபோன் பண்ணி பேசாத. ஏன்னா உன்னை பத்தி சொன்னதே அதுல ஒருத்தன் தான். நீ யாருக்காவது ஃபோன் பண்ணனு தெரிஞ்சா நீ உன் வாழ்க்கையை மறந்துட வேண்டியது தான். உன் ஒரு மாச சம்பளத்துல பாதி பணத்துக்காக நீ உன் வாழ்க்கையையே அழிச்சிக்க மாட்டேனு நினைக்கிறேன்"

"கண்டிப்பா நான் எதுவும் செய்யமாட்டேன்"

"சரி. நாளைக்கு காலைல எட்டு மணிக்கு காசு எடுத்துட்டு ரெடியா இரு. நாங்க உனக்கு எட்டு மணிக்கு ஃபோன் பண்ணுவோம்"

(ஆட்டம் தொடரும்...)

34 comments:

விஜய் ஆனந்த் said...

:-)))

விஜய் ஆனந்த் said...

ஆட்டம் சூடு புடிக்குது போல!!!

விஜய் ஆனந்த் said...

// இந்த ஊர்ல ஏமாத்தறவன் தான் நல்லா இருக்கான். அதனால நான் அவுங்களை ஏமாத்தி பணம் பறிக்கலாம்னு யோசிச்சேன் //

வில்லன் வந்துட்டாரு!!! நல்ல நியாய சிந்தனையோட...

Ramya Ramani said...

ஓ ஓ இப்போ வில்லனே First Person -ஆ கதைய சொல்றாரா பேஷ்.. ஆட்டம் தொடர வாழ்த்துக்கள்

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

// இந்த ஊர்ல ஏமாத்தறவன் தான் நல்லா இருக்கான். அதனால நான் அவுங்களை ஏமாத்தி பணம் பறிக்கலாம்னு யோசிச்சேன் //

வில்லன் வந்துட்டாரு!!! நல்ல நியாய சிந்தனையோட...//

விஜய் ஆனந்த்,
எல்லாருக்கும் அவுங்க அவுங்க பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கும். இவருக்கு இது :)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

ஓ ஓ இப்போ வில்லனே First Person -ஆ கதைய சொல்றாரா பேஷ்.. ஆட்டம் தொடர வாழ்த்துக்கள்//

ரொம்ப நன்றிமா :)

வெட்டிப்பயல் said...

போன பகுதில வாசகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, நாளையிலிருந்து தினமும் ஒரு பாகம் வெளியிட முயற்சிக்கிறேன் :)

siva gnanamji(#18100882083107547329) said...

...தினம் ஒரு பாதிவா?
ரொம்ப டேங்கீஸ்

Divyapriya said...

இது வரைக்கும் ஹீரோ first personaa வந்து கதை சொன்னார், இப்போ வில்லனா? வில்லனோட பேர் என்னங்க? அத போடவே இல்லையே :-((

கதை நல்லா போகுது, திருடன கண்டு பிடிக்கறத விட, திருட்ட Prove பண்றது தான் interestingaa போகும்ன்னு தோணுது :-))

Anonymous said...

Villaina first persona kadha solradhu is a good change. But konja fasta padhivu pannunga veeti aapeesar!

-> Hermione

திவாண்ணா said...

உள்ளேன்!

திவாண்ணா said...

ஏன் ஏ சர்டிபிகேட்ன்னு புரிஞ்சுட்டுது. அப்படி சித்தரிக்க தகுந்த காரணம் இருக்கும்ன்னு நம்பறேன்.

இவன் said...

நல்லா போகுது கதை அடுத்த பாகம் எப்போ வெட்டி??

manikandan said...

*********
விஜய் ஆனந்த்,
எல்லாருக்கும் அவுங்க அவுங்க பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கும். இவருக்கு இது********

ஹே ராம்ல வசனம் வருமே! ஓநாயா இருந்து பார் ! அப்பதான் அதோட நியாயம் புரியும்ன்னு.

நீங்க இப்ப வில்லனா மாறிட்டீங்களா ?

Anonymous said...

நல்ல விறு விறுப்பான தொடர் வெட்டி...நன்றாக இருக்கிறது தொடர்ந்து படித்துவருகிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க.

Anonymous said...

நல்ல விறு விறுப்பான தொடர் வெட்டி...நன்றாக இருக்கிறது தொடர்ந்து படித்துவருகிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க.

Syam said...

சூப்பரா போகுது கதை, சாரி வெட்டி ரெண்டு வாரம் வெளியூர் அதுனால கரக்டா வந்து அட்டெண்டன்ஸ் போட முடியல :-)

Syam said...

இன்னைக்கு உக்காந்து 8 டு 14 படிச்சு முடிச்சுட்டேன்

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...

...தினம் ஒரு பாதிவா?
ரொம்ப டேங்கீஸ்//

முயற்சி செய்யறேனு சொல்லிருக்கேன்... இன்னும் ரெண்டு நாளைக்கு பதிவு இருக்கு. மீதியை அதுக்குள்ள எழுதனும் :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

இது வரைக்கும் ஹீரோ first personaa வந்து கதை சொன்னார், இப்போ வில்லனா? வில்லனோட பேர் என்னங்க? அத போடவே இல்லையே :-((
//
இதுல யார் வில்லனு எனக்கும் சரியா தெரியல :)

இதை சொல்றது வெற்றி... அதான் முதல்லயே இன்ஸ்டிடியூட்ல அசிஸ்டெண்ட்னு சொல்லிடறாரே :)

//
கதை நல்லா போகுது, திருடன கண்டு பிடிக்கறத விட, திருட்ட Prove பண்றது தான் interestingaa போகும்ன்னு தோணுது :-))//

இருக்கும்னு நினைக்கிறேன்... இல்லாமலும் போகலாம் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Villaina first persona kadha solradhu is a good change. But konja fasta padhivu pannunga veeti aapeesar!

-> Hermione//

Hermione,
அதான் தினமும் ஒரு பதிவுனு சொல்லிட்டனே :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

ஏன் ஏ சர்டிபிகேட்ன்னு புரிஞ்சுட்டுது. அப்படி சித்தரிக்க தகுந்த காரணம் இருக்கும்ன்னு நம்பறேன்.//

ஆமாம் திவா.. இருக்கும்னு நானும் இது வரைக்கும் நம்பிட்டு இருக்கேன் :)

கதையை எழுதி முடிக்காததால யார் கேள்விக்கும் என்னால நிச்சயம் பதில் சொல்ல முடியல :)

வெட்டிப்பயல் said...

// இவன் said...

நல்லா போகுது கதை அடுத்த பாகம் எப்போ வெட்டி??//

அடுத்த பாகம் இன்னைக்கு ராத்திரி :)

வெட்டிப்பயல் said...

// அவனும் அவளும் said...

*********
விஜய் ஆனந்த்,
எல்லாருக்கும் அவுங்க அவுங்க பண்றதுக்கு ஒரு காரணம் இருக்கும். இவருக்கு இது********

ஹே ராம்ல வசனம் வருமே! ஓநாயா இருந்து பார் ! அப்பதான் அதோட நியாயம் புரியும்ன்னு.
//
சூப்பர் :)

// நீங்க இப்ப வில்லனா மாறிட்டீங்களா ?//

ஆஹா... நான் வில்லனில்லை.. கதைல இப்ப பேசறவன் கெட்டவன் :)

வெட்டிப்பயல் said...

// Dubukku said...

நல்ல விறு விறுப்பான தொடர் வெட்டி...நன்றாக இருக்கிறது தொடர்ந்து படித்துவருகிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க.//

குருவே! நீங்களும் படிக்கறீங்களா... சூப்பர்...

நொம்ப டாங்க்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//Syam said...

சூப்பரா போகுது கதை, சாரி வெட்டி ரெண்டு வாரம் வெளியூர் அதுனால கரக்டா வந்து அட்டெண்டன்ஸ் போட முடியல :-)//

எங்கடா நாட்ஸை காணோமே, படிக்கறதை நிறுத்திட்டாரானு நினைச்சிட்டு இருந்தேன் :)

நல்ல வேளை வந்து சொன்னீங்க ;)

மங்களூர் சிவா said...

:))))

மங்களூர் சிவா said...

கதைய இன்னும் கொஞ்சம் த்ரில்லிங்கா மாத்துங்க வெட்டி

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

போன பகுதில வாசகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, நாளையிலிருந்து தினமும் ஒரு பாகம் வெளியிட முயற்சிக்கிறேன் :)
/

நன்றி நன்றி

MSK / Saravana said...

ஆட்டம் சூடு புடிக்குது..
:)))

//போன பகுதில வாசகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, நாளையிலிருந்து தினமும் ஒரு பாகம் வெளியிட முயற்சிக்கிறேன் :)//
:)))

Divya said...

அட........இப்போ வில்லன் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? வித்தியாசமா இருக்குதே!

வில்லனை first person ல போட்டு கதை கொண்டு போறது, கதையின் போக்கிற்கு பொருத்தமாயிருக்கு.

கதை சூப்பரா போகுது அண்ணா:))

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...

கதைய இன்னும் கொஞ்சம் த்ரில்லிங்கா மாத்துங்க வெட்டி//

அடுத்த பகுதி கொஞ்சம் த்ரில்லிங்கா இருக்கும்னு நினைக்கிறேன்... படித்து சொல்லவும் :)

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...

ஆட்டம் சூடு புடிக்குது..
:)))

//போன பகுதில வாசகர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, நாளையிலிருந்து தினமும் ஒரு பாகம் வெளியிட முயற்சிக்கிறேன் :)//
:)))//

மிக்க நன்றி சரவணா :)

வெட்டிப்பயல் said...

//Divya said...

அட........இப்போ வில்லன் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரா? வித்தியாசமா இருக்குதே!

வில்லனை first person ல போட்டு கதை கொண்டு போறது, கதையின் போக்கிற்கு பொருத்தமாயிருக்கு.

கதை சூப்பரா போகுது அண்ணா:))//

ரொம்ப நன்றிமா...

இந்த பகுதி ஏழாவதா வர வேண்டியது. தேவ் அண்ணாவின் அறிவுரையின் பேரில் பதினாலாவதா மாறிடுச்சு :)