பாருங்க. நம்ம தான் டகால்ட்டினு பார்த்தா இந்த பொண்ணு நமக்கு மேல இருக்குங்க. எப்படி தான் இப்படி கூச்சப்படாம பொய் சொல்றாங்களோனு தெரியலைங்க. இப்ப எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க? நான் சும்மா ஒரு பொய் சொன்னேன். அந்த பொண்ணு எப்படி தொடர்ந்து கண்டினியுஸா அடிச்சுது பார்த்தீங்க இல்லை. இதுல எனக்கு அட்வைஸ் வேற. கூகுல்ல வேலை செய்யற எனக்கு ஆறு மாசமா வேலை தேடற பொண்ணு அட்வைஸ் பண்ணுது பாருங்க. அது தான் கொடுமை.
.....
என்னடா இன்னைக்கு வெள்ளிக்கிழமை இவன் ஊருக்கு போகலைனு பார்க்கறீங்களா? நான் மாசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கு போகறது வழக்கம். போன வாரம் போனதால இந்த வாரம் போகலை. இப்ப என் ரூமுக்கு போயிட்டு இருக்கேன். என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.
இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கழுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.
இருங்க ஏதோ போன் வருது யாருனு பார்க்கறேன். எதோ புது நம்பர்ல இருந்து வருது.
"ஹலோ, ரவி ஹியர்"
"நாங்க விப்ரோல இருந்து கூப்பிடறோம். நீங்க எங்க வாட்ச்மேன்கிட்ட கொடுத்த ரெஸ்யும் கிடைச்சுது. உங்களுக்கு நாளைக்கு இண்டர்வியூ. காலைல அஞ்சு மணிக்கு எலக்ட்ரானிக் சிட்டி ப்ராஞ்ச்க்கு வந்துடுங்க. அங்க நீங்க ரெஸ்யும் கொடுத்த வாட்ச்மேன் இருப்பாரு. அவர்கிட்ட இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு"
இது அந்த பொண்ணு வேலை தாங்க. ஊருல இருந்து வந்துட்டா போல
"காலைல அஞ்சு மணிக்கா?"
"ஆமாங்க"
"நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன். திங்க கிழமை காலைல மூணு மணிக்கா அந்த பக்கம் வருவேன். அப்ப வேணா அட்டெண்ட் பண்ணலாமா? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"
"இப்படியெல்லாம் பண்றதால தான் உங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டீங்குது. போன வாரம் தானே ஊருக்கு போனீங்க. அதுக்குள்ள என்ன திரும்ப ஊருக்கு"
"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"
"ஹலோ நான் நித்யா பேசறேன்"
"எந்த நித்யா?"
"ஹிம்... நினைவெல்லாம் நித்யா. உங்க கூட அன்னைக்கு பஸ்ல வந்தனே அந்த நித்யா"
"ஓ... நம்ம டூபாக்குர் பார்ட்டி. நாலு ஆஃபர் லெட்டர் வாங்கன நித்யாவா?"
"ஆமாம். நீங்க சொல்றதை பார்த்தா நிறைய நித்யாவை தெரியும் போல?"
"அதெல்லாம் இல்லைங்க... எனக்கு உங்க பேர் கூட மறந்து போச்சு"
"ஆமா. இவர் கஜினி சூர்யா. எல்லாத்தையும் மறந்து போயிட்டாரு. சும்மா கதைவிடாதப்பா"
செம வாயாடியா இருக்கா பாருங்க.
"சரி சொல்லுங்க. எப்ப ஊர்ல இருந்து வந்தீங்க?"
"நான் இன்னைக்கு காலைல தான் வந்தேன். வியாழக்கிழமை கிளம்பினா கூட்டம் அதிகம் இருக்காதுனு யோசிச்சி வந்தேன்"
"பயங்கரமான புத்திசாலிங்க நீங்க. உங்களுக்கே வேலை கிடைக்கலனா அதுல ஏதோ சதி இருக்குனு நினைக்கிறேன்"
"சதி இல்லைங்க. என் விதி. நான் வேலை தேடி பெங்களூர் வந்தே ஒரு மாசம் தான் ஆச்சு"
"ஓ அதானே பார்த்தேன்... இல்லைனா உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு பத்து பதினைஞ்சி ஆஃபர் லெட்டர் வாங்கியிருப்பீங்களே."
"ஓட்றீங்க பாத்தீங்களா?"
"இல்லை இல்லை. சும்மா சொன்னேன்"
"அப்பறம் அன்னைக்கு நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. இல்லைனா அன்னைக்கு பஸ் பிடிச்சி போக ரொம்ப கஷ்டப்பட்டிருக்கனும். இந்த தடவை மறக்காம காலண்டர் எடுத்துட்டு வந்துட்டேன். பௌர்ணமி அன்னைக்கு கண்டிப்பா புறப்பட மாட்டேன்"
"ஹிம்ம்ம்"
"அப்பறம் இந்த வாரம் ஏதாவது இண்டர்வியூ அட்டெண்ட் பண்றீங்களா?"
"இல்லைங்களே. ஏன் நீங்க ஏதாவது அட்டெண்ட் பண்றீங்களா?"
"ஆமாம். நாளைக்கு கோரமங்களால XYZ கம்பெனில காலைல 10 மணிக்கு வாக் இன். 70% க்கு மேல இருந்தா அட்டெண்ட் பண்ணலாம். வெறும் C தெரிஞ்சா போதும்னு சொல்றான். சும்மா வந்து அட்டெண்ட் பண்ணி பாக்கறீங்களா?"
ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவளை கலாய்ப்போம்.
"சரிங்க. வர ட்ரை பண்றேன்"
"என்னது ட்ரையா? உங்களுக்கே ஓவரா தெரியல. ஒழுங்கா நாளைக்கு வந்து சேருங்க"
என்னங்க இப்படி பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டா? ரொம்ப ராங்கி பிடிச்ச பொண்ணா இருக்கா. நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க? நாளைக்கு போகாம எஸ்கேப் ஆகிடலாம். அவ கேட்டா பொய் சொல்றதுக்கு நமக்கு தெரியாதா என்ன?
(ஆட்டம் தொடரும்...)
39 comments:
மொத போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))
ஆட்டம் சூப்பரப்பு :-)
/
"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"
/
ROTFL
:)))))
கலக்கல்
நெக்ஸ்ட் பார்ட் நாளைக்கா ஒரு நாள் கழிச்சா???
ஆட்டம் சூப்பரப்பு :-)
இதுவரை வந்தது எல்லாம் முன்பே
படிச்சது..இனி கதை எப்படிப் போகும்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
/
திங்க கிழமை காலைல மூணு மணிக்கா அந்த பக்கம் வருவேன். அப்ப வேணா அட்டெண்ட் பண்ணலாமா? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"
/
:)))))))))
நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க?
சூப்பர்.
வாட் நெக்ஸ்ட்
அப்பாடி!!!முன்னாடி படிச்சதெல்லாம் முடிஞ்சிடுச்சி...இனிமே...புதுசு கண்ணா புதுசு!!!
பாஸூ....இது மாதிரியே மீதித்தொடரையும் தெனக்கும் ஒண்ணா போட்ருங்களேன்...
eagerly waiting for 5th part balaji..
Repeaaatu...இது வரைக்கும் தான் ஏற்கனவே படிச்சாசே, அடுத்த பகுதிக்கு மீ டூ வெயிட்டிங்..
மத்தபடி இதுல வெட்டி (யா பேசுர) touch நிறைய இருக்கிறதால அப்படியே maintain பண்ணுங்க..
-கணேஷ்
இந்த மாதிரி கதை படிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சுனு நினைக்கிறேன்..போர் அடிக்கும் போதெல்லாம்
பழைய கதைகளை படிச்சுப் படிச்சு போர் அடிச்சுடுச்சு.. சனி'யை எதிர் பார்த்து...
-கணேஷ்
தலைவர் படம் பார்த்தாச்சா?? இங்க $20.5 :( அதுவும் தலைவர் 35 நிமிட்ஸ் தான் வர்றாராம்.. மெதுவா பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்..
மத்தபடி சந்திரமுகி மாதிரி guest role தான்.. over expectation udambuku Agathu nu en friend sonnan...
-கணேஷ்
//Anonymous said...

-கணேஷ்//
நானும் போகல. இங்கயும் 21 தான்...
நாளைக்கு மம்மி போகலாம்னு ப்ளான் :-)
//உருப்புடாதது said...
மொத போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))//
ரொம்ப சந்தோஷங்க :-)
நாங்களும் சுமாரா படிக்கற அளவுக்கு தாங்க எழுதுவோம். அப்ப அப்ப படிக்கலாம் :-))
//mgnithi said...
ஆட்டம் சூப்பரப்பு :-)//
மிக்க நன்றி mgnithi :-)
//மங்களூர் சிவா said...
/
"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"
/
ROTFL
:)))))
கலக்கல்//
மிக்க நன்றி சிவா!!!
//மங்களூர் சிவா said...
நெக்ஸ்ட் பார்ட் நாளைக்கா ஒரு நாள் கழிச்சா???//
நாளைக்கு போடலாம்னு ப்ளேன்...
வாசகர்கள் விருப்பட்டா இன்னைக்கே கூட போடலாம். ரெடியா தான் இருக்கு :-)
ஐந்து வாசகர்களுக்கு மேல விருப்பப்பட்டா அடுத்த பகுதி இன்றே :-)
இந்த பகுதியை இப்போ தான் படிச்சேன், மற்ற பகுதிகளையும் படிச்சால் தான் புரியும் என்று நினைக்கிறேன்.
ஒரு வாசகர் ஓட்டு: முடிந்தால் இன்றே எழுத முடியுமா ப்ளீஸ்?
இன்று தான் முழு தொடரையும் படித்தேன், ரொம்ப நல்லா இருக்கு.
வாலி படத்தில் சிம்ரன் - அஜீத்(திருமணத்துக்கு முன்) கான்வர்சேஷன் மாதிரியே இருக்கு.
//மங்களூர் சிவா said...
ஆட்டம் சூப்பரப்பு :-)//
ரொம்ப டாங்க்ஸ் சிவா :-)
// siva gnanamji(#18100882083107547329) said...
இதுவரை வந்தது எல்லாம் முன்பே
படிச்சது..இனி கதை எப்படிப் போகும்னு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//
சீக்கிரம் போடறேன்... நீங்க தான் படிச்சி சொல்லனும் :-)
// வெங்கட்ராமன் said...
நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க?
சூப்பர்.
வாட் நெக்ஸ்ட்//
அடுத்த பாகத்துல தெரியப்போகுது :-)
//விஜய் ஆனந்த் said...
அப்பாடி!!!முன்னாடி படிச்சதெல்லாம் முடிஞ்சிடுச்சி...இனிமே...புதுசு கண்ணா புதுசு!!!
பாஸூ....இது மாதிரியே மீதித்தொடரையும் தெனக்கும் ஒண்ணா போட்ருங்களேன்...//
ஆஹா.. விஜய் ஆனந்த்...
தினமும் போட்டா ஒரு நாள் படிக்காம விட்டாலும் சோம்பேறித்தனத்தால மொத்த கதையும் படிக்காம போக வாய்ப்பிருக்கு.
அதனால ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு போடறேனே :-)
//LOLLU said...
eagerly waiting for 5th part balaji..//
சீக்கிரம் போட்டுடலாம் லொள்ளு :-)
// Anonymous said...
Repeaaatu...இது வரைக்கும் தான் ஏற்கனவே படிச்சாசே, அடுத்த பகுதிக்கு மீ டூ வெயிட்டிங்..
மத்தபடி இதுல வெட்டி (யா பேசுர) touch நிறைய இருக்கிறதால அப்படியே maintain பண்ணுங்க..
-கணேஷ்//
அப்படியே மெயிண்டெயின் பண்ண முடியுமானு தெரியலையே :-(
// Anonymous said...
இந்த மாதிரி கதை படிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சுனு நினைக்கிறேன்..போர் அடிக்கும் போதெல்லாம்
பழைய கதைகளை படிச்சுப் படிச்சு போர் அடிச்சுடுச்சு.. சனி'யை எதிர் பார்த்து...
-கணேஷ்//
சேம் ப்ளட் :-)
//கயல்விழி said...
ஒரு வாசகர் ஓட்டு: முடிந்தால் இன்றே எழுத முடியுமா ப்ளீஸ்?
இன்று தான் முழு தொடரையும் படித்தேன், ரொம்ப நல்லா இருக்கு.
வாலி படத்தில் சிம்ரன் - அஜீத்(திருமணத்துக்கு முன்) கான்வர்சேஷன் மாதிரியே இருக்கு.//
பனிரெண்டு பகுதி எழுதி வெச்சிட்டேன். ஒரு வாரமா எதுவும் எழுதல... இன்னைக்கு எழுதலாம்னு திட்டம் பண்ணிருக்கேன். பார்க்கலாம் :-)
இரண்டாவதா இரண்டு ஓட்டு (எனக்கும், என் நண்பனுக்கும் சேர்த்து :D).. இன்றே ஐந்தாம் பகுதிக்கு...
வெள்ளிக்கிழமை அதுவுமா வேற என்ன வேல.. எப்படா மூனு மணியாகும்னு இருக்கேன். சம்மர்ல, எல்லா வெள்ளியும் மூனு மணிக்கே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டாங்க :-)
-கணேஷ்
//என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.
இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கழுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.
//
201, விவேக் நகர், கிருஷ்ணா கபே, ஃபோரம்ன்னு, அட... அட... அடா... என்னா நேட்டிவிட்டி டச்சு!
வழக்கம்போல கத சூப்பராப் போகுது.
கலக்கறீங்க பாலாஜி.
இதுக்கு நான் ஈஜிபுரா-வுல இருந்து பின்னூட்டம் போடுறேன் :-)
இப்பல்லாம் பக்கத்திலயே அஞ்சப்பர், பொன்னுசாமி, பாலாஜி பவன், மதுரை இட்லி கடைன்னு வந்தாச்சு.
சரி, அப்ப நான் வர்ட்டா?
கிருஷ்ணா கபேல லன்ச் தாக்கிட்டு இந்த வார 'பஜ்ஜி' வாங்கிட்டு வரணும்.
// ஆஹா.. விஜய் ஆனந்த்...
தினமும் போட்டா ஒரு நாள் படிக்காம விட்டாலும் சோம்பேறித்தனத்தால மொத்த கதையும் படிக்காம போக வாய்ப்பிருக்கு.
அதனால ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு போடறேனே :-) //
அப்ப சோம்பேறின்றீங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்....நாங்கல்லாம், ஆபீஸு வேலைய மட்டுந்தான் சோம்பேறித்தனத்தால ஒண்ணு விட்டு ஒரு நாளோ இல்ல வாரம் ஒருக்காவோ செய்வோம், ஆனா, கத படிக்க கரெக்டா ஆஜராய்டுவோம்னு பச்சைத்தமிழர்கள் சார்பா சொல்லிக்கிறேன்....
//ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவளை கலாய்ப்போம்.
//
எனக்கெனவோ,கஜினி படம் பாக்குற மாதிரியே ஒரு பீலிங்...ஹி...ஹி...
Friend,
You may argue that it is just a light hearted post and cannot be taken seriously.But, the cocky attitude of "Look at me!me working in Google.Rest you all are lesser mortals", is it from the charecter's or is it your own?
//sriram said...
Friend,
You may argue that it is just a light hearted post and cannot be taken seriously.But, the cocky attitude of "Look at me!me working in Google.Rest you all are lesser mortals", is it from the charecter's or is it your own?//
நண்பரே,
இந்த கதையில் எங்கேயும் என்னை தேட வேண்டாம். இதில் இருக்கும் எந்த கதாபாத்திரத்திலும் நான் இல்லை :-)
//தமிழினி..... said...
//ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவளை கலாய்ப்போம்.
//
எனக்கெனவோ,கஜினி படம் பாக்குற மாதிரியே ஒரு பீலிங்...ஹி...ஹி...//
தமிழினி,
ஒரு உண்மை சொல்லவா?
இந்த கதை நான் கஜினி படம் இன்ஸ்பிரேஷன்ல தான் ஆரம்பிச்சேன். ஆனா ஆறு மாசம் கதை எழுதாம விட்டதுல அந்த தீம் மாறிடுச்சி :-)
இப்பவும் இந்த ரெண்டு பாத்திரங்கள் பேசற மாதிரி எழுதும் போதும் "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டு தான் ஓடிட்டு இருக்கும் :-)
//விஜய் ஆனந்த் said...
// ஆஹா.. விஜய் ஆனந்த்...
தினமும் போட்டா ஒரு நாள் படிக்காம விட்டாலும் சோம்பேறித்தனத்தால மொத்த கதையும் படிக்காம போக வாய்ப்பிருக்கு.
அதனால ஒரு நாள் விட்டு ஒரு நாள்னு போடறேனே :-) //
அப்ப சோம்பேறின்றீங்களா?? அவ்வ்வ்வ்வ்வ்....நாங்கல்லாம், ஆபீஸு வேலைய மட்டுந்தான் சோம்பேறித்தனத்தால ஒண்ணு விட்டு ஒரு நாளோ இல்ல வாரம் ஒருக்காவோ செய்வோம், ஆனா, கத படிக்க கரெக்டா ஆஜராய்டுவோம்னு பச்சைத்தமிழர்கள் சார்பா சொல்லிக்கிறேன்....//
ஆஹா...
விஜய் ஆனந்த். உங்களோட ஆர்வம் புரியுது :-)
ஆனா மக்களோட பல்ஸ் பார்த்து கதைல ஏதாவது மாத்தனும்னா எனக்கு ஒரு நாள் தேவைப்படும். அதனால தான் ஒரு நாள் விட்டு ஒரு நாள் :-)
// Anonymous said...
//என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.
இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கழுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.
//
201, விவேக் நகர், கிருஷ்ணா கபே, ஃபோரம்ன்னு, அட... அட... அடா... என்னா நேட்டிவிட்டி டச்சு!
வழக்கம்போல கத சூப்பராப் போகுது.
கலக்கறீங்க பாலாஜி.
இதுக்கு நான் ஈஜிபுரா-வுல இருந்து பின்னூட்டம் போடுறேன் :-)
இப்பல்லாம் பக்கத்திலயே அஞ்சப்பர், பொன்னுசாமி, பாலாஜி பவன், மதுரை இட்லி கடைன்னு வந்தாச்சு.
சரி, அப்ப நான் வர்ட்டா?
கிருஷ்ணா கபேல லன்ச் தாக்கிட்டு இந்த வார 'பஜ்ஜி' வாங்கிட்டு வரணும்.//
ஆஹா...
நான் 2003ல ஆறு மாசம் விவேக் நகர்ல இருந்தேன். அதுக்கு அப்பறம் 2006 பிப்ரவரி வரைக்கும் எலக்ட்ரானிக் சிட்டில இருந்தேன் :-)
ஆனா எப்பவும் படம் பார்க்க நான் பாலாஜி தியேட்டர் தான் வருவேன்.
அப்பவெல்லாம் கிருஷ்ணா கபே மட்டும் தான்... ரெண்டு வருஷத்துல எவ்வளவு மாற்றம்???
//தமிழினி,
ஒரு உண்மை சொல்லவா?
இந்த கதை நான் கஜினி படம் இன்ஸ்பிரேஷன்ல தான் ஆரம்பிச்சேன். ஆனா ஆறு மாசம் கதை எழுதாம விட்டதுல அந்த தீம் மாறிடுச்சி :-)
இப்பவும் இந்த ரெண்டு பாத்திரங்கள் பேசற மாதிரி எழுதும் போதும் "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டு தான் ஓடிட்டு இருக்கும் :-)
//
ஒ...அப்படினா நான் correct ஆ தான் guess பண்ணிருக்கேன்...
ஆனா,கடைசில கஜினி மாதிரி நெகடிவ்வா முடிவு கொடுத்துராதிங்க....இத உங்க கதைகளோட தீவிர ரசிகையின் வேண்டுகோளாக எடுத்து கொள்ளவும்,..... :)))
Post a Comment