தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 12, 2008

ஆடு புலி ஆட்டம் - 10

Java is an object oriented programming language. I beleive you people will have some knowledge on programming languages like C, C++

என்னடா இவன் இங்க உக்கார்ந்திருக்கறானு பாக்கறீங்களா? சரி என்ன பிரச்சனைனு இறங்கி பார்த்துடலாம்னு இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்துட்டோம். அது என்ன "டோம்"னு சொல்றானு பாக்கறீங்களா? நானும் நித்யாவும் தான் சேர்ந்திருக்கோம். அவளை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவ தான் பொண்ணுங்களுக்கு எங்கயுமே சில அட்வாண்டேஜ் இருக்கும். அதனால ரெண்டு பேருமே சேர்ந்து கண்டு பிடிக்கலாம்னு ப்ளான்.

அப்பறம் வினோதினி அக்கா அன்னைக்கு ஆபிஸ் போகல. அவனுக்கு காசும் கொடுக்கல. அதே மாதிரி அவுங்க ஊர்ல எந்த பத்திரிக்கைலயும் எதுவும் தப்பா வரல. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிட்டு மூணு நாளா எங்கயும் போகாம உக்கார்ந்திருக்காங்க. இன்னும் பயம் இருக்கு.

நான் தினமும் காலைல ஏழு மணிக்கு ஆபிஸ் போயிட்டு மதியம் மூணு மணிக்கு வரேன். அப்பறம் நாலு மணிக்கு இந்த ட்ரெயிங் இண்ஸ்டிடியூட். நாலு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் க்ளாஸ். அப்பறம் லேப் அவர்ஸ்.வேற ஸ்லாட் கிடைக்கல. ரொம்ப கொடுமையா இருக்கு. எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ஏதாவது க்ளூ கிடைக்காமலா போகும்? அப்படி ஏதாவது கிடைச்சா இந்த கொடுமைல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

எனக்கு சேரும் போதே கொஞ்சம் சந்தேகம் வர மாதிரி தான் இருக்குது. அப்ளிகேஷன்ல நிறைய ஃபில் பண்ண சொல்றாங்க. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்களை பத்தின விவரம் எல்லாம் கேட்டிருக்கு. ரெண்டு பேரும் எல்லாத்தையும் மாத்தி தான் கொடுத்திருக்கோம்.

இந்த ரெண்டு நாள்ல இங்க இருக்கறவங்களை நோட் பண்ணது இதுதான்.

ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க.

அஸிஸ்டெண்ட் வெற்றி அண்ணா ரொம்ப நல்லவரா தெரியறாரு. பசங்களுக்கு எல்லாம் நல்லா ஹெல்ப் பண்றாரு. நிறைய ஸ்டெடி மெட்டிரியல்ஸ் எல்லாம் பசங்களுக்கு சைக்லோஸ்டைல் பண்ணி கொடுக்கறாரு. நேத்து கூட ஜாவா படிக்கிற பசங்களுக்கு ஆரக்கிள் மெட்டிரியல் எல்லாம் சைக்லோஸ்டைல் பண்ணி கொடுத்தாரு. அதுக்கு காசும் வாங்கறதில்லை போல. இவரை வெச்சி ஏதாவது கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம். பார்க்கலாம்.

ட்ரெயினர்ஸ் பத்தி எதுவும் அதிகமா தெரியல. எல்லாரும் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடற கூட்டம் மாதிரி தெரியுது. ஒரு சிலர் வேலையும் பார்த்துட்டு இங்க பார்ட் டைமாவும் வேலை செய்வாங்க போல தெரியுது. எங்களுக்கு ஜாவா எடுக்கறது சுகுமாரன். இங்க நிறைய தமிழ் ஆளுங்க தான். இதுக்கு முந்தின பேட்ச்க்கு ஜாவா எடுக்கறவர் கூட தமிழ் தான். ஆரக்கிள் எடுக்கறது, C, யுனிக்ஸ், டாட் நெட் எல்லாத்துக்கும் பாடம் எடுக்கறதுலயும் தமிழ் ஆளுங்க இருக்காங்க.

இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான். அது ஏன் ஆராக்கிள் க்ளாஸ்னு யோசிக்கறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு. உங்களுக்கே போக போக புரியும்.

அவனுக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரியும். அவனும் எனக்கு கண்டிப்பா உதவறனு சொல்லியிருக்கான். அடுத்த திங்க கிழமைல இருந்து அவனுக்கு க்ளாஸ். ஏழு மணி பேட்ச்.

---------


இந்த ஒரு வாரத்துல எதுவும் பெருசா எதுவும் நடக்கல. அந்த சுகுமாரனுக்கு ஜாவா ஓரளவுக்கு தான் தெரிஞ்சிருக்குது. நான் கொஞ்சம் கஷ்டமா கேள்வி கேட்டா, நான் அடுத்த க்ளாஸ்ல சொல்றனு சொல்றாரு. அப்பறம் நாங்க லேப்ல இருக்கும் போது தினேஷ் சாரை கூப்பிட்டு வராரு. தினேஷ் அந்த கேள்விக்கு எல்லாம் சாதாரணமா சொல்றாரு. இந்த அளவு கூட ஜாவா தெரியாம சுகுமாரன் எப்படி இங்க காலத்தை ஓட்றாரு. சுகுமாரனும் அந்த ஆரக்கிள் எடுக்கற ப்ரேமும் ரொம்ப க்ளோஸ் போல. ப்ரேம் ரொம்ப கடலை போடறாரு.

நான் கேள்வி கேக்கறதை பார்த்து நித்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். அதே மாதிரி லேப்ல ரெண்டு பேரும் ஒரே சிஸ்டம் தான். அவளும் இப்ப தான் ஜாவா கத்துட்டு இருக்கா. அவக்கிட்ட சுகுமாரன் ரொம்பவே வழியறாரு. அவருக்கு எப்படியும் ஆப்பு இருக்கும்னு நினைக்கிறேன். வெற்றி அண்ணனையும் இவரு ஓவரா விரட்டிட்டு இருக்காரு. அதனால அந்த அண்ணனை கைல போட்டா வேலை சீக்கிரம் நடக்கும். ஆனா அவர் இப்படி ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு இருக்காரே. எப்படி இவரை நம்ம மடக்கலாம்னு யோசிக்கனும்.

எப்படியும் அசோக் ஒரு ரெண்டு மூணு நாள்ல அந்த அண்ணனை மடக்கி போட்டுடுவான். அப்ப தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும். இன்னைக்கு தான் அவன் சேர்ந்துட்டானே. அடுத்த வாரத்துல எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.

---------

அசோக் சேர்ந்து இன்னையோட ஒரு வாரமாச்சு. எதுவும் பெருசா பண்ணாம இருக்கான். அவனுக்கு ஒரு வேலை கொடுத்துருக்கேன். அதை மட்டும் அவன் பண்ணிட்டானா, நாங்க அடுத்த வாரம் கோர்ஸ் போகனுமா இல்லை வேண்டாமானு முடிவு எடுத்துடலாம். மணி பன்னெண்டு ஆச்சு. இன்னும் அவன் ஆளை வேற காணோம். போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கு. ஒன்னுமே புரியலையே. ஏதாவது பிரச்சனையாகிருக்குமா?

(ஆட்டம் தொடரும்...)

39 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

படிச்சுட்டு வர்ரேன்

siva gnanamji(#18100882083107547329) said...

டெக்னிகல் வார்த்தைகள்தான் புரியல்லே. மற்றபடி கதை ஜோரா
நகருது

siva gnanamji(#18100882083107547329) said...

ஒரு 'மீ தி பர்ஸ்ட்டு' போட்டிருக்கலாமோ?

Divya said...

புது புது கதாபாத்திரங்கள் இந்த பகுதியில் அறிமுகமா??
பேரெல்லாம் இன்னும் மனசுல நிற்கல,
போக போக பேரு பழகிடும்னு நினைக்கிறேன்.

Divya said...

\இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான்.\\

துப்பறிய ரவியும் நித்யாவும் போறாதா??

அசோக்கும் துப்பறிவு வேலைக்கு சேர்ந்திருக்காரு, இவரு[இவராச்சும் உருப்படியா] என்ன பண்றார்னு பார்க்கலாம் , நெக்ஸ்ட் பார்டல.[ஜஸ்ட் கிட்டிங்!]

Divya said...

\\அவக்கிட்ட சுகுமாரன் ரொம்பவே வழியறாரு.அவருக்கு எப்படியும் ஆப்பு இருக்கும்னு நினைக்கிறேன் \\


:)))

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...

டெக்னிகல் வார்த்தைகள்தான் புரியல்லே. மற்றபடி கதை ஜோரா
நகருது//

டெக்னிகல் எல்லாம் இல்லை. எல்லாம் சும்மா சாப்ட்வேர் கோர்ஸ் பேரு :-)

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

ஒரு 'மீ தி பர்ஸ்ட்டு' போட்டிருக்கலாமோ?//

போடலைனாலும் நீங்க தானே பர்ஸ்ட்டு :-)

வெட்டிப்பயல் said...

// Divya said...

புது புது கதாபாத்திரங்கள் இந்த பகுதியில் அறிமுகமா??
பேரெல்லாம் இன்னும் மனசுல நிற்கல,
போக போக பேரு பழகிடும்னு நினைக்கிறேன்.//

எது தேவையோ அது மட்டும் மனசுல பதிஞ்சிடும்மா... அந்த தைரியத்துல தான் எழுதியிருக்கேன் :-)

வெட்டிப்பயல் said...

// Divya said...

\இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான்.\\

துப்பறிய ரவியும் நித்யாவும் போறாதா??

அசோக்கும் துப்பறிவு வேலைக்கு சேர்ந்திருக்காரு, இவரு[இவராச்சும் உருப்படியா] என்ன பண்றார்னு பார்க்கலாம் , நெக்ஸ்ட் பார்டல.[ஜஸ்ட் கிட்டிங்!]//

போதாதுனு நினைச்சி தானே நண்பனையும் வர சொல்லியிருக்கான் :-)

Ramya Ramani said...

ஆஹா பகடை காய் நகத்த ஆரபிச்சுட்டாரா ஹீரோ..சூப்பர் :)

\\நானும் நித்யாவும் தான் சேர்ந்திருக்கோம். அவளை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவ தான் பொண்ணுங்களுக்கு எங்கயுமே சில அட்வாண்டேஜ் இருக்கும். \\

அட அப்படியா! என்ன அட்வாண்டேஜ் பாப்போம் :)

Anonymous said...

Kadhai Nalla poguthu .... Rajesh Kumar, Subha, PKP ivanga naval pdikkira mathiri oru feeling .....
Thala innnum viru virrupa ethir parkirom

Anbu

சிநேகிதன்.. said...
This comment has been removed by the author.
சிநேகிதன்.. said...

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க//

நம்ம ஹீரோ நல்லாவே துப்பறியறாரு!!!ம்ம்ம்ம்

தமிழினி..... said...

தல...கதை நல்ல வேகத்தில போகுது...

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. //

ரைட்டு...!!!கதைய அண்ணி படிச்சாங்களா?? :))

//சைக்லோஸ்டைல்//

அப்படினா?

Anonymous said...

Kadhaya konjam fasta nagathunga or nariya elundunga in an episode. Next release eppo? waiting for that.
BTW, Kuselan review ellam podalaya? samma flop movie..

-> Hermione.

Divyapriya said...

ரவி, நித்யாவ அந்த Institute லயே சேத்திடீங்களே…செம idea…ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா ;-)

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க.//

ஹா ஹா :-D

வெங்கட்ராமன் said...

ஆஹா பகடை காய் நகத்த ஆரபிச்சுட்டாரா ஹீரோ..சூப்பர் :)

ரிப்பீட்டேய் . . . . .

Bharath said...

Sorry dude!! ரியலிஸ்டிக்காக சென்று கொண்டிருந்த கதை.. சினிமாத்தனமா ஆயிடுச்சு!!!

hopefully it will come back in track..

Sen22 said...

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க//

:))))))

அதென்னங்க ரூபா-ன்ற பேர்ல இருக்கிறவங்க எல்லாருமே அழகா இருக்காங்க...

என் கூட work-பன்ன மூன்று ரூபாவுமே அழகுதான்...

ஜியா said...

:)))

Googlela 8 hrs thaan workaa?? :O... Romba nalla companyaa irukkum pola ;))

Vijay said...

Boss,
இவ்வளவு சீக்கிரமா இந்த பாகத்தை முடிச்சிட்டீங்களே? :(

Anonymous said...

\\ஆடு புலி ஆட்டம் முழுக்க முழுக்க கற்பனை கதை. கதாபாத்திரங்களுக்கும் கதாசிரியருக்கும் (அதான் எனக்கும்) எந்த விதமான சம்பந்தமும் இல்லை.\\
இந்த அறிவிப்பு படிச்சதும் ஒரு பழமொழி நினைவுக்கு வந்து தொலையுது ...
" எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல "
-கீதா

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

\\ஆடு புலி ஆட்டம் முழுக்க முழுக்க கற்பனை கதை. கதாபாத்திரங்களுக்கும் கதாசிரியருக்கும் (அதான் எனக்கும்) எந்த விதமான சம்பந்தமும் இல்லை.\\
இந்த அறிவிப்பு படிச்சதும் ஒரு பழமொழி நினைவுக்கு வந்து தொலையுது ...
" எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல "
-கீதா//

கீதா,
அப்படி இல்லைங்க. இங்க எழுதப்படற ஒவ்வொரு கதைக்கும் இது உங்க கதையா உங்க கதையானு பின்னூட்டத்துக்கு பதில் சொல்லி ஓஞ்சி போயாச்சி. அதனால தான் :-)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

ஆஹா பகடை காய் நகத்த ஆரபிச்சுட்டாரா ஹீரோ..சூப்பர் :)
//
ஆரம்பிச்சிட்ட மாதிரி தான் தெரியுது :-)

//
\\நானும் நித்யாவும் தான் சேர்ந்திருக்கோம். அவளை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவ தான் பொண்ணுங்களுக்கு எங்கயுமே சில அட்வாண்டேஜ் இருக்கும். \\

அட அப்படியா! என்ன அட்வாண்டேஜ் பாப்போம் :)//

அதான் தினமும் கடலை போடறாங்களே... இதுக்கு மேல என்ன அட்வாண்டேஜ் வேணும் ;-)

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Kadhai Nalla poguthu .... Rajesh Kumar, Subha, PKP ivanga naval pdikkira mathiri oru feeling .....
Thala innnum viru virrupa ethir parkirom

Anbu//

கண்டிப்பா எழுத முயற்சி செய்கிறேன்.. நன்றி :)

வெட்டிப்பயல் said...

//சிநேகிதன்.. said...

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க//

நம்ம ஹீரோ நல்லாவே துப்பறியறாரு!!!ம்ம்ம்ம்//

அது மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுதா ;)

வெட்டிப்பயல் said...

//தமிழினி..... said...

தல...கதை நல்ல வேகத்தில போகுது...
//
மிக்க நன்றி :-)

//
//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. //

ரைட்டு...!!!கதைய அண்ணி படிச்சாங்களா?? :))
//
படிச்சாலும் ரூபா அழகு தான் :-)


// //சைக்லோஸ்டைல்//

அப்படினா?//

சும்மா மெட்டிரியல்ஸ் எல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து நீட்டா அடுக்கி பைண்டிங் பண்ணி தரதுனு வெச்சிக்கோயேன் :-) (புக் மாதிரி)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Kadhaya konjam fasta nagathunga or nariya elundunga in an episode. Next release eppo? waiting for that.
//
அடுத்த பாகம் வெள்ளி காலை:-)


// BTW, Kuselan review ellam podalaya? samma flop movie..

-> Hermione.//
பாதி எழுதியிருக்கேன்.. போடுவோம் :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

ரவி, நித்யாவ அந்த Institute லயே சேத்திடீங்களே…செம idea…ஒரு கல்லுல ரெண்டு மாங்காவா ;-)
//
ஆஹா... நீங்க கதையை எப்பவுமே சரியா புரிஞ்சிக்கறீங்களே :)

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க.//

ஹா ஹா :-D//

இந்த மாதிரி நிறைய நடந்திருக்கு :-)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

ஆஹா பகடை காய் நகத்த ஆரபிச்சுட்டாரா ஹீரோ..சூப்பர் :)

ரிப்பீட்டேய் . . . . .//

ஆமாம் வெங்கட்ராமன் :-)

வெட்டிப்பயல் said...

//Bharath said...

Sorry dude!! ரியலிஸ்டிக்காக சென்று கொண்டிருந்த கதை.. சினிமாத்தனமா ஆயிடுச்சு!!!

hopefully it will come back in track..//

பாரத்,
கதையே முழுக்க சினிமா மாதிரி தான் இருக்கும் :-) (சினிமா மாதிரி இருந்தா தப்பா?)

வெட்டிப்பயல் said...

// Sen22 said...

//ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க//

:))))))

அதென்னங்க ரூபா-ன்ற பேர்ல இருக்கிறவங்க எல்லாருமே அழகா இருக்காங்க...

என் கூட work-பன்ன மூன்று ரூபாவுமே அழகுதான்...//

வாழ்க வளமுடன் :-)

வெட்டிப்பயல் said...

//ஜி said...

:)))

Googlela 8 hrs thaan workaa?? :O... Romba nalla companyaa irukkum pola ;))//

Flexi Timingsப்பா :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

Boss,
இவ்வளவு சீக்கிரமா இந்த பாகத்தை முடிச்சிட்டீங்களே? :(//

விஜய்,
ஆபிஸ்ல ஆணிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. 4 பாகத்தை மூணா எடிட் பண்ணனும் நினைச்சி முடியாம போயிடுச்சி.. அடுத்த பகுதி கொஞ்சம் பெருசா இருக்கும் :-)

கயல்விழி said...

அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன். கதை கொஞ்சம் ஸ்லோவான பாதிரி தெரிகிறது.

திவாண்ணா said...

கயல் சொன்னா மாதிரி கொஞ்சம் தொய்யுது. கடேசி வரில தூக்கி நிறுத்த பாத்து இருக்கீங்க. ஆட்டத்துல இன்னும் 3-4 காய் இறங்கி இருக்காங்க. ம்ம்ம். பாக்கலாம்.

இவன் said...

ஆஹா ஆஹா அடுத்தது எப்போ அடுத்து எப்போ??

MSK / Saravana said...

இப்போதான் மொத்தமா பத்து பகுதியையும் படிச்சேன்..

மிக சிறப்பாய் இருக்கிறது கதை தொடர்..

அருமை.. கலக்கல்..
அருமை.. கலக்கல்..
அருமை.. கலக்கல்..
அருமை.. கலக்கல்..
அருமை.. கலக்கல்.. அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..அருமை.. கலக்கல்..


அடுத்தடுத்த பகுதிகளை மிக விரைவாய் எழுதினால் சந்தோஷபடுவேன்..
:)