அசோக் அன்னைக்கு சாதாரணமா சொல்லிட்டு வந்துட்டாங்க. ஆனா அதை எங்க தேவைக்கேத்த மாதிரி கஸ்டமைஸ் பண்றதுக்கு ரெண்டு பேர் சேர்ந்து வேலை செஞ்சும் மூணு நாள் ஆகிடுச்சு. மூணு நாள்ல நான் ரெண்டு நாள் க்ளாஸ் வேற போகலை. நான் வரலைனு நித்யாவும் போகலை. அவள்ட சரியா பேசவும் முடியல. ரொம்ப கோபமா இருக்கா. அதுக்கு தான் இன்னைக்கு க்ளாஸ் போயிட்டு ரெண்டு பேரும் வெளிய சாப்பிட்டு போகலாம்னு ப்ளான்.
க்ளாஸ்ல ஒரு வார்த்தைக்கூட பேசாம அமைதியா இருக்கா. என்ன ஆகுமோ தெரியல. நான் வேற வெற்றி, ப்ரேம், தினேஷ் எல்லாம் மத்தவங்க கூட எப்படி பேசறாங்கனு பார்க்கறதுலயே இண்ட்ரஸ்டா இருந்ததால அவளுக்கு இன்னும் கோபம் போல.
ஒரு வழியா கிருஷ்ணா கபே வந்து முதல் தடவை உட்கார்ந்த இடத்துலே உட்கார்ந்துட்டோம். நான் எனக்கு முதல்ல இட்லி சொல்லிருக்கேன். அடுத்து இடியாப்பம் சொல்லலாம்னு ப்ளான். அவ மசால் தோசை சொல்லிருக்கா. பேசவே மாட்றா. அமைதியா இருக்கா.
"நித்யா, ஏன் இப்படி அமைதியா இருக்க? என்னாச்சு?"
"ஒண்ணுமில்லை"
அவளோட குரல்ல ஜீவனே இல்லாம இருக்கு.
"சொல்லு. ஏன் இப்படி அமைதியா இருக்க? மறுபடியும் வினோதினி அக்கா ஏதாவது தப்பா முடிவெடுத்தாங்களா?"
நான் கேட்டதும் என்னை முறைக்க ஆரம்பிக்கிறா. இந்த பொண்ணுங்க என்ன நினைக்கிறாங்கனே புரிய மாட்டீங்குதே.
"உனக்கு எப்ப பார்த்தாலும் அதே யோசனை தானா?"
"ஏன்? அதுக்கு இப்ப என்ன?"
"உனக்கு இப்பவெல்லாம் என் ஞாபகமே இருக்கறதில்லை. ரெண்டு நாளா எனக்கு ஃபோன் கூட பண்ணல. அதெல்லாம் அக்கறை இருக்கறவங்களுக்கு தானே ஞாபகம் இருக்கும்"
"இப்ப அது தான் பிரச்சனையா? உன் ஞாபகம் எப்பவும் இருக்கு. ஆனா இப்ப முதல் ப்ரையாரிட்டி வினோதினி அக்கா பிரச்சனை. அதுக்கு அசோக் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கான். நான் உதவலனா எப்படி?"
"எப்பவும் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணுவ. ரெண்டு நாளா அது கூட பண்ணல"
ரெண்டு நாளா ஆபிஸுக்கு கூட போகலனு இவக்கிட்ட எப்படி சொல்றது? நேரம் காலம் பாக்காம வேலை செஞ்சி அதை முடிச்சோம். டெஸ்டிங் பண்றதுக்கே ஒரு நாள் முழுசா ஆயிடுச்சு. அதுலயும் எத்தனை விதமா பண்ணோம்னு எங்களுக்கு தான் தெரியும். சரி சமாளிப்போம்.
"அது இல்ல. நான் உன் கூட போன் பண்ணி பேசிட்டு இருந்தா, வைக்கவே மனசு வராது. அசோக் பாவம். அதான்"
"நீ முந்தா நேத்து ஃபோன் பண்ணுவனு மதியம் அஞ்சு மணி வரைக்கும் வெயிட் பண்ணேன். அப்பறம் வினிதா என்னனு விசாரிச்சவுடனே சாப்பிட்டேன்"
"லூசா நீ? நாளைக்கு கல்யாணமாகி போனா என்ன பண்ணுவ?"
"அப்பவும் வெயிட் பண்ணுவேன்"
"உன் புருஷன் கன்னத்துலயே ரெண்டு கொடுப்பான்"
"கொடுத்தா நான் வாங்கிக்கறேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இனிமே நீ ஒழுங்கா சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணு"
"என்ன பிரச்சனையா? இந்த மாதிரி நான் சாப்பிட போறதுக்கு முன்னாடி ஒரு பொண்ணுக்கு கால் பண்றேனு தெரிஞ்சா என் பொண்டாட்டி என் கன்னத்துல ரெண்டு கொடுப்பா"
"பொண்டாட்டி தானே. கொடுத்தா வாங்கிக்கோ"
"அடிப்பாவி. சரி. இனிமே நான் உனக்கு கால் பண்றேன். அப்படி இல்லைனாலும் ஒரு மணிக்குள்ள நான் ஃபோன் பண்ணலைனா சாப்ட்ரு. நான் ஏதாவது முக்கியமான வேலைல இருந்தா எனக்கு அப்பறம் உன் யோசனைலயே வேலை செய்ய முடியாம போயிடும். என்ன சரியா?"
"ஒரு SMSஆவது பண்ணிடேன். ப்ளீஸ்"
"சரி. இப்ப ஒழுங்கா சாப்பிடறயா?"
"கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு"
இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல...
---------------
ரொம்ப நாளைக்கு அப்பறம் கிஷோர்கிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. ஆன் சைட் போறேன் கூட படிச்ச பசங்க கொஞ்ச பேருக்கும் எனக்கும் சேர்த்து ட்ரீட் கொடுக்கறேனு சொல்றான். நாளைக்கு சாயந்திரம் மடிவாலால இருக்கற மயூராக்கு ஏழு மணிக்கா வர சொல்றான். எதுக்கும் தினேஷ்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு போகலாம்.
"தினேஷ், நம்ம இன்ஸ்டிடியூட்ல ஒரு பத்து மாசத்துக்கு முன்னாடி கிஷோர்னு ஒருத்தன் ஜாவா படிச்சானே. ஞாபகமிருக்கா?"
"ஏன்?"
"அவன் ஏதோ ஆன்சைட் போறேன். அதனால ட்ரீட் கொடுக்கறேனு நாளைக்கு வர சொல்றான். அதான் போலாமானு உன்கிட்ட கேக்கலாம்னு பார்த்தேன்"
"அவன்கூட இதுக்கு முன்னாடி போயிருக்கயா?"
"அவன் கூடனு தனியா போனதில்லை. அவனுங்க நாலஞ்சி பசங்க சேர்ந்து வேலை கிடைச்சப்ப எனக்கு தண்ணி ட்ரீட் வெச்சானுங்க. நான் தான் அப்ப கேட்டேன்"
"அப்படினா ஏற்கனவே அந்த பசங்களோட வெளிய போயிருக்க?"
"ஆமாம்"
"உன் ஃபோன்ல நம்ம பசங்க குமார், துரை நம்பர் எல்லாம் எதுவுமில்லை தானே?"
"நீ தான் அந்த நம்பர் எல்லாம் ஸ்டோர் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கயே. அதனால அவுங்க நம்பர் எல்லாம் மனப்பாடம் தான் பண்ணி வெச்சிருக்கேன். எங்கயும் எழுதிக்கூட வைக்கல"
"நல்லது. அப்ப போ"
பசங்க அப்ப மாதிரியே தான் இப்பவும் அரட்டை அடிச்சிட்டு இருக்கானுங்க. என்கிட்டயும் அதே மாதிரி தான் பேசறானுங்க. கிஷோர் ஃபிரான்ஸ் போறானாம். அங்க இருக்கற பொண்ணுங்க எல்லாம் பயங்கர மாடலா இருப்பாங்களாம். கொடுத்து வெச்ச பையன். நம்ம தினேஷ் மட்டும் அங்க இருந்தான்னா அவ்வளவு தான்.
ஆர்டர் பண்ண ஆரம்பிச்ச பத்து நிமிஷத்துல இருந்து கிஷோர் ஃபோன்லயே பேசிட்டு இருக்கான். யாரா இருக்கும்? இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கான்.
"வெற்றி அண்ணா, என் ஃபோன் சார்ஜ் தீர மாதிரி இருக்கு. உங்க ஃபோனுக்கு பண்ண சொல்லட்டுமா?"
"சரி பண்ண சொல்லு. இதான் நம்பர் 98********" அவன் என் நம்பரை கேட்டு அவன் ஃபோன்ல சொல்லிட்டு இருக்கான்.
இருங்க கால் வருது.
"ஹலோ" ஒரு பொண்ணு குரல் தான் கேக்குது. அவன்கிட்ட கொடுத்துடலாம்.
"வெற்றி அண்ணா பொண்ணு தான?" ரமேஷ் தான் கேட்டான்
"ஆமாம்டா. ஏதோ பொண்ணுக்கிட்ட தான் இவ்வளவு நேரம் கடலை போட்டுட்டு இருக்கான்." நான் சொல்லி முடிச்சதும் எல்லாரும் "ஓ"னு சத்தம் போட்றானுங்க. எல்லாரும் திரும்பி பாக்கறாங்க
"அண்ணா நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன். எல்லாம் சாப்பிட்டு இருங்க" சொல்லிட்டு என் பதிலை எதிர்பார்க்காம ஃபோன் பேசிட்டே கீழ இறங்கி போயிட்டான். சரி சின்ன பையன். எப்படியும் வந்து பில் கட்டினா போதும்.
------
ஒரு வழியா அசோக் சொன்ன மாதிரி வெற்றியை கூப்பிட்டு வந்து அவன் செல்ஃபோனை எடுத்துட்டு கீழ வந்துட்டேன். பக்கத்துல இருக்கற ஒரு கடைல அசோக்கும், ரவியும் லேப் டாப்போட காத்துட்டு இருக்காங்க.
"கிஷோர். குட். அந்த ஃபோனை குடு" அசோக் டென்ஷனா இருக்கான். அவனை விட நான் டென்ஷனா இருக்கேன்.
அசோக் அந்த ஃபோனை USBல கணெக்ட் பண்ணி லேப்டாப்ல இருந்து ஏதோ சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணான். ஒரு தடவை அவன் செல்ஃபோன்ல இருந்து கால் பண்ணான். சும்மா டெஸ்ட் டெஸ்ட்னு சொன்னான். கட் பண்ணிட்டு. அவன் லேப்டாப்ல ஒரு ஃபோல்டரை திறந்தான். அதுல ஒரு வேவ் ஃபைல் இருந்தது. அதை ஓப்பன் பண்ணான். அது "டெஸ்ட் டெஸ்ட்" என்றது.
Now we have made this as a Covert Listening Device...
(ஆட்டம் தொடரும்...)
48 comments:
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :)
போன பகுதில அட்டெண்டன்ஸ் போடாதவங்க யாராவது இருந்தா அதுல ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுடுங்களேன் :)
உள்ளேன் அய்யா!
//
வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :) //
:-)))
வெட்டியண்ணா...வர வர ஆபீஸ் வந்து outlook ஓப்பன் பண்றேனோ இல்லையோ...உங்க ப்ளாக ஒப்பன் பண்ணிடறேன்...சமத்தா,சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க...!!!!... :)))))
அடடே ஹாலிவுட் படம் மாதிரியில்ல போகுது!! 3 Prespective-ல கதை எல்லாம் சொல்லி தூள் கிளப்புங்க..
\\"ஒரு SMSஆவது பண்ணிடேன். ப்ளீஸ்"
"சரி. இப்ப ஒழுங்கா சாப்பிடறயா?"
"கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு"
இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல...
\\
பாவங்க நித்யா..இவரு மேல என்ன பாசம் அந்த புள்ளைக்கு :)
செம த்ரில்லீங்கா இருந்தது அண்ணா இந்த பகுதி:))
\\ வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :)\\
ThankQ anna!!!
வெட்டி,
தினமும் ஒரு பகுதி வேண்டாங்க...ரொம்ப அடிக்கடி படிக்கிற மாதிரி இருக்கு....சஸ்பென்ஸ் இல்ல...அதனால நீங்க பேசாம ஒரு நாளைக்கு 2 பகுதின்னு போட்ருங்களேன்!!!!
\\நீ முந்தா நேத்து ஃபோன் பண்ணுவனு மதியம் அஞ்சு மணி வரைக்கும் வெயிட் பண்ணேன். \\
'அஞ்சு மணி'.......மதியமா??
Covertu
Listeningu
devicea??
Venam. Valikudu. Azhuduruven.
vara vara romba peter uttu kalakringanne!!
-> Hermione
//ஆயில்யன் said...
உள்ளேன் அய்யா!//
அட்டெண்டன்ஸ் போட்டதுக்கு நன்றி ஆயில்ஸ் :)
// விஜய் ஆனந்த் said...
//
வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :) //
:-)))//
என் பொழப்பு சிரிப்பா சிரிக்குதுனு உங்களுக்காவது தெரியுதே :)
//தமிழினி..... said...
வெட்டியண்ணா...வர வர ஆபீஸ் வந்து outlook ஓப்பன் பண்றேனோ இல்லையோ...உங்க ப்ளாக ஒப்பன் பண்ணிடறேன்...சமத்தா,சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க...!!!!... :)))))//
அடுத்த பகுதி இன்னும் எழுதலமா... நாளைக்கு எழுதி போட்டுடலாம் :)
//Ramya Ramani said...
அடடே ஹாலிவுட் படம் மாதிரியில்ல போகுது!! 3 Prespective-ல கதை எல்லாம் சொல்லி தூள் கிளப்புங்க..//
வேணாம்... வலிக்குது... அப்பறம் அழுதுடுவேன் :)
// Ramya Ramani said...
\\"ஒரு SMSஆவது பண்ணிடேன். ப்ளீஸ்"
"சரி. இப்ப ஒழுங்கா சாப்பிடறயா?"
"கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு"
இவளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் தான் போல...
\\
பாவங்க நித்யா..இவரு மேல என்ன பாசம் அந்த புள்ளைக்கு :)//
அங்க ஒருத்தன் ராத்திரி பகலா வேலைக்கு கூட போகாம இந்த பிரச்சனையை கண்டுபிடிக்க கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அதெல்லாம் தெரியாதே :)
// Divya said...
செம த்ரில்லீங்கா இருந்தது அண்ணா இந்த பகுதி:))//
டாங்க் யூ தங்கச்சி :)
//Divya said...
\\ வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :)\\
ThankQ anna!!!//
Welgum :)
//விஜய் ஆனந்த் said...
வெட்டி,
தினமும் ஒரு பகுதி வேண்டாங்க...ரொம்ப அடிக்கடி படிக்கிற மாதிரி இருக்கு....சஸ்பென்ஸ் இல்ல...அதனால நீங்க பேசாம ஒரு நாளைக்கு 2 பகுதின்னு போட்ருங்களேன்!!!!//
ஏன் இந்த கொல வெறி... தினமும் ஒரு பகுதி போடவே தாவூ தீருது :)
// Divya said...
\\நீ முந்தா நேத்து ஃபோன் பண்ணுவனு மதியம் அஞ்சு மணி வரைக்கும் வெயிட் பண்ணேன். \\
'அஞ்சு மணி'.......மதியமா??//
இதுக்கு ஆக்சுவலா ஒரு டயலாக் சேர்த்திருந்தேன்... அப்பறம் அநியாயமா கலாய்க்கற மாதிரி இருக்கேனு விட்டுட்டேன்...
-----
"மதியம் அஞ்சு மணி இல்லை.. சாயந்திரம் அஞ்சு மணினு சொல்லு"
"இதெல்லாம் மட்டும் பேசு. ஆனா ஃபோன் மட்டும் பண்ணாத"
இது தான் அந்த டயலாக்.. அப்பறம் தூக்கிட்டேன் :)
// Anonymous said...
Covertu
Listeningu
devicea??
Venam. Valikudu. Azhuduruven.
vara vara romba peter uttu kalakringanne!!
-> Hermione//
என்னப்பா பண்ண? கதைக்கு இதெல்லாம் தேவைப்படுது :)
action படத்துல பேருக்கு, நடுவுல ஹீரோயின் சீன்ஸ் காட்ற மாதரி நித்யாவ காட்றீங்க...ஆனாலும், நித்யா இல்லாமையே கதை நல்லா தான் போகுது :-))
//Covert Listening Device//
Rombavae hi-fi ya dhaan pogudhu kadhai :))
ஆகா அப்டியே டெக்னிகல் விஷயத்த இறக்கி டாப் கியர்ல தூக்கறீங்க :-)
Waiting for the next part.
நான் போன பதிவுல அட்டெண்டன்ஸ் போட்டேன்
இந்தப் பதிவுலேயும் போடலாமா?
/
தமிழினி..... said...
வெட்டியண்ணா...வர வர ஆபீஸ் வந்து outlook ஓப்பன் பண்றேனோ இல்லையோ...உங்க ப்ளாக ஒப்பன் பண்ணிடறேன்...சமத்தா,சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க...!!!!... :)))))
/
ரிப்பீட்டு
\\ வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :)\\
ThankQ vetti anna!!!
அப்பா ரவி சங்கரு, நித்தியாவ ப்ரெண்டாவே வெச்சுக்க! கண்ணாலம் கட்டிக்கிட்டே, கஷ்டப்படுவ. :-))
உள்ளேன் ஐயா.. கதை இப்போ சூப்பரா போகுது.. ஆர்வம் அதிகரிச்சுகிட்டே போகுது.. கலக்குங்க வெட்டி..
//நாளைக்கு சாயந்திரம் மடிவாலால இருக்கற மயூராக்கு ஏழு மணிக்கா வர சொல்றான். //
You mean மயூரி பாருக்குத்தானே?
ஓ, மூணு பெர்ஸ்பெக்ட்வுல கதை போகுதா ?
நான்தான் குழம்பிப் போயிட்டனா ?
எனிவே, கதை சூப்பர்
இந்த பகுதி Super!
நித்யா, Technical விசயம்னு பிரமாதம் நண்பா!!
அடுத்த பகுதிக்காக Waiting..
//"கொடுத்தா நான் வாங்கிக்கறேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை? இனிமே நீ ஒழுங்கா சாப்பிட போறதுக்கு முன்னாடி ஃபோன் பண்ணு"//
இந்த டையலாக்க அப்படியே ஆணாதிக்க சாயலாக்கி அரசியல் பண்ணிடலாம்னு நெனச்சேன்... கதையோட விறுவிறுப்ப பாத்துட்டு வேணும்னே அத மறந்து போயிட்டேன் :))) இந்த பகுதி அருமை...
//Divyapriya said...
action படத்துல பேருக்கு, நடுவுல ஹீரோயின் சீன்ஸ் காட்ற மாதரி நித்யாவ காட்றீங்க...ஆனாலும், நித்யா இல்லாமையே கதை நல்லா தான் போகுது :-))//
என்ன பண்றது.. தமிழ் சினிமா பார்த்து மக்கள் ரொம்ப கெட்டு போயிருக்காங்க :)
//G3 said...
//Covert Listening Device//
Rombavae hi-fi ya dhaan pogudhu kadhai :))//
அப்படியா??? :-)
//Syam said...
ஆகா அப்டியே டெக்னிகல் விஷயத்த இறக்கி டாப் கியர்ல தூக்கறீங்க :-)//
நாட்ஸ்,
இதெல்லாம் நமக்கு ஜகஜம் தானே :)
// Alien said...
Waiting for the next part.//
இன்னைக்கு சாயந்திரம் எழுத முயற்சி பண்றேன் :)
// siva gnanamji(#18100882083107547329) said...
நான் போன பதிவுல அட்டெண்டன்ஸ் போட்டேன்
இந்தப் பதிவுலேயும் போடலாமா?//
தாராளமா :)
// மங்களூர் சிவா said...
/
தமிழினி..... said...
வெட்டியண்ணா...வர வர ஆபீஸ் வந்து outlook ஓப்பன் பண்றேனோ இல்லையோ...உங்க ப்ளாக ஒப்பன் பண்ணிடறேன்...சமத்தா,சீக்கிரமா அடுத்த பகுதிய போடுங்க...!!!!... :)))))
/
ரிப்பீட்டு//
டாங்க்ஸ் :)
//மங்களூர் சிவா said...
\\ வெட்டிப்பயல் said...
போன பகுதில நித்யாவை தேடினவங்களுக்காக இந்த பகுதில புதுசா எழுதி சேர்த்தாச்சு :)\\
ThankQ vetti anna!!!//
அண்ணாவா??? என்னை விட உனக்கு வயசு அதிகம்னு நினைக்கிறேன் :)
//திவா said...
அப்பா ரவி சங்கரு, நித்தியாவ ப்ரெண்டாவே வெச்சுக்க! கண்ணாலம் கட்டிக்கிட்டே, கஷ்டப்படுவ. :-))//
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொல்லிருக்கீங்க திவா :)
//Raghav said...
உள்ளேன் ஐயா.. கதை இப்போ சூப்பரா போகுது.. ஆர்வம் அதிகரிச்சுகிட்டே போகுது.. கலக்குங்க வெட்டி..//
ரொம்ப நன்றி ராகவ் :)
Super. It seems like a real one.
As Thamizhini said, I am very eager in reading this series. Jus login, open IE and check into aadu puli aattam.
Wow, the name is really meaningful. But, i liked the pani vizhum malarvanam style.
Disci: I don't know how to enter this in tamil here. So some peter language. kandukkaaadheeeeeeeeenga.
சூப்பர் பதிவு, எங்கடா போன வாரம் நித்யாவா காணும்னு பாத்தேன்... நல்ல வேலை அவங்க மறுபடியும் வந்துட்டாங்க...சீக்கிரமா அடுத்த பதிவ எழுதுங்க...
Hi Vetti,
Nalla viruvirupa poguthu...
Rajesh Kumar novel mathiri irukku.
Waiting for Aadu Puli aatam's next round.
//கிருஷ்ணா கபே வந்து நல்லா சாப்பிடாம போவனா? நீ ஒழுங்கா சாப்பிடு//
//நாளைக்கு சாயந்திரம் மடிவாலால இருக்கற மயூராக்கு//
கதைக்கு நடுவே வெளம்பரம் பண்ணனும்னா google adsense மாதிரி எவ்ளோ ஃபீஸ் பாலாஜி? :)
அட சூப்பரா இருக்குங்க.... நல்லாப்போகுது கதை
Post a Comment