தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 14, 2008

ஆடு புலி ஆட்டம் - 11

என்னங்க மணி பனிரெண்டு ஆச்சு இன்னும் அசோக்கை காணோம். எனக்கு வேற கொஞ்சம் பயமா இருக்கு. ஏதாவது பிரச்சனைல மாட்டியிருப்பானா? இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் அப்பறமும் அவன் வரலனா நானே இன்ஸ்டிடியூட் கிளம்பி போக வேண்டியது தான். இருங்க வண்டி சத்தம் கேக்குது. அசோக்னு நினைக்கிறேன்.

"டேய் மச்சான். Finally, I got it"

அசோக் கைல அந்த சிடி தெரியுது. ஒரு வழியா சாதிச்சிட்டானு நினைக்கிறேன்.

"எப்படிடா மச்சான்?"

"எல்லாம் நம்ம வெற்றி அண்ணனை வெச்சி தான். கரெக்டா வெற்றி அண்ணனையும் ப்ரேமையும் வெச்சிக்கிட்டு ஒரு கேம் ப்ளே பண்ணேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு"

"எக்ஸலண்ட். நீ இந்த சீடி எடுத்தது அவங்களுக்கு தெரியாது தானே"

"ஆமாம். ரொம்ப நேரம் லேப்ல இருக்கேனு ப்ரேம் என்ன விஷயம்னு கேட்டாரு. நானே சொந்தமா ஒரு ப்ராஜக்ட் ட்ரை பண்றேன். வீட்ல ஆரக்கிள் இல்லாததால லேப்லயே பண்றேனு சொன்னேன். ப்ரேம் ஃபீல் ஆகி வெற்றியை கூப்பிட்டு யாருக்கும் தெரியாம ஆரக்கிள் சீடி எடுத்து தர சொன்னாரு."

"அப்பறம்?"

" வெற்றி அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் இருந்த சீடி எல்லாம் எடுத்து தேடிட்டு இருந்தாரு. நானும் உள்ள போய் ஒவ்வொரு சீடியா பார்த்துட்டு இருந்தேன். நானும் ஆரக்கிள் சீடி தேடறேனு நினைச்சிட்டு விட்டாரு. இன்ஸ்டிடியூட்டோட மண்த்லி பேக் அப் சீடியை ஒரு வழியா கண்டுபிடிச்சி வெற்றிக்கு தெரியாம சுட்டுட்டேன். ஆனா இது நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது போல. புதுசு கண்ணுல படல"

"பரவால. எக்ஸலண்ட் வொர்க். சரி நம்ம டேட்டா பேஸ்ல இம்போர்ட் பண்ணுவோம். அப்பறம் உன் போன் என்னாச்சு? நான் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்"

"அது சார்ஜ் போட மறந்துட்டேன். இப்ப போடனும்"

ஒரு வழியா முதல் படியை தாண்டியாச்சுங்க. இதை வெச்சி தான் பிரச்சனை இந்த இன்ஸ்டிடியூட்லயா இல்லை வெளியவானு கண்டு பிடிக்க முடியும். இந்த இன்ஸ்டிடியூட்ல இல்லைனா அடுத்து HR தான். நாளைக்குள்ள இந்த இன்ஸ்டிடியூட்டானு தெரிஞ்சிடும். அப்படி அந்த சீடில என்ன இருக்குனு யோசிக்கறீங்களா?

அதுதான் அந்த இன்ஸ்டிடியூடோட அஃபிஷியல் இன்ஃபர்மேஷன் இருக்கற டேட்டாபேஸோட, பேக் அப் பைல் இருக்கற CD. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் இன்க்ரிமெண்டல் பேக் அப் தான் எடுப்பாங்க. இந்த மாதிரி சின்ன இன்ஸ்டிடியூட் எல்லாம் டோட்டல் பேக் அப் எடுப்பாங்க. பெரிய கம்பெனி எல்லாம் டெய்லி, வீக்லி, மண்த்லி எடுப்பாங்க. இங்க மாசம் மாசம் எடுக்கறாங்க. இப்ப நம்ம கைல இருக்கற சீடில நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சவங்களோட இன்ஃபர்மேஷன் இருக்கும். அதை வெச்சி நாளைக்கு நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாம்.

இன்னைக்கு காலைல இருந்து நானும் அசோக்கும் நித்யா வீட்ல தான் இருந்தோம். என்ன பேசனும் எப்படி பேசனும்னு வினோதினி அக்காகிட்ட விசாரிச்சிட்டேன். ரொம்ப நேரம் ப்ராக்டிஸ் பண்ணோம். எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பூத்ல இருந்து பண்ணா தான் சேஃப்டி. நாளைக்கு யாராவது விசாரிச்சாக்கூட அந்த அண்ணன் நம்மல காட்டி கொடுக்க மாட்டாரு. அதான் ரிட்டர்ன் வந்துட்டு இருக்கோம்.

என்னங்க அந்த டேட்டா பேஸ்ல இருந்து எடுத்த போன் நம்பர்ல இருபது பேருக்கு பண்ணிட்டேன் ரியாக்ஷ்னே சரியில்லை. பசங்க ஒரு சிலர் நம்ம மிரட்டினா பதிலுக்கு நம்மல மிரட்டறானுங்க. ஒரு சிலர் மெரள்றானுங்க. எவனுமே இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கால் வந்த மாதிரியே ரியாக்ட் பண்ண மாட்றானுங்களே. அப்படினா ஒரு வேளை இவங்க டார்கெட் பொண்ணுங்க மட்டும் தானா? அப்ப சுலபமா கண்டுபிடிச்சிடலாமே.

என்னங்க பொண்ணுங்க பாதி பேர் நம்பர் Does Not Existனு வருது மீதி பேர் பயப்படறாங்களே தவிர இதுக்கு முன்னாடி கால் வந்த மாதிரி ரியாக்ட் பண்ணவே மாட்றாங்க. ஒரு வேளை இந்த இன்ஸ்டிடியூட்ல பிரச்சனையில்லையோ? தேவையில்லாம சந்தேகப்பட்டுடமோ? சரி நேரமாச்சு. நாப்பது போன் காலுமாச்சு. இப்ப அடுத்த ஆப்ஷன் HR தான்.

இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் எல்லாம் சேர்ந்து CDயை சுட்டு கடைசியா அங்க எதுவும் பிரச்சனையில்லைங்கற மாதிரி தெரியுது. அதுவும் ஒரு வகைல நல்லது தான் இனிமே கோர்ஸ் போக தேவையில்லை. நித்யா படிக்கனும்னு ஆசைப்பட்டா போகலாம்னு நினைக்கிறேன். ரெண்டு வாரமா தினமும் அவக்கூட பேசி பழக்கமாயிடுச்சு. அதனால அவக்கூட பேசறதுக்காக போகலாம். என்ன சொல்றீங்க?

அசோக் இதுக்கு மேல போக வேண்டாம். இப்ப அடுத்து என்ன பண்றதுனு தெரியல. வினோதினி அக்காவும் அதுக்கப்பறம் புது நம்பர் மாத்திட்டாங்க. வேற எதுவும் ஃபோன் காலும் வரலை. இதோட இந்த கண்டுபிடிக்கறதை நிறுத்திக்கலாமா? HRக்கு போன் பண்ணா பிரச்சனை. அதுக்கு வேற வேலை தேடிட்டு இங்க இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.

"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா"

"என்னடா சொல்ற?"

"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை"

"ஆமாம்"

"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். இந்த பொண்ணுங்க நம்பரை கண்டு பிடிச்சி கால் பண்ணா தான் நம்ம அனாலிஸிஸ் சரியா வரும்"

(தொடரும்...)

26 comments:

இவன் said...

நாந்தான் firstஆ?? கதை கலக்கலா போகுது அடுத்த பகுதி எப்போ??

கயல்விழி said...

இந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

கயல்விழி said...

இந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

Ramya Ramani said...

ஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே!

Divya said...

பரபரப்பா போகுது கதை, சூப்பர்:))

Raghav said...

ஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.

வெட்டிப்பயல் said...

//இவன் said...

நாந்தான் firstஆ?? கதை கலக்கலா போகுது அடுத்த பகுதி எப்போ??//

ஆமாம் இவன்...

அடுத்த பகுதி திங்கள் காலை :-)

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

இந்த பாகம் நல்ல பரபரப்பு. ரொம்ப நல்ல தொடர் இது, ஐடி ஃபீல்டைப்பற்றி என்பதால் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.//

மிக்க நன்றி கயல்விழி :-)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

ஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே!//

இதை கேட்டா அவரே சந்தோஷப்படுவாரு ;)

வெட்டிப்பயல் said...

//Divya said...

பரபரப்பா போகுது கதை, சூப்பர்:))//

ரொம்ப டாங்க்ஸ்மா :-)

வெட்டிப்பயல் said...

// Raghav said...

ஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.//

ராகவ்,
இனிமே காதலிக்க நேரமில்லை :-)

Vijay said...

வலையுலக கணேஷ் வசந்த், இப்படி சஸ்பென்ஸ் கொடுத்து கலக்கறீங்களே!

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

வலையுலக கணேஷ் வசந்த், இப்படி சஸ்பென்ஸ் கொடுத்து கலக்கறீங்களே!//

ஆஹா... இது வேறயா...

Raghav said...

//ராகவ்,
இனிமே காதலிக்க நேரமில்லை :-)//

ஹலோ.. உங்க சொந்தக் கதைய கேக்கல.. உங்களுக்கு காதலிக்க நேரமில்லைன்னு க.மு... க.பி படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு..

Divyapriya said...

கதை படு சூப்பரா போகுது...மொத்தம் 12 parts ன்னு தான சொன்னீங்க? இல்ல, 16 parts?

வெட்டிப்பயல் said...

// Raghav said...

//ராகவ்,
இனிமே காதலிக்க நேரமில்லை :-)//

ஹலோ.. உங்க சொந்தக் கதைய கேக்கல.. உங்களுக்கு காதலிக்க நேரமில்லைன்னு க.மு... க.பி படிச்சவுடனே தெரிஞ்சிருச்சு..//

நானும் கதையை பத்தி தான் சொன்னேன்... க.மு...கபி...க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்??? ;)

இவன் said...

//ஆமாம் இவன்...

அடுத்த பகுதி திங்கள் காலை :-)//


முடிந்தால் அதுக்கு முதல்லயே போட்டுடுங்க waiting for the next part

மங்களூர் சிவா said...

கை நனைச்சிட்டு போறேனுங்க!
:)

நல்லா இருக்கு வெட்டி 'கீப்' இட் அப் ^

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

கதை படு சூப்பரா போகுது...மொத்தம் 12 parts ன்னு தான சொன்னீங்க? இல்ல, 16 parts?//

12 part வரைக்கும் தான் எழுதி வெச்சிருக்கேனு சொன்னேன்.. இன்னும் 10 வரும்னு நினைக்கிறேன்... இனிமே தான் எழுதனும் :-)

வெட்டிப்பயல் said...

// இவன் said...

//ஆமாம் இவன்...

அடுத்த பகுதி திங்கள் காலை :-)//

முடிந்தால் அதுக்கு முதல்லயே போட்டுடுங்க waiting for the next part//

ஆஹா...
இன்னும் எழுத வேண்டியது நிறைய இருக்கே... சீக்கிரம் எழுதி போடறேன் இவன் :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

கை நனைச்சிட்டு போறேனுங்க!
:)

நல்லா இருக்கு வெட்டி 'கீப்' இட் அப் ^//

ரொம்ப டாங்ஸ் சிவா :-)

MSK / Saravana said...

//Raghav

ஏ யய்யா நல்லா இருக்குய்யா கதை.. ஒரே சீரியஸ் மேட்டரா போகுதே.. நாங்கல்லாம் தமிழனுங்க.. நடு நடுவுல காதல் சீனு ரெண்டு இருந்தா தானேய்யா புடிக்கும்.//

Ripeettei..
:)

Anonymous said...

//Ramya Ramani said...
ஆஹா உங்க ஹீரோ என்ன கூகிள்ல வேலை பாக்குறாரா இல்ல CBI ஆபீஸ்ரா சூப்பரா ஆராய்ச்சி எல்லாம் பண்ராறே!//

Repeateyyyyyyy

Anonymous said...

//ஓ.காட். மறுபடியும் தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு. ஐ திங் வி வேர் இன் ரைட் ட்ராக்.

"டேய் அசோக். ஒரு முக்கியமான விஷயத்தை நோட் பண்ணாம விட்டுட்டோம்டா"

"என்னடா சொல்ற?"

"நம்ம வினோதினி அக்காக்கு போன் கால் வந்தவுடனே நம்பர் மாத்தினேனு சொன்னாங்க இல்லை"

"ஆமாம்"

"அதே மாதிரி நம்ம போன் பண்ண பொண்ணுங்களும் மாத்திருந்தாங்கனா அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும். நம்ம அதை விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் பண்ணியிருக்கோம். //

Padikkuma bothe ninachen ...enga intha lagica numba hero mispanrarennu.....Tension...Tension :-)

Excellanta poguthu Thala...kalkkunga
Anbu

திவாண்ணா said...

//அவுங்களுக்கு "Number does not exist"னு தானே வரும்.//
ரொம்ப லேட்டாதான் தோணிச்சா?
பரவாயில்லை. கதாநாயகன் எப்பவுமே ரொம்ப புத்திசாலியா இருக்க்ணும்ன்னு ஒண்ணும் இல்ல.

நாடோடி said...

9, 10, 11 - சேர்த்து படிச்சிட்டேன்.. நல்லா போகுது Investigation.. அடுத்தப் பகுதிக்கு வெயிட்டிங்..