"வெற்றி சார்கிட்ட ஆரக்கிள் CD கேட்டிருந்தோம். புதுசா எழுதி தரேனு சொல்லியிருந்தாரு. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஃபோன் பண்ணி உங்ககிட்ட கொடுத்திருக்கேன். வாங்கிக்கோங்கனு சொன்னாரு"
தினேஷ் எங்களை சந்தேகமா பார்க்கிறானு அவன் கண்ணுல தெரியுது...
"அப்படியா? ஆரக்கிள் எந்த வெர்ஷன் கேட்டிருந்தீங்க?"
"ஆரக்கிள் 9ஐ தான் கேட்டிருந்தோம். இப்ப தான் உங்ககிட்ட யாரோ ஃபிரெண்டை விட்டு கொடுத்தனு சொன்னாரு"
"ஓ அதுவா? இப்ப தான் நம்ம சாஃப்ட்வேர் எல்லாம் வைக்கிற சர்வர் ரூம்ல வெச்சேன். இங்கயே இருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்"
அந்த CD வாங்கிட்டு அவர் சர்வர் ரூமுக்கே போகல. நேரா இங்க வந்ததை பார்த்தேன். இப்ப இப்படி சொல்லிட்டு போறார். அவ்வளவு தான் தப்பாயிடுச்சினு நினைக்கிறேன்.
என்னங்க திடீர்னு சுகுமாரன் இந்த ரூமுக்கு வரார். தினேஷ் ஏதோ கேம் ப்ளே பண்ற மாதிரி இருக்குது.
"என்ன ரெண்டு பேரும் இந்த நேரத்துல வந்திருக்கீங்க? உங்க க்ளாஸ் ஈவனிங் தானே?"
"ஆமாம் சார். ஒரு சாப்ட்வேர் வாங்கலாம்னு வந்தோம்"
"ஓ அதுவா? அதை தினேஷ் தேடிட்டு இருக்கார். நீங்க லாஸ்ட் வீக்கே ஒழுங்கா வரலை இல்ல"
"ஆமாம் சார். கொஞ்சம் பர்சனல் ஒர்க்"
"சரி. நான் போன வாரம் உங்க க்ளாஸுக்கு எடுத்ததை அடுத்த பேட்ச்க்கு எடுக்க போறேன். நீங்க ரெண்டு பேரும் இப்ப என் கூட வாங்க"
ஆஹா... இப்ப என்ன பண்றதுனு தெரியலையே. சரி வரோம்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகிடலாம்.
"சரி சார். வரோம்"
"சரி நான் க்ளாஸ் போறேன்பா. வந்து சேருங்க"
நல்ல வேளைங்க சொல்லிட்டு போயிட்டாரு.
"இப்ப என்ன பண்ண போற ரவி"
"நித்யா, நீ அவர் க்ளாஸுக்கு போ. நான் போய் தினேஷை பார்த்துட்டு வரேன்"
"சரி"
ஆஹா... எங்க தேடியும் தினேஷை காணோம். எங்க போனார்னு தெரியலையே. இப்ப என்ன பண்ணலாம்?
..............................
உங்க எல்லார்கூடயும் நிதானமா பேசனும்னு நான் ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப பாருங்க. இப்படி ஒரு பதட்டமான சூழ்நிலைல பேறச மாதிரி ஆகிடுச்சி. நான் தான் தினேஷ். என் மேல உங்க எல்லாருக்கும் கோபம் இருக்கும். அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது. இந்த உலகம் எப்பவுமே Unfair தான். இப்ப பாருங்க. எதுவுமே தெரியாதுனு நான் நினைச்சிட்டு இருந்த வெற்றியே என் முதுகுல குத்தியிருக்கான்.
இப்ப தான் என் ரூம்ல அதை CDல நான் பார்த்தேன். எனக்கு தெரியாம நான் ஒரு பொண்ண பண்ணதை CDல பிடிச்சிருக்கான். அதை ஏன் அவன் இப்படி என் கைல கொடுத்து அந்த பையன் கைல கொடுக்க சொல்லனும்னு தான் எனக்கு புரியலை. ஒரு வேளை அந்த பையன் ஏதாவது டபுல் கேம் ஆடறானானும் புரியலை. இப்ப எனக்கு இருக்கற ஒரே கவலை, இதே மாதிரி மத்த பொண்ணுங்களை பண்ணதையும் CDல பிடிச்சிருக்காங்களானு கண்டுபிடிக்கறது தான்.
அதுக்கு தான் இப்ப லாட்ஜுக்கு போயிட்டு இருக்கேன். அதை தெரிஞ்சதுக்கப்பறம் முதல்ல அந்த பையனை பிடிக்கனும். அப்பறம் வெற்றி, குமார், துரைக்கு இருக்குது ஆப்பு. இருங்க லாட்ஜ் வந்துடுச்சி.
வெற்றி அவன் ரூம்ல தான் இருக்கான் போல. கதவு திறந்து தான் இருக்கு. இருங்க உள்ள போய் காரியத்தை முடிச்சிட்டு வரேன்.
"என்ன தினேஷ். அந்த CD தானே?"
"இல்லை குமார். நீ தப்பா எடுத்துட்டு வந்திருக்க. வெற்றி ஃபோன் பண்ணி உன்கிட்ட மீதி எல்லாமும் இருக்கு. எதுனு சரியா பார்த்து எடுத்துக்கோனு சொன்னான். அதான் வந்தேன்"
"ஓ. அப்படியா? இரு எடுத்து தரேன்"
என்னங்க திடீர்னு ஃபோன் அடிக்குது.
"இங்கயே இரு தினேஷ் வரேன். உள்ள சரியா சிக்னல் கிடைக்காது"
என்னங்க சொல்லிட்டு வெளிய போறான். இருங்க என்ன பேசறானு இங்க இருந்தே கேக்குது.
"சொல்லு வெற்றி"
" "
"ஆமாம். தினேஷ் இங்க தான் வந்திருக்கான்"
" "
"ஆமாம். அந்த CD இல்லை. வேற CDனு சொன்னான்."
" "
"இல்ல. நான் இன்னும் கொடுக்கல"
" "
"சரி நான் அது இங்க இல்லனு சொல்லி அனுப்பிடறேன். நீ பயப்படாத"
இருங்க உள்ள வரான். வெற்றிக்கு ஊர்ல இருந்து சிக்னலே கிடைக்காதே. எப்படி சரியா இந்த நேரத்துல நான் இங்க இருப்பனு பண்றான்.
எனக்கு எதுவுமே புரியலை. எப்படியும் இவனை மிரட்டி வாங்கிட்டு போயே ஆகனும்.
"தினேஷ். நீ சொல்ற CD வெற்றிக்கிட்ட இருக்கு. அவன் வந்தவுடனே வாங்கிக்கோ"
பாருங்க எவ்வளவு திமிரா பேசறான்.
"சரி. அப்ப உன் கிட்ட இருக்கற CDயையாவது கொடு"
"என்கிட்ட எதுவுமில்ல"
வேற வழியே இல்லைங்க. இவனை மிரட்டியாவது வாங்கிட்டு போகனும். இந்த கத்தியை எதுக்கும் கொண்டு வந்தது நல்லதா போச்சு.
"தினேஷ். எதுக்கு இப்ப கத்தியெல்லாம் எடுக்கற? நமக்குள்ள எந்த பிரச்சனையும் வேண்டாம்"
"நானும் அதை தான் சொல்றேன். என் முதுகுலயே குத்த பாக்கறீங்களாடா? முதல்ல அந்த CDயெல்லாம் கொடு. உன்னை எதுவும் செய்ய மாட்டேன்"
என் கைல கத்தி இவ்வளவு அழகா, பளபளப்பா இருக்கும்னு நானே நினைச்சி பார்த்ததில்லைங்க. யாரோ கதவை திறக்கற சத்தம் கேக்குது. துரை வந்துட்டான் போல.
"ஆஆஆஆஆ...." என்னங்க என் கைல ஒரே ரத்தமா இருக்கு. கத்தி கைப்பிடி மட்டும் தெரியுது.
நான் துரையை திரும்பி பார்த்த நேரத்துல இந்த குமார் என் மேல பாய்ஞ்சிட்டான். என்ன பண்றதுனு தெரியாம நான் கத்தியால வேகமா தடுக்க, அவன் கீழ் தாடைல குத்திட்டு உள்ள போயிடுச்சி. வெறும் கைப்பிடி மட்டும் அவன் தாடைக்கு கீழ தெரியுது. கத்தி முழுசா அவன் தலைக்குள்ள போயிடுச்சி போல.
"துரை நான் வேணும்னே பண்ணல. என்னை அப்படி பார்க்காத"
துரை நான் சொன்னதை கேக்காம என் மேல பாய்ச்சிட்டான். என் கழுத்தை பிடிச்சிட்டாங்க. மூச்சு விட முடியலையே. டேய் என்னை விடுடா. விடுடா. நான் சொல்றது அவனுக்கு கேக்கல போல. ஆ... தலையை பின்னாடி செவுத்துல இடிக்கறான். வலி உயிர் போகுது. யாராவது வாங்களேன். யாராவது வந்து என்னை காப்பாத்துங்களேன். பின்னாடி தலைக்குள்ள என்னுமோ கூரான ஒண்ணு இறங்கிடுச்சி போல. நிறைய பேர் கதவை திறந்துட்டு வராங்க. என்னை காப்பத்திடுவாங்....
(ஆட்டம் தொடரும்...)
42 comments:
கதையை இந்த பகுதில முடிக்க முடியல... இன்னும் ஓரிரு பகுதிகளில் நிறைவடையும்...
attendance vetti.. kathai romba super...kalakkiteenga.
//mgnithi said...
attendance vetti.. kathai romba super...kalakkiteenga.//
மிக்க நன்றி mgnithi...
இந்த பகுதி தான் பயந்துட்டே போட்டேன்... இதுக்கு மேல கதையை திருத்தவோ/மாத்தவோ முடியாது... முன்னாடி எழுதிய 19 பாகத்தையும் இந்த ஒரு பாகம் வீணாக்க கூடும். மத்தவங்க என்ன சொல்றாங்கனு கேக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :)
hmmm.. seems like the ending is simple.. but no comments till it ends :-)
/
கதையை இந்த பகுதில முடிக்க முடியல... இன்னும் ஓரிரு பகுதிகளில் நிறைவடையும்...
/
இத இதத்தான்பா எதிர்பார்த்தோம்!!
நல்லா இருக்கு!
ஹப்பா.......இவ்வளவு த்ரில்லா??
பயங்கரமா இருக்கு இந்த பகுதி:(
கலக்கிட்டீங்கண்ணா....எப்படி இவ்வளவு தத்ரூபமா த்ரில் கொண்டு வர முடியுது??
எஃபெக்ட் சூப்பர்!
தினேஷ்யே பேசின மாதிரி எழுதினது பொருத்தமா இருந்தது இந்த பகுதிக்கு:)
ஓஹோ...கதை அப்படி போகுதா??? கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்....வினை விதைத்தவன் வினை அறுப்பானா...சரி..சரி..
// வெட்டிப்பயல் said...
இந்த பகுதி தான் பயந்துட்டே போட்டேன்... இதுக்கு மேல கதையை திருத்தவோ/மாத்தவோ முடியாது... முன்னாடி எழுதிய 19 பாகத்தையும் இந்த ஒரு பாகம் வீணாக்க கூடும். //
:-)))...
ஓரளவுக்கு உண்மைதான்...ஆனா கடேசில எங்க ஹீரோவோட தில்லாலங்கடி வேலைகளை கண்டி டம்மியாக்குனீங்க...அப்புறம் தெரியும் சேதி...
adhuthu eppo?
தினேஷ்கு எந்த அடிபடைல சந்தேகம் வர ஆரம்பிக்குது ,,,??அதுதான் கொஞ்சம் புரியல ..
கதை செம்ம த்ரில்லிங்க போயிட்டி இருக்கு ...இடைல டெக்னாலஜி ஸ்கூப் வேற ... ( மினி சுஜாதா...........???) , நித்யா கேரக்டர் வருது ..போகுது ..என்ன ஆச்சி பாஸ் .... அந்த tracka ரொம்பவே மிஸ் பண்ணுறோம் ..:-)
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
சரியாதான் போயிட்டு இருக்கு. ஏன் கவலை?
Vetri kadhai bale..
nee kadhai sollura vidham peerikudhu..
nalla poguthu. melum 3 paguthi varumunnu ninaikiran.
Thala .....kalakkal ....really thrilling and inetresting....ethir paratha thiruppam......
//
விஜய் ஆனந்த் said...
...ஆனா கடேசில எங்க ஹீரோவோட தில்லாலங்கடி வேலைகளை கண்டி டம்மியாக்குனீங்க...அப்புறம் தெரியும் சேதி...//
Repeateeyyy
// யாத்ரீகன் said...
hmmm.. seems like the ending is simple.. but no comments till it ends :-)//
ஆமாம் யாத்ரீகன்... ரவியை சூப்பர் ஹீரோ ஆக்கும் எண்ணமில்லை :)
// மங்களூர் சிவா said...
/
கதையை இந்த பகுதில முடிக்க முடியல... இன்னும் ஓரிரு பகுதிகளில் நிறைவடையும்...
/
இத இதத்தான்பா எதிர்பார்த்தோம்!!
நல்லா இருக்கு!//
நன்றி சிவா...
கதை எப்படி முடிக்கனும்னு ஒரு ஐடியா இருந்துச்சு. ஆனா எழுதி வைக்காததால எத்தனை பதிவுனு தெளிவா சொல்ல முடியல :)
//Divya said...
ஹப்பா.......இவ்வளவு த்ரில்லா??
பயங்கரமா இருக்கு இந்த பகுதி:(
கலக்கிட்டீங்கண்ணா....எப்படி இவ்வளவு தத்ரூபமா த்ரில் கொண்டு வர முடியுது??
எஃபெக்ட் சூப்பர்!
தினேஷ்யே பேசின மாதிரி எழுதினது பொருத்தமா இருந்தது இந்த பகுதிக்கு:)//
அதான் கதை துவக்கத்துல சொல்லிட்டேனேம்மா. கதைல Adult Content அதிகம்னு :)
இன்னும் கொடுமையா கீழ் தாடைல குத்தி கண்ணு வழியா கத்தி வர மாதிரி தான் எழுதலாம்னு நினைச்சேன். கப்பி தான் அது கொஞ்சம் கஷ்டம் தெலுகு படம் மாதிரி இருக்கும்னு சொல்லிட்டான் :)
அப்படி பார்த்தா இதுவே கொஞ்சம் கம்மி தான் :)
//விஜய் ஆனந்த் said...
ஓஹோ...கதை அப்படி போகுதா??? கத்தி எடுத்தவன் கத்தியாலதான் சாவான்....வினை விதைத்தவன் வினை அறுப்பானா...சரி..சரி..//
அது தான் நீதியே. யாரும் அதுல இருந்து தப்பிக்க முடியாது. சில பேருக்கு தாமதமாகலாம் :)
// விஜய் ஆனந்த் said...
// வெட்டிப்பயல் said...
இந்த பகுதி தான் பயந்துட்டே போட்டேன்... இதுக்கு மேல கதையை திருத்தவோ/மாத்தவோ முடியாது... முன்னாடி எழுதிய 19 பாகத்தையும் இந்த ஒரு பாகம் வீணாக்க கூடும். //
:-)))...
ஓரளவுக்கு உண்மைதான்...ஆனா கடேசில எங்க ஹீரோவோட தில்லாலங்கடி வேலைகளை கண்டி டம்மியாக்குனீங்க...அப்புறம் தெரியும் சேதி...//
இதுக்கு மேல என்ன தில்லாலங்கடி வேலை இருக்கு? :)
//பாபு said...
adhuthu eppo?//
இன்னைக்கு ராத்திரி :)
// harz.. said...
தினேஷ்கு எந்த அடிபடைல சந்தேகம் வர ஆரம்பிக்குது ,,,??அதுதான் கொஞ்சம் புரியல ..//
இது ஒரு நல்ல கேள்வி :)
ஏன்னா பதில் எனக்கு தெரியும் :)
தினேஷும் வெற்றியும் ஒரே ஊர். அந்த ஊர்ல இருந்து அவ்வளவா சிக்னல் கிடைக்காது.
அடுத்து ரவிக்கும், குமாருக்கும் ஃபோன் பண்ணவன், தினேஷுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிருப்பான்.
அடுத்து இந்த மாதிரி இன்ஸ்டிடியூட்ல குமார் தினேஷை பார்க்க வந்தது தப்பு. அது பெரிய ரிஸ்க். ஏதாவது பொண்ணுங்க பார்த்துட்டா பின்னாடி மிரட்டறதுல பிரச்சனை வரலாம். அவ்வளவு ரிஸ்க் எடுத்து இப்படி ஒரு CD கொடுக்கனுமா?
அடுத்து ஆரக்கிள் CD இன்ஸ்டிடியூட்ல நிறைய இருக்கும். அதை காப்பி போட்டு கொடுக்கறதை விட்டுட்டு இப்படி குமார் வந்து கொடுக்கறதுல லாஜிக் இல்லை.
அவ்வளவு அவசரமா இதை ரவிக்கு குமார் மூலமா கொடுக்க காரணம் வலுவா இல்லை :)
அதனால சந்தேகம் வந்து CDயை வீட்டுக்கு எடுத்துட்டு போய் பார்த்தான். விஷயம் தெரிஞ்சிடுச்சி. அப்படி அது ஆரக்கிள் CDயா இருந்தா திரும்ப கொண்டு வந்து கொடுத்திருப்பான் :)
// harz said...
கதை செம்ம த்ரில்லிங்க போயிட்டி இருக்கு ...இடைல டெக்னாலஜி ஸ்கூப் வேற ... ( மினி சுஜாதா...........???) //
ஆஹா.. அப்படி எல்லாம் அவ்வளவு பெரியவரை அசிங்கப்படுத்திடாதீங்க. அவர் அறிவு எங்க? அவர் எழுத்து நடை எங்க? நான் எல்லாம் இப்ப தான் எழுத பழகிக்கறேன்...
//, நித்யா கேரக்டர் வருது ..போகுது ..என்ன ஆச்சி பாஸ் .... அந்த tracka ரொம்பவே மிஸ் பண்ணுறோம் ..:-)//
தசவதாரத்துல நடுவுல வந்து பெருமாளே பெருமாளேனு டார்ச்சர் பண்ற அசின் மாதிரி வேண்டாம்னு ஒதுங்கிட்டா போல... அடுத்த பாகம் முழுக்க நித்யா தான் :)
என்ன வெட்டி அண்ணா இது? கொலை அது இதுன்னு கதை பயங்கரமா போகுது, பாவம், நம்ம ரவியும், அசோக்கும், எங்கயாவது Caller ID spoofing ல மாட்டிக்க போறாங்க :-(
//திவா said...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......
சரியாதான் போயிட்டு இருக்கு. ஏன் கவலை?//
திவா,
ஓவர் வயலண்டா தெலுகு படம் மாதிரி ஆகிடுமோனு தான் :)
// ungalRasigan_Naren said...
Vetri kadhai bale..
nee kadhai sollura vidham peerikudhu..//
ஆஹா...
மிக்க நன்றி நரேன் :)
(நரேன் எனக்கு ரொம்ப பிடிச்ச பேரு... விவேகானந்தரோட இயற்பெயர் :))
// Anonymous said...
nalla poguthu. melum 3 paguthi varumunnu ninaikiran.//
ஆஹா.. அப்படி மூணு பகுதி எழுத இதுல என்ன இருக்கு? :)
// Anbu said...
Thala .....kalakkal ....really thrilling and inetresting....ethir paratha thiruppam......
//
மிக்க நன்றி அன்பு.. யாருமே இதை சொல்லலையேனு பார்த்தேன் :)
// //
விஜய் ஆனந்த் said...
...ஆனா கடேசில எங்க ஹீரோவோட தில்லாலங்கடி வேலைகளை கண்டி டம்மியாக்குனீங்க...அப்புறம் தெரியும் சேதி...//
Repeateeyyy//
இனிமே ஹீரோக்கு ஒரே ஒரு வேலை தான் இருக்கு ;)
// Divyapriya said...
என்ன வெட்டி அண்ணா இது? கொலை அது இதுன்னு கதை பயங்கரமா போகுது, பாவம், நம்ம ரவியும், அசோக்கும், எங்கயாவது Caller ID spoofing ல மாட்டிக்க போறாங்க :-(//
இது கொலை இல்லம்மா.. விபத்து :)
மாட்டிக்க மாட்டாங்கனு தான் நினைக்கிறேன். ஏன்னா இந்த ஃபோன் வந்தது ரெண்டு பேருக்கு தான் தெரியும். அவுங்க ரெண்டு பேரும் உயிரோட இல்லை :)
ஆஹா ரெண்டு நாள் இந்த பக்கம் வரலே இப்படியா.. செம்மயா போகுதே த்ரில்லா, பயங்கரமா..
ஆனா ஒன்னு சொல்றேன்,
இது ஒரு சாதாரண பளாகர் எழுதற கதை மாதிரி இல்ல..சொல்லுங்க சொல்லுங்க நீங்க எவ்வளவு நாளா கதை எழுதறீங்க..இதுக்கு முன்னாடி எவ்வளவு த்ரில் கதை எழுதியிருக்கீங்க. (சும்மா லுலுலாய்க்கு .. பாட்ஷா Effect கொடுக்க முயற்சி பண்ணேன் அண்ணா )
கதை சூப்பர்!!
// Ramya Ramani said...
ஆஹா ரெண்டு நாள் இந்த பக்கம் வரலே இப்படியா.. செம்மயா போகுதே த்ரில்லா, பயங்கரமா..
//
டேங்கிஸ் :)
// ஆனா ஒன்னு சொல்றேன்,
இது ஒரு சாதாரண பளாகர் எழுதற கதை மாதிரி இல்ல..சொல்லுங்க சொல்லுங்க நீங்க எவ்வளவு நாளா கதை எழுதறீங்க..இதுக்கு முன்னாடி எவ்வளவு த்ரில் கதை எழுதியிருக்கீங்க. (சும்மா லுலுலாய்க்கு .. பாட்ஷா Effect கொடுக்க முயற்சி பண்ணேன் அண்ணா )
கதை சூப்பர்!!//
ஆஹா... பட்டையை கிளப்பறியேம்மா :)
keep it up!
வெட்டி, கதை பயங்கரமா போகுது... செம்ம திருப்பம், நல்ல லாஜிக்கலாவும் இருக்கு.. சூப்பர்!
@vettipayal
\\இன்னும் கொடுமையா கீழ் தாடைல குத்தி கண்ணு வழியா கத்தி வர மாதிரி தான் எழுதலாம்னு நினைச்சேன். கப்பி தான் அது கொஞ்சம் கஷ்டம் தெலுகு படம் மாதிரி இருக்கும்னு சொல்லிட்டான் :)\\
திரை விமர்சகர் சொன்னா சரியாதான் இருக்கும்:))
<<--தினேஷ்கு எந்த அடிபடைல சந்தேகம் வர ஆரம்பிக்குது ,,,??அதுதான் கொஞ்சம் புரியல ..--!>
//இது ஒரு நல்ல கேள்வி :)
ஏன்னா பதில் எனக்கு தெரியும் :)
தினேஷும் வெற்றியும் ஒரே ஊர். அந்த ஊர்ல இருந்து அவ்வளவா சிக்னல் கிடைக்காது.
அடுத்து ரவிக்கும், குமாருக்கும் ஃபோன் பண்ணவன், தினேஷுக்கும் ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிருப்பான்.
அடுத்து இந்த மாதிரி இன்ஸ்டிடியூட்ல குமார் தினேஷை பார்க்க வந்தது தப்பு. அது பெரிய ரிஸ்க். ஏதாவது பொண்ணுங்க பார்த்துட்டா பின்னாடி மிரட்டறதுல பிரச்சனை வரலாம். அவ்வளவு ரிஸ்க் எடுத்து இப்படி ஒரு CD கொடுக்கனுமா?
அடுத்து ஆரக்கிள் CD இன்ஸ்டிடியூட்ல நிறைய இருக்கும். அதை காப்பி போட்டு கொடுக்கறதை விட்டுட்டு இப்படி குமார் வந்து கொடுக்கறதுல லாஜிக் இல்லை.
அவ்வளவு அவசரமா இதை ரவிக்கு குமார் மூலமா கொடுக்க காரணம் வலுவா இல்லை :)
அதனால சந்தேகம் வந்து CDயை வீட்டுக்கு எடுத்துட்டு போய் பார்த்தான். விஷயம் தெரிஞ்சிடுச்சி. அப்படி அது ஆரக்கிள் CDயா இருந்தா திரும்ப கொண்டு வந்து கொடுத்திருப்பான் :)//
R: அடங்ங்.. கப்பா .. அடுத்த மணிரத்னம் , மிஷ்கின் தயாரிடாப்ள ....!! நிசம்தான் மாமு ...!!! ஒரு சில கதாசிரியர்களால் மட்டுமே .. மக்களின் யூகத்தின் அடிப்படையில் கதையை கொண்டு செல்ல முடியும் ..!! ...
ஐயோ ...நான் உங்க ஆடு புலி ஆட்டத்துல மாட்டிகிட்ட எலி . ..ஆமா ...உங்களுக்கு பாராட்டு மடல் எழுதிட்டு இருக்கும் போது (ஆபீஸ் ஹவர் ல தான்) ...தான் வந்துட்டாரு ..எங்க பெருச்சாளி பாசு ,,,, "Well guys lets get ready for the next release " நான் ஆடு புலி ஆட்டம் 21 பற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன் ......
// siva gnanamji(#18100882083107547329) said...
keep it up!//
thk u :)
// நாடோடி said...
வெட்டி, கதை பயங்கரமா போகுது... செம்ம திருப்பம், நல்ல லாஜிக்கலாவும் இருக்கு.. சூப்பர்!//
மிக்க நன்றி கணேஷ் :)
//R: அடங்ங்.. கப்பா .. அடுத்த மணிரத்னம் , மிஷ்கின் தயாரிடாப்ள ....!! நிசம்தான் மாமு ...!!! ஒரு சில கதாசிரியர்களால் மட்டுமே .. மக்களின் யூகத்தின் அடிப்படையில் கதையை கொண்டு செல்ல முடியும் ..!! ...
ஐயோ ...நான் உங்க ஆடு புலி ஆட்டத்துல மாட்டிகிட்ட எலி . ..ஆமா ...உங்களுக்கு பாராட்டு மடல் எழுதிட்டு இருக்கும் போது (ஆபீஸ் ஹவர் ல தான்) ...தான் வந்துட்டாரு ..எங்க பெருச்சாளி பாசு ,,,, "Well guys lets get ready for the next release " நான் ஆடு புலி ஆட்டம் 21 பற்றி யோசித்துக்கொண்டு இருந்தேன் ......//
ஹா ஹா ஹா...
என் மேனஜர் ஒரு வாரம் லீவ்... இருந்தாலும் வேலை இருக்கு.. ஆனா மல்டி டாஸ்கிங் பண்ணலாம் :)
சினிமா ஒளி வடிவம். எனக்கு கலர் சென்ஸ் எல்லாம் சுத்துமா கிடையாது :) அதனால அப்படி சினிமால எல்லாம் நம்மலால (ஐ மீன் என்னால) எதையும் கழுட்ட முடியாது...
இதெல்லாம் ஜாலிக்காக எழுதறது Harz :)
இந்தியா போனா எழுதவே முடியாது... மெயில் செக் பண்ணவே ப்ரவுசிங் செண்டர் தான் போகனும் :))
அடுத்த பகுதி சீக்கிரம் ப்ளீஸ்...
Hi,
romba nalla irukunga.....eppo poteenga? naan Indian time evening varai check panninen.
Regards,
Nandakumar G.
சூப்பர் இருங்க அடுத்த பகுதியையும் படிக்கனும்
I used to read blog whenever I find time. All are awesome. Keep up your good work. All the best.
Post a Comment