தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 23, 2008

பரிட்சை, உடையார், பருப்பு, ஆங்கில படங்கள்

நான் வேலை செய்யற கம்பெனில வருஷத்துக்கு ரெண்டு சர்டிஃபிகேஷன் பண்ணனும். இந்தியா போனா படிக்க நேரமிருக்குமானு தெரியல. அதனால இப்பவே பண்ணலாம்னு போன வாரம் ஒரு சர்டிஃபிகேஷனுக்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். ஒரு வழியா இன்னைக்கு ஒண்ணு எழுதி வெற்றிகரமா முடிச்சாச்சி. படிச்சி ரொம்ப நாள் ஆனதால படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

...............

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாலகுமாரனோட உடையார் படிச்சேன். இது வரைக்கும் நான் படிச்ச வரலாற்று புதினங்களை சொல்லிடறேன். அப்ப தான் மத்ததுக்கும் உடையாருக்கும் இருக்குற வித்தியாசம் புரியும். இது வரை நான் படிச்சது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர், கடல் புறா, யவன ராணி, ஜல தீபம். 

மத்த எல்லா கதைக்கும் உடையாருக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. முக்கியமான வித்தியாசம் உடையார் அளவுக்கு சமுதாய சூழ்நிலைகளையும், தமிழ் சமூகத்தில் நிலவிய சாதிய கோட்பாடுகளையும் மத்த கதைகள் பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த எந்த சூழ்நிலைகளில் எந்த எந்த சமூகத்தை சேர்ந்தோர் முக்கியத்துவமடைகின்றனர் என்பதும் இதில் சுவையாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பிராமணர்கள் எப்படி வேத பாடங்களை பயில்வதிலிருந்து அரசு இயந்திரம் அனைத்திலும் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் என்றும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. நான் முன்னுரை படிக்காததால எது கற்பனை எது உண்மைனு சொல்ல முடியல. ஆனா என்னோட கணிப்பு இது எல்லாமே கற்பனை தான். ஆனா நம்பும்படியான அழகான கற்பனை.

இந்த கதைல நாயகன் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் தான். ஆனா மத்த கதைகள் அளவுக்கு அவர் ஹீரோயிசம் எதுவும் பண்ணல. கதை முழுக்க முழுக்க தஞ்சை பெரிய கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது. நிறைய இடங்களில் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. (உதாரணமாக பஞ்சமன் மாதேவிக்கும் ராஜேந்திரனுக்கும் இரண்டு வயதே வித்தியாசம்னு ஒரு இடத்தில் சொல்வதும், பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... இந்த மாதிரி நிறைய...)

பொன்னியின் செல்வனில் விடை கிடைக்காத ஆதித்த கரிகாலன் மரணம் பற்றி விரிவாக பேசப்படுகிறது. சிட்டிசன்ல கடைசி சீன்ல அஜித் கொடுக்க சொல்ற தண்டனை (பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மாமன், மச்சான்.... அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும்) இங்க இருந்து தான் காப்பி அடிச்சிருக்காரு போல :)

நான் ரொம்ப ரசிச்சி படிச்சேன். இதை பத்தி எழுத நிறைய இருந்தாலும் பின்னாடி ஒரு நாள் விரிவா எழுதலாம், இப்ப இதை படிக்க சிபாரிசாவது செய்யலாம்னு சொல்லிட்டேன். 

இதை படிச்சி நான் கடைசியா ஃபீல் பண்ணது, மன்னராட்சி ரொம்ப கொடுமையானது. போர் அதை விட ரொம்ப கொடுமையானது. 

.................

அமெரிக்கா வந்ததுக்கப்பறம் நடந்த ஒரு உருப்பிடியான விஷயம் நான் சமைக்க கத்துக்கிட்டது தான். இங்க என் சமையலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இந்தியா போனா கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்து போயிடுங்கற காரணத்தால ஒண்ணு ஒண்ணா இங்க ரெசிப்பி எழுதி வெச்சிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். இது முக்கியமா எனக்கு மறக்க கூடாதுனு தான். உங்களுக்கும் பயன்பட்டுச்சினா சந்தோஷம். நிறைய ஐட்டம் ஆந்திரா ஸ்டைல்ல இருக்கும். ஏன்னா என்னுடைய பழைய ரூமேட் ஒருத்தர் தெலுகு. அவர் சமையல் பிடிச்சதால அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.

இன்னைக்கு தால் @ பப்பு @ பருப்பு

(ரெண்டு பேருக்கு ரெண்டு வேளை / நாலு பேருக்கு ஒரு வேளைக்கு)

1 கப் துவரம் பருப்பு. (எலக்ட்ரிக் குக்கர் கப். 200 ml இருக்கும்னு நினைக்கிறேன்)
வெங்காயம் - 1 (சின்ன சின்னதா கட் பண்ணனும்னு அவசியமில்லை)
தக்காளி - 1 / 2 (சைஸ் பொருத்து. சின்ன தக்காளியா இருந்தா ரெண்டு, பெருசா இருந்தா ஒண்ணு)
பச்சை மிளகாய் - 5-6
மஞ்சத்தூள் - கொஞ்சம் (அரை ஸ்பூன்)
நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் (ரொம்ப குழையாமலும் ஒட்டிக்காமலும் இருக்கும்)
தண்ணி மூணு கப்

இதை குக்கர்ல வெச்சி மூணு விசில் விடற வரைக்கும் வைக்கனும். 

அதுக்கு அப்பறம்

வெங்காயம் - ஒண்ணு (பொடி பொடியா நறுக்கிக்கனும்)
பூண்டு - 3-4 பல்
கருவேற்பிலை 
சீரகம்
கடுகு (அப்படியே ரிவர்ஸ் ஆர்டர்ல போட்டிருக்கேன்)

இதெல்லாம் போட்டு நல்லா வதக்கணும். 

இப்ப வதக்கனதை எடுத்து குக்கர்ல போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள் (அரை ஸ்பூன்), தேவையான அளவு உப்பு போட்டு (நான் கைல தான் கொட்டி போடுவேன். அதனால ஸ்பூன் அளவு தெரியாது.) தண்ணி நல்லா போற வரைக்கும் அடுப்புல வைக்கணும். அவ்வளவு தான்.

(பருப்பு கீரை @ ஸ்பீனாச் டால் - இதே செய்முறைதான். கீரையை சேர்த்து வேக வைக்கணும்)

அவ்வளவு தான். சோ சிம்பிள். இப்படி தினமுன் நம்ம ஃபெவரைட் ஐட்டம்ஸ் ஒண்ணு ஒண்ணா எழுதி வைக்க போறேன் :)

..................

இங்கிலிஷ் படங்களோட ரேபிட் ஷேர் லிங் இங்க கிடைக்கும் - www.th3zone.com.
அப்படியே ரேபிட் ஷேர்ல பிரிமியம் அக்கவுண்ட் ஒரு மாசத்துக்கு ஓப்பன் பண்ணா தினமும் 5 படங்கள் டவுன்லோட் பண்ணலாம் :)
ஒரு 1 TB ஹார்ட் டிஸ்க் வாங்கினா எல்லாத்தையும் அதுல சேவ் பண்ணிடலாம்.

29 comments:

Udhayakumar said...

//இங்கிலிஷ் படங்களோட ரேபிட் ஷேர் லிங் இங்க கிடைக்கும் - www.th3zone.com.
அப்படியே ரேபிட் ஷேர்ல பிரிமியம் அக்கவுண்ட் ஒரு மாசத்துக்கு ஓப்பன் பண்ணா தினமும் 5 படங்கள் டவுன்லோட் பண்ணலாம் :)
ஒரு 1 TB ஹார்ட் டிஸ்க் வாங்கினா எல்லாத்தையும் அதுல சேவ் பண்ணிடலாம்.//

புடிச்சு உள்ள உக்கார வைக்கிற ஐடியா சாமி இது!!!! புது ரூல் இன்னமும் நீங்க படிக்கிலியா????

வெட்டிப்பயல் said...

//udhayakumar said...

11:07 PM
//

நம்ம ஷேர் பண்ணா தான் பிரச்சனை. டவுன் லோட் பண்ணா பிரச்சனையில்லைனு கேள்வி பட்டேன். ஏதாவது லிங் இருந்தா கொடுங்களேன்

Udhayakumar said...

இங்க பாருங்க...

http://www.msnbc.msn.com/id/25960741/

============
US Customs and Border Protection has started searching LapTops and other electronic storage devices at all immigration points. If CBP detect any information concerning terrorism, narcotics smuggling, and other national security matters; alien admissibility; contraband including child pornography, monetary instruments, and information in violation of copyright or trademark laws; and evidence of or other import or export control laws – one would be in serious trouble.

Please make sure you don’t have any of the following material in your LapTop or any other storage devices (like pen-drives, MP3 players, CDs and DVDs):

· Pirated Movies

· Pornographic material

· Large no of MP3 songs

· PII, PHI, PIFI à US citizens personal information

வெட்டிப்பயல் said...

மிக்க நன்றி உதய்... மிகவும் பயனுள்ள தகவல். அதுவும் எனக்கு...

எல்லாத்தையும் இந்த முப்பது நாள்ல பாத்துட்டு டெலிட் பண்ணிட்டு போக வேண்டியது தான் :)

வெட்டிப்பயல் said...

உதய் கொடுத்த மற்றொடு லிங் :)

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2008/08/01/AR2008080103030.html

யாத்ரீகன் said...

@udhay & @vetti:

aha.. NetFlix-la rip panna collection yellam pochaa.. pochaa... :-(

வெட்டிப்பயல் said...

//யாத்ரீகன் said...
@udhay & @vetti:

aha.. NetFlix-la rip panna collection yellam pochaa.. pochaa... :-(//

ஆமாம் :(

இருந்தாலும் பரவாயில்லை. நிறைய படங்களை பார்த்தாச்சு :)

வெட்டிப்பயல் said...

முதல் மூணு விஷயம் பத்தி யாருமே எதுவுமே பேச மாட்றீங்க?

இரவு கவி said...

when i was in US i did the same thing. i have 500GB harddisk full of movies. I brought that harddisk 2 months before to india. luckily i didnt face any problem. I'm enjoying now by watching all the movies in india. :-)

திவாண்ணா said...

ஸப்ஜெக்ட் படிக்க சந்தோஷப்படற முத ஆசாமிய பாக்கிறேன்.
:-))

ambi said...

//நிறைய ஐட்டம் ஆந்திரா ஸ்டைல்ல இருக்கும். ஏன்னா என்னுடைய பழைய ரூமேட் ஒருத்தர் தெலுகு.//

ஹிஹி, ஏன்னு நாங்க கேட்டோமா?நீங்க கொல்டி கதை எழுதின போதே எங்களுக்கு புரிஞ்சு போச்சு! :p

Sridhar Narayanan said...

//பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... //

இதில தகவல் பிழை என்னங்க இருக்கு? அந்தகாலத்துல வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே திருமணம் செய்து வயசுக்கு வந்தவுடனே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க. பண்ணிரெண்டு வயதில் மாப்பிள்ளை வீட்டுக்கு போவது நடக்கக் கூடியதுதானே?

//புடிச்சு உள்ள உக்கார வைக்கிற ஐடியா சாமி இது!!!! புது ரூல் இன்னமும் நீங்க படிக்கிலியா????//

நான் சொல்ல நினைச்சேன் உதய் சொல்லிட்டார்.

நிறையப் பேரு டோரண்ட்ல பாத்தேன், ஆன்லைன்ல பாத்தேன்னு பதிவிலேயே எழுதறாங்க. அதோட லிங்கையுமே அப்படியே கொடுக்கிறாங்க. இது எப்படின்னா 'கள்ள நோட்டு கொடுத்து சாமான் வாங்கினேன்னு' சொல்ற மாதிரிதான். சரி விடுங்க. தமிழ் பதிவுகள்ல யாரும் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. இருந்தாலும் உஷாரா இருங்க சாமி.

வெட்டிப்பயல் said...

//இரவு கவி said...
when i was in US i did the same thing. i have 500GB harddisk full of movies. I brought that harddisk 2 months before to india. luckily i didnt face any problem. I'm enjoying now by watching all the movies in india. :-)
//

எந்த ஊருனு சொல்லுங்க.. வந்து காப்பி பண்ணிக்கிறோம் :)

வெட்டிப்பயல் said...

//திவா said...
ஸப்ஜெக்ட் படிக்க சந்தோஷப்படற முத ஆசாமிய பாக்கிறேன்.
:-))
//

படிச்சி ரொம்ப நாள் ஆனதால ஒரு சந்தோஷம்.. அதுவுமில்லாம பரிட்சைக்கு பயந்து படிக்கிறது ரொம்ப பிடிச்சிருந்தது...

பாஸ் மார்க் 75. அது தான் கொஞ்சம் வயித்துல புளியை கறைச்சது :)

வெட்டிப்பயல் said...

//ambi said...
//நிறைய ஐட்டம் ஆந்திரா ஸ்டைல்ல இருக்கும். ஏன்னா என்னுடைய பழைய ரூமேட் ஒருத்தர் தெலுகு.//

ஹிஹி, ஏன்னு நாங்க கேட்டோமா?நீங்க கொல்டி கதை எழுதின போதே எங்களுக்கு புரிஞ்சு போச்சு! :p
//

உங்களுக்கு புரியும். மத்தவங்களுக்கு புரிய வேண்டாமா? நான் அந்த கதைலயும் என் ரூமேட் தெலுகுனு பின்னூட்டத்துல சொல்லியிருப்பேன் :)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
//பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... //

இதில தகவல் பிழை என்னங்க இருக்கு? அந்தகாலத்துல வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே திருமணம் செய்து வயசுக்கு வந்தவுடனே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிவிடுவாங்க. பண்ணிரெண்டு வயதில் மாப்பிள்ளை வீட்டுக்கு போவது நடக்கக் கூடியதுதானே?//

ஹி ஹி ஹி...

இது அரேஞ்ச்ட் மேரேஜ்ல. பஞ்சவன் மாதேவி தேவரடியார். அவர் கோவில்ல நாட்டியமாடறதை பார்த்துட்டு தான் அவர் திருமணமே பண்ணிக்குவார். அவர் முதல்ல பார்க்கும் போழுதே அவுங்களுக்கு இருபது வயசு பக்கமாகியிருக்கும் :)

ரெண்டும் வெவ்வேறு பாகத்துல வரதால தவற விட்டிருக்கலாம். அதே மாதிரி பஞ்சவன் மாதேவி சாவிற்கு காரணமான பரமு நம்பூதிரி மகன் இறந்து மூன்று நான்கு வருடம் தான் ஆகியிருக்கும். அதுவும் அவன் இறப்பது மேலை சாலுக்கிய போரில். இறுதியில் அவன் விஷம் தடவிய சக்கரத்தை பாய்ச்சும் முன் பதினேழு வருடத்திற்கு முன்பு நடந்த முதல் போரை சொல்வது போல் இருக்கும்.

ராஜேந்திரனுக்கு பிறகு இரண்டாவது சந்திரமதி என்று ஒரு பகுதியில் இருக்கும். பிறகு குந்தவை அவளை தங்கை என்று சொல்வாள். இந்த மாதிரி நிறைய இருக்கு :)

//
//புடிச்சு உள்ள உக்கார வைக்கிற ஐடியா சாமி இது!!!! புது ரூல் இன்னமும் நீங்க படிக்கிலியா????//

நான் சொல்ல நினைச்சேன் உதய் சொல்லிட்டார்.

நிறையப் பேரு டோரண்ட்ல பாத்தேன், ஆன்லைன்ல பாத்தேன்னு பதிவிலேயே எழுதறாங்க. அதோட லிங்கையுமே அப்படியே கொடுக்கிறாங்க. இது எப்படின்னா 'கள்ள நோட்டு கொடுத்து சாமான் வாங்கினேன்னு' சொல்ற மாதிரிதான். சரி விடுங்க. தமிழ் பதிவுகள்ல யாரும் அவ்ளோ சீரியஸா எடுத்துக்க மாட்டாங்க. இருந்தாலும் உஷாரா இருங்க சாமி.
//

இனிமே உஷாரா இருக்கோம் :)

சின்னப் பையன் said...

தல, கலக்கறீங்க போங்க.

ரெண்டு வருஷத்துக்கு ஒரு சர்டிஃபிகெகெஷன் பண்றதுக்கே இங்கே மேல்/கீழ் மூச்சு வாங்குது...

சரி. அது என்ன பரிட்சைன்னு சொல்லக்கூடாதா?

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
தல, கலக்கறீங்க போங்க.

ரெண்டு வருஷத்துக்கு ஒரு சர்டிஃபிகெகெஷன் பண்றதுக்கே இங்கே மேல்/கீழ் மூச்சு வாங்குது...

சரி. அது என்ன பரிட்சைன்னு சொல்லக்கூடாதா?

7:03 PM//

வேற வழியில்லைனா பண்ணி தானே ஆகனும் :)

நான் பண்ணது Specialized Testing :)

குமரன் (Kumaran) said...

உடையாரில் சொல்லப்பட்டவை முழுக்க முழுக்கக் கற்பனையும் இல்லை. முழுக்க முழுக்க உண்மையும் இல்லை. தற்போது நிலவும் சூழலை வைத்து 'இப்படித் தான் நடந்திருக்க வேண்டும்' என்று பாலகுமாரன் நினைப்பதை உடையாரில் எழுதியிருக்கிறார்.

இந்தக் கதையை பாலகுமாரன் உட்கார்ந்து எழுதவில்லை என்றும் கதையை அவர் சொல்லிக் கொண்டே போக அதனை ஒலிப்பதிவாய் பதித்து அதிலிருந்து இருவர் எழுதினார்கள் என்றும் முன்னுரையில் படித்ததாக நினைவு. எல்லாப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எழுதவில்லை. அதனால் புதிது புதிதாகப் புரிந்து கொண்டவற்றையும் அறிந்து கொண்டவற்றையும் சொல்லிச் செல்கிறார். அப்படி செய்யும் போது பஞ்சவன்மாதேவிக்கும் அவளுக்குப் பள்ளிப்படை எழுப்பிய இராசேந்திரனுக்கு உள்ள வயது வித்தியாசம் மாறுபட்டது சாதாரணம் தான். இன்னும் பெரிய பெரிய முரண்பாடுகளும் இந்தப் புதினத்தில் உண்டு.

முரளிகண்ணன் said...

உடையார் எழுதிக்கொண்டிருக்கும் போது (சரவனா ஸ்டோர் இதயம் பத்திரிக்கையில்) அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் முதல் பாகம் அளவுக்கு இல்லை. படிக்க சுவையான புதினம்

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

நான் அவசரத்துல முன்னுரை படிக்காம போனது ரொம்ப தப்புனு ஃபீல் பண்ணி தான் பெருசா விமர்சனம் எழுதாம விட்டுட்டேன்...

நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் படிக்க நல்லா இருந்தது. அதுவும் மத்த கதைகளை விட வித்யாசமா இருந்தது பிடித்திருந்தது :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
உடையார் எழுதிக்கொண்டிருக்கும் போது (சரவனா ஸ்டோர் இதயம் பத்திரிக்கையில்) அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இரண்டாம் பாகம் முதல் பாகம் அளவுக்கு இல்லை. படிக்க சுவையான புதினம்
//

ஆமாம் முக. படிக்க சுவையாக இருந்தது. மறுபடியும் நிறைய படிக்கனும்னு ஆவலை ஏற்படுத்திடுச்சு. இந்தியா வந்தவுடனே நிறைய படிக்கனும் :)

கப்பி | Kappi said...

படிப்பாளி ஆயிட்டீங்க ;)

வெட்டிப்பயல் said...

//கப்பி | kappi said...
படிப்பாளி ஆயிட்டீங்க ;)

//

நானே போன வருஷம் எழுதாம இப்ப தான் எழுதியிருக்கேன். அதுக்கே இந்த எஃபக்டா :)

புருனோ Bruno said...

//(உதாரணமாக பஞ்சமன் மாதேவிக்கும் ராஜேந்திரனுக்கும் இரண்டு வயதே வித்தியாசம்னு ஒரு இடத்தில் சொல்வதும், பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... இந்த மாதிரி நிறைய...)//

பஞ்சமன் மாதேவிக்கு 12 வயதில் திருமணம் முடியவில்லை என்று மூன்றாவது இடத்தில் இருக்கிறதா :) :) :)

புருனோ Bruno said...

//ராஜேந்திரனுக்கு பிறகு இரண்டாவது சந்திரமதி என்று ஒரு பகுதியில் இருக்கும். பிறகு குந்தவை அவளை தங்கை என்று சொல்வாள். இந்த மாதிரி நிறைய இருக்கு :)//

புரியவில்லை !!

ராஜராஜனின் அக்காவின் பெயரும் குந்தவை, ராஜராஜனின் மகளின் பெயரும் குந்தவை தானே !!

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...

தெளிவாக வயது இருக்காது என நினைக்கிறேன்... ஆனா அவர்கள் திருமணத்தின் பொழுது பஞ்சவன் மாதேவி அவர்களுக்கு வயது ஓரளவு இருபதிற்கு மேல் இருப்பது போல் தான் விளக்கியிருப்பார்.

வெட்டிப்பயல் said...

//புருனோ Bruno said...
//ராஜேந்திரனுக்கு பிறகு இரண்டாவது சந்திரமதி என்று ஒரு பகுதியில் இருக்கும். பிறகு குந்தவை அவளை தங்கை என்று சொல்வாள். இந்த மாதிரி நிறைய இருக்கு :)//

புரியவில்லை !!

ராஜராஜனின் அக்காவின் பெயரும் குந்தவை, ராஜராஜனின் மகளின் பெயரும் குந்தவை தானே !!

//

ராஜராஜனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். முதலில் ராஜராஜன் இரண்டாவது குந்தவையா அல்லது சந்திரமதியா என்பதில் குழப்பம் :)

புருனோ Bruno said...

// ராஜராஜனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். முதலில் ராஜராஜன் இரண்டாவது குந்தவையா அல்லது சந்திரமதியா என்பதில் குழப்பம் :) //

ராஜராஜனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். முதலில் ராஜேந்திரன் இரண்டாவது குந்தவையா அல்லது சந்திரமதியா என்பதில் குழப்பம் :)

ஒரு வேளை குந்தவை வேறு தாய்க்கு பிறந்திருந்தால் ??