இன்னும் ஒரு வாரத்துக்கு கண்டதையும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இந்தியா வரதால புது லேப் டாப் வாங்கிருக்கேன். HP லேப் டாப். வெயிட் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. நவம்பர் கடைசில கிளம்பற மாதிரி இருந்திருந்தா கருப்பு வெள்ளி (Black Friday - Day After Thanks giving day) சேல்ல வாங்கியிருக்கலாம். இதுவும் ஓரளவு நல்ல டீல் தான். லேப் டாப் முந்தா நேத்து தான் வந்துச்சு.
Deals2buy.comல பார்த்து வாங்கினேன்.
(HP Pavilion dv6700t, Intel(R) Core(TM) 2 Duo T5750, 2.0GHz, 15.4" WXGA, 3GB RAM, 250GB, LightScribe SuperMulti 8X DVD+/-R/RW with Double Layer Support, 256MB NVIDIA GeForce 8400M GS, 802.11 b/g, Webcam, Fingerprint Reader, High Capacity 6 Cell Battery, Windows Vista Home Premium » for $673.99 at HPShopping.com)
வீண்டோஸ் விஸ்டா நல்லா தான் இருக்கு. ஆனா இன்னும் முழுசா பயன்படுத்தி பார்க்கல. இத்தனை நாள் ஈ-கலப்பை பயன்படுத்தியிருந்தேன். லக்கி சொல்லி NHM பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். இது ஈ-கலப்பையை விட நல்லா இருக்கு. இப்ப ப்ரவுசரும் Chromeதான். இத்தனை நாள் Firefox பயன்படுத்திட்டு இருந்தேன். மறுபடியும் மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
.................
போன வாரம் Memento படம் பார்த்தேன். கஜினிக்கும் மெமெண்டோவிற்கும் உள்ள ஒரே தொடர்பு அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அப்படிங்கற கான்செப்ட் மட்டும் தான். மத்தபடி இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மெமெண்டோ மிக அருமையான படம். ஆனா அலைபாயுதே, 12 Bயே புரியாத நம்ம ஊர்ல இப்படி படம் வந்தா கண்டிப்பா ஒரு நாள் கூட ஓடாது.
ஸ்ரீதர் நாராயணனோ, கப்பியோ இதற்கு விமர்சனம் எழுதினால் அருமையாக இருக்கும். சான்ஸ் கிடைத்தால் தவறாமல் பார்க்கவும்.
..................
சமையல் குறிப்புல இன்னைக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு @ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 - 2
தக்காளி - 2
பூண்டு - 4-5 பல்
கத்திரிக்காய் - 8 - 10
வெந்தயம்.
புளி (இங்க concentrated Tamarind Paste கிடைக்கும். அதை தான் பயன்படுத்தறேன். நம்ம ஊர்னா ஒரு 100 கிராம் புளினு நினைக்கிறேன். கைல அளவு பார்த்தா தான் தெரியும்)
கடுகு
கருவேற்பிலை
நல்லெண்ணெய் - 3-4 ஸ்பூன்.
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்த பின் கருவேற்பிலை, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறம் (எந்த பொண்ணுனு கேக்காதீங்க) வரும் வரை வதக்கவும், பிறகு தக்காளி போடவும். அது நன்றாக வெந்த கத்திரிக்காயை போடவும். கத்திரிக்காயை கட் பண்றதே ஒரு லாஜிக் இருக்கு. முன்னாடி காம்பை நீக்கிவிட்டு பின்னால் நான்காக குறுக்குவாட்டில் வெட்டவும் (அடுத்த முறை சமைக்கும் போது போட்டோ எடுத்து வெச்சிக்கறது நல்லது). இதை நன்றாக வதக்கவும். அதுல மேல வேணும்னா லைட்டா நல்லெண்ணெய் விடலாம். நன்றாக வதங்கிய பிறகு மூன்று நான்கு ஸ்பூன் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மஞ்சள் போட்டு அரை டம்ப்ளார் தண்ணீர் ஊற்றவும். மசாலா ஓரளவு வெந்த பிறகு புளி கரைசலை ஊற்றவும். நல்லா கொதிச்சவுடன் உப்பு காரம் சரியாக இருக்கா என பார்த்து சரி பண்ணவும். கொஞ்சம் ஃபிரைட் ஆனியன்ஸூம் போடலாம்.
.....................
நான் ஆவலோட எதிர்பார்த்த கூகுள் ஃபோன் புக்கிங் ஆரம்பிச்சிடுச்சி. அடுத்த மாசம் 22ம் தேதி வெளியாகிறதாம். அடுத்த முறை எப்ப வருவனோ தெரியாது. எப்படியும் அப்ப மூணு நாலு ஜெனரேஷன் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.
.....................
22 comments:
/
சமையல் குறிப்புல இன்னைக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு @ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
/
என்ன அண்ணாத்த இன்னும் நீங்கதான் சமையலா !?!?!?
ஹைய்ய்ய்யோ ஹைய்ய்யோ!!
:)))))))))))
ஏன் தலைவரே , கஜினில அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் தவிர வேற என்ன இருக்கு? :-)
//மங்களூர் சிவா said...
/
சமையல் குறிப்புல இன்னைக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு @ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
/
என்ன அண்ணாத்த இன்னும் நீங்கதான் சமையலா !?!?!?
ஹைய்ய்ய்யோ ஹைய்ய்யோ!!
:)))))))))))//
இன்னும் ஒரு மாசத்துக்கு... அப்பறம் மறந்துடக்கூடாதுனு தான் பதிஞ்சிட்டு இருக்கோம்... உனக்கும் பின்னாடி பயன்படும் :)
//
வெட்டிப்பயல் said...
உனக்கும் பின்னாடி பயன்படும் :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((((((
//sriram said...
ஏன் தலைவரே , கஜினில அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் தவிர வேற என்ன இருக்கு? :-)
1:13 AM//
அழகான அசின் காதல் இருக்கு. கேவலமான வில்லன் இருக்கான். அதுல நயன் அசிங்கமா இருப்பாங்க. அந்த பிரச்சனையோட அவர் ஹீரோவா இருப்பார் :)))))
நான் ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ்னு ஒரு நோயை பத்தி கேள்விப்பட்டா என்ன யோசிப்பனோ அதே கோணத்துல படமிருந்தது எனக்கு பிடிச்சிருந்தது. அதுவும் சொல்லப்பட்ட விதம் அருமையிலும் அருமை...
//மங்களூர் சிவா said...
//
வெட்டிப்பயல் said...
உனக்கும் பின்னாடி பயன்படும் :)
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((((((//
நோ ஃபிலீங்ஸ்... உடம்பு சரியில்லாத மனைவிக்கு சமைச்சி போடறதும் ஒரு சந்தோஷமான விஷயம் தான்.
//(HP Pavilion dv6700t, Intel(R) Core(TM) 2 Duo T5750, 2.0GHz, 15.4" WXGA, 3GB RAM, 250GB, LightScribe SuperMulti 8X DVD+/-R/RW with Double Layer Support, 256MB NVIDIA GeForce 8400M GS, 802.11 b/g, Webcam, Fingerprint Reader, High Capacity 6 Cell Battery, Windows Vista Home Premium » for $673.99 at HPShopping.com)///
good laptop and good deal.
ஆனா, செங்கல் மாதிரி கனமா இருக்குமே?
finger print நல்ல வசதி, ஆனா, docking உபயோகிப்பவர்களுக்கு பெருசா நன்மை லேது இதனால்.
அதெல்லாம் இருக்கட்டும். அடுத்த கதை எப்பங்க?
Vettis,
adhu "ஆவளோட" illaingo..."ஆவலோட"
லேப்டாப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.
இந்தியா வரும்போது ட்ரீட் கொடுக்க மறந்துடாதீங்க.
ஆ நலுகுரு படம் பத்தி ஒரு போஸ்ட் போட்டிருக்கேன். நீங்க அந்த படம் பாத்திருக்கீங்களா?
//கஜினிக்கும் மெமெண்டோவிற்கும் உள்ள ஒரே தொடர்பு அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அப்படிங்கற கான்செப்ட் மட்டும் தான். மத்தபடி இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.//
நான் இன்னமும் மெமெண்டோ பார்க்கவில்லை. ஆனால் அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் தவிர... உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வதெல்லாம் கூட காப்பியடித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். Chamber of Commerce-ல் கூட தமிழில் உரை நிகழ்த்தும் சஞ்சய் ராமசாமி பச்சைக் குத்திக் கொள்ளும்போது மட்டும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பார் :-)
தமிழ் படம் நன்றாகவே இருந்தது. ஹிந்தி எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் :-)
சுவையான அவியல்
//surveysan said...
//(HP Pavilion dv6700t, Intel(R) Core(TM) 2 Duo T5750, 2.0GHz, 15.4" WXGA, 3GB RAM, 250GB, LightScribe SuperMulti 8X DVD+/-R/RW with Double Layer Support, 256MB NVIDIA GeForce 8400M GS, 802.11 b/g, Webcam, Fingerprint Reader, High Capacity 6 Cell Battery, Windows Vista Home Premium » for $673.99 at HPShopping.com)///
good laptop and good deal.
ஆனா, செங்கல் மாதிரி கனமா இருக்குமே?
finger print நல்ல வசதி, ஆனா, docking உபயோகிப்பவர்களுக்கு பெருசா நன்மை லேது இதனால்.
1:36 AM//
ஆமாம் சர்வேஸ். வெயிட் அதிகம் தான். ஆனா சூப்பரா இருக்கு. நான் வீட்ல டாக்கிங் உபயோகிக்கறதில்லை :)
//lone crusader said...
Vettis,
adhu "ஆவளோட" illaingo..."ஆவலோட"
//
மிக்க நன்றி நண்பா... மாத்தியாச்சு :)
// prakash said...
அதெல்லாம் இருக்கட்டும். அடுத்த கதை எப்பங்க?
//
அடுத்த கதைக்களம் ரெடியா இருக்கு. அதை பத்தி நிறைய படிக்க வேண்டியதிருக்கு. படிச்சி முடிச்சிட்டு எழுத ஆரம்பிச்சிடலாம் :)
அதுக்கு முன்னாடி சுஜாதா எழுதின ஒரு புத்தகம் வேண்டும் :)
கத்திரிக்கா குழம்பு டிப்ஸ் நல்லா இருக்கு...ஆனா சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமான்னு சொல்லவே இல்லையே!!! :))
//புதுகைத் தென்றல் said...
லேப்டாப் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்.
இந்தியா வரும்போது ட்ரீட் கொடுக்க மறந்துடாதீங்க.
//
ட்ரீட் தானே கொடுத்துட்டா போச்சு ;)
//
ஆ நலுகுரு படம் பத்தி ஒரு போஸ்ட் போட்டிருக்கேன். நீங்க அந்த படம் பாத்திருக்கீங்களா?
//
ஆ நலுகுரு அட்டகாசமான படமாச்சே. இந்த படம் பத்தி நான் முன்னாடியே எழுதியிருக்கேன்.. லிங் தேடி பார்த்து தரேன் :)
//Sridhar Narayanan said...
//கஜினிக்கும் மெமெண்டோவிற்கும் உள்ள ஒரே தொடர்பு அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அப்படிங்கற கான்செப்ட் மட்டும் தான். மத்தபடி இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.//
நான் இன்னமும் மெமெண்டோ பார்க்கவில்லை. ஆனால் அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் தவிர... உடம்பில் பச்சைக் குத்திக் கொள்வதெல்லாம் கூட காப்பியடித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். Chamber of Commerce-ல் கூட தமிழில் உரை நிகழ்த்தும் சஞ்சய் ராமசாமி பச்சைக் குத்திக் கொள்ளும்போது மட்டும் ஆங்கிலத்தில் எழுதியிருப்பார் :-)
//
ஹி ஹி ஹி...
இந்த பச்சை குத்தி கொள்வதிலும் அந்த படத்திற்கும் கஜினிக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது. படம் பார்த்தா உங்களுக்கே புரியும். அட்டகாசமான எடிட்டிங். ஒண்ணு ரிவர்ஸ்ல வரும், ஒண்ணு ஃபார்வர்ட்ல வரும். அது ரெண்டும் சந்திக்குமிடத்தில் படம் முடியும் :)
ரிவர்ஸ்ல வருவது எல்லாமே நாயகனோட நினைவுகள் மட்டும் தான். குறிப்பிட்ட நேரத்தில் அவருக்கும் இருக்கும் நினைவுகள் மட்டும். அது எல்லாத்தையும் இணைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் :)
//தமிழ் படம் நன்றாகவே இருந்தது. ஹிந்தி எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் :-)
//
தமிழ்ல அசின் வர சிக்வன்ஸ் எனக்கு பிடித்திருந்தது :)
//முரளிகண்ணன் said...
சுவையான அவியல்
//
மிக்க நன்றி முக :)
// Divyapriya said...
கத்திரிக்கா குழம்பு டிப்ஸ் நல்லா இருக்கு...ஆனா சின்ன வெங்காயமா, பெரிய வெங்காயமான்னு சொல்லவே இல்லையே!!! :))
//
சாம்பார், புளிக்குழம்பு எல்லாத்துக்கும் சின்ன வெங்காயம் போட்டா நல்லா இருக்கும். அது கிடைக்காதவங்க பெரிய வெங்காயத்தை சின்ன சின்னதா நறுக்கி போடலாம் :)
கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெசிப்பிக்கு நன்றி.
//rapp said...
கத்திரிக்காய் புளிக்குழம்பு ரெசிப்பிக்கு நன்றி.//
முயற்சி செஞ்சி பாருங்க. நல்லா வந்தா சொல்லுங்க... அப்படியே ஒரு அரை ஸ்பூன் நெய் விட்டு பாருங்க. நல்லா இருக்கும் :)
Post a Comment