புரட்டாசி மாசம் வந்தாலும் வந்துச்சு, இந்த பத்து நாள்ல நாலு அஞ்சு தடவைக்கு மேல Subway தான். இல்லைனா BK (#6) , KFC, Taco Bell இப்படி மாத்தி மாத்தி சாப்பிட்டிருக்கலாம். நேத்து பிசாவும் சாப்பிட்டாச்சு. கரெக்டா இந்த மாசம் தான் Fall கலர் பார்க்க ஊர் சுத்துவோம். ஏதாவது காடு, மலைனு போய்ட்டு இருக்கும் போது வெஜ் மட்டும் சாப்பிடனும்னா கடுப்பா தான் இருக்கும். ஆனா இப்படி இருந்தா தான் சிக்கன் சாப்பிடாம வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வரும்.
இன்னைக்கு ராத்திரி ஒரு பாட் லாக் வேற. அங்கயும் சிக்கன் சாப்பிடாம வெஜ் தான் சாப்பிடனும். மத்த பாட் லாக்ல எல்லாம் நான் சைவத்தை பத்தி யோசிக்கவே மாட்டேன். இப்ப நானே சைவம் அப்படிங்கறதால அதுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தாச்சு. நல்லா சமைக்கற ஒருத்தவங்களை வெஜ் ஃபிரைட் ரைஸ் செய்ய சொல்லியாச்சு. நான் காலி ஃபிளவர் ஃபிரை செய்ய போறேன். நமக்கு பிரச்சனையில்லை.
................................................
இந்தியாக்கு கிளம்பற தேதில கொஞ்சம் பிரச்சனையிருந்தது. நான் அக்டோபர் 25ஆம் தேதி போகனும்னு சொன்னேன். இங்க இருக்குற ஒரு மேனஜர் அதெல்லாம் முடியாது 31ஆம் தேதி தான் கிளம்பனும்னு சொன்னாரு. இன்னைக்கு இந்தியால இருக்கிற மேனஜர்கிட்ட பேசினதுல 25ஆம் தேதியே கிளம்பலாம்னு சொல்லிட்டாரு. இன்னும் வீட்ல சொல்லலை. இந்திய நேரம் காலைல ஃபோன் பண்ணி சொல்லனும். அது ஏன் 25ஆம் தேதினு பாக்கறீங்களா? 27ஆம் தேதி (தலை) தீபாவளி.
.................................................
அகிலனோட வெற்றி திருநகர் படிச்சிருக்கீங்களா? அருமையான கதை. தமிழ்நாட்ல இத்தனை தெலுங்கர்கள் எப்படி வந்தாங்கனு அதுல அழகா சொல்லியிருப்பாரு. விஜய நகர பேரரசும், கிருஷ்ண தேவ ராயரும் மனதை கொள்ளை கொள்வார்கள்.
ஆனா சோழ சாம்ராஜ்யம் அழிஞ்சி போய் தஞ்சைலயே சாப்பாட்டுக்கு கஷ்டப்படற மாதிரி எல்லாம் படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
பொன்னியின் செல்வனளவுக்கோ, வேங்கையின் மைந்தன் அளவுக்கோ விறுவிறுப்பு இருக்காது. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கும். இது நான் போன வருஷம் இந்தியா போகும் போது ஃபிளைட்ல படிச்சிட்டு போனது.
....................................................
இந்தியால குடிக்கிற Cokeகிற்கும் அமெரிக்காவில் குடிக்கிற Cokeகிற்கும் டேஸ்ட்ல அதிக வித்தியாசம் இருக்கு. யாராவது உணர்ந்திருக்கீங்களா?
அங்க கோக்ல பூச்சி கொல்லி மருந்து இருக்குனு சொல்றாங்க. கோக் கம்பெனியோ இந்திய நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துறோம். அப்படி பூச்சி கொல்லி மருந்து இருந்தா அது தண்ணில இருந்து வரது தானு சொல்றாங்க.
கோக்கை சோதனை பண்ணி பார்க்கும் போது அதுல இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருப்பது உறுதினு வந்துச்சு. அதே மாதிரி அவுங்க சொன்ன நிலத்தடி நீரை சோதனை செய்து பார்த்தாங்களா? அப்படி சோதிக்கும் பட்சத்தில் நம் நிலத்தடி நீரிலே பூச்சி கொல்லி மருந்து இருக்குமானால் அதை சரி செய்ய வழிமுறைகள் இருக்கிறதா?
குடி நீரே விஷமானால் அது மிகவும் ஆபத்தான விஷயமில்லையா? இதை பற்றி ஆராய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? கோக்கை எதிர்த்து போராடிய கூட்டமும் அதை பற்றி எழுதிய மீடியாக்களும் அதை விட பெரிய பிரச்சனையாக வாய்ப்பிருக்கும் குடிநீர் மாசு பற்றி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?
இதை பத்தி யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
.......
29 comments:
of late I stumbled into your blog and I am impressed with your style of blogging
- Fellow "certification" student :)
அட்வான்ஸ் தலைதீபாவளி வாழ்த்துக்கள்
//Anonymous said...
of late I stumbled into your blog and I am impressed with your style of blogging
- Fellow "certification" student :)
//
மிக்க நன்றி நண்பரே...
Now a days I am just writing my experience. Almost stopped writing stories and comedy plots :)
//முரளிகண்ணன் said...
அட்வான்ஸ் தலைதீபாவளி வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி முக :)
என்ன என்னென்னமோ விஷயம் பத்தி எல்லாம் சொல்லி இருக்கீங்களே...
// இலவசக்கொத்தனார் said...
என்ன என்னென்னமோ விஷயம் பத்தி எல்லாம் சொல்லி இருக்கீங்களே...
//
அப்பறம் வலைப்பதிவர்னு எப்படி நிருபிக்கறதாம்??? ;)
//மிக்க நன்றி முக :)//
இதுல ஒன்னும் அரசியல் இல்லிங்ளே?
இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.
புரட்டாசியாவது கார்த்திகையாவது... கோழி மீன் இல்லைன்னா என்ன சாப்புடுறது! எனக்குச் சோறு சப்பாத்திகளை விட கோழி மீன் இருந்தாப் போதும். நீ சொல்றாப்புல ஒரு மாசம் சாப்டாம இருந்தா நல்ல பயிற்சி வருந்தான்.
வெற்றித் திருநகர் படிக்கலை. வீட்டுல புத்தகம் இருக்கு. அம்மா படிச்சிருப்பாங்க.
கோக்கெல்லாம் பொதுவா குடிக்கிறதில்லை. எப்பவாச்சும் குடிக்கிறதுதான். பர்கர் கிங் போனாக் கூட குடிக்கத் தண்ணிதான் வாங்குறது வழக்கம்.
//ILA said...
//மிக்க நன்றி முக :)//
இதுல ஒன்னும் அரசியல் இல்லிங்ளே?
//
அவரவர் பார்வையை பொருத்தது :))
என்னை பொருத்த வரை இல்லை :)
//G.Ragavan said...
இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.
//
மிக்க நன்றி ஜி.ரா :)
//
புரட்டாசியாவது கார்த்திகையாவது... கோழி மீன் இல்லைன்னா என்ன சாப்புடுறது! எனக்குச் சோறு சப்பாத்திகளை விட கோழி மீன் இருந்தாப் போதும். நீ சொல்றாப்புல ஒரு மாசம் சாப்டாம இருந்தா நல்ல பயிற்சி வருந்தான்.
//
இத்தனை வருஷம் இருந்துட்டேன். இனிமே ஃபாலோ பண்ணாம இருக்க முடியுமானு தெரியல :)
//வெற்றித் திருநகர் படிக்கலை. வீட்டுல புத்தகம் இருக்கு. அம்மா படிச்சிருப்பாங்க.//
நல்ல புத்தகம் ஜி.ரா. தெலுகு பேசறவங்க தமிழ் நாட்டுக்கு எப்படி வந்தாங்க. மதுரைக்கு எவ்வளவு நல்லது பண்ணாங்கனு அதுல இருக்கும். ஆனா ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடியே அதெல்லாம் தமிழர்களுக்கு தெரிஞ்சி தான் இருந்தது. ஒற்றுமை இல்லை. நல்ல தலைவன் கிடைக்கவில்லை :(((
//கோக்கெல்லாம் பொதுவா குடிக்கிறதில்லை. எப்பவாச்சும் குடிக்கிறதுதான். பர்கர் கிங் போனாக் கூட குடிக்கத் தண்ணிதான் வாங்குறது வழக்கம்.
//
நமக்கு ஜங்க் ஃபுட் சாப்பிட்டா கோக் வேணும். இங்க வந்து நல்லா பழகிடுச்சி. இந்தியால கொஞ்சம் அடக்கி வாசிச்சிக்குவேன் :)
//நான் காலி ஃபிளவர் ஃபிரை செய்ய போறேன். நமக்கு பிரச்சனையில்லை.//
ஆமா..சாப்பிடறவனுக்குதானே பிரச்சனை :))
//கப்பி | kappi said...
//நான் காலி ஃபிளவர் ஃபிரை செய்ய போறேன். நமக்கு பிரச்சனையில்லை.//
ஆமா..சாப்பிடறவனுக்குதானே பிரச்சனை :))
//
இது மாறிடுச்சி...
கூட இருக்குற நண்பன் ஒருத்தன் தமிழ்நாட்டு ஸ்பெஷல் ஐட்டம் பண்ண சொன்னான். அதனால முருங்காய் சாம்பார் பண்றேன்... வாசனை நல்லா வருது...
இன்னும் ஒரு அஞ்சு நிமிஷ வேலை தான் :)
7-Layer Burrito and Bean Burrito are Taco Bell's veg offerings and BK has veggie burger. So you don't need to limit yourself to Subway. Not that anything is wrong with that.
-Vegetarian for 17 years
தலைக்கு தலைதீபாவளி வாழ்த்துக்கள் :-)
தலைதீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
நீங்களும் புரட்டாசி மாச சைவ கேஸா??? சேம் பிளட்.. :(
***
தலை தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. :)
***
அமெரிக்கா கோக்ல ஏன் பூச்சி மருந்து இல்லைன்னா, அங்க இருந்தா கேஸ் போட்டு ஆப்படிச்சிடுவானுங்க.. நம்மள மாதிரி இளிச்சவாய் சட்டம் இல்லல்ல. அதனாலதான். அது மட்டுமில்ல. அங்க கோக் குறைந்தது 1 டாலர், அதாவது 45 ரூபாய். இங்க 10 ரூபாய். அப்புறம் ஏன் குவாலிட்டி குறையாது???
//7-Layer Burrito and Bean Burrito are Taco Bell's veg offerings and BK has veggie burger. So you don't need to limit yourself to Subway. Not that anything is wrong with that.
-Vegetarian for 17 years//
BKல எல்லா இடத்துலயும் வெஜ்ஜி பர்கர் கிடைக்கறதில்லை :(
அதுவுமில்லாம நம்பர் 6 Crispy Chicken Sandwich சாப்பிட்டு இதை சாப்பிடறது கஷ்டம் தான்.
டேக்கோல நான் எப்பவுமே Chalupa Baha தான் சாப்பிடுவேன். பீன் பரிட்டோ முயற்சி செய்யறேன். மிக்க நன்றி :)
//லக்கிலுக் said...
தலைக்கு தலைதீபாவளி வாழ்த்துக்கள் :-)//
மிக்க நன்றி லக்கி :)
சென்னைல சந்திப்போம். எப்படியும் வாரம் வாரம் வருவேன் :)
//விஜய் ஆனந்த் said...
தலைதீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!
//
மிக்க நன்றி விஜய் ஆனந்த்...
//வெண்பூ said...
நீங்களும் புரட்டாசி மாச சைவ கேஸா??? சேம் பிளட்.. :(
//
சேம் பிளட் :)
***
//
தலை தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. :)
//
மிக்க நன்றி வெண்பூ :)
***
//அமெரிக்கா கோக்ல ஏன் பூச்சி மருந்து இல்லைன்னா, அங்க இருந்தா கேஸ் போட்டு ஆப்படிச்சிடுவானுங்க.. நம்மள மாதிரி இளிச்சவாய் சட்டம் இல்லல்ல. அதனாலதான். அது மட்டுமில்ல. அங்க கோக் குறைந்தது 1 டாலர், அதாவது 45 ரூபாய். இங்க 10 ரூபாய். அப்புறம் ஏன் குவாலிட்டி குறையாது??//
என்னோட கேள்வியை நீங்க புரிஞ்சிக்கல. நம்ம தண்ணில அப்படி இல்லைனு சொல்லி நாம நிருபிச்சிருக்கனும். அது தான் முக்கிய தேவை. அப்படி நம்ம தண்ணில இல்லாம கோக்ல இருக்குனு ஆராய்ச்சி பண்ணி மக்களுக்கு சொல்லிட்டு அவனுங்களை சுலுக்கெடுத்திருக்கலாம்.அப்படி தண்ணியிலயே இருந்தா அதை சரி செய்யணும். அதை ஏன் செய்யல???
இங்க ஒரு தோசையோட விலை 6$. சப் வேல 6’ (Veggie Delite) சப் 2:95$.
இந்தியால அதே சப் 60 ரூ. அதே தோசை 25ரூ. ருசில எதுவும் வித்தியாசம் இருக்காதுனு நினைக்கிறேன். அதனால பணத்தை வெச்சி கம்பேர் பண்ண முடியாது :)
(தல) தலை தீபாவளி வாழ்த்துக்கள், ஆமா, முட்டை சைவமா ?, அசைவமா ?
//manikandan neelan said...
(தல) தலை தீபாவளி வாழ்த்துக்கள், //
மிக்க நன்றி மணிகண்டன்
//ஆமா, முட்டை சைவமா ?, அசைவமா ?
//
அது ஒவ்வொருத்தவங்களையும் பொருத்தது. என்னை பொருத்த வரை அசைவம் :)
தலை தீபாவளியாங்ண்ணா??? வாழ்த்துக்கள்...கலக்குங்க :))
அட்வான்ஸ் தலைதீபாவளி வாழ்த்துக்கள்
me the 25th
//divyapriya said...
தலை தீபாவளியாங்ண்ணா??? வாழ்த்துக்கள்...கலக்குங்க :))
2:45 PM//
ஆமாம் தங்கச்சி... மிக்க நன்றி...
போன வருஷம் ஒரு வாரத்துல தலை தீபாவளி மிஸ் ஆச்சு...
// rapp said...
அட்வான்ஸ் தலைதீபாவளி வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி வெ.ஆ :)
வாழ்த்துக்கள் பாலாஜி. தீபாவளிக்கு மறக்காம எண்ணை வச்சி குளிங்க [என்னை வச்சி இல்ல :))]
அப்புறம் நான் சென்னைல ஒரு IT கம்பெனில வொர்க் பண்றேன். ரொம்ப நாளா உங்க ப்லோக் படிக்கிறேன். இப்பதான் பின்னூட்டம் போடறேன். சொந்த ஊர் திண்டிவனம் கடலூருக்கு கிட்ட தான். (கொஞ்சம் நெருங்கிடோமில்ல? :))
//prakash said...
வாழ்த்துக்கள் பாலாஜி. தீபாவளிக்கு மறக்காம எண்ணை வச்சி குளிங்க [என்னை வச்சி இல்ல :))]
//
மிக்க நன்றி பிரகாஷ்.. தீபாவளி அன்னைக்கு எண்ணெய் வெச்சி குளிக்காம போயிடுவோமா? அதுவுமில்லாம இந்த தீபாவளி அமாவாசை அன்னைக்கு வரல. அதனால காலைலயே இட்லி, கறி குழம்பு தான்... சூப்பரா இருக்கும் :)
//
அப்புறம் நான் சென்னைல ஒரு IT கம்பெனில வொர்க் பண்றேன். ரொம்ப நாளா உங்க ப்லோக் படிக்கிறேன். இப்பதான் பின்னூட்டம் போடறேன். சொந்த ஊர் திண்டிவனம் கடலூருக்கு கிட்ட தான். (கொஞ்சம் நெருங்கிடோமில்ல? :))
//
திண்டிவனம் நல்லா தெரியுமே. எங்க அப்பா, அம்மா கல்யாணமானவுடனே முதல்ல இருந்த ஊர் திண்டிவனம் தான். எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க அந்த ஊரை பத்தி :)
Post a Comment