காலைல சில நாட்கள் ப்ரேயர் இருக்கும். அப்படி ப்ரேயர் இல்லாத நாட்கள்ல மாரல் சயன்ஸ் பீரியட் இருக்கும். எனக்கு அந்த மாதிரி கதை கேட்க ரொம்ப பிடிக்கும். அப்ப க்ரிஸ்டியன்ஸ்க்கு கேட்டிசம் க்ளாஸ் (பைபிள் க்ளாஸ்) தனியா இருக்கும். இது இருபது நிமிஷம் இருக்கும். அதுக்கு அப்பறம் வழக்கம் போல நாலு வகுப்பு. மதியம் 12:35க்கு லஞ்ச்க்கு விடுவாங்க. இப்ப மறுபடியும் ஹாஸ்டல்.
12:35 - 1:25 - இதுல ரெண்டு பேட்ச் நடக்கும். நர்சரி லஞ்ச் டைம் 12:00 - 12:30. அதனால நாங்க வரும் போது அவுங்களுக்கு முடிஞ்சிருக்கும். சாப்பாட்டுக்கு நம்ம சொந்தமா தட்டு எடுத்துட்டு போகனும். நான் எப்பவும் சாப்பாட்டு தட்டு, பொறியல் வாங்க சின்ன தட்டு, டபரா, டம்ப்ளர் வெச்சிருப்பேன். அது பாதி நேரம் எவனாவது எடுத்துக்குவான். அப்ப நாம வேற எவன் தட்டையாவது ஆட்டய போட்டு சாப்பிட்டு வெச்சிடனும். ஆனா சாயந்திரம் வந்து தட்டை கண்டுபிடிச்சி வேற ஒரு பாதுகாப்பான இடத்துல வெச்சிடுவேன். ஒவ்வொரு வகுப்புக்கு குறிப்பிட்ட ரேக் இருக்கும். அதனால மத்த பேட்ச் பசங்க தட்டை எடுத்தா வார்டன் பார்த்து அடி பின்னிடுவாரு. அப்பவும் சில சமயம் ஏமாத்தி எடுக்க வேண்டியது வந்துடும். ஏன்னா நம்ம க்ளாஸ் ரேக்ல ஒண்ணுமே இருக்காது.
சில சமயம் தட்டு கிடைக்காம சாப்பிடாம போன சமயங்களும் உண்டு. அப்ப யாராவது நண்பர்கள் வார்டனுக்கு தெரியாம சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. அப்படி வரும் போது மாட்டினா தர்ம அடி தான். (அந்த மாதிரி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நண்பர்கள் கேசவன், இளங்கோ, மதன் எல்லாம் இப்ப டச்லயே இல்லை :( ). சரி ரொம்ப பர்சனல் எல்லாம் இதுல வேண்டாம். அதுக்கு வேற ஒரு தொடர் இருக்கு :)
இங்க சாப்பாடு செம ஸ்பீடா சாப்பிடணும். ஏன்னா அடுத்த பேட்ச்க்கு மக்கள் ரெடியா இருப்பாங்க. சாம்பார் வந்து அஞ்சு நிமிஷத்துல ரசம் வந்துடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல மோர் வந்திடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல க்ளீன் பண்றவர் வந்துடுவார். இப்படி வேகமா சாப்பிட்டு பழகனது இன்னும் போக மாட்டீங்குது.
1:25 - 1:35 - ஸ்டடி டைம். பேருக்கு தான் ஸ்டடி டைம். ஆனா ஸ்கூலுக்கு பேசாம கிளம்பினா போதும். இப்ப லைனா போக வேண்டியதில்லை.
4:30 வரைக்கும் பள்ளிக்கூடம்.
4:30 - 5- டிபன். சுண்டல், பன்னு, கேக்கு ஏதாவது கொடுப்பாங்க. அப்படியே டீ. இது சாப்பிட்டதுக்கு அப்பறம் தான் நாங்க எல்லாரும் எஞ்சாய் பண்ற ப்ளே டைம்.
5 - 5:55 - இந்த நேரத்தில கண்டிப்பா விளையாடியே ஆகனும். உடம்பு சரியில்லைனா சிக் ரூம்ல இருக்கலாம். அதை தவிர வேற எந்த காரணத்துக்காவும் விளையாடாம இருக்க கூடாது. நல்லா வேர்வை வர விளையாடனும். அதனால "No Cricket". ஏன்னா பேட்டிங் டீம்னு சொல்லிட்டு 10 பேர் உட்கார்ந்திருக்க கூடாது. எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்ல எப்பவுமே பட்டையை கிளப்பும். ஃபுட் பால் கிரவுண்ட் - 3. (எல்லாமே ஸ்டேட் லெவல் மேட்ச் நடத்துற தகுதியோட இருக்கும்). ஹாக்கி கிரவுண்ட்-2. வாலி பால் கோர்ட்-4. பாஸ்கெட் பால் கோர்ட்-5, பால் பேட்மிண்டன் கோர்ட்-4. மொத்தத்துல இப்படி ஒரு ஸ்கூல நீங்க பார்த்திருப்பீங்களானு சொல்ல முடியாத அளவுக்கு பெரிய ஸ்கூல்.
5:55க்கு மணி அடிக்கும். எல்லாரும் வந்து ஹாஸ்டெல் முன்னாடி வகுப்பு வாரியா லைன்ல நிக்கனும். ஒரு அஞ்சு நிமிஷம் வேர்வை அடங்கற வரைக்கும் அங்க காத்திருக்கனும். அதுக்கு அப்பறம் தான் ஹை லைட்டே. குளிக்கறதுக்கு பாத் ரூமெல்லாம் கிடையாது. நிறைய தொட்டி கட்டி விட்டுருப்பாங்க. எல்லாரும் ஷார்ட்ஸோட தான் குளிப்பாங்க. எல்லாரும் கைல மக்கும், சோப்பும் எடுத்துட்டு போகனும். வார்டன் வந்து கை தட்டுவார். எல்லாரும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து ஒரு 4-5 நிமிஷத்துல மறுபடி கை தட்டுவார். அப்ப எல்லாரும் சோப் போட ஆரம்பிக்கனும். மறுபடி கை தட்டுவார். மறுபடியும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து கை தட்டினார்னா இடத்தை காலி பண்ணனும். எந்த காலமா இருந்தாலும் பச்சை தண்ணி தான். சுடு தண்ணி வேணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் + பதினைஞ்சி ரூபா எக்ச்ட்ரா. அவுங்க மட்டும் 5:45க்கு வந்து குளிக்கலாம்.
சோப்பு போட்டு முடிச்சிட்டு தண்ணியை எடுத்து ஊத்த ஆரம்பிக்கும் போது ஒரே நிமிஷத்துல தொட்டி முழுக்க சோப்பா ஆகிடும். அந்த தண்ணியையே எடுத்து ஊத்திக்குவோம். இப்ப நினைச்சா ஒரு மாதிரி இருக்கு. அப்ப எதுவும் தெரியல. ஒரு மாசத்துல எல்லாம் பழகி போச்சு. இதுல நான் சொல்ற மாதிரி எல்லாரும் மக் வெச்சிருக்கறது ஐடியல் கண்டிஷன். ஆனா ஒரு மக் தான் ஏழெட்டு பேர் பயன்படுத்துவோம். வேகமா தண்ணி எடுத்து ஊத்திட்டு அடுத்தவனுக்கு கொடுத்துடுவோம். குளிச்சி முடிச்சிட்டு போய் வேகமா துணி மாத்திட்டு வந்து ஷார்ட்ஸும், ஜட்டியும் அந்த தொட்டி தண்ணில துணி சோப் போட்டு துவைச்சிடுவோம்.
6:25 - 8 - இது எல்லாத்தையும் முடிச்சிட்டு 6:25 ஸ்டடில போய் உட்காரணும். இந்த ஸ்டடில படிச்சா எல்லாமே மண்டைல ஏறிடும். 7:30 வரைக்கும் எது படிச்சாலும் மண்டைல ஏறிடும். அதுக்கு மேல பசிக்க ஆரம்பிச்சிடும். 7-8 டியூஷன் போகனும்னா போகலாம். டியூஷன் போனா என்ன ஒரு நல்ல விஷயம்னா ஜாலியா பேசலாம். எப்படியும் ஸ்கூல் வாத்தியாருங்க தான் வருவாங்க. நம்ம ஒண்ணு அவுங்ககிட்ட பேசலாம், இல்லை பசங்ககிட்ட பேசலாம். எப்பவுமே நான் வாத்தியாருங்களுக்கு செல்லமா தான் இருந்திருக்கேன். அதனால என்னை எதுவும் திட்ட மாட்டாங்க. 10வதுல மட்டும் டியூஷன் போகலை. ஏன்னா நல்லா படிக்கனும்னு ஒரு எண்ணம் தான். இப்பவும் என் நம்பிக்கை டியூஷன் போனா ஜாலியா அரட்டை அடிக்கலாம். வகுப்பு நேரத்தில கவனிக்காதது எதுவும் அங்க சொல்லி தர போறதில்லை.
7:30 வரை ஏதாவது படிக்க வேண்டியதை படிப்பேன். அதுக்கு பிறகு கண்டிப்பா கணக்கு பாடம் தான். பசிக்கும் போது கணக்கு தான் படிப்பேன். அதே மாதிரி சனி, ஞாயிறும் கணக்கு படிக்க நிறைய ஸ்டடி டைம்ஸ் இருக்கு.
8- 8:55 டின்னர் + Recreation Time. இந்த நேரத்துல வழக்கம் போல ஒரு பேட்ச் சாப்பிடும். இன்னொரு பேட்ச்க்கு ரெக்ரியேஷன். அதாவது நண்பர்கள் கூட ஜாலியா பேசலாம். சாப்பிடும் போதோ, குளிக்கும் போதோ, விளையாடும் போது (தேவையில்லாமல்) பேச கூடாது. அப்படி பேசினா அடி பட்டையை கிளப்பிடுவாங்க. நான் முதல் முறை அடி வாங்கனது இன்னும் ஞாபகமிருக்கு. அது ஒரு ஞாயிறு. சேர்ந்த இரண்டாவது மாதம். அம்மா, அப்பா வந்திருந்தாங்க (வார வாரம் வருவாங்க). செல்லோ டேப் சுத்தின பிரம்பால நாலு அடி. பின்னாடி. ரொம்ப வலிச்சிது. சரி அடுத்த பதிவுல அதை பார்க்கலாம்.
அந்த டைம்ல நம்ம பாய் எல்லாம் எடுத்து கரெக்டா இடம் பார்த்து போட்டு வெச்சிடனும். இதெல்லாம் கூட்டமா சேர்ந்து தான் செய்வோம். அப்படியே பேசிக்கிட்டே. நம்ம லேட்டா போனால் நம்ம பெட் கிடைக்காது. அதனால சீக்கிரம் போய் கண்டுபிடிச்சி வராண்டாவை பெருக்கி பெட்டை போட்டு வரணும். மழை பெஞ்சா க்ளாஸ் ரூம்ல போய் படுக்கனும். அதுக்கு ஏத்த மாதிரி இடம் பிடிக்கனும். அப்பறம் போய் கீழ மண்ல உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கலாம்.
8:55- Attendance + Prayer 8:55 க்கு மணி அடிக்கும். எல்லாரும் ஹாஸ்டல் முன்னாடி போய் நிக்கனும். அட்டெண்டென்ஸ் எடுப்பாங்க. ஒரு ஒரு க்ளாஸ்க்கு ஒரு ஹாஸ்டல் லீடர் (மானிட்டர்) இருப்பான். அவன் தான் அட்டெண்டென்ஸ் எடுத்து சொல்லுவான். அது அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிடும். அடுத்து ஏதாவது இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுக்கனும்னா வார்டன் கொடுப்பாரு. அப்பறம் ஏதாவது நன்னடத்தை கதை சொல்லுவாரு.
வாரத்துல ரெண்டு நாள் ஃபாதர் வருவாரு. அவர் வந்தா அட்டகாசமான கதை சொல்லுவாரு. எதுவுமே கிருத்துவ மத சம்பந்தமா இருக்காது. சில சமயம் இந்து தெய்வங்களின் கதையையும் சொல்லுவார். எனக்கு கதை கேட்க எப்பவுமே பிடிக்கும். அதுக்கு அப்பறம் எல்லாரும் போய் படுத்து தூங்கனும். நல்லா ஓடி விளையாண்டதால சீக்கிரமே தூக்கம் வந்திடும். என்னால அப்பவெல்லாம் 9:15 மேல முழிச்சிருக்க முடியாது.
சனிக்கிழமை ராத்திரி படம் போடுவாங்க. அதுக்கூட நான் பார்க்க மாட்டேன். ஞாயித்தி கிழமை நைட் ஸ்டடி இருக்கும். அதுல எப்பவுமே நான் தூங்கி மாட்டிக்குவேன். ஏன்னா அப்ப எல்லாம் என்னால 9:30க்கு மேல எந்த காரணத்துக்காவும் முழிச்சிருக்க முடியாது. (எவ்வளவு மாறிட்டேன்). அடுத்த நாள் காலைல 5:30க்கு எழுந்திரிக்கனும். அடுத்த பகுதில வீக் எண்ட் பத்தி பார்க்கலாம்...
13 comments:
என் பழைய ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்
//முரளிகண்ணன் said...
என் பழைய ஞாபகங்களை கிளறிவிட்டீர்கள்
11:03 PM//
நீங்களும் ஹாஸ்டல்ல படிச்சீங்களா? எந்த ஊர்ல?
அண்ணாச்சி இப்பத்தான் புரியுது! ஏன் என் நண்பர்கள் ரொம்ப பெருமையா செ.ஜோ.ஹாஸ்டல் படிச்சது பத்தி சொன்னதும்,எப்பவும் படிப்புல முன்னாடியில இருந்ததுக்குமான காரணம்!
வாய்ப்பு கிடைக்கும்போது இதெல்லாம் சொல்லி சொல்லி அவுங்க எக்ஸ்பீ யையும் கேட்டுக்கிறேன் :)))))
//ஆயில்யன் said...
அண்ணாச்சி இப்பத்தான் புரியுது! ஏன் என் நண்பர்கள் ரொம்ப பெருமையா செ.ஜோ.ஹாஸ்டல் படிச்சது பத்தி சொன்னதும்,எப்பவும் படிப்புல முன்னாடியில இருந்ததுக்குமான காரணம்!
வாய்ப்பு கிடைக்கும்போது இதெல்லாம் சொல்லி சொல்லி அவுங்க எக்ஸ்பீ யையும் கேட்டுக்கிறேன் :)))))
11:29 PM//
ஆயில்ஸ்,
இதை படிக்கும் போது உங்களுக்கு வித்தியாசமா தெரியலாம். ஆனா ஒரு மாசத்துல பழகிடும். அப்பறம் ”சொர்கமே என்றாலும் அது St.Joseph's போல வருமா?” அப்படினு பாடலாம் :)
பாலாஜி
"I am an Hosteler - 2" ன்னு வச்ச டைட்டில் சரியா? "I am a Hosteler - 2" தான் கரெக்டா தெரியுது :))
:-))))....
//prakash said...
பாலாஜி
"I am an Hosteler - 2" ன்னு வச்ச டைட்டில் சரியா? "I am a Hosteler - 2" தான் கரெக்டா தெரியுது :))
//
பிரகாஷ்,
மன்னிக்கவும். உங்க பின்னூட்டத்தை தவற விட்டுட்டேன். எதுக்கும் விவரம் தெரிஞ்சவங்களை ஒரு முறை கேட்டுட்டு தப்பா இருந்தா மாத்திடறேன் :)
//விஜய் ஆனந்த் said...
:-))))....//
இதுல சிரிக்க என்னயா இருக்கு? :)
நான் ஹாஸ்டல் பக்கமே போனதில்லை....ரொம்ப வித்யாசமா இருக்கு உங்க ஹாஸ்டல் அனுபவங்கள்...
படிக்கறதுக்காக ட்யூஷன் போகாம இருந்த ஒரே ஆள் நீங்களா தான் இருப்பீங்க ;)
பசங்க நல்லா வளரனும்னா கட்டாயம் ஹாஸ்டல்லே இருக்கணூம்ன்னு கொஞ்ச நாள் சொல்லிகிட்டு இருந்தேன். அப்புறம் ஹாஸ்டல்கள்ல சில பிரச்சினைகள் வர ஆரம்பிச்ச பிறகு அப்படி சொல்கிறதை விட்டுட்டேன். ஆனா நம்ம காலகட்டத்துலே அது ரொம்பவே உதவியா இருந்தது.
லஞ்ச் நேரம் -விளையாட்டு விளையாட்டு விளையாட்டுதான் எப்பவுமே. (நான் ஹாஸ்டல்லே இல்லை) முட்டாள்தனமா வீட்டிலேயே ஏதாவது மறந்து போயிருந்தா போய் எடுத்து வரவே மதிய இடைவேளை சரியாபோயிடும். இல்லைனா அவசர அவசரமா சாப்டுட்டு விளையாட ஓடிடுவோம். கபடி, கிளித்தட்டு இப்படி எதாவது. ஹாஸ்டல் பசங்க க்ளாசுக்கு போகிறதை பாத்துதான் நிறுத்துவோம். சாப்பிட்டுவிட்டு விளையாட்டா? அப்ப முடிஞ்சது. இப்ப தூக்கம்தான் வருது! :-))
திடீர்ன்னு ரங்கநாதன் என்கிற மாணவர் நூலகம் போற பழக்கத்தை கொண்டுவந்தார்.அது வரைக்கும் யாரும் அங்க இருக்கிறதை சீந்தவே இல்லை. இவர் ஆரம்பிச்ச பிறகு கதைபுத்தகங்கள் படிக்கலாம்ன்னு தெரிஞ்சப்ப எல்லாரும் அங்கே போக ஆரம்பிச்சோம். மழைனா நூலகம். இல்லைனா விளையாட்டுதான்.....
ரங்கநாதன் இப்ப பங்களூர் டாடா இன்ஸ்டிடூட் லே பேராசிரியர்.
பழைய நினைவெல்லாம் கிளர்ரே வெட்டி...
//divyapriya said...
நான் ஹாஸ்டல் பக்கமே போனதில்லை....ரொம்ப வித்யாசமா இருக்கு உங்க ஹாஸ்டல் அனுபவங்கள்...
//
இந்த அனுபவங்கள் எல்லாம் கிடைச்சவங்க ரொம்ப ரொம்ப குறைவு. அதான் எல்லாத்தையும் எழுதுவோம்னு எழுதிட்டு இருக்கேன் :)
//
படிக்கறதுக்காக ட்யூஷன் போகாம இருந்த ஒரே ஆள் நீங்களா தான் இருப்பீங்க ;)//
அப்படியா? ட்யூஷன்ல போய் படிக்கறதுக்கு என்ன இருக்கு? வகுப்புலயே தான் எல்லாம் சொல்லி தர போறாங்க. புரியலனா அங்கயே கேட்டுக்கலாம். அப்பறம் ட்யூஷனெல்லாம் ஒரு படத்தை ரெண்டாவது தடவை பார்க்கற மாதிரி தான். படம் பிடிச்சிருந்தா விரும்பி பார்க்கலாம். பிடிக்கலைனா தூக்கம் தான் வரும் :))
//திவா said...
பசங்க நல்லா வளரனும்னா கட்டாயம் ஹாஸ்டல்லே இருக்கணூம்ன்னு கொஞ்ச நாள் சொல்லிகிட்டு இருந்தேன். அப்புறம் ஹாஸ்டல்கள்ல சில பிரச்சினைகள் வர ஆரம்பிச்ச பிறகு அப்படி சொல்கிறதை விட்டுட்டேன். ஆனா நம்ம காலகட்டத்துலே அது ரொம்பவே உதவியா இருந்தது.
//
நீங்க எந்த மாதிரி பிரச்சனை சொல்றீங்கனு தெரியல. ஆனா என் மனசுல தோன்றது Broke Back Mountain படத்துல வர மாதிரியான விஷயம் தான். ஆனா இது எந்த அளவு உண்மைனு எனக்கும் தெரியல. ஒரு நாள் திடீர்னு நிறைய பேரை கூப்பிட்டு பயங்கரமா ஃபாதர் அடிச்சாரு. அரசல் புரசலா மக்கள் பேசிக்கிட்டாங்க...
பின்னாடி நான் இதை பத்தியும் எழுதறேன்.
//லஞ்ச் நேரம் -விளையாட்டு விளையாட்டு விளையாட்டுதான் எப்பவுமே. (நான் ஹாஸ்டல்லே இல்லை) முட்டாள்தனமா வீட்டிலேயே ஏதாவது மறந்து போயிருந்தா போய் எடுத்து வரவே மதிய இடைவேளை சரியாபோயிடும். இல்லைனா அவசர அவசரமா சாப்டுட்டு விளையாட ஓடிடுவோம். கபடி, கிளித்தட்டு இப்படி எதாவது. ஹாஸ்டல் பசங்க க்ளாசுக்கு போகிறதை பாத்துதான் நிறுத்துவோம். சாப்பிட்டுவிட்டு விளையாட்டா? அப்ப முடிஞ்சது. இப்ப தூக்கம்தான் வருது! :-))
//
அப்பவும் ஸ்கூல் இதே அளவு பெருசா இருந்ததா? இதே அளவு இன்ஃப்ரா ஸ்ட்ரக்சரோட?
//திடீர்ன்னு ரங்கநாதன் என்கிற மாணவர் நூலகம் போற பழக்கத்தை கொண்டுவந்தார்.அது வரைக்கும் யாரும் அங்க இருக்கிறதை சீந்தவே இல்லை. இவர் ஆரம்பிச்ச பிறகு கதைபுத்தகங்கள் படிக்கலாம்ன்னு தெரிஞ்சப்ப எல்லாரும் அங்கே போக ஆரம்பிச்சோம். மழைனா நூலகம். இல்லைனா விளையாட்டுதான்.....
ரங்கநாதன் இப்ப பங்களூர் டாடா இன்ஸ்டிடூட் லே பேராசிரியர்.
பழைய நினைவெல்லாம் கிளர்ரே வெட்டி...
//
என்னுடைய பழைய நினைவுகள் உங்களோடதையும் கிளருவது ரொம்ப சந்தோஷமா இருக்கு :)
I believe, Both we had similar environment in the school days. I am also studied in hostel for 4 years . (St.Xavier's Hr Sec Shool, Palaymkottai.)
Box Room, Sick room , Recreation time these are hostel specific terms , I think.
And then , I am also having the same side-effect as a hosteller வேகமா சாப்பிட்டு பழகனது இன்னும் போக மாட்டீங்குது.
//நான் படிக்கும் போது Principal - Ref. Fr. Ratchagar.//
I believe its Rev. ie reverent father.. pls correct.
Below are the samples that made me to spin tortoise...... Really good one.
/*
// துணி வைக்கிற பெட்டி எல்லாம் ஒரு ரூம்ல ரேக்ல இருக்கும். அதுக்கு பேரு பாக்ஸ் ரூம்.
// Recreation Time (அப்படி தான் சொல்லுவாங்களே. தமிழ்ல எல்லாம் சொல்ல மாட்டோம்).
// காலைல படிச்சா தெளிவா மண்டைல ஏறும் என்பதால் இந்த ஸ்டெடி டைம் படிக்க மட்டுமே
//நான் எப்பவும் சாப்பாட்டு தட்டு, பொறியல் வாங்க சின்ன தட்டு, டபரா, டம்ப்ளர் வெச்சிருப்பேன். அது பாதி நேரம் எவனாவது எடுத்துக்குவான். அப்ப நாம வேற எவன் தட்டையாவது ஆட்டய போட்டு சாப்பிட்டு வெச்சிடனும்
//இங்க சாப்பாடு செம ஸ்பீடா சாப்பிடணும். ஏன்னா அடுத்த பேட்ச்க்கு மக்கள் ரெடியா இருப்பாங்க.சாம்பார் வந்து அஞ்சு நிமிஷத்துல ரசம் வந்துடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல மோர் வந்திடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல க்ளீன் பண்றவர் வந்துடுவார். இப்படி வேகமா சாப்பிட்டு பழகனது இன்னும் போக மாட்டீங்குது.
// வார்டன் வந்து கை தட்டுவார்.எல்லாரும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும்.
// ஏன்னா அப்ப எல்லாம் என்னால 9:30க்கு மேல எந்த காரணத்துக்காவும் முழிச்சிருக்க முடியாது. (எவ்வளவு மாறிட்டேன்).
*/
Post a Comment