தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, October 08, 2008

ஆடு புலி ஆட்டம் - சில தகவல்கள்

தொடர் கதை எழுதறங்கறது ரொம்ப கஷ்டமான விஷயம்னு ஒரு வருஷமா எழுதாம இருந்தேன். மறுபடியும் எழுதலாம்னு பனி விழும் மலர்வனம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சி ஆறுமாசத்துல வெற்றிகரமா நான்கு பகுதிகள் எழுதி முடிச்சிருந்தேன். அப்ப அப்ப நிறைய பேர் ஞாபகப்படுத்தும் போது எழுதாம இருக்கமேனு எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.


முதல்ல பனி விழும் மலர்வனம்னு எழுத ஆரம்பிக்கும் போது ஒரு அழகான காதல் கதையா இருக்கனும்னு நினைச்சி தான் ஆரம்பிச்சேன். அதுவும் கதாநாயகன் வேலை தேடறனு பொய் சொல்லி அப்பாவியா நடிக்கறதும், அரை குறையா தெரிஞ்சிக்கிட்டே தனக்கு நிறையா தெரியும்னு கதாநாயகி அலப்பற விடற மாதிரியும் இருக்கனும். அப்பறம் கதாநாயகி நாயகனுக்கு சொல்லி கொடுக்கறனு தப்பு தப்பா சொல்லி கொடுக்கறதும் அதை கதாநாயகன் அவள் உணராத வண்ணம் அவளுக்கு சொல்லி கொடுத்து அவள் வேலை வாங்கறதுதான் கதை. கடைசியா நாயகன் கூகுள் வேலையை விட்டுட்டு அவள் சேரும் இந்தியன் கம்பெனில அவளுக்கு லீடா வந்து சேர மாதிரி முடிக்கலாம்னு ப்ளான்.


நாலு மாச கேப் விட்டதுல இந்த கதை எழுதற மூடே போயிடுச்சு. அப்ப தான் பெங்களூர்ல நான் இருக்கும் போது தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு வந்த மடல் ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்த மாதிரி நான் ஆரக்கிள்ல வேலை செய்யறேன். நீங்க என் கூட ஃபிரெண்ட்லியா பழகனா நான் வேலை வாங்கி தறேன்னு ஒரு நாதாரி மெயில் அனுப்பியிருந்தான். அது மட்டுமில்லாம நான் சென்னைல இருக்கும் போது இதே மாதிரி எனக்கு நிறைய பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவுங்க எல்லாம் என் கூட என் கார்ல மஹாபலிபுரமெல்லாம் வருவாங்க. I badly miss them. இங்க பெங்களூர்ல பொண்ணுங்க எல்லாம் அதை விட நல்லா பழுகுவாங்கனு சந்தோஷமா வந்திருக்கேன். நீங்க என் கூட நல்ல ஃபிரெண்டா இருந்தா நான் உங்களுக்கு நிறைய உதவி செய்வேன். அதுவுமில்லாம என் கார்லயே எங்க வேணும்னாலும் போகலாம். Eagerly waiting for your reply.

அந்த மெயில் ஐடி அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்னு ஆராய்ச்சி பண்ணும் போது தான் அவன் ஏதோ Freshers Groupக்கு புத்திசாலித்தனமா மெயில் அனுப்பி பொண்ணுங்க மெயில் ஐடி பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிது. அது எப்படினா நான் இந்த மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்பினேன். எனக்கு இந்த கம்பெனில இருந்து கால் லெட்டர் வந்துச்சு. நீங்களும் அனுப்புங்க அப்படினு குருப்க்கு ஒரு மெயில் வரும்.  அதை பார்த்தவுடனே எல்லாரும் அவுங்க ரெஸ்யும் அனுப்புவாங்க. That's it.

அந்த கான்செப்ட்ல யோசிக்கும் போது, அப்படியே ஃபேக் பிரச்சனையையும் சேர்த்து உருவான கதை தான் “ஆடு புலி ஆட்டம்”.


இந்த கதை யோசிக்கும் போது ரெண்டு ஐடியா வந்துச்சு. ஒண்ணு பிரச்சனையை கேள்விப்பட்டவுடனே போலிஸ்கிட்ட போயி போலிஸுக்கும் வில்லனுக்கும் நடக்குற ஆட்டம் தான் ஆடு புலி ஆட்டம்னு வைக்கலாம். ரெண்டாவது கதாநாயகனே டீல் பண்ற மாதிரி. இப்படி இருக்கும் போது தான் கப்பிக்கு ஃபோன் பண்ணி ரெண்டு ப்ளாட்டையும் சொல்லி எப்படி கொண்டு போகலாம்னு கேட்டேன். எனக்கு எப்பவுமே இந்த மாதிரி சந்தேகம் வந்தா ஒண்ணு கப்பிக்கு ஃபோன் பண்ணுவேன் இல்லைனா KRS அண்ணாக்கு ஃபோன் பண்ணுவேன்.


கப்பி செலக்ட் பண்ணது தான் இப்ப எழுதியிருக்க ப்ளாட். முதல் ப்ளாட்ல எழுதியிருந்தா வேட்டையாடு விளையாடு மாதிரி ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அதுல நிஜமாலுமே போலிஸ் எப்படி டீல் பண்ணிருப்பாங்கனு ஆராய்ச்சி பண்ணிட்டு தான் எழுதியிருப்பேன்.


அப்பறம் ஒவ்வொரு பாகமும் நான் எழுதி முடிச்சிட்டு அவுங்க ரெண்டு பேருக்கும் ப்ரூஃப் பாக்க அனுப்பிடுவேன். கப்பி எப்படியும் படிச்சிட்டு எனக்கு சொல்லிடுவான். கதைல ஏதாவது டயலாக் புரியாத மாதிரி இருந்தா இல்லைனா எழுத்துப்பிழை எல்லாம் சரி பண்ணி கொடுப்பான்.


அதே மாதிரி கதை 12 பாகம் முடிச்சதுக்கப்பறம் தேவ் அண்ணாக்கு அனுப்பி வெச்சேன். அதுல எப்படி இருக்கும்னா எழாவது பாகத்துல வில்லன் வந்துடுவான். அப்ப இருந்து அவன் பேச ஆரம்பிச்சிடுவான். அப்பறம் மாத்தி மாத்தி பேசற மாதிரி வரும். ஆனா சஸ்பென்ஸ் சுத்தமா இருக்காது. அதை அவர் மாத்த சொன்னாரு. அப்ப தான் படிக்கறவங்க இன்வால்வ் ஆவாங்கனு சொன்னாரு. அவர் ஐடியா படி மாத்தி மறுபடியும் அஞ்சு பாகம் எழுதினேன். தேவ் அண்ணா ஜட்ஜ் பண்ணது சரி தான். ஓரளவு சஸ்பென்ஸ் இருந்தது நல்லதுக்கு தான்.


ப்ளாகர் இல்லாம என் ரூமேட் தனா எனக்கு ரொம்ப உதவி செஞ்சான். ஒவ்வொரு பாகத்தையும் படிச்சிட்டு விறுவிறுப்பா போகுதானு தவறாம சொன்னான். சில இடங்களில் வரும் ஆபாசமான வார்த்தைகளை மாஸ்க் பண்ண சொல்லி கண்டிப்பாக சொல்லிவிட்டான். KRS அண்ணாவும் அதை சொன்னார்.


இத்தனை பேர் உதவியால தான் என்னால சுமாராவாது கதை எழுத முடியுது. அது போக ஒவ்வொரு பகுதிக்கும் வந்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.


இத்தனை நாள் கழிச்சி ஏன் இதை சொல்றான்னு பாக்கறீங்களா? இப்ப தான் அந்த கதையை PDFல அழகா ஃபார்மெட் பண்ணி, படமெல்லாம் போட்டு போட்டிருக்கேன். PDFஆக மாற்ற உதவிய இளா அண்ணாவிற்கும் நன்றிகள் பல. இது வரை படிக்க தவறியவர்கள் இங்க டவுன்லோட் பண்ணி படிக்கலாம். அதே மாதிரி ஃபார்வேர்டும் பண்ணலாம்.

23 comments:

சரவணகுமரன் said...

ஆடு புலி ஆட்டம், ரொம்ப விறுவிறுப்பா போன கதை. மென்மையா ஆரம்பிச்சி பர பர பரன்னு போன கதை. வாழ்த்துக்கள்....

Anonymous said...

cool. i'm a great fan of you (esp for your love stories)

i had an idea that one can make a perfect love story out of "ADU PULI AATAM" (just ravi-nithya part). now i know how the whole story is conveived & stuff.

p.s. i have 'THAT' cut paste love story in my laptop :))
(just for own use/fun/feel good minutes..)hope you won't mind if i show off in front of my friends that what a great editor i am.

Anonymous said...

Neenga sonnadhu pola kadhai migavum viruvirupa pochu!!, Nalla Velai naaduvileye villan apthi clue kudukala..Also kadai mudhalil padikumbodhu neeinga love subject la pinni edhuka poreeinganu nenachean..But kadaisila konjam sogam but hero heroine romance la adhu marainjuruchu...Thodarindhu eludhuingal..Uinga paadhipugalai padi ineemaiaga irukeeradhu

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
ஆடு புலி ஆட்டம், ரொம்ப விறுவிறுப்பா போன கதை. மென்மையா ஆரம்பிச்சி பர பர பரன்னு போன கதை. வாழ்த்துக்கள்....//

மிக்க நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

//shrek said...
cool. i'm a great fan of you (esp for your love stories)

i had an idea that one can make a perfect love story out of "ADU PULI AATAM" (just ravi-nithya part). now i know how the whole story is conveived & stuff.

p.s. i have 'THAT' cut paste love story in my laptop :))
(just for own use/fun/feel good minutes..)hope you won't mind if i show off in front of my friends that what a great editor i am.//

np... indeed it was started as a luv story :)

அப்படியே நம்ம கதை PDFஐயும் அனுப்பி வைச்சா சந்தோஷம் தான் :)

வெட்டிப்பயல் said...

//narendran said...
Neenga sonnadhu pola kadhai migavum viruvirupa pochu!!, Nalla Velai naaduvileye villan apthi clue kudukala..Also kadai mudhalil padikumbodhu neeinga love subject la pinni edhuka poreeinganu nenachean..But kadaisila konjam sogam but hero heroine romance la adhu marainjuruchu...Thodarindhu eludhuingal..Uinga paadhipugalai padi ineemaiaga irukeeradhu//

மிக்க நன்றி நரேந்திரன். அப்படியே PDFஐ நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கவும் :)

Anonymous said...

தல,
PDF ல கமெண்ட்ஸ் இருக்கே . அத எடுத்துட்டா நல்லா இருக்கும்.
கதையின் கரு, களம், நடை அனைத்தும் அருமை.
ஊருக்கு கிளம்பரதால ஆணி அதிகமா இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால தலைக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன் .
அன்பு

வெட்டிப்பயல் said...

// Anbu said...
தல,
PDF ல கமெண்ட்ஸ் இருக்கே . அத எடுத்துட்டா நல்லா இருக்கும்.
கதையின் கரு, களம், நடை அனைத்தும் அருமை.
ஊருக்கு கிளம்பரதால ஆணி அதிகமா இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால தலைக்கு தலை தீபாவளி வாழ்த்துக்கள இப்பவே சொல்லிடறேன் .
அன்பு
//

மிக்க நன்றி அன்பு...

இந்த மாதிரி பின்னூட்டங்களை பார்த்தா வலைப்பதிவுனா என்னனு தெரியாத மக்களுக்கு இந்த மாதிரி நம்ம கருத்தையும் அங்க போனா சொல்லலாம்னு ஒரு எண்ணம் வரும். அதுக்கு தான்.

இந்த முயற்சி என்னோட கதையை பரப்பணுங்கறது கூட வலைப்பதிவுக்கு நிறைய பேரை வர வைக்கனும்னு ஒரு முயற்சி...

அதனால தான் ஒவ்வொரு பக்கத்துலயும் என் வலைப்பதிவோட உரல் இருக்கு :)

...........

வாழ்த்திற்கு நன்றிகள் பல :)

Divyapriya said...

கதையின் கதையாங்க அண்ணா? நல்லா இருக்கு :))

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
கதையின் கதையாங்க அண்ணா? நல்லா இருக்கு :))
//

ஆமாம்மா.. அப்படியே நன்றி நவிர்தலும் :)

நாகராஜன் said...

படித்து முடித்த பின் என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
தலை தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...
படித்து முடித்த பின் என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.
தலை தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே.
//

மிக்க நன்றி நண்பரே.. கண்டிப்பா நீங்க படிச்சி சொல்லுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு :)

A Simple Man said...

Good to have the PDF
..தலை தீபாவளி வாழ்த்துகள்

நாகராஜன் said...

நேற்றே படித்து முடித்து விட்டேன். இதோ எனது கருத்துகள்.

தொடர் கதை நன்றாக இருந்தது. பாராட்டுகள். உணர்ச்சிகளையும், தொழில்நுட்பத்தையும் அருமையாக இணைத்திருக்கிறீர்கள். இப்படியும் சில மிருகங்கள் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்பதால் இந்த சிறுகதை இல்லை இல்லை தொடர் கதை படிப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தைகற்பித்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அந்த வகையில் மறுபடியும் எனது பாராட்டுகள். ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் போல தோன்றுவதால் அந்த வகையிலும் தாங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

இப்படி பாராட்டுகளை மட்டும் சொல்லி விட்டு சில குறைகளையும் சொல்லுவதற்கு மன்னிக்கவும். கதையில் ஒரு சில இடங்களில் சில வார்த்தைகளை கையாண்ட விதம் பிடிக்கவில்லை. அவற்றை தவிர்த்திருக்கலாமோ? மேலும் சில அத்தியாயங்களில் கதையை பின் தொடர்வதில் குழப்பமாக இருந்தது (குறிப்பாக வில்லன்கள் பற்றி வரும் போதும் அவர்கள் பேசிக்கொள்வதும்)... இந்த குறைகள் எல்லாம் தங்களது படைப்புகளை பட்டை தீட்டி கொள்வதற்காக சொன்னவை. மற்ற படி அருமையான கதை.

வெட்டிப்பயல் said...

//ராசுக்குட்டி said...
நேற்றே படித்து முடித்து விட்டேன். இதோ எனது கருத்துகள்.

தொடர் கதை நன்றாக இருந்தது. பாராட்டுகள். உணர்ச்சிகளையும், தொழில்நுட்பத்தையும் அருமையாக இணைத்திருக்கிறீர்கள். இப்படியும் சில மிருகங்கள் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார்கள் என்பதால் இந்த சிறுகதை இல்லை இல்லை தொடர் கதை படிப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தைகற்பித்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அந்த வகையில் மறுபடியும் எனது பாராட்டுகள். ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் போல தோன்றுவதால் அந்த வகையிலும் தாங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே!

இப்படி பாராட்டுகளை மட்டும் சொல்லி விட்டு சில குறைகளையும் சொல்லுவதற்கு மன்னிக்கவும். கதையில் ஒரு சில இடங்களில் சில வார்த்தைகளை கையாண்ட விதம் பிடிக்கவில்லை. அவற்றை தவிர்த்திருக்கலாமோ? மேலும் சில அத்தியாயங்களில் கதையை பின் தொடர்வதில் குழப்பமாக இருந்தது (குறிப்பாக வில்லன்கள் பற்றி வரும் போதும் அவர்கள் பேசிக்கொள்வதும்)... இந்த குறைகள் எல்லாம் தங்களது படைப்புகளை பட்டை தீட்டி கொள்வதற்காக சொன்னவை. மற்ற படி அருமையான கதை.
//

மிக்க நன்றி ராசுக்குட்டி. நீங்க சொன்னதுல முதல் விஷயம் அந்த நபர்களிம் குணங்களை விளக்க அந்த வார்த்தைகள் தேவைப்பட்டன. அது எல்லாம் இல்லாம கூட எழுதியிருக்கலாம். ஆனா அந்த இடத்துல அந்த வார்த்தைகள் கொடுக்கற அதிர்ச்சி எனக்கு தேவைப்பட்டது.

ரெண்டாவது விஷயம் நிஜமாலுமே சரி செய்யப்பட வேண்டிய விஷயம். அதை நிச்சயம் கவனத்தில் கொள்கிறேன்.

இந்த கதையே அடுத்து எழுத போற ஒரு கதைக்கான முயற்சி தான். முயற்சினு சொல்றதை விட ஒரு பயிற்சினு சொல்லலாம் :)

மீண்டும்...

மிக்க நன்றி ராசுக்குட்டி.

கார்க்கிபவா said...

இப்பவே பிரிண்ட் எடுத்து ட்ரெயின்ல போகும் போது படிச்சிட்டு வந்து கமென்டுறேன்..

Anonymous said...

visit mt blog...

http://jebamail.blogspot.com

thank you...

முரளிகண்ணன் said...

உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி

வெட்டிப்பயல் said...

//கார்க்கி said...
இப்பவே பிரிண்ட் எடுத்து ட்ரெயின்ல போகும் போது படிச்சிட்டு வந்து கமென்டுறேன்..//

என்ன கார்க்கி படிச்சீங்களா? :)

வெட்டிப்பயல் said...

// jeba said...
visit mt blog...

http://jebamail.blogspot.com

thank you...//

இதோ வரேன் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
உங்களை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன் , நன்றி//

மிக்க நன்றி முக...

இப்ப தான் லாங் வீக் எண்ட் முடிஞ்சிது... இதோ எழுதறேன் :)

கார்க்கிபவா said...

படிச்சி அசந்து போயிருக்கேன்.. உங்களின் பழைய பதிவுக்ள் அனைத்தயும் படிக்க முடியாதுனு நினைக்கிறேன்.. பரிந்துரை செய்தால் நல்லா இருக்கும். கொல்ட்டி படிச்சேன்.. கலக்கல்

iamkarki@gmail.com

வெட்டிப்பயல் said...

// கார்க்கி said...
படிச்சி அசந்து போயிருக்கேன்.. உங்களின் பழைய பதிவுக்ள் அனைத்தயும் படிக்க முடியாதுனு நினைக்கிறேன்.. பரிந்துரை செய்தால் நல்லா இருக்கும். கொல்ட்டி படிச்சேன்.. கலக்கல்

iamkarki@gmail.com
//

மிக்க நன்றி கார்த்தி...

எல்லா சிறுகதைகளும், தொடர்கதைல லிஃப்ட் ப்ளீஸிம் படிக்கலாம். நெல்லிக்காய், பிரிவு - ரெண்டும் ஐடி ஃபீல்ட் காதல் கதைகள். உங்க பக்கத்து சீட்ல நடக்கற மாதிரி கூட தெரியலாம்...

நகைச்சுவைனா கவுண்டரும் கடையேழு வள்ளல்களும், கோழியின் அட்டகாசங்கள் படிக்கலாம்.

எல்லாமே பிரிவுகள்ல இருக்கும்...