தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, August 07, 2008

ஆடு புலி ஆட்டம் - 8

என்னங்க ஏதாவது லவ் மேட்டரா இருக்கும் சுலபமா சமாளிச்சி சமாதானம் பண்ணி வெச்சா பின்னாடி நமக்கு இந்த அக்கா ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்தேன். பிரச்சனை கொஞ்சம் பெருசா இருக்கும் போல இருக்கு.

மேட்டர் என்னனு ஓரளவுக்கு புரிஞ்சி போச்சி. அக்கா ஃபேக் போட்டு சேர்ந்துருப்பாங்க போல. அது எப்படியும் கம்பெனில தெரிஞ்சிருக்கும். வேலையை விட்டு தூக்கறனு சொல்லியிருப்பானுங்க. ஆனா அதுக்கு தற்கொலை பண்ணிக்கனுமா என்ன? இல்லை இவுங்க ஃபேக்னு தெரிஞ்சி கம்பெனி HRஓ, மேனஜரோ இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ? இதுக்கான வாய்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. இல்லைனா எவனாவது ஃபிரெண்ட்ஸ் டபுல் கேம் ஆடிருப்பானுங்க. பேசுவோம். பொண்ணுங்க எதுக்கு வேணா எப்படி வேணா முடிவு எடுப்பாங்க.

"வினிதா, நித்யா. வீட்ல சாப்பிட ஏதாவது இருக்கா?"

" "

"என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? சாப்பிட ஏதாவது தயார் பண்ணுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் சரியாகிடும்"

" "

"போங்க. நான் தான் சொல்றேன் இல்லை"

ரெண்டு பேரும் கிச்சனுக்கு போயிட்டாங்க. அப்பாடா.

"சொல்லுங்கக்கா, வேலை விட்டு தூக்கிடுவோம்னு ஏதாவது சொன்னாங்களா?"

"இல்லை"

அப்ப முதல் விஷயம் இல்லை. இன்னும் கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயமாத்தான் படுது.

"சரி என்ன கேட்டானுங்க? ஏதாவது தப்பா நடந்துக்கிட்டாங்களா?"

வினோதினி அக்கா முகம் விரிஞ்சதை பார்க்கும் போது அவுங்களுக்கு ஆச்சர்யமும், பயமும் சேர்ந்தே வந்துருக்கும் போல இருக்கு.

"நீங்க சொல்லும் போதே எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. கம்பெனி HRஆ, மேனஜரா இல்லை ஃபிரெண்ட்ஸ்னு கூட சுத்தறது யாராவதா?"

"தெரியல?"

"ஏதாவது டிமேண்ட் பண்ணாங்களா?"

"பணம் தான்"

"நீங்க இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னா, நாளைக்கு காலைல பிரச்சனை தீர்ந்துடும். பயப்படாம என்கிட்ட சொல்லுங்க"

"நான் MCA முடிக்கும் போது கடைசி செமஸ்டர்ல ஒரு பேப்பர்ல ஊத்திக்கிச்சு. நல்லா தான் எழுதியிருந்தேன். அப்படி இருந்தும் ஃபெயிலாயிட்டேன். ஒரு ஆறு மாசம் வீட்ல இருந்துட்டு பரிட்சை எழுதிட்டு ரிசல்ட் வரும் போது கிட்டதட்ட ஒன்பது மாசமாயிடுச்சி. பெங்களூர் தான் பக்கம்னு இங்க வேலை தேட வந்தேன். எதுவும் கிடைக்கல. அப்பறம் ஒரு கால் சென்டர்ல சேர்ந்து ஒரு பத்து மாசம் வேலை செஞ்சேன். அப்பறம் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கால் சென்டர்ல இருக்கறது பின்னாடி பிரச்சனையாகும்னு சொல்லி ஒரு ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல ஜாவா படிக்க சொன்னாங்க. நானும் படிச்சேன். அந்த இன்ஸ்டிடியூட்லயே ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தந்தாங்க. அதை வெச்சி இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன்"

"ஹிம்ம்ம்"

"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். அப்பறம் நான் என் ஃபோன் நம்பரை மாத்திட்டேன். இன்னைக்கு கரெக்டா மறுபடியும் என் புது நம்பருக்கு போன் பண்ணாங்க. நம்பர் மாத்தினா கண்டு பிடிக்க முடியாதானு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. நாளைக்கு பணம் எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க. இல்லைனா நான் ஃபேக் போட்டதையும் அதை மறைக்க காசு கொடுத்ததையும் எங்க ஊர் பத்திரிக்கைல போட்டுடுவேனு மிரட்டறாங்க. எனக்கு பயமா இருக்கு. இவனுங்க என்னை விட்டு வைக்க மாட்டானுங்க போல"

"அழாதீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. யாரா இருக்கும்னு ஏதாவது யோசிச்சீங்களா?"

"யாருனே எனக்கு சரியா தெரியல"

"முதல்ல நீங்க பயப்படறதை நிறுத்துங்க. இந்த மாதிரி பெரிய கம்பெனில ஃபேக்ல மக்கள் சேராங்கனு எந்த பத்திரிக்கைலயும் அவ்வளவு சீக்கிரம் போடமாட்டாங்க. ஏன்னா அது அந்த கம்பெனியோட வளர்ச்சியையும் ரெப்புட்டேஷனையும் பாதிக்கும். அதுவும் நீங்க வேலைக்கு சேர்ந்திருக்கற கம்பெனி, இந்தியாவுல தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனில ஒண்ணு. அதனால எந்த பத்திரிக்கைலயும் அவுங்க கம்பெனி ஆளுங்களை பத்தி தப்பா போட விட மாட்டாங்க. ஏன்னா அவுங்க இண்டர்வியூ ப்ராசஸ் சரி இல்லைனு மத்தவங்க பேச அது வாய்ப்பளிச்சிடும். அதனால பத்திரிக்கைல போடுவோம்னு அவன் சொன்னதை வெச்சி நீங்க பயப்பட வேண்டாம்"

"நிஜமாவா சொல்ற?"

"ஆமாம். சத்தியமா நீங்க என்னை நம்பலாம். அதுவும் இந்த மாதிரி நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்ககிட்ட இருந்து வரது எல்லாத்தையும் வெச்சிட்டு இந்த மாதிரி போட மாட்டாங்க. அதனால நீங்க அவனுக்கு பயப்படறதை நிறுத்துங்க. இப்ப நாம இது யாரா இருக்க முடியும்னு யோசிப்போம். அதுக்கு ஏத்த மாதிரி நாம அவுங்களை டீல் பண்ணிக்கலாம்"

"ஹிம்ம்ம்"

"உங்ககிட்ட பேசினவங்க தமிழ்ல பேசினாங்களா?"

"ஆமாம்"

"உங்களை இண்டர்வியூ பண்ண HR, உங்க மேனஜர் யாராவது தமிழ் ஆளுங்களா?"

"இல்லை. HR வட இந்தியாக்காரர், மேனஜர் ஆந்திரா"

"ஹும்ம்ம். உங்க டீம்ல எத்தனை பொண்ணுங்க?"

"மொத்தம் நாலு பொண்ணுங்க"

"சரி அதுல எத்தனை பேர் அங்க லேட்ரலா சேர்ந்தாங்க?"

"நான் மட்டும் தான். மீதி எல்லாரும் அந்த கம்பெனிலயே ஃபெரஷரா சேர்ந்தவங்க"

"அப்ப இது உங்க மேனஜர் வேலையா இருக்க வாய்ப்பு குறைவு. ஏன்னா அவுங்க பண்றது ஒரு ப்ராஸஸ் மாதிரி இருக்கு. ஒருத்தருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. என்னோட கணிப்பு HR இல்லைனா உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது ஒருத்தவங்க தான்"

"என் ஃபிரெண்ட்ஸா இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நான் நம்பர் மாத்தி எந்த பிரெண்டுக்கும் கொடுக்கல. எல்லாரும் வினிதா நம்பர்ல தான் காண்டாக்ட் பண்றாங்க"

"ஹிம்ம்ம்.... உங்க ஆபிஸ்ல இண்ட்ரா நெட் இருக்குமே. அதுல அப்டேட் பண்ணீங்களா?"

"ஆமாம். என் டீம் லீட் அப்டேட் பண்ண சொன்னாரு. அதனால போன வாரம் தான் பண்ணேன்"

"அப்படினா HRக்கு சான்ஸ் அதிகம். அவுங்க கொஞ்ச பேர் சேர்ந்து இந்த மாதிரி சுலபமா பண்ணலாம். வேலைக்கு சேரும் போதே ஃபேக்னு தெரிஞ்சி ஆள் எடுத்து அப்பறமா அவுங்களை பத்தி மத்த விஷயங்களை தெரிஞ்சிட்டு சுலபமா மிரட்டலாம்"

"இருக்கலாம்"

"அதே மாதிரி உங்க டீம்ல யாருக்காவது உங்க மேல க்ரஷ் இருக்கலாம்னு நீங்க ஃபீல் பண்றீங்களா?"

"அப்படி இருக்கற மாதிரி தெரியல. எல்லாரும் நல்லா தான் பேசறாங்க. அதுவுமில்லாம நான் சேர்ந்தே ரெண்டு மாசம் தான் ஆகியிருக்கு"

"ஹிம்ம்ம்"

"உங்க டீம்ல தமிழ் பசங்களோ இல்லை பொண்ணுங்களோ யாராவது இருக்காங்களா?"

"ஆமாம். ஒரு பையன், ஒரு பொண்ணு"

"அதுல யார் மேலயாவது சந்தேகம் படற மாதிரி?"

"இல்லை. அவுங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்ல இருந்து ஒண்ணா இருக்கறவங்க அண்ட் தே ஆர் இன் லவ் வித் ஈச் அதர்ஸ்"

"அப்ப அவுங்களா இருக்க முடியாதுங்கறீங்க?"

"ஆமாம்"

"ஆஹா... ஒரு முக்கியமானதை விட்டுட்டனே. நீங்க ட்ரெயினிங் போனீங்களே. அவுங்க தானே உங்களுக்கு ஃபேக் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்தாங்க?"

"ஆமா"

"ஹவ் டிட் ஐ மிஸ்ட்டு இட்? ஷிட்... கம் ஆன். தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ். ஏன்னா திருடனை உருவாக்கறவனுக்கு திருடன்கிட்ட இருந்து திருடறது சுலபம்"

வினோதினி அக்கா முகத்துல ஒரு அதிர்ச்சி தெரிஞ்சிது...

(தொடரும்...)

69 comments:

Divya said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!

Divya said...

பகுதி 4-8 மொத்தமா படிச்சேன்....கதை ஸ்லோவா ஸ்டார்ட் ஆனாலும்...போக போக விறுவிறுப்பா வித்தியாசமா இருக்கு அண்ணா, கலக்குங்க!!

Divya said...

வழக்கம்போல்....உரையாடல்கள் அனைத்திலும் உங்கள் ஒரிஜினல் 'டச்'சுடன் யதார்த்தமா இருக்கு, சூப்பர்!!

கயல்விழி said...

ஹீரோ பயங்கரமான டிடெக்டிவா இருக்கார்.

கதை ரொம்ப நல்லா இருக்கு :)

வெட்டிப்பயல் said...

நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!//

ரொம்ப டாங்ஸ்மா...

உன்னோட கதை அடுத்த பகுதி எங்க?

நாடோடி said...

ரவி கேக்குறதப் பார்த்தா இது feel good story மாதிரியே தெரியலையே :-)

நல்லா போயிட்டு இருக்கு பாலாஜி

-கணேஷ்

siva gnanamji(#18100882083107547329) said...

//திருடனை உருவாக்கிறவனுக்கு
திருடண்ட்டேயிருந்து திருடுறது சுலபம்//

பொன்மொழி! பொன்மொழி!!

வெட்டிப்பயல் said...

//நாடோடி said...

ரவி கேக்குறதப் பார்த்தா இது feel good story மாதிரியே தெரியலையே :-)

நல்லா போயிட்டு இருக்கு பாலாஜி

-கணேஷ்//

இது நிச்சயம் ஃபீல் குட் கதை இல்லை... அதான் நான் முதல் பகுதியிலேயே சொல்லிட்டனே...

இதுல நிறைய மோசமான மனிதர்களை சந்திக்க வேண்டியது இருக்கும் :-(

வெட்டிப்பயல் said...

//கயல்விழி said...

ஹீரோ பயங்கரமான டிடெக்டிவா இருக்கார்.
//

இதுக்கே இப்படி சொல்லிட்டா... இன்னும் நிறைய இருக்கே கண்டுபிடிக்க :-)

//
கதை ரொம்ப நல்லா இருக்கு :)//

மிக்க நன்றி கயல்வ்ழி

Divya said...

\\ வெட்டிப்பயல் said...
நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)\\

அண்ணா....கதை இப்பதான் செம விறுவிறுப்பா நகருது, வரவேற்பு பத்தியெல்லாம் கவலைபடாம....போட்டு தாக்குங்கண்ணா:))

Divya said...

\\ வெட்டிப்பயல் said...
//Divya said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!//

ரொம்ப டாங்ஸ்மா...

உன்னோட கதை அடுத்த பகுதி எங்க?\\

ஓ ....அதுவா....அது.....வந்து.....வந்து......இன்னும் எழுதலீங்கண்ணா:((

Anonymous said...

ரைட்..ரைட்... ஆடு புலி ஆட்டம் படத்துக்கு நல்ல பேருதேன்....

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

//திருடனை உருவாக்கிறவனுக்கு
திருடண்ட்டேயிருந்து திருடுறது சுலபம்//

பொன்மொழி! பொன்மொழி!!//

ஆஹா... நிஜமா சொல்றீங்களா இல்லை கிண்டல் பண்றீங்களானே தெரியல :-)

வெட்டிப்பயல் said...

// Divya said...

\\ வெட்டிப்பயல் said...
நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)\\

அண்ணா....கதை இப்பதான் செம விறுவிறுப்பா நகருது, வரவேற்பு பத்தியெல்லாம் கவலைபடாம....போட்டு தாக்குங்கண்ணா:))//

அப்ப சரி... போட்டு தாக்கிட வேண்டியது தான் :-)

வெட்டிப்பயல் said...

//Divya said...

\\ வெட்டிப்பயல் said...
//Divya said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!//

ரொம்ப டாங்ஸ்மா...

உன்னோட கதை அடுத்த பகுதி எங்க?\\

ஓ ....அதுவா....அது.....வந்து.....வந்து......இன்னும் எழுதலீங்கண்ணா:((//

ஆஹா...
உன் ரசிகர்கள் எல்லாம் ரொம்ப ஆர்வமா காத்திட்டுருக்கோம் :-)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

ரைட்..ரைட்... ஆடு புலி ஆட்டம் படத்துக்கு நல்ல பேருதேன்....//

படத்துக்கா??? நீங்க என்னைய வெச்சி காமெடி கீமெடி பண்ணலயே :-)

Anonymous said...

Typing the comment quick, sorry didn't set my Tamil keyboard on my new laptop yet... I feel story is getting slower now. Until Part 7, it went little bit on track and I never felt bored, now I feel the story getting slower (kadikka arambichuttinga...). Please dont take it personally... I really liked this story until Part 7.... Lets see how it goes further... ( I will setup my Tamil keyboard for sure next time... Sorry)

Regards
Vijay Chinnasamy

Unknown said...

gear maathiyaachaa..jooperu :)))

விஜய் ஆனந்த் said...

அடடே!!! வண்டி ஜம்முன்னு கெளம்பிருச்சு!!!

நம்ம ஹூரோவோட investigation-ல கொஞ்சம் professional touch தெரியுதே!! ஒரு வேள...அனுபவமோ???

விஜய் ஆனந்த் said...

\\ வெட்டிப்பயல் said...
நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)\\

நீங்க வேற...கத நச்சுன்னு போயிட்டிருக்கு....அப்படியே அடிச்சு தூக்குங்க....

(ஆமாஆஆ....கத போர்தான் அடிக்குதுன்னு சொன்னா என்னா பண்ண போறீங்க????)

வெட்டிப்பயல் said...

//
(ஆமாஆஆ....கத போர்தான் அடிக்குதுன்னு சொன்னா என்னா பண்ண போறீங்க????)//

திங்கள் கிழமைக்குள்ள வேற ஏதாவது மாத்த முடியுமானு யோசிப்பேன் :-)

இதெல்லாம் ஏற்கனவே எழுதி வெச்சது தானே :-)

இவன் said...

//நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)//


எப்போ அடுத்தபகுதி ஜி... பாலாஜி... waiting for that...

இவன் said...

கத சூப்பரா போகுது

Sen22 said...

கதை நல்லா போட்டிருக்கு வெட்டி...

Waiting for next part...

Divyapriya said...

//பொண்ணுங்க எதுக்கு வேணா எப்படி வேணா முடிவு எடுப்பாங்க.//

சைடு கேப்ல பொண்ணுகள இப்டு வாரிட்டீங்களே…ஏங்க இப்டி? :))


//தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ்//

செம த்ரில்லர் கதையா போய்ட்டு இருக்கு…கலக்குங்க...

Divyapriya said...

"//நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)//"

இப்ப தான் கதை செம ஸ்பீடா போகுது…

Anonymous said...

Dear Vetti Sir,

Mudiyadu, wait panna mudiyadu.

Seekram come with part 9.

Cheers
Christo

Ramya Ramani said...

அட செம்ம டிவிஸ்டு.. கலக்குங்க..சூப்பரா போகுது கதை..

Wait பண்றோம் அடுத்து எப்படி கொண்டுபோவீங்கன்னு :)(final Overs of Match madiri )

பாபு said...

எல்லாவற்றையும் ஒன்றாக படித்தேன் ,சுவராஸ்யமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்

Prathees R said...

//இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ?

Fake போடறதால நிஜத்தில் இப்படியும் பிரச்சனைகள் வருமா? நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.

கதை சூப்பர் நண்பா...

வெங்கட்ராமன் said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!

siva gnanamji(#18100882083107547329) said...

//ஆஹா!...நிஜமாச் சொல்றீங்களா
இல்லை கிண்டல் பண்றீங்களான்னே
தெரியலே...//

உண்மையச் சொன்னா கிண்டல் மாதிரி
தோணுதா?

திவாண்ணா said...

அஹா! நான் நினைச்ச ரெண்டு பார்ட்டி இல்லையே இந்த ஆட்டத்தில?!
திருப்பம்தான். இப்பதான் ஆட்டம் ஆரம்பிக்குது. இதுவரை கட்டம் போட்டுகிட்டு இருந்தீங்க. குட்!

மங்களூர் சிவா said...

சூப்பர்!!

மங்களூர் சிவா said...

/
siva gnanamji(#18100882083107547329) said...

//திருடனை உருவாக்கிறவனுக்கு
திருடண்ட்டேயிருந்து திருடுறது சுலபம்//

பொன்மொழி! பொன்மொழி!!
/

ரிப்பீட்டு

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...

நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)
/

என்னப்பா இப்பிடி சொல்லிட்ட கும்முங்கய்யா பாலாஜிய

:)

மங்களூர் சிவா said...

கதை இப்பதான் செம விறுவிறுப்பா நகருது, வரவேற்பு பத்தியெல்லாம் கவலைபடாம....போட்டு தாக்குங்க :))

Subramanian Vallinayagam said...

I felt the same.... the flow(of story) is getting slow from the part 8...... pls do the needfull...

/*
vijayAnath said,
I feel story is getting slower now. Until Part 7, it went little bit on track and I never felt bored, now I feel the story getting slower

*/

வெட்டிப்பயல் said...

//Vijay Chinnasamy said...

Typing the comment quick, sorry didn't set my Tamil keyboard on my new laptop yet... I feel story is getting slower now. Until Part 7, it went little bit on track and I never felt bored, now I feel the story getting slower (kadikka arambichuttinga...). Please dont take it personally... I really liked this story until Part 7.... Lets see how it goes further... ( I will setup my Tamil keyboard for sure next time... Sorry)

Regards
Vijay Chinnasamy//

விஜய்,
கதை போக போக சீரியசா போகும்னு நினைக்கிறேன். இது வரைக்கும் வந்த மாதிரி லவ் டயலாக்ஸ் எல்லாம் இனிமே ரொம்ப வராது.

திவா சொல்லியிருக்கற மாதிரி இதுவரைக்கும் கட்டியிருக்கறது கட்டம் தான். போக போக கொஞ்சம் நல்லா போகும்னு நினைக்கிறேன். அடுத்த பகுதியும் கொஞ்சம் கொஞ்சம் இந்த பகுதி மாதிரி தான் இருக்கும். இந்த மாதிரி கேள்விகள் கேட்காம உடனடியா எதுவும் பண்ண முடியாது இல்லைங்களா?

வெட்டிப்பயல் said...

//kappi said...

gear maathiyaachaa..jooperu :)))//

ஆமாம்பா... எப்படி போகுதுனு பார்க்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

// விஜய் ஆனந்த் said...

அடடே!!! வண்டி ஜம்முன்னு கெளம்பிருச்சு!!!

நம்ம ஹூரோவோட investigation-ல கொஞ்சம் professional touch தெரியுதே!! ஒரு வேள...அனுபவமோ???//

விஜய்,
இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுனு தானே அறிவிப்புகள் எல்லாம் போட்டிருக்கேன் :-)

ஆடு புலி ஆட்டம் முழுக்க முழுக்க கற்பனை கதை. கதாபாத்திரங்களுக்கும் கதாசிரியருக்கும் (அதான் எனக்கும்) எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

A said...

எல்லா பாகமும் அருமை. என்னடா இன்னமும் ரவி கடலை போட்டுக்கிட்டே இருக்கானே?:) எப்ப ஆடு புலி ஆட்டம் ஆரம்பிக்குமுனு காத்திருந்தேன். ஆரம்பிச்சிருச்சு.
நல்லா ஆடுங்க.

தமிழினி..... said...

wow...very interesting...keep the gud work going!!

Vijay said...

சும்மா ஷுமக்கர் F1 கார் ஓட்டுற கணக்கா கதை சல்லுன்னு போகுது. சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்க

ஓட்டு பொறுக்கி said...

கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு..

"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். "

நம்ம ஹீரோ எப்படி முன்னாடி பணம் கொடுத்த விசயத்தை கேக்காம விட்டுட்டார்?

வெட்டிப்பயல் said...

//சக்தி said...

கதை விறுவிறுப்பா போயிட்டு இருக்கு..

"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். "

நம்ம ஹீரோ எப்படி முன்னாடி பணம் கொடுத்த விசயத்தை கேக்காம விட்டுட்டார்?//

சூப்பர் :-)

நச்சுனு பிடிச்சீங்க... அடுத்த பகுதி முழுக்க அதை பத்தி தான் :-)

Anonymous said...

கதை ரொம்ப அருமையா போகுது. நான் படிக்கும் வெகு சில தொடர்கதைகளில் இதுவும் ஒன்னு. அழகா எழுதுறீங்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

//என்னங்க ஏதாவது லவ் மேட்டரா இருக்கும் சுலபமா சமாளிச்சி சமாதானம் பண்ணி வெச்சா பின்னாடி நமக்கு இந்த அக்கா ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்தேன். //

Ithukku perthan cylce gapla Auto otratha

// வெட்டிப்பயல் said...
// விஜய் ஆனந்த் said...

அடடே!!! வண்டி ஜம்முன்னு கெளம்பிருச்சு!!!

நம்ம ஹூரோவோட investigation-ல கொஞ்சம் professional touch தெரியுதே!! ஒரு வேள...அனுபவமோ???//

விஜய்,
இப்படியெல்லாம் கேட்கக்கூடாதுனு தானே அறிவிப்புகள் எல்லாம் போட்டிருக்கேன் :-)

ஆடு புலி ஆட்டம் முழுக்க முழுக்க கற்பனை கதை. கதாபாத்திரங்களுக்கும் கதாசிரியருக்கும் (அதான் எனக்கும்) எந்த விதமான சம்பந்தமும் இல்லை.//

We always use to imagine / relate a known person when we are so much involved in the Story ......

Athu vasagargalin iyalbu .....Arivippu ellam poda vendiya avasiyam Enna ....

// Divya said...
கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!///

Repeateyyyyyy


Anbu

வெட்டிப்பயல் said...

//We always use to imagine / relate a known person when we are so much involved in the Story ......

Athu vasagargalin iyalbu .....Arivippu ellam poda vendiya avasiyam Enna ....//

தல,
கதைல அவ்வளவு மோசமான கேரக்டர்களை எல்லாம் பார்க்க போறோம். அங்கயும் வந்து இதே கேள்வியை கேட்டா நமக்கு எழுத கஷ்டமா இருக்கும் இல்லை.. அதான் :-)

Arunkumar said...

kadhai nalla pogudhu thala... aana andha training makkal mela sandegam varadhukku ivalo neram aayirche namma google-la vela paakuravanukku... :P

வெட்டிப்பயல் said...

//இவன் said...

//நண்பர்களே!
கதை போர் அடிக்கிற மாதிரி இருந்தா சொல்லுங்க... போன பகுதிக்கே வரவேற்பு குறைவா இருந்த மாதிரி தெரியுது :-)//

எப்போ அடுத்தபகுதி ஜி... பாலாஜி... waiting for that...//

அடுத்த பகுதி திங்கள் காலை - இந்திய நேரம் :-)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

//பொண்ணுங்க எதுக்கு வேணா எப்படி வேணா முடிவு எடுப்பாங்க.//

சைடு கேப்ல பொண்ணுகள இப்டு வாரிட்டீங்களே…ஏங்க இப்டி? :))
//
நல்ல வேளை... இதுல இன்னொரு வார்த்தையும் சேர்ந்திருந்தேன்... தூக்கிட்டேன் :-)

பொண்ணுங்க என்ன செய்வாங்கனு பசங்களால பெரும்பாலும் யூகிக்க முடியாதுனு தான் நான் நினைக்கிறேன் :-)

// //தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ்//

செம த்ரில்லர் கதையா போய்ட்டு இருக்கு…கலக்குங்க...//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Dear Vetti Sir,

Mudiyadu, wait panna mudiyadu.

Seekram come with part 9.

Cheers
Christo//

Christo,
சார் மோர் எல்லாம் வேண்டாமே :-)

அடுத்த பகுதி திங்கள் காலை :-)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

அட செம்ம டிவிஸ்டு.. கலக்குங்க..சூப்பரா போகுது கதை..

Wait பண்றோம் அடுத்து எப்படி கொண்டுபோவீங்கன்னு :)(final Overs of Match madiri )//

ஆஹா.. இது தான் முதல் ஓவர் மாதிரி.. இப்ப தான் ஆட்டமே துவங்கியிருக்கு. இன்னும் யார்னு கண்டுபிடிக்கவே ஆரம்பிக்கலயே :-)

வெட்டிப்பயல் said...

// babu said...

எல்லாவற்றையும் ஒன்றாக படித்தேன் ,சுவராஸ்யமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி பாபு :-)

வெட்டிப்பயல் said...

//Vetty Officer said...

//இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ?

Fake போடறதால நிஜத்தில் இப்படியும் பிரச்சனைகள் வருமா? நிச்சயம் யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.

கதை சூப்பர் நண்பா...//

மிக்க நன்றி நண்பா...

பிரச்சனை வருமானு தெரியாது.. வரலாங்கற யூகம் தான் இந்த கதை :-)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

கதை டாப் கியர்ல போகுது.....சூப்பர்!!//

மிக்க நன்றி வெங்கட்ராமன் :-)

வெட்டிப்பயல் said...

//siva gnanamji(#18100882083107547329) said...

//ஆஹா!...நிஜமாச் சொல்றீங்களா
இல்லை கிண்டல் பண்றீங்களான்னே
தெரியலே...//

உண்மையச் சொன்னா கிண்டல் மாதிரி
தோணுதா?//

ஹி ஹி ஹி...

நமக்கு மத்தவங்களை கிண்டல் பண்ணியே பழக்கமா போச்சா.. அதான் :-)

வெட்டிப்பயல் said...

//திவா said...

அஹா! நான் நினைச்ச ரெண்டு பார்ட்டி இல்லையே இந்த ஆட்டத்தில?!
திருப்பம்தான். இப்பதான் ஆட்டம் ஆரம்பிக்குது. இதுவரை கட்டம் போட்டுகிட்டு இருந்தீங்க. குட்!//

இன்னும் எல்லாருமே ஆட்டத்துல இருக்காங்க திவா... இது அவனோட யூகம் தானே.. போக போக தானே யார்னு தெரியும் :-)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

கதை இப்பதான் செம விறுவிறுப்பா நகருது, வரவேற்பு பத்தியெல்லாம் கவலைபடாம....போட்டு தாக்குங்க :))//

மிக்க நன்றி சிவா... இனிமே ஒரே தாக்கு தாக்குனு தாக்குதல் தான் :-)

வெட்டிப்பயல் said...

// ஆனந்த் குமார் said...

எல்லா பாகமும் அருமை. என்னடா இன்னமும் ரவி கடலை போட்டுக்கிட்டே இருக்கானே?:) எப்ப ஆடு புலி ஆட்டம் ஆரம்பிக்குமுனு காத்திருந்தேன். ஆரம்பிச்சிருச்சு.
நல்லா ஆடுங்க.//

மிக்க நன்றி ஆனந்த்...

கடலை போடறதும் பிடிக்காதா? அதுவும் ஒரு ஆட்டம் தானே :-)

வெட்டிப்பயல் said...

//siva said...

I felt the same.... the flow(of story) is getting slow from the part 8...... pls do the needfull...

/*
vijayAnath said,
I feel story is getting slower now. Until Part 7, it went little bit on track and I never felt bored, now I feel the story getting slower

*///

ஹிம்ம்ம்...

அடுத்த பாகமும் இப்படி தான் இருக்கும் சிவா.. அதுக்கு அப்பறம் மாறும் :-)

வெட்டிப்பயல் said...

// தமிழினி..... said...

wow...very interesting...keep the gud work going!!//

ரொம்ப டாங்ஸ்ங்கோ :-)

வெட்டிப்பயல் said...

//விஜய் said...

சும்மா ஷுமக்கர் F1 கார் ஓட்டுற கணக்கா கதை சல்லுன்னு போகுது. சீக்கிரம் அடுத்த பாகம் எழுதுங்க//

மிக்க நன்றி விஜய் :-)

இன்னைக்கு வீட்டுக்கு போய்
எப்படியும் எழுத ஆரம்பிக்கனும் விஜய்.. ரொம்ப நாளா பெண்டிங்க இருக்கு :-)

Unknown said...

அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.

புதுகைச் சாரல்

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீ said...

கதை ரொம்ப அருமையா போகுது. நான் படிக்கும் வெகு சில தொடர்கதைகளில் இதுவும் ஒன்னு. அழகா எழுதுறீங்க வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஸ்ரீ...

வெட்டிப்பயல் said...

// Arunkumar said...

kadhai nalla pogudhu thala... aana andha training makkal mela sandegam varadhukku ivalo neram aayirche namma google-la vela paakuravanukku... :P//

சந்தேகம்னு வந்தா எல்லாரையும் லிஸ்ட்ல எடுத்துட்டு தானே சிந்திக்கனும். இப்பவும் அவர் சரியான ட்ராக்ல தான் போயிட்டு இருக்கார்னு சொல்ல முடியுமா என்ன?

இப்ப அவன் கெஸ் பண்ணிருக்கான்... போக போக தான் யார்னு கண்டு பிடிக்க முடியும் :-))

gayathri said...

ஃபேக் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்தாங்க?"


ஃபேக் enna mening enaku thereyala
mening solluga pa