தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, August 25, 2008

ஆடு புலி ஆட்டம் - 15

ஒரு வழியா அந்த பொண்ணுக்கிட்ட இருந்து இருபதாயிரம் வாங்கியாச்சு. இன்னைக்கு காலைல என்ன பேசினோம்னு நீங்க கேக்கல இல்லை. இதுதான் அவளுக்கு கொடுத்த இண்ஸ்ட்ரக்ஷன்.

"சரியா பத்து மணிக்கு MG ரோட்ல இருக்குற பரிஸ்டா காப்பி ஷாப்புக்கு வர. அங்க மஞ்ச சட்டை கருப்பு பாண்ட் போட்ட ஒரு ஆள் தனியா உக்கார்ந்து காபி குடிச்சிட்டு இருப்பான். நீயும் ஒரு காபி வாங்கிட்டு போய் அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து காபி குடிக்கற. நீ பாதி குடிச்ச உடனே உன் ஹேண்ட் பேக்ல இருந்து பணம் எடுத்து அவனுக்கு கொடுக்கனும். பணத்தை எந்த கவர்லயும் போட்டு கொடுக்க கூடாது. அதுக்கு அப்பறம் காபி குடிச்சிட்டு அவன் கூடவே எழுந்து வெளிய வர. அவன் போற திசைக்கு எதிர்ல போயிடு. அவ்வளவு தான். எந்த இடத்துலயும் அழக்கூடாது. நீ ஒழுங்கா நடந்துக்கிட்டா நாங்க ஒழுங்கா நடந்துக்குவோம்." அவ்வளவு தான்

பணம் வாங்க குமார் எதுக்கு போனானு பாக்கறீங்களா? என்னையும் தினேஷையும் தான் அந்த பொண்ணுக்கு தெரியுமே. குமாருக்கு அஞ்சாயிரம் ரூபாய். மீதி எல்லாம் எனக்கு தான். குமாரும் அவன் கூட்டாளி துரையும் இங்க ஒரு லாட்ஜ்ல வேலை செய்யறானுங்க.

என்னடா தினேஷுக்கு எதுவும் இல்லைனு யோசிக்கறீங்களா? இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு அப்பறம் அந்த பணம் கொடுத்த பொண்ணே அவனுக்கு தானே. அதுக்கு மேல அவனுக்கு என்ன வேணும்?

நீங்க பாக்கறதை பார்த்தா தினேஷ் ரொம்ப கெட்டவன்னு நினைக்கிற மாதிரி தெரியுது? அப்படி ஒண்ணும் அவன் ரொம்ப கெட்டவனில்லை. அவன் எந்த பொண்ணையும் ஒரு தடவைக்கு மேல தொட மாட்டான். அதுவும் முதல் தடவை பண்ணனும். அவ்வளவு தான்.

அவனுக்கு பணத்துல ஆசையில்லை. எனக்கு பணம் வேணும். அதனால அவனுக்கு பொண்ணுங்க ஆசையை நான் தான் ஏற்படுத்தினேன். இப்ப என்னை விட பெரிய தப்பை அவன் பண்றான். ஏதாவது மாட்டினா அவனுக்கு தண்டனை அதிகம். அதனால அவன் அதிகமா சிந்திக்கறான். பாதுகாப்பா திட்டம் போடறான். பணத்தோட நான் சந்தோஷமா இருக்கேன்.

தினேஷ் மாதிரி ஒரு புத்திசாலியை நீங்க பார்க்க முடியாது. எங்க கிராமத்துலயே படிச்சி இஞ்சினியரானவன் அவன் தான். அப்பறம் இதே பெங்களூர்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனில தான் வேலைக்கு சேர்ந்தான். நாலு வருஷம் நல்லா வேலை செஞ்சான்.

அப்ப தான் பூர்ணிமா அங்க சேர்ந்தா. ஆறு மாசத்துக்குள்ள அவனும் பூர்ணிமாவும் காதலிக்க ஆரம்பிச்சாங்க. பூர்ணிமா ரொம்ப அழகு. நல்ல பொண்ணு. ஆனா நல்லா ஊர் சுத்துவா. ஒரு தடவை அவ டீம் பசங்களும் பொண்ணுங்களும் இந்த நாசா பப்புக்கு போய் தண்ணி அடிச்சிருக்குங்க.

அந்த நேரம் பார்த்து அவ டீம்ல இருக்குற ஒரு பொண்ணு தினேஷுக்கு போன் பண்ணி சொல்லிடுச்சு. கோபமா அங்க போன தினேஷுக்கு, பூர்ணிமாக்கும் பப்லயே சண்டை. கோபத்துல அவன் அவளை அடிச்சிட்டான். அதை பார்த்து கோபமான அவ டீமேட் ஒருத்தன் தினேஷை அடிக்க அப்பறம் பப்ல இருந்த எல்லாரும் இவனை போட்டு அடிச்சிட்டாங்க. அன்னைக்கு வேலைக்கு போறதை நிறுத்தினவன் தான். அதுக்கு அப்பறம் பூர்ணிமாவும் இவனுக்கு ஃபோன் பண்ணல.

ஆறு மாசம் ஊர்ல பைத்தியக்காரனாட்டம் சுத்திட்டு இருந்தான். நான் தான் பேசி அவனை நான் வேலை செய்யற ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர சொல்லி மறுபடியும் பெங்களூர் கூப்பிட்டு வந்தேன். இவன் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்து பதிமூனு மாசமாச்சு.

நாங்க இந்த வேட்டையை ஆரம்பிச்சி ஒன்பது மாசமாச்சு. இது வரைக்கும் பதினாறு ஆடுங்க மாட்டிருக்குங்க. அதுல பன்னெண்டு ஆடு அவனுக்கு பலி கொடுத்திருக்கேன். இன்னும் நிறைய கொடுப்பேன். அவனுக்கு தெரியாம நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன். அது மட்டும் சக்ஸஸாச்சினா இன்னும் ஒரு வருஷத்துல நான் கோடீஸ்வரன் தான்.

எல்லா பொண்ணுங்களுக்கும் நல்லா வேலை கிடைச்சி, கை நிறைய சம்பாதிக்கனும்னு வேண்டிக்கோங்க. என்னடா அவுங்களுக்கு வேலை கிடைக்கனும்னு வேண்டிக்க சொல்றேனு பாக்கறீங்களா. ஆடு கொழுத்தா புலிக்கு சந்தோஷம் தானே.

இருங்க குமார் வந்திருக்கான். பேசிட்டு வரேன்.

"என்ன குமாரு? என்ன பிரச்சனை?"

"அந்த திண்டுக்கல் பொண்ணு போன் நம்பர் மாத்திடுச்சி போல"

"தே@*&%$ மகளுங்க. இவளுகளுக்கு இதே வேலையா போச்சு. மொத மாசம் காசு கொடுத்தவுடனே நம்பர் மாத்திடறாளுங்க. இரு. நம்பர் பிடிச்சி தரேன்"

"சரிண்ணே"

பாருங்க. இதையே தான் எல்லாம் பண்ணுதுங்க. நம்பர் மாத்தினா புது நம்பர் கண்டுபிடிக்க முடியாதா? எப்படியும் நம்பர் மாத்தி ஒரு மாசத்துல கம்பெனி சைட்ல அப்டேட் பண்ணியிருப்பாளுங்க. எங்க இண்ஸ்டிடியூட்ல படிச்சி அங்க வேலைல சேர்ந்திருக்க பசங்களுக்கு சும்மா ஃபோன் பண்ணி வாங்க முடியாதா என்ன?

வேற ஒரு பெரிய கம்பெனில இருந்து ஆஃபர் வந்திருக்கு. அந்த பொண்ணு நம்பர் மாறிடுச்சு போல கொஞ்சம் பார்த்து சொல்லுனு சொன்னா பார்த்து சொல்லிட போறானுங்க. இதெல்லாம் எனக்கு தினேஷ் சொல்லி கொடுத்தது தான். இப்ப புரியுதா நான் ஏன் அவனை இவ்வளவு புகழறனு. கொஞ்சம் இருங்க அந்த திண்டுக்கல் பொண்ணு நம்பர் வாங்கி குமாருக்கு கொடுத்துட்டு வரேன்.

(ஆட்டம் தொடரும்...)

66 comments:

வெட்டிப்பயல் said...

யார் யார் எல்லாம் தொடர்ந்து படிக்கறீங்கனு தெரிஞ்சிக்கறதுக்கு கொஞ்சம் ஆவலா இருக்கேன்... கதையை தொடர்ந்து படிக்கறவங்க ஒரு பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் :)

Unknown said...

me :-)

MSK / Saravana said...

நீங்க சொன்ன மாதிரி பயங்கர த்ரில்ல்லா போகும் போல தெரியுது..

உங்களோட எச்சரிக்கை தகவல் பலகை இதுக்காகத்தானா..

வெட்டிப்பயல் said...

// Heidi said...

me :-)//

மிக்க நன்றி Heidi :)

MSK / Saravana said...

கதை நல்லா இருக்கு.. பட் நிஜத்தில் இது மாதிரி நடக்க கூடாதுன்னு, வேண்டிக்க முடியாது (என்னா எனக்கு கடவுள் நம்பிக்கை கெடையாது).. ஸோ.. நிஜத்தில் இது மாதிரி நடக்க கூடாதுன்னு ஆசைபடறேன்..
:)

MSK / Saravana said...

கதை கதையாகவே இருக்கட்டும்..
:)

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

நீங்க சொன்ன மாதிரி பயங்கர த்ரில்ல்லா போகும் போல தெரியுது..

உங்களோட எச்சரிக்கை தகவல் பலகை இதுக்காகத்தானா..//

ஆமாம் சரவணா... ஆனா இன்னும் நிறைய இருக்கு. இது ஆரம்பம் தான் :)

MSK / Saravana said...

//கதையை தொடர்ந்து படிக்கறவங்க ஒரு பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் :)//

அதெப்படி போடமா இருப்போம்..
;))

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...

கதை நல்லா இருக்கு.. பட் நிஜத்தில் இது மாதிரி நடக்க கூடாதுன்னு, வேண்டிக்க முடியாது (என்னா எனக்கு கடவுள் நம்பிக்கை கெடையாது).. ஸோ.. நிஜத்தில் இது மாதிரி நடக்க கூடாதுன்னு ஆசைபடறேன்..
:)//

நான் வேண்டிக்கறேன் :)

MSK / Saravana said...

//ஆமாம் சரவணா... ஆனா இன்னும் நிறைய இருக்கு. இது ஆரம்பம் தான் :)//

இதுவே ஆரம்பமா.???

இவன் said...

நான் தொடர்ந்து படிக்கிறேன்....

வெட்டிப்பயல் said...

//Saravana Kumar MSK said...

//கதையை தொடர்ந்து படிக்கறவங்க ஒரு பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் :)//

அதெப்படி போடமா இருப்போம்..
;))//

நேத்துதான் தலைவர் டுபுக்கு தொடர்ந்து படிக்கறேனு சொன்னாரு. அதான் யார் யார் எல்லாம் தொடர்ந்து படிக்கறாங்கனு தெரிஞ்சிக்கலாம்னு ஒரு ஆர்வம் :)

நீங்க தான் தொடர்ந்து பின்னூட்டம் போட்டு என்னை எழுதவே உற்சாகப்படுத்தறீங்களே :)

வெட்டிப்பயல் said...

// Saravana Kumar MSK said...

//ஆமாம் சரவணா... ஆனா இன்னும் நிறைய இருக்கு. இது ஆரம்பம் தான் :)//

இதுவே ஆரம்பமா.???//

அதாவது Adult Content ஆரம்பம். கதை Climax நோக்கி தான் போயிட்டு இருக்கு :)

வெட்டிப்பயல் said...

//இவன் said...

நான் தொடர்ந்து படிக்கிறேன்....//

மிக்க நன்றி இவன் :)

இவன் said...

கலக்கல் கலக்கல் அடுத்தது எப்போ??

வெட்டிப்பயல் said...

//இவன் said...

கலக்கல் கலக்கல் அடுத்தது எப்போ??//

மிக்க நன்றி இவன் :)

நாளைக்கு :)

யாத்ரீகன் said...

Me too here balaji :-D .. waiting for the excited turning point(s)..

Sridhar Narayanan said...

நமக்கு ஒரு அட்டென்டன்ஸ் போட்டுக்குங்க.

நான் தொடர்ந்து படிச்சிகிட்டு வந்தாலும் பின்னூட்டம் போடலை இதுவரைக்கும். என்ன ஒவ்வொருவாட்டியும் 100-150 பின்னூட்டம்னு உங்க போஸ்ட் காமிக்குது. நாமெல்லாம் போட்ட கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி இருக்கும்னு ஓரமா நின்னு வேடிக்கைப் பாக்குறதுதான் :-))))

திவாண்ணா said...

present!

Anonymous said...

Hi,
Vetti, its going nice
let it only be in story, this is my wish
Deepak
(I read regularly , silent reader)

Unknown said...

I am reading it regularly Vetti...

Anonymous said...

ஆடு புலி ஆட்டம் என்றதும் ஏதோ ஹீரோவும் நித்யாவும் என்று நினைத்தால் அப்படி போகிறதா? தொடர்ந்து வாசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. எழுதுங்கள்.

Anonymous said...

தொடர்ந்து படிக்கிறேன்.

Ramya Ramani said...

OMG இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!!

Basically பொண்ணுங்களும்,
பசங்களும் வேலைக்காக இப்படி செய்ய வேண்டாம்..அதை பயன்படுத்தி இவங்களும் இப்படி செய்ய வழி வகுக்கவேண்டாம்..

ஒரு பொண்ணு இவரோட பேச்சு கேக்கலேன்னா இப்படியா?? Sadistic Characters..

Syam said...

me too... :-)

வெட்டிப்பயல் said...

//யாத்ரீகன் said...

Me too here balaji :-D .. waiting for the excited turning point(s)..//

மிக்க நன்றி யாத்ரீகன்... முடிந்த வரை நல்ல முறையில் எழுத முயற்சி செய்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//ஸ்ரீதர் நாராயணன் said...

நமக்கு ஒரு அட்டென்டன்ஸ் போட்டுக்குங்க.

நான் தொடர்ந்து படிச்சிகிட்டு வந்தாலும் பின்னூட்டம் போடலை இதுவரைக்கும். என்ன ஒவ்வொருவாட்டியும் 100-150 பின்னூட்டம்னு உங்க போஸ்ட் காமிக்குது. நாமெல்லாம் போட்ட கடல்ல கரைச்ச பெருங்காயம் மாதிரி இருக்கும்னு ஓரமா நின்னு வேடிக்கைப் பாக்குறதுதான் :-))))//

ஆஹா... நீங்களும் படிக்கறீங்களா தல...

இந்த கதைக்கு எல்லாம் அதிகமா பின்னூட்டம் வரதில்லை. அது பரவாயில்லை. யார் யார் படிக்கறீங்கனு தெரிஞ்சிக்கலாம்னு ஆசை :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

present!//

நன்றி திவா :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Hi,
Vetti, its going nice
let it only be in story, this is my wish
Deepak
(I read regularly , silent reader)//

நன்றி தீபக்...

கதையாக மட்டுமிருக்க நானும் ஆசைப்படறேன் :)

வெட்டிப்பயல் said...

// Raja said...

I am reading it regularly Vetti...//

Thanks a lot Raja :)

வெட்டிப்பயல் said...

// Sathananthan said...

ஆடு புலி ஆட்டம் என்றதும் ஏதோ ஹீரோவும் நித்யாவும் என்று நினைத்தால் அப்படி போகிறதா? தொடர்ந்து வாசிக்கிறோம். நன்றாக இருக்கிறது. எழுதுங்கள்.//

Sathananthan,
மிக்க நன்றி :)

வெட்டிப்பயல் said...

//ஈஜிபுரா அனானி said...

தொடர்ந்து படிக்கிறேன்.//

மிக்க நன்றி ஈஜிபுரா அனானி :)

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

OMG இப்படியெல்லாம் கூடவா நடக்கும்!!

Basically பொண்ணுங்களும்,
பசங்களும் வேலைக்காக இப்படி செய்ய வேண்டாம்..அதை பயன்படுத்தி இவங்களும் இப்படி செய்ய வழி வகுக்கவேண்டாம்..

ஒரு பொண்ணு இவரோட பேச்சு கேக்கலேன்னா இப்படியா?? Sadistic Characters..//

அவன் Sadist தான்மா... என்ன பண்ண? தப்பை தப்பு மூலமா சரி பண்ணலாம்னு நினைக்கும் போது இப்படித்தான் சில தவறுகள் ஏற்படும் :(

வெட்டிப்பயல் said...

// Syam said...

me too... :-)//

மிக்க நன்றி நாட்ஸ் :)

விஜய் ஆனந்த் said...

உள்ளேன் ஐயா...

சிநேகிதன்.. said...

me me me:)

விஜய் ஆனந்த் said...

கதை புதுப்புது கதாபாத்திரங்கள்,திருப்புமுனைகளோட கலக்கலா போயிட்டிருக்கு...

ஆனா, நித்யாவ பாத்து ரொம்ப நாளாச்சே...நேரா க்ளைமாக்ஸ்தானா??? அப்பப்ப நடுவால ரொமான்ஸு, காமெடியெல்லாம் சேத்து வுடுங்களேன்!!!(வாசகன் விருப்பம்...)

பாபு said...

நானும் தொடர்ந்து படிக்கிறேன்,
கதை நன்றாக போகிறது,வாழ்த்துக்கள்

Anonymous said...

Unga kadhaya thodarndhu padikaradhula naanum oruthi...kadhai romba viruvirupa poittu irukku..unga ezhuthu nadayum kadhai solra vidhamum romba nalla irukku..

A said...

கதை நல்லா போயிட்டுருக்கு. தொடர்ந்து படிச்சிட்டு இருக்கேன்.

ஜெகதீசன் said...

நானும் தொடர்ந்து படிக்கிறேன்...
:)

Unknown said...

நானும் தொடர்ந்து படிக்கிறேன்,
கதை நன்றாக போகிறது,வாழ்த்துக்கள்

Anonymous said...

present saar...ella episode-um padichahu...total evolo episode plan panni irukeenga?

Vaandu said...

Very intersting Balaji; infact an eye-opener. Keep going

mgnithi said...

Annathe.. Naanum undu...

Mathi said...

நானும் தொடர்ந்து படிக்கிறேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

அட்டெண்டன்ஸ் போட்ருங்க!
ஏன் நித்யாவ ஓரங்கட்ட்டீங்க?

Divyapriya said...

Present sir :))

கதை படி பயங்கரமா போகுது, இப்படியே தினமும் மறக்காம ஒரு பார்ட் போட்டுடுங்க, இல்லன்னா சஸ்பென்ஸ் தாங்காது...

Anonymous said...

உங்களது தொடரை தொடர்ந்தது படிப்பவர்களில் நானும் ஒருவர். வெட்டிப்பயலில் உள்ள பதிவுகள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன். உங்களது எழுத்து நடையின் மூலம் அனைவரையும் கவர்ந்துவிட்டீர்கள். மேலும் நன்றாக எழுத வாழ்த்துக்கள்!!!

மலர்

மங்களூர் சிவா said...

/
வெட்டிப்பயல் said...
யார் யார் எல்லாம் தொடர்ந்து படிக்கறீங்கனு தெரிஞ்சிக்கறதுக்கு கொஞ்சம் ஆவலா இருக்கேன்... கதையை தொடர்ந்து படிக்கறவங்க ஒரு பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் :)
/

அண்ணே நான் படிக்கிறேன்!

மங்களூர் சிவா said...

கொஞ்சம் திகில் நிறைய விறுவிறுப்பு. நடக்கட்டும் ஆடு புலியாட்டம்.

manikandan said...

:))--

Anonymous said...

//இவன் said...
நான் தொடர்ந்து படிக்கிறேன்....
//

Repeateeeeyyyyyyyyyyy

http://urupudaathathu.blogspot.com/ said...

நானும் ஆட்டையில இருக்கேன் ....

Anonymous said...

//
/
வெட்டிப்பயல் said...
யார் யார் எல்லாம் தொடர்ந்து படிக்கறீங்கனு தெரிஞ்சிக்கறதுக்கு கொஞ்சம் ஆவலா இருக்கேன்... கதையை தொடர்ந்து படிக்கறவங்க ஒரு பின்னூட்டம் போட்டா நல்லா இருக்கும் :)
/

அண்ணே நான் படிக்கிறேன்!//

Repeateeeeeeeeiiiiiiiiiiiiiiii

Vijay said...

கலக்கறீங்க. நானும் படிக்கறேன் :)

ப்ரசன்னா said...

நானும் படிக்கிறேன். சூப்பரா போயிட்டு இருக்கு.

ஜியா said...

kai nanachaachi :)))

Anonymous said...

ullaen aiya...ithu maadiri nejathula nadakamma irukka vendukiraen!!!

Anonymous said...

நானும் படிக்கறேங்க....

நல்லா இருக்கு.Kathir.

Romeoboy said...

நான் படிக்குறேன் ... ஒரு டவுட் இப்ப கதைல யாரு பேசுறது தான் புரியல, :( 14th and 15th எபிசொட் தான் கொஞ்சம் குழப்புது .

Divya said...

உள்ளேன் ஐயா:))

[Sorry for the late attendance]

நாடோடி said...

ஆஜர் சாரே...
வாரயிருதியில ரெண்டு, மூனு பகுதிகள சேர்த்து படிச்சிட்டு இருக்கேன்..
தொடர்ந்து படிக்கிறதுல விறுவிறுப்பு அதிகமா இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங்! :)

தமிழினி..... said...

வேட்டையாடு விளையாடு படம் பார்குற எபெக்ட்..தொடர்ந்து எழுதுங்க...

Anonymous said...

Me too reading :)

Arunkumar said...

naan padikkiren :)