தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, March 28, 2007

கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள்

ஒரு சில விஷயங்களை ரொம்ப நாள் மறைக்க முடியாது... எப்படியும் உண்மை வெளிய வந்துடும்.

கொல்ட்டி - நான் முதல்ல எழுதுன கதை இது தான். அது எல்லாருக்கும் பிடிச்சி போனதுக்கான காரணம் என்னனு ஈஸியா சொல்லிடலாம். ஏன்னா அது நீங்க நினைக்கிற மாதிரி கதையல்ல... ஆமாம் அது நிஜமாக நடந்ததுதான்.

இத ஒரு சிலர் கண்டு பிடிச்சிருப்பீங்க. ஆனா இதுல நீங்க கண்டுபிடிக்காத ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இது உங்க எல்லாருக்கும் ஆச்சரியமாக்கூட இருக்கலாம். ஆனா இது தான் உண்மை... இளகிய மனசு இருக்கவங்க இதுக்கு மேல படிக்காதீங்க. நான் சீரியஸா சொல்றேன்.

கதை தெரியாதவங்க அதை ஒரு தடவை படிச்சிடுங்க
. இல்லைனா இது புரியாது...

கதைல நாயகன் தெலுகு எழுத படிக்க கத்துக்கறான். அதுக்கப்பறம் என்ன ஆகறான்? நீங்க எல்லாம் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. அவன் தெலுகு படம் பார்த்து தமிழ்ல ரிவியூ எழுதறானு. ஆனா அது தான் இல்லை. ஏன் யாரும் அவுட் ஆப்ஃ தி பாக்ஸ் திங் பண்ண மாட்றீங்க???

Sometimes Truth Really is Stranger Than Fiction

ஏன் அந்த பையன் தெலுகு பையனா இருந்து அந்த பொண்ணு தமிழ் பொண்ணா இருந்திருக்ககூடாது. அந்த பையன் ஏன் தமிழ் எழுத, படிக்க கத்திருந்திருக்கூடாது. ஏன் அந்த பையனே தமிழ்ல ப்ளாக் ஆரம்பிச்சி உங்க கூட ஒருத்தனா எழுதிட்டு இருக்க கூடாது?

ஆமாம். அது தான் உண்மை.

நான் தமிழ் எழுத படிக்க கத்துக்கிட்டு ரெண்டு வருஷம் கூட ஆகலை.

ஒரு பதினெட்டு மாசம் தான் இருக்கும். அவள் (பேர் வேண்டாமே) என்னைவிட்டு போனாலும் அவள் பேசிய அந்த மொழியை மறக்க கூடாது என்று பல வகைகளில் கற்று கொள்ள ஆரம்பித்தேன். அந்த ஆர்வத்தில் தான் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமும். எழுத்து கூட்டி படிப்பதற்குள் பல மணி நேரமாகியது.

என் ரூமேட் தனா தமிழ் தெரிந்த பையன். அவன் தான் எனக்கு ஓரளவு எழுத்து பிழையில்லாமல் அடிக்க சொல்லி கொடுத்தான். நான் முதலில் பெங்களூரிலிருக்கும் போது பேப்பரில் எழுதுவேன். அந்த கையெழுத்து எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்பது நான் சொல்லி தெரிய தேவையில்லை. ஒரு வேளை நான் கைப்பட எழுதியிருந்தால் கண்டுபிடித்திருப்பீர்கள்.

பல நேரங்களில் நான் தவறு செய்வது "ள/ல", "ற/ர", "ண/ன" வில் தான். அதை முதலில் அவன் ஒரு முறை படித்து திருத்துவான். பிறகு அருமை தம்பி கப்பி ஒரு முறை பார்ப்பார். இதற்கு பிறகே பதிவிடுவேன். அப்படியும் சில சமயங்களில் எழுத்து பிழை இருந்துவிடும். இருந்தாலும் இன்று வரை யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை. (லகுட பாண்டிகளா! எழுத்து பிழையை சொல்லவில்லை... நான் ஆந்திரா என்பதை)

என் ப்ளாகை அவள் ஒரு முறையாவது பார்த்திருப்பாளா என்று தெரியவில்லை. பல நேரங்களில் நான் எழுதியது ஃபார்வேர்டில் வரும் போது அது அவள் படித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்து சந்தோஷ(வருத்த)ப்பட்டிருக்கிறேன். சர்வேசன் அவர்களின் சிறந்த வலைப்பதிவர் விருது வாங்கிய அன்றே அனைவரிடமும் சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனா எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாமே என்று விட்டுவிட்டேன்.

இப்ப உங்களிடம் மறைப்பது மனதிற்கு கஷ்டமாக இருப்பதால் உண்மையை சொல்லிவிட்டேன். இதை தமிழ் மணத்தில் எந்த பிரிவில் சேர்ப்பது? சோகம் என்று ஒரு பிரிவிருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனி என் கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்...


பி.கு: இதை நீங்கள் நம்புவதை பொறுத்தே என் வருங்காலம் பற்றிய முக்கிய தீர்மானமிருக்கும். இதையும் நீங்க உண்மைனு நினைச்சா நான் அடுத்து அரசியல்ல இறங்கலாம்னு இருக்கேன். எத சொன்னாலும் நம்பறாங்கடா இவுங்க ரொம்பஅஅஅ நல்லவங்கடா...

Tuesday, March 20, 2007

விசித்திர குப்தன்

என்ன கொடுமை சரவணன்??? என்னைய பார்த்து உங்கிட்ட இருக்கிற 5 விசித்திரமான குணம் என்னனு சொல்ல சொல்லிருக்கான் நம்ம பாசக்கார பையன் "ஜி". இதுக்கு முன்னாடி 9 விசித்திரமான குணங்களை சொல்ல சொல்லிருந்தாரு பாபா. அதுக்கே என்ன எழுதறதுனு தெரியாம எஸ்ஸாயிட்டேன். அவரும் பெருந்தன்மையா சின்ன பையன்னு விட்டுட்டாரு. சரி இப்ப ரெண்டு பேருக்காகவும் சேர்ந்து எழுதிடலாம்...

ஏற்கனவே நான் ப்ளாக் படிச்சிட்டு சிரிக்கறதை பார்த்த என் புது ரூமேட் என்னை விசித்திரமாத்தான் பாக்கறாரு. சரி இருந்தாலும் சொல்றேன்...

1. ராமாயணம், மகாபாரதம் - இந்த கதைகள் ஓரளவுக்கு தெரியும். அதனால எங்க வீட்ல இருக்கற பெரியவங்களுக்கு (எங்க பாட்டி, எங்க அக்கா மாமியார்) எல்லாருக்கும் நல்லா கதை சொல்லுவேன். நான் சொல்றதை கேட்க கேட்க அவுங்களுக்கு அப்படியே ஆனந்தமா இருக்கும். அதுல நிறைய நீதிய வேற சொல்லுவேன். கடைசில சொல்லி முடிச்சிட்டு இதெல்லாம் வெறும் கதை தான். உண்மையா நடக்கல. அதே மாதிரி இது ஒரு ஆள் எழுதின கதையில்லை. பல வருடங்களாக சொல்லப்பட்ட கதைகள். அதனால தான் ஓரளவுக்கு எல்லா பாத்திரங்களோட வெற்றி தோல்விக்கும் சரியான காரணங்கள் இருக்குனு சொல்லிடுவேன். அவுங்களுக்கு இதுக்கு இவன் சொல்லமலே இருந்திருக்கலாம்னு தோனும்.

2. கோவில் - நான் கோவிலுக்கு போகும் போது அங்க கூட்டமே இருக்கக்கூடாதுனு நினைப்பேன். விசேஷ நாட்களில் கோவிலுக்கு போவது சுத்தமாக பிடிக்காது. கோவில்ல நான் மட்டும் தனியா இருந்தா போதும்னு தான் ஆசைப்படுவேன். அதே மாதிரி கோவில்ல எவ்வளவு நெருக்கமானவர்களை பார்த்தாலும் பேச பிடிக்காது. ஆனா நிறைய பேர் அங்க தான் வந்து பாசமா பேசுவாங்க.

3. மதிப்பெண் - மார்க்குக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுக்காத மாதிரி இருந்தாலும், லேப்ல 90க்கு கீழ போட அனுமதிக்கவே மாட்டேன். அனுமதிக்க மாட்டேனா மார்க் ஷீட்டை புடுங்கிக்குவன்னு இல்லை. அந்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணனும்னு ஆசைப்பட்டு செய்வேன். ஆனா தியரிக்கு படிக்க மாட்டேன். அதே மாதிரி ப்ராப்ளமேட்டிக் சப்ஜக்டா இருந்தா அதுல க்ளாஸ்ல முதல் மார்க் வரணும்னு படிப்பேன். தியரில மார்க் எடுக்கறது எல்லாராலையும் முடியும் ஆனா திறமை இருக்கவன் மட்டும் தான் ப்ராப்ளமாட்டிக் சப்ஜக்ட்ளையும், லேப்லயும் (சோப்பு போடாம) மார்க் வாங்க முடியும்னு ஒரு நினைப்புல திரியுவேன்.

4. சோம்பேறி - என் அளவுக்கு யாராவது இருப்பாங்களானு தெரியல. காலேஜ்ல சேர்ந்த புதுசுல காலேஜ் முடிஞ்சி வந்து 5 மணிக்கு படுத்து அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு எழுந்த நாட்கள் ஏராளம். இப்பவும் சனி, ஞாயிரெல்லாம் 1 மணிக்குத்தான் எழுந்திரிப்பேன். சாப்பிட சோம்பேறித்தனப்பட்டு சாப்பிடாம இருந்த நாட்கள் எல்லாம் உண்டு.

5. சினிமா - பிடித்த படங்களை எத்தனை முறை போட்டாலும் பார்ப்பேன். குறிப்பா பழைய படங்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி மூணு பேரையும் ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி ரஜினி, கமல் படங்களும் ரொம்ப பிடிக்கும். பாட்ஷா படத்தை 100 முறைக்கு மேல பார்த்திருப்பேன். இப்ப போட்டாலும் முதல் தடவை பார்க்குற மாதிரி பார்ப்பேன். இதுக்கு தான் வீட்ல திட்டு விழும். பார்த்த படத்தையே எத்தனை தடவை பார்ப்பனு. பாட்டு கேக்க மாட்டேன். காமெடி சீன் எத்தனை தடவை போட்டாலும் பார்ப்பேன். காமெடி ரொம்ப பிடிக்கும்.

6. பொறுப்பு - ரொம்ப பொறுப்பான பிள்ளை மாதிரி திரியுவேன். பெங்களூர்ல இருக்கற வரைக்கும் ரூம்ல அக்கவுண்ட் எல்லாம் நான் தான் பார்த்துக்குவேன். அதே மாதிரி தினமும் ரூம்ல சமைக்கிறது எல்லாமே என்னை கேட்டுதான் நடக்கும். என்னைவிட பொறுப்பானவங்க இருந்தா நான் எந்த பொறுப்பையும் ஏத்துக்க மாட்டேன். அதே மாதிரி எனக்கு கொடுத்த பொறுப்புல யாரும் தலையிட்டாலும் பிடிக்காது.
யாராவது அவுங்க கஷ்டத்தை சொன்னா அவுங்களைவிட அந்த பிரச்சைனையை தீர்க்க நான் அதிகம் சிந்திப்பேன், முயற்சி செய்வேன். இதுவே பல நேரங்களில் பிரச்சனையாகிவிடும். ரூம்ல வேலை தேடறவங்க யாராவது படிக்கலைனா பயங்கரமா திட்டுவேன். கூப்பிட்டு வெச்சி தனியா பயங்கரமா அட்வைஸ் பண்ணுவேன். பூச்சாண்டி வராங்கற ரேஞ்ச்ல பாலாஜி வரானு சில சமயம் ரூம்ல வேலை தேடறவங்களை பயமுறுத்துற சம்பவங்களும் நடந்திருக்கு. இப்பவும் சில சமயம் பசங்களுக்கு வேலை தேடறதுக்கு எது படிக்கனும்னு போன் பண்ணி சொல்லுவேன். அவங்க மனசுல திட்னாலும் திட்டுவானுங்க. இருந்தாலும் கவலைப்பட மாட்டேன்.

7. ராகு காலம் - கடலூர்ல ஹாஸ்டல்ல சேர்ந்தப்ப, ஒவ்வொரு வாரமும் உடம்பு சரியில்லாம போயிடும். ஒரே காரணம் டான்சில்ஸ் தான். ஆனா ஞாயித்தி கிழமை ராகு காலத்துல போறதாலதான் உடம்பு சரியில்லாம போயிடுதுன்னு வீட்ல சொல்லி சொல்லி எதை செஞ்சாலும் ராகு காலம் பார்த்து செய்ய ஆரம்பிச்சிட்டேன். ஆனா பாருங்க எங்க காலேஜ் எல்லா செமெஸ்டரும் ராகு காலத்துல தான் ஆரம்பிப்பானுங்க. இதனால தான் எனக்கு சரியா மார்க் வர மாட்டிங்குதுனு வீட்ல கதை விடுவேன். கொஞ்சம் செண்டிமெண்ட் பார்ப்பேன்.

8. காபி - எனக்கு காபி ரொம்ப பிடிக்கும். ஆனா அது இப்படித்தான் இருக்கனும்னு ஒரு ரூல்ஸ் இருக்கு. பால்ல தண்ணி ஊத்த கூடாது. நல்ல ஸ்ட்ராங்க இருக்கனும். சக்கரை அதிகமா இருக்கக்கூடாது. காபினா கொஞ்சம் கசக்கனும். கோவை அண்ணபூர்ணால காப்பி குடிச்சிருக்கீங்களா??? அந்த மாதிரினு வெச்சிக்கோங்க.

9. மொக்கை - ஓவரா மொக்கை போடுவேன். ஹாஸ்டல்ல எவனுக்கு போர் அடிச்சாலும் எங்க ரூம்ல எங்கிட்ட பேச வந்திடுவானுங்க. பரிட்ச சமயம்னா எவனும் ரூம் பக்கமே வரமாட்டானுங்க. என் ரூமேட்ஸ் கூட வேற ரூமுக்கு ஓடிடுவானுங்க. அப்பறம் வேற வழியில்லாம ரூமுக்கு வெளிய டேபிலும் சேரும் எடுத்து போட்டு போற வரவன வம்புக்கு எழுத்துட்டு இருப்பேன்.

சரி அடுத்த 5 பேரை கூப்பிடனுமாம். நான் கூப்பிடறேன். நீங்க எழுதிருந்தா ஃபிரியா விடுங்க. இல்லைனா கண்டிப்பா எழுதுங்க...

1. கப்பி
2. தம்பி
3. ஜொள்ளு பாண்டி
4. KRS
5. செந்தழல் ரவி

Tuesday, March 13, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - நட்சத்திர பதிவர் தம்பி

என் அருமை மகா ஜனங்களே!!! வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சரி என்ன பண்றது. நம்ம கூட வளர்ந்த பசங்க. பொழைச்சிட்டு போகட்டும்.

எத்தனை நாள் தான் இந்த சினிமாக்காரவங்களையே கூப்பிடறது. கொஞ்சம் வித்யாசமா இந்த நிகழ்ச்சில வேற மீடியால இருக்கற ஆள கூப்பிட போறோம். இண்டர்நெட்ல ஓசில கிடக்குதுனு கண்டத எழுதற பசங்க கூட்டம் ஒண்ணு இருக்கு. அதுல இருந்து இன்னைக்கு ஒருத்தன கூப்பிட்டுருக்கோம். Its none other than our star blogger "Thambi"

க: வாங்க உமா கதிர்... உங்க ப்ளாகுக்கு எதுக்குங்க தம்பினு பேர் வெச்சிருக்கீங்க???

த: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!

க: டேய்! வெறும் "ம்"னு சொன்னாக்கூடத்தான் உதடு ஒட்டப்போகுது. அப்ப அதை வைக்க வேண்டியதுதானே? சரி இப்ப உதடு ஒட்றதால என்னத்த பெருசா ஆகப்போகுது? சொல்லு மேன்...

த: இல்லைங்க எல்லா பஸ்லையும் இந்த உதடு ஒட்டறத பத்தி ஒரு திருக்குறள் இருக்கும். அதையே நம்மளும் யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்...

க: ஓ நோ!!! அது என்ன மேன் திருக்குறள். உதடு ஒட்றத பத்தி

த: நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்னு ஒரு திருக்குறள் எல்லா பஸ்லயும் இருக்கும்.

க: டேய் கரும்புக்காடு மண்டையா அது திருக்குறள் இல்லைடா. கலைஞர் சொன்னது. இதுக்கு தான் திருக்குறள் எழுதுன எடத்துல எல்லாம் ஃபிரியாத்தான இருக்குனு கண்டத எழுத வேணாம்னு சொன்னா அவரு கேட்டாரா? இப்ப பாரு இதையே திருக்குறள்னு நினைச்சி சுத்திட்டு இருக்கு ஒரு கூட்டம். அது சரி நீ எதப்பத்தி எல்லாம் எழுதுவ?

த: மக்கள் சிந்திச்சி செயல்பட்டு சமுதாயம் பயனடைய பல கட்டுரை எழுதிருக்கேங்கண்ணா...

க: டேய்!!! தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?னு பதிவு போட்டது நீ தானே?

த: ஆமாங்கண்ணா!

க: ஏனுங்க ஆப்பிசர் அப்படி இதுல என்ன பெருசா சமுதாயத்துக்கு எழுதிட்டீங்கணு நாங்க தெரிஞ்சிக்கலாமா? கவர்மெண்ட் அவ்வளவு செலவு பண்ணி கக்கூஸ் கட்டி வெச்சா அதுல போகாம தண்டவாளத்துல போயிருக்க. அதுல எதுக்கு மேன் இப்படி பண்ண?

த: இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...

க: அடேய் கதிரு மண்டையா, அவனவன் செவ்வாய்க்கு சேட்டிலைட் அனுப்பலாமா புதனுக்கு அனுப்புலாமானு ஆராய்ச்சி பண்ணா நீ என்னடானா தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா ட்ரெயின் வழுக்கி விழுமானு ஆராய்ச்சி பண்ணிருக்க. உன்னைய என்ன பண்ணலாம் நீயே சொல்லு.

த: அண்ணே அதை விடுங்க. நான் அது இல்லாம நிறைய சமுதாயத்துக்கு பயனுள்ளத எழுதியிருக்கேன்.

க: எது மேன் அந்த ரஸ்னால கழுவுன மேட்டரா?

த: ஓ நீங்க அதை படிச்சிட்டீங்களா?

க: டேய் அதை படிச்சதுல இருந்து நான் ரஸ்னாவே குடிக்கறதில்லடா. அப்படி அவனுங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணாங்க?

த: அதுவா... நான் சின்ன வயசுல இருக்கும் போது நாயர் கடைல ரஸ்னா வித்தாங்க. அதை கேட்டா கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு நாயரு. அதனால தான்....

க: டேய் சும்மா கேட்டா எவண்டா கொடுப்பான். அதுக்கு காசு கொடுக்கனும்டா. உங்கள மாதிரி நாலு பேர் இருந்தா போதும்டா. ஒரு பேக்டரியவே இழுத்து மூட வெச்சிடுவீங்கடா. ஆமாம் இந்த இங்கிலிஷ் படத்துக்கெல்லாம் ரிவியூ எழுதறயாமே. நிஜமாலுமே நீ படம் பார்த்து பிடிச்சி போய் தான் எழுதறியா?

த: என்னணே சின்ன புள்ளத்தனமா கேக்கறீங்க. பதிவு போட மேட்டரில்லைனா அப்படியே ஒரு படம் பார்த்து அத பத்தி எழுதிட வேண்டியதுதான்.

க: ஓ இதுதான் மேட்டரா? அப்பறம் கண்ணு.. கவித கவிதனு ஏதோ எழுதறயாமே. ஏன் இந்த விபரீத ஆசையெல்லாம். மக்கள் பாவமில்லையா?

த: போங்கண்ணே. உங்களுக்கு எப்பவுமே குறும்பு தான்.

க: இந்த அண்ணே நொண்ணே எல்லாம் வேணாம். அப்பறம் ஸ்டாராகரவங்க எல்லாம் ஏதோ லக்ல ஆகறாங்கனு சொன்னியாமே...

த: அண்ணே! நான் அப்படியெல்லாம் சொல்லலைங்கண்ணா. அந்த மாதிரி ஆனவங்களை அந்த வாரத்துல கவனிக்கும் போது தான் அவுங்க திறமை நிறைய தெரியுதுனு சொன்னென். அதை யாரோ தப்பா சொல்லிட்டாங்கண்ணா...

க: சரி பொழைச்சி போ. அப்பறம் அது என்ன "வயது: மூணே முக்கால் கழுதை வயசு." னு போட்டுருக்க? ஒரு கழுதை வயசு என்னனு தெரியுமா மேன் உனக்கு? 30ல இருந்து 50 வயசு வரைக்கும் ஒரு கழுதை உயிர் வாழும். மினிமம் 30னு வெச்சிக்கிட்டாக்கூட 100க்கு மேல வருது. அப்ப உன் உண்மையான வயசு என்ன மேன்? இந்த போட்டோ 80 வருஷத்துக்கு முன்னால எடுத்ததா??? ஏன்டா இப்படி ஊரை ஏமாத்தறீங்க?

த: அண்ணே! ஏழரை கழுதை வயசுனு எல்லாம் சொல்வாங்க. சரி யங்கா இருக்கலாம்னு அதுல பாதிய போட்டேன். இப்படி கோக்குமாக்கா நீங்க கேப்பீங்கனு நான் எதிர் பார்க்கலைங்க.

க: அப்படி தான்டா கேப்போம். இப்படி புத்திசாலித்தனமா சொல்றோம்னு நினைச்சி பதில் சொன்னா வேற என்ன பண்ணுவாங்க? திருந்துங்கடா.

த: சரிங்கண்ணே... நான் கிளம்பலாமா?

க: இருடி செல்லம். இன்னும் ஒரே ஒரு கேள்வி தான் பாக்கி.
வாசிப்பு அனுபவம்: எங்க ஊரு நூலகர் அங்கமுத்து சக்கரை இன்னமும்
என்னை தேடிட்டு இருக்காராம். எடுத்த புத்தகத்தை திருப்பி குடுத்தாதானே.

லைப்ரரில இருந்த புக்க திருடி, அதை வித்து கமரக்கட் வாங்கி சாப்பிட்டு, ஊரை விட்டு ஓடி வந்துதும் இல்லாம அதை பெருமையா வேற பேசிட்டு திரியற நீயீ... உன்னைய என்ன பண்ணலாம். நீயே சொல்லு.

த: அண்ணே இனிமே இப்படி புத்திசாலித்தனமா பதில் சொல்லமாட்டேங்க. என்னைய மன்னிச்சிடுங்க... சொல்லிவிட்டு ஜம்ப் பண்ணி ஒடுகிறார் தம்பி.