ஊன் மெய்க்கு பிரதானம்
மைதூனத்தின் விதானம்
சூதானமாய் யோசித்தால்
விடையோ இரண்டு
நிதானமாய் யோசித்தால்
உண்டு விருந்து
இந்த விடுகதையில் தொடரோட முதல் பகுதி ஆரம்பிக்குது. ஊருக்கே தெரியும் இந்த விடுகதையின் விடையில் தான் ஊரே தேடும் பொன்பானை பொதிந்திருக்கும் ரகசியம் இருக்கிறது.
விடாது கருப்பு, மர்ம தேசம் தொடரின் இரண்டாவது தொடர். இது நான் பனிரெண்டாவது படிக்கும் போது வந்தது. அப்ப ஹாஸ்டல்ல இருந்ததால பார்க்க முடியல. ஆனா க்ளைமாக்ஸ் ஏப்ரல்ல வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இந்த நாடகத்தோட க்ளைமாக்ஸ் மட்டும் பார்த்தேன். அப்படி ஒரு க்ளைமாக்ஸ் பார்த்ததுக்கு அப்பறம் அந்த நாடகத்தைப் பார்த்தே தீரணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.
ராஜ் டீவில மறுபடியும் போடும் போதும் பார்க்க முடியல. அப்பறம் இங்க வந்ததுக்கப்பறம் மே லாங் வீக் எண்ட்ல வீட்ல தனியா இருந்தேன். செம போர். அப்ப இண்டர்நெட்ல மேயும் போது இந்த தொடர் முழுதும் rajshri.comல இருந்தது. பார்க்க ஆரம்பித்தேன். மூணு நாள் முழுதும் உட்கார்ந்து எண்பத்தி இரண்டு பகுதியும் பார்த்து முடிச்சிட்டேன். இப்படி ஒரு சீரியல் (வேண்டும்னா சினிமாவையும் சேர்த்துக்கலாம்) என்னை கவர்ந்தது இல்லை. அட்டகாசமான டைரக்ஷன்.
இந்த அளவுக்கு ஒரு மர்மம் நிறைந்த திரைக்கதை தமிழ்ல வந்திருக்குமானு சந்தேகம் தான். சினிமாவைப் பொருத்தவரை மர்மம் நிறைந்த திரைப்படங்கள்னு பார்த்தா அந்த நாள், அதே கண்கள் வேற எதுவும் இருக்கானு சட்டுனு நினைவுக்கு வரல. அதிலும் அதே கண்களை லிஸ்ட்ல சேர்த்துக்க முடியாது. ஏன்னா என்னைப் பொருத்தவரை அத்தனை கதாபாத்திரங்களும் முதலிலே தெளிவாக காட்டப்பட வேண்டும். சடார்னு எங்கயோ இருந்து வர மாதிரி காட்றதுல புத்திசாலித்தனம் இல்லை. அந்த வகைல அந்த நாள் அட்டகாசமான படம்.
விடாது கருப்பு நாடகத்தை அந்த விஷயத்தில் பாராட்ட வேண்டும். அதுவும் அன்றும், இன்றும்னு ஒரே பாகத்துல காட்டினது புத்திசாலித்தனம். அதுவும் அன்றும் முழுக்க முழுக்க ராசுவின் பார்வையில் காட்டப்பட்டிருக்கும். அத்தனை சீன்களிலும் அவன் இருந்திருப்பான்.
கதை இது தான். தொட்டக்கார மங்கலம்னு ஒரு கிராமம். அந்த கிராமத்துல நடக்குற தப்புக்கு எல்லாம் கருப்பு சாமி தண்டனை நிச்சயம் உண்டு. அந்த ஊருக்கு தோழியின் காதலை சேர்த்து வைக்க வரும் ஒரு டாக்டர் கம் எழுத்தாளர், அந்த கருப்பு நிச்சயம் கடவுள் அல்ல, மனிதன் தான் என நிருபிக்க முயலுவது தான் கதை. ஆனா கடைசில நாடகம் முடிந்த பிறகும் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியின் இயக்கமா என யோசிக்க வைப்பது கதாசிரியரின் புத்திசாலித்தனம்.
இந்த கதைக்குள்ளே பல கதைகள், ஊரையே ஏமாற்றி நகைகளை புதைத்து வைத்து செத்துப் போகும் பேச்சிக் கிழவி, வாலிப வயதில் பல பாவங்களை செய்து கருப்புவினால் கையை இழுந்து அதற்கு பிறகு எப்பொழுதும் பேசாத கட்டயன், பொன் பானையைத் தேடும் ஆனைமுடியான் (ஆண்மை உடையார்), கருப்பு தான் கண் கண்ட தெய்வம் என நம்பும் ஆனைமுடியான் மனைவி,
சின்ன வயதிலிருந்தே பேச்சிக்கிழவி, கட்டயன் செய்யும் பாவங்களைப் பார்த்து வளரும் ராசு, திருடனாய் இருந்து திருந்தி, தான் திருடிய நகைகளை அதை சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்க துடிக்கும் பிரம்மன், இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க துடிக்கும் ரீனா, இந்த உலகில் தன்னுடைய பங்கு என்ன என தெரிந்து கொள்ள பித்து பிடித்து அலையும் டாக்டர் நந்தா, ஊரையும், ஆனைமுடியான் குடும்பத்தையும் ஆட்டிப் படைக்கும் பூசாரி. இப்படி அட்டகாசமாக படைக்கப் பட்டிருக்கும் பாத்திரங்கள்.
எண்பத்தி ஓராவது பாகம் முடியும் போது இது மனிதனின் செயல் தான் என புரிந்து கொள்ளும் நாம், கடைசிப் பகுதியைப் பார்த்ததும், இது நிஜமாலுமே மனிதனின் செயலா என சிந்திக்க துவங்கிவிடுவோம். அது தான் கதையின் வெற்றி. அதே போல் இது மனிதனின் செயலா அல்லது நம்மை மீறிய சக்தியா என ஆராய்ச்சியை செய்யாமலே இருந்திருக்கலாம் என்றும் தோன்ற ஆரம்பித்தது.
என்னைப் பொருத்தவரை நாடகத்தின் பலமே அன்று பகுதியில் வரும் பேச்சிக்கிழவி, ராசு, கட்டயன் தான். அதுவும் பேச்சிக்கிழவியும் ராசுவும் அட்டகாசமான நடிப்பு. பேச்சிக்கிழவியின் திமிர், இதுவரை நான் பார்த்த வில்லன்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டது போல் தோன்றியது. இவ்வளவு சாமார்த்தியமான கிழவியை (பாத்திரத்தை) இதுவரையில் பார்த்தே இல்லைனு கூட சொல்லலாம். பின்னாடி இந்த கிழவியை அசுரினு சொல்லும் போது, அது எந்த விதத்திலும் குறைவு இல்லைனு தான் தோணும். கருப்பு நிச்சயமா மனுஷன் தான் பின்னாடி ரீனா நம்பறதை விட, கிராமத்திலே இருந்து கருப்பு மனுஷன் தானு அந்த பாட்டி அத்தனை வருஷத்துக்கு முன்னாடி கண்டுபிடிப்பதே அதோட திறமைக்கு சான்று. அப்பறம் ஊரையே ஆட்டிப்படைக்கும் திருடன் மொக்க மாயனை கொன்று அவன் திருடின நகைகளையே கொள்ளை அடிப்பது, பிரம்மனை போலிஸ்ல பிடித்து கொடுப்பது, நியாயம் கேட்டு வரும் ஊர் மக்களை அக்கு வேறு ஆணி வேறாக பிரிப்பது என துவம்சம் செய்திருக்கும் அந்த பாட்டி பாத்திரம். அதுவும் நியாயம் கேக்க வர ஊர்மக்களை பிரிச்சி மேயறது அட்டகாசமான சீன். பேச்சிக்கிழவி பேசும் போது அந்த வீடே அதிர்வது போல் எதிரோலிப்பது அருமை.
சின்ன வயது ராசுவாக நடித்திருக்கும் மாஸ்டர் லோகேஷ் பத்தி சொல்லலைனா என்னை விடாது கருப்பு. அவ்வளவு அட்டகாசமான நடிப்பு. மொத்த நாடகத்தோட கனத்தையும் தாங்கறது அந்த பாத்திரம் தான். ஒவ்வொரு பாகத்திலும் புதிது புதிதாக ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பான். நல்லவர்கள் கெட்டவர்கள்னு எல்லாருக்குமே அவனைப் பிடிக்கும். அதைப் பார்க்கும் நமக்கும் அவனை நிச்சயம் பிடிக்கும்.
இந்த தொடரைப் பார்க்க விரும்புவர்கள் இங்கே சொடுக்கலாம்.
நாடகம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்கு மேல் படிக்காதீர்கள். Contain spoilers...
நாடகம் பார்த்து முடிக்கும் போது மனம் முழுவதும் சின்ன வயது ராசு தான் நிறைந்து இருந்தான். கண்ணு முன்னாடியே நடக்குற அநியாயத்தைப் பார்த்து தட்டிக் கேட்க முடியாமல் துடித்து, மனம் நொந்து அவனுக்குள் கருப்பு ஒரு ஆல்டராக உருவாகுவது அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று. ஆனா பின்னாடி அவனே தப்பு செய்யும் போது அவனுக்கு கிடைக்கும் தண்டனை ஏனோ மனதை பாதிக்கவே செய்தது.
ராசுவோட பாத்திரத்தை அப்படியே உளி கொண்டு செதுக்கும் சிற்ப கலைஞரைப் போல செதுக்கியிருக்கிறார் இயக்குனர் (கதாசிரியர்). இவனுக்கு மல்டிப்பில் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் வருவதற்கான அத்தனை சாத்தியங்களும் நமக்கு புரிந்திருக்கும். ஆனா கடைசியா அவனுடைய கருப்பு ஆல்டரே அவனுக்கு தண்டனைக் கொடுப்பது பாக்கறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்தது.
அவனுக்கு இப்படி ஒரு மனநோய் வருவதற்கு காரணம் பேச்சிக்கிழவி மட்டுமல்ல, அவனுடைய அம்மாவும் தான். கருப்பு மேல் அவள் வைத்திருக்கும் தீவிர நம்பிக்கையும் ஒரு வகையில் காரணம் தான். இல்லைனா அவனுக்கும் நம்பிக்கை இருந்திருக்காது. அவனும் அந்த பாட்டியுடன் சேர்ந்திருப்பான். அதே போல கிழவியின் மரணத்திற்கு பிறகு அவளுடைய நம்பிக்கையால் தான் குடும்பமே அந்த பூசாரியின் பேச்சுக்கு அடிமையாகி இருக்கும். இப்படி பல விஷயங்கள் மனதில் ஓடின.
அதே மாதிரி ரீனா அவளுடைய வாழ்க்கையில் நடந்த துன்பத்தை வைத்து இந்த கிராமத்தில் நடக்கும் விஷயங்களை அளந்தது தவறு. அவள் அமைதியாக ஊரை விட்டு போயிருந்தாலும் ராசுவின் மரணம் தவிர்க்க பட்டிருக்கும். எது எப்படியோ, சந்திரமுகி, அந்நியனை விட இது சிறந்த திரைக்கதை அமைப்பு கொண்டது. நாகா, இந்த தொடரை இயக்கியதற்காக பெருமை கொள்ளலாம்.
மின்பிம்பங்கள் இந்த நாடகத்தை ஒரு DVDயில் தர முயற்சி செய்யலாம். மகாபாரதம் சீரியல் இப்படி CDக்களில் பார்த்திருக்கிறேன். பல மொக்கைப் படத்தைப் பார்ப்பதற்கு இப்படி நல்ல சீரியல்களைப் பார்க்கலாம்.
19 comments:
எனக்கு பிடிச்ச நாடகம் இது வெட்டி. குங்குமத்துல தொடரா வந்ததை விட டிவியில அதிக வெற்றி அடைஞ்சதுன்னு நினைக்குறேன். தேவதர்ஷினி, சேத்தன் நடிப்பும் ரொம்ப இயல்பா இருக்கும்.
மறுபடியும் பார்க்கறதுக்காக இந்த லிங்க் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி :)
Hi Balaji,
எனக்கு பிடிச்ச நாடகம் இது Balaji.
மறுபடியும் பார்க்கறதுக்காக Link கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி
நல்ல நினைவூட்டல். நானும் +2 படிக்கும் போது தான் இது வந்தது. பயந்துகிட்டே பார்ப்பேன்.
இந்த நாடகத்துக்கு பின் சேத்தனும் தேவதர்ஷினியும் ஜோடியாகிட்டாங்க..
ஆனா இதுக்கப்பறம் நாகா இயக்கத்தில் வந்த சித்தர்கள் பற்றிய ஒரு நாடகமும் சூப்பரா இருந்தது. மரங்களுக்கும் உயிர் இருக்குன்னு சொல்லி அருமையா எடுத்திச்சு போனாங்க. ஆனா அதை பாதியிலேயே நிறுத்திட்டாங்க இராஜ் டிவியில
இந்த நாடகம் நான் பார்த்தது இல்லை, ஆனால் ஒரு காலத்தில் கலக்கிய நாடகம் என்று தெரியும்.
அது போல நீங்கள் கொடுத்த லின்க்கும் உபயோகமானது. பகிர்ந்தமைக்கு நன்றி.
//சென்ஷி said...
எனக்கு பிடிச்ச நாடகம் இது வெட்டி. குங்குமத்துல தொடரா வந்ததை விட டிவியில அதிக வெற்றி அடைஞ்சதுன்னு நினைக்குறேன். தேவதர்ஷினி, சேத்தன் நடிப்பும் ரொம்ப இயல்பா இருக்கும்.
மறுபடியும் பார்க்கறதுக்காக இந்த லிங்க் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி :)
//
குங்குமத்துல தொடரா வந்துச்சா? அது தெரியாதே...
நாடகம் நிச்சயம் அனைவரையும் கவர்ந்திருக்கும்...
எனக்கு அவுங்க ரெண்டு பேர் நடிப்பை விட சின்ன வயசு ராசு, பேச்சிக்கிழ்வி நடிப்பு தான் ரொம்ப பிடிச்சது :)
// Priyadarshini said...
Hi Balaji,
எனக்கு பிடிச்ச நாடகம் இது Balaji.
மறுபடியும் பார்க்கறதுக்காக Link கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி
//
ஓ... சூப்பர்...
நிச்சயம் பாருங்க :)
// ☀நான் ஆதவன்☀ said...
நல்ல நினைவூட்டல். நானும் +2 படிக்கும் போது தான் இது வந்தது. பயந்துகிட்டே பார்ப்பேன். //
ஆஹா அப்ப நம்ம செட்டா? 99ல +2வா?
இந்த நாடகத்துக்கு பின் சேத்தனும் தேவதர்ஷினியும் ஜோடியாகிட்டாங்க.. //
ஆமாம்... நல்ல ஜோடி தான் :)
//ஆனா இதுக்கப்பறம் நாகா இயக்கத்தில் வந்த சித்தர்கள் பற்றிய ஒரு நாடகமும் சூப்பரா இருந்தது. மரங்களுக்கும் உயிர் இருக்குன்னு சொல்லி அருமையா எடுத்திச்சு போனாங்க. ஆனா அதை பாதியிலேயே நிறுத்திட்டாங்க இராஜ் டிவியில
//
ஐயய்யோ...
நான் ரசித்து பார்த்த நாடகம் சிவமயம்னு ஒரு நாடகம். அதுவும் பாதியிலே நிறுத்திட்டாங்க :(
// ஆ! இதழ்கள் said...
இந்த நாடகம் நான் பார்த்தது இல்லை, ஆனால் ஒரு காலத்தில் கலக்கிய நாடகம் என்று தெரியும்.
அது போல நீங்கள் கொடுத்த லின்க்கும் உபயோகமானது. பகிர்ந்தமைக்கு நன்றி.
//
நானும் அப்ப பார்க்கல ஆனந்த். இப்ப தான் பார்த்தேன்
போர் அடிச்சா தினம் ஒரு பாகம் பாருங்க :)
ரொம்ப அருமையான நாடகம்...
அதுவும் அந்த split personality யாக மாறும் அந்த ஒரு எபிசோடுக்கு
சின்ன குழந்தைகள் பார்க்க வேணாம்னு
Slide போட்டது கூட இன்னும் ஞாபகம் இருக்கு...
Naveen.s
//chikku said...
ரொம்ப அருமையான நாடகம்...
அதுவும் அந்த split personality யாக மாறும் அந்த ஒரு எபிசோடுக்கு
சின்ன குழந்தைகள் பார்க்க வேணாம்னு
Slide போட்டது கூட இன்னும் ஞாபகம் இருக்கு...
Naveen.s//
Exactly Naveen... நான் அந்த பகுதில இருந்து தான் அப்ப பார்த்தேன்.. அதுக்கு பிறகு மூன்று பகுதிகள் வரும்.
அதைப் பார்த்த பிறகு தான் இந்த நாடகத்தைப் பார்க்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிட்டு இருந்தேன். இப்ப பார்த்து நிஜமாலுமே ஆச்சரியப்பட்டேன் :)
//
குங்குமத்துல தொடரா வந்துச்சா? அது தெரியாதே...
//
அப்ப தைரியமா சொல்லிக்கலாம். குங்குமம் பிரபலம் இல்லைன்னு. வெட்டிக்கே தெரியலையே.. விகடன்ல விடாது கறுப்பு தொடர் இந்திரா சௌந்தரராஜன் முடிச்சதும் அவரை வச்சு விட்டு விடு கறுப்பான்னு குங்குமத்துல ஆரம்பிச்சாங்க.. சில பகுதிகள் தொடர்ந்து வாசிச்சேன். விகடன் நேர்த்தி இல்லாத மாதிரி இருந்ததால நடுவுலயே விட்டாச்சு. :) அப்புறமாத்தான் டிவில தொடர் வந்தது. நாகா இயக்கத்துல
நாகாவோட அதற்கு முந்தைய தொடர் - ரமணி vs ரமணி. அது நல்ல காமெடி சீரியல். மர்மதேசம் வந்து அவரோட இமேஜ் மாறிடுச்சு. இன்னமும் என்னோட ஃபேவரைட்ல ரமணி vs ரமணியும் உண்டு. லிங்க் கிடைச்சா கொடு வெட்டி!
//சென்ஷி said...
//
குங்குமத்துல தொடரா வந்துச்சா? அது தெரியாதே...
//
அப்ப தைரியமா சொல்லிக்கலாம். குங்குமம் பிரபலம் இல்லைன்னு. வெட்டிக்கே தெரியலையே.. விகடன்ல விடாது கறுப்பு தொடர் இந்திரா சௌந்தரராஜன் முடிச்சதும் அவரை வச்சு விட்டு விடு கறுப்பான்னு குங்குமத்துல ஆரம்பிச்சாங்க.. சில பகுதிகள் தொடர்ந்து வாசிச்சேன். விகடன் நேர்த்தி இல்லாத மாதிரி இருந்ததால நடுவுலயே விட்டாச்சு. :) அப்புறமாத்தான் டிவில தொடர் வந்தது. நாகா இயக்கத்துல
//
ஆஹா... நான் எப்பவாது விகடன், குமுதம், குங்குமம் எல்லாம் தொடர்ந்து படிப்பேனு சொல்லியிருக்கேனா? நான் சின்ன வயசுல இருந்தே ஹாஸ்டல்ல படிச்சவன். அதனால எனக்கு பாட புத்தகத்தை தவிர வேற எதுவும் தெரியாது :)
ஹாஸ்டல்ல ராஜேஷ்குமார் நாவல் யாராவது திருட்டுத்தனமா வெச்சிருப்பாங்க. அதை தான் நிறைய படிச்சிருக்கேன். அப்பறம் நிறைய விவேகானந்தர் புக்ஸ், பைபிள் கோர்ஸ். அவ்வளவு தான் நம்ம புத்தக அறிவு :)
//
நாகாவோட அதற்கு முந்தைய தொடர் - ரமணி vs ரமணி. அது நல்ல காமெடி சீரியல். மர்மதேசம் வந்து அவரோட இமேஜ் மாறிடுச்சு. இன்னமும் என்னோட ஃபேவரைட்ல ரமணி vs ரமணியும் உண்டு. லிங்க் கிடைச்சா கொடு வெட்டி//
//
ரமணி Vs ரமணியும் நம்ம ஃபேவரைட் தான் :)
லிங் இதோ
ரமணிகளின் இணைப்பிற்கு நன்றி வெட்டி.. இதை டவுன்லோடு செய்து காண முடியுமா.. முடியும்னா எப்படின்னு சொல்லுங்க..
// வெட்டிப்பயல் said...
// ☀நான் ஆதவன்☀ said...
நல்ல நினைவூட்டல். நானும் +2 படிக்கும் போது தான் இது வந்தது. பயந்துகிட்டே பார்ப்பேன். //
ஆஹா அப்ப நம்ம செட்டா? 99ல +2வா?//
அப்ப நீங்கல்லாம் எனக்கு அண்ணாவா!
Dear Vetti,
Thanks for giving the url of this serial.
It was more than 13 years we watched this serial in sun tv. Still I can remember the big round eyes of master lokesh.
Cheers
Christo
அந்த பூசாரி, பேச்சி கிழவி, ஆணைமுடியார், ஆணைமுடியாரின் மனைவி, கட்டையன் இவர்கள் அனைவரும் நன்றாக நடித்திருப்பார்கள். அதில் நடிதவர்களில் சிலர் அதன் பின் நடித்தார்களா?
Link open agala bro
ஐயா உங்கள் பதிவு அருமை மேலும் இக்கதையை எழுதியவர் இந்திராசௌந்தராஜன் அவர்கள் அவருக்கு இப் பெருமைகள் போய்ச்சேரும்
லின்க் கொடுத்தால் நலம்...
இப்போ கவிதாலயா Youtube சேனல்.ல வந்துட்டு விடாது கருப்பு!
https://www.youtube.com/watch?v=XUGMhaiMKEI
Post a Comment