தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, January 27, 2009

சாப்ட்வேர் இஞ்சினியர் - மாணவர்களுக்கு...

”ஏன்டா ஐடி எடுத்த?”

”மெக்கானிக்கல் கிடைக்கலண்ணே. அதான். ”

“வேற எந்த டிப்பார்ட்மெண்டும் கிடைக்கலயா?”

”இல்லைண்ணே. அதான் வேற வழியில்லாம ஐடி எடுத்தோம்.”

”இந்த அண்ணே, ஆட்டுக்குட்டியெல்லாம் செகண்ட் இயர் பசங்ககிட்ட சொல்லிடாதீங்கடா. பிரிச்சி மேஞ்சிடுவானுங்க. புரியுதா?”

“புரியுது சார்”

என்ன யாருக்கும் புரியலையா? 

இது நான் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் போது மெஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உரையாடல். எங்க செட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒரே சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. 

இதெல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்தேனு உங்களுக்கு புரியணும். நான் சேர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் போது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் செம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் போது வேலையில்லை. எங்க காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவே இல்லை. எங்க சீனியர் செட்ல அதை விட மோசம். செலக்ட் ஆன ஒரு சிலருக்கும் ஆஃபர் லெட்டர் வரலை. நாங்க வெளிய வரும் போது எங்க சீனியர்ஸே வேலை தேடிட்டு இருந்தாங்க. 

2003 கடைசில நிலைமை மாற ஆரம்பிச்சுது. போன வருஷம் (2007) வரைக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் போது இதே டயலாக்கை மெஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க கேட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்டை ;)

சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க வேண்டாம். எப்படியும் நிலைமை ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி போன அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வரை என்ன செய்யலாம்னு சொல்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்தை வெச்சி சொல்றது தான். 

ஃபில்ட் சரியாகும் போது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்லை 2010ல முடிச்சிட்டு வரவங்களும் சேர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ஸை பயன்படுத்தி உள்ளே நுழையற அளவுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளவும். 

இப்ப ஜனவரி முடியப்போகுது. உங்க பிராஜக்டை முடிவு பண்ணிருப்பீங்க. பாதி பேர் காசு கொடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வரை சொந்தமா செய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்வைஸ். அப்படி செய்யாம போகும் போது, வாங்கற ப்ராஜக்டை புரிஞ்சிக்கோங்க. அதை அக்குவேற ஆணிவேறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி செய்யவும். அதுல ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யவும். அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.

அடுத்து, முடிஞ்ச வரைக்கும் பேப்பர் ப்ரசண்டேஷனெல்லாம் முயற்சி செய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இதை நிச்சயம் முயற்சி செய்யவும். இதனால வேலை கிடைக்குமா, ரெஸ்யுமேக்கு வேல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்கை கூடும். அது தான் முக்கியம். நினைச்சதை தடையில்லாமல் நாலு  பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி செய்யலாம். இல்லைனா இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்டை க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்களே உங்களுக்குள்ள நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முறை Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி பேசி பழகறது உங்க கூச்சப்பழக்கத்தை குறைக்கும். 

காலேஜ் லைஃப்ல நிறைய படிக்க முடியும். முடிஞ்ச வரைக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காலேஜ்லயே முடிச்சிடுங்க. இந்த லிங்க்ல இருக்கறதை படிச்சா உங்களுக்கு இன்னும் பயன்படும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள காலேஜ் சரியான இடம். வெளிய வந்தா ஒரு கேள்வி புரியலைனா சொல்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ரெயினிங்னு சொல்லி கொள்ளை அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அதை நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும்.

வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். 

ஃபீல்ட் டவுன்னு சொல்லி சோகமா உட்கார்ந்துடாதீங்க. வேலை வாய்ப்பு வரும் போது தயார் செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்பை வேற யாராவது தட்டிட்டு போயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...

Saturday, January 24, 2009

பயணம்...

ஒரு வழியா வந்த வேலைகள் எல்லாம் முடிச்சாச்சு. நாளைக்கு காலைல சென்னை போனவுடனே கடைசியா ஒரு தடவை ஷாப்பிங் போயிட்டு பேக்கப் பண்ணா சரியா இருக்கும். இந்த பஸ் இவ்வளவு நேரம் ஏன் எடுக்காம இருக்காங்கனு புரியல. இருக்குற நாலஞ்சு சீட்டும் இங்கயே ஃபில் ஆனாத்தான் எடுப்பனு வெயிட் பண்ணிட்டு இருக்கறது, ஓபாமா வந்தா உலகமே மாறிடும்னு நினைக்கிற மாதிரி முட்டாள் தனமா தான் தெரியுது. போற வழியில யாரும் ஏறாமலா போயிடுவாங்க. இதுவே வீக் எண்டா இருந்தா ரஜினி படத்துக்கு தியேட்டர் நிரம்பற மாதிரி இந்நேரம் பஸ்ல நின்னுட்டு வர அளவுக்கு கூட்டம் இருந்திருக்கும். 

பரவாயில்லை, திருமங்கலத்துல கடைசி நேரத்துல ஓட்டு பதிவான மாதிரி மக்களும் கடைசி நேரத்துல ஏறி கண்டக்டர் வயித்துல பாலை வாத்துட்டாங்க. வெளியில சென்னை, சென்னைனு சத்தம் போட்டு சாமார்த்தியமா ஏத்தின பையன் பேரு ஒருவேளை ”அ”ல ஆரம்பிக்குமோ? சரி நமக்கு எதுக்கு இந்திய அரசியல்?

என் சீட்டுக்கு பக்கத்துல வந்து நின்ற அந்த பெரியவருக்கு எப்படியும் அறுவதில் இருந்து அறுவத்தைந்து வயதிற்குள் இருக்க வேண்டும். கைல வெச்சிருந்த சூட்கேஸை மேல வைக்க திணறி கொண்டிருந்தார். சரினு நானும் எழுந்து அதை வைக்க அவருக்கு உதவினேன். சூட்கேஸ் கொஞ்சம் கனம் அதிகம் தான். அவர் அதை கீழையே வைத்திருக்கலாம். அப்படி வெச்சா கால் வைக்க கொஞ்சம் சிரமமாத்தான் இருந்திருக்கும். 

இந்தியால இப்பவெல்லாம் பொண்ணுங்க பசங்க பக்கத்துல தயங்காம உக்கார்ந்து வராங்கனு டீம்ல எல்லாரும் சொன்னாங்க. சில கதைகள்ல கூட படிச்சேன். ஆனா இந்த முறை நாலஞ்சு முறை பஸ் பயணம் செய்தும் என் பக்கத்துல எந்த பொண்ணும் உக்காரல. முப்பத்தி மூணு வயசு, அஞ்சு வயசு குழந்தைக்கு அப்பனா இருந்துட்டு இப்படியெல்லாம் யோசிக்கலாமானு நீங்க கேட்கலாம். நான் எதுவும் தப்பான எண்ணத்துல அப்படி யோசிக்கல. அது எந்த அளவுக்கு உண்மைனு தெரிஞ்சிக்கிற எண்ணம். அவ்வளவு தான்.

”பஸ் ஏறிட்டேன். மாப்பிளை தான் வந்து ஏத்திவிட்டு போனாரு. காலைல வந்துடுவேன்” பேசி முடித்துவிட்டு அலைப்பேசியை அணைத்தார் அந்த பெரியவர். போன முறை சென்னைல இருந்து வரும் போது ஒரு பையன் என் பக்கத்துல உட்கார்ந்திருந்தான். இப்ப இவர் பேசின இதே விஷயத்தை சொல்ல அவனுக்கு ஒரு மணி நேரமானது. எதிர்முனைல இருக்கறவங்க நிச்சயம் பையனா இருக்க முடியாது. இதுக்கு பேரு தான் ஜெனரேஷன் கேப். 

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி” பேச ஆரம்பித்தார் பெரியவர். எனக்கு ஆச்சரியம். இதுவரை பயணம் செய்யும் போது யாருமே என்னிடம் பேசவில்லை. எல்லாரும் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சிலர் ஏதோ ஒரு MP3 பிளேயரில் பாட்டு கேட்டு கொண்டிருந்தனர். சில சமயம் விஜய் தோளை குலுக்கி குலுக்கி பேசிக்கொண்டிருந்த காமெடிக்கு சிரித்து கொண்டிருந்தனர்.

“Thats fine. இதுல என்ன இருக்கு?”

“பெட்டி கொஞ்சம் கனம். அதான் தூக்க முடியல. கீழ வெச்சா கால் இடிச்சிட்டே இருக்கும். எப்படியும் வெச்சிடலாம்னு தைரியத்துல தூக்கிட்டேன்”

“ஆமாங்க. கொஞ்சம் கனம் தான். இனிமே இவ்வளவு கணமான பெட்டியையெல்லாம் தூக்காதீங்க. மூச்சு பிடிச்சிக்கும்”

“ம்ம்ம். தம்பி, மெட்ராஸா?”

“இல்லைங்க. நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாம் கடலூர்ல. மாமியார் ஊரு சென்னை. இப்ப ஒரு பத்து வருஷமா யூ. எஸ்ல இருக்கேன்”

“ஓ பத்து வருஷமா? அப்ப நிச்சயம் இங்க வந்து செட்டிலாகமாட்டீங்க?”

“இப்பொழுதைக்கு வர ஐடியா இல்லை. மொத்தமா ரிட்டையர் ஆகிட்டு கட்டின சொஷியல் செக்கியூரிட்டி டேக்ஸ் எல்லாம் மாச மாசம் நமக்கு வர மாதிரி இருக்கும் போது வந்திடலாம்னு ஒரு எண்ணம். பார்க்கலாம்”

“இப்படி போன என்னுடைய நண்பர்களோட பசங்க யாருமே வரல” சொல்லிவிட்டு மெலிதாக சிரித்தார். அவரை பத்தி நாம விசாரிக்கலாமா இல்லை உரையாடலை முடிச்சிடலாமா? சரி நாமலும் நாலு கேள்வி கேட்டுட்டு தூங்க போகலாம். இல்லைனா நல்லா இருக்காது.

“நீங்க சென்னையா?”

“நான் இப்ப எந்த ஊருனு எனக்கே தெரியலைப்பா”

“புரியலைங்களே”

“என் சொந்த ஊரு கும்பகோணம் பக்கத்துல திருவிடைமருதூர். நான் ரெவண்யூ டிப்பார்ட்மெண்ட்ல வேலை பார்த்தேன். 2003ல ரிட்டயர்மெண்ட். 2005 வரைக்கும் நானும் என் மனைவியும் திருவிடைமருதூர்லயே இருந்தோம். 2005ல அவ என்னை விட்டுட்டு போயிட்டா. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் என் மகன் வீட்ல இருந்தேன். இப்ப கடைசியா ஒரு மூணு மாசம் என் பொண்ணுவீட்ல இருந்தேன். இப்ப மறுபடியும் என் மகன் வீடு. நாடோடி மாதிரி ஆகிட்டனோனு தோணுது” அவர் கண்கள் லேசாக கலங்கியிருந்தது. இதுக்கு மேல என்ன கேக்கறதுனே தெரியல. இதுக்கு மேல ஏதாவது கேட்டு அவர் அழுதார்னா என்ன பண்றது? மறுபடியும் அவரே தொடங்கினார்.

“நான் ஒரு சுகர் பேஷண்ட். எனக்கு காலைல எட்டு மணிக்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பிச்சிடுது. ஒரு ரெண்டு இட்லி செஞ்சு கொடும்மானு கேட்கறது தப்பாப்பா? ஹோட்டல் இட்லிக்கு சட்னி, சாம்பார் எல்லாம் தொட்டு சாப்பிட முடியல. எல்லாம் காரம் அதிகமா இருக்கு. பசங்க எல்லாம் ஸ்கூலுக்கு கிளம்பறாங்கனு எனக்கு புரியாம இல்ல. என்ன பண்றது, எனக்கு தாங்க முடியலையே. ஒன்பதரை மணிக்கு அஞ்சு இட்லி கொண்டு வந்து கொடுத்தா சரியா போயிடுமா? நான் சாப்பாட்டுக்கு எல்லாம் அலையலப்பா. பாழாப்போன வியாதி. வேளா வேலைக்கு சோறு கேட்குது. ” மீண்டும் ஒரு நிமிடம் மௌனம்.

“உங்க அப்பாவால கொஞ்ச நேரம் வெயிட் பண்ண முடியாதா? பசங்க கொஞ்சம் லேட்டானாலும் பஸ்ஸை மிஸ் பண்ணிடுவாங்க. நான் அவுங்களை ரெடி பண்ணுவனா இல்லை இவருக்கு சமைச்சிட்டு இருப்பனா? நான் என்ன மத்த மருகளுங்க மாதிரி சாப்பாடு போடாமலா கொடுமைப்படுத்தறேன். இதைப் போய் உங்க அப்பா பெருசா சலிச்சிக்கிறாரு” இப்படினு என் காது படவே பேசறா. மொத ஒரு ஆறு மாசத்துக்கு பயம் இருந்துச்சு. இப்ப பயம், பாசம், மரியாதை எதுவுமே இருக்கற மாதிரி தெரியல. அதான் என் பையன், பேசாம கொஞ்ச நாள் நீங்க தங்கச்சி வீட்ல போய் தங்கிட்டு வாங்கப்பா. உங்களுக்கும் வேற இடம் இருக்குனு அவளுக்கு தெரியனும். ஊர்ல இருக்கற இடமெல்லாம் நீங்க அந்த பேர பசங்களுக்கு எழுதி வெச்சிடுவீங்களோனு ஒரு பயம் வந்தா தானா சரியாகிடும்னு அனுப்பிவெச்சான். 

இங்க வந்து மூணு மாசமாகுது. சரி மாப்பிள்ளைக்கிட்ட மரியாதை குறையறதுக்கு முன்னாடி கிளம்பிடலாம்னு கிளம்பிட்டேன். அடுத்த முறை பையனும் வேணாம், பொண்ணும் வேணாம்னு திருவிடைமருதூர்க்கே கிளம்பிடலாமானு யோசிச்சிட்டு இருக்கேன். எங்க காலத்துல நாங்க பெத்தவங்களுக்கு சோறு போட்டோம், காசு மட்டும் கேட்காதனு சொல்லுவோம். இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு”

“கவலைப்படாதீங்க. எல்லாம் இனிமே சரியாயிடும்” எதோ சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக சொல்லிவைத்தேன். 

“உங்கக்கிட்ட சொன்னதும் ஏதோ பாரமெல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்குது. சரி. நான் தூங்கறன்பா” சொல்லிவிட்டு இருக்கையை முடிந்த வரை பின் தள்ளி கண்ணை மூடினார்.

நானும் கண்ணை மூடினேன். ஏனோ தூக்கம் வரவில்லை. என் அப்பா இப்படி யாரிடமெல்லாம் புலம்பினாரோ. தெரியவில்லை. அவர் நண்பர்கள் யாரும் அவர் புலம்பியதாக சொல்லவில்லை. 

அப்படி அவர் புலம்பியிருந்தால் அவர்கள் என்னை வெறுத்திருப்பார்கள் தானே. அவர்கள் என்னை வெறுக்கவில்லை. அதனால் அவர் புலம்பியிருக்க வாய்ப்பில்லை. அவருக்கு என் மேல் வருத்தமா என்று கூட எனக்கு தெரியவில்லை. இவர் சொல்லியதை போல் என் அப்பாவிற்கு சர்க்கரை நோய் இல்லை. அப்படியிருந்தாலும் அவருக்கு வேளா வெலைக்கு சரியான நேரத்திற்கு உணவு இருந்தது. அவர் சாப்பாட்டை பத்தி என்னிடம் ஏதாவது முறையிட்டாரா? ஆம். ஒரு முறை ஏதோ சொல்லவந்தார்.

“வினோத்”

“சொல்லுங்கப்பா”

“காலைல இந்த கார்ன் ஃபிலேக்ஸ், பிரெட் எல்லாம் சாப்பிட ஒரு மாதிரி இருக்குப்பா. மொஷன் பிரச்சனையா இருக்கு. இதெல்லாம் சாப்பிடறதால தானு நினைக்கிறேன். வேற எதுவும் கிடைக்காதா?”

“இந்தியன் ஸ்டோர்ல தோசை மாவு கிடைக்கும்ப்பா. அது வாரம் முழுசா வராது. வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் கலந்து சாப்பிட்டுக்கலாம். சரியாப்பா?”

“ம்ம்ம்”

வேற என்ன என்கிட்ட கேட்டிருக்காரு? கரெக்ட். இன்னொரு முறை...

“வினோத்”

“சொல்லுங்கப்பா”

“வர புதன்கிழமை பதினாலாம் தேதி தான?”

“ஆமாப்பா? ஏன் ஏதாவது விசேஷயமா?”

“அன்னைக்கு உங்க அம்மா பிறந்த நாள்ப்பா. வருஷா வருஷம் நானும் உங்க அம்மாவும் கோவிலுக்கு போவோம். இந்த வருஷம் அவ இல்லைனாலும் நானாவது கோவிலுக்கு போகனும்னு ஆசைப்படறேன்”

“ஷிட்... எப்படி மறந்தேன்? கண்டிப்பா போகலாம்பா”

.............

“என்னப்பா, கோவில் பிடிச்சிருந்ததா?”

“என்னப்பா சாமி சிலையெல்லாம் பளிங்குல இருக்கு? எதோ பொம்மை பாக்கற மாதிரி இருக்குப்பா. நம்ம சாமி மாதிரியே ஒரு ஃபீல் இல்லை வினோத்”

“இது குஜராத்தி கோவில்ப்பா. அப்படி தான் இருக்கும். இதுவும் சாமிதானப்பா”

“ம்ம்ம்ம்”

பக்கத்திலிருக்கும் பெரியவர் நன்றாக தூங்க ஆரம்பித்துவிட்டார். ஜன்னல் இடுக்குகளில் புகுந்து குளிர்காற்று என் முகத்தில் அடித்து கொண்டிருந்தது. அதை போலவே என் அப்பாவின் நினைவுகளும்...

கடைசியா அப்பா கேட்டது...

“வினோத். நான் ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே”

“சொல்லுங்கப்பா”

“என்னால இதுக்கு மேலயும் இங்க இருக்க முடியுமானு தெரியல. நான் இந்தியா போயிடலாம்னு பிரியப்படறேன்”

“ஏன்ப்பா ஷாலினி உங்கள சரியா கவனிக்கலையா? இல்லை என் மேல ஏதாவது தப்பா?”

“அதெல்லாம் இல்லைப்பா. எனக்கு தான் ஒத்து வரலை. இந்த கார்ன் ஃபிளேக்ஸ், பிரேட், முதல் நாள் சமையலை சூடு பண்ணி அடுத்த நாள் மதியம் சாப்பிடறது, ஃப்ரோசன் பரோட்டா 

இதெல்லாம் கூட நான் என் பேத்திக்காகவும், உங்களுக்காகவும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். ஆனா நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போனதுக்கப்பறம் இருக்குற அந்த தனிமை தான் ஒரு மாதிரி இருக்கு. ஏதோ சூன்யமா இருக்குற மாதிரி இருக்குப்பா”

“இந்தியா போய் எப்படிப்பா, எங்க இருப்பீங்க? அங்கயும் அதே தனிமை தான? நாம வேணா எல்லாரும் சேர்ந்து இந்தியா போயிடலாமா? ஒரு ஆறு மாசம் பொறுத்துக்கோங்க. நான் வேற வேலை பார்க்கறேன்”

“அதெல்லாம் எதுவும் வேண்டாம் வினோத். இனிமே உங்களால எல்லாம் அங்க வர முடியாது. இப்ப இந்தியால வயசானவங்களுக்கு நிறைய ஹாஸ்டல்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. எல்லா வசதியும் அங்க இருக்கும்னு சொல்றாங்க. அந்த மாதிரி ஏதாவது ஒண்ணுல சேர்ந்துக்கறேன்”

“யூ மீன் முதியோர் இல்லம்? எப்படிப்பா என்கிட்ட இந்த மாதிரி பேசறதுக்கு உங்களுக்கு மனசு வந்தது?”

“வினோத் டோண்ட் கெட் எக்சைட்டட். இது அந்த மாதிரி இல்லை. நான் உன்னை பதினோராவதுல ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டனே. ஞாபகமிருக்கா?”

“இருக்குப்பா.”

“உன் மேல பாசம் இல்லாமலா சேர்த்தேன்”

“இல்லை”

”உன்னை கவனிக்க முடியாம சேர்த்தனா?”

“இல்லை”

“அதே மாதிரி தான் இதுவும்”

ஒரு வழியாக அப்பா ஹாஸ்டலில் சேர்ந்து ஒரு வருடமிருந்தார். தினமும் பேசியது குறைந்து வாரத்திற்கு ஒரு முறை ஆனது, பிறகு மாதத்திற்கு இருமுறை ஆனது. பிறகு அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று போன் வந்தது. வந்து சேர்வதற்குள் அவர் சென்று சேர்ந்துவிட்டார். சரியாக ஒரு வருடமாகிறது. இந்த முறை வந்ததில் இருந்த சொத்துக்களை எந்த வில்லங்கமும் இல்லாமல் விற்றாகிவிட்டது, பெங்களூரிலிருக்கும் எனது ஆப் ஷோர் மக்களுக்கு ஒரு வாரம் ட்ரெயினிங் கொடுத்தாகிவிட்டது. நாளை மறுநாள் டாலர் தேசத்திற்கு கிளம்ப வேண்டியது தான்...

அப்பா, நீங்க என்னை ஹாஸ்டலில் சேர்க்காமலே இருந்திருக்கலாம். நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்...

பக்கத்திலிருந்த பெரியவர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்...





Wednesday, January 21, 2009

இந்திய பயணம் - 1

வந்ததுல இருந்து இந்திய பயணம் பத்தி எதுவுமே எழுதல. எழுதாம இருக்கறதுக்கு முதல் காரணம் எதை எழுதறது எதை விடறதுனு புரியல. எப்பவும் போல நான் வந்தவுடனே வேட்டு வெடிச்சாங்க. முதல் முறை வரும் போது சிவாஜி ரிலிஸ். ரெண்டாவது முறை தீபாவளி முடிஞ்சி வந்தேன். அன்னைக்கும் மிச்சமிருந்த வேட்டு எல்லாம் வெடிச்சிட்டு இருந்தாங்க. இந்த முறை சரியா (தல) தீபாவளிக்கு வந்து சேர்ந்துட்டேன்.

இந்த தீபாவளி சென்னைல கொண்டாடினேன். இந்த வருஷம் தீபாவளி அமாவாசைல வரல. அதனால வந்தவுடனே கறி குழம்பு தான். சென்னைல மக்கள்கிட்ட காசு கொட்டிக்கிடக்கு போலிருக்கு. எவ்வளவு பட்டாசு. மொட்டை மாடில இருந்து வேடிக்கை பார்த்தா சென்னையே வான வேடிக்கைகளால் போர்த்திய மாதிரி இருந்தது. ரெண்டு மணி நேரத்துக்கு மேல வெடிச்சிட்டு இருந்தாங்க. அமெரிக்காவுல ஜீலை 4 அன்று அரசே வெடி வெடிக்கும். ஆனா இந்த அளவுக்கு இருக்காது.

என்னுமோ அமெரிக்காவுலே பொறந்து வளர்ந்த மாதிரி பில்ட் அப் கொடுக்கறயேனு நீங்க மனசுல நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய, கள்ளக்குறிச்சில இப்படி எல்லாம் வான வேடிக்கை விடமாட்டாங்கனு சொன்னா. அது எங்களுக்கே தெரியும்டா வெண்ட்ருனு நீங்க சொல்லிடுவீங்க. அதான் அப்படியே அமெரிக்கா பிட்ட போட்டாச்சு.

இந்த தடவை இந்தியால இருந்த மூணு மாசமும் ரொம்ப பரபரப்பா போயிடுச்சு. பஸ் பயணமும், ட்ரெயின் பயணமும் மாத்தி மாத்தி பண்ணி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முடிஞ்ச அளவுக்கு கொடுத்தாச்சு. இதுல ஒரு கொடுமை என்னனா, பெங்களூருக்கு சென்னைல இருந்து ஒரு முறை பஸ்ல போகலாம்னு கோயம்பேடு வந்தேன். தமிழ்நாடு பஸ், கர்நாடகா பஸ் ரெண்டும் இருந்துச்சு. 

கர்நாடகா பஸ் கிளம்பி பத்து நிமிஷத்துல தமிழ்நாடு பஸ் கிளம்பும்னு கண்டக்டர் சொன்னாரு. நானும் சரி நம்ம காசு கொடுக்கறது தான் கொடுக்கறோம், தமிழ்நாட்டுக்கே கொடுப்போம்னு ஒரு இனவெறில தமிழ்நாட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி ஏறிட்டேன். தமிழனை ஏமாத்த தமிழனால தான் முடியும்னு நிருபிச்சி ஒரு மணி நேரம் கழிச்சி பஸ் எடுத்தாரு டிரைவரு. அப்ப முடிவு பண்ணது தான். இனிமே இனப்பாசத்தை எல்லாம் பஸ்ல காட்டக்கூடாதுனு. 

அப்பறம் இந்த தடவை தான் அதிகமா ட்ரெயின்ல பயணம் செஞ்சேன். மொத்தமா இதுக்கு முன்னாடி மூணு நாலு தடவை தான் நினைவு தெரிஞ்சி டிரெயின்ல போயிருக்கேன். முக்கிய காரணம், கள்ளக்குறிச்சில டிரெயின் இல்லாதது. பஸ்ஸைவிட ட்ரெயின் பயணம் கொஞ்சம் சுகமா தான் இருக்குது. அப்பர் பர்த்ல ஏறனவுடனே கவுண்டர் இந்த இடத்துல இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு ஒரு காமெடி தோணுச்சு. அதை ஏதோ ஒரு புக்ல உடனே எழுதி வெச்சேன். இந்தியாலயே விட்டுட்டு வந்துட்டேன். யோசிச்சி எழுதறேன். 

விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு சாப்பாடு கொடுக்கற டிரெயின்ல வந்தேன். அது என்ன சாப்பாடு கொடுக்கற டிரெயினு கேக்கறீங்களா? பெங்களூர்ல புறப்படும் போது சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்கறானுங்க. சென்னை வர வரைக்கும் சலிக்காம ஏதாவது கொடுத்துட்டே இருக்கானுங்க. நானும் அவுங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டுட்டேன். அந்த ட்ரெயின் பேரு ஷதாப்தி.

அப்பறம் ரெண்டு மூணு தடவை கொயமுத்தூர் வந்தேன். பெங்களூர்ல இருந்து கோவை வர பஸ் கிடைக்காதவங்க, இதை முயற்சி செஞ்சு பார்க்கலாம். ஓசூர்ல ஒன்பதரைக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ், பத்து மணிக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ் புறப்படுது. கொஞ்சம் கூட்டம் இல்லாம நிம்மதியா வந்து சேரலாம். அது ஏன் அல்ட்ரா டீலக்ஸ்னா, மத்த எல்லா பஸ்லயும் ஹை டெசிபல்ல விஜய் படமோ (வசீகரா, சச்சின்) இல்லை சூர்யா (காக்க காக்க, ஆறு) போட்டு கொல்றானுங்க. எல்லா பஸ்லயும் இப்படி படம் போட்டு டார்ச்சர் பண்ணா என்ன தான் பண்றதுனு தெரியல. (இதுக்கு எல்லாம் யாராவது பொதுநல வழக்கு போட மாட்டாங்களா?) அதுக்கு இந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல வந்தா கொஞ்சம் தப்பிக்கலாம்.

சரிங்க. இன்னைக்கு இந்த மொக்கை போதும்னு நினைக்கிறேன். அப்பறம் பொறுமையா அடுத்த மொக்கையை போடலாம்... வர்ட்டா....

Sunday, January 18, 2009

பர்மிதா குட்டிக்கு...

பர்மிதா குட்டிக்கு,
உன் நைனா ஆசிர்வாதங்களுடன் எழுதும் முதல் கடிதம். இந்த கடிதத்தை நீ படிக்க முடியும் நிலை வரும் போது உன் மனதில் இந்த கேள்வி இருக்கலாம். அதற்குள் எனக்கு இந்த நிகழ்ச்சிகள் மறந்து போயிருக்கலாம். அதனால் இப்போழுதே எழுதிவிடுகிறேன்.
பர்மிதா - இந்த பெயர் உனக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். கண்டிப்பாக இதை நீ படித்து புரிந்து கொள்ளும் வயது வரும் வரை உன் வகுப்பில் ஒரே பர்மிதா நீயாகத்தான் இருப்பாய். இது தமிழ் பெயர் அல்ல என்பதை நான் உனக்கு இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். பர்மிதா - இதற்கு தமிழில் பெயர் வைத்திருந்தால் கலைவாணி என்று வைத்திருக்கலாம். ஆனால் நீ பிறந்த காலகட்டத்தில் வட மொழியில் பெயர் வைப்பதும் யாரும் இது வரை அதிகமாக கேள்விப்படாத அல்லது குடும்பத்தில் இல்லாத பெயர் வைப்பதும் தான் வழக்காக இருக்கிறது. 

உனக்கு நான் சரஸ்வதி பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் “சரஸ்வதினே வெச்சிடுங்க மாப்பிள்ளை”னு உங்க தாத்தா சொல்லி உன் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். சரஸ்வதி பெயர் என்ற முடிவு மட்டும் தான் என்னுடையது. குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமை அதன் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதில் எனக்கு உறுதி அதிகம். அதனால் வேறு யாருக்கும் இதில் உரிமைல்லை.

நீ பிறந்த பதினைந்தாம் நாள் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். உன் பெயர் முடிவானதும் பதினைந்தாம் நாள் தான். அது வரை ஆயிரம் பெயர்களுக்கு மேல் பார்த்தாகிவிட்டது. இதில் உனக்கு நம்பிக்கையில்லாமலும் போகலாம். ஆனால் இது தான் உண்மை. எத்தனை பெயர்கள். கலைமகளுக்கு இத்தனை பெயர்கள் இருக்கிறது என்பதே உன்னால் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். 

இறுதியில் கலைமகள் என்ற கொள்கையை தளர்த்தி, நான் சொன்ன ”பார்கவி, பாரதி, பாவனி, பாவை, கோதை, ஜனனி, பவித்ரா” பெயர்களை நம் வீட்டில் யாரும் கணக்கிலெடுத்து கொள்ளவில்லை. உன் அம்மாவும், என் அம்மாவும் இருவருமே பாகுபாடின்றி இதை நிராகரித்தனர். என்னுடைய வலைப்பதிவிலும் உன் பெயருக்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எத்தனை மாமா, அத்தைகள், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்திகள் உனக்காக பெயர் தேர்ந்தெடுக்க உதவினார்கள் என்பதை நீயே இங்கு பார்க்கலாம்

கடைசியாக உன் அம்மா உனக்கு தேர்ந்தெடுத்த பெயர்கள் ப்ரஜ்னா, பர்மிதா, யோகிதா. முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் அந்த பெயர் சொன்னவுடன் அவர்கள் கேட்டது “என்ன ப்ரச்சனையா?”. இதை கேட்டவுடன் கண்டிப்பாக உனக்கு இந்த பெயர் வைக்கப்போவதில்லை என்று என் மனதில் முடிவாகிவிட்டது. மேலும் உனக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என்றாலும் தமிழில் அழகாக எழுதும் படியாக இருக்க வேண்டும் என்பது என் அடிமனதின் ஆவல். “ப்” என்ற வார்த்தையில் பெயர் தொடங்க கூடாது என்ற நான் முதலில் சொன்னது கணக்கிலெடுத்து கொள்ளப்படவில்லை. மறுபடி இதை உன் அம்மா, அவர்கள் மாமியாரிடம் சொன்னவுடன், உங்க பாட்டி சொன்னதும் அதே தான். “ஏதோ பிரச்சனைங்கற மாதிரி இருக்கு. வீட்ல இருக்கற பிரச்சனை போதும். இந்த பேர் வேண்டாம்”. அதனால் நீ ப்ரஜ்னாவாகவில்லை. எனக்கு மகிழ்ச்சி. 

யோகிதா, பர்மிதா என்ற இருபெயர்களில், பர்மிதா என்ற பெயர் தான் உன் பாட்டிக்கும், உன் (தாய்) மாமாவிற்கும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லை. யோகிதா என்று பெயர் வைத்தால் அட்டெண்டென்சில் கடைசியாக பெயர் வரும் என்று உன் அம்மா அதை கடைசியில் நிராகரித்தாள். ”குழந்தைக்கு பெயர் என்ன?” என்று உன் பெயர் வைக்கும் நாளில் புரோகிதர் கேட்ட ஒரு நிமிடத்திற்குள் தான் இந்த பெயர் இறுதியாக முடிவானது.

உனக்கு பெயர் வைக்க அதிகாமாக கஷ்டப்பட்டதும் உன் அம்மா தான். நான்கு ஐந்து பெயர்கள் தேர்ந்தெடுத்து அவள் எனக்கு சொல்வாள். பிறகு உன் பாட்டிக்கு சொல்ல வேண்டும், அவர்களுக்கும் பிடித்திருந்தால் உன் அத்தைக்கு. இப்படியே பல பெயர்கள் நிராகரிப்பட்டன. 

கடைசியாக உன் பாட்டி, அம்மா, மாமா என பாகுபாடின்றி பிடித்திருந்தது “பர்மிதா” தான். இந்த பெயர் பல முறை சொல்லியும் என் பாட்டியின் மனதில் பதியவைக்க முடியவில்லை. இதை எதற்கு இப்படி ஒரு கதை போல நம்ம நைனா எழுதி வெச்சிருக்காருனு நீ யோசிக்கலாம். உன் பெயருக்கான உழைப்பு உனக்கு தெரிந்தாலே இந்த பெயர் உனக்கு பிடித்து போகும் என்ற ஒரு நப்பாசை தான்.

அன்புள்ள,
நைனா...

Thursday, January 15, 2009

பிரிவு - 4

"திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்"

"ஹிம்... இப்பதான் ஐஸ் சொன்னா"

"இப்ப சந்தோஷமா???"

"என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???"

"ஹிம்... அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்"

"ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்"

"சரி... "

..................

அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.

"செக் லிஸ்ட் பாத்தியா???"

"ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்"

"நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்... கதை விடாத"

"சரி... அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???"

"இரு... நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ"

"ஏன் சன்டே உன் பிளான் என்ன???"

"நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு"

"சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???"

"மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்"

"நீ அவசியம் போகனுமா?"

"ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்... நான் கண்டிப்பா போயாகனும்... ஏன் கேக்கற???"

"ஒன்னுமில்லை... அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க"

"ஏன் வீணா டென்ஷன் ஆகற"

"அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்"

"ஏன் இப்படியெல்லாம் பேசற"

"அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்"

"சரி"

............................

"சொல்லு"

"நைட் கூப்பிடறன்னு சொன்ன... ஏன் கூப்பிடல???"

"இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்"

"மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???"

"திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க... முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்... போதுமா?"

"இப்ப எங்க இருக்க?"

"ஆபிஸ்லதான்"

"சரி நீ வேலை பாரு... அப்பறமா கூப்பிடு..."

"சரி... நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்"

"ஓ.கே.... பை"

..........................................

"தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???"

"சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல"

"நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல"

"நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்... ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல"

"நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்"

"நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்... இல்ல"

"சரி திட்டாத... இப்ப நாந்தானே கூப்பிட்டேன்... நீ ஒன்னும் கூப்பிடல இல்ல"

"சரி விடு... அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு... உள்ளையே சாப்பிட்டுக்கறேன்"

"சரி... நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு"

"ஓகே... பை"

"பை"

...............................

வெள்ளி இரவு 11 மணி

"நான் தனா பேசறேன்"

"தெரியுது சொல்லு"

"நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்"

"சரி. எல்லாம் வாங்கிட்டயா"

"எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்"

"எப்ப திரும்ப வருவ???"

"தெரியல... இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல... நான் மட்டும் என்ன லூசா???"

"அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல"

"உங்களை எல்லாம் மறப்பனா???"

"இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல... நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???"

"உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்... "

"ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???"

"இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?"

"நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???"

"நீ போகலயா???""

""அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை"

"அத நீ தான் சொல்லியிருக்கனும்"

"எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன... ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல"

"திவ்யா... இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????"

"ஏன் கேக்கற???"

"சொல்லு"

"எனக்கு தெரியல..."

"இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா... அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???"

"எனக்கு சாப்பிட பிடிக்கல"

"ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்."

"தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல.... என்ன விட்டுட்டு நீ போற... எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? "

"எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு... நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?"

"தனா என்ன சொல்ற???"

"எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்"

"நல்ல நேரம் பாத்து கேக்கற தனா... இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?"

"அப்படினா... என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???"

"நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல"

"திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்... நான் புறப்பட்டு வரன்"

"ஏய் லூசு... மணி 11:30... நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்"

"சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத... நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு"

"முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது"

"ஏன்???"

"உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல"

"யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா... நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்"

"ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு"

"லூசு... பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்"

"அப்ப சரி... நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது"

"சரி. நீ போயிட்டு எப்ப வருவ???"

"நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க... "

"அப்படினா???"

"1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)"

.............................

ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.

"சாப்பிட்டயா???"

" "

"திட்டாத... அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்... பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. ."

" "

"நிஜமாதான் சொல்றேன்...
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்"

" "

"'சும்மா சொன்னேன்... அவன் நல்ல பையன் தான்...
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்... இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/ "

" "

"ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு"

" "

(முற்றும்...)

பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் "No Comments"...

Wednesday, January 14, 2009

பிரிவு - 3

ஞாயிறு இரவு 9 மணி.
செல்போன் சிணுங்கியது

"ஏய் சொல்லு. எங்க இருக்க? ஊருல இருந்து வந்துட்டியா?"

"ஒரு சின்ன பிரச்சனை"

"என்னாச்சு. எங்க இருக்க?"

"நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்"

"என்ன கிருஷ்னகிரில இருக்கியா? மணி என்னாச்சு"

"நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு"

"எத்தனை மணிக்கு புறப்பட்ட??"

"4 மணிக்கு"

"ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா?"

"சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்"

"சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?"

"எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்"

"பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு"

"சரி"

........................

ஓசூர், இரவு 10::30

"தனா நான் ஓசூர் வந்துட்டேன்"

"இப்ப எங்க இருக்கற???"

"ஓசூர்ல தான்"

"லூசு, ஓசூர்ல எங்க இருக்கற??"

"நீ எங்க இருக்கற???"

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு"

"இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்"

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

"ஏய் நீ எதுக்கு இங்க வந்த???"

"எதுவும் பேசாத அடிச்சிட போறேன்"

"ஏன் இப்படி கோவப்படற???"

"மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா???"

"பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்"

"மனுசனை டென்சன் ஆக்காத! வந்து வண்டில உக்காரு"

"எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல"

"இப்ப வரியா! இல்ல நான் கிளம்பட்டுமா???"

"இரு வரன்"

..............................

பெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்...

"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்"

"சரிங்க... உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா???"

"உனக்கு என்னுமோ ஆயிடுச்சி"

"பேசாம வா"

.........................................

BTM, PG

"ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்"

"பஸ் பிரேக் டவுன்"

"இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத"

"ஏன்???"

"வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க... இப்ப தான் எல்லாம் வெளிய வருது"

"ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா???"

"யாரு"

"தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்"

"நல்லதா போச்சு"

"நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்"

"அடிப்பாவி!!! வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா... அவனை நீ திட்டியிருக்க!!!"

"எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்"

"மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்"

"சரி"

ஐந்து நிமிடம் கழித்து...

"அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா???"

"அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்"

"இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்"

..................

மணி 1:30. செல்போன் சிணுங்கியது.

"என்ன தூங்கலையா???"

"நீ எங்க இருக்க???"

"ஹிம்... சுடுகாட்டுல"

"ஏய் சொல்லு"

"நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க??? வீட்லதான்"

"சரி. சாரி"

"எதுக்கு"

"நான் உன்னை திட்டினதுக்கு"

"சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு"

"சரி... குட் நைட்"

"குட் நைட்"

....................

2 நாட்களுக்கு பிறகு. PGயில்

"ஏய் ஐஸு!!! யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க?"

"தனாட்ட"

"கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா? நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்"

"டேய்! அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்"

"ஏய் வேண்டாம்!!! நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்"

"சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x"

"இப்ப ஏன் கட் பண்ண... நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்"

"எதுக்கு டென்ஷன் ஆகற???? நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்"

"என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த???"

"அந்த நாயிக்கு ஆன் - சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு... போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.
6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்"

"நீ கேட்டயா???"

"கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்"

"எவ்வளவு நாள்???"

"லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா?"

""

"நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க???"

"ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்"

..............................

"தனா... நான் திவ்யா பேசறேன்"

""சொல்லு"

"ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன?"

"ஐஸ்வர்யா சொல்லிட்டாளா???"

"ஆமாம். சொல்லு"

"எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு"

"அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன???"

"இப்ப என்ன வேணும் உனக்கு???"

"நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்???"

"காரணம் எதுவும் கிடையாது"

"நீ போகனும். அவ்வளவுதான்...... இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது"

"நீ எதுவும் சொல்ல வேணாம்... எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு"

"உன் இஷ்டம்... நான் சொன்னா நீ கேக்கவா போற????"

"சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்"

"பாக்கலாம். குட் நைட்"

"பை"

................................

"ஏய் திவ்யா! தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா???"

"இல்லை. இன்னும் 2 வாரத்துலயா???""

"ஆமாம்"

"என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க"

"அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க... அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்"

" "

(தொடரும்...)

Tuesday, January 13, 2009

பிரிவு - 2

பவித்ரா ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூர்

"ஐஸு ட்ரீட் எனக்குதான்... நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???"

"டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற"

"யாரு நாங்க கூச்சப்பட்டமா???"

"வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்."

"சரி... ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?"

"எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!"

"இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?"

"ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்"

"ஆச்சர்யமா இருக்குங்க"

"ஏன்???"

"ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!"

"டேய்... ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா"

"உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க"

"தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, "இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு". நான் உண்மையான இந்தியங்க."

ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.

...........................

10 நாட்களுக்க்கு பிறகு

"தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்"

"சொல்லு"

"திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்"

"சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்"

.......................................

"ஹலோ... திவ்யா???"

"ஆமாம். நீங்க யார் பேசறது?"

"நான் சஞ்சய் ராமசாமி பேசறன்"

"ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்"

"பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே"

"உங்களை மறக்க முடியமா?"

"சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட
கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்"

"நீங்க எங்க தங்கி இருக்கீங்க?"

"நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்"

"சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?"

"சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்"

"சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க"

"ஓகே... நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க"

"சரிங்க... பாக்கலாம். பை"

...........................................

சனி கிழமை காலை 10 மணி.செல் போன் சிணுங்கியது.

"ஹலோ. தனா ஹியர்"

"நான் திவ்யா பேசறேன்"

"சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??"

"தூங்கிட்டு இருக்க்கீங்களா?"

"ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்..."

"நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு
ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!"

"சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க"

........................................

12:15, பவித்ரா ஹோட்டல்

"நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன்.
சாரிங்க"

"எதுக்கு???"

"இல்லை... நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது"

"ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்"

"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்"

"ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க"

"சரிங்க"

தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.

"ஐயய்யோ... என்னங்க இப்படி மழை பெய்யுது"

"இதுக்கு தாங்க... நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது"

முறைத்தாள்.

"கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்"

"சரிங்க... இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்"

"VB கத்துக்கறீங்க போல இருக்கு"

"ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது"

"சரி கத்துக்கோங்க.... அதுதான் உங்களுக்கும் நல்லது"

நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.

......................................

திங்கள் காலை 10 மணி.

"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.

"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"

"ஐஸ்வர்யா கொடுத்தா"

"ஹிம்... அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???"

"நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்"

"ஹிம்"

இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.

அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.

................................

"டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா"

"என்ன பண்றோம்"

"அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா... இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா... எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது"

"அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்... படி"

"டேய்! ஓவரா பேசாதடா"

"சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???"

"ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்... நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???"

.......................

இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.

"ஏய்! சொல்லு"

"சாப்பிட்டியா"

"இல்ல... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"

"ஒன்னுமில்லை"

"அழுதயா??? எனக்கு தெரியும்... உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"

" "

"ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???"

"என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் "

"என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!"

செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.

"ஏய் சாரி... ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு"

"அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற"

"உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க"

"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???"

" "

"ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு"

"நீ என்ன சொன்ன?"

"இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்"

"இப்ப நான் என்ன செய்யனும்"

" நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்"

"சரி எதுவும் கவலைப்படாம தூங்கு...குட் நைட்"

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை...."நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?" என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்.....)

Monday, January 12, 2009

பிரிவு 1

"தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?""சொல்லு... பாக்கலாம்"

"ஒண்ணும் இல்லை... என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்"

"திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?"

"ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்"

"சரி சொல்லு என்ன பண்ணனும்"

"இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்"

.........................

"ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்""

"இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ"

......................

"தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ"

"சரி"

"டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத"

"சரி.... சொல்லிட்ட இல்ல ஃபிரியா விடு"

.....................

"ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்"என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.

"சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?"

"என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?"

"சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?"

"ஐயய்யோ வேணாங்க... நான் வேற ஆளை பாக்கறேன்"

"கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?"

"நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?"

"சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்"

ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்....................................

ஒரு வாராத்திற்கு பிறகு...எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது

"ஹலோ தனா ஹியர்"

"நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்"

"எந்த ஐஸ்வர்யா?""

"நீங்க தனபாலன் தான?"

"ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க"

"உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே"

"நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க"

"சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை"

"சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?"

"ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். "

"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க"

"ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்"

"புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்"

ஒரு வழியாக விளக்கினாள்.

"உங்களுக்கு VB தெரியுமா?"

"தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு"

"ஃபிரியா விடுங்க... எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?"

"திங்க கிழமை காலைல. முடியுமா?"

"என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்"

"சாரிங்க... இந்த ஒரு தடவை மட்டும்"

"இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???"

"ட்ரீட்டா??? "

"பின்ன... போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்""

""என்னங்க பேச்சையே கானோம்"

"சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்.....எங்கனு நீங்களே சொல்லுங்க"

"லீலா பேலஸ்"

"இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..."

"சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற "Cafe Coffee Day"ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???"

"சரிங்க"

"திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்"

"ரொம்ப தேங்ஸ்ங்க"

.....................................

"டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே... உண்மையா???"

"ஆமாம்... அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்"

"கிழிக்கும்... இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!"

"ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா... இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்"

"சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ"

"ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு"

"சரி"

.....................

அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.

"ஹலோ! தனா ஹியர்"

"நான் திவ்யா பேசறேன்"

"சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???"

"ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்""

"சொல்லுங்க"

"நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?"

"இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே"

"நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா"

"சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்"

"நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்"

"உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே""

"நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்"

"சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்"

"வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே... இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?"

"சரிங்க......"

(தொடரும்)