தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, January 27, 2009

சாப்ட்வேர் இஞ்சினியர் - மாணவர்களுக்கு...

”ஏன்டா ஐடி எடுத்த?”

”மெக்கானிக்கல் கிடைக்கலண்ணே. அதான். ”

“வேற எந்த டிப்பார்ட்மெண்டும் கிடைக்கலயா?”

”இல்லைண்ணே. அதான் வேற வழியில்லாம ஐடி எடுத்தோம்.”

”இந்த அண்ணே, ஆட்டுக்குட்டியெல்லாம் செகண்ட் இயர் பசங்ககிட்ட சொல்லிடாதீங்கடா. பிரிச்சி மேஞ்சிடுவானுங்க. புரியுதா?”

“புரியுது சார்”

என்ன யாருக்கும் புரியலையா? 

இது நான் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் போது மெஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உரையாடல். எங்க செட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒரே சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. 

இதெல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்தேனு உங்களுக்கு புரியணும். நான் சேர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் போது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் செம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் போது வேலையில்லை. எங்க காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவே இல்லை. எங்க சீனியர் செட்ல அதை விட மோசம். செலக்ட் ஆன ஒரு சிலருக்கும் ஆஃபர் லெட்டர் வரலை. நாங்க வெளிய வரும் போது எங்க சீனியர்ஸே வேலை தேடிட்டு இருந்தாங்க. 

2003 கடைசில நிலைமை மாற ஆரம்பிச்சுது. போன வருஷம் (2007) வரைக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் போது இதே டயலாக்கை மெஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க கேட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்டை ;)

சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க வேண்டாம். எப்படியும் நிலைமை ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி போன அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வரை என்ன செய்யலாம்னு சொல்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்தை வெச்சி சொல்றது தான். 

ஃபில்ட் சரியாகும் போது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்லை 2010ல முடிச்சிட்டு வரவங்களும் சேர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ஸை பயன்படுத்தி உள்ளே நுழையற அளவுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளவும். 

இப்ப ஜனவரி முடியப்போகுது. உங்க பிராஜக்டை முடிவு பண்ணிருப்பீங்க. பாதி பேர் காசு கொடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வரை சொந்தமா செய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்வைஸ். அப்படி செய்யாம போகும் போது, வாங்கற ப்ராஜக்டை புரிஞ்சிக்கோங்க. அதை அக்குவேற ஆணிவேறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி செய்யவும். அதுல ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யவும். அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.

அடுத்து, முடிஞ்ச வரைக்கும் பேப்பர் ப்ரசண்டேஷனெல்லாம் முயற்சி செய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இதை நிச்சயம் முயற்சி செய்யவும். இதனால வேலை கிடைக்குமா, ரெஸ்யுமேக்கு வேல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்கை கூடும். அது தான் முக்கியம். நினைச்சதை தடையில்லாமல் நாலு  பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி செய்யலாம். இல்லைனா இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்டை க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்களே உங்களுக்குள்ள நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முறை Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி பேசி பழகறது உங்க கூச்சப்பழக்கத்தை குறைக்கும். 

காலேஜ் லைஃப்ல நிறைய படிக்க முடியும். முடிஞ்ச வரைக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காலேஜ்லயே முடிச்சிடுங்க. இந்த லிங்க்ல இருக்கறதை படிச்சா உங்களுக்கு இன்னும் பயன்படும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள காலேஜ் சரியான இடம். வெளிய வந்தா ஒரு கேள்வி புரியலைனா சொல்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ரெயினிங்னு சொல்லி கொள்ளை அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அதை நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும்.

வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். 

ஃபீல்ட் டவுன்னு சொல்லி சோகமா உட்கார்ந்துடாதீங்க. வேலை வாய்ப்பு வரும் போது தயார் செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்பை வேற யாராவது தட்டிட்டு போயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...

46 comments:

Raghav said...

தல, நல்லதா தான் சொல்லிருக்கீங்க.. இது இப்போ வேலை காலியாகப்போறவங்களுக்கு பொருந்தாதே..

வெட்டிப்பயல் said...

// Raghav said...
தல, நல்லதா தான் சொல்லிருக்கீங்க.. இது இப்போ வேலை காலியாகப்போறவங்களுக்கு பொருந்தாதே..//

தலைவா,
இப்ப காலியாக போறவங்களும் திரும்ப வருவாங்க. அவுங்களுக்கு நாம சொல்லி தர தேவையில்லை :)

TamilBloggersUnit said...

thala ennoada peelinGsa ezhuthiyirukkeenGka

Anonymous said...

அருமையாக கூறீஉள்ளிர் .
இந்த கஷ்டங்களை எல்லாம் நாங்கள் அனுபவித்து உள்ளோம் .

Anonymous said...

//உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். //

Not being racist. We have 2 south indain guys in our class & we know one direct junior (keralite)as well, all 3 hide their work. They get help from us. but secretly do their work & never show us. bit awkward though they are good friends of us.

We started calling such action as "typical indian".

Dun know when they are gonna change....May be coz they are in UG. dont know how they will act in PG...

☀நான் ஆதவன்☀ said...

தல மட்டும் டவுன் இல்ல...construction, mechanical என எல்லாமே டவுன் தான். அதுக்கும் சேர்த்து சொல்லியிருக்கலாம்

Karthik said...

நான் இப்பதான் யூ.ஜி அதுவும் பிஸிக்ஸ். எனிவே, ரொம்ப யூஸ்ஃபுல்லானா பதிவு.
:)

முரளிகண்ணன் said...

Very useful post.

Divyapriya said...

useful post அண்ணா. 3rd year படிக்கும் போது எங்க seniors ஆத்தின உரை மாதிரியே இருக்கு ;)

நாகை சிவா said...

//வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும்.//

அதே! அதே!

பாத்து சூதனமா இருந்து பொழச்சுக்குற வழி பாருங்க மக்கா!

நாதஸ் said...

Very Thoughtful post !!!

Also if possible and interested please concentrate on higher studies like MBA or ME. By the time you come out of PG, hope everything is back to normal :)

வினையூக்கி said...

அருமையாகச் சொன்னீங்க

பிரேம்ஜி said...

Very good post. Way to go.

Divya said...

அருமையான விளக்கத்துடன்...பயனுள்ள பதிவு:))

திவாண்ணா said...

வெட்டி உருப்படியான பதிவு.
அது என்ன காசுக்கு வாங்கற ஐடியா? இந்த துறை அதிகம் பரிச்சயம் இல்லை. அதனால கேக்கறேன்.

வெட்டிப்பயல் said...

//
TamilBloggersUnit said...
thala ennoada peelinGsa ezhuthiyirukkeenGka//

சேம் பின்ச் ஆ:)

வெட்டிப்பயல் said...

// Rameshkarthikeyan said...
அருமையாக கூறீஉள்ளிர் .
இந்த கஷ்டங்களை எல்லாம் நாங்கள் அனுபவித்து உள்ளோம் .

12:53 AM//

மிக்க நன்றி ரமேஷ் கார்த்திகேயன்... இதுவும் அனுபவம் தான் :)

வெட்டிப்பயல் said...

//Triumph said...
//உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். //

Not being racist. We have 2 south indain guys in our class & we know one direct junior (keralite)as well, all 3 hide their work. They get help from us. but secretly do their work & never show us. bit awkward though they are good friends of us.

We started calling such action as "typical indian".

Dun know when they are gonna change....May be coz they are in UG. dont know how they will act in PG...//

யாரையும் பொதுமைப்படுத்த வேண்டாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு மாதிரி :)

வெட்டிப்பயல் said...

//நான் ஆதவன் said...
தல மட்டும் டவுன் இல்ல...construction, mechanical என எல்லாமே டவுன் தான். அதுக்கும் சேர்த்து சொல்லியிருக்கலாம்
//

நமக்கு தெரிஞ்சதை சொல்றது தான் சரினு பார்த்தேன். பொதுவா சொல்றதைவிட நமக்கு தெரிஞ்சதை சொன்னா கேக்கறவங்களுக்கு நம்பிக்கை வரும் :)

வெட்டிப்பயல் said...

//Karthik said...
நான் இப்பதான் யூ.ஜி அதுவும் பிஸிக்ஸ். எனிவே, ரொம்ப யூஸ்ஃபுல்லானா பதிவு.
:)//

மிக்க நன்றி கார்த்திக்... நீங்க எல்லாம் ஒரு சயண்டிஸ்ட் ரேஞ்சுக்கு வரணும் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
Very useful post.//

மிக்க நன்றி முக :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
useful post அண்ணா. 3rd year படிக்கும் போது எங்க seniors ஆத்தின உரை மாதிரியே இருக்கு ;)//

ஆஹா... அப்ப யாரும் கேக்க மாட்டாங்கனு சொல்றியா?

வெட்டிப்பயல் said...

// நாகை சிவா said...
//வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும்.//

அதே! அதே!

பாத்து சூதனமா இருந்து பொழச்சுக்குற வழி பாருங்க மக்கா!//

அனுபவஸ்தங்க சொல்றோம் :)

வெட்டிப்பயல் said...

//nathas said...
Very Thoughtful post !!!

Also if possible and interested please concentrate on higher studies like MBA or ME. By the time you come out of PG, hope everything is back to normal :)//

ஆஹா.. இதை மறந்துட்டனே... எழுதனும்னு நினைச்சிட்டே இருந்தேன்... நன்றி நாத்ஸ் :)

வெட்டிப்பயல் said...

// வினையூக்கி said...
அருமையாகச் சொன்னீங்க

//

மிக்க நன்றி வினையூக்கி...

வெட்டிப்பயல் said...

//பிரேம்ஜி said...
Very good post. Way to go.//

நன்றி பிரேம்ஜி :)

வெட்டிப்பயல் said...

// Divya said...
அருமையான விளக்கத்துடன்...பயனுள்ள பதிவு:))//

மிக்க நன்றி திவ்யா

ஆதித்தன் said...

நம்பிக்கை அளிக்கும் எழுத்து.

ஷாஜி said...

நல்லதா தான் சொல்லிருக்கீங்க..

malar said...

எல்லா மாணவர்களும் +2 முடித்த பிறகு (அதாவது maths&bio)எடுத்தவர்கள் DR அல்லது Engi எடுத்து தான் படிக்கிறார்கள் .தர்போது எவ்வளவோ படிப்புகள் இருந்தாலும் அதை பற்றிய தக்கவல் எல்லோரையும் சென்று அடையவில்லை..CA போன்ற படிப்பு படிக்க maths&bio இந்த க்ரூப் எடுத்தவர்கள்ளால் முடயுமா ?சென்னையில் எங்கு படிக்க முடயும் .துபையில் படிக்கலாமா? இது படிக்க எவ்வள்ளவு சிலவாகும் ?இது போக என்ன படிப்பல்லாம் உள்ளது இதற்கென்று தனி link உள்ளதா ?தெரிந்தால் தயவு செய்து எழுதவும் .நன்றி

வெட்டிப்பயல் said...

//ஆதித்தன் said...
நம்பிக்கை அளிக்கும் எழுத்து.

11:27 PM//

மிக்க நன்றி ஆதித்தன் :)

வெட்டிப்பயல் said...

//ஷாஜி said...
நல்லதா தான் சொல்லிருக்கீங்க..

//

மிக்க நன்றி ஷாஜி :)

malar said...

IT படித்து விட்டு computer ல் புகுன்ந்து விளையாடுகிறீர்கள் .உங்கள் Blog ல் அவ்வ்ள்ளுவும் படிக்க பயனுள்ள தகவல்கள்

வெட்டிப்பயல் said...

//malar said...
எல்லா மாணவர்களும் +2 முடித்த பிறகு (அதாவது maths&bio)எடுத்தவர்கள் DR அல்லது Engi எடுத்து தான் படிக்கிறார்கள் .தர்போது எவ்வளவோ படிப்புகள் இருந்தாலும் அதை பற்றிய தக்கவல் எல்லோரையும் சென்று அடையவில்லை..CA போன்ற படிப்பு படிக்க maths&bio இந்த க்ரூப் எடுத்தவர்கள்ளால் முடயுமா ?சென்னையில் எங்கு படிக்க முடயும் .துபையில் படிக்கலாமா? இது படிக்க எவ்வள்ளவு சிலவாகும் ?இது போக என்ன படிப்பல்லாம் உள்ளது இதற்கென்று தனி link உள்ளதா ?தெரிந்தால் தயவு செய்து எழுதவும் .நன்றி//

மலர்,
எனக்கு அதை பற்றி அதிகம் தெரியாது. இந்தியாவிலிருந்தால் நண்பர்கள் யாரையாவது விசாரிக்க சொல்லலாம். ப்ளாக் நண்பர்கள் யாராவது தெரிந்தால் நிச்சயம் எழுத சொல்கிறேன்...

வெட்டிப்பயல் said...

//malar said...
IT படித்து விட்டு computer ல் புகுன்ந்து விளையாடுகிறீர்கள் .உங்கள் Blog ல் அவ்வ்ள்ளுவும் படிக்க பயனுள்ள தகவல்கள்//

மிக்க நன்றி...

கற்றது கைமண்ணளவு :)

வினோத் கெளதம் said...

பயனுள்ள பதிவு.
எல்லா துறையும் இபொழுது சற்று கிழ்நோக்கி தாங்க இருக்கு .
அதுவும் Mechanical பொழப்பு கடைசி வரைக்கும் முட்டி மோதிகிட்டு தான் இருக்கனும்.

TO MALAR,
எந்த Course வேனாலும் பண்ணுங்க. ஆனா Basicல நல்ல ஸ்ட்ராங்கா இருங்கா.
அத ரொம்ப ரொம்ப முக்கியம். என்ன பொறுத்த வரைக்கும் எந்த course(UG) இருந்தாலும் இந்தியால பண்ணறது தான் Best.
இந்த லிங்க் பாருங்க:
http://www.indiaeducation.net/CareerCenter/Advice/
நிறைய வாய்ப்புகள் இருக்கு Fashion technology, Interior designs, Cattering,Tourism, Hotel administration etc.,
உலகம் ரொம்ப பெரிசு.

Poornima Saravana kumar said...

உபயோகமான பதிவு அண்ணா...

மேவி... said...

நல்ல அட்வைஸ் அண்ணா.......
அப்போ என்னை மாதிரி ஓவரா படிச்சங்களுக்கு எதாவது அட்வைஸ் இருக்கா??

kvairamani said...

மிக அருமையான , உபயோகமுள்ள யோசனைகள்.

வைரமணி

வெட்டிப்பயல் said...

//vinoth gowtham said...
பயனுள்ள பதிவு.
எல்லா துறையும் இபொழுது சற்று கிழ்நோக்கி தாங்க இருக்கு .
அதுவும் Mechanical பொழப்பு கடைசி வரைக்கும் முட்டி மோதிகிட்டு தான் இருக்கனும்.
//
ஐடியும் அப்படித்தான்னு நினைக்கிறேன். இனிமே நிறைய இடத்துல இருந்து போட்டி வேற வரும். எப்படி சமாளிக்க போறோமோனு தெரியல...

//
TO MALAR,
எந்த Course வேனாலும் பண்ணுங்க. ஆனா Basicல நல்ல ஸ்ட்ராங்கா இருங்கா.
அத ரொம்ப ரொம்ப முக்கியம். என்ன பொறுத்த வரைக்கும் எந்த course(UG) இருந்தாலும் இந்தியால பண்ணறது தான் Best.
இந்த லிங்க் பாருங்க:
http://www.indiaeducation.net/CareerCenter/Advice/
நிறைய வாய்ப்புகள் இருக்கு Fashion technology, Interior designs, Cattering,Tourism, Hotel administration etc.,
உலகம் ரொம்ப பெரிசு.

//

அருமையா சொன்னீங்க :)

வேத்தியன் said...

நல்ல பதிவு...
புதுசா படிக்கத் தொடங்கிறவங்களுக்கும் இது நல்ல அட்வைஸ்...

Anonymous said...

Nice post Balaji... do you have any tips of how to manage if you lose your job due to layoff :)

Anonymous said...

\\Nice post Balaji... do you have any tips of how to manage if you lose your job due to layoff :) //

hi.. i meant to say, 'do you have any tips of how to manage if one loses job due to layoff'.. am sorry if it had been taken in the other sense...

cheena (சீனா) said...

நண்ப வெட்டி

ஆக்கபூர்வமான சிந்தனையை ஏற்படுத்தும் - ஊக்கமூட்டும் பதிவு - எல்லோரும் படிக்க வேண்டும்.

ஆம்

சொல்லரசன் said...

//அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.//

சொந்தமாக செய்யும் போது தான் நம்முடைதிறன் வெளிப்படும்.இந்த வரிகளை படிக்கையில் நண்பர் அகரம் அமுதா வென்பா வரிகள் ஞாபகம் வருகிறது

ஆயிரமாய் நூல்தேடி அன்றாடம் கற்றாலும்
ஆய்ந்தறியாக் கல்வியினால் ஆவதுண்டோ?

அருமையான பதிவு நண்பரே

தமிழினி..... said...

உங்களோட இந்த தொடர் பதிவுகள்ள பயனடைந்த பல பேர்கள்ல நானும் ஒருத்தி....நன்றி வெட்டியண்ணே....ஒவ்வொரு academic year end லையும்,இந்த பதிவுக்கு ஒரு மீள் பதிவு போட்டிங்கன்னா,என்னை போல பல பேர் பயனடைவாங்க...