தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Showing posts with label சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க. Show all posts
Showing posts with label சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க. Show all posts

Tuesday, January 27, 2009

சாப்ட்வேர் இஞ்சினியர் - மாணவர்களுக்கு...

”ஏன்டா ஐடி எடுத்த?”

”மெக்கானிக்கல் கிடைக்கலண்ணே. அதான். ”

“வேற எந்த டிப்பார்ட்மெண்டும் கிடைக்கலயா?”

”இல்லைண்ணே. அதான் வேற வழியில்லாம ஐடி எடுத்தோம்.”

”இந்த அண்ணே, ஆட்டுக்குட்டியெல்லாம் செகண்ட் இயர் பசங்ககிட்ட சொல்லிடாதீங்கடா. பிரிச்சி மேஞ்சிடுவானுங்க. புரியுதா?”

“புரியுது சார்”

என்ன யாருக்கும் புரியலையா? 

இது நான் மூன்றாமாண்டு பொறியியல் படிக்கும் போது மெஸ்ல முதல் வருட மாணவனிடம் நிகழ்ந்த உரையாடல். எங்க செட்ல முதல்ல ஐடியும், கம்ப்யூட்டர் சயின்ஸும் ஒரே சமயத்துல ஃபில் ஆச்சு. எங்களுக்கு அடுத்த வருஷம், முதல்ல ஐடி, அடுத்து கம்ப்யூட்டர் சயன்ஸ். அதுக்கு அடுத்த வருஷம் முதல்ல ECE. 

இதெல்லாம் புரியணும்னா நான் எந்த வருஷம், ஐடி எடுத்தேனு உங்களுக்கு புரியணும். நான் சேர்ந்தது 99ல. 2000த்துலயும் கவுன்சிலிங் நடக்கும் போது ஐடி தான் டாப். அதுக்கு அடுத்த வருஷம் செம்ம அடி. நாங்க படிச்சி முடிச்சிட்டு வரும் போது வேலையில்லை. எங்க காலேஜ்ல எல்லாம் கேம்பஸ் இண்டர்வியூவே இல்லை. எங்க சீனியர் செட்ல அதை விட மோசம். செலக்ட் ஆன ஒரு சிலருக்கும் ஆஃபர் லெட்டர் வரலை. நாங்க வெளிய வரும் போது எங்க சீனியர்ஸே வேலை தேடிட்டு இருந்தாங்க. 

2003 கடைசில நிலைமை மாற ஆரம்பிச்சுது. போன வருஷம் (2007) வரைக்கும் நல்லா இருந்தது. இப்ப மறுபடியும் ஃபீல்ட் டவுன். அடுத்த வருஷம் கவுன்சிலிங் முடிஞ்சி வரும் போது இதே டயலாக்கை மெஸ்ல 2007ல ஐடி எடுத்தவங்க கேட்கலாம். என்ன பண்ண... உலகம் உருண்டை ;)

சரி, இந்த வருஷம் முடிச்சிட்டு வரவங்க நிலைமை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கும். அதுக்காக பயந்துட்டு இருக்க வேண்டாம். எப்படியும் நிலைமை ஒரு வருஷத்துல சரி ஆகும். மிஞ்சி போன அதுக்கு அடுத்து ஒரு ஆறு மாசம் ஆனாலும் ஆகலாம். அது வரை என்ன செய்யலாம்னு சொல்ல தான் இந்த பதிவு. இது முழுக்க முழுக்க என் அனுபவத்தை வெச்சி சொல்றது தான். 

ஃபில்ட் சரியாகும் போது 2009ல முடிச்சவங்க மட்டுமிருக்கலாம், இல்லை 2010ல முடிச்சிட்டு வரவங்களும் சேர்ந்து இருக்கலாம். அதனால 2009ல முடிச்சவுங்க முதல்ல வர ஓப்பனிங்ஸை பயன்படுத்தி உள்ளே நுழையற அளவுக்கு உங்களை தயார்படுத்தி கொள்ளவும். 

இப்ப ஜனவரி முடியப்போகுது. உங்க பிராஜக்டை முடிவு பண்ணிருப்பீங்க. பாதி பேர் காசு கொடுத்து வாங்குற ஐடியால இருக்கலாம். முடிந்த வரை சொந்தமா செய்ய பாருங்க. அது தான் என் சீரியஸ் அட்வைஸ். அப்படி செய்யாம போகும் போது, வாங்கற ப்ராஜக்டை புரிஞ்சிக்கோங்க. அதை அக்குவேற ஆணிவேறயா பிரிச்சி, புரிஞ்சிக்க முயற்சி செய்யவும். அதுல ஏதாவது மாற்றம் செய்ய முயற்சி செய்யவும். அதனால கடைசி நாள்ல காசு கொடுத்து வாங்கற வேலையை செய்யாதீங்க. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வாங்க பாருங்க. மறுபடியும் என்னுடைய சஜஷன் சொந்தமா செய்யறது தான்.

அடுத்து, முடிஞ்ச வரைக்கும் பேப்பர் ப்ரசண்டேஷனெல்லாம் முயற்சி செய்யவும். நீங்க மூன்றாமாண்டு படிக்கும் மாணவராக இருந்தால் இதை நிச்சயம் முயற்சி செய்யவும். இதனால வேலை கிடைக்குமா, ரெஸ்யுமேக்கு வேல்யூ அதிகமாகுமானு எல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா உங்க தன்னம்பிக்கை கூடும். அது தான் முக்கியம். நினைச்சதை தடையில்லாமல் நாலு  பேர் முன்னாடி ஆங்கிலத்துல பேச வாய்ப்பிருக்கும்.

வகுப்புல க்ருப் டிஸ்கஷன் எல்லாம் முயற்சி செய்யலாம். இல்லைனா இரண்டாமாண்டு படிச்ச Data Structures, DBMS, OOPS.... இந்த மாதிரி ஏதாவது ஒரு சப்ஜக்டை க்ளாஸ் முழுக்க பிரிச்சி மறுபடியும் நீங்களே உங்களுக்குள்ள நடத்திக்கலாம். இது உங்களுக்கு ஒரு முறை Refresh பண்ணிக்க உதவும். அதுவுமில்லாமல் உங்க நண்பர்கள் முன்னாடி பேசி பழகறது உங்க கூச்சப்பழக்கத்தை குறைக்கும். 

காலேஜ் லைஃப்ல நிறைய படிக்க முடியும். முடிஞ்ச வரைக்கும் Quantitative Aptitude (RS Agarwal), Shakunthala Devi (Puzzles to Puzzle you, More Puzzles) எல்லாம் காலேஜ்லயே முடிச்சிடுங்க. இந்த லிங்க்ல இருக்கறதை படிச்சா உங்களுக்கு இன்னும் பயன்படும்னு நினைக்கிறேன். நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ள காலேஜ் சரியான இடம். வெளிய வந்தா ஒரு கேள்வி புரியலைனா சொல்லி தர ஆள் இருக்காது. அதுக்கு ட்ரெயினிங்னு சொல்லி கொள்ளை அடிப்பாங்க. அதனால படிக்கிற காலத்துல அதை நல்லா படிச்சிட்டா பின்னாடி சுலபமா இருக்கும்.

வெளிய வந்ததும், வேலை கிடைக்கிற வரைக்கும் சும்மா வீட்ல இருக்கலாம்னு நினைக்காதீங்க. சென்னையோ, பெங்களூரோ வந்து கொஞ்சம் கஷ்டப்படுங்க. அப்ப தான் வேலை தேடற வெறி வரும். குண்டு சட்டில குதிரை ஓட்ற வேலையெல்லாம் ஆகாது. முடிஞ்ச வரை Communication skillsஐ வளர்த்துக்கோங்க. உங்களோட டெக்னிக்கல் ஸ்கில்ஸை விட இது தான் அதிகமா வேலை செய்ய போகுது. அதனால அதுல கவனத்தை செலுத்தவும்.

தெரியாததை தயக்கமில்லாமல் நல்லா படிக்கிற (சொல்லித்தற) பசங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. அதே மாதிரி தெரியாதவங்களுக்கு சொல்லி கொடுங்க. உலகம் ரொம்ப பெருசு, நீங்க சொல்லி தருவதால் உங்ககிட்ட கேட்டவன் உங்க வேலையை தட்டிட்டு போயிடுவானு பொறாமைல சொல்லி தராம விட்டுடாதீங்க. காலேஜ் வந்து அந்த அளவுக்கு சின்ன புள்ளை தனமா இருக்க மாட்டீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு தடவை சொல்லிடறேன். 

ஃபீல்ட் டவுன்னு சொல்லி சோகமா உட்கார்ந்துடாதீங்க. வேலை வாய்ப்பு வரும் போது தயார் செய்ய ஆரம்பிச்சா நிச்சயம் அந்த வாய்ப்பை வேற யாராவது தட்டிட்டு போயிடுவாங்க. அதனால எப்பவும் தயாரா இருக்கவும்... All the very best my dear juniors...

Tuesday, August 29, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க!!!

நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க...

பாகம் 1 - முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 - தேவையான புத்தகங்கள்
பாகம் 3 - ஆங்கிலத்தில் பேசலாம்... எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 - ரெசுமே
பாகம் 5 - ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 - டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 - பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 - சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 - மென்பொருள் பயிலகம்

சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.

முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்... ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்... கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!

நன்றி

உழைப்பே உயர்வு தரும்!!!

Saturday, July 29, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8!!!

சின்ன சின்ன டிப்ஸ்:
- எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் அதில் சேரவில்லை). www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்.

-முடிந்த வரை நண்பர்களுக்கு உதவவும். எந்த கம்பெனியாவது வாக் இன் (Walk In) நடத்தினால், நண்பர்கள் அனைவருக்கும் சொல்லவும். எங்கே அவர்கள் நமக்கு போட்டியாக வந்துவிடுவார்களோ என்று நினைக்கவேண்டாம். பொறாமை நம்மை அழித்துவிடும். (நண்பர்களுக்கு நான் எந்த கம்பெனிக்கு தயார் செய்யும் முறையை சொல்லி கொடுத்தேனோ அந்த கம்பெனியிலே சேர்ந்தேன்)

-1 மணி நேரத்தில் 50-60 கேள்விகள் என்று ஆப்டிடுயுட் டெஸ்ட் இருந்தால், முதலில் எல்லா கேள்விகளையும் வாசிக்கவும். ஏனெனில் ஒரு சில கேள்விகளுக்கு படித்தவுடனே விடை தெரிந்துவிடும் (Next day after Tuesday...1,3,5,?). அதனால் துவக்கத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் கேள்விகளில் நேரத்தை வீணாக்காதீர்கள்.

- இன்போஸிஸ் தயார் செய்ய: முதலில் Quantitative Aptitude, அடுத்து shakuntala Devi's Puzzle to Puzzle You & More Puzzles, அடுத்து Puzzles and Teasers by George Summers, மிக முக்கியமானது பழைய கேள்வித்தாள்கள்.

- சின்ன சின்ன ப்ரோகிராம் எந்த நேரத்தில் கொடுத்தாலும் போடுமாறு தெரிந்து வைத்துக் கொள்ளவும். (Fibanocci Series, Find Prime Number, find whether Palindrome, sum of a number...)

- வாக் இன் (Walk In) நடத்தினால் முடிந்தவரை சீக்கிரமாக சென்றுவிடவும். 10 மணி வாக் இன் என்றால் 7-8 மணிக்கே சென்றாலும் தப்பில்லை. அழைப்பின் பேரில் (Call Letter) சென்றால் 30 நிமிடம் முன்னால் சென்றாலே போதும்.

- ஒவ்வொரு கம்பெனியாக சென்று ரெசுமே கொடுத்து நேரத்தை வீணாக்காதீர்கள். பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குகிறார்கள். அந்த நேரத்தில் உட்கார்ந்து படியுங்கள்.

-மீண்டும் சொல்கிறேன். தெரியாதவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நான் அனைத்தையும் படித்துவிட்டு சொல்லி தருவேன் என்று சொல்லாதீர்கள்.

இறுதியாக என் பள்ளியின் தாரக மந்திரமான "உழைப்பே உயர்வு தரும்" (Labor Omnia Vincit) என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்தவரை நான் அனுபவித்ததை உங்களுடன் பகிர்ந்துவிட்டேன். சீக்கிரம் வாங்க உங்களுக்காக நிறைய Treat காத்துக்கிட்டு இருக்கு....

Wednesday, July 26, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7!!!

Technical Interviewவிற்கு தயார் செய்வது எப்படினு முந்தைய பகுதியில் பார்த்தோம்.

நேர்முக தேர்வை (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்போம்.

செய்யக் கூடாதவை:
-சரியான நேரத்தில் சென்றால் போதும் நினைக்காதீர்கள்.
-அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் போடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட வேண்டாம்)
-இண்டர்வியூவின் போது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள்.
-உங்கள் வறுமை நிலைமையை சொல்லி வேலை கேட்காதீர்கள்.
-அதிக பிரசங்கி தனமாக எதுவும் பேசாதீர்கள். (Dont act over smart)
-இந்த ஊரில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

செய்யவேண்டியவை:
- 30 நிமிடத்திற்கு முன்னாதக இண்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்றுவிடவும்.
- Formalsல் செல்லவும். முழுக்கை சட்டை, பேண்ட், ஷீ அணியவும்.(Even if the company does not have dress code)
- தேவையான சர்ட்டிபிகேட் கையில் வைத்திருக்கவும். அதற்கு ஒரு செக்-லிஸ்ட் வைத்திருக்கவும். சர்ட்டிபிகேட்களை சரியான முறையில் அடுக்கி வைக்கவும். தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.
-உங்கள் பெயரை அழைத்தவுடன் உள்ளே செல்லவும்.
-உள்ளே சென்றவுடன் நட்புடன் சிரித்து வாழ்த்து சொல்லவும். (Have a Friendly Smile and Say "Hi/Hi, how r u doing?". Let it be casual)
-இண்டர்வியூ எடுப்பவர் கை கொடுத்தால் மட்டும் கை கொடுக்கவும்.
-கை கொடுக்கும் போது ஓரளவு இறுக்கமாக கை கொடுக்கவும் (Let it be Firm to show ur confident). பயம் வேண்டாம்.
-கேள்வி கேட்பவரின் கண்ணைப் பார்த்து பெசவும். 4-5 பேர் இண்டர்வியூ பேனலில் இருந்தால், கேள்வி கேட்பவரைப் பார்த்து பதில் சொல்லவும்.
-தன்னம்பிக்கையுடன் பதில் சொல்லவும். இதுவே வேலை வாங்குவதற்கு உதவும்.
-செல் போனை தவிர்க்கவும். எடுத்து சென்றாலும் அணைத்துவிடவும் (Switch it Off)
- முடிந்தவரை உண்மையை பேசவும்.

பெரும்பாலான கம்பெனிகளில் முதல் கேள்வி, உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்பதுதான். (Tell me about yourself)
என்னைக் கேட்டால் இந்த கேள்விக்கு பதிலை மனப்பாடம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒப்பிக்கற மாதிரி இருக்கக்கூடாது. பொறுமையா நிதானமாக சொல்வது மாதிரி இருக்க வேண்டும்.
(நான் மனசுக்குள்ளே இதை 100 முறையாவது சொல்லி இருப்பேன்).

Tell me about youselfல் நான் சொல்லியது இதுதான்:
என் பெயர்.
கல்வி விவரம் (கல்லூரி விவரம் போதும்)
குடும்பம் (அப்பா, அம்மா, சகோதர/சகோதிரியின் இன்றைய நிலை. அவர்கள் பேர் எல்லாம் சொல்ல தேவையில்லை. படிக்கிறார்கள் என்றால் படிக்கிறார்கள்/ வேலைக்கு செல்கிறார்கள் என்றால் என்ன வேலை அவ்வளவுதான்)
உங்கள் பொழுது போக்கு (அதிகமாக சொல்லாதீர்கள். உண்மையை சொல்லவும். நான் சொன்னது சமையல்)
உங்கள் பலம்.
அவர்கள் கேட்டால் பலவீனத்தை சொல்லவும். பலவீனமும் ஒரு வகையில் பலமாக இருக்குமாறு சொல்லவும். நான் சொன்னது, எனக்கு இரக்ககுணம் அதிகம், அதனால் மற்றவர்களுக்கு உதுவுகிறேன் பேர்வழியாக என்னையே கஷ்டப்படுத்தி கொள்வேன். ஆனால் அந்த பணி வெற்றியடைந்த பிறகு மகிழ்ச்சியாகவே உணர்கிறேன்.

முடிந்த அளவு 90-120 நொடிகளுக்குள் முடித்து கொள்ளவும். குறைந்த பட்சம் 20 முறையாவது சொல்லி பார்க்கவும்.

தன்னம்பிக்கையுடன் பேசவும், தலைகனத்துடன் வேண்டாம்.

சின்ன சின்ன டிப்ஸ்....

தொடரும்...

Sunday, July 23, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6!!!

முதல் சுற்றுக்கு தயார் செய்வது எப்படினு பார்த்தாச்சு.

அடுத்த சுற்று "Technical Interview". இந்த சுற்று பெரும்பாலும் உங்கள் ரெசுமேவைப் பொருத்தே இருக்கும்.

சொந்தமாக பிராஜக்ட் செய்திருந்தாலோ அல்லது பிராஜக்ட்டை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலோ, அதைப் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவிக்கவும்.

பிறகு அவர்கள் அதிலிருந்தே கேட்பார்கள் ஓரளவிற்கு ஒப்பேற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு பிராஜக்ட் செய்திருக்கும் Languageஐ Area Of Interestல் போடவும்.

AOIல் இருப்பதை ஓரளவிற்கு நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். AOIல் 2ற்கு மேல் போடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு OOPS தான் தெரியும் ஏன்றால் கேள்விக் கேட்பவர் அதில் திறமையில்லாதவராக இருந்தாலும் அதிலே கேட்பார். அதில் அவர் திறமையுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகவே இருக்கும்.

அதனால் 4-5ஐப் போட்டு அதில் அறைகுறையாக தெரிந்து கொள்வதைவிட 1-2 போட்டு அதில் அதிகமாக தெரிந்து கொள்வதே சிறந்தது. அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது.

முடிந்தவரை Group discussion செய்யவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிடையே Mock Interview செய்து கொள்ளவும்.

Personal Interviewவிற்கு தயார் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்...

தொடரும்...

பிகு:
AOI தேர்ந்தெடுப்பது.
C நன்றாக தெரியுமென்றால் Data Structure போட்டுக் கொள்ளலாம். Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் கொள்ளவும். என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter கொடுத்துவிட்டார்கள். புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.
C++, Java நன்றாக தெரியுமென்றால் OOPS போட்டுக் கொள்ளலாம்.
Oracle நன்றாக தெரியுமென்றால் RDBMS போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்துப் போடவும்.

Friday, July 21, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5!!!

சரி, ரெசுமே தயார் செய்வது எப்படினு பாத்தாச்சி.

முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் செய்வது எப்படினு பார்ப்போம்.

Aptitude Testல என்ன மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கலாம்???
1) Numerical Problems (எண்கணிதம்)
2) Logical/Analytical Puzzles
3) Verbal skills
4) C Programming Fundamentals

இனி ஒவ்வொன்றுக்கும் தயார் செய்வது எப்படினு பார்ப்போம்:
1) எண்கணிதம்:
இதற்கு எனக்கு தெரிந்த ஒரே தெய்வம் "Qunatitative Aptitude" by R.S. Aggarwal
இதில் முதல் 4-5 chapters வெட்டி மாதிரி தெரியும். ஆனால் அதுதான் முக்கியமான ஒன்று. எல்லா கணக்கையும் போட்டு பாருங்கள். பார்த்தா தெரிஞ்ச மாதிரி இருக்கு அதனால போட்டு பார்க்க தேவையில்லைனு விட்டுவிடாதீர்கள்.
கணக்கை பொருத்தவரை திரும்ப திரும்ப போட்டு பார்த்தால்தான் வரும்.

எனக்கு தெரிந்த வரை முக்கியமான chapters:
1) Problems on Numbers.
2) Problems on Ages
3) Time and Work
4) Pipes and Cisterns
5) Percentages
6) Profit and Loss
7) Series or Find the Odd ones
8) Venn Diagram (Satyam, CTS...)

Probability & Permutation and Combination அந்த புத்தகத்தில் இருக்காது. அதனால் இதை CAT/GRE படிப்பவர்களிடமிருந்து நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.
HCL Cisco முதல் சுற்றில் 20ல் 14 கேள்விகள் Probability & Permutation and Combinationல் இருந்து வந்தன. அந்த தேர்வில் நான் தேர்ச்சி பெற அதுவே உதவியது. ஏனென்றால் அனைவரும் R.S. Aggarwal படித்திருந்தனர். (இண்டெர்வியுல ஊத்திக்கிச்சு :-))

2) Logical/Analytical Puzzles:
இதற்கு நான் பயன்படுத்தியது IMS GRE Material. நான் GRE படிக்கவில்லை. ஆனால் நண்பனிடமிருந்து வாங்கி பயன்படுத்திக் கொண்டேன். இதற்கு எல்லாம் பெரிய புத்திசாலிதனம் தேவையில்லை. எல்லாமே 8-10 மாணவர்கள்கூட போட்டுவிடுவார்கள்.
ஒவ்வொரு மாதிரியான puzzlesம் எப்படி அணுக வேண்டுமென்று அந்த புத்தகத்தில் இருக்கும். மகிழ்ச்சியாக படியுங்கள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
படித்ததை தெரியாதவருக்கு சொல்லிக் கொடுங்கள்.

3) Verbal skills :
இதை பற்றி ஒரு பதிவே போட்டாச்சு.

4) C Programming Fundamentals:
"Let us C", "Pointers in C", "Test ur C Skills"- Yashwant Kanitkar.
இதற்கு மேல் எதுவும் தேவையில்லை. முதலில் "Let Us C"ல் ஆரம்பிக்கவும்.
பிறகு "Pointers in C". "Test ur C Skills"ல் கேள்வி பதில்கள் இருக்கும். தேர்வுக்கு முன்னால் கண்டிப்பாக ஒரு முறையாவது படிக்கவும்.

அடப்பாவி நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு இத்தனை புத்தகத்தை சொல்லிட்ட. படிக்கற கஷ்டம் எங்களுக்கு தான தெரியும்னு சொல்லறீங்களா?
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது கண்ணா...

ஒரு நாள் முழுக்க Quants, அடுத்த நாள் Verbal, அடுத்து Analytical, அடுத்து technicalனு படிக்காதீங்க!!! தினமும் ஒவ்வொன்றிற்கும் 2-3 மணி நேரம் ஒதுக்கி படியுங்கள். இது பெங்களூர், சென்னைனு போய் mansionல தங்கி வேலை தேடுபவர்களுக்கான நேர ஒதுக்கீடு. மற்றவர்கள் அவரவருக்கு தகுந்த மாதிரி ஒதுக்கி கொள்ளவும்.

தொடரும்....

PS: கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் மறந்த பல விஷயங்களை நியாபகப்படுத்தியதற்காக

Wednesday, July 19, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4!!!

மென்பொருள் துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்????

பொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,
முதல் சுற்று: Aptitude Test.
இரண்டாவது சுற்று: Technical Interview
மூன்றாவது சுற்று: HR Interview
இதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.

சரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக ரெசுமே தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று ரெசுமே (Resume).

நாங்க வேலை தேடும் போது செய்த பெரிய தவறு, நம்மை முதலில் தயார் செய்து கொண்டு ரெசுமே தயார் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியுலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று உணர்ந்தோம்.

ஆகவே வேலை தேடும் போது முதலில் தேவைப்படுவது ரெசுமே தான்.
ரெசுமே எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.

1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது.
2) SSLC, +2, டிகிரி மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.
3) எனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நினைத்து தெரியாததை எல்லாம் போடாதீர்கள். டிகிரியில் படித்த அனைத்தையும் Area Of Interestல் போடாதீர்கள். நன்றாக தெரிந்ததையே முடிந்த அளவு போடுங்கள். இல்லையென்றால் ரெசுமேவில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நான் பார்த்த ரெசுமே ஒன்றில் இருந்தது:
Known:
Operating System: DOS, Windows 9x/ME/XP, Linux, Unix
Languages: C, C++, Java, COBOL...
Packages: VB, .NET...
DataBase: Oracle 8, MS Access, DB2, Sybase
Area Of Interest**: Data Structure, Object Oriented Concepts, DBMS, Computer Networks, Compiler Design, Microprocessor...
உண்மையில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுமே ஒழுங்காக தெரியாது. இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து எதையும் படிக்கமாட்டான்.
4) அதிக பில்ட் அப் கொடுக்காதீர்கள். (Achievements: உண்மையாக ஏதாவது இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் போடுவது தேவையில்லை என நினைக்கிறேன்)
5) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.

**Area Of Interest:
நான் படிக்கும் போது ரொம்ப யோசிச்சி எல்லாம் படிச்சதில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், Object Oriented Conceptsஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் Freshers க்கு கேட்கும் கேள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.
(Abstraction, Encapsulation, Inheritance, Diff Bw Structural Approach and OOPs...).
முடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு மேல் போட வேண்டாம் என்பது என் எண்ணம்.

படிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன். எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா டெவலப்பராகவோ/நெட் ஒர்க் அனலிஸ்டாகவோ/ டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.

Aptitude Testக்கு தயார் செய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்...

PS:

வைக் அவர்களின் பின்னூட்டம்:
AOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))

அதாவது அவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.

Friday, July 14, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3!!!

நாங்க பெங்களூர் வந்தவுடன் புரிந்து கொண்ட விஷயம் நம்மைத்தவிர (தமிழர்களை) எல்லாரும் நல்லா இங்கிலீஸ் பேசுறானுங்க (ஆந்திராக்காரர்கள் நம்மைவிட மோசம்). நம்ம ஊர் பொண்ணுங்களும் பட்டையைக் கிளப்புறாங்க. (இதுக்கு தான் கடலை போடும் போது இங்கிலீஸ்ல பேசறாங்கனு புரிஞ்சிது).

எங்க கூட வந்த ஒருத்தனுக்கு இங்கிலீஸ்ல பேசனா வேலை கிடைத்துவிடும்னு நம்பிக்கை. நம்ம முதல் ரவுண்ட் கிளியர் பண்ணாதான இண்டர்வியூ. அதுக்கு முதல்ல தயார் பண்ணுவோம்னு நான் சொன்னன். அவன் என் பேச்சைக் கேக்காம "Call Center Training"ல 5000 குடுத்து சேர்ந்தான்.

முதல் வாரம் அவர்கள் எடுத்தது Basic Grammer (Tense, Verb, Noun, Adjective...). நம்ம எல்லாம் அதை எட்டாவதுல படித்து இருப்போம். இரண்டாவது வாரம் ஒரு தலைப்பை கொடுத்து 10 நிமிடம் பேச சொன்னார்கள். மூன்றாவது வாரம் GD.கடைசி வாரம் திடீரென்று தலைப்பை கொடுத்து பேச சொல்வார்கள்.இந்த Trainingக்கு எதற்கு 5000?

இதை நாங்களே ரூம்ல செய்யலாம்னு யோசிச்சி பண்ண ஆரம்பித்தோம்.
முடிந்தவரை ஒருவருக்கொருவர் இங்கிலீஸ்லயே பேசிக் கொண்டோம் (இது பயங்கர ஜோக்காக இருக்கும்). தினமும் ஒருவர் மற்றவர்களுக்கு தலைப்பை குடுத்து பேச ஆரம்பித்தோம்.முதலில் மிகவும் சுலபமான தலைப்பை குடுத்துக் கொண்டோம். பிறகு ஒருவனுக்கு நான் சுலபமான தலைப்பு என்று குடுத்தது அவனுக்கு கடினமாக தோன்ற பதிலுக்கு அவன் அடுத்தவனுக்கு கடினமான தலைப்பை குடுக்க... நல்லா சூடு பிடிக்க ஆரம்பித்தது.

கண்ணாடியைப் பார்த்து பேசிப்பழகுவது என் நண்பன் ஒருவன் சொன்ன அறிவுரை. அது எங்கள் அனைவருக்கும் பயன்பட்டது. 2 மாசத்துல எங்களுக்கே நம்பிக்கை வர ஆரம்பித்தது.

நான் சந்தித்த நபர்களில் பெரும்பாலும் எங்களை போலவே ஆங்கிலம் பேச தயங்குபவர்கள் அதிகம். அவர்களுக்கு நான் சொன்னதெல்லாம் இதுதான். ஆங்கிலம் என்பது நம் தாய் மொழியல்ல. அது நம் அறிவின் அளவுகோலும் அல்ல. அதில் நாம் பண்டிதர்களாக வேண்டிய தேவையுமில்லை. ஓரளவிற்கு திக்காமல் திணராமல் நாம் சொல்ல நினைத்ததை சொன்னாலே போதும்.

தினமும் "The Hindu" editorial page சத்தம்போட்டு படிக்கவும். தினமும் குறைந்தது 1-2 மணி நேரம் ஆங்கில செய்தித்தாள் படிக்கவும், GD அல்லது தலைப்பைக் கொடுத்துப் பேச பயன்படுத்திக் கொள்ளலாம். தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்துக்கொண்டு அதை எப்படியும் தினமும் பயன்படுத்தவும்.

பேசுவதற்கு ஆள் இல்லை என்றால் Airtel/Hutch customer careக்கு போன் செய்து பேசவும். என் பக்கத்து ரூம்ல இருப்பவன் இதை தான் செய்வான். அவனுடைய கேள்விகள் எதுலயும் logic இருக்காது. இருந்தாலும் அவன் தயங்காமல் முப்பது நிமிடம் பேசுவான். (eg. Is Airtel better than Hutch, Y there is no signal in Electronic City?, which is the better plan in Airtel....)

யார் கிண்டல் செய்தாலும் வருத்தப்படாதீர்கள். கிண்டல் செய்ற எந்த நாயும் சுண்டல் கூட வாங்கி தரமாட்டானுங்கனு மனதிற்குள் சொல்லிக்கொள்ளவும் :-).

தயவு செய்து பணத்தை "Call Center training"க்கு குடுத்து வீணாக்காதீர்கள். எந்த மொழியையும் நமக்குள் யாரும் திணிக்க முடியாது, பழக பழக தானாக வந்துவிடும்...

தொடரும்....

Thursday, July 13, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2

இப்ப நான் சொல்ல போறது, காலேஜ் முடித்து வேலை தேடுபவர்களுக்கு. (நான் சொல்வது எல்லாம் average மற்றும் Below average மாணவர்களுக்கு. புத்திசாலி மாணவர்களுக்கு சொல்லி தரும் அளவுக்கு என்னிடம் சரக்கு இல்லை)

நீங்க எந்த இஞ்ஜினியரிங் (even MCA/ MSc) வேண்டுமென்றாலும் படித்திருக்கலாம். கம்ப்யூட்டர் இஞ்ஜினியர்களுக்கு மட்டும் தான் Software field என்று நினைக்காதீர்கள்.
எனக்கு மேனாஜராக இருந்தவர்கள் மெக்கானிக்கல் மற்றும் சிவில் படித்தவர்களே. கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு கொஞ்சம் ஈஸியாக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமென்றாலும் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவையான ஒன்று ஈடுபாடு மட்டுமே.

நீங்க Fresherஆக வேலை தேடுபவர்கள் என்றால் உங்களிடம் இந்த புத்தகங்கள் இருப்பது அவசியம்.
1) Quantitative Aptitude by R.S. Aggarwal
2) Dictionary (even u can have the E-copy, its OK)
3) Let Us C
4) Pointers in C

இதை எப்படி படிப்பது என்பது பின்னால் சொல்கிறேன். இப்ப எங்க கதைய சொல்றேன்.

நம்ம பசங்களுக்கு எல்லாம் (என்னையும் சேர்த்து) இங்கிலிபிஸ் அவ்வளவு நல்லா பேச வராது. காரணம் காலேஜ்ல நாமாலும் இங்கிலிபிஸ்ல பேச மாட்டோம். பேசறவனையும் விட மாட்டோம். ஏன்னா காலேஜ்ல படிக்கும் நம்மளைப் பொருத்தவரை
இங்கிலீஸில் பேசவது ஒரு பாவச்செயல்.
இங்கிலீஸில் பேசவது ஒரு பெருங்குற்றம்.
இங்கிலீஸில் பேசவது ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.

கடலை போடுபவர்கள் மட்டும் தான் இங்கிலீஸில் பேசுவார்கள். நம்மல மாதிரி ஆளுங்க எல்லாம் காலேஜ்க்கு வந்தாலே பெரிய விஷயம். அதுல போயி இங்கிலீஸ்ல பேசிட்டாலும் (இதுக்கெல்லாம் பின்னாடி அனுபவித்தோம்).
ஆனால் எங்களை மாதிரி கூட்டம் தான் எல்லா காலேஜ்லயும் அதிகம்.
Cosmopoliton cityல படித்த நாங்களே இப்படினா (சும்மா build-up :-)), மத்த ஊர்ல படித்தவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

எதுவுமே தெரியலனாலும் Software Industryக்கு நல்லா இங்கிலீஸ் பேச தெரிஞ்சா பொதும். வேலையும் வாங்கிடலாம், வாழ்க்கையும் ஓட்டிடலாம். ஆனால் நமக்கு அங்க தான் தகராறு. Linked List Programகூட 15 நிமிஷத்துல போட்டுடுவன். ஆனால் 15 நிமிஷம் தொடர்ந்து இங்கிலீஸ் பேசனும்னா??? ஆண்டவா ஏன் இப்படி சோதிக்கிறனு தோணும்!!!

ஆனால் நாங்களும் இங்கிலிஸ்ல பேசி வேலை வாங்கனோம். அதுக்கு நாங்க நிறையா கஷ்டப்பட்டோம். நாங்க என்ன செய்தோம்.....

----தொடரும்

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1!!!

இந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.
ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.

சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).

சில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)
1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.
2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.
3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.
4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.
5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.
8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)
இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.

நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.
பெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.

அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.

மொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.
ஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.
எங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.

நான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.