முதல் சுற்றுக்கு தயார் செய்வது எப்படினு பார்த்தாச்சு.
அடுத்த சுற்று "Technical Interview". இந்த சுற்று பெரும்பாலும் உங்கள் ரெசுமேவைப் பொருத்தே இருக்கும்.
சொந்தமாக பிராஜக்ட் செய்திருந்தாலோ அல்லது பிராஜக்ட்டை பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலோ, அதைப் பற்றி அவர்கள் கேட்கும் முன்னரே தெரிவிக்கவும்.
பிறகு அவர்கள் அதிலிருந்தே கேட்பார்கள் ஓரளவிற்கு ஒப்பேற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு பிராஜக்ட் செய்திருக்கும் Languageஐ Area Of Interestல் போடவும்.
AOIல் இருப்பதை ஓரளவிற்கு நன்றாக தெரிந்துக் கொள்ளுங்கள். AOIல் 2ற்கு மேல் போடாதீர்கள். ஏனென்றால் உங்களுக்கு OOPS தான் தெரியும் ஏன்றால் கேள்விக் கேட்பவர் அதில் திறமையில்லாதவராக இருந்தாலும் அதிலே கேட்பார். அதில் அவர் திறமையுள்ளவராக இருந்தாலும் Fresher என்பதால் ஓரளவு சுலபமாகவே இருக்கும்.
அதனால் 4-5ஐப் போட்டு அதில் அறைகுறையாக தெரிந்து கொள்வதைவிட 1-2 போட்டு அதில் அதிகமாக தெரிந்து கொள்வதே சிறந்தது. அகல உழுவதைவிட ஆழ உழுவதே சிறந்தது.
முடிந்தவரை Group discussion செய்யவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். படித்ததும் மறக்காது. நண்பர்களிடையே Mock Interview செய்து கொள்ளவும்.
Personal Interviewவிற்கு தயார் செய்வது என்று அடுத்து பார்க்கலாம்...
தொடரும்...
பிகு:
AOI தேர்ந்தெடுப்பது.
C நன்றாக தெரியுமென்றால் Data Structure போட்டுக் கொள்ளலாம். Stack, Queue, Linked List, Search, Sort Program எல்லாம் எழுத கற்றுக் கொள்ளவும். என் நண்பன் ஒருவனுக்கு Linked List Program எழுதனவுடன் ஒரு MNCல் Offer letter கொடுத்துவிட்டார்கள். புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.
C++, Java நன்றாக தெரியுமென்றால் OOPS போட்டுக் கொள்ளலாம்.
Oracle நன்றாக தெரியுமென்றால் RDBMS போட்டுக் கொள்ளலாம். கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்துப் போடவும்.
3 comments:
//தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும். தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதனாலயே அதிகம் கற்றுக் கொள்ள முடியும். //
Exactly. Very Very important learning technique. I have used this technique from my school days and have been using now also. Very very helpful in learning. You get into a Win-Win Situation because of this. And get trust of others also, which is a very important thing to grow and suceed.
//புரிந்து படித்தால் Data Structure வாழ்க்கை முழுக்க மறக்காது.//
Everything in life is like that. :-)
குமரன்,
மிக்க நன்றி.
நான் Data Structure சொன்னதுக்கு காரணம், பலப் பேர் அதை கஷ்டமான பாடம்னு நினைச்சிட்டு இருக்கறதாலதான்.
இன்னோரு விஷயம் நான் அதிக நபர்களுக்கு சொல்லிக் கொடுத்ததும் அது தான்.
Post a Comment