பிரிவு-1 பிரிவு-2 பிரிவு-3
"திவ்யா, நான் வர வாரம் இல்லாம அடுத்த வாரம் சனிக்கிழமை சிக்காகோ கிளம்பறன்"
"ஹிம்... இப்பதான் ஐஸ் சொன்னா"
"இப்ப சந்தோஷமா???"
"என் ஃபிரெண்ட் ஆன் சைட் போனா எனக்கு சந்தோஷம்தான். ஏன் உனக்கு இல்லையா???"
"ஹிம்... அதெல்லாம் எதுக்கு. இந்த வாரம் ஷாப்பிங் போகனும்"
"ஆமாம் நிறைய வாங்க வேண்டியதிருக்கும். என் பிராஜக்ட் மேட் சவ்ரவ் இந்த வீக் என்ட் கிளம்பறான். அவன் ஒரு செக் லிஸ்ட் வெச்சிருந்தான். நான் அதை நாளைக்கு உனக்கு மெயில்ல அனுப்பறேன். இந்த சனிக்கிழமை போய் எல்லாம் வாங்கலாம்"
"சரி... "
..................
அடுத்த நாள் செக் லிஸ்ட் அனுப்பி 10 நிமிடத்திற்குள் போன் செய்தாள்.
"செக் லிஸ்ட் பாத்தியா???"
"ஹிம்.. பாத்துட்டே இருக்கேன்"
"நீ இன்னும் அதை பாத்திருக்க மாட்டன்னு எனக்கு தெரியும்... கதை விடாத"
"சரி... அனுப்பிட்ட இல்ல! அப்பறம் என்ன???"
"இரு... நாளைக்கு என்ன என்ன வாங்கலாம்னு முடிவு பண்னிக்கலாம். மீதியெல்லாம் நீ உன் ஃபிரெண்ட்ஸோட போய் சன்டே வாங்கிக்கோ"
"ஏன் சன்டே உன் பிளான் என்ன???"
"நான் உன்கிட்ட சொல்லலையா எங்க கிளாஸ் கெட்-டுகெதர் இருக்கு"
"சன்டே முழுசா ஒன்னா இருக்க போறீங்களா???"
"மதியம் லன்ச் சாப்பிட்டு, படத்துக்கு போயிட்டு அப்படியே சுத்திட்டு நைட் டின்னர் சாப்பிட்டு வரலாம்னு இருக்கோம்"
"நீ அவசியம் போகனுமா?"
"ஏய்!!! நாந்தான் பொண்ணுங்க சைட் ஆர்கனைசர்... நான் கண்டிப்பா போயாகனும்... ஏன் கேக்கற???"
"ஒன்னுமில்லை... அப்பறம் நாளைக்கு நீ வர தேவையில்லை. ஏற்கனவே என் ஃபிரண்ட்ஸ் ஷாப்பிங் வரன்னு சொல்லியிருக்காங்க"
"ஏன் வீணா டென்ஷன் ஆகற"
"அதெல்லாம் ஒன்னுமில்லை. நாங்க 4 பேர் ஏற்கனவே பிளான் பண்ணி வெச்சிட்டோம். எப்படியும் நீ வந்தா பெட்டியெல்லாம் வாங்க வசதியா இருக்காது. நிறையா வாங்க வேண்டியிருக்கும். நீ தான் லிஸ்ட் அனுப்பனியே அதுவே போதும். தேங்ஸ்"
"ஏன் இப்படியெல்லாம் பேசற"
"அதெல்லாம் ஒன்னுமில்லை. இப்ப எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் நைட் கூப்பிடறேன்"
"சரி"
............................
"சொல்லு"
"நைட் கூப்பிடறன்னு சொன்ன... ஏன் கூப்பிடல???"
"இன்னும் நைட் முடியலைனு நினைக்கிறேன்"
"மணி 10. எப்பவும் நீ 9 மணிக்கெல்லாம் கூப்பிடுவ இல்ல???"
"திவ்யா, வேலை அதிகமா இருக்கு. ஆன் சைட் போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டு போக சொல்லியிருக்காங்க. அடுத்த வாரம் எப்படியும் 2 நாள் தான் வேலை செய்ய முடியும். மீதி நேரமெல்லாம் knowledge Transferலையும், லேப் டாப், செக்யுர் ஐடி வாங்கறதலையும் போயிடும். இதுக்கு நடுவுல நிறைய ட்ரெயினிங் வேற இருக்கும். எப்படி டிரெஸ் போடனும், எப்படி சாப்பிடனும்னு வேற சொல்லி கொடுப்பானுங்க... முன்ன பின்ன நம்ம இதெல்லாம் பண்ணாத மாதிரி. அப்பறம் எக்கசக்க ட்ரீட் வேற கொடுக்க வேண்டியதிருக்கும்... போதுமா?"
"இப்ப எங்க இருக்க?"
"ஆபிஸ்லதான்"
"சரி நீ வேலை பாரு... அப்பறமா கூப்பிடு..."
"சரி... நான் உனக்கு வீட்டுக்கு போய் போன் பண்றேன்"
"ஓ.கே.... பை"
..........................................
"தனா, ஏன் வீக் என்ட் போன் பண்ணல???"
"சனிக்கிழமை ஷாப்பிங் போயிட்டு வரத்துக்கு டைம் ஆகிடுச்சு. ஞாத்திக் கிழமை நீ உன் ஃபிரண்ட்ஸ் கூட இருப்பன்னு கூப்பிடல"
"நைட்டாவது கூப்பிட்டிருக்கலாம் இல்ல"
"நீ எப்ப வருவன்னு யாருக்கு தெரியும்... ஏன் நீ கூப்பிட்டு இருக்கலாம் இல்ல"
"நீ கூப்பிட்றயா இல்லையானு பாத்துட்டு இருந்தேன்"
"நீங்களா கூப்பிட மாட்டீங்க நாங்க தான் கூப்பிடனும்... இல்ல"
"சரி திட்டாத... இப்ப நாந்தானே கூப்பிட்டேன்... நீ ஒன்னும் கூப்பிடல இல்ல"
"சரி விடு... அப்பறம் நான் இந்த வாரம் லன்ச்க்கு வர முடியாது. வேலை அதிகமா இருக்கு... உள்ளையே சாப்பிட்டுக்கறேன்"
"சரி... நீ ஃபிரியா இருக்கும் போது கூப்பிடு"
"ஓகே... பை"
"பை"
...............................
வெள்ளி இரவு 11 மணி
"நான் தனா பேசறேன்"
"தெரியுது சொல்லு"
"நான் நாளைக்கு கிளம்பறேன். அதான் உன்கிட்ட சொல்லலாம்னு போன் பண்ணேன்"
"சரி. எல்லாம் வாங்கிட்டயா"
"எல்லாம் பேக் பண்ணியாச்சு. கிளம்ப வேண்டியதுதான் மிச்சம்"
"எப்ப திரும்ப வருவ???"
"தெரியல... இது வரைக்கும் போன எவனும் திரும்ப வரல... நான் மட்டும் என்ன லூசா???"
"அப்ப எங்களை எல்லாம் மறந்துடுவ இல்ல"
"உங்களை எல்லாம் மறப்பனா???"
"இந்த ஒரு வாரத்தில எனக்கு ஒரு தடவை கூட போன் பண்ணல... நீ தான் அமெரிக்கா போய் எனக்கு போன் பண்ணுவயா???"
"உனக்கு நானா முக்கியம். உன் ஃபிரெண்ட்ஸ்தான் முக்கியம்... "
"ஏன் இப்படி பேசற??? எனக்கு நீ முக்கியம் இல்லனு யார் சொன்னா???"
"இங்க இருக்கற ஃபிரெண்ட்ஸ அடுத்த வாரம் கூட நீ பாத்துக்கலாம். ஆனால் எனக்காக நீ அதை கூட விட்டுக்கொடுக்கல இல்ல?"
"நான் கெட் டூகெதர் போனனானு உனக்கு தெரியுமா???"
"நீ போகலயா???""
""அதை கேக்க கூட உனக்கு பொறுமையில்லை"
"அத நீ தான் சொல்லியிருக்கனும்"
"எப்ப தனா என்ன சொல்லவிட்ட??? உனக்கு போன வெள்ளி கிழமை நைட் நான் போன் பண்ணப்ப திரும்ப பண்றனு சொன்ன... ஆனால் பண்ணவே இல்லை. நீ போன் பண்ணுவனு நான் ரெண்டு நாளா வெளியவே போகலை. ஆனால் கடைசி வரைக்கும் நீ எனக்கு போன் பண்ணவே இல்ல"
"திவ்யா... இந்த ஒரு வாரம் எப்படி இருந்துச்சு திவ்யா????"
"ஏன் கேக்கற???"
"சொல்லு"
"எனக்கு தெரியல..."
"இந்த ஒரு வாரம் முழுசா நீ மதியம் சாப்பிடல. எனக்கு தெரியும். ஐஸ் என்கிட்ட சொன்னா... அது ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா???"
"எனக்கு சாப்பிட பிடிக்கல"
"ஏன் திவ்யா பொய் சொல்ற? ரெண்டு நாளா நீ அழுதுட்டு இருக்கறதும் எனக்கு தெரியும்."
"தெரிஞ்சும் நீ எனக்கு போன் பண்ணல.... என்ன விட்டுட்டு நீ போற... எப்படி உன்னால முடியுது தனா??? என்ன விட்டுட்டு நீ இருந்துடுவ இல்ல??? "
"எனக்கு தெரியல திவ்யா!!! உன்கிட்ட பேசாம என்னால இருக்க முடியுமானு எனக்கு தெரியல. அதுக்காக நானா ஏற்படுத்திக்கிட்ட ஒரு பிரிவுதான் இது. ஆனால் இந்த ஒரு வாரம் எனக்கு ஒரு யுகமா இருந்துச்சு... நீ வாழ்க்கை முழுசா என் கூடவே இருக்கனும் போல இருக்கு திவ்யா! இருப்பியா?"
"தனா என்ன சொல்ற???"
"எனக்கு உன்ன பிடிச்ச்சிருக்குனு சொல்றன். நீ வாழ்க்க முழுசா என் கூடவே இருக்கனும்னு சொல்றன். என்ன கல்யாணம் பண்ணிக்குவியானு கேக்கறன்"
"நல்ல நேரம் பாத்து கேக்கற தனா... இவ்வளவு நாள் ஆச்சா இத கேக்கறதுக்கு?"
"அப்படினா... என்னை உனக்கு புடிச்சிருக்கா திவ்யா???"
"நான் எந்த பசங்க கூடயாவது இந்த அளவுக்கு பேசி பாத்திருக்கயா??? யார் கூடவாவது நான் வண்டில போய் பாத்திருக்கயா??? வேற எந்த பிரண்ட்ஸ்கிட்டயாவது ஐஸ்வர்யா பேசும் போது அவளை சீக்கிரம் பேச சொல்ல்லிருக்கனா???
உன் கூட இருக்கும் போதுதான் நான் சேஃபா இருக்கற மாதிரி ஃபீல் பண்றன். ஏன்னு எனக்கே தெரியல"
"திவ்யா நான் இப்ப உன்ன பாக்கனும்... நான் புறப்பட்டு வரன்"
"ஏய் லூசு... மணி 11:30... நான் வெளில வர முடியாது. நாளைக்கு பாக்கலாம்"
"சரி காலைல 6 மணிக்கு மீட் பண்ணலாம். போனை வைக்காத... நைட் ஃபுல்லா நான் உன்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு"
"முதல்ல நீ போய் தூங்கு. நம்ம காலைல மீட் பண்ணலாம். நான் ஏர்போர்ட்க்கு வர முடியாது"
"ஏன்???"
"உங்க அப்பா, அம்மா வருவாங்க இல்ல"
"யாரு உங்க மாமா, அத்தையா???
நீ வா... நான் இன் ட்ரடியூஸ் பண்ணி வெக்கறேன். உங்க மருமகளை பாருங்கனு சொல்றன்"
"ஏன் இவ்வளவு எக்ஸைட் ஆகற???
நான் கண்டிப்பா வர முடியாது. எனக்கு பயமா இருக்கு"
"லூசு... பயப்படாம வா. எங்க அப்பா, அம்மா இங்க வரலை. எல்லாம் சென்னை வராங்க. இங்க ஃபிரெண்ட்ஸ் மட்டும் தான்"
"அப்ப சரி... நான் ஐஸ்வர்யாவையும் கூப்பிட்டு வரேன். யாருக்கும் சந்தேகம் வராது"
"சரி. நீ போயிட்டு எப்ப வருவ???"
"நான் போறது பைலட் பிராஜக்ட். சரியா பண்ணலைனா 1 மாசத்துல தொறத்தி விட்டுடுவாங்க... "
"அப்படினா???"
"1 மாசத்துல நான் இங்க இருப்பனு அர்த்தம் ;)"
.............................
ஒரு வழியாக யு.எஸ் வந்து சேர்ந்து 6 மாசமாகிவிட்டது. 1 மாசத்துல ஊத்திக்கும்னு நினச்ச பிராஜக்ட் நல்ல படியா போயிடுச்சு. சிக்காகோவி்லிருந்து பாஸ்டன் வந்து சேர்ந்து 5 மாசமாகிவிட்டது. GTalk ஆல் மாத சம்பளம் ஓரளவிற்கு சேமிக்க முடிகிறது.
"சாப்பிட்டயா???"
" "
"திட்டாத... அடுத்த மாசம் கண்டிப்பா வந்துடுவன்... பாலாஜிக்கு எல்லா Trainingம் முடிஞ்சிது.. ."
" "
"நிஜமாதான் சொல்றேன்...
நாயி வேணும்னே பொறுமையா கத்துக்கிறான்"
" "
"'சும்மா சொன்னேன்... அவன் நல்ல பையன் தான்...
அப்பறம் ஓரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன்.... அவன் நம்ம கதையை அவன் பிளாக்ல பிரிவுனு ஒரு தலைப்புல எழுதறான்... இது தான் அவன் பிளாக் URL : http://vettipaiyal.blogspot.com/ "
" "
"ஏய் திட்டாத!!! நான் தான் சும்மா விளையாட்டுக்கு எழுத சொன்னேன். இது அப்படியே பிரிண்ட் அவுட் எடுத்து எங்க மாமா, அத்தைக்கிட்ட கொடுத்துடு"
" "
(முற்றும்...)
பி.கு:
இது நிஜமா, கதையானு கேக்கறவங்களுக்கு என் பதில் "No Comments"...
தத்துவம்
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Wednesday, August 30, 2006
Tuesday, August 29, 2006
சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க!!!
நான் எழுதிய இந்த தொடரை ஒரே பதிவில் தருமாறு நாமக்கல் சிபி அவர்களின் விருப்பத்திற்கிணங்க...
பாகம் 1 - முன்னுரை (சில தவறான புரிதல்கள்)
பாகம் 2 - தேவையான புத்தகங்கள்
பாகம் 3 - ஆங்கிலத்தில் பேசலாம்... எளிமையான வழிமுறைகள்
பாகம் 4 - ரெசுமே
பாகம் 5 - ஆப்ட்டிடுயுட் (Well beginning half done)
பாகம் 6 - டெக்னிக்கல் இன்டர்வியு
பாகம் 7 - பர்சனல் இன்டர்வியு
பாகம் 8 - சின்ன சின்ன டிப்ஸ்
பாகம் 9 - மென்பொருள் பயிலகம்
சொல்ல மறந்த கதை
முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
உங்களுடைய எந்த ரெக்கார்ட் நோட்டுகளையும் தொலைக்காதீர்கள். நான் எந்த இன்டர்வியூவிற்கு சென்றாலும் அதற்கு முதல் நாள் என் ரெக்கார்டை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் செல்வேன்.
முதல் வருட ரெக்கார்ட் நோட் மிக முக்கியம். சின்ன சின்ன C ப்ரோக்ராம் படிக்க அது உதவும்... ரெக்கார்ட் நோட் இல்லையென்றால் ஜுனியர் பசங்களை பிடியுங்கள்... கண்டிப்பா ஜெயிக்கலாம்!!!
நன்றி
உழைப்பே உயர்வு தரும்!!!

லொள்ளு
நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...
சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே...
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...
காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ
சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?
ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"
கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???
இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது... பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் ;)

Monday, August 28, 2006
பிரிவு - 3
பிரிவு -1 பிரிவு-2 பிரிவு-4
ஞாயிறு இரவு 9 மணி.
செல்போன் சிணுங்கியது
"ஏய் சொல்லு. எங்க இருக்க? ஊருல இருந்து வந்துட்டியா?"
"ஒரு சின்ன பிரச்சனை"
"என்னாச்சு. எங்க இருக்க?"
"நான் கிருஷ்ணகிரியில இருந்து வந்துட்டு இருக்கேன்"
"என்ன கிருஷ்னகிரில இருக்கியா? மணி என்னாச்சு"
"நீ டென்ஷன் ஆகாத. நான் வந்த பஸ் பிரேக் டவுன் ஆகிடுச்சு. ஒரு மணி நேரம் லேட். அதுவும் இந்த டிரைவர் இதுக்கு முன்னாடி கட்ட வண்டி ஓட்டிருப்பான் போல இருக்கு"
"எத்தனை மணிக்கு புறப்பட்ட??"
"4 மணிக்கு"
"ஏன் மேடமால கொஞ்சம் சீக்கிரம் புறப்ப்பட்டிருக்க முடியாதா?"
"சேலத்துல இருந்து வரதுக்கு எதுக்கு சீக்கிரம்ம் புறப்படணும்"
"சேலத்துல இருந்து நீ பெங்களூர் வரதுக்கே 9-10 ஆயிடும். அதுக்கு அப்பறம் நீ உன் PGக்கு எப்படி போவ? என்ன சாப்பிடுவ?"
"எங்க அம்மா பார்சல் பண்ணி கொடூத்திருக்காங்க. மடிவாளாலா எறங்கி நான் PGக்கு ஆட்டோல போயிடுவேன்"
"பெங்களூர் இருக்கற நிலைமைக்கு நீ தனியா 10 மணிக்கு ஆட்டோல போவ? சரி நீ ஓசூர் வந்தவுடனே எனக்கு போன் பண்ணு"
"சரி"
........................
ஓசூர், இரவு 10::30
"தனா நான் ஓசூர் வந்துட்டேன்"
"இப்ப எங்க இருக்கற???"
"ஓசூர்ல தான்"
"லூசு, ஓசூர்ல எங்க இருக்கற??"
"நீ எங்க இருக்கற???"
"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு"
"இப்ப தான் பஸ் ஸ்டாண்டுக்குள்ள பஸ் வருது. நான் இனிமே தான் இறங்கனும்"
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
"ஏய் நீ எதுக்கு இங்க வந்த???"
"எதுவும் பேசாத அடிச்சிட போறேன்"
"ஏன் இப்படி கோவப்படற???"
"மணி இப்பவே 10:30 நீ பஸ் பிடிச்சி மடிவாளா போய் சேரத்துக்குள்ள 11:30 ஆயீடும்.. அப்பறம் ஆட்டோ பிடிப்பயா???"
"பஸ் பிரேக் டவுன் ஆனதுக்கு நான் என்ன பண்ண முடியும்"
"மனுசனை டென்சன் ஆக்காத! வந்து வண்டில உக்காரு"
"எதுக்கு இப்படி டென்ஷன் ஆகறன்னு எனக்கு புரியல"
"இப்ப வரியா! இல்ல நான் கிளம்பட்டுமா???"
"இரு வரன்"
..............................
பெங்களூரை நோக்கி இரு சக்கர வண்டியில்...
"ஏன் இப்படி டென்ஷன் ஆகற??? உனக்கு பொண்டாட்டியா வரவ பாவம்"
"சரிங்க... உங்களுக்கு புருஷனா வரவன் புண்ணியம் பண்ணியிருப்பான் போதுமா???"
"உனக்கு என்னுமோ ஆயிடுச்சி"
"பேசாம வா"
.........................................
BTM, PG
"ஏய் திவ்யா, என்ன இவ்வளவு லேட்"
"பஸ் பிரேக் டவுன்"
"இனிமே இந்த மாதிரி லேட்டா தனியா வராத"
"ஏன்???"
"வெள்ளிக்கிழுமை நைட், தனியா Cabல வந்த பொண்ணை டிரைவரே கடத்திட்டு போயி ரேப் பண்ணி கொன்னுட்டான். பெங்களூர் முழுக்க இதுதான் பேச்சு. அதுவும் இல்லாம இந்த மாதிரி ஏற்கனவே நிறைய நடந்திருக்காம். யாரும் வெளில சொல்லாம இருந்த்திருக்காங்க... இப்ப தான் எல்லாம் வெளிய வருது"
"ஓ இதனால தான் அவன் அவ்வளவு ட்டென்ஷனா திட்டிக்கிட்டே இருந்தானா???"
"யாரு"
"தனாதான். நான் தனியா வரன்னு ஓசூர்க்கே வந்துட்டான். இங்க வந்து அவன் தான் விட்டுட்டு போனான்"
"நல்லதா போச்சு"
"நான் வேற அவனை இது தெரியாம திட்டீக்கிட்டே வந்தேன்"
"அடிப்பாவி!!! வேலையத்து அவன் ஓசூர் வந்து உன்னைக் கூப்பிட்டு வந்தா... அவனை நீ திட்டியிருக்க!!!"
"எனக்கும் கஷ்டமா இருக்கு. இரு நான் அவனுக்கு போன் பண்ணிட்டு வந்துடறேன்"
"மணி 1 ஆச்சி. தூங்கு நாளைக்கு பேசிக்கலாம்"
"சரி"
ஐந்து நிமிடம் கழித்து...
"அவன் பத்தரமா வீட்டுக்கு போயிருப்பானா???"
"அவனுக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் போயி தூங்கிருக்கும்"
"இரு நான் எதுக்கும் போன் பண்ணிட்டு வந்திடறேன்"
..................
மணி 1:30. செல்போன் சிணுங்கியது.
"என்ன தூங்கலையா???"
"நீ எங்க இருக்க???"
"ஹிம்... சுடுகாட்டுல"
"ஏய் சொல்லு"
"நைட் ஒன்ற மணிக்கு எங்க இருப்பாங்க??? வீட்லதான்"
"சரி. சாரி"
"எதுக்கு"
"நான் உன்னை திட்டினதுக்கு"
"சாரியும் வேணாம் பூரியும் வேணாம். இனிமே ஊர்ல இருந்து சீக்கிரம் வா. அதுவே போதும். இப்ப எனக்கு தூக்கம் வருது. நாளைக்கு பேசலாம். நீயும் போய் தூங்கு"
"சரி... குட் நைட்"
"குட் நைட்"
....................
2 நாட்களுக்கு பிறகு. PGயில்
"ஏய் ஐஸு!!! யாருக்கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க?"
"தனாட்ட"
"கொஞ்சம் சீக்கிரம் பேசிட்டு வெக்கறியா? நான் அவன்ட கொஞ்சம் அவசரமா பேசனும்"
"டேய்! அவ ஏதோ உன்கிட்ட பேசனுமாம். நான் அவள்ட போனைக் கொடுக்கறன்"
"ஏய் வேண்டாம்!!! நீ பேசி முடி. நான் என் மொபைல்ல இருந்து குப்புட்டுக்கறேன்"
"சரி. நான் பேசி முடிச்சிட்டேன். கட் பண்றேன். நீங்க ஆரம்பிங்க :-x"
"இப்ப ஏன் கட் பண்ண... நான் உன்னை பேசி முடிச்சிட்டுதான வெக்க சொன்னேன்"
"எதுக்கு டென்ஷன் ஆகற???? நான் அவன்ட பேசி முடிச்சிட்டேன்"
"என்ன ஏதோ சீரியஸ்ஸா பேசிட்டு இருந்த???"
"அந்த நாயிக்கு ஆன் - சைட் ஆப்பர்சுனிட்டி வந்திருக்கு... போக மாட்டேனு மேனஜர்ட்ட சொல்லி இருக்கான். கேட்டா பர்சனல் பிராப்ளம்னு சொல்றான்.
6 மாசத்துக்கு முன்னாடி மேனஜர்கிட்ட ஆன் சைட் அனுப்ப சொல்லி பிரச்சனை பண்ணிட்டு இருந்தான். இப்ப என்னன்னா இப்படி பேசறான். மேனஜர் என்னை கூப்பிட்டு பேச சொன்னார்"
"நீ கேட்டயா???"
"கேட்டேன். என்கிட்டயும் அதுதான் சொல்றான். நீ வேணும்னா பேசி பாரேன்"
"எவ்வளவு நாள்???"
"லாங் டெர்ம் தான். மினிமம் 6 மாசம். H1 வெச்சிருக்கான். சும்மாவா?"
""
"நீ என்டீ பேயறைஞ்ச மாதிரி உக்கார்ந்திருக்க???"
"ஒன்னுமில்லை நான் அவன்ட பேசறேன்"
..............................
"தனா... நான் திவ்யா பேசறேன்"
""சொல்லு"
"ஏன் ஆன் சைட் வேண்டாம்னு சொன்ன?"
"ஐஸ்வர்யா சொல்லிட்டாளா???"
"ஆமாம். சொல்லு"
"எனக்கு போக பிடிக்கல. எனக்கு இங்கதான்ன் பிடிச்சியிருக்கு"
"அப்பறம் எதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடி போகனும்னு சொன்ன???"
"இப்ப என்ன வேணும் உனக்கு???"
"நீ ஏன் போக மாட்டனு சொல்றனு எனக்கு தெரிஞ்சாகனும்???"
"காரணம் எதுவும் கிடையாது"
"நீ போகனும். அவ்வளவுதான்...... இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல முடியாது"
"நீ எதுவும் சொல்ல வேணாம்... எங்களுக்கு எல்லாம் தெரியும். நீ போய் தூங்கு"
"உன் இஷ்டம்... நான் சொன்னா நீ கேக்கவா போற????"
"சரி. நீ ஒன்னும் சொல்ல வேணாம்"
"பாக்கலாம். குட் நைட்"
"பை"
................................
"ஏய் திவ்யா! தனா 2 வாரத்துல சிக்காகோ போறான். கன்பர்ம் ஆகிடுச்சி. உன்ட சொன்னானா???"
"இல்லை. இன்னும் 2 வாரத்துலயா???""
"ஆமாம்"
"என்ன இவ்வளவு சீக்கிரம் கிளம்ப சொல்றாங்க"
"அவனை இந்த வார காடைசிலதான் கிளம்ப சொன்னாங்க... அவன் தான் கஷ்டப்பட்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வாரம் தள்ளி போட்டிருக்கான்"
" "
(தொடரும்...)

வாழ்த்துக்கள் + நன்றி
தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்ற
கொங்கு ராசா
கௌதம்
ராசுக்குட்டி
இளா
ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெற்றி பெறாத பல நல்ல படைப்புகளை வழங்கியவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
என்னுடைய கொல்ட்டி கதைக்கு ஓட்டுப் போட்ட 20 பேருக்கும் என் நன்றி.
மேலும் நல்ல படைப்புகள் வெற்றி பெற உதவிய பாஸ்டன் பாலாவிற்கும், தேன் கூடு நிர்வாகிகளுக்கும் என் நன்றி.

Sunday, August 27, 2006
பிரிவு - 2
பிரிவு-1 பிரிவு-3 பிரிவு-4
பவித்ரா ஹோட்டல், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூர்
"ஐஸு ட்ரீட் எனக்குதான்... நீ சாப்பிடறதுக்கு நீ தான் பில் கட்டணும் புரியுதா???"
"டேய்! போனா போது, தனியா வரதுக்கு கூச்சப்பட்டயேனு வந்தா, ரொம்ப ஓவரா பேசற"
"யாரு நாங்க கூச்சப்பட்டமா???"
"வெக்கம், மானம் எதுவும் உனக்கு கிடையாதுனு எனக்கு தெரியும். திவ்யாவும் என்னை வர சொன்னா. அதனாலதான் நான் வந்தேன். பில் யாரு கட்றதுன்னு நாங்க முடிவு பண்ணிக்கறோம். நீங்க சாப்பிடுங்க சார்."
"சரி... ஏங்க நீங்க எதுவும் பேசாம உக்காந்திருக்கீங்க??? சாப்பிடும் போது வேற எதுக்கும் வாய திறக்கக்கூட்டாதுனு யாராவது சொல்லியிருக்காங்களா?"
"எல்லாருக்கும் சேர்த்துதான் நீங்க பேசிகிட்டு இருக்கீங்களே!"
"இது கொஞ்சம் ஓவர். சரி நீங்களும், ஐஸ்வர்யாவும் ஒரே காலேஜா?"
"ஆமாம். ஆனால் வேற வேற டிப்பார்ட்மென்ட். ஹாஸ்ட்டல்ல ஒரே ரூம்"
"ஆச்சர்யமா இருக்குங்க"
"ஏன்???"
"ஐஸ்வர்யாகூட இத்தனை வருஷம் இருந்துட்டு இப்படி அமைதியா இருக்கீங்களே!!!"
"டேய்... ரொம்ப பேசற.. நீ நினைக்கிற மாதிரி இவ ஒண்ணும் அமைதி கிடையாது. என்னைவிட அதிகமா பேசுவா"
"உங்களை பத்தி ஐஸ் சொல்லி இருக்கா. ஆனால் அவ சொன்னதைவிட அதிகமாவே பேசறீங்க"
"தலைவரே பாட்ஷால சொல்லி இருக்காருங்க, "இந்தியாக்க்காரன் பேசலனா செத்து போயிடுவான்னு". நான் உண்மையான இந்தியங்க."
ஒரு வழியாக பேசி சாப்பிட்டுவிட்டு சீட்டுக்கு வருவதற்குள் மணி 2 ஆனது.
...........................
10 நாட்களுக்க்கு பிறகு
"தனா. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்"
"சொல்லு"
"திவ்யா VB புக் கேட்டிருந்தா. நேத்தே எடுத்துட்டேன். ரூமுக்கு எடுத்துட்டு போக மறந்துட்டேன். இன்னைக்கு மதியம் கொண்டு போய் கொடுக்கலாம்னு பாத்தா வேலை அதிகமாகிடுச்சி. நான் இன்னைக்கு ஊருக்கு போறேன். நேரா இங்க இருந்தே புறப்படறேன். அவள்ட இந்த புக்கை நீ கொடுத்துடறயா ப்ளீஸ்"
"சரி கொடுத்துட்டு போ. நான் அவள்ட எப்படியாவது கொடுத்தடறேன்"
.......................................
"ஹலோ... திவ்யா???"
"ஆமாம். நீங்க யார் பேசறது?"
"நான் சஞ்சய் ராமசாமி பேசறன்"
"ஓ! தனாவா??? சொல்லுங்க நான் கல்பனாதான் பேசறன்"
"பரவாயில்லையே நியாபகம் வெச்சிருக்கீங்களே"
"உங்களை மறக்க முடியமா?"
"சரிங்க. ஐஸ் கிட்ட ஏதோ VB புக் கேட்டுருந்தீங்களாம். அதை உங்ககிட்ட கொடுக்க சொல்லி அவ என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டா. உங்களை எங்க மீட்ட் பண்ணலாம்னு சொன்னீங்கனா நான் வந்து கொடுத்துடுவேன்"
"நீங்க எங்க தங்கி இருக்கீங்க?"
"நான் இங்கதான் எலக்ட்ரானிக் சிட்டிலதான் தங்கி இருக்கேன்"
"சரிங்க. எனக்கு இப்ப பிராஜக்ட் பார்ட்டி. இன்னும் 5 நிமிஷத்துல கிளம்பிடுவேன். எப்படியும் நாளைக்கு வந்து வேலையை முடிக்க வேண்டியிருக்கும். நீங்க எனக்கு நாளைக்கு கொடுக்க முடியுமா?"
"சரிங்க. நாளைக்கு ஆபிஸ் வந்து போன் பண்ணுங்க. நான் வந்து கொடுக்கறேன்"
"சரிங்க ரொம்பா தேங்ஸ்ங்க"
"ஓகே... நாளைக்கு பாக்கலாம். நீங்க பார்ட்டிக்கு கிளம்புங்க"
"சரிங்க... பாக்கலாம். பை"
...........................................
சனி கிழமை காலை 10 மணி.
செல் போன் சிணுங்கியது.
"ஹலோ. தனா ஹியர்"
"நான் திவ்யா பேசறேன்"
"சொல்லுங்க. ஒரு 11 மணிக்கா புக் எடுத்துட்டு வந்து கொடுக்கறதா??"
"தூங்கிட்டு இருக்க்கீங்களா?"
"ஆமாங்க. இப்பதான் எழுந்திருக்கிறேன்..."
"நீங்க ஒரு 12 மணிக்கா பவித்ரா வரீங்களா? எனக்கு தனியா சாப்பிடறதுக்கு ஒரு மாதிரி இருக்கு. நீங்க அப்படியே புக்கையும் எடுத்துட்டு வந்துடுங்க!"
"சரிங்க. நீங்க புறப்படறதுக்கு முன்னாடி ஒரு கால் பண்ணுங்க"
........................................
12:15, பவித்ரா ஹோட்டல்
"நான் உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறேன்னு நினைக்கிறேன். சாரிங்க"
"எதுக்கு???"
"இல்லை... நான் ஜஸ்ட் உங்க ஃபிரண்டோடா ஃபிரண்டு. எனக்காக இவ்வளவு ஹெல்ப் பண்றீங்களேனு சொன்னேன். பொதுவா எனக்கு யாருக்கும் தொந்தரவு கொடுக்கறதுக்கு பிடிக்காது"
"ஏங்க இப்படி பேசறீங்க. நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட். அதுவும் இல்லாம இன்னைக்கு சனிக்கிழமை எனக்கு எதுவும் பிரோக்ராமும் இல்லை. சாப்பிடறதுக்கு ஒரு கம்பெனிக்காவது ஆள் இருக்கேனு நான் சந்தோஷமாத்தான்ன் இருக்கேன்"
"நான் இதுக்காக மட்டும் சொல்லல.. போன தடவை எனக்காக சனிக்கிழமை உக்காந்து அந்த வேலையை முடிச்சியிருக்கீங்க. நான் அதை அப்ப கவனிக்கல. நேத்துதான் நீங்க அதை எப்படி பண்ணியிருக்கீங்கனு பாக்கலாம்னு பாக்கும் போது உங்க மெயில்ல சென்ட் டேட் பாத்தேன்"
"ஏங்க இந்த மாதிரி பேசி என்னை பேசவிடாம பண்ணிடுவீங்க போல இருக்கு. நீங்க கொடுத்த அன்னைக்கு கஜினி ரிலீஸ். சூர்யா படம் ஃபர்ஸ்ட் டே பாக்கலைனா நமக்கு அவ்வளவுதான். அதனாலதான் சனிக்கிழமை வந்து பண்ண வேண்டியதா போச்சு. இந்த மாதிரி இனிமே பேசாதீங்க"
"சரிங்க"
தீடீர்னு நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது.
"ஐயய்யோ... என்னங்க இப்படி மழை பெய்யுது"
"இதுக்கு தாங்க... நான் இனிமே புண்ணியம் செய்யறதையே குறைச்சிக்கனும். நான் எங்க போனாலும் மழை பெய்யுது"
முறைத்தாள்.
"கண்டிப்பா இப்ப வெளிய போக முடியாது. மழை நின்ன உடனே கிளம்பலாம்"
"சரிங்க... இன்னைக்கு பாத்து இப்படியாயிடுச்சே. நான் வேற இதுக்கு அப்பறம் போய் வேலை செய்யனும்"
"VB கத்துக்கறீங்க போல இருக்கு"
"ஆமாங்க. உங்களை எவ்வளவு நாள்தான் தொந்தரவு பண்றது"
"சரி கத்துக்கோங்க.... அதுதான் உங்களுக்கும் நல்லது"
நாலு மணி வரை மழை பெய்தது. இருவரும் 4 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். திவ்யா அதிகமாக பேசாதவள் என்று நான் நினைத்திருந்தது தவறு என்று எனக்கு புரிந்தது.
......................................
திங்கள் காலை 10 மணி.
"ஹாய் தனா" ஜிடாக் விண்டோ மாணிட்டரில் மின்னியது.
"ஹே திவ்யா. என் ஐடி எப்படி கிடைச்சுது உனக்கு???"
"ஐஸ்வர்யா கொடுத்தா"
"ஹிம்... அப்பறம் அன்னைக்கு ஆபிஸ்ல இருந்து எப்ப கிளம்பின???"
"நான் போய் ஒரு மணி நேரத்துல கிளம்பிட்டேன். வீட்ல போயி படிச்சேன்"
"ஹிம்"
இப்படியே தினமும் மெசஞ்சரிலும், போனிலும் பேசிக் கொண்டோம்.
அப்படியே ஒரு மாதத்திற்கு பிறகு தினமும் மதியம் மூவரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தோம்.
................................
"டேய் தனா! நீங்க பண்றது ஓவர்டா"
"என்ன பண்றோம்"
"அவ முன்னாடி எல்லாம் ஒழுங்கா இருந்தா... இப்ப ரூம்க்கு வந்து சாப்பிட்டு முடிச்சவுடனே உனக்கு போன் பண்ணிடறா... எனக்கு தனியா இருக்க போர் அடிக்குது"
"அதுக்கு நான் என்ன பண்றது? வேணும்னா நல்ல புக் வாங்கி தரன்... படி"
"டேய்! ஓவரா பேசாதடா"
"சரி இனிமே நான் அவள்ட பேசல போதுமா???"
"ஏய் டென்ஷன் ஆகாத!!! நான் சும்மா சொன்னேன்... நீங்க ஏதோ பண்ணிக்கோங்க எனக்கு என்ன???"
.......................
இரவு 9 மணி. செல்போன் சிணுங்கியது. வழக்கம் போல் திவ்யா கூப்பிட்டிருந்தாள்.
"ஏய்! சொல்லு"
"சாப்பிட்டியா"
"இல்ல... ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு"
"ஒன்னுமில்லை"
"அழுதயா??? எனக்கு தெரியும்... உன் குரல் ஒரு மாதிரி இருக்கு"
" "
"ஏன் அமைதியா இருக்க சொல்லு? என்னாச்சு???"
"என் கிளாஸ் மேட் ராஜேஷ் இன்னைக்கு என்கிட்ட ப்ரபோஸ் பண்ணான் "
"என்னது??? உன்னை ஒருத்தன் லவ் பண்றானா??? என்னால நம்பவே முடியலையே!!!"
செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அவசரமாக கூப்பிட்டேன். 3 முறை கட் செய்து 4வது முறை வேறு வழியில்லாமல் எடுத்தாள்.
"ஏய் சாரி... ப்ளீஸ் நான் விளையாட்டுக்கு சொல்லிட்டேன். என்ன நடந்துச்சு சொல்லு"
"அவன் என்னை 5 வருஷமா லவ் பண்றானாம். என்னை லவ் பண்ணுனு கெஞ்சறான். இதுக்கு எங்க கிளாஸ்ல இருக்கற 4-5 பசங்க சப்போர்ட் வேற"
"உன் பிரச்சனை என்ன??? அவன் உனக்கு நல்ல ஃபிரண்டுன்னு சொல்லி இருக்க"
"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா? ஏன் இந்த பசங்க எல்லாம் இப்படி இருக்காங்க???"
" "
"ஏன் அமைதியா இருக்க??? ஏதாவது சொல்லு"
"நீ என்ன சொன்ன?"
"இந்த மாதிரி பேசறதா இருந்தா இனிமே பேச வேண்டாம்னு சொல்லிட்டேன்"
"இப்ப நான் என்ன செய்யனும்"
" நீ எதுவும் செய்ய வேணாம். உன்கிட்ட சொல்லனும்னு தோனுச்சி அதனால சொன்னேன்"
"சரி எதுவும் கவலைப்படாம தூங்கு...குட் நைட்"
அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை....
"நல்லா பேசனா லவ் பண்றன்னு அர்த்தமா?" என் காதில் திரும்ப திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.
(தொடரும்.....)

Saturday, August 26, 2006
பிரிவு
பிரிவு-2 பிரிவு-3 பிரிவு-4
"தனா, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?"
"சொல்லு... பாக்கலாம்"
"ஒண்ணும் இல்லை... என் ரூம் மேட் திவ்யாக்கு அவ பிராஜக்ட்ல எக்ஸெல்ல மேக்ரோ பண்ண சொல்லியிருக்காங்க. அவ எனக்கு போன் பண்ணி ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டா. நீ தான் அதுல பெரிய ஆளேச்சே! கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன் ப்ளீஸ்"
"திவ்யானா? அன்னைக்கு கமெர்ஷில் ஸ்ட்ரீட்ல உன்கூட லூசு மாதிரி ஒண்ணு இருந்துச்சே அதுவா?"
"ஏய், லூசு கீசுன்ன அவ்வளவுதான்"
"சரி சொல்லு என்ன பண்ணனும்"
"இரு நான் அவள்ட டீட்டெயிலா கேட்டு சொல்றேன்"
.........................
"ஹலோ திவ்யா நான் ஐஸூ பேசறேன். அந்த எக்ஸல்ல ஏதோ பண்ணனும்னு சொன்னியே, கொஞ்சம் டீட்டயிலா சொல்லு, தனா பண்ணி தரன்னு சொல்லி இருக்கான்"
" "
"இரு நீ என்ன சொல்றனே எனக்கு புரியல. நான் தனா எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட் பண்ணறேன். அவன்ட நீயே பேசிக்கோ"
......................
"தனா உன் எக்ஸ்டென்ஷனுக்கு கால் ஃபார்வேர்ட பண்றேன். கொஞ்சம் அவள்ட என்ன செய்யனும்னு டீட்டெயிலா கேட்டுக்கோ"
"சரி"
"டேய்! அவளை எல்லாரையும் ஓட்டற மாதிரி ஓட்டாத"
"சரி.... சொல்லிட்ட இல்ல ஃபிரியா விடு"
.....................
"ஹலோ! நான் தனா பேசறேன். சொல்லுங்க என்ன செய்யனும்"
என்ன வேணும்னு தெளிவாக சொன்னாள்.
"சரிங்க.. இது செய்யறதுக்கு ஒரு 5 மணி நேரமாகும். ஒரு மணி நேரத்துக்கு $60. மொத்தம் $300. எப்படி அனுப்பறீங்க?. இண்டர் நெட் டிரான்ஸ்பர் பண்ணிடறீங்களா?"
"என்னங்க இப்படி சொல்றிங்க? உங்களூக்கே இது அநியாயமா தெரியலையா?"
"சரி நீங்க ஐஸ்வர்யா ஃபிரண்ட்ன்றதால பாதி ரேட்ல பண்ணி தரேன். ஓகேவா?"
"ஐயய்யோ வேணாங்க... நான் வேற ஆளை பாக்கறேன்"
"கவலைப்படாதீங்க! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எப்ப வேணும்னு சொல்லுங்க?"
"நாளைக்கு மதியத்துக்குள்ள பண்ணி தர முடியுமா?"
"சரிங்க நாளைக்கு மதியம் சாப்பிட போறதுக்கு முன்னாடி அனுப்பி வெச்சிடறேன்"
ஒரு மணி நேரத்துக்குள் முடித்துவிட்டு அனுப்பிவிட்டேன். நன்றி சொல்லி மெயில் அனுப்பினாள்.
...................................
ஒரு வாராத்திற்கு பிறகு...
எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது
"ஹலோ தனா ஹியர்"
"நான் ஐஸ்வர்யா ஃபிரெண்டு திவ்யா பேசறேன்"
"எந்த ஐஸ்வர்யா?""
"நீங்க தனபாலன் தான?"
"ஆமாம் அப்படிதான் என்னை எல்லோரும் கூப்பிடறாங்க"
"உங்க பிராஜக்ட் மேட் ஐஸ்வர்யா பிரண்ட் திவ்யா. அன்னைக்கு கூட எக்ஸேல்ல மேக்ரோ பண்ணி குடுத்தீங்களே"
"நியாபகம் இருக்குங்க. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். அப்பறம் ஐஸ்கிட்ட நான் இந்த மாதிரி கேட்டன்னு சொல்லிடாதிங்க"
"சரிங்க. அப்பறம் ஒரு சின்ன பிரச்சனை"
"சொல்லுங்க உங்க மேனஜரை போட்டு தள்ளனுமா?"
"ஐயய்யோ அதெல்லாம் இல்லை. அன்னைக்கு நீங்க பண்ண மேக்ரோவை நான் பண்ணன்னு சொல்லி குடுத்துட்டேன். அது எங்க மேனஜ்ருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. இப்ப அதைவிட கொஞ்சம் அட்வான்சா ஒன்னு கொடுத்து பண்ண சொல்லி இருக்காரு. ப்ளீஸ் நீங்கதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். "
"இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? நான் பண்ணதை நீங்க பண்ணீங்கனு கதைய விட்ருக்கீங்க"
"ஸாரிங்க. நீங்க வேற கம்பனி. இதை சொன்னா பிரச்சனையாயிடும்"
"புரியுது. என்ன செய்யனும்னு சொல்லுங்க? எப்படி செய்யனும்னு உங்களுக்கு நான் சொல்லி தரேன்"
ஒரு வழியாக விளக்கினாள்.
"உங்களுக்கு VB தெரியுமா?"
"தெரியாதே! காலேஜ்ல நாலாவது செமஸ்டர்ல படிச்சேன். மறந்து போச்சு"
"ஃபிரியா விடுங்க... எனக்கு நாலாவது செமஸ்டர் படிச்சமானே நியாபகம் இல்லை. எப்ப வேணும்?"
"திங்க கிழமை காலைல. முடியுமா?
"என்னங்க மணி 4 ஆயிடுச்சி. நான் பொதுவா வெள்ளிக்கிழமை 1 மணிக்கு மேல எந்த வேலையும் பண்ணமாட்டேன்"
"சாரிங்க... இந்த ஒரு தடவை மட்டும்"
"இந்த தடவை நானே பண்ணி தரன். ஆனால் எனக்கு ட்ரீட் கொடுக்கனும். ஓகேவா???"
"ட்ரீட்டா??? "
"பின்ன... போன தடவையே 300 டாலர் வாங்கியிருக்கனும். மிஸ் பண்ணிட்டேன். இந்த தடவை எப்படியும் ட்ரீடாவது கொடுக்கனும்"
" "
"என்னங்க பேச்சையே கானோம்"
"சரிங்க. நீங்க பண்ணி குடுங்க. ட்ரீட் வெச்சிக்கலாம்.....
எங்கனு நீங்களே சொல்லுங்க"
"லீலா பேலஸ்"
"இதெல்லாம் கொஞ்சம் ஓவர்..."
"சரி ப்ரிகேட் ரோட்ல இருக்கற "Cafe Coffee Day"ல வெச்சிக்கலாம். அடுத்த வீக் என்ட். ஓகேவா???"
"சரிங்க"
"திங்க கிழமை காலைல உங்க மெயில் பாக்ஸ்ல எக்ஸல் இருக்கும்"
"ரொம்ப தேங்ஸ்ங்க"
.....................................
"டேய்! மேக்ரோ பண்ணி குடுக்கறதுக்கு ட்ரீட் கேட்டயாமே... உண்மையா???"
"ஆமாம்... அப்ப தான் அடிக்கடி கேக்க மாட்டா. கத்துக்கனும்னு தோனும்"
"கிழிக்கும்... இனிமே ட்ரீட் கொடுத்தே உங்கிட்ட வேலை வாங்கிடலாம்னு அவ நேத்து கூட ரூம்ல சொல்லிட்டு இருந்தா!!!"
"ஓ!!! பாத்தா லூசு மாதிரி இருக்கா... இப்படியெல்லாம் வேற பேசறாளா??? அவளுக்கு இருக்கு.
நான் வேற அவளுக்கு முன்னாடியே அந்த எக்ஸெல அனுப்பி வெச்சிட்டேன்"
"சரி வீக் என்ட்தான் பாக்க போறியே அப்பறமென்ன??? அப்ப கேட்டுக்கோ"
"ஏய் டுபுக்கு.. நான் சும்மா பேச்சுக்கு சொன்னா, சீரியசா எடுத்துக்க்கிட்டயா? ட்ரீட் எல்லாம் எதுவும் வேணாம். அவள்ட சோல்லிடு"
"சரி"
.....................
அடுத்த நாள் எக்ஸ்டென்ஷன் சிணுங்கியது.
"ஹலோ! தனா ஹியர்"
"நான் திவ்யா பேசறேன்"
"சொல்லுங்க திவ்யா!!! அடுத்த எக்ஸல் ரெடியாயிடுச்சா???"
"ஐயய்யோ அதெல்லாம் இல்லைங்க. சும்மா தான் போன் பண்ணேன்""
"சொல்லுங்க"
"நேத்து ஐஸ்வர்யாட்ட ட்ரீட் வேணாம்னு சொன்னிங்களாமே? நிஜமாவா?"
"இல்லையே நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லையே"
"நீங்க வேணாம்னு சொன்னிங்கனு அவ சொன்னா"
"சும்மா சொன்னங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்"
"நான் அவள்ட சும்மா ஓட்றத்துக்காக சொன்னதை அவ உங்ககிட்ட வந்து சொல்லிட்டா. சீரியஸா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு கண்டிப்பா ட்ரீட் கொடுக்கறேன்"
"உங்க இஷ்டம். சரி நீங்க எந்த பிரான்ச்ல வேலை பாக்கறீங்க? உங்க கம்பனிதான் ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பிலையும் வெச்சிருக்கானே""
"நான் எலக்ட்ரானிக் சிட்டில இருக்கேன். போன வாரம் வரைக்கும் மடிவாளால இருந்தேன்"
"சரி அப்ப ஏதாவது ஓரு நாள் லன்ச்க்கு மீட் பண்ணுவோம்"
"வாவ்!!! இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே... இன்னைக்கு நான் என் பிரெண்ட்ஸ் கூட போகனும்.. நாளைக்கு மீட் பண்ணுவோமா?"
"சரிங்க......"
(தொடரும்)

Thursday, August 17, 2006
கோழியின் அட்டகாசகங்கள் - 5
இதுவரை நான் கோழி செய்ததாக சொன்னதில் 2-3 தான் உண்மை. மத்ததெல்லாம் கோழி செய்தான்னு OPதான் கதை கட்டிவிட்டது. ஆனால் எல்லோரும் அது உண்மைனு நம்பிடுவாங்க. கோழியும் எதுவும் பெருசா கண்டுக்கமாட்டான். அவர்களுக்குள் அப்படி ஒரு நட்பு...
கோழி பெங்களூர் வந்த புதிதில், எங்கள் நண்பர்களுள் ஒருவன் சொன்னது இன்னும் என் நினைவில் இருக்கிறது.
"டேய் கோழி பெங்களூர் சுத்தி பார்க்க வந்திருக்கான். 1 மாசத்துல கிளம்பிடுவான். ஒழுங்கா அவனுக்கு எல்லா இடத்தையும் சுத்திக் காட்டுங்க"
ஆனால் ரூம்ல ஒவ்வொருவருக்கா வேலை கிடைக்க ஆரம்பித்தது. அதுவரைக்கும் விளையாட்டுப் பையனா நான் பார்த்த கோழி தீவிரமா படிக்க ஆரம்பிச்சான். சின்ன சின்ன டவுட்னாக்கூட கூச்சப்படாமக் கேட்டு தெரிஞ்சிக்கிட்டான்.
நான் தூங்கும் போதும் படிச்சிட்டுதான் இருப்பான், நான் எழுந்திரிக்கும் போதும் படிச்சிக்கிட்டு தான் இருப்பான். (நான் அப்போழுது வேலையில் சேர்ந்துவிட்டேன்). அவனுக்கு எது தேவையோ அதை மட்டும் படிச்சான். முதல்ல 4-5 கம்பெனி இண்டர்வியுவில ஊத்திக்கிச்சி... ஆனால் அதுல அவன் இண்டர்வியு போனதே எங்களுக்கு எல்லாம் ஆச்சரியம்.
கடைசியா அவனுக்கு ஒரு பெரிய MNCல வேலை கிடைச்சிது. கோழிக்கு வேலை கிடைச்சது எங்க பசங்க எல்லோருக்கும் நம்பிக்கையை கொடுத்தது. அதற்கு பிறகு ஊர்ல இருந்து வந்து வேலை வாங்கனவங்க நிறையப் பேர். அவர்களுக்கு கோழியும் சில சமயம் சொல்லி கொடுப்பான். எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.
அவனுக்கு லக்குல வேலை கிடைச்சதுன சொல்றவங்களும் இருக்காங்க... ஆனால் கூட இருந்து பாத்தவன் நான். அவனுடைய உழைப்பும், விடாமுயற்சியுமே அவனுக்கு வேலை வாங்கி கொடுத்தது...
இப்ப பிரமோஷன் எல்லாம் வாங்கி... மற்றவர்களை இண்டர்வியு செய்யும் நிலையில் அவன் இருக்கிறான்...
என்னை பொருத்தவரை கோழி ஒரு கதாநாயகன்!!!

Wednesday, August 16, 2006
கோழியின் அட்டகாசங்கள் - 4
ஒரு வழியாக டிகிரி முடிச்சி கோழி பெங்களூர் வந்து சேர்ந்தான்.
கோழியும், OPயும் பிரௌசிங் சென்டர் சென்று வந்தார்கள்.
OP: டேய், இன்னைக்கு பிரௌசிங் சென்டர்ல கோழி என்ன பண்ணான் தெரியுமா???
நான்: என்ன பண்ணான்?
கோழி: டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை... இவன் கதைவிடறான்.
OP: இல்லை இல்லை உண்மைதான். கோழி தனியா ஒரு கேபின்ல உட்கார்ந்து பிரௌசிங் பண்ணிட்டு இருந்தான். சரி தனியா என்ன பண்றான்னு எட்டிப் பார்த்த CD-ROMஓட உள்ளே, வெளியே விளையாடிட்டு இருந்தான். டேய் கோழி என்னடா பண்றனு கேட்டேன். அதுக்கு "Click here to get a free DVD"னு ஒரு லிங் இருந்துச்சி, அதை கிளிக் பண்ணிட்டு DVD வரும்னு CD - ROMல செக் பண்ணிட்டு இருந்தான்.
கோழி: டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லை. ஏண்டா DVD போய் CD - ROMல வருமா??? DVD ROMஆ இருந்தா வந்திருக்கும்.
OP: கேளுடா!!! DVD ROMஆ இருந்தா வந்திருக்குமாம் :-)... இதை சொல்லிதான் நான் அவனை சமாதானப்படுத்திக் கூப்பிட்டு வந்தேன்....
ஒரு வாரத்திற்குள் கோழி C படிக்க ஆரம்பித்துவிட்டான்.
Swap two numbers... இதை கோழிக்கு OP சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தான்.
OP: a, b, c மூணு வேரியபுல்ஸ் (Variables)
இப்ப என்ன பண்ணனுமா a ல இருக்கற வேல்யூ b க்கு வரணும். ஒகே வா?
கோழி: ஹிம்... ஓகே
OP:
இது தான் லாஜிக்.
c=a;
a=b;
b=c;
புரியுதா???
கோழி திருதிருன்னு முழிச்சிட்டு இருந்ததை பார்த்த இருமி சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சான்.
இருமி: டேய் கோழி, உன் 2 கையை நீட்டு.
கோழி கையை நீட்டினான்.
இருமி ரெண்டு கையிலும் 2 பந்தை கொடுத்து...
இருமி: இப்ப இந்த கைல இருக்கிற பந்து அந்த கைக்கு வரணும்... அந்த கைல இருக்கிற பந்து இந்த கைக்கு வரணும். எப்படி மாத்துவ?
கோழி: அப்படியே மாத்திக்க வேண்டியதுதான்... (கோழி ரெண்டு கைல இருக்கற பந்தையும் அப்படியே மாத்திக்கிட்டான்)
இருமி: அப்படியெல்லாம் மாத்தக் கூடாது. இரு... இப்ப உன்னோட இந்த கை- i , அந்த கை - j, என்னொட இந்த கை - K... இப்ப உன் கை-i ல இருக்கிற பந்தை என் கை-K க்கு மாத்து. அப்பறம் உன் கை-j ல இருக்கிற பந்தை i-க்கு மாத்து...
இப்ப என் கை-K ல இருக்கிற இந்த பந்தை உன் கை-jக்கு மாத்து...
இப்ப பந்து ரெண்டும் மாறிடுச்சா???
கோழி: ஆமாம்டா....
இருமி: இப்ப புரியுதா....
கோழி: உம்ம்ம்.. புரிஞ்சிடுச்சி
கோழி போய் பெட்ல படுத்துட்டு மேல விட்டத்தைப் பார்த்து யோசிச்சிக்கிட்டு இருந்தான்.
இருமி: OP!!! கோழி ரொம்ப யோசிச்சிக்கிட்டு இருக்கான். எனக்கு அவனுக்கு புரிஞ்சிதானு தெரியல...
10 நிமிஷம் கழிச்சி கோழி வெளில வந்தான்...
கோழி: OP பரதேசி நாயே.... a,b,c ன்னு சொன்னா யாருக்காவது புரியுமா??? இனிமேவாது i, j, kனு சொல்லிக் கொடு... புரிஞ்சிதா???
:-))))))
அட்டகாசங்கள் தொடரும்...

Tuesday, August 15, 2006
கொல்ட்டி
"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க??? மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாதா???"
நான் சொல்லி முடிச்சதும் சுமாவுக்கு பயங்கர கோபம் வந்திடுச்சி.
ஆமாம் என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவும் எல்லோரும் அவ டீமெட்ஸ்.
சாயந்திரம் 7 மணிக்கு எக்ஸ்டென்ஷனுக்கு கால் வந்தது.
"ரமேஷ் ஹியர்"
"சுமா பேசறேன்"
"ஹிம் சொல்லு"
"சாப்பிட போகலாம்"
"சாப்பிட போகலாமா??? மணி என்ன ஆகுது... இன்னும் புட் கோர்ட்ல சாப்படே ரெடி ஆகியிருக்காது. இன்னும் எப்படியும் அரை மணி நேரமாகும்"
"நான் என் சீட்டில இருந்தா இந்த குங்குமப் பொட்டு வேலை ஏதாவது கொடுக்கும். நீ வா. நம்ம சும்மா வாக்கிங் போயிட்டு அப்பறமா சாப்பிட போகலாம் "
"சரி... நீ என் பில்டிங் கிட்ட வந்து மிஸ்ஸுடு கால் கொடு நான் வரன்"
வழக்கம் போல் என்ன பேசினோம்னே தெரியாம பேசினோம்... 8 மணிக்கு அவள் மட்டும் சாப்பிட்டாள், அவளை மல்லேஸ்வரம் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நான் கோரமங்களா பஸ் பிடித்து வீட்டிற்கு சென்றேன்.
"டேய் ரமேஷ், அந்த அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க!!! உனக்கு ஹாட் பாக்ஸ்ல இருக்கு"
"ஏன்டா, சப்பாத்திக்கு தொட்டுக்க குருமாவையே காணோம்???"
"கரு வாயந்தான் கடைசியா சாப்பிட்டான்... அவந்தான் தீர்த்திருப்பான்"
"ஏன்டா சொல்லிருந்தா நான் ஆபிஸ்லயே சாப்பிட்டிருப்பேன்... சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"
சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் பொது... மிஸ்டு கால் வந்தது.
சுமா வீட்டிக்கு போய் சேர்ந்துட்டா. சரினு ஜெர்கின் போட்டுட்டு போனை எடுத்துட்டு மொட்டை மாடிக்கு போனேன். கீழே வரும்போது மணி 12:15.
ரூம்ல எல்லோரும் மும்மரமாக ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சப்பாத்தி ஆறிப் போய் அப்பளமாக இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கூட்டத்தோடு சேர்ந்து அனைவரையும் ஓட்டிவிட்டு 1 மணிக்கு படுக்கைக்கு சென்றேன்.
தூக்கம் வரவில்லை. என்ன இருந்தாலும் இன்னைக்கு அவளை அத்தனை பேருக்கு முன்னால ஓட்டியிருக்க கூடாது. அதைப் பற்றி அவள் போன்ல கூட ஒரு வார்த்தை பேசல. குற்ற உணர்ச்சியாக இருந்தது.
சுமாவை முதன்முதலாக ட்ரெயினிங்கில் பார்த்தது. அவளை எப்போதும் ஆந்திரா கோஷ்டியுடன் தான் பார்க்க முடியும். ஒன்னு, ரெண்டு முறை பேசியிருப்போம். அவ்வளவுதான்.
பிறகு ட்ரெயினிங் முடித்து, ஒவ்வொருவரையும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பிராஜக்டில் போட்டார்கள்.
நானும், சுமாவும் ஒரே பிராஜக்ட்டில் சேர்ந்தோம். அவளுக்கு தமிழ் தெரியாது, எனக்கு தெலுகு புரியாது. எப்பவுமே இங்கிலிஸில் தான் பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் ஒரே மாட்யுல். அடிக்கடி டெட்லைன் மீட் பண்ணுவதற்காக நைட் வேலை செய்ய வேண்டியது வரும்.
பொண்ணுங்க நைட் cabla தனியா போறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. பல சமயங்களில் அவளை 9:15 பஸ்ஸில் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவளுடைய மாட்யூலையும் நானே பார்த்துக் கொள்வேன். அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.
(நைட் பொதுவாக ஆன் - சைட்டில் Code Review செய்வார்கள். ஏதாவது தவறு இருந்தால் நாம் அதை சரி பண்ண அவர்களுக்கு உதவ வேண்டும்... அதனால் எங்களுக்கு பொதுவாக அதிக வேலை இருக்காது. ஆனால் நாங்கள் அங்கு இருக்க வேண்டும்)
இப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவள் தங்கி இருந்த PGயில் நிறைய தமிழ் நாட்டுக்கார பெண்கள் இருப்பதாக சொல்வாள்.
எனக்கு யாரையாவது இண்ட்ரடியுஸ் பண்ணிவிடுனு சொன்னா, எப்பவுமே முறைப்பாள். திடிர்னு ஒரு நாள் புட் கோர்டில் அவள் ரூம் மெட் ராதிகாவை அறிமுகப்படுத்தினாள். ராதிகா அன்று எங்களுடன் தான் சாப்பிட்டாள்.
"ரமேஷ், உனக்கு ஒன்னு தெரியுமா??? சுமா இப்பல்லாம் விழுந்து விழுந்து தமிழ் கத்துக்கிறா!!! "
எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்பவுமே தெலுகுதான் தமிழவிட பெருசுனு என்கிட்ட சண்டை போட்ற சுமாவா தமிழ் கத்துக்கிறா??? ஆனால் இதை என்கிட்ட சொல்லவே இல்லையேனு ஒரு வருத்தம். ஜாவால எல்லாம் டவுட் கேக்கறா, எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழை யார்கிட்டயோ கத்துக்கிறாளே!!!
ஆனால் இதை ராதிகா சொன்னவுடன், சுமா அவளை முறைத்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் இல்லை... அவள் சும்மா விளையாட்டுக்கு சொல்றா"னு வேக வேகமாக சொன்னாள்.
ராதிகாவைப் பார்த்ததும் நல்லதாப் போச்சினு தோனுச்சி.
3 மாசம் கழித்து என்னுடைய பிறந்த நாள்... சனி கிழமையன்று வந்தது...
வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு போன் செய்தாள். என்னடா இவ்வளவு சீக்கிரமா பண்ணிட்டாளேனு பார்த்தால், 12 மணி வரை பேசிக்கிட்டே இருந்தாள். (எங்கே 12 மணிக்கு சரியாகப் போன் செய்தால் பிஸியாக இருக்குமோனு சந்தேகத்தால் 9 மணிக்கே போன் செய்துவிட்டாள்).
சரியாக பனிரெண்டு மணிக்கு,
"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
"சுமா நீயா பேசறது", ரமேஷால் அவன் காதை நம்ப முடியவில்லை.
"இல்லை உங்க அம்மா"
மறுபடியும் அதிர்ச்சி.
"ரமேஷ், இனிமே நான் உன்கிட்ட தமிழ்ல தான் பேசுவேன். ஓகேவா???"
ரமேஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தெளிவா தமிழ்ல பேசறா. எப்படி இவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கிட்டா.
"அப்பறம் நாளைக்கு உன் பிளான் என்ன???"
"எதுவும் பெருசா இல்லை"
"நம்ம படத்துக்கு போவோமா???"
"என்ன படம்"
"அதை நாளைக்கு PVR போய் முடிவு பண்ணிக்கலாம்"
"சரி... காலைல எனக்கு ஒரு பதினோரு மணிக்கா போன் பண்ணு"
"ஏன்???"
"நான் எழுந்திரிக்க வேணாமா?"
"அடப்பாவி!!! பதினோரு மணிக்கு எழுந்திரிக்க உனக்கு போன் பண்ணனுமா???"
"கேள்வியெல்லாம் கேக்காத எனக்கு புடிக்காது. சொன்னா கேக்கனும் புரியுதா???"
"சரிங்க சார்... நான் பண்றேன்"
போனை வைக்கும் போது மணி 2.
ரூம்ல யாருக்கும் என் பிறந்த நாள் தெரியாது. என்ன செய்ய எங்க ரூம்ல தங்கியிருக்கிற யாரும் நிரந்தரம் கிடையாது. அதனால் யாருக்கும் பெரிய பற்றுதல் இல்லை.
காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து போன்...
"Happy Birthday to u"
"thx மா"
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"
"thxப்பா"
"கண்ணு நானும், அப்பாவும் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்கோம். சரி நீ எழுந்திரிச்சிருக்க மாட்டேனுதான் இவ்வளவு நேரம் கழிச்சி பண்றோம். சரி நீயும் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா"
"சரிம்மா... நான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.. நைட் ஆபிஸ்ல வேலை அதிகம்... 2 மணி ஆகிடுச்சி"
"சரி கண்ணு... நீ தூங்கு... கோவிலுக்கு போகும் போது மறக்காமல் ஸ்வீட் வாங்கிட்டு போய்... கோவில்ல வயசானவங்க இருந்தா கொடு... அவுங்க மனசால வாழ்த்தனா நீ நல்லா இருப்ப... சரியா???"
"சரிம்மா... நான் உங்களுக்கு போன் பண்றேன்"
செல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பதினொரு மணிக்கு செல்போன் சிணுங்கியது.
Suma Calling....
"ஹாய்...
சொல்லு"
"என்னா...இன்னும் எழுந்திரிக்கலையா???"
"இல்ல... இப்பத்தான் ஏழுந்திரிக்கிறன்"
"அடப்பாவி!!! எத்தனை மணிக்கு சாப்பிட வர???"
"என்ன சாப்பிடவா??? படத்துக்குத் தான சொன்ன???"
"இங்க PGல மதியம் சாப்பாடு கேவலமா இருக்கும். கிருஷ்ணா கபேல மதியம் உன்கூட சாப்பிடலாம்னு பார்த்தேன்"
"சரி வரேன்"
மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா கபே வந்து சேர்ந்தாள். எனக்கு பிடிச்ச நேவி ப்ளூவில் சுடிதார் போட்டிருந்தாள்.
"என்ன... பர்த்-டேக்கு புது துணியெல்லாம் போடலையா???"
"வீட்ல அம்மா எடுத்து கொடுத்தாங்க... நாந்தான் அதை எடுத்துட்டு வரலை. புது துணியிலெல்லாம் எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. அதுதான் எனக்கு பதில் நீ போட்ருக்கியே அப்பறமென்ன"
"ஏ!!! இது புதுசு இல்ல... நான் காலேஜ்ல போட்டிருந்தது. பெங்களூர் வந்து இப்பதான் பர்ஸ்ட் டைம் போடறேன்."
"சரி வா... சாப்பிட போகலாம்"
நல்ல சாப்பாடு.
பிறகு இருவரும் PVR சென்றோம்.
"என்ன படம் பார்க்கலாம்"
"உனக்கு ரஜினிதான பிடிக்கும், சந்திரமுகி போகலாம்"
"ஏன் தெலுகு படமெல்லாம் கேவலமாக இருக்கனும்னு இப்படி சொல்றியா???"
அவள் கண் கலங்கிவிட்டது.
"ஏ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சந்திரமுகியே போகலாம் வா"
ரெண்டு பேரும் சந்திரமுகி சென்று பார்த்தோம்.
ஒருவழியாக சந்திரமுகி பத்தாவது முறைப் பார்த்தேன். ஆனால் முதல் முறை பார்த்த மாதிரி இருந்தது.
பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.
எனக்கு கல்கி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும். அதுவும் நான் சொல்லாமலே அவளே எப்படி அந்த தொகுப்பை சரியாக எடுத்தாள்.
"சுமா, தமிழ் படிக்க கத்துக்கிட்டியா???"
"ஏ!!! அதெல்லாம் இல்லை... பேச கத்துக்கிட்டதே ரொம்ப கஷ்டம். எனக்கு சொல்லி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீ தான் எனக்கு படிக்க சொல்லி தரனும்"
"அப்பறம் எப்படி புக்கை கரெக்ட்டா எடுத்த???"
"நான் நேத்தே என் பிரெண்டோட வந்து பாத்து வெச்சிக்கிட்டேன். அதுதான்"
சிரித்தாள். என்னுமோ தெரியல.. திடிர்னு எனக்கு அவள் தேவதை மாதிரி தெரிந்தாள்.
அப்படியே சுத்திட்டு டின்னரை Forum Transitல் உள்ள சேலம் கிட்சனில் சாப்பிட்டோம்.
அவளை மல்லேஸ்வரத்திற்கு என்னுடைய டூ-வீலரில் அழைத்து சென்று விட்டு வந்தேன்.
இந்த பிறந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது.
பிறகு ஒரு மாதத்தில் இருவரையும் வெவ்வேறு பிராஜக்ட்டிற்கு மாற்றினார்கள்.
அப்படியும் காலை பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச், சாயந்திரம் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டோம்.
பிறகு அவள் வீட்டிற்கு சென்ற பின் போன் செய்து 12 மணி வரை பேசுவோம்.
ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...
அப்படியிருக்கும் நிலையில் அவளை நான் இன்று அப்படி ஓட்டியிருக்க தேவையில்லை. ஒரு வழியாக தூங்கிவிட்டேன்.
தீபாவளிக்கு 3 நாள் லீவு போட்டால் 10 நாள் லீவு கிடைக்கும் போலிருந்தது. ரெண்டு பேரும் 3 நாள் லீவ் போட்டு அவரவர் ஊருக்கு போகலாம் என்று தீர்மானித்திருந்தோம்.
திடிர்னு பத்து நாள் பிரிய போறோம்னு தெரிந்தவுடன், ஏதோ மனசை அழுத்துவதை போல் இருந்தது...
11 மணிக்கு அவளுக்கு டிரெயின்.
மணி 6.
சுமாவின் extensionக்கு போன் செய்தேன்.
"ஏ!!! என்ன சொல்லு...
அந்த குங்குமம் வேற இன்னைக்குனு பாத்து வேலை நிறைய கொடுத்திருக்கு"
"இல்லை... உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்"
"என்ன... சொல்லு
நான் வேற இன்னைக்கு 7:15 பஸ்ஸாவது பிடிக்கனும்"
"சரி... ரயில்-வே ஸ்டஷனுக்கு எத்தனை மணிக்கு வரணும்"
"ஏ!!! அதெல்லாம் தேவையில்லை... நானே போயிக்குவன்"
"நான் உன்கிட்ட வரட்டுமா, வேணாமானு கேக்கல... எத்தனை மணிக்கு நீ ரெயில்-வே ஸ்டெஷன்ல இருப்பனு கேட்டேன்"
"நான் வீட்டில இருந்து புறப்படும் போது உனக்கு போன் பண்றனே... ஓகே வா???"
"சரி"
சுமா அடிக்கடி சொல்லுவா இந்த குங்குமம் வைக்கிற ஆம்பிளைகளையே நம்பக் கூடாதுனு. இன்னைக்கு அவனால எனக்கு பிரச்சனை.
சரி ரயில்வே ஸ்டெஷன்ல பார்த்து பேசிக்கலாம்.
வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்கு சென்றுவிட்டேன்.
8 மணிக்கு போன் அடித்தது. எந்த நம்பர்னே தெரியல... இந்த நேரத்துக்கு எவண்டா பண்றது.
"இது ரமேஷா???"
"ஆமாம்... நீங்க யார் பேசறது"
"நாங்க இங்க வாட்டர் டேங்க் பக்கத்துல இருந்து பேசறோம்... இங்க குமார்னு யாரோ ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவர் உங்க பிரண்டுங்களா???"
"ஆமாம்... அவர் எப்படி இருக்காரு??? எதுவும் பெருசா பிரச்சனையில்லையே"
"இல்லைங்க... தலைல ஹெல்மெட் போட்டீருந்ததால எதுவும் பெருசா இல்லை... இருந்தாலும் கை கால்ல எல்லாம் நல்லா அடிப்பட்டிருக்கு.. இங்க பக்கத்துலதான் St.John's hospitalல சேத்துருக்காங்க... நீங்க யாராவது வந்திங்கனா நல்லா இருக்கும்"
"இதோ உடனே வரேன்"
ஹாஸ்பிட்டல்... எனக்கு பிடிக்காத முதல் இடம். சின்ன வயசுல எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மருந்து வாடையே பிடிக்காமல் போய்விட்டது.
குமார் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தான். போனில் சொன்னது போல் லேசான அடியில்லை. கொஞ்சம் அதிகமாகவே அடிப்பட்டிருந்தது.
"நீங்க அவர் பிரண்டா???"
"ஆமாம்"
"அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது... நீங்க ரத்தம் கொடுக்க முடியுமா???"
"கண்டிப்பா...நான் ஏற்கனவே 2 தடவை கொடுத்திருக்கேன்"
"உங்க பிளட் குருப் என்ன???"
"B +ve"
"கடைசியா எப்ப பிளட் கொடுத்தீங்க???"
"காலேஜ் படிக்கும் போது. 2 வருஷமிருக்கும்"
"சரி வாங்க"
உள்ளே ஹைட், வெயிட் எல்லாம் செக் பண்ணாங்க... அப்பறம் இரத்தம் எடுக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்கள்.
என் செல் சிணுங்கியது...
Suma Calling....
"செல் போனெல்லாம் ஆப் பண்ணிடுங்க"
சரிங்க... செல் போனை ஆப் செய்தேன்.
பிறகு வெளியே வருவதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது.
மணி பத்து...
நண்பர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
"டேய்... பெரிய பிரச்சனை எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க!!! இன்னும் 10-15 நாள்ல சரியாயிடுமாம்" கருவாயன் சொன்னான்.
"பணம் ஒரு 10,000 வேணுமாம். நான் போயி எடுத்துட்டு வரேன். ரமேஷ் நீ கொஞ்சம் உன் வண்டி சாவியை தர முடியுமா??? "
"இந்தா பத்திரம்... அப்படியே பெட்ரோல் போட்டுக்கோ"
அப்போழுதுதான் நியாபகம் வந்தது. செல் போனை இன்னும் ஆன் செய்யவில்லை. சரி... எப்படியும் இது செல் போன்ல பேசர விஷயமில்லை.
10 நாள் தானே...
குமாரின் பெற்றோர் வந்தவுடன் ஊருக்கு சென்றேன்...
தீபாவளி ... மனதிற்கு வலியைத்தான் தந்தது... அவள்ட முன்னாடியே பேசியிருக்காலாம்.
சே!!! அவளை ஒழுங்கா, ரொமிங்கோட வாங்குனு சொன்னேன். இப்ப பாரு போன் பேசனும்னு நினைச்சாக் கூட முடியல.
"ஏன் கண்ணு ஒரு மாதிரியா இருக்க???"
"இல்லம்மா... குமார்க்கு அடிப்பட்டுடுச்சி அதனாலத்தான்"
"நீ ஒன்னும் கவலைப்படாதே!!! எல்லாம் சரியாயிடும்"
பத்து நாள் பத்து யுகங்களாக கடந்தது.
திங்கள் கிழமை காலையில் 8 மணிக்கெல்லாம் என் சீட்டில் இருந்தேன்.
சுமாவின் காலுக்காக எதிர்பார்த்து...
அவளுக்கு போன் செய்தாலும் "The number u r trying is currently not reachable"ஏ வந்தது.
செவ்வாய் கிழமை காலை 5:30 மணிக்கு கால் வந்தது...
Suma calling...
"ஏ!!! என்ன இவ்வளவு சீக்கிரம் கூப்பிடற"
"ரமேஷ்! நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸுக்கு வர முடியுமா???"
"ஏன் என்னாச்சி???"
"நீ நேர்ல வா!!! நான் சொல்றேன்"
"சரி...நான் 7:15க்கு சீட்ல இருப்பேன்"
"வேணாம் 8 மணிக்கு வா!!! போதும்"
"சரி"
அதுக்கு அப்பறம் தூக்கமே வரலை.
8 மணிக்கு அவளோட பில்டிங் லாபில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
நேராக பஸ்ஸில் இருந்து வந்தவள். என்னைப் பார்த்தவுடன், லேசாக கண் கலங்கினாள்.
"இரு!!! நான் போய் என் சீட்ல என் ஹாண்ட் பேகை வெச்சிட்டு வந்துடரேன்... அப்பறம் சாப்பிட போகலாம்"
"சரி"
2 நிமிடத்திற்குள் வந்தாள்...
"வா!!! போகலாம்"
"என்ன விஷயம் சொல்லு..."
"எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!!!"
ஒரு நிமிடம் பூமி சுற்றவது நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது...
"என்ன சொல்ற???"
"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்"
"அதுக்கு நீ என்ன சொன்ன???"
"நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பார்க்கிற???"
என்னிடம் பதில் இல்லை...
"ஒரு வாரம் உட்கார்ந்து அழுதேன்... உன்னை ரீச் பண்ணவும் முடியலை. உன் மனசுல என்ன இருக்குனும் எனக்கு தெரியல... நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற ரமேஷ்"
இதற்கும் பதில் இல்லை...
"உன்னைப் பற்றி என் அம்மாட்ட சொன்னேன்... எங்கம்மா என் கால்ல விழுந்து அழுதாங்க!!! என்னால மறுக்க முடியல"
இதை சொல்லவா என்னை 8 மணிக்கு வர சொன்ன???
"ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..நாம இனிமே பார்க்க வேண்டாம்... நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்... நீ நல்லா இருக்கனும் ரமேஷ்"
அழுதுகிட்டே வேகமா திரும்ப போயிட்டா...
அவள் பிறந்த நாளுக்கு மூன்று நாட்களே இருந்தது. நான் உனக்காக தெலுகு பெசவும், எழுதவும் கத்துக்கிட்டேனே... அது எல்லாமே உனக்கு தெரியாமலே போயிடுச்சே???
உனக்கு நான் தெலுகுல என் கையால எழுதி வெச்ச அந்த கார்ட் என்னைக்கும் என் பெட்டியிலே இருக்கும்...
எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது
"டேய் மச்சான் ... குமாருக்கு பிரோமோஷன் வந்திருக்கு... அதனால இன்னைக்கு அவனோட ட்ரீட்... வா PVR போவோம்"
எல்லோரும் PVR சென்றோம்...
முதலில் என் கண்ணில் பட்டது... பிரின்ஸ் மகேஷ் பாபு in "போக்கிரி".
அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"

கோழியின் அட்டகாசங்கள் - 3
இது கடைசி வருடம் நடந்த நிகழ்ச்சி...
கோழியும், இருமியும் டூ- வீலரில் சாய்பாபா காலணி போயிட்டு திரும்ப காலேஜ் வந்து கொண்டிருந்தனர். துடியலூர் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வேண்டும்... (ஹாஸ்டலில் இருக்கும் அனைத்து வண்டியும் எப்போதும் ரிஸர்வில்தான் ஓடிக்கொண்டிருக்கும்)
(இருமி - வந்த புதிதில் அதிகமாக இறுமிக் கொண்டிருந்ததால் வந்த பெயர்)
இருமி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
இருமி: கோழி ரைட்ல திரும்பனும் கையப் போடு...
கோழி: ஒகே
திரும்பும் போது பின்னால் இருந்த வந்த ஒருவன் கேவலமான வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றான்...
இருமி: டெய் கோழி கைப் போட்டியாடா???
கோழி: ஏண்டா நீ சொன்ன உடனே போட்டுட்டன்... இன்னும் எடுக்கவே இல்லை...
இருமிக்கு ஒரு நிமிஷம் புரியாம என்னனு பாத்தா, கோழி இருமியோட தோள்ல கையப் போட்டிருக்கான் :-)))
இருமி: ஏண்டா!!! நீ என்ன என் லவ்வராடா???
பில்லியன்ல உக்காந்து என் தோள்ல கைப் போட்டு வரதுக்கு...
திரும்பறதுக்கு ரைட்ல சிக்னலுக்கு கைப் போடுனா தோள்ல கையப் போட்ருக்க :-X
பெட்ரோல் பங்ல போனவுடனே பார்த்தா முன்னாடி சக்கரத்துல காத்து ரொம்ப கம்மியா இருந்தது... துடியலூர் பெட்ரோல் பங் ரொம்ப சின்னது...
இருமி பெட்ரோல் போடுபவனிடம்: அண்ணே!!! முன்னாடி வீல்ல காத்து கம்மியா இருக்கு.. பக்கத்துல எங்கயாவது காத்து பிடிக்கிற இடம் இருக்கா?
பெ.போ: முன்னாடி வீல் தானே!!! இங்கயே லெக் பம்ப் இருக்கு அடிச்சிக்கலாம்... உள்ள இருக்கு போய் எடுத்துக்கோங்க...
இருமி: கோழி போய் லெக் பம்ப் எடுத்துட்டு வாடா...
உள்ளே போன கோழி கைல எடுத்துட்டு வந்ததை பார்த்து எல்லோரும் அரண்டு போயிட்டாங்க!!!
அவன் கைல இருந்தது Fire Extinguisher :-)))
கடைசி வருட ஜாவா லேப்:
கோழி OPயோட சிஸ்டம் பக்கத்துல உட்கார்ந்து கடலைப் போட்டுட்டிருந்தான்...
OP ஏதோ டவுட்னு என் இடத்துக்கு வந்து கேட்டான்... நானும் சரினு OP சிஸ்டத்துல என்னனு பொயி பாக்கலாம்னு போனேன்...
அங்க போனா Notepad அப்ளிக்கேஷனக் கானோம் (Java Program நாங்க Notepadல தான் போடுவோம்)...
நான்: OP, பிரோக்ராம் எங்க???
OP: கோழி Notepad எங்க காணோம்???
கோழி: டேய் சத்தியமா நான் எடுக்கலைடா.... வேணும்னா என் எடத்துல வேணாலும் போய் பாத்துக்கோ!!!
இதை கேட்டு லேபில் இருந்த எல்லோரும் :-)))))))
அட்டகாசம் தொடரும்...

Monday, August 14, 2006
கோழியின் அட்டகாசங்கள் - 2
இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் லேப்:
பிரோக்ராம் அவுட்புட் காட்டிவிட்டு, லேப் இன்ஸ்ட்ரெக்டரிடம் அப்செர்வேஷன் நோட்டில் கையெழுத்து வாங்கிவிட்டு என் இடத்திற்கு வந்து பார்த்தா என் எலிக்குட்டியக் (மவுஸ்) காணோம்...
எனக்கு அருகில் அமர்ந்திருப்பவனிடம் (அருண்): டேய் எங்கடா என் மவுஸ்ஸ காணோம்??
அருண்: தெரியல... கோழிதான் இங்க ஏதோ நோண்டிட்டு இருந்தான்.
சரின்னு நான் கோழி எடத்துக்கு போய் பார்த்தால், கோழி என் மவுஸ்ஸ அவன் சிஸ்டத்துல இனைத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்.
நான்: கோழி ஏண்டா, என் மவுஸ்ஸ எடுத்துட்டு வந்த???
கோழி: கொஞ்சம் இரு...தரன்... இது வேற இந்த நேரம் பாத்து காப்பி ஆக மாட்டிங்குது. ஒரு அஞ்சி நிமிஷம் வெயிட் பண்ணு
நான்: சரி சீக்கிரம் தா...
கோழி திரும்ப அவன் சிஸ்டத்தில இருந்து மவுஸ் கழுட்டி என் சிஸ்டத்துல மாட்டினான். அங்க என் பிரோகராமை ரைட்-கிளிக் பண்ணி காப்பி பண்ணான்...
திரும்ப என் சிஸ்டத்துல இருந்து கழுட்டி அவன் சிஸ்டத்துக்கு எடுத்துட்டு போனான்.
சரி என்ன பண்றான்னு பார்த்தா!!! அங்க திரும்ப கனெக்ட் பண்ணி, ரைட் கிளிக் பண்ணி பேஸ்ட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருந்தான்.
நான்: டேய் கோழி, என்ன பண்ற???
கோழி: ஏண்டா உன் மவுஸ் ஒலுங்கா வேலை செய்யாதா??? காப்பி ஆகுது ஆனால் பேஸ்ட் பண்ண முடியல...
நான்: :-((((
சம்பவம் - 2:
மூன்றாம் ஆண்டு....
OP: டேய்!!! கோழி முதல் முறையா அவுட்-புட் வாங்கிட்டாண்டா!!!
நான்: OP, நிஜமாவா???
OP: ஆமாம், யாரையோ பாத்து போட்டு வாங்கிட்டான்.
நான்: சரி வா!!! நம்ம போயி என்ன பிரோக்ராம்னு பாப்போம்.
நானும், OPயும் கோழி எடுத்துக்கு பொனா, கோழி ரொம்ப சந்தோஷத்துல குதிச்சிட்டு இருந்தான்...
OP: டேய்ய்ய் கோழி, அவுட்புட் வாங்கிட்டியாம்... இன்னைக்கு டிப்பார்ட்மெண்லையே இது தான் ஹாட் டாபிக். HODக்கு ஹார்ட்-அட்டாக் வந்திடுச்சாம்.
கோழி: டேய், இதெல்லாம் எனக்கு சாதரணம்டா...நாங்கெல்லாம் யாரு!!!
நான்: டேய் கோழி அந்த பிரோக்ராம காட்டு...OP நம்ப மாட்றான்...
கோழி: இந்தா நீயே தேடிக்கோ!!! ஐயா பிஸி!!!
நானும் பிரோக்ராம ஒவ்வொரு foldera தேடி பார்க்கிறேன்... எங்க இருக்குனே கண்டுபிடிக்க முடியல...
நான்: டேய் கோழி பிரோக்ராமக் காணோம்டா!!!
கோழி: என்ன காணோமா? இரு நான் பார்க்கிறேன்...
கோழியும் தேடிக்கிட்டே இருந்தான்.
கோழியப் பத்தி அவனை விட நல்லா தெரிஞ்ச OP...டேய் கோழி!!! இரு நான் பார்க்கிறேன்னு சொல்லிட்டு..மவுஸ்ஸ வாங்கினான்.
நேரா Recycle Bin போனான்...பிரோக்ராம் Recycle Binல இருந்தது...
OP: டேய் கோழி பிரோக்ராம யாருக்கும் தெரிய கூடாதுனு Recycle Binல Save பண்ணி வெச்சிருக்காண்டா...
இது காட்டுத் தீ போல பரவி...டிப்பார்ட்மென்ட்ல இருக்கிற எல்லா ஸ்டாஃபும் Recycle Binல Save பண்ண முடியுமானு முயற்சி பண்ணி பார்த்தாங்க ;-)
அட்டாகசங்கள் தொடரும்...

Sunday, August 13, 2006
கோழியின் அட்டகாசங்கள் -1
காலேஜ் முதல் வருடத்தில் சீனியர் அதிகமாக ரேகிங் செய்யுமிடத்தில் மெஸ்ஸிற்கு தான் முதலிடம்...
ஞாயிறு மதியம் சிக்கன். எல்லோரும் பம்பிட்டே சாப்பிட்டிருந்தோம்...
திடிர்னு சிக்கன் தீந்திடுச்சி (பர்ஸ்ட் இயர் பசங்க வந்திருக்காங்க கொஞ்சம் அதிகமா செய்யனும்னு தெரியாதா அந்த மெஸ்ல இருக்கறவனுங்க செஞ்ச வேலை).
எங்க முன்னாடி உட்கார்ந்திருந்த சீனியர்கிட்ட வந்த அவன் பிரண்டு,
சீ.2: டேய் மச்சான் சிக்கன் தீந்திடுச்சாம்...திரும்ப புதுசா செஞ்சிட்டு இருக்கானுங்க... இன்னும் அரை மணி நேரமாகுமாம்...
சீ.1: அதுவறைக்கும் என்ன பண்ணலாம்????
சீ.2: (என்னிடம்) டேய் நீ என்ன டிப்பார்ட்மென்ட்ரா?
நான்: ஐ.டி சார் (அண்ணானு சொல்ல கூடாதாம்)
சீ.2: சரி நீ போய் மெஸ்ல சாப்பிட்டுட்ருக்கற ஐ.டி பசங்க எல்லாத்தையும் கூப்ட்டு வா...
நான்: சரிங்க சார்
சீ.1: மவனே அப்படியே எஸ்ஸான...அவ்வளவுதான்...தெரியுமில்லை.
நான்: அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் சார்...
சீ.2: சரி போ...5 நிமிஷத்தில இங்க இருக்கனும். (என் பக்கத்தில் அமர்ந்திருப்பவனிடம்) டேய்...நீ 1,2 சொல்லு...
(என்னிடம்) அவன் 300 சொல்லி முடிக்கறத்துக்குள்ள நீ இங்க இருக்கனும்.
நான்: சரி சார்... (மனசுக்குள்ள: நாதாரி நாயி... பெரிய M.N.நம்பியார்னு நினைப்பு...உனக்கெல்லாம் சத்தியமா வாஷ் அவுட்தான்டா ஆகும்)
5 நிமிடத்திற்குள் ஒருவழியாக மெஸ்ல இருக்கிற எல்லா ஐ.டி பசங்களையும் கூப்பிட்டு வந்துவிட்டேன்.
சீ.2: (என்னிடம்) சரி நீ உக்காரு...
(மீதி இருப்பவர்களை பார்த்து) ஏன்டா நீங்க எல்லாம் சிக்கனையே பாத்ததில்லையா??? ஏன்டா இப்படி ஊருக்கு முன்னாடி வந்து தின்னு தீக்கறீங்க?
நான் மனதிற்குள்: டேய் நாயே உனக்கு கிடைக்கலங்கற வயித்தெரிச்சல்ல பேசிட்டு... எங்களை அலையறோங்கிறயா???
சீ.1: சரி... இப்ப நீங்க என்ன பண்ண போறீங்கனா, ஒருத்தவன் ஒருத்தவனா
வந்து கோழி புடிக்கிறீங்க..என்ன புரியுதா???
ஒவ்வொருத்தவனா வந்து கோழி புடிக்கிற மாதிரி நடித்தார்கள்...
சீனியர் கமென்ட்ஸ்:
* ஏன்டா கோழி புடிடானா நாய் புடிக்கிற மாதிரி ஓடற...
* ஏன்டா செத்த கோழியா புடிக்கிற...ஒளுங்கா புடிடா
* டேய மச்சான், அங்க பாருடா அவன் கோழி புடிடானா கபடி ஆடறான்
கூடவே நிறைய சென்ஸார் செய்ய வேண்டிய வசனங்கள்...
இந்த நிலைமையில் எங்களை காப்பாற்ற வந்தான் காரமடை சிங்கம்...
அவன் கோழி புடிக்கிற அழக பாத்து எல்லோரும் அரண்டு போயிட்டானுங்க...
(அப்பறம் ஒவ்வோரு சீனியர் ரூமுக்கும் போயி கோழி புடிச்சி காட்டினான். அது வேற கதை)
அன்றிலிருந்து அவன் பெயர் "கோழி" என்றானது...அவன் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை... அதை பற்றிய ஒரு தொடரே இது...

ஒரு சின்ன ஆராய்ச்சி...
இது நேத்து உனக்கும் எனக்கும் பார்க்கும் போது எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் நடந்த ஒரு உரையாடல்...
ரூ.மே: நம்ம த்ரிஷா நடிச்ச வெற்றி படங்களுக்கும், தோல்வி படங்களுக்கும் வித்தியாசம் என்ன???
நான்: வந்த புதுசுல, கிடைச்ச படங்கள் எல்லாத்துலையும் நடிச்சாங்க...இப்ப கதைய தேர்ந்தெடுத்து நடிக்கறாங்க...
ரூ.மே: டேய் மச்சான் என்ன ஆச்சி உனக்கு. தெளிவா தானே இருக்க??? தமிழ் படத்துல ஹீரோஸே கதைய கேக்கறதில்லை. நீ என்னனா அவுங்க கதைய கேட்டு நடிக்கிறாங்கன்ற???
நான்: அப்படி இல்லை. படத்துல் அவுங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கற மாதிரி பாத்து நடிக்கிறாங்க...
ரூ.மே: டேய் என்னடா ஆச்சி உனக்கு. திருப்பாச்சி பாத்த இல்லை... அதுல அவுங்க தான் கதாநாயகினு பாட்ட வெச்சிதான் தெரிஞ்சிக்க முடியும்.
நான்: சரி இப்ப நல்ல பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறாங்க...
ரூ.மே: "ஆறு" பாத்த இல்லை??? அப்பறம் என்ன இப்படி சொல்ற???
நான்: சரி நீயே சொல்லு...
ரூ.மே: சரி அவுங்க நடிச்ச ஹிட் படமெல்லாம் சொல்லு
நான்: சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும்
ரூ.மே: தெலுகு படத்தையும் சொல்லு...
நான்: வர்ஷம், நூ வொஸ்தானன்டே நேன்னொத்துன்டானா?, அத்தடு, பவுர்ணமி
ரூ.மே: பிளாப் படமெல்லாம் சொல்லு
நான்: லேசா லேசா, அலை, மனசெல்லாம், ஜி, எனக்கு 20 உனக்கு 18, ஆய்த எழுத்து, ஆதி, ஆறு, அல்லரி புல்லுடு (தெலுகு)...
ரூ.மே: நல்லா யோசிச்சி பாரு...
நான்: ஒன்னும் தெரியல நீயே சொல்லு.
ரூ.மே: ஹிட் படத்துல எல்லாம் அம்மணி பாவாடை தாவணில வருவாங்க...
பிளாப் படத்துல எல்லாம் மாடர்ன் டிரஸ்ல வருவாங்க :-)))
நான்: ஆஹா, இதை நான் யோசிக்கவே இல்லையே....
டேய் "ஜி"ல பாவாடை தாவணில தான வருவாங்க???
ரூ.மே: ஏன்டா "தலை" எஃபக்ட் இருக்கும் போதூ த்ரிஷா எஃபக்ட் ஒர்க் அவுட் ஆகாது. புரியுதா???
நான்: அது சரிதான்...சரி நான் ஒன்னு கேக்கறன். நீ சொல்லு.
"ஜி" படத்துக்கு பெயர் காரணம் சொல்லு.
ரூ.மே: நான் அந்த படம் பாக்கல நீயே சொல்லு...
நான்: டேய் மச்சான்...இப்ப என்ன ஆச்சி உனக்கு??? எத்தனை வருஷம் படம் பாக்கற... படத்துக்கும் பேருக்கும் என்னைக்காவது சம்பந்தம் இருக்குமா?
ரூ.மே: நிஜத்துல தான் நம்மல ஒரு பயலும் மதிக்க மாட்றான்...படத்து பேராவது நம்மல மதிக்கிற மாதிரி இருக்கணும்னா???
நான்: டேய் இது கொஞ்சம் டூ மச்...
திரைப்படத்துறைல டாப் ஹீரோஸ் (அதிக ரசிகர்கள்) யார் யார்???
ரூ.மே: எம்.ஜி.ஆர், ரஜினி.
நான்: இவுங்க ரெண்டு பேர் பேருலையும் ஒரு ஒத்தும இருக்கு பாரு...
ரு.மே: என்ன ஒத்தும???
நான்: அஜித் பேருலையும் அது இருக்குடா...நல்லா பாரு...
ரூ.மே: ஆமான்டா..மூணு பேர் பேருலையும் நடு எழுத்து 'ஜி'
நான்: அதே :-))

Subscribe to:
Posts (Atom)