தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Monday, December 29, 2014

துவக்கம்

வலைப்பதிவு எழுதுவதை நிறுத்தி சில ஆண்டுகளுக்குப் பின் எழுத தொடங்குகிறேன்.

இந்த பதிவுகளோட நோக்கம் என்னனு முதல்ல சொல்லிடறேன்.

UPSC தேர்வுகள் குறித்த அறிமுகம், மூன்று நிலைகளுக்கும் தயார் செய்யும் முறைகள் (என்னுடைய அனுபவங்களையும், என்னுடைய நண்பர்களுடைய
அனுபங்களையும் முன் வைத்து), எங்கே படிப்பது, எப்படிப் படிப்பது, எதைப் படிப்பது, ஆப்ஷன்ஸ் என்ன எடுப்பது போன்ற கேள்விகளுக்கும் முடிந்த வரை
எங்களுடைய அனுபவங்களை முன் வைத்து பதிவு எழுத போகிறேன்.

இதை எழுத என்னுடைய தகுதி என்னனு கேட்டா, இரண்டு மெயின்ஸ் (2014யையும் சேர்த்து), ஒரு இண்டர்வியூ (இந்த ஆண்டும் இண்டர்வியூ போய் சர்வீஸ் வாங்கிவிடுவேன் என நம்புகிறேன்). நான் சர்வீஸ் வாங்கிய பிறகு எழுதலாம் என்று தான் முதலில் முடிவு செய்திருந்தேன். ஆனால் அதற்கான நேரம் அப்பொழுது கிடைக்குமா என்று சந்தேகமாக இருப்பதால், மெயின்ஸ் மற்றும் இண்டர்வியூவிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதுவது உசிதமானது என ஆரம்பிக்கிறேன்.

அவ்வப்பொழுது தமிழ் நாட்டில் இருந்து சர்வீஸ் வாங்கிய நண்பர்களின் அனுபங்களையும் அவர்களிடமிருந்து வாங்கி பகிர்ந்து கொள்கிறேன்.

என்னுடைய எழுத்து நடையைப் பேச்சு மொழியில் தொடரவே நினைக்கிறேன். அதுதான் அருகிலிருந்து பேசும் பாவனையைக் கொடுக்கும் என்பதும், வேகமாக சொல்ல வந்த கருத்தைக் கொண்டு சேர்க்கும் என்பதும் என் எண்ணம். மேலும், இத்தொடரை இங்கே பதியலாம் என்றும் எண்ணம். https://upsctamil.wordpress.com/

No comments: