தற்போது சென்னையிலிருக்கிறேன். நாளை இரவு பெங்களூர் புறப்படலாம் என திட்டம் (நவம்பர் 5).
தத்துவம்
உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்
Tuesday, November 04, 2008
ஒரு நல்ல பேரா பார்த்து சொல்லுங்கப்பா...
சுத்தி வளைச்சி சொல்ல விருப்பமில்லை. ஒரு குட்டி தேவதை வீட்டுக்கு புதுசா வந்திருக்காங்க. அவுங்களுக்கு பேர் வைக்கனும். இந்த எழுத்துக்கள்ல நல்ல பேரா சொல்லுங்க. ப (pa), பா(ba), பி(pi, bi), யெ(ye),யே,யொ(yo),யோ. இந்த எழுத்துக்கள்ல பேர் யோசிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு. நல்லதா பார்த்து சொல்லுங்க.
Tuesday, October 21, 2008
விடைபெறுகிறேன் நண்பர்களே!!!
ஒரு வழியா 2006 பிப்ரவரில ஆரம்பிச்ச ஆன்சைட் வாழ்க்கை இப்ப முடிவுக்கு வர போகுது. இங்க வந்ததுல ஒரு சில நல்லது நடந்தது. அதுல முக்கியமானது ப்ளாக் ஆரம்பிச்சி, உலமெங்கும் நண்பர்களை பெற்றது. 2006ல எழுதன அளவுக்கு ஆர்வமா அதுக்கு அப்பறம் எழுதல. இருந்தாலும் இந்த வலைப்பதிவு நண்பர்களோட இருக்குற தொடர்பு அப்படியே தான் இருக்குது.
இனிமே தொடர்ந்து எழுத முடியுமானு தெரியல. அடுத்த மூணு மாசம் பெங்களூர்ல நண்பர்களோட இருக்க போறேன். அதுக்கு பிறகு எங்கனு தெரியல. சென்னை வரலாம்னு ப்ளான். ஒரு வேளை மறுபடியும் ஆன்சைட்டாகவும் இருக்கலாம். நிச்சயமா சொல்ல முடியாது.
எப்படியும் அடுத்த மூணு மாசத்துக்கு வீக் எண்ட் எல்லாம் சென்னை தான். வலைப்பதிவர்களை எல்லாம் சந்திக்க முடியுமானு தெரியல. ஆனா ஃபோன் பண்ணா கண்டிப்பா பேச நேரமிருக்கும். ஆனா பேர் சொல்லாம பேசி மண்டை காய விட்றாதீங்கப்பா. எப்படியாவது ஃபோன் நம்பரை எல்லாருக்கும் அப்டேட் செய்கிறேன். (பெங்களூர்ல தமிழ் காலர் ட்யூன் வைக்க முடியுமா? ஃபோன் நம்பர் கேட்டு கால் பண்ணி பார்த்து அடிக்க மாட்டானுங்களே? )
பெங்களூர்ல நண்பர்கள் வீட்ல கம்ப்யூட்டரே இல்லை. கேட்டா டீவியும், DVD ப்ளேயரும் இருக்குனு சொல்றானுங்க. ஏன்னா காலேஜ்ல கம்ப்யூட்டர் வெறும் படம் பார்க்கவும், பாட்டு கேட்கவும் மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆபிஸ்ல க்ளைண்ட் நெட்வொர்க்ல வேற எதையும் அக்ஸஸ் பண்ண முடியாது. அதனால இனிமே பர்சனல் மெயில் செக் பண்றது கூட கஷ்டம் தான்.
எழுத நிறைய விஷயம் கிடைச்சாலும் எழுத முடியாது. இத தான் வெள்ளக்காரன் ஸ்டோன் சீ நோ டாக், டாக் சீ நோ ஸ்டோனு சொல்லிருக்கான்.
ஆசை ஆசையா பார்த்து பார்த்து வாங்கன பொருட்களை எல்லாம் பாதி ரேட்டுக்கு விக்கறது கஷ்டமா இருக்கு (5.1 Speaker விக்கறதுக்கு கடைசி வரைக்கும் மனசே வரலை. வாங்கறவனுக்கு பயங்கர சந்தோஷம்). இருந்தாலும் நாடோடி வாழ்க்கைனா இதெல்லாம் ஜகஜம்னு எடுத்துட்டு போக வேண்டியது தானு மனசை தேத்திக்கிட்டேன். இன்னும் பேக்கிங் வேலை இருக்கு. ஆணியும் ரொம்ப அதிகம். ஃபேர் வெல் பார்ட்டிகளும் நிறைய இருக்குது. இனிமே ப்ளாக் பக்கம் வர முடியுமானு தெரியல.
இத்தனை நாள் தொடர்ந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் நன்றி.
நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் மீண்டும் வந்து உங்களை தொல்லை செய்வேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
பாஸ்டனிலிருந்து சனிக்கிழமை கிளம்புகிறேன். தீபாவளி அன்று இந்தியாவில் இருப்பேன். அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!!!

Tuesday, October 14, 2008
சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்
நிறைய இடங்கள்ல ஆள் குறைப்பு நடந்துட்டு இருக்கு. இது இன்னும் அதிகமா இருக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல நாம செய்ய வேண்டியதெல்லாம் என்ன?
1. முடிந்த வரை பெஞ்ச்ல இருக்காதீங்க. ஏதாவது ஒரு ப்ராஜக்ட்ல சேர்ந்திடுங்க. எனக்கு டெக்னாலஜி தெரியாதுனு சொல்லி ப்ராஜக்டை தவிர்க்காதீங்க. எந்த டெக்னாலஜியா இருந்தாலும் தெரிஞ்சிக்கலாம்.
2. நிறைய படிங்க. அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் ஏதாவது சர்ட்டிபிகேஷன் பண்ணுங்க.
3. இந்த மாதிரி செய்தவுடனே அதை உங்க மேனஜருக்கு கண்டிப்பா தெரிவிங்க. மத்தவங்களுக்கும் அதோட முக்கியத்துவம்னு எடுத்து சொல்லி சும்மா கெயிட் பண்ணுங்க.
4. உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.
5. புது கம்பெனிக்கு தாவுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் Last in First Out பாலிஸி தான் இருக்கும்.
6. தேவையில்லாம தண்ட செலவு செய்யாதீங்க. புது ஃபோன், லேப் டாப்னு கண்டதெல்லாம் இந்த நேரத்துல வாங்காதீங்க.
7. முடிந்த வரை க்ரெடிட் கார்ட் பயன்படுத்துவதை குறைக்கவும். கைல இருந்து காசு கொடுத்தா தான் செலவு பண்ணறது தெரிஞ்சி கொஞ்சமாவது செலவை குறைப்போம். கைல காசை தொடாம எல்லாமே கார்ட்லயும் ஆன்லைன்லயும் பண்ணா எவ்வளவு செலவு பண்றோம்னு சுத்தமா தெரியாது.
8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.
9. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.
10. தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.
இதுக்கு மேல விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தயாரிச்சிடலாம்...

Monday, October 13, 2008
தமிழ் சினிமா - கேள்வி பதில் ஆட்டம்
நம்மல இந்த ஆட்டத்துக்கு கூப்பிட்ட முரளி கண்ணனுக்கு நன்றி.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எப்படியும் பிறந்த ஒரு மாசத்துலயே பார்க்க ஆரம்பிச்சிருப்பேனு நினைக்கிறேன். வீட்ல அந்த அளவுக்கு படம் பார்ப்பாங்க. அப்படி ஒரு மாசத்துல இல்லைனாலும் ஆறாவது மாசத்துல “தீராத விளையாட்டு பிள்ளை”க்கு என்னை தூக்கிட்டு போனாங்க. அங்க எங்க பக்கத்துல உட்கார்ந்து என்னை தூக்கினவங்களை எங்க அம்மாவுக்கு பிடிச்சி போச்சு. அப்பறம் விசாரிச்சு பார்த்த எங்க அம்மாவோட அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாங்க. எங்க மாமா இப்பவும் சொல்லுவாரு தீராத விளையாட்டு பிள்ளைக்கு போய் என்னை மாட்டிவிட்டுட்டியேடா மாப்பிளைனு. இது நடந்தது திருக்கோவிலூர் தனலட்சுமி தியேட்டர்ல.
நினைவு தெரிந்து பார்த்த முதல் படம்னா “நாயகன்”. அப்ப எங்க பாட்டி வீட்ல அடிக்கடி வாடகைக்கு டெக் எடுப்பாங்க. காலைல நல்ல மழை பெஞ்சுட்டு இருந்துச்சு. எழுந்தவுடனே டெக்ல நாயகன் படம் போட்டுட்டாங்க. கூரைல இருந்து தண்ணி சொட்டிட்டு இருந்ததெல்லாம் ஞாபகமிருக்கு. எங்க மாமா பசங்க எல்லாம் ஏமாத்தி பள்ளிக்கூடம் மட்டம் போட்டுட்டாங்க. எப்பவுமே பாலாஜி நல்ல பையனு சொல்லி சொல்லியே என்னை ஏமாத்திடுவாங்க. நான் மட்டும் பள்ளிக்கூடம் கிளம்பிட்டு இருந்தேன். சரியா நான் சாப்பிட்டு முடிச்சிட்டு கிளம்பும் போது தான் நிழல்கள் ரவி செத்து கமல் அழுவுற சீன். கிளம்பவே மனசில்லை. நான் போக மாட்டேனு சொன்னா எங்க அம்மாவுக்கு எங்க அப்பாக்கிட்ட இருந்து திட்டு விழும். அதனால போகறதுக்கு கொஞ்சம் கூட மனசில்லாம பள்ளிக்கூடம் போனேன். அந்த தென்பாண்டி சீமையிலே பாட்டு ரொம்ப நாளைக்கு காதுல ஒலிச்சிக்கிட்டே இருந்தது.
மத்தபடி தியேட்டர்ல பார்த்த படம்னா, கள்ளக்குறிச்சில கீத்து கொட்டாய்ல பார்த்த ”வல்லவன் ஒருவன்”. அந்த படத்துக்கு போகும் போது சரியா வீட்டை பூட்டாம போயிட்டோம்னு பயிந்துட்டு படம் போட்ட கொஞ்ச நேரத்துலயே வந்துட்டோம். பூட்டினவங்க சரியா பூட்டாம வந்துட்டாங்களேனு கடுப்பா இருந்துச்சு.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
போன வாரம் சரோஜா பார்த்தேன். சென்னை 28 இயக்கிட்டு இப்படி ஒரு படம் இயக்கிருக்காரேனு வருத்தமா இருந்துச்சு. சென்னை 28 நம்ம படம்னு ஒரு ஃபீலிங் இருந்துச்சு. பொண்ணுங்களை கடத்தற படம் சமீபத்துல நிறைய பார்த்ததும் (அஞ்சாதே, Silence of the lambs, வேட்டையாடு விளையாடு, அப்பறம் நான் எழுதின ஆடு புலி ஆட்டம் இந்த மாதிரி நிறைய) படம் பிடிக்காம போனதுக்கு காரணமா இருக்கலாம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
வெள்ளி - ஐயா, தாம் தூம், நாயகன் (ரித்திஷ்)
சனி - Horton Hears a who, Iron Man, Pink Panther, You've got Mail, ஜெயம்கொண்டான்
ஞாயிறு - சக் தே இந்தியா
திங்கள் (இன்று) - அரசாங்கம். (இதை எழுதும் போது குருவி பார்த்துட்டு இருக்கேன். இண்டர்வெல் முடிஞ்சிருக்கு. தாங்க முடியல...)
அரசாங்கம்ல வேற யாராவது கதாநாயகனா நடிச்சிருக்கலாம். இல்லைனா விஜயகாந்த் இருபது வருஷத்துக்கு முன்னாடி இந்த படத்துல நடிச்சிருக்கலாம். கொஞ்சம் இங்கிலீஷ் பேசறதையும் Gaptain தவிர்த்திருக்கலாம். படம் விறுவிறுப்பா இருந்தது உண்மை.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
உன்னால் முடியும் தம்பி
உதயமூர்த்தி கேரக்டரும், அந்த தாத்தா கேரக்டரும், அக்கம் பக்கம் பாராட சின்ன ராசா பாட்டும் எப்பவும் மனசை பிசைஞ்சிக்கிட்டே இருக்கும். நம்ம படிச்ச படிப்புக்கு இந்த சமுதாயத்துக்கு நல்லது ஏதாவது செய்யனும்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்
பாபா.
படம் மட்டும் பாட்ஷா மாதிரி இருந்திருந்தா....
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மை டியர் குட்டிச்சாத்தான். 3-D.
ரீ-ரிலிஸ்ல பார்த்தேன். ரொம்ப ரசிச்சேன்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கைல எந்த பேப்பர்ல சினிமா பத்தி கிடைச்சாலும் தவறாம வாசிக்கறதுண்டு. ஆனா பாதிக்கு மேல டுபாக்கூரா இருக்கும்னு ஒரு நம்பிக்கை :)
குமுதம், விகடன், சினிக்கூத்து, வண்ணத்திரை, வாரமலர் இப்படி எதுவும் விடறதில்லை.
7.தமிழ்ச்சினிமா இசை?
பொதுவா எனக்கு காதல் பாட்டு எல்லாம் பிடிக்காது. தன்னிம்பிக்கை கொடுக்கற பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அதனால அதிகமா பிடிச்சது பட்டுக்கோட்டையார் பாடல்கள் தான். சோக பாட்டு எல்லாம் சுத்தமா பிடிக்காது. அதே மாதிரி ஃபீலிங்ஸ் பாட்டும். குத்து பாட்டு ஓகே :)
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய தெலுகு படம் பார்ப்பேன். அது ஊருக்கே தெரியும். அதிகம் தாக்கிய படம்னா “ஆ நலுகுரு”. அட்டகாசமான படம். அதுக்கு அடுத்து பொம்மரில்லு.
உலக திரைப்படம்னா - ஆங்கிலப்படம் தான். அதுல ரொம்ப பிடிச்ச படம்னா "Terminal". "shawshank redemption"ம் ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அதை விட பிடிச்ச படம் Terminal.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இதுவரை இல்லை. தொடர்ந்து டெவில் ஷோ எழுதியிருந்தா ஆட்டோ வந்திருக்கும்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரொம்ப நல்லா இருக்கு. வித விதமான படங்கள். ஒரு பக்கம் ஹை பட்ஜட் படங்கள், ஒரு பக்கம் லோ பட்ஜட்லயே கலக்கற படங்கள். இப்படி நிறைய வெரைட்டி படங்கள் நமக்கு காத்திருக்கிறது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
எல்லார் வீட்லயும் நாடகம் பார்த்து உயிர வாங்குவாங்க. டீவியையும் ப்ளாக் பண்ணிட்டா ரொம்ப நல்லா இருக்கும். அப்படி நடந்தா நான் நிறைய புத்தகம் படிப்பேன். சின்ன பசங்க எல்லாம் சாயந்திரம் வீட்டை விட்டு வெளியே வந்து ஏதாவது ஓடி பிடிச்சி விளையாடுவாங்க. ஆனா இது ஒரு வருஷம்னு இல்லாம ஒரு ஏழு எட்டு வருஷமிருந்தா நல்லா இருக்கும் :)
சரி... அஞ்சு பேரை கூப்பிடுனுமாம்...
1. நாகை சிவா
2. தேவ்
3.KRS
4. ராயல் ராம்
5. இளா
Wednesday, October 08, 2008
ஆடு புலி ஆட்டம் - சில தகவல்கள்
தொடர் கதை எழுதறங்கறது ரொம்ப கஷ்டமான விஷயம்னு ஒரு வருஷமா எழுதாம இருந்தேன். மறுபடியும் எழுதலாம்னு பனி விழும் மலர்வனம்னு ஒரு கதை எழுத ஆரம்பிச்சி ஆறுமாசத்துல வெற்றிகரமா நான்கு பகுதிகள் எழுதி முடிச்சிருந்தேன். அப்ப அப்ப நிறைய பேர் ஞாபகப்படுத்தும் போது எழுதாம இருக்கமேனு எனக்கே என் மேல கடுப்பா இருந்துச்சு.
முதல்ல பனி விழும் மலர்வனம்னு எழுத ஆரம்பிக்கும் போது ஒரு அழகான காதல் கதையா இருக்கனும்னு நினைச்சி தான் ஆரம்பிச்சேன். அதுவும் கதாநாயகன் வேலை தேடறனு பொய் சொல்லி அப்பாவியா நடிக்கறதும், அரை குறையா தெரிஞ்சிக்கிட்டே தனக்கு நிறையா தெரியும்னு கதாநாயகி அலப்பற விடற மாதிரியும் இருக்கனும். அப்பறம் கதாநாயகி நாயகனுக்கு சொல்லி கொடுக்கறனு தப்பு தப்பா சொல்லி கொடுக்கறதும் அதை கதாநாயகன் அவள் உணராத வண்ணம் அவளுக்கு சொல்லி கொடுத்து அவள் வேலை வாங்கறதுதான் கதை. கடைசியா நாயகன் கூகுள் வேலையை விட்டுட்டு அவள் சேரும் இந்தியன் கம்பெனில அவளுக்கு லீடா வந்து சேர மாதிரி முடிக்கலாம்னு ப்ளான்.
நாலு மாச கேப் விட்டதுல இந்த கதை எழுதற மூடே போயிடுச்சு. அப்ப தான் பெங்களூர்ல நான் இருக்கும் போது தெரிஞ்சவங்க ஒருத்தவங்களுக்கு வந்த மடல் ஞாபகத்துக்கு வந்துச்சு. இந்த மாதிரி நான் ஆரக்கிள்ல வேலை செய்யறேன். நீங்க என் கூட ஃபிரெண்ட்லியா பழகனா நான் வேலை வாங்கி தறேன்னு ஒரு நாதாரி மெயில் அனுப்பியிருந்தான். அது மட்டுமில்லாம நான் சென்னைல இருக்கும் போது இதே மாதிரி எனக்கு நிறைய பொண்ணுங்க ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. அவுங்க எல்லாம் என் கூட என் கார்ல மஹாபலிபுரமெல்லாம் வருவாங்க. I badly miss them. இங்க பெங்களூர்ல பொண்ணுங்க எல்லாம் அதை விட நல்லா பழுகுவாங்கனு சந்தோஷமா வந்திருக்கேன். நீங்க என் கூட நல்ல ஃபிரெண்டா இருந்தா நான் உங்களுக்கு நிறைய உதவி செய்வேன். அதுவுமில்லாம என் கார்லயே எங்க வேணும்னாலும் போகலாம். Eagerly waiting for your reply.
அந்த மெயில் ஐடி அவனுக்கு எப்படி கிடைச்சிருக்கும்னு ஆராய்ச்சி பண்ணும் போது தான் அவன் ஏதோ Freshers Groupக்கு புத்திசாலித்தனமா மெயில் அனுப்பி பொண்ணுங்க மெயில் ஐடி பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சிது. அது எப்படினா நான் இந்த மெயில் ஐடிக்கு ரெஸ்யூம் அனுப்பினேன். எனக்கு இந்த கம்பெனில இருந்து கால் லெட்டர் வந்துச்சு. நீங்களும் அனுப்புங்க அப்படினு குருப்க்கு ஒரு மெயில் வரும். அதை பார்த்தவுடனே எல்லாரும் அவுங்க ரெஸ்யும் அனுப்புவாங்க. That's it.
அந்த கான்செப்ட்ல யோசிக்கும் போது, அப்படியே ஃபேக் பிரச்சனையையும் சேர்த்து உருவான கதை தான் “ஆடு புலி ஆட்டம்”.
இந்த கதை யோசிக்கும் போது ரெண்டு ஐடியா வந்துச்சு. ஒண்ணு பிரச்சனையை கேள்விப்பட்டவுடனே போலிஸ்கிட்ட போயி போலிஸுக்கும் வில்லனுக்கும் நடக்குற ஆட்டம் தான் ஆடு புலி ஆட்டம்னு வைக்கலாம். ரெண்டாவது கதாநாயகனே டீல் பண்ற மாதிரி. இப்படி இருக்கும் போது தான் கப்பிக்கு ஃபோன் பண்ணி ரெண்டு ப்ளாட்டையும் சொல்லி எப்படி கொண்டு போகலாம்னு கேட்டேன். எனக்கு எப்பவுமே இந்த மாதிரி சந்தேகம் வந்தா ஒண்ணு கப்பிக்கு ஃபோன் பண்ணுவேன் இல்லைனா KRS அண்ணாக்கு ஃபோன் பண்ணுவேன்.
கப்பி செலக்ட் பண்ணது தான் இப்ப எழுதியிருக்க ப்ளாட். முதல் ப்ளாட்ல எழுதியிருந்தா வேட்டையாடு விளையாடு மாதிரி ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். ஆனா அதுல நிஜமாலுமே போலிஸ் எப்படி டீல் பண்ணிருப்பாங்கனு ஆராய்ச்சி பண்ணிட்டு தான் எழுதியிருப்பேன்.
அப்பறம் ஒவ்வொரு பாகமும் நான் எழுதி முடிச்சிட்டு அவுங்க ரெண்டு பேருக்கும் ப்ரூஃப் பாக்க அனுப்பிடுவேன். கப்பி எப்படியும் படிச்சிட்டு எனக்கு சொல்லிடுவான். கதைல ஏதாவது டயலாக் புரியாத மாதிரி இருந்தா இல்லைனா எழுத்துப்பிழை எல்லாம் சரி பண்ணி கொடுப்பான்.
அதே மாதிரி கதை 12 பாகம் முடிச்சதுக்கப்பறம் தேவ் அண்ணாக்கு அனுப்பி வெச்சேன். அதுல எப்படி இருக்கும்னா எழாவது பாகத்துல வில்லன் வந்துடுவான். அப்ப இருந்து அவன் பேச ஆரம்பிச்சிடுவான். அப்பறம் மாத்தி மாத்தி பேசற மாதிரி வரும். ஆனா சஸ்பென்ஸ் சுத்தமா இருக்காது. அதை அவர் மாத்த சொன்னாரு. அப்ப தான் படிக்கறவங்க இன்வால்வ் ஆவாங்கனு சொன்னாரு. அவர் ஐடியா படி மாத்தி மறுபடியும் அஞ்சு பாகம் எழுதினேன். தேவ் அண்ணா ஜட்ஜ் பண்ணது சரி தான். ஓரளவு சஸ்பென்ஸ் இருந்தது நல்லதுக்கு தான்.
ப்ளாகர் இல்லாம என் ரூமேட் தனா எனக்கு ரொம்ப உதவி செஞ்சான். ஒவ்வொரு பாகத்தையும் படிச்சிட்டு விறுவிறுப்பா போகுதானு தவறாம சொன்னான். சில இடங்களில் வரும் ஆபாசமான வார்த்தைகளை மாஸ்க் பண்ண சொல்லி கண்டிப்பாக சொல்லிவிட்டான். KRS அண்ணாவும் அதை சொன்னார்.
இத்தனை பேர் உதவியால தான் என்னால சுமாராவாது கதை எழுத முடியுது. அது போக ஒவ்வொரு பகுதிக்கும் வந்து உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல.
இத்தனை நாள் கழிச்சி ஏன் இதை சொல்றான்னு பாக்கறீங்களா? இப்ப தான் அந்த கதையை PDFல அழகா ஃபார்மெட் பண்ணி, படமெல்லாம் போட்டு போட்டிருக்கேன். PDFஆக மாற்ற உதவிய இளா அண்ணாவிற்கும் நன்றிகள் பல. இது வரை படிக்க தவறியவர்கள் இங்க டவுன்லோட் பண்ணி படிக்கலாம். அதே மாதிரி ஃபார்வேர்டும் பண்ணலாம்.

Tuesday, October 07, 2008
முட்டாப்பய
"சிவா நேத்து ஈவனிங் திடீர்னு அம்மாக்கு உடம்பு சரியில்லை. அதான் நீ அவார்ட் வாங்கும் போது வர முடியல. எங்க அந்த அவார்டை கொஞ்சம் காட்டு". ஆர்வமாக வாங்கி பார்த்தாள் நித்யா.
அதை கொடுத்துவிட்டு எதை பற்றியும் சிந்திக்காமல் தன் கணினியில் முழுகினான் சிவா.
Most Valuable Person Of the Company பொன்னெழுத்துக்களில் மின்னி கொண்டிருந்தது.
"ஏய் சொல்ல மறந்துட்டேன். Congrats." சொல்லிவிட்டு அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் ஏமாற்றமாக தன் இடத்தில் சென்று அமர்ந்தாள் நித்யா.
"Congrats சொன்னா ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல தெரியல. இவனுக்கெல்லாம் ஒரு அவார்ட்" மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மேனஜர் சிவாவை கான்ஃபரன்ஸ் ரூமிற்கு அழைத்து சென்றார்.
"சிவா, நீ டெவலப் பண்ண டூல் இனிமே கம்பெனில இருக்கற எல்லாருக்கும் பயன்பட போகுது. உனக்கு இங்க நல்ல ஸ்கோப் இருக்கு"
"தேங்க்ஸ் சரவ்"
"ஆனா நீ டீம்ல யார்கிட்டயும் சரியா பேச மாட்றனு எல்லாரும் ஃபீல் பண்றாங்க. நானும் நீ டீம்ல மிங்கிலாகி பார்த்ததேயில்லை"
" "
"நீ ப்ரில்லியண்ட்தான். ஆனா இந்த மாதிரி கம்பெனில ப்ரில்லியண்டா இருக்கறதைவிட நல்ல டீம் வொர்க்கரா இருக்கனும். இது உன் கெரியரை
கெடுத்துடக்கூடாதுனு தான் உன்னை தனியா கூப்பிட்டு சொல்றேன். உனக்கு ஏதாவது உதவி வேணும்னா என்கிட்ட சொல்லு. ஐ வில் ட்ரை டு கெட் இட் ரிசால்வ்ட்"
" "
"நீ புத்திசாலியா இருக்கறதால திமிரா இருக்கனு எல்லாரும் நினைக்கிறாங்க"
"அப்படியெல்லாம் இல்லை சரவ்"
"எல்லாம் நீ நடந்துக்கறதுல தான் இருக்கு. சரி. இனிமே டீம்ல எல்லார்கிட்டயும் சகஜமா பழகு. அப்பறமா பேசலாம்"
வெளியே வந்தவுடன் தன் இடத்திற்கு சென்று அமைதியாக வேலையை செய்ய துவங்கினான்.
9 மணி பஸ் பிடித்து கொரமங்களா சென்று சேரும் போது மணி 11 ஆகியிருந்தது. பெங்களூரை தவிர வேறு எந்த ஊரிலும் 15 கிலோமிட்டர்
செல்ல இரண்டு மணி நேரமாகாது என்று நினைத்து கொண்டு வீட்டில் நுழைந்தான்.
அந்த ஒரு படுக்கையறை மட்டும் கொண்ட வீட்டில் சிவா தனியே தங்கியிருந்தான். பெங்களூரிலிருக்கும் கட்டட பொறியாளர்களுக்கு ஜன்னல், ஷெல்ப் எல்லாம் என்ன என்றே தெரியாது என்பதை அந்த வீடும் நிருபித்திருந்தது. உடை மாற்றிவிட்டு படுக்கைக்கு சென்றான் சிவா.
அவனுக்கு அவன் மேனஜரிடம் பேசியதே நினைவில் ஊசலாடிக் கொண்டிருந்தது.

"நீ புத்திசாலியா இருக்கறதால...நீ புத்திசாலியா இருக்கறதால"
"ஏன்டா உன் மண்டைல இருக்கறது என்ன மூளையா இல்லை களி மண்ணா? ஒரு தடவையாது பாஸாகறயா? எப்படிடா நீ ஒம்போதாம் க்ளாஸ் வரைக்கும் பாஸான?"
அமைதியாக நின்று கொண்டிருந்தான் சிவா.
"சரி கைய நீட்டு"
கையை நீட்டினான். கணக்கு வாத்தியார் சுப்பிரமணி அடித்த அடியில் அந்த பிரம்பு உடைந்து போனது.
"டேய் கோபாலு, போய் ஸ்டாஃப் ரூம்ல இன்னொரு பெரம்பு இருக்கும் அதை எடுத்துட்டு வா. இதுக்கெல்லாம் இவ்வளவு அடி வாங்கனாலும் உறைக்காது. நம்ம கைதான் வலிக்கும்"
கோபால் வேகமாக ஓடி போய் புது பிரம்பை கொண்டு வந்தான்.
ஃபெயிலானவர்கள் ஒவ்வொருவராக அடி வாங்கி கொண்டிருந்தனர்.
"என்னமா கவிதா. நல்லா படிக்கிற பொண்ணு நீ. நீ போய் ஃபெயிலாயிருக்க. என்ன ஆச்சு?"
அமைதியாக தலையை குனிந்த படி நின்றிருந்தாள் கவிதா.
"சரி கையை நீட்டு. இந்த தடவை அடி வாங்கினா தான் அடுத்த முறை நல்லா படிப்ப"
அவள் பயந்து கொண்டே கையை நீட்டினாள்.
"வர வர மாமியா கழுத போல ஆனாளாம். என்ன?" சொல்லி கொண்டே அடித்தார்.
" "
"வர வர மாமியா கழுத போல ஆனாளாம்"
அவள் அழுது கொண்டே அமர்ந்தாள்.
அடுத்த நாள்.
ஆங்கில வகுப்பு
"மெமரி போயம்ஸ் எல்லாம் மூணு தடவை எழுதிட்டு வர சொன்னேனே. எல்லாம் நோட் எடுத்து வைங்க.
எழுதாதவங்க ஒழுங்கு மரியாதையா வெளிய வந்து முட்டி போட்டு எழுதிட்டு உள்ள வாங்க"
முதல் ஆளாக சிவா எழுந்து சென்றான்.
"அதான நீ எல்லாம் எங்க உருப்பட போற. உங்க அப்பா கூட கட்சில சேர்ந்துடு. இந்த பள்ளிக்கூடமாவது உருப்படும்"
முறைத்து கொண்டே சென்றான் சிவா.
"என்னடா முறைக்கிற? ஒழுங்கா போய் முட்டி போடு"
வகுப்பிலிருந்து ஒரு பதினைந்து மாணவர்கள் எழுந்து சென்றனர். கவிதா எழுந்து செல்வதை பார்த்தவுடன் ஆசிரியருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"ஏம்மா கவிதா, நேத்து நான் மெமரி போயம்ஸ் எழுதிட்டு வர சொன்னேன் தானே?"
"ஆமா சார்" மெல்லிய குரலில் சொன்னாள் கவிதா.
"அப்ப ஏன் எழுதிட்டு வரல? உடம்பு ஏதாவது சரியில்லையா?"
அமைதியாக இருந்தாள்.
"ஏம்மா ஃபர்ஸ்ட் ரேங் எடுக்கற பொண்ணு. நீயே இப்படி இருக்கலாமா? சரி எல்லாரும் உள்ள போய் உக்காருங்க. நாளைக்கு எழுதிட்டு வாங்க"
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். மதிய உணவு வேளையின் போது அழுது கொண்டிருந்தாள் கவிதா. சிவாவிற்கு கவிதா அழுவதை பார்த்து பிடிக்காமல் நேராக அவளிடம் சென்றான்.
"ஏய் இப்ப என்ன ஆச்சுனு இப்படி அழுவற? அவர் தான் முட்டி போட வேணாம்னு சொல்லிட்டார் இல்லை"
"நான் ஒண்ணும் அதுக்கு அழுவல"
"பின்ன? நேத்து அடி வாங்கனதுக்கா? எங்க கையை காட்டு"
அவள் கை சிவந்திருந்தது.
"ஏன் இப்பல்லாம் ஒழுங்கா படிக்க மாட்ற? நல்லா தானே படிச்சிட்டு இருந்த? அத்தை ஏதாவது வேலை செய்ய சொல்லி திட்றாங்களா? இல்லை அந்த கிழவி ஏதாவது சொல்லுதா?"
அவன் கிழவி என்று குறிப்பிட்டது அவன் பாட்டியைத்தான். கவிதா சிவாவின் தாய் மாமன் மகள்.
அவனை சுட்டெரிப்பது போல முறைத்தாள்.
"சரி முறைக்காத. ஒழுங்கா சொல்லு. ஃபெயிலாயிடுவனு சொல்லியிருந்தா, அந்த பேப்பர் கட்டையே சுட்டுட்டு வந்திருப்பேன். நீதான் சொல்லாம விட்டுட்ட. நேத்து உன்னை அடிச்சப்பவே அந்தாள ரெண்டுல ஒண்ணு பார்த்திருப்பேன். அப்பறம் விஷயம் அப்பாக்கிட்ட போயிடும்னு தான் விட்டுட்டேன்"
அவள் அழுது கொண்டே இருந்தாள்.
"இப்ப சொல்றயா இல்லையா?"
"என்னைவிட நீ எத்தனை வருஷம் பெரியவன்?"
"ரெண்டு வருஷம். ஏன் இப்ப அதுக்கு என்ன?"
"ஒழுங்கா படிக்காம நீ ஏற்கனவே ரெண்டு வருஷம் பெயிலாயிட்ட. இப்ப நீ படிக்கற லட்சணத்துக்கு எப்படியும் பாஸாக மாட்ட. நான் நல்லா படிச்சா எங்க அப்பா எனக்கு படிச்ச மாப்பிள்ளையா பார்த்து கட்டி கொடுத்துடுவாறோனு பயமா இருக்கு. அதான் நானும் படிக்காம ஃபெயிலாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்"
"எனக்கு கட்டி கொடுக்காமவிட்டுடுவாறா என் மாமன். அவ்வளவு தான். உன்னைய தூக்கிட்டு போயாவது கட்டிக்க மாட்டேன்"
"தூக்குவ தூக்குவ" கண்ணை துடைத்து கொண்டே கேலியாக அவள் சொன்னது அவனை என்னமோ பண்ணியது.
"பார்த்துக்கிட்டே இரு. உன்னைய மட்டும் கட்டிகொடுக்க மாட்டேனு சொன்னா எங்க ஆளுங்களோட வீடு புகுறனா இல்லையானு"
"இவ்வளவு பண்றதுக்கு ஒழுங்கா படிச்சி பாஸாகறனு சொல்லலாம் இல்லை"
"ஏய். இதுக்கெல்லாம் படிக்க முடியாது. நான் எவ்வளவு ஈஸியா சொல்லிட்டு இருக்கேன். நீ என்னுமோ கஷ்டப்பட்டு படினு சொல்ற. அதெல்லாம் ஆகற விஷயமா? இந்த பழப்பசங்க தான் படிப்பானுங்க. நாங்க எல்லாம் வீரனுங்க. சூப்பர் ஸ்டார் மாதிரி படிக்காத மேதைங்க. புரியுதா?"
"என்னுமோ பண்ணு. ஆனா நீ பாஸாகற வரைக்கும் நானும் பாஸாக மாட்டேன். நீ வாங்குற அடியை நானும் வாங்கனும். இப்பல இருந்தே நான் உன் பொண்டாட்டியா பழகிக்கிறேன்."
"ஏய். நீ அடி வாங்கறத பார்த்துட்டு என்னால இருக்க முடியாது. உன்னை எந்த வாத்தியாவது அடிச்சானா அவனுக்கு அன்னைக்கு பூச தான். நீயே முடிவு பண்ணிக்கோ"
"இங்க பாரு, நான் பர்ஸ்ட் ரேங் எடுக்கும் போது செகண்ட் ரேங் எடுக்கற பையனோட பேரை என் பேர் பின்னாடி சொல்றாங்க. எனக்கு அது பிடிக்கல. நீ எப்படியும் எனக்கு அடுத்தோ எனக்கு முன்னாடியோ வர போறதில்லை. அதான் உன் இடத்துக்கு நான் வரேன். ஆனா அடி வாங்கும் போது தான் உயிர் போகற மாதிரி வலிக்குது. உனக்கும் அப்படித்தானே வலிக்கும்னு நினைக்கும்போது உன் வலியை அனுபவிக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு"
அவன் எதுவும் பேசாமல் அவனிடத்திற்கு போய் அமர்ந்தான்.
அடுத்த இரண்டு நாட்களில் கவிதா 4 முறை அடி வாங்கினாள். இரண்டு முறை வகுப்பிற்கு வெளியே முட்டி போட்டு கொண்டிருந்தாள்.
அதன் பிறகு சிவாவின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தன. அடுத்து நடந்த மாத தேர்வில் சிவா பாஸ் மார்க் எடுத்திருந்தான். ஏதோ சூழ்ச்சி நடந்திருக்குமென ஆசிரியர்களும், சில மாணவர்களும் நினைத்து கொண்டனர்.
ஒரு ஞாயிறு மாலை அவன் கணக்கு ஆசிரியர் சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்றான்.
"என்னப்பா? யாரு வேணும்"
"இது கணக்கு வாதியார் சுப்பிரமணியம் வீடு தானே?"
"ஆமாம். நீ யாருப்பா?"
"நான் அவர் ஸ்டுடண்ட் மேடம். சார் இருக்காரா?"
"இருக்காருப்பா. உள்ள வா.
என்னங்க இங்க உங்களை பார்க்க உங்க ஸ்டுடண்ட் யாரோ வந்திருக்காங்க பாருங்க" சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
"வாப்பா. என்ன விஷயம்? வீடு தேடி வந்திருக்க?"
"சார் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"
"சரி உள்ளே வா". தனியாக அவனை ஒரு அறைக்குள் அழைத்து சென்று அவனை அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்தார்.
"சொல்லுப்பா. என்ன பிரச்சனை?"
"சார். எங்க அப்பா கட்சி, அரசியல்னு இருந்துட்டாரு. எனக்கும் சின்ன வயசுல இருந்து யாரும் படிக்கனும்னு பெருசா சொன்னதில்லை. நான் ஃபெயிலானப்ப கூட அதை கேட்டுட்டு அங்க இருந்த எல்லாரும், எந்த வாத்திடா உன்னை ஃபெயிலாக்கனது. சொல்லு. அடிச்சி பாஸாக்க வைச்சிடறோம்னு தான் சொன்னாங்க. தவிர, என்னை படினு யாரும் சொன்னதில்லை. எனக்கு படிக்கனும்னு பெருசா தோனனதுமில்லை. ஆனா இப்ப திடீர்னு படிக்கனும்னு ஆசை வந்துடுச்சி சார். நானும் எவ்வளவோ கஷ்டப்பட்டு போன பரிட்சைக்கு படிச்சேன், ஆனா என்னால பாஸ் மார்க் மேல வாங்க முடியல சார். படிச்சது எல்லாம் பரிட்சைல மறந்து போகுது சார். எனக்கும் கணக்குல 100 மார்க் வாங்கனும், க்ளாஸ் ஃபர்ஸ்ட் வாங்கனும்னு ஆசையா இருக்கு சார். நீங்க தான் உதவி செய்யனும்"
அவனை ஆச்சரியமாக பார்த்தார் சுப்பிரமணியம்.
"நீ இப்படி பேசும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. வாழ்க்கைல எந்த ஒரு விஷயத்துல வெற்றி பெறதுக்கு இந்த விஷயங்கள் தான் முக்கியம். அது ஆர்வம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி. இது இருந்தா தானா ஜெயிக்கலாம். சரி, போன வருஷம் நடந்த உலக கோப்பைல பாகிஸ்தானோட அதிக ரன் அடிச்சது யாரு?"
"சித்து சார்... 93 ரன் அடிச்சாரு"
"ரஜினியை ராபின் ஹூட்னு எந்த படத்துல சொல்லுவாங்க?"
"நான் சிகப்பு மனிதன் சார்"
"பாரு. இதெல்லாம் உனக்கு எப்படி நியாபகமிருக்கு?"
" "
"எல்லாத்துக்கும் ஆர்வம் தான் காரணம். அப்பறம் அதை நினைச்சிட்டே கொஞ்ச நேரம் இருக்கறது. சித்து 93 எடுத்து அவுட் ஆனப்ப இன்னும் 7 அடிச்சிருக்கலாமேனு கொஞ்ச நேரம் முழுக்க மனசுல இருக்கும். ரஜினி படமும் அப்படிதான். அப்படி யாராவது இருந்து இந்த சமூகத்தை திருத்தினா எப்படி இருக்கும்னு இருக்கும். இப்படி ஒரு விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டதுக்கப்பறம் அதை பத்தி மனசு கொஞ்ச நேரம் சிந்திச்சா அது அவ்வளவு சீக்கிரம் மறக்காது.
அப்பறம் படிக்கறதை மறக்க கூடாதுனா மூணு "R" முக்கியம். "Read", "Recall" "Revise". படிக்கும் போது வேற எதை பத்தியும் சிந்திக்காம படிக்கனும். அது தான் ரீட். படிச்சதை கொஞ்ச நேரம் கழிச்சி திரும்ப நினைவுக்கு கொண்டு வர பார்க்கனும். அது தான் ரீ கால். அப்பறம் படிச்சதை திரும்ப திரும்ப படிக்கனும். ஏற்கனவே படிச்சிட்டோமேனு நினைக்க கூடாது. அது தான் ரிவைஸ். நானே ஒவ்வொரு வகுப்புக்கும் போறதுக்கு முன்னாடி ரிவைஸ் பண்ணிட்டு போவேன்"
அவர் பேசுவதை ஆர்வமாக அவன் கேட்டு கொண்டிருந்தான். நன்றாக படிக்க வேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்ததை அவர் கவனித்தார். இவன் இவ்வளவு மாறியதற்கு காரணத்தை அவர் அறியவில்லை.
சிவாவின் நடத்தையில் பெரும் மாறுதல் தெரிய ஆரம்பித்தது. அவன் கண் எப்பொழுதும் சிவந்தேயிருந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் முன் அவன் முகம் கழுவி வந்தான். அவன் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்து கொள்வதை பார்த்த நண்பர்களுக்கு அவன் ராத்திரி அதிகமாக தூங்குவதில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அடுத்து நடந்த ஒவ்வொரு தேர்விலும் அவன் படிப்படியாக முன்னேறி கொண்டே வந்தான்.
கவிதாவிற்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவளும் அவனுடன் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தாள். அவளை சில பாடங்களில் அவன் முந்தியதும், அனைவருக்கும் முன் பதில் சொல்லியதும் அவளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடிக்கடி அவன் வீட்டுக்கு சென்று அத்தையிடம் அவன் படிக்க ஆரம்பித்ததை சொல்லி சந்தோஷப்பட்டாள். அவன் அம்மாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
"எங்க இவனும் இவுங்க அப்பா மாதிரியே ஆயிடுவானோனு பயந்துட்டு இருந்தேன். நல்ல வேளைம்மா இவன் படிக்க ஆரம்பிச்சிட்டான். இந்த வருஷம் மட்டும் இவன் பாசாயிட்டா நம்ம கொலதெய்வத்துக்கு கடாவெட்டி பொங்க வைக்கறேனு வேண்டிக்கிட்டிருக்கேன்"
"அத்தை அவர் படிக்கறத பார்த்தா ஸ்டேட் ரேங் எடுத்துடுவாரோனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. நீங்க என்னனா பாசானா போதும்னு வேண்டிக்கிட்டிருக்கீங்க"
"என்னுமோ நல்லா படிச்சா சரிதான்"
ஒரு வழியாக பத்தாவது தேர்வை நல்ல படியாக எழுதி முடித்தனர் சிவாவும், கவிதாவும். சிவா பெரும்பாலும் கணக்கு வாத்தியார் சுப்பிரமணி வீட்டிலே தங்கி படித்தான். கணக்கில் கண்டிப்பாக நூத்துக்கு நூறு வாங்குவான் என நம்பினார் சுப்பிரமணி.
"சார் தந்தி வந்திருக்கு" போஸ்ட்மேன் சொல்லியதை கேட்டதும் கவிதாவும் அவள் அம்மாவும் பயந்தே விட்டனர்.
கவிதாவின் அப்பா தந்தியை வாங்கி பார்த்தார். மிகவும் சந்தோஷமாக கவிதாவை அழைத்தார்.
"கவிதா இந்த நம்பர் நம்ம சிவாதானு கொஞ்சம் சொல்லு 973654673"
"ஆமாம்பா. மாமாது தான். ஏன்ப்பா? என்னாச்சு?"
"இது உன் நம்பர் தானே 973654662"
"ஆமாம்பா. ஏன்? சீக்கிரம் சொல்லுங்கப்பா"
"நீ 482 மார்க் வாங்கியிருக்கம்மா. நம்ம சிவா 481 மார்க் வாங்கியிருக்கான். அனேகமா டிஸ்ட்ரிக்ட்ல முதல் மார்க் நீ தானு நினைக்கிறேன். என் ஃபிரெண்ட் மெட்ராஸ்ல இருந்து பார்த்து தந்தியடிச்சிருக்கான். இரு நான் போய் சிவாட்ட சொல்லிட்டு வந்திடறேன். என் தங்கச்சி கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவா"
கவிதாவால் சந்தோஷம் தாங்க முடியவில்லை. அவள் பெயருக்கு பின்னால் அவன் பெயர் திருமண பத்திரிக்கைக்கு முன் தினசரி பத்திரிக்கையில் வர போவதை நினைத்து சந்தோஷப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்தாள்.
"அப்பா, அத்தைட்ட நான் போய் சொல்லிட்டு வந்திடறேன்பா. ப்ளீஸ்பா"
மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு அவளை சைக்கிளில் அனுப்பி வைத்தார். சந்தோஷமாக சைக்களில் வேகமாக மிதித்து வந்தாள் கவிதா.
................
"டேய் சிவா கடைசியா ஒரு தடவை அவளை பார்த்துட்டு வந்துடுடா. அவ கண்ணு உன்னை தான் தேடுதுனு நினைக்கிறேன்" சிவாவின் அம்மா அழுது கொண்டே சொன்னார்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே உணர்ச்சியற்று நின்று கொண்டிருந்தான் சிவா. அனைவரும் எவ்வளவு சொல்லியும் அவன் கடைசி வரை கவிதாவை சென்று பார்க்கவில்லை. அவள் மேல் வண்டியேற்றிவிட்டு சென்ற அந்த கார் டிரைவரை எப்படியும் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து சில நாட்களில் அதையும் விட்டுவிட்டான்.
..............
"கவிதா உன் பேரை தவிர யார் பேருக்கும் பின்னால என் பேரு வரவிடாம இது வரைக்கும் பார்த்துட்டு இருக்கேன். கவிதா உனக்கு ஒண்ணு தெரியுமா? அந்த பழைய முட்டாள் சிவா சந்தோஷமா இருந்தான் கவிதா"
"ஆண்டவா நான் மறுபடியும் முட்டாளாவே ஆயிடறேன். எனக்கு என் கவிதாவை மட்டும் திருப்பி தா. நான் முட்டாளாவே இருந்துடறேன்... நான் முட்டாளாவே இருந்துடறேன். எனக்கு எந்த அவார்டும் வேண்டாம். கவிதாவை மட்டும் கொடு. ப்ளீஸ்"
வழக்கம் போல் அவன் தலையணை முழுதும் கண்ணீரால் ஈரமாகியிருந்தது...

Friday, October 03, 2008
தூறல்
டிசம்பர் மாத குளிரோடு லேசான தூறலும் சேர்ந்து பெங்களூர் மாநகரை ஊட்டி போலாக்கிக் கொண்டிருந்தது...
வழக்கம் போல் 7 மணி பஸ்ஸிற்காக கோரமங்களா பார்க்கிங் லாட் அருகே நின்று கொண்டிருந்தேன். எலக்ட்ரானிக் சிட்டி போய் சேர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். நல்ல வேளை இந்த i-pod இருப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது.
இந்த மழை ஏன் இங்க பெஞ்சி உயிர வாங்குதுனு தெரியல... மழை வரலைனு யாகமெல்லாம் நடத்தறானுங்க... அங்க வராம இங்க வந்து நம்ம உயிர வாங்குது. அதுவும் ஆபிஸ் போற நேரத்துல.
அருகே கம்பெனி ஐடி கார்டை மாட்டிக் கொண்டு நான்கு, ஐந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இவனுங்களுக்கு எல்லாம் பெரிய சாப்ட்வேர் இஞ்சினியர்னு பெருமை. இந்த ஐடி கார்டை கம்பெனிக்குள்ள மாட்டினா போதாதா? லைசன்ஸ் வாங்குன நாய் மாதிரி எப்பவும் கழுத்துல மாட்டிக்கிட்டு திரியறானுங்க.
கடைசியாக சுரிதார் அணிந்து கொண்டு புதிதாக ஒருத்தி நின்று கொண்டிருந்தாள். நான் பார்ப்பதை பார்த்து சிரித்தாள்.
ச்சீ என்ன பொண்ணு இவ... யாராவது பார்த்தா... உடனே சிரிக்கணுமா???
பஸ் வந்தவுடன் வேகமாக சென்று ஒரு நல்ல இடம் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன்... i-podல் நேற்று டவுன்லோட் செய்த பெயர் தெரியாத படத்தின் பாடல் ஓடிக்கொண்டிருந்தது.
சரியாக எட்டு மணிக்கு என் சீட்டிலிருந்தேன்... வழக்கம் போல் யாரும் இன்னும் வரவில்லை. இன்று அப்ரைசல் வேறு இருக்கிறது. இந்த முறை ஆன் சைட்டிலிருந்து அப்ரிஸியேஷன் மெயில் வந்திருக்கிறது. அதனால் எப்படியும் இந்த முறை நல்ல ரேட்டிங் கிடைக்கும்.
மேனேஜர் சரியாக பத்து மணிக்கு வந்தார். மற்றவர்கள் அவர் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன் வந்தனர். அவரை பொருத்த வரை அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததாகத்தான் கணக்கு. மற்றவர்களை கேட்டால் டிராபிக் ஜாம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி தப்பிவிடுவார்கள். 7 மணிக்கு புறப்பட்டால் எப்படியும் 8 மணிக்குள் வர முடியும். 8 மணிக்கு புறப்பட்டு 2 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி வரவே அனைவரும் விரும்புகின்றனர். தலை சரியில்லாத இடத்தில் மற்றவர்களை சொல்லி பயனில்லை.
சரியாக 11 மணிக்கு அப்ரைசல் மீட்டிங். தேவையானவற்றை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு மீட்டிங்கிற்கு சென்றேன். உள்ளே மேனஜர் தயாராக இருந்தார். இந்த முறையும் அப்ரைசலில் எல்லா டாஸ்கிற்கும் "C" போட்டிருந்தார்கள். அதற்கு அவர் சொன்ன காரணம் டீம் மக்களோடு சரியாக கலக்காமலிருக்கிறேனாம்.
சரியாக வேலை செய்யவில்லை என்றால் சரி. ஆனால் மக்களோடு பழகவில்லை என்று அவர் சொல்வது சும்மா ஒரு சப்பைக்கட்டு!!! இவர்கள் வேலை செய்வது போல் நடிப்பவர்களைத்தான் தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால் உண்மையாக வேலை செய்பவர்களை என்றும் மதிக்கமாட்டார்கள்.
மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பிட கிளம்பினேன்.
"கார்த்திக்... இன்னைக்கு பிராஜக்ட் பார்ட்டி. பஸ் 12:30க்கு வரும். இப்ப எங்க போற?" அக்கரையாக விசாரித்தாள் ஹாசினி.
"சாரி... நான் வரலை. நான் தான் மெயில்லையே சொல்லிட்டனே... எனக்கு இந்த பார்ட்டி எல்லாம் பிடிக்காதுனு" சொல்லிவிட்டு வேகமாக சாப்பிட சென்றேன்.
சாப்பிட்டுவிட்டு என் சீட்டிற்கு வந்த போழுது என் ப்ளோர் முழுதும் விரிச்சோடி கிடந்தது. 2 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன். வீட்டில் தனியாக என்ன செய்வதென்று தெரியாமல் கிடைத்த ஒரு ஆங்கில நாவல் படிக்க ஆரம்பித்தேன். எப்போழுது தூங்கினேனென்றே தெரியவில்லை. தூங்கி எழுந்திரிக்கும் பொழுது மணி 8 ஆகியிருந்தது.
அருகே இருக்கும் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வந்தேன். டிவியை ஆன் செய்து ஒரு மணி நேரத்தில் 120 சேனல்களையும் 40 முறை மாற்றி மாற்றி பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். 6 மணிக்கு அலாரம் அதன் வேலையை சரியாக செய்ய 7 மணிக்கு பஸ் ஸ்டாப்பில் இருந்தேன்.
வழக்கம் போல் பஸ்ஸிற்காக காத்திருப்பவர்கள் இருந்தார்கள். நேற்று புதிதாக வந்திருந்தவளும் அங்கே நின்று கொண்டிருந்தாள். நேற்றை போலவே இன்றும் பார்த்து சிரித்தாள்.
பஸ் வந்ததும் வழக்கம் போல் ஜன்னலோர சீட்டருகே சென்று அமர்ந்தேன்.
"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?" ஒரு பெண்ணின் குரல்.
திரும்பி பார்த்தேன். அவள் என் பதிலை எதிர்பார்க்காமல் அருகில் அமர்ந்தாள்.
வழக்கத்தைவிட i-podல் சத்தத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினேன். அதை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் ஒரு ஆங்கில நாவலை கையில் வைத்து படிக்க ஆரம்பித்தாள். வண்டி வழக்கத்தைவிட சீக்கிரம் சென்றாலும் ஏதோ ஒரு யுகம் போனது போலிருந்தது.
தினம் செய்யும் வேலையையே செக்குமாடு போல் செய்துவிட்டு 8 மணிக்கு ஆபிஸிலிருந்து வீட்டிற்கு கிளம்பினேன். அடுத்த நாளும் அதை போலவே என் அருகில் அமர்ந்து பயணம் செய்தாள். இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது.
அன்றும் லேசான தூறல் போட்டுக்கொண்டிருந்தது. நடைபாதையிலிருந்து கீழிறங்கி பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தேன். வலதுபக்கம் நின்றிருந்த ஒரு ஜோடி ரோட்டில் நிற்கிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் கையை ஒருவர் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் கோபம் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாகவே வந்தது.
இதுங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா? சாப்ட்வேர் இஞ்சினியர்னா பெருசா அமெரிக்கால இருக்கற நினைப்பு. இதுங்களாலதான் எல்லாருக்கும் கெட்டப்பேரு!!! திடிரென்று யாரோ என் கையை பிடித்து பின்னால் இழுத்தார்கள். திரும்பி பார்ப்பதற்குள் நான் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. கொஞ்சமிருந்தால் மேலே ஏத்தியிருப்பான். இந்த பெங்களூர்ல ஆட்டோக்காரங்களுக்கு அறிவே இருக்காது.
சரி, பின்னால் இழுத்தது யாரென்று பார்த்தால் அவள் நின்று கொண்டிருந்தாள். சைட்ல இருந்த அந்த ஜோடியப் பாத்துட்டிருந்த நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. அவளுக்கு நன்றி சொல்லலாமா என்று யோசித்து கொண்டிருக்கும் போதே பஸ் வந்து சேர்ந்தது.
எப்போழுதும் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தேன். அவளும் வந்து அமர்ந்து கையில் நாவலை எடுத்தாள்.
"ரொம்ப தேங்கஸ்ங்க..." தயங்கியவாறே சொன்னேன்.
"ஓ!!! உங்களுக்கு பேச வருமா??? நீங்க ஊமைனு இல்ல நினைச்சேன்" புத்தகத்தை பையில் வைத்து கொண்டே சொன்னாள்.
"இல்லைங்க...சாரி. நான் உங்களை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டேனு நினைக்கிறேன்"
"ஐயய்யோ அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க...
பை த வே, ஐ அம் ஆர்த்தி"
"ஐ அம் கார்த்திக்"
இன்று பஸ் பயணத்தின் 60 நிமிடங்களும் 60 நொடிகளைவிட குறைவாக தெரிந்தது. 60 நிமிடத்தில் வாழ்க்கை வரலாறையே சொல்ல முடியும் என்று இன்று தான் உணர்ந்தேன்.
பஸ்ஸிலிருந்து இறங்கியவுடன்...
"கார்த்திக்... உன் கூட நான் சாப்பிட வரலாமா? தனியா சாப்பிட போர் அடிக்குது. என் டீமெட்ஸ் எல்லாம் பத்து மணிக்குதான் வருவாங்க"
"உங்களுக்கு எதுவும் பிராபளம் இல்லைனா வாங்க"
"ஏன் ரொம்ப ஃபார்மலா பேசறீங்க??? நீ, வா, போனே பேசலாம்"
"சரிங்க"
"பாத்திங்களா??? திரும்பவும் வாங்க போங்கனு சொல்றீங்க"
"சரி... போலாமா?"
சாப்பிட்டு விட்டு சீட்டிற்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். இன்று நாள் போனதே தெரியவில்லை.
அடுத்த நாள் மீண்டும் பஸ் பயணம்...
"ஏய்!!! நேத்து மதியம் உன்ன கேண்டின்ல பாத்தேன்... தனியா சாப்பிட்டு இருந்த... உன் பிராஜக்ட் மேட்ஸ் யாரும் வரலையா?"
"நான் எப்பவும் தனியாதான் சாப்பிடுவேன்"
"ஏன்?"
"யாருக்கும் தொந்தரவு வேண்டாம்னுதான். எனக்கு உங்களை மாதிரி எல்லாம் பேச வராது"
"யார் சொன்னா அப்படியெல்லாம். என் கூட வேணா வரியா?"
"வேணாம். உங்கூட உன் பிரண்ட்ஸ் எல்லாம் இருப்பாங்க. எனக்கு அன்கம்ஃபர்டபுலா இருக்கும்"
"இல்ல... யாரும் வர மாட்டாங்க. உன் செல் நம்பர் தா. நான் மதியம் கூப்பிடறேன்"
"ஏன்கிட்ட செல் போன் இல்ல"
"என்னது செல் போன் இல்லையா??? எத்தனை வருஷம் சாப்ட்வேர் இஞ்சினியரா இருக்க?"
"3 வருஷம். ஏன் செல் போன் இல்லனா வாழ முடியாதா? எனக்கு தான் எக்ஸ்டென்ஷன் இருக்கு இல்ல. அதுக்கே எவனும் கூப்பிட மாட்டான். எனக்கு எதுக்கு செல் போன்? எப்பவாவது ஊர்ல இருந்து கூப்பிடுவாங்க. அவ்வளவுதான்"
"சரி உன் எக்ஸ்டென்ஷன் சொல்லு... " குறித்து கொண்டாள்
காலையும், மதியமும் அவளுடன் சாப்பிட்டேன்... இன்றும் நாள் பொனதே தெரியவில்லை.
அடுத்த நாள்...
"ஏன் இப்படி வயசானவன் மாதிரி டல் கலர்ல சட்டை போடற??? ஒழுங்கா ப்ரைட்டா சட்டை போட்டா என்ன?"
"ஏன் இந்த கலர்க்கு என்ன குறைச்சல். நான் பொதுவா கலரே பாக்க மாட்டேன். போய் எது பிடிச்சியிருந்தாலும் எடுத்துக்குவேன்"
"சரி... இந்த வாரம் நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு செல் போன் வாங்கனும்.. அப்பறம் நல்லதா ஒரு நாலு அஞ்சு சட்டை வாங்கனும்"
"எனக்கு எதுக்கு செல் போனெல்லாம்?"
"நேத்து நைட் உங்கிட்ட பேசலாம்னு பாத்தேன்... ஆனால் உங்கிட்ட போன் இல்லாததால பேச முடியல"
"நிஜமாவா?"
"ஆமாம்... சத்தியமா!!! இந்த வாரம் கண்டிப்பா போய் வாங்கறோம்"
"சரி..."
வார இறுதியன்று கடைக்கு சென்றோம்...
"லேட்டஸ்ட் மாடலா பாத்து வாங்கிக்கோ... இல்லைனா பின்னாடி மாத்த வெண்டியிருக்கும்"
"எனக்கு சாதரண மாடலே போதும்... காஸ்ட்லியா எல்லாம் வேண்டாம்"
"நீ சும்மா இரு...நான் செலக்ட் பண்றேன்... உனக்கு ஒன்னும் தெரியாது"
"சரிங்க... நீங்களே எடுங்க"
கடைசியாக பத்தாயிரத்தி சொச்சத்திற்கு ஒரு செல் பொன் வாங்கி ஏர்டெல் கனெக்ஷனும் வாங்கினேன். அதிலிருந்து அவள் நம்பருக்கு போன் செய்து அவள் போனை என்னிடம் குடுத்து பேச சொன்னாள். பக்கத்து பக்கத்துல இருந்து செல் பொனில் பேசுவது அசிங்கமாக இருந்தது... ஆனாலும் அவள் அதை பற்றி கவலைப்படவில்லை.
"பாத்தியா... உன் போன்ல ஃபர்ஸ்ட் பேசனது நான் தான், ஃப்ர்ஸ்ட் பண்ணது என் நம்பருக்குத்தான்"
"சரி சரி... எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்க... வா போகலாம்"
அன்றே 5 புது சட்டைகள் வாங்கினோம். ஒவ்வொன்றும் 1500க்கு மேல்.
வீட்டிற்கு சென்றவுடன் போன் செய்து பேசினாள்...
திங்கள் காலை அலுவலகத்தில்
"கார்த்திக்... புது சட்டையெல்லாம் சூப்பரா இருக்கு...கைல ஏதோ செல் போன் மாதிரி இருக்கு" ஹாசினி
"ஆமாம்... நேத்துதான் வாங்கினேன்"
"எங்களுக்கு எல்லாம் நம்பர் தர மாட்டீங்களா?" ராஜிவ்
"உங்களுக்கு இல்லாமலா... இந்தாங்க நோட் பண்ணிக்கோங்க..."
அனைவரும் அவர்கள் நம்பரிலிருந்து மிஸ்ஸிடு கால் குடுக்க அனைவரின் நம்பரையும் சேவ் செய்தேன்.
ஆர்த்தியிடமிருந்து 11 மணிக்கு போன் வந்தது.
"கார்த்திக்... இன்னைக்கு எனக்கு பிராஜக்ட் பார்ட்டி...
நான் மதியம் உங்கூட லஞ்ச்க்கு வர முடியாது. நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ"
"ஓகே... நான் பாத்துக்கறேன்"
"கார்த்திக்... புது போனெல்லாம் வாங்கியிருக்கீங்க... ஏதாவது விசேஷமா?" மேனஜர் குரல் பின்னாலிருந்து வந்தது.
"அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க... சும்மா வாங்கனும்னு தோனுச்சு... வாங்கிட்டேன்"
"சரி... இன்னைக்கு டீம் லஞ்ச்... எல்லாரும் ஒன்னா சாப்பிடலாம்னு பிளான். நீயும் கண்டிப்பா வரணும்"
"ஷுர்... கண்டிப்பா வரேன்"
மதியம் அனைவரிடமும் நன்றாக பேசினேன்... எல்லாரும் எவ்வளவு ஜாலியா பேசறாங்க... நான் ஏன் இத்தனை நாள் இப்படி பேசாம போனேன். ரொம்ப தப்பு பண்ணிட்டு இருந்தனோனு தோனுச்சு...
வாழ்க்கையில் ஏதோ பெரிய மாற்றம் நடந்த மாதிரி இருந்தது.
ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. டீமில் அனைவரும் இப்போது நல்ல நண்பர்களாகி விட்டனர். 5 நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாது போல் தோன்றியது. அனைத்து மாற்றத்திற்கும் காரணம் ஆர்த்திதான்.
"கார்த்திக் நான் இந்த வீக் எண்ட் சென்னை போறேன்... எப்ப வருவேன்னு தெரியாது. கொஞ்சம் லேட்டானாலும் ஆகலாம். நீ இதே மாதிரி இருக்கணும். ஓகேவா?"
"ஏன் இப்படி சொல்ற? ஏதாவது பிரச்சனையா?"
"அதெல்லாம் ஒன்னும் இல்ல... எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்ல... அதனால சொன்னேன்"
"சரி... அப்ப அப்ப போன் பண்ணு"
"கண்டிப்பா பண்றேன்"
அவள் சென்றதிலிருந்து முதல் இரண்டு, மூன்று நாட்கள் வேலை செய்யவே முடியவில்லை. பிறகு ஓரளவு சமாளித்தேன். ஒரு வாரம் ஓடியது.
அவளிடமிருந்து போனும் வரவில்லை. அவளும் வரவில்லை. ஒரு மாதமாகிய நிலையில் போன் வந்தது.
"ஹலோ கார்த்திக்கா???"
"ஆமாம். நீங்க யார் பேசறது?"
"நான் ஆர்த்தியோட அண்ணன் பேசறேன்... நீங்க சென்னை அப்போலோ வர முடியுமா? ஆர்த்தி கடைசியா உங்ககிட்ட ஏதோ பேசனுமாம்" அவர் குரலில் நடுக்கம் தெரிந்தது
"கடைசியா???" இந்த வார்த்தையை கேட்டவுடன் இதயம் நின்றுவிடும் போலிருந்தது.
"ஆர்த்திக்கு என்னாச்சு???"
"நீங்க இங்க வாங்க... அத சொல்ற நிலைமைல நாங்க இல்ல... சென்னை வந்தவுடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க... நான் வந்து உங்களை பிக்-அப் பண்ணிக்கிறேன்"
அந்த நம்பர் மனதில் பதிந்தது...
சென்னைக்கு அப்போழுதே நேராக புறப்பட்டேன்...
ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார் ஆர்த்தியின் அண்ணன். அவளுக்கு ஸ்பைனல் கார்டில் ஏதோ பிரச்சனையாம். ஒரு வருடமாக ட்ரீட்மெண்ட் செய்து வந்தார்களாம். சரியாகிவிடும் என்று அனைத்து டாக்டர்களும் நம்பிக்கையூட்டிய நிலையில் திடீரென்று அவள் மூளையை பாதித்துவிட்டதாம். எனக்கு எதுவும் விளங்கவில்லை. புதுப்புது வார்த்தைகள். புது உலகம்.
ஹாஸ்பிட்டலில் காய்ந்து போனா பூச்சரமாக இருந்தாள் ஆர்த்தி. ஆனாலும் வாசம் மறையவில்லை. ஓரளவு பேசும் நிலைதான்... என்னை விட்டுவிட்டு அவள் அண்ணன் டாக்டரை பார்க்க சென்றார்.
எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருந்தது.
"கார்த்தி... அழுவாத!!! எனக்கு கஷ்டமா இருக்கு"
"ஏன் ஆர்த்தி? ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல"
"நான் எப்படியும் பொழைக்க மாட்டேனு தெரியும். ஆனா எங்க வீட்லதான் ரொம்ப நம்பிட்டு இருந்தாங்க. இங்க எல்லாரும் ஒரு மாதிரி பாக்கறாங்கனுதான் நான் பெங்களுருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தேன்"
ஒரு நிமிட அமைதிக்கு பிறகு தொடர்ந்தாள்
"அன்னைக்கு உன்ன முதல் தடவை பார்க்கும் போதே... உன் கண்ல ஒரு விரக்தி தெரிஞ்சிது. வாழ்க்கையோட அருமை உனக்கு தெரியலனு என் மனசுல பட்டுச்சு. சரி நான் சாவறத்துக்குள்ள உனக்கு ஏதாவது உதவி செய்யனும்னுதான் உன்கூட பேச ஆரம்பிச்சேன். போக போக உன்கூட பேசறதே எனக்கு ரொம்ப சந்தோஷத்த குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. உங்கிட்ட சொல்லி உன்ன கஷ்டப்படுத்த வேண்டாம்னுதான் சொல்லல."
"ஆர்த்தி... உனக்கு ஒன்னும் ஆகாது. நீ என்ன விட்டுட்டு எங்கயும் போக மாட்ட"
"ஆமாம். நான் எங்கயும் போக மாட்டேன் கார்த்திக்...
நீ பாக்கற ஒவ்வொரு புது மனிதர்களிளும் நான் இருப்பேன். நீ அவுங்ககிட்ட பேசும் போது அது என்கிட்ட பேசற மாதிரி... என்ன சரியா???"
ஒரு வாரம் சென்னையில் தங்கிவிட்டு வந்தேன்...
காலை 7 மணி...
வழக்கம் போல் லேசாக தூறல் போட்டு கொண்டிருந்தது. பஸ் வந்தவுடன் ஏறினேன்.
"ஹாய்... நான் இங்க உக்காரலாமா?"
"தாராளமா"
"என் பேர் கார்த்திக்..."
"நான் பாலாஜி..."
(ஆர்த்தியுடன் பேசி கொண்டிருந்தேன்...)

Wednesday, October 01, 2008
Software Recession Comedy
இந்தியால இருக்குற மென்பொருள் நிறுவனங்களின் CEO எல்லாம் டாக்டரின் ரசிகர்களாக இருந்தா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை.
TCS :
நீ 10%ஐ (வேலையை விட்டு) தூக்கினா தூசு
நான் தூக்கினா மாஸூடா
(எப்படியும் 15,000 பேர் வெளிய வருவாங்க)
Satyam:
எவ்வளவோ தூக்கிட்டோம், இப்போ தூக்க மாட்டோமா?
Infosys:
எவன் வேலையை விட்டு தூக்கினா எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட் லைன்ஸுல வந்து, சாப்ட்வேர் மக்கள் எல்லாம் கதி கலங்குவாங்களோ அவன் தான் Infosys.
Wipro:
நான் ஒரு தடவை (மக்களை) வேலையை விட்டு தூக்கணும்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்க மாட்டேன் (ஏன்னா 80% ஸ்டாக் என்கிட்ட தான் இருக்கு).
CTS:
வாழ்க்கை ஒரு வட்டம்டா. இங்க, CTSல இருக்கறவன் TCSல சேருவான் (ஃபீல்ட் சரியானவுடனே) TCSல இருக்கறவன் CTSல சேருவான்.
Tuesday, September 30, 2008
I am an hosteler - 3
வார நாட்கள்ல தினசரி அட்டவனையை பார்த்தாச்சு. இப்ப வாரயிறுதி அட்டவனையை பார்க்கலாம்.
சனி
5:30 - வழக்கம் போல சனிக்கிழமையும் 5:30க்கு எழுந்திடனும். எப்பவாது வெள்ளிக்கிழமை படம் போட்டிருந்தா 6 மணிக்கு எழுந்திரிக்கலாம். அதே மாதிரி பல்லு விளக்கி, தலை சீவி 5:55 ஸ்டடிக்கு உட்கார்ந்திடனும்.
5:55-7:45 - வழக்கம் போல ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.
7:45 - 8:30 - பிரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு பொங்கல் போடுவாங்க. ஆனா நான் சனிக்கிழமை விரதம். அதனால சாப்பிட போகமாட்டேன். எனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும். கடைசி வரை அங்க பொங்கல் சாப்பிடவேயில்லை
8:30 - 9:55 - விளையாட்டு நேரம். விளையாடறதுக்கு எல்லாம் ஷார்ட்ஸ் டீ-சர்ட் தான் போட்டிருக்கனும். இதை போன பதிவுல விட்டுட்டேன். இந்த விளையாட்டு பொருட்களை வைக்கறதுக்கு ஒரு ரூம் இருக்கும். அதுக்கு லீடர் பேரு பால் ரூம் மானிட்டர். +1ல நான் பால் ரூம் மானிட்டராத்தான் இருந்தேன். அப்பறம் பாதியிலே பள்ளி மாறிட்டேன். பால் ரூம் மானிட்டரா இருக்கறதுல நிறைய அட்வாண்டேஜ் இருக்கு. முக்கியமான ஒண்ணு, புது தண்ணியில குளிச்சிட்டு லேட்டா ஸ்டடிக்கு போகலாம்.
9:55 - 10:30 - குளியல்.
10:30 - 12:25 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.
12:25 - 1:30 - லன்ச் டைம்.
1:30 - 2:30 - Recreation டைம். நான் இந்த நேரத்துல தூங்குவேன். இல்லைனா செஸ் விளையாடிட்டு இருப்பேன். சில சமயம் ராஜேஷ் குமார் நாவல் படிச்சிட்டு இருப்பேன். இல்லைனா துணி துவைக்கிற நண்பர்களுக்கு பக்கத்துல உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்பேன். நான் 7வதுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சாலும் துணி துவைச்சதே இல்லை.

வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.
2:30 - 4:30 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம். இந்த ஸ்டடில தான் நிறைய பேர் தூங்கி மாட்டுவாங்க. இந்த ஸ்டெடில தமிழ் தான் படிப்பேன். முதல் ரெண்டு மூணு மாசத்துலயே எப்படியும் எங்க புக் படிச்சி முடிச்சிடுவேன். அதுக்கு அப்பறம் அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அதுவும் ரெண்டு மாசத்துல முடிச்சிட்டு அதுக்கு அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அப்பறம் சீனியரோட வரலாறு புத்தகம் வாங்கி படிப்பேன்.

ஒன்பதாவது படிக்கும் போதே பனிரெண்டாவது வரைக்கும் தமிழ் புத்தகமும் (இலக்கியம் படிக்க கோனார் நோட்ஸ் விளக்கவுரை தான்), ஒன்பதாவது, பத்தாவது வரலாறு புத்தகமும் படிச்சி முடிச்சிட்டேன். சில சமயம் ஏழாவது, எட்டாவது பசங்களோட அறிவியல் புத்தகம் வாங்கி படிப்பேன். அப்ப அது எல்லாம் சுலபமா புரியும் :). ஆனா அதையெல்லாம் பாட புத்தகமா நினைக்காம கதை புத்தகமா படிப்பேன். அப்ப தான் தூக்கம் வராது. அந்த காலத்துல படிக்கறதுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. (ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?)
4:30 _ 5:00 - டிபன். டீ பன் :)
5:00 - 6:00 - விளையாட்டு.
6 - 6:30 - குளியல்
6:30 - 8 - ஸ்டடி.
அப்பறம், சாப்பாடு, தூக்கம். சில சமயம் ஏதாவது கேசட் எடுத்துட்டு வந்து டெக்ல படம் போடுவாங்க.
ஞாயிறு (ரொம்ப சந்தோஷமான நாள்)
6:00 - இந்த ஒரு நாள் மட்டும் ஆறு மணி வரை தூங்கலாம். 6:25க்கு ஸ்டடி.
6:25 - 7:30 - ஸ்டடி.
7:30 - 8:15 ப்ரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு ரோஸ்ட். ரோஸ்ட்னா கொஞ்சம் மெல்லிசா பெருசா இருக்கும். அதுக்காக ஹோட்டல் மாதிரி எல்லாம் இருக்கும்னு நினைச்சிக்காதீங்க.
8:15:- 9:25 - விளையாட்டு.
9:30 - 10:30 - குளியல். இந்த நாள் ஆயில் பாத். நல்லா நல்லெண்ணெய் தேச்சி, புலி மார்க் சியக்காய் தூள் போட்டு தேச்சி குளிக்கலாம். இதுவும் கம்பல்சரி. மொதல்ல கொஞ்ச நாள் இந்த எண்ணெய், அப்பளம் சுட்டதுல மீதமான எண்ணெய்னு புரளியை நம்பி எண்ணெய் தேச்சி குளிக்காம ஏமாத்திட்டு இருந்தேன். அப்ப டான்சில்ஸ் வேற. அதுக்கு அப்பறம் ஆப்பரேஷன் பண்ணதுக்கப்பறம் தான் எல்லாம் சரியாச்சு. பின்னாடி ஆயில் பாத்னா முதல் ஆளா நிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆயில் பாத் சுகமே சுகம் தான்.
10:30 - 11:15 - ஸ்டெடி. இனிமே தான் முக்கியான விஷயமே.
11:15 - 11:30 வரை பதினஞ்சி நிமிஷம் Recreation டைம். அப்பவே எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்திடுவாங்க. இது நான் பதினொன்னாவது படிக்கிற வரைக்கும் நடந்தது. அப்ப சமோசா (வெங்காய சமோசா தான். எனக்கு உருளைக்கிழங்கு சமோசா பிடிக்காது), பலாப்பழ சீசன்ல பலாப்பழம் (வர வழியில தான் பண்ரூட்டி இருக்கு), மேங்கோ ப்ரூட்டி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சில சமயம் இட்லி கறிக்குழம்பு. இந்த பதினஞ்சி நிமிஷத்துல இதெல்லாம் சாப்பிட்டு அடுத்த ஸ்டெடிக்கு ஓடிடுவேன்.
11:30 - 12:25 - இந்த ஸ்டடில எதுவுமே படிக்க தோனாது. வெளில அப்பா, அம்மா காத்துட்டிருக்கறதே மனசுல இருக்கும். சில சமயம் அந்த வெறிலயே கூட நிறைய படிப்பேன். அப்ப அப்ப மனசை பொறுத்து மாறும். நான் முதல் முதல்ல ஏழாவதுல அடி வாங்கியது இந்த ஸ்டடி தான். தப்பு செஞ்சா தான் அடிப்பாங்க, நான் தப்பே செய்ய மாட்டேன். என்னை அடிக்கவே முடியாதுனு சொல்லி தான் நான் அந்த பள்ளிக்கூடத்துலயே சேர்ந்தேன். ஆனா தப்பு செய்யாமலும் அடி வாங்க முடியும்னு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

என் பக்கத்துல இருந்த பையன் என் நட்ராஜ் ஜாமெண்ட்ரி பாக்ஸை கீழ தள்ளிவிட்டுட்டான். அந்த சத்தம் கேட்டு வார்டன் அங்க வந்தாரு. யாரோட ஜியாமட்ரி பாக்ஸ்னு கேட்டு என்னை ஸ்டடி ஹால் நடுவுல வந்து நிக்க சொன்னாரு. நான் தள்ளிவிடலைனு சொன்னேன். ஜியாமட்ரி பாக்ஸ் கீழ விழுந்ததுக்கு ரெண்டு அடி, கூப்பிட்டவுடனே வெளிய வராம பதில் பேசனதுக்கு ரெண்டு அடி. மொத்தம் நாலு அடி. அதுவும் செம்ம அடி. எங்க அப்பா, அம்மா அதை பார்த்தாங்க. எனக்கு அழுகை தாங்கல.
அது வரைக்கும் யாரும் என்னை அடிச்சதுமில்லை. அடி வாங்கிற மாதிரி நான் நடந்துக்கிட்டதுமில்லை. அதுக்கு அப்பறம் அந்த வார்டனை பார்த்து எங்க அப்பா பேசி நான் அவருக்கு செல்லப்பிள்ளையாகிட்டேன். ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம். அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும் இது என்னால வாழ்க்கைலயே மறக்க முடியாது.
12:25 - 2:30 - லஞ்ச் + Recreation. முதல்ல வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த துவைச்சி, அயர்ன் பண்ணி கொண்டு வந்த துணி, அப்பறம் அந்த ஒரு வாரத்துக்கு சாப்பிட வாங்கிட்டு வந்த தீனி எல்லாம் கொண்டு போய் பாக்ஸ் ரூம்ல வெச்சிட்டு, அழுக்கு துணி எல்லாம் எடுத்துட்டு வருவேன். அப்பறம் வந்து சாப்பாடு. சாதம், ஆட்டு கறி குழம்பு, ஆட்டு கறி வறுவல் கண்டிப்பா இருக்கும் (புரட்டாசி மாதம் தவிர). எங்க அப்பா காலைல 5:00க்கு கடை திறந்த உடனே வாங்கிட்டு வந்துடுவாரு. அதை ஏழுரை மணிக்குள்ள சமைச்சி புறப்பட்டுடுவாங்க.புரட்டாசி மாசம்னா கீரை பருப்பு போட்டு கடைஞ்சிருப்பாங்க அப்பறம் உருளைக்கிழங்கு வறுவல். 1:30க்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டு, அப்பா அம்மாவோட ஊர் கதை பேசிட்டு இருப்பேன்.

எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி. கடலூர்லயே ரெண்டு மாமா (அம்மாவோட அண்ணன்கள். ரெண்டு பேரும் இஞ்சினியர்ஸ். எங்க அப்பா க்ளார்க்) இருந்தும் அவுங்க வீட்ல எல்லாம் உன்னை தங்கி படிக்க வைக்காம இருக்கறதுக்கு காரணம், நாளைக்கு உங்க அத்தைங்க எல்லாம் எதுவும் சொல்லிடக்கூடாதுனு தான். எந்த காரணத்துக்காகவும் உன் படிப்புக்கோ, வேலைக்கோ அவுங்ககிட்ட நிக்கற மாதிரி வெச்சிடாதப்பா” (நாரயணன் அருளால இதை நான் காப்பாத்திட்டேன். அது மட்டுமில்லாம பத்தாவது, பணிரெண்டாவது ரெண்டுலயுமே எங்க குடும்பத்துல இது வரை நான் எடுத்த மார்க் தான் அதிகம். எனக்கு அப்பறம் நிறைய பேர் +2 படிச்சிட்டாங்க. ஆனா இது வரைக்கும் என் மார்க் தான் அதிகம்). இது ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க. எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு என் மேல எப்பவுமே நம்பிக்கை அதிகம்.
2:30 - 4:15 - ஸ்டெடி. இந்த ஸ்டெடில வெறித்தனமா படிப்பேன். தூக்கம் வந்தா எழுந்து நின்னுட்டு இல்லைனா வார்டன்கிட்ட சொல்லிட்டு முகம் கழுவிட்டு வந்து படிப்பேன். எப்பவும் ஹாஸ்டல்ல முதல் மாணவன்னு என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. முகம் கழுவ எழுந்து போறதெல்லாம் எல்லாருக்கும் விட மாட்டாங்க. என்னால கான்சண்ட்ரேட் பண்ண முடியலனு சொல்லிட்டு போய் முகம் கழுவுற தைரியும் நிறைய பேருக்கு இருக்காது.
4:15 - 4:45 - டிபன்
4:45 - 6 - விளையாட்டு
மறுபடியும் வழக்கம் போல தான் 9 மணி வரை.
9 - 10 : நைட் ஸ்டடி. இது மட்டும் என்னால முடியவே முடியாது. 9:30க்கு அப்பறம் கண்டிப்பா தூங்கி மாட்டிக்குவேன். அது என்ன ஞாயிறு மட்டும் நைட் ஸ்டடினு பாக்கறீங்களா? எங்க ஸ்கூல்ல வார வாரம் திங்க கிழமை காலைல பரிட்சை இருக்கும். இதுக்கு பேரு வீக்லி டெஸ்ட். மன்த்லி டெஸ்ட் எல்லாம் கிடையாது. முதல் ரெண்டு பீரியட் சேர்த்து டெஸ்ட் வைப்பாங்க. 25 மார்க். அதை அப்படியே நூத்துக்கு மாத்திக்குவாங்க. அஞ்சு வாரம் முடிஞ்சா ஒரு சைக்கிள் முடிஞ்சிடும். அதனால வார வாரம் ஞாயிறு நைட் ஸ்டெடி தான். சில சமயம் ஃபாதர் வந்தாருனா அவர்கிட்ட நான் எல்லாத்தையும் படிச்சிட்டேன், நீங்க எதுல இருந்து வேணா கேள்வி கேக்கலாம்னு சொல்லி புத்தகத்தை கொடுத்துடுவேன். அவரும் ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு விட்டுடுவாரு. வார்டன் மட்டுமிருந்தா விட மாட்டாரு. கஷ்டப்பட்டு பத்து மணி வரை முழிச்சிருக்கனும்.
இதோட St.Joseph பள்ளி அட்டவணை பதிவு முடியுது. ஆனா எப்படியும் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை அங்க எப்படி இருந்துச்சு. ஏழாவதுல 40% கூட அட்டெண்டன்ஸ் இல்லாத நான் எட்டாவதுல இருந்து பத்தாவது வரை 100% அட்டெண்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணது எப்படி? ஏழாவதுல இது பள்ளி கூடமே இல்லை நரகம்னு சொல்லிட்டு இருந்த நான் பின்னாடி இது தான் சொர்கம்னு சொல்ற அளவுக்கு எப்படி மாறினேன். ஏழாவதுல இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற பசங்க கூட மட்டுமே பேசிட்டு இருந்த நான் வரும் போது தமிழ் மீடிய பசங்களோட மட்டுமே நண்பனா இருக்கற அளவுக்கு எப்படி மாறினேனு எல்லாம் கண்டிப்பா பதிவெழுதறேன். இந்த பதிவு நிறைய பேர் படிக்கறில்லைனாலும் என்னோட ஆசைக்காக எழுதன தொடர் இது. நிறைய இடங்களில் நான் என் பள்ளிக்கூடத்துல இன்னும் படிக்கிற உணர்வை தந்தது. விளையாடிட்டு வந்து லைன்ல நிக்கும் போது வரும் வேர்வை வாசனையை மீண்டும் நுகர்ந்தேன்.

மீண்டும் நுகர்வேன்....
Sunday, September 28, 2008
செந்தில் இல்லாம கவுண்டருக்கு காமெடி பண்ண தெரியாதா?
ஆமாம் இது சூப்பர் ஸ்டார் பட ரிலீஸூ. எல்லாம் ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு வந்து நிக்க போறாங்க...
நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலைய்யா. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்களாம்.
காந்தக்கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்க்கறேன்
யார் வந்திருக்கானு பாரு... கருவாடு வந்திருக்கு.
ரீலு அந்து போச்சு... அடிச்ச அடில அண்ட்ராயரு கிழிஞ்சி போச்சு.
அவுங்களையாவது மன்னிச்சிடலாம் அதர் கண்ட்ரி அதர் ஸ்டேட்டு
புது மனிதன்
அடப்பாவிகளா புளி சாதத்துல முட்டையை வெச்சி ஏமாத்தறீங்களா?
உள்ளூர் செலவானிக்கே வக்கில்லாம தான் இங்க வந்து நிக்கறோம். இதுல அந்நிய செலவானி வேறயா?
ரோமாண்டிக் லுக்
உள்ளத்தை அள்ளி தா க்ளாசிக்
உதய கீதம்
தேங்காய் பாம்...
வர வர இந்த ஹவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலை
இன்னும் நிறைய இருக்கு... இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்...

முருங்கை காய் சாம்பார், Eagle Eye, எங்க சின்ன ராசா, சர்வேசன்
வெள்ளிக்கிழமை பாட் லக் போயிட்டு வந்தாச்சு. Pot Luckனா என்னனு தெரியாதவங்களுக்கு, ஆளுக்கு ஒரு ஐட்டம் சமைச்சி எடுத்துட்டு போய் கலந்து கட்டி சாப்பிடறதுக்கு பேரு தான் பாட் லக். முன்ன எல்லாம் திருப்பதி போகும் போது அப்படித்தான் எடுத்துட்டு போவோம். எங்க வீட்ல இட்லி வெங்காய சட்னி, எங்க மாமா வீட்ல பூரி மசாலா, அப்பறம் இன்னும் ஒருத்தவங்க புளி சாதம் இப்படி எடுத்துட்டு வருவாங்க. கடைசியா எல்லாரும் கலந்து சாப்பிட்டுக்குவோம். இப்ப எல்லாம் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கலாம்னு சொல்லி புறப்பட்டுடறாங்க. யாருக்கும் செய்யறதுக்கு தெம்போ, மனசோ இல்லை :(
சரி அதை விடுங்க. அன்னைக்கு நான் காலி ஃபிளவர் செய்யலாம்னு பார்த்தா என் ரூமேட் தமிழ் நாடு ஐட்டம் ஏதாவது செய்டானு சொல்லிட்டான். சரினு சாம்பார் செஞ்சி எடுத்து போனேன். அதுவும் முருங்க காய் சாம்பார். எல்லாரும் ஃபோர்க்ல சாப்பிட்டு முருங்கை காயை அப்படியே விட்டுட்டாங்க (என்ன கொடுமை சரவணன் இது?). சாம்பார் எல்லாம் நல்லா கைல பிசைஞ்சி சாப்பிட்டா தான் சாப்பிட்ட மாதிரியே இருக்கும்.
அப்பறம் மீதமானதை கொண்டு வந்து ரெண்டு நாளா தோசைக்கு தோட்டு சாப்பிட்டு இருக்கோம்.
.......................
படத்துக்கு போயே ரொம்ப நாள் ஆகுதுனு நேத்து எப்படியும் போறதுனு முடிவு பண்ணிட்டோம். கடைசியா நான் பார்த்தது டார்க் நைட். அது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. அதுவும் அந்த ஜோக்கர் சான்சே இல்லை. ரெண்டாவது தடவை பார்க்கனும்னு முடிவு பண்ணிருந்தோம். நேரம் கிடைக்கல.
நேத்து Eagle Eye போயிருந்தோம். படத்துல நிறைய சீன் மத்த படங்கள்ல பார்த்த மாதிரியே இருந்தது. முதல் சீன் “Iron Man"ல வர மாதிரி ஆப்கானிஸ்தான்ல ஆரம்பிக்கிறது. அப்பறம் வாடகை குடுக்காம வீட்டு ஓனர்கிட்ட நாயகன் பேசறது "Spider Man”ஐ நினைவு படுத்தியது. அடுத்து ஃபோன் கால் வந்து ஓடுனு சொல்றது "Matrix"ஐ நினைவு படுத்தியது. அடுத்து ட்ராஃபிக் சிக்னலை எல்லாம் கட்டு படுத்தறது, F-16 எல்லாம் கொண்டு வந்து சேஸ் பண்றது “Die Hard"ஐ நினைவு படுத்தியது. கடைசியா க்ளைமாக்ஸ் "iRobot"வை நினைவு படுத்தியது. மொத்தத்துல எல்லாத்தையும் கலந்து கட்டி அடிச்சிருக்கானுங்க. மசாலா பிரியர்கள் பார்க்கலாம்.
.........................
நேத்து மதியம் எங்க சின்ன ராசா படம் பார்த்தேன். நிறைய தடவை பார்த்தாலும் பார்க்க அலுக்காத படம். ஒரு சின்ன ஸ்டோரி லைனை எவ்வளவு அழகான ஸ்க்ரின் ப்ளேவா மாத்திருக்காரு பாக்யராஜ். படத்துல ஆரம்பமும் முடிவும் பார்த்திபனோட குரல் கனீர்னு ஒலிக்குது. அப்ப பார்த்திபன்னு யாருக்கும் தெரிஞ்சிருக்காது இல்ல.
இந்த படத்துல நிறைய பாடல்கள் இருந்தாலும் எல்லாமே அருமையான பாடல்கள். படத்துல நிறைய இடங்கள் அடல்ஸ் ஒன்லி தான். S J சூர்யா எங்க இருந்து எல்லாம் படிச்சிருக்காருனு பாக்யராஜ் படங்கள் பார்த்தா தெரியுது. பாக்யராஜ் படங்களை ரீ ரிலிஸ் பண்ணா டீசண்டா ஓடும்னு நினைக்கிறேன்.
.........................
சிறுகதை போட்டி வெச்சி ரொம்ப நாளாகுது. சர்வேசன், சிறில் அலெக்ஸ் ரெண்டு பேரும் (ரெண்டா?) ரொம்ப பிஸி போல. அடுத்து ஏதாவது போட்டி வெச்சா கொஞ்சம் சுவாரஸ்யமா போகும்னு நினைக்கிறேன். என்னோட சாய்ஸ் ”டீனேஜ்” கதைகள். அந்த வயசுல நடந்த பல விஷயங்களை சுவாரஸ்யமா சொல்றதுக்கு இங்க நிறைய பேர் இருக்காங்க. சில கிளு கிளுப்பு கதைகள் வரதுக்கும் சான்ஸ் இருக்கு. படிக்க குஜாலா இருக்கும் ;)
என்ன சர்வேஸ் ஓகேவா?
Friday, September 26, 2008
Subway, தீபாவளி, வெற்றி திருநகர், Coke
புரட்டாசி மாசம் வந்தாலும் வந்துச்சு, இந்த பத்து நாள்ல நாலு அஞ்சு தடவைக்கு மேல Subway தான். இல்லைனா BK (#6) , KFC, Taco Bell இப்படி மாத்தி மாத்தி சாப்பிட்டிருக்கலாம். நேத்து பிசாவும் சாப்பிட்டாச்சு. கரெக்டா இந்த மாசம் தான் Fall கலர் பார்க்க ஊர் சுத்துவோம். ஏதாவது காடு, மலைனு போய்ட்டு இருக்கும் போது வெஜ் மட்டும் சாப்பிடனும்னா கடுப்பா தான் இருக்கும். ஆனா இப்படி இருந்தா தான் சிக்கன் சாப்பிடாம வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வரும்.
இன்னைக்கு ராத்திரி ஒரு பாட் லாக் வேற. அங்கயும் சிக்கன் சாப்பிடாம வெஜ் தான் சாப்பிடனும். மத்த பாட் லாக்ல எல்லாம் நான் சைவத்தை பத்தி யோசிக்கவே மாட்டேன். இப்ப நானே சைவம் அப்படிங்கறதால அதுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தாச்சு. நல்லா சமைக்கற ஒருத்தவங்களை வெஜ் ஃபிரைட் ரைஸ் செய்ய சொல்லியாச்சு. நான் காலி ஃபிளவர் ஃபிரை செய்ய போறேன். நமக்கு பிரச்சனையில்லை.
................................................
இந்தியாக்கு கிளம்பற தேதில கொஞ்சம் பிரச்சனையிருந்தது. நான் அக்டோபர் 25ஆம் தேதி போகனும்னு சொன்னேன். இங்க இருக்குற ஒரு மேனஜர் அதெல்லாம் முடியாது 31ஆம் தேதி தான் கிளம்பனும்னு சொன்னாரு. இன்னைக்கு இந்தியால இருக்கிற மேனஜர்கிட்ட பேசினதுல 25ஆம் தேதியே கிளம்பலாம்னு சொல்லிட்டாரு. இன்னும் வீட்ல சொல்லலை. இந்திய நேரம் காலைல ஃபோன் பண்ணி சொல்லனும். அது ஏன் 25ஆம் தேதினு பாக்கறீங்களா? 27ஆம் தேதி (தலை) தீபாவளி.
.................................................
அகிலனோட வெற்றி திருநகர் படிச்சிருக்கீங்களா? அருமையான கதை. தமிழ்நாட்ல இத்தனை தெலுங்கர்கள் எப்படி வந்தாங்கனு அதுல அழகா சொல்லியிருப்பாரு. விஜய நகர பேரரசும், கிருஷ்ண தேவ ராயரும் மனதை கொள்ளை கொள்வார்கள்.
ஆனா சோழ சாம்ராஜ்யம் அழிஞ்சி போய் தஞ்சைலயே சாப்பாட்டுக்கு கஷ்டப்படற மாதிரி எல்லாம் படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.
பொன்னியின் செல்வனளவுக்கோ, வேங்கையின் மைந்தன் அளவுக்கோ விறுவிறுப்பு இருக்காது. இருந்தாலும் படிக்க நல்லா இருக்கும். இது நான் போன வருஷம் இந்தியா போகும் போது ஃபிளைட்ல படிச்சிட்டு போனது.
....................................................
இந்தியால குடிக்கிற Cokeகிற்கும் அமெரிக்காவில் குடிக்கிற Cokeகிற்கும் டேஸ்ட்ல அதிக வித்தியாசம் இருக்கு. யாராவது உணர்ந்திருக்கீங்களா?
அங்க கோக்ல பூச்சி கொல்லி மருந்து இருக்குனு சொல்றாங்க. கோக் கம்பெனியோ இந்திய நிலத்தடி நீரைத்தான் பயன்படுத்துறோம். அப்படி பூச்சி கொல்லி மருந்து இருந்தா அது தண்ணில இருந்து வரது தானு சொல்றாங்க.
கோக்கை சோதனை பண்ணி பார்க்கும் போது அதுல இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருப்பது உறுதினு வந்துச்சு. அதே மாதிரி அவுங்க சொன்ன நிலத்தடி நீரை சோதனை செய்து பார்த்தாங்களா? அப்படி சோதிக்கும் பட்சத்தில் நம் நிலத்தடி நீரிலே பூச்சி கொல்லி மருந்து இருக்குமானால் அதை சரி செய்ய வழிமுறைகள் இருக்கிறதா?
குடி நீரே விஷமானால் அது மிகவும் ஆபத்தான விஷயமில்லையா? இதை பற்றி ஆராய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? கோக்கை எதிர்த்து போராடிய கூட்டமும் அதை பற்றி எழுதிய மீடியாக்களும் அதை விட பெரிய பிரச்சனையாக வாய்ப்பிருக்கும் குடிநீர் மாசு பற்றி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?
இதை பத்தி யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
.......

Thursday, September 25, 2008
I am an Hosteler - 2
காலைல சில நாட்கள் ப்ரேயர் இருக்கும். அப்படி ப்ரேயர் இல்லாத நாட்கள்ல மாரல் சயன்ஸ் பீரியட் இருக்கும். எனக்கு அந்த மாதிரி கதை கேட்க ரொம்ப பிடிக்கும். அப்ப க்ரிஸ்டியன்ஸ்க்கு கேட்டிசம் க்ளாஸ் (பைபிள் க்ளாஸ்) தனியா இருக்கும். இது இருபது நிமிஷம் இருக்கும். அதுக்கு அப்பறம் வழக்கம் போல நாலு வகுப்பு. மதியம் 12:35க்கு லஞ்ச்க்கு விடுவாங்க. இப்ப மறுபடியும் ஹாஸ்டல்.
12:35 - 1:25 - இதுல ரெண்டு பேட்ச் நடக்கும். நர்சரி லஞ்ச் டைம் 12:00 - 12:30. அதனால நாங்க வரும் போது அவுங்களுக்கு முடிஞ்சிருக்கும். சாப்பாட்டுக்கு நம்ம சொந்தமா தட்டு எடுத்துட்டு போகனும். நான் எப்பவும் சாப்பாட்டு தட்டு, பொறியல் வாங்க சின்ன தட்டு, டபரா, டம்ப்ளர் வெச்சிருப்பேன். அது பாதி நேரம் எவனாவது எடுத்துக்குவான். அப்ப நாம வேற எவன் தட்டையாவது ஆட்டய போட்டு சாப்பிட்டு வெச்சிடனும். ஆனா சாயந்திரம் வந்து தட்டை கண்டுபிடிச்சி வேற ஒரு பாதுகாப்பான இடத்துல வெச்சிடுவேன். ஒவ்வொரு வகுப்புக்கு குறிப்பிட்ட ரேக் இருக்கும். அதனால மத்த பேட்ச் பசங்க தட்டை எடுத்தா வார்டன் பார்த்து அடி பின்னிடுவாரு. அப்பவும் சில சமயம் ஏமாத்தி எடுக்க வேண்டியது வந்துடும். ஏன்னா நம்ம க்ளாஸ் ரேக்ல ஒண்ணுமே இருக்காது.
சில சமயம் தட்டு கிடைக்காம சாப்பிடாம போன சமயங்களும் உண்டு. அப்ப யாராவது நண்பர்கள் வார்டனுக்கு தெரியாம சாப்பாடு எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க. அப்படி வரும் போது மாட்டினா தர்ம அடி தான். (அந்த மாதிரி சாப்பாடு கொண்டு வந்து கொடுத்த நண்பர்கள் கேசவன், இளங்கோ, மதன் எல்லாம் இப்ப டச்லயே இல்லை :( ). சரி ரொம்ப பர்சனல் எல்லாம் இதுல வேண்டாம். அதுக்கு வேற ஒரு தொடர் இருக்கு :)
இங்க சாப்பாடு செம ஸ்பீடா சாப்பிடணும். ஏன்னா அடுத்த பேட்ச்க்கு மக்கள் ரெடியா இருப்பாங்க. சாம்பார் வந்து அஞ்சு நிமிஷத்துல ரசம் வந்துடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல மோர் வந்திடும், அடுத்த அஞ்சு நிமிஷத்துல க்ளீன் பண்றவர் வந்துடுவார். இப்படி வேகமா சாப்பிட்டு பழகனது இன்னும் போக மாட்டீங்குது.
1:25 - 1:35 - ஸ்டடி டைம். பேருக்கு தான் ஸ்டடி டைம். ஆனா ஸ்கூலுக்கு பேசாம கிளம்பினா போதும். இப்ப லைனா போக வேண்டியதில்லை.
4:30 வரைக்கும் பள்ளிக்கூடம்.
4:30 - 5- டிபன். சுண்டல், பன்னு, கேக்கு ஏதாவது கொடுப்பாங்க. அப்படியே டீ. இது சாப்பிட்டதுக்கு அப்பறம் தான் நாங்க எல்லாரும் எஞ்சாய் பண்ற ப்ளே டைம்.
5 - 5:55 - இந்த நேரத்தில கண்டிப்பா விளையாடியே ஆகனும். உடம்பு சரியில்லைனா சிக் ரூம்ல இருக்கலாம். அதை தவிர வேற எந்த காரணத்துக்காவும் விளையாடாம இருக்க கூடாது. நல்லா வேர்வை வர விளையாடனும். அதனால "No Cricket". ஏன்னா பேட்டிங் டீம்னு சொல்லிட்டு 10 பேர் உட்கார்ந்திருக்க கூடாது. எங்க ஸ்கூல் ஸ்போர்ட்ஸ்ல எப்பவுமே பட்டையை கிளப்பும். ஃபுட் பால் கிரவுண்ட் - 3. (எல்லாமே ஸ்டேட் லெவல் மேட்ச் நடத்துற தகுதியோட இருக்கும்). ஹாக்கி கிரவுண்ட்-2. வாலி பால் கோர்ட்-4. பாஸ்கெட் பால் கோர்ட்-5, பால் பேட்மிண்டன் கோர்ட்-4. மொத்தத்துல இப்படி ஒரு ஸ்கூல நீங்க பார்த்திருப்பீங்களானு சொல்ல முடியாத அளவுக்கு பெரிய ஸ்கூல்.
5:55க்கு மணி அடிக்கும். எல்லாரும் வந்து ஹாஸ்டெல் முன்னாடி வகுப்பு வாரியா லைன்ல நிக்கனும். ஒரு அஞ்சு நிமிஷம் வேர்வை அடங்கற வரைக்கும் அங்க காத்திருக்கனும். அதுக்கு அப்பறம் தான் ஹை லைட்டே. குளிக்கறதுக்கு பாத் ரூமெல்லாம் கிடையாது. நிறைய தொட்டி கட்டி விட்டுருப்பாங்க. எல்லாரும் ஷார்ட்ஸோட தான் குளிப்பாங்க. எல்லாரும் கைல மக்கும், சோப்பும் எடுத்துட்டு போகனும். வார்டன் வந்து கை தட்டுவார். எல்லாரும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து ஒரு 4-5 நிமிஷத்துல மறுபடி கை தட்டுவார். அப்ப எல்லாரும் சோப் போட ஆரம்பிக்கனும். மறுபடி கை தட்டுவார். மறுபடியும் தண்ணி எடுத்து ஊத்திக்கனும். அடுத்து கை தட்டினார்னா இடத்தை காலி பண்ணனும். எந்த காலமா இருந்தாலும் பச்சை தண்ணி தான். சுடு தண்ணி வேணும்னா ஸ்பெஷல் பர்மிஷன் + பதினைஞ்சி ரூபா எக்ச்ட்ரா. அவுங்க மட்டும் 5:45க்கு வந்து குளிக்கலாம்.
சோப்பு போட்டு முடிச்சிட்டு தண்ணியை எடுத்து ஊத்த ஆரம்பிக்கும் போது ஒரே நிமிஷத்துல தொட்டி முழுக்க சோப்பா ஆகிடும். அந்த தண்ணியையே எடுத்து ஊத்திக்குவோம். இப்ப நினைச்சா ஒரு மாதிரி இருக்கு. அப்ப எதுவும் தெரியல. ஒரு மாசத்துல எல்லாம் பழகி போச்சு. இதுல நான் சொல்ற மாதிரி எல்லாரும் மக் வெச்சிருக்கறது ஐடியல் கண்டிஷன். ஆனா ஒரு மக் தான் ஏழெட்டு பேர் பயன்படுத்துவோம். வேகமா தண்ணி எடுத்து ஊத்திட்டு அடுத்தவனுக்கு கொடுத்துடுவோம். குளிச்சி முடிச்சிட்டு போய் வேகமா துணி மாத்திட்டு வந்து ஷார்ட்ஸும், ஜட்டியும் அந்த தொட்டி தண்ணில துணி சோப் போட்டு துவைச்சிடுவோம்.
6:25 - 8 - இது எல்லாத்தையும் முடிச்சிட்டு 6:25 ஸ்டடில போய் உட்காரணும். இந்த ஸ்டடில படிச்சா எல்லாமே மண்டைல ஏறிடும். 7:30 வரைக்கும் எது படிச்சாலும் மண்டைல ஏறிடும். அதுக்கு மேல பசிக்க ஆரம்பிச்சிடும். 7-8 டியூஷன் போகனும்னா போகலாம். டியூஷன் போனா என்ன ஒரு நல்ல விஷயம்னா ஜாலியா பேசலாம். எப்படியும் ஸ்கூல் வாத்தியாருங்க தான் வருவாங்க. நம்ம ஒண்ணு அவுங்ககிட்ட பேசலாம், இல்லை பசங்ககிட்ட பேசலாம். எப்பவுமே நான் வாத்தியாருங்களுக்கு செல்லமா தான் இருந்திருக்கேன். அதனால என்னை எதுவும் திட்ட மாட்டாங்க. 10வதுல மட்டும் டியூஷன் போகலை. ஏன்னா நல்லா படிக்கனும்னு ஒரு எண்ணம் தான். இப்பவும் என் நம்பிக்கை டியூஷன் போனா ஜாலியா அரட்டை அடிக்கலாம். வகுப்பு நேரத்தில கவனிக்காதது எதுவும் அங்க சொல்லி தர போறதில்லை.
7:30 வரை ஏதாவது படிக்க வேண்டியதை படிப்பேன். அதுக்கு பிறகு கண்டிப்பா கணக்கு பாடம் தான். பசிக்கும் போது கணக்கு தான் படிப்பேன். அதே மாதிரி சனி, ஞாயிறும் கணக்கு படிக்க நிறைய ஸ்டடி டைம்ஸ் இருக்கு.
8- 8:55 டின்னர் + Recreation Time. இந்த நேரத்துல வழக்கம் போல ஒரு பேட்ச் சாப்பிடும். இன்னொரு பேட்ச்க்கு ரெக்ரியேஷன். அதாவது நண்பர்கள் கூட ஜாலியா பேசலாம். சாப்பிடும் போதோ, குளிக்கும் போதோ, விளையாடும் போது (தேவையில்லாமல்) பேச கூடாது. அப்படி பேசினா அடி பட்டையை கிளப்பிடுவாங்க. நான் முதல் முறை அடி வாங்கனது இன்னும் ஞாபகமிருக்கு. அது ஒரு ஞாயிறு. சேர்ந்த இரண்டாவது மாதம். அம்மா, அப்பா வந்திருந்தாங்க (வார வாரம் வருவாங்க). செல்லோ டேப் சுத்தின பிரம்பால நாலு அடி. பின்னாடி. ரொம்ப வலிச்சிது. சரி அடுத்த பதிவுல அதை பார்க்கலாம்.
அந்த டைம்ல நம்ம பாய் எல்லாம் எடுத்து கரெக்டா இடம் பார்த்து போட்டு வெச்சிடனும். இதெல்லாம் கூட்டமா சேர்ந்து தான் செய்வோம். அப்படியே பேசிக்கிட்டே. நம்ம லேட்டா போனால் நம்ம பெட் கிடைக்காது. அதனால சீக்கிரம் போய் கண்டுபிடிச்சி வராண்டாவை பெருக்கி பெட்டை போட்டு வரணும். மழை பெஞ்சா க்ளாஸ் ரூம்ல போய் படுக்கனும். அதுக்கு ஏத்த மாதிரி இடம் பிடிக்கனும். அப்பறம் போய் கீழ மண்ல உட்கார்ந்து கதை பேசிட்டு இருக்கலாம்.
8:55- Attendance + Prayer 8:55 க்கு மணி அடிக்கும். எல்லாரும் ஹாஸ்டல் முன்னாடி போய் நிக்கனும். அட்டெண்டென்ஸ் எடுப்பாங்க. ஒரு ஒரு க்ளாஸ்க்கு ஒரு ஹாஸ்டல் லீடர் (மானிட்டர்) இருப்பான். அவன் தான் அட்டெண்டென்ஸ் எடுத்து சொல்லுவான். அது அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிடும். அடுத்து ஏதாவது இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுக்கனும்னா வார்டன் கொடுப்பாரு. அப்பறம் ஏதாவது நன்னடத்தை கதை சொல்லுவாரு.
வாரத்துல ரெண்டு நாள் ஃபாதர் வருவாரு. அவர் வந்தா அட்டகாசமான கதை சொல்லுவாரு. எதுவுமே கிருத்துவ மத சம்பந்தமா இருக்காது. சில சமயம் இந்து தெய்வங்களின் கதையையும் சொல்லுவார். எனக்கு கதை கேட்க எப்பவுமே பிடிக்கும். அதுக்கு அப்பறம் எல்லாரும் போய் படுத்து தூங்கனும். நல்லா ஓடி விளையாண்டதால சீக்கிரமே தூக்கம் வந்திடும். என்னால அப்பவெல்லாம் 9:15 மேல முழிச்சிருக்க முடியாது.
சனிக்கிழமை ராத்திரி படம் போடுவாங்க. அதுக்கூட நான் பார்க்க மாட்டேன். ஞாயித்தி கிழமை நைட் ஸ்டடி இருக்கும். அதுல எப்பவுமே நான் தூங்கி மாட்டிக்குவேன். ஏன்னா அப்ப எல்லாம் என்னால 9:30க்கு மேல எந்த காரணத்துக்காவும் முழிச்சிருக்க முடியாது. (எவ்வளவு மாறிட்டேன்). அடுத்த நாள் காலைல 5:30க்கு எழுந்திரிக்கனும். அடுத்த பகுதில வீக் எண்ட் பத்தி பார்க்கலாம்...
லேப்டாப், மெமெண்டோ, எண்ணெய் கத்திரிக்காய், கூகுள் ஃபோன்
இன்னும் ஒரு வாரத்துக்கு கண்டதையும் எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.
இந்தியா வரதால புது லேப் டாப் வாங்கிருக்கேன். HP லேப் டாப். வெயிட் கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. நவம்பர் கடைசில கிளம்பற மாதிரி இருந்திருந்தா கருப்பு வெள்ளி (Black Friday - Day After Thanks giving day) சேல்ல வாங்கியிருக்கலாம். இதுவும் ஓரளவு நல்ல டீல் தான். லேப் டாப் முந்தா நேத்து தான் வந்துச்சு.
Deals2buy.comல பார்த்து வாங்கினேன்.
(HP Pavilion dv6700t, Intel(R) Core(TM) 2 Duo T5750, 2.0GHz, 15.4" WXGA, 3GB RAM, 250GB, LightScribe SuperMulti 8X DVD+/-R/RW with Double Layer Support, 256MB NVIDIA GeForce 8400M GS, 802.11 b/g, Webcam, Fingerprint Reader, High Capacity 6 Cell Battery, Windows Vista Home Premium » for $673.99 at HPShopping.com)
வீண்டோஸ் விஸ்டா நல்லா தான் இருக்கு. ஆனா இன்னும் முழுசா பயன்படுத்தி பார்க்கல. இத்தனை நாள் ஈ-கலப்பை பயன்படுத்தியிருந்தேன். லக்கி சொல்லி NHM பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். இது ஈ-கலப்பையை விட நல்லா இருக்கு. இப்ப ப்ரவுசரும் Chromeதான். இத்தனை நாள் Firefox பயன்படுத்திட்டு இருந்தேன். மறுபடியும் மாறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
.................
போன வாரம் Memento படம் பார்த்தேன். கஜினிக்கும் மெமெண்டோவிற்கும் உள்ள ஒரே தொடர்பு அந்த ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் அப்படிங்கற கான்செப்ட் மட்டும் தான். மத்தபடி இரண்டிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மெமெண்டோ மிக அருமையான படம். ஆனா அலைபாயுதே, 12 Bயே புரியாத நம்ம ஊர்ல இப்படி படம் வந்தா கண்டிப்பா ஒரு நாள் கூட ஓடாது.
ஸ்ரீதர் நாராயணனோ, கப்பியோ இதற்கு விமர்சனம் எழுதினால் அருமையாக இருக்கும். சான்ஸ் கிடைத்தால் தவறாமல் பார்க்கவும்.
..................
சமையல் குறிப்புல இன்னைக்கு கத்திரிக்காய் புளிக்குழம்பு @ எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1 - 2
தக்காளி - 2
பூண்டு - 4-5 பல்
கத்திரிக்காய் - 8 - 10
வெந்தயம்.
புளி (இங்க concentrated Tamarind Paste கிடைக்கும். அதை தான் பயன்படுத்தறேன். நம்ம ஊர்னா ஒரு 100 கிராம் புளினு நினைக்கிறேன். கைல அளவு பார்த்தா தான் தெரியும்)
கடுகு
கருவேற்பிலை
நல்லெண்ணெய் - 3-4 ஸ்பூன்.
முதலில் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்த பின் கருவேற்பிலை, கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் போட்டு பொன்னிறம் (எந்த பொண்ணுனு கேக்காதீங்க) வரும் வரை வதக்கவும், பிறகு தக்காளி போடவும். அது நன்றாக வெந்த கத்திரிக்காயை போடவும். கத்திரிக்காயை கட் பண்றதே ஒரு லாஜிக் இருக்கு. முன்னாடி காம்பை நீக்கிவிட்டு பின்னால் நான்காக குறுக்குவாட்டில் வெட்டவும் (அடுத்த முறை சமைக்கும் போது போட்டோ எடுத்து வெச்சிக்கறது நல்லது). இதை நன்றாக வதக்கவும். அதுல மேல வேணும்னா லைட்டா நல்லெண்ணெய் விடலாம். நன்றாக வதங்கிய பிறகு மூன்று நான்கு ஸ்பூன் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மஞ்சள் போட்டு அரை டம்ப்ளார் தண்ணீர் ஊற்றவும். மசாலா ஓரளவு வெந்த பிறகு புளி கரைசலை ஊற்றவும். நல்லா கொதிச்சவுடன் உப்பு காரம் சரியாக இருக்கா என பார்த்து சரி பண்ணவும். கொஞ்சம் ஃபிரைட் ஆனியன்ஸூம் போடலாம்.
.....................
நான் ஆவலோட எதிர்பார்த்த கூகுள் ஃபோன் புக்கிங் ஆரம்பிச்சிடுச்சி. அடுத்த மாசம் 22ம் தேதி வெளியாகிறதாம். அடுத்த முறை எப்ப வருவனோ தெரியாது. எப்படியும் அப்ப மூணு நாலு ஜெனரேஷன் வந்திருக்கும்னு நினைக்கிறேன்.
.....................
Wednesday, September 24, 2008
I am an Hosteler - 1
என்னுடைய ஹாஸ்டல் அனுபவங்களை பத்தி நிறைய எழுதனும்னு ஆசை. எனக்கு கடலூர் புனித வளனார் பள்ளியில படிச்சேன் என்பது ரொம்ப பெருமையான விஷயம். நான் அதுக்கு அப்பறம் +2 ராசிபுரம் SRVல படிச்சிருந்தாலும், நீ எந்த பள்ளியில படிச்சனு யாராவது கேட்டா உடனே கடலூர் St.Joseph Schoolனு சொல்லிடுவேன். எனக்கு அந்த பள்ளி அவ்வளவு சந்தோஷங்களை கொடுத்திருக்கிறது.
நல்ல ஆசிரியர்கள், நல்ல கல்வி, ஒழுக்கம் (ரொம்ப இல்லைனாலும் ஓரளவுக்கு பின்பற்ற முயல்கிறேன்), நல்ல நண்பர்கள் எல்லாத்தையும் எனக்கு கொடுத்தது அந்த பள்ளி. அப்பறம் என் பள்ளியோட தாரக மந்திரம் "உழைப்பே உயர்வு தரும்" எனக்கு இப்பவும் வாழ்க்கைல ஒரு பிடிப்பை தருகிறது.
நான் வேலைக்கு சேர்ந்த பிறகும், ஏன் இந்த மூணு நாள் உட்கார்ந்து சர்டிஃபிகேஷனுக்கு படிக்கும் போதும் கனவுல நான் அங்க படிக்கிற மாதிரியும் ஸ்டடி ஹால்ல உட்கார்ந்திருக்கிற மாதிரியும், கொடில துணி போடறது, மழை வந்தா வேகமா ஓடிப்போய் துணியெல்லாம் எடுத்து
ஏதாவது க்ளாஸ் ரூம் ஜன்னல்ல போடறது, மழை அடிக்கும் போது வேகமா எழுந்து நண்பர்களை எல்லாம் எழுப்பி வரண்டால இருந்து ஏதாவது க்ளாஸ் ரூம்ல எல்லாருக்கும் படுக்க எடம் பார்த்து படுக்குறது எல்லாம் ஞாபகம் வரும். படுக்க இடமில்லைனா டெஸ்க் பெஞ்ச் எல்லாம் நகற்றி போட்டு படுப்போம். காலைல எழுந்து எல்லாத்தையும் சரி பண்ணிடனும்.
சரி இதை பத்தி எழுதினா ஒரு பெரிய தொடரே வரும். இப்போழுது என்னோட தினசரி டைம் டேபிள் மட்டும் எழுதறேன். பின்னாடி எழுத பயன்படும். முக்கியமான ஒரு விஷயம், அமெரிக்கால இருந்து அமெரிக்கர்களோட இனிமையான அணுகுமுறையை உணர்வதற்கும் ஆப்கானிஸ்தான்லயோ ஈராக்லயோ இருக்கற அமெரிக்கர்களோட அணுகுமுறைக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவு காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கூட ஹாஸ்டலுக்கும் வித்தியாசமிருக்கு. தெரியாதவங்க ஏ நாகூர் பள்ளில படிச்ச பசங்களை கேக்கறது உத்தமம். அங்க தான் நூத்துக்கு நூறு வாங்கினாலும் அடி விழும். (அந்த பயத்துல தான் அடுத்த தடவை ஒழுங்கா படிப்பாங்கனு)
ஹாஸ்டல்னா ஒரு நூறு இருநூறு பேரை நீங்க கற்பனை பண்ணிருந்தீங்கனா வெல்கம் டூ செயிண்ட் ஜோஸப்... இங்க ஆயிரம் பேருக்கு மேல ஹாஸ்டல்ல படிப்பாங்க. சாப்பாடே மூணு பேட்ச் நடக்கும். ஒரு க்ளாஸ்க்கு எண்பது பேர் இருப்பாங்க. நான் பத்தாவதுல "M" செக்ஷன்.
இப்ப இந்த பள்ளில எத்தனை பேர் படிப்பாங்கனு கணக்கு போட்டு பாருங்க.
காலை 5:30 : மணி அடிக்கும். எழுந்திரிக்கணும். அஞ்சு நிமிஷத்துல எழுந்திரிக்கலைனா வார்டன் இல்லை ஃபாதர் பிரம்போட வருவாங்க. அடியோட எழுந்திரிக்கணும். பத்தாவது, பதினோன்னாவது, பனிரெண்டாவது மக்களுக்கு மட்டும் தான் பெட் ரூம். மீதி மக்களுக்கு எல்லாம் க்ளாஸ் ரூம்
வராண்டா தான். அங்க இருந்து எழுந்து, போர்வையை மடிச்சி வெச்சி தலையணையும் போர்வையையும், பாயோட சுருட்டி எந்த பெட் ரூம்ல கொண்டு போய் ஏதாவது ஒரு இடத்தை பார்த்து வைக்கணும். தினமும் ஒரே ஏரியால வெச்சா ஞாபகமா ராத்திரி வந்து எடுத்துக்கலாம். இல்லைனா ராத்திரி கஷ்டப்படணும்.
எழுந்து போய் பல்லு விளக்கிட்டு முகம் கழுவிட்டு தலை சீவி, தெளிவான முகத்தோட படிக்க உட்காரணும்.
5:55 AM : ஸ்டெடி பெல். இந்த நேரத்துல எல்லாரும் ஸ்டெடி ஹால்ல புத்தகத்தை விரிச்சி உட்கார்ந்திருக்கனும். ஒவ்வொருவருக்கும் ஒரு டெஸ்க் இருக்கும். அதுல தான் புத்தகம், முகம் பார்க்கிற கண்ணாடி, சீப்பு, பவுடர், விபூதி (நான் எப்பவும் விபூதி வைப்பேன். பவுடர் அடிக்க மாட்டேன். அதுவே நல்லா தெளிவா இருக்கானு காட்டிடும்) எல்லாம் இருக்கும். 5:45க்கெல்லாம் பல்லு விளக்கிட்டு வந்து உட்கார்ந்துட்டா பத்து நிமிஷத்துல படிக்க தயாரா ஆகிடலாம்.
ஸ்டெடி டைம்ல இடத்தை விட்டு நகரக்கூடாது, பேசக்கூடாது. இந்த ஸ்டெடில எதுவும் எழுத கூடாது. காலைல படிச்சா தெளிவா மண்டைல ஏறும் என்பதால் இந்த ஸ்டெடி டைம் படிக்க மட்டுமே. நான் இந்த ஸ்டெடில சைன்ஸ் மட்டும் தான் படிப்பேன். கணக்கு பரிட்சை தவிர மத்த நாட்களில் கணக்கு கூட இந்த ஸ்டெடியில் பண்ண கூடாது.
6:45 - 6:55 - Recreation Time (அப்படி தான் சொல்லுவாங்களே. தமிழ்ல எல்லாம் சொல்ல மாட்டோம்). இந்த நேரத்துல நியூஸ் போடுவாங்க. நான் புயல் காலத்துல மட்டும் நியூஸ் கேட்பேன். முக்கால்வாசி சரியா இருக்கும். கடலோரமா இருக்கறதால வருஷா வருஷம் புயல் வரும். 8:45 முதல் 9:30 வரை ஓரளவு மழை பெய்தாலும் பள்ளி விடுமுறை தான். ஏன்னா பக்கத்து கிராமங்களிலிருந்து வரும் மக்கள் அதிகம். மழை இல்லாத காலங்களில் இந்த பத்து நிமிஷம் தூங்கிடுவேன். சில சமயம் 400 மீட்டர் கிரவுண்டை ஓட சொல்லுவாங்க. ஓடிட்டு வந்து தூங்குவேன்.
6:55 - 7:45 - அடுத்த ஸ்டெடி. இதுவும் படிக்க மட்டும் தான். ஆனா முதல் ஸ்டெடி அளவுக்கு நான் ஆக்டிவா இருக்க மாட்டேன். அதனால God
Father (அதாங்க வரலாறு) இல்லைனா தமிழ் படிக்க ஆரம்பிச்சிடுவேன். இது ரெண்டும் படிக்கும் போது தானா ஆக்டீவாகிடுவேன். எனக்கு பிடிச்ச ரெண்டு சப்ஜெக்ட்ஸ் இது தான். வேற ஏதாவது படிச்சா தூங்கறது வாய்ப்பு அதிகம். அப்படி ஸ்டெடி டைம்ல தூக்கம் வந்தா எழுந்து நின்னு படிக்கலாம். அப்படி இல்லாம தூங்கி வழிஞ்சா கண்டிப்பா ஒரு அஞ்சி பத்து நிமிஷத்துல மாட்டிக்குவோம். பிரம்பால இரண்டு முதல் நான்கு அடிகள் உறுதி.
7:45 - 8:45 - Break Fast டைம். இந்த நேரத்துல மொத்தம் மூணு பேட்ச் நடக்கும். முதல் பேட்ச் நர்சரி. அடுத்த பேட்ச் பத்தாவது வரை. கடைசி பேட்ச் +1, +2 மற்றும் கோச்சிங் சென்று வரும் மாணவர்கள். இந்த கோச்சிங் பத்தி இன்னொரு பதிவுல விவரமா சொல்றேன்.
(நானும் ரெண்டு வருஷம் கோச்சிங் போயிருக்கேன். இது படிக்க இல்லை. விளையாட. எங்க பள்ளி எப்பவுமே விளையாட்டுல கலக்கற பள்ளி. நான் படிக்கும் போது ஸ்டேட்ல ஃபுட் பால், ஹாக்கி, கோ-கோ, பால் பேட்மிட்டன் நாலுலயும் ரோலிங் கப் வாங்கினாங்க. ரோலிங் கப்னா தொடர்ந்து மூன்று வருஷம் ஸ்டேட்ல கோல்ட் மெடல்னு அர்த்தம். மீதி நிறைய ஸ்போர்ட்ஸ்லயும் வாங்கினாங்க. ஆனா தொடர்ந்து மூன்று வருஷம் வாங்க முடியல.)
இந்த நேரத்துல மத்த பேட்ச் பசங்க சாப்பிடும் போது நம்ம க்ளாஸிக்கு ரெடியாகிடனும். துணி வைக்கிற பெட்டி எல்லாம் ஒரு ரூம்ல ரேக்ல
இருக்கும். அதுக்கு பேரு பாக்ஸ் ரூம். இதுவும் ரெண்டு மூணு இடத்துல இருக்கும். எட்டாவது வரைக்கும் ஒரு இடம், ஒன்பது பத்தாவதுக்கு ஒரு
இடம், ஹையர் செகண்டரிக்கு ஒரு இடம்.
ஹாஸ்டல் பசங்க பொதுவா காலைல குளிக்க மாட்டாங்க. சாயங்காலம் விளையாடிட்டு வந்து தான் குளிப்பாங்க. கோச்சிங் போற பசங்க மட்டும் காலைல ப்ராக்டீஸ் முடிச்சிட்டு வந்து குளிப்பாங்க.
8:45 - 9:25 - அடுத்த ஸ்டெடி. இதுல ஏதாவது ஹோம் ஒர்க் இருந்தா எழுதலாம். கணக்கு போடலாம். இந்த ஸ்டெடி தான் பொதுவா நான் கணக்கு ஹோம் ஒர்க் எழுத பயன்படுத்துவேன். இந்த ஸ்டெடில இருந்து நேரா எழுந்து ஸ்கூலுக்கு போயிடனும். போகற வழியில பேசக்கூடாது. லைனா போகனும்...
முக்கியமான விஷயம். நான் படிச்சது 93ல இருந்து (சில்வர் ஜீபிலி இயர் - 125th Year) 97 அக்டோபர் வரை. +1 பாதியிலே பள்ளி மாறிட்டேன்.
நான் படிக்கும் போது Principal - Ref. Fr. Ratchagar. ஹாஸ்டல் ஃபாதர் - Ref.Fr. Agnel.
எங்க ஸ்கூல் பாடலோட முதல் பேரா மட்டும் ஞாபகமிருக்கு.
உழைப்பின் நல் மேன்மையை நாம் உணர்ந்திடுவோம்
உழைப்பினால் உயர்ந்திடுவோம் -
உண்மையுடன் நல் ஒழுக்கமும் சேர்ந்திட
உன்னத நிலையடைவோம்
(தொடரும்...)

Tuesday, September 23, 2008
பரிட்சை, உடையார், பருப்பு, ஆங்கில படங்கள்
நான் வேலை செய்யற கம்பெனில வருஷத்துக்கு ரெண்டு சர்டிஃபிகேஷன் பண்ணனும். இந்தியா போனா படிக்க நேரமிருக்குமானு தெரியல. அதனால இப்பவே பண்ணலாம்னு போன வாரம் ஒரு சர்டிஃபிகேஷனுக்கு ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். ஒரு வழியா இன்னைக்கு ஒண்ணு எழுதி வெற்றிகரமா முடிச்சாச்சி. படிச்சி ரொம்ப நாள் ஆனதால படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
...............
ரெண்டு வாரத்துக்கு முன்னாடி பாலகுமாரனோட உடையார் படிச்சேன். இது வரைக்கும் நான் படிச்ச வரலாற்று புதினங்களை சொல்லிடறேன். அப்ப தான் மத்ததுக்கும் உடையாருக்கும் இருக்குற வித்தியாசம் புரியும். இது வரை நான் படிச்சது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, வேங்கையின் மைந்தன், வெற்றி திருநகர், கடல் புறா, யவன ராணி, ஜல தீபம்.
மத்த எல்லா கதைக்கும் உடையாருக்கும் நிறைய வித்தியாசமிருந்தது. முக்கியமான வித்தியாசம் உடையார் அளவுக்கு சமுதாய சூழ்நிலைகளையும், தமிழ் சமூகத்தில் நிலவிய சாதிய கோட்பாடுகளையும் மத்த கதைகள் பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த எந்த சூழ்நிலைகளில் எந்த எந்த சமூகத்தை சேர்ந்தோர் முக்கியத்துவமடைகின்றனர் என்பதும் இதில் சுவையாக சொல்லப்பட்டுள்ளது. அதே போல் பிராமணர்கள் எப்படி வேத பாடங்களை பயில்வதிலிருந்து அரசு இயந்திரம் அனைத்திலும் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர் என்றும் அழகாக சொல்லப்பட்டுள்ளது. நான் முன்னுரை படிக்காததால எது கற்பனை எது உண்மைனு சொல்ல முடியல. ஆனா என்னோட கணிப்பு இது எல்லாமே கற்பனை தான். ஆனா நம்பும்படியான அழகான கற்பனை.
இந்த கதைல நாயகன் உடையார் ஸ்ரீராஜராஜ தேவர் தான். ஆனா மத்த கதைகள் அளவுக்கு அவர் ஹீரோயிசம் எதுவும் பண்ணல. கதை முழுக்க முழுக்க தஞ்சை பெரிய கோவிலையே சுற்றி சுற்றி வருகிறது. நிறைய இடங்களில் தகவல் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. (உதாரணமாக பஞ்சமன் மாதேவிக்கும் ராஜேந்திரனுக்கும் இரண்டு வயதே வித்தியாசம்னு ஒரு இடத்தில் சொல்வதும், பஞ்சமன் மாதேவி திருமணம் முடிந்து தஞ்சை வரும் போது ராஜேந்திரனுக்கு வயது பத்து என்பது... இந்த மாதிரி நிறைய...)
பொன்னியின் செல்வனில் விடை கிடைக்காத ஆதித்த கரிகாலன் மரணம் பற்றி விரிவாக பேசப்படுகிறது. சிட்டிசன்ல கடைசி சீன்ல அஜித் கொடுக்க சொல்ற தண்டனை (பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், மாமன், மச்சான்.... அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும்) இங்க இருந்து தான் காப்பி அடிச்சிருக்காரு போல :)
நான் ரொம்ப ரசிச்சி படிச்சேன். இதை பத்தி எழுத நிறைய இருந்தாலும் பின்னாடி ஒரு நாள் விரிவா எழுதலாம், இப்ப இதை படிக்க சிபாரிசாவது செய்யலாம்னு சொல்லிட்டேன்.
இதை படிச்சி நான் கடைசியா ஃபீல் பண்ணது, மன்னராட்சி ரொம்ப கொடுமையானது. போர் அதை விட ரொம்ப கொடுமையானது.
.................
அமெரிக்கா வந்ததுக்கப்பறம் நடந்த ஒரு உருப்பிடியான விஷயம் நான் சமைக்க கத்துக்கிட்டது தான். இங்க என் சமையலுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க. இந்தியா போனா கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்து போயிடுங்கற காரணத்தால ஒண்ணு ஒண்ணா இங்க ரெசிப்பி எழுதி வெச்சிடலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன். இது முக்கியமா எனக்கு மறக்க கூடாதுனு தான். உங்களுக்கும் பயன்பட்டுச்சினா சந்தோஷம். நிறைய ஐட்டம் ஆந்திரா ஸ்டைல்ல இருக்கும். ஏன்னா என்னுடைய பழைய ரூமேட் ஒருத்தர் தெலுகு. அவர் சமையல் பிடிச்சதால அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்.
இன்னைக்கு தால் @ பப்பு @ பருப்பு
(ரெண்டு பேருக்கு ரெண்டு வேளை / நாலு பேருக்கு ஒரு வேளைக்கு)
1 கப் துவரம் பருப்பு. (எலக்ட்ரிக் குக்கர் கப். 200 ml இருக்கும்னு நினைக்கிறேன்)
வெங்காயம் - 1 (சின்ன சின்னதா கட் பண்ணனும்னு அவசியமில்லை)
தக்காளி - 1 / 2 (சைஸ் பொருத்து. சின்ன தக்காளியா இருந்தா ரெண்டு, பெருசா இருந்தா ஒண்ணு)
பச்சை மிளகாய் - 5-6
மஞ்சத்தூள் - கொஞ்சம் (அரை ஸ்பூன்)
நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் (ரொம்ப குழையாமலும் ஒட்டிக்காமலும் இருக்கும்)
தண்ணி மூணு கப்
இதை குக்கர்ல வெச்சி மூணு விசில் விடற வரைக்கும் வைக்கனும்.
அதுக்கு அப்பறம்
வெங்காயம் - ஒண்ணு (பொடி பொடியா நறுக்கிக்கனும்)
பூண்டு - 3-4 பல்
கருவேற்பிலை
சீரகம்
கடுகு (அப்படியே ரிவர்ஸ் ஆர்டர்ல போட்டிருக்கேன்)
இதெல்லாம் போட்டு நல்லா வதக்கணும்.
இப்ப வதக்கனதை எடுத்து குக்கர்ல போட்டு, கொஞ்சம் மிளகாய் தூள் (அரை ஸ்பூன்), தேவையான அளவு உப்பு போட்டு (நான் கைல தான் கொட்டி போடுவேன். அதனால ஸ்பூன் அளவு தெரியாது.) தண்ணி நல்லா போற வரைக்கும் அடுப்புல வைக்கணும். அவ்வளவு தான்.
(பருப்பு கீரை @ ஸ்பீனாச் டால் - இதே செய்முறைதான். கீரையை சேர்த்து வேக வைக்கணும்)
அவ்வளவு தான். சோ சிம்பிள். இப்படி தினமுன் நம்ம ஃபெவரைட் ஐட்டம்ஸ் ஒண்ணு ஒண்ணா எழுதி வைக்க போறேன் :)
..................
இங்கிலிஷ் படங்களோட ரேபிட் ஷேர் லிங் இங்க கிடைக்கும் - www.th3zone.com.
அப்படியே ரேபிட் ஷேர்ல பிரிமியம் அக்கவுண்ட் ஒரு மாசத்துக்கு ஓப்பன் பண்ணா தினமும் 5 படங்கள் டவுன்லோட் பண்ணலாம் :)
ஒரு 1 TB ஹார்ட் டிஸ்க் வாங்கினா எல்லாத்தையும் அதுல சேவ் பண்ணிடலாம்.
Tuesday, September 16, 2008
நேற்று! இன்று!! நாளை!!!
"கிருஷ்ணா, நீ சொல்லி தானே இன்னைக்கு காலைல பொண்ணு பார்க்க வரோம்னு சொல்லியிருந்தோம். இப்ப திடீர்னு வேலை இருக்குனு ஆபிஸ் கிளம்பிட்டிருந்தா எப்படி?" சூடான காப்பியை ஆற்றி கொண்டே பேசி கொண்டிருந்த ராஜலக்ஷ்மிக்கு நாற்பத்தி ஐந்திலிருந்து ஐம்பது வயதிற்குள்ளிருக்கும்.
"அம்மா. திடீர்னு ஒரு ப்ரடக்ஷன் இஷ்ஷூமா. இன்னைக்கு ராத்திரிக்குள்ள முடிச்சாகணும். நாளைக்கு காலைல அவனுங்க ஆபிஸ் வரும் போது அது சரியா இருக்கனும். அமெரிக்கன் க்ளைண்டா இருந்தா பிரச்சனையில்லை. இது ஆஸ்ட்ரேலியன் ப்ராஜக்ட். அவுங்களுக்கு நமக்கு முன்னாடி விடிஞ்சிடும்"
"அதெல்லாம் எனக்கு தெரியாது. எப்படியாவது பர்மிஷன் போட்டுட்டு ஒரு மணி நேரமாவது வந்துட்டு போ"
"அம்மா. நான் என்ன பர்மிஷன் போடறதுக்கு அப்பா மாதிரி கவர்மெண்ட் எம்ப்ளாயியா? ரெண்டு மணி நேரம் பர்மிஷன்னு சொல்லிட்டு அரை நாள் லீவ் போட்டாலும் கண்டுக்காம விடறதுக்கு அது என்ன கவர்மெண்ட் ஆபிஸா?" சொல்லிவிட்டு டீவியில் கல்யாண மாலை பார்த்து கொண்டிருந்த அப்பாவை பார்த்து சிரித்தான்.
"ஏன் அம்மாவும் புள்ளையும் என் தலையை உருட்டறீங்க? அவன் வரலைனா என்ன நீயும் நானும் போய் பார்த்துட்டு வருவோம். பிடிச்சிருந்தா அடுத்த வாரம் இவனையும் கூப்பிட்டு போகலாம்"
"சூப்பர்ப்பா. இந்த டீல் எனக்கு ஓகே"
"என்னங்க இது? ஒரு பொண்ணு வீட்டுக்கு எத்தனை தடவை போவாங்க? அந்த வீட்ல ஒரு வாரம் முழுக்க டென்ஷனா வேற இருக்கும். அது அவுங்களுக்கு வீண் சிரமம் தான். இவன் இன்னைக்கு வரலைனா நாம போய் பார்ப்போம். பிடிச்சிருந்தா ஓகே சொல்லிடுவோம். நாங்க பார்த்து சொன்னா ஓகே தானே? அந்த காலத்துல எல்லாம் உங்க அப்பாவை கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் பார்க்கவேயில்லை"
"உன்னை மாதிரி உன் பையனுக்கும் அதிர்ஷ்டமடிக்குமா என்ன? என்னை மாதிரி அவனும் துரதிஷ்ட சாலியா இருந்தா என்ன பண்ண?"
"சொல்லுவீங்க சொல்லுவீங்க. இந்த வயசுக்கும் உங்களுக்கு வாயிக்கு ருசியா சமைச்சி போடறனில்ல. ஏன் சொல்ல மாட்டீங்க?"
"சரி. உங்க ரெண்டு பேர் ரொமான்ஸையும் நான் போனதுக்கப்பறம் வெச்சிக்கோங்க. நான் எப்படியும் சாயந்திரம் அஞ்சு மணிக்கு வர பார்க்கிறேன்"
"நாலரை ஆறு ராகு காலம். காலைல போயிட்டு வரது தான் உத்தமம். அவுங்களும் டென்ஷனில்லாம ஃப்ரியா இருப்பாங்க"
"ஏன்மா இப்படி உயிரை வாங்கற. எது சொன்னாலும் ஒத்து வராத மாதிரியே சொல்ற?"
"காலைல பதினோரு மணிக்கு நாங்க அங்க வரோம். நீ போய் ஒரு ரெண்டு மணி நேரம் வேலை பார்த்துட்டு நேரா வந்து சேர்ந்துடு. சரியா?"
"சரி. அங்க ரொம்ப நேரமாகாதில்லை?"
"பொண்ணு பாக்க தான் போறோம். நீ வந்து பார்த்துட்டு பத்து நிமிஷத்துல கிளம்பிடலாம். அப்படி ஏதாவது பேசனும்னா நானும் உங்கப்பாவும் பேசிட்டு வரோம். சரியா?"
"சரிம்மா"
வேகமாக வண்டியை எடுத்து கிளம்பினான் கிருஷ்ணா. இவ்வளவு நேரமாகியும் நம்ம கிருஷ்ணாவை சரியா பார்க்கல இல்ல. கிருஷ்ணா சென்னைல ஒரு.... சரி சரி நீங்க நினைக்கிற மாதிரி ஐடி கம்பெனில தான் வேலை பார்க்கிறான். ஐந்தடி பத்து அங்குலம் உயரம். பார்த்தவுடனே தமிழனு சொல்லக்கூடிய நிறம். அதனாலயே ரஜினி ரசிகனானான். வெள்ளைத் தோல் இருக்கறவங்க தான் சினிமால ஹீரோவா இருக்க முடியுங்கறதை உடைச்ச ஒரே காரணத்தாலே அவனுக்கு ரஜினி பிடிச்சிது. அப்பறம் அந்த ஸ்டைல், சுறுசுறுப்பு எல்லாமே பிடிச்சி போச்சு. அவன் முதல் நாள் பார்த்த ரஜினி படங்களின் எண்ணிக்கையும், அதுக்கு அவன் டிக்கெட் வாங்க பட்ட கஷ்டமும் இந்த கதைக்கு தேவையில்லை என்பதால் இதோட நிறுத்திக்கறோம்.
அவனுக்கு பொண்ணு பார்க்க போறோம்னு ஒரு பதட்டமிருந்தது. இருந்தாலும் இந்த ப்ரடக்ஷன் இஷ்ஷுவை முடிச்சிட்டா கொஞ்சம் நிம்மதியா பொண்ணு பார்க்க போகலாம். அங்க போய் என்ன என்ன கேள்வியெல்லாம் கேக்கனும்னு அவன் ஃபிரெண்ட் நித்யா அவனுக்கு ஒரு செக் லிஸ்ட் கொடுத்திருந்தா. அதெல்லாம் பல நாட்களுக்கு முன்னாடியே மனப்பாடம் பண்ணியிருந்தான்.
கிருஷ்ணா ஆபிஸிலிருந்து புறப்படும் பொழுது மணி பத்தரை முடிந்து ஏழரை நிமிடமாகியிருந்தது. அவன் அப்பாவிடம் வழி கேட்டு அவன் அங்கே சென்ற பொழுது மணி பதினொன்று இருபது. சரியாக அவன் வண்டியை நிறுத்தவும் அவன் அப்பாவும், அவன் அப்பா வயதையொத்த ஒருவரும் அவனை அழைத்து செல்ல வெளியே வந்தனர்.
"என்ன கிருஷ்ணா. ட்ராஃபிக் அதிகமா?"
"ஆமாம்பா. வழக்கம் போல தான். வீக் எண்ட் கொஞ்சம் குறைவா இருக்கும்னு நினைச்சேன்"
"இந்த நேரத்துல வீக் டேஸ்ல தான் ட்ராஃபிக் குறைவா இருக்கும். வீக் எண்ட் எல்லா நேரமும் கொஞ்சம் ட்ராஃபிக்கா தான் இருக்கு" சொல்லிவிட்டு அவனை பார்த்தார் அப்பாவோடு வந்தவர்.
"உள்ள வாங்க"
அவன் உள்ளே சென்றவுடன் அவன் அம்மா அருகில் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.
"ஏன்டா ஏதாவது ஆட்டோ பிடிச்சி வந்திருக்கலாம் இல்ல. வண்டில வந்து தலை முடியெல்லாம் கலைஞ்சி, பொண்ணு பாக்க வந்தவன் மாதிரியா இருக்க?" பொறுமையாக யாருக்கும் கேட்காத வண்ணம் சொன்னாள்.
"நாங்க எல்லாம் உனக்காக தான் காபி கூட குடிக்காம வெயிட் பண்ணிட்டு இருக்கோம்" கிண்டலாக சொன்னார் அவன் அப்பா. அது காபி கொண்டு வரலாம் என்பதற்கான சிக்னல் என்பதை புரிந்து கொண்டான்.
உள்ளேயிருந்து கையில் ஒரு ட்ரேயும் அதில் மூன்று கப் காபியுடன் நீல நிறப்பட்டுப்புடவையில் வந்த பெண்ணை பார்த்தான் கிருஷ்ணா. அவன் கண்கள் விரிந்ததை பார்த்தவுடன் அவனுக்கு அந்த பெண்ணை ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்பு அதிகம் என்பதை அவன் அம்மா உணர்ந்து கொண்டாள்.
அமைதியாக வந்த அந்த பெண், சரி இதுக்கு மேல எதுக்கு அந்த பெண்ணுனு சொல்லிட்டு ரம்யானே சொல்லலாம். ரம்யா அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு கிட்சனுக்கு சென்றுவிட்டாள்.
.......
கிருஷ்ணா அவன் சீட்டிற்கு சென்று அமரும் போது மணி ஒன்றாக பத்து நிமிடமிருந்தது. அங்கே அவனை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த கார்த்திக், கிருஷ்ணாவின் குழப்பமான முகத்தை பார்த்ததும் அவனுடைய சுழற்நாற்காலியை நகற்றி அருகில் வந்தான்.
"ஏன் டல்லா இருக்க? பொண்ணை பிடிக்கலயா?"
"டேய் அங்க யார் இருந்தா தெரியுமா? நம்ம ஜீனியர் ரம்யாடா? ஞாபகமிருக்கா?"
அதை கேட்டதும் கார்த்திக் சிரித்த சத்தத்தை கேட்டு பக்கத்து க்யூபிக்களிலிருந்து சில தலைகள் எட்டி பார்த்து மறைந்தன.
"ஏன்டா ஜாதகத்துல எந்த காலேஜ்னு இல்லையா?"
"இல்லையே. வெறும் BEனு தான் இருந்தது"
"ஏதாவது பேசனயா?"
"இல்லை. என்ன பேசறதுனு எல்லாமே மறந்து போச்சு. அதுவுமில்லாம நான் அவசரமா வந்திருக்கேனு எங்க அம்மா சொல்லிருந்தாங்க. அதனால உடனே கிளம்பற மாதிரியாகிடுச்சி. எங்க அம்மா, அப்பா அங்க இன்னும் கொஞ்ச நேரமிருந்து பேசிட்டு வரேனு சொல்லியிருக்காங்க"
"நீ என்ன யோசிச்சிட்டிருக்க?"
"டேய் நான் அவளை வெச்சி வினோத்தை ஓட்னது மறந்துட்டியா?"
"ஏன்டா அவங்க ரெண்டு பேரும் சிம்போசியம்ல ஒரு ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அவுங்க ரெண்டு பேர் மட்டுமில்லை மொத்தம் அஞ்சு பேர் சேர்ந்து அந்த ப்ரோக்ராம் ஆர்கனைஸ் பண்ணாங்க. அப்ப அந்த பொண்ணுக்கூட அவன் எல்லாரோடையும் போடற மாதிரி கடலை போட்டான். உடனே நீ அவனை அதை வெச்சி ஓட்ட ஆரம்பிச்சிட்ட. அந்த சிம்போசியத்துக்கப்பறம் நீ அவன் அந்த பொண்ணுக்கூட பேசறதை பார்த்திருக்கியா?"
"இல்லை. நான் ஓட்னதுல பயந்து அவன் அதுக்கப்பறம் பேசவேயில்லை. கேண்டீன்ல பார்த்தா கூட வெளிய ஓடிடுவான்."
"நீ அந்த பொண்ணை வெச்சி அவனை ஓட்னது அந்த பொண்ணுக்கு தெரியுமா?"
"தெரியாதுனு தான் நினைக்கிறேன். ஆனா அவுங்க க்ளாஸ் பசங்க ஒரு சிலருக்கு தெரியுமே"
"சரி. இப்ப அதனால பிரச்சனையென்ன?"
"வேற ஒருத்தனை வெச்சி நான் ஓட்டின பொண்ணை எப்படி நானே கல்யாணம் பண்ணிக்கறதுனு ஒரு யோசனை"
"சரி. இப்ப காலேஜ் படிக்கும் போது ரம்யா உன்னை ப்ரப்போஸ் பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்ப?"
"அக்சப்ட் பண்ணியிருக்கலாம்"
"ஏன், நான் உன்னை வெச்சி வினோத்தை ஓட்டிட்டு இருக்கேன். அதனால அவனை போய் ப்ரபோஸ் பண்ணுனு சொல்ல வேண்டியது தானே?"
"ஏன்டா நான் என்ன லூசா அப்படி சொல்ல?"
"ஓ இப்ப சமீப காலமா தான் அப்படி ஆகிட்டியோ?"
"டேய் ஏன்டா குழப்பற?"
"ஒழுங்கா உன்னை பிடிச்சிருக்கானு கேளு. பிடிச்சிருக்குனு சொன்னா ஓகே சொல்லிடு. உனக்கும் அவளை பிடிச்சிருக்குனு நல்லா தெரியுது. ஒழுங்கு மரியாதையா பேசி பார்த்துட்டு முடிவு பண்ணு"
"ஹும்ம்ம்"
"என்னடா ஹும்ம்ம்... இப்ப அப்பா அங்க தான இருக்காரு?"
"தெரியல. கிளம்பியிருக்கலாம்"
"சரி நான் ஃபோன் பண்ணி ரம்யா செல்ஃபோன் நம்பர் வாங்கறேன். கொஞ்ச நேரம் கழிச்சி நீ பேசு"
"தப்பா நினைக்க மாட்டாங்களா?"
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு"
கார்த்திக் வேகமாக கிருஷ்ணா அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தான்.
"அப்பா. இன்னும் நீங்க பொண்ணு வீட்ல தான் இருக்கீங்களா?"
" "
"ஆமாம்பா. ரம்யா எங்க ஜீனியர் தான். கிருஷ்ணா எதுவுமே பேசாம வந்துட்டானாம். பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தையாவது கேக்கனுமாம்.
அவனுக்கு ரம்யா ஃபோன் நம்பர் வாங்கி தாங்களேன்"
" "
"சொல்லுங்க. நோட் பண்ணிக்கறேன்"
" "
"சரி. அவுங்க வீட்ல முன்னாடியே சொல்ல சொல்லிடுங்க. பையன் ஒரு ரெண்டு வார்த்தை பேசனுமாம்னு. சாப்பிட்டு ஃபோன் பண்றோம்"
.....
கார்த்திக் ரம்யாவின் அலை பேசிக்கு அழைக்கும் பொழுது மணி இரண்டு.
"ஹலோ. நான் கிருஷ்ணா ஃபிரெண்ட் கார்த்திக் பேசறேன். நானும் உன் சாரி சாரி உங்களுக்கு சீனியர் தான்."
" "
"ஞாபகமிருக்கா? சூப்பர். இருங்க அவன்கிட்ட கொடுத்துட்டு நான் எஸ்கேப் ஆகறேன்"
கார்த்திக் கிருஷ்ணாவிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
"ரம்யா. சாரி எனக்கு வேலை அதிகமா இருந்துச்சு. அதான் ஒரு வார்த்தை கூட பேச முடியாம வந்துட்டேன்"
" "
"இப்ப மட்டும் எப்படி நேரமிருக்கா? லஞ்ச்க்கு எல்லாம் போயிருக்காங்க. நான் உன்கிட்ட பேசிட்டு போகலாம்னு வெயிட் பண்றேன்"
" "
"பேசிட்டு போய் எப்படியும் சாப்பிடத்தான் போறேன். சரி நான் இதை நேர்ல பார்த்து தான் கேட்கனும்னு நினைச்சேன். பட் சிச்சிவேஷன் சரியா அமைல. உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கறதுல ஓகே தானே?"
" "
"இங்க பாரு. எனக்கும் வீட்ல என்ன சொன்னாலும் ஓகே தான். ஆனா உனக்குனு ஒரு விருப்பம் இருக்குமில்லையா? அதை சொல்லு"
" "
"என்னாது எங்க அம்மா அப்பாவை பிடிச்சிருக்குனு ஓகே சொல்லிட்டியா? சரி தான். நீ கல்யாணம் பண்ணிக்க போறது என்னை தான். அதனால என்னை பிடிச்சிருக்கானு தான் முதல்ல யோசிக்கனும்"
" "
"ஓகே ஓகே. சரி, நான் இப்ப சாப்பிட போறேன். இது தான் என் செல் நம்பர். பேசனும்னு தோணும் போது பண்ணு"
" "
"நானும் பண்றேன். பை"
கிருஷ்ணா கேண்டின் நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
"நான் ஓகே சொல்லிட்டேனு சொன்னதுல இருந்துமா புரியல. இப்ப நீங்க என் விருப்பத்தோடத்தான் என்னை கைப்பிடிக்கனும்னு என் விருப்பத்துக்கு மரியாதை கொடுக்கறதுல இருந்து என் முடிவு சரினு எனக்கு கன்ஃபர்ம் ஆகிடுச்சு. போதுமா?" அவள் கடைசியாக சொன்னது அவன் காதுக்குள் ஒலித்து கொண்டே இருந்தது.

Subscribe to:
Posts (Atom)