தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, September 28, 2008

செந்தில் இல்லாம கவுண்டருக்கு காமெடி பண்ண தெரியாதா?

ஆமாம் இது சூப்பர் ஸ்டார் பட ரிலீஸூ. எல்லாம் ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு வந்து நிக்க போறாங்க...
நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்க முடியலைய்யா. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கறவன் எல்லாம் தொழிலதிபர்களாம்.காந்தக்கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரில இடம் பார்க்கறேன்

யார் வந்திருக்கானு பாரு... கருவாடு வந்திருக்கு.ரீலு அந்து போச்சு... அடிச்ச அடில அண்ட்ராயரு கிழிஞ்சி போச்சு.

அவுங்களையாவது மன்னிச்சிடலாம் அதர் கண்ட்ரி அதர் ஸ்டேட்டு
புது மனிதன்

அடப்பாவிகளா புளி சாதத்துல முட்டையை வெச்சி ஏமாத்தறீங்களா?

உள்ளூர் செலவானிக்கே வக்கில்லாம தான் இங்க வந்து நிக்கறோம். இதுல அந்நிய செலவானி வேறயா?ரோமாண்டிக் லுக்

உள்ளத்தை அள்ளி தா க்ளாசிக்உதய கீதம்தேங்காய் பாம்...வர வர இந்த ஹவுஸ் ஓனர் தொல்லை தாங்க முடியலை

இன்னும் நிறைய இருக்கு... இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்...

23 comments:

இலவசக்கொத்தனார் said...

என்னதான் சொன்னாலும் இவரோட வால்யூமுக்குப் பயந்தே இவர் படங்களைப் பார்க்காம விட்டுடுவேன்.

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

என்னதான் சொன்னாலும் இவரோட வால்யூமுக்குப் பயந்தே இவர் படங்களைப் பார்க்காம விட்டுடுவேன்//

சவுண்டு குறைச்சி வெச்சி பாருங்களேன் :)

ஆயில்யன் said...

மொத்தமாய் கொடுத்திட்டிங்க!

எல்லாமே சூப்பரா இருந்தாலும் கடைசி இரண்டு காட்சிகள்
செம கலக்கலான காமெடின்னு கூட சொல்லலாம் :))))

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

மொத்தமாய் கொடுத்திட்டிங்க!

எல்லாமே சூப்பரா இருந்தாலும் கடைசி இரண்டு காட்சிகள்
செம கலக்கலான காமெடின்னு கூட சொல்லலாம் :))))//

இல்லை ஆயில்ஸ்... நிறைய கிடைக்கல. கிடைச்சதுல கொஞ்சம் தான் எடுத்து போட்டிருக்கேன். எல்லாம் ஒரு சாம்பிள் தான் ;)

SurveySan said...

சூப்பரு.

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கவுண்டர் லந்து விடர சவுண்டே போதுமேய்யா.
கவுண்டர் கவுண்டர் தான் ;)

வெட்டிப்பயல் said...

//surveysan said...
சூப்பரு.

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ன்னு கவுண்டர் லந்து விடர சவுண்டே போதுமேய்யா.
கவுண்டர் கவுண்டர் தான் ;)//

அது :)

வெட்டிப்பயல் said...

பேப்பர் ரோஸ்ட் காமெடி லிங் யாருக்காவது கிடைச்சா கொடுங்களேன்...

அது என்ன பேப்பர் ரோஸ்ட் காமெடினு தெரியாதவங்களுக்கு.

”பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா லிவருக்கு நல்லது”னு ஆரம்பிக்கும். படம் பிரம்மா.

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர் கலெக்ஷன்:):):) நான் கூட ஒரு பதிவை கவுண்டருக்கு ஸ்பெஷலா டெடிகேட் செய்யனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க அருமையா செஞ்சிட்டீங்க. அது ஒரு அழகிய நிலாக் காலம்:(:(:(

Sanjai Gandhi said...

எல்லாமே பார்த்தது தான்.. ஆனாலும் திரும்பவும் பாக்கலாம்.. புக் மார்க் பண்ணிட்டேன் வெட்டி. பொறுமையா பார்த்து ரசிக்கிறேன்.. நன்றி..

வெட்டிப்பயல் said...

//rapp said...
ஹா ஹா ஹா, சூப்பர் கலெக்ஷன்:):):) நான் கூட ஒரு பதிவை கவுண்டருக்கு ஸ்பெஷலா டெடிகேட் செய்யனும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க அருமையா செஞ்சிட்டீங்க. அது ஒரு அழகிய நிலாக் காலம்:(:(:(
//

ஆமாங்க. இப்ப கவுண்டருக்கு வயசாகிடுச்சி. இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் நிறைய பேர் இருக்க தான் செய்யறாங்க. ஒரு காலத்துல கவுண்டர்ஸ் டெவில் ஷோனு எழுதினா அது நிச்சயம் ஹிட் தானு இருந்துச்சு.

இன்னும் நிறைய காமெடி இருக்கு. ஆனா நான் செந்தில் இல்லாம எடுத்து போட்டிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//பொSaடிnயJaன்i said...
எல்லாமே பார்த்தது தான்.. ஆனாலும் திரும்பவும் பாக்கலாம்.. புக் மார்க் பண்ணிட்டேன் வெட்டி. பொறுமையா பார்த்து ரசிக்கிறேன்.. நன்றி..
//

சூப்பர்.. பொறுமையா பார்த்து ரசிங்க சஞ்சய். எல்லாமே அட்டகாசமான காமெடி தான் :)

நாதஸ் said...

Thanks for the Videos :)

G.Ragavan said...

என்ன இருந்தாலும் கவுண்டர் கவுண்டர்தான். தனியாவும் சரி...செந்திலோடையும் சரி...கலக்கல்தான். அந்த நக்கல் ஒன்னே போதுமப்போய். சமயத்துல அவரு எத்துறதும் ஒதைக்கிறதும் சங்கடப்படுத்துனாலும்.. கூட்டிக்கழிச்சிப் பாத்தா நல்லாத்தான் இருக்குது.

பிரேம்ஜி said...

http://www.youtube.com/watch?v=tARSE7nv1oU

இந்த காமெடி பாருங்க.டயலாக் டெலிவரி,டைமிங் பக்காவா இருக்கும்.
உதையும் நல்லா விழும்.
:-))))

Sathiya said...

கவுண்டர் கவுண்டர் தான்!!! அவரை அடிச்சுக்க ஆளே இல்லை!

Sathiya said...

இது என்னோட வலைப்பூவின் பெயர் காரணமான வடக்குபட்டி காமெடி;)
http://www.youtube.com/watch?v=nX-QsnhMFQU

இரா. வசந்த குமார். said...

அன்பு வெட்டிப்பயல்...

வகையான கலெக்ஷன்..! சில க்ளிப்களை நான் மிஸ் செய்து விட்டேன்.

காணவும் :: பிச்சைக்காரனுக்கு செக்கூரிட்டி பிச்சைக்காரனே!

வெட்டிப்பயல் said...

// nathas said...
Thanks for the Videos :)//

np dude :)

வெட்டிப்பயல் said...

//g.ragavan said...
என்ன இருந்தாலும் கவுண்டர் கவுண்டர்தான். தனியாவும் சரி...செந்திலோடையும் சரி...கலக்கல்தான். அந்த நக்கல் ஒன்னே போதுமப்போய். சமயத்துல அவரு எத்துறதும் ஒதைக்கிறதும் சங்கடப்படுத்துனாலும்.. கூட்டிக்கழிச்சிப் பாத்தா நல்லாத்தான் இருக்குது.

//

அதே அதே :)

வெட்டிப்பயல் said...

//பிரேம்ஜி said...
http://www.youtube.com/watch?v=tARSE7nv1oU

இந்த காமெடி பாருங்க.டயலாக் டெலிவரி,டைமிங் பக்காவா இருக்கும்.
உதையும் நல்லா விழும்.
:-))))//

இதுவும் போடலாம்னு தான் பார்த்தேன், ஆனா சொந்தக்காரங்களை ரொம்ப கேவலமா பேசறாருனு சொல்லிடுவாங்கனு விட்டுட்டேன் :)

Thanks for sharing

வெட்டிப்பயல் said...

//sathiya said...
இது என்னோட வலைப்பூவின் பெயர் காரணமான வடக்குபட்டி காமெடி;)
http://www.youtube.com/watch?v=nX-QsnhMFQU//

இது பல தடவை பார்த்ததாச்சே. செந்தில் இருக்காருனு விட்டுட்டேன் :)

வெட்டிப்பயல் said...

//இரா. வசந்த குமார். said...
அன்பு வெட்டிப்பயல்...

வகையான கலெக்ஷன்..! சில க்ளிப்களை நான் மிஸ் செய்து விட்டேன்.

காணவும் :: பிச்சைக்காரனுக்கு செக்கூரிட்டி பிச்சைக்காரனே!

//

இதுவும் செந்திலிருக்கிற காமெடி தான். ஆனா சூப்பர் காமெடி :)

முரளிகண்ணன் said...

கவுண்டர்க்கு இணை கவுண்டரே. அவர் ஒரு சகாப்தம். அடிக்கடி ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்த பதிவுக்கு வந்தாலே போதும்