தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, September 05, 2008

ஆடு புலி ஆட்டம் - 21

"ரவி எழுந்திரிடா. எழுந்திரிச்சி இந்த பேப்பர் பாரு"

"என்னடா? இது சாயந்திரமா காலைலயா? மணி என்ன?"

"இது காலைல ஏழு மணி. முதல்ல கண்ணை திற. இந்த பேப்பரை பாரு"

"என்ன போட்டிருக்கு?"

"தினேஷ் ஒருத்தனை கொன்னுட்டாரு. அவரையும் யாரோ கொன்னுட்டாங்க. தினேஷை கொன்னவனை போலிஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான். உடனே அவுங்க ஃபோன் பண்ணி வெற்றியையும் அரெஸ்ட் பண்ணிட்டாங்க போல. பெரிய கவர் ஸ்டோரியா Times of Indiaல முதல் பக்கத்துல வந்திருக்கு?"

"எப்ப?"

"இரு நான் இன்னும் முழுசா படிக்கலை"

"சீக்கிரம் படி"

இதாங்க விஷயம் அதுல போட்டிருந்தாங்க. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த பெண்களை ஒரு கும்பல் பயமுறுத்தி காசு பறித்தது. மேலும் பல தவறான விஷயத்திற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் நடந்த பிரச்சனையில் இருவர் மரணமடைந்தனர். ஒருவரை அருகிலிருந்த மக்கள் பிடித்து கொடுத்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தமிழ்நாட்டிலிருந்த அவர்களுடைய கூட்டாளி வெற்றி என்பவர் கைது செய்யப்பட்டார். வெற்றியும், கொலை செய்யப்பட்ட தினேஷும் அந்த பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்டில் பணி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இன்ஸ்டிடியூட் மொத்தமும் சீல் வைக்கப்பட்டது. அங்கே படித்த மாணவர்களிடமும் போலிஸ் விசாரணை செய்தது.

அங்கே படித்து வேலைக்கு சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பற்றிய தகவலை போலிஸ் வெளியிட மறுத்து விட்டது. அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களிடமும் போலிஸ் அவர்களை விசாரிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளது.

அதே பக்கத்துல சாப்ட்வேர் கம்பனி HR நிறைய பேர் பேட்டி கொடுத்திருக்காங்க. இந்த Fake பிரச்சனையை எப்படி எதிர் கொள்றதுனு எல்லாரும் இன்னைக்கு பேச போறதா சொல்லியிருக்காங்க. இந்த விஷயம் இவ்வளவு சீரியஸாகும்னு யாரும் நினைச்சி பார்க்கலனு சொன்னாங்க.

"ரவி. இதெல்லாம் இருக்கட்டும், நேத்து சாயந்திரம் வரும் போது நீ தூங்கிட்டு இருந்த. ராத்திரி எழுப்பி பார்த்தோம், அப்பவும் அடிச்சி போட்ட மாதிரி தூங்கிட்டு இருந்த. என்ன ஆச்சு?"

"ஓ. எனக்கு இப்ப தான் ஞாபகமே வருது. நேத்து மதியமே நான் இன்ஸ்டிடியூட்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டேன். தினேஷ் என்கிட்ட CD கொடுக்காம ஏமாத்திட்டு போயிட்டான். எனக்கு என்ன பண்றதுனு தெரியல. மொதல்ல அவன் அந்த குமார்கிட்ட தான் போய் மீதி CD எல்லாம் வாங்குவானு யோசிச்சி வேகமா வீட்டுக்கு வந்து அந்த Caller ID spoofing சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண ஃபோன்ல இருந்து குமாருக்கு ஃபோன் பண்ணேன். அப்ப கரெக்டா தினேஷ் அங்க தான் இருந்தான். அவன்கிட்ட CD கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அவன் சரினு சொன்னான். எனக்கு அதுக்கு அப்பறம் என்ன பண்றதுனு தெரியாம யோசிச்சிட்டே இருந்தேன்"

"அப்படியே தூங்கிட்டியா?"

"இல்லை. திடீர்னு நித்யா ஃபோன் பண்ணி, அவளை யாரோ பொண்ணு பார்க்க வராங்க, உடனே கிளம்பி வானு வீட்ல சொன்னாங்கனு சொன்னா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அவளுக்கும் என்னனு புரியல. உடனே கிளம்பிட்டா. எனக்கு எதுவுமே யோசிக்க முடியல. ஏதோ யோசிச்சிட்டே இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன். பத்து பதினைஞ்சி நாளா சரியா தூக்கமில்லை. அதான் அப்படியே தூங்கிட்டேன்"

"ஹிம்ம்ம்... அப்ப நீ ஃபோன் பண்ணும் போது அந்த குமாரும், தினேஷும் உயிரோட இருந்துருக்காங்க."

"ஆமாம். ஒரு வேளை நான் ஃபோன் பண்ணதால தான் அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு செத்துட்டாங்களோ?"

"டேய், நீ ஏன் டென்ஷனாகற. வீ ஆர் ஜஸ்ட் ய டூல். அவனுங்க என்ன என்ன தப்பு பண்ணாங்களோ. அந்த CDக்காக ரெண்டு உயிர் போயிருக்குனா அதுல என்னவெல்லாம் இருக்குதோ. அவனுங்க இதுக்கு முன்னாடி யாரையாவது கொன்னு கூட இருக்கலாம். நீ டென்ஷனாகாத. நம்ம எதுவும் தப்பு பண்ணல"

"இருந்தாலும்.. இப்ப எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ஒரு வேளை நாம முன்னாடியே போலிஸ்ல போயிருந்தா, இப்படியெல்லாம் ஆகாம இருந்திருக்குமோ?"

"இங்க பாரு. எதுவும் நம்ம கைல இல்லை. அவன் பண்ண தப்புக்கு அவனுக்கு தண்டனை. அவ்வளவு தான். நீ முதல்ல எழுந்து குளிச்சிட்டு வா. நம்ம ஆபிஸ் போவோம். இன்னைல இருந்து ஒழுங்கா வேலை பார்க்கலாம். எந்த டென்ஷனும் வேண்டாம். முன்ன மாதிரியே சந்தோஷமா இருக்கலாம். சரியா?"

"ஹும்ம்ம்"

ஒரு வேளை நான் பண்ண தப்பால தான் நித்யா என் வாழ்க்கைல இருந்து இவ்வளவு சீக்கிரம் போறாளோ???

அடுத்த நாள் முழுக்க எல்லா பேப்பர்லையும் இதை பத்தி தான் பேசிக்கிட்டாங்க. இந்த பிரச்சனையை தீர்க்க சாப்ட்வேர் கம்பெனி எல்லாம் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாங்க. இனிமே எந்த இயர் பாஸ் அவுட்டா இருந்தாலும் ஃபிரெஷ்ஷரா எடுத்துக்குவோம். அதே மாதிரி ஜாவா, டாட் நெட், மெயின் ஃபிரேம்னு கோர்ஸ் போறவங்களை அந்த குறிப்பிட்ட ஃபீல்ட்ல இண்டர்வியூ பண்ணி எடுத்துக்குவோம். ஆனா அவுங்களை ஃபிரெஷ்ஷரா தான் சேர்த்துக்குவோம். அவுங்களை அந்த ட்ரெயினிங்கு ஏத்த மாதிரி ப்ராஜக்ட்ல போட்டுடுவோம்னு சொல்லி எல்லா கம்பெனிகளும் சொல்லிட்டாங்க.

அப்பறம் TCS, Infosys, Wipro, Satyam எல்லாம் சேர்ந்து ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணியிருக்காங்க. அதுல எல்லா சாப்ட்வேர் கம்பெனிங்களும் அவுங்க எம்ப்ளாயூ இன்ஃபர்மேஷனை ரெஜிஸ்டர் பண்ணனும். ஒவ்வொரு சாப்ட்வேர் இஞ்சினியருக்கும் ஒரு நம்பர் தரப்படும்னும் இனிமே இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணும் போது ரெஸ்யூமேல அந்த நம்பரும் கொடுக்கனும்னு சொல்லிட்டாங்க. அதனால இப்ப இருக்கற எல்லாருக்கும் ஒரு நம்பர் தருவாங்க. அது கடைசி வரைக்கும் மாறவே மாறாது. அமெரிக்கால சோஷுயல் செக்கியூரிட்டினு ஒரு நம்பர் இருக்குமாம். அதே மாதிரியே சாப்ட்வேர் இஞ்சினியர் நம்பர்னு ஒண்ணு கொடுத்துடுவாங்க.

அதனால எக்ஸ்பீரியன்ஸ் இல்லாத யாரும் அவ்வளவு சீக்கிரம் ஃபேக் போட்டு வர முடியாது. அதே சமயம், quantitative aptitude, Shakuntula Devi இதெல்லாம் படிக்க விருப்பமில்லாதவங்க ஏதாவது கோர்ஸ் போயிட்டு அது மட்டும் அட்டெண்ட் பண்ணி போகலாம்.

முடிஞ்ச வரைக்கும் கம்பெனி எல்லாம் இறங்கி வந்திருக்காங்க. பார்க்கலாம், இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு.

......

என்னடா காலங்காத்தால ஆபிஸ் போகாம வேற பக்கம் போயிட்டு இருக்கனு பாக்கறீங்களா? நித்யா ஊர்ல இருந்து வந்துட்டேனு ஃபோன் பண்ணா. நான் தான் உடனே கிளம்பி வரேனு சொல்லிட்டு கிளம்பிட்டேன். ரெண்டு நாளா சரியா வேலையே செய்ய முடியலைங்க. சும்மா அவளை பார்த்துட்டாக்கூட போதும். போய் நல்லா வேலை செய்யலாம்னு தோனுது. அதான் கிளம்பிட்டேன்.

வழியிலயே வினோதினி அக்காவும், வினிதாவும் போயிட்டு இருந்தாங்க. வினிதா ஏதோ இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண போறா போல. அனேகமா வினோதினி அக்கா யார் மூலமாவது ரெஃபரன்ஸ் பிடிச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.

நித்யா குளிச்சிட்டு ஃபிரெஷ்ஷா இருக்குறா. தூக்க கலக்கத்துல இருப்பானு நினைச்சேன்.

"என்னாச்சு?"

"எல்லாம் நல்ல படியா முடிஞ்சிது"

"ஏன் இவ்வளவு அவசரம்?"

"ஜெர்மனில இருக்காராம். விப்ரோல வேலை பார்க்கறாராம். ரெண்டு வாரம் வெக்கேஷன்ல வந்திருக்கார். அதான் உடனே கிளம்பி வர சொல்லிட்டாங்க"

"ஹிம்ம்ம்... எப்ப கல்யாணம்?"

"தெரியல"

"ஜெர்மனி போறயா?"

"அப்படி தான் நினைக்கிறேன். பார்க்கலாம். எல்லாம் நல்ல படியா முடியனுமில்லை"

"ஹிம்ம்ம்"

"அது சரி. நான் தான் ரோமிங்ல இருக்கனு தெரியுது இல்லை. அப்பறம் எதுக்கு நான் சாப்பிட்டுட்டேன், நீ ஒழுங்கா சாப்பிடுனு ரெண்டு நாளா மெசேஜ் பண்ணிட்டே இருந்த? உன்னால இருபது ரூபாய் தண்டம்"

"நீ தானே மெசேஜாவது அனுப்புனு கெஞ்சின"

"நான் கெஞ்சினனா? சும்மா சொன்னேன். நீ சீரியசா எடுத்துக்கிட்டா நான் என்ன பண்ண?"

"சரி. நான் கிளம்பறேன்"

என்னால இதுக்கு மேல இங்க இருக்க முடியாது.

"இரு. இப்ப போய் என்ன பண்ண போற? உனக்கு என்ன வேலையா இருக்கு? என் கூட கொஞ்ச நேரமிறேன்"

எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.

"உன் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா இப்ப என்னால இங்க ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. ப்ளீஸ் நான் கிளம்பறேன்"

"என்ன சொன்ன? திரும்ப சொல்லு"

"நான் எதுவும் சொல்லல. நான் கிளம்பனும்"

"ரவி. என்ன சொன்ன? என் முகத்தை பார்த்து சொல்லு"

"நான் எதுவும் சொல்லலைனு சொன்னேன் இல்லை"

"நிஜமா நீ எதுவும் சொல்லல. என் கூட வாழ்க்கை முழுசும் இருக்கனும்னு ஆசைப்பட்டேனு சொல்லல? பொய் சொல்லாத"

"ஆமாம் சொன்னேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இல்லாம இருக்க முடியுமானு தெரியலை. இந்த ரெண்டு நாள்ல மத்த எந்த விஷயத்தையும் யோசிக்க விடாம என் மனசு முழுக்க நீ தான் ஆக்ரமிச்சிட்டு இருந்த. இப்ப என்னனா என்னை விட்டுட்டு போறனு சொல்ற. நான் உன்னை நல்லா பார்த்துப்பேன் நித்யா. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை?"

நித்யா கண்ணும் கலங்கிருக்கு...

"எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையாங்கறது முக்கியமில்லை. உனக்கே எதுவும் வேலையில்லை. உன்னை எப்படி எங்க அப்பா, அம்மா நம்புவாங்க? அதை யோசிச்சியா ரவி?"

"எனக்கு வேலையில்லைங்கறது தான் பிரச்சனையா? அப்படினா நான் இப்ப உன்கிட்ட உண்மையை சொல்றேன். நான் கூகுள்ல வேலை செய்யறேன். மூணு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ். நான் இப்ப எந்த நாட்டு கம்பெனில இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணாலும் எடுத்துக்குவாங்க. உங்க வீட்ல பயப்பட வேண்டாம்னு சொல்லு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவனு சொல்லு"

"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"

"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"

"அப்ப என்கிட்ட இத்தனை நாள் பொய் சொல்லிருக்க? அப்படி தானே?"

"நீ என்கிட்ட நாலு வேலை கிடைச்சிதுனு ஏமாத்தின, நான் பதிலுக்கு பண்ணேன். உன்கிட்ட உண்மையை சொல்லனும்னு நிறைய தடவை முயற்சி பண்ணேன். ஆனா வாய்ப்பு கிடைக்கல. அந்த பிரச்சனைல நான் இதை மறந்திட்டேன். ஐ அம் ரியலி சாரி"

"சரி இப்ப நீ என்னை நிஜமா காதலிக்கறனு நான் நம்பனும்னா நான் என்ன பண்ண சொன்னாலும் பண்ணுவியா?"

"மாட்டேன். இது வரைக்கும் நான் உன்கிட்ட பழகின விதத்துல உனக்கு ஏன் மேல நம்பிக்கை வரலனா, இனிமேலும் வர வேண்டாம்"

"போடா" சொல்லிவிட்டு கன்னத்தில் அறைந்தாள்.

"இப்படி பேசி பேசியே என்னை மயக்கிட்டியேடா"

"என்ன? நான் உன்னை மயக்கினனா?"

"ஆமாம். உன் கூட ஒரு நாள் கூட பேசலைனா என்னால நார்மலா இருக்க முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நீ சாப்பிட்டயா சாப்பிடலயானு தெரியாம என்னால சாப்பிட கூட முடியாத அளவுக்கு மயக்கி வெச்சிருக்க? நான் அன்னைக்கு சொன்னப்ப அதை கூட புரிஞ்சிக்காம உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொல்ற. உனக்கு மனசாட்சியே இல்லைனு நினைச்சிக்கிட்டேன்"

"லூசு. நான் உன் புருஷன் கன்னத்துல ரெண்டு கொடுப்பானு சொன்னேன். என்ன கொடுப்பானு சொன்னனா? எப்படியும் நான் தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேங்கற தைரியத்துல சொன்னேன்"

"சரி அப்படி என்ன கொடுப்ப?"

"வேணும்னா இப்ப கொடுக்கவா"

"ஏய். பக்கத்துல வராத. யாரும் இல்லாத வீட்ல வந்து இப்படி ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பா பண்றியே. போ. தள்ளி போ"

"ஐய்யோ... அடிப்பாவி. நான் உன்னை தொட்டனா? பக்கத்துல வரதுக்கே இந்த மொத்து மொத்தற. கல்யாணத்துக்கு அப்பறம் உனக்கு இருக்கு. ஆ. இதை மறந்துட்டனே. என்னை பிடிச்சிருந்தும் எனக்கு வேலை இல்லைனு நீ வேற ஒருத்தனை பார்த்துட்டு ஓகே சொல்லிட்டு வந்திருக்க இல்ல"

"உனக்கு எல்லாம் எவன் வேலை கொடுத்தான்? நீ வினோதினி அக்காகிட்ட சொன்னா எனக்கு விஷயம் வராம போயிடுமா?"

"அடிப்பாவி. உனக்கு தெரியுமா? இதுக்கு தான் பொண்ணுங்ககிட்ட ரகசியம் சொல்ல கூடாதுனு சொல்லியிருக்காங்க போல"

"நீ சொன்ன அடுத்த நாளே அந்த அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க"

"அப்ப இப்ப பொண்ணு பாக்கறது எல்லாம் ட்ராமாவா?"

"இல்லை. அது உண்மை. ஆனா போய் எனக்கு விருப்பமில்லைனு சொல்லிட்டு வந்துட்டேன். நம்ம விஷயத்தை என் அண்ணிகிட்டயும் லைட்டா சொல்லிட்டு வந்திருக்கேன். ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க"

"எப்படி அவ்வளவு தைரியமா சொல்லிட்டு வந்த? நான் உன்னை ப்ரபோஸ் பண்ணலைனா?"

"நீ பண்ணுவனு எனக்கு தெரியும்"

"ஹிம்ம்ம்"

"அப்பறம் பிரச்சனையெல்லாம் முடிஞ்சிடுச்சினு வினோதினி அக்கா சொன்னாங்க"

"ஆமாம். ஆனா என்னால தான் ரெண்டு உயிர் போச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு"

"இல்லை ரவி. உன்னால நிறையா நல்லது நடந்திருக்கு. இந்த பூமிக்கு எந்த உயிர் வரணும், எந்த உயிர் போகனும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அது நம்ம கைல இல்லை"

"ஹிம்ம்ம்... இருந்தாலும் எனக்கு மனசுல ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கு"

"கவலைப்படாத. நான் உன் கூட இருக்கேன்"

"நித்யா, உன் கையை நான் கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறதா? எனக்கு ஏதோ ரொம்ப பாதுகாப்பா இருக்கற மாதிரி இருக்கும்"

என்னங்க இதுக்கு போய் முறைக்கிறா?

"சரி முறைக்காத. நான் கேக்கல"

"கொஞ்ச நேரம் பிடிச்சிக்கறனு சொல்ற? இந்த வாழ்க்கை முழுக்க பிடிச்சிக்கறனு சொல்லு" கையை நீட்டினாள்...

"வாழ்க்கை முழுக்க பிடிச்சிருந்தா வலிக்காது?"

""

"ஐய்யோ நான் விளையாட்டுக்கு சொன்னேன்... அடிக்காத அடிக்காத"

(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)

111 comments:

வெட்டிப்பயல் said...

வெற்றிகரமா கதை முடிச்சாச்சிங்க... இந்த ஒரு பகுதிக்கு மட்டுமில்லாம மொத்த கதைக்கும் உங்க கருத்தை சொன்னா நல்லா இருக்கும்...

தனியா விமர்சனம் போட்டாலும் ஓகே தான் :)

இந்த தொடர் எழுத ஊக்கப்படுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி...

பாபு said...

தொடர்ந்து படித்து வந்தேன்.நன்றாக கொண்டு சென்றீர்கள்.actual ஆ இந்த மாதிரி கதைகள் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன்.ஆனாலும் உங்கள் கதை பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்.மேலும் தொடருங்கள்

வெட்டிப்பயல் said...

//பாபு said...

தொடர்ந்து படித்து வந்தேன்.நன்றாக கொண்டு சென்றீர்கள்.actual ஆ இந்த மாதிரி கதைகள் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டேன்.ஆனாலும் உங்கள் கதை பிடித்திருந்தது.வாழ்த்துக்கள்.மேலும் தொடருங்கள்//

மிக்க நன்றி பாபு...

தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் :)

Ramya Ramani said...

அடடே ஒரு Fake Problemku Solution சொல்லி நச்சுன்னு முடிச்சு, ரவி நித்யாவையும் சேர்த்து அருமையா முடிஞ்சிருக்கு கதை.. சுப்பரு..

கதை Perfect-ஆ தொடங்கி , அருமையான டிராக்ல பயணிச்சு..சுபமா முடிஞ்சிருச்சு..

Congratulations :)

விஜய் ஆனந்த் said...

wow!!!

super!!!

nacchu climax!!!!

wonderful!!!

aahaaha!!! ohhohoo!!!!

வெட்டிப்பயல் said...

// Ramya Ramani said...

அடடே ஒரு Fake Problemku Solution சொல்லி நச்சுன்னு முடிச்சு, ரவி நித்யாவையும் சேர்த்து அருமையா முடிஞ்சிருக்கு கதை.. சுப்பரு..

கதை Perfect-ஆ தொடங்கி , அருமையான டிராக்ல பயணிச்சு..சுபமா முடிஞ்சிருச்சு..

Congratulations :)//

ஆஹா...

ரொம்ப நன்றிமா...

வெட்டிப்பயல் said...

//விஜய் ஆனந்த் said...

wow!!!

super!!!

nacchu climax!!!!

wonderful!!!

aahaaha!!! ohhohoo!!!!//

மிக்க நன்றி விஜய் ஆனந்த் :)

கதை பரபரப்பா போனதால க்ளைமாக்ஸ் ஜாலியா இருக்கனும்னு கொஞ்சம் பெருசாவே எழுதிட்டேன் :)

Manikandan Neelan said...

Wow... Nice Vetti... Keep it up...

வெட்டிப்பயல் said...

//Manikandan Neelan said...

Wow... Nice Vetti... Keep it up...//

மிக்க நன்றி மணிகண்டன் :)

Anonymous said...

vetti, you are great. its an excellent story. ending is lovely.
(just like starting of the story)

//எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.//
//"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"//

LOL

//"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"//

:))oh oh,poor ravi, how smart you were, but see what happened to you.
Girls are sweet. but they like to make you little stupid at times.

(honestly, so far i thought Ravi is way ahead in fibbing league, certainly he is, but nithya is the referee)

they'll make a cute couple though


Shrek

சரவணகுமரன் said...

பாலாஜி, கதை சூப்பரு... காதல், சமூகம், சஸ்பென்ஸ்'ன்னு பல விஷயங்களை கலந்து அருமையா கொண்டு போயி இருந்தே...

Anonymous said...

I have read all the parts very interesting story.

திவாண்ணா said...

சுபம் சுபம் சுபம்!
பரவாயில்லை. கொஞ்சம் இயல்பா கொண்டு போயிருக்கீங்க. ஒரு வீராப்புல பல விஷயங்கள் செய்யறதும் கடசில தானா சில விஷயங்கள் நடந்து முடியறதும்தான் பிடிச்சு இருக்கு.
கதை தலைப்புதான் பொருந்தலை. மூவ் கவுன்டர் மூவ் ன்னு இருந்தாதான் அது பொருந்தும்.
ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க. இதில எவ்வளவு தூரம் உண்மை? ;-)ஃபேக், ஃப்ரெஷர் பாலிஸி,....
எப்படியோ நான் இனிமே என் செல் போனை யாருக்கும் தர மாட்டேன்.
ரவிய மாட்டி விட்டுட்டீங்க, பாவம்! ஹும். எல்லாமே நல்லதா நடந்துடாதே! :-))

வாழ்த்துக்கள்!

வெங்கட்ராமன் said...

தினமும் முதல் வேலை, ஆடு புலி ஆட்டம் படிப்பது தான்.
சரித்திர நாவல்கள் அல்லாமல், நான் படித்த முதல் தொடர்கதை இது தான்.
சூப்பரா இருந்தது.
அடுத்தது எப்போ. . . ?

Unknown said...

I read the story from the first part. actually i thought it will be love story between ravi and nithya only.. but the story changed entirely once the other characters came and now the end is superb... please write some other stories same like this one... good writings... continue the good work...

Sridhar Narayanan said...

நல்ல எளிமையான நடை. பாத்திரங்கள் பார்வையிலிருந்து சம்பவங்களை சொல்ற உத்திகள். Fake போடறது எப்படின்னு பதிவு எழுதப் போறேன்னு இருந்த நீங்க அதற்கு ஒரு தீர்வு சொல்லி கதையை முடிச்சிருக்கீங்க. :-)

இந்த ஹிந்தி சினிமா மாதிரி ஒரு ஜாலியான துள்ளலோடு டெக்னிக்கல் த்ரில்லரா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

சிற்சில க்ளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். 2-3 கதையில கிருஷ்ணா கஃபே சாப்பாட்டை பாராட்டிப் பேசுறாங்க. அக்கம்பக்கம் வேற எந்த ஹோட்டலும் சிக்கலையா? :-)

கதைசொல்லி வேறு பாத்திரங்கள் மாறிப் பேசும்போது ஒரே மாதிரியே இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். :-)

PDF தொகுப்பா தரவிறக்கிக்க ஒரு லிங்க் போட்டு கொடுத்தீங்கன்னா மொத்தமா படிக்க வசதியாக இருக்கும். :-)

தொடர்ந்து கதை எழுதுங்க.

aparnaa said...

very nice ! Every episode maintained the same fire and suspense! very well written! Congrats!!

mgnithi said...

Vetti,

kathai romba nalla irunthuchu.. 21 episodes ithai peru vidama padichathe unga thiramikku proof..

kathaiye characters vachi solrathu nalla idea.. it gives a cinema feel to the story...

Story thrilla poitu irukkum pothum Romance part anga anga introduce panni iruntheengana nalla irunthirukkum.. so that startingla oru hero-heroin meeting endingla oru romancenu illama full storylayum oru backgroundla romance continue aana maathiri irukkum...

pona thadavai adicha comment enna aachune theriiyale. so repeatu..

Anonymous said...

//என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது.//

ரொம்ப இரசித்தேன்.:))

நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க..

Kathir

Anonymous said...

Dear Vetti,

Supera irundadu, ethirpartha climax but dialogues made it interesting.

Cheers
Christo

Anonymous said...

Wow! kathai romba superb!
Gautham menon movie patha feel irundhudu. Keep writing anna! :)

Anonymous said...

Good Story. I liked it

Anonymous said...

Thala oru attendance pottukkaren....irunga porumaya kathya padichittu varen

siva gnanamji(#18100882083107547329) said...

//பார்க்கலா. இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு..//

அது!

siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல வேளை!
அவர்கள் கணக்கை அவர்களே தீர்த்துக்கொண்ட மாதிரி கதையை முடித்துள்ளீர்கள்; அப்பாவிகளை போலீஸ் விசாரணை வளையத்திற்குள்
கொண்டுபோகாததிற்கு பாராட்டு!

Raghav said...

அட்டகாசமான கதை பாலாஜி.. ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமும் தொய்வில்லாம, சூப்பரா கொண்டு போயிருந்தீங்க.. மெயிலில் வந்த உங்களோட தூறல் கதை படிச்சப்பவே நீங்க யாருன்னு தெரியாம ரசிச்சேன்.. இப்போ வியக்கிறேன்..

வாழ்த்துக்கள்.

TBCD said...

வெட்டி,

அருமையான கதை..!!!

விடாமல் தொடர்ந்துப் படிக்க வைத்த விதம் அருமை...!!!

கிரிப்பிங்க் கதை கோடு..(Gripping Story line) :P !!!

Divyapriya said...

கதை டாப் க்ளாஸ்...சூப்பரா முடிஞ்சிடுச்சு...ரொம்ப நல்ல த்ரில்லிங்க் story...
கடைசியில ரவிக்கும், நித்யாவிற்க்கும் இடையே வரும் வசனங்கள எல்லாம் ஒரு புன்சிரிப்போடயே படிச்சு முடிச்சேன்…ரொம்ப அழகு + இயல்பு, இதெல்லாம் கதைல இவ்ளோ நாளா இல்லயேன்னு இப்ப தான் ஃபீலிங்ஸா இருக்கு :-) அதனால, சீக்கரமே இன்னொரு காதல் கதை எழுதிடுங்க அண்ணா…

Anonymous said...

VETRI STILL ALIVE AND UNDER POLICE CUSTODY. THE MOPHILE PHONE OF KUMAR WILL BE TRACEABLE. THEY CAN TAKE CALL RECORDS FROM SERVICE PROVIDER. DON'T YOU THINK THEY WILL ENQUIRE THE WHOLE CASE AND CATCH RAVI & ASHOK.
ANY WAY A LOT OF TECHNOLOGY INFORMATION ALONG INSIDE THE STORY, LIKE SUJATHA, WE CAN'T IDENTIFY WHETHER THIS IS POSSIBLE OR NOT. YOU CAN SERIOUSLY TRY TO WRITE FICTIONS.

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

VETRI STILL ALIVE AND UNDER POLICE CUSTODY. THE MOPHILE PHONE OF KUMAR WILL BE TRACEABLE. THEY CAN TAKE CALL RECORDS FROM SERVICE PROVIDER. DON'T YOU THINK THEY WILL ENQUIRE THE WHOLE CASE AND CATCH RAVI & ASHOK.
ANY WAY A LOT OF TECHNOLOGY INFORMATION ALONG INSIDE THE STORY, LIKE SUJATHA, WE CAN'T IDENTIFY WHETHER THIS IS POSSIBLE OR NOT. YOU CAN SERIOUSLY TRY TO WRITE FICTIONS.//

நண்பரே,
நல்லா யோசிச்சிருக்கீங்க. நிச்சயம் கண்டுபிடிக்கனும்னு முயற்சி செய்தா கண்டுபிடிக்கலாம். என்ன தான் சிம் கார்ட் வெச்சி கண்டுபிடிக்க முடியலைனாலும் செல் ஃபோன்ல ஹார்ட்வேர் நம்பர் ஒண்ணு இருக்கும். அதை வெச்சி கண்டுபிடிக்கலாம்.

என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருத்தர் போலிஸ்ல இருக்காரு. அவர் அப்படி தான் பல லட்ச ரூபாய் செல் ஃபோன் திருட்டை கண்டுபிடிச்சாரு. சர்வீஸ் ப்ரவைடர்ஸ் உதவி பண்ணா கண்டிப்பா கண்டுபிடிக்கலாம்.

ஆனா போலிஸ்க்கு கொலைக்கான காரணம் தினேஷுக்கு இவுங்க செஞ்ச துரோகம். அதுவும் தினேஷ் கொலை செய்யவும் முயற்சி செய்யல. அது எதிர்பாராத விபத்து அப்படினும் துரை வாக்குமூலம் கொடுத்துட்டான். அந்த கோபத்துல துரை அவனை தாக்க அவன் இறந்துட்டான்.

இப்ப அவுங்களுக்கு முன்னாடி இருக்குற பெரிய பிரச்சனை அந்த CD. அப்பறம் எத்தனை பொண்ணுங்க இந்த மாதிரி பிரச்சனைல மாட்டிருக்காங்கங்கறது தான்.

அப்பறம் இந்த மாதிரி எத்தனை ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ஸ் இருக்கு, அதனால என்ன என்ன பிரச்சனை வரும்னு திரும்பிட்டாங்க. இது அப்படியே வேற பக்கம் திரும்பிடுச்சி. இவுங்க தப்பிச்சிட்டாங்க :)

arul said...

very good story...i can't understand sime IT terms much...but it's a really good and interesting story!

லக்ஷ்மி said...

பாலாஜி, கதை நல்லா இண்ட்ரஸ்டிங்கா எடுத்துட்டு போயி அழகா முடிச்சுட்டீங்க. கலக்கல். நல்ல திரில்லர் கதையோடு கூட ரொமான்ஸும் தூவி அருமையா பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

vetti, you are great. its an excellent story. ending is lovely.
(just like starting of the story)

//எப்படி மனசாட்சி இல்லாம சொல்றா பாருங்க.//
//"என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது. அதிர்ச்சில ஏதாவது மூளை குழம்பிடுச்சா?"//

LOL

//"சத்தியமா நான் கூகுள்ல தான் வேலை செய்யறேன். இங்க பாரு என் ஐடி கார்ட்"//

:))oh oh,poor ravi, how smart you were, but see what happened to you.
Girls are sweet. but they like to make you little stupid at times.

(honestly, so far i thought Ravi is way ahead in fibbing league, certainly he is, but nithya is the referee)

they'll make a cute couple though


Shrek//

மிக்க நன்றி ஷ்ரெக் :)

ரவிக்கும் அடி மேல அடி. அதான் இப்படி ஆகிட்டான். என்ன தான் புத்திசாலினாலும் குற்றவுணர்வு வந்தா அவ்வளவு தான். பிரச்சனையும் ஓரளவுக்கு சால்வ் ஆகிடுச்சி.

மறுபடியும் சரி ஆகிடுவான். நித்யா கை பிடிச்சிட்டான் இல்லை :)

நித்யாக்கு அவனை ஒத்துக்க வெச்சிட்டோம்னு (வேலை + காதல்) சந்தோஷம். அதான் ஓவர் ஆட்டம் :)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...

பாலாஜி, கதை சூப்பரு... காதல், சமூகம், சஸ்பென்ஸ்'ன்னு பல விஷயங்களை கலந்து அருமையா கொண்டு போயி இருந்தே...//

மிக்க நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

I have read all the parts very interesting story.//

மிக்க நன்றி நண்பரே :)

வெட்டிப்பயல் said...

//திவா said...

சுபம் சுபம் சுபம்!

// பரவாயில்லை. கொஞ்சம் இயல்பா கொண்டு போயிருக்கீங்க. ஒரு வீராப்புல பல விஷயங்கள் செய்யறதும் கடசில தானா சில விஷயங்கள் நடந்து முடியறதும்தான் பிடிச்சு இருக்கு.//

ஓவர் ஹீரோயிசம் உடம்பு ஆகாதுனு தான் :)

// கதை தலைப்புதான் பொருந்தலை. மூவ் கவுன்டர் மூவ் ன்னு இருந்தாதான் அது பொருந்தும்.
//

தலைப்பு ஆடு புலி ஆட்டம் விளையாட்டை குறிக்கல.. ஆடு மாட்டினா புலி என்னவெல்லாம் ஆட்டம் போடும்னு நினைச்சி வெச்சது. அப்படியே ஹீரோவோட ஆட்டமும் :)

// ரகசியமா எனக்கு மட்டும் சொல்லுங்க. இதில எவ்வளவு தூரம் உண்மை? ;-)ஃபேக், ஃப்ரெஷர் பாலிஸி,....//
இதுக்கு அடுத்து ஒரு பதிவு போடறேன்... Making of ஆடு புலி ஆட்டம் :)

// எப்படியோ நான் இனிமே என் செல் போனை யாருக்கும் தர மாட்டேன்.//

ஏன் யாருக்கும் தெரியாம ஏதாவது பண்றீங்களா ;) (Just kidding)

//
ரவிய மாட்டி விட்டுட்டீங்க, பாவம்! ஹும். எல்லாமே நல்லதா நடந்துடாதே! :-))
//

விதி வலியது :)

// வாழ்த்துக்கள்!//

தொடர்ந்து உற்சாகப்படுத்தி வந்ததற்கு மிக்க நன்றி திவா :)

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...

தினமும் முதல் வேலை, ஆடு புலி ஆட்டம் படிப்பது தான்.
சரித்திர நாவல்கள் அல்லாமல், நான் படித்த முதல் தொடர்கதை இது தான்.
சூப்பரா இருந்தது.
அடுத்தது எப்போ. . . ?//

மிக்க நன்றி வெங்கட்ராமன்...

அடுத்து கொஞ்சம் வித்தியாசமான கதை... சீக்கிரமே.

அதுக்கு முன்னாடி ஒரு ஃபீல் குட் கதை எழுதலாம்னு ப்ளான்.. செம்ம ஜாலியா :)

இந்த வீக் எண்ட் நல்ல ரெஸ்ட் எடுத்துக்கறேன் :)

வெட்டிப்பயல் said...

// Sridhar Narayanan said...

நல்ல எளிமையான நடை. பாத்திரங்கள் பார்வையிலிருந்து சம்பவங்களை சொல்ற உத்திகள். Fake போடறது எப்படின்னு பதிவு எழுதப் போறேன்னு இருந்த நீங்க அதற்கு ஒரு தீர்வு சொல்லி கதையை முடிச்சிருக்கீங்க. :-)//

ஹி ஹி ஹி...

இந்த Fake பிரச்சனை இப்போதைக்கு தீராது. இந்த மாதிரி ஒரு முடிவு வந்தா எல்லாருக்கும் சந்தோஷம் தான். எல்லாரும் அதிக காசு கிடைக்கனும்னு Fake போடறதில்லை. ஒரு எண்ட்ரி வேணும். அவ்வளவு தான். அதுக்கு தான் இங்க பெரிய பிரச்சனை. ஏதோ ஒரு காரணத்துக்காக முதல் வருஷம் தவற விடறவங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கனும்.

Fake போட்டு வேலைக்கு சேர்ந்து இப்ப பட்டையை கிளப்பற நிறைய பேர் எனக்கு தெரியும். அவுங்களுக்கும் நல்ல வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னும் சந்தோஷமா இருந்திருப்பாங்க :) இன்னும் பேசுவோம் :)

// இந்த ஹிந்தி சினிமா மாதிரி ஒரு ஜாலியான துள்ளலோடு டெக்னிக்கல் த்ரில்லரா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.//

மிக்க நன்றி ஸ்ரீதர்.. (நான் இந்தி படமே பாக்க மாட்டேன்... ஒரு அஞ்சாறு ஷாருக்கான் படம் பாத்திருக்கேன். அவ்வளவு தான் :)

// சிற்சில க்ளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். 2-3 கதையில கிருஷ்ணா கஃபே சாப்பாட்டை பாராட்டிப் பேசுறாங்க. அக்கம்பக்கம் வேற எந்த ஹோட்டலும் சிக்கலையா? :-)
//

நான் இருந்த வரைக்கும் கிருஷ்ணா காபே தான்... ஃபோரம்ல சேலம் கிட்சன் வந்துச்சு. அது அநியாய விலை :(

அதுவும் வெல்லம் போட்ட சாம்பாரை சாப்பிட்டு வெறுத்து போனவங்களுக்கு அது ஒரு தேவாமிர்தம் மாதிரி :)

//
கதைசொல்லி வேறு பாத்திரங்கள் மாறிப் பேசும்போது ஒரே மாதிரியே இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங். :-)
//
ஓ... இதை நான் நோட் பண்ணிக்கறேன் :)


// PDF தொகுப்பா தரவிறக்கிக்க ஒரு லிங்க் போட்டு கொடுத்தீங்கன்னா மொத்தமா படிக்க வசதியாக இருக்கும். :-)
//
பண்ணிடுவோம் :)

// தொடர்ந்து கதை எழுதுங்க.//

இந்தியா போற வரைக்கும் எழுதுவேன்.. அதுக்கு அப்பறம் தெரியாது :)

வெட்டிப்பயல் said...

//aparnaa said...

very nice ! Every episode maintained the same fire and suspense! very well written! Congrats!!//

மிக்க நன்றி அபர்ணா... அந்த எதிர்பார்ப்பை ஈடுகட்ட முடியுமானு பயந்துட்டே எழுதினேன். நல்ல படியா முடிஞ்சிடுச்சி :)

வெட்டிப்பயல் said...

//mgnithi said...

Vetti,

kathai romba nalla irunthuchu.. 21 episodes ithai peru vidama padichathe unga thiramikku proof..//

மிக்க நன்றி mgnithi... இதை அடுத்த கதைலயும் காப்பாத்த முயற்சி செய்யறேன்.

// kathaiye characters vachi solrathu nalla idea.. it gives a cinema feel to the story...
//
இதுல நிறைய கஷ்டம் இருக்குங்க. பல இடங்கள்ல சொல்ல வேண்டிய விஷயங்களை சொல்ல முடியாம வாசகர்கள் யூகத்துக்கே விட வேண்டியதா போச்சு...

நல்ல வேளை, அதை யாராவது பின்னூட்டத்துல கேட்டுடறாங்க :)

// Story thrilla poitu irukkum pothum Romance part anga anga introduce panni iruntheengana nalla irunthirukkum.. so that startingla oru hero-heroin meeting endingla oru romancenu illama full storylayum oru backgroundla romance continue aana maathiri irukkum...
//
அது கதையோட டெம்போவை குறைச்சிடும்னு ஒரு பயம் தான்.. நிறைய காதல் கதை எழுதியாச்சு. இந்த கதைல காதல் ஒரு ஊறுகாய் தான். ஊறுகாய் அளவுக்கு இருந்தா போதும்னு விட்டுட்டேன் :)

// pona thadavai adicha comment enna aachune theriiyale. so repeatu..//

மறுபடியும் அடிச்சதுக்கு மிக்க நன்றி :)

உங்க பேரை கடைசி வரைக்கும் சொல்ல மாட்றீங்களே :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

//என்னது நீ கூகுள்ல வேலை செய்யறையா? உனக்கு கூகுல்ல சர்ச்சே ஒழுங்கா பண்ண தெரியாது.//

ரொம்ப இரசித்தேன்.:))

நல்லா எழுதறீங்க. தொடர்ந்து எழுதுங்க..

Kathir//

மிக்க நன்றி கதிர் :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Dear Vetti,

Supera irundadu, ethirpartha climax but dialogues made it interesting.

Cheers
Christo//

Thanks a lot Christo :)

வெட்டிப்பயல் said...

//Monicz said...

Wow! kathai romba superb!
Gautham menon movie patha feel irundhudu. Keep writing anna! :)//

மிக்க நன்றி மோனிகா... இங்கிலிஸ் படம் காப்பி மாதிரி தெரியுதா? :)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...

Good Story. I liked it//

மிக்க நன்றி நண்பரே :)

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Thala oru attendance pottukkaren....irunga porumaya kathya padichittu varen//

என்ன அன்பு,
இன்னும் படிச்சி முடிக்கலையா :))

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

//பார்க்கலா. இதுல எப்படி நம்ம ஆளுங்க ஏமாத்தறாங்கனு..//

அது!//

:))

வெட்டிப்பயல் said...

// siva gnanamji(#18100882083107547329) said...

நல்ல வேளை!
அவர்கள் கணக்கை அவர்களே தீர்த்துக்கொண்ட மாதிரி கதையை முடித்துள்ளீர்கள்; அப்பாவிகளை போலீஸ் விசாரணை வளையத்திற்குள்
கொண்டுபோகாததிற்கு பாராட்டு!//

மிக்க நன்றி சிவஞானம்ஜி :)

ஜியா said...

பனி விழும் மலர்வளம் ஆரம்பிச்ச புதுசுல வெட்டி ஸ்டைலுல ஒரு காதல் கதைனு மட்டும்தான் நெனச்சேன். அப்புறம் ஆடு புலி ஆட்டம்னு டைட்டில் சேஞ்ச் பண்ணி கதைக்கு ஒரு டிஸ்கிய போட்டு, களத்த மாத்தியமைச்சு, ஒவ்வொரு பகுதியையும் விறுவிறுப்பா கொண்டு போனீங்க... ஒரு திரைப்படத்துக்கு வேண்டிய அனைத்து அம்சங்களையும் கொண்டு, அதே மாதிரி ஃபார்முளால (காதல்ல ஆரம்பிச்சு, அப்புறம் துப்பறிவு, ஹீரோயிட்டிக் சீன்ஸ், வில்லன் சாவு, கடைசியா சேரும் காதல்) நல்லா கொண்டு போயிருந்தீங்க... படத்துல வர்ற மாதிரி ஹீரோக்கு மட்டுமே முழு பொறுப்பையும் கொடுக்காம, கதாநாயகனோட நண்பன், வில்லன்களுக்குள்ளேயே வில்லன்கள்னு நல்ல வித்தியாசமாவே இருந்தது... வெறும் பாட்டுக்கு மட்டும் வந்து ஆடிட்டு போற ஹீரோயின்ஸ் மாதிரி இல்லாம நித்யாவையும் கேங்க்ல சேத்துக்கிட்டு கதை முழுக்க கொண்டு வந்ததும் அருமை... அவரவர் கோணத்துல இருந்து கதை நகர்ந்ததும் சூப்பர்.. நல்ல வேளை மூனு பேரோட கோணத்துல மட்டும் நிறுத்திட்டீங்க.. இல்லனா டோட்டல் கன்ஃபியூஸ் ஆகிருக்கும்...

வாசகர்களை எதிர்பார்க்க வைக்கும் எழுத்து உங்களுக்கு எப்பவோ வந்திருச்சி... திரைக்கதை எழுதுவதப் பத்தி கொஞ்சம் ஆராஞ்சி, இன்னும் நெறைய நல்ல கதைகள திரைக்கதை வடிவுல எழுதி அடுத்த தளத்துக்குச் செல்ல வாழ்த்துக்கள் :))))

பை த வே.. அவ்வளவு பாகமா ஹீரோ அனாலிஸிஸ் எல்லாம் பண்ணதால, இறுதியும் இன்னும் சுவாரஷ்யமா இருக்கும்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. அதனால க்ளைமேக்ஸ் மட்டும் டக்குனு முடிஞ்ச மாதிரி படிக்கும்போது ஒரு ஃபீலிங்... ஆனா படிச்சு முடிக்கும்போது அந்த ஃபீல் இல்ல.. அருமையா முடிச்ச மாதிரிதான் இருக்குது..:))

வெட்டிப்பயல் said...

// Raghav said...

அட்டகாசமான கதை பாலாஜி.. ஆரம்பித்ததில் இருந்து கொஞ்சமும் தொய்வில்லாம, சூப்பரா கொண்டு போயிருந்தீங்க.. மெயிலில் வந்த உங்களோட தூறல் கதை படிச்சப்பவே நீங்க யாருன்னு தெரியாம ரசிச்சேன்.. இப்போ வியக்கிறேன்..

வாழ்த்துக்கள்.//

ஆஹா... பாராட்டிற்கு நன்றி ராகவ்.

வெட்டிப்பயல் said...

// TBCD said...

வெட்டி,

அருமையான கதை..!!!

விடாமல் தொடர்ந்துப் படிக்க வைத்த விதம் அருமை...!!!

கிரிப்பிங்க் கதை கோடு..(Gripping Story line) :P !!!//

மிக்க நன்றி TBCD...

நீங்க தொடர்ந்து படிக்கிறீங்கனு ஒரு வார்த்தை கூட சொல்லல :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...

கதை டாப் க்ளாஸ்...சூப்பரா முடிஞ்சிடுச்சு...ரொம்ப நல்ல த்ரில்லிங்க் story...
கடைசியில ரவிக்கும், நித்யாவிற்க்கும் இடையே வரும் வசனங்கள எல்லாம் ஒரு புன்சிரிப்போடயே படிச்சு முடிச்சேன்…ரொம்ப அழகு + இயல்பு, இதெல்லாம் கதைல இவ்ளோ நாளா இல்லயேன்னு இப்ப தான் ஃபீலிங்ஸா இருக்கு :-) அதனால, சீக்கரமே இன்னொரு காதல் கதை எழுதிடுங்க அண்ணா…//

எழுதனது எல்லாமே காதல் கதை தான்மா.. அதான் வித்தியாசமா இதை முயற்சி செஞ்சேன் :)

அடுத்து நிச்சயம் ஒரு ஃபீல் குட் கதை எழுதறேன் :)

வெட்டிப்பயல் said...

//ARUL said...

very good story...i can't understand sime IT terms much...but it's a really good and interesting story!//

மிக்க நன்றி அருள்...

ஒரு சில டெர்மினாலஜிஸ் புரியலைனாலும் கதையை ரசிக்க வைக்க முடியும்னு நம்ம தலைவர் ஒருத்தர் கதை எழுதின படம் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன் :)

(வேற யாருமில்ல... சுஜாதா தான் அது.. படம்: ரோஜா)

வெட்டிப்பயல் said...

//லக்ஷ்மி said...

பாலாஜி, கதை நல்லா இண்ட்ரஸ்டிங்கா எடுத்துட்டு போயி அழகா முடிச்சுட்டீங்க. கலக்கல். நல்ல திரில்லர் கதையோடு கூட ரொமான்ஸும் தூவி அருமையா பண்ணியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.//

கல்யாணமான கையோட நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்களே அக்கா...

திருமண வாழ்த்துகள்!!!

பாராட்டிற்கு நன்றி :)

வெட்டிப்பயல் said...

ஜி,
இவ்வளவு பெரிய விமர்சனமே எழுதிட்டயா? மிக்க நன்றி...

இந்த கதை எழுத முடிக்கற வரைக்கும் பயம் இருந்துட்டே தான் இருந்தது. எல்லாரும் முடிவுல வில்லன், ஹீரோக்கு நடுவுல ஒரு பெரிய ஆட்டம் எதிர்பார்ப்பாங்களே, நாம அதை கொடுக்க போறதில்லையேனு... ஆனா எல்லாரும் இந்த முடிவையும் ரசிச்சாங்க...

அதுவே பெரிய திருப்தி.. கடைசியா வந்த காதல் வசனங்கள் அதை எல்லாரையும் மறக்க வைச்சிடுச்சி :)

Syam said...

vetti, urgentaa 19,20,21 padichu mudichuten, super aah story mudichu irukeenga...will come with detailed comments later...

மங்களூர் சிவா said...

நித்யா சி யு இன் ஜெர்மனி இந்த ரவி பையனை எல்லாம் நம்பாத!!

:))))

நாடோடி said...

பாலாஜி, இந்தப் பகுதி ரொம்ப சூப்பர்.. 21'லையே முடிஞ்சிடும்னு எதிர்ப்பார்க்கலை, ஆனா நல்ல முடிவு..
இப்போ கதைய ஆறம்பத்துல இருந்து படிச்சா, லேசா 'டக்'குனு முடிஞ்ச மாதிரி தோனும்னு நினைக்கிறேன்..இன்னொரு நாள் முழுசாப் படிச்சிட்டு கமெண்ட் போடறேன்..

எப்படி இருந்தாலும், இந்த கதை+சொன்ன விதம் சான்ஸே இல்ல.. ரொம்ப நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

நிறைவான தொடர்!

வெட்டிப்பயல் said...

//Syam said...

vetti, urgentaa 19,20,21 padichu mudichuten, super aah story mudichu irukeenga...will come with detailed comments later...//

நாட்ஸ்,
மிக்க நன்றி.. பொறுமையா வாங்க :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

நித்யா சி யு இன் ஜெர்மனி இந்த ரவி பையனை எல்லாம் நம்பாத!!

:))))//

ஹா ஹா ஹா :)

வெட்டிப்பயல் said...

// நாடோடி said...

பாலாஜி, இந்தப் பகுதி ரொம்ப சூப்பர்.. 21'லையே முடிஞ்சிடும்னு எதிர்ப்பார்க்கலை, ஆனா நல்ல முடிவு..
இப்போ கதைய ஆறம்பத்துல இருந்து படிச்சா, லேசா 'டக்'குனு முடிஞ்ச மாதிரி தோனும்னு நினைக்கிறேன்..இன்னொரு நாள் முழுசாப் படிச்சிட்டு கமெண்ட் போடறேன்..

எப்படி இருந்தாலும், இந்த கதை+சொன்ன விதம் சான்ஸே இல்ல.. ரொம்ப நல்லாயிருந்தது.. வாழ்த்துக்கள்!//

கணேஷ்,
நிச்சயம் கதை டக்குனு முடிஞ்ச மாதிரி தான் இருக்கும். அது தான் டார்கெட்டும். கதை எப்ப முடியும்னு நினைக்கிற மாதிரி எழுதக்கூடாது :)

நான் முன்னாடி ஃபோன்ல சொன்ன மாதிரி த்ரில் இருந்ததா?

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

நிறைவான தொடர்!//

மிக்க நன்றி சிவா :)

கப்பி | Kappi said...

செம கலக்கல் தொடர்!
ஆரம்பத்துலருந்து கொஞ்சமும் தொய்வில்லாம விறுவிறுப்பா கொண்டு போனது சிறப்பு! ஏற்கனவே பலபேர் சொன்ன மாதிரி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஹிட் படத்துக்கு உண்டான அத்தனை அம்சமும் சரியான விகிதத்துல கலந்துருக்கு!! தொடர்ந்து கலக்குங்க! :)

Syam said...

//செம கலக்கல் தொடர்!
ஆரம்பத்துலருந்து கொஞ்சமும் தொய்வில்லாம விறுவிறுப்பா கொண்டு போனது சிறப்பு! ஏற்கனவே பலபேர் சொன்ன மாதிரி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஹிட் படத்துக்கு உண்டான அத்தனை அம்சமும் சரியான விகிதத்துல கலந்துருக்கு!! தொடர்ந்து கலக்குங்க! :)//

கப்பி இது நல்லா இல்ல...வாங்குன காசுக்கு மேல கூவுலனாலும் பரவாயில்ல...ஆனா இது பாதி காசுக்கு கூட இல்ல....இன்னும் கொஞ்சம் சத்தமா கூவுங்க.... :-)

வெட்டிப்பயல் said...

// கப்பி | Kappi said...

செம கலக்கல் தொடர்!
ஆரம்பத்துலருந்து கொஞ்சமும் தொய்வில்லாம விறுவிறுப்பா கொண்டு போனது சிறப்பு! ஏற்கனவே பலபேர் சொன்ன மாதிரி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஹிட் படத்துக்கு உண்டான அத்தனை அம்சமும் சரியான விகிதத்துல கலந்துருக்கு!! தொடர்ந்து கலக்குங்க! :)//

ரொம்ப நன்றிப்பா :)

வெட்டிப்பயல் said...

//Blogger Syam said...

//செம கலக்கல் தொடர்!
ஆரம்பத்துலருந்து கொஞ்சமும் தொய்வில்லாம விறுவிறுப்பா கொண்டு போனது சிறப்பு! ஏற்கனவே பலபேர் சொன்ன மாதிரி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஹிட் படத்துக்கு உண்டான அத்தனை அம்சமும் சரியான விகிதத்துல கலந்துருக்கு!! தொடர்ந்து கலக்குங்க! :)//

கப்பி இது நல்லா இல்ல...வாங்குன காசுக்கு மேல கூவுலனாலும் பரவாயில்ல...ஆனா இது பாதி காசுக்கு கூட இல்ல....இன்னும் கொஞ்சம் சத்தமா கூவுங்க.... :-)//

நாட்ஸ்,
ஏன் இந்த கொல வெறி?????

Unknown said...

வெட்டி, நிஜமாகவே அருமையான தொடர் கதை...
கிளைமாக்ஸ் ரொம்ப சூப்பர்...குறிப்பா ரவி நித்யா ஊடல்...ஷங்கர் படம் அளவுக்கு ஒரு மெசேஜ் வேற சொல்லி இருக்கீங்க...
இதுல முக்கிய அம்சம் என்னனு பாத்தா, Comedy, Romance n Thrill சரியான அளவுல பண்ணி mix இருந்திங்க...
நீங்க இன்னும் இந்த மாதிரி நிறைய தொடர் கதை எழுதுவதற்கு மனதார வாழ்த்துக்கள்...

Anonymous said...

super'a kondupoi arumaiya mudichu irukeenga vetti.. vaazhthukkal.. vaa vaa sangathula arambicha thodarkathaiyayum seekiram continue panna arambikkalamaey..

aana inikku semma dose from my thangamani bcoz of u..

vetti rasigar peravai
chicago

யாத்ரீகன் said...

aha.. yenoda comment kanoma pochey ..

Vetti.. story was a good entertainer.. but mudicha vidham thaan konjam yemaatram.. romba simple-ah mudinjirucho-nu thonudhu..

Aadu Puli aatam-nadhum.. sila parts of Mind game between hero & villain-nu nenachitu irunthaen.. moreover.. unga disclaimar warning vera... oru velai adhai vachi over expectation paniteyno ?! :-)

ultimately did enjoy it :-)

Prabu Raja said...

Happyss Endyinggss...

Katha nalla irunthuchi Mr. Balaji.

Anonymous said...

மிகவும் அருமையான தொடர்..... படித்த அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதிருக்கிங்க... மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்!!!

மலர்

தமிழினி..... said...

அப்படா...கதைய ஒரு வழியா சுபம் போட்டு முடிச்சிட்டிங்களா...?!
இனிமே நான் நிம்மதியா வேலை பார்ப்பேன்....

ஆடு புலி ஆட்டம்- பார்ட் 2 எப்ப ஆரம்பிக்க போறீங்க வெட்டி? :)))))

நாடோடி said...

//நான் முன்னாடி ஃபோன்ல சொன்ன மாதிரி த்ரில் இருந்ததா?//

ஆமாம் பாலாஜி... மெதுவா ஆறம்பிச்சு நல்ல த்ரிலிங்கா வேகமா கொண்டுப் போயி முடிச்சிட்ட.. த்ரில் மட்டும்னு இல்ல, எல்லாம் கலந்த நல்ல திரைக்கதை!

நாடோடி said...

//(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)//

இது என்ன ஆட்டம் பாலாஜி??

Divya said...

ஒரு தீரில்லர் நாவல் படிச்சு முடிச்ச திருப்தி , இத்தொடர் படிச்சதும் ஏற்படுது!

இப்பகுதியில் நித்யா-ரவி உரையாடல் சூப்பர்ப்!!!

தொடரின் முதல் பகுதியிலிருந்து கடைசி பகுதிவரைக்கும் விறுவிறுப்பு தொய்யவில்லை!!
திகிலுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை.......கலக்கல்ஸ் தொடர் அண்ணா:))

இந்த இறுதி பகுதி இன்னும் கூட சுவாரஸியமா உங்களால எழுதியிருக்க முடியும் அண்ணா:-)

சுபமா கதையை முடிச்சது......படிச்சு முடிக்க மனசுக்கு இதமா இருந்தது, வாழ்த்துக்கள்!!!

இவன் said...

ங்ண்ணா சூப்பருங்கண்ணா.. வெயிட் பண்ண வைச்சு வெயிட் பண்ண வைச்சு ஒருமாதிரி கதைய முடிச்சுட்டீங்க.... நல்ல வேகமான அதே நேரம் நல்லா இருந்தது கதை

Anonymous said...

Really nice and enjoyed as it entertained with all aspects of a good story. Good to shape for a movie story. Even try for a 40 to 45 scene screen play and give a final version, lots of cine industry dubakkoors will copy your story if not purchase from you.

Keep on writing and this will give you more ourage and strength.

Anonymous said...

மிக அருமையான நாவல். பாராட்டுக்கள்.

இன்னும் பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்...

எல்லா part-யும் மொத்தமா ஒரு webpage-ல் போட்டா படிக்க ஈஸியா இருக்கும்-னு நினைக்கிறேன்...

-விஜய் சின்னசாமி

வெட்டிப்பயல் said...

// LOLLU said...

super'a kondupoi arumaiya mudichu irukeenga vetti.. vaazhthukkal.. vaa vaa sangathula arambicha thodarkathaiyayum seekiram continue panna arambikkalamaey..

aana inikku semma dose from my thangamani bcoz of u..

vetti rasigar peravai
chicago//

ஆஹா...

அந்த தொடரை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கீங்களா??? ஒன்றரை வருஷமாச்சே... கதையே எனக்கு மறந்து போச்சு... தூசி தட்டி பார்க்கிறேன் :)

அடுத்து எழுத நிறைய இருக்கு...

வெட்டிப்பயல் said...

//யாத்ரீகன் said...

aha.. yenoda comment kanoma pochey ..

Vetti.. story was a good entertainer.. but mudicha vidham thaan konjam yemaatram.. romba simple-ah mudinjirucho-nu thonudhu..

Aadu Puli aatam-nadhum.. sila parts of Mind game between hero & villain-nu nenachitu irunthaen.. moreover.. unga disclaimar warning vera... oru velai adhai vachi over expectation paniteyno ?! :-)

ultimately did enjoy it :-)//

யாத்ரீகன்,
உங்க எதிர்பார்ப்பு எனக்கு தெரியும். ஆனா கதையை நான் முன்னாடியே யோசிச்சி வெச்சதால மாத்த வேண்டாம்னு விட்டுட்டேன்... இந்த கதையே அடுத்து எழுத போகும் ஒரு கதைக்கான பயிற்சி தான். விறுவிறுப்பா நமக்கு எழுத வருமானு ஒரு சுய பரிசோதனை தான் இது :)

வெட்டிப்பயல் said...

// Prabu Raja said...

Happyss Endyinggss...

Katha nalla irunthuchi Mr. Balaji.//

மிக்க நன்றி பிரபு ராஜா...

வெட்டிப்பயல் said...

//Malar said...

மிகவும் அருமையான தொடர்..... படித்த அனைவருக்கும் பிடிக்கும் விதத்தில் எழுதிருக்கிங்க... மேலும் பல கதைகள் படைக்க வாழ்த்துக்கள்!!!

மலர்//

மிக்க நன்றி மலர்...

கண்டிப்பா எழுத முயற்சி செய்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//நாடோடி said...

//நான் முன்னாடி ஃபோன்ல சொன்ன மாதிரி த்ரில் இருந்ததா?//

ஆமாம் பாலாஜி... மெதுவா ஆறம்பிச்சு நல்ல த்ரிலிங்கா வேகமா கொண்டுப் போயி முடிச்சிட்ட.. த்ரில் மட்டும்னு இல்ல, எல்லாம் கலந்த நல்ல திரைக்கதை!//

மிக்க நன்றி கணேஷ் :)

வெட்டிப்பயல் said...

//நாடோடி said...

//(ஆடு புலி ஆட்டம் முடிஞ்சிது... இங்க வேற ஆட்டம் ஆரம்பிச்சிடுச்சி. நாம நடையை கட்டுவோம்)//

இது என்ன ஆட்டம் பாலாஜி??//

இன்னும் கொழந்த புள்ளையாவே இருக்கீங்களே ;)

வெட்டிப்பயல் said...

//Divya said...

ஒரு தீரில்லர் நாவல் படிச்சு முடிச்ச திருப்தி , இத்தொடர் படிச்சதும் ஏற்படுது!

இப்பகுதியில் நித்யா-ரவி உரையாடல் சூப்பர்ப்!!!

தொடரின் முதல் பகுதியிலிருந்து கடைசி பகுதிவரைக்கும் விறுவிறுப்பு தொய்யவில்லை!!
திகிலுக்கும், திருப்பங்களுக்கும் பஞ்சமில்லை.......கலக்கல்ஸ் தொடர் அண்ணா:))
//
ரொம்ப நன்றிமா... முன்னாடியே உன் பின்னூட்டதை எதிர்பார்த்தேன் :)

//
இந்த இறுதி பகுதி இன்னும் கூட சுவாரஸியமா உங்களால எழுதியிருக்க முடியும் அண்ணா:-)
//
திருப்தியா இல்லைனு எவ்வளவு அழகா சொல்லியிருக்க :)

//
சுபமா கதையை முடிச்சது......படிச்சு முடிக்க மனசுக்கு இதமா இருந்தது, வாழ்த்துக்கள்!!!//

அது தான் எதிர்பார்த்தது. கடைசி வரைக்கும் விறுவிறுப்பாவே இருந்தா எப்படி... கொஞ்சம் நிதானமா சந்தோஷமா முடிச்சா தானே படிச்சவங்களுக்கு திருப்தி இருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//இவன் said...

ங்ண்ணா சூப்பருங்கண்ணா.. வெயிட் பண்ண வைச்சு வெயிட் பண்ண வைச்சு ஒருமாதிரி கதைய முடிச்சுட்டீங்க.... நல்ல வேகமான அதே நேரம் நல்லா இருந்தது கதை//

ஹா ஹா ஹா...

போன ஜனவரில ஆரம்பிச்ச கதை இல்லைங்களா??? என்ன பண்ண இப்ப தான் முடிக்கனும்னு இருந்திருக்கு :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Really nice and enjoyed as it entertained with all aspects of a good story. Good to shape for a movie story. Even try for a 40 to 45 scene screen play and give a final version, lots of cine industry dubakkoors will copy your story if not purchase from you.

Keep on writing and this will give you more ourage and strength.//

இதுல அப்படி பண்ண முடியாது. ஒரு ரிஸ்க் இருக்கு... நிறைய பேருக்கு இது புரியாது. அதனால காப்பியும் அடிக்க முடியாது :))

அந்த அளவுக்கு திறமையிருந்தா அவருக்கு என் பாராட்டுகள் :)

சொல்ல மறந்துட்டேன், உங்க மனம் திறந்த பாராட்டிற்கு என் நன்றிகள் :)

வெட்டிப்பயல் said...

// விஜய் சின்னசாமி said...

மிக அருமையான நாவல். பாராட்டுக்கள்.

இன்னும் பல படைப்புகளை உருவாக்க வாழ்த்துக்கள்...

எல்லா part-யும் மொத்தமா ஒரு webpage-ல் போட்டா படிக்க ஈஸியா இருக்கும்-னு நினைக்கிறேன்...

-விஜய் சின்னசாமி//

மிக்க நன்றி விஜய் சின்னசாமி...

ஒரு PDFல போடற மாதிரி ப்ளான் பண்ணிட்டு இருக்கேன்.. பார்க்கலாம் :)

ambi said...

புக் மார்க் பண்ணி தொடர்ந்து படிச்சுகிட்டு தான் இருந்தேன். கை நனைக்க தான் நேரமில்ல. :)

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, மொத்த கதையை பத்தி கருத்து சொல்லவும்னு:

இதோ ஒரு நிமிஷம் இருங்க, கோட் சூட் மாட்டிகிட்டு சலூன் சேர்ல ஏறி உக்காந்து விமர்சனம் பண்றேன்: :))

1) கதையின் ஓட்டம் செம விருவிருப்பு.

2) கதாபாத்ரங்களை அறிமுகபடுத்தின விதம் ரொம்ப அருமை.

வாசகர்களுக்கு கொழப்பம் வந்துட கூடாது! என்பதில் எடுத்துகிட்ட கவனம் குறிப்பிட தகுந்தது.

3) திரைகதை - அதாவது கதை ஓட்டத்தை ஒரு குறிப்பிட்ட கதாபாத்ரம் வழியா சொன்ன டெக்னிக் சூப்பர். கடைசி நாலு எபிசோட்ல வில்லன்ஸ் வழியா கதையை கொண்டு போனது புத்திசாலிதனம். ஏன்னா நம்ம கதையின் நாயகனுக்கு இதேல்லாம் தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லையே!

4) கடைசி 3 எபிசோடில் கொஞ்சம் தடுமாறினது தெரிஞ்சது. குறிப்பா பாகம் #20. (இல்ல என் புரிதல் தான் தவறா?) 20வது எபிசோட் ரொம்ப அவசர அவசரமா காட்சிகளை நகர்த்தி இருக்கற மாதிரி இருக்கு.

5) முடிவு நல்லா இருக்கு. ஆனா இப்படி இராம நாராயணன், எஸ்.வி சேகர் டிராமா மாதிரி கருத்து எல்லாம் வெச்சு இருக்க வேணாமோ?

சில விஷயங்களை வாசகர் பார்வைக்கு விட்டு விடனும்.

"ஏ பிலிம் பை பாரதி ராஜா"னு சொல்லிட்டு கையை கூப்பிடனும்.

கைய பிடிச்சுகிட்டு கடற்கரையில் ஓடி போன 'அலைகள் ஓய்வதில்லை' ராதாவும் கார்த்திக்கும் எப்படி பலசரக்கு வாங்கி, வாடகை வீட்டுல குடும்பம் நடத்தினாங்க?னு எல்லாம் காட்டிட்டு இருக்கக் கூடாது. :))

மொத்தத்தில் ஆடு புலி ஆட்டம் எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. :))

A Simple Man said...

பாலாஜி,
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா 'அசத்தல்'.

ஆனா ந‌ம்ம‌ கேப்ட‌ன் ப‌ட‌ம் மாதிரி பிர‌ச்ச‌னைக்கு Fake பிரச்சனைக்கு தீர்வு சொன்ன‌து ம‌ட்டும் கொஞ்ச‌ம் ஓவ‌ரோன்னு ப‌டுது... ம‌த்த‌ப்ப‌டி ஆர‌ம்ப‌ம் முத‌ல் முடிவு வ‌ரை அம‌ர்க்க‌ள‌மான‌ ஆட்ட‌ம்..

ப்ரசன்னா said...

Vetti,

Nice story, more than that wonderful narration which made the story much more interesting. And a happy ending makes it sweet.

You are rocking as usual

Anonymous said...

intha kathaiku ellam vimarsanam pannura alavuku ennaku arivu illai :D
irunthalum solluren...

what a story!
(in a good way anna)

Anonymous said...

Hi,

Ennanga andha CDyil irukiravanga ellam thappichutaangala? adhu pathi neenga mention pannavae ilayae...

Regards,
Nandakumar G.

வெட்டிப்பயல் said...

// ambi said...

புக் மார்க் பண்ணி தொடர்ந்து படிச்சுகிட்டு தான் இருந்தேன். கை நனைக்க தான் நேரமில்ல. :)

அதான் நீங்களே சொல்லிட்டீங்களே, மொத்த கதையை பத்தி கருத்து சொல்லவும்னு:
//

நான் சொல்லி தான் நீங்க சொல்லனுமா? உங்களுக்கு இல்லாத உரிமையா :)

//
இதோ ஒரு நிமிஷம் இருங்க, கோட் சூட் மாட்டிகிட்டு சலூன் சேர்ல ஏறி உக்காந்து விமர்சனம் பண்றேன்: :))
//

ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கயா.. ஆரம்பிச்சிட்டாங்க :)

// 1) கதையின் ஓட்டம் செம விருவிருப்பு.

2) கதாபாத்ரங்களை அறிமுகபடுத்தின விதம் ரொம்ப அருமை.

வாசகர்களுக்கு கொழப்பம் வந்துட கூடாது! என்பதில் எடுத்துகிட்ட கவனம் குறிப்பிட தகுந்தது.

3) திரைகதை - அதாவது கதை ஓட்டத்தை ஒரு குறிப்பிட்ட கதாபாத்ரம் வழியா சொன்ன டெக்னிக் சூப்பர். கடைசி நாலு எபிசோட்ல வில்லன்ஸ் வழியா கதையை கொண்டு போனது புத்திசாலிதனம். ஏன்னா நம்ம கதையின் நாயகனுக்கு இதேல்லாம் தெரிஞ்சு இருக்க வாய்ப்பில்லையே!
//

மிக்க நன்றி :)

// 4) கடைசி 3 எபிசோடில் கொஞ்சம் தடுமாறினது தெரிஞ்சது. குறிப்பா பாகம் #20. (இல்ல என் புரிதல் தான் தவறா?) 20வது எபிசோட் ரொம்ப அவசர அவசரமா காட்சிகளை நகர்த்தி இருக்கற மாதிரி இருக்கு.
//
அப்படியா தெரிஞ்சிது??? நான் ஆறாம் பாகத்துக்கு அப்பறம் ஒரே Phaseல எழுதின மாதிரி தான் நினைச்சேன்.. ஆனா எழுதிய விதத்தில் எந்த பதட்டமும் இல்லை. ரசிச்சி தான் எழுதினேன் :)


// 5) முடிவு நல்லா இருக்கு. ஆனா இப்படி இராம நாராயணன், எஸ்.வி சேகர் டிராமா மாதிரி கருத்து எல்லாம் வெச்சு இருக்க வேணாமோ?
//
இல்லை அம்பி. ஒரு சில விஷயங்களை கதைகள்ல தான் சுலபமா சொல்ல முடியும். இதை வெறும் கருத்து பதிவா போட்டா நிறைய விவாதங்கள் வரும். அதை செய்ய விருப்பமில்லை. அதனால கதைல நடக்கற மாதிரி காண்பிச்சிட்டா யாரும் அதை பத்தி விவாதிக்க முடியாது :)

அதே மாதிரி இதுல யாருக்கு இப்படி செய்யாதீங்கனு போலிஸ் சொல்ற மாதிரி இருந்தா தான் அது அறிவுரை சொல்ற மாதிரி. இது ஒரு கனவு மாதிரி மாற்றத்தை எதிர்பார்க்கறது தான். ஷங்கர் படம் மாதிரினு வைங்களேன் :)

// சில விஷயங்களை வாசகர் பார்வைக்கு விட்டு விடனும்.
//
நிறைய விஷயங்களை விட்டு வெச்சிருக்கேன். முக்கியமா அந்த பொண்ணுங்களோட நிலைமை. விசாரனைல அவுங்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும். வெற்றியோட சிந்தனை எப்படியெல்லாம் இருக்கும்னு நிறைய விஷயங்களை விட்டு வெச்சிருக்கேன் :)

// "ஏ பிலிம் பை பாரதி ராஜா"னு சொல்லிட்டு கையை கூப்பிடனும்.
//
ஆஹா...

// கைய பிடிச்சுகிட்டு கடற்கரையில் ஓடி போன 'அலைகள் ஓய்வதில்லை' ராதாவும் கார்த்திக்கும் எப்படி பலசரக்கு வாங்கி, வாடகை வீட்டுல குடும்பம் நடத்தினாங்க?னு எல்லாம் காட்டிட்டு இருக்கக் கூடாது. :))//

மக்களுக்கு இவ்வளவு விறுவிறுப்புக்கு அப்பறம் ஒரு சந்தோஷமான முடிவு வேண்டும். அதான் ரொமான்ஸ் எல்லாம்.. உங்களை மாதிரி டயப்பர் மாத்திட்டு இருக்கவங்களுக்கு எல்லாம் அது புரியாது.. வயசாகிடுச்சில்ல ;)

// மொத்தத்தில் ஆடு புலி ஆட்டம் எல்லோரையும் ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. :))//

அழகான விமர்சனத்திற்கு நன்றி :)

வெட்டிப்பயல் said...

// அபுல் said...

பாலாஜி,
ஒரே வார்த்தையில் சொல்லனும்னா 'அசத்தல்'.
//
மிக்க நன்றி :)

//
ஆனா ந‌ம்ம‌ கேப்ட‌ன் ப‌ட‌ம் மாதிரி பிர‌ச்ச‌னைக்கு Fake பிரச்சனைக்கு தீர்வு சொன்ன‌து ம‌ட்டும் கொஞ்ச‌ம் ஓவ‌ரோன்னு ப‌டுது... ம‌த்த‌ப்ப‌டி ஆர‌ம்ப‌ம் முத‌ல் முடிவு வ‌ரை அம‌ர்க்க‌ள‌மான‌ ஆட்ட‌ம்..//

ரமணா எனக்கு பிடிச்ச படம்.. எங்க ஊர்க்காரர் (முருகதாஸ் கள்ளக்குறிச்சி தான்) டைரக்ட் பண்ண படம் :)

வெட்டிப்பயல் said...

//ப்ரசன்னா said...

Vetti,

Nice story, more than that wonderful narration which made the story much more interesting. And a happy ending makes it sweet.

You are rocking as usual//

மிக்க நன்றி ப்ரசன்னா :)

வெட்டிப்பயல் said...

// துர்கா said...

intha kathaiku ellam vimarsanam pannura alavuku ennaku arivu illai :D
irunthalum solluren...

what a story!
(in a good way anna)//

துர்காவா இப்படி சொல்றது??? ஓ நோ :)

வெட்டிப்பயல் said...

// Anonymous said...

Hi,

Ennanga andha CDyil irukiravanga ellam thappichutaangala? adhu pathi neenga mention pannavae ilayae...

Regards,
Nandakumar G.//

போலிஸ் கம்பனிகளை எல்லாம் விசாரிக்க வேண்டாம், அந்த பெண்களுடைய வாழ்க்கை பாதிக்கப்படும்னு சொல்றதை வெச்சே அவுங்க அந்த CDக்களை எல்லாம் அழிச்சிருப்பாங்கனு நாம புரிஞ்சிக்கலாம். They do care for the people :)

ambi said...

//நான் சொல்லி தான் நீங்க சொல்லனுமா? உங்களுக்கு இல்லாத உரிமையா //

ROTFL :)


//இதை வெறும் கருத்து பதிவா போட்டா நிறைய விவாதங்கள் வரும்.//

உண்மை தான்! தெளிவா தான் இருக்காங்க பா! :))

//உங்களை மாதிரி டயப்பர் மாத்திட்டு இருக்கவங்களுக்கு எல்லாம் அது புரியாது.. வயசாகிடுச்சில்ல //

அவ்வ்வ்வ்வ், வேணாம் வலிக்குது, இருங்க எங்க தல கைப்பு கிட்ட சொல்லி தரேன். :p

உங்க வீட்ல கூட வளைகாப்பு முடிஞ்சு இருக்கு இல்ல, சும்மா நியாபகபடுத்தினேன், அவ்ளோ தான்! :))

வெட்டிப்பயல் said...

//ambi said...

//நான் சொல்லி தான் நீங்க சொல்லனுமா? உங்களுக்கு இல்லாத உரிமையா //

ROTFL :)


//இதை வெறும் கருத்து பதிவா போட்டா நிறைய விவாதங்கள் வரும்.//

உண்மை தான்! தெளிவா தான் இருக்காங்க பா! :))
//

எத்தனை முறை அடி வாங்கியிருப்போம் ;)

// //உங்களை மாதிரி டயப்பர் மாத்திட்டு இருக்கவங்களுக்கு எல்லாம் அது புரியாது.. வயசாகிடுச்சில்ல //

அவ்வ்வ்வ்வ், வேணாம் வலிக்குது, இருங்க எங்க தல கைப்பு கிட்ட சொல்லி தரேன். :p

உங்க வீட்ல கூட வளைகாப்பு முடிஞ்சு இருக்கு இல்ல, சும்மா நியாபகபடுத்தினேன், அவ்ளோ தான்! :))//

நாங்க எல்லாம் இன்னும் மனசளவுல யூத்தா தான் இருக்கோம். என்ன தல. சரிதானே ;)

Anonymous said...

101 மொய் வைக்கலாம்னு வந்தேன் அண்ணா:))

rahini said...

nalla kathai peyarthaan wedippayal
paarthaa apadi illa

rahini

வெட்டிப்பயல் said...

//திவ்யா said...

101 மொய் வைக்கலாம்னு வந்தேன் அண்ணா:))//

மொய் வெச்சதுக்கு ரொம்ப டாங்க்ஸ் தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

// rahini said...

nalla kathai peyarthaan wedippayal
paarthaa apadi illa

rahini//

நீங்க என்ன சொல்றீங்கனே பிரியலயே :(

கதை பேர் நல்லா இருக்கு. ஆனா இந்த கதைக்கு பொருத்தமா இல்லைனு சொல்றீங்களா? :)

Prabakar said...

அருமையான கதைங்க .. என்ன ஒரு விறுவிறுப்பு ..என்ன ஒரு டெக்னாலஜி .. அருமையான dialogs .. அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சாக படித்தேன்

மேலும் மேலும் நல்ல பல தொடர்களை எழுத என் மணமார்ந்த வாழ்த்துக்கள்

gayathri said...

ஆடு புலி ஆட்டம் -1 part ennga pa

naan padikanum 1 part konjam post panuga pa plese

வெட்டிப்பயல் said...

//Prabakar Samiyappan said...
அருமையான கதைங்க .. என்ன ஒரு விறுவிறுப்பு ..என்ன ஒரு டெக்னாலஜி .. அருமையான dialogs .. அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சாக படித்தேன்

மேலும் மேலும் நல்ல பல தொடர்களை எழுத என் மணமார்ந்த வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி பிரபாகர்...

உங்களை மாதிரி எல்லாரும் கொடுக்கற உற்சாகம் தான் தொடர்ந்து எழுத வைக்குது. செவ்வாய் கிழமை வரைக்கும் வேலை ரொம்ப அதிகம். அதை முடிச்சிட்டு அப்பறம் வேகமா எழுத ஆரம்பிக்கிறேன் :)

வெட்டிப்பயல் said...

//gayathri said...
ஆடு புலி ஆட்டம் -1 part ennga pa

naan padikanum 1 part konjam post panuga pa plese
//

பார்ட் 1 இதோ

http://vettipaiyal.blogspot.com/2008/07/blog-post_29.html

You can also click here

gayathri said...

ஆடு புலி ஆட்டம-1 part naan sonnathukaka pothathuku first thanks.1-21 part mothama padichen.
katha rompa nalla ethuthi irukenga.
Neegal inum pala kathaikal elutha en vazthukkal.

gayathri said...

ஆடு புலி ஆட்டம் -1to21 parts onna padichen
katha rompa nalla irunthuthu

inum pala kathaikal elutha en valthukkal

Anonymous said...

it was a wonderful story.the way u have taken is intresting.i desperately used to wait for the last two episodes,i used to check frequently.keep up the good work.the was a mixture of all.good.pathu yaravuthu ethaum suttu padam eduthura poranga................