தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Friday, January 02, 2015

UPSC தேர்வுகள்- மொழி சிக்கல்

என்னடா இவன் வெறும் தகவல்கள் மட்டுமே கொட்டறான். சுவாரசியமா எதுவுமே இல்லையேனு நினைப்பவர்களுக்காக இந்த பதிவு. (யாராவது படிச்சா தானே அப்படி நினைக்கறதுக்குனு உண்மை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்).

Prelims பற்றி சொன்ன பொழுது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் கேள்வித் தாள்கள் இருக்கும், தமிழில் வர வேண்டும் என்று சொன்னேன். அதைப் பற்றி என்னுடைய மற்றும் நம் தமிழ் நாட்டில் இருந்து Mains எழுதிய சில நண்பர்களின் அனுபவங்களையும் பார்க்கலாம்.

Mains தேர்வில் Essay என்பது மிக முக்கியமானது. Essay and options were the deciding factor last year. Options பற்றி பின்னால் Mains தேர்வு பற்றி எழுதும் பொழுது பார்க்கலாம். சென்ற வருடம் ஒரு கட்டுரை (Essay)க்கு 250 மதிப்பெண்கள். மெயின்ஸ் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியம்.

ஒரு மதிப்பெண் 10 ரேங் வரை உங்களை முன்னாலோ பின்னாலோ இழுத்துச் செல்லும். அப்படிப் பார்க்கையில் ஒரே ஒரு கட்டுரைக்கு 250 மதிப்பெண் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. இந்தக் கட்டுரை பொதுவாக 15 பக்கம் முதல் 20 பக்கம் வரை எழுதுவார்கள். விதிவிலக்குகள் உண்டு.

சென்ற வருடம் வந்த கட்டுரையில் ஒன்று,

Science and Technology is the panacea for the growth and security of the nation.

இந்த கட்டுரையின் உயிர் நாடி Panacea என்ற அந்த ஒரு வார்த்தையில் அடங்கியுள்ளது. அதற்கு பொருள் தெரியவில்லை என்றால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு சாதகமா அல்லது பாதகமா என்று கேள்வியில் குழப்பம் வந்துவிடும். Panacea என்பது பத்திரிக்கைகளில் வரும் வார்த்தைதான் என்றாலும், அது பொதுவான பழக்கத்தில் இருக்கும் (Commonly used term) சொல் கிடையாது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சிலர் நினைக்கலாம். கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் புரியும்.

இப்பொழுது Panacea என்பது பாதகம் (Negative term) என்று நாம் தவறாகப் புரிந்து கொண்டால், நமது கட்டுரையின் பேசு பொருள் அரபு புரட்சி (Arab Spring), தீவிரவாத இயக்கங்கள், Non-State actors, Cyber Attack, Cyber Terrorism, நக்சலிசம், முதலாளித்துவம், More Automation -> Loss of Job -> Non-Inclusive Growth ->
Security Issues, Nuclear Proliferation, Arms trade, Money Laundering (Wire transfers), Financial terrorism என்று பல தளங்களில் விரியும்.

மொத்த கட்டுரையும் தவறாக போய்விடும். நீங்கள் இனி ஆட்டத்தில் இல்லை. உயிரைக் கொடுத்து நீங்கள் பல விஷயங்களைப் படித்திருந்தாலும், ஒரு வார்த்தைக்குத் தவறான பொருள் புரிந்து கொள்வதால் இந்த பிரச்சனை. இது ஆங்கிலம் தெரியாத எல்லாருக்குமா என்றால் இல்லை. இந்தியில் இதே கேள்வி கொடுக்கப்பட்டிருக்கும்.

இதே கேள்வி தமிழில், ”அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு அருமருந்து” என்று கொடுக்கப்பட்டிருந்தால் நாம் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. அட்டகாசமாக எழுத முடியும்.

இதே போன்ற பிரச்சனை, சென்ற வருடத்தில் பல இடங்களில் காண முடிந்தது, English Language Paper,

1) We Indians are hypocrites.
2) Fitness and healthcare - latest fad in urban India.

Sociology ஆப்ஷன்ஸ் எடுத்த சிலருக்குக் கூட இதில் Hypocrites என்றால் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை. நல்ல வேளை வலையுலகில் இருப்பதால் எனக்கு அதில் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. ஆனால் Panacea என்னை பலி வாங்கிவிட்டதென்றே நினைக்கிறேன்.

முதலில் படித்தவுடன் அதன் அர்த்தம் புரிந்து கருத்துகளைச் சேர்க்க ஆரம்பித்துவிட்டேன். முழுதும் தயார் ஆனவுடன், Panacea என்பதான் சரியான அர்த்தம் என்ன என்று யோசிக்கத் துவங்கியதில் பிரச்சனைத் துவங்கியது. Growth என்ற வார்த்தை இருப்பதால் Positive tone என்று நம்பினாலும், பயம் தொற்றிக் கொண்டது.

ஜெராட் டைமண்டின் Guns, Germs and Steel புத்தகத்தில் இருந்து துவங்கி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் எவ்வாறு நாடுகளின் எல்லைக் கோடுகளும், வரலாறும் அமையக் காரணமாக அமைந்தன என்று தொடர்ந்து, India After Gandhiல் இருந்து பக்ரா நங்கள் அணையைத் திறக்கும் பொழுது நேரு ஆற்றிய உரை மற்றும் பல்வேறு அணைகளினால் கர்நாடகா மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் பல்வேறு துறைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட பலன் எவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணை செய்தன என்று எழுதியிருந்தேன்.

ஆனால் அந்த Panacea என்ற ஒரு வார்த்தையினால் ஏற்பட்ட தயக்கத்தால் பல இடங்களிலும் அறிவியல் தொழில்நுட்பம் தவறான கைகளில் இருக்கும் பட்சத்திலும் சரியாக பயன்படுத்தாதனாலும் ஏற்படக்கூடிய தீமைகளையும் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தேன்.

இதன் காரணமாக நிச்சயம் சில மதிப்பெண்களை இழந்திருக்கிறேன் என நம்புகிறேன். இன்னும் ஆறு மதிப்பெண் பெற்றிருந்தால் Service Listல் பெயர் வந்திருக்கும். என்னைப் போலவே நிச்சயம் தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா என இந்தி தெரியாத போட்டியாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இண்டர்வியூ சென்ற பொழுது அவர்களுடன் பேசியதில் உறுதி செய்து கொள்ள முடிந்தது.

சென்ற ஆகஸ்ட் மாதம் அனைத்து மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அவை பரிட்சை முடிந்தவுடன் அப்படியே அமுங்கி விட்டன. மீண்டும் அடுத்த ஆண்டு பரிட்சை நெருங்கும் நேரத்தில் வரும். படிக்க வேண்டிய நேரத்தில் போராட்டம் என்று இறங்கும் மாணவர்கள் Prelimsல் தோற்று வெளியேற்றப்படுவர் என்பது தான் கசப்பான உண்மை.

(தொடரும்...)