தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, December 30, 2014

UPSC தேர்வுகள் அறிமுகம் - 1

இந்தத் தொடரை நிச்சயம் தன்னம்பிக்கைத் தொடராக எழுத எண்ணம் இல்லை. அது போலவே இத்தேர்வில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பொறுப்புகளின் பெருமைக் குறித்தும் எழுதப் போவதில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராவது நிச்சயம் உங்களைப் பல விதங்களில் சோதனைக்கு உட்படுத்தும். மூன்று நிலைத் தேர்வுகள் உங்களுக்குப் பல விதங்களில் சவாலாக இருக்கும். ஆனால் எந்தப்
போட்டித் தேர்வுக்கும் தேவையான Discipline, Commitment, Focus, Open Mindedness and a real Motive இருந்தால் வெற்றி பெறலாம் என்பது நான் கண்ட வரை உண்மை.

UPSC சிவில் சர்விஸ் தேர்வுகளிலின் மூலம் இருவகையான பணிகளுக்கு தேர்வு செய்கிறார்கள்
1. All India Services
2. Central Services

சென்ற வருட அப்ளிகேஷனில் இருந்து,

(i) Indian Administrative Service.
(ii) Indian Foreign Service.
(iii) Indian Police Service.
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager,Administration).
(x) Indian Postal Service, Group ‘A’.
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.
(xviii) Indian Trade Service, Group 'A' (Gr. III).
(xix) Indian Corporate Law Service, Group "A".
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'.
(xxiii) Pondicherry Civil Service, Group 'B'.

இவற்றில் IAS மற்றும் IPS - All India Services மற்றவை Central Services

இவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு பரிட்சை தான் (which includes Prelims, Mains and Interview), தனித்தனிப் பரிட்சைகள் இல்லை. Indian Forest Servicesக்கான
Prelims மட்டும் இவற்றுடன் சேர்ந்து நடத்தப்படுகிறது. அதற்கான Mains and Interview தனி.

எனக்கு IPS ஆவது தான் விருப்பம். நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், நீங்கள் Prelimsல் தேர்வானவுடன், மீண்டும் உங்களிடம் பல விவரங்களை UPSC கேட்கும். அதில் உங்களுக்காக Service Preference, Cadre Preference (State Preference - Only for IAS and IPS)ல் குறிப்பிட வேண்டும். அதில் நீங்கள் IPS க்கு முதல் Preference கொடுக்கலாம்.

உங்களுடைய Rank and Preferenceக்கு ஏற்றாற் போல உங்களுக்கு சர்வீஸ் கொடுக்கப்படும்.

எடுத்துக்காட்டாக,
நீங்கள் IRS IT க்கு முதல் Preference கொடுத்திருந்தால், நீங்கள் All India Rank 1 வந்திருந்தாலும், உங்களுக்கு IRS IT தான் கொடுக்கப்படும். அதுவே All India Rank 250 (OBC) வாங்கியவருக்கு IAS  கிடைக்கலாம். அது அவருடைய Preference மற்றும் Rank கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும்.
இந்த தேர்வுகள் எப்பொழுது நடத்தப்படும்?

இன்றைய நிலவரப்படி, முதல் நிலைத் தேர்வு (Prelims) - ஆகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் நிலை (Mains) - டிசம்பர் மாதமும், மூன்றாம் நிலை (Interview) - ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரையும் நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் இரண்டாம் வரும் தெரிவிக்கப்படும். இதில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சில மாற்றங்கள் இருக்கலாம்.


Prelims, Mains, Interview ஆகிய மூன்று நிலைத் தேர்வுகள் குறித்து நாளைப் பார்க்கலாம்....

No comments: