தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, September 30, 2008

I am an hosteler - 3

வார நாட்கள்ல தினசரி அட்டவனையை பார்த்தாச்சு. இப்ப வாரயிறுதி அட்டவனையை பார்க்கலாம்.

சனி

5:30 - வழக்கம் போல சனிக்கிழமையும் 5:30க்கு எழுந்திடனும். எப்பவாது வெள்ளிக்கிழமை படம் போட்டிருந்தா 6 மணிக்கு எழுந்திரிக்கலாம். அதே மாதிரி பல்லு விளக்கி, தலை சீவி 5:55 ஸ்டடிக்கு உட்கார்ந்திடனும்.

5:55-7:45 - வழக்கம் போல ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

7:45 - 8:30 - பிரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு பொங்கல் போடுவாங்க. ஆனா நான் சனிக்கிழமை விரதம். அதனால சாப்பிட போகமாட்டேன். எனக்கு பொங்கல் ரொம்ப பிடிக்கும். கடைசி வரை அங்க பொங்கல் சாப்பிடவேயில்லை

8:30 - 9:55 - விளையாட்டு நேரம். விளையாடறதுக்கு எல்லாம் ஷார்ட்ஸ் டீ-சர்ட் தான் போட்டிருக்கனும். இதை போன பதிவுல விட்டுட்டேன். இந்த விளையாட்டு பொருட்களை வைக்கறதுக்கு ஒரு ரூம் இருக்கும். அதுக்கு லீடர் பேரு பால் ரூம் மானிட்டர். +1ல நான் பால் ரூம் மானிட்டராத்தான் இருந்தேன். அப்பறம் பாதியிலே பள்ளி மாறிட்டேன். பால் ரூம் மானிட்டரா இருக்கறதுல நிறைய அட்வாண்டேஜ் இருக்கு. முக்கியமான ஒண்ணு, புது தண்ணியில குளிச்சிட்டு லேட்டா ஸ்டடிக்கு போகலாம்.

9:55 - 10:30 - குளியல்.

10:30 - 12:25 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம்.

12:25 - 1:30 - லன்ச் டைம்.

1:30 - 2:30 - Recreation டைம். நான் இந்த நேரத்துல தூங்குவேன். இல்லைனா செஸ் விளையாடிட்டு இருப்பேன். சில சமயம் ராஜேஷ் குமார் நாவல் படிச்சிட்டு இருப்பேன். இல்லைனா துணி துவைக்கிற நண்பர்களுக்கு பக்கத்துல உட்கார்ந்து கதை பேசிட்டு இருப்பேன். நான் 7வதுல இருந்து ஹாஸ்டல்ல படிச்சாலும் துணி துவைச்சதே இல்லை.

வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.

2:30 - 4:30 - ஸ்டடி. நடுவுல பத்து நிமிஷம் Recreation டைம். இந்த ஸ்டடில தான் நிறைய பேர் தூங்கி மாட்டுவாங்க. இந்த ஸ்டெடில தமிழ் தான் படிப்பேன். முதல் ரெண்டு மூணு மாசத்துலயே எப்படியும் எங்க புக் படிச்சி முடிச்சிடுவேன். அதுக்கு அப்பறம் அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அதுவும் ரெண்டு மாசத்துல முடிச்சிட்டு அதுக்கு அடுத்த வருஷம் புக் வாங்கி படிப்பேன். அப்பறம் சீனியரோட வரலாறு புத்தகம் வாங்கி படிப்பேன். 

ஒன்பதாவது படிக்கும் போதே பனிரெண்டாவது வரைக்கும் தமிழ் புத்தகமும் (இலக்கியம் படிக்க கோனார் நோட்ஸ் விளக்கவுரை தான்), ஒன்பதாவது, பத்தாவது வரலாறு புத்தகமும் படிச்சி முடிச்சிட்டேன். சில சமயம் ஏழாவது, எட்டாவது பசங்களோட அறிவியல் புத்தகம் வாங்கி படிப்பேன். அப்ப அது எல்லாம் சுலபமா புரியும் :). ஆனா அதையெல்லாம் பாட புத்தகமா நினைக்காம கதை புத்தகமா படிப்பேன். அப்ப தான் தூக்கம் வராது. அந்த காலத்துல படிக்கறதுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. (ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?)

4:30 _ 5:00 - டிபன். டீ பன் :)

5:00 - 6:00 - விளையாட்டு.

6 - 6:30 - குளியல்

6:30 - 8 - ஸ்டடி.

அப்பறம், சாப்பாடு, தூக்கம். சில சமயம் ஏதாவது கேசட் எடுத்துட்டு வந்து டெக்ல படம் போடுவாங்க.

ஞாயிறு (ரொம்ப சந்தோஷமான நாள்)

6:00 - இந்த ஒரு நாள் மட்டும் ஆறு மணி வரை தூங்கலாம். 6:25க்கு ஸ்டடி.


6:25 - 7:30 - ஸ்டடி.

7:30 - 8:15 ப்ரேக் ஃபாஸ்ட். இன்னைக்கு ரோஸ்ட். ரோஸ்ட்னா கொஞ்சம் மெல்லிசா பெருசா இருக்கும். அதுக்காக ஹோட்டல் மாதிரி எல்லாம் இருக்கும்னு நினைச்சிக்காதீங்க.

8:15:- 9:25 - விளையாட்டு.

9:30 - 10:30 - குளியல். இந்த நாள் ஆயில் பாத். நல்லா நல்லெண்ணெய் தேச்சி, புலி மார்க் சியக்காய் தூள் போட்டு தேச்சி குளிக்கலாம். இதுவும் கம்பல்சரி. மொதல்ல கொஞ்ச நாள் இந்த எண்ணெய், அப்பளம் சுட்டதுல மீதமான எண்ணெய்னு புரளியை நம்பி எண்ணெய் தேச்சி குளிக்காம ஏமாத்திட்டு இருந்தேன். அப்ப டான்சில்ஸ் வேற. அதுக்கு அப்பறம் ஆப்பரேஷன் பண்ணதுக்கப்பறம் தான் எல்லாம் சரியாச்சு. பின்னாடி ஆயில் பாத்னா முதல் ஆளா நிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆயில் பாத் சுகமே சுகம் தான்.

10:30 - 11:15 - ஸ்டெடி. இனிமே தான் முக்கியான விஷயமே.

11:15 - 11:30 வரை பதினஞ்சி நிமிஷம் Recreation டைம். அப்பவே எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் வந்திடுவாங்க. இது நான் பதினொன்னாவது படிக்கிற வரைக்கும் நடந்தது. அப்ப சமோசா (வெங்காய சமோசா தான். எனக்கு உருளைக்கிழங்கு சமோசா பிடிக்காது), பலாப்பழ சீசன்ல பலாப்பழம் (வர வழியில தான் பண்ரூட்டி இருக்கு), மேங்கோ ப்ரூட்டி எல்லாம் வாங்கிட்டு வருவாங்க. சில சமயம் இட்லி கறிக்குழம்பு. இந்த பதினஞ்சி நிமிஷத்துல இதெல்லாம் சாப்பிட்டு அடுத்த ஸ்டெடிக்கு ஓடிடுவேன்.

11:30 - 12:25 - இந்த ஸ்டடில எதுவுமே படிக்க தோனாது. வெளில அப்பா, அம்மா காத்துட்டிருக்கறதே மனசுல இருக்கும். சில சமயம் அந்த வெறிலயே கூட நிறைய படிப்பேன். அப்ப அப்ப மனசை பொறுத்து மாறும். நான் முதல் முதல்ல ஏழாவதுல அடி வாங்கியது இந்த ஸ்டடி தான். தப்பு செஞ்சா தான் அடிப்பாங்க, நான் தப்பே செய்ய மாட்டேன். என்னை அடிக்கவே முடியாதுனு சொல்லி தான் நான் அந்த பள்ளிக்கூடத்துலயே சேர்ந்தேன். ஆனா தப்பு செய்யாமலும் அடி வாங்க முடியும்னு அப்ப தான் தெரிஞ்சிக்கிட்டேன். 

என் பக்கத்துல இருந்த பையன் என் நட்ராஜ் ஜாமெண்ட்ரி பாக்ஸை கீழ தள்ளிவிட்டுட்டான். அந்த சத்தம் கேட்டு வார்டன் அங்க வந்தாரு. யாரோட ஜியாமட்ரி பாக்ஸ்னு கேட்டு என்னை ஸ்டடி ஹால் நடுவுல வந்து நிக்க சொன்னாரு. நான் தள்ளிவிடலைனு சொன்னேன். ஜியாமட்ரி பாக்ஸ் கீழ விழுந்ததுக்கு ரெண்டு அடி, கூப்பிட்டவுடனே வெளிய வராம பதில் பேசனதுக்கு ரெண்டு அடி. மொத்தம் நாலு அடி. அதுவும் செம்ம அடி. எங்க அப்பா, அம்மா அதை பார்த்தாங்க. எனக்கு அழுகை தாங்கல. 

அது வரைக்கும் யாரும் என்னை அடிச்சதுமில்லை. அடி வாங்கிற மாதிரி நான் நடந்துக்கிட்டதுமில்லை. அதுக்கு அப்பறம் அந்த வார்டனை பார்த்து எங்க அப்பா பேசி நான் அவருக்கு செல்லப்பிள்ளையாகிட்டேன். ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம். அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும் இது என்னால வாழ்க்கைலயே மறக்க முடியாது.

12:25 - 2:30 - லஞ்ச் + Recreation. முதல்ல வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த துவைச்சி, அயர்ன் பண்ணி கொண்டு வந்த துணி, அப்பறம் அந்த ஒரு வாரத்துக்கு சாப்பிட வாங்கிட்டு வந்த தீனி எல்லாம் கொண்டு போய் பாக்ஸ் ரூம்ல வெச்சிட்டு, அழுக்கு துணி எல்லாம் எடுத்துட்டு வருவேன். அப்பறம் வந்து சாப்பாடு. சாதம், ஆட்டு கறி குழம்பு, ஆட்டு கறி வறுவல் கண்டிப்பா இருக்கும் (புரட்டாசி மாதம் தவிர). எங்க அப்பா காலைல 5:00க்கு கடை திறந்த உடனே வாங்கிட்டு வந்துடுவாரு. அதை ஏழுரை மணிக்குள்ள சமைச்சி புறப்பட்டுடுவாங்க.புரட்டாசி மாசம்னா கீரை பருப்பு போட்டு கடைஞ்சிருப்பாங்க அப்பறம் உருளைக்கிழங்கு வறுவல். 1:30க்குள்ள சாப்பிட்டு முடிச்சிட்டு, அப்பா அம்மாவோட ஊர் கதை பேசிட்டு இருப்பேன்.

 எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி. கடலூர்லயே ரெண்டு மாமா (அம்மாவோட அண்ணன்கள். ரெண்டு பேரும் இஞ்சினியர்ஸ். எங்க அப்பா க்ளார்க்) இருந்தும் அவுங்க வீட்ல எல்லாம் உன்னை தங்கி படிக்க வைக்காம இருக்கறதுக்கு காரணம், நாளைக்கு உங்க அத்தைங்க எல்லாம் எதுவும் சொல்லிடக்கூடாதுனு தான். எந்த காரணத்துக்காகவும் உன் படிப்புக்கோ, வேலைக்கோ அவுங்ககிட்ட நிக்கற மாதிரி வெச்சிடாதப்பா” (நாரயணன் அருளால இதை நான் காப்பாத்திட்டேன். அது மட்டுமில்லாம பத்தாவது, பணிரெண்டாவது ரெண்டுலயுமே எங்க குடும்பத்துல இது வரை நான் எடுத்த மார்க் தான் அதிகம். எனக்கு அப்பறம் நிறைய பேர் +2 படிச்சிட்டாங்க. ஆனா இது வரைக்கும் என் மார்க் தான் அதிகம்). இது ஒவ்வொரு முறையும் சொல்லுவாங்க. எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டார். அவருக்கு என் மேல எப்பவுமே நம்பிக்கை அதிகம்.

2:30 - 4:15 - ஸ்டெடி. இந்த ஸ்டெடில வெறித்தனமா படிப்பேன். தூக்கம் வந்தா எழுந்து நின்னுட்டு இல்லைனா வார்டன்கிட்ட சொல்லிட்டு முகம் கழுவிட்டு வந்து படிப்பேன். எப்பவும் ஹாஸ்டல்ல முதல் மாணவன்னு என்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. முகம் கழுவ எழுந்து போறதெல்லாம் எல்லாருக்கும் விட மாட்டாங்க. என்னால கான்சண்ட்ரேட் பண்ண முடியலனு சொல்லிட்டு போய் முகம் கழுவுற தைரியும் நிறைய பேருக்கு இருக்காது.

4:15 - 4:45 - டிபன்

4:45 - 6 - விளையாட்டு

மறுபடியும் வழக்கம் போல தான் 9 மணி வரை.

9 - 10 : நைட் ஸ்டடி. இது மட்டும் என்னால முடியவே முடியாது. 9:30க்கு அப்பறம் கண்டிப்பா தூங்கி மாட்டிக்குவேன். அது என்ன ஞாயிறு மட்டும் நைட் ஸ்டடினு பாக்கறீங்களா? எங்க ஸ்கூல்ல வார வாரம் திங்க கிழமை காலைல பரிட்சை இருக்கும். இதுக்கு பேரு வீக்லி டெஸ்ட். மன்த்லி டெஸ்ட் எல்லாம் கிடையாது. முதல் ரெண்டு பீரியட் சேர்த்து டெஸ்ட் வைப்பாங்க. 25 மார்க். அதை அப்படியே நூத்துக்கு மாத்திக்குவாங்க. அஞ்சு வாரம் முடிஞ்சா ஒரு சைக்கிள் முடிஞ்சிடும். அதனால வார வாரம் ஞாயிறு நைட் ஸ்டெடி தான். சில சமயம் ஃபாதர் வந்தாருனா அவர்கிட்ட நான் எல்லாத்தையும் படிச்சிட்டேன், நீங்க எதுல இருந்து வேணா கேள்வி கேக்கலாம்னு சொல்லி புத்தகத்தை கொடுத்துடுவேன். அவரும் ரெண்டு மூணு கேள்வி கேட்டுட்டு விட்டுடுவாரு. வார்டன் மட்டுமிருந்தா விட மாட்டாரு. கஷ்டப்பட்டு பத்து மணி வரை முழிச்சிருக்கனும்.

இதோட St.Joseph பள்ளி அட்டவணை பதிவு முடியுது. ஆனா எப்படியும் என்னோட தனிப்பட்ட வாழ்க்கை அங்க எப்படி இருந்துச்சு. ஏழாவதுல 40% கூட அட்டெண்டன்ஸ் இல்லாத நான் எட்டாவதுல இருந்து பத்தாவது வரை 100% அட்டெண்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணது எப்படி? ஏழாவதுல இது பள்ளி கூடமே இல்லை நரகம்னு சொல்லிட்டு இருந்த நான் பின்னாடி இது தான் சொர்கம்னு சொல்ற அளவுக்கு எப்படி மாறினேன். ஏழாவதுல இங்கிலீஷ் மீடியத்துல படிக்கிற பசங்க கூட மட்டுமே பேசிட்டு இருந்த நான் வரும் போது தமிழ் மீடிய பசங்களோட மட்டுமே நண்பனா இருக்கற அளவுக்கு எப்படி மாறினேனு எல்லாம் கண்டிப்பா பதிவெழுதறேன். இந்த பதிவு நிறைய பேர் படிக்கறில்லைனாலும் என்னோட ஆசைக்காக எழுதன தொடர் இது. நிறைய இடங்களில் நான் என் பள்ளிக்கூடத்துல இன்னும் படிக்கிற உணர்வை தந்தது. விளையாடிட்டு வந்து லைன்ல நிக்கும் போது வரும் வேர்வை வாசனையை மீண்டும் நுகர்ந்தேன்.

மீண்டும் நுகர்வேன்....

32 comments:

ஜெகதீசன் said...

:))
//
ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?
//
ஜெயக்குமார் நோட்ஸ் எல்லாம் மறக்க முடியுமா?
:P
பாக்கட் நாவல் சைஸ்ல அதைவிட கொஞ்சம் நீளம் அதிகமா இருக்கும்...

வெட்டிப்பயல் said...

//ஜெகதீசன் said...
:))
//
ஆங்கிலத்துக்கு ஜெயக்குமார் நோட்ஸ்னு ஒண்ணு இருக்கும். யாருக்காவது ஞாபகமிருக்கா?
//
ஜெயக்குமார் நோட்ஸ் எல்லாம் மறக்க முடியுமா?
:P
பாக்கட் நாவல் சைஸ்ல அதைவிட கொஞ்சம் நீளம் அதிகமா இருக்கும்...//

அதே அதே!!!

இனியா said...

சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்!!!
நானும் hosteler தான். திருச்சியில் கிட்டத்தட்ட
இதே சூழலில்தான் நானும் கல்லூரியில் இருந்தேன்.
அக்கல்லூரி St.Joseph's.

வெட்டிப்பயல் said...

//இனியா said...
சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்!!!
நானும் hosteler தான். திருச்சியில் கிட்டத்தட்ட
இதே சூழலில்தான் நானும் கல்லூரியில் இருந்தேன்.
அக்கல்லூரி St.Joseph's.

//

மிக்க நன்றி இனியா... காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு :)

ரவி said...

.//மிக்க நன்றி இனியா... காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு :)///

வெட்டி, நம்ம கடலூர் ஹாஸ்டலுக்கும் திருச்சி.செஞ்ஜோசப் ஹாஸ்டலுக்கும் ரொம்ப வித்யாசமில்லை ஹி ஹி

நான் ரெண்டு இடத்திலயும் இருந்தவன் :))

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...
.//மிக்க நன்றி இனியா... காலேஜ் ஹாஸ்டலுக்கும் பள்ளிக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு :)///

வெட்டி, நம்ம கடலூர் ஹாஸ்டலுக்கும் திருச்சி.செஞ்ஜோசப் ஹாஸ்டலுக்கும் ரொம்ப வித்யாசமில்லை ஹி ஹி

நான் ரெண்டு இடத்திலயும் இருந்தவன் :))

//

ஓ நோ!!!

சிநேகிதன்.. said...

அன்பு வெட்டி அண்ணா ,
நான் hostel கிடையாது. ஆனா என் கிளாஸ்ல நிறைய பசங்க hostel தான். நா st,antonys school.தஞ்சாவூர். இந்த பதிவு படிக்கும்போது எனக்கு ஒரே கொசுவத்தி... இங்கேயும் ஸ்டடி டைம், சோப்பு தண்ணி தொட்டி, எல்லாம் அப்படியே தான்...
அண்ணா குறிப்பா உங்க narration ரொம்ப சூப்பரா இருக்கு.. ஒரு 13,14 வயசு பையன் எப்படி சொல்வானோ அதே மாதிரி இருக்கு.. அருமையான தொடர்...

Thiyagarajan said...

//எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி//

My parents too said the same dialouge to me. (Replace Balaji with Thiyagu :) ).

தமிழினி..... said...

எனக்கும் என் பள்ளிகூட அனுபவங்கள்ள எழுதனும் னு தோணுது.....
மிகவும் அழகான பதிவு....

வெட்டிப்பயல் said...

//சிநேகிதன்.. said...
அன்பு வெட்டி அண்ணா ,
நான் hostel கிடையாது. ஆனா என் கிளாஸ்ல நிறைய பசங்க hostel தான். நா st,antonys school.தஞ்சாவூர். இந்த பதிவு படிக்கும்போது எனக்கு ஒரே கொசுவத்தி... இங்கேயும் ஸ்டடி டைம், சோப்பு தண்ணி தொட்டி, எல்லாம் அப்படியே தான்...
அண்ணா குறிப்பா உங்க narration ரொம்ப சூப்பரா இருக்கு.. ஒரு 13,14 வயசு பையன் எப்படி சொல்வானோ அதே மாதிரி இருக்கு.. அருமையான தொடர்...
//

மிக்க நன்றி சிநேகிதன்.

நான் இதை எழுதும் போது அந்த இடத்திலிருந்து எழுதியது போல் தான் தோன்றியது. சில இடங்களில் கண்களிலிருந்து நீரும் வந்தது :)

வெட்டிப்பயல் said...

//Thiyagarajan said...
//எப்பவும் எங்க அம்மா சொல்றது இது தான். “நீ நல்லா படிச்சி உங்க மாமாங்க முன்னாடி எல்லாம் நாம பெருமையா வாழற மாதிரி வரணும் பாலாஜி. அதுக்கு தான் இவ்வளவு கஷ்டப்படறோம். நீ மட்டும் நல்லா படிக்காம போனா எல்லார் முன்னாடியும் உங்க நைனாவுக்கு தலை குனிவாகிடும். வரவுக்கு மீறி செலவு பண்ணி படிக்க வைக்கறோம். எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சிடு பாலாஜி//

My parents too said the same dialouge to me. (Replace Balaji with Thiyagu :) ).
//

இந்த மாதிரி நிறைய அப்பா, அம்மா சொல்லி தான் நாம எல்லாம் இந்த நிலைமைல இருக்கோம் :)

வெட்டிப்பயல் said...

// தமிழினி..... said...
எனக்கும் என் பள்ளிகூட அனுபவங்கள்ள எழுதனும் னு தோணுது.....
மிகவும் அழகான பதிவு....
//

மிக்க நன்றி...

தாராளமா எழுதும்மா.. எழுதிட்டு லிங் கொடு :)

மங்களூர் சிவா said...

//
வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.
//

இப்பவாச்சும் தெரியுதா ஆப்பீசர்!!
:))))

Anonymous said...

//
வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.
//

இப்பவாச்சும் தெரியுதா ஆப்பீசர்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

//
வாரம் வாரம் வீட்ல இருந்து வந்து அழுக்கு துணியை வாங்கிட்டு போயிடுவாங்க. ஒரு வாரம் கூட தவறாம ஞாயிற்று கிழமை எங்க அப்பா, அம்மா வந்தது எனக்கு இப்ப ஆச்சரியமா இருக்கு. வீக் எண்ட்னா நாம எல்லாம் ஜாலியா ரெஸ்ட் எடுக்கணும்னு நினைக்கும் போது அவுங்க ஒரு வாரம் கூட தவறாம வந்தது எவ்வளவு பெரிய சாதனைனு இப்ப தெரியுது.
//

இப்பவாச்சும் தெரியுதா ஆப்பீசர்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

//
ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம்.
//

ஓகே

//
அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும்
//

கல்யாணத்துக்கப்புறம் வாங்கினதா????

மங்களூர் சிவா said...

//
பத்தாவது, பணிரெண்டாவது ரெண்டுலயுமே எங்க குடும்பத்துல இது வரை நான் எடுத்த மார்க் தான் அதிகம். எனக்கு அப்பறம் நிறைய பேர் +2 படிச்சிட்டாங்க. ஆனா இது வரைக்கும் என் மார்க் தான் அதிகம்
//

க்ரேட்
வாழ்த்துக்கள்!

மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு பதிவு. இந்த அளவுக்கெல்லாம் நமக்கு சொல்லிக்கிறதுக்கு ஒன்னும் இல்லையேன்னு நினைக்கிறப்ப பீலிங்ஸ் ஆப் இண்டியாவா இருக்கு!

மங்களூர் சிவா said...

//
"I am an hosteler - 3"
//

A ,E, I , O, U வவ்வல் (பதிவர் வவ்வால் அல்ல)க்கு மட்டும்தானே an வரும் பாலாஜி மாத்தீட்டாங்களா?????????

Divyapriya said...

நாங்கெல்லாம் படிச்சிகிட்டுதாங்ணா இருக்கோம் ;)
ஆனா, நீங்க எழுதி இருக்கறத பாத்தா, ஹாஸ்ட்டல்ல படிச்சிகிட்டே இருக்கனும் போல இருக்கே? கஷ்டம் தான் :(

Anonymous said...

Good narration.
Keep it up Vetti.

வெட்டிப்பயல் said...

//
இப்பவாச்சும் தெரியுதா ஆப்பீசர்!!
:))))//

எப்பவுமே மனசுல இருக்கு சிவா :)

வெட்டிப்பயல் said...

என் அப்பா, அம்மா எல்லாம் ப்ளாக் படிக்க மாட்டாங்க அனானிஸ் :)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

//
ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம்.
//

ஓகே

//
அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும்
//

கல்யாணத்துக்கப்புறம் வாங்கினதா????//

நான் பள்ளிக்கூடத்துலயே வாங்கினேன். நீ எங்க வாங்கறனு பின்னூட்டத்துல தெரியுது ;)

வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

//
"I am an hosteler - 3"
//

A ,E, I , O, U வவ்வல் (பதிவர் வவ்வால் அல்ல)க்கு மட்டும்தானே an வரும் பாலாஜி மாத்தீட்டாங்களா?????????//

ஒவ்வொருத்தவங்க ஒண்ணு ஒண்ணு சொல்றாங்க :(

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

நாங்கெல்லாம் படிச்சிகிட்டுதாங்ணா இருக்கோம் ;)
ஆனா, நீங்க எழுதி இருக்கறத பாத்தா, ஹாஸ்ட்டல்ல படிச்சிகிட்டே இருக்கனும் போல இருக்கே? கஷ்டம் தான் :(//

நிறைய நேரம் விளையாடவும் இருக்கேமா. பார்க்கலையா? வீட்ல இருந்து படிக்கறவங்களுக்கு எல்லாம் நல்லா விளையாட சான்ஸ் கிடைக்காது :)

வெட்டிப்பயல் said...

// life-long-day-scholar-yet-occasional-hostel-visitor said...

Good narration.
Keep it up Vetti.//

மிக்க நன்றி நண்பரே :)

மங்களூர் சிவா said...

//
வெட்டிப்பயல் said...

//மங்களூர் சிவா said...

//
ஸ்கூல்ல நல்லா படிச்சாலே போதும். எல்லாருக்கும் ஃபேவரைட்டா ஆகிடலாம்.
//

ஓகே

//
அதுக்கு அப்பறம் நிறைய அடி வாங்கிருந்தாலும்
//

கல்யாணத்துக்கப்புறம் வாங்கினதா????//

நான் பள்ளிக்கூடத்துலயே வாங்கினேன். நீ எங்க வாங்கறனு பின்னூட்டத்துல தெரியுது ;)
//

ஆஹா நானாதான் உளறீட்டேனா!?!?!?
:))))))))))))))))))))))))))))))))

Anonymous said...

I am "an" Hosteler ... thappu illaiyo .. I am 'a' Hosteler thane rightu ...

Natty said...

நாட்டாமை....

'I am a hosteller' வோர்டு உபயோகித்து, ரெட் க்ளிக் செய்து, அரும்பாடுபட்டு இதை கண்டுபிடித்து, உங்கள் பதிவில் பின்னூட்டம் இடுவதால், நானும் சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டேன். ;)

clicknaren said...

Balaji, College hostel valkai pathi neraiaper eludhuvargal, aanal mudhal muraiaga neeinga palli veedudhi patri eludhee irukeeinga..Migavum nanraga ulladhu..Solla ponna remba emotion ayiteinga..Sema feelings..uinga kadhaiyai oru 3 moorai break vittu padika nerindhadhu.. Neeinga idhula enna feelings vida irukunu kekalam..but naanum idhe maari oru school valkai ah anubavichurukean...Padippu mudhal kuliyal varai, sapidum thattu mudhal study varai, Ammavin anbu advice mudhal namma ippo irukum profession varai ellame en valkaiodu ondri iruindhadhu..thoroughly njoyed..:-)
Pin kurippu :
--Office la blogging block pannitainga..Only i can read ur post, can't comment on it..ippo veetula iruindhu comment eludharean..

thodarindhu eludhuingal..

Ippadiku,
Uingal Rasigan
Narendran

Kathir said...

உங்களுக்கும் ராஜேஷ்குமார் நாவல்கள் பிடிக்கும் என்பதால்.. அவர் நாவல்கள் www.emagaz.in இணையதளத்தில்!