தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 15, 2006

கொல்ட்டி

"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க??? மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாதா???"

நான் சொல்லி முடிச்சதும் சுமாவுக்கு பயங்கர கோபம் வந்திடுச்சி.

ஆமாம் என்ன இருந்தாலும் அத்தனை பேர் முன்னாடி நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவும் எல்லோரும் அவ டீமெட்ஸ்.

சாயந்திரம் 7 மணிக்கு எக்ஸ்டென்ஷனுக்கு கால் வந்தது.

"ரமேஷ் ஹியர்"

"சுமா பேசறேன்"

"ஹிம் சொல்லு"

"சாப்பிட போகலாம்"

"சாப்பிட போகலாமா??? மணி என்ன ஆகுது... இன்னும் புட் கோர்ட்ல சாப்படே ரெடி ஆகியிருக்காது. இன்னும் எப்படியும் அரை மணி நேரமாகும்"

"நான் என் சீட்டில இருந்தா இந்த குங்குமப் பொட்டு வேலை ஏதாவது கொடுக்கும். நீ வா. நம்ம சும்மா வாக்கிங் போயிட்டு அப்பறமா சாப்பிட போகலாம் "

"சரி... நீ என் பில்டிங் கிட்ட வந்து மிஸ்ஸுடு கால் கொடு நான் வரன்"

வழக்கம் போல் என்ன பேசினோம்னே தெரியாம பேசினோம்... 8 மணிக்கு அவள் மட்டும் சாப்பிட்டாள், அவளை மல்லேஸ்வரம் பஸ்ஸில் ஏற்றிவிட்டு, நான் கோரமங்களா பஸ் பிடித்து வீட்டிற்கு சென்றேன்.

"டேய் ரமேஷ், அந்த அம்மா சப்பாத்தி செஞ்சிருக்காங்க!!! உனக்கு ஹாட் பாக்ஸ்ல இருக்கு"

"ஏன்டா, சப்பாத்திக்கு தொட்டுக்க குருமாவையே காணோம்???"

"கரு வாயந்தான் கடைசியா சாப்பிட்டான்... அவந்தான் தீர்த்திருப்பான்"

"ஏன்டா சொல்லிருந்தா நான் ஆபிஸ்லயே சாப்பிட்டிருப்பேன்... சரி விடு நான் ஜாம் தொட்டு சாப்பிட்டுக்கறேன்"

சப்பாத்தி சாப்பிட ஆரம்பிக்கும் பொது... மிஸ்டு கால் வந்தது.
சுமா வீட்டிக்கு போய் சேர்ந்துட்டா. சரினு ஜெர்கின் போட்டுட்டு போனை எடுத்துட்டு மொட்டை மாடிக்கு போனேன். கீழே வரும்போது மணி 12:15.

ரூம்ல எல்லோரும் மும்மரமாக ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டிருந்தனர்.
சப்பாத்தி ஆறிப் போய் அப்பளமாக இருந்தது. ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கூட்டத்தோடு சேர்ந்து அனைவரையும் ஓட்டிவிட்டு 1 மணிக்கு படுக்கைக்கு சென்றேன்.

தூக்கம் வரவில்லை. என்ன இருந்தாலும் இன்னைக்கு அவளை அத்தனை பேருக்கு முன்னால ஓட்டியிருக்க கூடாது. அதைப் பற்றி அவள் போன்ல கூட ஒரு வார்த்தை பேசல. குற்ற உணர்ச்சியாக இருந்தது.

சுமாவை முதன்முதலாக ட்ரெயினிங்கில் பார்த்தது. அவளை எப்போதும் ஆந்திரா கோஷ்டியுடன் தான் பார்க்க முடியும். ஒன்னு, ரெண்டு முறை பேசியிருப்போம். அவ்வளவுதான்.

பிறகு ட்ரெயினிங் முடித்து, ஒவ்வொருவரையும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பிராஜக்டில் போட்டார்கள்.

நானும், சுமாவும் ஒரே பிராஜக்ட்டில் சேர்ந்தோம். அவளுக்கு தமிழ் தெரியாது, எனக்கு தெலுகு புரியாது. எப்பவுமே இங்கிலிஸில் தான் பேசிக் கொள்வோம். ரெண்டு பேரும் ஒரே மாட்யுல். அடிக்கடி டெட்லைன் மீட் பண்ணுவதற்காக நைட் வேலை செய்ய வேண்டியது வரும்.

பொண்ணுங்க நைட் cabla தனியா போறது எனக்கு எப்பவுமே பிடிக்காது. பல சமயங்களில் அவளை 9:15 பஸ்ஸில் வீட்டிற்கு போக சொல்லிவிட்டு, அவளுடைய மாட்யூலையும் நானே பார்த்துக் கொள்வேன். அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.
(நைட் பொதுவாக ஆன் - சைட்டில் Code Review செய்வார்கள். ஏதாவது தவறு இருந்தால் நாம் அதை சரி பண்ண அவர்களுக்கு உதவ வேண்டும்... அதனால் எங்களுக்கு பொதுவாக அதிக வேலை இருக்காது. ஆனால் நாங்கள் அங்கு இருக்க வேண்டும்)

இப்படியே ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட்ஸ் ஆகிவிட்டோம். அவள் தங்கி இருந்த PGயில் நிறைய தமிழ் நாட்டுக்கார பெண்கள் இருப்பதாக சொல்வாள்.

எனக்கு யாரையாவது இண்ட்ரடியுஸ் பண்ணிவிடுனு சொன்னா, எப்பவுமே முறைப்பாள். திடிர்னு ஒரு நாள் புட் கோர்டில் அவள் ரூம் மெட் ராதிகாவை அறிமுகப்படுத்தினாள். ராதிகா அன்று எங்களுடன் தான் சாப்பிட்டாள்.

"ரமேஷ், உனக்கு ஒன்னு தெரியுமா??? சுமா இப்பல்லாம் விழுந்து விழுந்து தமிழ் கத்துக்கிறா!!! "

எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. எப்பவுமே தெலுகுதான் தமிழவிட பெருசுனு என்கிட்ட சண்டை போட்ற சுமாவா தமிழ் கத்துக்கிறா??? ஆனால் இதை என்கிட்ட சொல்லவே இல்லையேனு ஒரு வருத்தம். ஜாவால எல்லாம் டவுட் கேக்கறா, எனக்கு நல்லா தெரிஞ்ச தமிழை யார்கிட்டயோ கத்துக்கிறாளே!!!

ஆனால் இதை ராதிகா சொன்னவுடன், சுமா அவளை முறைத்துவிட்டு "அதெல்லாம் ஒன்னும் இல்லை... அவள் சும்மா விளையாட்டுக்கு சொல்றா"னு வேக வேகமாக சொன்னாள்.

ராதிகாவைப் பார்த்ததும் நல்லதாப் போச்சினு தோனுச்சி.

3 மாசம் கழித்து என்னுடைய பிறந்த நாள்... சனி கிழமையன்று வந்தது...

வெள்ளிக்கிழமை நைட் 9 மணிக்கு போன் செய்தாள். என்னடா இவ்வளவு சீக்கிரமா பண்ணிட்டாளேனு பார்த்தால், 12 மணி வரை பேசிக்கிட்டே இருந்தாள். (எங்கே 12 மணிக்கு சரியாகப் போன் செய்தால் பிஸியாக இருக்குமோனு சந்தேகத்தால் 9 மணிக்கே போன் செய்துவிட்டாள்).

சரியாக பனிரெண்டு மணிக்கு,

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"சுமா நீயா பேசறது", ரமேஷால் அவன் காதை நம்ப முடியவில்லை.

"இல்லை உங்க அம்மா"

மறுபடியும் அதிர்ச்சி.

"ரமேஷ், இனிமே நான் உன்கிட்ட தமிழ்ல தான் பேசுவேன். ஓகேவா???"

ரமேஷ்க்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தெளிவா தமிழ்ல பேசறா. எப்படி இவ்வளவு சீக்கிரத்துல கத்துக்கிட்டா.

"அப்பறம் நாளைக்கு உன் பிளான் என்ன???"

"எதுவும் பெருசா இல்லை"

"நம்ம படத்துக்கு போவோமா???"

"என்ன படம்"

"அதை நாளைக்கு PVR போய் முடிவு பண்ணிக்கலாம்"

"சரி... காலைல எனக்கு ஒரு பதினோரு மணிக்கா போன் பண்ணு"

"ஏன்???"

"நான் எழுந்திரிக்க வேணாமா?"

"அடப்பாவி!!! பதினோரு மணிக்கு எழுந்திரிக்க உனக்கு போன் பண்ணனுமா???"

"கேள்வியெல்லாம் கேக்காத எனக்கு புடிக்காது. சொன்னா கேக்கனும் புரியுதா???"

"சரிங்க சார்... நான் பண்றேன்"

போனை வைக்கும் போது மணி 2.

ரூம்ல யாருக்கும் என் பிறந்த நாள் தெரியாது. என்ன செய்ய எங்க ரூம்ல தங்கியிருக்கிற யாரும் நிரந்தரம் கிடையாது. அதனால் யாருக்கும் பெரிய பற்றுதல் இல்லை.

காலையில் 6 மணிக்கு வீட்டில் இருந்து போன்...

"Happy Birthday to u"

"thx மா"

"பிறந்த நாள் வாழ்த்துக்கள்"

"thxப்பா"

"கண்ணு நானும், அப்பாவும் எழுந்து குளிச்சிட்டு கோவிலுக்கு கெளம்பிட்டு இருக்கோம். சரி நீ எழுந்திரிச்சிருக்க மாட்டேனுதான் இவ்வளவு நேரம் கழிச்சி பண்றோம். சரி நீயும் குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வா"

"சரிம்மா... நான் இன்னும் எழுந்திரிக்கவே இல்லை.. நைட் ஆபிஸ்ல வேலை அதிகம்... 2 மணி ஆகிடுச்சி"

"சரி கண்ணு... நீ தூங்கு... கோவிலுக்கு போகும் போது மறக்காமல் ஸ்வீட் வாங்கிட்டு போய்... கோவில்ல வயசானவங்க இருந்தா கொடு... அவுங்க மனசால வாழ்த்தனா நீ நல்லா இருப்ப... சரியா???"

"சரிம்மா... நான் உங்களுக்கு போன் பண்றேன்"

செல் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பதினொரு மணிக்கு செல்போன் சிணுங்கியது.

Suma Calling....

"ஹாய்...
சொல்லு"

"என்னா...இன்னும் எழுந்திரிக்கலையா???"

"இல்ல... இப்பத்தான் ஏழுந்திரிக்கிறன்"

"அடப்பாவி!!! எத்தனை மணிக்கு சாப்பிட வர???"

"என்ன சாப்பிடவா??? படத்துக்குத் தான சொன்ன???"

"இங்க PGல மதியம் சாப்பாடு கேவலமா இருக்கும். கிருஷ்ணா கபேல மதியம் உன்கூட சாப்பிடலாம்னு பார்த்தேன்"

"சரி வரேன்"

மதியம் 12 மணிக்கு கிருஷ்ணா கபே வந்து சேர்ந்தாள். எனக்கு பிடிச்ச நேவி ப்ளூவில் சுடிதார் போட்டிருந்தாள்.

"என்ன... பர்த்-டேக்கு புது துணியெல்லாம் போடலையா???"

"வீட்ல அம்மா எடுத்து கொடுத்தாங்க... நாந்தான் அதை எடுத்துட்டு வரலை. புது துணியிலெல்லாம் எனக்கு இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லை. அதுதான் எனக்கு பதில் நீ போட்ருக்கியே அப்பறமென்ன"

"ஏ!!! இது புதுசு இல்ல... நான் காலேஜ்ல போட்டிருந்தது. பெங்களூர் வந்து இப்பதான் பர்ஸ்ட் டைம் போடறேன்."

"சரி வா... சாப்பிட போகலாம்"

நல்ல சாப்பாடு.

பிறகு இருவரும் PVR சென்றோம்.

"என்ன படம் பார்க்கலாம்"

"உனக்கு ரஜினிதான பிடிக்கும், சந்திரமுகி போகலாம்"

"ஏன் தெலுகு படமெல்லாம் கேவலமாக இருக்கனும்னு இப்படி சொல்றியா???"

அவள் கண் கலங்கிவிட்டது.

"ஏ... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... சந்திரமுகியே போகலாம் வா"

ரெண்டு பேரும் சந்திரமுகி சென்று பார்த்தோம்.

ஒருவழியாக சந்திரமுகி பத்தாவது முறைப் பார்த்தேன். ஆனால் முதல் முறை பார்த்த மாதிரி இருந்தது.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், Forumல் கொஞ்ச நேரம் சுற்றினோம்.
லேண்ட் மார்க் சென்றோம். அங்கே எனக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்", "பார்த்திபன் கனவு" மூன்றும் சேர்ந்த ஒரு பேக்கை வாங்கி பிறந்த நாள் பரிசாக வழங்கினாள்.

எனக்கு கல்கி பிடிக்கும்னு அவளுக்கு எப்படி தெரியும். அதுவும் நான் சொல்லாமலே அவளே எப்படி அந்த தொகுப்பை சரியாக எடுத்தாள்.

"சுமா, தமிழ் படிக்க கத்துக்கிட்டியா???"

"ஏ!!! அதெல்லாம் இல்லை... பேச கத்துக்கிட்டதே ரொம்ப கஷ்டம். எனக்கு சொல்லி கொடுக்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க... நீ தான் எனக்கு படிக்க சொல்லி தரனும்"

"அப்பறம் எப்படி புக்கை கரெக்ட்டா எடுத்த???"

"நான் நேத்தே என் பிரெண்டோட வந்து பாத்து வெச்சிக்கிட்டேன். அதுதான்"

சிரித்தாள். என்னுமோ தெரியல.. திடிர்னு எனக்கு அவள் தேவதை மாதிரி தெரிந்தாள்.

அப்படியே சுத்திட்டு டின்னரை Forum Transitல் உள்ள சேலம் கிட்சனில் சாப்பிட்டோம்.

அவளை மல்லேஸ்வரத்திற்கு என்னுடைய டூ-வீலரில் அழைத்து சென்று விட்டு வந்தேன்.

இந்த பிறந்த நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது.

பிறகு ஒரு மாதத்தில் இருவரையும் வெவ்வேறு பிராஜக்ட்டிற்கு மாற்றினார்கள்.

அப்படியும் காலை பிரேக் பாஸ்ட், மதியம் லன்ச், சாயந்திரம் ஸ்னாக்ஸ், இரவு டின்னர் எல்லாம் ஒன்றாகவே சாப்பிட்டோம்.

பிறகு அவள் வீட்டிற்கு சென்ற பின் போன் செய்து 12 மணி வரை பேசுவோம்.

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்...

அப்படியிருக்கும் நிலையில் அவளை நான் இன்று அப்படி ஓட்டியிருக்க தேவையில்லை. ஒரு வழியாக தூங்கிவிட்டேன்.

தீபாவளிக்கு 3 நாள் லீவு போட்டால் 10 நாள் லீவு கிடைக்கும் போலிருந்தது. ரெண்டு பேரும் 3 நாள் லீவ் போட்டு அவரவர் ஊருக்கு போகலாம் என்று தீர்மானித்திருந்தோம்.

திடிர்னு பத்து நாள் பிரிய போறோம்னு தெரிந்தவுடன், ஏதோ மனசை அழுத்துவதை போல் இருந்தது...

11 மணிக்கு அவளுக்கு டிரெயின்.

மணி 6.

சுமாவின் extensionக்கு போன் செய்தேன்.

"ஏ!!! என்ன சொல்லு...
அந்த குங்குமம் வேற இன்னைக்குனு பாத்து வேலை நிறைய கொடுத்திருக்கு"

"இல்லை... உன்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசனும்"

"என்ன... சொல்லு
நான் வேற இன்னைக்கு 7:15 பஸ்ஸாவது பிடிக்கனும்"

"சரி... ரயில்-வே ஸ்டஷனுக்கு எத்தனை மணிக்கு வரணும்"

"ஏ!!! அதெல்லாம் தேவையில்லை... நானே போயிக்குவன்"

"நான் உன்கிட்ட வரட்டுமா, வேணாமானு கேக்கல... எத்தனை மணிக்கு நீ ரெயில்-வே ஸ்டெஷன்ல இருப்பனு கேட்டேன்"

"நான் வீட்டில இருந்து புறப்படும் போது உனக்கு போன் பண்றனே... ஓகே வா???"

"சரி"

சுமா அடிக்கடி சொல்லுவா இந்த குங்குமம் வைக்கிற ஆம்பிளைகளையே நம்பக் கூடாதுனு. இன்னைக்கு அவனால எனக்கு பிரச்சனை.

சரி ரயில்வே ஸ்டெஷன்ல பார்த்து பேசிக்கலாம்.

வேலை செய்யவே முடியவில்லை. வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

8 மணிக்கு போன் அடித்தது. எந்த நம்பர்னே தெரியல... இந்த நேரத்துக்கு எவண்டா பண்றது.

"இது ரமேஷா???"

"ஆமாம்... நீங்க யார் பேசறது"

"நாங்க இங்க வாட்டர் டேங்க் பக்கத்துல இருந்து பேசறோம்... இங்க குமார்னு யாரோ ஒருத்தருக்கு ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கு. அவர் உங்க பிரண்டுங்களா???"

"ஆமாம்... அவர் எப்படி இருக்காரு??? எதுவும் பெருசா பிரச்சனையில்லையே"

"இல்லைங்க... தலைல ஹெல்மெட் போட்டீருந்ததால எதுவும் பெருசா இல்லை... இருந்தாலும் கை கால்ல எல்லாம் நல்லா அடிப்பட்டிருக்கு.. இங்க பக்கத்துலதான் St.John's hospitalல சேத்துருக்காங்க... நீங்க யாராவது வந்திங்கனா நல்லா இருக்கும்"

"இதோ உடனே வரேன்"

ஹாஸ்பிட்டல்... எனக்கு பிடிக்காத முதல் இடம். சின்ன வயசுல எனக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடும். அதனால் மருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மருந்து வாடையே பிடிக்காமல் போய்விட்டது.

குமார் எமெர்ஜென்ஸி வார்டில் இருந்தான். போனில் சொன்னது போல் லேசான அடியில்லை. கொஞ்சம் அதிகமாகவே அடிப்பட்டிருந்தது.

"நீங்க அவர் பிரண்டா???"

"ஆமாம்"

"அவருக்கு அவசரமா இரத்தம் தேவைப்படுது... நீங்க ரத்தம் கொடுக்க முடியுமா???"

"கண்டிப்பா...நான் ஏற்கனவே 2 தடவை கொடுத்திருக்கேன்"

"உங்க பிளட் குருப் என்ன???"

"B +ve"

"கடைசியா எப்ப பிளட் கொடுத்தீங்க???"

"காலேஜ் படிக்கும் போது. 2 வருஷமிருக்கும்"

"சரி வாங்க"

உள்ளே ஹைட், வெயிட் எல்லாம் செக் பண்ணாங்க... அப்பறம் இரத்தம் எடுக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்கள்.

என் செல் சிணுங்கியது...

Suma Calling....

"செல் போனெல்லாம் ஆப் பண்ணிடுங்க"

சரிங்க... செல் போனை ஆப் செய்தேன்.

பிறகு வெளியே வருவதற்குள் அரை மணி நேரம் ஆகிவிட்டது.

மணி பத்து...

நண்பர்கள் எல்லாம் வெளியே நின்று கொண்டிருந்தனர்.

"டேய்... பெரிய பிரச்சனை எதுவும் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாங்க!!! இன்னும் 10-15 நாள்ல சரியாயிடுமாம்" கருவாயன் சொன்னான்.

"பணம் ஒரு 10,000 வேணுமாம். நான் போயி எடுத்துட்டு வரேன். ரமேஷ் நீ கொஞ்சம் உன் வண்டி சாவியை தர முடியுமா??? "

"இந்தா பத்திரம்... அப்படியே பெட்ரோல் போட்டுக்கோ"

அப்போழுதுதான் நியாபகம் வந்தது. செல் போனை இன்னும் ஆன் செய்யவில்லை. சரி... எப்படியும் இது செல் போன்ல பேசர விஷயமில்லை.

10 நாள் தானே...

குமாரின் பெற்றோர் வந்தவுடன் ஊருக்கு சென்றேன்...

தீபாவளி ... மனதிற்கு வலியைத்தான் தந்தது... அவள்ட முன்னாடியே பேசியிருக்காலாம்.

சே!!! அவளை ஒழுங்கா, ரொமிங்கோட வாங்குனு சொன்னேன். இப்ப பாரு போன் பேசனும்னு நினைச்சாக் கூட முடியல.

"ஏன் கண்ணு ஒரு மாதிரியா இருக்க???"

"இல்லம்மா... குமார்க்கு அடிப்பட்டுடுச்சி அதனாலத்தான்"

"நீ ஒன்னும் கவலைப்படாதே!!! எல்லாம் சரியாயிடும்"

பத்து நாள் பத்து யுகங்களாக கடந்தது.

திங்கள் கிழமை காலையில் 8 மணிக்கெல்லாம் என் சீட்டில் இருந்தேன்.

சுமாவின் காலுக்காக எதிர்பார்த்து...
அவளுக்கு போன் செய்தாலும் "The number u r trying is currently not reachable"ஏ வந்தது.

செவ்வாய் கிழமை காலை 5:30 மணிக்கு கால் வந்தது...

Suma calling...

"ஏ!!! என்ன இவ்வளவு சீக்கிரம் கூப்பிடற"

"ரமேஷ்! நீ இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் ஆபிஸுக்கு வர முடியுமா???"

"ஏன் என்னாச்சி???"

"நீ நேர்ல வா!!! நான் சொல்றேன்"

"சரி...நான் 7:15க்கு சீட்ல இருப்பேன்"

"வேணாம் 8 மணிக்கு வா!!! போதும்"

"சரி"

அதுக்கு அப்பறம் தூக்கமே வரலை.

8 மணிக்கு அவளோட பில்டிங் லாபில வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

நேராக பஸ்ஸில் இருந்து வந்தவள். என்னைப் பார்த்தவுடன், லேசாக கண் கலங்கினாள்.

"இரு!!! நான் போய் என் சீட்ல என் ஹாண்ட் பேகை வெச்சிட்டு வந்துடரேன்... அப்பறம் சாப்பிட போகலாம்"

"சரி"

2 நிமிடத்திற்குள் வந்தாள்...

"வா!!! போகலாம்"

"என்ன விஷயம் சொல்லு..."

"எங்க வீட்ல எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க!!!"

ஒரு நிமிடம் பூமி சுற்றவது நின்றுவிட்டது போல் ஆகிவிட்டது...

"என்ன சொல்ற???"

"ஆமாம் ரமேஷ்!!! எங்க அப்பாவோட பிரண்ட் பையனாம்... USல இருக்கிறானாம்"

"அதுக்கு நீ என்ன சொன்ன???"

"நான் என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பார்க்கிற???"

என்னிடம் பதில் இல்லை...

"ஒரு வாரம் உட்கார்ந்து அழுதேன்... உன்னை ரீச் பண்ணவும் முடியலை. உன் மனசுல என்ன இருக்குனும் எனக்கு தெரியல... நான் என்ன பண்ண முடியும்னு நினைக்கிற ரமேஷ்"

இதற்கும் பதில் இல்லை...

"உன்னைப் பற்றி என் அம்மாட்ட சொன்னேன்... எங்கம்மா என் கால்ல விழுந்து அழுதாங்க!!! என்னால மறுக்க முடியல"

இதை சொல்லவா என்னை 8 மணிக்கு வர சொன்ன???

"ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..நாம இனிமே பார்க்க வேண்டாம்... நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்... நீ நல்லா இருக்கனும் ரமேஷ்"

அழுதுகிட்டே வேகமா திரும்ப போயிட்டா...

அவள் பிறந்த நாளுக்கு மூன்று நாட்களே இருந்தது. நான் உனக்காக தெலுகு பெசவும், எழுதவும் கத்துக்கிட்டேனே... அது எல்லாமே உனக்கு தெரியாமலே போயிடுச்சே???

உனக்கு நான் தெலுகுல என் கையால எழுதி வெச்ச அந்த கார்ட் என்னைக்கும் என் பெட்டியிலே இருக்கும்...

எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது

"டேய் மச்சான் ... குமாருக்கு பிரோமோஷன் வந்திருக்கு... அதனால இன்னைக்கு அவனோட ட்ரீட்... வா PVR போவோம்"

எல்லோரும் PVR சென்றோம்...

முதலில் என் கண்ணில் பட்டது... பிரின்ஸ் மகேஷ் பாபு in "போக்கிரி".

அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"

151 comments:

நாமக்கல் சிபி said...

நண்பர்களே,
இதுதான் நான் முதன்முதலாக எழுதும் கதை. அதனால கொஞ்சம் டைம் ஒதுக்கி படிச்சி நல்லா இருந்தா சொல்லுங்க...

பெத்தராயுடு said...

கதை சொல்லும் பாங்கு நல்லாருக்கு.
வாழ்த்துகள்.

பெங்களூர ரொம்ப மிஸ் பண்றேனோன்னு தோணுது.

வடுவூர் குமார் said...

முதல் கதை..
ஓகே..
ஆனா முடிச்சு வேறு மாதிரி இருந்திருக்கலாமோ என்னவோ?
குங்கும பொட்டு..நம்பாதே...குமார் :-))
நான் இல்லயே?

சீமாச்சு.. said...

அன்பு வெட்டிப்பயல், கதை நல்லாவே இருந்தது. இப்பொ இங்க மணி நள்ளிரவு தாண்டி 12:48 am

அப்படியும் உங்க கதையை ஃபுல்லா படிச்சு கமெண்ட் போடுறேன்னா.. கதையோட வெற்றிதான்..

நல்ல ஃப்ளோ.. அருமையான நடை.. வாழ்த்துகள். ரமேஷ் இப்ப என்ன கன்னடம்/மலையாளம் படிக்கிறாங்களாமா?

அன்புடன்,
சீமாச்சு

G.Ragavan said...

:-) மிக நல்ல முயற்சி. நல்ல முடிச்சு. கதை படிக்கிற உணர்வே இல்லாம ஏதோ அனுபவத்தைச் சொல்ற மாதிரி இருந்தது.

G.Ragavan said...

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே...வாழ்த்துகள். கதைக்குதான். முதப் பிரசவம் இல்லையா!

நாமக்கல் சிபி said...

//குங்கும பொட்டு..நம்பாதே//
இது எங்க அக்கா அடிக்கடி எனக்கு சொல்றது. ஏன்னு எனக்கு தெரியாது:-)

//குமார் :-))
நான் இல்லயே?
//
இல்லைங்க... அது சத்தியமா நீங்க இல்லை :-))

இதுல குமார் தப்பும் எதுவும் இல்லை. யார் மேலையும் இதுல தப்பு இல்லை. எல்லாம் காலத்தின் கைபொம்மைகள் :-(

நாமக்கல் சிபி said...

பெத்த ராயிடு,
//கதை சொல்லும் பாங்கு நல்லாருக்கு.
வாழ்த்துகள்//
மிக்க நன்றி...

//பெங்களூர ரொம்ப மிஸ் பண்றேனோன்னு தோணுது//
உங்களுக்குள்ள ஏதோ கதை இருக்கற மாதிரி தோனுது... இருந்தா சொல்லுங்க :-)

நாமக்கல் சிபி said...

//அன்பு வெட்டிப்பயல், கதை நல்லாவே இருந்தது. இப்பொ இங்க மணி நள்ளிரவு தாண்டி 12:48 am

அப்படியும் உங்க கதையை ஃபுல்லா படிச்சு கமெண்ட் போடுறேன்னா.. கதையோட வெற்றிதான்..//

சீமாச்சு, இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு... எனக்கு இதை எழுத 4 மணி நேரமாச்சி. அனால் உங்க கமெண்டை பார்த்தவுடன் ஒரு திருப்தி.

//நல்ல ஃப்ளோ.. அருமையான நடை.. வாழ்த்துகள். ரமேஷ் இப்ப என்ன கன்னடம்/மலையாளம் படிக்கிறாங்களாமா?
//
ரமேஷ் தமிழோடவே இருந்திருக்கலாம்னு ஃபீல் பண்ணிட்டிருக்கிறார்.

அப்பறம் சீமாச்சு, இங்கயும் மணி அதே தான் :-))

நாமக்கல் சிபி said...

//:-) மிக நல்ல முயற்சி. நல்ல முடிச்சு. கதை படிக்கிற உணர்வே இல்லாம ஏதோ அனுபவத்தைச் சொல்ற மாதிரி இருந்தது.//
மிக்க நன்றி. வசிஷ்டர் வாயால பிரம்மரிஷி பட்டம் வாங்கற மாதிரி இருக்கு.
அனுபவமெல்லாம் இல்லைங்க...
ரொம்ப யோசிச்சி எழுதன கதை.

//அப்புறம் சொல்ல மறந்துட்டேனே...வாழ்த்துகள். கதைக்குதான். முதப் பிரசவம் இல்லையா!//
மிக்க நன்றி

வினையூக்கி said...

"Feel Good" story.

நாமக்கல் சிபி said...

vinaiyUkki,
Thx a lot...

இன்பா,
மிக்க நன்றி

துளசி கோபால் said...

முதல் கதை நல்லா வந்திருக்கு.
கொஞ்சம் நீளமாப் போச்சோ?

கண்ணைத் தொடைச்சுக்கிட்டு, ஒரு தமிழ் தெரிஞ்ச கொல்ட்டியை ஃப்ரெண்ட் பண்ணிக்குங்க:-))))

siva gnanamji(#18100882083107547329) said...

முதல் கதையா!
ஏன் சார் கதை வுட்றீங்க?

எண்ணச்சிதறல்கள் said...

படித்து முடிக்கும் வரை கதையென்று நினைக்கவில்லை. அனுபவம் போல்தான் இருந்தது. உண்மையிலேயே மனதை ஏதோ பண்ணியது...

Anonymous said...

Truly its beautiful story!
Karvendan

லக்கிலுக் said...

தலைவா வெட்டி!

உங்க கதைய இங்கே போட்டிருக்காங்க... பாத்தீங்களா?

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=2897

Unknown said...

இது கதைன்னு யாருகிட்ட கதை விடறே? நேத்து கேட்டோம் இன்னிக்கு எழுதிட்டீங்க, நன்றி வெட்டி :))

Unknown said...

என்னக் கதை சொல்லச் சொன்னா எந்தக்கதை சொல்லுரது, சொந்தக்கதை சோகக் கதை நெஞ்சுக்குள்ள நிக்கிறது :(

நாமக்கல் சிபி said...

துளசி டீச்சர்,

//முதல் கதை நல்லா வந்திருக்கு//
மிக்க நன்றி.

//கொஞ்சம் நீளமாப் போச்சோ?//
ரொம்ப நீளமாப் போயிடுச்சி. எப்படி சுருக்கறதுனே தெரியல. எப்படித்தான் எல்லாம் கதை எழுதறீங்கனே புரியமாட்டீங்குது :-)

//கண்ணைத் தொடைச்சுக்கிட்டு, ஒரு தமிழ் தெரிஞ்ச கொல்ட்டியை ஃப்ரெண்ட் பண்ணிக்குங்க:-)))) //
பண்ணிக்குங்க இல்லை... இந்த அட்வைஸை ரமேசுக்கு அனுப்பிட்டேன் ;)

கப்பி | Kappi said...

வெட்டி..

கதை நல்லா இருக்குங்க...

காலைல ஆபிஸ் வந்ததும் ஃபீல் பண்ண வச்சுட்டீங்க :)

வாழ்த்துக்கள்..

பிகு : + போட்டாச்சு ;)

நாமக்கல் சிபி said...

சிவஞானம்ஜி,
//முதல் கதையா!
ஏன் சார் கதை வுட்றீங்க?
//
சார் எல்லாம் வேண்டாம்... நான் ரொம்ப சின்ன பையன் :-)

முதல் கதைதாங்க... நம்புங்க...

தமிழ்பாட்காஸ்டர்,
//படித்து முடிக்கும் வரை கதையென்று நினைக்கவில்லை. அனுபவம் போல்தான் இருந்தது. உண்மையிலேயே மனதை ஏதோ பண்ணியது... //
ரொம்ப நன்றி.

abiramam,
//Really good. Most of the contents happened in my life. Same Telegu Girl, same IT firm (CTS) and We failed - not our love- I hope TIME is the only medicine for me and the hero of your story. :( :( :(....paining..... //

Don't Worry... Time is the best medicine in the world. It has the power to heal all the wounds.
Also there is NO FAIL in Love.

நாமக்கல் சிபி said...

karvendan,
Thx a lot.

luckylook,
மிக்க நன்றி.
BTW, அது என்ன tamilnadutalk.com???

நாமக்கல் சிபி said...

மகி,
உங்களையும், கப்பியையும்தான் தேடிக்கிட்டு இருந்தேன்...

//இது கதைன்னு யாருகிட்ட கதை விடறே? //
//என்னக் கதை சொல்லச் சொன்னா எந்தக்கதை சொல்லுரது, சொந்தக்கதை சோகக் கதை நெஞ்சுக்குள்ள நிக்கிறது :( //
கதை சொல்லு, கதை சொல்லுனு சொல்லிட்டு இது என்ன விளையாட்டு???

//நேத்து கேட்டோம் இன்னிக்கு எழுதிட்டீங்க, நன்றி வெட்டி :))//
நேத்து கேட்டதுக்கு நேத்துதான் எழுதனேன்.

நாமக்கல் சிபி said...

//கதை நல்லா இருக்குங்க...

காலைல ஆபிஸ் வந்ததும் ஃபீல் பண்ண வச்சுட்டீங்க :)
//
கப்பி,
நன்றி.
இத்தனை தடவை கேக்கறீங்க, நமக்கு வேற கதையெல்லாம் எழுதி பழக்கமில்லைனு யோசிச்சேன்.

சரி நமக்கு கதை எழுத வருமானு ரொம்ப யோசிச்சி எழுத ஆரம்பிச்சது. எப்படியே கேவலமா இருக்குனு யாரும் சொல்லல. அதுவே சந்தோஷம்தான் :-))

//பிகு : + போட்டாச்சு ;) //
இதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி ;)

Arunkumar said...

கதை நல்லா இருக்கு...

கதைலயாவது நம்மல மாதிரி s/w மக்கல் ஜெயிக்கிரதா காமிச்சிருக்கலாம் :)

i had stopped blogging... reading blogs like urs tempts me to get back to writing !!!

-Arun

நாமக்கல் சிபி said...

Arunkumar said...

//கதை நல்லா இருக்கு...//
மிக்க நன்றி அருண்

//கதைலயாவது நம்மல மாதிரி s/w மக்கல் ஜெயிக்கிரதா காமிச்சிருக்கலாம் :)//
கதை என்பதால்தான் தோக்கற மாதிரி எழுதியிருக்கேன். நிஜமா இருந்தா எப்படியாவது போராடி ஜெயிக்க வெச்சிருப்பேன் :-)

//i had stopped blogging... reading blogs like urs tempts me to get back to writing !!!
//
இவனே எழுதும் போது நாமளும் கண்டிப்பா எழுதலாம்னா??? Just kidding ;)

Thx Arun...

எழுதுங்க... படிக்க நிறைய பேர் இருக்கோம் :-)

கால்கரி சிவா said...

வெட்டிபயல், நிஜமாலுமே கதையா? யாருக்கோ சிகனல் கொடுத்த மாதிரி இருக்கே

கால்கரி சிவா said...

வெட்டிபயல், நிஜமாலுமே கதையா? யாருக்கோ சிகனல் கொடுத்த மாதிரி இருக்கே

Syam said...

தேன்கூட்டுல காதல் அப்படினு போட்டி வெச்சா உங்களுக்கு முதல் பரிசு நிச்சயம்....

சரி இது சொந்த கதை தான :-)

நாமக்கல் சிபி said...

Calgary சிவா said...
//வெட்டிபயல், நிஜமாலுமே கதையா? //

நிஜமாலுமே கதை தாங்க... நம்புங்க.

//யாருக்கோ சிகனல் கொடுத்த மாதிரி இருக்கே//
அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஆனால் நீங்க இப்படி யோசிக்கிற அளவுக்கு எழுதிரிக்கோமானு எனக்கே ரொம்ப சந்தோஷமா இருக்குது.

நாமக்கல் சிபி said...

//Syam said...
தேன்கூட்டுல காதல் அப்படினு போட்டி வெச்சா உங்களுக்கு முதல் பரிசு நிச்சயம்....
//
நீங்க சொன்னதே ஜெயிச்ச மாதிரி சந்தோஷமா இருக்குது...

//சரி இது சொந்த கதை தான :-)
//
ஆமாம் Syam, நானே சொந்தமா யோசிச்சி எழுதனதுதான் ;)

நாமக்கல் சிபி said...

Madura said...
//ரொம்ப நல்லா வந்திருக்கு கதை - இயல்பாக இருப்பதே இதோட பெரிய பாஸிட்டிவ் பாயின்ட். இதே மாதிரி எழுதுங்க எப்பவுமே! முதல் கதையிலயே கலக்கிட்டீங்களே!
//
மிக்க நன்றி. இந்த மாதிரியே எழுத முயற்பி பண்றேன்.

வஜ்ரா said...

பாலாஜி,

நல்ல கதை...எழுதுகின்றீர்கள்..

தமிழ் படம் பார்த்த மாதிரியே இருக்கே...!!

Santhosh said...

வெட்டி கதை நல்லா இருந்தது.
//ஆமாம் Syam, நானே சொந்தமா யோசிச்சி எழுதனதுதான் ;) //
நம்பிட்டோமில்ல..
நீங்க popeye ரசிகரா நாங்களும் popeye கோஷ்டி தான். :)) வெட்டிப்பயலுங்க எல்லோரூம் ஒரே மாதிரி தான் இருக்கோம் :))

நாமக்கல் சிபி said...

வஜ்ரா ஷங்கர் said...
//பாலாஜி,

நல்ல கதை...எழுதுகின்றீர்கள்..
//
மிக்க நன்றி, சங்கர்

//தமிழ் படம் பார்த்த மாதிரியே இருக்கே...!! //
நண்பனுக்கு ஆக்ஸிடென்ட் நடக்கறது எல்லாம் தமிழ் படம் மாதிரி தான் இருந்தது... சரி இதுக்கு மேல வளக்க வேண்டாம்னு முடிச்சிட்டேன் ;)

நாமக்கல் சிபி said...

சந்தோஷ் said...
//
வெட்டி கதை நல்லா இருந்தது.
//
மிக்க நன்றி

//
//ஆமாம் Syam, நானே சொந்தமா யோசிச்சி எழுதனதுதான் ;) //
நம்பிட்டோமில்ல..
//
நம்பனா பாலாஜிக்கு சந்தோஷம்... நம்பலைனா வெட்டிக்கு சந்தோஷம்.

//
நீங்க popeye ரசிகரா நாங்களும் popeye கோஷ்டி தான். :))
//
Popeye எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Tom & Jerryயும் பிடிக்கும்...

//வெட்டிப்பயலுங்க எல்லோரூம் ஒரே மாதிரி தான் இருக்கோம் :))
//
:)))

Udhayakumar said...

WoW!!!!

There is no tamil keyboard:-(

நாமக்கல் சிபி said...

Udhayakumar said...
//WoW!!!!

There is no tamil keyboard:-(
//
ஆளையே காணோம்னு பாத்துட்டு இருந்தேன்...

ஹீரோக்கு உதய்னு தான் பேர் வைக்கலாம்னு பாத்தேன் ;)

அப்பறம் எல்லோரும் முடிவை தெரிஞ்சிக்குவாங்கனு பேரை மாத்திட்டேன் ;)

tamizhppiriyan said...

கதை அருமை பாலாஜி...முடிவு கதையை மனதில் பதிய வைக்கிறது..
என்ன ஆகுமோ என்ற ஏக்கம் வாசிப்பவரை தூண்டுகிறது..
வாழ்த்துக்கள்..மேலும் எழுதுக!

நாமக்கல் சிபி said...

தமிழ்ப்பிரியன் said...

//கதை அருமை பாலாஜி...முடிவு கதையை மனதில் பதிய வைக்கிறது..
என்ன ஆகுமோ என்ற ஏக்கம் வாசிப்பவரை தூண்டுகிறது..
வாழ்த்துக்கள்..மேலும் எழுதுக!
//
நன்றி சங்கர்...

Udhayakumar said...

//ஹீரோக்கு உதய்னு தான் பேர் வைக்கலாம்னு பாத்தேன் ;)

அப்பறம் எல்லோரும் முடிவை தெரிஞ்சிக்குவாங்கனு பேரை மாத்திட்டேன் ;)//

இதெல்லாம் நல்லாயில்லை... மைக் மோகன், முரளி மாதிரி ஒரு இமேஜ் குடுத்துருவீங்க போல இருக்கு....

Udhayakumar said...

சுமா நினைத்திருந்தால் ரமேஷுக்கு அப்பவே போன் பண்ணியிருக்கலாம். ரமேஷ்கிட்ட அவ வீட்டு நம்பர் இல்லைங்கறது சரிதான்.ஆனா அவங்க ரெண்டு பேரும் IT ல வேலை செய்யராங்க. கட்டாயம் ஏதாவது ஒரு வகையில கண்டுபிடிச்சிருக்கலாம். இதில் மட்டும் சறுக்கல்.

இது மட்டும் இல்லைன்னு வைச்சுக்குங்க, இது ரமேஷ் கதையில்லை, பாலாஜி கதை ன்னு எல்லோருக்கும் சொல்லி கொல்ட்டி பொண்ணைத் தேடிப் பிடிக்க உத்தரவு போட்டிருப்பேன்.

நாமக்கல் சிபி said...

Udhay...
//
இதெல்லாம் நல்லாயில்லை... மைக் மோகன், முரளி மாதிரி ஒரு இமேஜ் குடுத்துருவீங்க போல இருக்கு.... //
அப்பறம் நாங்க நிஜமல்ல கதையோட அடுத்த பகுதியை போடுங்கனு சொன்ன கேக்கலை இல்லை... அதனாலதான் ;)

நாமக்கல் சிபி said...

உதய்,
//சுமா நினைத்திருந்தால் ரமேஷுக்கு அப்பவே போன் பண்ணியிருக்கலாம். ரமேஷ்கிட்ட அவ வீட்டு நம்பர் இல்லைங்கறது சரிதான்.ஆனா அவங்க ரெண்டு பேரும் IT ல வேலை செய்யராங்க. கட்டாயம் ஏதாவது ஒரு வகையில கண்டுபிடிச்சிருக்கலாம். இதில் மட்டும் சறுக்கல்.
//

இவுங்க 2 பேருக்கும் Common ஆளுங்களே 4-5 பேர்தான்... 10 நாள் லீவ்ல எல்லோரும் ஊர்க்கு போயிருக்கமாட்டாங்களா???
ரமேஷ் வீட்டு நம்பரே சுமாகிட்ட இல்லாதப்ப, மீதி பேர் வீட்டு நம்பர் இருக்கும்னு நினைக்கிறேங்களா???

ஆனால் இதை வைத்து கதை கட்ட நினைக்க வேண்டாம் ;)

குமரன் (Kumaran) said...

அருமையிலும் அருமை பாலாஜி. மிக நன்றாக எடுத்துச் சென்றிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்து (என் அணியில் என்னுடன் வேலைபார்த்த) தம்பிகள் சிலரின் வாழ்க்கையில் நீங்கள் விவரித்திருக்கும் இவை எல்லாமே நடைபெற்றதை நான் பார்த்திருப்பதால் இது கதை என்று தோன்றவில்லை; உங்கள் ஒருவரின் அனுபவமாகவோ இல்லை யாராவது நண்பரின் அனுபவமாகவோ இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. நீளமாக இருக்கிறது என்று தாள் பிரதி எடுத்துக் கொண்டேன்; ஆனால் படிக்கத் தொடங்கியபின் படித்து முடித்துத் தான் நிமிர்ந்தேன். நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

நாமக்கல் சிபி said...

குமரன் (Kumaran) said...
//அருமையிலும் அருமை பாலாஜி. மிக நன்றாக எடுத்துச் சென்றிருக்கிறீர்//

மிக்க நன்றி குமரன்...

Anu said...

Nice but idhu
nijamavae karpanai kadadidana
illa real incidenta

நாமக்கல் சிபி said...

Anitha,
Its not real incident but I have heard abt my friend's loving telugu girls and they got married to US return guys :-x

All the dialogues and the situation are of my own imagination :-))

நாமக்கல் சிபி said...

குமரன்,
//நீளமாக இருக்கிறது என்று தாள் பிரதி எடுத்துக் கொண்டேன்//
உண்மையில் தமிழை வாழ வைக்கிறீர்கள்... மிக்க நன்றி

Unknown said...

கதை நல்லா இருக்கு பாலாஜி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

Brilliant. Please keep the same style. I almost felt like reading Balakumaran of initial days. I really did not see the category first and was quite touched. Thats your success. Hope you become a new find for Tamil short story writing.

இலவசக்கொத்தனார் said...

வெ.பை.

கதை நன்றாக இருந்தது. முன்னமே படித்தேன். இப்பொழுதுதான் சொல்ல முடிந்தது.

இந்த கடைசி வரிகள் மட்டும் தூர்தர்ஷன் நாடகங்களில் வரும் ஒரு செயற்கையான முடிவாய்த் தெரிகிறது.

இதை உறவுகள் போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே.

நாமக்கல் சிபி said...

Dev said...
//கதை நல்லா இருக்கு பாலாஜி. வாழ்த்துக்கள். //
தேவ்,
மிக்க நன்றி.

Anonymous said...
//Brilliant. Please keep the same style. I almost felt like reading Balakumaran of initial days. I really did not see the category first and was quite touched. Thats your success. Hope you become a new find for Tamil short story writing.
//
Anony, Thx a lot...

நாமக்கல் சிபி said...

இலவசக்கொத்தனார் said...
//
வெ.பை.

கதை நன்றாக இருந்தது. முன்னமே படித்தேன். இப்பொழுதுதான் சொல்ல முடிந்தது.

இந்த கடைசி வரிகள் மட்டும் தூர்தர்ஷன் நாடகங்களில் வரும் ஒரு செயற்கையான முடிவாய்த் தெரிகிறது.
//
கொத்ஸ்,

மிக்க நன்றி. கடைசி வரினு எதை சொல்றீங்கனு தெரியல... ஆனால் PVR போய் தெலுகு படம் போஸ்டர் பார்த்தது கற்பனை இல்லை... நானே அந்த பையனை ஓட்டியிருக்கேன். ஆனால் அது போக்கிரி இல்லை அத்தடு...

//
இதை உறவுகள் போட்டிக்கு அனுப்பி இருக்கலாமே.
//
ஒரே ஒரு ஓட்டுதான் விழும்... அதுவும் என்னோடையதாதான் இருக்கும்.

நான் இந்த விளையாட்டுக்கு வரலை ;)

ரவி said...

அஸ்க்கு புஸ்க்கு...வெட்டிப்பயல்...இது உங்க கதைதானே...

யாரை ஏமாத்த பாக்குறீங்க...

அப்படியே சொந்த கதையை அள்ளி விட வேண்டியது...அப்புறம் இது என்னோட சிறுகதை..முதல் கதைனு குடாக்கு பேசவேண்டியது....

பெங்களூரை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்...

சுமா கன்னட திருநாமம் ஆச்சே...பேரை மாத்திட்டீங்களா...

:))

நாமக்கல் சிபி said...

செந்தழல் ரவி said...
//அஸ்க்கு புஸ்க்கு...வெட்டிப்பயல்...இது உங்க கதைதானே...

யாரை ஏமாத்த பாக்குறீங்க...//

நான் எங்க ஏமாத்தினேன்??? இது என் கதை தான்... நானா தான் எழுதினேன்.

//அப்படியே சொந்த கதையை அள்ளி விட வேண்டியது...அப்புறம் இது என்னோட சிறுகதை..முதல் கதைனு குடாக்கு பேசவேண்டியது....//
இல்லைங்க... என் ரூம்-மேட் ஒருத்தனை தெலுகு பொண்ணை வெச்சி ஓட்டுவாங்க... அவன் தெலுகு படமெல்லம் பார்ப்பான்... மீதியெல்லாம் நம்ம சொந்த கற்பனை.
ஆனால் நீங்க சொல்றதையல்லாம் கேக்கும் போது இந்த கதை உங்களுக்கு எல்லாம் நிஜம்னு தோன்ற மாதிரி எழுதியிருக்கோம்னு ரொம்ப சந்தோஷமா இருக்கு...

//பெங்களூரை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்...//
எல்லாம் நம்ம சுத்தன இடம்... என்ன பண்றது எல்லாம் பசங்க கூட போனது :-(... கிருஷ்ணா கபே என்னோடைய ஃபவரேட்...

//சுமா கன்னட திருநாமம் ஆச்சே...பேரை மாத்திட்டீங்களா...//
ஓ அப்படியா???

Sivabalan said...

அட!!!!!

Anonymous said...

kalakeeteeinga poonga
-Kavitha

நாமக்கல் சிபி said...

சிவபாலன்,
//அட!!!!"//
இதுக்கு என்னங்க அர்த்தம்???

//Anonymous said...
kalakeeteeinga poonga
-Kavitha
//
நன்றி கவிதா

Sivabalan said...

பாலாஜி

முதல் படைப்பே அருமை என சொல்லத்தான்.. அட!!!

Sivabalan said...

பாலாஜி

முதல் படைப்பே அருமை என சொல்லத்தான்.. அட!!!

நாமக்கல் சிபி said...

Sivabalan said...
//
பாலாஜி

முதல் படைப்பே அருமை என சொல்லத்தான்.. அட!!!
//
நன்றி சிபா.
அட நீயெல்லாம் கூட கதையெழுத ஆரம்பிச்சிட்டயானு நீங்க கேக்கறீங்க (அதுக்குதான் ஆச்சர்ய குறி போட்டுருக்காரு)னு.. என் பக்கத்துல இருக்கறவன் ஓட்டறான். அதனாலத்தான் கேட்டேன் :-)

Anonymous said...

Story is good,

Krishna cafea, Salem kitchen... ellam nanum miss panran.

நாமக்கல் சிபி said...

கொத்ஸ்,
தேன்கூடு போட்டிக்கு அனுப்பியிருக்கேன்...

எப்படியும் இனி உண்மையான விமர்சனங்கள் கிடைக்கும்

நாமக்கல் சிபி said...

akil,
Thx a lot...

நண்பர்களே,
தேன்கூடு போட்டிக்கு எப்படி யுனிகோட் பார்மெட்டில் அனுப்புவது என்று எனக்கு தெரியவில்லை. யாராவது உதவி செய்யுங்களேன்...

சிறில் அலெக்ஸ் said...

எதார்த்தமா இருக்கு கதை...
கன்னி முயற்சியிலேயே வின்னராயிட்டீங்க வாழ்த்துக்கள்.

இந்தத் தமிழ் தெலுங்கு போட்டி நானும் பாத்துருக்கேன்.. நல்ல சில நண்பர்களைப்பெறும்வரை நான்கூட தெலுங்கு மக்களைப் பற்றி கொஞ்சம் குறைவாகவே மதிப்பிட்டிருந்தேன்..

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

SathyaPriyan said...

அருமையாக இருந்தது தங்களது கதை. இன்ஃபோஸிஸ் நிறுவனம், பெங்களூர் வாழ்க்கை, PVR சினிமா மூன்றும் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். தங்களது இந்த கதை அவற்றை மீண்டும் நினைவூட்டியது.

நாமக்கல் சிபி said...

//எதார்த்தமா இருக்கு கதை...
கன்னி முயற்சியிலேயே வின்னராயிட்டீங்க வாழ்த்துக்கள்.//
நன்றி அலெக்ஸ்

//
இந்தத் தமிழ் தெலுங்கு போட்டி நானும் பாத்துருக்கேன்.. நல்ல சில நண்பர்களைப்பெறும்வரை நான்கூட தெலுங்கு மக்களைப் பற்றி கொஞ்சம் குறைவாகவே மதிப்பிட்டிருந்தேன்..
//
நான் என் தெலுகு பிரண்ட்ஸ் எல்லாத்தையும் ரவிதேஜாவை / பாலைய்யாவை எல்லாம் வைத்து ஓட்டுவேன்... இப்ப எல்லாம் மாறிடுச்சி...

//
அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
//
மிக்க நன்றி...

நாமக்கல் சிபி said...

SathyaPriyan said...
//அருமையாக இருந்தது தங்களது கதை. இன்ஃபோஸிஸ் நிறுவனம், பெங்களூர் வாழ்க்கை, PVR சினிமா மூன்றும் என் வாழ்வில் மறக்க முடியாதவை ஆகும். தங்களது இந்த கதை அவற்றை மீண்டும் நினைவூட்டியது.
//
மிக்க நன்றி
ஆஹா, கம்பெனி முதல் கொண்டு எல்லாம் சரியா சொல்றீங்க... நல்ல வேலை புட் கோர்ட் பேரெல்லாம் சொல்லலை ;) தப்பா நினைக்கலைனா உங்க மெயில் ஐடி தர முடியுமா???

விழிப்பு said...

வெட்டி,

சரளமான நடை. முழுதும் படித்துவிட்டுத்தான் நிமிர்ந்தேன்.

அடுத்த சில மணி நேரங்களுக்கு மனம் கதையை சுற்றியே இருந்தது.

நாமக்கல் சிபி said...

விழிப்பு! said...
//வெட்டி,

சரளமான நடை. முழுதும் படித்துவிட்டுத்தான் நிமிர்ந்தேன்.
//
விழிப்பு,
மிக்க நன்றி...

//
அடுத்த சில மணி நேரங்களுக்கு மனம் கதையை சுற்றியே இருந்தது.
//
இதை படிக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...

கதிர் said...

வெட்டி,

விஷுவலா பார்த்த மாதிரி இருக்கு,
நல்லா இருக்கு,

அன்புடன்
தம்பி

Vaa.Manikandan said...

அது எல்லாம் இருக்கட்டும்...தலைப்பு வெச்சதுக்கு லாரி ல ஆள் அனுப்புவா? ;)

நாமக்கல் சிபி said...

தம்பி said...
//வெட்டி,

விஷுவலா பார்த்த மாதிரி இருக்கு,
நல்லா இருக்கு,

அன்புடன்
தம்பி
//
மிக்க நன்றி தம்பி...

Vaa.Manikandan said...
//அது எல்லாம் இருக்கட்டும்...தலைப்பு வெச்சதுக்கு லாரி ல ஆள் அனுப்புவா? ;)
//
மணிகண்டன்,
நான் என் தெலுகு நண்பர்களூக்கு கதையை சொல்லிட்டு தலைப்பை சொல்லி நல்லா இருக்கனு கேட்டுதான் வெச்சேன்... அதுவும் இல்லாம இந்த தலைப்புதான் இதுக்கு சரியா இருக்கும்னு என் மனசுல பட்டுச்சு. இதுல நான் தெலுகு பேசறவங்கள பத்தி தப்பா சொல்லல... மலையாளம் பேசரவங்களை மல்லுனு சொல்ற மாதிரிதான் இதுவும்... ஆமாம் கதையை படிச்சீங்களா???

Anonymous said...

still u have to improve a lot...but this story's climax was good....touched..... got boared somewat at the begging..... when i read this i thought u say ur own story...... concept and ending is realy good(not excellent)... flow to be improved....

நாமக்கல் சிபி said...

Anony,
thx a lot..

//still u have to improve a lot...
got boared somewat at the begging.. flow to be improved....
//
Just a beginning for me... Will try to improve..

//when i read this i thought u say ur own story//
:-))

//but this story's climax was good....touched.....concept and ending is realy good(not excellent)... //
thx a lot...

கார்த்திக் பிரபு said...

thalaiva nan innumkadhai padikklai copy panni store panni vaithrukirane.padichutu comment s idurane..melun ungal pakkthirku en blogilirundhu link kodukirane..ungal anumadhiyodu

மதுமிதா said...

///

நண்பர்களே,
இதுதான் நான் முதன்முதலாக எழுதும் கதை. அதனால கொஞ்சம் டைம் ஒதுக்கி படிச்சி நல்லா இருந்தா சொல்லுங்க... ///

டைம் ஒதுக்கி படிச்சாச்சுங்க.

நல்லா இருக்கு முதல் கதையே.
ஒரு வருஷத்தில எங்கேயோ இருப்பீங்க.

///கண்ணைத் தொடைச்சுக்கிட்டு, ஒரு தமிழ் தெரிஞ்ச கொல்ட்டியை ஃப்ரெண்ட் பண்ணிக்குங்க:-)))) ///

துளசிம்மா
மதுமிதாவைச் சொல்லலியே:-)))
துளசியைச் சொன்னீங்களா???

Online Security Tips and Tricks for Kids said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல கதை படிச்ச திருப்தி. வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//நல்லா இருக்கு முதல் கதையே.
ஒரு வருஷத்தில எங்கேயோ இருப்பீங்க.
//

எங்கேயோவா??? வேணாங்க நான் இங்கேயே இருந்துக்கிறேன்...
Just Kidding :-)

மிக்க நன்றி... இந்த மாதிரி நீங்க எல்லாம் சொன்னதை வெச்சி போட்டிக்கு வேற அனுப்பிட்டேன் :-)

நாமக்கல் சிபி said...

சங்கர்,
மிக்க நன்றி...

Sivabalan said...

பாலாஜி

அடுத்த கதையை போடுங்க.. படிப்போம்...

நாமக்கல் சிபி said...

Sivabalan said...
//
பாலாஜி

அடுத்த கதையை போடுங்க.. படிப்போம்...
//

அடுத்த கதை ரெடி... ஞாயிறன்னைக்கு போட்டுடறேன்...

அதுவும் இதே மாதிரி பிளாட் தான் :-)

கார்த்திக் பிரபு said...

vettipayal enna solradhunnu theriyala..inga en comments potta neenga ennai orkut la thaniya koopitu thittu viduveenga..so nan ungalukku mail anupurane padinga..
ungalukku parisu kandippaga undu adhu ondru mudhal aprisu ..illainaa 4 th place..nan ean ippadi sonanenu unga mailil parunga..bye

ps: but pls publish this comment pa!!!

நெல்லைக் கிறுக்கன் said...

ரொம்ப அருமயான கத வே... மனச என்னவோ பண்ணுது. இதே மாதிரி இன்னும் நெறய எழுதும்...

நாமக்கல் சிபி said...

கார்த்திக்,
அப்படி திட்ற மாதிரி என்ன சொல்ல போற??? சரி எதுவா இருந்தாலும் மெயில்லே சொல்லு... நீயா எதாவது கற்பனை பண்ணிக்காத...

அப்பறம் அது என்ன லாஜிக் முதலிடம் இல்லை 4வது இடம்...

ஆமாம் இது நம்ம அண்ணன் சிபி சொல்ற மாதிரி கடைசில இருந்து இல்லையே ;)

நாமக்கல் சிபி said...

நெல்லைகிறுக்கன் said...
//
ரொம்ப அருமயான கத வே... மனச என்னவோ பண்ணுது. இதே மாதிரி இன்னும் நெறய எழுதும்...
//

நெல்லைகிறுக்கன்,
மிக்க நன்றி... அப்படியே தேன்கூடுல ஓட்டு போட்ருங்க...

ஜோ/Joe said...

ரொம்ப நல்லாருக்கு!

நாமக்கல் சிபி said...

ஜோ,
மிக்க நன்றி..

Vaikunth said...

நல்லா இருக்கு. ஏதோ சொந்த கதை மாதிரி இருக்கறதனால ஒரு சுவாரசியம் வருது. நடை நல்லா இருக்கு.

ஆனா கொங்சம் எல்லாருக்கும் தெரியர இடங்கள போட்ட எல்லாராலயும் இன்னும் ரசிக்க முடியும் உதாரணமா "புட் கோர்ட்'க்கு பதிலா 'கேண்டீன்'னு போடலாம், வலைபதிவாளர்களுக்கு புரியும் ஆனால் எல்லாருக்கும் புரியனும்னு அவசியமில்லை.

நாமக்கல் சிபி said...

வைக்,
மிக்க நன்றி

//ஆனா கொங்சம் எல்லாருக்கும் தெரியர இடங்கள போட்ட எல்லாராலயும் இன்னும் ரசிக்க முடியும் உதாரணமா "புட் கோர்ட்'க்கு பதிலா 'கேண்டீன்'னு போடலாம், வலைபதிவாளர்களுக்கு புரியும் ஆனால் எல்லாருக்கும் புரியனும்னு அவசியமில்லை.
//
எனக்கு புட் கோர்ட்னு சொல்லி சொல்லியே பழக்கமாயிடுச்சி. (கேண்டீன்னா காலேஜ் தான் ஞாபகம் வருது.) அதனால அந்த மாதிரி சின்ன சின்ன தப்பு நடந்துடுச்சி. அடுத்த தடவை மாத்திக்கலாம்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கதையை நீங்கள் கொண்டு சென்ற விதம் அற்புதம் ரொம்ப நல்லா இருந்ததுங்க.

நாமக்கல் சிபி said...

குமரன் எண்ணம்,
மிக்க நன்றி. மறக்காம ஓட்டு போடுங்க...

மதி said...

நூறாவது ஆளா உள்ள நுழையலாம் பார்த்தேன். சரி பின்நூட்ட‌த்துக்கு பதில் சொல்லி நீங்களே சதம் போட்டுடுங்க. இந்த கதையை பத்திதான் இத்தனை பேரு அலசிட்டாங்களே, அடுத்த கதை ரெடின்னு சொல்லீருக்கீங்க,அதையும் படிச்சிட்டு, ஆரம்பத்திலேயே கருத்து சொல்லிடலாம்

நாமக்கல் சிபி said...

மதி,
தொடர்ந்து இரண்டு பின்னூட்டமிட்டால் 100ஐத் தொட்டுருப்பீர்கள்.

அடுத்த கதைக்கு ஆரம்பத்துலே வந்துடுங்க :-)

நாமக்கல் சிபி said...

itisthebest said...
//
yadarthamaana kathai, very good, sorry for my late comments, cause i just seen your page. keep it up.
//

Thx a lot...

Siva said...

Hi,
Very nice story.Infact I regularly read your blog,but this is my first post.Keep it up.

Cheers,
Siva

நாமக்கல் சிபி said...

Kattuvasi said...
//Hi,
Very nice story.Infact I regularly read your blog,but this is my first post.Keep it up.

Cheers,
Siva
//
Hi Siva,
Thx for the comments.

Anonymous said...

hi vets

story romba swarasyama irunthudu,namma hero yaen love success aaga oru muyatchiyum edukala, anyway that ending was cool and touching.thodarnthu ezhudhungal.best of luck.

நாமக்கல் சிபி said...

yogen said...
//
hi vets

story romba swarasyama irunthudu,namma hero yaen love success aaga oru muyatchiyum edukala//
யோகன்,

//ரமேஷ்... நீ எதுவும் சொல்ல வேண்டாம். என்னை பொருத்தவரை நீ எதுவுமே சொல்லமலே இருந்த மாதிரி இருக்கட்டும்..//
இந்த வார்த்தைகள்தான் அவனை எதுவும் பேசவிடாமல் செய்துவிட்டது.

என்னதான் ரொம்ப நெருங்கி பழகினாலும் காதலை சொல்ல தயக்கமிருக்கும். சொல்லலாம்னு நினைக்கும் போது இனி சொல்ல வேண்டிய அவசியமில்லைனு ஆகிடுச்சு.

// anyway that ending was cool and touching.thodarnthu ezhudhungal.best of luck.
//
மிக்க நன்றி...

நாமக்கல் சிபி said...

கிறுக்கன் said...
//
அருமையா எழுதியிருக்கீங்க. கொஞ்சம் feel பண்ண வச்சுட்டீங்க.
//
மிக்க நன்றி!!! நீங்க ஃபீல் பண்ணதுதான் எனக்கு சந்தோஷமே!!!

//
தொடர்ந்து எழுதுங்கள்...
//
இந்தியா போற வரைக்கும் கண்டிப்பா எழுதிட்டுத்தான் இருப்பேன் :-)

//Lowellல தான இருக்கீங்க, மனசு கஷ்டமா இருக்கும் போது ஒரு போன் போட்டு கதை கேட்டுக்கலாம் போல இருக்கே!!//
தாராளமா பண்ணுங்க பேசலாம்!!! இல்லனா நம்பர் கொடுத்தீங்கனா நானே பண்ணறேன்...

Anonymous said...

நெஞ்சை கனக்க வைத்த கதை. அழ வச்சுட்டீங்க !

நாமக்கல் சிபி said...

//Premkumar said...
நெஞ்சை கனக்க வைத்த கதை. அழ வச்சுட்டீங்க !
//
ப்ரேம் குமார்,
மனச தேத்திக்கோங்க... எல்லாம் ஒவ்வொருத்தர் வாழ்க்கைலயும் நடக்கறதுதான்

Anonymous said...

கதை சூப்பர். படித்து முடித்த்வுடன் ஒரு பெருமூச்சு வந்தது. அப்படியே அந்தநாள் நினைவுகளில் மூழ்கி மூச்சுமுட்டியது.

ஒரு ஐடியா - ஏன் தொலைக்காட்சியில் அழுமூஞ்சி சீரியல்களுக்கு பதிலாக இந்த மாதிரி கதைகளை ஒரே எபிசோடில் எடுக்ககூடாது? ஒருநாளில் கதையும் முடிந்துவிடும், என்னைமாதிரி மாதக்கணக்கில் பார்க்க பொறுமையில்லாதவர்களும் பார்த்து ரசிக்க முடியும்.

Anonymous said...

it is very nice story....as a real one happened in from of mine

நாமக்கல் சிபி said...

//Divya said...
Wonderful Story Vetti, Ella story um SW cmpny back grnd la yey ezhuthureenga, ............analum unga karpanai thiran paratukuriyathu....!!!
//
ஏனுங்க 5 கதைல 3 சாப்ட்வேர் மீதி ரெண்டு வேறு களம்.

நம்ம க்ரைம் கதை படிச்சு சொல்லுங்க நல்லாயிருக்கானு... ஓகேனா அடுத்து அந்த மாதிரி ஒண்ணு எழுதலாம் ;)

ramachandranusha(உஷா) said...

வெட்டி! வாழ்த்துக்கள், ரொம்ப நல்லா வந்திருக்கு. அனானிமஸ் ஒருவர் சொன்னதும் படித்து முடித்ததும் பெருமுச்சு வந்தது. கொஞ்சம்
மனசு கனத்து போனதுப் போல இருந்தது. கதைக்கு வெற்றி அதுதானே

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
கதை சூப்பர். படித்து முடித்த்வுடன் ஒரு பெருமூச்சு வந்தது. அப்படியே அந்தநாள் நினைவுகளில் மூழ்கி மூச்சுமுட்டியது.
//
மிக்க நன்றி!!!

//ஒரு ஐடியா - ஏன் தொலைக்காட்சியில் அழுமூஞ்சி சீரியல்களுக்கு பதிலாக இந்த மாதிரி கதைகளை ஒரே எபிசோடில் எடுக்ககூடாது? ஒருநாளில் கதையும் முடிந்துவிடும், என்னைமாதிரி மாதக்கணக்கில் பார்க்க பொறுமையில்லாதவர்களும் பார்த்து ரசிக்க முடியும்.
//
இதெல்லாம் வீட்ல இருக்கிற பெண்கள் பாப்பாங்களா??? எங்க அம்மாவே பாக்கமாட்டாங்கனு தான் தோனுது ;)

நாமக்கல் சிபி said...

//Masoud said...
it is very nice story....as a real one happened in from of mine
//
Hi Masoud,
Thx a lot...

நாமக்கல் சிபி said...

//ramachandranusha said...
வெட்டி! வாழ்த்துக்கள், ரொம்ப நல்லா வந்திருக்கு. அனானிமஸ் ஒருவர் சொன்னதும் படித்து முடித்ததும் பெருமுச்சு வந்தது. கொஞ்சம்
மனசு கனத்து போனதுப் போல இருந்தது. கதைக்கு வெற்றி அதுதானே
//
மிக்க நன்றி!!!

Anonymous said...

//இதெல்லாம் வீட்ல இருக்கிற பெண்கள் பாப்பாங்களா??? //

தாய்க்குலத்தை குறைவாக எடை போடதீர்கள். தரமான தொடர்களை கொடுத்தால் கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும்! அது இல்லாததால் தான் இப்படி அழுவாச்சி சீரியல்களில் மூழ்கிவிட்டார்கள். வெள்ளித்திரையில் சேரன் செய்வதுபோல் சின்னத்திரைக்கு ஒரு துணிவான முயற்சிதான் தேவை.

Anonymous said...

Its really Superb..............

SP.VR. SUBBIAH said...

மீரு ராசின கதா பாகுந்தண்டி!

Anonymous said...

Good

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
Its really Superb..............
//
thx a lot

//SP.VR.SUBBIAH said...
மீரு ராசின கதா பாகுந்தண்டி!
//
சால தேங்ஸண்டி ;)

//Anonymous said...
Good
//
Thx a lot

கைப்புள்ள said...

//அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"//

தலைவா! பின்னறீங்க. ரொம்ப நீளமா இருக்குன்னு இவ்வளவு நாளா ஆஃபிஸ்ல படிக்க முடியாம போயிடுச்சு. தூறல் படிச்சதும் இதையும் படிச்சிடனும்னு ஒரே மூச்சில படிச்சேன். முதல் முயற்சின்னு சொல்ல முடியலை...ரொம்ப நல்லாருக்கு. நடையும் வர்ணிப்பும் அழகா இருக்கு. தூறல்ல இன்னும் நல்லா மெருகேத்தியிருக்கீங்க.

நாமக்கல் சிபி said...

//தாய்க்குலத்தை குறைவாக எடை போடதீர்கள். தரமான தொடர்களை கொடுத்தால் கண்டிப்பாக ஆதரவு கிடைக்கும்! அது இல்லாததால் தான் இப்படி அழுவாச்சி சீரியல்களில் மூழ்கிவிட்டார்கள். வெள்ளித்திரையில் சேரன் செய்வதுபோல் சின்னத்திரைக்கு ஒரு துணிவான முயற்சிதான் தேவை. //
இல்லைங்க.. பாலச்சந்தர், பாலு மகேந்திரா எல்லாம் முயற்சி பண்ணி பாத்துட்டு தான் விட்டுட்டாங்க...

பாலுமகேந்திரா கதை வாரத்துக்கு ஒண்ணுனு வந்துட்டு இருந்துச்சு... அதெல்லாம் பெருசா ஹிட் ஆகல...

அதனால இந்த மாதிரி கதையெல்லாம் ஹிட்டாகறது கொஞ்சம் கஷ்டம்தான் :-(

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...
//அங்கே கருவாயன் சொல்லிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது "அங்க பாருடா நம்ம கொல்டிய... நேரா தெலுகு பட போஸ்டரை பார்க்க போயிட்டான்"//

தலைவா! பின்னறீங்க. ரொம்ப நீளமா இருக்குன்னு இவ்வளவு நாளா ஆஃபிஸ்ல படிக்க முடியாம போயிடுச்சு. தூறல் படிச்சதும் இதையும் படிச்சிடனும்னு ஒரே மூச்சில படிச்சேன். முதல் முயற்சின்னு சொல்ல முடியலை...ரொம்ப நல்லாருக்கு. நடையும் வர்ணிப்பும் அழகா இருக்கு. தூறல்ல இன்னும் நல்லா மெருகேத்தியிருக்கீங்க.
//
தல... நிங்க தான் எப்பவுமே தலைவர்... நாங்க எல்லாம் தொண்டர்கள் தான் ;)

ஏன் தல ஆகஸ்ட் மாச போட்டிக்கு அனுப்பன கதைக்கு அப்ப படிச்சு ஓட்டு போடாம இப்ப வந்து நல்லாயிருக்குனு சொல்லிட்டு இருக்க... உன் கடமை உணர்ச்சி என்னை புல்லரிக்க வைக்குதுனு சொல்லலாம்னு பாத்தா நீ இவ்வளவு பாராட்டனதுக்கப்பறம் என்ன சொல்றதுனே தெரியல...

மிக்க நன்றி!!!

Anonymous said...

nalla kathai continue :-)

Anonymous said...

you have an amazing talent to write stories. keep it up.

நாமக்கல் சிபி said...

// C.M.HANIFF said...

nalla kathai continue :-) //

மிக்க நன்றி ஹனிஃ

நாமக்கல் சிபி said...

// dany said...

you have an amazing talent to write stories. keep it up. //
Thx a lot dany :-)

நாமக்கல் சிபி said...

//Sadaiappa said...

ஐயோ பாவம் நீங்கள் கொல்டியில் தொடங்கி கொல்டியில் முடித்திருக்கீர்கள். ஆனால் என்ன கதையைவிட பின்னூட்டங்கள் நீளமானதுதான் பரிதாபம். இருந்தாலும் இது உங்க கதைக்கு கிடைத்த வெற்றிதான். வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி சடையப்பரே...
எல்லாம் நம்ம மக்கள் கொடுத்த உற்சாகம்தான் ;)

நாமக்கல் சிபி said...

//Magesh said...

Mikavum arumiyana kathai.Today only i have started to read ur blogs.Arumai mutrilum arumai.

First kathaiyea oru kalkku kalakkitenga.atputhamana nadai. //

Thx a lot Magesh...

Anonymous said...

hi bala

im deepak.. really your story was too good and touching..by the way i read all your comedies it was fantastic(few of them i had a chance to read b4 thru mail forwards ..esp that karakatakaran joke).. i had just known you few hours before and now i can say im your big fan:-)

நாமக்கல் சிபி said...

Hi Deepak,
U have made my day :-)
I am able to write something just bcos of people like you who encourage me and appreciation is the booster for all the bloggers.

Thx a lot...

Anonymous said...

roombah nalla eluthi irukingha !! valthukal !!

ps:sorry tamil fonts kandupidika mudiyavillai :(

நாமக்கல் சிபி said...

//Anonymous said...
roombah nalla eluthi irukingha !! valthukal !!

ps:sorry tamil fonts kandupidika mudiyavillai :( //

மிக்க நன்றி நண்பரே...

தமிழ் ஃபாண்ட்க்கு நான் இ-கலப்பையை பயன்படுத்துகிறேன்... நீங்களும் முயற்சித்து பார்க்கலாமே...

http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

Anonymous said...

அன்பு வெட்டிப்பயல்,

இந்த பதிவு என்னை கலங்க வைதுவிட்டது......என்னுடய தோல்வியடைந்த காதல் போலவே இருந்தது.....தெலுங்கு பெண், அவளை 'கொல்ட்டி' என வெறுப்பேற்றியது, forum, பெங்களுர் வேலை, கிருஷ்ணா கபேயில் உணவு, navy blue churidhar கடைசியில் தோல்வி, சரியாக ஒரு வருடம் gap..... எல்லாம் பழசை ஞாபகபடுத்தி விட்டது.....

:(

சீனிவாசன்
srinivasan0211@gmail.com

நாமக்கல் சிபி said...

//அன்பு வெட்டிப்பயல்,

இந்த பதிவு என்னை கலங்க வைதுவிட்டது......என்னுடய தோல்வியடைந்த காதல் போலவே இருந்தது.....தெலுங்கு பெண், அவளை 'கொல்ட்டி' என வெறுப்பேற்றியது, forum, பெங்களுர் வேலை, கிருஷ்ணா கபேயில் உணவு, navy blue churidhar கடைசியில் தோல்வி, சரியாக ஒரு வருடம் gap..... எல்லாம் பழசை ஞாபகபடுத்தி விட்டது.....

:(

சீனிவாசன்
//

சீனிவாசன்,
இதுவும் கடந்து போகும்...
கலங்க வேண்டாம்...

Anonymous said...

அன்பு வெட்டிப்பயல்,

மிக்க நன்றி! நம்ப மாட்டீர்கள்! அந்த சமயத்தில் நானும் சரியாக இதே வாசகத்தை தான் நினைத்து என்னைத் தேற்றிகொண்டேன்.... ஆனால் இன்று முழுவதும் நான் கலங்கியபடியேதான் இருந்தேன்.....அன்புக்கு மீண்டும் நன்றி!

இந்த முறை :-)புடன்......
சீனிவாசன்

உங்கள் நண்பன்(சரா) said...

வெட்டி!
இன்று காலை வந்ததும் படித்த முதல் பதிவு உங்களுடையது!
ஆரம்பம் முதலே அருமை!
மிகவும் நேர்த்தியான எழுத்து நடை!
கடைசி இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்ட்த்திருந்திருந்தாலும்
முடிவில் கலங்கி விட்டேன்! நீங்கள் கலக்கி விட்டீர்கள்!

//எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது//

ஆவ்வ்வ்வ்வ்.....:((

ரெம்ப ஃபீலிங்கா இருக்கு நண்பா!

வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.

நாமக்கல் சிபி said...

//அன்பு வெட்டிப்பயல்,

மிக்க நன்றி! நம்ப மாட்டீர்கள்! அந்த சமயத்தில் நானும் சரியாக இதே வாசகத்தை தான் நினைத்து என்னைத் தேற்றிகொண்டேன்.... ஆனால் இன்று முழுவதும் நான் கலங்கியபடியேதான் இருந்தேன்.....அன்புக்கு மீண்டும் நன்றி!

இந்த முறை :-)புடன்......
சீனிவாசன் //

சீனி,
நான் ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் கவலையா இருந்தாலும் இந்த வாக்கியத்தைதான் மனசுல சொல்லிக்கொள்வேன்...

இந்த கதை முழுக்க கற்பனைதான்... ஆனா உங்களுக்கு பொருந்துவதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு.

விடுங்க... இன்னும் சாதிக்க நிறைய இருக்கு :-)

நாமக்கல் சிபி said...

//வெட்டி!
இன்று காலை வந்ததும் படித்த முதல் பதிவு உங்களுடையது!
ஆரம்பம் முதலே அருமை!
மிகவும் நேர்த்தியான எழுத்து நடை!
கடைசி இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்ட்த்திருந்திருந்தாலும்
முடிவில் கலங்கி விட்டேன்! நீங்கள் கலக்கி விட்டீர்கள்!
//
வா நண்பா...
மிக்க நன்றி!!!
காதல் கதைல ஜெயிச்சா மனசுல நிக்காதுனுதான் பிரியற மாதிரி எழுதினேன்..

அதுக்கு பரிகாரமாத்தான் பிரிவுனு ஒரு கதை எழுதிருக்கேன் :-)

//
//எப்படியோ ஒரு வருடம் ஓடிவிட்டது... நான் இன்னும் உயிரோடத்தான் இருக்கன்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது//

ஆவ்வ்வ்வ்வ்.....:((

ரெம்ப ஃபீலிங்கா இருக்கு நண்பா!

வாழ்த்துக்கள்!


அன்புடன்...
சரவணன்.//
நண்பா,
இது கதை தான் :-)

Anonymous said...

ஒரு கதையை படிப்பது போல் இல்லாமல், ஏதோ அருகில் நடக்கும் ஒரு நிகழ்வை போலவே இருந்தது ( நானும் பெங்களுரில் மென்பொறியாளனாகத்தான் இருக்கிறேன், அதுவும் மடிவாலாவில்)
நம்ம ஏரியா, நம்ம தொழில் சார்ந்த கதை என்பதால் மனதோரு ரொம்பவே ஒட்டிக்கொண்டது.. மிக அருமை. வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

//பிரேம்குமார் said...

ஒரு கதையை படிப்பது போல் இல்லாமல், ஏதோ அருகில் நடக்கும் ஒரு நிகழ்வை போலவே இருந்தது ( நானும் பெங்களுரில் மென்பொறியாளனாகத்தான் இருக்கிறேன், அதுவும் மடிவாலாவில்)
நம்ம ஏரியா, நம்ம தொழில் சார்ந்த கதை என்பதால் மனதோரு ரொம்பவே ஒட்டிக்கொண்டது.. மிக அருமை. வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி பிரேம்...
தொடர்ந்து வரவும் :-)

Anonymous said...

முதல்கதை என்று நம்மமுடியவில்லை

நல்லா இருக்கு.


உங்களோட கோழி, சாப்ட்வேர்காரன், கவுண்டரின் அட்டகாசத்தை படித்துவிட்டு இதைபடிக்கும் போது சுவாரஸ்யம் குறைந்தது போல்தான் இருந்தது,


ஆனால் முடியும்போது ஏதோ எனக்கே நடந்த்துபோல ஒரு எண்ணம்,

நாமக்கல் சிபி said...

//JACK said...

முதல்கதை என்று நம்மமுடியவில்லை
//
வேணும்னா துண்டு போட்டு தாண்டட்டுங்களா??? ;)


// நல்லா இருக்கு.//
மிக்க நன்றிங்க!!!

// உங்களோட கோழி, சாப்ட்வேர்காரன், கவுண்டரின் அட்டகாசத்தை படித்துவிட்டு இதைபடிக்கும் போது சுவாரஸ்யம் குறைந்தது போல்தான் இருந்தது,
//
ஆஹா...

// ஆனால் முடியும்போது ஏதோ எனக்கே நடந்த்துபோல ஒரு எண்ணம், //
அதுதாங்க நமக்கு வேணும்...

Anonymous said...

வணக்கம் சார்,

"வெட்டிப்பயல்" : இப்பிடியொரு பெயரை வைச்சுகொண்டு எல்லாத்தை பற்றியும் திறமாக எழுதுறிங்க !!!.

கொல்ட்டிண்டா என்ன அர்த்தம்.
(பொம்பளைய)

//அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.//

அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலைக்கு பொவிங்க ?

நன்றி

Anonymous said...

வணக்கம் சார்,

"வெட்டிப்பயல்" : இப்பிடியொரு பெயரை வைச்சுகொண்டு எல்லாத்தை பற்றியும் திறமாக எழுதுறிங்க !!!.

கொல்ட்டிண்டா என்ன அர்த்தம்.
(பொம்பளைய)

//அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.//

அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலைக்கு பொவிங்க ?

நன்றி

நாமக்கல் சிபி said...

//Thillakan said...

வணக்கம் சார்,

"வெட்டிப்பயல்" : இப்பிடியொரு பெயரை வைச்சுகொண்டு எல்லாத்தை பற்றியும் திறமாக எழுதுறிங்க !!!.
//
வணக்கம் திலகம்,
எல்லாம் ஒரு முயற்சி தான்...

//
கொல்ட்டிண்டா என்ன அர்த்தம்.
(பொம்பளைய)
//
கொல்ட்டினா தெலுகு பேசுபவர் என்று அர்த்தம்...

//
//அந்த மாதிரி சமயங்களில் சில சமயம் எதுவும் புரியாம அவளுக்கு போன் செய்து பேசிக்கிட்டே வேலை செய்வேன். அவளும் எனக்கு போர் அடிக்குமே என்று 2-3 மணி வரைக்கும் கூட பேசிக்கிட்டே இருப்பா... நான் தூங்குனு சொன்னாலும் இல்லை எனக்கு தூக்கம் வரலைனு சொல்லிடுவா.//

அடுத்த நாள் எத்தனை மணிக்கு வேலைக்கு பொவிங்க ?

நன்றி//
10 மணிக்கு...
இது உண்மை கதை இல்லை...

Anonymous said...

Balaji

Kathai nallathan irukku ana en eppidi oru soha kathai????

romba naturala ezhuthuringa..nalla irukku

நாமக்கல் சிபி said...

// kala said...

Balaji

Kathai nallathan irukku ana en eppidi oru soha kathai????
//
கதைல சோகம் இருந்தாதான் ரொம்ப நாள் மறக்காது. அந்த லாஜிக் தான் :-)
இன்னைக்கும் என் தீயினால் சுட்ட புண் கதைய விட கொல்ட்டி தான் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கு :-)

//
romba naturala ezhuthuringa..nalla irukku //

மிக்க நன்றி கலா...

Prabu Raja said...

Koramangala
Krishna Kafe
PVR
Landmark
Salem Kitchen

Great coverage of the Bangalore's highlights in Software Engineers view.
Nice story. liked it.

SurveySan said...

very good one.

வானம்பாடி said...

வாவ், அருமையான கதை.

மனதின் ஓசை said...

ராசா .. நல்லா இருங்க ராசா.. நல்லாருங்க...


"வெட்டிகாரு செப்பண்டி........" +"இது(கொல்ட்டி)" + "கொல்ட்டி - சில திடுக்கிடும் உண்மைகள் " = !@#$%^&*()&*&%$#@@$%^&^%$#@#$%^&*(*&Y^%

Unknown said...

உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை,வாழ்த்துக்கள்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

இது முதல் கதையா. நான் நம்ப மாட்டேன்..

எனக்கு மங்களூர் ஞாபகம் வந்தது. சரி பழைய கத, இப்ப எதுக்கு. :-)

//எனக்கு இதை எழுத 4 மணி நேரமாச்சி. //

எழுத்துல தெரியுது..

இன்னொரு தடவ படிக்கணும் போல இருக்கு!! :-)

JOHN CHRISTOPHER said...

ரொம்ப நல்ல கதை......