தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, August 13, 2006

ஒரு சின்ன ஆராய்ச்சி...

இது நேத்து உனக்கும் எனக்கும் பார்க்கும் போது எனக்கும் என் ரூம் மேட்டுக்கும் நடந்த ஒரு உரையாடல்...

ரூ.மே: நம்ம த்ரிஷா நடிச்ச வெற்றி படங்களுக்கும், தோல்வி படங்களுக்கும் வித்தியாசம் என்ன???

நான்: வந்த புதுசுல, கிடைச்ச படங்கள் எல்லாத்துலையும் நடிச்சாங்க...இப்ப கதைய தேர்ந்தெடுத்து நடிக்கறாங்க...

ரூ.மே: டேய் மச்சான் என்ன ஆச்சி உனக்கு. தெளிவா தானே இருக்க??? தமிழ் படத்துல ஹீரோஸே கதைய கேக்கறதில்லை. நீ என்னனா அவுங்க கதைய கேட்டு நடிக்கிறாங்கன்ற???

நான்: அப்படி இல்லை. படத்துல் அவுங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கற மாதிரி பாத்து நடிக்கிறாங்க...

ரூ.மே: டேய் என்னடா ஆச்சி உனக்கு. திருப்பாச்சி பாத்த இல்லை... அதுல அவுங்க தான் கதாநாயகினு பாட்ட வெச்சிதான் தெரிஞ்சிக்க முடியும்.

நான்: சரி இப்ப நல்ல பெரிய ஹீரோஸ் கூட நடிக்கிறாங்க...

ரூ.மே: "ஆறு" பாத்த இல்லை??? அப்பறம் என்ன இப்படி சொல்ற???

நான்: சரி நீயே சொல்லு...

ரூ.மே: சரி அவுங்க நடிச்ச ஹிட் படமெல்லாம் சொல்லு

நான்: சாமி, கில்லி, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும்

ரூ.மே: தெலுகு படத்தையும் சொல்லு...

நான்: வர்ஷம், நூ வொஸ்தானன்டே நேன்னொத்துன்டானா?, அத்தடு, பவுர்ணமி

ரூ.மே: பிளாப் படமெல்லாம் சொல்லு

நான்: லேசா லேசா, அலை, மனசெல்லாம், ஜி, எனக்கு 20 உனக்கு 18, ஆய்த எழுத்து, ஆதி, ஆறு, அல்லரி புல்லுடு (தெலுகு)...

ரூ.மே: நல்லா யோசிச்சி பாரு...

நான்: ஒன்னும் தெரியல நீயே சொல்லு.

ரூ.மே: ஹிட் படத்துல எல்லாம் அம்மணி பாவாடை தாவணில வருவாங்க...
பிளாப் படத்துல எல்லாம் மாடர்ன் டிரஸ்ல வருவாங்க :-)))

நான்: ஆஹா, இதை நான் யோசிக்கவே இல்லையே....
டேய் "ஜி"ல பாவாடை தாவணில தான வருவாங்க???

ரூ.மே: ஏன்டா "தலை" எஃபக்ட் இருக்கும் போதூ த்ரிஷா எஃபக்ட் ஒர்க் அவுட் ஆகாது. புரியுதா???

நான்: அது சரிதான்...சரி நான் ஒன்னு கேக்கறன். நீ சொல்லு.
"ஜி" படத்துக்கு பெயர் காரணம் சொல்லு.

ரூ.மே: நான் அந்த படம் பாக்கல நீயே சொல்லு...

நான்: டேய் மச்சான்...இப்ப என்ன ஆச்சி உனக்கு??? எத்தனை வருஷம் படம் பாக்கற... படத்துக்கும் பேருக்கும் என்னைக்காவது சம்பந்தம் இருக்குமா?

ரூ.மே: நிஜத்துல தான் நம்மல ஒரு பயலும் மதிக்க மாட்றான்...படத்து பேராவது நம்மல மதிக்கிற மாதிரி இருக்கணும்னா???

நான்: டேய் இது கொஞ்சம் டூ மச்...
திரைப்படத்துறைல டாப் ஹீரோஸ் (அதிக ரசிகர்கள்) யார் யார்???

ரூ.மே: எம்.ஜி.ஆர், ரஜினி.

நான்: இவுங்க ரெண்டு பேர் பேருலையும் ஒரு ஒத்தும இருக்கு பாரு...

ரு.மே: என்ன ஒத்தும???

நான்: அஜித் பேருலையும் அது இருக்குடா...நல்லா பாரு...

ரூ.மே: ஆமான்டா..மூணு பேர் பேருலையும் நடு எழுத்து 'ஜி'

நான்: அதே :-))

15 comments:

theevu said...

ஜி வ்வுன்னு ஏறுதுங்க உங்க ஆராய்ச்சி..பேசாமல் வரலாறு டாட் காமில் கட்டுரை எழுதலாமுங்க..

-theevu-

G.Ragavan said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ!

நாமக்கல் சிபி said...

:-))

வடுவூர் குமார் said...

¬†¡ ¾¢ÕõÀ×õ ¾¡Å½¢Â¡!!!
þÐìÌ §Áø ±Ð×õ ±Ø¾¢ ....¸¢ì¸ðʦ¸¡ûÇ ¿¡ý ¾Â¡Ã¡¸ þø¨Ä.

நாகை சிவா said...

ரொம்ப நல்ல ஆராய்ச்சி
தொடர வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

வடுவூர்,
என்ன சொல்றீங்கனே புரியல :-(

சிவா,
நீங்களாவது பாராட்றீங்களே!!! மிக்க மகிழ்ச்சி :-)

கதிர் said...

நல்ல ஆராய்ச்சிபா

நாமக்கல் சிபி said...

தம்பி,
மிக்க நன்றி...

வடுவூர் குமார் said...

இதை கொடுக்க மறந்துட்டேன்.அதனால் தான் முதல் பின்னூட்டம் புரியவில்லை.
மன்னிக்கவும்.
http://harimakesh.blogspot.com/2006/07/25_30.html
சும்மா!! :-))

Unknown said...

அதென்னவோ தமிழ்மணத்தில் த்ரிஷா மோகம் கொஞ்சம் ஜாஸ்தியாயிட்ட மாதிரி தெரியுது.நேத்து ஒருத்தர் அவர் பசங்க த்ரிஷாவை பாத்து வளர்வதா எழுதினார்.இன்னைக்கு நீங்க இதை எழுதறீங்க.

எப்படியோ த்ரிஷாவுக்கு காஸ்ட்யூம் டிசைஙினில் கவனம் செலுத்த இது நல்ல சந்தர்ப்பம்

நாமக்கல் சிபி said...

$elvan,
//அதென்னவோ தமிழ்மணத்தில் த்ரிஷா மோகம் கொஞ்சம் ஜாஸ்தியாயிட்ட மாதிரி தெரியுது//
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நம்ம ஆதரவு எல்லோருக்கும் உண்டு :-))

நாமக்கல் சிபி said...

வடுவூர்,
உங்களோட தாவணி கனவுகளை நான் நியாபகாப்படுத்திட்டனா???
பயப்படாம உளருங்க :-)

Syam said...

ஆழ்ந்த கருத்து அற்புதமான சிந்தனை..தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி... :-)

நாமக்கல் சிபி said...

//ஆழ்ந்த கருத்து அற்புதமான சிந்தனை..தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி... :-) //

syam,
இனிமேல் யாராவது சொல்வாங்களா நான் இந்த பேரை வெச்சிக்கிட்டது தப்புனு ;)

குமரன் (Kumaran) said...

:-))))))))))))))