தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, August 29, 2006

லொள்ளு

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...

சிட்டிசன்:
கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???
நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???
அ: தெரியாதே...
நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?


ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு
மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???


இப்பொழுதுக்கு இவ்வளவுதான் தோணுது... பிடித்திருந்தால் சொல்லுங்க அடுத்து யோசிக்கலாம் ;)

44 comments:

Boston Bala said...

பாரத விலாஸ் - மகள் மதம் மாறி காதலிப்பதால் கோபப்படுகிறார் சிவாஜி.

கே ஆர் விஜயா (திரைப்படத்தில் சொன்னது): 'நீங்க எதற்கு எடுத்தாலும் அதிகமா உணர்ச்சிவசப்படறீங்க!'

சிவாஜி கணேசன் (திரைப்படத்தில் சொல்லாமல் விட்டது): 'பின்ன... சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!'

நாமக்கல் சிபி said...

பாபா,
//'பின்ன... சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!'
//

:-))

Unknown said...

Ha..ha....

Kalakkal balaji.

//சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா//

I loved this.Too hilarious

நாமக்கல் சிபி said...

$elvan,
thx...

G.Ragavan said...

சந்திரமுகி வசனம் சூப்பரப்பு!

நாமக்கல் சிபி said...

ஜிரா,
மிக்க நன்றி...

ரமணா டயலாக் மாத்தியாச்சு

பெத்தராயுடு said...

கலக்கல்பா....

Udhayakumar said...

நாயகன்:

பையன்: நீங்க நல்லவரா? கெட்டவரா??
கமல்: தெரியலயேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...
பையன்: அந்த போலீஸ் மாமுல் வாங்கின காசையே பிக்பாக்கெட் அடிச்சிட்டியா, அதான் கேட்டேன்...

நாமக்கல் சிபி said...

நாயகன்:
//
பையன்: நீங்க நல்லவரா? கெட்டவரா??
கமல்: தெரியலயேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...
பையன்: அந்த போலீஸ் மாமுல் வாங்கின காசையே பிக்பாக்கெட் அடிச்சிட்டியா, அதான் கேட்டேன்...
//

கமல்: தப்புல்ல... நாலு பேருக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே தப்பு இல்ல...

பையன்: யாரு தாத்தா அந்த நாலு பேர்

கமல்: நான், நீ, உங்க அம்மா, உங்க அப்பா...

நாமக்கல் சிபி said...

பெத்த ராயுடு,
நன்றி

Santhosh said...

good ones balaji

நாமக்கல் சிபி said...

அப்பாவித்தமிழன்,
விழுந்து விழுந்து சிரித்தேன்... நல்ல வேலை அடி படவில்லை.

கப்பி | Kappi said...

:))
கலக்கல் வெட்டி!

இலவசக்கொத்தனார் said...

:-D

நாமக்கல் சிபி said...

கப்பி/பி.பு,,
நன்றி

நாமக்கல் சிபி said...

சந்தோஷ்,
மிக்க நன்றி

ராசுக்குட்டி said...

ஹா ஹா...
உக்காந்து சிந்திச்சுருக்கிங்க...ம்... நல்லாருக்கு! வயிறு வலிக்க சிரித்தேன்!

நாமக்கல் சிபி said...

ராசுக்குட்டி said...
//ஹா ஹா...
உக்காந்து சிந்திச்சுருக்கிங்க...ம்... நல்லாருக்கு! வயிறு வலிக்க சிரித்தேன்//

இப்ப தான் முதல் முறையா வரீங்கனு நினைக்கிறேன்...

நல்லா சிரிங்க... அதுதான் நமக்கு வேணும் :-))

Baby Pavan said...

:) waiting for more ...

வேந்தன் said...

கிரேட், ரொம்ப நல்லா இருக்கு

நாமக்கல் சிபி said...

Pavan's Pictures said...
//:) waiting for more ... //
Will do it soon...

வேந்தன் said...
//கிரேட், ரொம்ப நல்லா இருக்கு//
மிக்க நன்றி

கைப்புள்ள said...

வெட்டி எல்லாமே நல்லாருக்குங்க. இன்னும் கொடுங்க.
:)

கார்த்திக் பிரபு said...

kalakal thalaiva ..thodarungal padikka nagal irukom..nan sonnadhu nijamag vitadum pola..ippodhellam ennaku eludhavey thonuvadhillai..ungal blog padikkavey neram sariya iruku

Unknown said...

Super Dialogues Vetti boy

நாமக்கல் சிபி said...

கைப்புள்ள/தேவ்,
சங்கத்து சிங்கங்களுக்கு என் நன்றி... யோசிச்சிட்டு இருக்கேன்... சீக்கிரமே அடுத்த பதிவு வரும்

கார்த்திக்,
என்ன இது சிறு பிள்ளத்தனமா இருக்கு!!! உன் கவிதைக்காக நாங்க எல்லாம் காத்துட்டு இருக்கும் போது இப்படியெல்லாம் பேச கூடாது...
அப்பறம் அடுத்த பதிவு சீக்கிரமா வரும்... படிக்கவும்

Syam said...

போஸ்ட் மற்றும் பின்னூட்டங்கள் ரெண்டுமே ROTFL...we want more pls :-)

நாமக்கல் சிபி said...

Syam said...
//போஸ்ட் மற்றும் பின்னூட்டங்கள் ரெண்டுமே ROTFL...we want more pls :-) //

நன்றி... இந்த வாரம் ரொம்ப அதிகமாயிடுச்சு... அடுத்த வாரம் போடறேன்

பரத் said...

நல்ல நகைச்சுவை..
உங்களின் இந்த பதிவு..மெயிலாக வலம் வந்துகொண்டிருக்கிறது :))

பொன்ஸ்~~Poorna said...

இதில் சில மெயிலில் வந்தது எனக்கு.. நல்ல காமெடி.. :)

அத்திப் பட்டியும், சந்திரமுகியும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை :)

நாமக்கல் சிபி said...

barath said...
//
நல்ல நகைச்சுவை..
உங்களின் இந்த பதிவு..மெயிலாக வலம் வந்துகொண்டிருக்கிறது :)) //
மிக்க நன்றி பரத். அப்படியே அந்த மெயிலை vettipaiyal@gmail.com க்கு அனுப்ப முடியுமா?

நாமக்கல் சிபி said...

பொன்ஸ் said...
//
இதில் சில மெயிலில் வந்தது எனக்கு.. நல்ல காமெடி.. :)
//
நான் தாங்க ஒரிஜினல். மெயில்ல இருந்து நான் காப்பி அடிக்கலைங்கோ :-)

//
அத்திப் பட்டியும், சந்திரமுகியும் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை :)
//
மிக்க நன்றி...

நாமக்கல் சிபி said...

vnsmanian,
மிக்க நன்றி

குமரன் (Kumaran) said...

:-))))

Good Friday...

I mean it is good to read this posting today (Friday)

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...
:-))))

Good Friday...

I mean it is good to read this posting today (Friday)
//
thx...

but waiting till Friday to read this, is too much ;)

குமரன் (Kumaran) said...

ஓ நீங்க செவ்வாயே போட்டாச்சா இந்தப் பதிவை? என்ன பண்றது இன்னைக்குத் தான் என் கண்ணுல பட்டது. :-)

நாமக்கல் சிபி said...

குமரன்,
//
ஓ நீங்க செவ்வாயே போட்டாச்சா இந்தப் பதிவை? என்ன பண்றது இன்னைக்குத் தான் என் கண்ணுல பட்டது. :-)
//
அப்ப கதையெல்லாம் படிக்கவே இல்லனு சொல்லுங்க...

சரி இப்பவாவது பட்டுச்சே ;-)

Anonymous said...

gowravam' no padmini
but still good !!! LOL

Anonymous said...

CHANDRAMUKHI STORY'KKU
SONDHAMAANAVARUKU NEENGAL ORU PAISAA KOOODA THARAVILLAYAAM!
PRABHU ENNA KODUMAI ITHU !

Anonymous said...

NEENGA ROMBA UNNAICHI VASAPATTATHAAL THAAN NATIONAL AWARD KIDAIKAVILLAI NADIGAL THILAGAM ! MY DEAR SON

Anonymous said...

Ha ha nalla pathivu, continue :-)

நாமக்கல் சிபி said...

Anony,
//gowravam' no padmini//
Is it so??? Sorry for that...

// Anonymous said...

CHANDRAMUKHI STORY'KKU
SONDHAMAANAVARUKU NEENGAL ORU PAISAA KOOODA THARAVILLAYAAM!
PRABHU ENNA KODUMAI ITHU ! //
உண்மையாலுமே கொடுமையான விஷயம் இதுதாங்க...

// Anonymous said...

NEENGA ROMBA UNNAICHI VASAPATTATHAAL THAAN NATIONAL AWARD KIDAIKAVILLAI NADIGAL THILAGAM ! MY DEAR SON //
அப்படியெல்லாம் இல்லைங்க... அவர் இயல்பா நடிச்ச படங்களும் நிறைய இருக்கு... ஆனா அதெல்லாம் பெருசா வெற்றி பெறவில்லை... என்ன இருந்தாலும் சிவாஜி ஒரு மைல்கல்...

நாமக்கல் சிபி said...

// C.M.HANIFF said...

Ha ha nalla pathivu, continue :-) //

மிக்க நன்றி ஹனிஃ :-)

Syam said...

ROTFL :-)

Syam said...

//'பின்ன... சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!' //

பாபா...சூப்பர் :-)