தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, October 14, 2008

சாப்ட்வேர் இஞ்சினியர்களுக்கு சில டிப்ஸ்

நிறைய இடங்கள்ல ஆள் குறைப்பு நடந்துட்டு இருக்கு. இது இன்னும் அதிகமா இருக்கும்னு எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல நாம செய்ய வேண்டியதெல்லாம் என்ன?

1. முடிந்த வரை பெஞ்ச்ல இருக்காதீங்க. ஏதாவது ஒரு ப்ராஜக்ட்ல சேர்ந்திடுங்க. எனக்கு டெக்னாலஜி தெரியாதுனு சொல்லி ப்ராஜக்டை தவிர்க்காதீங்க. எந்த டெக்னாலஜியா இருந்தாலும் தெரிஞ்சிக்கலாம்.

2. நிறைய படிங்க. அதே மாதிரி முடிஞ்ச வரைக்கும் ஏதாவது சர்ட்டிபிகேஷன் பண்ணுங்க.

3. இந்த மாதிரி செய்தவுடனே அதை உங்க மேனஜருக்கு கண்டிப்பா தெரிவிங்க. மத்தவங்களுக்கும் அதோட முக்கியத்துவம்னு எடுத்து சொல்லி சும்மா கெயிட் பண்ணுங்க.

4. உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.

5. புது கம்பெனிக்கு தாவுவதை தவிர்க்கவும். பெரும்பாலும் Last in First Out பாலிஸி தான் இருக்கும்.

6. தேவையில்லாம தண்ட செலவு செய்யாதீங்க. புது ஃபோன், லேப் டாப்னு கண்டதெல்லாம் இந்த நேரத்துல வாங்காதீங்க.

7. முடிந்த வரை க்ரெடிட் கார்ட் பயன்படுத்துவதை குறைக்கவும். கைல இருந்து காசு கொடுத்தா தான் செலவு பண்ணறது தெரிஞ்சி கொஞ்சமாவது செலவை குறைப்போம். கைல காசை தொடாம எல்லாமே கார்ட்லயும் ஆன்லைன்லயும் பண்ணா எவ்வளவு செலவு பண்றோம்னு சுத்தமா தெரியாது.

8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.

9. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.

10. தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.

இதுக்கு மேல விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஒரு லிஸ்ட் தயாரிச்சிடலாம்...

55 comments:

Natty said...

தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க...

ஐய்யோ மறந்துட்டேன்... மீ த பர்ஸ்ட்டு ;)

வெட்டிப்பயல் said...

// Natty said...
தெய்வமே! எங்கேயோ போயிட்டீங்க...
//
Y இஸ் திஸ் மர்டர் வெறி? :)

//ஐய்யோ மறந்துட்டேன்... மீ த பர்ஸ்ட்டு ;)
//
மிக்க நன்றி நாட்டி :)

குடுகுடுப்பை said...

ரொம்ப பிளாக் படிக்காதீங்க/எழுதாதீங்க

Anonymous said...

Is it VETTI PAYAL no..no.. IT IS VETRI PAYAL. SUPERINGO...

வெட்டிப்பயல் said...

//குடுகுடுப்பை said...
ரொம்ப பிளாக் படிக்காதீங்க/எழுதாதீங்க
//

அதான் நான் குறைச்சிட்டேன் :))

வெட்டிப்பயல் said...

//Raghavan said...
Is it VETTI PAYAL no..no.. IT IS VETRI PAYAL. SUPERINGO...
//

மிக்க நன்றி ராகவன்...

கிரி said...

வேற நிறுவனம் மாற நினைப்பதை சிறிது காலத்திற்கு அறவே மறப்பது நல்லது இப்ப இருக்கிற நிறுவனம் தூக்காத வரை.

Anonymous said...

//8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.//

வீட்டு விலை குறைய வாய்ப்புகள் அதிகம்னுதான் சொல்றாங்க. நாங்க இப்ப இருக்கற எடத்துலயும் வீட்டு விலை அதிகமா ஏறிப் போச்சு. நாலு வருஷமா சொந்த வீட்டு கனவு, வெறும் கனவாவே இருக்கு. விலை குறையும்போது வாங்கறத்துக்கு, வேலை இருக்குமோ என்னவோ?

//௯. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.//

சில மாதங்களுக்கு(3-6) தேவையான பணத்தை சேமிப்பில் வச்சுக்கும்படி அறிவுரை
சொல்றாங்க.

Kavinaya said...

அட, நிஜமாவே சீரியஸ் பதிவா? நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க. நன்றி :)

பூச்சாண்டியார் said...

சூப்பரு அப்பு..

//
தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.

//

கூடவே "காசேதான் கடவுளடா" பாட்டையும் கேட்கவும்..

வெட்டிப்பயல் said...

//கிரி said...
வேற நிறுவனம் மாற நினைப்பதை சிறிது காலத்திற்கு அறவே மறப்பது நல்லது இப்ப இருக்கிற நிறுவனம் தூக்காத வரை.//

ஆமாம் கிரி... அதான் நானும் சொல்லியிருக்கேன் :)

வெட்டிப்பயல் said...

//anonymous said...
//8. ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.//

வீட்டு விலை குறைய வாய்ப்புகள் அதிகம்னுதான் சொல்றாங்க. நாங்க இப்ப இருக்கற எடத்துலயும் வீட்டு விலை அதிகமா ஏறிப் போச்சு. நாலு வருஷமா சொந்த வீட்டு கனவு, வெறும் கனவாவே இருக்கு. விலை குறையும்போது வாங்கறத்துக்கு, வேலை இருக்குமோ என்னவோ?
//

எனக்கு அதுல பெருசா நம்பிக்கையில்லை. இந்தியால அதுக்கு சான்ஸ் ரொம்ப குறைவு தானு நினைக்கிறேன்...

//

//௯. லிக்விட் கேஷ் வெச்சிருங்க. எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.//

சில மாதங்களுக்கு(3-6) தேவையான பணத்தை சேமிப்பில் வச்சுக்கும்படி அறிவுரை
சொல்றாங்க//

ஹும்ம்ம்... அதுக்கு மேலயும் போக வாய்ப்பிருக்குனு பேசிக்கறாங்க. பார்க்கலாம்...

வெட்டிப்பயல் said...

//ila said...
mine too//

அதெல்லாம் துரை தமிழ்ல எழுதினா நல்லாருக்கும் :)

வெட்டிப்பயல் said...

//கவிநயா said...
அட, நிஜமாவே சீரியஸ் பதிவா? நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க. நன்றி :)

9:07 PM//

மிக்க நன்றி கவிநயா :)

வெட்டிப்பயல் said...

//பூச்சாண்டியார் said...
சூப்பரு அப்பு..

//
தினமும் "வரவு எட்டணா, செலவு பத்தனா" பாட்டை காலையில் எழுந்தவுடனேவும், படுக்க போவதற்கு முன்பும் கேட்கவும்.

//

கூடவே "காசேதான் கடவுளடா" பாட்டையும் கேட்கவும்..//

நான் சொன்னது வரவுக்கு மீறிய செலவை குறைக்க. இந்த பாட்டு கொஞ்சம் ரிஸ்கானது :)

Anonymous said...

வெட்டி, தேவையான நேரத்துல தேவையான விஷயங்களைச் சொல்லி இருக்கீங்க. Good job. (மறந்துடாம நீங்களும் இதையெல்லாம் கடை பிடிக்கிறீங்கதானே? ;) )

ஆயில்யன் said...

//உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.//

நல்ல கருத்துக்களில் இதுவும் ரொம்ப பிடிச்சிருக்கு!

(சொல்றதயெல்லாம் வைச்சு பாக்கும்போது இப்ப ஐடி இண்டஸ்டிரிக்கு கொஞ்சம் கஷ்டகாலம்தானா???)

Subash said...

ஆஆஹாஹா
சூப்பரோ சூப்பர்

வெட்டிப்பயல் said...

// லக்ஷ்மி said...
வெட்டி, தேவையான நேரத்துல தேவையான விஷயங்களைச் சொல்லி இருக்கீங்க. Good job. (மறந்துடாம நீங்களும் இதையெல்லாம் கடை பிடிக்கிறீங்கதானே? ;) )

//

நானும் முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்... ரொம்ப நாளா ஒரு ஐ பாட் வாங்கனும்னு ஆசைப்பட்டு, நம்ம வசதிக்கு ஒத்து வராதுனு வாங்காம விட்டுட்டேன்னா பார்த்துக்கோங்களேன் :)

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//உங்களோட விசிபிலிட்டியை எப்படியாவது அதிகப்படுத்திக்கோங்க.//

நல்ல கருத்துக்களில் இதுவும் ரொம்ப பிடிச்சிருக்கு!

(சொல்றதயெல்லாம் வைச்சு பாக்கும்போது இப்ப ஐடி இண்டஸ்டிரிக்கு கொஞ்சம் கஷ்டகாலம்தானா???)//

ஆமாங்க. இன்னும் இது தீவிரமா தெரியல. போக போக தெரியும்னு நினைக்கிறேன்...

முரளிகண்ணன் said...

very useful tips :-)))))))))))))

Prabakar said...

இங்க கொஞ்சம் ஏதோ என்னால் முடிந்தது
http://mychitram.blogspot.com/

யோசிப்பவர் said...

ரொம்பச் சரியான டிப்ஸ்

வெண்பூ said...

சூப்பர் டிப்ஸ் வெட்டி..

வெங்கட்ராமன் said...

இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கலாமா. . .?
வேண்டாமா. . .?

அத பத்தியும் டிப்ஸ் கொடுங்க.

Unknown said...

உபயோகமான டிப்ஸ்கள். எஞ்சினியர்கள் பயன் பெற வாழ்த்துக்கள். பொதுவா நீளக் கைய கொஞ்சம் வெட்டினாலே உடனடி பயன் தரும் :)

http://urupudaathathu.blogspot.com/ said...

Suggestions:

1. Don't take any loans; buy homes, properties with loans, or even cash.
Keep as much cash as possible.

2. Pay off as much of personal loans, private loans, as debt collection
will be hastened.

3. Sell any stocks you can even at lower prices.

4. Take money off from Trust Funds.

5. Don't believe in huge sales forecast from customers, be extremely
prudent, lowest inventories, reduce liabilities.

6. Don't invest in new capital.

7. If you are selling homes/ properties/ cars, do it now, when you can get
good prices, they are going to fall.

8. Don't invest in new business proposals.
9. Cancel holiday plans using credit cards.

Anonymous said...

//லிக்விட் கேஷ் வெச்சிருங்க//

நாங்கல்லாம் solid cash ye வச்சிருக்கோம் :))

//எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.//

அப்படியே வச்சிருந்தாலும் அசால்டா வச்சிருக்காதீங்க :))

யோசிப்பவர் said...

வெங்கட்ராமன்,
//இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கலாமா. . .?
வேண்டாமா. . .?
//

இந்த நேரத்துல மட்டும் இல்லை. பொதுவாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது புத்திசாலித்தனம்!!;-))

வெட்டிப்பயல் said...

//Subash said...
ஆஆஹாஹா
//
இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது :)

//
சூப்பரோ சூப்பர்
//

மிக்க நன்றி...

வெட்டிப்பயல் said...

//பிரபாகர் சாமியப்பன் said...
இங்க கொஞ்சம் ஏதோ என்னால் முடிந்தது
http://mychitram.blogspot.com/
//

இதோ வரேன் பிரபாகர்...

வெட்டிப்பயல் said...

//யோசிப்பவர் said...
ரொம்பச் சரியான டிப்ஸ்
//

மிக்க நன்றி யோசிப்பவர் :)

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
சூப்பர் டிப்ஸ் வெட்டி..
//

மிக்க நன்றி வெண்பூ...

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
very useful tips :-)))))))))))))
//

மிக்க நன்றி முக

வெட்டிப்பயல் said...

//வெங்கட்ராமன் said...
இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கலாமா. . .?
வேண்டாமா. . .?

அத பத்தியும் டிப்ஸ் கொடுங்க.
//

என்னை கேட்டா இந்த ரெசெஷன் எவ்வளவு நாள் இருக்கும்னு தெரியல. ஒவ்வொருத்தவங்களும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க.

அதனால அலை எப்ப ஓயறது கால் எப்ப நினைக்கறது...

ஆடம்பரமா இல்லாம பார்த்துக்கோங்க...

வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

// தஞ்சாவூரான் said...
உபயோகமான டிப்ஸ்கள். எஞ்சினியர்கள் பயன் பெற வாழ்த்துக்கள். பொதுவா நீளக் கைய கொஞ்சம் வெட்டினாலே உடனடி பயன் தரும் :)
//

ஆமாம் தஞ்சாவூரான்.. நீங்க சொல்றது சரிதான் :)

வெட்டிப்பயல் said...

//உருப்புடாதது_அணிமா said...
Suggestions:
//

நீங்க சொன்னது எல்லாம் பண்ணா பணம் ரொட்டேஷனே இருக்காது. அது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்னு நினைக்கிறேன்...

விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லது :)

வெட்டிப்பயல் said...

//Prakash said...
//லிக்விட் கேஷ் வெச்சிருங்க//

நாங்கல்லாம் solid cash ye வச்சிருக்கோம் :))

//எல்லாத்தையும் அசட்டா வெச்சிருக்காதீங்க.//

அப்படியே வச்சிருந்தாலும் அசால்டா வச்சிருக்காதீங்க :))
//

ஆஹா.. பட்டையை கிளப்பறீங்களே ப்ரகாஷ்.. சீக்கிரம் ஒரு வலைப்பதிவு ஆரம்பிங்க :)

வெட்டிப்பயல் said...

//யோசிப்பவர் said...
வெங்கட்ராமன்,
//இந்த நேரத்துல கல்யாணம் பண்ணிக்கலாமா. . .?
வேண்டாமா. . .?
//

இந்த நேரத்துல மட்டும் இல்லை. பொதுவாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கிறது புத்திசாலித்தனம்!!;-))
//

Grrrrrrr....

இதெல்லாம் முன்னாடியே சொல்றதில்லையாப்பா...

சுபானு said...

சூப்பர் ஐடியாக்கள் ...

rapp said...

நல்ல டிப்ஸ். நான் ஏதோ ஜாலி பதிவுன்னு வந்தேன். சூப்பர்

rapp said...

//ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.

//

ரொம்ப சரியான விஷயம்

ஜியா said...

//நீங்க சொன்னது எல்லாம் பண்ணா பணம் ரொட்டேஷனே இருக்காது. அது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்னு நினைக்கிறேன்...
//

100% correct... That'll repel on the recession only...

http://urupudaathathu.blogspot.com/ said...

வெட்டிப்பயல் said...
நீங்க சொன்னது எல்லாம் பண்ணா பணம் ரொட்டேஷனே இருக்காது. அது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்னு நினைக்கிறேன்...

விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லது :)///
Recession is coming .... make your own judgment, don't panic !! Do what is
wise.

The recession looks very eminent. It is really time to take pro active
steps to avoid a painful time in the next two years which is how long the
recession is expected to last.

Stay cool, wait, and if you took all of the above actions and more, you
probably will be better off then many. This is not a rumor.
Bear Stearns is the first of many banking and financial institutions that
will start falling in the not too future. If Bear Stearns can fall, so can
JP Morgan, Citibank, HSBC, and the whole world. US economy falls, the rest
will crumble.

India and all those self economies will be the most protected, but not
gullible.

Europe may be a little stronger, but not China , another giant! :place
Malaysia
will see significant impact.

வெட்டிப்பயல் said...

//shayanth said...
சூப்பர் ஐடியாக்கள் ...
//

மிக்க நன்றி சயந்த் :)

வெட்டிப்பயல் said...

//rapp said...
நல்ல டிப்ஸ். நான் ஏதோ ஜாலி பதிவுன்னு வந்தேன். சூப்பர்
//

மிக்க நன்றி ராப் :)

வெட்டிப்பயல் said...

//rapp said...
//ஏதாவது பெருசா நடந்து வீட்டு விலையெல்லாம் குறைஞ்சா (வாய்ப்பு குறைவு தான்... இருந்தாலும்) வேலைல இருக்கறவங்க (கைல காசு இருக்கறவங்க) போட்டி போட்டு வாங்காதீங்க. அப்படி வாங்கினா மறுபடியும் விலையேறத்தான் செய்யும். கொஞ்சம் அமைதி காக்கறது நல்லது. பின்னாடி விலை ஏறும்னு போட்டி போட்டு வாங்கினா மறுபடியும் இதே நிலைமை தான் வரும்.

//

ரொம்ப சரியான விஷயம்
//

ஏதோ உங்களை மாதிரி NRIங்களுக்கு புரிஞ்சா சரி ;)

வெட்டிப்பயல் said...

// ஜி said...
//நீங்க சொன்னது எல்லாம் பண்ணா பணம் ரொட்டேஷனே இருக்காது. அது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்னு நினைக்கிறேன்...
//

100% correct... That'll repel on the recession only...
//

நன்றி ஜி :)

வெட்டிப்பயல் said...

//உருப்புடாதது_அணிமா said...
வெட்டிப்பயல் said...
நீங்க சொன்னது எல்லாம் பண்ணா பணம் ரொட்டேஷனே இருக்காது. அது மேலும் பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்னு நினைக்கிறேன்...

விவரம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லது :)///
Recession is coming .... make your own judgment, don't panic !! Do what is
wise.
//

மீள்வரவுக்கு மிக்க நன்றி அணிமா :)

Divyapriya said...

செம டிப்ஸ் அண்ணா :)

Anonymous said...

//ஆஹா.. பட்டையை கிளப்பறீங்களே ப்ரகாஷ்.. சீக்கிரம் ஒரு வலைப்பதிவு ஆரம்பிங்க :)
//
என்னை யாரும் வலைப்பதிவு ஆரம்பிக்கனும்னு கட்டாய படுத்த முடியாது.

நான் வலைப்பதிவு ஆரம்பிக்கனும்னு நினைச்சா அதை யாராலும் தடுக்க முடியாது.

ஹி ஹி.... சும்மா ஒரு பில்ட் அப்தான் :))

பாலாஜி, இந்த வலைபதிவதெல்லாம் என்னை பொறுத்த வரை கொஞ்சம் பெரிய விஷயமா தோணுது. மேலும் அதுக்கெல்லாம் கொஞ்சமாவது கிட்னி வேணும் :))
அதனால இப்போதைக்கு தங்களின் வாசகனாகவே இருக்க ஆசை.

ஆரம்பிக்கணும் என்றால் உங்களை இல்லாம வேற யாரை கேட்கபோறேன்.

கபீஷ் said...

நல்ல டிப்ஸ்!!

Divya said...

மிக அவசியமான உபயோகமான டிப்ஸ் கொடுத்திருக்கிறீங்க அண்ணா:))

நன்றி!

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - நெலம இப்படி ஆச்சா .... எப்ப பழய நெலம திரும்பும் ......

Unknown said...

superb post !each tip was useful !
It was horrifying to see some banks withdraw credit card limits to Satyam employees immediately after their unfortunate episode !