தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Saturday, August 19, 2006

மென்பொருள் பயிலகம்

மென்பொருள் துறையில் புதிதாக வேலை தேடுபவர்கள் ஏதாவது கோர்ஸ் செய்திருக்க வேண்டுமா??? சர்டிபிகேஷன் எந்த அளவிற்கு உதவும் போன்ற கேள்விகள் கேட்டு எனக்கு ஒரு சிலர் இ-மெயில் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு என்னாலான பதில்கள்.

பொதுவாக புதிதாக வேலை தேடுபவர்கள் எதிலும் வல்லுனர்களாக (Specialisation) இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் எதுவும் கோர்ஸ் செய்திருக்க வேண்டுமென்றோ, சர்டிபிகேஷன் செய்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.

எனக்கு கம்ப்யூட்டர் எதுவும் தெரியாது. சொல்லி தரவும் நண்பர்கள் இல்லை. வீட்டில் கம்ப்யூட்டரும் இல்லை. ஆனால் எப்படியாவது மென்பொருள் துறையில் நுழைய வேண்டும் என்றிருப்பவர்கள் கோர்ஸ் செல்வது தவறில்லை.

மேலும் காலேஜில் படிப்பவர்கள், சரியாக சொல்லி தர ஆளில்லை என்றிருப்பவர்கள், வகுப்பில் ஒருவர் அல்லது இரண்டு பேர் சென்று மற்றவர்களுக்கு சொல்லி தரலாம்.

எங்களுக்கு காலேஜில் C சொல்லித்தந்த ஆசிரியர் வகுப்பில் கேட்ட முதல் கேள்வி, "Who is developed by C?". ஆனால் அவர் கேட்க நினைத்த கேள்வி "Who developed C?" அவர் சொல்லி கொடுத்து நாங்கள் புரிந்து கொண்டு.... வேணாம் விடுங்க...

அதனால் நாங்கள் Unix, C, C++ கோர்ஸ் சென்றோம்... ஓரளவு நன்றாகவே தெரிந்து கொண்டோம்... அந்த கோர்ஸ் சென்றது எனக்கு நம்பிக்கையை கொடுத்தது...

நான் சொல்வது இதுதான்... புதிதாக வேலைத் தேடுபவர்கள் அந்த துறையில் வல்லுனர்களாக வேண்டும் என்று அவசியமில்லை. ஓரளவு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து படித்தாலே போதும். சர்ட்டிபிகேஷன் பெரிதாக உதவும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.

எதை படித்தாலும் நன்றாக புரிந்து படியுங்கள். மற்றவர்களுக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுங்கள். தெரியாததைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வேறு வழியில்லை என்றால் கோர்ஸ் செல்வது தவறில்லை. கோர்ஸ் சென்றாலும் முடிந்தவரை நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

்மதிப்பெண் குறைவாக இருக்கிறது என்று க்கவலைப்படாதீர்கள். பெரும்பாலானா கம்பெனிகள் உங்களுக்கு என்ன தெரியும் என்பதையே பார்க்கின்றன. மதிப்பெண் முறையைக் கோண்டு ஒரு சில கம்பெனிகளே தெரிந்தெடுக்கின்றன. அதுவும் முதல் சுற்றுக்கே... இன்றைய நிலையில் அரியர் பேப்பர்கள் இல்லாமல் இருந்தாலே போதும்...

நம்பிக்கையோடு உழையுங்கள்... இறைவன் உங்களுக்கு துணை புரிவான்..

14 comments:

வெற்றி said...

வெ.ப,
தங்களின் தகவல்கள் பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீங்கள் பதிவு தொடங்கிய நாளிலிருந்து நம்மினத்தவர்கள் பயனடையும் வண்ணம் பல பதிவுகளை எழுதி வருகிறீர்கள். நல்ல பணி. தங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

உங்க புண்ணியத்தில் "C" உடன் ஆரம்பித்துள்ளேன், அடுத்த புக்கும் "C+" ரெடியாக இருக்கு.
போகப்போகத் தெரியும்,முடியுமா முடியாதா என்று?

நாமக்கல் சிபி said...

வெற்றி,
மிக்க நன்றி... தங்களைப் போன்றோர் அளிக்கும் ஆதரவுதான் என்னை மேலும் எழுத தூண்டுகிறது...

வடுவூர்,
கண்டிப்பாக முடியும்... தங்களுக்கு ஏதாவது புரியவில்லை என்றால் சொல்லுங்கள்... எனக்கு தெரிந்த வரையில் சொல்லிக் குடுக்கிறேன்...

Anonymous said...

Helo..

Giving nice info for sw personals... really wonderful..keep doing good..

Nicky

உங்கள் நண்பன் said...

//வெ.ப,
தங்களின் தகவல்கள் பலருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. நீங்கள் பதிவு தொடங்கிய நாளிலிருந்து நம்மினத்தவர்கள் பயனடையும் வண்ணம் பல பதிவுகளை எழுதி வருகிறீர்கள். நல்ல பணி. தங்களின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

//


நண்பர் திரு.வெற்றி அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்!

இன்னும் நல்ல கருத்துள்ள, மற்றவர்களுக்குப் பயன்படக்கூடிய பல ஆக்கங்களை பதிவிட வாழ்த்துகிறேன்!

அன்புடன்...
சரவணன்.

G.Ragavan said...

ஆக்கபூர்வமான பதிவு தெரியும்...ஆனால் இது ஊக்கபூர்வமான பதிவும் கூட. நல்ல தகவல்கள். கண்டிப்பாக படிப்பவரை ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Anonymous said...

Very useful one !!!
Thanks & Keep it up
...aadhi

Udhayakumar said...

//சர்டிபிகேஷன் எந்த அளவிற்கு உதவும்//

கண்டிப்பாக இது ஓரளவிற்கு உதவி செய்யும். சர்டிபிகேஷன் செய்வதாம் நீங்கள் உண்மையிலேயே அதைப் பற்றி நிறைய தெரிந்து கொள்வீர்கள். உங்களைத் தேர்வு செய்பவர்களுக்கும் இது ஒரு கூடுதல் வாய்ப்பாக அமையும்.

ஆனால் சர்டிபிகேஷன் இருந்தால் மட்டும் போதும் வேலை கிடைத்துவிடும் என்பது மிகத் தவறான கருத்து.

இதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நல்ல ரெஸ்யூமே தயார் செய்வதும் மிக அவசியம். சர்டிபிகேஷன் மற்றும் நீங்கள் பள்ளி, கல்லூரி அளவுகளில் பெற்ற பெயர் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிகள் தேர்வு செய்பவர்களின் பார்வையில் படும்படி முதல் பக்கத்தில் இருக்க வேண்டும். இது பற்றி நிறைய எழுதலாம்.

பாலாஜி, நீங்களே இதை ஒரு பதிவா போட்டிருங்களேன்.

நாமக்கல் சிபி said...

Nicky,
thx a lot...

சரவணன்,
மிக்க நன்றி... எனக்கு தேரிந்ததை கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.

ஜி.ரா,
மிக்க நன்றி. தங்களைப் போன்றோர் கொடுக்கும் ஊக்கம்தான் என்னையும் எழுத வைக்கிறது...

ஆதி,
மிக்க நன்றி...

உதய்,
விளக்கத்திற்கு நன்றி... சர்ட்டிபிகேஷன் செய்வதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் நமக்கு தெரியாத சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொள்வோம். ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அது ஒரு added advantageஏ ஒழிய basic requirement இல்லை...
ரெசுமேவைப் பற்றி ஏற்கனவே சாப்ட்வேர் இன்சினியர் ஆகலாம் வாங்கல சொல்லி இருக்கிறேன்...

//பள்ளி, கல்லூரி அளவுகளில் பெற்ற பெயர் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றிகள் தேர்வு செய்பவர்களின் பார்வையில் படும்படி முதல் பக்கத்தில் இருக்க வேண்டும்.//

உதய் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் இந்த மாதிரி எதுவும் இல்லாதவர்கள் தன்னம்கையிழந்து பொய்யாக எதையாவது போட்டு தவறு செய்கிறார்கள். அதையும் அந்த பதிவில் சொல்லியுள்ளேன்...

Syam said...

முயற்ச்சி திருவினையாக்கும்னு கோழி மூலம் சொல்லி மறுபடியும் அதை இங்க சொல்லீருக்கீங்க... :-)

நாமக்கல் சிபி said...

syam,
//முயற்சி திருவினையாக்கும்னு கோழி மூலம் சொல்லி மறுபடியும் அதை இங்க சொல்லீருக்கீங்க... :-)//

இதுதானே வெற்றிக்கான தாரக மந்திரம்... அதனாலத்தான் திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்கேன்...

sashank said...

very nice. keep it up

Anonymous said...

I appreciate your simplicity and down to earth approach in helping the graduates from villages and poor quality institutions.Everyone can not become Einstein. It is very important to get a job and progress further. Good luck.

நாமக்கல் சிபி said...

Shashank/Anonymous,
Thx a lot...