தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Thursday, July 13, 2006

சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1!!!

இந்த தொடர் மூலம் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரில வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன்.
ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.

சாப்ட்வேர் இண்டஸ்ட்ரில வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே போதும். (We need to do Smart Work, no need for Hard work). புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).

சில தவறான புரிதல்கள்: (இதெல்லாம் நாங்க படிக்கும் போது நினைத்துக் கொண்டிருந்தது)
1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.
2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.
3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.
4) Quants, analytical, Verbal எல்லாம் GRE, GMAT, CAT படிப்பவர்களுக்கு தான்.
5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
6) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
7) அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குதான் வேலை சுலபமா கிடைக்கும்.
8) தினமும் எல்லா companyக்கும் போய் Resume கொடுக்க வேண்டும்.
(இன்னும் நிறைய இருந்தது. எல்லாம் மறந்து போச்சு. ஞாபகம் இருப்பவர்கள் சொன்னா நல்லா இருக்கும்)
இது எல்லாம் முட்டாள்தனம்னு வேலை தேடும்போது தான் தெரிந்தது.

நான் BE முடித்தது 2003ல். அந்த வருடம் கோவைல PSG, CIT, GCT தவிற மத்த காலேஜ்ல எல்லாம் Campus Placement ரொம்ப கம்மி. சொல்லப் போனால் எங்க காலேஜ்ல எல்லாம் Placementஏ இல்லை. சரி வேலை தேடி எங்கு போகலாம்னு யோசிக்கும் போது சென்னை அல்லது பெங்களூர்னு முடிவு பண்ணோம்.
பெங்களூர்ல தான் சாப்ட்வேட் இண்ட்ஸ்ட்ரிஸ் அதிகம் இருக்கு, அதானால அங்கயே போகலாம்னு முடிவு செய்து அங்கே சென்றோம்.

அந்த நாள்ல Openings கம்மியா இருந்ததால ஒரு சிலர் எல்லாம் வேலை தேடாம சொந்த ஊரிலே விவசாயம் மற்றும் சொந்த பிஸினஸ் பார்க்க சென்று விட்டனர்.

மொதல்ல போன எங்களுக்கு வேலை கிடைக்க 6-10 மாசமானது. அதற்கு பிறகு எல்லா companyயும் போட்டிப் போட்டுக் கொண்டு ஆள் எடுக்க ஆரம்பித்தன.
ஊருக்கு போனவர்கள் எல்லாம் விஷயம் தெரிந்து பெங்களூர் வந்தனர்.
எங்க ரூம் வேடந்தாங்கல் மாதிரி, வேலைத் தேடி வருபவர்களுக்கு வேலை கிடைத்தவுடன் அடுத்த batch வரும் (பொதுவாக வேலை கிடைப்பவர்கள் hyderabad, Noida, Chennai, மைசூர் சென்று விடுவார்கள்) . எப்பொதும் வேலை தேடி வருபவர்கள் ஒரு 3-5 பேர் இருப்பார்கள்.

நான் பெங்களூர்ல இருந்த வரையில் 20-30 பேருக்கு மேல் எங்க ரூம்ல தங்கி வேலை தேடி நல்ல பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இந்த அனுபவத்தை வைத்து தான் இந்த தொடரை எழுதுகிறேன். இதுல எனக்கு தெரிந்த வரையில் practicalலாக எழுதுகிறேன்.

42 comments:

பாலசந்தர் கணேசன். said...

கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்ததால், வெளியில் வேலை தேடும் அனுபவங்கள் பெறவில்லை. இங்கு பலருக்கும் கேம்பஸில் வேலை கிடைத்திருக்கும். நீங்கள் எழுதபோவதை பார்க்க என்னை போலவே அவர்களும் ஆர்வத்தோடு இருப்பார்கள் என எண்ணுகிறேன்.

Anonymous said...

Definitely useful for new job finders. Great work

Anonymous said...

Good Work.. Keep writing.
..aadhi

நாமக்கல் சிபி said...

பாலசந்தர்,
மிக்க நன்றி. நான் 3 வருஷம் கத்துக்கிட்டத சொன்னா மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்னு ஆரம்பித்துள்ளேன்.
முடிந்த வரை எனக்கு தெரிந்ததை எல்லாம் சொல்கிறேன்.

Anonymous,
Thx. I will try to give my best.

Anonymous said...

Bala,

Eagerly looking forward to your series. kalakkungka.

Ilango.

நாமக்கல் சிபி said...

aadhi/Ilango,
Thx for ur wishes. Will try to give my best so that it will be helpful for others and they dont need to suffer like us.

வஜ்ரா said...

"தொழில் புர்ச்சி" மாதிரி IT "புர்ச்சி"யினால் பயனடைந்தவர்களைப் பத்தி எழுதுறிங்க...நல்லது..

நல்லா சொல்லுங்க...

நாகை சிவா said...

நண்பா!
எழுதுங்கள். நானும் என் நண்பர்களில் சில(பல) சாப்ட்வேர் துறையில் நுழைவதற்கு அடித்த கூத்துகள் எல்லாம் பார்த்து உள்ளேன். நானும் அப்ப அப்ப வந்து எடுத்து விடுறேன்.
ஹம், கலக்குங்கள்

நாமக்கல் சிபி said...

வஜ்ரா,
நன்றி.
நான் பயணடைந்தவர்களைப் பற்றி எழுதவில்லை. வேலை கிடைக்க என்னவெல்லாம் செய்யலாம்னு எனக்கு தெரிந்தவரை எழுதலாம் என்று இருக்கிறேன்.

சிவா,
நன்றி.
அப்பப்ப வந்து எடுத்துவிடுங்க!!!

Sivabalan said...

நல்ல விசயம் திரு.பாலாஜி மனோகர். தொடர்ந்து எழுதுங்கள். நிச்ச்யம் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

நாமக்கல் சிபி said...

நன்றி சிவபாலன்.

Syam said...

நல்ல ஒரு பதிவு..நிறய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்... :-)

கதிர் said...

நீங்க சொன்ன அத்தனையும் தெரிஞ்சாதான் வேலையே கிடைக்கும்னு எனக்கு நிறைய பேர் அட்வைஸ் என்ற பேர்ல என்னை ஒரு வழி பண்ணி திரும்பவும் ஊருக்கே அனுப்பிட்டாங்க. அப்போ விவரம் தெரியாது. (இப்போவும்தான்). இதை வேலை தேடறவங்க படிச்சா பயனுள்ளதா இருக்கும்.

அன்புடன்
தம்பி

நாமக்கல் சிபி said...

Syam,
மிக்க நன்றி. அந்த எண்ணத்துலதான் இந்த தொடரை ஆரம்பித்துள்ளேன்.

தம்பி,
இந்த எண்ணத்துலதான் எங்க கூட படிச்சவங்களும் ரொம்ப நாளா பெங்களூர் வராமலேயே இருந்தாங்க.
அவுங்களுக்கு எல்லாம் நிலைமையை எடுத்துக் கூறியவுடன் கொஞ்ச கொஞ்சமாக வர ஆரம்பித்தனர். இன்று அனைவரும் நல்ல நிலைமையில் உள்ளனர்.
இப்பவும் எங்க ரூம்லயும், ரூமை சுற்றியும் பல Freshers இருக்காங்க. சரி எல்லாருக்கும் உதவியாக இருக்குமேனுதான் ஆரம்பிச்சிருக்கன்.
உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லலாம்.

நாமக்கல் சிபி said...

எ.பி,
இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

ரவி said...

நல்ல தொடர்...வரிகள் அல்லது பத்திகள் இடையே இடைவெளி விட்டு இன்னும் கொஞ்சம் யோசிச்சு எழுதுங்க...

நாமக்கல் சிபி said...

நன்றி செந்தழல் ரவி.
இனிமேல் கவனமாக இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நல்ல தொடர் பையல்ஜி. நீங்க சொல்ற தவறான புரிதல்களின் பட்டியல் சரியான பட்டியல் தானுங்க.

//1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.
2) ஜாவா தெரிஞ்சா தான் வேலை வாங்கலாம்.
//

இந்த மாதிரி எல்லாம் இல்லாமத் தானே நான் பத்துவருடமா இங்க குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். :-)

ஒவ்வொன்னா எடுத்து இப்படியே சொல்லலாம்.

(எழுத்துப்பிழையாருக்கு: ஞாபகம் என்பதை நினைவு என்று சொல்லலாம் இல்லையா? ஒவ்வொன்னா சரியா ஒவ்வொண்ணா சரியா? ஒன்னு சரியா ஒண்ணு சரியா? கொஞ்சம் சொல்லுங்களேன்)

நாமக்கல் சிபி said...

நன்றி குமரன்.
இதெல்லாம் 3 வருடத்திற்கு முன்னே எங்களுக்கு தெரிந்திருந்தால் கொஞ்சம் வசதியாக இருந்திருக்கும்.
தினமும் உப்புமா சாப்பிட்டிருக்க மாட்டோம். (இதை பத்தி இன்னொரு பதிவில் போடுகிறேன்)

வடுவூர் குமார் said...

ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
எமது தொழில் இதன் பக்கம் இல்லையென்றாலும்...ஆர்வம் தான் காரணம்.

பிரதீப் said...

நல்ல தொடர் இது.
எனக்கும் வெளியில் வேலை தேடும் அனுபவம் ஏற்படவில்லை. முதல் வேலையில் சேர்ந்த பிறகு அடுத்த இண்டர்வியூவே ஐந்தரை வருடங்களுக்குப் பிறகுதான். எனினும் எங்கள் வேடந்தாங்கலில் வந்து வேலை தேடி வெற்றி பெற்ற பறவைகளின் அனுபவங்களைக் கண்டிருக்கிறேன்.

தொடருங்கள், அவ்வப்போது என் கருத்துகளைச் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

நன்றி வடுவூர் குமார், பிரதீப்.

பிரதீப்,
மறக்காமல் சொல்லுங்கள். எல்லோரும் பயன் பெறட்டும்.

குமரன் (Kumaran) said...

பையல்ஜி. பாலசந்தர் கணேசன் மாதிரி எனக்கும் கேம்பஸ் நேர்முகத்தேர்விலேயே வேலை கிடைத்துவிட்டதால் இந்த அனுபவங்கள் இல்லை. ஆனால் நானும் சொல்வதற்கு இந்தத் தொடரில் நிறைய இருக்கும் போல் தோன்றுகிறது. அதனால் தொடர்ந்து படிப்பேன்.

குமரன் (Kumaran) said...

//ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக.
//

முடிந்த வரை தமிழில் எழுதுங்கள். ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கனவே புழக்கத்தில் தமிழ்ச்சொல் இருந்து அது எழுதும் போது உங்கள் நினைவிற்கு வந்தால் அதனையே பயன்படுத்துங்கள். மற்றபடி ஆங்கிலத்தில் எழுதுவது என்னைப் பொறுத்த வரை தவறில்லை.

யாராவது வந்து நீங்கள் எழுதிய ஆங்கிலச் சொல்லுக்குத் தகுந்த தமிழ்ச்சொல் சொன்னால் அதனை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்த முறை பயன்படுத்தலாம்.

குமரன் (Kumaran) said...

//We need to do Smart Work, no need for Hard work//

இது என்னமோ மிகப் பெரிய உண்மை. இந்தப் பத்துவருடக் குப்பைக் கொட்டலில் இதனைப் பல இடங்களில் கண்டிருக்கிறேன். என் குழுவில் இருப்பவர்களிடமும் பலமுறை அதனைச் சொல்லியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).
//

சரி தான். கத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

//1) இண்டஸ்ட்ரில புதுசா வர டெக்னாலஜி எல்லாம் தெரிஞ்சாதான் வேலை கிடைக்கும்.
//

எனக்கு மெயின்ப்ரேம் கொஞ்சம் தெரியும். அதில் ஒரு 7 வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும் ஒரு ஜே.சி.எல். நானாக எழுதியதில்லை. ஒரு கோபால் ( ) ப்ரோகிராம் எழுது என்றால் திணறிவிடுவேன். ஆனால் வாழ்க்கை மிகவும் நன்றாகத் தான் போய் கொண்டிருக்கிறது. பலவிதமான பாராட்டுகளுடன்.

குமரன் (Kumaran) said...

எனக்கு மெயின்ப்ரேம் கொஞ்சம் தெரியும். அதில் ஒரு 7 வருடங்கள் குப்பை கொட்டியிருந்தாலும் ஒரு ஜே.சி.எல். நானாக எழுதியதில்லை. ஒரு கோபால் (COBOL) ப்ரோகிராம் எழுது என்றால் திணறிவிடுவேன். ஆனால் வாழ்க்கை மிகவும் நன்றாகத் தான் போய் கொண்டிருக்கிறது. பலவிதமான பாராட்டுகளுடன்.

குமரன் (Kumaran) said...

//3) Resume அதிக பக்கம் இருக்கணும். Area of Interest நிறைய இருக்கணும்.
//

இது மிகப்பெரிய தவறு. பெரிய ரெசுமே இருந்தால் படிக்கக் கூட மாட்டார்கள். என்னிடம் வேலை வேண்டி வந்த ரெசுமேக்கள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருந்தால் நான் படித்துப் பார்க்கக் கூட மாட்டேன். அந்த ரெசுமேக்காரர் மிகத் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் 20 ரெசுமே ஒரு வேலைக்கு வந்திருக்கும் போது 1/2 மணி நேரத்தில் இருபதையும் படித்துப் பார்க்க வேண்டும் என்னும் போது இரண்டு பக்க ரெசுமேக்களே படிக்கப்படும். மற்றவற்றைப் படிக்க பொறுமை இருக்காது.

அப்பா அம்மா பெயர், பாஸ்போர்ட் விவரங்கள், கல்யாணம் ஆனவரா இல்லையா, பிறந்த நாள் விவரங்கள் போன்றவை கட்டாயம் ரெசுமேயில் இருக்கத் தேவையில்லை. எவ்வளவு சுருக்கமாக நம்மைப் பற்றிச் சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.

குமரன் (Kumaran) said...

//5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
//

இது நல்ல ஜோக்கா இருக்கே?!! :-)

குமரன் (Kumaran) said...

//) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
//

இதுல என்ன சொல்றீங்க? பெங்களூர் போனாலும் எளிதா வேலை கிடைக்காதுன்னு சொல்றீங்களா இல்லை சென்னையிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனன்னு சொல்றீங்களா? புரியலையே?

குமரன் (Kumaran) said...

//தினமும் எல்லா கம்பெனிக்கும் போய் றெசுமெ கொடுக்க வேண்டும்.
//

எனக்கு கேம்பஸ் நேர்முகத்துல வேலை கிடைச்சிருக்காட்டி நானும் இப்படித் தான் செஞ்சிருப்பேன். நமக்கு வழிகாட்டியவர் அப்படி தான் செஞ்சார்.

பி.இ. முடிச்ச பிறகு எனக்கு வழிகாட்டியா தன்னைத் தானே நியமிச்சுக்கிட்ட என்னோட உறவினர் ஒருத்தர் 'போன் டைரக்டரி' எடுத்து இன்ஸ்ட்ருமென்சன் கம்பெனி என்ன என்ன இருக்குன்னு பாத்து எல்லாருக்கும் போய் ரெசுமே குடுத்துட்டு வான்னு சொன்னார். நல்ல வேளையா நான் எம்.இ. சேர்ந்துட்ட்டேன். தப்பிச்சேன். :-)

நாமக்கல் சிபி said...

//ஆனால் நானும் சொல்வதற்கு இந்தத் தொடரில் நிறைய இருக்கும் போல் தோன்றுகிறது. அதனால் தொடர்ந்து படிப்பேன்.
//
மிக்க மகிழ்ச்சி. இந்த துறையில் தங்களைப் போல் அதிக வருடம் இருப்பவர்கள் கூறினால் புதிதாக வருபவர்களுக்கு மேலும் நம்பிக்கைக்கூடும்.

நாமக்கல் சிபி said...

//முடிந்த வரை தமிழில் எழுதுங்கள்//
சரி என்னால் முடிந்த வரை தமிழில் எழுதுகிறேன்.


//பெரிய ரெசுமே இருந்தால் படிக்கக் கூட மாட்டார்கள். என்னிடம் வேலை வேண்டி வந்த ரெசுமேக்கள் இரண்டு பக்கங்களுக்கு மேல் இருந்தால் நான் படித்துப் பார்க்கக் கூட மாட்டேன்.//
ஆமாம் உண்மை. நாங்க படிக்கும் போது அதிகமான பிராஜக்ட் ஒர்க்கும், அதிக பேப்பர் பிரசண்டேசனும் செய்து ஒரு சிலர் 5-10 பக்க ரேசுமே வைத்திருந்த்தார்கள். அதை பார்த்தவுடன் கொஞ்ச பேர் வேலை தேடும் எண்ணத்தையே கைவிட்டனர். கொஞ்ச பேர் அந்த ரேசுமேவை அவர்களுக்கு தெரியாமல் காபி அடித்தனர். அது மிகப்பெரிய தவறு என்று பின்னால்தான் உணர்ந்து கொண்டோம்.
ரேசுமே பத்தி எப்படியும் பின்னால் கூறுவேன். தொடர்ந்து படித்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

நாமக்கல் சிபி said...

//
//புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை :-).
//

சரி தான். கத்துக்கலாம்ன்னு சொல்ல வர்றீங்களா? :-)
//

ஆமாம். கணினி துறையைத் தவிர மற்ற துறையில் படித்த மாணவர்கள், சாப்ட்வேர் இஞ்சினியர் ஆவதற்கு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது மிகப் பெரிய தவறு.
அதிக சம்பளம் பெறுவதால் பெரிய புத்திசாலிகள் என்று அர்த்தமில்லை.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பொதுவாக முதல் ரவுண்டில் கேட்கும் (Aptitude) கேள்விகள் அனைத்தும் 8-10வது வரை இருக்கும் புத்தகத்தில் இருக்கும் கணக்கு மற்றும் ஆங்கிலமே.
தன்னம்பிக்கையுடன் சரியான வழியில் வேலை தேடினால் சீக்கிரம் வேலை வாங்கிவிடலாம்.

நாமக்கல் சிபி said...

//
//5) Shakuntala Devi Puzzles படிச்சா போதும் இன்போஸிஸ்ல வேலைக்கு சேர்ந்துடலாம்.
//

இது நல்ல ஜோக்கா இருக்கே?!! :-)
//

இது இன்றும் என்னிடம் நிறைய பேர் கேட்கிற கேள்வி. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் ஒரு காலத்தில் Shakuntala Devi Puzzles
(Puzzles to puzzle You, More Puzzles)ல் இருந்து 5-6 கேள்விகள் கூட வந்தது.
ஆனால் அது மாறி பல வருடங்கள் ஆகிறது.
இன்போஸிஸ்க்கு தயார் செய்வது எப்படி என்று நான் பின்னால் சொல்கிறேன்.

நாமக்கல் சிபி said...

//
//) முக்கியமான ஒன்று: பெங்களூர் போன சுலபமா வேலை வாங்கிடலாம். சென்னைல openings கம்மி.
//

இதுல என்ன சொல்றீங்க? பெங்களூர் போனாலும் எளிதா வேலை கிடைக்காதுன்னு சொல்றீங்களா இல்லை சென்னையிலேயே நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனன்னு சொல்றீங்களா? புரியலையே?
//
பெங்களூரைவிட சென்னையில் freshersக்கு வேலை கிடைப்பது சுலபம்.
பெங்களூரில் experiencedக்கு (including Fake)வேலை கிடைப்பது சுலபம்.
சென்னை கம்பெனியைவிட பெங்களூர் கம்பெனிகள் நல்ல சம்பளம் கொடுக்கும்.
ஐயைய்யோ....தேவை இல்லாததெல்லாம் எதுக்கு சொல்றன்.

என்னுடைய அனுபவத்துல நான் பாத்து பெங்களூரில் வேலை தேடிக்கொண்டிருக்கும் போதும் சென்னைக்கு interview போய் வேலைக்கு சேர்ந்தவர்கள் மிக அதிகம்.

நாமக்கல் சிபி said...

//பி.இ. முடிச்ச பிறகு எனக்கு வழிகாட்டியா தன்னைத் தானே நியமிச்சுக்கிட்ட என்னோட உறவினர் ஒருத்தர் 'போன் டைரக்டரி' எடுத்து இன்ஸ்ட்ருமென்சன் கம்பெனி என்ன என்ன இருக்குன்னு பாத்து எல்லாருக்கும் போய் ரெசுமே குடுத்துட்டு வான்னு சொன்னார். //
இது மற்ற எல்லா கம்பெனிக்கும் சரி. ஆனால் சாப்ட்வேர் கம்பெனிக்கு ஒத்து வராது. பெரும்பாலான கம்பெனிகள் இ-மெயிலில் தான் ரெசுமே வாங்குவார்கள். Koramangala, Electronic City, Indira Nagarnu ஒவ்வொரு கம்பெனியா ரெசுமே கொடுத்தும் எதில் இருந்தும் அழைப்பு வரவேயில்லை. இதில் செலவு செய்யும் நேரத்தில் ஏதாவது உருப்படியாக படிக்கலாம்.

Anonymous said...

This time to thank for my friend Periyaswamy Rajamanickam who forwarded this site.and Thanks for All your comments.

I am very much appriciating Balu service.

Thanks,
PerumalSwamy Raju.

நாமக்கல் சிபி said...

Perumalsamy/Ananth,
thx a lot...

Here is the link for the whole series

http://vettipaiyal.blogspot.com/2006/08/blog-post_115690256720989439.html

Anonymous said...

hai iam vaishnavi studying BCA I year so from now itself iam searching for such kinds of informations thanks for anantha vikatan which helped me to get this address.And thanks to vettipaiyal also.

KASI said...

நானும் கேம்பஸ் இன்டர்வீவ் ல தான் செலக்ட் ஆனேன் ராஜஸ்தான் ல ரொம்ப கொடுமைய இருக்குதுபா!!

வடிவேலு சொல்ற முடியல !!!!!!! தான் ஞாபகம் வருது!!!!