தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, January 21, 2009

இந்திய பயணம் - 1

வந்ததுல இருந்து இந்திய பயணம் பத்தி எதுவுமே எழுதல. எழுதாம இருக்கறதுக்கு முதல் காரணம் எதை எழுதறது எதை விடறதுனு புரியல. எப்பவும் போல நான் வந்தவுடனே வேட்டு வெடிச்சாங்க. முதல் முறை வரும் போது சிவாஜி ரிலிஸ். ரெண்டாவது முறை தீபாவளி முடிஞ்சி வந்தேன். அன்னைக்கும் மிச்சமிருந்த வேட்டு எல்லாம் வெடிச்சிட்டு இருந்தாங்க. இந்த முறை சரியா (தல) தீபாவளிக்கு வந்து சேர்ந்துட்டேன்.

இந்த தீபாவளி சென்னைல கொண்டாடினேன். இந்த வருஷம் தீபாவளி அமாவாசைல வரல. அதனால வந்தவுடனே கறி குழம்பு தான். சென்னைல மக்கள்கிட்ட காசு கொட்டிக்கிடக்கு போலிருக்கு. எவ்வளவு பட்டாசு. மொட்டை மாடில இருந்து வேடிக்கை பார்த்தா சென்னையே வான வேடிக்கைகளால் போர்த்திய மாதிரி இருந்தது. ரெண்டு மணி நேரத்துக்கு மேல வெடிச்சிட்டு இருந்தாங்க. அமெரிக்காவுல ஜீலை 4 அன்று அரசே வெடி வெடிக்கும். ஆனா இந்த அளவுக்கு இருக்காது.

என்னுமோ அமெரிக்காவுலே பொறந்து வளர்ந்த மாதிரி பில்ட் அப் கொடுக்கறயேனு நீங்க மனசுல நினைக்கிறது எனக்கு புரியுது. என்ன செய்ய, கள்ளக்குறிச்சில இப்படி எல்லாம் வான வேடிக்கை விடமாட்டாங்கனு சொன்னா. அது எங்களுக்கே தெரியும்டா வெண்ட்ருனு நீங்க சொல்லிடுவீங்க. அதான் அப்படியே அமெரிக்கா பிட்ட போட்டாச்சு.

இந்த தடவை இந்தியால இருந்த மூணு மாசமும் ரொம்ப பரபரப்பா போயிடுச்சு. பஸ் பயணமும், ட்ரெயின் பயணமும் மாத்தி மாத்தி பண்ணி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் முடிஞ்ச அளவுக்கு கொடுத்தாச்சு. இதுல ஒரு கொடுமை என்னனா, பெங்களூருக்கு சென்னைல இருந்து ஒரு முறை பஸ்ல போகலாம்னு கோயம்பேடு வந்தேன். தமிழ்நாடு பஸ், கர்நாடகா பஸ் ரெண்டும் இருந்துச்சு. 

கர்நாடகா பஸ் கிளம்பி பத்து நிமிஷத்துல தமிழ்நாடு பஸ் கிளம்பும்னு கண்டக்டர் சொன்னாரு. நானும் சரி நம்ம காசு கொடுக்கறது தான் கொடுக்கறோம், தமிழ்நாட்டுக்கே கொடுப்போம்னு ஒரு இனவெறில தமிழ்நாட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி ஏறிட்டேன். தமிழனை ஏமாத்த தமிழனால தான் முடியும்னு நிருபிச்சி ஒரு மணி நேரம் கழிச்சி பஸ் எடுத்தாரு டிரைவரு. அப்ப முடிவு பண்ணது தான். இனிமே இனப்பாசத்தை எல்லாம் பஸ்ல காட்டக்கூடாதுனு. 

அப்பறம் இந்த தடவை தான் அதிகமா ட்ரெயின்ல பயணம் செஞ்சேன். மொத்தமா இதுக்கு முன்னாடி மூணு நாலு தடவை தான் நினைவு தெரிஞ்சி டிரெயின்ல போயிருக்கேன். முக்கிய காரணம், கள்ளக்குறிச்சில டிரெயின் இல்லாதது. பஸ்ஸைவிட ட்ரெயின் பயணம் கொஞ்சம் சுகமா தான் இருக்குது. அப்பர் பர்த்ல ஏறனவுடனே கவுண்டர் இந்த இடத்துல இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு ஒரு காமெடி தோணுச்சு. அதை ஏதோ ஒரு புக்ல உடனே எழுதி வெச்சேன். இந்தியாலயே விட்டுட்டு வந்துட்டேன். யோசிச்சி எழுதறேன். 

விசா இண்டர்வியூக்கு பெங்களூர்ல இருந்து சென்னைக்கு சாப்பாடு கொடுக்கற டிரெயின்ல வந்தேன். அது என்ன சாப்பாடு கொடுக்கற டிரெயினு கேக்கறீங்களா? பெங்களூர்ல புறப்படும் போது சாப்பாடு கொடுக்க ஆரம்பிக்கறானுங்க. சென்னை வர வரைக்கும் சலிக்காம ஏதாவது கொடுத்துட்டே இருக்கானுங்க. நானும் அவுங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டுட்டேன். அந்த ட்ரெயின் பேரு ஷதாப்தி.

அப்பறம் ரெண்டு மூணு தடவை கொயமுத்தூர் வந்தேன். பெங்களூர்ல இருந்து கோவை வர பஸ் கிடைக்காதவங்க, இதை முயற்சி செஞ்சு பார்க்கலாம். ஓசூர்ல ஒன்பதரைக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ், பத்து மணிக்கு ஒரு அல்ட்ரா டீலக்ஸ் புறப்படுது. கொஞ்சம் கூட்டம் இல்லாம நிம்மதியா வந்து சேரலாம். அது ஏன் அல்ட்ரா டீலக்ஸ்னா, மத்த எல்லா பஸ்லயும் ஹை டெசிபல்ல விஜய் படமோ (வசீகரா, சச்சின்) இல்லை சூர்யா (காக்க காக்க, ஆறு) போட்டு கொல்றானுங்க. எல்லா பஸ்லயும் இப்படி படம் போட்டு டார்ச்சர் பண்ணா என்ன தான் பண்றதுனு தெரியல. (இதுக்கு எல்லாம் யாராவது பொதுநல வழக்கு போட மாட்டாங்களா?) அதுக்கு இந்த அல்ட்ரா டீலக்ஸ் பஸ்ல வந்தா கொஞ்சம் தப்பிக்கலாம்.

சரிங்க. இன்னைக்கு இந்த மொக்கை போதும்னு நினைக்கிறேன். அப்பறம் பொறுமையா அடுத்த மொக்கையை போடலாம்... வர்ட்டா....

14 comments:

துளசி கோபால் said...

ஆமாமாம்....பத்து நிமிசத்துக்கு ஒருவாட்டி சாப்பாடு கொடுத்துக் கொல்றாங்க இந்த ஷதாப்தியில். சீன்னு போச்சு.

ம்...அப்புறம் சொல்லுங்க. என்ன ஆச்சு?

வெட்டிப்பயல் said...

//துளசி கோபால் said...

ஆமாமாம்....பத்து நிமிசத்துக்கு ஒருவாட்டி சாப்பாடு கொடுத்துக் கொல்றாங்க இந்த ஷதாப்தியில். சீன்னு போச்சு.
//
ஆமா டீச்சர்... தூங்க கூட விட மாட்றாங்க :)

// ம்...அப்புறம் சொல்லுங்க. என்ன ஆச்சு?
//
சென்னை வந்துடுச்சி :)
12:06 AM//

குடுகுடுப்பை said...

கொடுத்த சாப்பாடா முழுசா சாப்பிட்டு கை நெனக்க மட்டும் நாங்களா?

குடுகுடுப்பை

Raghav said...

எப்போ கதைகள் ஆரம்பிக்கிறதா உத்தேசம்.. வெட்டிப்பயல்க்கு பதிலா மொக்கைப்பயல்னு மாத்திரலாம் போலயே...

இப்பல்லாம் அல்ட்ரா டீலக்ஸ்லயும் இரவு 1 மணி வரை படம் போடுறாய்ங்க...

ஆயில்யன் said...

//நானும் அவுங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டுட்டேன். அந்த ட்ரெயின் பேரு ஷதாப்தி.
//

சாப்பாடு கொடுத்தே சதா திருப்தி படுத்தி எடுத்திருக்காங்க போல :))))

முரளிகண்ணன் said...

\\கள்ளக்குறிச்சில இப்படி எல்லாம் வான வேடிக்கை விடமாட்டாங்கனு சொன்னா. அது எங்களுக்கே தெரியும்டா வெண்ட்ருனு நீங்க சொல்லிடுவீங்கv\\

\\இனிமே இனப்பாசத்தை எல்லாம் பஸ்ல காட்டக்கூடாதுனு\

:-))))))))))))

அடுத்த பாகம் எப்போ?

Divyapriya said...

//தமிழ்நாட்டுக்கே கொடுப்போம்னு ஒரு இனவெறில தமிழ்நாட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி ஏறிட்டேன்.//

அண்ணா, எப்படி இந்த மாதிரியெல்லாம் தோனுது உங்களுக்கு :)

//அப்பறம் இந்த தடவை தான் அதிகமா ட்ரெயின்ல பயணம் செஞ்சேன்.//

மொத்தமா இந்தியாவுக்கே குடுத்தர்லாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? ;)

உங்க இந்தியப் பயணத்துக்குள்ள பல பயணங்களா? சூப்பர் :)

Anonymous said...

Thala thirumbi vanthaccha .... ???


Anbu

வெட்டிப்பயல் said...

// வருங்கால முதல்வர் said...

கொடுத்த சாப்பாடா முழுசா சாப்பிட்டு கை நெனக்க மட்டும் நாங்களா?

குடுகுடுப்பை//

ஹா ஹா ஹா :)

நல்லா கேக்கறாங்கய்யா கேள்வியை :)

வெட்டிப்பயல் said...

// Raghav said...

எப்போ கதைகள் ஆரம்பிக்கிறதா உத்தேசம்.. வெட்டிப்பயல்க்கு பதிலா மொக்கைப்பயல்னு மாத்திரலாம் போலயே...
//
கதை தானே.. சீக்கிரமே ஆரம்பிப்போம் :)

// இப்பல்லாம் அல்ட்ரா டீலக்ஸ்லயும் இரவு 1 மணி வரை படம் போடுறாய்ங்க...//
அடப்பாவமே... இவனுங்க ஒரு இடத்துல கூட அமைதியாவே இருக்க விட மாட்டாங்க போல :(

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...

//நானும் அவுங்க மனசு கஷ்டப்படக்கூடாதுனு எல்லாத்தையும் வாங்கி சாப்பிட்டுட்டேன். அந்த ட்ரெயின் பேரு ஷதாப்தி.
//

சாப்பாடு கொடுத்தே சதா திருப்தி படுத்தி எடுத்திருக்காங்க போல :))))//

பட்டையை கிளப்பறீங்களே ஆயில்ஸ் :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...

\\கள்ளக்குறிச்சில இப்படி எல்லாம் வான வேடிக்கை விடமாட்டாங்கனு சொன்னா. அது எங்களுக்கே தெரியும்டா வெண்ட்ருனு நீங்க சொல்லிடுவீங்கv\\

\\இனிமே இனப்பாசத்தை எல்லாம் பஸ்ல காட்டக்கூடாதுனு\

:-))))))))))))

அடுத்த பாகம் எப்போ?//

சீக்கிரமே வரும் :)

வெட்டிப்பயல் said...

// Divyapriya said...

//தமிழ்நாட்டுக்கே கொடுப்போம்னு ஒரு இனவெறில தமிழ்நாட்டு பஸ்ஸுக்காக வெயிட் பண்ணி ஏறிட்டேன்.//

அண்ணா, எப்படி இந்த மாதிரியெல்லாம் தோனுது உங்களுக்கு :)//

எல்லாம் வலைப்பதிவு எழுதறதால தான் :))

//
//அப்பறம் இந்த தடவை தான் அதிகமா ட்ரெயின்ல பயணம் செஞ்சேன்.//

மொத்தமா இந்தியாவுக்கே குடுத்தர்லாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? ;)
//
அதான்... சரியா புரிஞ்சிக்கிட்டியேம்மா...

// உங்க இந்தியப் பயணத்துக்குள்ள பல பயணங்களா? சூப்பர் :)//
ஆமாம்மா... பொறுமையா அடுத்த பகுதியை எழுதறேன் :)

வெட்டிப்பயல் said...

// Anbu said...

Thala thirumbi vanthaccha .... ???


Anbu//

ஆமாம் அன்பு.. வந்து ரெண்டு வாரமாகுது :)