தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, January 18, 2009

பர்மிதா குட்டிக்கு...

பர்மிதா குட்டிக்கு,
உன் நைனா ஆசிர்வாதங்களுடன் எழுதும் முதல் கடிதம். இந்த கடிதத்தை நீ படிக்க முடியும் நிலை வரும் போது உன் மனதில் இந்த கேள்வி இருக்கலாம். அதற்குள் எனக்கு இந்த நிகழ்ச்சிகள் மறந்து போயிருக்கலாம். அதனால் இப்போழுதே எழுதிவிடுகிறேன்.
பர்மிதா - இந்த பெயர் உனக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். கண்டிப்பாக இதை நீ படித்து புரிந்து கொள்ளும் வயது வரும் வரை உன் வகுப்பில் ஒரே பர்மிதா நீயாகத்தான் இருப்பாய். இது தமிழ் பெயர் அல்ல என்பதை நான் உனக்கு இப்பொழுதே சொல்லிவிடுகிறேன். பர்மிதா - இதற்கு தமிழில் பெயர் வைத்திருந்தால் கலைவாணி என்று வைத்திருக்கலாம். ஆனால் நீ பிறந்த காலகட்டத்தில் வட மொழியில் பெயர் வைப்பதும் யாரும் இது வரை அதிகமாக கேள்விப்படாத அல்லது குடும்பத்தில் இல்லாத பெயர் வைப்பதும் தான் வழக்காக இருக்கிறது. 

உனக்கு நான் சரஸ்வதி பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னவுடன் “சரஸ்வதினே வெச்சிடுங்க மாப்பிள்ளை”னு உங்க தாத்தா சொல்லி உன் அம்மாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார். சரஸ்வதி பெயர் என்ற முடிவு மட்டும் தான் என்னுடையது. குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமை அதன் அம்மாவிற்கு மட்டுமே உண்டு என்பதில் எனக்கு உறுதி அதிகம். அதனால் வேறு யாருக்கும் இதில் உரிமைல்லை.

நீ பிறந்த பதினைந்தாம் நாள் பெயர் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். உன் பெயர் முடிவானதும் பதினைந்தாம் நாள் தான். அது வரை ஆயிரம் பெயர்களுக்கு மேல் பார்த்தாகிவிட்டது. இதில் உனக்கு நம்பிக்கையில்லாமலும் போகலாம். ஆனால் இது தான் உண்மை. எத்தனை பெயர்கள். கலைமகளுக்கு இத்தனை பெயர்கள் இருக்கிறது என்பதே உன்னால் தான் நாங்கள் தெரிந்து கொண்டோம். 

இறுதியில் கலைமகள் என்ற கொள்கையை தளர்த்தி, நான் சொன்ன ”பார்கவி, பாரதி, பாவனி, பாவை, கோதை, ஜனனி, பவித்ரா” பெயர்களை நம் வீட்டில் யாரும் கணக்கிலெடுத்து கொள்ளவில்லை. உன் அம்மாவும், என் அம்மாவும் இருவருமே பாகுபாடின்றி இதை நிராகரித்தனர். என்னுடைய வலைப்பதிவிலும் உன் பெயருக்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. எத்தனை மாமா, அத்தைகள், பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்திகள் உனக்காக பெயர் தேர்ந்தெடுக்க உதவினார்கள் என்பதை நீயே இங்கு பார்க்கலாம்

கடைசியாக உன் அம்மா உனக்கு தேர்ந்தெடுத்த பெயர்கள் ப்ரஜ்னா, பர்மிதா, யோகிதா. முதலில் உன் அம்மாவின் பாட்டியிடம் அந்த பெயர் சொன்னவுடன் அவர்கள் கேட்டது “என்ன ப்ரச்சனையா?”. இதை கேட்டவுடன் கண்டிப்பாக உனக்கு இந்த பெயர் வைக்கப்போவதில்லை என்று என் மனதில் முடிவாகிவிட்டது. மேலும் உனக்கு தமிழ் பெயர் வைக்கவில்லை என்றாலும் தமிழில் அழகாக எழுதும் படியாக இருக்க வேண்டும் என்பது என் அடிமனதின் ஆவல். “ப்” என்ற வார்த்தையில் பெயர் தொடங்க கூடாது என்ற நான் முதலில் சொன்னது கணக்கிலெடுத்து கொள்ளப்படவில்லை. மறுபடி இதை உன் அம்மா, அவர்கள் மாமியாரிடம் சொன்னவுடன், உங்க பாட்டி சொன்னதும் அதே தான். “ஏதோ பிரச்சனைங்கற மாதிரி இருக்கு. வீட்ல இருக்கற பிரச்சனை போதும். இந்த பேர் வேண்டாம்”. அதனால் நீ ப்ரஜ்னாவாகவில்லை. எனக்கு மகிழ்ச்சி. 

யோகிதா, பர்மிதா என்ற இருபெயர்களில், பர்மிதா என்ற பெயர் தான் உன் பாட்டிக்கும், உன் (தாய்) மாமாவிற்கும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லை. யோகிதா என்று பெயர் வைத்தால் அட்டெண்டென்சில் கடைசியாக பெயர் வரும் என்று உன் அம்மா அதை கடைசியில் நிராகரித்தாள். ”குழந்தைக்கு பெயர் என்ன?” என்று உன் பெயர் வைக்கும் நாளில் புரோகிதர் கேட்ட ஒரு நிமிடத்திற்குள் தான் இந்த பெயர் இறுதியாக முடிவானது.

உனக்கு பெயர் வைக்க அதிகாமாக கஷ்டப்பட்டதும் உன் அம்மா தான். நான்கு ஐந்து பெயர்கள் தேர்ந்தெடுத்து அவள் எனக்கு சொல்வாள். பிறகு உன் பாட்டிக்கு சொல்ல வேண்டும், அவர்களுக்கும் பிடித்திருந்தால் உன் அத்தைக்கு. இப்படியே பல பெயர்கள் நிராகரிப்பட்டன. 

கடைசியாக உன் பாட்டி, அம்மா, மாமா என பாகுபாடின்றி பிடித்திருந்தது “பர்மிதா” தான். இந்த பெயர் பல முறை சொல்லியும் என் பாட்டியின் மனதில் பதியவைக்க முடியவில்லை. இதை எதற்கு இப்படி ஒரு கதை போல நம்ம நைனா எழுதி வெச்சிருக்காருனு நீ யோசிக்கலாம். உன் பெயருக்கான உழைப்பு உனக்கு தெரிந்தாலே இந்த பெயர் உனக்கு பிடித்து போகும் என்ற ஒரு நப்பாசை தான்.

அன்புள்ள,
நைனா...

50 comments:

கோவி.கண்ணன் said...

மூன்று மாத குழந்தைக்கு கடிதம் எழுதிய அப்பா நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

பண்டிகைகள் எல்லாத்துக்கும் சேர்த்து வாழ்த்துகள் !

வெட்டிப்பயல் said...

//கோவி.கண்ணன் said...
மூன்று மாத குழந்தைக்கு கடிதம் எழுதிய அப்பா நீங்களாகத்தான் இருப்பீர்கள்.//

:))

ஏதோ எழுதனும்னு தோனுச்சு :)

//
பண்டிகைகள் எல்லாத்துக்கும் சேர்த்து வாழ்த்துகள் !//
மிக்க நன்றி.. தங்களுக்கும் என் வாழ்த்துகள்!!!

பாபு said...

//ஆனால் நீ பிறந்த காலகட்டத்தில் வட மொழியில் பெயர் வைப்பதும் யாரும் இது வரை அதிகமாக கேள்விப்படாத அல்லது குடும்பத்தில் இல்லாத பெயர் வைப்பதும் தான் வழக்காக இருக்கிறது///

nallaa sonneenga

பாபு said...

நான் கூட மற்றவங்கள எல்லாம் கலாட்டா பண்ணியிருக்கேன்,என்னடா ஷா,ஹ அப்படின்னு வர மாதிரி பேர் வைக்கரீங்கன்னு
இப்ப என் பொண்ணு பேரு அக்ஷயா
நம்ம கைல என்ன இருக்கு?

வெட்டிப்பயல் said...

// பாபு said...
//ஆனால் நீ பிறந்த காலகட்டத்தில் வட மொழியில் பெயர் வைப்பதும் யாரும் இது வரை அதிகமாக கேள்விப்படாத அல்லது குடும்பத்தில் இல்லாத பெயர் வைப்பதும் தான் வழக்காக இருக்கிறது///

nallaa sonneenga//

அனுபவம் தான் :)

ILA (a) இளா said...

அதுக்குள்ளேவா? நடத்துங்க.

வெட்டிப்பயல் said...

//பாபு said...
நான் கூட மற்றவங்கள எல்லாம் கலாட்டா பண்ணியிருக்கேன்,என்னடா ஷா,ஹ அப்படின்னு வர மாதிரி பேர் வைக்கரீங்கன்னு
இப்ப என் பொண்ணு பேரு அக்ஷயா
நம்ம கைல என்ன இருக்கு?

11:16 PM//

அதே தான்... நம்ம பேச்சு எடுபடாது :)

வெட்டிப்பயல் said...

// ILA said...
அதுக்குள்ளேவா? நடத்துங்க.

//

ரெண்டு மாசம் லேட் :)

அபி அப்பா said...

super! nanum ithupoola ezuthiyirukkeen! vaazththukkal parmithaavukku!

வெட்டிப்பயல் said...

//அபி அப்பா said...
super! nanum ithupoola ezuthiyirukkeen! vaazththukkal parmithaavukku!//

அண்ணன் காட்டிய வழி :)

நன்றி அண்ணா!!!

இராம்/Raam said...

பாப்பா இதை படிக்கிற காலத்திலே ஆனந்த கண்ணீரு விடுவா..

நமக்கு பேரு வைக்க கூட நைனா'வுக்கு அதிகாரம் இல்லையா'ன்னு... :)


Sweet hugs & kisses to paappa.. :)

வெட்டிப்பயல் said...

//இராம்/Raam said...
பாப்பா இதை படிக்கிற காலத்திலே ஆனந்த கண்ணீரு விடுவா..

நமக்கு பேரு வைக்க கூட நைனா'வுக்கு அதிகாரம் இல்லையா'ன்னு... :)
//
உரிமை இல்லாத விஷயத்துல நைனா அதிகாரம் செலுத்துலனு சந்தோஷப்படுவா :)

ஆயில்யன் said...

//பர்மிதா என்ற பெயர் தான் உன் பாட்டிக்கும், உன் (தாய்) மாமாவிற்கும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லை.///

எங்களுக்கும் கூட பிடிச்சிருக்கு :)))

வெட்டிப்பயல் said...

//ஆயில்யன் said...
//பர்மிதா என்ற பெயர் தான் உன் பாட்டிக்கும், உன் (தாய்) மாமாவிற்கும் பிடித்திருந்தது. அது மட்டுமில்லை.///

எங்களுக்கும் கூட பிடிச்சிருக்கு :)))//

மிக்க நன்றி ஆயில்ஸ் :)

வெண்பூ said...

அருமை வெட்டி.. நெஜமாகவே உங்க குழந்தை வளர்ந்து டீன் ஏஜ் வயசுல இதை படிச்சா எப்படி இருக்கும்? நல்ல பதிவு..

வெட்டிப்பயல் said...

//வெண்பூ said...
அருமை வெட்டி.. நெஜமாகவே உங்க குழந்தை வளர்ந்து டீன் ஏஜ் வயசுல இதை படிச்சா எப்படி இருக்கும்? நல்ல பதிவு..//

அவள் சந்தோஷப்பட்டா இந்த பதிவோட நோக்கம் நிறைவேறிடும்.

மிக்க நன்றி வெண்பூ :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எப்படியோ தமிழில் எழுத வகையா இருக்கனும்ன்னாவது வச்சீங்களே.. மகிழ்ச்சி..

மெளலி (மதுரையம்பதி) said...

வித்தியாசமா யோசிச்சுருக்கீங்க.. :-)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எப்படியோ தமிழில் எழுத வகையா இருக்கனும்ன்னாவது வச்சீங்களே.. மகிழ்ச்சி..

12:53 AM//

என்ன பண்ண. நம்ம கைல எல்லாமே இல்லையே :)

வெட்டிப்பயல் said...

//மதுரையம்பதி said...
வித்தியாசமா யோசிச்சுருக்கீங்க.. :-)

12:57 AM//

ஏதோ பாப்பாக்கிட்ட இப்பவே சொல்லிடனும் போல இருந்துச்சு. அதான் :)

Sanjai Gandhi said...

இதை படித்துப் புரிந்துக் கொள்ளும் நாள் வரும் போது பர்மிதாவின் முகத்தில் மேலும் ஒரு அழகான புன்னகைக்கு நான் கியாரண்டி.. :)

... அந்த புன்னகை அப்பாவின் நிலையை பார்த்தும் வரலாம்.. :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

:)
ரொம்ப சில ஞாபகங்கள் எல்லாம் வந்துருச்சி! இருபது நாள் குழந்தைக்கு லெட்டர் போட்டது எல்லாம்! :))))))

பர்மிதா குட்டிக்கு இனிய முத்தங்கள்! முத்தச் சத்தங்கள்! இச்ச்ச்ச்ச்ச்ச்!

//உன் நைனா ஆசிர்வாதங்களுடன் எழுதும் முதல் கடிதம்//

ஆசிர்வாதம் கொடுக்குற அளவுக்கு தம்பி கிடுகிடுன்னு பெரிய ஆள் ஆயிட்டான்-ன்னு நினைச்சி ஒரு கணம் மலைப்பா இருக்கு! :)

Monicz said...

So sweeet:) My hearty wishes to parmitha!

Monicz said...

So sweeet:) My hearty wishes to parmitha!

முரளிகண்ணன் said...

very nice :-)))

சரவணகுமரன் said...

சூப்பர் நைனா... :-)

சின்னப் பையன் said...

கலக்கல் கடிதம் நைனா!!!

Divyapriya said...

chanceless அண்ணா…ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான பதிவு…பர்மிதாவுக்கு அவ பேரும், இந்த பதிவும் கண்டிப்பா பிடிக்கும் :)

குமரன் (Kumaran) said...

எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு.

எங்க பொண்ணுக்கு ஏன் தேஜஸ்வினினு பெயர் வச்சிருக்கோம்ங்கறதுக்கும் ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சிருக்கீங்களா? :-)

வெட்டிப்பயல் said...

//SanJaiGan:-Dhi said...
இதை படித்துப் புரிந்துக் கொள்ளும் நாள் வரும் போது பர்மிதாவின் முகத்தில் மேலும் ஒரு அழகான புன்னகைக்கு நான் கியாரண்டி.. :)
//
இந்த பின்னூட்டத்தை பார்த்தும் வரலாம் :)

//... அந்த புன்னகை அப்பாவின் நிலையை பார்த்தும் வரலாம்.. :))//

:)))

வெட்டிப்பயல் said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
:)
ரொம்ப சில ஞாபகங்கள் எல்லாம் வந்துருச்சி! இருபது நாள் குழந்தைக்கு லெட்டர் போட்டது எல்லாம்! :))))))
//
லெட்டர் ஒழுங்கா போய் சேர்ந்ததா? அந்த லெட்டரை நாங்க படிக்கலாமா?

பர்மிதா குட்டிக்கு இனிய முத்தங்கள்! முத்தச் சத்தங்கள்! இச்ச்ச்ச்ச்ச்ச்!

//
//உன் நைனா ஆசிர்வாதங்களுடன் எழுதும் முதல் கடிதம்//

ஆசிர்வாதம் கொடுக்குற அளவுக்கு தம்பி கிடுகிடுன்னு பெரிய ஆள் ஆயிட்டான்-ன்னு நினைச்சி ஒரு கணம் மலைப்பா இருக்கு! :)//

இதுல என்ன மலைப்பு :)

வெட்டிப்பயல் said...

//Monicz said...
So sweeet:) My hearty wishes to parmitha!//

மிக்க நன்றி மோனிகா :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
very nice :-)))//

மிக்க நன்றி மு.க :)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
சூப்பர் நைனா... :-)

//

மிக்க நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

//ச்சின்னப் பையன் said...
கலக்கல் கடிதம் நைனா!!!//

டாங்கிஸ் ச்சி.பை :)

வெட்டிப்பயல் said...

//Divyapriya said...
chanceless அண்ணா…ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான பதிவு…பர்மிதாவுக்கு அவ பேரும், இந்த பதிவும் கண்டிப்பா பிடிக்கும் :)//

ரொம ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி :)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...
எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு.
//
மிக்க நன்றி குமரன் :)

//
எங்க பொண்ணுக்கு ஏன் தேஜஸ்வினினு பெயர் வச்சிருக்கோம்ங்கறதுக்கும் ஒரு கதை எழுதியிருக்கேன். படிச்சிருக்கீங்களா? :-)//
இல்லையே குமரன். லிங் கொடுங்களேன் :)

தமிழ் said...

அருமை

Sathiya said...

பர்மிதா பெயர் ரொம்ப அழகா இருக்கு! கண்டிப்பா உங்க பொண்ணுக்கு பிடிக்கும்.

SurveySan said...

மாசத்துக்கு ஒரு கடுதாசி இந்த மாதிரி எழுதி, சில வருஷங்கள் கழிச்சு, புக்கா ரிலீஸ் பண்ணிடலாம்.
நல்லா போணியாகும்.

ஜூப்பர்.

நச்னு எழுதுங்க, நான் ப்ரொட்யூஸ் பண்றேன் ;)

வெட்டிப்பயல் said...

//திகழ்மிளிர் said...

அருமை//

மிக்க நன்றி திகழ்மிளிர் :)

வெட்டிப்பயல் said...

// Sathiya said...

பர்மிதா பெயர் ரொம்ப அழகா இருக்கு! கண்டிப்பா உங்க பொண்ணுக்கு பிடிக்கும்.//

மிக்க நன்றி சத்யா :)

வெட்டிப்பயல் said...

//SurveySan said...

மாசத்துக்கு ஒரு கடுதாசி இந்த மாதிரி எழுதி, சில வருஷங்கள் கழிச்சு, புக்கா ரிலீஸ் பண்ணிடலாம்.
நல்லா போணியாகும்.

ஜூப்பர்.
//
நன்றி சர்வேஸ் :)

//
நச்னு எழுதுங்க, நான் ப்ரொட்யூஸ் பண்றேன் ;)//

உங்களை நம்பி பண்ணா கடைசில நச்னு இல்லைனு சொல்லி எஸ் ஆகிடுவீங்க :)

Arunkumar said...

kutti-ku
sutti thanama ezhudirkinga
vetti :-)

she sure will like the name coz name is very good...

கப்பி | Kappi said...

:)

Anonymous said...

Parmitha - cute :) With such a nice name, she's sure to have followers...expect many more Parmithas in her school register....May be your original "kalaivani" would have left her with no contenders at school :)

வெட்டிப்பயல் said...

//Arunkumar said...
kutti-ku
sutti thanama ezhudirkinga
vetti :-)

she sure will like the name coz name is very good...
//

Thx a lot Arun...

Nalla velai.. Vetti thanama ezhuthirukeenganu sollama viteengale :)

வெட்டிப்பயல் said...

// கப்பி | Kappi said...
:)
//

Dank U Kappi :)

வெட்டிப்பயல் said...

//Sandhya said...
Parmitha - cute :) With such a nice name, she's sure to have followers...expect many more Parmithas in her school register....May be your original "kalaivani" would have left her with no contenders at school :)

//

Thx a lot Sandhya...

Sorry for the late reply. I didnt notice this comment.

Parmi kutty will be happy to read all these comments rather than the post :)

செல்லா said...

அருமையான பதிவு... :)
மெய்சிலிர்க்கிறேன்... :)