தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Sunday, July 05, 2009

கசினோவில் காசு சம்பாதிப்பது எப்படி?

வெட்டிப்பேச்சு பேசி ரொம்ப நாளாச்சு.

முதல் காரணம், வாழ்க்கைல பெருசா இண்டரஸ்டிங்கா எதுவும் நடக்கவில்லை. இந்தியாவில் இருந்தா நிறைய விஷயங்கள் இருக்கும். இங்கு மொனொடானஸாக வாழ்க்கை இருப்பதால் பெரிதாக பகிர்ந்து கொள்ள எதுவுமில்லை. அடுத்த மாதம் எப்படியும் பர்மிதா பாப்பா இங்கே வந்துவிட்டால் கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

..............

இந்த ஆறு மாசத்துல நிறைய தடவை கசினோ சென்று வந்துவிட்டேன். அதிகமாக காசு தேத்தவில்லை என்றாலும் பெரிதாக எதுவும் இழக்கவுமில்லை. அங்க எனக்கு பிடித்த விஷயமே அந்த டென்ஷன் தான்.

நான் ரோலே மட்டும் தான் விளையாடுவேன். அதுவும் அவுட்டர்ல வைக்க மாட்டேன். உள்ளே நம்பர்களில் தான் வைப்பேன். ஆனா பல தடவை அவுட்டரில் நான் சொல்லியது வந்துவிடும். குறிப்பாக எந்த பனிரெண்டில் வரும் என்பது. ஒண்ணு வெச்சா மூணு :)

நான் விளையாடும் போது நடந்த சில சுவாரஸியங்கள். நம்ம லிமிட் எப்பவும் இருநூறு டாலர் தான். அதுக்கு மேல நிச்சயம் விளையாட மாட்டேன். ஒரு தடவை நான் விளையாடிட்டு இருக்கும் போது ஒரு வயசான தாத்தா வந்து பக்கத்துல நின்னு ஒரு ரெண்டு ஆட்டம் பார்த்தாரு. அப்பறம் ரெண்டாயிரம் டாலருக்கு சிப் வாங்கினாரு. எல்லாமே ப்ளாக் (100$) சிப். அதை அப்படியே நம்பர்ல பிரிச்சி வெச்சாரு. ஒரு சில நம்பர்ல ஒரு சிப், ஒரு சில நம்பர்ல ரெண்டு சிப் வெச்சாரு.
விளையாட்டு தெரியாதவங்களுக்கு இங்க ஒரு விஷயம் சொல்லிடறேன். ரோலேல மொத்தம் முப்பத்தி எட்டு நம்பர் இருக்கும். 0, 00, 1-36. இதுல நம்பர்ல வெச்சி, வந்ததுனா ஒரு சிப்க்கு முப்பத்தி ஆறு தருவாங்க (வெச்சதையும் சேர்த்து). Odd, Evenல வெச்சா ஒரு டாலருக்கு ரெண்டு. 0-12, 13-24, 24-36ல வெச்சா ஒரு டாலருக்கு மூணு டாலர். அப்படி எல்லாம் Probability பேஸ் பண்ணி தான்.

இப்ப அவர் இருபது சிப் வாங்கி சில, பல நம்பர்ல வெச்சாரு. கடைசியா சுத்தறதுக்கு முன்னாடி, முப்பத்தி அஞ்சில இருந்த ஒரு சிப் எடுத்து முப்பத்தி நாலுல மாத்தினாரு. முப்பத்தி நாலுல ஏற்கனவே ஒரு சிப் வெச்சிருந்தாரு. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்பும் இல்லை. முப்பத்தி நாலுல இருநூறு டாலர் சிப். நான் எப்பவுமே முப்பத்தி நாலுல ஒரு நாலு, அஞ்சி வைப்பேன்.

அவர் முப்பத்தி அஞ்சில இருந்து எடுத்து வெச்சவுடனே எனக்கு டென்ஷன் அதிகமாகிடுச்சி. இப்ப முப்பத்தி அஞ்சில எந்த சிப்புமே இல்லை. சரினு கடைசி நேரத்துல நான் ஒரு ரெண்டு சிப் எடுத்து முப்பத்தி அஞ்சில வெச்சேன்.

அவர் என்னை பார்த்து சிரிச்சிட்டு, May be I am wrongனு சொன்னாரு. எனக்கும் முப்பத்தி நாலுல வந்தா சந்தோஷம் தான். எல்லாருமே செம டென்ஷன். கடைசியா பார்த்தா முப்பத்தி..... நாலு வந்துடுச்சி... ஒரே கொண்டட்டம் தான். இப்ப அவருக்கு ஏழாயிரம் டாலர் கொடுத்தாங்க.

மறுபடியும் சிங்கம் ரெண்டாயிரம் டாலரோட களம் இறங்குச்சு. மறுபடியும் நிறைய நம்பர்ல ஒரு சிப், சில நம்பர்கள்ல ரெண்டு சிப். அந்த தடவை அவர் ஒரு நம்பர்ல வெச்சிருந்தது வந்துச்சு. இப்ப மூவாயிரத்தி ஐநூறு டாலர் ஜெயிச்சாரு.

அடுத்து மறுபடியும் களம் இறங்கினாரு. இந்த தடவை எதுவும் ஜெயிக்கல. உடனே ஒரு இருநூறு டாலர் டிப் கொடுத்துட்டு கிளம்பிட்டாரு. நான் திக்கி, திணறி நானூறு டாலர் தான் ஜெயிச்சேன்.

இது நடந்தது Foxwoodsல.

..............

போன மாசம் நண்பனை பார்க்க Delaware போயிருந்தேன். உடனே அடுத்த நாள் Atlantic City போகலாம்னு முடிவு பண்ணோம். ஒரு தடவை Atlantic Cityக்கு போய் பயங்கர கஷ்டப்பட்டோம். ஆனா அந்த தடவை மூணு ஆட்டம் தான் ஆடினோம். மூணு தடவையும் ஜெயிச்சோம். அது 0-12, 13-24, 24-36ல வெச்சி ஜெயிச்சது. சீசர்ஸ் காசினோல.

இந்த தடவை தாஜ் மகால் கேசினோ போனோம். மூணு பேரா போனதால விளையாடக்கூடாதுனு முடிவு பண்ணிருந்தேன். ஏன்னா மூணு பேர் போனா விளங்காதுனு ஒரு செண்டிமெண்ட். ஒரு தடவை அப்படி போய் இருநூறு டாலரும் போச்சு. ஆனா உள்ள போனவுடனே என் கண்ணு வழக்கம் போல ரோலே டெபில்ல, முன்னாடி ஜெயிச்ச டேபில் நம்பர் எல்லாத்தையும் நோட் பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அதுல ஒரு டேபில்ல எல்லாமே என் நம்பர் தான். நான் எப்பவும் சில குறிப்பிட்ட நம்பர்கள்ல வைப்பேன். அதே நம்பர்ஸ் வந்திருந்தது. உடனே நண்பன்ட ஒரு நூறு டாலர் கடன் வாங்கி களம் இறங்கினேன்.

முதல் ரவுண்ட், 0 வந்து ஆப்பு அடிச்சிது. ஆஹா... ஆரம்பமே அசத்துதேனு தோணுச்சு. ஆனா அன்னைக்கு என்னுமோ நாம இன்னைக்கு நிச்சயம் பணம் விட மாட்டோம்னு மனசுல தோணுச்சு. சரினு அடுத்த ரவுண்ட். மறுபடியும் 0. நிச்சயம் ஆப்பு தானு முடிவாகிடுச்சி. அடுத்து பதினெட்டு. இதுக்கு முன்னாடி நான் இருநூறு தோக்கும் போதும் கடைசியா முடிச்சி வெச்சது பதினெட்டு தான். நூறு டாலர் அவுட். தாஜ் மகால் ராசி இல்லை. ஏன்னா அது அழுவாச்சி மஹால்னு அப்ப தான் தோணுச்சு.

சரி, விட்றா சண்முகம்னு சீசர்ஸ்க்கு கிளம்பினோம். சீசர்ஸ்ல ஏற்கனவே ஜெயிச்ச ஹிஸ்டரி இருக்கு. ஆனா மூணு பேர்ல விளையாடணும்னு வந்த ரெண்டு பேரும் வேடிக்கை மட்டுமே பார்த்துட்டு வந்தாங்க. சரி ஏழுரையை எவ்வளவு நேரம் தான் நாமலே சுமக்கறதுனு அவுங்களை களம் இறங்க சொன்னேன். ஒரு நண்பன் சீசர்ஸ்ல ரொம்ப நேரமா விளையாடி நூறு டாலரை விட்டான். அப்ப தான் சரி, ஏழரையை பாஸ் பண்ணியாச்சி, இனிமே நாம களம் இறங்கலாம்னு முடிவு பண்ணேன்.

அப்பறம் சாப்பிட்ட Bally's கசினோ போனோம். ரொம்ப நேரமா சுத்திட்டே இருந்தோம். என் நம்பர்ஸ் வர டேபில் எதுவுமே இல்லை. எல்லாமே பயங்கரமான வேரியேஷன் இருந்தது. கொஞ்ச நேரம் போனவுடனே என் நம்பர் வர டேபில் ஒண்ணு பிடிச்சோம். இந்த தடவை சேஃப் கேம் ஆடணும்னு ஆட்டத்துக்கு இருபத்தி அஞ்சி டாலரா பிரிச்சிக்கிட்டேன்.முதல் மூணு ஆட்டம் அவுட். கடைசி இருபத்தி அஞ்சி. இந்த இருநூறும் போச்சுனா இதுக்கு மேல கசினோ பக்கமே கால் வைக்க கூடாதுனு முடிவு பண்ணினேன். கடைசியா நான் ரெண்டு சிப் வெச்சிருந்தது வந்தது. எழுபது டாலர். மறுபடி எழுபதையும் உள்ளே வெச்சேன். அது அப்படியே இருநூறுக்கு மேல வந்துடுச்சி. நண்பன், வாடா பாலாஜி கிளம்பிடலாம்னு சொன்னான். நல்ல நேரம் இருக்கும் போது கிளம்பறது முட்டாள் தனம்னு அதிகமா பெட்டிங் ஆரம்பிச்சேன்.

ஒரு ஐநூறு, அறுநூறு டாலர் பக்கம் வந்துடுச்சி. இப்ப தான் சரி, ரிஸ்க் எடுக்கலாம்னு முடிவு பண்ணேன். அந்த ட்ரிப்புக்கு மொத்த செலவு எவ்வளவோ அதை எடுத்து பாக்கெட்ல போட்டுக்கிட்டேன். மீதி ஜெயிச்ச காசு ஒரு நானூறு இருந்தது. அதை ரெண்டா பிரிச்சி ரெண்டு ஆட்டம் வைக்கலாம்னு முடிவு. ஜெயிச்சா லம்பா கிடைக்கும். தோத்தா நஷ்டம் எதுவுமில்லை. ஒரு சில நம்பர்ல இருபது சிப்புக்கு மேல கூட வெச்சேன்.

அஞ்சில வைக்கலாமா ஏழுல வைக்கலாமானு கடைசியா ஒரு குழப்பம். கிட்டதிட்ட பத்து டோக்கன் இருந்தது, ரெண்டிலும் பிரித்து வைத்திருக்கலாம். ஆனா இதுவே ரிஸ்க் எடுக்க வேண்டும்னு முடிவு பண்ணிட்டு ஆடற கேம். அதனால நோ சேஃப் பெட். ஏழுல வெச்சேன். கரெக்டா அஞ்சு வந்துடுச்சி. சூப்பர்.

அடுத்து கடைசி இருநூறு. இந்த தடவையும் போன முறை மாதிரியே ஹை பெட்ஸ் தான். கடைசியா பதினெட்டுல வந்து நின்னுச்சி. பதினெட்டுல மட்டும் இது வரைக்கும் மூணு தடவை மாட்டி வெளிய வந்திருக்கேன். அப்படி என்னடா இந்த நம்பருக்கும் நமக்கும் எப்ப பார்த்தாலும் தகராறுனு நானும் ரொம்ப யோசிச்சிட்டு இருந்தேன்.

என் கூட வந்த நண்பர் ஒருத்தர் விளையாட ஆரம்பிச்சிட்டாரு. அவரு வெளிய ரெட் ப்ளாக்ல விளையாடிட்டு இருந்தாரு. அப்ப ஒரு சிங்கி வந்தாரு. ரெண்டாயிரத்துக்கு ப்ளாக் சிப் வாங்கினாரு. ஆஹா இன்னைக்கும் ஒருத்தனா? அப்படினு பாக்க ஆரம்பிச்சேன். மனுஷன் அவுட்டர்ல விளையாட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து அஞ்சு ரெட் வந்திருந்தது. ஆயிரம் டாலரை ப்ளாக்ல வெச்சாரு.

எங்களுக்கு டென்ஷன். கூட வந்தவரு என்ன பண்றதுனு தெரியாம வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாரு. டீலர் சுத்த ஆரம்பிச்சாரு. நமக்கு டென்ஷன் எகிற ஆரம்பிச்சிது. பார்த்தா ரெட். திரும்பவும் ப்ளாக்ல வெச்சாரு. நமக்கா இங்க ஹார்ட் பீட் எகிறுது. மறுபடியும் ரெட். ரெண்டாயிரம் அவுட்.

திரும்ப ரெண்டாயிரம் டாலர்க்கு சிப் வாங்கினாரு. மறுபடியும் ப்ளாக்லயே வெச்சாரு. மொத்தம் ஏழு தடவை ரெட். நிச்சயம் இப்ப ப்ளாக் தான் வரும்னு கூட இருந்த நண்பரும் ப்ளாக்ல வெச்சாரு. மறுபடியும் டென்ஷன். எல்லாரும் இப்ப அந்த சிங்கி ஜெயிக்கணும்னு வேண்டிக்க ஆரம்பிச்சாங்க. இந்த தடவை.... யும் சிகப்பு தான். எல்லாருக்குமே ஷாக். அவன் அசராம அடுத்து கருப்புலயே வெச்சான். மறுபடியும் சிகப்பு வந்தா நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துடும்னு அதைப் பாக்கற தைரியம் இல்லாததால நாங்க கிளம்பிட்டோம்.

அப்பறம் பதினெட்டு நம்பரைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். எங்க காலேஜ்ல பதினேட்டு ரோல் நம்பர் யாரு, அவனுக்கும் நமக்கும் ஏதாவது தகராறு இருந்திருக்கா, பதினெட்டாவது வயசுல நமக்கு ஏதாவது கஷ்டம் இருந்திருக்கா, சபரி மலைக்கு போகும் போது ஏதாவது தப்பு பண்ணோமா? இப்படி பல சிந்தனை. அப்பறம் பார்த்தா தான் தெரியுது, தங்கமணியோட பிறந்த நாள் பதினெட்டாம் தேதி வருதுனு. இதுக்கு மேல நீ விளையாடின, அவ்வளவு தான் காலி. பேசாம நீ கிளம்புனு வார்னிங் கொடுக்க தான் அப்ப அப்ப வந்து ஆப்பு வெச்சிருக்குனு புரிஞ்சிது.

................

கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.

22 comments:

ALIF AHAMED said...

:))

:)))))007

வெட்டிப்பயல் said...

//மின்னுது மின்னல் said...
:))

:)))))007

//

வா மின்னலு :)

007 வேலையெல்லாம் படத்துல தான் வேகும் :)

மங்களூர் சிவா said...

/
கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.
/

ஹா ஹா
கரெக்டா சொன்ன பாலாஜி!
:))))))))))))))

உண்மைத்தமிழன் said...

தம்பீ..

இதெல்லாம் கெட்டப் பழக்கமில்லையா..?

இருநூறு டாலர் கம்மித் தொகையா..?

அதை சம்பாதிக்கிறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு..?!!!

இனிமே அந்தப் பக்கம் தலைவைச்சுக் கூடப் படுக்காத..!!!

சூதாட்டம் வாழ்க்கையையே சூதாடிரும் ராசா.. சூதானமா இருந்துக்க..!!!!

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
/
கடைசியா...

கசினோல எப்படி காசு சம்பாதிக்கணும்னு கேட்டா....

ஒரே வழி...

கசினோ நடத்தி தான். விளையாடி எல்லாம் பெருசா எதுவும் ஜெயிக்க முடியாது.
/

ஹா ஹா
கரெக்டா சொன்ன பாலாஜி!
:))))))))))))))

//

நல்ல வேளை இந்தியால கசினோ இல்லை... இருந்தா எத்தனை குடும்பம் உருப்புடாம போகுமோ...

வெட்டிப்பயல் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
தம்பீ..

இதெல்லாம் கெட்டப் பழக்கமில்லையா..?

இருநூறு டாலர் கம்மித் தொகையா..?

அதை சம்பாதிக்கிறதுக்கு எவ்ளோ கஷ்டப்பட வேண்டியிருக்கு..?!!!

இனிமே அந்தப் பக்கம் தலைவைச்சுக் கூடப் படுக்காத..!!!

சூதாட்டம் வாழ்க்கையையே சூதாடிரும் ராசா.. சூதானமா இருந்துக்க..!!!!

//

அண்ணே,
It is better to be a master of bad habits than servant of good habits அப்படினு நான் பத்தாவது படிக்கும் போது எங்க இங்கிலிஷ் வாத்தியார் சொல்லியிருக்காரு.

கசினோ போறதை நான் எப்ப வேணா நிறுத்திடுவேன்... இனிமே எப்ப போவேனு கூட சொல்ல முடியாது :)

நிலாரசிகன் said...

நீங்கள் அடுத்தமுறை பிலடெல்பியா பார்க் காசினோ வாங்க பாஸ்.
1 டாலர் கூட சம்பாதிக்க முடியாது :)

வெட்டிப்பயல் said...

// நிலாரசிகன் said...
நீங்கள் அடுத்தமுறை பிலடெல்பியா பார்க் காசினோ வாங்க பாஸ்.
1 டாலர் கூட சம்பாதிக்க முடியாது :)
//

காசு வரும்னாலே அவ்வளவு தூரம் வர யோசிப்போம்.. இதுல வராதுனு சொன்னதுக்கு அப்பறம் வரதுக்கு நான் என்ன கைப்புள்ளயா? ;)

Anonymous said...

Kalavum Katru Mara...!

குடுகுடுப்பை said...

காசினோ , இரவு விடுதி இரண்டிலும் வரும் புகையும் அந்த மட்டமான செண்ட் வாசனையும் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை.இல்லாட்டி இந்நேரம் கோடிஸ்வரனா ஆயிருப்பேன்:))

நான் அங்கே சென்ற காலங்களில் நானும் புகைப்பவனே:)

Anonymous said...

boss.. sambaathika mudiyum... poker vilayaadunga...

4 mani neram vilayadi thotha...nashtam 20$ mela thaandaathu...athe, 4 mani neram la 1 vaati nalla card vantha 350$ jeyikalaam....

sorry for tamil+english...

ippadiki,
anaani...

முரளிகண்ணன் said...

பைனல் டச் பிரமாதம்

கார்த்தி said...

Kalakkureenga Vetti... eppodiya... unga Casino kathal kathaihal pathivula kettathukku ippo reply pottuteeenga....
Naaama eppavumey BlackJack thaan... aaana athulla eppayum vittutu Slot Machine'la thaaan jeykirathu.....

வெட்டிப்பயல் said...

// Truth said...
:)

//

:) (ஸ்மைலிக்கு ஸ்மைலி)

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
Kalavum Katru Mara...!//

ஓ அது வேற கத்துக்கணுமா? இதுக்கு உ.த அண்ணே டென்ஷன் ஆகறாரு ;)

வெட்டிப்பயல் said...

//குடுகுடுப்பை said...
காசினோ , இரவு விடுதி இரண்டிலும் வரும் புகையும் அந்த மட்டமான செண்ட் வாசனையும் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை.இல்லாட்டி இந்நேரம் கோடிஸ்வரனா ஆயிருப்பேன்:))
//
Non Smoking Zone இருக்குமே :)

எனக்கும் புகை நாற்றம் புடிக்காது. இருந்தாலும் காசு வரும் போது அதையெல்லாம் எவன் கவனிக்கிறான் ;)

//நான் அங்கே சென்ற காலங்களில் நானும் புகைப்பவனே:)//

அவ்வ்வ்வ்வ்வ்

//

வெட்டிப்பயல் said...

// Anonymous said...
boss.. sambaathika mudiyum... poker vilayaadunga...

4 mani neram vilayadi thotha...nashtam 20$ mela thaandaathu...athe, 4 mani neram la 1 vaati nalla card vantha 350$ jeyikalaam....

sorry for tamil+english...

ippadiki,
anaani...//

தல,
3 கார்ட் போக்கரா இல்லை நார்மல் போக்கரா. எப்படியும் ஒரு ஆட்டத்துக்கு டேபில் மணியே 20$ இருக்கும் இல்லை.

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
பைனல் டச் பிரமாதம்

//

நன்றி முக :)

வெட்டிப்பயல் said...

// கார்த்தி said...
Kalakkureenga Vetti... eppodiya... unga Casino kathal kathaihal pathivula kettathukku ippo reply pottuteeenga.... //
நாம பேசிக்கலி கொஞ்சம் சோம்பேறி.. அதான் பாஸ். தப்பா நினைச்சிக்காதீங்க :)

//Naaama eppavumey BlackJack thaan...//
நமக்கு டபுல் ட்ரிபுல்ல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை பாஸ். வந்தா லம்பா வரணும் ;)

//
aaana athulla eppayum vittutu Slot Machine'la thaaan jeykirathu.....//
ஸ்லாட் மெஷின்ல நமக்கு இதுவரைக்கும் எதுவும் வந்ததில்லை பாஸ். அதுல எப்படி ஜெயிக்கறதுனு கொஞ்சம் சொல்லி கொடுங்க :)

வெட்டிப்பயல் said...

// கார்த்தி said...
Kalakkureenga Vetti... eppodiya... unga Casino kathal kathaihal pathivula kettathukku ippo reply pottuteeenga.... //
நாம பேசிக்கலி கொஞ்சம் சோம்பேறி.. அதான் பாஸ். தப்பா நினைச்சிக்காதீங்க :)

//Naaama eppavumey BlackJack thaan...//
நமக்கு டபுல் ட்ரிபுல்ல எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லை பாஸ். வந்தா லம்பா வரணும் ;)

//
aaana athulla eppayum vittutu Slot Machine'la thaaan jeykirathu.....//
ஸ்லாட் மெஷின்ல நமக்கு இதுவரைக்கும் எதுவும் வந்ததில்லை பாஸ். அதுல எப்படி ஜெயிக்கறதுனு கொஞ்சம் சொல்லி கொடுங்க :)

Anonymous said...

anne..naan thaan anaani...
3 card poker illa...2 card poker...tv la paapingala, poker world series nu espn la poduvaan...
1 table la 10 peru irrupaanga... 1-2 no limit nu oru method irruku...appadinaa..10 muraiku 1 thadava 1$ innoru thadava 2$ mattum thaan tharanum...agamontham 3$ 10 games.... try panni paarunga... risk eduka vendaam fullah kathukura varaikum...
marupadiyum..ellarum soldra maathirithaan, kashata pattu aani pudungi sambaathicha kaasu thaan nilaikum.... casino chumma pozhuthai pokkathaan.... casino la laabam vantha friendsuku party kodupathu en vazhakam...ungaluku?

Anbudan,
Anaani...

வெட்டிப்பயல் said...

//Anonymous said...
anne..naan thaan anaani...
3 card poker illa...2 card poker...tv la paapingala, poker world series nu espn la poduvaan...
1 table la 10 peru irrupaanga... 1-2 no limit nu oru method irruku...appadinaa..10 muraiku 1 thadava 1$ innoru thadava 2$ mattum thaan tharanum...agamontham 3$ 10 games.... try panni paarunga... risk eduka vendaam fullah kathukura varaikum...
marupadiyum..ellarum soldra maathirithaan, kashata pattu aani pudungi sambaathicha kaasu thaan nilaikum.... casino chumma pozhuthai pokkathaan.... casino la laabam vantha friendsuku party kodupathu en vazhakam...ungaluku?

Anbudan,
Anaani...
//

Thx a lot dear friend...

I will try this next time... Not sure when I will go next :)