தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Wednesday, July 08, 2009

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

கவிதை எனக்குப் புரியாத‌ ஒன்று. யார் எழுதியிருந்தாலும். வலைப்பூக்களில் ‘வெட்டிப்பயல்' என்ற புனைப்பெயரில் ஆரம்பகாலம் தொட்டே எழுதிவந்தாலும் சமீபமாக பதிவுலகில் கவிதைகள் படிப்ப‌தைக் குறைத்துவிட்டேன். அதனால் கவிதையுலகும், கவிஞர்களும் பிழைத்தார்கள் என்றெல்லாம் சொல்லவில்லை. ‘கவிதை படியுங்களேன்’ என்று என்னை ஊக்கப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அவர்களுக்காக ஒரு சில கவுஜைகள்….

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஃபோர் ஃபைவ் சிக்ஸ்

குட்டிசுவற்றில் அமர்ந்து
கடக்கும் ஃபிகர்களை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
அந்த இளைஞ‌ன்.

வலதுகை சுண்டுவிரலில்
ஆரம்பித்த ஒன்று
இடதுகை பெருவிரலில்
பத்தென முடிய
எண்ணிய பத்தை
பேண்ட்டு பைக்குள் போடுகிறான்.

பையின் ஓட்டைவழியே
விழுந்த பத்து
கால் சுண்டுவிரலில்
பதினொன்றாய் ஆரம்பிக்கிறது.

கடக்கின்றன ஃபிகர்கள்.

இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அவனும்... நானும்

வகுப்பறையில் அவ‌னுக்கு
ஆசிரியர் தரிசனம் வேண்டுமென்று
தலையை நிமிர்த்தி
பார்க்கிறான் அவன்.

எனக்குப் பின்னாலிருப்பவர்களின்
தரிசன சுகத்திற்காக
த‌லையை டேபிளில்
சாய்க்கிறேன் நான்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

க‌டைசி க‌வுஜைக்கு கொஞ்ச‌ம் நிறைய‌ யோசிக்க‌ வேண்டிய‌தா இருக்கு. அதைப் பின்னாடி பார்க்க‌லாம்.

46 comments:

வெட்டிப்பயல் said...

நன்றி பரிசல் :)

♫சோம்பேறி♫ said...

/* கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.. */

அதனாலென்ன பாஸ்? உங்களைப் பார்த்தா மனைவிக்கு பயப்படுற மாதிரி தெரியலையே! ஒருவேளை, அவள் பக்கத்தில், பத்து கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்த அவள் கணவரும் இருக்கிறாரோ?

சென்ஷி said...

நீங்க எழுதாம விட்ட அந்த கடைசி கவிதை..


தமிழ்மணம் படிப்பது சுகமானது
எல்லா இடுகையிலும்
இரண்டு கமெண்டு

தமிழ்மணம் படிப்பது சுகமானது
எல்லா பதிவிலும்
ஏதேனும் எழுதி வைத்திருக்கிறார்கள்

தமிழ்மணம் படிப்பது சுகமானது
குறைந்தது ரெண்டு மொக்கையாவது
மாட்டி விடுகிறது

தமிழ்மணம் படிப்பது சுகமானது
வாரம் ஒரு சண்டையாவது
வந்துவிடுகிறது

தமிழ்மணம் படிப்பது சுகமானது
ஏதாவது ஒரு பதிவுல
கும்மி அடிக்க முடியுது

தமிழ்மணம் படிப்பது சுகமானது
எல்லா பதிவிலும்
...............
.............
........


காறித்துப்பிவிட்டு
சேச்சே அப்படில்லாம் இருக்காது
என்று ஆறுதல் தந்து
செல்கிறது
அனானியின் பின்னூட்டம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

one two three ல கமெண்ட் போடப்பார்த்தேன் போஸ்ட் கமெண்ட் லிங்க் வேலை செய்யல..

அங்க போட இருந்தது

// நல்லா இருந்தது கவிதைகள் //
நன்றி வெட்டிப்பயல்..

4 5 6 ம் நல்லா இருக்கு.. அடுத்து யாரு தொடரபோறா .. 789 ??

வெட்டிப்பயல் said...

//♫சோம்பேறி♫ said...
/* கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.. */

அதனாலென்ன பாஸ்? உங்களைப் பார்த்தா மனைவிக்கு பயப்படுற மாதிரி தெரியலையே! ஒருவேளை, அவள் பக்கத்தில், பத்து கொலை செஞ்சுட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்த அவள் கணவரும் இருக்கிறாரோ?

//

உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலயா பாஸ்???? ;)

சென்ஷி said...

//
இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.//

ஏன் வெட்டி.. எல்லாம் மொக்க ஃபிகரா!

வெட்டிப்பயல் said...

சென்ஷி,
கலக்கல். நானும் முதல்ல தமிழ்மணம் வெச்சி தான் யோசிச்சேன்.. ஆனா சரியா வரல... நீ கலக்கிட்ட :)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
//
இருபது சேரக்
காத்திருக்கிறான் அவன்.
இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.//

ஏன் வெட்டி.. எல்லாம் மொக்க ஃபிகரா!
//

இல்லை சென்ஷி.. இருபதுக்கு மேல எண்ணறதுக்கு அவனுக்கு விரல் இல்லை இல்ல. அதான் ஹெல்பிங் டென்டென்ஸிக்கு ;)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
one two three ல கமெண்ட் போடப்பார்த்தேன் போஸ்ட் கமெண்ட் லிங்க் வேலை செய்யல..

அங்க போட இருந்தது

// நல்லா இருந்தது கவிதைகள் //
நன்றி வெட்டிப்பயல்..

4 5 6 ம் நல்லா இருக்கு.. அடுத்து யாரு தொடரபோறா .. 789 ??
//

முத்துலெட்சுமி அக்கா,
நெம்ப நன்றி...

பரிசல்ம்
அக்கா உங்க பின்னூட்டத்தை இங்க போட்டிருக்காங்க. வந்து நன்றி சொல்லிட்டு போங்க...

இது நல்ல ஐடியாவா இருக்குது ;)

வெட்டிப்பயல் said...

What is happening to Tamilmanam.. My pathivu not coming in muthal page...

சென்ஷி said...

தமிழ்மணம் ஈவினிங்க்லேந்து ஒர்க் ஆகலை :((

கிளாசிக் பேஜ்ல தான் பதிவு படிச்சுட்டு இருக்கேன் :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

உங்க பதிவு என்ன அந்த சிவனே வந்து பதிவு போட்டாலும் முதல் பக்கத்துல வராது.. தமிழ்மணத்தை அப்பப்ப எட்டிப்பார்க்கனும்..நீங்க பதிவு போடும் போது மட்டும் பார்க்கக்கூடாது..

நாதஸ் said...

:)

வெட்டிப்பயல் said...

//சென்ஷி said...
தமிழ்மணம் ஈவினிங்க்லேந்து ஒர்க் ஆகலை :((

கிளாசிக் பேஜ்ல தான் பதிவு படிச்சுட்டு இருக்கேன் :))
//

ஆஹா இதுவல்லவா நட்பு :)

நன்றி சென்ஷி.. நான் ஏதோ சூனியம் வெச்சிட்டாங்க போலனு நினைச்சிட்டு இருந்தேன் :)

நான் முடிந்தவரை நாம ஃபாலோ பண்ற பதிவர்களை டேஷ்போர்ட்ல இருந்தே படிச்சிடுவேன். அப்பறம் தான் தமிழ்மணம் :)

வெட்டிப்பயல் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
உங்க பதிவு என்ன அந்த சிவனே வந்து பதிவு போட்டாலும் முதல் பக்கத்துல வராது.. தமிழ்மணத்தை அப்பப்ப எட்டிப்பார்க்கனும்..நீங்க பதிவு போடும் போது மட்டும் பார்க்கக்கூடாது..

2:08 PM
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னைப் பார்த்து இப்படி நாக்கு மேல பல்லு போட்டு பேசிட்டீங்களே :)

வெட்டிப்பயல் said...

//nathas said...
:)
//

Dankees nathas :)

Sridhar Narayanan said...

இடையே இருக்கற ‘&&&&&&&&&&&&&’ எடுத்திட்டு படிச்சா இன்னமும் நல்லா இருக்கே :))

//கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.
சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை
//

Sridhar Narayanan said...

க‌டைசி
க‌வுஜைக்கு
கொஞ்ச‌ம் நிறைய‌
யோசிக்க‌ வேண்டிய‌தா
இருக்கு.
அதைப் பின்னாடி
பார்க்க‌லாம்.

இப்படி போட்டா கவுஜன்னு ஒத்துக்குவீங்களா? :)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
இடையே இருக்கற ‘&&&&&&&&&&&&&’ எடுத்திட்டு படிச்சா இன்னமும் நல்லா இருக்கே :))

//கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.
சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை
//
//

Superuuu

என்ன‌மா சிந்திக்க‌றீங்க‌ :)

வெட்டிப்பயல் said...

//Sridhar Narayanan said...
க‌டைசி
க‌வுஜைக்கு
கொஞ்ச‌ம் நிறைய‌
யோசிக்க‌ வேண்டிய‌தா
இருக்கு.
அதைப் பின்னாடி
பார்க்க‌லாம்.

இப்படி போட்டா கவுஜன்னு ஒத்துக்குவீங்களா? :)
//

வார்த்தைக்கு
வார்த்தை
எண்டரை
அழுத்தினால்
அது
கவுஜை தான்

:)

நாகை சிவா said...

நோ டா செல்லம்!

எனக்கு இருந்த இரு துணைகளில் நீயும் ஒருவன். என்னாச்சு உனக்கு!

வலிக்குது :)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...
நோ டா செல்லம்!

எனக்கு இருந்த இரு துணைகளில் நீயும் ஒருவன். என்னாச்சு உனக்கு!

வலிக்குது :)

//

ஒண்ணு மண்ணா பழகியிருக்கோம்.. என்னைப் போயி சந்தேகப்பட்டுட்டியே புலி :(

இது நட்சத்திர பதிவோட உல்டா :)

மங்களூர் சிவா said...

/
கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை
/

இது ரொம்ப நல்லா புரிஞ்சது வெட்டி
கவுஜைகள் சூப்பர்!

:)

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

இது சூப்பரு !!

சென்ஷியோட தமிழ் மணம் வரிகளும்...

:))

வெட்டிப்பயல் said...

// மங்களூர் சிவா said...
/
கூப்பிடு தொலைவில்
அவள் இருக்கிறாள்.
கூப்பிடாமலே
நான் இருக்கிறேன்.
என் பக்கத்தில்
என்மனைவி இருக்கிறாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை
/

இது ரொம்ப நல்லா புரிஞ்சது வெட்டி
கவுஜைகள் சூப்பர்!

:)//

அனுபவஸ்தர் சொன்னா ஆயிரம் அர்த்தம் இருக்கும் ;)

சரவணகுமரன் said...

:-))

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஒற்றைப் பூரிக்கட்டை கவிதை பைத்தியக்காரனின் கையில் அகப்பட்டால் ஜ்யோவரம் கவிதைமாதிரி பெரிய விளக்கப் பதிவுக்கு ஆளாகக்கூடிய அபாயம் உளது.

நல்லாயிருக்கிறது அந்தக் கவிதை. பல அர்த்தங்களைத் தருகிறது. :))

முரளிகண்ணன் said...

கலக்கல் வெட்டி

வெட்டிப்பயல் said...

//தமிழன்-கறுப்பி... said...
இது சூப்பரு !!

சென்ஷியோட தமிழ் மணம் வரிகளும்...

:))//

நன்றி பாஸ் :-)

வெட்டிப்பயல் said...

//சரவணகுமரன் said...
:-))

//

நன்றி சரவணகுமரன் :)

வெட்டிப்பயல் said...

//மதுவதனன் மௌ. said...
ஒற்றைப் பூரிக்கட்டை கவிதை பைத்தியக்காரனின் கையில் அகப்பட்டால் ஜ்யோவரம் கவிதைமாதிரி பெரிய விளக்கப் பதிவுக்கு ஆளாகக்கூடிய அபாயம் உளது.

நல்லாயிருக்கிறது அந்தக் கவிதை. பல அர்த்தங்களைத் தருகிறது. :))

//

பயப்படத் தேவையில்லை பாஸ். அவர் எல்லாம் என் பதிவுக்கு வர மாட்டாரு :)

வெட்டிப்பயல் said...

//முரளிகண்ணன் said...
கலக்கல் வெட்டி

//

டாங்கிஸ் முக :)

Kumky said...

நல்லாருக்கு வெட்டி....எப்பிடி இப்பிடில்லாம்...?

SUBBU said...

//இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.//

:))))))))

இருபத்தி இரண்டுக்காக காத்திருக்கிறேன் நான் :)))))))))

நாஞ்சில் நாதம் said...

:))))))))))))))

பாபு said...

கலக்கல்

கோபிநாத் said...

;)))))))))))))

\\சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை\\

அட்டகாசம் வெட்டி... ;)

VISA said...

//சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

//
this line is good.

வெட்டிப்பயல் said...

//கும்க்கி said...
நல்லாருக்கு வெட்டி....எப்பிடி இப்பிடில்லாம்...?

//

எல்லாம் அப்படியே வரது தான்.
அதுவுமில்லாம நம்ம பரிசல் தானே :)

வெட்டிப்பயல் said...

// SUBBU said...
//இருப‌த்தி ஒன்றுக்காக‌
காத்திருக்கிறேன் நான்.//

:))))))))

இருபத்தி இரண்டுக்காக காத்திருக்கிறேன் நான் :)))))))))

//

ஹலோ... நாப்பது வரைக்கும் நாங்க தான். நாற்பத்தி ஒண்ணுக்கு மேல ஆரம்பிங்க...

அப்படியே பக்கத்துல வந்து உட்காருங்க :)

வெட்டிப்பயல் said...

// நாஞ்சில் நாதம் said...
:))))))))))))))//

நன்றி பாஸ் :)


//பாபு said...
கலக்கல்

//

நன்றி தல :)

வெட்டிப்பயல் said...

//கோபிநாத் said...
;)))))))))))))

\\சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை\\

அட்டகாசம் வெட்டி... ;)

//

டாங்க் யூ கோபி :)

வெட்டிப்பயல் said...

// VISA said...
//சண்டை முடிந்து
ஹாலின்நடுவே கிடந்த
ஒற்றை பூரிக்கட்டை மீது
ஏறி நிற்கிறது
என் குழந்தை

//
this line is good.//

நன்றி விசா :)

Ramesh Chinnasamy said...

எல்லாம் உங்க அனுபவமோ?

வெட்டிப்பயல் said...

//மெகா சில்லறை said...
எல்லாம் உங்க அனுபவமோ?
//

ha ha ha...

இது பரிசல் பதிவுக்கு எதிர்கவுஜ :)