தத்துவம்

உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே! அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே!!! அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்

Tuesday, March 13, 2007

கவுண்டர்'ஸ் டெவில் ஷோ - நட்சத்திர பதிவர் தம்பி

என் அருமை மகா ஜனங்களே!!! வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சரி என்ன பண்றது. நம்ம கூட வளர்ந்த பசங்க. பொழைச்சிட்டு போகட்டும்.

எத்தனை நாள் தான் இந்த சினிமாக்காரவங்களையே கூப்பிடறது. கொஞ்சம் வித்யாசமா இந்த நிகழ்ச்சில வேற மீடியால இருக்கற ஆள கூப்பிட போறோம். இண்டர்நெட்ல ஓசில கிடக்குதுனு கண்டத எழுதற பசங்க கூட்டம் ஒண்ணு இருக்கு. அதுல இருந்து இன்னைக்கு ஒருத்தன கூப்பிட்டுருக்கோம். Its none other than our star blogger "Thambi"

க: வாங்க உமா கதிர்... உங்க ப்ளாகுக்கு எதுக்குங்க தம்பினு பேர் வெச்சிருக்கீங்க???

த: எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!

க: டேய்! வெறும் "ம்"னு சொன்னாக்கூடத்தான் உதடு ஒட்டப்போகுது. அப்ப அதை வைக்க வேண்டியதுதானே? சரி இப்ப உதடு ஒட்றதால என்னத்த பெருசா ஆகப்போகுது? சொல்லு மேன்...

த: இல்லைங்க எல்லா பஸ்லையும் இந்த உதடு ஒட்டறத பத்தி ஒரு திருக்குறள் இருக்கும். அதையே நம்மளும் யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்...

க: ஓ நோ!!! அது என்ன மேன் திருக்குறள். உதடு ஒட்றத பத்தி

த: நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்னு ஒரு திருக்குறள் எல்லா பஸ்லயும் இருக்கும்.

க: டேய் கரும்புக்காடு மண்டையா அது திருக்குறள் இல்லைடா. கலைஞர் சொன்னது. இதுக்கு தான் திருக்குறள் எழுதுன எடத்துல எல்லாம் ஃபிரியாத்தான இருக்குனு கண்டத எழுத வேணாம்னு சொன்னா அவரு கேட்டாரா? இப்ப பாரு இதையே திருக்குறள்னு நினைச்சி சுத்திட்டு இருக்கு ஒரு கூட்டம். அது சரி நீ எதப்பத்தி எல்லாம் எழுதுவ?

த: மக்கள் சிந்திச்சி செயல்பட்டு சமுதாயம் பயனடைய பல கட்டுரை எழுதிருக்கேங்கண்ணா...

க: டேய்!!! தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?னு பதிவு போட்டது நீ தானே?

த: ஆமாங்கண்ணா!

க: ஏனுங்க ஆப்பிசர் அப்படி இதுல என்ன பெருசா சமுதாயத்துக்கு எழுதிட்டீங்கணு நாங்க தெரிஞ்சிக்கலாமா? கவர்மெண்ட் அவ்வளவு செலவு பண்ணி கக்கூஸ் கட்டி வெச்சா அதுல போகாம தண்டவாளத்துல போயிருக்க. அதுல எதுக்கு மேன் இப்படி பண்ண?

த: இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...

க: அடேய் கதிரு மண்டையா, அவனவன் செவ்வாய்க்கு சேட்டிலைட் அனுப்பலாமா புதனுக்கு அனுப்புலாமானு ஆராய்ச்சி பண்ணா நீ என்னடானா தண்டவாளத்துல ஒண்ணுக்கு போனா ட்ரெயின் வழுக்கி விழுமானு ஆராய்ச்சி பண்ணிருக்க. உன்னைய என்ன பண்ணலாம் நீயே சொல்லு.

த: அண்ணே அதை விடுங்க. நான் அது இல்லாம நிறைய சமுதாயத்துக்கு பயனுள்ளத எழுதியிருக்கேன்.

க: எது மேன் அந்த ரஸ்னால கழுவுன மேட்டரா?

த: ஓ நீங்க அதை படிச்சிட்டீங்களா?

க: டேய் அதை படிச்சதுல இருந்து நான் ரஸ்னாவே குடிக்கறதில்லடா. அப்படி அவனுங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணாங்க?

த: அதுவா... நான் சின்ன வயசுல இருக்கும் போது நாயர் கடைல ரஸ்னா வித்தாங்க. அதை கேட்டா கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு நாயரு. அதனால தான்....

க: டேய் சும்மா கேட்டா எவண்டா கொடுப்பான். அதுக்கு காசு கொடுக்கனும்டா. உங்கள மாதிரி நாலு பேர் இருந்தா போதும்டா. ஒரு பேக்டரியவே இழுத்து மூட வெச்சிடுவீங்கடா. ஆமாம் இந்த இங்கிலிஷ் படத்துக்கெல்லாம் ரிவியூ எழுதறயாமே. நிஜமாலுமே நீ படம் பார்த்து பிடிச்சி போய் தான் எழுதறியா?

த: என்னணே சின்ன புள்ளத்தனமா கேக்கறீங்க. பதிவு போட மேட்டரில்லைனா அப்படியே ஒரு படம் பார்த்து அத பத்தி எழுதிட வேண்டியதுதான்.

க: ஓ இதுதான் மேட்டரா? அப்பறம் கண்ணு.. கவித கவிதனு ஏதோ எழுதறயாமே. ஏன் இந்த விபரீத ஆசையெல்லாம். மக்கள் பாவமில்லையா?

த: போங்கண்ணே. உங்களுக்கு எப்பவுமே குறும்பு தான்.

க: இந்த அண்ணே நொண்ணே எல்லாம் வேணாம். அப்பறம் ஸ்டாராகரவங்க எல்லாம் ஏதோ லக்ல ஆகறாங்கனு சொன்னியாமே...

த: அண்ணே! நான் அப்படியெல்லாம் சொல்லலைங்கண்ணா. அந்த மாதிரி ஆனவங்களை அந்த வாரத்துல கவனிக்கும் போது தான் அவுங்க திறமை நிறைய தெரியுதுனு சொன்னென். அதை யாரோ தப்பா சொல்லிட்டாங்கண்ணா...

க: சரி பொழைச்சி போ. அப்பறம் அது என்ன "வயது: மூணே முக்கால் கழுதை வயசு." னு போட்டுருக்க? ஒரு கழுதை வயசு என்னனு தெரியுமா மேன் உனக்கு? 30ல இருந்து 50 வயசு வரைக்கும் ஒரு கழுதை உயிர் வாழும். மினிமம் 30னு வெச்சிக்கிட்டாக்கூட 100க்கு மேல வருது. அப்ப உன் உண்மையான வயசு என்ன மேன்? இந்த போட்டோ 80 வருஷத்துக்கு முன்னால எடுத்ததா??? ஏன்டா இப்படி ஊரை ஏமாத்தறீங்க?

த: அண்ணே! ஏழரை கழுதை வயசுனு எல்லாம் சொல்வாங்க. சரி யங்கா இருக்கலாம்னு அதுல பாதிய போட்டேன். இப்படி கோக்குமாக்கா நீங்க கேப்பீங்கனு நான் எதிர் பார்க்கலைங்க.

க: அப்படி தான்டா கேப்போம். இப்படி புத்திசாலித்தனமா சொல்றோம்னு நினைச்சி பதில் சொன்னா வேற என்ன பண்ணுவாங்க? திருந்துங்கடா.

த: சரிங்கண்ணே... நான் கிளம்பலாமா?

க: இருடி செல்லம். இன்னும் ஒரே ஒரு கேள்வி தான் பாக்கி.
வாசிப்பு அனுபவம்: எங்க ஊரு நூலகர் அங்கமுத்து சக்கரை இன்னமும்
என்னை தேடிட்டு இருக்காராம். எடுத்த புத்தகத்தை திருப்பி குடுத்தாதானே.

லைப்ரரில இருந்த புக்க திருடி, அதை வித்து கமரக்கட் வாங்கி சாப்பிட்டு, ஊரை விட்டு ஓடி வந்துதும் இல்லாம அதை பெருமையா வேற பேசிட்டு திரியற நீயீ... உன்னைய என்ன பண்ணலாம். நீயே சொல்லு.

த: அண்ணே இனிமே இப்படி புத்திசாலித்தனமா பதில் சொல்லமாட்டேங்க. என்னைய மன்னிச்சிடுங்க... சொல்லிவிட்டு ஜம்ப் பண்ணி ஒடுகிறார் தம்பி.

59 comments:

வெட்டிப்பயல் said...

த.க.ச பதிவில்லையானு நம்ம தள கேட்டாரு. இந்த பதிவை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்!!!

ஜி said...

//இல்லைங்க எல்லா பஸ்லையும் இந்த உதடு ஒட்டறத பத்தி ஒரு திருக்குறள் இருக்கும். அதையே நம்மளும் யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்...//

அல்டிமேட் காமெடி வெட்டி...

இந்த டெவில் ஷோ விற்கு நட்சத்திர தம்பி என்ன பதில் சொல்ல போகிறார்...

ஒரிஜினல் டெவில் ஷோ ஒருங்கிணைப்பாளர்,
அமெரிக்கா..

ஜி said...

எங்கள் தானையத் தலைவி நமிதாவை பேட்டி எடுப்பதுக்காக டெவில் ஷோவின் காப்பிரைட் கொடுக்கப்பட்டால், வெட்டியை கேக்காமலே கரடி கிங் அடுக்குமொழி மண்டையனை பேட்டி எடுக்க வைத்த தம்பி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

நமிதா பேரவை,
அமெரிக்கா

ஜி said...

வெட்டி...

நீங்கதான் TRயின் அகில உலக ரசிகர் மன்ற தலைவன் எனவும், உங்கள் தலைவரை தாக்கியதால்தான் தம்பியின் மீது இப்படி ஒரு டெவில் ஷோவை நடத்தியதாகவும் கிசு கிசு பரவுகிறதே.. உண்மையா??

இலவசக்கொத்தனார் said...

//த: நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்னு ஒரு திருக்குறள் எல்லா பஸ்லயும் இருக்கும்.

க: டேய் கரும்புக்காடு மண்டையா அது திருக்குறள் இல்லைடா. கலைஞர் சொன்னது.//

ஆஹா! உள்குத்து புரிஞ்சு போச்சு, அதாவது எப்ப நீங்க நாம் அப்படின்னு சொல்லி அவங்களை சேர்த்துக்கறீங்களோ அதுக்கு அப்புறம் வாயைத் திறந்து ஒண்ணும் பேச முடியாது. கம்முன்னு இருக்க வேண்டியதுதான். இதானே மேட்டர்?

ஆமா இப்படி எல்லாம் தைரியமா எழுதறீங்களே, நம்ம லக்கியைப் பார்த்தா உங்களுக்குப் பயமே கிடையாதா? :))

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் எல்லா வாரத்திலயும் இந்த மாதிரி நட்சத்திரத்தைப் பேட்டி காணும் எண்ணம் கவுண்டருக்கு இருக்கிறதா?

MyFriend said...

//வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. //

அப்பவே நான் இந்த கேள்வியை தம்பிண்ணாவிடம் கேட்டேன்.. பின்னூட்டம் அவருக்கு வரவில்லை.. காக்கா தூக்கிட்டு போச்சுன்னு கதை சொல்லி இந்த சின்ன பிள்ளையை ஏமார்ரீVஈDDஊDDஆஆற்.. :-(

MyFriend said...

//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//

ROTFL..


நீங்க போட்ட பின்னூட்டங்களுக்கு தம்பி பதில் சொல்ல மாட்றார்னதும், நீங்களே டெவில் ஷோ போட்டு அதுக்கு பதில் சொன்ன விதம் சூப்பர்..

மணிகண்டன் said...

//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//

கலக்கிட்டிங்க வெட்டி. இந்த வாரம் அவர் நட்சத்திரமா ஜொலிக்கற வாரம். போனாப்போகுதுன்னு அடுத்த வாரம் போட்டிருக்கலாம் இந்த பதிவை :)

Anonymous said...

வெட்டி! வந்துட்டோம். கொஞ்ச இரு பொருள எடுத்து ஆட்டோல போட்டுகிட்டு வந்து...

தம்பியின் தற்கொலை படை-துபாய்

Anonymous said...

என் தம்பி இப்போ தூங்குவதால் இப்போது பதில் சொல்ல மாட்டார். எந்திரிச்சதும் இருக்குடீ!

Santhosh said...

வெட்டி கலக்கிபுட்டேபோ வழக்கம் போல.
//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//
சூப்பரு. ஏரியா பக்கம் கொஞ்சம் நாள் வரலை அதுக்குள்ள ஏகப்பட்ட சங்க ஆரம்பிச்சிடாங்கப்பா. ஆனி புடுங்கனு நேரம் போக மத்த நேரத்துல சங்கத்துல சேந்துகிறேன்பா.

சென்ஷி said...

:))

அய்யய்யோ சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுங்க.. சூப்பர்.. அதுவும் தண்டவாளம் மேட்டர் சரியான கட்..

சென்ஷி

அபி அப்பா said...

வெட்டிதம்பி! சரியான கலக்கல் போங்க! ரயிலயே வழுக்கிவிட பாத்துட்டாரே நம்ம தம்பி, சரியான தங்க கம்பிங்க அவர்:-)))))))

வெட்டிப்பயல் said...

//ஜி - Z said...

//இல்லைங்க எல்லா பஸ்லையும் இந்த உதடு ஒட்டறத பத்தி ஒரு திருக்குறள் இருக்கும். அதையே நம்மளும் யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன்...//

அல்டிமேட் காமெடி வெட்டி...
//
மிக்க நன்றி ஜி...

//
இந்த டெவில் ஷோ விற்கு நட்சத்திர தம்பி என்ன பதில் சொல்ல போகிறார்...

ஒரிஜினல் டெவில் ஷோ ஒருங்கிணைப்பாளர்,
அமெரிக்கா.. //

அது என்ன ஒரிஜினல் டெவில் ஷோ???

வெட்டிப்பயல் said...

//ஜி - Z said...

எங்கள் தானையத் தலைவி நமிதாவை பேட்டி எடுப்பதுக்காக டெவில் ஷோவின் காப்பிரைட் கொடுக்கப்பட்டால், வெட்டியை கேக்காமலே கரடி கிங் அடுக்குமொழி மண்டையனை பேட்டி எடுக்க வைத்த தம்பி இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...

நமிதா பேரவை,
அமெரிக்கா //

சரியா சொன்னயா என் சிங்கக்குட்டி ;-)

...........................

//ஜி - Z said...

வெட்டி...

நீங்கதான் TRயின் அகில உலக ரசிகர் மன்ற தலைவன் எனவும், உங்கள் தலைவரை தாக்கியதால்தான் தம்பியின் மீது இப்படி ஒரு டெவில் ஷோவை நடத்தியதாகவும் கிசு கிசு பரவுகிறதே.. உண்மையா?? //

எலேய்,
என் டி.ஆர் பதிவை பாரு... அவந்தான் அகில உலக ரசிகர் மன்ற தலைவர்...

................................

//ஆஹா! உள்குத்து புரிஞ்சு போச்சு, அதாவது எப்ப நீங்க நாம் அப்படின்னு சொல்லி அவங்களை சேர்த்துக்கறீங்களோ அதுக்கு அப்புறம் வாயைத் திறந்து ஒண்ணும் பேச முடியாது. கம்முன்னு இருக்க வேண்டியதுதான். இதானே மேட்டர்?

ஆமா இப்படி எல்லாம் தைரியமா எழுதறீங்களே, நம்ம லக்கியைப் பார்த்தா உங்களுக்குப் பயமே கிடையாதா? :))//

கொத்ஸ்,
நமக்கு அந்த அளவுக்கு யானை (ஞானம்) பத்தாதுனு எல்லாருக்கும் தெரியும்...

லக்கிய நான் பார்த்ததே இல்லையே :-)

................................
//இலவசக்கொத்தனார் said...

அப்புறம் எல்லா வாரத்திலயும் இந்த மாதிரி நட்சத்திரத்தைப் பேட்டி காணும் எண்ணம் கவுண்டருக்கு இருக்கிறதா? //

அப்படி ஒரு எண்ணம் இப்பொழுதிக்கு இருக்கு. அது நட்சத்திரத்தை பொருத்தது...

...............................

//:: மை ஃபிரண்ட் ::. said...

//வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. //

அப்பவே நான் இந்த கேள்வியை தம்பிண்ணாவிடம் கேட்டேன்.. பின்னூட்டம் அவருக்கு வரவில்லை.. காக்கா தூக்கிட்டு போச்சுன்னு கதை சொல்லி இந்த சின்ன பிள்ளையை ஏமார்ரீVஈDDஊDDஆஆற்.. :-( //

எலேய் தம்பி,
இப்படி ஒரு பச்ச மண்ண நீ காக்கா கத சொல்லி ஏமாத்திட்ட... வர வர நீ பண்றதே சரியில்லை... ஆமாம் சொல்லிட்டேன் :-)

வெட்டிப்பயல் said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//

ROTFL..


நீங்க போட்ட பின்னூட்டங்களுக்கு தம்பி பதில் சொல்ல மாட்றார்னதும், நீங்களே டெவில் ஷோ போட்டு அதுக்கு பதில் சொன்ன விதம் சூப்பர்.. //

பல எச்சரிக்கை விடுத்தும் செவி சாய்க்காததாலே இந்த நிலைமை :-)

................................

//மணிகண்டன் said...

//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//

கலக்கிட்டிங்க வெட்டி. இந்த வாரம் அவர் நட்சத்திரமா ஜொலிக்கற வாரம். போனாப்போகுதுன்னு அடுத்த வாரம் போட்டிருக்கலாம் இந்த பதிவை :) //

மிக்க நன்றி மணிகண்டன்... இப்ப போட்டா தான் சரியா இருக்கும். அடுத்த வாரம் வேற மேட்டர் இருக்கும் இல்லை ;)

.................................

// தம்பியின் தற்கொலை படை said...

வெட்டி! வந்துட்டோம். கொஞ்ச இரு பொருள எடுத்து ஆட்டோல போட்டுகிட்டு வந்து...

தம்பியின் தற்கொலை படை-துபாய் //

சீக்கிரம் வாங்கப்பு... உங்களுக்கு தான் வெயிட்டிங்

...........................

// தூங்காதே தம்பி தூங்காதே said...

என் தம்பி இப்போ தூங்குவதால் இப்போது பதில் சொல்ல மாட்டார். எந்திரிச்சதும் இருக்குடீ! //

அதுக்கு தாண்டீ இங்க வெயிட்டீங் :-)

.............................

//சந்தோஷ் aka Santhosh said...

வெட்டி கலக்கிபுட்டேபோ வழக்கம் போல.
//இல்லைங்கண்ணே! ட்ரெயின் வழுக்கி விழுதானு பார்க்கலாம்னு தான்...//
சூப்பரு. ஏரியா பக்கம் கொஞ்சம் நாள் வரலை அதுக்குள்ள ஏகப்பட்ட சங்க ஆரம்பிச்சிடாங்கப்பா. ஆனி புடுங்கனு நேரம் போக மத்த நேரத்துல சங்கத்துல சேந்துகிறேன்பா. //

நீங்க வாங்க தலைவா.. உங்களுக்கு தான் வெயிட்டிங்...

Unknown said...

நட்சத்திரங்களைக் கலாயக்கும் வெட்டியின் நாகரீகமற்றப் போக்கினை வன்மையாக் கண்டிக்கிறேன். அதற்கு உடன் போக துணியும் BULLYING புகழ் கொத்ஸ் அவர்களையும் கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன்..

நட்சத்திர தம்பி போர் படை உறுப்பினர் எண் 213456786756

Leo Suresh said...

எலெய் வெட்டீய்ய்ய்ய்.
எங்க தங்க தம்பி கொள்கைசிங்கம் கிடேசன் பார்க் தலைவரை கலாய்ச்சதை வண்மை யாக கண்டிக்கிறேன்:-)
லியோ சுரேஷ்

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...

:))

அய்யய்யோ சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுங்க.. சூப்பர்.. அதுவும் தண்டவாளம் மேட்டர் சரியான கட்..

சென்ஷி //

மிக்க நன்றி சென்ஷி...

...............................

// அபி அப்பா said...

வெட்டிதம்பி! சரியான கலக்கல் போங்க! ரயிலயே வழுக்கிவிட பாத்துட்டாரே நம்ம தம்பி, சரியான தங்க கம்பிங்க அவர்:-))))))) //

அபி அப்பா...
தண்டவாளத்த கவுக்க முயற்சி செஞ்சது உங்களுக்கு காமெடியா போச்சி???

................................

//தேவ் | Dev said...

நட்சத்திரங்களைக் கலாயக்கும் வெட்டியின் நாகரீகமற்றப் போக்கினை வன்மையாக் கண்டிக்கிறேன். அதற்கு உடன் போக துணியும் BULLYING புகழ் கொத்ஸ் அவர்களையும் கன்னாபின்னாவெனக் கண்டிக்கிறேன்..

நட்சத்திர தம்பி போர் படை உறுப்பினர் எண் 213456786756
//
போர் வாள்,
ஏதோ உள் அர்த்தம் இருக்குற மாதிரி இருக்கு... எப்படியும் அடுத்த வர இரண்டு பேருக்காவது கண்டிப்பா டெவில் ஷோ இருக்கும்னு நினைக்கிறேன் ;)

இதுல பாதிக்கு மேல பாயிண்ட் கொடுத்தது வேற யாருமில்லை.. நம்ம தங்க கம்பி தான் :-)

..................................

//Leo Suresh said...

எலெய் வெட்டீய்ய்ய்ய்.
எங்க தங்க தம்பி கொள்கைசிங்கம் கிடேசன் பார்க் தலைவரை கலாய்ச்சதை வண்மை யாக கண்டிக்கிறேன்:-)
லியோ சுரேஷ்
//

சுரேஷ்,
தம்பிய கலாய்ச்சாங்களா??? யாரது எனக்கு தெரியாமல்... லிங் தர முடியுமா? அவரை நாம் கவனித்து கொள்வோம் ;)

முத்துகுமரன் said...

தம்பி இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார். அவர் தீவிர இலக்கியவாதி ஆகிக்கிட்டு இருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த நாவல் ஒன்றீனை வாசித்து கொண்டிருக்கிறார். விரைவில் எதிர்பாருங்கள் தம்பியின் இலக்கிய முகத்தை.

ரயிலை கவுக்கிறது எல்லாம் தீவிரவாத செயலாச்சே. இனிமே பார்த்து நடந்துகிறேன் அவர்கிட்ட

அபி அப்பா said...

வெட்டிதம்பி! கிடேசன் பார்க் தலைவரை கலாய்ச்சு, தூங்குற சிங்கத்த சொறிஞ்சு கலவர பூமியா மாத்த நினைக்கும் உங்களை கோவமா கண்டிக்கிறேன்!:-))

நாகை சிவா said...

வெட்டி என் இனம்டா நீ....

//எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!//

தம்பி சொன்ன எங்கப்பா ஒட்டுது. அவன் கதை விடுறான். நீயே சொல்லி பாரு, இதுக்கு அவன் சரியா பதில் குடுக்காட்டி எதிர்வினை பதிவு என் பதிவில் வரும் என்பது மட்டும் உறுதி.

கதிர் said...

வெட்டி அண்ணே

இந்த பதிவு எனக்கு பெரிய விளம்பரமா போச்சு.

ரொம்ப தேங்க்ஸ்.

நிறைய மேட்டர விட்டுட்டிங்களே!

சரி அடுத்த முறை இன்னும் சிறப்பா கலாய்க்கணும் சரியா...

இவன் said...

//வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சரி என்ன பண்றது. நம்ம கூட வளர்ந்த பசங்க. பொழைச்சிட்டு போகட்டும்.//

எங்கய்யா இருக்குது?? யார் எழுதி இருக்கிறாங்க?? சொன்னா நாங்களும் வாசிப்பமில்ல??

யப்பா வெட்டி!! "தம்பி" என்னப்பா பாவம் பண்ணிட்டாரு உனக்கு??

dubukudisciple said...

hi vetti!!
ultimate comedy!!
ippadiye innum konjam devil shows thodaratum!!

Anonymous said...

வழக்கம் போல கலக்கிட்டிங்க வெட்டி.

சுந்தர் / Sundar said...

அப்படி போடு அருவாள ...
காப்பி rights பிரச்சனைக்காக ... இவ்வளவு சூடாயிடிங்க ... !

சுப்பரா ... காலசியிருக்கிங்க ... ! வாழ்த்துக்கள்!

இலவசக்கொத்தனார் said...

//அப்பவே நான் இந்த கேள்வியை தம்பிண்ணாவிடம் கேட்டேன்..//

இந்த மை ப்ரண்டுக்கு அங்க போட்ட பின்னூட்டம்....


ஆஹா! தம்பிண்ணா என்கின்ற ஒரு புது உறவு முறையைத் தந்த மை பிரண்ட் அவர்களுக்கு தங்கச்சிக்கா என்கின்ற பட்டம் கொடுப்பதில் யாம் மிகவும் பெருமையடைகிறோம்.

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
நமக்கு அந்த அளவுக்கு யானை (ஞானம்) பத்தாதுனு எல்லாருக்கும் தெரியும்...//

ஆஹா! முதலில் லக்கி. இப்போ பொன்ஸக்காவா? என்னது அவங்களுக்கு ஞானம் பத்தாதா? ஆனாலும் தைரியம்தான்யா உனக்கு.

எதுக்கும் சென்னை பக்கம் போகாம இரு. அதான் உனக்கு நல்லது.

Sumathi. said...

ஹாய் வெட்டி,

சூப்பர் காமடி.

இதே மாதிரி அடிக்கடி டெவில் ஷோ நடத்துமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

கோபிநாத் said...

சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார்

நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் ;))) ;(((

கோபிநாத் said...

இதுக்கு பேரு தான் நட்சத்திர டெவில் ஷோவாய்யா....
மாப்பு வச்சிட்டியே ஆப்பு...பின்னிட்டிங்க...

Syam said...

ROTFL...திருக்குறள் அல்டிமேட்...கலக்கிட்டீங்க :-)

Syam said...

ரயில வழுக்கி விழ வைக்க பாத்தாரா...இவ்வளோ திறமையான ஆளுனு தெரியாம போச்சே :-)

SP.VR. SUBBIAH said...

"யாரங்கே?"

"மன்னா,என்ன வேண்டும் ? உத்தரவிடுங்கள்!"

"இனிமேல் கவுண்டர் டெவில் ஷோவை - வெட்டிப்பயலைத் தவிர
வேறு யாரும் நடத்தக் கூடாது என்று உத்தரவு போட்டுவிடு! அவர்தான் சூப்பராக நட்த்துகிறார் - அதனால்தான் இந்த உத்தரவு!"

"மீறி யாராவது நடத்தினால்...?"

"தண்டனை அப்போது அறிவிக்கப்படும்!"

வெட்டிப்பயல் said...

//முத்துகுமரன் said...

தம்பி இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டார். அவர் தீவிர இலக்கியவாதி ஆகிக்கிட்டு இருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த நாவல் ஒன்றீனை வாசித்து கொண்டிருக்கிறார். விரைவில் எதிர்பாருங்கள் தம்பியின் இலக்கிய முகத்தை.
//
ஆஹா.. முத்துக்குமரன். நல்ல வேளை சொன்னீங்க.

தம்பிங்கண்ணா... அப்படி என்ன புக்னா படிக்கறீங்க? பெரிய ஆளாகிட்டீங்க. அப்படியே எங்களையும் கண்டுக்கோங்க...

//
ரயிலை கவுக்கிறது எல்லாம் தீவிரவாத செயலாச்சே. இனிமே பார்த்து நடந்துகிறேன் அவர்கிட்ட //
நீங்க வேற கமரக்கட்டுக்காக ஓருல இருந்து புக்க திருட்டிட்டு ஓடி வந்த பையன போய் இப்படி பெரிய ரேஞ்சுக்கு ஏத்திவிடறீங்களே :-)

தென்றல் said...

நல்ல கலக்கல் !

இனிமேலு office-ல இருக்கிறப்ப தப்பி தவறி கூட 'இந்த பக்கம்' வந்துரக்கூடாது-ப்பா... நம்ம வேலை காலியாயிரும்...

உண்மையிலேயே "நம்ம தம்பி" இந்த வார ஸ்டார் தான்..!

வெட்டிப்பயல் said...

// அபி அப்பா said...

வெட்டிதம்பி! கிடேசன் பார்க் தலைவரை கலாய்ச்சு, தூங்குற சிங்கத்த சொறிஞ்சு கலவர பூமியா மாத்த நினைக்கும் உங்களை கோவமா கண்டிக்கிறேன்!:-)) //

அபி அப்பா,
அவன நான் கலாய்க்கிறேனு சொல்லிட்டு இப்பசி அநியாயத்துக்கு நீங்க கலாய்க்கறீங்க பார்த்தீங்களா ;)

வெட்டிப்பயல் said...

//நாகை சிவா said...

வெட்டி என் இனம்டா நீ....
//
அது தான் ஊருக்கே தெரிஞ்சதாச்சே!!!

//
//எல்லாரும் உரிமையோட தம்பினு கூப்பிட்டா ஒரு சந்தோஷம். உதடுகள் கூட கம் போட்ட மாதிரி ஒட்டும் பாருங்க!//

தம்பி சொன்ன எங்கப்பா ஒட்டுது. அவன் கதை விடுறான். நீயே சொல்லி பாரு, இதுக்கு அவன் சரியா பதில் குடுக்காட்டி எதிர்வினை பதிவு என் பதிவில் வரும் என்பது மட்டும் உறுதி. //

சீக்கிரம் பதிவ போடு புலி... நம்ம பார்த்துக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

//தம்பி said...

வெட்டி அண்ணே

இந்த பதிவு எனக்கு பெரிய விளம்பரமா போச்சு.

ரொம்ப தேங்க்ஸ்.

நிறைய மேட்டர விட்டுட்டிங்களே!

சரி அடுத்த முறை இன்னும் சிறப்பா கலாய்க்கணும் சரியா... //

இந்த அண்ணே நொண்ணே எல்லாம் வேணாம்... புரிஞ்சிதா...

இந்த கலாய்த்தலுக்கு நீ பதில சொல்லு மேன்...

எலேய் உன் பதிவுக்கு அட்வர்டைஸ்மெண்ட்க்காக என்ன போட சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிற பாரு. அங்க தான் நீ நிக்கிற...

கப்பி | Kappi said...

:))))))))))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஹூம்...
கவுண்டர் vs வெட்டிப்பையல் கேட்டோம்.

நீங்க நம்ம அப்பாவி தம்பியை இதுல போட்டு விட்டு, இப்போதைக்கு தப்பிச்சிட்டீங்க...

அதனால் என்ன, இப்ப ஊர்ல நிறைய டெவில் ஷோ நடக்குதாமே! ஏதாச்சும் ஒன்னுத்தலையாவது வெட்டி ஷோ வராதா என்ன? :-)

வெட்டிப்பயல் said...

//ஆதவன் said...

//வர வர எதத்தான் காப்பி அடிக்கறதுனு இல்லை. நம்ம டெவில் ஷோவைக்கூட விட்டு வைக்க மாட்றானுங்க. சரி என்ன பண்றது. நம்ம கூட வளர்ந்த பசங்க. பொழைச்சிட்டு போகட்டும்.//

எங்கய்யா இருக்குது?? யார் எழுதி இருக்கிறாங்க?? சொன்னா நாங்களும் வாசிப்பமில்ல??
//
அது சும்மாச்சிக்கு சொன்னது.. எல்லாம் ஒரு பில்ட் அப் தான் :-)

யப்பா வெட்டி!! "தம்பி" என்னப்பா பாவம் பண்ணிட்டாரு உனக்கு?? //

அது அவர் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவில் பார்த்தால் தெரியும் ;)

வெட்டிப்பயல் said...

//dubukudisciple said...

hi vetti!!
ultimate comedy!!
ippadiye innum konjam devil shows thodaratum!! //

சுதாக்கா,
சொல்லிட்டீங்க இல்லை...
கலக்கிடுவோம் :-)

வெட்டிப்பயல் said...

// உண்மை said...

வழக்கம் போல கலக்கிட்டிங்க வெட்டி.

//

மிக்க நன்றி உண்மை!!!

வெட்டிப்பயல் said...

//சுந்தர் / Sundar said...

அப்படி போடு அருவாள ...
காப்பி rights பிரச்சனைக்காக ... இவ்வளவு சூடாயிடிங்க ... !

சுப்பரா ... காலசியிருக்கிங்க ... ! வாழ்த்துக்கள்! //

அப்படியெல்லாம் இல்லைங்க சுந்தர்...
நம்ம தம்பி போட்ட டெவில் ஷோவும் சூப்பர்தான்...

இது அவரோட பழைய போஸ்ட்டுக்கு அட்வர்டைஸ்மெண்ட் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//அப்பவே நான் இந்த கேள்வியை தம்பிண்ணாவிடம் கேட்டேன்..//

இந்த மை ப்ரண்டுக்கு அங்க போட்ட பின்னூட்டம்....


ஆஹா! தம்பிண்ணா என்கின்ற ஒரு புது உறவு முறையைத் தந்த மை பிரண்ட் அவர்களுக்கு தங்கச்சிக்கா என்கின்ற பட்டம் கொடுப்பதில் யாம் மிகவும் பெருமையடைகிறோம். //

ஆமாம்...
இன்று முதல் மை பிரண்ட் தங்கச்சிக்கா என்றே அழைக்கப்படுவார் :-)

வெட்டிப்பயல் said...

//இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ்,
நமக்கு அந்த அளவுக்கு யானை (ஞானம்) பத்தாதுனு எல்லாருக்கும் தெரியும்...//

ஆஹா! முதலில் லக்கி. இப்போ பொன்ஸக்காவா? என்னது அவங்களுக்கு ஞானம் பத்தாதா? ஆனாலும் தைரியம்தான்யா உனக்கு.

எதுக்கும் சென்னை பக்கம் போகாம இரு. அதான் உனக்கு நல்லது. //

கொத்ஸ்,
யானையென்றால் ஞானம் என்றேன்... அப்படினா பொன்ஸக்கானா ஞானம்னு தானே அர்த்தம்... (யாரு டீ.வி சீரியல்ல வர பாம்பே ஞானமானு கேட்டு கலாய்க்க கூடாது)

எல்லாம் நம்ம இ.அரசன் பார்த்ததால வந்த எஃபக்ட் :-)

வெட்டிப்பயல் said...

// Sumathi said...

ஹாய் வெட்டி,

சூப்பர் காமடி.

இதே மாதிரி அடிக்கடி டெவில் ஷோ நடத்துமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன். //

மிக்க நன்றி சுமதியக்கா...
உங்கள் கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன் :-)

வெட்டிப்பயல் said...

// கோபிநாத் said...

சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார்

நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன் ;))) ;((( //

ஏம்பா??? என்னாச்சி???
தம்பி ஏதாவது சொல்லிட்டானா??? எங்ககிட்ட சொல்லு அவனை பார்த்துக்கலாம் :-)

வெட்டிப்பயல் said...

//
கோபிநாத் said...

இதுக்கு பேரு தான் நட்சத்திர டெவில் ஷோவாய்யா....
மாப்பு வச்சிட்டியே ஆப்பு...பின்னிட்டிங்க... //

என்னங்க கோபி பண்ண??? நாலு பேரை சிரிக்க வைக்கணும்னா இப்படியெல்லாம் பண்ணித்தான் ஆகனும் :-)

வெட்டிப்பயல் said...

//Syam said...

ROTFL...திருக்குறள் அல்டிமேட்...கலக்கிட்டீங்க :-) //

நாட்டாமை,
ரோம்ப டாங்கிஸ்...

வெட்டிப்பயல் said...

//Syam said...

ரயில வழுக்கி விழ வைக்க பாத்தாரா...இவ்வளோ திறமையான ஆளுனு தெரியாம போச்சே :-) //

நாட்டாமை,
அவரு எவ்வளவு பெரிய தில்லாலங்கடினு அவர் போஸ்டெல்லாம் படிச்சா தெரியும் :-)

வெட்டிப்பயல் said...

//SP.VR.சுப்பையா said...

"யாரங்கே?"

"மன்னா,என்ன வேண்டும் ? உத்தரவிடுங்கள்!"

"இனிமேல் கவுண்டர் டெவில் ஷோவை - வெட்டிப்பயலைத் தவிர
வேறு யாரும் நடத்தக் கூடாது என்று உத்தரவு போட்டுவிடு! அவர்தான் சூப்பராக நட்த்துகிறார் - அதனால்தான் இந்த உத்தரவு!"

"மீறி யாராவது நடத்தினால்...?"

"தண்டனை அப்போது அறிவிக்கப்படும்!" //

மக்களே!!!

இனி யாரும் அரச கட்டளையை மீற வேண்டாம் :-)

வெட்டிப்பயல் said...

// தென்றல் said...

நல்ல கலக்கல் !

இனிமேலு office-ல இருக்கிறப்ப தப்பி தவறி கூட 'இந்த பக்கம்' வந்துரக்கூடாது-ப்பா... நம்ம வேலை காலியாயிரும்...

உண்மையிலேயே "நம்ம தம்பி" இந்த வார ஸ்டார் தான்..! //

ஏங்க? என்னாச்சி?

ஏதாவது பாகிஸ்தான் தீவிரவாதிங்க என் பக்கத்த படிக்க கூடாதுனு சொல்றாங்களா??? அப்படியிருந்தா சொல்லுங்க.. நம்ம Gaptain கிட்ட சொல்லி சரி பண்ணிடலாம் :-)

வெட்டிப்பயல் said...

//கப்பி பய said...

:)))))))))) //

:))))))))))

(உன் பதில் தான்...
கத்திக்கு கத்தி, ரத்தத்துக்கு ரத்தம், சிரிப்பானுக்கு சிரிப்பான்)

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஹூம்...
கவுண்டர் vs வெட்டிப்பையல் கேட்டோம்.

நீங்க நம்ம அப்பாவி தம்பியை இதுல போட்டு விட்டு, இப்போதைக்கு தப்பிச்சிட்டீங்க...

அதனால் என்ன, இப்ப ஊர்ல நிறைய டெவில் ஷோ நடக்குதாமே! ஏதாச்சும் ஒன்னுத்தலையாவது வெட்டி ஷோ வராதா என்ன? :-) //

தலைவா,
ஒரு மாசமா தமிழ்மணம் பக்கமே வரலைனு தெரியுது... நமக்கு டெவில் ஷோ சங்கத்துல போட்டாச்சி :-)

இராம்/Raam said...

//மக்களே!!!

இனி யாரும் அரச கட்டளையை மீற வேண்டாம் :-)//

நாங்க மீறுவோம், மீறிக்கிட்டே இருப்போம்...

ஏன்னா வெட்டிப்பயல் டெவில் ஷோ செகண்ட் பார்ட் போட வேண்டியதா இருக்கு :)

//தலைவா,
ஒரு மாசமா தமிழ்மணம் பக்கமே வரலைனு தெரியுது... நமக்கு டெவில் ஷோ சங்கத்துல போட்டாச்சி :-) //

இப்பிடி மொட்டையா சொன்னா எப்பிடி?? பதிவோட சுட்டி கொடுக்கணுமா இல்லேயா?? :)